category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஒரு கண்ணில் வெண்ணெய்; மறுகண்ணில் சுண்ணாம்பு : பரிதவிக்கும் மின்வாரிய உதவியாளர்கள்
மின்வாரியத்தில் புதிதாக சேர்ந்த உதவியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் வழங்கும் மின் வாரியம், ஐ.டி.ஐ., படித்து உதவியாளர்களாக சேர்ந்த 4,000 பேருக்கு மட்டும் 2,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கி வருகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வாரியத்தின் பாரபட்சத்தால் ஊழியர்கள் வேதøனைக்குள்ளாகியுள்ளனர். மின்வார...
General
ஏவுகணை தாக்குதல் : பயங்கரவாதிகள் 14 பேர் பலி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பழங்குடியினப் பகுதியில் பதுங்கியுள்ள அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை குறி வைத்து, அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. வடக்கு வாசீரிஸ்தான...
தமிழகம்
சங்கமேஸ்வரர் கோவில் கோசாலையில் தீவனமின்றி பசியால் வாடும் பசுக்கள்
ஈரோடு : பவானி சங்கமேஸ்வரர் கோவில் கோசாலையில் பக்தர்கள் நேர்ச்சையாக விடப்பட்ட பசுமாடுகள் தீவனமின்றி, பட்டினியால் எலும்பும், தோலுமாக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மட்டுமின்றி, பல்வேறு தோஷங்களை போக்கும் பரிக...
தமிழகம்
பாம்பன் ரோடு பாலம் தூண்களில் விரிசல் : வலுவை இழக்கும் அபாயம்
ராமேஸ்வரம் : பாம்பன் ரோடு பாலம் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பாலம் வலுவிழக்கும் அபாயத்தில் உள்ளது. ராமேஸ்வரத்திற்கு முன்பு, வெளியூர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள், ரயிலை மட்டுமே நம்பியிருந்தனர். மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் உள்ள பாம்பன் கால்வாயில் ரோட...
தமிழகம்
கொலை முயற்சி வழக்கு: பிரபல வக்கீல் கைது
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, கொலை முயற்சி வழக்கில் மூளையாக செயல்பட்ட பிரபல வக்கீலை நேற்று, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே, பவனமங்கலத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை, அதே ஊரை சேர்ந்த கணேசமூர்த்தி, குத்தகைக்கு எடுத்திருந்தார். குத்தகை காலம் முடிந்ததா...
இந்தியா
மகாராஷ்டிராவில் நிலச்சரிவு: 10 பேர் பலி
மும்பை : மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 10 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையில், ரத்னகிரி மாவட்டத்திலுள்ள ஹேமே கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இதில் சிக்கி, 10 பேர் உயிரிழந்தன...
தமிழகம்
மதுரையில் குழந்தை திருட்டு துப்பு கிடைக்காமல் திணறல்
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை திருடப்பட்ட வழக்கில், துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். மதுரை மாவட்டம் பாப்பாபட்டி அருகே மின்னாம்பட்டியை சேர்ந்த இளையராஜா மனைவி போதும்பொண்ணு (22). இவருக்கு அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 3 ல் பெண் குழந்தை பிறந்தது. 17 ம் தேதி இரவு 1.30 மணியளவில் குழந்தை திரு...
தமிழகம்
கொடைக்கானலில் கொட்டிய மழை
கொடைக்கானல் : கொடைக்கானலில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து,கொடைக்கானலில் தினமும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்து வருகிறது.நேற்று காலை பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு துவங்கிய மழை,இடைவிடாமல் பெய்தது.இதனை தொடர்ந்து ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டத...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் ராவண சம்ஹாரம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு ராமர், சீதாதேவி மற்றும் அனுமனுடன் திட்டகுடி நான்குமுனை சந்திப்பிற்கு தங்க கேடயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின் ஆனந்தா குருக்கள் வெள்ளி வேலால் ராவணன் தலையை...
தமிழகம்
ஓமகுளத்தில் ஒற்றைக்கால் தவம் சிதம்பரத்தில் நூதன போராட்டம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி, பக்தர் ஒருவர் குளத்தில் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (33); நந்தனாரின் தீவிர பக்தர். ஆண்டு தோறும் நடராஜர் கோவில் தரிசனத்திற்கு வரும் போது நந்தனார் மடத்திற்கு...
தமிழகம்
மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி : பாட நோட்டுகளுக்கு தட்டுப்பாடு அபாயம்
சிவகாசி : மூலப்பொருட்களின் விலை உயர்வால் பாடநோட்டுகள் தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் பாடநோட்டுகள் தேவையில் சிவகாசியில் 25 சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நோட்டு தயாரிப்பில் 20க்கும் மேற்பட்ட கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. தரமான காகிதத்தாலும், உறுதியான பைண்டிங் போன்றவற்றால் மா...
இந்தியா
கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் அரியானாவில் மிகப் பெரிய மோசடி
சண்டிகார் : அரியானாவில் மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில், பெருமளவு முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக கருதப்படுவது, கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம். நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ம...
இந்தியா
பன்றிக் காய்ச்சலால் ஆறு பேர் பலி மஞ்சள் காமாலை நோயும் பரவுது
திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் எச்1 என் 1 (பன்றிக் காய்ச்சல்) நோயால், ஆறு பேர் பலியாயினர். தற்போது மஞ்சள் காமாலை நோயும் அதிகளவு பரவுகிறது. காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் மட்டும், 12 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல்...
தமிழகம்
தொகுதி மக்களுக்கான போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெ., பங்கேற்பாரா
தேனி : ஆண்டிபட்டி தொகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவான போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பாரா என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள மேகமலை, வருஷநாடு, தும்மக்குண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள 24 ஆயிரத்து 655 ஏக்கர் வனநிலத்தை பாத...
தமிழகம்
சுயஉதவிக் குழுக்களின் நேர்மை குறைகிறதா : வங்கி அலுவலர்கள் ஆலோசனை
மதுரை : வங்கிகளைப் பொறுத்தவரை, கொடுத்த கடனை திருப்பிச் செலுத்துவதில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நேர்மையானவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, தற்போது மாறி வருகிறது. கடந்த 1992 ல், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் துவங்குவதற்கு முன்பாக, வங்கியில் கணக்கு துவங்குவதும், கடன் வாங்குவதும் ஆண்களின் வேலையாக இருந்தது. பெண்கள் குழுக்க...
தமிழகம்
செம்மொழி மாநாடு; விடுப்பு எடுக்க மதுக்கடை ஊழியர்களுக்கு தடை! விற்பனையை இரட்டிப்பாக்க கட்டளை
கோவை : செம்மொழி மாநாடு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைப் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல், பணியில் இருக்க வேண்டுமென்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல்வேறு அமைப்பினரும், வக்கீல...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் ராவண சம்ஹாரம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு, நேற்று ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு ராமர், சீதாதேவி மற்றும் அனுமனுடன் திட்டகுடி நான்குமுனை சந்திப்பிற்கு தங்க கேடயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின் ஆனந்தா குருக்கள் வெள்ளி வேலால் ராவண...
தமிழகம்
இரு மடங்கு வேகத்தில் செல்லும் சைக்கிளை உருவாக்கி இலங்கை அகதி சாதனை
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, இலங்கை அகதி ஒருவர் சாதாரண சைக்கிளை விட, இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும் நவீன சைக்கிளை உருவாக்கியுள்ளார். இலங்கையைச் சேர்ந்தவர் சிவராசா(45). இவர் மனைவி சாந்தினி, குழந்தையுடன் அங்கிருந்து 1996ல் மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்தார். கடந்த 2002ல் அங்கிருந்து, தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத...
தமிழகம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சிற்பக் கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை : கனரா வங்கி நடத்தும் காரைக்குடி சிற்பக்கலை பயிற்சி மையத்தில், இலவச பயிற்சி பெற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கற்சிற்பம், மரச்சிற்பம் மற்றும் உலோகச்சிற்பங்கள் தயாரிப்பு குறித்த 18 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, உறைவிடம், சிற்பத் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இலவசம். குறைந்தது எ...
தமிழகம்
மாநாட்டு பெருமைகளை வலியுறுத்தி தண்ணீரில் யோகாசனம்
தூத்துக்குடி : திருச்செந்தூரில் நேற்றுமாலை, செம்மொழி மாநாட்டு பெருமைகளை வலியுறுத்தி பள்ளி மாணவி, தண்ணீரில் யோகாசனம் செய்தார். திருச்செந்தூர், காயல்பட்டணம் சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி மரகதம். நேற்று மாலை இவர், திருச்செந்தூரிலுள்ள தனியார் பள்ளி நீச்சல் குளத்தில், கோவையில் நடக்க...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அலங்கரிக்க ஓசூரிலிருந்து 25 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி
ஓசூர் : ஓசூரிலிருந்து 25 லட்சம் ரோஜா மலர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மேடை, வரவேற்பு அலங்காரத்திற்காக அனுப்பப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவில், மலர் சாகுபடிக்கு சாதகமான தட்பவெப்பம், மண் வளம் உள்ளது. இதனால், இங்கு ஆண்டு முழுவதும் 4,000 சிறு மற்றும் குறு விவசாயிகள், 150 மலர...
தமிழகம்
முதல் பட்டதாரிகள்: இலவச கல்வி பெற ஆக. 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விருதுநகர் : குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் இலவசமாக கல்வி பெற, ஆக., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது. இலவச கல்வி திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 3 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்...
General
கேமரூன் அணி வெளியேற்றம்
ஜோகன்ஸ்பெர்க்: தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல்வேறு நாடுகள் லீக் சுற்று போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் லீக் சுற்றில் கேமரூன் அணி டென்மார்க் அணியுடன் மோதியது. போட்டியில் டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கேமரூன் அணி உலக கோப்பை போட்டியில...
இந்தியா
சுடுகாட்டை பராமரிக்க போகின்றன தனியார் நிறுவனங்கள் : புண்ணியம் கட்டிக்கொள்ள இப்படியும் ஒரு வழி
ஐதராபாத் : நம் அன்றாட வாழ்வில் எல்லாவற்றிலும் தலையை நுழைத்துவிட்ட தனியார் நிறுவனங்கள், இப்போது புண்ணியம் சேர்ப்பதற்காக சுடுகாட்டுப் பராமரிப்பிலும் இறங்கப் போகின்றன. இதற்கான நடவடிக்கைகள் ஐதராபாத் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து மதச் சடங்குகளில், ஒரு மனிதனின் இறுதி யாத்திரை மற்றும் அதைச் சார்ந்த சடங்குகள...
இந்தியா
முறைகேடாக இயங்கும் சுரங்கங்களை தடுக்க கமிட்டி அமைக்கும்படி மாநிலங்களுக்கு உத்தரவு
புதுடில்லி : முறைகேடாக மற்றும் கள்ளத் தனமாக இயங்கும் சுரங்கங்களை தடுக்க மாநில அளவில் உயர்மட்ட கமிட்டிகளை அமைக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுரங்கத்துறை செயலர் சாந்தா ஷீலா நாயர் இது குறித்து கூறியதாவது: ஆந்திரா, சத்திஸ்கர், குஜராத், கோவா,கர்நாடகா, மகாராஷ்டிரா,ஒரிசா, ராஜஸ்தான், மேற்கு வங்...
இந்தியா
ஒரு மாத குழந்தைக்கு வருமானவரி கார்டு
புதுச்சேரி : அனைவருக்கும் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில், பிறந்து 30 நாளான குழந்தைக்கு வருமானவரி கார்டு பெறப்பட்டுள்ளது. உப்பளம் ஜீவானந்த வீதியைசேர்ந்தவர் போன்ஸ் ரமேஷ். இவரது மனைவி விண்ணரசி போன்ஸ்.இவர்களுக்கு, மே 6ம் தேதி 2010அன்று, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கனிஷ்க் என்ற மகன் பிறந்துள்ளான். இந்த...
இந்தியா
மருத்துவ சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ராணுவ அதிகாரி கைது
மும்பை : ராணுவ வீரருக்கு மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ராணுவ மருத்துவ அதிகாரியை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். மும்பை கொலாபாவில் உள்ள ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாமில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மேஜர் திபேந்திரா பூஷன். ராணுவத்தில் பணியாற்ற தேர்ச்சி பெற்ற ஒருவர், இவரிடம் மருத்துவ பரி...
தமிழகம்
வாந்தி, பேதி பலி 5 ஆக உயர்வு
திருநெல்வேலி : ஏர்வாடியில் வாந்தி, பேதிக்கு நேற்றும் ஒரு பெண் பலியானார். பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்துள்ள ஏர்வாடியில் தாமிரபரணியில் இருந்து வழங்கப்பட்ட குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் கடந்த 17ம் தேதி பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும்...
தமிழகம்
நல்ல அரசின் தலைவராக இருப்பதால் முதல்வரை மக்கள் போற்றுகின்றனர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
குறிஞ்சிப்பாடி : நல்ல திட்டங்களை கொடுத்து நல்ல அரசின் தலைவராக இருப்பதால் முதல்வரை மக்கள் போற் றுகின்றனர் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். குள்ளஞ்சாவடி அருகே வழுதலம்பட்டு ஊராட்சியில் "டிவி' வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வ...
தமிழகம்
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு இழப்பீடு கோரி உறவினர்கள் மறியல்
வானூர் : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே குளத்தில் மூழ்கி இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நஷ்டு ஈடு வழங்கக் கோரி, பொதுமக்கள் மறியல் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மகாவீரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினாயகம். இவரது மகன்கள் அரவிந்தன் (12) திருச்சிற்றம்பலம் காந்தி நடுநிலைப் பள்...
தமிழகம்
சீதாளதேவி மாரியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
சிதம்பரம் : சிதம்பரம் அருகே நாஞ்சலூர்- வக்காரமாரி கிராமத்தில் சீதாளதேவி மாரியம்மன் கோவில் அஷ்ட பந்தன மகா கும் பாபிஷேக விழா நடந்தது.கும்பாபிஷேக விழாவை முன் னிட்டு கடந்த 15ம்தேதி வினாயகர் வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், ரஷபந்தனம், கலாகர்ஷணம், கலசஸதாபனம் இரவு முதல் கால பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. 16ம்தேதி காலை இரண் டாம...
தமிழகம்
இறகு பந்து போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
கடலூர் : மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கடலூர் பள்ளி மாணவி வெற்றி பெற்றார்.கடலூர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் சிதம்பரம் அண் ணாமலை நகரில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. இதில் கடலூர் பள்ளி மாணவி பிரியதர்ஷினி 13 வயது, 16 மற்றும் 19 வயது பிரிவில் இரட்டையர் போட்டியில் முதலிடமும், பெண்களுக்குண்டான தனிப்...
தமிழகம்
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அனுமதி ரத்து: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
கடலூர் : சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் வாகனம் சிறை பிடிக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என வட் டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.இது குறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் செய்திக் குறிப்பு:சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல் லுதல் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பான செயலாகும். அவ...
தமிழகம்
சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன்பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் வேண்டுகோள்
பண்ருட்டி : அண்ணாகிராம வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன் பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் பிரேமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:அண்ணாகிராமம் தோட்ட கலைத் துறை வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் 50 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் மூலம் துல்லிய பண்ணையம் த...
தமிழகம்
மாணவர்களுக்கு பாராட்டு விழா
கடலூர் : கடலூரில் எஸ்.எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற போலீசார் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிக்கு எம். எல்.ஏ., பரிசு வழங்கினார்.கடலூர் 12வது வார்டுக்குட்பட்ட போலீஸ் குடியிருப்பு பகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்த போலீசாரி...
தமிழகம்
துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடு: சேர்மன் ஆய்வு
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை சேர்மன் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர் களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனைத் ...
தமிழகம்
ஓமகுளத்தில் ஒற்றைக்கால் தவம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி பக்தர் ஒருவர் குளத்தில் ஒற்றைக் காலில் நின்று நூதன போராட்டத் தில் ஈடுபட்டார்.திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் கணேசன் (33). நந்தனாரின் தீவிர பக் தர். ஆண்டு தோறும் நடராஜர் கோவில் தரிசனத் திற்கு வரும் போது நந்தனார் மடத் தி...
தமிழகம்
கடலூரில் ராகுல் பிறந்த நாள் விழா
கடலூர் : கடலூர் நகர காங்., மற்றும் தொகுதி இளைஞர் காங்., சார்பில் ராகுல் பிறந்த நாள் விழா நேரு பவனில் நடந்தது. நகர காங்., தலைவர் ரகுபதி தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தொகுதி இளைஞர் காங்., தலைவர் ஞானசேகரன், தொழில் அதிபர் ஞானசந்திரன் ஆகியோர் மஞ்சக்குப்பம் காது கேளாதோர் பள்ளி யில் மதிய உணவு வழங் கினர்.நிகழ்...
தமிழகம்
கணவர் கழுத்தை நெரித்து கொலை: நாடகமாடிய மனைவி கைது
கிள்ளை : சிதம்பரம் அருகே குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு கீழே விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூவரை பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் அடுத்த வடக்கு சாவடியைச் சேர்ந் தவர் முருகவேல் (30). இவரது மனைவி அம்புஜவள்ளி (24). இவர்களுக்கு அருண் குமார் (6), அபினேஷ் (4), ...
தமிழகம்
மொபட்டில் சென்றவர் தனியார் பஸ் மோதி பலி
கடலூர் : மொபட்டில் சென்றவர் தனியார் பஸ் மோதி இறந் தார்.கடலூர் புருகீஸ்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் கடந்த 15ம் தேதி மதியம் கடலூர் முதுநகர் மோகன் சிங் வீதியில் இருந்து வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். முதுநகர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது.அதில் படுகாயமடைந்த சரவணன் புது...
தமிழகம்
போலி பத்திரம் தயாரித்து மோசடி : இருவருக்கு வலை
கடலூர் : கடலூரில் போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் சூரப்பன்நாயக்கன் சாவடியைச் சேர்ந்தவர் மந்திரிகுமார் (52). இவர் 2007ம் ஆண்டு பஸ் நிலையம் அருகில் கடை கட்டியபோது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு ஒரு கடை வேண்டும் என கூறி 10 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்தார். இதற...
தமிழகம்
மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்கக்கோரி பட்டதாரி பெண்கள் எம்.பி.,யிடம் மனு
கடலூர் : மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்டுத்தரக்கோரி பட்டதாரி பெண் கள் எம்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலூர் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த பட்டதாரி பெண்கள் கலைச் செல்வி (20), புஷ்பலதா (18). இருவரும் மலேசியாவில் சிறையில் உள்ள தனது தாயை மீட்கக் கோரி எஸ்.பி.,அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். மனுவின் மீது கலெக்டர...
தமிழகம்
குளிர்பான பாட்டிலில் மிதந்த நச்சுப் பொருள்
கடலூர் : கடலூரில் குளிர்பான பாட்டிலில் நச்சுப் பொருள் மிதந்தது.கடலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வேணுகோபாலபுரம் மெயின் ரோட்டில் பெட் டிக்கடை வைத்துள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு ஏஜன்சி மூலம் கோகோ கோலா 200 மி.லி., குளிர்பான பாட்டில்கள் வந்தன. நேற்று காலை மகேந் திரன் பாட்டில்களை பிரிட்...
தமிழகம்
எஸ்.பி., கார் விபத்து: பஸ் டிரைவர் கைது
சிறுபாக்கம் : கடலூர் எஸ்.பி., கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியின் போது விருத்தாசலம், மங்கலம்பேட்டை வழியாக உளுந்தூர் பேட்டை சென்றவர் பின் னர் வேப்பூர் சென்றார். அதிகாலை 3.30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஐவதுக...
தமிழகம்
ஆனித் திருமஞ்சன தரிசனம்: பக்தர்கள் குவிந்தனர்
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த ஆனித் திருமஞ்சன தரிசனத்தில் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆன...
தமிழகம்
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அனுமதி ரத்து: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
கடலூர் : சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் வாகனம் சிறை பிடிக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என வட் டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.இது குறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் செய்திக் குறிப்பு: சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல் லுதல் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பான செயலாகும். அ...
தமிழகம்
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு: இழப்பீடு கோரி உறவினர்கள் மறியல்
வானூர் : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே குளத்தில் மூழ்கி இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நஷ்டு ஈடு வழங்கக் கோரி, பொதுமக்கள் மறியல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மகாவீரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினாயகம். இவரது மகன்கள் அரவிந் தன் (12) திருச்சிற்றம்பலம் காந்தி நடுநிலைப் பள்...
தமிழகம்
விழுப்புரத்தில் அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் அ.தி. மு.க., எம்.ஜி.ஆர்., இளை ஞரணி சார்பில் தி.மு.க., அரசைக் கண்டித்து தெரு முனைப் பிரசாரக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் பழைய பஸ் நிலையம், மந்தக்கரை திடல் பகுதிகளில் நடந்த கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்டத் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாஸ்கரன் வர வேற்றார். மாவட்ட ...
தமிழகம்
வீட்டு மனை கேட்டு ஊராட்சி தலைவர் மனு
செஞ்சி : சொ.குப்பம் கிராமத்தை சேர்ந்த 25 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு செஞ்சியில் நடந்த ஜமாபந்தியில் ஊராட்சி தலைவர் மனு கொடுத்தார்.செஞ்சி தாலுகா அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. சத்தியமங்கலம் குறுவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின...
தமிழகம்
அரசு பணியாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி
செஞ்சி : கோவை செம்மொழி மாநாட் டிற்கு செல்ல அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் பேரியக்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் பேரியக்க தலைவர் அறவாழி விடுத்துள்ள அறிக்கை:கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள...
இந்தியா
காங்., ஆட்சியில் ஏழைகள் வளர்ச்சி பெறவில்லை மா.கம்யூ., தமிழ் மாநிலச் செயலாளர் காட்டம்
புதுச்சேரி : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத அரசாக காங்., அரசு உள்ளது என மா.கம்யூ., தமிழ் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார். புதுச்சேரி மாநில மா.கம்யூ., சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு சிங்காரவேலர் திடலில் நடந்தது. பிரதேச செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். ராஜாங்கம் வரவேற்றார். தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் க...
இந்தியா
நாடகப் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி : ஆசிரியர் கலைக்குழு நடத்தும் நாடகப் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆசிரியர் கலைக்குழு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழு சார்பில் நாடகப் போட்டி நடத்தப்ப உள்ளது. இப் போட்டி, வரும் மாதம் 23ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 1ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முருங்கப்பாக்க...
இந்தியா
அரசு ஊழியர் கொலை வழக்கில் மேலும் நான்கு பேர் கைது
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பொதுப்பணித்துறை ஊழியர் கொலை வழக்கில், மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் புதுநகர் 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் லூக்காஸ் (53). பொதுப்பணித் துறை ஊழியர். இவர் கடந்த 14ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, புதுநகர் இளன...
இந்தியா
போலி சான்றிதழ் தயாரித்தவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு
காரைக்கால் : வெளிநாடுகளுக்கு செல்ல போலி கல்வி சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ள 4 பேரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நகர போலீசார் முடிவு செய்துள்ளனர். காரைக்காலில் கல்விச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து கொடுக்கும் கும்பலைச் சேர்ந்த மாதா கோவில் வீதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறு...
இந்தியா
பல்கலையில் 24ம் தேதி பரத நாட்டிய அரங்கேற்றம்
புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவி வினோதினியின் பரதநாட்டிய நிகழ்ச்சி, வரும் 24ம் தேதி நடக்கிறது.புதுச்சேரியைச் சேர்ந்தவர் வினோதினி (17). பிளஸ் 2 முடித்துள்ள இவர், புதுச்சேரியில் உள்ள திரிவேணி கலாகேந்திராவில் பரதநாட்டியம் மற்றும் கர்நாடக சங்கீதம் பயின்று வருகிறார். இவருக்கு ரசியா என்ற ஆசிரியர் பரதநாட்டியம்...
இந்தியா
உலக இசை தினத்தை முன்னிட்டு பிக்.எப்.எம்.,மில் சிறப்பு நிகழ்ச்சிகள்
புதுச்சேரி : <உலக இசை தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பிக்.எப்.எம்.,மில் நாளை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இதுகுறித்து புதுச்சேரி பிக்.எப்.எம்., நிறுவனத் தின் நிலையத் தலைவர் ஜெகதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:உலக இசை தினம், நாளை (21ம் தேதி) கொண் டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, புதுச்சேரி 92.7 பிக்.எப்.எம்., வரும...
தமிழகம்
சைதாப்பேட்டையில் தொடரும் மின்வெட்டு
சென்னை: சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், தினமும்  அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டு, குழந்தைகள், பள்ளிச் செல்லும் சிறுவர்கள், பணிக்கு செல்வோர், முதியோர் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இப்பகுதியில் உள்ள பல வீடுகளில் கு...
இந்தியா
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தி.மு.க., சார்பில் பிரசார கலை நிகழ்ச்சி
புதுச்சேரி : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, பிரசார கலை நிகழ்ச்சியை தி.மு.க., அமைப் பாளர் ஜானகிராமன் துவக்கி வைத்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் பிரசார பயணம் மேற் கொள்ளப்பட உள்ளது. தட்டாஞ் சாவடி தொகுதி தி.மு.க., சார்பில் கவுண்டன்பாளையத்தில் பிரசார பயண க...
இந்தியா
கும்பாபிஷேக நிறைவு விழா
புதுச்சேரி : இரும்பை மாகாளேஸ் வரர் கோவில் கும்பாபி ஷேக 3ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.வானூர் அடுத்த இரும்பையில் மதுசுந்தர நாயகி சமேத மாகாளேஸ் வரர் கோவில் கும்பாபி ஷேம் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. கும்பாபி ஷேகம் முடிந்து 3ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 8 மணி முதல் மகா கும்பாபி ஷேக ஹோமம் நடந்த...
இந்தியா
பிளஸ் 2 தேர்வில் 100 மதிப்பெண் குறைவு: புதுச்சேரி மாணவருக்கு நேர்ந்த அவலம்
புதுச்சேரி : பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுச்சேரி மாணவருக்கு 100 மதிப்பெண் குறைத்து வழங்கியுள்ள அவலம் அரங்கேறியுள் ளது.புதுச்சேரி, குருசுக்குப்பம் மரவாடித்தெரு, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அசோக் ராஜ். டீக்கடை வைத்துள்ளார். இவரது மகன் மணிகண்டன், புதுச்சேரி ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் படித்து, பிளஸ் 2 பொது...
தமிழகம்
பழைய வத்தலக்குண்டு கண்மாயில் மண் திருட்டு
வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு கண்மாயில் இயந்திரம் மூலம் மண் திருடப்படுவது தொடர்கிறது. பழைய வத்தலக்குண் டில் பொதுப்பணித்துறை க்கு சொந்தமான பெரிய கண்மாய் உள்ளது. கண் மாய்களில் மண் எடுப்பதற்குத் கனிம வளத்துறையினர் அனுமதி பெற வேண்டும். இயந்திரம் மூலம் மண் அள்ளுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் பழைய வத்தலக்குண்டில் சிலர் கடந...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் ஒன் றியம் ஒண்டிவாடநாயக் கன்பட்டி, வாடிபட்டி, நரிபட்டியிலுள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கல்வி விழிப்புணர்வு நாள் விழா நடந்தது. பள்ளி மாணவர்கள் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர். ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தமிழகம்
பாராட்டு விழா
தாண்டிக்குடி : தாண்டிக்குடி நாகம் மாள் நினைவு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளி செயலர் வசந்தகுமாரி தலைமை வகித்தார். கீழ்பழனி மலை தோட்டக் கலை சுய உதவிக்குழு செயலர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். முதல் மூன்று இடங் களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு...
தமிழகம்
எட்டு மூடை அரிசி பறிமுதல்
திண்டுக்கல் : திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(40). இவர் தனது வீட்டு முன்பு எட்டு ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்தார். திண்டுக்கல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., செல்வம் இவரை கைது செய்து, ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தார்.
தமிழகம்
பூக்கள் விலை சரிவு
திண்டுக்கல் : திண்டுக்கல் பூ மார்க் கெட்டில், வியாபாரிகள் வருகை இல்லாததால் பூக் களின் விலை சரிந்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ 150 ரூபாய்க்கு விற்கப் பட்ட சம்மங்கி, நேற்று 50 ரூபாயாக இருந்தது. 180 ஆக இருந்த கனகாம்பரம் 60 ரூபாயாகவும் குறைந்திருந்தன. பிற பூக்களும் விலை குறைந்து, மல் லிகை 130, காக்கரட்டான் 100, செண்டுமல்லி...
தமிழகம்
ஊடக அறை; பரிதி இளம் வழுதி ஆய்வு
கோவை : செம்மொழி மாநாட்டுக்காக அமைக்க பட்டுள்ள ஊடக அரங்கத்தினை செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி பார்வையிட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றி செய்தி சேகரிக்க, உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரிகையாளர்களுக்காக 60 லட்ச ர...
தமிழகம்
ஜூலை 5ல் உழவர் தின பேரணி
கோவை : கோவையில் ஜூலை 5ம் தேதி உழவர் தின பேரணி நடக்கிறது.தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி கூறியதாவது:கடந்த 1971 முதல் 1980ம் ஆண்டு வரை விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் ஜூலை 5ம் தேதி உழவர் தின பேரணி கோவையில் நடக்கிறது. இதில், கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம், தேசிய ஊரக வேலைவாய்...
தமிழகம்
24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவக்குழு ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு மருத்துவக்குழு ஆலோசனைக் கூட்டம், கோவை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது.கோவை அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். பொது சுகாதாரத்துறை இணைஇயக்குனர் சிவசுப்பிரமணியன், துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சிவப்பிரகாசம், ஏ.ஆர்.எம...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்: நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் யூனியன் செல்லப்பம்பட்டி குறுவள மையம் சார்பில், கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார். ஏ.இ.இ.ஓ.,க்கள் சண்முகம், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்த...
தமிழகம்
மாநாடு கண்டித்து நோட்டீஸ் வினியோகித்த 6 பேர் கைது
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து நோட்டீஸ் வினியோகம் செய்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.<உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நேற்று நோட்டீஸ் வினியோகம் செய்தனர். அதையறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், மக்கள் ஜன...
தமிழகம்
நகை திருட்டு
வடமதுரை : எரியோடு சுப்பிரமணியபிள்ளையூர் பிரிவில் வசிப்பவர் பழனிச்சாமி. இவரது மனைவி ரத்தினம். இவரது வீட்டிற்கு ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த உறவினரான அன்னக்கிளி விருந்தினராக தங்கிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீட்டில் இருந்த ஐந்தரை பவுன் நகையை தேடி பார்த்தபோது காணவில்லை. உறவினர் அன்னக்கிளி மீது ரத்தினம் எரியோடு போலீசில் பு...
தமிழகம்
பைக் திருடிய 2 பேர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நாகல்நகரைச் சேர்ந்த கிறிஸ்டோபர்(24), ஆனந்த்(26) ஆகியோரிடம் விசாரித்தனர். இருவரும், இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். கிறிஸ்டோபர், ஆனந்தை கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ. ஒரு லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து பைக...
தமிழகம்
லாரி மோதி ஒருவர் பலி
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராமபட்டணம்புதூரைச் சேர்ந்தவர் பழனி (60). இவர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோடு பிரிவு அருகே நடந்து சென்ற போது, எதிரே வந்த மினிலாரி மோதியது. பலத்த காயமடைந்த பழனி, திண்டுக்கல் ஆஸ் பத்திரிக்கு கொண்டு செல் லும் வழியில் இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் புலியூர்நத்தத்தைச் சேர்ந்த மினி...
தமிழகம்
குலவையிட்டு நாற்று நட்டனர் பக்தர்கள் ஆனி உற்சவத் திருவிழா கோலாகலம்
பேரூர் : இயற்கைவளங்களோடு, மக்கள் அமைதியாக வாழ, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் வயலில் இறங்கி நாற்று நடும், ஆனி உற்சவ நாற்றுநடவு திருவிழா பேரூரில் நடந்தது.மக்கள் அமைதியாகவும், மழை வளம், இயற்கை வளம் பெற்று இன்புற்று வாழவும் பட்டீஸ்வரரும், பச்சைநாயகி அம்மனும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களாக வேடம் தரித்து பேரூர் கோவில் அ...
தமிழகம்
ஜீப் விபத்து டிரைவர் பலி
பழநி: தாழையூத்து அருகே உள்ள கொமரலிங்கத்தை சேர்ந்தவர் சுசீந்திரன்(40). ஜீப் டிரைவர். இவர் ஓட்டி வந்த ஜீப் கொழுமம் ரோட்டில் மரத்தில் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டியில் கிணற்றில் குளித்த போது இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி வைகை நகரை சேர்ந்த மாறன் மகன் குப்புசாமி(14), பாக்கியராஜ் மகன் சுபாஷ்(13), சுரேஷ் (13), அருண்குமார் (14) ஆகியோர், ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள பொதுக்கிணற்றுக்கு நேற்று குளிக...
தமிழகம்
பொதுக்கூட்டம்
திண்டுக்கல்: போபால் விஷ வாயுவால் பாதிக்கப் பட்டோருக்கு நீதி வேண்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நல உரிமை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகி ஸ்வேதாநாராயண் தலைமை வகித்தார். முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தை, பாதிரியார் பிலிப் சுதாகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், தமிழ்நா...
தமிழகம்
நல உதவி வழங்கல்
திண்டுக்கல்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் இலவச நல உதவி வழங்கினர். மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். தலைவர் தண்டபாணி நல உதவிகளை வழங்கினார். செய்தி தொடர்பாளர் ரவிசுப்பிரமணி, நிர்வாகிகள் பாலு, ராஜம்மாள், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர ...
தமிழகம்
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
பொள்ளாச்சி : கோவை தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சியில் கலை நிகழ்ச்சி நடந்தது.வை தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு குறித்து பொதுமக்களிடையேயும், வர்த்தக நிறுவனங்களிடையேயும் விழிப...
தமிழகம்
வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை திடீர் சரிவு: விவசாயிகள் கலக்கம்
பொள்ளாச்சி : மழை சீசன் துவங்கியுள்ள நிலையில் கொப்பரைக்கு மார்க்கெட்டில் கிராக்கி நிலவினாலும், திடீர் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் <தென்னை விவசாயிகளும், கொப்பரை உற்பத்தியாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.கொப்பரை விலை உயர்ந்து வந்ததால், மார்க்கெட் கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக இருந்தது. தென்மேற்கு பருவமழை சீசனும்...
தமிழகம்
எஸ்டேட் தொழிலாளிக்கு விபத்து நஷ்ட ஈடு
வால்பாறை : வால்பாறை அருகேயுள்ள முத்துமுடி எஸ்டேட்டை சேர்ந்த ஆரோக்கியராஜ், 2008 பிப்., 20ல், எஸ்டேட்டில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வலது கை துண்டிக்கப் பட்டது.பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு விபத்து நஷ்டஈடு வழங்க கோரி தொழிலாளியின் சார்பில் வக்கீல் விஸ்வநாதன் தொழிலாளர்...
தமிழகம்
கண்டிப்பை மீறி மனைவி வேலைக்கு சென்றதால் கணவர் தற்கொலை
திருநகர் : வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற கணவரின் கண்டிப்பைமீறி மனைவி வேலைக்கு சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.திருநகர் விளாச்சேரி ஆதிசிவன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார்(45) மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது மனைவி மகாலட்சுமி(35) மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்க்கிறார். மகாலட்சுமி...
தமிழகம்
செம்மொழி மாநாடு எழுச்சி ஓட்டத்தில் மாணவர்கள் உற்சாகம்
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அண்ணா பல்கலை சார்பில் 5 கி.மீ.,தூர விழிப்புணர்வு எழுச்சி ஓட்டம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, கடந்த வாரம் "டிவிஎச்', தமிழ்மையம், பாரதியார் பல்கலை சார்பில் 3 லட்சத்து 21,000 ரூபாய் பரிசுப்பணத்தை வழங்கி 10 கி.மீ.,தூரம் மின...
தமிழகம்
அமெரிக்கன் கல்லூரியில் மீண்டும் மோதல்
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தில் ஏற்கனவே மோதல் இருந்துவரும் நிலையில், தற்போது மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நிதிக்காப்பாளருக்கும், முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி நிதிக் காப்பாளர் தவமணி கிறிஸ்டோபருக்கு எதிராக நேற்று முன்தினமும், நேற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு...
தமிழகம்
கூடுதலாக 415 பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்து ஏற்பாடு குழுத் தலைவர் சாமிநாதன் தகவல்
கோவை : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து 415 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். கோவையில் நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு அனைத்து வகையிலும் போக்...
தமிழகம்
துப்புரவுப் பணியை துரிதமாக்க மாநகராட்சி புது திட்டம்
கோவை : கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தூய்மைப் பணியினால், நகரில் மேற்கொள்ளப்படும் அன்றாட துப்புரவுப்பணிகள் தொய்வடையாமல் தடுக்க, கோவை மாநகராட்சி புதிய திட்டத்தை வகுத்துள்ளது. கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க பல லட்சம் மக்கள் வருவதாக உளவுத்துறையினர் கணக்கீடு மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை ...
தமிழகம்
குடிபோதையில் கார் ஓட்டியவர் கைது
ப.வேலூர்: குடிபோதையில் கார் ஓட்டிச் சென்றவரை வேலகவுண்டம்பட்டி போலீஸார் கைது செய்தனர். துறையூர் சேரமங்கலத்தை சேர்ந்தவர் இளையப்பன் (36). அவர் நேற்று முன்தினம் மாலை ஸ்கார்ப்பியோ காரில் நாமக்கல் வந்துவிட்டு, திருச்செங்கோடு சென்றார்.  வேலகவுண்டம்பட்டி அருகே அவர் சென்றபோது கார் தாறுமாறாக ஓடியது.அதுகுறித்து அப்பகுதியினர் வேலக...
தமிழகம்
போலீசார் அடைத்த அரசரடி: பொதுமக்கள் பெரும் அவதி
மதுரை : போக்குவரத்து நெருக்கடியை சரி செய்கிறோம் என்ற பெயரில் மதுரை அரசரடி பகுதியில் போலீசார் நேற்று மதியம் முதல் இரும்பு தடுப்புகளால் அடைப்பு ஏற்படுத்தினர். இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் பலரும் காளவாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட் செல்ல எந்த வழியே செல்வது என அறியாமல் தவித்தனர். புதுஜெயில் ரோட்டில் இருந்து வரும் பஸ், லாரி போ...
தமிழகம்
விடுப்பு எடுக்க மதுக்கடை ஊழியர்களுக்கு தடை: விற்பனையை இரட்டிப்பாக்க கட்டளை
கோவை : செம்மொழி மாநாடு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைப் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டுமென்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல்வேறு அமைப்பினரும், வக்கீல்களு...
இந்தியா
காமன்வெல்த் போட்டியில் உசேன் போல்ட் பங்குபெற வில்லை
புதுடில்லி: புதுடில்லியில் வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பல்வேறு நாடுகளின் தங்களின் வீரர்களை அனுப்பி வைக்க உள்ளது. போட்டியில் உலக மிக வேக மனிதர் என்ற பட்டம் வென்ற உசேன் போல்ட் போட்டியில் கலந்துகொள்வார் என போட்டியின் அமைப்பாளர் சுரேஷ்கல்மாடி தெரிவித்திருந்தார். இந...
தமிழகம்
கோவையில் உலகத்தமிழ் மாநாட்டு பணிகள் நிறைவு: வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் வருகை
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளன. பல நாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் கோவைக்கு வர உள்ளனர். கோவை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.கோவையில் வரும் 23லிருந்து 27ம் தேதி வரையிலும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டுக்காக, கடந்த 10 மாதங்களாக கோவை...
தமிழகம்
ஆர்.எஸ்., ரயில்வே பாலத்தில் போலீஸ் எஸ்.பி., திடீர் ஆய்வு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவரி ஆர்.எஸ்., ரயில்வே ஆற்றுப்பாலத்தில் மாவட்ட எஸ்.பி., தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, விக்ரவாண்டி அருகே மதுரபாக்கத்தில் வெடிமூட்டை மருந்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஈரோடு மாவட...
தமிழகம்
ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரை : அனுப்பானடி பகுதியில் ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. மாவட்ட பொது வினியோக அலுவலர் முருகையா, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, தாசில்தார் வசந்தி ஆகியோர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை பின்தொடர்ந்தனர். அனுப்பானடி கேட்லாக் ரோட்டில் உள்ள ...
தமிழகம்
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்; உள்நாட்டு மீன் விலை உயர்வு
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் உள்ள கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கடலில் பலத்த காற்று வீசுவதாலும், கடல் சீற்றமாக உள்ளதாலும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் உள்நாட்டு மீன்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரம் முன்பு தொடர்ந...
தமிழகம்
காஷ்மீரில் உயிரிழந்த குமரி வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
பள்ளியாடி : காஷ்மீரில் உயிரிழந்த குமரி ராணுவ வீரரின் உடல் நேற்று(19ம் தேதி) சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே செருங்குதோட்டத்துவிளையை சேர்ந்தவர் டெர்பென்சன்தாஸ்(42). இவர் ராணுவ வீரராக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 15ம் தேதி காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் ப...
தமிழகம்
உலக தமிழ் செம்மொழி மாநாடு சுடர் தொடர் ஓட்டம் துவக்கம்
ஊத்தங்கரை: உலக தமிழ் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு சுடர் தொடர் ஓட்டம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவக்கியது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 17 ம் தேதி வேலூரில் இவங்கிய சுடர் தொடர் ஓட்டம்  கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை, செங்...
தமிழகம்
குடிநீர் கோரி சாலை மறியல்
கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில ஈடுபட்டனர். மத்தூர் யூனியனுக்கு  உட்பட்டது சிவம்பட்டி பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தை சேர்ந்த கிராமங்களுக்கு சிவம்பட்டி ஏரி அருகே போர்வெல்  அமைத்து அங்கிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேல்  மஞ்சுப...
தமிழகம்
கி.கிரி மாங்கனி கண்காட்சியில் இன்று பல்சுவை கலை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் 18வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் இன்று பல்சுவை கலை நிகழ்ச்சி நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. மாலை 6 மணிக்கு சென்னை சரவணன் தியேட்டர்ஸ் வழங்கும் பல்...
தமிழகம்
வீட்டில் தூங்கிய குழந்தை மாயம்
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே வீட்டில் தூங்கிய மூன்று வயது சிறுமி மாயமானது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். போச்சம்பள்ளி அடுத்த கல்லாவி பாபுசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரிக் டிரைவர் தங்கராஜ் (34). இவரது மனைவி சுசிலா. இவர்களது மகள் ஜெயஸ்ரீ (3). தங்கராஜ் ரிக் வண்டியை ஓட்ட அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்போது குழ...
இந்தியா
சோகத்தின் பிடியில் மீனவ கிராமம் தேடும் பணியில் சிக்கியது உடைந்த படகு
நித்திரவிளை : நித்திரவிளை அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பயணித்த படகு ஆழ்கடலில் உடைந்த நிலையில் காணப்பட்டதாக தேடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளதால் கடற்கரை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. நித்திரவிளை அருகே கடற்கரை கிராமமான இரவிபுத்தன்துறையை சேர்ந்த குருசு மகன் ஈசாக்(52), லூயிஸ் மகன் கிளீட்டஸ்(...