category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் முன், அகில இந்திய பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் வாயில் கறுப்புத் துணி கட்டியவாறு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளை தலைவர் ஆஷிகா தலைமை வகித்தார். சங்க மண்டல செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். பாஸ்போர்ட் சேவா கேந்த...
தமிழகம்
சேலம்- விருத்தாசலம் ரயில் தடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஆத்தூர்: சேலம் - விருத்தாச்சலம் அகல ரயில்பாதையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழுப்புரம் அருகே கடந்த 12ம் தேதி ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதையடுத்து அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் போலீஸார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சேலம் - விருத்தாச்சலம்...
தமிழகம்
சொட்டு நீர் பாசன கடன் கலந்தாய்வுக் கூட்டம்
விழுப்புரம்:தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சொட்டு நீர் பாசன கடன் வழங்குவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ரேணுகாம் பாள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2010 - 2011 ஆண்டிற்கு சொட்டு நீர் பாசன கடன்...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் : திருச்சியில் வாலிபர் கைது
திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்டிலும், கண்டோண்மெண்ட் ஸ்டேஷனிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த வாலிபரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மடங்கால் புதுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லபாண்டியன் (21). இவர் திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் கடந்தாண்டு பட்டப்படிப்பு முடித்த...
தமிழகம்
நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் புதிய போர்வெல் அமைக்கும் பணி
திண்டிவனம்:திண்டிவனம் அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் தினமலர் செய்தி காரணமாக போர் வெல் அமைக்கப்பட்டது.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் 26 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மொத்தம் 107 பேர் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தண்ணீர் வசதி இல்லாமலும், ஒத்தையடிப்பாதை வழியாக ரோட்டிற்கு வர வேண்டிய நிலை இர...
தமிழகம்
38 மகளிர் குழுக்களுக்கு ரூ.38.4 லட்சம் நிதியுதவி
லாலாப்பேட்டை: லாலா ப்பேட்டை அடுத்துள்ள வீரராக்கியம் சுவாதி வளாகத்தில் அரெட்ஸ் தொண்டு நிறுவன மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. தொண்டு நிறுவன இயக்குனர் சாமி தலைமை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் பாரதி கண்ணம்மா வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திட்ட...
தமிழகம்
இயந்திரம் மூலம் மரம் வெட்டும் கும்பல் வி.ஏ.ஓ.,வை கண்டதும் தப்பியோடி தலைமறைவு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரி பகுதியில் இருக்கும் மரங்களை அனுமதி இன்றி வெளியூரை சேர்ந்த மர்ம கும்பல் நவீன இயந்திரம் மூலம் அடியோடு அறுத்து செங்கல் சூளைக்கு கடத்தி செல்வது கனஜோராக நடக்கிறது. சமூக காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்று நடப்பட்ட பொந்துபுலி கரட்டில் மரம் வெட்டிய மர்ம கும்பல் வி.ஏ.ஓ.,வை கண்டதும் தப்பி ஓட...
தமிழகம்
காணாமல் போன சிறுமி மீட்பு
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் காணாமல் போன சிறுமியை போலீசார் மீட்டனர். கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஜீவானந்தம் மகள் திவ்யதர்சணி(10). இவர் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த அவர் வீடு திரும்பவி...
தமிழகம்
வாகனங்களில் வேகத்தடை கருவி
விழுப்புரம்: வாகனங்களில் வேகத் தடை கருவி பொருத்தும் பணியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் துவக்கினர்.பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க, வேகத் தடை கருவி பொருத்த அரசு உத் திரவிட்டுள்ளது. அதன் படி முதற்கட்ட பணியாக விழுப்புரம் வட்டார போக் குவரத்து அலுவலகத்தில் பதிவு செய...
தமிழகம்
பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு
திருக்கோவிலூர்:திருக்கோவிலூரில் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமலை திருப்பதி பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருக்கோவிலூர் ஞானானந்தா பள்ளி வளாகத்தில் வரும் 28ம் தேதி திருமலை திருப்பதி ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீநி வாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பா...
தமிழகம்
டிராக்டரில் சென்ற பெண் தவறி பலி
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே டிராக்டரில் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கம் காலனியை சேர்ந்த சுப்ரமணி மனைவி கலாவதி(38). கூலித் தொழி லாளியான இவர் நேற்று முன்தினம் மூங்கில்பட்டு கிராமத்திற்கு செங்கல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் அமர்ந்து சென்றார். டிராக்டர் இன்ஜின் மீது அமர்ந்திருந்த கல...
தமிழகம்
கல்லூரி மாணவி திடீர் மாயம்
விழுப்புரம்:விழுப்புரத்தில் காணாமல் போன இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் நாராயணன் நகரைச் சேர்ந்த உடையப்பன் மகள் ராஜாத்தி(19). இவர் திருவண்ணாமலையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21ம் தேதி மாலை கல்லூரியிலிருந்து விழுப் புரம் புதிய பஸ் நிலைத்திற்கு...
தமிழகம்
கள்ளக்குறிச்சியில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி:குடிநீர், மின் தட்டுபாட்டை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கள்ளக் குறிச்சி யில் ஆர்ப் பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட செயலாளர் தெய்வீகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பூவரா கன், மாவட்டகுழு உறுப்பினர் துளசிதாஸ், வ...
தமிழகம்
லீ பஜார் வர்த்தக மையத்தில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா
சேலம்: சேலம் லீபஜார் வர்த்தக மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று நோட்டு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு லீபஜார் வர்த்தக மைய செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். தலைவர் சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மதிவாணன், தட்சிணாமூர்த்தி, ஜெயப்பிரகாசம், திருமுருகன், கந்தசா...
தமிழகம்
செம்மொழி மாநாடு நினைவாக விழுப்புரத்தில் 247 மரக்கன்றுகள்
விழுப்புரம்:விழுப்புரத்தில் மரக் கன்று நடும் விழா நடந்தது. உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு கோவையில் நேற்று துவங்கி வரும் 27ம் தேதி வரை பிரமாண்டமாக நடக்கிறது. மாநாட் டின் நினைவாக விழுப்புரத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட் டது. தமிழ் எழுத்துக் களை நினைவுபடுத்தும் விதமாக 247 மரக்கன்றுகள் நடப்பட்டது. விழுப்புரம...
தமிழகம்
ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம்
சேலம்: சேலம் சந்திப்பு ஆட்டோ டிரைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் சூரமங்கலம் செல்வா லாட்ஜில் நடந்தது.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர செயலாளர் அங்கப்பன் தலைமை வகித்தார். பாட்டாளி தொழிற்சங்க தலைவர் மாரியப்பன் பேசினார். கூட்டத்தில், ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் சீருடை அணிந்துதான் ஓட்ட வேண்டும். குடிபோதையில் யாரும் ஆட்டோவை இயக்கக்க...
தமிழகம்
எட்டு ஆண்டுகளுக்குப் பின் நாளை ரிஷிவந்தியம் கோவில் திருவிழா
தியாகதுருகம்:ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா 8 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது.ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப் பட்டு வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு திருவிழா நடந்த பின்...
தமிழகம்
பால் மார்க்கெட்டில் ராகுல் பிறந்த நாள்
சேலம்: சேலம் பால்மார்க்கெட்டில் ராகுல் பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்று விழா நடந்தது.சேலம் பால்மார்க்கெட்டில் நடந்த விழாவுக்கு கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். சேலம் 28 வது வார்டு காங்., தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம் காங்கிரஸ் கொடி ஏற்ற...
தமிழகம்
ஊருக்குள் படையெடுக்கும் பாம்புகள் மலையடிவார கிராம மக்கள் அதிர்ச்சி
மேட்டூர்: வனப்பகுதியில் பெய்த பருவமழையால் பாம்புகள் ஊருக்குள் படையெடுப்பது மலையடிவார கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேட்டூர் அடுத்த கொளத்தூர் மலையடிவாரத்தில் கோவிந்தபாடி, கருங்கல்லூர், கத்திரிபட்டி, தண்டா, தார்க்காடு, நீதிபுரம் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது. கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலர் தங்கள் வ...
தமிழகம்
ராஜாபாதர் தாகூர் கல்லூரியில் பட்டமளிப்பு
திண்டிவனம்:திண்டிவனம் டாக்டர் ராஜாபாதர் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. திண்டிவனம் ரஞ்சிதம் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கேசவன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிறுவன சேர்மன் டாக்டர் ராஜாபாதர் வரவேற்றார். துணை சேர்மன் தினகரன், செய...
தமிழகம்
கவுன்சிலர் இல்லத் திருமண விழா
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி கவுன்சிலர் நடராஜன் இல்லத் திருமண விழா நடந்தது. கள்ளக்குறிச்சி நகராட்சி தே.மு.தி.க., கவுன்சிலர் நடராஜன், பூங்கொடி மகன் பாலமுருகன், கடலூர் தங்கராஜ், விமலா மகள் கோமதி திருமணம் நேற்று நடந்தது. மணமகனின் சகோதரர் பாலகுமாரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்.எல். ஏ., உதயசூரியன், ஒன்றிய சேர்மன் வெங்கடா...
தமிழகம்
குடும்ப நல ஆலோசனை குழு முடக்கம் முறையாக செயல்படாததால் ஏமாற்றம்
வாழப்பாடி: கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை கேட்டறிந்து, தகுந்த ஆலோசனை வழங்கும் வகையில் போலீஸ் சப்-டிவிஷன்கள் தோறும் ஏற்படுத்தப்பட்ட குடும்ப நல ஆலோசனைக் குழு முறையாக செயல்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷன்களுக்குவரும் புகார்களில், கணவன்-மனைவி இடையே ஏற்படும் குடும்ப பிரச்னைகள் குறித்த ப...
தமிழகம்
புதிய நிர்வாகிகள் தேர்வு
வாழப்பாடி: சேலம் மாவட்ட டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சேலம் மாவட்ட டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சங்க கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் சேலத்தில் நடந்தது. மாநில முன்னாள் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். சேலம் மாவட்ட முன்னாள் தலைவர் முருகேசன் முன்னிலை வ...
தமிழகம்
செம்மொழி மாநாடு கவிதையில் ஓவியம் ஆத்தூர் வாலிபர் வித்தியாச முயற்சி
ஆத்தூர்: ஆத்தூரை சேர்ந்த வாலிபர், எழுத்துகளால் திருவள்ளுவர் உருவத்தையும், முதல்வர் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டு கவிதையில் அவரது உருவ படத்தையும் வரைந்து சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி (23). சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியி...
தமிழகம்
ரோட்டரி சங்க துவக்க விழா
இடைப்பாடி: இடைப்பாடி ரோட்டரி சங்க துவக்க விழா மற்றும் அகில உலக ரோட்டரி சங்க துவக்க நாள் விழா ஆகியவை வெள்ளாண்டிவலசில் நேற்று நடந்தது. ரோட்டரி சங்க ஆளுநர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சங்ககிரி ரோட்டரி சங்க தலைவர் ரங்கசாமி வரவேற்றார். புதிய ரோட்டரி சங்க தலைவராக பாஷா, செயலாளராக வக்கீல் குப்புராஜ், பொருளாளராக பிரபாகர் , வரு...
தமிழகம்
மரக்கன்றுகள்
செம்மொழி மாநாட்டையொட்டி, நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் கோவை மாநகர் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அவை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
சிறப்பு அஞ்சல் தலை
மாநாட்டு நிறைவு விழாவின் போது சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. சங்கத் தமிழ் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான ஓலைச்சுவடிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை போன்றவற்றில் இருந்து சில அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது.
தமிழகம்
ஜனாதிபதி டில்லி திரும்பினார்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று இரவு டில்லி திரும்பினார்.உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று முன் தினம் இரவு டில்லியிலிருந்து கோவை வந்தார். அவரை விமானநிலையத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர் கோவை அரசு சுற்றுலா மாளிகையில் இரவு தங...
தமிழகம்
பைக் இளைஞர்கள் சாகசம்: முதியவர் உயிரை பறித்தது
தாம்பரம் : சாலையில் பைக்கில் சென்ற இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டதால், சாலை ஓரத்தில் நின்ற முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந்தனர். திருத்தணி அருகேயுள்ள பள்ளிப்பட்டை சேர்ந்தவர் தேசப்பன் (62). காசநோயாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இருவரும் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனையில் ...
தமிழகம்
நெல்லையில் கருப்புக்கொடி ம.இ.க., போராட்டம்
திருநெல்வேலி : நெல்லையில் ஆதிதிராவிடர் என தேவேந்திரகுல மக்களை குறிப்பிடுவதை கைவிட வலியுறுத்தி மள்ளர் இலக்கியக்கழகத்தினர் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதிதிராவிடர் என தேவேந்திரகுல மக்களை குறிப்பிடக்கூடாது, தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, தேவேந்திரகுல நலவாரியம் அமைப்பது உ...
தமிழகம்
கல்லூரணி அங்கன்வாடிக்கு இலவச உபகரணங்கள் வழங்கல்
பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரணி அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச சேர் மற்றும் தளவாட சாமான்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். கல்லூரணி பஞ்., தலைவர் அருணோதயம், யூனியன் துணை சேர்மன் மதிச்செல்வ...
தமிழகம்
குருவிகுளத்தில் நடக்க இருந்த மறியல் போராட்டம் வாபஸ்
திருவேங்கடம் : குருவிகுளத்திலிருந்து மலையடிப்பட்டி வரையுள்ள பழுதடைந்துள்ள சாலையை செப்பனிட கோரி நேற்று குருவிகுளம் பஞ்., யூனியன் அலுவலகம் முன் நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் சமாதான கூட்ட தீர்மானத்தின்படி கைவிடப்பட்டது. சங்கரன்கோவில் தாலுகா குருவிகுளம் முதல் மலையடிப்பட்டி கிராமம் வரை செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. மே...
தமிழகம்
வீ.கே.புதூர் தாலுகாவில் ரேஷன் கார்டு மேல் முறையீட்டுக்கு 30ம் தேதி வரை அவகாசம்
வீரகேரளம்புதூர் : தணிக்கை செய்யப்படாத ரேஷன் கார்டுதாரர்கள் இம்மாதம் 30ம் தேதிக்கு முன் மேல் முறையீட்டு மனு செய்து கார்டுகள் ரத்து செய்யப்படுவதை தவிர்த்துக் கொள்ளும்படி வீ.கே.புதூர் தாசில்தார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடித்து ரத்து செய்வதற்காக ரேஷன் கார்டுகள் 100 சதவீதம் தணிக்கை ச...
தமிழகம்
உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்கள் நிலை ஐவர் குழுவை நியமித்து ஐகோர்ட் உத்தரவு
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை, மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்கள் நிலையை ஆராய, ஐவர் குழுவை நியமித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி கோரி, மதுரையில் உண்ணாவிரதம் இருந்த ஆறு வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மத்திய சிறையிலும், ஐந்து பேர் அரசு மருத்துவமனையிலும...
தமிழகம்
கிராம ஏற்பு திட்டத்தில் மண், தண்ணீர் மாதிரி ஆய்வு
மதுரை: ஒவ்வொரு யூனியனில் இருந்தும் விரிவாக்க பணியாளர் மூலம் மண்மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மண்பரிசோதனை நிலையம் சார்பில் கிராம ஏற்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராமம் தத்தெடுக்கப்படுகிறது. இக்கிராமங்களில் விவசாயிகளுக்கு மண், தண்ணீர் மாதிரிகள் ஆய்வு செய்து தரப்படுகிறது. இதன் மூலம் அம்மண்ணின் ச...
தமிழகம்
கல்லூரி மாணவர் ரயிலில் பலி
மதுரை: பரமக்குடியை சேர்ந்தவர் லூர்து சேவியர் (27). இவர் சிவகங்கையில் ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ., படித்து வந்தார். மதுரை வந்த இவர், நேற்று காலை ரயில்வே ஸ்டேஷன் நான்காவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த திண்டுக்கல் பயணிகள் ரயிலில் அமர்ந்தார். பகல் 11.30 மணிக்கு ரயில் புறப்படும் போது ஊழியர்கள்,"இது திண்டுக்கல் செல்லவில்லை. பணி...
தமிழகம்
எஸ்.ஐ., மனைவியிடம் நகை பறிப்பு
மதுரை: மதுரை திருப்பாலை பொறியாளர் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மலையப்பன். மனைவி முருகலட்சுமி (55). மகன் கிருஷ்ணகுமார் போலீசாக உள்ளார். முருகலட்சுமி நேற்று இரவு 8.30 மணிக்கு அதே பகுதியில் நடந்து செல்கையில், டூவீலரில் வந்த இரு மர்மநபர்கள் 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு மாயமாகினர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றன...
தமிழகம்
மண்ணெண்ணெய் பறிமுதல் 2 பேர் கைது
மதுரை,: மதுரை ஆரப்பாளையம் மேல அண்ணா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (31). ஜெய்ஹிந்த்புரம் முத்து (26). இருவரும் ரேஷன் கார்டுதாரர்களிடம் மண்ணெண்ணெய் வாங்கி, டீக்கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இருவரையும் மாவட்ட பொதுவினியோக அலுவலர் முருகையா, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்த...
தமிழகம்
ஜூலை 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 16ம் தேதிக்குள் பெயர் சேர்த்தல், நீக்கம் வேண்டுகோள்
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் ஜூலை 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பெயர் நீக்கம், சேர்த்தல் போன்ற பணிகளை ஜூலை 16ம் தேதிக்குள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என கலெக்டர் ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்து அனைத்துக் கட்சிக...
தமிழகம்
மின் நுகர்வோர்குறைதீர் முகாம்
மதுரை: மதுரை மின் வாரிய மேற்கு கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் அறிவிப்பு: அரசரடி மேற்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் வரதராஜன் தலைமையில், இன்று காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர் தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாக...
தமிழகம்
ஊர்வலம்
எழுமலை: டி.கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. கல்விக்குழுத் தலைவர் கருப்பன், துணைத் தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா பரமசிவம், தலைமையாசிரியர் ராமசாமி கலந்து கொண்டனர்.
தமிழகம்
நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் கடனுதவி
மதுரை: மதுரையில் தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிலமற்ற விவசாய கூலிகள், சிறு, குறு விவசாயிகள் தாட்கோ மானியம், வங்கிக் கடன் மூலம் நிலத்திற்கு கிரயம் செய்யலாம்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள இந்து ஆதிதிராவிடர்கள் 18 வயது முதல் 55 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். 5 ஏக்கர் புன்செய் அல்லத...
தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா நாளை தேரோட்டத்திற்கு ஏற்பாடுகள் ஜரூர்
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் 506வது ஆனித் தேரோட்டத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் ரதவீதிகள் களை கட்டியுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 506வது ஆனித் தேரோட்ட திருவிழா வரும் 17ம் தேதி கொ...
தமிழகம்
மனது தீர்த்தம் போன்றது முரளீதர சர்மா பேச்சு
மதுரை: மதுரை மதனகோபால சுவாமி கோயிலில், ஆன்மிக சொற்பொழிவு நிறைவு விழாவில் முரளீதர சர்மா பேசியதாவது: மனது எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். மனது தீர்த்தம் போன்றது. அது எதில் கலக்கிறதோ, அந்த நிறமாக மாறிவிடும்.குழந்தைகளுக்கு, நாம் கதை சொல்லும் பழக்கம் குறைந்துவிட்டது. அவர்களுக்கு நல்ல கதை, ஸ்லோகங்களை சொல்லித்தர வேண்டும். க...
தமிழகம்
மதுரை சிறையில் அதிகரிக்கும் தற்கொலை மிரட்டல்கள்
மதுரை: மதுரை மத்திய சிறையில், மனஅழுத்தத்திற்கு ஆளாகும் கைதிகள் தற்கொலைக்கு முயற்சிப்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, சிறை நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இச்சிறையில் 2000த்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், தண்டனை பெற்ற வெளிமாவட்ட கைதிகளும் அடங்குவர். தடை செய்த பொருட்கள் "உள்ளே' கிடைக்காதபோது, மரத்தி...
தமிழகம்
பெண் மானபங்கம்: எஸ்.ஐ., உட்பட 7 பேர் மீது வழக்கு
கடலூர்: வடலூர் அருகே நில பிரச்னையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகபெருமாள். இவரது மனைவி சூடாமணி (38). முருகபெருமாளுக்கு சொந்தமான 10 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த சீனுவாசன் ...
தமிழகம்
லாரி ஸ்டிரைக் எதிரொலி: ரூ.2 கோடி தேயிலை தேக்கம்
குன்னூர்: குன்னூரில், தேயிலை ஏற்றிச் செல்லும் லாரிகள், வாடகை உயர்வு கோரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், இரு நாளில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளது. நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் கொ...
தமிழகம்
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அவ்வபோது லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கமைழ வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
மருத்துவமனையில் குழந்தை கடத்தல் தடுக்க அரசு திட்டம்
சிவகங்கை: அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்தும் கும்பலை பிடிக்க மருத்துவத்துறை, போலீசார் இணைந்து கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 5ம் தேதி, சென்னை மாதவரம் தனியார் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, ஒரு கும்பல் கடத்தி விற்றது. இதுபோல, கிருஷ்ணகிரி, பண்ருட்டி உட்பட தமிழகளவில், குழந்தைகளை ...
இந்தியா
ஆகஸ்ட் 1 முதல் லாரிகள் நாடு தழுவிய ஸ்டிரைக்
புதுடில்லி: சுங்கவரி உயர்வை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அகில இந்திய லாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
சட்டீஸ்கரில் மவோயிஸ்ட்கள் வெறிச்செயல்: மூன்று போலீசார் சுட்டுக்கொலை
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மூன்று பேரை மவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர். சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாட பகுதியில் கோலப்பள்ளி என்னும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மாவோயிஸ்ட்கள் போலீசாரை துப்பாக்கியால் சு...
இந்தியா
பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜூலையில் மீண்டும் துவக்கம்
புதுடில்லி: பார்லிமென்ட்டின் மழைகால கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜூலை 26ம் தேதி மீண்டும் துவங்குகிறது. இந்த கூட்டத்ததொடர் ஆகஸ்ட் 27ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்
இன்று மயில்சாமி அண்ணாதுரை சிவதாணுப்பிள்ளை ஆய்வரங்கில் பங்கேற்பு
கோவை: இன்று மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுப்பிள்ளை பங்கு பெறும் அமர்வரங்கம் நடைபெறுகிறது. கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. இன்றைய அமர்வரங்கில் தமிழும் உலகச் செம்மொழிகளும், இலக்கியம், இலக்கணம், மொழியியல், திராவிட மொழியியல், மரபுவழி...
General
பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது : சல்மான் பஷீர்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திப்பு நடந்தது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் : பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவித்தார். நிருபமா ராவ் கூறுகையில் பாகிஸ்தானுடன் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைக...
தமிழகம்
ஆய்வரங்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று ஆய்வரங்க நிகழ்ச்சிகள் துவங்கியது. ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து கருணாநிதி பேசுகையில், " தமிழின் தொன்மை, தனித்தன்மை, செம்மொழி தன்மை, திராவிடத்...
தமிழகம்
சென்னையில் கைதான வக்கீல்கள் இன்று விடுதலை
சென்னை : ஐகோர்ட்டில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து கைதான 14 வக்கீல்களும் இன்று விடுதலையாகின்றனர்‌ . கோர்ட் ஜாமீன் வழங்கியதை அடுத்து அனைவரும் இன்று விடுதலையாகின்றனர்.
இந்தியா
இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாள குறியீடு
புதுடில்லி : இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாள குறியீடு வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச கரென்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு £ ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட இருக்கிறது. அடையாள குறியீடு மாதிரியை இன்று அமைச்சரவை இறுதி செய்கிறது. இது வரை 5 மாதிரிகள் த...
தமிழகம்
மாமல்லபுரத்தில் கணவன், மனைவியை தாக்கி விட்டு நகை, பணம் கொள்ளை
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் கணவன், மனைவியை தாக்கி விட்டு நகை, பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் நடராஜன்(44) . இவருக்கு மாமல்லபுரம் அடுத்த திருக்கழுகுன்றம் காட்டூர் கிராமத்தில் இருக்கும் ஒரு அபார்ட்மன்ட்டில் ‌சொந்தமாக வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு நேற்ற...
General
உலக கோப்பை கால்பந்து : இன்றைய போட்டிகள்
ஜோகனஸ்பர்க் : தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் 19வது சர்வதேச கால்பந்து போட்டியில் இன்று 4 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. எப் பிரிவில் சுலோவேகியா - இத்தாலி அணிகளும் ; பராகுவே - நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன. இ பிரிவில் காமரூன் - ‌நெதர்லாந்து , டென்மார்க் - ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா
ஐ.பி.எல்., உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
மும்பை : ஐ.பி.எல்., அணிகள் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் டில்லியில் தொடங்கியது. ஐ.பி.எல்., சேர்மன் பதவியில் இருந்து லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டப் பிறகு முதல் முறையாக புதி சேர்மன் சிரயு அமின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
நெல்லை கர்ப்பிணி இறந்த விவகாரத்தில் டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது வழக்கு
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி இறந்த சம்பவத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது 304 ( ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இறந்த போன ஷமீலா பீவியின் கணவர் சுபகனி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
இந்தியா
டில்லி கவுரவ கொலை வழக்கில் துப்பு துலங்கியது : குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை
புதுடில்லி : டில்லியில் இளம் தம்பதியர் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டில்லி அசோக் விஹார் பகுதியில் இளம் தம்பதியர் கொல்லப்பட்டனர். இவர்கள் காதல் திருமணம் செய்து ‌கொள்ள உதவிய உறவுக்காரப் பெண்ணும் கொ‌லை செய்யப்பட்டு கிடந்தார். கொலைய...
General
விம்பிள்டன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ‌ரோஜர் பெடரர் 6-3, 6-7, 6-4, 7-6, என்ற செட் கணக்கில் செர்பிய வீரர் இலிஜா போ‌ஜோல்ஜாக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
தமிழகம்
கோவை மாநாட்டு வளாகத்தில் எதிராக நோட்டீஸ் விநியோகம் : 5 பேர் கைது
கோவை: செம்மொழி மாநாட்டு வளாகத்தில் மாநாட்டுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தர்மபுரியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 5 பேரும் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியா
கனடா செல்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்
புதுடில்லி : பிரதமர் மன்மோகன்சிங் கனடா செல்கிறார். கனடாவில் டொரன்டோ மாகாணத்தில் ஜி -20 மாநாடு நடைபெறவிருக்கிறது. ஜி -20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் அரசு முறை பயணமாக நாளை கனடா புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை,  சந்தித்துப் பேசுகிறார் மன்மோகன்சி்ங்.
தமிழகம்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கம் : முதல்வர் தொடங்கி வைத்தார்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய இலங்கை தமிழறிஞர் சிவதம்பி தமிழ் சமூகம் தொடர்பாக பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட வேண்டும். சமூக அமைப்பு, பண்பாடு, தமிழர்களின் நடைமுறை, உறவுமுறை, மத நம்பிக்கை, ஆகியவற்றில் நுணுக்கமாக ஆய்வுகள் நடத்தப்பட வே...
தமிழகம்
கடன் வாங்கித் தருவதாக மோசடி : வங்கி மேலாளர் கைது
திருநெல்வேலி : கடன் வாங்கித் தருவதாக கூறி மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் மாவடியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (34). நுனி நாக்கு ஆங்கிலம் பேச்சும், சற்று நல்ல தோற்றமும் கொண்ட இவருக்கும் கூடங்குளம் பாண்டியன் கிராம வங்கி மேலாளராக இருக்கும் பாலசுப்ரமணி...
இந்தியா
மீண்டும் பா.ஜ., வில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங்
புதுடில்லி : மூத்த அரசியல்வாதி ஜஸ்வந்த் சி்ங் இன்று மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். ஜஸ்வந்த் சிங் அவர் எழுதிய புத்தகத்தில் ஜின்னாவை புகழ்ந்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீ்க்கப்ப்பட்டார். இன்று டில்லியில் கட்சித் தலைவர் நிதின் காட்காரி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் பார்லிமென்...
இந்தியா
உணவு பணவீக்கம் 16.9 சதவீதமாக அதிகரிப்பு
புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 16.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூன் 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி உணவு பணவீக்கம் 16.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியா
பயங்கரவாதிகளுடன் நட்புறவு ? : கேரள ஐ.ஜி., இப்படியா ; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
புதுடில்லி: கேரள போலீஸ் உயர் பொறுப்பில் இருக்கும் போலீஸ் ஐ.ஜி., ஒருவர் கத்தாரில் பயங்கரவாதிகளை சந்தித்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. எதுவாக இருப்பினும் மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என மாநில முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். கேரள மாந...
General
கனிஷ்கா விமான விபத்து : மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்
டொரான்டோ : கடந்த 1985ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று கனடாவில் இருந்து புதுடில்லி வந்த ஏர் இந்தியா விமானம் கனிஷ்கா என்ற இடத்தில் வந்தபோது பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 329 பேர் பலியானார்கள். சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவு தினம் நடந்தது. இதையொட்டி கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஒரு அற...
தமிழகம்
கோவை உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு : பொதுக் கண்காட்சி திறப்பு
கோவை : உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பொதுக் கண்காட்சி திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மலேசிய அரசின் மனிதவளத் துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழகம்
ஐகோர்ட்டில் தமிழ‌ை ஆட்சிமொழியாக்க மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த வேண்டும் : ஜெயலலிதா
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐகோர்ட்டில் தமிழ‌ை ஆட்சி மொழியாக்க மத்திய அரசை கருணாநிதி ‌வலியுறுத்த வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது : ஐகோர்ட்டில் தமிழில் வாதாடலாம் என்று சென்னை ஐகோர்‌ட் தலைமை நீதிபதி வாய்மொழியாக தனது கருத்தைத் தெரிவ...
General
ஸ்பெயினில் ரயில் விபத்து : 10 பேர் பலி
மேட்ரிட் : ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் இளைஞர்கள் பங்கேற்ற விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கும்பலாக ரயில் பாதையை கடந்து சென்றனர். சுரங்க பாதை இருந்தும் அதை பயன்படுத்தாமல் தண்டவாளத்தில் சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 12 பேர் உயிர் இழந்தனர். 17 பேர் பட...
தமிழகம்
சாய்னா நேவால் தரவரிசை பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார்
புதுடில்லி : பாட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தரவரிசை பட்டியலி்ல் 3 வது இடத்துக்கு முன்னேறினார். முன்னதாக 6 வது இடத்தில் இருந்த சானியா, சிங்கப்பூர் ஓபன் சீரிஸ் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் 3வது இடத்துக்கு முன்னேறினார்.
தமிழகம்
தங்கம் விலையில் மாற்றம்
சென்னை : தங்கம் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 744க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 747க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூபாய் 13 ஆயிரத்து 952க்கு ‌விற்கப்படுகிறது.
General
இந்தியா- பாக்., செயலர்கள் சந்திப்பு
இஸ்லாமாபாத்: இரு நாடுகள் உறவு பலப்படுத்துவது குறித்து இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் சந்தித்து பேசினர். இஸ்லாமாபாத் சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ், அந்நாட்டு வெளியுறவு செயலர் சல்மான் பஷீரை சந்தித்தார். இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்தனர். மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளை பிட...
தமிழகம்
பன்னாட்டு தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மாநாடு : வாசன்
கோவை : கோவையில் நடைபெற்று வரும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, பன்னாட்டு தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மாநாடாக இருப்பதாக, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம்
சிந்து சமவெளி நாகரிக மக்கள் அழிந்தது எப்படி? கண்காட்சி அரங்கில் ஆச்சரியம்
கோவை : செம்மொழி மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிகம், பழங்கால தமிழர் பயன்படுத்திய பொருட்கள், சங்க இலக்கியங்களின் ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் அடங்கிய கண்காட்சியைக் கண்டு பொதுமக்கள் பிரமித்து நிற்கின்றனர்.கோவையில் நடைபெற்று வரும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, பிரமாண்டமான முறையில் கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்ட...
தமிழகம்
கோவை கடைவீதிகளில் இரண்டாம் நாளிலும் மக்கள் நடமாட்டம் குறைவு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்றுமுன்தினம், பீளமேடு கொடிசியா வளாகத்தில் துவங்கியது. துவக்க நாளான நேற்றுமுன்தினம், மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் விடுமுறை அறிவித்திருந்தன; வாகன போக்குவரத்தும் குறைவாகவே காணப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இரு...
தமிழகம்
பெண்ணிடம் சில்மிஷம் செய்த சாமியாருக்கு 5 ஆண்டு சிறை
திருவள்ளூர் : பெண்ணிடம் சில்மிஷம் செய்த  சாமியாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. திருவள்ளூர் கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்தவர் சாமியார் பாலய்யா நாயுடு (60). இவர் கடந்த 2007ம் ஆண்டு பார்வதி (50) என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக பார்வதி கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பெண்கள் வண்கெ...
தமிழகம்
பிரமிக்கச் செய்த மாற்றுத்திறனாளிகள் : அரங்கம் அதிர முழங்கியது சலங்கை ஒலி
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கின. பல ஆயிரம் மக்கள் காலை 8.00 மணிக்கே மாநாட்டு அரங்கத்தில் சங்கமமாகியிருந்தனர். முதல் நிகழ்ச்சியாக செம்பனார் கோவில் சகோதரர்களின் மங்கல இசை முழங்கியது. அடுத்து, லாரன்ஸ் குழுவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் வழங்கிய கலைநிகழ்ச்சிக...
தமிழகம்
மக்களை கவரும் தமிழ் மொழி கலாச்சார கண்காட்சி துவக்கம் : கண்டு களிக்க அலைமோதும் மக்கள் கூட்டம்
கோவை : கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு, இணையத்தளக் கண்காட்சி அரங்கு, புத்தக கண்காட்சி, மற்றும் பொது கண்காட்சி அரங்குகள் திறக்கப்பட்டன. இதில், மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கண்டுகளித்தனர்.கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று முன் தினம் கோவையில் துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் கண்க...
தமிழகம்
நூல் விலை குறைத்து அறிவிப்பு
அன்னூர் :  கோவை மாவட்டம் அன்னூரில் சைமா, டாஸ்மா உள்ளிட்ட  சங்கங்கள் முத்தரப்பு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ஸ்பின்னிங் மில் மற்றும் பின்னலாடை கைத்தறி உற்பத்தியாளர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நூல் விலையை ரூபாய் 6 முதல் 9 வரை குறைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
General
பப்புவா நியூ கினியா தீவுகளில் நிலநடுக்கம்
ஜகார்த்தா : பப்டுவா நியூகினியா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தமிழகம்
ஐ.நா., குழுவை அனுமதிக்க மாட்டோம் : இலங்கை
கொழும்பு : விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரின் போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ மூன் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.  இந்த குழுவை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று  இலங்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் காமினி லஷ்மன் பெரிஸ் ச...
தமிழகம்
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
* உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம் இருந்...
தமிழகம்
3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறுச்சி கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் முருகேசன். இவர் ஒரு விவசாயி ஒருவரிடம்  பயிர்கடன் பெற ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தருமாறு கேட்டார். இது தொடர்ந்து அந்த விவசாயி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களுடைய அறிவுரை பேரில் நாமகிரிபேட்டை பஸ்நிலையத்...
தமிழகம்
பட்டாசு லாரியில் தீ :ரூ.6 லட்சம் நாசம்
அம்மையநாயக்கனூர் : கொடைரோடு அருகே நள்ளிரவில் பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாயின.சிவகாசியில் இருந்து பட்டாசு லோடு ஏற்றிக் கொண்டு பீகாருக்கு செல்லும் லாரி, திண்டுக்கல் நோக்கி வந்தது. லாரியை டிரைவர் இளவரசன் ஓட்டி வந்தார்; மற்றொரு டிரைவர் பெரியசாமி உடன...
தமிழகம்
வைரவன் உடலுக்கு தங்கபாலு, வாசன் அஞ்சலி
சென்னை : காமராஜரின் உதவியாளர் வைரவனின் உடலுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வாசன் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வைரவன்(80). இவர், 1948 முதல் 1975ம் ஆண்டு வரை 27 ஆண்டுகாலம் காமராஜர் மறையும் வரை அவரிடம் உதவியாளராக பணியாற்றினார். காமராஜரைப் பற்றி, "காம...
இந்தியா
இந்தியா முழுவதும் உஷார் நிலை
புதுடில்லி : பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடைபெறுவதையொட்டியும், இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை சீர்குலைக்கும் வகையிலும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தியா முழுவதும் மத்திய அரசு உஷார் நிலையில் இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு தேவையான முன...
General
விம்பள்டன் டென்னிஸ் : 2வது சுற்றுக்கு பூபதி ஜோடி தகுதி
லண்டன் : லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் 2வது சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி பெலாரசின் மேக்ஸ் மிரினி ஜோடி தகுதி பெற்றுள்ளது. இந்த ஜோடி இன்று நடந்த போட்டியில் அர்ஜென்டினாவின் மேக்சிமோ கோன்காலேஜ் மற்றும் செபாஸ்டியன் பிரிடோ ஜோடியை 7-5, 6-1,7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற...
தமிழகம்
மாநாடு வளாகத்தில் நடைபாதை கடைகளால் தொல்லை!
கோவை : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாக ரோட்டில் நடைபாதை கடைகள் அமைக்க அனுமதித்ததால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அரங்கம், இணைய கண்காட்சி, கண்காட்சி அரங்கம், உணவகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவிநாசி ரோட்டிலும்,...
தமிழகம்
கோவை குற்றாலத்தில் குவிந்த வெளிமாவட்ட தி.மு.க.,வினர்
பேரூர் : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த தி.மு.க.,வினர் கோவை குற்றாலத்தில் குவிந்தனர். கோவையிலிருந்து 42 கி.மீ தொலைவில் கோவைகுற்றால அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். இதனால் ஜில்லென்ற சூழலில் குளிக்க ஏராளமான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு வரும் மக்களுக்கு ஏமாற்றம் மிச்சம்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்போடு வரும் மக்களுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொது மேடை அரங்கில் அனுமதிப்பது என்றால், நாங்கள் வெய்யிலில் நின்று வானத்தை வேடிக்கை பார்ப்பதா என்று பொது மக்கள் மனம் நொந்து கொண்டனர். கோவை கொடிசியா வளாகத்தில் உலகத் தமி...
தமிழகம்
கோவைக்கு கேரளா மக்கள் வருகை குறைந்தது : மாற்று வழித்தடத்தில் பஸ்கள்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு காரணமாக கோவை பரபரப்பாக உள்ளதால், கேரளா மாநில மக்கள் வருகை கோவைக்கு குறைந்துள்ளது.கோவையில் வரும் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதால் அனைத்து வழித்தடங்களிலும் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக - கேரளா எல்லைகளில் அமைக்கப்பட்ட போ...
தமிழகம்
தூத்துக்குடியில் கடல் சீற்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடல் சீற்றம் காரணமாக, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதி சீற்றமாக காணப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதையடுத்து 1,000 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுத...
இந்தியா
மாநில அரசிற்கு எதிர்கட்சிகள் ஓத்துழைப்பதில்லை : எடியூரப்பா
பெங்களூரு : மாநில அரசிற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.  பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபையிலும், வெளியிலும் எதிர்கட்சிகள் தங்கள் கடமைகள் செய்வதில்லை. மாநில அரசிற்கு ஒத்துழைப்பு வழங்காமல், மக்கள் மனதில் அரசை பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்துவ...
தமிழகம்
செம்மொழி மாநாடு : நாட்டிய நாடகம் நிகழ்ச்சி
கோவை : கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று பத்மா சுப்ரமணியம் குழுவினரின் நாட்டிய நாடகம் நடந்தது. போர் வாளும் பூவிதழும் என்ற தலைப்பில் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியி்ல் வினித் நடனமும் இடம்பெற்றது.
தமிழகம்
அருவி தடாகத்தில் மூழ்கிய மதுரை மாணவர் மாயம்
திருநெல்வேலி : பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கிய, மதுரை மாணவர் மாயமானார். அவரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தேடிவருகின்றனர்.மதுரை, கூடல்நகர், சேகர் மாரியப்பன் மகன் பிரவீன்(15). பத்தாம் வகுப்பு மாணவரான இவர், குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிக்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வந்தார். இன்று மாலை பிரவீன், அவரது ...