category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வடசென்னையில் ஈக்கள் அதிகரிப்பு தொற்றுநோய் அபாயம் பீதியில் மக்கள்
வண்ணாரப்பேட்டை : வடசென்னையில் ஈக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொற்றுநோய் அபாயத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.நாள்பட்ட குப்பைகளில் தண்ணீர் தேங்கும்போது அவை அழுகி, அவற்றில் இருந்து "மெகட்ஸ்' புழுக்கள் உருவாகின்றன. அந்த புழுக்கள் தான் நாளடைவில் ஈக்களாக உருமாறுகின்றன. சீதோஷ்ண நிலை மாறும்போது இதுபோ...
தமிழகம்
கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி
ஆவடி : ஆவடியில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில், கோழி இறைச்சிக் கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டி வருவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.ஆவடியில் ஏராளமான கோழி, மீன் மற்றும் ஆட்டிறைச்சிக் கடைகள் உள்ளன. கோழி இறக்கைகள், உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை, கடைக்காரர்கள் பெரிய, பெரிய சாக்க...
தமிழகம்
செயின் பறித்த வாலிபர் கைது
விருகம்பாக்கம் : பெண்ணிடம் செயினை பறித்து விட்டு, தப்பியோடிய வாலிபரை, பொதுமக்கள் துரத்திப் பிடித்தனர்.விருகம்பாக்கம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் மனைவி மகேஸ்வரி(26). நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார்.அவரை பின் தொடர்ந்து வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ...
தமிழகம்
சங்க கூட்டம்
மதுரை: ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க கூட்டம் மதுரையில் நடந்தது. சங்க ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வரவேற் றார். தலைவர் லட்சுமணப் பெருமாள் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் சுப்ரமணியம், தலைவர் ஆனந்தநடராஜன், நிர்வாகிகள் நாச்சிமுத்து, சோமசுந்தரம், வெங்கடகிருஷ்ணன், வக்கீல் அழகர்சாமி பங்கேற்றனர். துணைத் தலைவர் நமச்சிவாயம் நன்றி ...
தமிழகம்
இளம்பெண் மாயம்
பட்டாபிராம் : பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் 5வது தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன்சரீப்(57). இவரது மகள் இசரத்பேகம்(21). பத்தாம் வகுப்பு முடித்து வீட்டில் உள்ளார். கடந்த 18ம் தேதி இவரது சகோதரி தனது குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிச் சென்ற போது இசரத்பேகம் வீட்டில் இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது இவர் காணவில்லை. பல இடங்களில்...
தமிழகம்
திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்
திருமங்கலம்: திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில் கீ மேன் அழகர்சாமி தண்டவாளங்களை நேற்று காலை 11 மணியளவில் சோதனை செய்து கொண்டிருந்தார். கரிசல்பட்டி ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதைக் கண்டுபிடித்து திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் விருதுநகர் இன்ஜினியரிங் பிரிவு அதிகாரிகளுக்...
தமிழகம்
இலவச யோகா வேதாந்த பயிற்சி
மதுரை: உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேசம் தலைமை தெய்வநெறிக்கழகம் சிவானந்த ஆசிரமத்தில், இலவச யோகா வேதாந்த பயிற்சிகள் நடக்க உள்ளது. செப்.1 முதல் அக்.30 வரை நடக்கும் இப்பயிற்சியில், 20 முதல் 65 வயது வரை உள்ள ஆண்கள், ஆங்கிலம் சரளமாக எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, தலைவர்...
தமிழகம்
விபத்தில் இறந்தவர்கள் உடல் அடையாளம் தெரிந்தது
வாலாஜாபாத் : வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் இறந்த இருவரது உடல் குறித்த அடையாளம் தெரிந்தது. காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலை தாங்கி கிராமம் அருகே இரு தினங்களுக்கு முன் ஹீரோ ஹோண்டா பைக்கில் சென்ற இருவர் அரசு பஸ் மோதி இறந்தனர். இவர்கள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.வாலாஜாபாத் போலீசார் விசாரித்தனர். இறந்தவர்கள் வந்த மோட...
தமிழகம்
அண்ணனை தாக்கிய தம்பி கைது
மேலூர்: தும்பைபட்டியை சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு(39), பழனியப்பன் (35). சகோதரர்களான இவர்களுக்குள் இடத்தகராறு இருந்துள்ளது. இதில் பழனியப்பன், மனைவி லட்சுமி(26)யுடன் வீடு புகுந்து தாக்கியதில் மண்டை உடைந்த திருநாவுக்கரசு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பழனியப்பனை மேலூர் போலீசார் கைது செய்தனர்.
தமிழகம்
இளைஞர் காங்கிரசார் ஆட்சியில் பங்கு தீர்மானம்
மதுரை: ராகுல் வருகைக்கு பின் இளைஞர் காங்கிரசாரிடையே ஆட்சியில் பங்கு கோஷம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், ராகுல் சுற்றுப்பயணம் செய்த பின் காங்கிரசாரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் செல்லம் பட்டி, சேடப்பட்டி பகுதியில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் சேர்ந்தனர். இவர்களு...
தமிழகம்
மனமுடைந்த இருவர் தற்கொலை
காஞ்சிபுரம் : மனைவி திட்டியதில் மனமுடைந்த வாலிபர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.காஞ்சிபுரம் திம்மசமுத்திரம் கன்னராயன் குட்டையைச் சேர்ந்தவர் உதயன் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (38). இவர்களுக்கு 13 வயதில் மகனும்,12 வயதில் மகளும் உள்ளனர். உதயன் வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். பிள்ளை...
தமிழகம்
கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
செங்கல்பட்டு : மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.மதுராந்தகத்தில் புகழ்பெற்ற ஏரிகாத்த ராமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7.30 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி தேரடி த...
தமிழகம்
சென்னம்பட்டி அணையால் கோடிகள் வீண்:23 ஆண்டு ஆகியும் விவசாயத்திற்கு பயனில்லை
மதுரை: மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் பாசனத் திற்காக கள்ளிக்குடி அருகே சென்னம்பட்டியில், 23 ஆண்டுகளுக்கு முன் சரியாக திட்டமிடாமல் கட்டப்பட்ட அணை, விவசாயத்திற்கு பயனின்றி தூர்ந்து போய் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வாத்திமலை பகுதியில் கமண்டல நதி, மறட்டாறு உற்பத்தியாகின்றன. கமண்டல நதி குப்பல் நத்தம், மீனாட்சிபுரம் ...
தமிழகம்
சிறப்பு துணைத்தேர்வு நாளை ஹால் டிக்கெட்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு வரும் 29ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்கள், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் ஐந்து தேர்வு மையங்கள் என மொத்தம் எட்டு தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.செங்கல்பட்டு கல்வி ம...
தமிழகம்
புதைகுழியில் சிக்கி புது மாப்பிள்ளை பலி
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தழையூத்து அருவியில் குளித்த புதுமாப்பிள்ளை, புதைகுழியில் சிக்கி இறந்தார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ஜவகர்மைதீன் (27). இவர், சென்னையில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகிறது. ஜவகர்மைதீன் தன்னுடைய உறவினர் 11 பேருடன் ஒட்டன்சத்த...
தமிழகம்
ஆசிரியர்கள் வேன் பிரசாரம்
காஞ்சிபுரம் : தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வேன் பிரசாரம் நடைபெறுகிறது.சாலவாக்கத்தில் வேன் பிரசாரத்தை, சுந்தர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஒன்றியக் குழுத் தலைவர் துரைவேல் பிரசாரப் பிரதியை வெளியிட்...
தமிழகம்
சக்கிமங்கலம் நரிக்குறவர்களுக்கு ரேஷன் கார்டு, நலத்திட்ட உதவிகள்
மதுரை: மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர், 250க்கும் மேற்பட்ட சாட்டையடித்து பிழைப்பு நடத்தும் குடும்பத்தினர், 100க்கும் மேற்பட்ட பூம்பூம்மாடு வைத்து பிழைப்போர், ஆந்திராவை சேர்ந்த வண்ணப் பொடிகளில் ஆஞ்சநேயர், கிருஷ்ணன் வேடம் தரிப்போர் 23 குடும்பத்தினர் என பலதரப்பினரும் வசி...
தமிழகம்
குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு : அஞ்சலக ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர்க்கும் நாள் முகாம் செங்கல்பட்டில் நாளை நடக்கிறது.செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலக ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (22ம் தேதி) செவ்வாய் கிழமை பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது....
தமிழகம்
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் பெறலாம்
மதுரை: மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 29 முதல் ஜூலை 9 வரை நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், நாளை மற்றும் ஜூன் 22 தேதிகளில் வினியோகிக்கப்படுகின்றன. மார்ச் 2010ல் பள்ளிகள் மூலமாக தேர்வெழுதி, மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற மாணவர்கள், படித்த பள்ளியில் ஹால் டிக்கெட் பெறலாம். மார்ச் 2010 மற்றும் அதற்கு முந்தைய...
தமிழகம்
பெண் யானை பலி ஆந்த்ராக்ஸ் காரணம்?
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 16 வயது பெண் யானை இறந்து கிடந்தது. ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இறந்ததா என்பதை கண்டறிய யானையின் ரத்தம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு காப்புக்காடு பகுதியில் வன ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் எஸ்டேட்டில் ஒரு பெண் யானை இ...
தமிழகம்
மதுரையில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மையம் அமையுமா?
மதுரை: கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. மதுரை, தேனி, நெல்லை அரசு மருத்துவமனைகளில் 50க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் சளி, ரத்த மாதிரிகள் சென்னை கிங் மையத்திற்கு அனுப்பப்பட்டன. தவிர, முன்னெச்சரிக்கையாக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்காக குவிந்ததால், கிங் மைய...
தமிழகம்
பெண் குழந்தை கண்மாயில் வீச்சு
மதுரை: மதுரை செல்லூர் கண்மாயில் நேற்று அழுகிய நிலையில் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பிறந்த மூன்று மாதங்களில் பெற்றோரால் வீசப் பட்டுள்ளது. செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
கல்லூரி மாணவி மாயம்
திருவள்ளூர் : செவ்வாப்பேட்டை அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மனைவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)(20) ஸ்ரீராம் கலைக் கல்லூரியில் பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து திவ்யதர்சினியின் தந்தை வாசு, செவ்வாப்பேட்டை போலீசில் ...
தமிழகம்
வீட்டில் திருட்டு
மதுரை: மதுரை ஒத்தக்கடை நீலமேக நகரைச் சேர்ந்தவர் கருணா(45). குடும்பத்துடன் ஜூன் 17ல் திண்டுக்கல்லுக்கு சென்றார். நேற்று முன் தினம் வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப் பட்டு வீட்டில் இருந்த 36 கிராம் எடையுள்ள தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பேரூராட்சிகுட்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்களை செம்மொழி மாநாட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக தி.மு.க., நகர கழத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு காங்., நகரத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை...
தமிழகம்
பள்ளி மாணவி தற்கொலை
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் காளீஸ்வரி(18). பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தததால், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ராகுலின் 40வது பிறந்த நாள்இளைஞர் காங்., கிரிக்கெட் போட்டி
திருத்தணி : ராகுலின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு, திருத்தணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.முன்னாள் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி மகன் ராகுலின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு, திருத்தணி சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு நலத் திட்...
தமிழகம்
கிரேன் மோதி பெண் பலி
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே பாத்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பலராமன் மனைவி முனியம்மாள்(50); ஓட்டல் பணியாளர். வேலை முடிந்து கும்மிடிப்பூண்டி பை-பாஸ் சர்வீஸ் சாலையில் நடந்து வந்தார்.இது தெரியாமல் அங்கிருந்து கிரேனை அதன் டிரைவர் இயக்கியுள்ளார். கிரேன் சக்கரம், முனியம்மாளின் காலில் ஏறியதில் கால் நசுங்கி பலத்த...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்குஇலவச மருத்துவ முகாம்
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த சொராக்காய் பேட்டை அரசு மேனிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நலவாழ்வு திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் நடந்தது. அருண்சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா ராமானுஜம் வரவேற்றார்.இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு க...
தமிழகம்
18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்ஆந்திராவுக்கு கடத்தியவர் கைது
தண்டையார்பேட்டை : ஆந்திராவிற்கு ரயில் மூலம் கடத்தப்படவிருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.வடசென்னை ரயில் நிலையங்களில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக, சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் த...
தமிழகம்
கோட்டூரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
பொள்ளாச்சி : கோட்டூர் பேரூராட்சியில் மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கும் வகையில், மயிலாடுதுறையில் மூன்றாவது மோட்டார் இணைப்பு பொருத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, தலைவர் தெரிவித்தார். கோட்டூர் பேரூராட்சி தலைவர் சண்முகவடிவு கூறியதாவது: கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட 21, 18 வார்டு மக்களுக்கு ம...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
மதுரை: மதுரை டிராவல் கிளப்பின் அடுத்த இரண்டாண்டுக்கான சங்கத் தலைவராக அருமைநாதன், துணைத் தலைவராக முரளிதரன், செயலாளராக முஸ்தபா, பொருளாளராக செந்தில்நாதன் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகம்
பள்ளியில் செம்மொழி விளக்க கூட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், செம்மொழி மாநாட்டுக்கான விளக்க கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில், கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு, தமிழ் இலக்கியங்கள் குறித்தும், மாநாட்டில் நடக்கவுள்ள ஆய்வரங்கம் குறித்தும் வணிகவியல் ஆசிரிய...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அயூப்கான் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு குறித்த வாசகங்களைக் கையில் ஏ...
தமிழகம்
நலத்திட்டம் வழங்கும் விழா
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் நடந்த ஜமாபந்தியில் கொடுக்கப் பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. மே மாதம் வாடிப்பட்டி தாலூகா அளவில் நடந்த ஜமா பந்தியில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, முதியோர் பென்ஷன் கோரிக்கைகளின் அடிப்படையில் இரண்டாயிரத்து 14 மனுக்கள் கொடுக்கப் பட...
தமிழகம்
குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பெண்கள் சிக்கினர் : பணத்திற்கு விற்க இருந்த இரண்டு குழந்தைகள்
மாதவரம் : குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை தத்து எடுத்து, அவற்றை குழந்தையில்லாதோர் மற்றும் வெளி மாநிலத்தவருக்கு விற்கும் "நெட்வொர்க்கின்' உறுப்பினர்களை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கடந்த 5ம் தேதி காலை மாதவரம் தனியார் மருத்துவமனையில், திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர...
தமிழகம்
ஆயுதப்படை மருத்துவமனைக்கு ஸ்கேன், எக்ஸ்ரே வசதி
மதுரை: மதுரை ஆயுதப்படை மருத்துவமனையில் 6 லட்சம் ரூபாயில் ஸ்கேன், எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்படவுள்ளன. நகர், புறநகர் போலீசார் 3000 பேர், அமைச்சு பணியாளர் மற்றும் குடும்பத்தினருக்காக ஆயுதப்படை மைதானத்தில் 20 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்படுகிறது. இரு டாக்டர்கள் உட்பட ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிகின்...
தமிழகம்
கல்வி உதவித்தொகை விண்ணப்பம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இந்தாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, பள்ளிகளிலிருந்து விண்ணப்பம் பெறலாம். கலெக்டர் காமராஜ் தெரிவித்ததாவது : புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஆகஸ்ட் 30க்குள்ளும், ஏற்கனவே உதவித்தொகை பெறும் மாணவர்கள், புதுப்பித...
தமிழகம்
மூன்றாவது அகல ரயில் பாதை இயக்கக் கோரிரயில் நிலையம் முன்பு தர்ணா போராட்டம்
அரக்கோணம் ; மூன்றாவது அகல ரயில் பாதை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அரக்கோணம் ரயில் நிலைய பயணச் சீட்டு அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு ரயில் உபயோகிப்போர் சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள்: அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பல கோடி செல...
தமிழகம்
11 பைக்குள் பறிமுதல் திருடர்கள் இருவர் கைது
அரக்கோணம் : அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பைக் திருட்டு நடந்து வந்தது. இதனால், அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் நடந்த வாகன சோதனையின் ப...
தமிழகம்
மகள் வீட்டை விட்டு ஓடியதால் மனமுடைந்த தாய், மகன் தற்கொலை
மேலூர்: காதல் கணவனை தேடி மகள் வீட்டை விட்டு ஓடியதால், மனமுடைந்த தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். மேலூர் அருகில் உள்ள கவட்டையம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி வெள்ளையம்மாள் (43). இவரது மகள் ஸ்ரீதேவி (22) திருப்பூரில் வேலை பார்க்கிறார். அங்கே வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதனால் ...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதியில்லை
அரக்கோணம் : அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஒரு கோடியே 50 லட்சத்தில் புதிய வளாகம் திறக்கப்பட்டது. இதனால் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்...
தமிழகம்
நகர் பகுதியில் உலா வரும் குரங்குகள்; வனத்துறை யோசனை
மதுரை: மதுரை நகர் பகுதியில் பல இடங்களில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பதால், அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள், தொடர்ந்து வனத்துறையின் உதவியை கேட்கின்றனர். அழகர்கோவில், திருப்பரங் குன்றம் மலைப்பகுதிகளில் இருந்து பைகாரா, அவனியாபுரம், பாண்டிகோயில், கருப்பாயூரணி என பல இடங்களில் குரங்குகள் வந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்...
தமிழகம்
பரவை கண்மாயில் தண்ணீர் இல்லை; கண்ணீர் விடும் விவசாயிகள்
பரவை: மதுரை மாவட்டம் பரவையில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இதன் மூலம் 800 ஏக்கருக்கு மேல் நிலம் பாசனம் பெற்றது. கண்மாயில் தண்ணீர் இருக்கும்போது, நிலத்தடி நீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. விவசாயம் மற்றும் இப்பகுதியின் குடிநீரை தேவையை கருத்தில் கொண்டு, 15 ஆண்டிற்கு முன் வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் பரவ...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டியில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் சார்பில் மாற்றுதிறன் மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரதராஜபாண்டியன் தலைமை வகித்தார். உதவிக்கல்வி கல்வி அலுவலர்கள் நமச்சிவாயம், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். எஸ்.எஸ்.ஏ., திட்டம் மேற் பார்வையாள...
தமிழகம்
இலவச கண் பரிசோதனை முகாம்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில்அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, பேஸ் டிரஸ்ட் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் மா.லட்சுமி தலைமை வகித்தார். பேஸ் டிரஸ்ட் இயக்குனர் பொன்மனோகரன் முன்னிலை வகித்தார்.
தமிழகம்
மதுரை அண்ணா பல்கலை அமையப்போவது எங்கு?
மதுரை: மதுரையில் அண்ணா பல்கலை மையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டே அது செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய பல இடங்களை பார்வையிட்டனர். திருவாதவூர் அருகேயுள்ள ஆமூர், மதுரை காமராஜ் பல்கலை, மதுரை சர்வேயர் காலனி அருகில் உள்ள கொடிக்குளம் கண்மாய் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். ...
தமிழகம்
மதுரை அப்பார்ட்மென்ட் பெண் கொலையில் திருப்பம்: கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்!
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி அப்பார்ட்மென்ட்டில் நகை, பணத்திற்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.மதுரை பொதும்புவைச் சேர்ந்த நடராஜன் மகள் கயல்விழி(38). இவரது கணவர் ராஜேந்திரன். இரு ஆண்டுகளாக மலேசியாவில் கார் மெக்கானிக்காக உள்ளார். இவர்களது மகள் சங்கவி(...
தமிழகம்
தப்பி ஓடிய வக்கீல் கைது
மதுரை: மதுரை ஐகோர்ட்டில் போலீசாரிடமிருந்து தப்பிய வக்கீல் எழிலரசு நேற்று கைது செய்யப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழை ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக வலியுறுத்தி, ஆறு வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஜூன் 18ல் வக்கீல் எழிலரசு தவிர, மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், வக்கீல் ராஜேந்...
தமிழகம்
வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மீது புகார்
மோகனூர்: வாரிசு சான்றிதழ் வழங்க 1,500 ரூபாய் லஞ்சம் பெற்று ஓராண்டாகியும், சான்று வழங்காத வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலெக்டர் சகாயத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.மோகனூர் ராசிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஞானாம்பாள் என்பவரின் கணவர் பெரியசாமி கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதியும், முனியம்மாள் என்பவரின் கணவர் தமிழரசு 3ம்...
தமிழகம்
கிணற்றில் மிதந்த மாணவி உடல் மீட்பு
நாமக்கல்: கிணற்றில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி உடலை மீட்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.நாமக்கல் கூலிப்பட்டி அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரேவதி- பத்மநாபன் தம்பதியின் மகள் சரண்யா (21). ஒரு தனியார் கல்லூரியில் படித்த சரண்யா 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பிவரவில்லை. அதிர்ச்சி அடைந்த தாய் ரேவதி, மகளின...
தமிழகம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தீபச்சுடர் ஓட்டம்
ராசிபுரம்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு நடந்த தீபச்சுடர் ஓட்டத்தில், 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற சுடர் ஓட்டம் நாமக்கல் செல்வம் கல்லூரியில் துவங்கி ராச...
தமிழகம்
வெற்றி விநாயகா பாலிடெக்னிக் மாநில சாதனை
மோகனூர்: வெற்றி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் வாரியத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.ஏப்ரலில் நடந்த அரசு வாரியத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், திருச்சி மாவட்டம் தொட்டியம் வெற்றி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறை மாணவர் தஞ்...
தமிழகம்
பயன்பாட்டிற்கு வருமுன் சேதமான பசுமை குடில்
வடமதுரை: வடமதுரை அருகே குண்டாம்பட்டியில் துல் லிய பண்ணைய திட்டத் தில் அமைக்கப்பட்ட பசுமை குடில் பயன் பாட்டிற்கு வருமுன் சேதமடைந்து வீணாக கிடக்கிறது. வடமதுரை வட்டாரத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணையம் அமைக்க பாகாநத்தம் குண்டாம்பட்டி தேர்வு செய்யப்பட்டது. இங்கு 20 எக்டேர் பரப்பளவிற்கு ஒருசேர ...
தமிழகம்
இலவச தொழிற்பயிற்சி துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில், சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச தொழிற்பயிற்சி இன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் நோக்கில் மத்திய அரசு, "பாலிடெக்னிக் மூலம் சமுதாய மேம்பாட்டு' திட்டத...
தமிழகம்
கோயில் பிரச்னை: தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம்
கூம்பூர்: கூம்பூர் முத்தாலம்மன் கோயிலில், சாமி கும்பிடுவது தொடர்பான பிரச்னைக்கு தாசில்தார் செல்வராஜ் தலைøயில் சமாதான கூட்டம் நடந்தது. கூம்பூர் முத்தாலம்மன் கோயில், 18 குக்கிராம மக்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயிலுக்கு விவசாய நிலங்களும், ஆபரண நகைகளும் உண்டு. கடந்த 2005-ல் இருந்தே திருவிழாவிழாவில் பூஜை செய்வதில் பூசாரிக...
தமிழகம்
வேளாண் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க இழுத்தடிப்பு
ராசிபுரம்: வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ், கருகிய பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விவசாய பயிர்களுக்கு தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ், இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் நிலக்கடலை, நெல், சோளம், பருத்தி, கரும்பு, கம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர...
தமிழகம்
சமச்சீர் கல்வி திட்ட கலந்துரையாடல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களுக்குட்பட்ட நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை குறித்தும், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலுள்ள ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பிரிவு மாணவர்களுக்கு எஸ்.எஸ்.ஏ...
தமிழகம்
அய்யம்பாளையத்தில் மலேரியா பரிசோதனை முகாம்
வத்தலக்குண்டு: தமிழகத்தில் ஜூன் மாதத்தை மலேரியா மாதமாக சுகாதாரத்துறையினர் கடைபிடித்து வருகின்றனர். திண்டுக் கல் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் மலேரியா சம்பந்தப்பட்ட பணிகள் நடந்து வருகின்றன. அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி இணைந்து மலேரியா பரிசோதனை முகாம் ந...
தமிழகம்
தரம் உயர்ந்த பள்ளிக்கு கட்டட வசதி இல்லை
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகேயுள்ள கோம்பைப்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கோம்பைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளி ஆனது. 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். குளிப்பட்டி, குரும்பபட்டி, பூசாரிபட்டி, புதுப்பட்டி...
தமிழகம்
எரியோடு பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: எரியோடு பேரூராட்சிக் கவுன்சில் கூட்டம் தலைவர் மஞ்சுளாஜீவா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் விஜயநாத் முன்னிலை வகித் தார். துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்பட கவுன் சிலர்கள் பங்கேற்றனர்.13வது வார்டு மணியகாரன்பட்டியில் வறட்சி நிவாரணத் திட்டம் 2009-10-ன் கீழ் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு மேல்நிலைத் தொட் டி...
தமிழகம்
பள்ளி விழா
பழநி: பாலசமுத்திரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன் னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா நடந் தது. கக்கன் மருமகள் பூமாலை தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் வரவேற் றார். அன்பழகன் எம்.எல். ஏ., டி.எஸ்.பி., பாண்டியராஜன், நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசினர். தலைமை ஆசிரியர் வீமன் நன்றி கூறினார்.
தமிழகம்
வேன் மோதி மாணவர் பலி
கொடைக்கானல்: கொடைக்கானல் உகார்த்தேநகரை சேர்ந்த ராமதாஸ் மகன் காமேஷ் (14), இவர் செண்பகனூரில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்புபடித்தார். நேற்று உகார்த்தே நகர் பஸ் ஸ்டாண்ட் முன்பு ரோட் டை கடக்க முயன்ற போ து, எதிரே வந்த சுற் றுலா வேன் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார்விசாரித்து வருகின்றனர்...
தமிழகம்
கீழ்பவானி வாய்க்காலில் மணல் திருட்டு குழிகளாக மாறியதால்நீரோட்டம் பாதிக்க வாய்ப்பு
கோபிசெட்டிபாளையம்: கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், இரவு மற்றும் பகல் நேரங்களில் மணல் மற்றும் மண் கடத்தல் வெகு ஜோராக நடக்கிறது. மணல் திருட்டால் குண்டும் குழியுமாக கீழ்பவானி வாய்க்கால் மாறி வருகிறது.பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் நன்செய் பயிர்களுக்கு முதல் முறையும், பு...
தமிழகம்
நடுரோட்டில் லாரியை நிறுத்த வேண்டாம்: எஸ்.பி., அறிவுரை
திண்டுக்கல்: பெண்களை காட்டி சரக்கு லாரிகளை மறித் தால் டிரைவர்கள் நிறுத்த வேண்டாம் என முத்துச்சாமி எஸ்.பி., லாரி டிரைவர்களுக்கு எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத் தில் ஆயக்குடி, பட்டிவீரன்பட்டி, அம்பாத்துரை போலீஸ் ஸ்டேஷன்களுக் குட்பட்ட பகுதிகளில் லாரியை மறித்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. ரோட்டில் பெண்கள் ...
தமிழகம்
அனுமதியின்றி ரோடுகளை தோண்டுவதால் பாதிப்பு
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் நெடுஞ்சாலை துறை அனுமதி பெறாமல் பல்வேறு தரப்பினரும் ரோடுகளை சேதப் படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சின்னாளபட்டிக் குள் செல்லும் ரோடு, திண்டுக்கல்-செம்பட்டி ரோட்டில் ஆதிலட்சுமிபுரத்தில் சென்று சேர்கிறது. மாநில நெடுஞ்சாலை துறையின...
தமிழகம்
கழிவுநீர் குளமான வையாபுரிக்குளம் துர்நாற்றத்தால் பக்தர்கள் சிரமம் நகராட்சிக்கு நோட்டீஸ்
பழநி: பழநி பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள் வையாபுரிக்குளத்தில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பழநியில் புனித நதிகளில் ஒன்றாக வையாபுரிக்குளமும் இருந்தது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம் இன்று கழிவுநீர் சங்கமிக்கும் இடமாக மாறிவிட்டது. ஓட்டல் கழிவுகள் இரவு நேரங்களில் கொட்டப்படுகின்றன. பழக...
தமிழகம்
அரசு நடுநிலை பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ. 2.5 கோடி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பள்ளி மற்றும் பராமரிப்பு மானியமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இயலாக் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2009-10ம் ஆண்டுக்கு 53.13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன...
தமிழகம்
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்
ஈரோடு: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு விளக்கக்கூட்டம், வாசகர் வட்டம் சார்பில் ஈரோடு மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் பேசியதாவது:கோவையில் வரும் 23ம் தேதி உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. தமிழின் மீதுள்ள ஆர்வம் அறிவுப்பூர்வமாக இருத்தல் வேண்டும். உலகிலேயே பழமையான மொழியில...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் பன்றிகளால் சுகாதாரக்கேடு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் சுற்றித் திரிந்த பன்றிகள் அனைத்தும் பேரூராட்சியால் பிடிக்கப்பட்ட அலுவலக்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பன்றி வளர்ப்...
தமிழகம்
காங்., கட்சியினர் இரு அணியாக பிறந்தநாள் கொண்டாட்டம்
ஈரோடு: ஈரோட்டில் இளைஞர் காங்கிரஸார் ராகுல் பிறந்தநாளை தனித்தனியாக கொண்டாடினர்.தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்த போது, மாநில தலைவர் பதவிக்கு வாசன் ஆதரவாளர்களான யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் மக்கள் ராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். யுவராஜ் வெற்றி பெற்றார். மக்கள் ராஜன் துணைத் தலைவரானார். தோல்வ...
தமிழகம்
தமிழக எல்லையில் மறியல் 70 பேர் கைது
சத்தியமங்கலம்: ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக-கர்நாடக மாநில எல்லையில் மறியல் செய்ய முயன்ற 70 பேர் கைது செய்யப்பட்டனர்.ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் இடம் கர்நாடக மாநிலத்துக்குரியதா, தமிழகத்துக்குரியதா என ஆய்வு நடத்த வேண்டும். அதற்கு முன்னதாக ஒகேனக்கல் குடிநீர் திட்டப்பணிகள் துவக்கப்படக...
தமிழகம்
விவசாய மின் மோட்டர் திருடியவர்கள் கைது
தாண்டிக்குடி: தாண்டிக்குடி புல்லாவெளி தனியார் எஸ்டேட் டில் சில தினங்களுக்கு முன் 20 ஆயிரம் ரூபாயுள்ள மின் மோட்டர் திருடுபோனது. இது குறித்து தாண்டிக் குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நெல்லூரை சேர்ந்த தனபால்(30), பாண்டி(24)ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இவர்கள் மின் மோட்டார் திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்...
தமிழகம்
யானை மிதித்து வன ஊழியர் பலி
சத்தியமங்கலம்: கடம்பூர் காட்டில் யானை மிதித்து வன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.கடம்பூரை சேர்ந்தவர் ஜடையசின்னன் (46). இவர் குத்தியாலத்து எக்கத்தூர் வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இப்பகுதியில் ரோந்து சென்றவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் வனத்துறையினரிடம் புகார் செய்தனர...
தமிழகம்
மகளிர் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் : தடம் மகளிர் கூட்டமைப்பு சார்பில் சுய தொழில் துவங்குவது மற்றும் தொழிலை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்.,) அலுவலகத்தில் நடந்தது. தடம் மகளிர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காயத்ரி தலைமை வகித்தார். கிருஷ்ணவேணி, கீதா, சுமதி முன்னிலை வகித்தனர...
தமிழகம்
ஐம்பொன் சிலை திருட்டு
வடமதுரை: வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் ஸ்டெர் லிங் ஸ்பின்னர்ஸ் நூற் பாலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இயங்காமல் உள்ள இந்த மில் வளாக கோயிலில் இருந்த ஐம்பொன்னிலான விநாயகர் சிலை, மூஞ்சூர் சிலைகள் நேற்று முன்தினம் இரவு திருடு போனது. மில் மேலாளர் முருகேசன் வடமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற...
தமிழகம்
சரக்கு ரயில் பழுது சபரி எக்ஸ்பிரஸ் பயணிகள் அவதி
ஈரோடு: மதுரையிலிருந்து கடப்பாவுக்கு உரம் ஏற்றி சென்ற சரக்கு ரயில், ஈரோடு அருகே வரும் போது இன்ஜின் பழுதாகி நின்றதால், சபரி எக்ஸ்பிரஸ் ரயில் 45 நிமிடம் தாமதமாக ஈரோட்டில் இருந்து புறப்பட்டது.திருவனந்தபுரத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடுக்கு மாலை 6.20 மணிக்கு வந்து 6.25 மணிக்கு புறப்பட்டு செல்லும...
தமிழகம்
இடி விழுந்து தீ விபத்து
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக் கொம்பு ரோட்டில் உள்ள தனியார் நூல் மில்லுக்கு சொந்தமான பஞ்சு குடோனில் நேற்று மாலை பெய்த மழைக்கு இடி விழுந்தது. இதில் குடோனில் இருந்த பஞ்சு மூட்டைகள் தீயில் கருகின. தகவலறிந்த நிலைய தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
தமிழகம்
பைக் திருட்டு
வடமதுரை: தென்னம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது இருசக்கரமோட்டார் வாகனத்தை கல்குளம் ரோட்டிலுள்ள தனது தோட்டம் அருகில் நிறுத்தி சென்றார். திரும்ப வந்து பார்த்த போது பைக் திருடு போயிருந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
கோபி பகுதியில் தட்டை பயறு சாகுபடி விலை குறைவால் விவசாயிகள் கவலை
கோபிசெட்டிபாளையம்: கோபி பகுதியில் தட்டை பயிர் சாகுபடி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அதிக விளைச்சல் காரணமாக தட்டை பயிர் விலை சற்று குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதியில் சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்...
தமிழகம்
60 பேர் மீது வழக்கு
வத்தலக்குண்டு: மல்லணம்பட்டியில் பஸ் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மல்லணம்பட்டியில் 18ல் குடிநீர் கேட்டு கிராமத்தினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வத்தலக்குண்டு-மதுரை ரோட்டில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2வது வார்டு உறுப்பினர்கள் ரமேஷ...
தமிழகம்
ரயில் தண்டவாளங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு டிராலி பழுதானதால் ஆய்வு முயற்சி கைவிடல்
திருப்பூர் : ரயில் தண்டவாளங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக, நேரில் சென்று ஆய்வு செய்ய, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் திட்டமிட்டனர்; நேற்று முன்தினம் இரவு, டிராலியில் செல்ல ஆயத்தமாகினர். ஆனால், டிராலி பழுதானதால் அம்முயற்சி கைவிடப்பட்டது. விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தை அடுத்த...
தமிழகம்
தற்கொலை
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் மதுரை ஜெய் ஹிந்த்புரத்தை சேர்ந்த சுப்பையா மகன் மகேந்திரன்(40) நேற்று முன் தினம் பகலில் அறையெடுத்து தங்கினார். நேற்று காலை வரை அறைக்கதவு பூட்டிக்கிடந்தது. சந்தேகம் அடைந்த மானேஜர் சேகர் சன்னல் வழியாக பார்த்தார். அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கில் தொங...
தமிழகம்
தடம் மாறிச்செல்லும் மினி பஸ்கள்
வத்தலக்குண்டு: அய்யம்பாளையம் பகுதியில் மினி பஸ்கள் உரிய பாதையில் செல்லாமல் தடம் மாறிச் செல்வதால் கிராமத்தினர் சிரமப்படுகின்றனர். அய்யம்பாளையத்தில் இருந்து கிளம்பும் மினி பஸ்கள் பட்டிவீரன்பட்டி, அய்யன்கோட்டை, சங்காரெட்டிகோட்டை, புதூர், சேவுகம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக நிலக் கோட்டை செல்ல வேண் டும். ஆனால் அய்யம்பாளையத்...
தமிழகம்
தீ வண்டிகள் தாமதம்
சேலம் :  மணியனூரில் நேற்று இரவு பஞ்சு மில்லில் தீ விபத்து நிகழ்ந்தவுடன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு தீயணைப்பு வண்டி வந்த நிலையில், தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சூரமங்கலத்தில் இருந்து மற்றொரு வண்டி வரவழைக்கப்பட்டது. செவ்வாய்பேட்டை, சூரமங்கலத்தில் உள்ள மற்ற வண்டிகள் கோவையில் ந...
தமிழகம்
பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள பேல்கள் நாசம்
சேலம்: சேலம் மணியனூரில் உள்ள பஞ்சு மில்லில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பேல்கள் எரிந்து நாசமாயின.சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(36). அவருக்கு சொந்தமான எம்.ஜி.எம். பஞ்சு மில் மணியனூர் புளியங்குளம் பகுதியில் உள்ளது. பஞ்சை சுத்தப்படுத்தும் மில்லில் 12 ஜின்னிங் மிஷின்...
தமிழகம்
அ.தி.மு.க., வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம்
சேலம்: உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க., வக்கீல்கள் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இலக்கிய அணி செயலாளர் செல்வராஜ், எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன், சேலம் மாநகர் மாவட்ட வக்கீல்கள் ப...
தமிழகம்
அரசு அலுவலக கட்டடங்களில் சினிமா போஸ்ட்டர் ஆக்கிரமிப்பு: பொது மக்கள் முகம் சுளிப்பு.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் டத்தில் அரசு அலுவலக கட்டடங்களில் போஸ்ட் டர்கள் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்துவிட்டதால் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கின்றனர். ராமநாதபுரம் நகர்பகுதியில் தாலுகா அலுவலகங்கள், அரசு கல்லூரிகள், பொது பணித்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக கட்டடங்களில் அத்துமீறி போஸ்ட்டர்கள் ஒட்டப் பட...
தமிழகம்
முதல்வரை கண்டித்து போஸ்டர் ஒட்டியவர் கைது
இடைப்பாடி: தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டார்.இடைப்பாடி தேவூர் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் கோமதி, கந்தசாமி மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேவூர் பழைய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தில் ஒட்டப்பட்டிருந்த துண்டு பிரசுரத்தில், "ஈழத...
தமிழகம்
கொள்ளிடம் ரயில்வே பாலத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு
சிதம்பரம் : விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ரயிலை கவிழ்க்க சதி போன்ற தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, சிதம்பரம் கொள்ளிடம் ரயில்வே பாலத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த சித் தணி கிராமத்தில் கடந்த 12ம் தேதி, ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க் கப்...
தமிழகம்
செம்மொழி மாநாடு தொடர் ஜோதி ஓட்டம்
முதுகுளத்தூர்: உலக தமிழ் செம்மொழி மாநாடு தொடர் ஜோதி ஓட்டம் ராமநாதபுரத்தில் தொடங்கி மானாமதுரை வழியாக சென்றது. ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்ட ஜோதியை பரமக்குடியில் மாலை நேர கல்லூரி, அரசு கலை கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார்....
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
மேட்டூர்: நீதிபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் பொது ஜனசேவா பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, எழுது பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொளத்தூர் ஒன்றியத்தில் மலையடிவாரம் நீத...
தமிழகம்
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வெள்ள தடுப்பணை பணி தீவிரம்
திட்டக்குடி : பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ள தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெண்ணாடம் அடுத்த நல்லூர் ஒன்றியம் கணபதிகுறிச்சி ஊராட்சியில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் வெள்ளாற்றின் கரையோரம் வடக்கு பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப...
தமிழகம்
கிளியனூர் கிராமத்தில் வருமுன் காப்போம் முகாம்
சிதம்பரம் : கீரப்பாளையம் ஒன்றியம் கிளியனூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் கல்யாணம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., முகாமை துவக்கி வைத்தார். 1,120 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 35 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் கவுன்சிலர் பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை பணியாளர்கள...
தமிழகம்
இணைப்பு சாலை வசதி கேட்டு பணியிடத்தில் நூதன போராட்டம்
ஆத்தூர்: இணைப்புச்சாலை வசதி ஏற்படுத்தித்தரக்கோரி, நான்குவழிச்சாலை பணிகள் நடக்கும் இடத்தில் பந்தல்போட்டு முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புதுஉடையம்பட்டி கிராமத்தில்150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட செ...
தமிழகம்
சாரண, சாரணியர் இயக்க செயற்குழு கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சாரண, சாரணியர் இயக்க செயற்குழு கூட்டம் நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு டி.இ.ஓ., குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட சாரண ஆணையர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் வீரப்பா வரவேற்றார். கூட்டத்தில் சாரண, சாரணியர்களின் எண்ணிக் கையை உயர்த்தவு...
தமிழகம்
ராமநாதபுரத்தில் கஞ்சா வியாபாரம் அமோகம்; மாணவர்களை குறிவைத்து விற்பனை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரம் மீண்டும் தடையின்றி நடப்பதால் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதுடன் மாணவர்களும் போதைக்கு அடிமையாகும் அவலநிலை உருவாகியுள்ளது. மாவட்டத்தில் போதைக்கு அடிமையான பலர் மதுபானம் குடிப்பதைவிட கஞ்சாவை பயன்படுத்துவதை பழக்கமாக்கி வருகின்றனர். குறைந்த விலை என்பதாலும் கஞ்சா குடித்தால...
தமிழகம்
நெல்லிக்குப்பத்தில் ஆனித் திருமஞ்சனம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சன்னதியும் உள் ளது. எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இக்கோவிலில் மட்டுமே சிவனையும், பெருமாளையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும். ...
தமிழகம்
பூமி வெப்பமயமாவதை தடுக்க உழவு மாடுக்கு கடனுதவி அவசியம்
சேலம்: நிலம் உழுவ பயன்படும் டிராக்டர்களுக்கு கடன் அளிப்பதை காட்டிலும் ஏர் உழவும் மாடுகளுக்கு கடனுதவி அளித்து ஊக்கமளிக்க வேண்டும்' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி தலைமை வகித்தார். இதில் கல...
தமிழகம்
ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு
ஆத்தூர்: இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமென்றாலும் ரயிலில் பயணம் செய்வதற்கான ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு வரப்பட்டுள்ளது.சேலம் - விருத்தாசலம் அகல ரயில்பாதையில் சேலத்துக்கு அடுத்தபடியாக ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இவ்வழியாக சேலம் - விருத்தாசலம் இரு பயணிகள் ரயில், சேலம்...