category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | தூத்துக்குடியில் சி.ஐ.எஸ்.எப்., வீரர் தற்கொலை | தூத்துக்குடி : தூத்துக்குடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி.ஐ.எஸ்.எப்., ) வீரர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி வேப்பங்குளம் செல்லையா மகன் சிவசக்தி (24). இவர் டில்லியில் சி.ஐ.எஸ்.எப்., படையில் பணியாற்றி வந்தார். அண்மையில் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற... |
இந்தியா | தங்கம் விலை குறைந்தது | சென்னை : தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 687க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 104 குறைந்து , ஒரு பவுன் தங்கம் ரூபாய் 13 ஆயிரத்து 496க்கு விற்கப்படுகிறது. |
இந்தியா | உணவு பணவீக்கம் அதிகரிப்பு | புதுடில்லி: நாட்டின் உணவு பணவீக்கம் 16.49 சதவீதமாக அதிகரித்துள்ளது. மே 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 16. 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. |
இந்தியா | மாமல்லபுரத்தில் சாலை விபத்து : 2 பேர் பலி | மாமல்லபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக வந்த கார் தலைகீழாக வந்தது. இதில் காரில் இருந்த ஒரு சிறுவன் உள்பட 2 பேர் இறந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
இந்தியா | ராமநாதபுரம் ஆசிரியர் கவுன்சிலிங் கூட்டத்தில் சலசலப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் தொடக்கப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் பாரிவள்ளல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இன்று காலை 10 மணிக்கு கவுன்சிலிங் தொடங்க வேண்டும். ஆனால் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கவுன்சிலிங் தொடங்குவத... |
இந்தியா | கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீ்ப்பட்டி தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் நாகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இருக்கிறது. இங்கு இன்று அதிகாலையில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. தீ விபத்தில் தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்... |
இந்தியா | வலுவிழக்கிறது லைலா : வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு | புதுடில்லி : லைலா புயல் வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மைய தலைவர் தியாகி தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆந்திராவில் கடலோ மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரித்தார். |
இந்தியா | சிதம்பரத்துடன் கருத்து வேறுபாடு இல்லை : ராமன் சிங் விளக்கம் | புதுடில்லி : நக்சலைட்டுகளை கையாளும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கும் தனக்கும் இடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை என சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராமன் சிங் : மாவோயிஸ்டுகள் இந்திய ஜனநாயகத்துக்கு சவாலாக இருப்பதாக... |
இந்தியா | ராய்ப்பூரில் ரசாயன வேன் கடத்தல் | ஐதராபாத் : சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நக்சலைட்டுகள் ரசாயன வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூருக்கு ஒரு வேனில் 16.5 டன் அமோனியம் நைட்ரேட் ராசாயனம் கொண்டு செல்லப்பட்டது. பஸ்தார் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது நக்சலைட்டுகள் வேனை மடக்கி கடத்திச்... |
இந்தியா | நான் 48, ராப்ரி 55 : சென்செஸ் எடுக்கும் போது லாலு நகைச்சுவை | பாட்னா : நாடு முழுவதும் சென்செஸ் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் சென்செஸ் அதிகாரிகள் இன்று தகவல்களை கேட்டு பதிவு செய்தனர். அப்போது லாலு நான் 48, ராப்ரி 55 என தெரிவித்தார். அதிகாரிகள் லாலு அவரது வயதைத் தான் குறிப்பிடுகிறார் என்று நினைத்து, ராப்ரிக்கு தங்களை விட வ... |
இந்தியா | சட்டீஸ்கர் முதல்வர் மீது லாலு புகார் | பாட்னா : சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளை இவ்வளவு தூரம் வலுவடைய விட்டது அம்மாநில முதல்வர் ராமன் சிங் தான் என ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மாவோயிஸ்டுகள் மிகப் பெரிய பயங்கரவாதிகள் என அறிக்கை விடும் ராமன் சிங் அவர்களை ஒழிக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார். இதே போல... |
இந்தியா | கோவை குண்டு வெடிப்பு கைதிக்கு திருமணம் | கோவை : கோவை குண்டு வெடிப்பு கைதிக்கு இன்று திருமணம் நடந்தது. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திலும், மதுரையில் ஜெயிலரைக் கொலை செய்த வழக்கிலும் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் இருக்கும் கைதி தடா அஸ்லாம். இவர் அவரது உறவுப் பெண்ணான ஷமாவை இன்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்காக கைதி தடா அஸ்லாமுக்கு 10 மணி நே... |
இந்தியா | ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு இன்று பிற்பகலில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு தொடர்பை துண்டித்தார். இந்நிலையில் ஆர்.டி.ஓ., இளங்கோவன் தாலுகா அலுவலகத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த அலுவலர்கள் மட்டும் பொதுமக்களை வெ... |
இந்தியா | டீசல் டேங்கர் ரயில் எரிப்பு ; ரசாயன வேன் கடத்தல் | பாட்னா : பீகார் மாநிலத்தில் மாவோ., நக்சல்கள் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் ரயிலை தகர்த்து எரித்தனர். நாளுக்குநாள் மாவோ., நக்சல்கள் அட்டகாசம் பெருகி வருகிறது. நக்சல்கள் அட்டூழியத்தை ஒழிப்பதில் மத்திய அரசு பெரும் சிரமப்பட்டு வருகிறது. இந்திய - நேபாள எல்லையில் இருந்து ரயில் வந்து கொண்டிருந்தது. பீகார் மாநிலம் பாட்னா அருகே மோத... |
இந்தியா | லைலா புயலால் ஒரிசாவில் கனமழை | புவனேஸ்வர் : லைலா புயலால் ஒரிசாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிசா மாநிலம் கோபால்பூருக்கு தென் மேற்கில் 570 கி.மீ., தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் ஒரிசாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை தீவிரமாகும் என அம்மாநில வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. |
இந்தியா | கோவையில் கைதிகள் ரகளை | கோவை : பீடித்தகராறு காரணமாக கோவை சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கோவை சிறையில் இருக்கும் கைதி ஒருவன் அதிக விலைக்கு பீடி விற்பதாக கூறி மற்ற சில கைதிகள் சேர்ந்து கொண்டு அந்த கைதியை தாக்கினர். அலுமினிய தட்டை வளைத்து கூர்மையான ஆயுதம் போல் செய்து தாக்கியதில் அந்த கைதி காயமடைந்தார். காயமடைந்த கைதியை போலீசார் சிற... |
இந்தியா | டீசல் டேங்கர் ரயில் எரிப்பு ; ரசாயன வேன் கடத்தல் | பாட்னா : பீகார் மாநிலத்தில் மாவோ., நக்சல்கள் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் ரயிலை தகர்த்து எரித்தனர். நாளுக்குநாள் மாவோ., நக்சல்கள் அட்டகாசம் பெருகி வருகிறது. நக்சல்கள் அட்டூழியத்தை ஒழிப்பதில் மத்திய அரசு பெரும் சிரமப்பட்டு வருகிறது. இந்திய - நேபாள எல்லையில் இருந்து ரயில் வந்து கொண்டிருந்தது. பீகார் மாநிலம் பாட்னா அருகே மோத... |
இந்தியா | பாபர் மசூதி இடிப்பு வழக்கு : சி.பி.ஐ., மறுஆய்வு மனு தள்ளுபடி | லக்னோ : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மற்றும் 20 பேர் மீதான குற்றவியல் நடைமுறைகளை தொடர அனுமதி வழங்கும்படி, சி.பி.ஐ., தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை, அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. |
இந்தியா | மும்பை தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | மும்பை : மும்பையிலிருந்து லக்னோ சென்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. விமானத்தில் இருந்த 166 பயணிகள் அவசர அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. |
தமிழகம் | பாக் ஜலசந்தி, மன்னார் கடல் பகுதியில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு | மண்டபம் : தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி.,லலாம் சங்கா பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் கடல் பகுதியில் உள்ள தீவுகளை இன்று ரோந்து படகில் ஆய்வு செய்தார். கடல்வழி கண்காணிப்பில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து தமிழக கடலோர காவல்படை போலீசார் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இதை பார்வையிட தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி... |
General | பயங்கரவாதி சயீதுக்கு பாக்., கூடுதல் பாதுகாப்பு | லாகூர் : மும்பை தாக்குதல் சதிக்கு காரணமானவர் என, இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்ட ஜமாயத் - உத் - தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலுக்கு மூல காரணமானவர் என, குற்றம் சுமத்தப்பட்டவர் ஹபீஸ் சயீது. இவர், இந்தியா கொடுத... |
இந்தியா | மாஜி டி.ஜி.பி ரத்தோர் வழக்கு தீர்ப்பு எப்போது | சண்டிகார் : அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர் மீதான பாலியியல் பலாத்கார வழக்கின் தீர்ப்பு, வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரியானா மாநில டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா கிர்ஹோத்ரா, 90ம் ஆண்டு டி.ஜி.பி., ரத்தோரின் பாலியியல் தொல்லைக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ரத்தோர் மீது சி.பி.ஐ., வழக்கு த... |
இந்தியா | ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு நல்ல சிகிச்சை தர மனைவி, சகோதரர்களுக்கு கோர்ட் யோசனை | புதுடில்லி : கருத்து வேறுபாடுகளை மறந்து, ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி அவரது மனைவியிடமும், சகோதரர்களிடமும் ஐகோர்ட் கேட்டுக் கொண்டது. முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்; ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவராக உள்ளார். இவர், சமீப காலமாக ஞாபக மறதி நோயால் பாதிக் கப்பட்டுள் ளார். டில்லி... |
இந்தியா | 20 ஆண்டுகள் கழித்து பிறந்தநாளை மாற்றிய நீதிபதிக்கு கண்டனம் | புதுடில்லி : நீதிபதி ஒருவர் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் கழித்து தன் பிறந்த தேதியை மாற்றம் செய்துள்ளதற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மாவட்ட நீதிபதியாக இருந்து 2003ல் ஓய்வு பெற்றவர் மெக் ராஜ் கார்க். இவர், 1973ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்றார். 1983ம் ஆண்டு இவர் ... |
இந்தியா | பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு எதிரான மனு தள்ளுபடி | லக்னோ : பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி மற்றும் 20 பேருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை தள்ளுபடி செய்து சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஸ்வ இந்து பரிஷ... |
தமிழகம் | அசோக்நகர் பள்ளியில் நன்கொடை வசூல் : தடை விதிக்கக்கோரிய வழக்கில் நோட்டீஸ் | சென்னை : சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நன்கொடை வசூலிக்க தடை விதிக்கக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி பள்ளி கல்வித் துறை, பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டி.ஆர்.எஸ்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீனிவாசன... |
தமிழகம் | வனப்பகுதியில் இருப்போரை வெளியேற்ற ஐகோர்ட் தடை | மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து ஜூன் 15ம் தேதி வரை அப்பகுதியினரை வெளியேற்ற கூடாது என அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது. தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் தங்கதமிழ்செல்வன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேகமலை, வருஷ... |
தமிழகம் | இலவச காஸ் திட்டத்துக்கு ஆறு லட்சம் புதிய இணைப்புகள் | சென்னை:சமையல் காஸ் சிலிண்டர் பெற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் வற்புறுத்துவதை நிறுத்துமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சரிடம் தமிழக, உணவுத்துறை அமைச்சர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தமிழக உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் முரளி தியோராவை டில்லியில் ... |
தமிழகம் | ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து அரசு உத்தரவு | ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள கிராமங்களில், கிராம மகளிர் பயன்பெறும் வகையிலும், ஆடு வளர்ப்பில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்பாடுகளை களைந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், ஆடு வளர்ப்போர் நலவாரியம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர... |
தமிழகம் | ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பணி ஆணை: அமைச்சர் வழங்கினார் | கடலூர்:கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் 16 பேருக்கு அமைச்சர் பன்னீர்செல் வம் பணி நியமன ஆணை வழங்கினார்.கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாய விலைக் கடைகளில் பணிபுரிவதற்கு தேர்வு செய் யப்பட்ட 16 பேருக்கு விற் பனையாளர் பணி நியமன ஆணையை அமைச்சர் பன்னீர்செல்வம் விருத்தாசலத்தில் நடந்த விழாவி... |
தமிழகம் | இளைஞர் காங்.,ஆலோசனை | வானூர்:வானூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் திருச் சிற்றம்பலம் கூட்ரோடில் நடந்தது.வானூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவர் எறையூர் தண்டபாணி தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் முகமது பாரூக் வரவேற்றார். விழுப்புரம் லோக் சபா தொகுதி பொதுச்செயலாளர் உதயநந்தன், வட் டார பொதுசெயலாளர் ராஜம் பார்த்தீபன், நிர்வாகிகள் வ... |
இந்தியா | பிரதமர் இல்லத்தில் கூட்டணி தலைவர்களுக்கு...விருந்து:ஓராண்டு நிறைவு மகிழ்ச்சியில் கொண்டாட்டம் | ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று, ஓராண்டு முடிவடைவதை ஒட்டி, பிரதமர் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.கூட்டணி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள் ளிட்டோர் பங்கேற்கும் இந்த விருந்தில், சோனியாவும் கலந்து கொள்கிறார். அரசின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, முக்கிய அறிக்கை வ... |
இந்தியா | மாயாவதிக்கு எதிரான மனு:தேர்தல் கமிஷன் திட்டம் | புதுடில்லி:உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி, மக்கள் பணத்தில், தன் சிலையையும் தன் கட்சி சின்னத்தின் சிலைகளையும் நிறுவி வருவதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
உ.பி., முதல்வர் மாயாவதி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் பல நூறு கோடி ரூபாய் செலவில் தன் சிலைகளை... |
தமிழகம் | காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கு பணம் கேட்டதால் நோயாளி போராட்டம் | தேனி : தேனி மாவட்டம், உத்தமபாளையம் இந்திராநகரை சேர்ந்தவர் முகமதுஇஸ்மாயில் (46). டிரைவராக வேலை பார்க்கும் இவர், சிறுநீரக கல்அடைப்பிற்கு அரசு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற தேனியிலுள்ள என்.ஆர்.டி., ஆஸ்பத்திரியில் ஏப்.,21 ல் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று ஆஸ்பத்திரி நிர்வாகம் சிகிச்சை பெற பணம் கேட்பதாக கூறி,... |
இந்தியா | ஸ்பெக்ட்ரம் 3-ஜி ஏல வருவாய் அரசுக்கு மகிழ்ச்சி | புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் 3-ஜி அலைவரிசை ஏலத்தில், அரசுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. இந்த வருமானம் காரணமாக அரசின் கடன் சுமை குறையும். இது குறித்து திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் 3-ஜி அலைவரிசை மூலம் எதிர்பார்த்த வருவாய், 35 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், 67 ஆயிரம் கோடி ரூபாய... |
General | துபாயில் வீடு தேடுகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா | துபாய்:டென்னிஸ் நட்சத்திரம் சானியாவும், அவரது கணவர் சோயப் மாலிக்கும் துபாயில் வசிப்பதற்காக அங்கு தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருக்கின்றனர்.இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா, பாக்., கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார். தற்போது இருவரும் துபாயில் உள்ளனர்.
அங்கு சானியா அளித்த பேட்டி:துபாயை எனது இரண்டாவது ... |
General | புத்தர் கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல்:தாய்லாந்தில் 9 பேர் பலி | பாங்காக்:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள புத்தர் கோவிலில் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.தாய்லாந்தில் 2006ல் பிரதமராக இருந்த ஷினவத்ரே ஊழல் குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அதை தொடர்ந்து, ராணுவ ஆட்சி ஏற்பட்டது. 2008ல் நடந்த தேர்தலில் ராணுவ... |
இந்தியா | ஆந்திராவில் ஓங்கோல் பகுதியை தாக்கியது லைலா புயல்: கடும் மழையால் பெரும் சேதம் | புதுடில்லி : வங்கக் கடலில் உருவான லைலா புயல் நேற்று மாலை ஆந்திராவில் ஓங்கோல் பகுதியை தாக்கியது. 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதோடு, பெரும்மழையும் கொட்டியது. இதனால், பெருத்த சேதம் ஏற்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்தப் புயல், திசை மாறி ஒரிசா பக்கம் நேற்று ந... |
General | துபாயில் வீடு தேடுகிறார் சானியா | துபாய் : டென்னிஸ் நட்சத்திரம் சானியாவும், அவரது கணவர் சோயப் மாலிக்கும் துபாயில் வசிப்பதற்காக அங்கு தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா, பாக்., கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார். தற்போது இருவரும் துபாயில் உள்ளனர். அங்கு சானியா அளித்த பேட்டி: துபாயை எனது இரண்டாவ... |
General | பயங்கரவாதி சயீதுக்கு பாக்., கூடுதல் பாதுகாப்பு | லாகூர்:மும்பை தாக்குதல் சதிக்கு காரணமானவர் என, இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்ட ஜமாயத் - உத் - தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலுக்கு மூல காரணமானவர் என, குற்றம் சுமத்தப்பட்டவர் ஹபீஸ் சயீது. லஷ்கர் -இ- தொய்பா பயங்... |
General | கப்பலை தகர்த்தது வடகொரியா: பதிலடிக்கு தென்கொரியா தயார் | வாஷிங்டன்:தென்கொரியாவின் போர்க்கப்பலை தன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் வடகொரியா தகர்த்தது, பெரிய பிரச்னையாகி உள்ளது. வடகொரியாவின் இச்செயல், ஆக்கிரமிப்பு என்று, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியா பணக்கார நாடு. அதன் அதிபர் லீ மியுங்-பாக் இது குறித்து கூறும் போது, "வட கொரியா மீது திடமான நடவடிக்கை இருக்கும். தன் பொ... |
General | குண்டு வைத்த பாக்., ஷசாத் நியூயார்க்கிற்கு சென்றது ஏன்? | வாஷிங்டன்:அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பிறகு காஷ்மீருக்குள் ஊடுருவி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் படி லஷ்கர் -இ -தொய்பா அமைப்பு வற்புறுத்தியிருந்தது தெரியவந்துள்ளது.கடந்த 1ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்து விட்டு து... |
General | குற்றங்களை தடுக்க கிராமங்களை தத்தெடுக்கிறது போலீஸ் | கோவை : சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களையும் பங்கேற்க செய்யும் முயற்சியாக, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள 40 கிராமங்களை தத்தெடுத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது, கோவை ஐ.ஜி., அலுவலகம். முதலாவதாக, தருமபுரி மாவட்டத்திலுள்ள மேல்பூங்குருத்தி கிராமத்தை போலீசார் தத்தெடுத்துள்... |
General | இந்திய மாணவரை தாக்கிய ஆஸி., மாணவரிடம் விசாரணை | மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் டாக்சி ஓட்டிய இந்திய மாணவரை தாக்கிய வாலிபர் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பகுதி நேரத்தில் டாக்சி ஓட்டியும், ஓட்டல்களில் வேலை செய்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்தியர்களிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்க, ஒரு ச... |
இந்தியா | தேசிய நதிநீர் இணைப்பு திட்டம்: காலத்தின் கட்டாயம் | இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுக்கப் போவது தண்ணீர் பிரச்னை தான். இந்த தண்ணீர் பிரச்னையை சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்று, கடந்த பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டிற்கு, 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 56 கோடி ரூபாயில் திட்டம் அமைக்கலாமா என்ற தட... |
General | துபாயில் அட்சய திருதியை தங்கம் அமோக விற்பனை | துபாய்: இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த ஆண்டை விட, 12 சதவீத தங்கம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. வளைகுடா நாடான துபாயில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அட்சய திருதியை அங்குள்ளவர்களும் கொண்டாடுகின்றனர். சமீபத்தில் அட்சய திருதியை யொட்டி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளி... |
இந்தியா | சபரிமலை நடை அடைப்பு : 23ம் தேதி மீண்டும் திறப்பு | சபரிமலை : வைகாசி மாத பூஜைகள் முடிவடைந்து, சபரிமலை அய்யப்ப சுவாமி சன்னிதானம், நேற்று முன்தினம் இரவு அடைக்கப்பட்டது. அய்யப்பசுவாமி சிலை அமைக்கப்பட்ட பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, நாளை மறுதினம் மாலை நடை மீண்டும் திறக்கப்படும். ஒவ்வொரு மாதமும் மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், வைகாசி மாத பூஜைகளுக்கா... |
இந்தியா | சிங்கப்பூர், மலேசியாவில் சீனிவாச கல்யாணம் | நகரி : சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் சீனிவாச கல்யாண உற்சவம், விரைவில் நடத்தப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடு, நேற்று முன்தினம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பக்தர்கள், சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை, அங்கு நடத்த வேண்டுமென க... |
தமிழகம் | பொதுக்குழு கூட்டம் | வேடசந்தூர்:வேடசந்தூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மதுரை மண்டல தலைவர் நாச்சிமுத்து , திண்டுக் கல் மாவட்ட தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.துணை தலைவர் முத்துபெருமாள் வரவேற்றார்.செயலாளர் மருதையப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வரதராஜ் வரவு ... |
தமிழகம் | பெண்ணிடம் நகை கொள்ளை | வேடசந்தூர்:வீட்டில் இருந்த பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர். வேடசந்தூர் அருகேயுள்ள காளணம்பட்டி தோட் டத்து வீட்டில் குடியிருப்பவர் சக்திவேல். ( 25). இவரது மனைவி லட்சுமி (23). இவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நள் ளிரவில் வந்த மர்ம நபர் லட்சுமி அணிந்திருந்த நாலரை பவுன் தாலிக் கொடி மற்றும் செயின்... |
தமிழகம் | பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் 105 கணித ஆசிரியர்கள் விண்ணப்பம் | திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நடந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், அதிகபட்சமாக கணித பாடத்திற்கு 105 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதில் 21 பேர் இடமாறுதல் பெற்றனர்.திண்டுக்கல்லில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந் தது. முன்னதாக இடமாறுதலுக்கான விருப்ப மனுக்கள், ஆசிரியர்க... |
இந்தியா | மதுபான பிரியர்கள் கவலையை போக்க பீர் நிறைய வந்தாச்சு | கேரளாவில், பீர் தட்டுப்பாடால் தவித்து வந்த மதுபான பிரியர்கள் கவலையைப் போக்கும் வகையில், பீர் பாட்டில்கள் நிறைய வந்துள்ளன. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கேரளாவில் நான்கு மாதங்களாக கடும் வெயில் கொளுத்தி வந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களிலும் பகல் 11 மணிக்கு மேல் தனியார் பஸ் போக்க... |
தமிழகம் | திருட்டுக்கள் அதிகரிப்பு தடுக்க திணறும் போலீஸ் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தோட்டத்து வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு, ரோட்டில் நடந்து செல்லும் பெண் களிடம் நகை,பணம் கொள்ளை,வாகன திருட்டுக்கள் அதிகளவு நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் நத்தம் ரோட்டில் கண... |
தமிழகம் | கொடைக்கானலுக்கு பஸ் இயக்க கோரிக்கை | தாண்டிக்குடி:கீழ்மலைப்பகுதியிலிருந்து மாலை நேரத்தில் கொடைக்கானலுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.கொடைக்கானலுக்கு தாண்டிக்குடி வழியாக வத்தலக்குண்டு, திண்டுக் கல்,ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து அரசு,தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.காலை 8, 8.30, 9.45 க்கும்,மதி யம் 2 மணிக்கு இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
மதியம... |
தமிழகம் | மின்பம்ப் மூலம் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி | கொடைக்கானல்:கொடைக்கானல் நகராட்சி மூலம் வழங்கப் பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் ஏராளமானோர் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பதால் மேடான பகுதிக்கு தண்ணீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது.
கொடைக்கானல் நகர்பகுதி குடிநீர் ஆதாரமாக ரிசர் வாயர் நீர்த்தேக்கம் விளங்குகிறது. இங்கிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு இப்பகுதியிலுள்ள மக்களுக்க... |
தமிழகம் | பஸ் கட்டணம் உயர்வு சிறைபிடித்த மக்கள் | ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே பஸ் கட்டணம் உயர்த்தப் பட்டதை கண்டித்து தனியார் டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.ஒட்டன்சத்திரம்,பழநி பகுதிகளில் சமீப காலமாக பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து பஸ்களை அவ்வப்போது அப்பகுதி மக்கள் சிறைபிடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. பஸ் உரிமையாளர்கள் பழைய கட்டண... |
தமிழகம் | மகளிர் ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பங்கள் விற்பனை | திண்டுக்கல்:திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில், இந் தாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் விற்பனை நடக்கிறது. கம்மியர் கருவிகள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு, டி.டி. பி.ஓ., கோபா, துணி வெட் டுதல் மற்றும் தைத்தல், பேஷன் டெக்னாலஜி, எம்பிராய்டரி அண்டு நீடில் ஒர்க்ஸ் பிரிவுக... |
தமிழகம் | கொல்லபட்டியில் குடிநீர் பாதிப்பு | குஜிலியம்பாறை:ஆலம்பாடி ஊராட்சி கொல்லபட்டி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல் நிலை தொட்டியும் அருகில் உள்ள கண்டெடுத்த மாணிக்கம் குளத்தில் போர்வெல்லும் அமைக் கப்பட்டுள்ளது. போர்வெல் மின் மோட் டார் பழுதடைந்து நான்கு நாட்களாகியும் சரி செய்யாததால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். குடிநீர் மோட்டாரை சரி செய்து, குடிநீர் வ... |
தமிழகம் | அரசு அலுவலர் ஒன்றிய மாநாடு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு | சென்னை : அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள, அரசு ஊழியர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், மாநாட்டில் கலந்து கொண்டதற்கான, சான்றிதழை வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் ஸ்ரீபதி பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழ்நாடு அரசு அலுவலர் ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | ஒட்டன்சத்திரம்:நூறுநாள் வேலை திட்டத்தில் முழு கூலி வழங்க வலியுறுத்தி ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒட்டன்சத்திரம் தாலுகா விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வனிதாமணி முன்னிலை வகித்தார்.நூறுநாள் வேலை திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு ஒரு நாள் ... |
இந்தியா | அதிக சொத்து குவித்ததாக கேதன் தேசாய் மீது வழக்கு | புதுடில்லி : இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் கேதன் தேசாய் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக லஞ்சம் வாங்கியபோது, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்ய... |
இந்தியா | கிங் பிஷர் விமானத்தில் குண்டு புரளி | மும்பை : மும்பையிலிருந்து லக்னோ புறப்பட்ட கிங் பிஷர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து, விமானம் உடனடியாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பையிலிருந்து உத்தரபிரதேச தலைநகர் லக்னோவுக்கு நேற்று மாலை 4.45க்கு கிங்பிஷர் விமானம், 166 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் வெடிகுண்டு இ... |
தமிழகம் | குடிநீர் மேல்நிலைதொட்டி பராமரிப்பு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் | பழநி: குடிநீர் மேல்நிலைதொட்டிகளை பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மாதந்தோறும் 1, 15 தேதிகளில் சுத்தம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்டபடி தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை என சுகாதாரத்துறை நடத்திய ... |
தமிழகம் | மறியல்! திண்டுக்கல் எம்.எல்.ஏ.,கைது | பழநி:பழநி தாலுகா அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் நடத்தினர். திண்டுக்கல் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை வகித்தார். கார்டு இல்லாத அனைவருக்கும் ரேஷன்கார்டு வழங்க வேண்டும். பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது. அறிவிக்கப்படாத மின் வெட்டை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறிய... |
தமிழகம் | பாராட்டு விழா | வடமதுரை: வடமதுரை கலைமகள் பள்ளி முன்னாள் மாணவி எஸ்.கோகிலாதேவி மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்றார். கலைமகள் பள்ளி சார்பில் நடந்த பாராட்டு விழாவில், தாளாளர் ஆர். கே.பெருமாள் தலைமை வகித்து நினைவு பரிசு வழங்கினார். உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பால ரவிசந்திரன் முன் னிலை வகித்தார்.அலுவலக நிர்வாகி கணேச... |
தமிழகம் | திண்டுக்கல்லில் ஜமாபந்தி நிறைவு | திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத் தில் மே 7ல் ஜமாபந்தி துவங்கியது. தாலுகா வாரியாக குறிப்பிட்ட வருவாய் கிராமங்களுக்கு, பட்டா மாறுதல் உள்பட வருவாய்துறை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடி தீர்வுகளும் காணப்பட்டன. திண்டுக்கல் தாலுகாவில் நேற்று, அணைப் பட்டி, குரும்பபட்டி, பாலகிருஷ்ணாபுரம், ஏ.வெள் ளோடு... |
தமிழகம் | விவசாயிகள் குறைதீர் கூட்டம் | திண்டுக்கல்:மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மே 27ல் நடைபெற உள்ளது. விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக் கைகளை மனுக்களாக கொடுக்கலாம். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற கூட் டத்தில், விவசாயிகள் கொடுத்த கோரிக்கைகளுக் கான பதில்கள், மனுக்கள் பதியும் இடத்தில் வைக்கப்படும். சம்பந்தப்பட்ட விவசாயிகள் பார... |
தமிழகம் | மத்திய அரசு மருத்துவமனைகளில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு : நோயாளிகளுக்கு வழங்கிய காலாவதி மருந்துகள் பறிம | சென்னை : காலாவதி மருந்துகளை நோயாளிகளுக்கு வினியோகிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னையில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் ரெய்டு நடத்தி, 16 மருந்துகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக சி.பி.ஐ., தெற்கு பிரிவு இணை இயக்குனர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். அசோக் குமார் மற்றும் சென்னை பிரிவு டி.ஐ.ஜி., அருணாசலம் ஆகியோர் நிருபர்க... |
தமிழகம் | பதிவான ஓட்டுகள் அழிப்பு | திண்டுக்கல்:சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், பார்லிமென்ட் தேர்தலில் பதிவான ஓட்டுகளை அழிக்கும் பணி நடந்தது. கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பயன்படுத்தப் பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பதிவான ஓட்டுகளை அழிக்கும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்ட... |
தமிழகம் | ஆசிரியர் கவுன்சிலிங் இணை இயக்குநர் ஆய்வு | திண்டுக்கல்:தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இணை இயக்குநர் ராமராஜன் மேற்பார்வையாளராக பங்கேற்றார்.மாவட்டத்தில் திண்டுக் கல் நகர், புறநகர், பழநி நகர், புறநகர், நத்தம், சாணார்பட்டி, ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக் குண்டு, கொடைக்கானல், தொப்பம்பட்டி, ஒட்டன் சத்திரம், ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர், குஜி... |
தமிழகம் | நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2 மணிநேரம் தாமதம் | திண்டுக்கல்:நிஜாமுதீனில் இருந்து நேற்று அதிகாலை 2.15 மணிக்கு திண்டுக்கல் வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில், சிக்னல் பிரச்னையால் இரண்டு மணிநேரம் தாமதமாக காலை 4.30க்கு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.35க்கு வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அதிகாலை இரண்டு மணிக்கு திண்டுக் கல் வந்து சேர்ந்தது. பொதிகை, நெல்லை, பாண்டியன் எக்... |
தமிழகம் | இட பிரச்னையால் எரியோடு தி.மு.க., அலுவலகம் சேதம்! | வடமதுரை: எரியோடு அய்யலூர் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை இடத்தில் தி.மு.க., நகர அலுவலகம் செயல் பட்டு வருகிறது.இதற்கு பின்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத் திற்கு அலுவலகத்தை மாற்ற தனி குடிசை அமைத்து கட்சி அலுவலகம் அமைக்கப் பட்டிருந்தது. தங்களது நிலத்திற்கு முன் பகுதியில் அலுவலகம் அமைக்கக்கூடாது என நில உரிமையாளர் தரப்பில் எதிர... |
இந்தியா | நித்யானந்தா ஜாமீன் மனு : மே 24ம் தேதி விசாரணை | பெங்களூரு: நித்யானந்தா ஜாமீன் மனு முன் கூட்டியே மே 24ம் தேதி விசாரிக்கப்படுகிறது. நித்யானந்தா ஜாமீன் மனு தொடர்பான வழக்கு, மே 26ம் தேதிக்கு நீதிபதி கெம்பண்ணா ஒத்தி வைத்திருந்தார். இந்த வழக்கை முன்னதாகவே விசாரிக்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் வேறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி கேசவநார... |
தமிழகம் | மாலுமியின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருப்பது ஏன்? | மேட்டூரை சேர்ந்த மணமாகாத கப்பல் மாலுமி, மணமான தன் தோழி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், மாலுமியின் உடல் உறுப்புகள் இன்னமும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பாமல், அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர், சின்னபார்க் அடுத்த சவரியம்மாள் நகரை சேர்ந்த மின் ஊழியர் கோ... |
தமிழகம் | ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த எதிர்ப்பு : ஆசிரியர் சங்கத்தினர் கைது | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதட்டம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டு, பிரச்னை எழுப்பிய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினரை கைது செய்தனர். ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம், ர... |
தமிழகம் | நார்பட்டு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் | சேலம் : கூலியை உயர்த்தி வழங்கக்கோரி, நார்பட்டு உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நார்பட்டு மூலம் ஜோடிபுரி தயாரிக்கும், ஐந்தாயிரம் கைத்தறித் தொழிலாளர்கள் உள்ளனர். நார்பட்டு வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக நூலை வாங்கி, அவற்றை திரித்து கொடுக்க... |
தமிழகம் | ஆயுதமானது பக்கெட் கைப்பிடி கோவை சிறையில் கைதிக்கு குத்து | கோவை : கோவை மத்திய சிறையில் கைதிகள் இடையே நேற்று ஏற்பட்ட தகராறில், கூர்மையான ஆயுதத்தால் கைதி குத்தப்பட்டு காயமடைந்தார். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (33); வழிப்பறி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 2009, ஜன., 31 முதல், கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், இதே சிறையில் அடைக... |
தமிழகம் | முதல்வர் வீட்டை போட்டோ எடுத்தவர்களிடம் விசாரணை | சென்னை : முதல்வர் கருணாநிதியின் வீட்டை போட்டோ எடுத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களை பிடித்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (30). இவரது மனைவி சிவலட்சுமி (25). லட்சுமி நாராயணனின் நண்பர் சிந்தாகுமார்(25). இவர்கள் மூவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோடை வி... |
தமிழகம் | ராமேஸ்வரத்தில் 3 வது நாளாக புயல் எச்சரிக்கை : கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் | ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் , பாம்பன் துறைமுக அலுவலகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால், பதட்ட நிலை உருவாகி உள்ளது. பாம்பனிலிருந்து, மே 16 ல் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்... |
தமிழகம் | மாயமான மீனவர்களில் மூவர் கரை திரும்பினர் : மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரம் | கடலூர் : மீன் பிடிக்க சென்று, காணாமல் போன மூன்று மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். மற்றொரு மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது. லைலா புயல் காரணமாக, பலத்த காற்று வீசும் என்பதால், தூத்துக்குடியில், 2,300 நாட்டுப் படகுகள், நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த சுப்ரமணியன் (60), அவரது மகன் ஆனந்த் ... |
தமிழகம் | அரியர்ஸ் பணத்தை தர லஞ்சம் கேட்ட நிலஅளவை துறை உதவியாளர் கைது | சென்னை : சஸ்பெண்ட் செய்யப்பட்டவரின் சம்பள அரியர்ஸ் பணத்தை தர லஞ்சம் கேட்ட நிலஅளவைத்துறை அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சென்னை பெரம்பூர், செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அம்பிராஜன். இவர், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஏழாவது தளத்தில் செயல்பட்டுவரும் நில அளவைத் துறையில், நிலஅளவை உதவி ஆய்... |
இந்தியா | இயற்கை எரிவாயு விலை கணிசமாக அதிகரிப்பு : உர உற்பத்தி தயாரிப்பு விலை அதிகரிக்கும் | புதுடில்லி : மத்திய அமைச்சரவை, இயற்கை எரிவாயு விலையை நேற்று முன்தினம், 20 சதவீதம் உயர்த்தியது, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை அதிகரிக்கும் என்ற எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இதனால், உர உற்பத்தி தயாரிப்பு விலை அதிகரிக்கும். இயற்கை எரிவாயு பயன் படுத்தும் வாகனங்களுக்கு கூடுதல் செலவாகும். மேலும் இதை எரிபொருளாக பயன்படுத்... |
தமிழகம் | அரசு காப்பகத்தில் 3 பெண்கள் ஓட்டம் | மதுரை : வழக்கில் தொடர்புஉடைய பெண்களை, கோர்ட் உத்தரவுபடி, பாதுகாப்பு கருதி, மதுரை தல்லாகுளம் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படுவதுண்டு. நாகர்கோவிலை சேர்ந்த வேணி(17), அருப்புக்கோட்டை ராஜி(27), பரமக்குடி ஜெயா(40) ஆகியோர், இங்கு சில வாரங்களாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன் தினம் நள்ளிரவு, மூவரும் காப்பகத்தில் இருந்த... |
தமிழகம் | லஞ்சம் : நிலஅளவைத் துறை உதவியாளர் கைது | சென்னை : சஸ்பெண்ட் செய்யப்பட்டவரின் சம்பள அரியர்ஸ் பணத்தை தர லஞ்சம் கேட்ட நிலஅளவைத்துறை அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் அம்பிராஜன். இவர், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலஅளவைத்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி, 2007ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்டான நிலையில், இவருக்கு... |
தமிழகம் | மதுரையில் பெண் டாக்டர் தற்கொலை : முதல் மனைவியுடன் டாக்டர் கணவர் கைது | காளையார் கோவில் : மதுரையில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் டாக்டர் அருண் தண்டபாணி, முதல் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகே காளையார் கோவிலை சேர்ந்தவர் டாக்டர் அருண் தண்டபாணி (49). இவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரது இரண்டாவது மனைவி ஹேமலதா (44), காளையார் கோவில் ஆர... |
இந்தியா | இது உங்கள் இடம் | எம்.எல்.ஏ.,க்கள் பாவம்! ஆர்.தனபாலன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: கடந்த 2006 ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் போது, வாடகை வீட்டில் வசித்து, சைக்கிள் ஓட்டிச் சென்றவர்கள், கவுன்சிலர் ஆனபிறகு சொந்த பங்களா, குவாலிஸ் கார் என்று வளர்ந்து விட்டது பிரத்யட்ச உண்மை. கவுன்சிலர் இப்படி முன்னேறி விட்ட பிறகு, எம்.எல்.ஏ., சும்ம... |
தமிழகம் | கள்ளத்தொடர்பால் கணவன் கொன்று புதைப்பு மனைவி கைது: கள்ளக்காதலன் தற்கொலை | விழுப்புரம் : கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த கள்ளக்காதலன் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தார். விழுப்புரம் அடுத்த ஆலாத்தூர் துரைக்கண்ணு மகன் பன்னீர்செல்வம்(38). மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு அமுதா என்... |
தமிழகம் | பறிபோகின்றனகோயிலுக்கு சொந்தமான நிலங்கள்! மனைகளாக்கும் மோசடி அமோகம்... | மானாமதுரை:கோயிலுக்கு மானியமாக எழுதி வைக்கப்பட்ட நிலங்கள், சிலரின் மோசடியால், வீட்டு மனையாக மாறி வருகின்றன. இடம் வாங்குவோர் எச்சரிக்கையாக செயல்பட்டால் மட்டுமே, இந்த மோசடியில் இருந்து தப்பிக்கலாம்.மாவட்டத்தில், அக்கால மன்னர், ஜமீன்தார்கள் கோயில்களுக்கு மானியமாக ஏராளமான நிலங்களை வழங்கினர். மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்; வீர... |
தமிழகம் | சவுதி அரேபியாவில் நர்ஸ் பணிக்கு வாய்ப்பு | சிவகங்கை:சவுதி அரேபியாவில், நர்ஸ் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன (அரசு) நிர்வாக இயக்குனர் குத்சியா காந்தி அறிக்கை: சவுதி சுகாதார அமைச்சகத் தின் இதய மருத்துவ மையங்களில் பி.எஸ்சி., (நர்சிங்) முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
நேர்முக தேர்வு வரும் 24 முதல் 26ம் தேதி வரை டில்லி... |
தமிழகம் | போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி | சிவகங்கை:சிவகங்கை மனித வள மைய இயக்குனர் கற்பூர சுந்தரபாண்டியன் அறிக் கை: மையம் சார்பில் எஸ்.ஐ., போலீஸ் பணிக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 22 ம் தேதி முதல் சனி, ஞாயிற்று கிழமைகளில், சிவகங்கை கே.ஆர்., துவக்க பள்ளியில் பயிற்சி நடக்கும். பயிற்சியில் சேர விரும்பு... |
தமிழகம் | பஸ் வசதி கோரி மனு | சிவகங்கை:களையார்கோவில் அருகே தெற்குப்பட்டி கிராமத்தினர், கலெக்டர் (பொறுப்பு) சிவஞானத்திடம் அளித்த மனு:கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்காக, காளையார்கோவில் செல்ல வேண்டியுள்ளது. கிராம சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை தார் சாலையாக மாற்றி, பஸ் வசதி ஏற்படுத்த வேண்டு... |
தமிழகம் | போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்கிய மனைவி : மீட்டுத்தரக் கோரி கமிஷனரிடம் கணவர் புகார் | திருச்சி : போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்கிய தனது காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி அவரது கணவன் திருச்சி கமிஷனரிடம் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் எளம்பலூர் சாலை பகுதியில் வசிப்பவர் கல்யாணசுந்தரம்(35); இவரது மனைவி இளவரசி (30). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அருந்ததி (6... |
தமிழகம் | ஹவுராவுக்கு இன்று சிறப்பு ரயில் | சென்னை : சென்னையிலிருந்து ஹவுராவுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்டரலில் இருந்து இன்று ( 21ம் தேதி) மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (2842 ஏ) நாளை மாலை 6.15 மணிக்கு ஹவுராவை சென்றடையும். இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து ஹவுரா செல்லும் மெயிலுக்கு (2840) மாற்றாக செல்கிறது. முன்பதிவு இன்று கால... |
தமிழகம் | சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை துவக்கம் | மானாமதுரை: சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா, மானாமதுரையில் நேற்று துவங்கியது. தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். துணை தலைவர்கள் ஜவஹர், ராமய்யா, முருகேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் முரளி வரவேற்றார்.இசை விழா: ஆராதனையின் துவக்கமாக, பி.எஸ். நாராயண சுவாமியின் சீடர் பரத்சுந்தர், திருவெண்காடு ஜெயராமன் சீடர்கள் நித்யா, வி... |
தமிழகம் | ரேஷன் கார்டுதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு | சிவகங்கை:பொருள் வினியோகம் நிறுத்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள், வரும் 25 ம் தேதிக்குள் முறையீடு செய்யலாம். மாவட்டத்தில் நடந்த ஆய்வில், 34 ஆயிரத்து 577 கார்டுகள், சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டு, பொருள் வினியோகம் நிறுத்தப்பட்டது. இப்பட்டியல் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டது. மேல் முறையீடு செய்ய அளிக்கப்பட்ட வாய்ப்பில், ... |
தமிழகம் | பெண்கள் கைது | சிவகங்கை:விலைவாசி உயர்வு, மின்வெட்டை கண்டித்து சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் முன், ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் செய்ய முயன்றனர்.மாவட்ட தலைவர் மணியம்மை, செயலாளர் தமயந்தி தலைமையில், மறியலுக்கு முயன்ற 60 பேரை, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்.ஐ.,வடிவேல்முருகன் கைது செய்தனர். |
தமிழகம் | டாஸ்மாக் ஊழியர் சம்மேளன கூட்டம் | சிவகங்கை:டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம், சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பொது செயலாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் வடிவேலு வரவேற்றார். மாநில பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் முருகன் நன்றி கூறினார்.வார விடுமுறை, எட்டு மணிநேர வேலை, ... |
தமிழகம் | காரைக்குடியில் சூறாவளி | காரைக்குடி:காரைக்குடியில் நேற்று முன்தினம் இரவு, சூறாவளி காற்றுடன், பெய்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. டி.டி., நகர் ஏழாவது வீதியில் இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்து, 10 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டன. செஞ்சை, பழைய பஸ் ஸ்டாண்ட், கே.கே., நகர், முத்துப்பட்டணம் பகுதியிலும் மரம், மின் கம்பங்கள் முறிந்தன. சா... |
தமிழகம் | புயல் காற்றால் உப்பு உற்பத்தி பாதிப்பு :கொள்முதல் பயத்தில் வியாபாரிகள் | ராமநாதபுரம் : கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மழைக்காலம் முடிந்து கோடை துவங்கிய நாள் முதல், ராமநாதபுரம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகமாக நடந்து வந்தது. தொடர்ந்து நிலவிய வெயிலின் தாக்கத்தால் உப்பு விளைச்சல் வழக்கத்தை விட கூடுதலாக இரு... |
தமிழகம் | பெண் தலையுடன் 30 கி.மீ.,சென்ற ரயில் | நாகர்கோவில் : பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயில் மோதி, பெண் ஒருவர் இறந்தார். அவரின் தலையுடன் அந்த ரயில் நாகர்கோவில் வரை வந்தது. பெங்களூரு- கன்னியாகுமரி ரயில் மாலை 4.30 மணிக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் இருந்து, நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆள் இல்லாத ரயில்வே கேட்டை மேரி ஸ்டெல்லா என்பவர் கடக்க ம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.