category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
General
சீனாவில் மழை வெள்ளத்துக்கு 175 பேர் பலி
பீஜிங் : சீனாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 107 பேரை காணவில்லை. வெள்ளம் காரணமாக 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 1.36 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மின்சாரம் தடைபட்டு...
தமிழகம்
ஆத்தூரில் இடியுடன் கனமழை
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரின் பல பகுதிகளில் இரவு 8 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தமிழகம்
தெலுங்கானா பகுதிகளில் ஜூலை 27ம் தேதி இடைத்தேர்தல்
புதுடில்லி : தெலுங்கானா பகுதிகளில் காலியாக உள்ள 10 இடங்களில் ஜூலை 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதி அமைக்க வலியுறுத்தி அந்த பகுதி எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த பகுதிகளில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 27ம் தேதிநடைபெறும் என்று அறிவித்துள்ள...
General
விம்பிள்டன் டென்னிஸ் : பெடரர் வெற்றி
லண்டன் : விம்பள்டன் டென்னிஸ் ‌தொடர் இன்று துவங்கியது. முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர் அல்ஜன்ட்ரோ பல்லாவை சந்தித்தார். முதல் இரண்டு செட்களை நழுவ விட்ட பெடரர் கடைசி 3 சுற்றுகளில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். பெடரர் பல்லாவை 5-7,4-6,6-4,7-6,6-0 என்ற செட் கணக்கில் ‌தோற்கடித்தார்.
General
உலக கோப்பை கால்பந்து : சிலி வெற்றி
போர்ட் எலிசபெத் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் எச் பிரிவில் நடந்த போட்டியில் சிலி அணியும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் சிலி அணி சுவிட்சர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
தமிழகம்
கூட்டுறவு சங்க செயலர் சஸ்பெண்ட்
கம்பம் : வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தை அனுமதியின்றி விற்ற, சங்க செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு சொந்தமான ஆறு சென்ட் இடம், பி.டி.ஆர்., காலனியில் உள்ளது. இந்த இடம், அலுவலகம் கட்டுவதற்காக சங்கத்தால் வாங்கப்பட்டது. சில மாதங்களுக்கு மு...
தமிழகம்
தமிழ் மீது பாசம்...தமிழர்களுக்கு சலவை இலவசம்!
கோவை: இணைப்புச்சாலைக்கு ஒருவர் இலவசமாய் இடம் கொடுக்கிறார்; ஒருவர், அரிசியில் லச்சினையை வரைகிறார்; ஒருவர், வானிலே பறந்து வள்ளுவர் சிலைக்கு மலர் தூவ புறப்பட்டிருக்கிறார். எல்லாமே, பொங்குகிற உற்சாகத்தோடு அரங்கேறும் செம்மொழித் திருவிழாவுக்கு கொங்கு மக்களின் உணர்வு மயமான பங்களிப்புகள். செம்மொழி மாநாட்டுக்காக வரும் தமிழர்களை...
தமிழகம்
செம்மொழி மாநாடு பெயரைச் சொல்லி தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வசூல்
தேனி : கோவையில், நடக்கும் செம்மொழி மாநாட்டு செலவிற்கு பணம் வழங்க வேண்டும் எனக்கூறி தேனி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்.டி.ஓ.,) "கோவை செம்மொழி மாநாட்டு செலவிற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதை சரிகட்ட பணம் ஈட்ட வேண்டும்' எனக் கூறி புரோ...
தமிழகம்
கடலோர பகுதியில் கூட்டு ரோந்து ஏற்பாடு
ராமநாதபுரம் : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, மன்னார் வளைகுடா கடலோர பகுதியில், கூட்டு ரோந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு 23ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, தமிழக கடலோர பகுதியில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை தமிழர் படுகொலை குறித்து, எதிர்கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவத...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு தங்க நாணயம் வெளியீடு
கோவை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி, சிறப்பு தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது; துணை முதல்வர் ஸ்டாலின் நாணயங்களை வெளியிட்டார்.பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 2, 4 கிராம் எடைகளில் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளியிடும் விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின், சிறப்பு தங்க நாண...
தமிழகம்
ஜனாதிபதி கோவை வருகை
கோவை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று இரவு 7.50 மணிக்கு விமானத்தில் கோவை வருகிறார். நாளை காலை, கொடிசியா வளாகத்தில் நடக்கும் மாநாடு துவக்க விழாவில் பங்கேற்கும் அவர், மாலையில் நடக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பிரத்யேக மேடையிலிருந்து பார்வையிடுகிறார். இதையொட்டி, கோவை நகரில்...
தமிழகம்
ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை:சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்ற தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடசென்னை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆ...
தமிழகம்
கட்சி மாறிய எக்ஸ்.எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
நாகப்பட்டினம்:தி.மு.க.,வில் சமீபத்தில் இணைந்த அ.தி.மு.க., எக்ஸ். எம்.எல்.ஏ., க்களுக்கு நாகையில் தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியில் 1984-88 ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் தங்கமணி.வேதாரண்யம் தொகுதியில் 1980-84 ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் மாணிக்கம்.சீர்காழி தொகுதியில் 1...
தமிழகம்
உத்தப்புரத்தில் போலீஸ் தடியடி: மார்க்சிஸ்ட் குழு விசாரணை
எழுமலை: உத்தப்புரத்தில் ஒரு பிரிவினர் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதல் குறித்து விசாரிக்க மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் குழுவினர் உத்தப்புரம் வந்தனர். மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் சாக்கடை சுத்தம் செய்ததில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் 40 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து 16 பேரை கைது செய்தனர...
தமிழகம்
ஜூலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல்:நாளை வாக்காளர் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல்:காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில், 2009 ஜூன் 30 வரை காலியாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில்,...
தமிழகம்
புதூர் மக்களின் நரக வாழ்க்கை
புதூர் மூன்றாவது வார்டில் குண்டும், குழியுமான ரோடு, குவிந்து கிடக்கும் குப்பை, தேங்கி நிற்கும் கழிவுநீர் போன்றவற்றால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டது புதூர் மூன்றாவது வார்டு. இங்கு லூர்துநகர், மாதாக்கோவில் தெரு, பாரதியார் ரோடு, காந்திபுரம், ராமலட்சுமி நகர் என 15 பெரிய தெருக்களும், 26 சிறிய ...
தமிழகம்
திருமங்கலத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருமங்கலம்: ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வலியுறுத்தியும், அதற்காக போராடிய வக்கீல்களை கைது செய்ததை கண்டித்தும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., மாணவர் அணி மற்றும் வக்கீல் பிரிவு சார்பில் திருமங்கலம் தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மாணவர் அணி செயலாளர் ஆர்.பி., உதயக்குமார் தலைமை வகித்தார். மா...
தமிழகம்
மேலூரில் சுகாதாரமற்ற உணவு
மேலூர்: சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அழித்து, காலாவதியான பொருட் களை கைப் பற்றிய சுகாதார துறை அதிகாரிகள் தற்போது கண்டு கொள்ளாததால் மீண்டும் மேலூர் பகுதியில் அப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. மேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலாவதி பொருட்களை அழித்து ஒப்புக்கு சில நாட்கள் நடவடிக்கை எடுத்தனர். டீக்கடைகள், குளிர்பான கடைகள்...
தமிழகம்
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் தீ : விதி மீறலால் ஏற்பட்ட விபத்து
மதுரை: மதுரை ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், கடை முன் நடைபாதையை ஆக்கிரமித்து மிக்சர் தயாரிக்கும் போது தீ விபத்து ஏற்பட் டத்தில் அடுத்தடுத்து ஐந்து கடைகளுக்கு பரவியது.இங்கு அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன் அவுட் போஸ்ட் அருகே கடை எண் 96ல் ஜூஸ் கடை நடத்துபவர் முருகேசன். நேற்று மதியம் 2.20 மணிக்கு ஊழியர...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி பேச்சு: ஒரு பைசா மின் கட்டணக் குறைப்புக்கு பல விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்தனர். அதன் பலனை, நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தற்போது, இலவச மின்சாரம் இருந்தும் நமக்கு கட்டுப்படியாவதில்லை. மின்சாரத்துக்கு கட்டணம் கட்டி, விவசாயம் பார்த்தால் நிலைமை மோசமாகத் தான் போகும். தி.மு.க.,வின் ர...
தமிழகம்
பால் உற்பத்தியாளர்களுக்கு விபத்து நலநிதி
மதுரை: பால் கூட்டுறவு சங்கங்களில் கறவை செய்யும் பால் உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி நேரத்தில் ஆதரவு அளிக்க பால்வளத்துறை மூலம் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நலநிதி திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பால் உற்பத்தியாளர்கள் மாதம் ஒரு ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். இணை பங்காக பால் கூட்டுறவுச் சங்கமும், பால் உற்பத்த...
இந்தியா
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மனு
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதியிடம் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மனு அளித்தனர். கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டிற்கு முன்பாகவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட ஆவன செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் தமிழ் மொழியிலேயே வாதாடும் வகையி...
தமிழகம்
நாளை அவதி நேரம்
மதுரை: மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வரதராஜன் அறிக்கை: மதுரை தெப்பக்குளம் உப மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக...
இந்தியா
ஆந்திர நீர்ப்பாசன அமைச்சர் ஊழல்:காங்கிரஸ் மந்திரிகளே குற்றச்சாட்டு
பொதுவாக, எதிர்க்கட்சிகள் தான் ஆளுங்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவது இந்திய அரசியலில் வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்கு மாறாக, ஆந்திர காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஆளும் காங்கிரஸ் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.கடந்த 2004 முதல், ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் பி.லட்சுமையா. அடி...
தமிழகம்
கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த குடும்பம்
மதுரை: பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்தவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.மதுரை தேனூர் புதுக்காலனியை சேர்ந்தவர் மகாராஜன். கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது பண்ணையில் 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை மக்கள் குறைதீர...
இந்தியா
கோவா மந்திரி:காங்கிரசில் ஐக்கியம்
பனாஜி:கோவா மாநில கல்வித்துறை அமைச்சர் மோன்சிராத்தி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.கோவா மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் அனத்தனாசியோ பாபுஷ் மோன்சிராத்தி. இவர் கடந்த 2007ல் நடந்த தேர்தலில் காங்கிஸ் கட்சி சார்பில் போட்டியிடாமல், ஐக்கிய கோவா ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின், காங்கிரஸ் எம்.எல...
தமிழகம்
கார் மோதி ஒருவர் பலி
கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வெள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவர் நேற்று முன்தினம் கள்ளிக்குடியிலிருந்துவீட்டிற்கு கேஸ்சிலிண்டரை டூவீலரில் எடுத்துச் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) பின்னால் அவரது நண்பர் ராஜாராம் அமர்ந்திருந்தார். போலீஸ் ஸ்டேஷன் அருகில் செல்லும் போது மதுரையில...
தமிழகம்
லாரி மோதி பெண் பலி
மேலூர்: மேலூர் தெற்குபட்டியை சேர்ந்தவர் கருப்பையா மனைவி ராஜாமணி (50). நேற்று முன்தினம் இரவு 8 மணிஅளவில் தனது வீட்டில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்தார். எதிர்புறமுள்ள வயலுக்கு சென்று சாண குப்பையை கொட்டி விட்டு திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து மதுரையை நோக்கி சென்ற சரக்கு ஏற்றிய லாரி இவர் மீது மோதி, நிற்காமல் ச...
தமிழகம்
பாலங்களில் வரைந்த ஓவியங்களை பாழ்படுத்தும் போஸ்டர்கள்
மதுரை: மதுரையின் கலாச்சாரம், பண்பாடு, திருவிழாக்களை உணர்த்தும் வகையில், பாலங்களில் வரையப்படும் ஓவியங்கள் மீது பல்வேறு தரப்பினர் போஸ்டர் ஒட்டி பாழ்படுத்துகின்றனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கும் பாலங்களில், சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உட்பட மதுரையின் சிறப்புகளை ஓவியமாக வர...
தமிழகம்
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதிகளில் நிலத்தடி நீர் பாழ்
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதிகளில், ஓராண்டாக ஆழ்குழாய்களில் இருந்து நுரை நுரையாக, துர்நாற்றத்துடன் நீர் வெளியேறுவதால், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் நோய்களுக்கு ஆளாகின்றனர். சமைக்கும் உணவுகள் கெட்டு போய்விடுகின்றன. இதனால் குடிநீரையே எல்லாவற்றிக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.நேரு நகர் மருதுபாண்டியர்...
General
பீர் தேசிய பானமாக அறிவிக்கப்படவேண்டும்
லண்டன்:பிரிட்டன் மக்களில் 68 சதவீதம் பேர், பீரை தேசிய பானமாக அறிவிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.நம் நாட்டை பொறுத்தவரை பீர் இன்னும் மதுபானமாகத் தான் கருதப்படுகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் இது குளிர்பானமாகத் தான் கருதப்படுகிறது. குறிப்பாக, பிரிட்டனில் இந்த பானத்தை யாரும் மதுபானமாகக் கருதுவதில்லை. சமீபத்தில் பிரிட்டனின்...
தமிழகம்
சீனாவில் சுரங்க வெடிவிபத்து:46 பேர் பலி
பீஜிங்:சீனாவில் ஒரு சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் சிக்கி, 46 பேர் உயிரிழந்தனர். 26 பேர் தப்பி பிழைத்துள்ளனர்.சீனாவின், ஹெனான் மாகாணத்தில் பிங்டிங்ஷான் நகரத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் அடங்கிய பை ஒன்று திடீரென வெடித்தது.இதில் சுரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 72 ...
தமிழகம்
கல்லூரி மாணவர்கள் பாலக்காட்டில் ஊர்வலம்
பாலக்காடு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாலக்காட்டில் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை(23ம் தேதி) முதல் 27 ம்தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டையொட்டி கோவை ஏ.ஜெ.கே., கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்காட்டில் நேற்று நடைபெற்ற...
தமிழகம்
கோடீஸ்வரர் பயணித்த விமானம் திடீர் மாயம்
மெல்போர்ன்:ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் கென் டால்போட் உள்ளிட்ட 11 பேர் பயணித்த விமானம் ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டு எல்லை அருகே மாயமானது.கோடீஸ்வரர் கென் டால்போட் உள்ளிட்ட ஆறு ஆஸ்திரேலியர்கள், இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள், இரண்டு பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு அமெரிக்கர் உள்ளிட்டோர் இரும்புத் தாது குறித்த ஒப்பந்தம் மேற்கொள்வற்காக ஆ...
General
இந்தியர் தங்கக்கடைகளில் கொள்ளை:பிரிட்டனில் அட்டகாசம் கண்டு பீதி
லண்டன்:தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், பிரிட்டனில், இந்தியர்கள் நடத்தும் நகைக் கடைகள் தான் கொள்ளையர்களின் முக்கிய இலக்காக உள்ளன. கொள்ளையர்கள் அடுத்து எந்தக் கடையில் கை வைப்பார்களோ என்று பிரிட்டன் இந்தியர்கள் பீதியில் உள்ளனர்.பிரிட்டன் மத்தியப் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லீசெஸ்டர் நக...
தமிழகம்
ஐக்கிய அரபு இந்தியர்கள் நலன் காக்க நிதி திரட்டல்
துபாய்:ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக, இரு அமைப்புகள் நிதி திரட்டியுள்ளன. இந்நிதியின் பெரும்பகுதி இந்தியர்களின் நலனுக்காகவும், எவ்வித தவறும் புரியாமல், சிறையில் வாடும் இந்தியர்களை மீட்பதற்காகவும் பயன்படுத்தப்படும்."இந்திய பிசினஸ் மற்றும் புரொபஷனல் கவுன்சில், ஷார்ஜா' மற்றும் "இந்திய கோல்பெர்ஸ் சொசை...
தமிழகம்
வரதமாநதி அணையில் 25 மி.மீ., மழை
பழநி: கொடைக்கானல் மலையில் பெய்துவரும் மழையால் அணைகளின் நீர்மட் டம் உயர்கிறது.பாலாறு-பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு 35 கன அடி நீர்வரத்தும், 15 கன அடி நீர்வரத்தும் உள்ளது. அணையின் நேற் றைய நீர்மட்டம் 35 அடி(மொத்த உயரம் 65 அடி).* குதிரையாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 46 அடி(மொத்த உயரம் 80 அடி). 6 மி.மீ., மழை பதிவானது.* வர...
தமிழகம்
டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு: வரும் 30ல் விசாரணை
திண்டுக்கல்: டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள் ளது.திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடந்தாண்டு ஏப்ரல் 30ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திகேயன், இவரது காதலி மஞ்சுபார்கவி, முகிலன், துரைப் பாண்டி, உமர் முத்தார், சபீர், விவேக், ராஜ்குமார், சங்கர் ஆகியோர் மீது குற்...
தமிழகம்
பா.ம.க., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி பா.ம.க., சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாநில மகளிரணி துணை பொதுச் செயலாளர் பார்வதிராசா தலைமை வகித்தார். நகர பொருளாளர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கோ பால், பொருளாளர் ...
தமிழகம்
அத்துமீறிச் செல்லும் பயணிகள் கண்டுகொள்ளாத வனத்துறை
கொடைக்கானல்: வனப்பகுதிக்குள் உள்ள தடுப்பு சுவரையும் தாண்டி, மக்கள் ஆபத்தை உணராமல் நுழைவது தொடர் கதையாக உள்ளது.கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்களில் மோயர்பாய்ண்டும் ஒன்று. இதன் அருகே 3 ஆயிரம் அடி ஆபத்தான பள்ளத்தாக்கு உள்ளதால், கடந்த ஆண்டு வனத்துறை சார்பில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. கட்டி முடித்த சில மாதங்களிலேயே...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கழிவு நீர் தேக்கம்: பயணிகள் அவதி
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒடும் கால்வாயில், மேற்குப் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும் செல்கிறது. கால்வாயில் கொட்டப்படும் பாட்டில், குப்பை, மற்றும் பிளாஸ்டிக் பொரு ட்களால் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது...
தமிழகம்
கூடுதல் பஸ் வசதி தேவை
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகேயுள்ள வி. குரும்பபட்டி கிராமத்திற்கு இருமுறை மட்டுமே பஸ் வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.குரும்பபட்டி, மீனான் கன்னிப்பட்டி, சாமியார் மூப்பனூர், கன்னிமார் கோவில்பட்டி ஆகிய கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். காலை 6, இரவு 9.30 மணி ஆகிய இரு முறை மட்டுமே ப...
தமிழகம்
பழநியில் அதிகரிக்கும் தோல்நோய் மேல்நிலை தொட்டி பராமரிப்பு அவசியம்
பழநி: பழநி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தோல் நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பழநி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் குறைந்தது 30க்கும் அதிகமான நோயாளிகள் தோல் நோய் சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக கை, கால்களில் அரிப்பிற்காக இவர் கள் வருகின்றனர். பயன்படுத்தும் தண்ணீர் காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக...
தமிழகம்
மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகேயுள்ள பாளையத்தில், தமிழ்நாடு ஊராளி கவுண் டர்கள் சங்க மாநில செயற் குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட் டங்களில் உள்ள , ஊராளி கவுண்டர் இன மக்கள் மிகவும்...
தமிழகம்
தி.மு.க.,தெருனைபிரசாரம்
பழநி: பழநியில் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, செம்மொழி மாநாடு விளக்க தெரு முனை பிரசாரம் நடந்தது. பழநி ஒன்றிய செய லாளர் க.மாரியப்பன் தலைமை வகித்தார். இø ளஞர் அணி துணை அமை ப்பாளர் செந்தில்குமார், தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், ஒன்றிய துணை தலைவர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் ஹக்கீம், ஒன்றிய அவை த்தலைவர் நல்லதம...
தமிழகம்
சேதமான கட்டடத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி
வத்தலக்குண்டு: அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடம் பழுதடைந்து உள்ளது.ஆத்தூர் ஒன்றியம் அய்யம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாரச் சந்தை வளாகத்தில் அமைந் துள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளி கட்டடம் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் அச்ச உணர் வோடு நாள் தோறும் வந்து செல்கின்றனர்....
தமிழகம்
மல்லணம்பட்டியில் செயல்படாத பெண்கள் சுகாதார வளாகம்
வத்தலக்குண்டு: மல்லணம்பட்டியில் பெண்கள் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், மல்லணம்பட்டி ஊராட்சியில் மல்லணம்பட்டி, அழகாபுரி பகுதி மக்களுக்காக 2002ல் பெண்கள் சுகாதார வளாகம் அமைக்கப் பட்டது. ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வளாகத்தை துவங்கியது முதல் பயன்பாட்டிற்கு அனுமதிக்கவில்...
தமிழகம்
கொத்தப்புள்ளி ஊராட்சியில் குடிநீர் திட்டத்தில் பாதிப்பு
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி ஊராட் சிக்கு நிதி வராததால் பணிகள் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.கொத்தப்புள்ளி தாதங்கோட்டையில் 150 குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு குடிநீர் குழாய் மாற்றும் பணி துவங்கியது. இந்த பணி நிறைவடையாமல் உள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளு...
தமிழகம்
அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் போராட்டம் பள்ளி நேரத்தில் கூடுதல் சர்வீஸ் தேவை
வடமதுரை: வடமதுரை பகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் இருப்பதால் பள்ளி சென்று வர மாணவர்கள் நாள்தோறும் பஸ்களில் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.தற்போது பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ...
தமிழகம்
மாவட்டத்தில் 23 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் காலியாக உள்ள 23 உள்ளாட்சி இடங்களுக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது.திண்டுக்கல் மாவட் டத் தில் காலியாக உள்ள தாடிக் கொம்பு(13வது வார்டு), வடமதுரை(3வது வார்டு), ஆயக்குடி(15வது வார்டு) பேரூராட்சிகளின் கவுன்சிலர்கள், ஆத்தூர் (1வது வார்டு), தொப்பம் பட்டி (12வது வார்டு) ஊராட்சி ஒன்றிய கவுன...
தமிழகம்
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரி திண்டுக்கல் கோர்ட் முன்பு அ.தி.மு.க., வக்கீல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அ.தி.மு.க., வக்கீல் அணி பிரிவு தலைவர் வி. எஸ்.சேதுராமன், மாவட்ட செயலாளர் விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் ராமுத்தேவர், மாவ ட்ட வக்கீல் அணி செயலாளர் ஜெயபாலன்...
தமிழகம்
எம்.எல்.ஏ.,க்களுக்கு திருப்பூரில் மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள்
திருப்பூர்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வசதியாக, திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள் தயார் நிலையில் உள்ளன.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. வரும் 27ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இ...
தமிழகம்
பயன்படுத்த முடியாத நிலையில் கம்பம் பஸ் ஸ்டாண்ட் ரோடு
கம்பம்: கம்பம் பஸ்ஸ்டாண்ட் ரோடு பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால், பயணிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். கம்பம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, தேனிக்கு செல்லும் பஸ்கள் ஆடு அடிக்கும் தொட்டி வழியாக சென்று, காளியம்மன் கோயில் தெரு சென்று மெயின்ரோட்டில் செல்லவேண்டும். வெளியில் இருந்து வரும் பஸ...
General
ஐக்கிய அரபு இந்தியர்கள் நலன் காக்க நிதி திரட்டல்
துபாய் : ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக, இரு அமைப்புகள் நிதி திரட்டியுள்ளன. இந்நிதியின் பெரும்பகுதி இந்தியர்களின் நலனுக்காகவும், எவ்வித தவறும் புரியாமல், சிறையில் வாடும் இந்தியர்களை மீட்பதற்காகவும் பயன்படுத்தப்படும். "இந்திய பிசினஸ் மற்றும் புரொபஷனல் கவுன்சில், ஷார்ஜா' மற்றும் "இந்திய கோல்பெர்ஸ் ச...
தமிழகம்
மாணவர் சேர்க்கை ஊர்வலம்
பெரியகுளம்: பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியின் சார்பாக மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந் தது.கிராமகல்விக்குழு தலைவர் ராஜாமுகமது ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆசிரியர் முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் இந்திராபிரியதர்ஷிணி, சகுந்தலா, முத்துலட்சுமி, செந்தில்க...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
தேனி: ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், விபத்து ஏற்பட்டால் டிரைவரின் லைசென்ஸை பறிப்பதை கண்டித்தும், போக்குவரத்து நிர்வாகம் டிரைவர்களுக்கு தண் டனை அளிப் பதை கண்டித்தும் தேனி பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.டி.யு.சி., மத்திய சங்க தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மத்திய சங்க துணை பொது செயலாளர் ...
தமிழகம்
முன்னாள் ராணுவத்தினர் கவனத்திற்கு
தேனி: முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் காளியப்பன் கூறியதாவது; இந்திய ராணுவம் முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் ராணுவத்தினர் குடும்ப ஓய்வூதியத்தை அவர்கள் மனைவி பெயருக்கு "எண்டாஸ்' செய்ய வேண்டும். அப்போது தான் அவரது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெறமுடியும்.எனவே "எண்டாஸ்' செய்யாமல் இருந்தாலோ, ராணுவத்த...
தமிழகம்
போக்குவரத்து போலீஸ் பிரிவு துவக்க வலியுறுத்தல்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் போக்குவரத்து போலீஸ் பிரிவு துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்தை ஒழுங்கு படுத் தவோ, ரோடுகளை விரிவாக்கம் செய்யவோ நடவடிக்கை இல்லை. இதனால் அன்றாடம் பொதுமக்கள் போக்குவ...
தமிழகம்
வருஷநாடு ஊராட்சிவளர்ச்சி பணிகள்
வருஷநாடு: க.மயிலை ஒன்றியம், வருஷநாடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைத் தல், சிமென்ட் சாலை, சாக்கடை கட்டுதல்,சுடுகாட்டு கொட்டகை கட்டுதல், புதிய நூலகம், குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக 20 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக ஊராட்சித்தலைவர் செல்லமணி தெரிவித்தார...
தமிழகம்
கொடுவிலார்பட்டியில் தொடரும் குடிநீர் பிரச்னை
தேனி: கொடுவிலார்பட்டியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வில் லாமல் தொடர்வதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர். தேனி அருகே கொடுவிலார்பட்டியில் 4017 பேர் வசித்துவந்தனர். இக்கிராமத்தை சுற்றி கல்லூரிகள் வந்த பின்னர், இங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது மக்கள் தொகை 6500 ஐ தாண்டியுள்ளது. ஆனால் கிடைக் ...
தமிழகம்
கீழ ஓடை பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கீழ ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் வெள்ள நீர் ஆண்டிபட்டி வாரச்சந்தை பகுதி, ரயில்வே ரோடு பகுதி வழியாக வந்து கீழ ஓடை வழியாக ஆண்டிபட்டி பகுதியை கடந்து செல்லும். கீழ ஓடை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் மழைக்காலங்களில் அதி...
தமிழகம்
மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் முடக்கம் : அலுவலர்கள் பற்றாக்குறையால் பால் உற்பத்தி இழப்பு
தேனி: மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கவனிக்கும் விரிவாக்க அலுவலர்கள் பற்றாக்குறையால் 300க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு, தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. ஐந்தாயிரத்...
தமிழகம்
நாகை - தூத்துக்குடியை இணைக்கும் எஸ்.எச் - 200 சாலை 2011 ஜனவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது
நாகையில் இருந்து தூத்துக்குடியை இணைக்கும் கிழக்கு கடற்கரையோர புதிய எஸ்.எச்-200 சாலை பணிகள், மந்தமாக நடந்து ஒரு வழியாக முடியும் தறுவாயில், மாவோயிஸ்ட் பிரச்னைகளால் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னை முதல் தூத்துக்குடி வரை உலக வங்கி நிதியுதவில், 2,118.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2003ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சால...
தமிழகம்
கார்களை திருடி டிராவல்ஸ் நடத்திய நால்வர் கைது : ரூ.25 லட்சம் மதிப்பில் கார்கள், பைக்குகள் பறிமுதல்
பரங்கிமலை : கார்களை திருடி நம்பர் பிளேட்டுகளை மாற்றி, டிராவல்ஸ் நடத்திய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கார்கள், ஒரு மினி வேன், 19 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, சங்கர் நகர் பகுதியில் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் தொடர்ந்து...
தமிழகம்
ஊர்வலம்
சாத்தூர்: கோபாலபுரம் ஊராட்சிஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை வலியுறுத்திவிழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குருநாதன் துவக்கி வைத்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சத்தியராஜ் பேசினார். தலைமைஆசிரியர் லட்சுமணன் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.
தமிழகம்
வனப்பகுதியில் வெளி நபர்கள் நடமாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., வனப்பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையில் உண்ணி மலைக்காடு வழியாக அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இவ்வழியாக செல்லும் பாதையில் இரவு நேரத்தில் செண்பக தோப்பு பகுதியிலேயே பார்த்திராத சிலர் சென்று வருவதாக அப்பகுதியில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தெ...
தமிழகம்
வத்திராயிருப்பு போஸ்ட் ஆபீஸில் மின்தடையால் பணிகள் முடக்கம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தபால் அலுவலகம் மின்தடை நேரங்களில் செயல்பட முடியாமல் முடங்கிப் போவதால் அலுவலகப்பணிகளை உரிய நேரங்களில் செய்ய முடிவதில்லை. மின்தடை நேரம் முடிந்து சப்ளை கிடைத்தவுடன் வருமாறு வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதால் அவதிக்கு ஆளாகின்றனர்.வத்திராயிருப்பு தபால் அலுவலகத்திற்கு பல ஆண்டுகளுக்கு ...
தமிழகம்
நலத்திட்டஉதவி வழங்கல்
ராஜபாளையம்: மாதா அமிர்தானந்தமயி மடம், ராஜபாளையம் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் விருதுநகர் எச்.ஐ.வி., பாசிட்டிவ் பெண்கள் கூட்டமைப்பு மையத்தில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டமைப்பு மைய நிறுவனர் லட்சுமி தலைமை வகித்தார். சுவாமி ஞானமிர்தானந்தபுரி பேசினார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் வி...
தமிழகம்
பிளஸ் 2 ஹால் டிக்கெட் வினியோகம்
விருதுநகர்: பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு ஜூன் 29 ல் துவங்கி ஜூலை 9ம் தேதி வரை நடக்கவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் (ஜூன் 22 ) பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து அந்தந்த பள்ளிகளில் தேர்வுகள் முடியும் வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும்.
தமிழகம்
யானை புகுந்து மாந்தோப்பு சேதம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,செண்பக தோப்பில் மாந் தோப்பில் யானை புகுந்து சேதத்தை விளைவித்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் யானை, மான், காட்டு பன்றிகள் , காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இதனால் செண்பகதோப்பு, பிள்ளையார்நத்தம் பகுதியில் அடிக்கடி வனப்பகுதியிலிருந்து விலங்குகள் வெளியேறி மாந்தோப்புகள், கரும்பு தோட்டங்களி...
தமிழகம்
நவநீத பாலகிருஷ்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்
வெம்பக்கோட்டை: சிவகாசி அருகே பேராபட்டியில் இந்து கம்மவார் சங்கத்திற்கு பாத்தியப் பட்ட நவநீதபாலகிருஷ்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் வானமாமலை ஸ்ரீமத் கலியன் ராமானுஜ ஜீயர்தலைமையில் நடந்தது. மூன்று நாட்களாக ஆச்சார்ய அழைப்பு,மகா சங்கல்பம், பகவத் பிராத்தனை, அக்னி பிரதிஷ்டை, வாஸ்து சாந்தி, திருவாரதனம், மகா ச...
தமிழகம்
ஆனிப்பிரமோற்சவ திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்
சிவகாசி; திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனிப்பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஆனிப்பிரமோற்சவ திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. அப்பன் சின்ன வாகனத்திலும், கருட வாகனத்திலும், சிறிய திருவடி, யானை வாகனம், புஷ்ப பல்லக்கிலும் தயார் தோளுக்கினியான் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்...
தமிழகம்
காதலி இறந்த துக்கத்தில் காதலன் கிணற்றில் குதித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் காதலி இறந்த துக்கத்தில் காதலனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஓட்டமடத்தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகள் கடற்கரையம்மாள்(19). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் கிளினிக்கில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராமர் (27). இவர் முடி பின்ன...
தமிழகம்
டிக்கெட் பரிசோதகர், போக்குவரத்து ஏட்டு தாக்கியதாக பரஸ்பரம் போலீசில் புகார்
சென்னை : டிக்கெட் பரிசோதகர் கன்னத்தில் அறைந்ததாக போலீஸ்காரரை, போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியதுடன் போலீசிலும் புகார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தன்னை போக்குவரத்து ஊழியர்கள் தாக்கியதாக போலீசும் புகார் தெரிவித்ததால் மூலக்கொத்தளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர்கள...
தமிழகம்
உணவுக்கூடம், ஊடக அரங்கை திறந்தார் துணை முதல்வர்
கோவை: செம்மொழி மாநாட்டுக்கான உணவுக் கூடம் மற்றும் ஊடக அரங்கை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் நாளை கோலாகலமாக துவங்கவுள்ளது. நாளை முதல் 27ம் தேதி வரையிலும் நடக்கும் இந்த மாநாட்டிற்கு வரும் மக்களுக்காக மூன்று இடங்களில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வரங்கம் நடக்கு...
தமிழகம்
கவின் கலைக்கல்லூரி முதுகலை மாணவர் தற்கொலை 60 அடி உயர மரத்தில் ஏறியது எப்படி? போலீஸ் விசாரணை
சென்னை : சென்னை கவின் கல்லூரி முதுகலை மாணவர் கல்லூரி வளாகத்தில் 60 அடி உயர மரத்தில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை அடுத்த விளாங்குடி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரும், இவரது மனைவியும் கேரளாவிலுள்ள ரப்பர் எஸ்டேட்டில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகன் சசிக்க...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு பணியில் 3,500 நாட்டு நலப்பணி மாணவர்
கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளில் பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 3,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பல்கலையின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோவிந்தராஜூலு கூறியதாவது:செம்மொழி மாநாட்டு பணிகளில் பாரதியார் பல்கலை மற்றும் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 3,500 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர...
தமிழகம்
மினி வேன் மோதி தாய் மகள் பலி
செங்கல்பட்டு : சாலையை கடக்க முயன்ற தாய், மகள் மினி வேன் மோதி இறந்தனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வசித்தவர் சுதா(30). இவர் இரண்டு மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்து மகள் மல்லிகா(7) உடன் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் குடியேறினார். நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு, சிங்கபெருமாள் க...
தமிழகம்
நில வரைபடம் வழங்க லஞ்சம் நகராட்சி சர்வேயர் கைது
தர்மபுரி : நில வரைபடம் வழங்க, 600 ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையைச் சேர்ந்தவர் பூபாலன்(45). இவரது தந்தைக்கு சொந்தமான நிலம், அன்னசாகரம் பகுதியில் உள்ளது. இந்நிலத்தை அவரது பெரியப்பா, தனக்கு சொந்தம் எனக் கூறி வந்தார். இதனால்,...
தமிழகம்
செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 5 பேர் கைது
திருச்சி : செம்மொழி மாநாட்டை கண்டித்து, திருச்சி மற்றும் தஞ்சையில், தமிழக அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். நாளை முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து, பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் கண்டன அறிக்கையும் தொடர...
General
இந்தியர் தங்கக்கடைகளில் கொள்ளை :பிரிட்டனில் அட்டகாசம் கண்டு பீதி
லண்டன் : தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், பிரிட்டனில், இந்தியர்கள் நடத்தும் நகைக் கடைகள் தான் கொள்ளையர்களின் முக்கிய இலக்காக உள்ளன. கொள்ளையர்கள் அடுத்து எந்தக் கடையில் கை வைப்பார்களோ என்று பிரிட்டன் இந்தியர்கள் பீதியில் உள்ளனர்.பிரிட்டன் மத்தியப் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லீசெஸ்டர் ...
தமிழகம்
புள்ளி விவரத்தில் குளறுபடி புத்தகம் இன்றி மாணவர் தவிப்பு
காளையார் கோவில் : கல்வித்துறை அதிகாரிகளின் தவறான புள்ளி விவரத்தால், பாடப்புத்தகம் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிக்கின்றனர். அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் கையில் புத்தகம் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியதால், பள்ளிகளுக்கு தபால் அலுவலகம் மூலம் ப...
தமிழகம்
கூட்டுறவு வங்கியில் கொள்ளை
திருச்சி : அந்தநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு, 944 கிராம் மற்றும் 3,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. திருச்சி - கரூர் மெயின்ரோட்டில் உள்ள அந்தநல்லூரில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. நேற்று காலை 9.30 மணிக்கு, செயலர் மற்றும் கிளார்க், வங்...
இந்தியா
போலி ஆவணம் தயாரித்தவர் கைது: டாக்டருக்கு வலை : குழந்தைகள் கடத்தல் வழக்கில் திருப்பம்
புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில், போலி ஆவணம் தயாரிக்க லலிதாவுக்கு உதவிய தனியார் மருத்துவமனை மேனேஜரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தல் தொடர்பாக புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மனித உரிமை கழக மகளிரணி தலைவி லலிதா, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். ...
தமிழகம்
மரக்கன்று வழங்கல்
கல்லல்: காங்., பொது செயலாளர் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு, கல்லல் ஒன்றியம் செம்பனூரில், இளைஞர் காங்., சார்பில் இலவச மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. சுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். இளைஞர் காங்., தலைவர் புவியரசு, துணை தலைவர் ஜோசப் தன்ராஜ், வட்டார தலைவர்கள் ராஜமாணிக்கம், ஊராட்சி தலைவர் அழகப்பன் பங்கேற்றனர்.
தமிழகம்
தி.மு.க., பொதுக்கூட்டம்
காளையார்கோவில்: தி.மு.க., சார்பில், முதல்வர் பிறந்த தினம், உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு அழைப்பு கூட்டம் காளையார்கோவில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சத்தியநாதன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் போஸ் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன், மதியரசன் எம்.எல்.ஏ., மாவட்ட பிரதிநிதி மார்த்தாண்டன், இணை செயலாளர் அருள் சாமி பங்கேற்றனர். ம...
தமிழகம்
மருத்துவமனை வாரிய கூட்டம்
காரைக்குடி: தமிழக மருத்துவமனைகள் வாரிய கூட்டம் காரைக்குடியில் நடந்தது. சென்னை மயக்க மருந்து நிபுணர் ராகவேலு தலைமை வகித்தார். தனியார் மருத்துவப்பிரிவு செயலாளர் சுரேந்திரன் வரவேற்றார். பார்லிமென்டில் நிறைவேற்றப் பட்ட மருத்துவம் சார்ந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. பேராசிரியர் வரதராஜன், இந்...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
காரைக்குடி,: லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு காரைக்குடியில் நடந்தது.தலைவராக வள்ளியப் பன், செயலளராக அண்ணாமலை, பொரு ளாளராக அழகுசுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் மாவட்ட ஆளுனர் நாகராஜன், அறிமுகம் செய்து வைத்தார். சங்கம் சார்பில், அழகப்பா அரசு கல்லூரி, மீனாட்சி பெண் கள் மேல்நிலைப் பள் ளிக்கு, தானியங்கி "சானிட் ட...
தமிழகம்
கால்பந்து நடுவர் சங்க நிர்வாகிகள்
காரைக்குடி: மாவட்ட கால்பந்து நடுவர் சங்க பொதுக்குழு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. தலைவராக சீனிவாசன், துணை தலைவராக முனியாண்டி, செயலாளராக குப்புச்சாமி, பொருளாளராக செல்வராஜ், செயற் குழு உறுப்பினர்களாக சாம் கிருஸ்துதாஸ், ஆறுமுகம், பழனியப்பன் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
தமிழகம்
ரோட்டரி சங்கத்திற்கு விருது
காரைக்குடி,: காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத் திற்கு விருது வழங்கப் பட்டுள் ளது. மாவட்ட ஆளுனர் சண்முகம் தலைமையில், தூத்துக்குடியில் விழா நடந்தது. தலைவராக தேனப்பன், செயலாளராக மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏழு விருதுகளை பெற்று, இது சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்பட்டது.
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்தல் அதிகாரி எச்சரிக்கை
காரைக்குடி: வழங்கல் பிரிவு தாசில்தார் முருகேசன் கூறியதாவது: காரைக்குடி, பள் ளத்தூர், புதுவயல், கானாடுகாத்தான் ரேஷன் கடைகளில் இருந்து, அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக புகார் வந்துள்ளது. அவ்வப் போது இப்பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படுகிறது. சிலர் டூ வீலர், ஆட்டோ, மினி லாரி மூலம் குறைந்தளவு அரிசி மூடைகளை கடத்தி செல் வதாக த...
தமிழகம்
தி.மு.க., பொதுக்கூட்டம்
காளையார்கோவில்: தி.மு.க., சார்பில், முதல்வர் பிறந்த தினம், உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு அழைப்பு கூட்டம் காளையார்கோவிலில் நடந்தது.ஒன்றிய செயலாளர் சத்தியநாதன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் போஸ் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன், மதியரசன் எம்.எல்.ஏ., மாவட்ட பிரதிநிதி மார்த்தாண்டன், இணை செயலாளர் அருள்சாமி பங்கேற்றனர்.மு...
தமிழகம்
ஏமாற்றியது மாம்பழ விளைச்சல் விலையும் வீழ்ச்சி
சிவகங்கை: மாம்பழம் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், எதிர்பார்த்த விற்பனையும் இல்லை. இதனால், விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் சிங்கம்புணரி, சிவகங்கை, காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, வாணியங்குடி, கல்லல் முத்துப்பட்டி, தேவகோட்டை அரசு பண்ணை பகுதிகளில், ஆயிரம் ஏக்கரில் மா மரங்கள் உள்ளன. இங்கு அல்ப...
தமிழகம்
800 எக்டேரில் தேக்கு மரக்கன்றுகள் வனத்துறை திட்டம்
திருப்புத்தூர்: மாவட்டத்தில் நடப்பாண்டில் 800 எக்டேரில், தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறை கோட்ட அலுவலர் மாரிமுத்து கூறியதாவது: நடப்பாண்டு மாவட்டத் தில், 800 எக்டேர் பரப்பளவில் தேக்கு மரத் தோட்டங்களை உருவாக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆயிரத்து 76 தேக்கு மரக்கன்றுகளும், தோப்புகளை உரவ...
தமிழகம்
மரத்தடியில் வகுப்பறை: அவதிக்கு விடிவு எப்போது
காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியம் கருமந்தக்குடி தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதியின்றி, மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இங்குள்ள பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. குறுகிய கட்டட வளாகத்தில் பள்ளிகள் செயல்படுவதால், மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகி...
தமிழகம்
திருச்செந்தூரில் இன்று வருஷாபிஷேகம்
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று வருஷாபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்ததை ஒட்டி, இன்று வருஷாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப் பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, மற்ற காலங்கள் தொடர் கின்றன. கும்ப கலச பூஜையைத் தொடர்ந்து, காலை 8.30 முதல் 9 மணிக்குள், மூலவர் ...
தமிழகம்
22 ஆயிரம் சதுரடி; 2200 மாணவர்கள் பிரமாண்ட திருவள்ளுவர் உருவம்
சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 22 ஆயிரம் சதுரடியில் 2,200 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, திருவள்ளுவரின் பிரமாண்டமான தோற்றத்தை உருவாக்கினர். சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேசன் பள்ளியில், நடந்த இந்த சாதனையில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி மைதானத்தில் திருவள்ளுவரின்...
தமிழகம்
எதிர்ப்பை மீறி 21 தீவுகளின் எல்கையில் ஒளிரும் மிதவைகளை அமைக்க முடிவு
ராமநாதபுரம் : மீனவர்களின் எதிர்ப்பை மீறி, மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளிலும் ஒளிரும் மிதவைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், இது குறித்த விழிப்புணர்வை மீனவர்களுக்கு தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை உயிரினங்களையும், கடல் வளத்தையும் கணக்கில் கொண்டு, இப்பகுதி கடந்த 1986ல் தேசிய பூங...
தமிழகம்
செம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு
சென்னை: நாளை கோவையில் துவங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கற்கும் விதமாக 2 நாள் முன்னதாக நேற்று கோவை புறப்பட்டு வந்தார் முதல்வர் கருணாநிதி. இவருக்கு தாரை, தப்பட்டை முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தங்கும் ரெசிடன்சி ஓட்டலுக்கு சென்ற போது வீதியின் இரு வழிகளிலும், தமிழ் ஆர்வலர்க...
தமிழகம்
பஸ்ஸ்டாண்டில் கிடந்த 15 பவுன் தங்க நகைகள்
தேனி : தேனி பஸ்ஸ்டாண்டில் கிடந்த 15 பவுன் தங்க நகைகளை அரசு போக்குவரத்து கழக டைம்கீப்பர் ஆனந்தன் போலீசாரிடம் ஒப்படைத்தார். நேற்று காலை 8 மணிக்கு அரசு போக்குவரத்துகழக டைம் கீப்பர் ஆனந்தன் தேனி பஸ்ஸ்டாண்டில் பயணிகளை பஸ்சில் ஏற்றி விடும் பணியில் ஈடுபட்டிருந்தார். திருப்பூர் பஸ் கிளம்பியதும் அந்த இடத்தில் சில தங்க நகைகள் அற...