category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தமிழ் மீது பாசம்: தமிழர்களுக்கு சலவை இலவசம்
கோவை : இணைப்புச்சாலைக்கு ஒருவர் இலவசமாய் இடம் கொடுக்கிறார்; ஒருவர், அரிசியில் லச்சினையை வரைகிறார்; ஒருவர், வானிலே பறந்து வள்ளுவர் சிலைக்கு மலர் தூவ புறப்பட்டிருக்கிறார். எல்லாமே, பொங்குகிற உற்சாகத்தோடு அரங்கேறும் செம்மொழி திருவிழாவுக்கு கொங்கு மக்களின் உணர்வுமயமான பங்களிப்புகள். செம்மொழி மாநாட்டுக்காக வரும் தமிழர்களை ...
தமிழகம்
குடிசை வீடுகளில் வசிப்போருக்கு காஸ் மூலம் சமையல் செய்யும் திட்டம்
தூத்துக்குடி : தமிழகத்தில், குடிசை வீடுகளில் வசிப்போருக்கு கிராமத்திலுள்ள பொது இடத்தில் வைத்து, சமையல் செய்ய பாரத் பெட்ரோலியம் மூலம் இலவச காஸ் சிலிண்டர், அடுப்பு வழங்கப்படவுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் பயனாளிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தமிழக அரசு இலவச காஸ் இணைப்பு, அடுப்பு வழங்கி வருகிறது. சமையல் செய்யும் போது எதிர...
தமிழகம்
ஆய்வரங்கங்களை நேரடியாக படப்பதிவு செய்ய தடை
கோவை : ஆய்வரங்கங்களை நேரடியாக ஒளிப்பதிவு செய்வதற்கு தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. செம்மொழி மாநாட்டுக்கு செய்தி சேகரிப்பதற்காக, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூரிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும், செய்திகள் மற்றும் படங்க...
தமிழகம்
அடிப்படை வசதிகள் இல்லாத சிறைக்குளம் ஊராட்சி மக்கள்
சாயல்குடி: சாயல்குடியை அடுத்த சிறைக்குளம் ஊராட்சியில் குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சாயல்குடி அடுத்த சிறைக்குளம் ஊராட்சியில மத்தியல், ராஜாக்கள்பாலையம், காமராஜர்புரம்,உள்பட ஏழு கிராமங்கள் உள்ளன. இங்கு குடிநீர், மருத்துவம், சுகாதாரம் மேம்பாடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல...
தமிழகம்
திருவள்ளுவர் உருவத்தில் திருக்குறள்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, திருவள்ளுவர் உருவத்தில், 1,330 திருக்குறளை எழுதியுள்ளார், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த துளசி. நான்கரை அடி உயரமும், 133 செ.மீ., அகலமும் கொண்ட தாளில், திருவள்ளுவரின் உருவில், தலை முதல் கால் வரை திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு அதிகாரத்திற்குரிய 10...
தமிழகம்
மாரியூர் பூவேந்திய நாதர் கோயில்கும்பாபிஷேகம், பக்தர்கள் தரிசனம்
சாயல்குடி: மாரியூர் பூவேந்திய நாதர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாயல்குடியை அடுத்த மாரியூர் கடற்கரையில் உள்ளது பவளநிற வள்ளி அம்மன் பூவேந்திய நாதர் திருக்கோயில் . இங்கு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பில் 10 லட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டடம், கோபுரங்களை மராமத்து செய்துள்ளனர...
தமிழகம்
100 நாள் திட்டத்தில் பணம் சுரண்டும் கும்பல் ஆய்வு அதிகாரிகள் குறட்டை
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவும் ஆனால் ஒன்றிய அலுவலகத்தில் கணக்கு கொடுக்கும் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளதால் அரசு பணம் சுரண்டப் பட்டு வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கலூர் ஊராட்சியில் நடைபெற்...
தமிழகம்
ஆக்கிரமிப்பு பெயரில் மரகன்றுகள் வெட்டி சாய்ப்பு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்பு பெயரில் மர கன்றுகளை வெட்டி சாய்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும். முதுகுளத்தூர் ரோட் டேராங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த சில மாதங்களாக பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலைத்துறையினர், தாசில்தார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தனர...
தமிழகம்
மக்கள் வெள்ளத்தில் மாநாட்டு வளாகம்: உற்சாகத்தில் முதல்வர்
கோவை:செம்மொழி மாநாடு நாளை துவங்கவுள்ள நிலையில், நேற்றே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது மாநாட்டு வளாகம்; அதைப் பார்த்து மகிழ்ச்சியில் மிதந்தார் முதல்வர் கருணாநிதி.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் நாளை துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கவுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, முதல்வர் கருணாநிதி நேற்று மதியம் 12.30 மணியளவில் விமா...
தமிழகம்
விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் மத்திய மருத்துவக் குழு மறு ஆய்வு
விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, இந்திய மருத்துவக் குழுவினர் நேற்று மறு ஆய்வு செய்தனர். விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்ட...
தமிழகம்
ரூ.600 லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயர் கைது
தர்மபுரி: நில வரைபடம் வழங்க 600 ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தையை சேர்ந்தவர் பூபாலன் (45). இவரது தந்தைக்கு சொந்தமான நிலம் அன்னசாகரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை அவரது பெரியப்பா, தனக்கு சொந்தம் என கூறி வந்தார். இதனால், நகராட்...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம் வெளியீடு
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது; துணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார். பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க ...
தமிழகம்
திருமணங்களை பதிவு செய்யாத புதுமண தம்பதிகளுக்கு சிக்கல்
திண்டுக்கல் : புதிய திருமண பதிவு சட்டப்படி, கிராமங்களில் நடக்கும் திருமணங்களை ஆறு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும், அருகில் உள்ள சார்பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2009 நவம்பர் 24ல், அர...
தமிழகம்
கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜூலை 5 முதல் கவுன்சிலிங்
மதுரை : கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங், ஜூலை 5ம் தேதி துவங்குகிறது. அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங், சென்னை வெலிங்டன் சீமாட்டி மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூலை 5ம் தேதி காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். அன்று பொருளாதாரம், வணிகவியல், பொது நிர்வாகம், அரசியல் சார் அறிவியல்...
தமிழகம்
பிடிபடும் கடல் அட்டை கடத்தல்காரர்களிடம் பேரம்! வனத்துறையினர் ஒருசிலர் செய்கையால் ஒட்டுமொத்த துறைக்கு
ராமநாதபுரம்: மாவட்டத்தில் பிடிபடும் கடல் அட்டை கடத்தல்காரர்களிடம் பேரம் பேசுவது தொடர்வதால், வனத்துறையினரின் செயல்பாடுகள் மீது பொதுமக்கள் விரக்தியில் உள்ளனர். இந்த வகையில் மண்டபம் சரகம் முதலிடத்தில் உள்ளது. கடலோர மாவட்டமான ராமநாதபுரம், மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதால் கூடுதல் சிறப்புகளை பெற்றுள்ளது. மன்னார் வளைகுடாவ...
தமிழகம்
தாலுகா அலுவலகத்தில் மீண்டும் இடைத்தரகர்கள்கல்வி சீசனில் ஜரூர் வசூல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தின் எல்லை பகுதி மிகப்பெரியதாகும். கீழக்கரை உள்ளிட்ட இரு நகராட்சிகள் தவிர ஏராளமான ஊரக பகுதிகளின் சேவையில் இந்த அலுவலகம் உள்ளது. வரக்கூடியவர்களுக்கு ஏற்ற வகையில் கட்ட...
தமிழகம்
வருமுன் காப்போம் முகாம்
முதுகுளத்தூர்: கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாம் கீழக்காஞ்சிரங்குளம் ஊராட்சி தலைவர் மகாதேவன் தலைமையிலும், பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் முன்னிலையிலும் நடந்தது. டாக்டர் சக்தி பேசினார் திருமண உதவி தொகை வழங்கப்பட்டது. டாக்டர் கள் ஸ்ரீதேவி, சந்...
தமிழகம்
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்
ராமநாதபுரம்: கள்ளதொடர்பு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் கோர்ட் தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகே பேராவூரை சேர்ந்தவர் ராஜா(25). இவர் வேலைக்காக வெளிநாடு சென்றபோது, மனைவி நம்பீஸ்வரி(23)யுடன் அதே ஊரை சேர்ந்த விஜயகாந்த் கள்ளதொடர்பு வைத்திருந்தார். சொந்த ஊர் திரும்பிய ராஜா தனது மனைவி...
தமிழகம்
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதோருக்கு வாய்ப்பு
மதுரை : திறந்த வெளிப்படிப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், தோல்வி அடைந்த பாடங்களை மட்டும் தேர்வெழுதலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தால் திறந்தவெளிப் பள்ளித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 15 வயது பூர்த்தி அடைந்த...
தமிழகம்
மாணவர்களுக்கு போட்டிகள்
பரமக்குடி: பரமக்குடியில் தேசிய மக்கள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் ஐந்தாவது தூண் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு, தனித்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் " லஞ்ச ஒழிப்பில் மாணவர் பங்கு' ,பத்து முதல் பிளஸ் 2 மாணவர்கள் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்களும், ந...
தமிழகம்
லாரி பறிமுதல்
திருப்புல்லாணி: ராமநாதபுரம் துணை தாசில்தார் (கனிமம்)உதயகுமார், ஆர்.ஐ., பாண்டியன் மற்றும் அலுவலர்கள் திருப்புல்லாணி பகுதியில் ரோந்து சென்றனர். உத்தரவை அருகே மணல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்த போது, அனுமதியில்லாமல் மணல் ஏற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து திருப்புல் லாணி போலீசில் ஒப்படைத்தனர். டிரை...
தமிழகம்
கர்ப்பிணிகளுக்கு உதவி தொகை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் கர்ப்பிணி உதவி தொகையாக முதல் கட்டமாக 216 பேருக்கு தலா மூன்றாயிரம் வீதம் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் லலிதகலா பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார். கமிஷனர் முஜ்புர் ரஹ்மான், சுகாதார அலுவலர் சந்திரன், உதவியாளர் சுசிலா, ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
ஆசிரியர் கூட்டணி கூட்டம்
திருவாடானை: திருவாடானையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட் டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லியோஜெரால்டுஎமர்சன், வட்டார செயலாளர் செந்தில்குமார், வட்டார தலைவர் ரவிச் சந்திரன், பொரு ளாளர் முத்துசாமி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார செயலாளர் வின்சென்ட், கமுதி வட்டார பொறுப்பாளர் பொன்ம...
தமிழகம்
கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்
திருவாடானை: திருவாடானை அருகே ஆக்கலூரில் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை , பிரமோற்சவம், சூர்யஅலங்காரம் நடந்தது. நேற்று காலையில் பூர்ணாகுதி தீபாராதனை, மூன்றாம் காலபூஜை யுடன் கும்பாபிஷேகம் நடந்தது. கைலாசநாதர், யோகாம்பாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. செயல்அலு...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு வரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு திருப்பூரில் மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள்
திருப்பூர் : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வசதியாக, திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள் தயார் நிலையில் உள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. வரும் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை
சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும், நாளை முதல் 25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில், நாளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்குகிறது. 23ம் தேதி முதல் 27ம் தேதி வர...
தமிழகம்
சமாதான கூட்டம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் திருஇருதய ஆலய விழா கொண்டாடுவது தொடர் பாக இருதரப்பினரிடையே சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் செல்வராஜ் தலைமையிலும், டி.எஸ்.பி., தில்லைநடராஜன் முன்னிலையிலும் நடந்த இதில் , விழா சுமூகமாக நடத்த இருதரப்பினரும் ஒத்துகொண்டனர். ஜெயசீலன், அருள், வேதமுத்து, பல்த்தசார், லூகாஸ், ...
தமிழகம்
கடலோர ஆய்வுக்கூட்டம்
ராமநாதபுரம்: கடலோர பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பிரதீப்குமார் எஸ்.பி., வனப் பாதுகாவலர் மல்லேசப்பா , கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகம்
தனியார் கல்லூரிகளுக்கும் நிதியுதவி: யு.ஜி.சி., அறிவிப்பு
சென்னை : தனியார் கல்லூரிகளும், யு.ஜி.சி., 12பி திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. யு.ஜி.சி., துணை செயலர் ஜெய்ஸ்வால், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தனியார் கல்லூரிகள் கடந்த 9வது ஐந்தாண்டு திட்டம் வரை, 12 பி திட்டத்தில்...
தமிழகம்
குறைந்த மார்க் எடுத்தவர்களை அரசு பள்ளியில் சேர்க்க தயக்கம்பெற்றோர்கள் கவலை
முதுகுளத்தூர்: குறைந்த மார்க் எடுத்த மாணவர்களை சேர்க்க அரசு பள்ளிகளில் தயக்கம் காட்டி வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்புகளில் மாநில அளவில் முதல் இடங்களையும், தனியார் பள்ளிகளை விட அதிக தேர்ச்சி விகிதமும் பெற்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டு வருகிறத...
தமிழகம்
பாரதிநகரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்காத தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி மற்றும் வக்கில்கள் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் பாரதிநகரில் நடந்தது. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனிமுத்து முன்னிலை வகித்தார். வக்கீல்கள் பிரிவு முன்னாள் ...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு ஊர்வலம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே வல்லக்குளத்தில் ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு, மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. வல்லக்குளம் ஊராட்சி தலைவர் ஷேக் அலாவுதீன் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு இலவச சிலேடு, நோட்டு புத்தகங்களை வழங்கினார். பள்ளி உதவிஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணன...
தமிழகம்
பரமக்குடியில் மழை
பரமக்குடி: பரமக்குடியில் கோடை வெயிலுக்கு பின் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதையடுத்து நேற்று பிற்பகல் இரண்டு மணிக்கு பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.
தமிழகம்
ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம்: மாவட்ட சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பிரதீப்குமார் எஸ்.பி., முன்னிலை வகித்தார். போலீஸ், வருவாய் துறை, போக்குவரத்து துறை, நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றனர்.
தமிழகம்
பாதுகாப்பு கூட்டம்
ராமநாதபுரம்: மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பிரதீப்குமார் எஸ்.பி., பங்கேற்றார்.
தமிழகம்
அங்கன்வாடி நிர்வாகிகள் கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சாரதா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தேவி, ரெத்தினம், மாவட்ட துணை செயலாளர் காளியம்மாள், சாந்தி, பிரகதாம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் 28 ஆண்டுகளாக பணி...
தமிழகம்
கண் சிகிச்சை முகாம்
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த கண் மருத்துவமனை, முதுகுளத்தூர் த.மு.மு.க., இணைந்து பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடத்தியது.த.மு.மு.க., மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் தலைமையில், துணை செயலாளர் அஜீஸ்கனி முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் டி.எஸ்.பி., தில்லைநடர...
தமிழகம்
செம்மொழி மாநாடு: கடலோர பகுதியில் கூட்டு ரோந்து ஏற்பாடு
ராமநாதபுரம்: செம்மொழி மாநாட்டை முன்னிட்டு மன்னார் வளைகுடா கடலோர பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு நாளை தொடங்குகிறது. இதையொட்டி தமிழக கடலோர பகுதியில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை தமிழர் படுகொலை குறித்து எதிர்கட்சிகள் சூடான பிரசாரம் செய்து வருவதால், இதன் தாக்க...
தமிழகம்
மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு
தேனி : தேனி மருத்துவக் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மருத்துவக் கல்லூரியிலும், தங்கும் விடுதியிலும் சுகாதாரக்குறைபாடு அதிகளவில் உள்ளது. இருமுறை மாணவ, மாணவிகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். நேற்று காலை மாணவிகள் ஐந்து பேருக்கு...
தமிழகம்
ஜூலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் :நாளை வாக்காளர் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல் : காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில், 2009 ஜூன் 30 வரை காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.இந்நிலையில்...
தமிழகம்
பொறியியல் படிப்பில் என்.ஆர்.ஐ., இடங்கள் ஒதுக்கீடு
சென்னை : பொறியியல் படிப்பில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 206 இடங்களும், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் வாரிசுகளுக்கு 104 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு தனியாக கவுன்சி...
தமிழகம்
செம்மொழி மாநாடு: 500 கைதிகள் விடுதலை?
சென்னை : செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருக்கும் 500 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. செம்மொழி தமிழ் மாநாடு கோவையில் நாளை துவங்கி வரும் 27ம் தேதி வரையில் நடக்கிறது. இதற்காக கோவை நகரம் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிக...
இந்தியா
சென்னை மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் சலுகை
மும்பை : பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்களை கவரும் வகையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. உயர் கல்வி பயில்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 1.60 லட்சம் இந்திய மாணவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். குறிப்பாக, பிரிட...
தமிழகம்
விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த மூவர் சிறையில் அடைப்பு
திருச்சி : விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அனைத்து தகவல், உதவி செய்த சீரஞ்சீவி என்பவரை, சென்னையில் கியூ பிராஞ்ச் போலீசார், சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். "திருச்சியிலும் விடுதலைப் புலி ...
தமிழகம்
செம்மொழி மாநாடு பெயரைச் சொல்லி தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வசூல்
தேனி : கோவையில், நடக்கும் செம்மொழி மாநாட்டு செலவிற்கு பணம் வழங்க வேண்டும் எனக்கூறி தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்.டி.ஓ.,) "கோவை செம்மொழி மாநாட்டு செலவிற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதை சரிகட்ட பணம் ஈட்ட வேண்டும்' எனக் கூறி புர...
தமிழகம்
கடலோர பகுதியில் கூட்டு ரோந்து ஏற்பாடு
ராமநாதபுரம் : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, மன்னார் வளைகுடா கடலோர பகுதியில், கூட்டு ரோந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை தொடங்குகிறது. இதையொட்டி, தமிழக கடலோர பகுதியில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை தமிழர் படுகொலை குறித்து, எதிர்கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதால்,...
தமிழகம்
கூட்டுறவு சங்க செயலர் சஸ்பெண்ட்
கம்பம் : வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தை அனுமதியின்றி விற்ற, சங்க செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு சொந்தமான ஆறு சென்ட் இடம், பி.டி.ஆர்., காலனியில் உள்ளது. இந்த இடம், அலுவலகம் கட்டுவதற்காக சங்கத்தால் வாங்கப்பட்டது. சில மாதங்களுக்கு மு...
தமிழகம்
கிணற்று நீரில் பெட்ரோல் கலப்பு ஆயில் நிறுவன அதிகாரி சோதனை
முகப்பேர் : முகப்பேர் பகுதி நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பு ஏற்பட்டது குறித்து, இந்தியன் ஆயில் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேற்கு முகப்பேர் வாட்டர் டேங்க் அருகேயுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி நிலத்தடி நீரில் கலந்தது. அதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனம், ம...
தமிழகம்
தமிழில் இடம்பெறாத பெயர் பலகைகள் அகற்றம்! கெடு முடிந்ததால் மாநகராட்சி அதிரடி...
சென்னை:வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க, மாநகராட்சியினால் அளிக்கப்பட்ட கெடு நேற்று முன்தினத்துடன் முடிந்ததால், ஆங்கில மொழியிலிருந்த பெயர் பலகைகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சென்னை நகரிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க மேயர் வேண்டுகோள்...
தமிழகம்
ஐகோர்ட்டுக்கு வெளியே உண்ணாவிரதம் மாஜிஸ்திரேட், இரண்டு வக்கீல்கள் கைது
சென்னை : தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட் அருகில் உண்ணாவிரதம் இருந்த ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட், இரண்டு வக்கீல்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாகவும், அலுவலக மொழியாகவும் அறிவிப்பதற்கான மசோதாவிற்கான ஒப்புதல் பெற வலியுறுத்தி சென்னை மற்றும் மதுரையில் வக்கீல்கள் உண்ண...
தமிழகம்
எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு விஷமிகள் தாக்குதல் தொடர்கிறது
வேலூர் : எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசி தாக்கியதில், இன்ஜின் டிரைவர் படுகாயமடைந்தார். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்தவர் மனோகரன்(45); பெங்களூரில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்லும் சேஷாத்திரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்ஜின் டிரைவராக பணிபுரிகிறார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா வரையில், ரய...
தமிழகம்
கார்களை திருடிய நால்வர் கைது கார்கள், பைக்குகள் பறிமுதல்
பரங்கிமலை: கார்களை திருடி நம்பர் பிளேட்டுகளை மாற்றி, டிராவல்ஸ் நடத்திய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கார்கள், ஒரு மினி வேன், 19 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, சங்கர் நகர் பகுதியில் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் தொடர்ந்து ...
தமிழகம்
எஸ்.எம்.எஸ்.,சில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
சேலம் : சேலம் ஜங்ஷன் ரயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீவிரவாதிகளை, போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 12ம் தேதி, விழுப்புரம் அருகே சித்தணி ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்தும்; 17ம் தேதி, ஈரோடு சென்னிமலை அருகே ஈங்கூர் - விஜயமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ...
தமிழகம்
கூவத்தில் விழுந்த சிறுவன் உடல் மீட்பு
சென்னை: கூவம் ஆற்றில் விழுந்து மூழ்கிய சிறுவனின் உடல், நேற்று பிற்பகலில் மீட்கப்பட்டது. நுங்கம்பாக்கம் அடுத்த சூளைமேடு, கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம்; கட்டட தொழிலாளி; இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நான்கு மகன்கள். இவர்களின் மூன்றாவது மகனான ராஜ்குமார்(8), நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை பகுதியில்,...
தமிழகம்
அவதூறு போஸ்டர் கடைக்காரர் கைது
திருநெல்வேலி : செம்மொழி மாநாடு குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள சிவராமபுரத்தைச் சேர்ந்தவர் சமுத்திரவேல்(37); கடை வைத்துள்ளார். விருதுநகரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கொடுத்த போஸ்டரை கடையில் ஒட்டியிருந்தார். அதில் "இலங்கைத் தமிழர்களுக்கு உதவாமல் இத்தகைய செம்மொ...
தமிழகம்
பஸ்கள் மோதல் பயணிகள் காயம்
நசரத்பேட்டை: பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கத்திற்கு மாநகர பஸ் நேற்று மதியம் சென்றது. நசரத்பேட்டை அருகே, திருமழிசை சாலையில் பஸ் திரும்பும் போது, கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ், மாநகர பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில், மாநகர பஸ்சின் பின்பகுதியும், ஆம்னி பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தன. நான்கு பயணிகள...
தமிழகம்
இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்
மண்டபம் : இலங்கைக்கு கடத்த முயன்ற 340 கிலோ கடல் அட்டைகளை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்துவது தொடர்கிறது. வனத்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர், கடல் பகுதியில் முகாமிட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மண்டபம் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமைய...
தமிழகம்
கடன் வாங்கி தருவதாக மோசடி வியாசர்பாடியில் பெண் கைது
வியாசர்பாடி: கடன் வாங்கித் தருவதாகக் கூறி 21 பேரிடம் 85 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அசோக் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரி(36). இவரது கணவர் இளங்கோவன் இறந்துவிட்டார். இவர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வாங்கி தருவதாக கூறி கல்யாணபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் ம...
தமிழகம்
மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு
தேனி : தேனி மருத்துவக் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.தேனி மருத்துவக் கல்லூரியிலும், தங்கும் விடுதியிலும் சுகாதாரக்குறைபாடு அதிகளவில் உள்ளது. நேற்று காலை மாணவிகள் ஐந்து பேருக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட் டது. இவர்கள் அனைவரும், அவசர சிகிச்சை பி...
தமிழகம்
கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையம் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடசென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயலராக இருப்பவர் சிவராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்குள்ள இளைய முதலி தெருவில் நின்று கட்சியினருடன் பேசினார். அப்போது, அங்கு வந்த கொருக்குப்...
இந்தியா
காஷ்மீரில் நேற்று பந்த் மாமூல் வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் நேற்று நடத்திய பந்த் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஸ்ரீநகரில், பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், பாதுகாப்புப் படையினரை கண...
இந்தியா
கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன் மருத்துவமனையில் அனுமதி
மும்பை : பத்ம விபூஷண் விருது பெற்ற பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். புனேயைச் சேர்ந்த பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன்(86). இவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, வாதநோயால் ...
தமிழகம்
பெயின்டருக்கு கத்திக் குத்து வாலிபர் கைது
துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் விமல்ராஜ்(32); பெயின்டர். இவரது மனைவி பவானி(28). இவர்கள் குடியிருப்பின் மேல் தளத்தில் அப்பு(23) என்பவர் வசித்து வந்தார். விமல்ராஜுக்கும், அப்புவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பு சின்னாண்டி குப்பத்திற்கு குடிபெயர்ந்தார். கண்ணகி...
இந்தியா
99 அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு
புதுடில்லி : மத்திய விஜிலென்ஸ் கமிஷன், கடந்த ஏப்ரலில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 99 அதிகாரிகள் மீது, ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழல் செய்யும் அதிகாரிகளை, விஜிலென்ஸ் கமிஷன் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் மட்டும், 99 அதிகாரிகள் மீது விஜில...
தமிழகம்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
திருநின்றவூர்: திருநின்றவூர்-பெரியபாளையம் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, பாக்கம் பகுதியிலிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. திருநின்றவூர் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி பூந்தமல்லியையும், மறுபகுதி பெரியபாளையத்தையும் இணைக்கிறது. பாலப்பணிகள் முடிவடையும் நிலையிலிருப்பதால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகம...
இந்தியா
திருமலைக்கு மல்லையா வந்ததால் பொதுமக்கள் அவதி
நகரி : பிரபல தொழிலதிபரும், கிங் பிஷர் விமான நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா, திருமலை வந்ததை ஒட்டி, வெங்கடேச பெருமாளை தரிசிக்க காத்திருந்த அப்பாவி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு, திருமலை கோவிலுக்கு விஜய் மல்லையா, குடும்பத்துடன் வந்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய தலைவர்...
தமிழகம்
டிக்கெட் பரிசோதகர், போக்குவரத்து ஏட்டு தாக்கியதாக பரஸ்பரம் போலீசில் புகார்
சென்னை: டிக்கெட் பரிசோதகர் கன்னத்தில் அறைந்ததாக போலீஸ்காரரை, போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியதுடன் போலீசிலும் புகார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தன்னை போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியதாக போலீசும் புகார் தெரிவித்ததால் மூலக்கொத்தளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர்கள்...
தமிழகம்
நீர் சறுக்கு விளையாட்டில் வழுக்கி இருவர் படுகாயம்
ஈஞ்சம்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் தனியார் கேளிக்கை அரங்கில், புதிய வகை நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட தந்தையும், மகளும் சறுக்கி விழுந்து படுகாயமடைந்தனர். கொளத்தூர், விநாயகபுரம், காந்தி தெருவை சேர்ந்தவர் ஆன்டனி(60). இவரது மகள் ரீனா(30), மருமகன் ரோகித்(34). மூவரும் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வ...
தமிழகம்
புதிய பாரதம் படைக்க ஒருங்கிணைந்த போராட்டம் : தக்கலையில் மா.கம்யூ., சுபாஷினி அலி ஆவேசம்
தக்கலை: புதிய பாரதம் படைக்க ஒன்றிணைந்து போராட வேண்டும் என மா.கம்யூ., மத்தியகுழு உறுப்பினர் சுபாஷினி அலி தக்கலையில் பேசினார்.மா.கம்யூ., அரசியல் விளக்க பொதுக்கூட்டம் தக்கலையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்தியகுழு உறுப்பினர் சுபாஷினி அலி பேசியதாவது:இந்தியாவில் வாழும் ஏழைகளை கணக்கெடுப்பதற்காக கோடி, கோடியாக செலவு செய்தும...
தமிழகம்
மனைவியை எரித்து கொன்ற கணவன் கைது
சென்னை: மனைவியை எரித்துக் கொன்றதாக, கணவனை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை அடுத்த சி.ஐ.டி., நகர், மாடல் அட்மின் ரோட்டை சேர்ந்தவர் அனூப் (26); ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கல்பனா (22). கல்பனாவிற்கு ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், முதல் கணவனை பிரிந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக அனூப்புடன் வசித்து வந்தார். ...
தமிழகம்
மன அமைதிக்கு நாம ஜெபம்ஆறையூர் மடாதிபதி அறிவுரை
களியக்காவிளை: கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழி நாம ஜெபம் ஜெபிப்பதுதான் என்று ஆறையூர் அபேதானந்தா ஆஸ்ரம மடாதிபதி சுவாமினி நரஹரபிரியா பேசினார்.குழித்துறையில் ஸ்ரீமத் ராமாயண ஸத்திர ஸமிதியின் மகளிர் அமைப்பு நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய ஸ்ரீமத் ராமாயண ஸத்திர நிர்வாக சமிதி சேர்மன் டாக்டர...
தமிழகம்
பை- பாஸ் சாலையில் பெண்ணிடம் வழிப்பறி
தாம்பரம்: சென்னை பை-பாஸ் சாலையில், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மவுலிவாக்கத்தை சேர்ந்த கருப்பசாமியும், அவரின் சகோதரி மாயாவும்(43) நேற்றுமுன்தினம் இரவு, கூடுவாஞ்சேரியில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு சென்னை பை-பாஸ் சாலை வழியாக பைக்கில் வீட்டிற்கு திரும்பினர். தாம்பரம் குண்டுமே...
தமிழகம்
குழித்துறை நகராட்சி கூட்டம் : அதிகாரி முற்றுகையால் பரபரப்பு
மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சி கூட்டத்தில் அதிகாரியை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.குழித்துறை நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பொன்.ஆசைதம்பி தலைமை வகித்தார். இன்ஜினியர் ரமேஷ், துணைத்தலைவர் யூஜின் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் ...
தமிழகம்
ஜெ., மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும் நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்கும் : டாக்டர் வெங்கடேஷ் பேச்சு
நாகர்கோவில்: ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்கும் என்று நாகர்கோவிலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் வெங்கடேஷ் பேசினார்.ஐகோர்ட்டில் தமிழை வழக்குமொழியாக்கும் வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை ஆதரித்து நேற்று மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ந...
இந்தியா
ஒரிசாவில் குளோரின் கசிவு 35 பேர் உடல்நலம் பாதிப்பு
பெர்ஹாம்பூர் : ஒரிசாவில் ரசாயன வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, நச்சுவாயு காற்றில் பரவியதில் 35 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பெர்ஹாம்பூரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க குளோரின் கலக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்...
இந்தியா
இந்தியர்கள் ஈராக் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
புதுடில்லி : ஈராக் நாட்டிற்கு இந்தியர்கள் வேலை மற்றும் கல்வி பயில செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, மத்திய அரசு நீக்கியுள்ளது. ஈராக் நாட்டில் நடந்த போர் காரணமாக, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டுள்ளது. இதையடுத்து, வேலை மற்றும் கல்வி பயில்வதற்காக இந்தியர்கள் அங்கு செல்ல, 2004ம் ஆண்டு வெளியுறவ...
தமிழகம்
இலவச நோட்டுகள் வழங்கும் விழா
கயத்தாறு : கயத்தாறு புனித வின்சென்ட் தே பவுல் சவை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.கயத்தாறு புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் வைத்து ஏழை-எளிய மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. கயத்தாறு பங்குத்தந்தை பீட்டர் தலைமை வகித்து இ...
தமிழகம்
தோணுகால் கோவிலில் கும்பாபிஷேகம்
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள தோணுகாலில் உள்ள வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹா கணபதி பூஜை, புண்யாவாகனம், எஜமானர் அனுக்ஞை, வாஸ்துசாந்தி, திக்பலியுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து பூர்ணாகுதி பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் அதனை தொடர்ந்து மகா க...
தமிழகம்
செம்மொழி மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு கோவையில் வாகனம், தங்குவதற்கு தனி இடம்
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கோவை செம்மொழி மாநாட்டிற்கு செல்பவர்களின் வாகனங்களை நிறுத்த மற்றும் தங்குவதற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக., மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட திமுக., செயலாளர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ் மொழிக்கு செம்ம...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாகுடி ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் கல்விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் சேவியர் ரெத்தினராஜ் தலைமையில் நடந்தது.மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய அட்டையுடன் ஊர்வலமாகச் சென்றனர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். உதவி ஆசிரியர் சாந்தி, பெற்றோர்-ஆசிரி...
தமிழகம்
ராகுல் காந்தி பிறந்தநாள் விழா
கழுகுமலை : கழுகுமலையில் ராகுல் காந்தி பேரவை சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கழுகுமலை காங்., மற்றும் கோவில்பட்டி சட்டசபை தொகுதி சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு இளைஞர் காங்., கோவில்பட்டி சட்டசபை தொகுதி பொதுச்செயலாளர் இசக்கி தலைமையில், மாவட்ட செயலாளர் செல்லத்துரை, நக...
தமிழகம்
உடன்குடியில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
உடன்குடி : உடன்குடியில் காங்.,சேவாதளம் மாணவர் அமைப்பு சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.உடன்குடி காங்.,சேவாதளம் மாணவர் அமைப்பு சார்பில் அகில இந்திய காங்.,பொதுச் செயலாளர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா உடன்குடி பஸ்ஸ்டாண்டில் வைத்து நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்...
தமிழகம்
இலவச சீருடை வழங்கும் விழா
தூத்துக்குடி,: தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளிப்புரவலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சார்பில் இலவச நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பள்ளியின் தாளாளர் ஜெரால்டு ரவி கலந்து கொண...
தமிழகம்
டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு தள்ளிவைப்பு
சென்னை : இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, நான்கு வாரங்களுக்கு சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. இலங்கை அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா மீது சென்னை கோர்ட்டில் மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளில் இவர் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் குற்றவாளியா...
தமிழகம்
தாப்பாத்தி பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி
புதூர்: புதூர் யூனியனுக்குட்பட்ட தாப்பாத்தி பஞ்.,யூனியன் நடுநிலைப்பள்ளி மற்றும் புதூர் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.தாப்பாத்தி பஞ்.,தலைவி அமுதா தலைமை வகித்தார். ஆசிரியைகள் கவிதாராணி, சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமை ஆசிரியர் ஜெயராமன் கல்வி விழிப்புணர்வ...
தமிழகம்
கொலை வழக்கில் தந்தை, தாய், மகனுக்கு ஆயுள்
திருநெல்வேலி: நெல்லை அருகே இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை அடுத்துள்ள கீழப்புதூரை சேர்ந்த செந்தூர்பாண்டியன், முருகராஜ் ஆகியோர் உறவினர்கள். இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் உள்ள கருவேல மரங்களை குத்தகைக்கு விட்டது தொடர்பாக இரு குடும...
தமிழகம்
ஒகேனக்கல்லில் மதுபான கடை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு
சென்னை : ஒகேனக்கல் அருவி செல்லும் வழியில் உள்ள மதுபான கடையை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல்லில் முதலைப்பண்ணை அருகில் உள்ள மதுபான கடையினால், பொது மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது என்றும், எனவே அந்த கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரி, சென்னை ஐகோர்ட்டில...
தமிழகம்
அனைத்து பள்ளிகளும் அரசு உத்தரவுப்படி நாளை முதல் செம்மொழி மாநாட்டிற்கு விடுமுறை
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் அரசு உத்தரவுப்படி நாளை முதல் செம்மொழி மாநாட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என் று முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நாளை துவ ங்கி வரும் 27ம் த...
தமிழகம்
சைதை கோர்ட்டில் நடிகர் நாசர் ஆஜர்
சென்னை : இந்திப்படம் எடுக்க தயாரிப்பாளரிடம் 50 லட்சம் கொடுத்து, ஏமாந்த வழக்கில், நடிகர் நாசர் சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று ஆஜரானார். ராஜ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராமனாதன். இவரிடம் நடிகர் நாசர் 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, இந்திப் படம் எடுத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கான ஒப்பந்...
தமிழகம்
ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதிக்க மத்திய அரசை வலியுறுததி அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்
தூத்துக்குடி, - ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்தாத திமுக அரசை கண்டித்து நேற்று தூத்துக்குடியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கொளுத்திய வெயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அதிகமானோர் பங்கேற்றனர். ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதியளிக்க வேண்டும் என்று மதுரையில் வக்கீல்கள் தொட...
தமிழகம்
தூத்துக்குடி வக்கீல்கள் சங்கத்தினர் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பு
தூத்துக்குடி: - மதுரை வக்கீல்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி வக்கீல் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட் கிளைகளில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மது ரை வக்கீல்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் ...
தமிழகம்
சமத்துவபுரத்தில் குடிநீர் பிரச்னை காலிகுடங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி : சமத்துவபுரம் மக்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் கலெக்டர் ஆபிஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரத்தில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு நூறு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள் குடிக்...
தமிழகம்
தூத்துக்குடியில் வரும் 27ல் ஆணழகன் போட்டி
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் வரும் 27ம் தேதி 13ம் ஆண்ட ஆணழகன் போட்டி நடக்கிறது.தூத்துக்குடி மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் நடத்தப்படும் 13வது ஆணழகன் போட்டி வரும் 27ம் தேதி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க மண்டபத்தில் மாலை 4 மணி க்கு நடக்கிறது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஜிம்களை சேர...
தமிழகம்
அனைவருக்கும் தரமான கல்வி அளிக்க பள்ளிகளில் சர்வே
தூத்துக்குடி: -அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்கும் வகையில் பள்ளிகளில் புள்ளிவிபரம் சேகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நேற்று இதற்கான படிவம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தரம் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் எப...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு சின்னத்தை கே.வி.எஸ் பள்ளியில் கோலமாக வரைந்து சாதனை
தூத்துக்குடி,: செம்மொழி மாநாட்டினை பெருமைபடுத்தும் வகையில் தூத்துக்குடி கே.வி.எஸ்.மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ, மாணவிகள் செம்மொழி மாநாட்டு சின்னத்தினை கோலமாக வரைந்து சாதனை படைத்தனர்.கோவையில் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் செம்மொழி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டினை கௌரவபடுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே இந்த ம...
தமிழகம்
கோவில்பட்டியில் செல்போன் கொள்ளைக்காரி கைது
கோவில்பட்டி,: கோவில்பட்டி பகுதியில் பிரபலமான செல்போன் கொள்ளைக்காரியை போலீசார் கைது செய்தனர். .இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,விளாத்திகுளம் கூலித்தொழிலாளியான திருப்பதி மனைவி ரேணுகாதேவி (40) என்பவர் கடந்த 19ந்தேதி கோவில்பட்டி அண்ணா பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறும்போது அவரது கைப்பை திருடுபோனது. இதுகுறித்து ரேணுகாதேவி ...
தமிழகம்
உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை சாவு : பொதுமக்கள் முற்றுகை
உடன்குடி: -உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை உடனே இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.உடன்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 100க்கு மேற்பட்ட கிராம மக்களின் நலன்கருதி உடன்குடி அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏழை மக்கள் அரசு...
தமிழகம்
மாணவி தற்கொலை
தூத்துக்குடி, : தூத்துக்குடியில்பிளஸ்2 மாணவி தூக்குப்போ ட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுதூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகள் சந்தனமாரி பிளஸ்2 படித்து வந்தார். தீராத வயிற்றுவலி நோயினால் அவதிப்பட்டு வந்த சந்தனமாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட...
தமிழகம்
நஷ்ட ஈடு வழங்காத அரசுபஸ் ஜப்தி கோவில்பட்டி கோர்ட் தீர்ப்பு
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடும்பத்திற்கு நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் சாந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையா(70) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி டூ திருச்செந்தூர் ...
தமிழகம்
முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
தூத்துக்குடி : குருவித்துறை முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடைவிழாவில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.குருவித்துறை முக்காணி ஸ்ரீ ஆதிரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் துவங்கியது.தொடர்ந்து 7 நாட்கள் நடக்கும் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.நேற்று இரவு அம்மனுக்கு மாக்காப்பு தீப...