category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நலத்திட்ட உதவிகள் கேட்டு மனு கொடுக்க வாய்ப்பு
வருஷநாடு : க.மயிலை ஒன்றியம், மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி கிராமத்தில் வரும் 29ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. இதனை தொடர்ந்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) முகமதுயூசப், ஆண்டிப்பட்டி தாசில்தார் ராஜேஸ்வரன், பி.டி.ஓ., துரைராஜ் ஆகியோர் தலைமையில் கோரையூத்து, மஞ்சனூத்து, இந்திராநகர், பொம்முராஜாபுரம்,...
இந்தியா
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தகவல் வெளியிட அரசுக்கு கோரிக்கை
புதுச்சேரி : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திலசை - வீமநகர் கிளை மாநாடு நடந்தது. ஜீவா தலைமை தாங்கினார். உழவர்கரை வட்டாரத் தலைவர் கருணாஜோதி, செயலர் சரவணன் ஆகியோர் மாநாடு குறித்து விளக்கம் அளித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எம்.கண்ணன், திலசை-வீமநகர் கிளை செயலர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக...
தமிழகம்
ராசிங்காபுரத்தில் சுகாதாரக்கேடு
போடி : போடி ராசிங்காபுரத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சாக்கடை, ரோடு, சுகாதார வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவு கூடம், அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்க கூட்டுறவு பாங்க் அமைந் துள்ளது. இப்பகுதிக்கு செல்லும் ரோட்டின்...
இந்தியா
முதல்வர் வைத்திலிங்கத்திற்கு இளைஞர் பெருமன்றம் நன்றி
புதுச்சேரி : 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற ஆணை வெளியிட்ட முதல்வர் வைத்திலிங்கத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நன்றி தெரிவித்துள்ளது. அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் பிரன்னா வெளியிட் டுள்ள அறிக்கை: கடந்த 2009-2010ம் கல்வியாண்டில் 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு முழுவதும் தேர்ச்சி என...
தமிழகம்
அரசு குடியிருப்பில் கான்கிரீட் இடிந்து குழந்தை படுகாயம்
ஆலங்குடி: ஆலங்குடி அருகே அரசின் காலனி வீட்டின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து விழுந்து மூன்று வயது குழந்தை படுகாயமடைந்தான். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரகுபதி. இவர் அப்பகுதியிலுள்ள 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக்கொடுத்த காலனி வீட்டில் வசித்து வருகிறார். இப்பகுதியில் மொ...
தமிழகம்
கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவு தேவை
கம்பம் : கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவு தனியாக ஏற்படுத்த வேண்டும். தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களில் அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளன. பெரியகுளம் ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ் பத்திரியாக உள்ளது. கம்பம் அரசு ஆஸ்பத்திரி, கேரள மாநிலத்தை இணைக்கும் இடத்தில் இருப்...
தமிழகம்
கோவிலுக்கு வசூல் செய்தவரை தாக்கிய மூன்று பேர் கைது
வேதாரண்யம்: கோவிலுக்கு பணம் வசூலித்தவரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான் நடுச்சாலை மேலத்தெருவைச் சேர்ந்தவர் கணபதி (60). இவர் அங்குள்ள கிராம கோவில் விஷேசத்துக்கு அங்குள்ள மக்களிடம் நன்கொடை வசூலித்தார். இதில், அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ரவீந்திரன் (40), அஞ்சான் மகன் ராமையன்...
தமிழகம்
வேதாரண்யம் பகுதியில் குரங்குகள் தொல்லை வனத்துறை நடவடிக்கையின்றி அலட்சியம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இக்குரங்குகள் வேதாரண்யத்துக்கு வந்து வேதாரண்யேஸ்வரர் கோவில், அதை சுற்றி உள்ள நான்கு வீதிகள், நாகை ரஸ்தாவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அதைச்சுற்றி உள்ள நான்கு வீதிகளில் முகாமிட்டு மக்களுக்கு பெரும்...
இந்தியா
மத்தியாஸ் பள்ளியில் முப்பெரும் விழா
புதுச்சேரி : புனித மத்தியாஸ் பள்ளியின் வெள்ளி விழா, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் முழு தேர்ச்சி விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடந்தது. பள்ளி முதல்வர் ஜோஸ்பின் மேரி தலைமை தாங்கினார். உப்பளம் பாதிரியார் ஆண்டனி ரோச் முன் னிலை வகித்தார். அன்பழகன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்...
தமிழகம்
மின்தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்கள்
வருஷநாடு : கடமலைக்குண்டு, வருஷநாடு, மயிலாடும்பாறை பகுதிகளில் தினமும் ஏற்படும் மின் தட்டுப்பாட்டினால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். க.மயிலை ஒன்றியத் தில், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, வாலிப் பாறை, தும்மக்குண்டு, முருக் கோடை, முத்தலாம் பாறை, மந்திச்சுனை, மூலக்கடை, குமண...
இந்தியா
சுற்றுலா வளர்ச்சித் தளமாக புதுச்சேரியை மாற்ற கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தைச் சுற்றுலா வளர்ச் சித் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில மிகவும் பிற்படுத்தப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நலச்சங்க கவுரவத் தலைவர் விசுவநாதன் முதல்வர் வைத்திலிங்கத்திற்கு அனுப்பியுள்ள மனு: புதுச்சேரி மாநிலம் கல்வி, வே...
தமிழகம்
மாவட்ட கூடைப்பந்து போட்டி பள்ளிகள் பங்கேற்க அழைப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜசோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் வரும் ஜுன் 27ம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான மூன்றாம் ஆண்டு லீக் போட்டி சனி, ஞாயிற்று கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இப்போட்டிகளில் கலந்...
இந்தியா
சங்கர வித்யாலயா பள்ளியில் கோடை கால பயிற்சி வகுப்பு
புதுச்சேரி :புதுச்சேரி லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா பள்ளியில் கோடை கால பயிற்சி வகுப்பு நடந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா பள்ளியில் அரவிந்த் அறக்கட்டளை சார்பில் கோடைக்கால இலவச அபாகஸ் பயிற்சி நடந்தது. பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மகாலட்சுமி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். அறக்கட...
தமிழகம்
கடை கதவில் ஓட்டை போட்டு எவர்சில்வர் தகடு திருட்டு
கும்பகோணம்: கும்பகோணம் புதுப்பாளையத் தெருவை சேர்ந்த பவார் மகன் விகாஸ்குமார் (26). இவர் கும்பகோணம் ராமசாமி கோவில் மேலவீதியில் எவர்சில்வர் தகடு வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடை பூட்டிவிட்டு சென்றவர் நேற்று காலை கடையை திறந்தபோது கடையில் இருந்த லேப்டாப் கம்ப்யூட்டர், சோனிஎரிக்சன் மொபைல்ஃபோன், இரண்...
தமிழகம்
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளை
தஞ்சாவூர்: அம்மாபேட்டை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அம்மாபேட்டை அடுத்த களஞ்சேரி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (71). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மøனிவ ஜெயலட்சுமி (68). நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பின்பக...
தமிழகம்
பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கல்
திண்டிவனம் : பெண்கள் உரிமைகள் பொதுநலம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்க தலைமை அலுவலகம் திண்டிவனத்தில் திறக்கப்பட்டது. விழாவிற்கு சங்கத்தின் மாநில தலைவர் நீலாவதி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலகுஜாம்பாள், பொருளாளர் உமாதேவி முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வசந்தக்குமார் வரவேற்றார். சட்ட ஆலோசக...
இந்தியா
பி.என்.எல்., சொத்துக்களை மீட்க முதலீட்டாளர் சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி : பி.என்.எல்.,சொத்துக்களை மீட்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தடை நீக்கப்பட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பி.என்.எல்.,முதலீட்டாளர் சங்க ஆலோசனை கூட்டம் நேரு சிலை அருகில் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பொன்னுசாம...
தமிழகம்
பெண்ணை தாக்கியவர் மீது புகார்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாரதி நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி மனைவி லில்லிதெரசா (35). இவர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். விட்டலூர் கீழத்தெருவை சேர்ந்த லில்லிதெரசா கணவரின் சகோதரர் ஜேம்ஸ் மகன் ஆரோக்கியசாமி (26) என்பவர் விட்டலூர் வந்த சின்னம்மா லில்லிதெரசாவை கணவ...
இந்தியா
முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் கழக பொதுக்குழு
புதுச்சேரி : முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் கழகத் தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. புதுச்சேரியில் முன் னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் கழகம் கடந்த 4ம் தேதி புதியதாக துவங்கப் பட்டது. அமைப்பின் முதல் பொதுக் குழு ரெவெய் சோசியால் மன் றத்தில் கர்னல் முகம்மது முஸ்தபா தலைமையில் நடந்தது.பொதுச்செயலாளர் துபாய் குழந்தை முன் னிலை வ...
தமிழகம்
உளுந்தூர்பேட்டையில் தி.மு.க., ஆலோசனை
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் அப்துல்ரகீம் தலைமை தாங்கி னார். ஒன்றிய செயலாளர் எம்.எல்.ஏ., திருநாவுக் கரசு, ஒன்றிய துணை செயலாளர் சந்திரபாபு, பொருளாளர் செந்தில், நிர்வாகிகள் செல்லையா, தளபதிராஜா, கலியமூர்த்தி, ...
தமிழகம்
அடையாள அட்டை வழங்கும் விழா
விருதுநகர் : விருதுநகர் ஏ.ஐ.டி. யு.சி., அலுவலகத்தில் திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், நாட்டுப்புற நல வாரிய கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. மண்டல இளநிலை உதவியாளர் கணேசன், 56 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார். நாட்டுப்புற கிராமிய கலை சங்கத்தலைவர் முருகேசன், செயலாளர் சுந்தரம், பொருளாளர் சு...
தமிழகம்
மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் அமைச்சர் கோ.சி.மணி திறப்பு
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் கோ.சி.மணி திறந்து வைத்தார். நாச்சியார்கோவிலில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் ம...
இந்தியா
புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுச்சேரி : புதுச்சேரியில் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. புதுச்சேரி ஆனந்தா இன்னில் நடந்த கருத்தரங்கில் சத்யபாமா வரவேற்றார். பருவநிலை நிதிக் கான கூட்டணி அமைப்பாளர் ரங்கநாதன், சுற்றுச் சூழல் கழகம் அளைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், கிரீடு அறிவியல் வேளாண்மை மைய தலைவர் நடசபாபதி வாழ்த்திப் பேசின...
தமிழகம்
அதிகளவில் மாணவர்களை ஏற்றும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,யில் அதிகளவில் மாணவர்களை ஆட்டோக்களில் ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. பள்ளி வேன்களில் அனுப்பினால் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டும் என நினைக்கும் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்புகின்றனர் . இவ்வாறு மாணவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விடஅத...
தமிழகம்
2ம் ஆண்டு குடமுழுக்கு விழாவில் சீதா திருக்கல்யாண வைபவம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஸ்ரீராமர் கோவிலில் இரண்டாம் ஆண்டு குடமுழுக்கு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. வில்வாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி நகரின் நடுநாயகமாக ஸ்ரீராமர் மடம் வழிபாடு நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவில் புதிதாக எழுப்பி, ஸ்ரீராமர், லட்சுமணர், சீதை, பஞ்சமுக ஆஞ்சநேய...
தமிழகம்
பாராட்டு விழா
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததற்கான பாராட்டு விழா நடந்தது. மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அழகுராஜ் தலைமை வகித்தார். நாச்சியார் குரூப் சேர்மன் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை விஜயாள் ஏற்புரை வழங்கினார்....
தமிழகம்
முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவு சேவை துவக்கம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிக்காக கம்ப்யூட்டர் முன்பதிவு சேவை மையம் துவக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில்வே வழித்தடத்தில் திருவாரூர் - காரைக்குடி மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சிறப்பு வாய்ந்த தர்காவும், தில்லைவிளாகம் ஸ...
தமிழகம்
இலவச தையல் பயிற்சி
ராஜபாளையம் : மத்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மாதா அமிர்தானந்தமயி மடம் உதவியுடன் ராஜபாளையம் ஆவரம்பட்டி மக்கள் கல்வி நிறுவனம் அலுவலகத்தில் பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி முகாம் துவங்கியது. மைய இயக்குனர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, கல்வியை பாதியில் நிறுத...
தமிழகம்
மரக்கன்றுகள் நடும் விழா
விருதுநகர் : விருதுநகர் பி.எஸ். சிதம்பரநாடார் ஆங்கில மேல் நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இவற்றை பாதுகாத்து வளர்க்குமாறு பள்ளி செயலாளர் சிவராஜன் மாணவிகளிடம் கூறினார்.
General
லாஸ் ஏஞ்சல்சில் விமான நிலையம் திடீர் மூடல்
லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய நபரால், அரை மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர், பயணியின் பையை தூக்கிக் கொண்டு ஓடினார். அவரை பிடிக்க போலீசார் சென்ற போது, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டினார்...
தமிழகம்
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு போதிய வசதிகள்... தேவை : மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நாளொன்றுக்கு 8 முறை ரயில்கள் வந்து செல்கின்றன. நாள் தோறும் செங்கோட்டைக்கும், மதுரை மற்றும் சென்னைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். ஆனால் ஸ்டேஷனில் அடிப்...
இந்தியா
வேளாண் நிலங்களை பாதிக்கும் தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தல்
புதுச்சேரி : விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் கழிவுகளை வெளியேற் றக் கூடிய தொழிற்சாலைகளை மூட வேண்டுமென, சமூக செயல் பாட்டு கருத்தரங்கில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய சமூக செயல் பாட்டுப் பேரவை மற்றும் சமூக செயல் பாட்டு இயக்கம் சார்பில் ஜவகர் நகர் சமுதாயக் கூடத்தில் கருத் தரங் கம் நடந்தது. "விளைநிலங்களை காப் போம...
தமிழகம்
குடிநீர் லாரி சிறைபிடிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,யில் மேட்டுத் தெரு பகுதியில் குடிநீர் கோரி லாரியை சிறை பிடித்தனர். ஸ்ரீவி., நகராட்சி பகுதிகளில் எட்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேடான பகுதிகளுக்கு குடிநீர் போதிய அளவு கிடைக்காததால், நேற்று மேட்டுத்தெரு பகுதியில் குடிநீர் வழங்க மினிலாரியை நகராட்சியினர் அனுப்பி வைத...
தமிழகம்
சங்க கூட்டம்
சாத்தூர் : தமிழக ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சாத்தூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் முனியாண்டி வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள் வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம்
குழந்தைகள் மையம் நவீனப்படுத்தும் பணி: விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
விருதுநகர் : மாவட்டத்தில் 110 குழந்தைகள் மையங்களில் காஸ் இணைப்பு, மின் இணைப்பு வழங்கும் பணியை விரைவு படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. கலெக்டர்(பொறுப்பு) கணேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சிசு மரணங்கள...
தமிழகம்
கல்வி உதவி தொகை வழங்கல்
ராஜபாளையம் : ராஜபாளையம் ரோட்டரி சென்ட்ரல் சங்கம் சார்பில் ஏழை மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் சதீஷ்குமார் ராஜா தலைமை வகித்தார். மேற்படிப்பிற்கு பணமின்றி சிரமப்பட்ட மலையடிப்பட்டியை சேர்ந்த மாணவி முத்துலட்சுமிக்கு 7,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கப்பட்டது. செயலாளர் முத்துகுமாரசாமி, உறுப...
தமிழகம்
பயிற்சி முகாம் நிறைவு விழா
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் மக்களுக்கு ஆங்கிலத் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந் தது. கல்லூரி முதல்வர் எஸ்.மாணிக்கவேல் தலைமை வகித்தார். பயிற்சி ஒருங்கிணைப் பாளர் வி. ஜெயசாந்தி வரவேற்றார். கல்லூரி செயலாளர் டி.ஜே. ஜெயக்குமார், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்ற...
தமிழகம்
ஆனி திருமஞ்சனம்
வத்திராயிருப்பு : நடராஜருக்கு உற்சவ நட்சத்திர விழாவான ஆனித் திருமஞ்சனத் திருவிழா வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கும் சிவகாமி தாயாருக்கும் காலையில் ஹோம பூஜைகளும், சிறப்பு அர்ச்சனைகளும், மாணிக்கவாசகருக்கு பூஜை வழிபாடும், பன்னிரு திருமுறை வழிபாடும் நடந்தது. மாலையில் சிவபுராண பாராயணமும்...
தமிழகம்
ரத்த தான முகாம்
சேத்தூர் : சேத்தூர் மேட்டுப்பட்டி விவேகானந்தா துவக்கப் பள்ளியில் பாரதி மனிதநேய மன்றம், சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மையம் சார்பில் ரத்த தான முகாம்நடந்தது. எல்.ஐ.சி., ஏஜென்ட் மாரிமுத்து துவக்கி வைத்தார். 20 பேர் ரத்த தானம் செய்தனர். டாக்டர்கள் ஜெயபாஸ்கர், ஜெயலட்சுமி முகாமை நடத்தினர்.
தமிழகம்
அதிகளவில் மாணவர்களை ஏற்றும் ஆட்டோக்களால் விபத்து அபாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி.,யில் அதிகளவில் மாணவர்களை ஆட்டோக்களில் ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.பள்ளி வேன்களில் அனுப்பினால் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டும் என நினைக்கும் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்புகின்றனர் . இவ்வாறு மாணவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விடஅதிகள...
தமிழகம்
அரசு அலுவலக கட்டடங்களில் சினிமா போஸ்ட்டர் ஆக்கிரமிப்பு பொது மக்கள் முகம் சுளிப்பு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட் டத்தில் அரசு அலுவலக கட்டடங்களில் போஸ்ட் டர்கள் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்துவிட்டதால் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கின்றனர்.ராமநாதபுரம் நகர்பகுதியில் தாலுகா அலுவலகங்கள், அரசு கல்லூரிகள், பொது பணித்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக கட்டடங்களில் அத்துமீறி போஸ்ட்டர்கள் ஒட்டப் பட்ட...
தமிழகம்
அடிப்படை வசதி இல்லாத சேதுக்கரை குடிநீர் இல்லாமல் தவிக்கும் பக்தர்கள்
கீழக்கரை:சேதுக்கரைக்கு புனித நீராட செல்லும் பக்தர்கள் தாகத்திற்கு குடிநீர் கிடைக்காமல் தவியாய் தவிக்கின்றனர்.தங்கும் விடுதி,கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை இல்லாததால் தொலை தூர பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.ராமபிரான், சீதையை மீட்க இலங்கை செல்வற்காக அனுமன் தலைமையில் வானரங்கள் கற்களால் பாலம் எழுப்பியதாக கூறப்படும் ...
இந்தியா
விஜய் மல்லையா திருப்பதியில் சாமி தரிசனம்
திருப்பதி: பிரபல மது பானஉற்பத்தியாளரும் , ராஜ்யசபா எம்.பி.,யுமான விஜய் மல்லையா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவரின் சாமி தரிசனத்தின் போது பொது  மக்களுக்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.இருப்பினும் கோவில் நிர்வாக தரப்பினர் இது பற்றி கூறும் போது விஜய் மல்லையா வந்திருப்பது குறித்த தகவல் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை...
தமிழகம்
வேதாரண்யம் பகுதியில் குரங்குகள் தொல்லை வனத்துறை நடவடிக்கையின்றி அலட்சியம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இக்குரங்குகள் வேதாரண்யத்துக்கு வந்து வேதாரண்யேஸ்வரர் கோவில், அதை சுற்றி உள்ள நான்கு வீதிகள், நாகை ரஸ்தாவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அதைச்சுற்றி உள்ள நான்கு வீதிகளில் முகாமிட்டு மக்களுக்கு பெரும்...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாதுகாப்பில் 10 ஆயிரம் போலீசார்: முதல்வர் இன்று கோவை வருகை
கோவை: கோவையில் நாளை மறுநாள் துவங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்புப் பணியில், 33 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். மாநாடு பணிகளை ஆய்வு செய்யவும், அதில் பங்கேற்கவும் முதல்வர் கருணாநிதி இன்று கோவை வருகிறார். நாளை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் வர...
இந்தியா
போபால் விவகாரம் : பிரதமரிடம் இன்று அறிக்கை தாக்கல்
புதுடில்லி : போபால் விஷவாயு விவகாரம் குறித்து பிரதமர் அமைத்த மத்திய அமைச்சர்கள் குழுவினர் 3 நாட்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். அறிக்கையை இறுதி செய்வதற்காக டில்லி நார்த் பிளாக்கில் கூடியுள்ள அமைச்சர்கள் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள...
இந்தியா
ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை
மும்பை : இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்‌தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் அதிகரித்து 17876.55 ஆக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 90 புள்ளிகள் அதிகரித்து 5353.30 ஆக இருந்தது.
General
உலககோப்பை கால்பந்து : இன்றைய போட்டிகள்
ஜோகனஸ்பர்க் : 19வது சர்வதேச உலககோப்பை போட்டிகள் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் போட்டியில் போர்ச்சுகல் - வட கொரிய அணிகள் மோதுகின்றன. மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சிலி அணி ஸ்விட்சர்லாந்து அணியையும் , இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி ஹோண்டூரஸ் ...
தமிழகம்
ஆத்தூரில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனை கண்டித்து அப்பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் தலைவாசல் - ஊனத்தூர் கிராம நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப...
இந்தியா
கூட்டணி குறித்து யூகங்கள் வேண்டாம் : நிதிஷ்
புதுடில்லி : பீகாரில் ஆளும் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அளித்துள்ள பேட்டியில் : கூட்டணி சர்ச்சை குறித்து இப்போதே சரமாரியாக யூகிக்க வேண்டாம் என்றார்.
General
காயம் காரணமாக ஆசிய கோப்பை போட்டியில் இருந்து சேவாக் நீக்கம்
கொழும்பு : கொழும்பில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வீரேந்திர சேவாக் நீக்கப்பட்டுள்ளார். கடைசியாக பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. காயம் காரணமாக அவர் அடுத்த 10- நாட்களுக்கு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சேவாக் ...
தமிழகம்
மருத்துவ மனை சாதனை
சென்னை: மாற்று ரத்தப்பிரிவு கொண்ட ஒருவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை குறித்து துறை தலைவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் விளக்கினார். உடன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ், சிறுநீரகத் துறை டாக்டர்கள் சீனிவாஸ்,...
தமிழகம்
பாராட்டு விழா
சென்னை: பெருங்களத்தூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கலந்தாய்வு மற்றும் நன்கொடையாளர்களுக்கான பாராட்டு விழாவில், பேரூராட்சி தலைவர் சேகர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
தமிழகம்
வேலை வாய்ப்பு முகாம்
சென்னை: பல்வேறு நிறுவனங்கள் குரோம்பேட்டையில் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டு, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
தமிழகம்
இலவச சேலை வழங்குவிழா
சென்னை: காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இலவச சேலைகளை வழங்கினார்.
தமிழகம்
கருத்தரங்கு
சென்னை: ஜப்பான் நாட்டுடன் நமக்கு உள்ள வர்த்தக வாய்ப்பு குறித்த கருத்தரங்கு, சென்னையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி கஜீ மினோகவாவிற்கு மேம்பாட்டு கழக தலைவர் சிவஞானம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்,அருக...
தமிழகம்
வேலைவாய்ப்பு ஆணை
சென்னை: சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான மாணவியருக்கு, வேலை வாய்ப்புக்கான ஆணை மற்றும் உதவித் தொகையை, சேர்மன் லியோ முத்து வழங்கினார்.
தமிழகம்
இலவச நோட்டுப் புத்தகம் வழங்கு விழா
சென்னை: சென்னையில், பெச்சான் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், ஏழை மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகையை கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகீல் அக்தர் வழங்கினார். அருகில் அறக்கட்டளை தலைவர் ராஜேஷ் சிங்வி, நிர்வாக அறங்காவலர் ஹிதேந்திரா முனோத், அறக்கட்டளை செயலர் சுரேந்திர மேத்தா, பாதல்சந்த் கரோடியா அறக்...
தமிழகம்
குறுந்தகடு வெளியீட்டு விழா
சென்னை: சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி செம்மொழி ஒலி குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது.குறுந்தகட்டினை முன்னாள் நீதிபதி பாஸ்கரன் வெளியிட, முண்டகக் கண்ணி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் உதயகுமார் பெற்றுக்கொண்டார்.அருகில் பாரதிகாவலர் ராமமூர்த்தி, கலைமகள் ஆசிரியர் கீழாம்பூ...
தமிழகம்
சேலம் ரயில்வே ஜங்சனை தகர்க்கப் போவதாக எஸ்.எம்.எஸ்., மூலம் மிரட்டல்
சேலம் : சேலம் ரயில்வே ஜங்சனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக , ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த எஸ்.எம்.எஸ்., குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள் பிரபாகரன் பிரதர்ஸ் என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகம்
மாணவிக்கு நிதி
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாயை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்டம் சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற நெல்லையைச் சேர்ந்த மாணவி ...
General
கச்சா எண்ணெய் விலை 78 டாலருக்கு மேல் அதிகரிப்பு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 78 அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை , பேரல் ஒன்றுக்கு 1 சென்டு அதிகரித்து 78.19 அமெரிக்க டாலராக இருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 1 .08...
தமிழகம்
பஜன்
சென்னை: நங்கநல்லூரில், ஸ்ரீ குரு விட்டல் பஜன் சமாஜ் சார்பில், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி குழுவினர், ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம் நடத்தினர்.
தமிழகம்
பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் , நோயாளி ஒருவர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், பரமத்திவேலூர் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் முத்துசாமி (35). இவர் வயிற்றில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக 3 நாட்களுக்கு முன்னர் பரமத்தி அரசு ஆஸ்பத்தி...
தமிழகம்
சேலத்தில் ஜனாதிபதி உருவ பொம்மையை எரித்த 7 பேர் கைது
சேலம் : சேலத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் உருவ பொம்மையை எரித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மக்கள் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் சேலம் பழைய கலெக்டர் அலுவ...
தமிழகம்
சேலத்தில் வியாபாரி வெட்டிக்கொலை
சேலம் : சேலத்தில் நேற்று நள்ளிரவில் வியாபாரி ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் கடை வைத்திருப்பவர் வீரபாபு. இவர் நேற்றிரவு கடையை மூடி விட்டு 1.5 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் , வீரபாபுவை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து...
இந்தியா
கவுரவ கொ‌லைகள் : மத்திய , மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்
புதுடில்லி : வடமாநிலங்களில் ஜாதி, மதம் மாறி திருமணம் செய்பவர்களை கவுரவ கொலைகள் ‌செய்வது அண்ம‌ை காலமாக அதிகரித்து வரும் நிலையில் , இந்த விவகாரம் குறித்து மத்திய, அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கவுரவ கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ள பஞ்சாப், உத்திரபிரதேசம், ‌மேற்கு வங்கம், அரியானா, ஆகிய மாநில அரசுகளுக்கும்...
தமிழகம்
‌தங்கம் விலை குறைந்தது
சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 751க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 08க்கு விற்கப்படுகிறது. வெள்ளியில் விலை கிராமுக்கு ரூ. 33 ஆக இருக்கிறது.
தமிழகம்
கோவையில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
கோவை : கோவையில் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி கோவை வக்கீல் சங்கம் தலைவர் நந்தகுமார் தலைமையில் 40 வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோர்ட் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகம்
செம்மொழி மாநாட்டு அரங்கில் 434 உணவு வகை கிடைக்கும்
கோவை: நாளை மறுநாள் ( 23 ம் தேதி ) உலகத்தமிழ் செம்மொழி மாநாடு துவங்குவதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகிறது. மாநாடு நடக்கும் மைதானத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் இன்று ( திங்கட்கிழமை ) 2 உணவுக்கூடத்தை துவக்கி வைத்தார். கண்காட்சி அரங்கம் முன்பாக அமைந்துள்ள இந்த உணவுக்கூடத்தில் 20 நிறுவனங்கள் பல்வேறு சுவையான ...
தமிழகம்
மாநாட்டு அரங்கில் உணவுக்கூடம் திறப்பு : 434 உணவு வகை கிடைக்கும்
கோவை: நாளை மறுநாள் ( 23 ம் தேதி ) உலகத்தமிழ் செம்மொழி மாநாடு துவங்குவதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகிறது. மாநாடு நடக்கும் மைதானத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் இன்று ( திங்கட்கிழமை ) 2 உணவுக்கூடத்தை துவக்கி வைத்தார். கண்காட்சி அரங்கம் முன்பாக அமைந்துள்ள இந்த உணவுக்கூடத்தில் 20 நிறுவனங்கள் பல்வேறு சுவையான...
தமிழகம்
திருச்சி கூட்டுறவு வங்கியில் 1 கிலோ நகை கொள்ளை
திருச்சி : திருச்சி கூட்டுறவு வங்கியில் 1 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜீயர்புரத்தில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் புகுந்த கொள்ளையர்கள், வங்கி லாக்கர்களை உடைத்து 1 கிலோ நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா
போபால் : உயரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
புதுடில்லி : போபால் விவகாரம் குறித்து அமைச்சர்கள் குழுவினர் கடந்த 3 நாட்களாக நடத்தி வந்த ஆ‌லோசனை கூட்டம் முடிந்தது. பிரதமர் இறுதி அறிக்கையில், அமைச்சர்கள் குழு, விஷவாயு கசிவால் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம்
தமிழ் வளர்த்த வெளிநாட்டவர்
- டாக்டர் பெ.சந்திர போஸ் சென்னை -செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் ...
இந்தியா
காதலர்கள் கொலை அதிகரிப்பு : தடுக்க முடியாத மாநில அரசுகள் ; விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: இந்தியாவில் காதல் கொண்ட நெஞ்சங்கள் குற்றம் புரிந்ததாக, உறவுக்காரர்கள் கொலை செய்யும் எண்ணம் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக சுப்ரீம்கோர்ட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து இதனை தடுப்பதில் என்ன சிரமம், ஏன் இது போன்ற சம்பவம் நடக்கிறது, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என விளக்கம் கேட்டு மத்த...
தமிழகம்
ஜனாதிபதியிடம் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மனு
புதுடில்லி :  ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, தம்பிதுரை தலைமையிலான அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். ஐகோர்ட்டில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழகம்
தமிழில் எழுதாத பெயர் பலகைகள் அகற்றம் : சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை : சென்னையில் தமிழில் பெயர் எழுதாத வணிக நிறுவங்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. மேயர் மா. சுப்ரமணியன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள், சென்னை அண்ணா சாலையில் தமிழில் பெயர் எழுதாத வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகம்
செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
கோவை : கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாதுகாப்பு பணியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என டி.ஜி.பி., லத்திகா சரண் தெரிவித்தார். கோவையில் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட டி.னி.பி., செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு ...
தமிழகம்
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம்
சென்னை : ஐகோர்ட்டில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழவதும் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறவழியில் உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது எனவும் அ.தி.மு.க., வினர் தெரிவித்தனர். வக்கீல்கள் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்...
தமிழகம்
செம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு
சென்னை: நாளை மறுநாள் கோவையில் துவங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கற்கும் விதமாக 2 நாள் முன்னதாக கோவை புறப்பட்டு வந்தார் முதல்வர் கருணாநிதி. இவருக்கு தாரை, தப்பட்டை முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தங்கும் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்ற போது வீதியின் இரு வழிகளிலும், தமிழ் ஆர்வலர்...
இந்தியா
காஷ்மீரில் ராணுவ வீரர் தற்கொலை
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் 28 ராஷ்டிரிய ரைபில்ஸ் படையைச் சேர்ந்த வீரர் ஹவில்தார் குல்ஷன் குமார். இவர் அவரது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
General
ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் வெற்றி
கொழும்பு : ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதியிழந்த நிலையில் பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.கொழும்பில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி , பேட்டிங்கை தேர்வு செய்தது.‍‍ இதனையடுத்து களமிறங்கிய...
தமிழகம்
பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷமன் ஆஸ்பத்திரியில் அனுமதி
மும்பை : பிரபல கார்டூன் சித்திர கலைஞர் ஆர்.கே.லஷ்மன் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 86. ஒரே நாளில் 3 முறை அடுத்தடுத்து மிதமான ஸ்ட்ரோக் ஏற்பட்தை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
காஷ்மீரில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிறுவன் ஒருவன் பலியானான். போலீஸ் தாக்குதலினால் தான் அந்தச் சிறுவன் பலியானதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பிரிவிணைவாத இயக்கங்கள் சில இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர். பந்த் காரணமாக அங்...
இந்தியா
விமான விபத்து தவிர்‌ப்பு
ஸ்ரீநகர் : டில்லியில் இருந்து காஷ்மீர் நோக்கிச் சென்ற இன்டிகோ‌ விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டயர் வெடித்தது. ‌விமானி சாதுர்யமாக விமானத்தை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர்.
இந்தியா
விமானம் தப்பியது ! 180 பேர் உயிர் பிழைத்தனர் !
ஜம்மு: புதுடில்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் சென்ற விமானத்தில் இருந்த 180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். கடந்த சில மாதங்களாகவே விமான பயணம் என்றால் இப்போது அலர்ஜியாகி விட்டது. ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி முதல் மங்களூரு விபத்து வரை பலர் உயிர் இழந்துள்ளனர். கடந்தவாரம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டில்லியில் ...
இந்தியா
ராஜ்தாக்ரே கோர்‌‌ட்டில் சரண்
மும்பை: மும்பை ஓஸ்மானாபாதில் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று வட இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் ராஜ்தாக்கரே மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜ்தாக்ரே இன்று கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்தியா
டில்லியில் இளம் தம்பதியர் கொலை
புதுடில்லி : டில்லியில் ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் கடந்து விட்டது. இவர்கள் வீட்டின் கரில் கணவர் குல்தீப் உடலும், மோனிகாவின் உடல் வீட்டுக்குள்ளும் பிணமாக கிடந்தது. இந்த கொலையில் மோனிகாவின் சகோதரர்கள் ஈடுபட்டிருக்கலாம் என குல்த...
General
சீனாவில் சுரங்க வெடிவிபத்து : 46 பேர் பலி
பீஜிங் : சீனாவில் ஒரு சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் சிக்கி, 46 பேர் உயிரிழந்தனர். 26 பேர் தப்பி பிழைத்துள்ளனர்.சீனாவின், ஹெனான் மாகாணத்தில் பிங்டிங்ஷான் நகரத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் அடங்கிய பை ஒன்று திடீரென வெடித்தது.இதில் சுரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 7...
தமிழகம்
ராசிபுரத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
நாமக்கல் : ராசிபுரத்தில் ஜாதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நம்பத்ரி குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் குறளரசன்(20). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்  கல்லூரியில் வழங்கப்படும் உதவித்தொகைக்காக  ஜா...
தமிழகம்
திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் பலி
திருச்சி : திருச்சி திருவானைக்காவல் அருகே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் விஷவாயு தாக்கி பலியானார்கள். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
ஒரு லட்சம் மரக்கன்றுகள்
செம்மொழி மாநாட்டையொட்டி, மாநாட்டு நடைபெறும் இடங்கள் மற்றும் கோவை மாநகர் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அவை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
போபால் விஷவாயு வழக்கு : ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு
புதுடில்லி : போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போபால் விஷவாயு வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சரவை குழு அமைக்கப்பட்டது. இந்த அமைச்சர்கள் குழு கடந்த ஒரு சில நாட்களாக கூடி போபால் ...
தமிழகம்
திருவள்ளூரில் கனமழை : சாலை போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் ஒரு சில மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடத்தில் மரம் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
General
உலக கோப்பை கால்பந்து : போர்ச்சுகல் அபார வெறறி
கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜி பிரிவில் போர்ச்சுகல் அணி வட கொரியாவை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2010  உலக கோப்பையில் அதிக கோல் அடித்த அணி என்ற பெருமையை போர்ச்சுகல் பெற்றது.
General
கோடீஸ்வரர் பயணித்த விமானம் திடீர் மாயம்
மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் கென் டால்போட் உள்ளிட்ட 11 பேர் பயணித்த விமானம் ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டு எல்லை அருகே மாயமானது.கோடீஸ்வரர் கென் டால்போட் உள்ளிட்ட ஆறு ஆஸ்திரேலியர்கள், இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள், இரண்டு பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு அமெரிக்கர் உள்ளிட்டோர் இரும்புத் தாது குறித்த ஒப்பந்தம் மேற்கொள்வற்காக...
தமிழகம்
தமிழில் வாதாடினால் எதிர்க்க மாட்டோம் : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
சென்னை : ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செயய கோரி சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தால் விசாரிக்க தய...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம் வெளியீடு
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது; துணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார்.பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க நாணயங்கள...
இந்தியா
போபாலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு : ரூ.1,500 கோடியை ஒதுக்க அமைச்சரவை குழு
புதுடில்லி : போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதற்காக 1,500 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை பிடித்து கொண்டு வர மத்திய அரசு புதிதாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துர...
தமிழகம்
கூட்டுறவு வங்கியில் கொள்ளை
திருச்சி : அந்தநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு, 944 கிராம் மற்றும் 3,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.திருச்சி - கரூர் மெயின்ரோட்டில் உள்ள அந்தநல்லூரில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. காலை 9.30 மணிக்கு, செயலர் மற்றும் கிளார்க், வங்கியை திற...