category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தற்கொலைக்கு முயன்றவர் மீது வழக்கு | மதுரை: மதுரை தேனூரைச் சேர்ந்தவர் மகாராஜன். தன்னிடம் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, நேற்று முன் தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர், திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர் மீது தல்லாகுளம் போலீசார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர். |
தமிழகம் | செம்மொழி மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம் | மேலூர்: மேலூரில் உள்ள மெட்ரிக் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட உலக தமிழ் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தாலுகா அலுவலகம் முன் துவங்கிய இவ் ஊர்வலத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரஜனி ரத்தினமாலா தலைமை வகித்தார். தி.மு.க., நகர் செயலாளர் இப்ராஹிம் சேட் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மில்டன் மெ... |
இந்தியா | பீகார் தேர்தலில் போட்டி : மாயாவதி ஆலோசனை | லக்னோ : பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தற்போது ஜனாதிபதி... |
தமிழகம் | மேல்முறையீடு ஆய்வு முடியும் வரை ரேஷன் சப்ளை தொடருமா | மதுரை: ரேஷன் கார்டுகள் மீதான மேல்முறையீடு ஆய்வு முடியும் வரை, பழைய கார்டுகளுக்கு சப்ளை தொடர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.போலி ரேஷன் கார்டுகள் நடமாட்டம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, வீடு வீடாக சென்று ரேஷன் கார்டுகளின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் ஆராய்ந்தனர். வீட்டில் இல்லாதவர்கள், வீடு மாறியவர்களின் ... |
தமிழகம் | கரண்டியால் தாக்கியவர் கைது | மதுரை: மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லபாண்டி(26). அப்பகுதி கோயில் திருவிழாவில், குறிப்பிட்ட பாடலை ஒலிபரப்புமாறு கூறினார். இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த கலைஞர் என்பவருக்கும், செல்லபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், சமையல் செய்யும் இரும்பு கரண்டியால் தாக்கியதில் செல்லபாண்டி காயமடைந்தார். கலைஞரை திலகர்... |
தமிழகம் | மதுரை வந்த பெண் மாயம் | மதுரை: கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். திருப்பூரில் வேலை செய்கிறார். இவரது மனைவி உதயம்(28). மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில், இரு குழந்தைகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் அவரை மட்டும் காணவில்லை. தல்லாகுளம் போலீசார் தேடுகின்றனர். |
தமிழகம் | மருத்துவமனையில் போராட்ட வக்கீல்கள் | மதுரை: ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்தக்கோரி, வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மதுரை கிளையில் உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ராஜேந்திரன் என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறையில் இருந்த வக்கீல்கள் பகத்சிங், நடே... |
தமிழகம் | தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் | மேலூர்: மேலூர் தொகுதி தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் ரஹ்மா மண்டபத்தில் தொகுதி பொறுப்பாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. மேலூர் ஒன்றிய செயலாளர் சிவன்ராஜன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் கண்ணன், அ.வல்லாளபட்டி பேரூராட்சி செயலாளர் செல்வராகவன் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் தென்னரசு வரவேற்றார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்... |
தமிழகம் | அவதி நேரம் அறிவிப்பு | மதுரை: மதுரை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் வரதராஜன் அறிவிப்பு: மதுரை வலையங்குளம் உப மின் நிலையத்திற்குட்ட பகுதியில் ஜூன் 26 ல் காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:வலையங்குளம், சோளங்குருணி, சின்னஉடப்பு, குத்திரை குத்தி, குசவன்குண்டு, நல்லூர், மண்டேலாநகர், சமத்துவபுரம், வலையபட்டி, கூடல்ச... |
இந்தியா | மோடி, வருண் பிரசாரம்:நிதிஷ் கடும் எதிர்ப்பு | புதுடில்லி:பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அல்லது பிலிபிட் தொகுதி பா.ஜ., எம்.பி.,யான வருணோ, பிரசாரம் செய்யத் தேவையில்லை என, முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கட்சிகள் கூட்டணி... |
இந்தியா | பீகார் தேர்தலில் போட்டி:மாயாவதி ஆலோசனை | லக்னோ:பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தற்போது ஜனாதிபதி ஆட... |
தமிழகம் | பார்வர்டு பிளாக் கட்சி மேலிட தலைவர் மாற்றம் | சென்னை:தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் மேலிட தலைவர் பொறுப்பாளராக பணியாற்றிய பிஸ்வாஸ், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழக உட்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் கோல்கட்டாவில் கடந்த 19ம் தேதி நடந்தது. மூத்த தலைவர் அசோக் கோஸ் தலைம... |
இந்தியா | நிதிஷ்குமார் தலைமையில் கூட்டம்:பா.ஜ., மந்திரிகள் 4 பேர் பங்கேற்பு | பாட்னா:பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பீகார் உள்ளூர் பத்திரிகைகளில் நிதிஷ் ... |
இந்தியா | வெளிநாடுவாழ் இந்தியருக்கு ஓட்டுரிமை: மத்திய அரசு விரைவில் முடிவு | புதுடில்லி:வெளிநாடுவாழ் இந்தியருக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கான வரைவு மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.வெளிநாடுவாழ் இந்தியர்கள், ஓட்டுரிமை அளிக்க வலியுறுத்தி ம... |
இந்தியா | ஆந்திராவில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்:மும்முனை போட்டியால் சவால் | ஐதராபாத்:ஆந்திராவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள பத்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என, கருதப்படுகிறது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் தனித் தனியே வேட்பாளர்களை நிறுத்துவதால் மும்முனைப்போட்டி ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.
ஆந்திராவை இரண்டாக பிரித்து... |
தமிழகம் | தமிழக காங்கிரக்கு தேர்தல்: மேலிடத்தில் ஆலோசனை | தமிழக காங்கிரசுக்கு அமைப்பு ரீதியான தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே வாக்காளர் பட்டியல் தயார் நிலையில் உள்ள சூழ்நிலையில், அடுத்த மாதம் இறுதிக்குள் முழுவதுமாக தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் மூலம் தே... |
தமிழகம் | மாநில செஸ் போட்டி: நாளை வீரர் தேர்வு | திண்டுக்கல்: மாநில அளவில் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான செஸ் சாம்பியன் போட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடக்க உள்ளது. ஜூலை 7 முதல் 13 வரை இப்போட்டிகள் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்கள் தேர்வு செய்யப் பட உள்ளனர்.1995 ஜன. 1க்குப் பின்னர் பிறந்த ஆண், பெண் இத்தேர்வில் பங்... |
தமிழகம் | தூர்ந்து போன நீராதாரங்கள் இணைக்கும் திட்டம் துவக்கம் | வடமதுரை: ஊராட்சிகளில் தூர்ந்து போன நீர் ஆதாரங்களை புனரமைத்து,அவற்றை அடுத்தடுத்த நீர்நிலைகளுடன் இணைத்து நீரை சேமிக்கும் திட்ட துவக்க விழா சுக்காம்பட்டி மாமரத்துபட்டியில் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத் தில் கிடைக்கும் குறைந் தளவு மழையை கொண்டு நிலத்தடி நீரை மேம்படுத்தவும், அந்தந்த இடங்களில் அதிக கொள்ள ளவிற்கு நீரை தேக்கி வ... |
இந்தியா | அனில் - தியோரா 30 நிமிடம் பேச்சு | புதுடில்லி:பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவை நேற்று சந்தித்து பேசினார்.ரிலையன்ஸ் தொழில் நிறுவன அதிபர் அனில் அம்பானி, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. பெட்ரோலிய துறை செயலர் சுதர்சன் உடனிருந்தார்.
சந்திப்புக்கு ப... |
தமிழகம் | மரக்கன்று வழங்கல் | பழநி: பழநி வனச்சரகம் பொந்துப்புளி, புளியம் பட்டி, மண்திட்டு, குதிரையாறு அணைபகுதியில் மலைவாழ் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சிறுவன மகசூல் திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் இவர்களுக்கு மரக்கன்று கள் வழங்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | பயிற்சி முகாம் | வேடசந்தூர்: வேடசந்தூரில் சிறப்பு கல்வி திட்டம்- டயட் நிறுவனம் சார்பில்,ஆறாம் வகுப்பு ஆசிரியர்களுக் கான சமச்சீர் கல்வி பற்றிய புதிய பாடநூல் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. சிறப்பு கல்வித்திட்ட கண்காணிப்பாளர் பழனிவேல் துவக்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுநர்கள் ஜெகதீசன், மணிகண்டன் பயிற்சி அளித்தனர். டயட் நிறுவனம் சார் பில் ... |
இந்தியா | வருணுக்கு டிசம்பரில் திருமணம் | புதுடில்லி:பா.ஜ.,வின் பொதுச் செயலர் வருணுக்கு வரும் டிசம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.பா.ஜ., பொதுச் செயலரும், பிலிபிட் தொகுதி எம்.பி.,யுமான வருணுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. மணப்பெண் யாமினி ராய் சவுத்ரி, டில்லியில் வசித்துவரும் வங்காள பெண் ஆவார். திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்ல... |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | குஜிலியம்பாறை: பாளையத்தில் தே.மு. தி.க., ஆலோசனை கூட் டம், கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமை வகித் தார். பொருளாளர் கலைமணி, பேரூர் அவைத்தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித் தனர். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய அவைத்தலைவர் கந்தசாமி, துணை செயலாளர் துரை, தொகுதி பொறுப் பாளர் பெருமாள் உட்பட பலர் கலந்... |
தமிழகம் | விஷ்வ இந்துபரிஷத் கூட்டம் | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்செல்வம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் ராஜாராம், ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் வரவேற் றார். அனைத்து ஒன்றியங்களிலும், ஆக. 16 முதல் டிச. 17 வரை 300 இடங்களில் ஸ்ரீஅனுமந்த பாராயணம் நடத்துதல், அய... |
தமிழகம் | பழநி கோயிலில் 25ல் அன்னாபிஷேகம் | பழநி: உலக நலன்,அமைதி, செழுமை வேண்டி பழநி கோயில்களில் வரும் 25ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.அன்னாபிஷேகத்தையொட்டி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குபூஜை நடைபெறும். பின்னர் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ கலந்த மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு கிரீடம் சூடப் பட்டு, வில்வம் கலந்த சுத்த அன்னம் பாதத்தில் படைக்கப்படும். ப... |
இந்தியா | பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அரசு அடுத்த திட்டம் | புதுடில்லி:பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்தும், பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் மத்திய அரசுக்குள்ள கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது குறித்தும் மத்திய அமைச்சரவை குழு, வரும் 25ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெயின் விலை ... |
தமிழகம் | கிரிக்கெட்லீக் முடிவுகள் | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போட்டி முடிவுகள்: சாம்பாபு அணி, யுவராஜ் அணியை ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித் தது. சேலஞ்சர் அணி, பி. எல்., அணியை ஒன்பது ரன் கள் வித்தியாசத்தில் வென் றது. வாரியர்ஸ் அணியை, சேம்பியன் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. |
தமிழகம் | அமெரிக்கா மீது தாக்குதல் தொடரும்:கோர்ட்டில் ஷசாத் ஆவேச பேச்சு | நியூயார்க்:முஸ்லிம் மண்ணிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆகாதவரை அமெரிக்கா மேலும் பல தாக்குதல்களை சந்திக்கும் என, அமெரிக்க கோர்ட்டில் ஷசாத் ஆவேசமாக பேசினான்.அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், கடந்த மாதம் முதல் தேதி வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கார் அனாதையாக நின்று கொண்டிருந்தது. ச... |
தமிழகம் | துவக்க விழா | பழநி: பழநியில் பிரஜாபிதா குமாரிகள் ஐஸ்வர்ய வித் யாலயா சார்பில் நல்லெண் ணங்களை சேமிக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கான துவக்க விழா நடந்தது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். கிளை நிர்வாகி கவிதா வரவேற்றார்.பழநிகோயில் உதவி ஆணையர் நடராஜன், லயன்ஸ் கிளப் நிர்வாகி பெருமாள் உட்பட பலர் பங்கேற்ற... |
தமிழகம் | மனைவி புகார் கணவன் கைது | பழநி: பழநி பத்ரா தெருவை சேர்ந்த சிவகுமார் மø னவி ஜோதிலட்சுமி(35). சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக மனைவி மீது மண் ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றார் சிவகுமார். அவரிடமிருந்து தப்பிய ஜோதிலட்சுமி போலீசில் புகார் செய்தார். அடிவாரம் போலீசார் சிவகுமாரை கைது செய்தனர். |
General | அமெரிக்காவில் முக்கிய அதிகாரிபதவி இறக்கம் | வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில், பட்ஜெட் இயக்குனராகப் பணியாற்றிய பீட்டர் ஓர்ஸ்ஜாக், பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஒபாமா அமெரிக்க அதிபராக 2009 ஜனவரியில் பதவியேற்ற போது, அவரது நிர்வாக அலுவலகம் மற்றும் நிதிநிலை அறிக்கை (ஓ.எம்.பி.,)துறையின் இயக்குனராக பீட்டர் ஓர்ஸ்ஜாக் பதவியேற்றார்.ஒபாமாவிற்கு ஆலோசனை ... |
தமிழகம் | பெண்ணிடம் குடிபோதையில் தகராறு | திண்டுக்கல்: சாணார்பட்டி அருகேயுள்ள கொழிஞ்சிபட்டி யை சேர்ந்தவர் சாந்தி(30). இவரிடம் இதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(25), நித்தியானந்தம்(23), செல்வம் ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்துள்ளனர். இது குறித்து சாந்தி சாணார்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர். |
தமிழகம் | மனைவி கடத்தல் கணவனுக்கு வெட்டு | திண்டுக்கல்: நத்தம் சிறுகுடி குப்பபட்டியைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை(35). இவரது மனைவி செல்லமணி(30)யை இதே, ஊரை சேர்ந்த சின்னையா(39) கடத்தி சென்றார். இதை அண்ணாத்துரை தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த சின்னையா, அண் ணாத்துரையை அரிவாளால் தாக்கினார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | விமான விபத்தில் சுரங்க அதிபர் பலி | யாண்டே:கேமரூன் எல்லை அருகே மாயமான ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் கென் டான்போல்ட் பயணம் செய்த விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் காங்கோ காட்டுப்பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தின் இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.ஆஸ்திரேலியாவின் பிரபல சுரங்க அதிபர் கென் டான்போல்ட் மற்றும் அவரது நிறுவன அதிகாரிகள் ... |
தமிழகம் | பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் தொடர் அவதி | சின்னாளபட்டி: சின்னாளபட்டி பிரிவில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படாததால் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. சின்னாளபட்டி பிரிவில் 4 வழிச்சாலைக்கான உயர் மட்ட பாலம் உள்ளது. இதன் கிழக்கு பகுதி இணைப்பு ரோட்டில் திண்டுக்கல்-மதுரை பஸ்களும், மேற்கு பகுதி இணைப்பு ரோட்டில் மதுரை- திண்டுக்கல் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. இரு இட... |
General | ஜி20 உச்சி மாநாடு:மன்மோகன் பங்கேற்பு | டொரான்டோ:கனடா நாட்டில் நாளை மறுநாள் ஜி20 உச்சி மாநாடு துவங்குகிறது.வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 பொருளாதார உச்சி மாநாடு நாளை மறுதினம் துவங்கி மூன்று நாட்களுக்கு கனடா நாட்டின் ஒன்டாரியோ நகரில் நடக்கிறது.பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங... |
தமிழகம் | ஆந்திராவிற்கு வேலைக்குச் சென்ற 26 பேர் சம்பளம் பெற்றுத்தர கலெக்டரிடம் முறையீடு | திண்டுக்கல்: நத்தத்தைச் சேர்ந்த 26 பேர், ஜூஸ் கம்பெனி வேலைக்காக ஆந்திரா சென்றனர்.அங்கு உணவு, சம்பளம் கிடைக்காமல் கொடுமைப்படுத்தப்பட்டதால், தப்பி வந்து திண்டுக் கல் கலெக்டரிடம் முறையிட்டனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பொய் யாம்பட்டியைச் சேர்ந்த ராஜா(28) உள்ளிட்ட சிலர், ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ரங்கம்பே... |
தமிழகம் | மதுவிலக்கு போலீசாருக்கு அதிருப்தி : இதர பணி வழங்குவதால்குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் வழக்கு தேக்கம் | திண்டுக்கல்: மதுவிலக்கு போலீசாரை அனைத்து பணிக்கும் பயன்படுத்துவதால்,கடத்தல் வழக்குகளில் சம்ப ந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் அம்பாத் துரை அருகே போலி மது தொழிற்சாலையை நடத்தியவர் குளித்தலையை சேர்ந்த சுரேஷ்(30). இவரது தொழிற் சாலையில் இருந்து பல லட்சம் பெறுமானமுள்ள மது... |
தமிழகம் | காஸ்சிலிண்டர் வெடித்து இருவர் பலி | கொடைக்கானல்: காஸ் சிலிண்டர் வெடித் ததால் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த தாய், மகன் இருவரும் இறந்தனர்.கொடைக்கானல் அண் ணாநகரைச் சேர்ந்த ரவி(40), மனைவி சின்னத் தாய் (35),மகன் ராஜீவ்(20), உதவியாளர் சுதேஷ்(20) ஆகியோருடன் கடந்த 18ம்தேதி இரவு சமைத்து கொண்டிருந்தபோது,திடீரென காஸ் சிலிண்டர் வெடித்தது. விபத்தில் பலத்த காயமடைந... |
தமிழகம் | ஆதி திராவிட மாணவர்கள் விரும்பிய பள்ளியில் படிக்க ஏற்பாடு | திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்ற ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் அவர்கள் விரும்பிய பள்ளியில் படிப்பதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்,ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மார்க் பெற்ற ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் தேர்வு செய்யப்படுவர... |
தமிழகம் | சமூக சீர்திருத்தத்திற்கு தமிழ்நாடு ஒரு முன்னோடி : துவக்க விழாவில் ஜனாதிபதி புகழாரம் | கோவை: பல மாதங்களாக முன்னேற்பாடுகள் பணிகள் துவக்கி அமர்க்களமான அரங்குகளுடன் உலகமே எதிர்பார்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக துவங்கியது. 50 நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கில் குவிந்திருப்பதால் கோவைநகரமே நிரம்பி ஸ்தம்பித்து இருக்கிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் து... |
தமிழகம் | சந்திராயனின் நிலவுப் பயணமும் : நிலவில் நீர் கண்டுபிடிப்பும் | மனிதன் சிந்தனை பெற்று தான் பிறந்த மண்ணையும் தனக்கு மேலுள்ள விண்ணையும் ஆராயத் தொடங்கிய நாள் முதல் நிலவு மனித எண்ணங்களை வசீகரித்து உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், கடந்த நூற்றாண்டில் தோன்றிய விண் வெளி யுகம் வருவதற்கு முன்பு வரை நிலவினப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை.
தொலைநோக்கிக... |
தமிழகம் | ஜனாதிபதி கோவை வருகை | கோவை:ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், விமானம் மூலம் நேற்று கோவை வந்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் இன்று துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டை துவக்கி வைக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், விமானப்படை விமானம் மூலம் நேற்று இரவு 8.10 மணிக்கு இருந்து கோவை வந்தார்.ஜனாதிபதியை, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னால... |
இந்தியா | வாரன் ஆன்டர்சனை கொண்டுவர திட்டமா ? | புதுடில்லி : போபால் விஷவாயு சம்பவம் தொடர்பாக, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சரவையின் முடிவுக்காக காத்திருப்பதாக வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
போபால் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பான வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இ... |
தமிழகம் | கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக - கர்நாடக எல்லையில் பதட்டம் | தர்மபுரி:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்குஎதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நேற்றுகடை அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்ததால், ஒகேனக்கல் தமிழக - கர்நாடகா எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குபாதுகாப்பான குடிநீர் வழங்கிடஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்... |
தமிழகம் | ஒருவர் பலி | வருஷநாடு: முத்தாலம்பாறையை சேர்ந்தவர் கண்ணுச்சாமி(50). இவர், நேற்று மேய்ச் சல் நிலங்களில் மாடு மேய்த்துக்கொண்டிருந் தார். அப்போது மிரண்டு வந்த மாடு கண்ணுச்சாமியை முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இறந்தார். |
தமிழகம் | சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் | தேனி: அட்லாண்டிக் தமிழ் சங்கம், தேனி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, தேனி நலம் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து நடத்திய இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் குச்சனூரில் நடந்தது. முகாமை அப்துல் ஜப்பார் துவக்கி வைத்தார். பேராசிரியர் உஸ்மான் முன்னிலை வகித்தார். முகாமில் பங்கேற்ற 234 பேரில் 154 பேருக்கு சர்க்கரை... |
தமிழகம் | வைகை, பெரியாற்றில் நேரடியாக நீர் எடுக்க தடை | தேனி: வைகை, பெரியாற்றில் நேரடியாக தண்ணீர் எடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.வைகை, பெரியாற்றில் இருந்து நேரடியாக மோட்டார் மூலம் தண்ணீர் பம்ப் செய்து பாசனத்திற்கு பயன்படுத்தி வந்த 300 மின் மோட்டார்கள், மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டன.வாய்க்கால் பாசன வசதி கொண்ட விவசாயிகள் தவிர மற்ற விவசாயிகள் பெரியாற்றில் கிணறு தோண்டியோ, ம... |
தமிழகம் | செம்மை நெல் சாகுபடி திட்டம் விவசாயிகளிடையே அதிருப்தி | தேனி: தேனி மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி திட்டத்தை மாவட்டத்தின் எல்லா பகுதியிலும் உள்ள விவசாயிகள் பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் விளைச்சல் அதிகரிப்பதால் தேனி மாவட்டத்தில் உள்ள எல்லா விவசாயிகளும் இத்திட்டத்தின் படி நடவு செய்ய முன்வந்துள... |
தமிழகம் | வாலிபர் பலி | தேனி: ஆண்டிபட்டி அருகே மதுரை ரோட்டில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சட்டையில் போடி டெய்லரின் முகவரி இருந்ததால், இவர் போடியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வி.ஏ.ஓ., குணசேகரன் புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர... |
தமிழகம் | கோயில் விழா | பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழா ஜூலை 5 ல் துவங்குகிறது. இதற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழா அறங்காவலர் குழு தலைவர் தாமோதரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) ராஜா, மாவட்ட அய்யப்ப சேவா சங்க தலைவர் ஜோதிசாமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கடல்நாகையாசாமி, சந்திரன், பன்னீர் செல்வம், பொன்... |
தமிழகம் | பயிற்சி முகாம் | கூடலூர்: கம்பம் வட்டாரத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்களுக் கான ஒரு நாள் பயிற்சி முகாம் கூடலூரில் ஒருங் கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர் நாகபிரபா தலைமையில் நடந் தது. உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான கடமைகள், பொறுப்புகள், செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நகராட்சி... |
தமிழகம் | முதியவர்கள் தற்கொலை | தேனி: சின்னமனூர் வ.ஊ.சி., நகரை சேர்ந்தவர் பழனிவேல் (70). முதுகுவலி குணமாகாததால் விரக்தி அடைந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பெருமாள் (60). நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த இவர், விஷம் குடித்து தற் கொலை செய்து கொண் டார். ஆண்... |
தமிழகம் | பெரியாறு அணை பகுதியில் மழை இல்லை முதல் போக சாகுபடிக்கே சிக்கல் | கூடலூர்: பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் துவங்கிய தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த வாரம் பெரியாறு அணை நீர்பிடிப்பில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து வெகுவாக உயர்ந்து 115 அடிவரை எட்டியது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு அணை... |
தமிழகம் | முன்னாள் ராணுவவீரர் குடும்பத்தினர் கவனத்திற்கு | தேனி: மருத்துவம், பல் மருத் துவம் படிக்க முன் னாள் படைவீரர்களின் குடும்பத் தினை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேனி முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; போரில் வீரமரணம் அடைந்த படைவீரர்களின் குழந்தைகள், ராணுவ பணியின் போது இறந்த படைவீரர்களின் குழந்தைகள், இயலாமையின் காரணமாகவும், ... |
தமிழகம் | ரயில்பாதை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் ரயில் பாதைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப் புணர்வு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர்களுக்கான கூட்டத்தில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி., முகமதுஅன்வர்ஷா தலைமை வகித்தார். ரயில் பாதையை சேதப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடுக்க எடுக்க நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அன்னியர்கள... |
தமிழகம் | தேனியில் மின் தடை ரத்து | தேனி: தேனி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வழக்கம் போல் மின் வினியோகம் இருக்கும் என தேனி மின்பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் மதனமோகன் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | ஜூனியர் ரெட்கிராஸ் கூட்டம் | தேனி: பெரியகுளம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் துணைக்குழு கூட் டம் பி.சி.பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந் தது. முதன்மைக்கல்வி அலுவலர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார்தேவதாஸ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் சுருளிவேல் வரவேற்றார். மா... |
தமிழகம் | மண் பரிசோதனை செய்ய வலியுறுத்தல் | தேனி: தேனி பகுதி விவசாயிகள் மண், தண்ணீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து பயனடையுமாறு விவசாய உதவி இயக்குனர் கிருஷணமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது; விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண் வளத்தின் நிலை, எந்த சத்துக்கள் அதிகம் அல்லது குறைவாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு பிறகு ஏற்ற உரங்களை இட்டு உ... |
தமிழகம் | எல்.ஐ.சி., ஊழியர் வீட்டில் துளை போட்டு கொள்ளை | திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மகாராஜா நகர் அருகே உள்ள ஐ.ஓ.பி., காலனியை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் எல்.ஐ.சி.,யில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுசிலா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் வீடு காலையில் பூட்டி கிடக்கும். மேலும் இவர்களது வீடு தனியாக உள்ளது. இதனை பயன்படுத்தி ய... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு:கோவில்கள் அரசின் பிடியில் உள்ளன. கோவில் நிலங்கள் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட, ஆன்றோர்களைக் கொண்ட தனி வாரியம் அமைத்து, கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் பேச்சு: மத்திய அரசு காற்று மாசுத் தடு... |
தமிழகம் | பதனீர் உற்பத்தி குறைவால் கருப்பட்டி விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., பகுதியில் குறைவான பதனீர் உற்பத்தியிலும் கருப்பட்டி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், திருவண்ணாமலை பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. இங்கிருந்து நாள் தோறும் 50 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான பதனீர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. விவ... |
தமிழகம் | செயல்படாத கழிப்பறை | சத்திரப்பட்டி,: சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமி நகரில் 2008-2009 நிதியாண்டில் சட்டசபை மேம்பாட்டு நிதி உதவியில் மகளிருக் கான பொதுக்கழிப்பறை கட்டித் தரப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் இது திறக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பெண்கள், அப்பகுதியில் உள்ள திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்... |
தமிழகம் | பிரசார இயக்கம் | வத்திராயிருப்பு: நெல் கொள்முதல் நிலையத்தை வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தரமாக நிறுவுதல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்கத்தின் ஸ்ரீவி., தாலுகா கிளை சார்பில் வத்திராயிருப்பு பகுதியில் பிரசார இயக்கம் நடந்தது. ராமசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.சேதுநாராயணபுரத்தில் தாலுகா செயலாளர் சவுந... |
தமிழகம் | வர்த்தக சங்கம் கோரிக்கை | சாத்தூர்: சாத்தூர் வியாபாரச் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு: குற்றாலத்திற்கு சீசன் காலத்தில் சாலை விபத்துகளும், அருவியில் குளிக்கையில் தடுமாறி விழுவதால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம் உள்ளது. இருதயநோய், காக்காய் வலிப்பு, பக்க வாத நோய்களால் சுற்றுலா வரும் பயணிகள் பாதிக்கப்ப... |
தமிழகம் | காஸ் அடுப்பு வழங்கும் விழா | காரியாபட்டி: பாப்பணம் கிராமத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் சம்பத் இலவச காஸ் அடுப்பை வழங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் புரு÷ஷாத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | ராஜபாளையம்: வர்த்தக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி பா.ம.க., சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் காளிதாசன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தமிழ்ச் செல்வி வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் லட்சுமணன் பேசினார். |
தமிழகம் | பரிசளிப்பு விழா | தளவாய்புரம்: செட்டியார்பட்டியில் சுவாமி விவேகானந்தர் சேவா சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. முருகேசன் டி.எஸ்.பி., தலைமை வகித்து ஓவியப் போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சேவா சங்க பொருளாளர் தங்கமாரிமுத்து வரவேற்றார்.பேரூராட்சி தலைவர் பொன்னுத்துரைச்சி, துணைத் தலைவர் தங்... |
தமிழகம் | அரசின் சலுகை விலை சிமென்ட் கிடைக்காததால் மக்கள் அவதி | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., பகுதியில் கடந்த இருவாரமாக சலுகை விலை சிமென்ட் கிடைக் காமல் மக்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். வெளி மார்க்கெட்டில் சிமென்ட் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதை அடுத்து சிமென்ட் கம்பெனிகளுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி சலுகை விலையில் மக்களுக்கு சிமென்ட் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்... |
தமிழகம் | முப்பெரும் விழா | சேத்தூர்: சேத்தூரில் பாரதி மனித நேய மன்றம் சார்பில் ரத்த தான முகாம், மரக்கன்றுகள் வழங்கல், மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. எல்.ஐ.சி., முகவர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நச்சாடலிங்கம் முன்னிலை வகித்தார். தபால் ஊழியர் மாரிமுத்து வரவேற்றார்.... |
தமிழகம் | கும்பாபிஷேகம் | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதவல்லியம்மன் சமேத அமுதலிங்கேஸ்பரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. நாடார்கள் உறவின் முறை தலைவர் வி.மனோகரன், தேவஸ்தான தலைவர் பி.கே.கண்ணன் முன்னிலை வகித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். |
தமிழகம் | காமராஜர் பிறந்த தின விழா காங்., ஆலோசனை கூட்டம் | விருதுநகர்: விருதுநகரில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண் டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். தமிழக தலைவர் கே.வி. தங்கபாலு, மாணிக்கதாகூர் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி., ராம்பாபு, முன் னாள் எம்.எல்.ஏ.,க்கள் தெய்வ... |
தமிழகம் | ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி | சத்திரப்பட்டி: சமுசிகாபுரம் மெயின் ரோட்டில் தெருவோரக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இக்கடைகளில் பெரும்பாலும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், கட்சிக் கொடிக்கம்பங்கள், தட்டி மற்றும் பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவையும் அதிகளவில் அமைக்கப்பட் டுள்ளன. மிகவும் குறுகலாக உள்ள இந்த ரோட்டில், ஆக்கிரமிப... |
தமிழகம் | பரிசு வழங்கல் | வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வட்டார காங்., சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வட்டார தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் சந்திரசேகர் வரவேற்றார். மாவட்ட தலைவர் கணேசன், பரிசு, சான்றிதழ் வழங்கினார். ஸ்ரீவி., சட்டசபை தொக... |
தமிழகம் | இலவச மருத்துவ முகாம் | நரிக்குடி: வீரசோழன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நல்லுக்குறிச்சி கிராமத்தில் அரசின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் நரேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ஜெயக்கொடி துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் அமுதா முன்னிலை வகித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். ... |
தமிழகம் | உண்ணாவிரதம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டுமென்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. கவுன்சிலர் காமராஜ் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் முரளி, ராமசாமி முன்னிலை வகித்தார். ராமசாமி எம்.எல்.ஏ, வாழ்த்தி பேசினா... |
தமிழகம் | மாநிலத்தில் முதலிடம் பெற்ற கலசலிங்கம் பாலிடெக்னிக் | ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏப்ரல் 2010 ல் நடந்த அரசு வாரியத் தேர்வில் தகவல் தொழில் நுட்பத்துறை, கம்ப்யூட்டர் துறை, கட்டடவியல் துறை ஆகிய மூன்று துறைகளிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளனர்.கல்லூரியிலேயே முதலிடத்தை தகவல் தொழில் நுட்ப மாணவ... |
தமிழகம் | இலக்கிய விழா | ராஜபாளையம்: ராஜபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பேரவை சார்பில் இலக்கிய விழா நடந்தது. வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இலக்கிய ஆர்வலர்கள் அண்ணாதுரை, ராமநாதன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தயாளன் வரவேற்றார்.பேராசிரியர் இளவழகனுக்கு "பாவேந்தர்' விருது வழங்கப்பட்டது. அமைப்பாளர் நெடுஞ்சேரலாதன்,... |
தமிழகம் | மேகமலை ரிசர்வ் பாரஸ்ட்டில் சர்வே பணிகள் தொடக்கம் | தேனி : மேகமலை ரிசர்வ் பாரஸ்ட்டில் வனநிலங்களையும், பட்டா நிலங்களையும் பிரிக்கும் சர்வே பணிகள் தொடங்கி உள்ளன.தேனி மாவட்டம், மேகமலையில் 25 ஆயிரம் ஏக்கர் வனநிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக (ரிசர்வ் பாரஸ்ட்) மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வனப்பகுதிக்குள் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள், 75க்கும் மேற்பட்ட குடியிருப... |
தமிழகம் | நீர்வள நிலவள திட்டம் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு | ராஜபாளையம்: நீர் வள நில வளத் திட்டம் நடப்பாண்டில் ராஜபாளையத்தில் தேவியாறு, நகரியாறு, சீவல்பேரி ஆறு, காயல்குடி ஆறு வடிகால் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இப்பகுதிகளில் செம்மை நெல் சாகுபடி, பசுந்தாள் உரம் இடுவதன் அவசியம், சான்று விதை தயாரிப்பு, மண் பரிசோதனை, தா... |
தமிழகம் | அரசுப்பணியாளர்களுக்கு தற்செயல் விடுமுறை ஆணை பிறப்பித்தது அரசு | கோவை:கோவையில் இன்று துவங்கும் செம்மொழி மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வசதியாக, அரசு பணி யாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோவையில் இன்று நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.
முன் எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நாடுக... |
தமிழகம் | பல்கலை., சிறப்பு துணைத் தேர்வு | மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் கடந்த ஏப்ரலில் செமஸ்டர் தேர்வு எழுதி, தோல்வி அடைந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு உடனடி துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.கடந்த ஏப்ரலில் நடந்த ஆறாவது பருவ தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஐந்தாவது தேர்வு வரை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிலுவைதாள்கள... |
தமிழகம் | சோலார் மின்சாரம் தயாரிப்பு அரசின் விதிமுறைகள் தளர்வு | மதுரை:சோலார் மின்சாரம் தயாரிப்பிற்கு, அரசு விதிமுறைகளை தளர்வு செய்துள்ளதால், குறைந்தபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யலாம்.தென்மாவட்ட அளவில், ஒரு மெகா வாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் தயாரிப்பு செய்வதற்கு 50 பேர், தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையில் விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஒரு மெகாவாட் என்பதை 100 க... |
தமிழகம் | பெயின்ட் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, பெயின்ட் ஏற்றிவந்த லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சேதமேற்பட்டது.கப்பல் மூலம் கொழும்பு அனுப்புவதற்காக, ஓசூர் சிப்காட் தனியார் ஆலையிலிருந்து, தலா 20 லிட்டர் வீதம், 344 டின்களில் 6,880 லி பெயின்ட் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி, தூத்துக்குடி துறைமுகம் வந்துகொ... |
தமிழகம் | சாக்பீசில் திருவள்ளுவர் | பேரூர்:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பேரூர் கல்லூரி மாணவர் ஒருவர், சாக்பீசில் 133 மில்லி மீட்டர் உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.பேரூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விக்னேஷ்(19); தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், பின்னூசி, சீப்... |
தமிழகம் | தங்கத் தட்டில் முதல்வர் கவிதைகள் ஆம்பூர் பொற்கொல்லர் சாதனை | வேலூர்:உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு ஒன்பது கிராம் தங்கத் தகட்டில் முதல்வர் கருணாநிதியின் கவிதைகளை பதிவு செய்து ஆம்பூர் பொற்கொல்லர் சாதனை படைத்துள்ளார்.வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் தேவன் (45). பொற்கொல்லர். கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சாதனை செய்ய நினைத்தார்.
மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் தமிழக முதல்... |
தமிழகம் | போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை | திருநெல்வேலி : விசாரணைக்கு அழைத்ததால், போலீஸ் ஸ்டேஷன் முன்பாகவே வாலிபர் ஒருவர், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.திருநெல்வேலி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரை அடுத்துள்ள ஆய்வாய்புலிப்பட்டியைச் சேர்ந்தவர் சென்றாயபெருமாள்(27). இவர், கோவையை அடுத்துள்ள உடையார்பாளையத்தில் கட்டட வேலைக்கு சென்றிருந்தார்.சில நாட்களுக்கு முன் ஊ... |
தமிழகம் | பூங்குழலியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் | சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.கீரந்தையில் பூங்குழலியம்மன் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. சாயல்குடி அருகே எஸ். கீரந்தை ஸ்ரீபூங்குழலியம்மன் கோயில் திருப்பணிகள் கிராமத்தின் சார்பில் நடந்து முதல் முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, காப்புகட்டுதல், முளைப் பாரி ... |
தமிழகம் | அனுமான் சிலையை ஏந்தி ஆடியபடி வந்த குருக்கள் | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் , ராமேஸ்வரத்தின் வரலாற்றை சித்தரிக்கும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடந்தது. இதையொட்டி பகல் 12 மணிக்கு கோயில் சுவாமி சன்னதியில், ஒன்பது கலசங்களில் புனித நீர் வைத்து ராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மோகன் குருக்கள், லிங்கத்தை கையிலேந்தியும், அனுமான் சிலை... |
தமிழகம் | தடை செய்யப்பட்ட வலை பயன்பாடு மீண்டும் புழக்கம் ! மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி | ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவில் தடை செய்யப்பட்ட வலைப்பயன்பாடு மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளதால், மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணற்ற கடல் வாழ் உயிரினங்களை காக்கும் பொருட்டு இரட்டை மடி, சுருக்கு மடி உள்ளிட்ட பல வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சிலர் தங்கள... |
தமிழகம் | வேலை உறுதியளிப்பு திட்ட பணியை குறி வைக்கும் கொள்ளை கும்பல்கள், பீதியில் கிராம மக்கள் | ராமநாதபுரம்: வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடக்கும் பணிகளில் குறிவைத்து திருடும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வேலை உறுதியளிப்பு திட்டம் மாவட்டத்தின் பல்வேறு ஊரக பகுதிகளில் நடந்துவருகிறது. பலரும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் கண்மாய், ஊரணி, ரோடு பராமரிப்பு என கிராமத்தை விட்டு வெளி பகுதிகளில் தான்... |
தமிழகம் | வெளிநாட்டுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல், ஒருவர் கைது | பனைக்குளம்: வெளிநாட்டுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர். மன்னார் வளைகுடாவில் கடல் அட்டைகள் சேகரிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. இருந்தும் சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்தில் கடல் அட்டைகள் "சூப்' செய்ய பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு தேவைக்காக இங்கு... |
தமிழகம் | ஓரியூர் அருளானந்தர் ஆலய விழா தேர்பவனி | தொண்டி: புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்று 63 ஆண்டுகளானதை யொட்டி இதன் விழா ஓரியூர் ஆலயத்தில் ஜூன் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலையில் சிறப்பு திருப்பலி, இரவு ஒன்பது மணிக்கு தேர்பவனி நடந்தது. புனித அருளானந்தர் அமர்ந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம், ப... |
தமிழகம் | கடலாடி ஒன்றியத்தில் கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடுஒன்றிய கூட்டத்தில் முடிவு | சாயல்குடி: கடலாடி ஒன்றியத்தில் மாரியூர், கூராங்கோட்டை உள்பட நான்கு கோயில்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி ஒதுக்கப் பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. பி.டி.ஒ.,க்கள் ரெங்கசாமி, முத்திளங்கோவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு; நித்தியானந்தம் (ம.தி... |
தமிழகம் | ஒருவர் பலி | திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே செட்டியகருப்பன் வலசையை சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தி(35). இவர் கடந்த 12ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது சிம்னி விளக்கு கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் சுந்தரமூர்த்தி காயமடைந்து மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரித்து வருகின்றனர... |
தமிழகம் | த.மு.மு.க., கல்வி உதவி | ராமநாதபுரம்: 10 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை த.மு.மு.க., சார்பில் பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் பட்டது. இதன் விழாவுக்கு ம.ம.க.,வின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சாதிக், மாவட்ட செயலாளர் அன்வர்அலி, மாணவரணி செயலாளர் புர்கான், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரியாஸ் , மண... |
தமிழகம் | முத்துமாரியம்மன் கோயிலுக்கு நிதி உதவி | திருவாடானை: திருவாடானை அண்ணாநகரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு நலிவடைந்த கோயில்கள் நிதி உதவி திட்டத்தின் கீழ் 25ஆயிரம் ரூபாய் வழங்கபட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி நிதியை வழங்கினார். அறநிலைய துறை ஆணையாளர் சிவாஜி மற்றும் கோயில் பொறுப்பாளர்கள், அண்ணா நகர் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | காணாமல் போனவர் மரணம் | பரமக்குடி: பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடியை சேர்ந்த கருப்பையா(65). இவர் மனநலம் சரியில்லாமல் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இந்நிலையில் பல்லவராயனேந்தல் அருகே கருப்பையா இறந்துகிடந்தார். நயினார்கோவில் போலீசார் கருப்பையா இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | சான்று விதை உற்பத்தி பயிற்சி | ராமநாதபுரம்: முதுகுளத்தூர் வட்டார விதைப்பண்ணை விவசாயிகள் மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான சான்றுவிதை உற் பத்தி மற்றும் விதைச் சான்று பயிற்சி நடந்தது. முதுகுளத்தூர் வட்டார வேளாண் அலுவலர் ஞானவீரன் வரவேற்றார். மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் கனகராசன் பயிற்சியை துவக்கி வைத்தார். பரமக்குடி விதைச்சான்று அலுவலர் ... |
தமிழகம் | திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம் | தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக தின, வருஷாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடந்தது. அதன் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 4.30... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.