category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவின்றி ரோடுகளில் தவிப்பு : முதுகுளத்தூரில் அதிகரிப்பு
முதுகுளத்தூர்,: மனநலம் பாதிக்கப்பட் டவர்கள் ரோடுகள், தெருக்களில் ஆதரவின்றி தவித்து வருவது முதுகுளத்தூர் பகுதியில் அதிகரித்துள்ளது.மாற்றுதிறன் கொண்டவர்கள், தொற்றுநோயினால் பாதிக்கபட்டவர்களை தங்களது வீடுகளில் வைத்து பாதுகாக்கமுடியாதவர்கள் விழாக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விட்டு செல்வது அதிகரித்துள்ளது. முதுகுளத்த...
தமிழகம்
சின்னக்கீரமங்கலத்தில் தேவை போக்குவரத்து போலீஸ்
திருவாடானை: சின்னக்கீரமங்கலத்தில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் டிராபிக் போலீசாரை நியமிக்க வேண்டும்.திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் நான்கு ரோடுகள் பிரிந்து செல்லும் வகையில் உள்ளது. திருச்சி, ராமேஸ்வரம், மதுரை, தொண்டி இணையும் நான்கு வழி சாலையாக உள்ளது. பயணிகள் இறங்கி, ஏறும் வகையில் முக்கிய மையமாக அமைந்துள்ளதால் தின...
தமிழகம்
கவரிங் நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.4.60 லட்சம் மோசடி
சிவகாசி : சிவகாசி அருகே கவரிங் நகைகளை தொடக்க கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து 4.60 லட்ச ரூபாய் மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிவகாசி தாலுகா, மாரனேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. அதில் சில நாட்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலக ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் தமிழ் உணர்வு டீ ஷர்ட்டுகள்
கோவை : செம்மொழி மாநாட்டில் தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் நூறுசதம் தமிழ் என்ற பெயரில் டீ ஷர்ட்டுகள் விற்பனையானது. தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகளில் படிக்கும் தமிழில் ஆர்வம் கொண்ட தமிழ் மாணவர்கள் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்திருந்தனர். தமிழகம் முழுக்க உள்ள தமிழ் கூட்டமைப்பை சென்னையைச் சேர்ந்த முகில்சந்திரன் வழிநடத்திச் செல...
தமிழகம்
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வீதி உலா நடந்தது. நேற்று அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் முதலில் நான்கு ரதவீதகளில் முதன்முதலாக வல...
தமிழகம்
மொழியால் வேறுபட்டிருந்தாலும், கலாச்சாரத்தால் ஒன்று பட்டிருக்கிறோம்
கோவை: மொழியால் வேறுபட்டிருந்தாலும் கலாச்சாரத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சாத்தனார் அரங்கில் நாணயவியல் தொடர்பாக 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். அவர் பேசிய பின் உரைக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய கணபதி ஸ்தபதி தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல...
தமிழகம்
காஞ்சி சங்கராச்சாரியார் ஜூலை 1ல் மதுரை வருகை
மதுரை : காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஜூலை 1ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை வருகிறார். மேலமாசிவீதி மதனகோபால சுவாமி கோயிலுக்கு வரும் அவருக்கு, அறங்காவலர் குழுத் தலைவர் பால.தம்புராஜ், ஜனக்கல்யாண் மாவட்ட தலைவர் ஆனந்தாஅமிர்தம், மதுரை பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லைபாலு தலைமையில் பூர்ண...
தமிழகம்
பொறியியல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு?
சென்னை : ஏ.ஐ.சி.டி.இ., புது விதிமுறைகள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், இந்த ஆண்டு எந்தெந்த கல்லூரிகளில், எவ்வளவு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஏ.ஐ.சி.டி.இ., இன்னும் வழங்கவில்லை. வழக்கு திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அன்று துவங்கவிருந்த ப...
தமிழகம்
தலைகீழாக தொங்கி தண்ணீரில் இந்திய வரைபடம் வரைந்த தொழிலாளி
தூத்துக்குடி : தூத்துக்குடி, கோவில்பட்டியில் நேற்று, மத ஒற்றுமையை வலியுறுத்தி கட்டட தொழிலாளி, கயிறு மூலம் தலைகீழாய் தொங்கி, தண்ணீரில் கலர், வெள்ளைப் பொடிகள் மூலம் இந்திய வரைபடம் வரைந்து சாதனை படைத்தார்.கோவில்பட்டி, வடக்கு புது கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முத்துகுமார்(26). இவர், முட்டை ஓட்டில் தேசத் தலைவர்கள் பட...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி அமர்வரங்கில் இன்று
கோவை: இன்று நீதியரசர் வள்ளிநாயகம், ஆளுடையபிள்ளை உள்ளிட்டோர் பங்குபெறும் அமர்வரங்கம் கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது. கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்...
தமிழகம்
இன்றும், நாளையும் கோவை நகரம் திணறும்
கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நேற்று வரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று கட்டுக்கடங்காத வகையில் திரண்ட மக்கள் வெள்ளத்தால், மாநாட்டு வளாகமே சிக்கித் திணறியது. இன்றும், நாளையும் மாநாட்டில் கூடும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு மற்றும்...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வு : அ.தி.மு.க., கண்டனம்
சென்னை : அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வால், ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என, அ.தி.மு.க., செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்...
தமிழகம்
சுற்றுலா மையங்களில் கரை வேட்டிகள் நெரிசலால் திணறுகிறது ஊட்டி நகரம்
ஊட்டி : செம்மொழி மாநாட்டின் பெரும்பாலான வாகனங்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்ததால், சுற்றுலா மையங்கள் அனைத்தும் கரை வேட்டிகளால் திக்குமுக்காடி வருகின்றன. கோவை மாநாட்டிற்கு வந்த பெரும்பாலான தி.மு.க., கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, கோவை குற்றாலம், பிளாக் தண்டர் என சுற்றுலா மையங்களை நோக்கி படை...
தமிழகம்
விழுப்புரம் - வேலூர் பாதையில் சரக்கு ரயில் வெள்ளோட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் - வேலூர் அகலப் பாதையில் முதல் முறையாக சரக்கு ரயில் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. விழுப்புரம் - வேலூர் இடையே 160 கி.மீ., தூரம் மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு, அகலப் பாதை அமைக்கும் பணி 500 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வந்தது. இத்திட்டத்தில் 11 ரயில்வே ஸ்டேஷன்கள், 110 ரயில்வே கேட் அமைக்கப்பட்டது. இற...
தமிழகம்
மாநாட்டில் பங்கேற்க ஐகோர்ட் நீதிபதிகள் வருகை
கோவை : கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் சென்னை மற்றும் ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகள் ஐந்து பேர் பங்கேற்கின்றனர்.  உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று இம்மாநாட்டில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் இளங்கோ, வாசுகி, தமிழ்வாணன், க...
தமிழகம்
ஒரு கோடி புத்தகங்கள் இடம்பெற்ற பிரமாண்ட புத்தக கண்காட்சி
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஒன்றரை லட்சம் தலைப்புகளில், ஒரு கோடி புத்தகங்கள் இடம்பெற்றுள்ள புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது. கண்காட்சியை, மத்திய அமைச்சர் வாசன் திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் மொத்தம் 136 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பல்வேறு பல்கலைக்கழகங்கள், சாகித்ய அகடமி மற்றும் விஜயா பதிப்...
தமிழகம்
தமிழ் மீது காதல் கொண்ட மணிப்பூர் பெண் அறிஞர் : திருக்குறளை மொழிபெயர்த்தார்
கோவை : தமிழ் மீது காதல் கொண்ட மணிப்பூர் பெண்மணி, தமிழில் மொழியியல் ஆய்வு மேற்கொண்டதோடு, திருக்குறளை தாய்மொழியில் மொழிபெயர்த்துள்ளார். செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான நேற்று நடந்த ஆய்வரங்கத்தில், மணிப்பூரை சேர்ந்த சொய்பம் ரெபிக்கா தேவி பங்கேற்றார். இவர், மைசூரிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மொழிபெயர்ப்புத்துறை மையத்த...
தமிழகம்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் எண் மாற்றம்
சென்னை : சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் எண் மாற்றம் செய்யப்பட்டு, வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. சென்னை எழும்பூரிலிருந்து தினமும், திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் 6123 என்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் எண், வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து 6723 ஆக மாற்றப்படுகிறது...
தமிழகம்
பழநி மலைக்கோவிலில் அன்னாபிஷேக விழா
பழநி : உலக நலன், அமைதி, செழுமை வேண்டி பழநி ஆண்டவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் அன்னாபிஷேகத்தையொட்டி, தங்க சப்பரத்தில் வெள்ளிப் பூண் போட்ட பெரிய சங்கு பிரதானமாக வைக்கப்பட்டிருந்தது. தங்க சப்பரத்தின் முன் 108 சங்குகள் வைக்கப்பட்டு சங்கு பூஜை நடந்தது. சங்குகளில் புண்ணிய நதிகளில் இருந்து ...
தமிழகம்
ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு அரசு சார்பில் பாராட்டு சான்று
சிவகங்கை : ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு சான்றுடன், 140 ரூபாய்க்கு கைத்தறி துண்டு அணிவித்து, வழியனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நாளில், துறைத் தலைவர் தலைமையில் பிரிவு உபசார விழா நடக்கும். இதில், துறையின் "செல்வாக்கிற்கு' ஏற்ப தங்க மோதிரம், சங்கிலி அணிவிக்கப்படும். வி...
தமிழகம்
கோவில் யானைகள் பராமரிப்பு : வண்டலூரில் பாகன்களுக்கு பயிற்சி
மதுரை : கோவில் மற்றும் தனியார் யானைகளை பராமரிப்பது குறித்து, பாகன்களுக்கு அடுத்த மாதம் வண்டலூர் வனஉயிரியல் பூங்காவில் வனத்துறை சார்பில், பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கோவில் மற்றும் தனியார் பராமரிக்கும் யானைகள் பெரும்பாலானவை பிச்சை எடுக்கவும், பாகன்கள் வருமானத்திற்கும் பயன்படுகின்றன. யானைகளை முறையாக பர...
தமிழகம்
ஒட்டன்சத்திரம் பகுதியில் போலி டாக்டர்கள் கைது
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில், போலி டாக்டர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்பகுதியில் போலி டாக்டர்கள், கிளினிக் வைத்து நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, கே.கீரனூர் வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு திடீர் ஆய்வு செய்தார...
தமிழகம்
பொருளாதார பின்னடைவு வரும் வர்த்தக பிரமுகர்கள் கருத்து
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வை அதிகரிக்கும். பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று வர்த்த சங்க பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் : பெட்ரோல், டீசலை வைத்துதான் அனைத்து பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வு அதிகம். திடீரென்று உயர்த்தியது...
தமிழகம்
விதவைக் கோலத்தில் பொங்கல் வழிபாடு
ஆத்தூர் : நல்லசேவகன் சுவாமிக்கு, திருமணமான பெண்கள் விதவைக் கோலத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் நத்தக்கரை கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான நல்லசேவகன் சுவாமி கோவில் உள்ளது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை இங்கு நடக்கும் திருவிழா, கடந்த 21ம் தேதி துவங்கியது. ஏழு நாட்கள் நடக்கும் வ...
தமிழகம்
மன்னார் வளைகுடா கடல் தீவில் மரங்கள் வெட்டிக்கடத்துவதை தடுக்க நடவடிக்கை
ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா கடல் தீவுகளில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் வளைகுடாவில், பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை 21 தீவுகள் உள்ளன. ஒவ்வொரு தீவும் அளவில் மாற்றம் கொண்டிருந்தாலும், அனைத்திலும் வனம் சார்ந்த வளங்கள் அதிகம் உள்ளன. தீவுகள் என்பதால், இங்கு பெரும்பாலும் கண...
தமிழகம்
கார்- லாரி மோதல்: 4 பேர் பலி
நாகமலை : மதுரை அருகே துவரிமான் நான்கு வழிச்சாலையில் காரும், லாரியும் மோதிக்கொண்டதில், நான்குபேர் பலியாகினர்.மதுரை அருகே மண்ணாடிமங்கலத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி சுந்தரம் (40), மனைவி வேணி (35), உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி, சென்னையை சேர்ந்த சரவணன் (31) நேற்று மதுரையிலிருந்து "இண்டிகா' காரில் மண்ணாடிமங்கலம் ந...
தமிழகம்
பொருளாதார பின்னடைவு வரும்: வர்த்தகர்கள் கருத்து
பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வை அதிகரிக்கும். பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று வர்த்த சங்க பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.* தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் : பெட்ரோல், டீசலை வைத்துதான் அனைத்து பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வு அதிகம். திடீரென்று உயர்த்தியத...
தமிழகம்
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு விலைவாசி உயரும்: பொதுமக்கள் எதிர்ப்பு
மதுரை: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால், அத்தியவாசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எனவே, விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.முரளி, தொழிலதிபர், கோச்சடை: இது மிக அதிகமான விலை உயர்வு. நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு 35 சதவீத கலால்வரி, மாநில அரசுகளின் விற்பனை வர...
தமிழகம்
கால்வாயில் ஆண் உடல்
வாடிப்பட்டி,: பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து முல்லை ஆற்றுக்கு செல் லும் கால்வாய் மதுரை ஆண்டிபட்டி பங்களா - மேட்டு நீரேத்தான் விலக்கில் உள்ளது. இக்கால்வாயின் மடைக் குள் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது.
தமிழகம்
ஆண்டு விழா
மதுரை: மதுரை மீனாட்சி நகர், ராஜிவ் காந்தி தெரு மற்றும் கிழக்குப் பகுதி குடியிருப்போர் பொது நலச்சங்க ஆண்டு விழா நடந்தது. தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.செயலர் சேகர், துணை தலைவர் ஜீவானந்தம், துணை செயலர் ராஜ்குமார், பொருளாளர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர்.
தமிழகம்
பெட்ரோலியம் டீலர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உத்தரவு செல்லாது: ஐகோர்ட்
மதுரை: மதுரையில் கலப்பட பெட்ரோல் விற்றதாக தகுதியில்லாத ஆய்வு நிறுவனம் தந்த அறிக்கையின்படி டீலர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உத்தரவு செல்லாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை செண்பகமூர்த்தி பிரதர்ஸ் நிர்வாக பங்குதாரர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு:நாங்கள் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுடன் ஓப்பந்தம் செய...
இந்தியா
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் புதிதாக 107 திறக்க அரசு முடிவு
புதுடில்லி : நாடு முழுவதும் கூடுதலாக, 107 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும், தற்போது 981 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 50 ஆயிரம் ஊழியர்களும், 10 லட்சம் மாணவர்களும் படிக்கின்றனர். ராணுவம் மற்றும் மத்திய அரசு பணிகளில் பணியாற்றுபவர்கள், அடிக்கட...
தமிழகம்
உட்கட்சி தேர்தலில் பிரமுகர் கொலை மதுரை அ.தி.மு.க., செயலாளர் ஆஜர்
மதுரை: கட்சி பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக மதுரை அ.தி.மு.க., நகர செயலாளர் செல்லூர் ராஜூ உட்பட ஆறு பேர் ஆஜராயினர்.மதுரையில் கடந்த 2003 நவ., 11ல் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் தமுக்கம் மைதானத்தில் நடந்தது. 31வது வார்டு செயலாளர் பதவிக்கு, முன்னாள் துணை செயலாளர் பால்பாண்டியும், இவரை எதிர்த்து சிவஜோதியும் போட்டியிட்டனர். இதி...
தமிழகம்
பா.ஜ.,நிர்வாகிகள் நியமனம்
மதுரை: மதுரை நகர் பா.ஜ., இளைஞரணி மாவட்ட பொது செயலாளராக கண்ணன், துணை தலைவர்களாக சரவணன், ராஜா, கார்த்திகாமணி, செயலாளர்களாக குமார், மணிவண்ணன், சுபாஷ்சந்தர், மணிகண்டன், பொருளாளராக செந்தில் நியமனம் செய்யப்பட்டதாக மாவட்ட தலைவர் ராஜன், நகர் தலைவர் ராஜரத்தினம் தெரிவித்துஉள்ளனர்.
தமிழகம்
வாடிப்பட்டியில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி: 30 பேர் காயம்
வாடிப்பட்டி: திண்டுக்கல் - மதுரை ரோட்டில், வாடிப்பட்டி தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ் கவிழ்ந்து இரண்டு பேர் பலியாகினர். முப்பது பேர் காயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு நேற்று தனியார் பஸ் (டி.என்.57 எம் 4566) பகல் 12 மணிக்கு வந்து கொண்டிருந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் அன்பரசன் ஓட்டிவந்தார்....
தமிழகம்
தண்டனை கைதி சாவு
மதுரை: மதுரை தனக்கன் குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(47). கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, 1987 முதல் மதுரை சிறையில் அடைக்கப் பட்டார். உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்ட ஆறுமுகம், நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
தென்மாவட்ட ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதம்
சென்னை : விருத்தாச்சலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், தென்மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும், ஆறு மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சில ரயில்கள் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பல மணி நேரம் தவித்தனர். விருத்தாச்சலம் அருகே நேற்று முன்தினம் இரவு, ரயில்வே தண்டவாளத்தில், பெர...
தமிழகம்
கொலை வழக்கில் ஒருவர் கைது
அவனியாபுரம்: மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டில் டிசம்பர் 2008ல் இரு கோஷ்டிகளிடையே மோதல் நடந்தது. இதில் மாரிமுத்து, ரமேஷ், மூர்த்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக இரு கோஷ்டிகளை சேர்ந்த பலரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த அழகுமலை தேடப் பட்டு வந்தார். இவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ...
தமிழகம்
வாடிப்பட்டியில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி: 30 பேர் காயம்
வாடிப்பட்டி : திண்டுக்கல் - மதுரை ரோட்டில், வாடிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ் கவிழ்ந்து இரண்டு பேர் பலியாகினர். முப்பது பேர் காயமடைந்தனர். திண்டுக்கலில் இருந்து மதுரைக்கு நேற்று தனியார் பஸ் பகல் 12 மணிக்கு வந்து கொண்டிருந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் அன்பரசன் ஓட்டிவந்தார். வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன் பக...
தமிழகம்
நான்கு வழிச்சாலையில் கார் - லாரி மோதல் : நான்கு பேர் பலி
நாகமலை புதுக்கோட்டை : மதுரை அருகே துவரிமான் நான்கு வழிச்சாலையில் காரும், லாரியும் மோதிக்கொண்டதில், நான்கு பேர் பலியாயினர். மதுரை அருகே மண்ணாடிமங்கலத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி சுந்தரம் (40), மனைவி வேணி (35),அதே பகுதியை சேர்ந்த லட்சுமி, சென்னையை சேர்ந்த சரவணன் (31) நேற்று மதுரையிலிருந்து "இண்டிகா' காரில் மண்ணாடிமங்கலம...
தமிழகம்
திருமங்கலத்தில் தண்டவாளம் உடைப்பு : ரயில்கள் தப்பின
திருமங்கலம் : திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே டிராக் பிரியும் இடத்தில் அரை அடிக்கும் மேல் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்ததால் விபத்தின்றி தப்பின. திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, விருதுநகரில் இருந்து வரும் ரயில்களை பிளாட்பாரத்திற்கு பிரித்து விடும் இடத்தி...
தமிழகம்
சிறுத்தை தோலை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயன்ற இருவர் கைது; ஒருவர் ஓட்டம்
தேனி : வருஷநாடு மலைப் பகுதியில், சிறுத்தையை வேட்டையாடி தோலை இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற ஊராட்சி உதவியாளர் உட்பட இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர்; ஒருவர் தப்பியோடிவிட்டார். தேனி மாவட்டம், வருஷநாடு அருகே குமணன்தொழு ஊராட்சி உதவியாளராக பணிபுரிபவர் துரைப்பாண்டி(35). இவர், கடமலைக்குண்டைச் சேர்ந்த செந்தில்குமார்(...
General
ஸ்பெயின் அணி வெறறி
ஜோகனஸ்பெர்க்: தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின்-சிலி அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வெற்றி கொண்டது.மேலும் எச் பிரிவில் இடம் பெற்றிருந்த இரு அணிகளும் புள்ளி கணக்கின் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
தமிழகம்
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய படகு
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் நேற்று அதிகாலையில் , முன்பகுதி உடைந்த நிலையில் பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியது. நீல நிறம், 18 அடி நீளத்துடன் கரை ஒதுங்கிய படகு குறித்து மீன்துறை மற்றும் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர். படகில் சிறிய டீசல் கேன்கள் மட்டுமே இருந்தன. படகை பார்வையிட்ட அ...
தமிழகம்
கும்பாபிஷேகத்துக்கு சென்ற பெண்ணிடம் பறித்த தங்க சங்கிலி மீண்டும் மீட்பு
அரியலூர்: கீழப்பழுவூர் அருகே கும்பாபிஷேகத்துக்கு சென்ற பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை போலீஸார் மீண்டும் மீட்டனர். அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே மேலப்பழுவூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் நடந்தது. கும்பாபிஷேகத்துக்கு வந்த அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து மனைவி தில்லைய...
தமிழகம்
மீனவ கிராமத்தில் திடீர் தீ 35 வீடுகள் நாசம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நேற்று மீனவ கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 35 வீடுகள் எரிந்து நாசமாயின. பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சேதமேற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில், "100 வீடு காலனி' என்ற மீனவர்கள் நிறைந்த பகுதி உள்ளது. இதன் பின்புறம் அடர்ந்து இருந்த முட்செடியில் நேற்று மதியம் 12.30 மணிக்...
தமிழகம்
விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் தர்மபுரி உழவர் சந்தை அவலம்
தர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தையில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் நுழைந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு தரமான, நியாயமான விலையில் காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் உழவர் சந்தை துவங்கப்பட்டது. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை...
தமிழகம்
பிரம்மஞான சங்க முப்பெரும் விழா
தர்மபுரி: தர்மபுரி பிரம்மஞான சங்கம் சார்பில் இயற்கை மருத்துவம், யோகா, அக்குபஞ்சர் மருத்துவ விழிப்புணர்வு முகாம் ஆகிய முப்பெரும் விழா நாளை (ஜூன் 27) காலை 10 மணிக்கு வள்ளலார் அறிவாலயம் ஆங்கிலப்பள்ளியில் நடக்கிறது. பிரம்மஞான சங்க பொருளாளர் பிரேம்குமாரின் உலகளாவிய வழிபாடுடன் விழா துவங்குகிறது. தலைவர் சுப்பிரமணியன் தலைமை வக...
தமிழகம்
தலைகீழாக தொங்கி தண்ணீரில் இந்திய வரைபடம் வரைந்த தொழிலாளி
தூத்துக்குடி: கோவில்பட்டியில் நேற்று, மத ஒற்றுமையை வலியுறுத்தி கட்டட தொழிலாளி கயிறு மூலம் தலைகீழாய் தொங்கி, தண்ணீரில் கலர்,வெள்ளைப்பொடிகளைக்கொண்டு இந்திய வரைபடம் வரைந்து சாதனை படைத்தார்.கோவில்பட்டி, வடக்கு புதுகிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முத்துக்குமார்(26). இவர், முட்டை ஓட்டில் தேசத்தலைவர்கள் படம் வரைந்தது, வேப்...
தமிழகம்
திருமண மண்டபத்தில் மொய் கவர் திருடிய சிறுவன் கைது
தர்மபுரி: தர்மபுரியில் திருமண மண்டபத்தில் மொய் கவர் திருடிய சிறுவனை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 21ம் தேதி நடந்த திருமணத்தின் போது, மணமகனின் உறவுப்பெண் உறவினர்களிடம் இருந்து மொய் கவர்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது, அவரது உறவினர் ஒருவர் பார்க்க வேண்டியது இருந்ததால், ...
தமிழகம்
முதலிரவு நேரத்தில் மணமகன் கைது : முதல் திருமணத்தை மறைத்ததாக புகார்
சென்னை : முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தவரை, முதல் மனைவியின் புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது); பி. காம்., பட்டதாரி. இதே பகுதியில் குடியிருந்த தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டி பட்டியைச் சேர்ந்த குமரவேல் (31). எம்.எஸ...
தமிழகம்
கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த பெரியமுதலிபட்டியை சேர்ந்தவர் விவசாயி சேகர் (45) இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று முன்தினம் தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். இந்த கயிறு திடீரென அறுந்ததால் மாடு அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் (பொறுப...
தமிழகம்
மாவட்ட நீதிபதி தலைமையில் நடந்த திருமணம்
கரூர் : காதலியை கைவிட்ட காதலனிடம், நீதிமன்றத்தில் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாவட்ட நீதிபதி முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் சேங்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் மகன் பாக்கியராஜ் (24); எம்.சி.ஏ., முடித்தவர். அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயா மகள் துளசிமணி (19), பி.காம்., இ...
தமிழகம்
கிரானைட் கல், மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே வருவாய் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள், மணல் ஏற்றி சென்ற மூன்று லாரி உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். காரிமங்கலம் பைபாஸ் ரோட்டில் டி.ஆர்.ஓ., மணிவண்ணன் தலைமையில் பாலக்கோடு தாசில்தார் மணி, ஆ...
தமிழகம்
ஆறுமுகம் பாலிடெக்னிக் மாணவர்கள் வாரிய தேர்வில் சாதனை
தர்மபுரி: தர்மபுரி எஸ்.எம்.ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரிய தேர்வில் சாதனை படைத்தனர். இக்கல்லூரி இ.சி.இ., மாணவன் கண்ணன் 600க்கு 592 மதிப்பெண்களும், மெக்கானிக்கல் பிரிவு மாணவன் சடகோபன் 583 மதிப்பெண்களும், இ.இ.இ., மாணவர் சக்திவேல் 580 மதிப்பெண்களும், கம்ப்யூட்டர் பிரிவு மாணவி புவனேஸ்வரி, சிவமணி ஆகியோர் 587 ம...
தமிழகம்
மருத்துவ முகாம்
தர்மபுரி: தர்மபுரி வெண்ணாம்பட்டி வேப்பமரத்துக்கொட்டாயில் திருமூலர் மூலிகை மருந்துகள் தயாரிப்பகம் சார்பில் இன்று (ஜூன் 26) இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் அன்னதானப்பெருவிழா நடக்கிறது. காலை 8.30 மணிக்கு சிவபூஜை மற்றும் தன்வந்திரியாகத்தை அர்ச்சகர் சச்சிதானந்தர் நடத்தி வைக்கிறார். இலவச சித்த முகாம் காலை 9 மணி முதல் 3 மண...
தமிழகம்
பார்வையற்ற தம்பதியருக்கு சமத்துவபுரத்தில் வீடு வழங்கல்
தர்மபுரி: நல்லம்பள்ளி யூனியனை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியருக்கு சமத்துவபுரத்தில் வீடு வழங்கப்பட்டது. நல்லம்பள்ளி யூனியனை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது கணவர் வீரய்யன். இவர்கள் இருவருக்கும் கண் பார்வை கிடையாது. இவர்களின் ஆண் குழந்தையும் உடல் நலக்குறைவால் இறந்தார். இவர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தங்களுக்கு இலவச வீடு வ...
தமிழகம்
பொறுப்பேற்பு
தர்மபுரி: தர்மபுரி நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வரும் 28ம் தேதி டி.என்.சி., விஜய் மஹாலில் நடக்கிறது. புதிய தலைவராக ரவியும், செயலாளராக லட்சுமிகாந்தன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சுருளிகுமார், முன்னாள் ஆளுநர் செல்வராஜ், உடனடி முன்னாள் தலைவர் சங்கர்கணேஷ், முதல் உதவித்தலைவர் ஜெயராம்சுந்தரம், இரண்டாம்...
தமிழகம்
­­சு­கா­தா­ர பயிற்சி முகாம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் சேஃப் தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமை, பஞ்சாயத்து தலைவர் பிரேமாசந்திரன் துவக்கி வைத்தார். தொண்டு நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மோகன்குமரவேல் முன்னிலை வகித்தார். முகாமில், "பஞ்சாயத்து ரா...
தமிழகம்
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது
திருச்சி : திருச்சியில் வறுமையைக் காரணம் காட்டி, இரண்டு ஏழை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த 14 வயது பள்ளி மாணவர் முதல் 42 வயது லோடுமேன் வரையிலான ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, அரியமங்கலம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி (35). இவருடைய கணவர் சுகுமார், ஏழாண்டுக்கு முன் இறந்துவிட்டார். ...
தமிழகம்
டேங்கர் லாரி மோதி இரண்டு பேர் பலி
நாகப்பட்டினம் : நாகை அருகே, டேங்கர் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இருவர் இறந்தனர். நாகை அடுத்த திருப்பூண்டியைச் சேர்ந்தவர் ஜெகபர் சாதிக்(28). இவரது உறவினர் ஜெரினாபேகம்(40) என்பவருடன் நேற்று காலை நாகூர் வந்து, பின் பைக்கில் திருவாரூர் சென்றார். சிக்கல், பனைமேடு என்ற இடத்தின் அருகே எதிரில் வந்த டேங்கர் லாரி மோதியதில், சம...
தமிழகம்
கல்வி உதவித்தொகை பெற வேண்டுமா? ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு
கரூர்: மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் எஸ் .எஸ்.எல்.ஸி., வகுப்புக்கு மேல் கல்வி பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: கல்வி உதவித்தொகை பெறுவதுக்கு ஆதித...
தமிழகம்
துவக்கப்பள்ளி முன் வேகத்தடை வே.பாளையம் மக்கள் கோரிக்கை
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் காந்தியார் துவக்கப்பள்ளி முன் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானாவிலிருந்து டி.என்.பி.எல்., செல்லும் சாலையில் வேலாயுதம்பாளையம் காந்தியார் துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. சுற்றிப்பகுதிகளில் உள்ள 500க்கு மேற்பட்ட குழந்தைகள் இப்பள...
தமிழகம்
குடிபோதையில் கைக்குழந்தையை விற்ற கொடூர தந்தை
குளித்தலை: குளித்தலையில் குடிபோதையில் தனது ஆறு மா த பெண் குழந்தையை விற்றார். அந்த குழந்தையை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குளித்தலை கீழமுதலியார் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்தவர் மரம் அறுக்கும் தொ ழிலாளி கிருஷ்ணன் (37). குமாரபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகள் செல்வி (30). இருவருக்கும் கடந்த ஏழாண்டுக்கு முன் திரும...
தமிழகம்
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே பட்டா வழங்க கூலித் தொழிலாளியிடம் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவி மங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா மனைவி தமிழரசி(50). கூலித்தொழிலாளியான இவருக்கு, 2004ம் ஆண்டு இரண்டு சென்ட் நிலம் அரசு ...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம் டி.என்.பி.எல்., ஏற்பாடு
கரூர்: புகளூர் அடுத்த காகிதபுரம் டி.என்.பி.எல்., சார்பில் 179வது இலவச மருத்துவ முகாம் ஜூன் 29, 30ம் தேதிகளில் நடக்கிறது. ஜூன் 29ம் தேதி ஓனவாக்கல்மேட்டில் காலை 9.15 முதல் 10 மணி வரையும், நல்லியாம்பாளையத்தில் காலை 10 முதல் 10.45 மணி வரை, சொட்டையூரில் காலை 10.45 முதல் 11.15 மணி வரை, மூலிமங்கலத்தில் காலை 11.30 முதல் மதியம்...
தமிழகம்
சிந்தலவாடி பஞ்., சாலை பழுது: விவசாயிகள் அவதி
லாலாபேட்டை: லாலாபேட்டை அடுத்துள்ள சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நந்தன்கோட்டை- மகாதானபுரம் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மழை காலங்களில் விவசாய விளைபொருளை கொண்டு செல்ல விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியிலிருந்து மகாதானபுரம் பஞ்சாயத்து பிடாரி அம்மன் சாலை இணைப்பு வரை சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்ச...
தமிழகம்
கையெழுத்து வாங்க கடத்திச் சென்ற முன்னாள் ஊராட்சி தலைவர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே உறவினரை கடத்தி, வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் அருகே வாணியை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவரின் உறவினர் காரீ கூட்டத்தை சேர்ந்த சாக்கரைக்கோட்டை ஊராட்சியின் முன்னாள் தலைவர் நூர் முகமது. இவர்களுக்குள் சொத்து தொடர்பான ...
தமிழகம்
ரோட்டரி சங்க விழா
கரூர்: ரோட்டரி கிளப் ஆஃப் கரூர் டெக்ஸிட்டி 2009-10ம் ஆண்டு நிறைவு விழா இன்று நடக்கிறது. கரூர் ஹோட்டல் ஹேமலா ஹேமாஞ்சலி ஹாலில் காலை 10.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பேராசிரியர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜேந்திரன், குமணன், பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை கழ்த்துகின்றனர். சங்க தலைவர் ரமேஷ்,...
தமிழகம்
வயிற்று வலியால் அவதி இளம்பெண் தற்கொலை
கரூர்: கரூர் அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகள் மதுராதேவி (28). கரூரிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் ...
தமிழகம்
பெண்ணை கத்தியால் குத்தி 12.5 பவுன் நகைக்கொள்ளை
க.பரமத்தி: அரவக்குறிச்சி அருகே டூ வீலரில் சென்ற பெண்ணை கத்தியால் குத்தி 12.5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவனை போலீஸார் தேடி வருகின்றனர். அரவக்குறிச்சி அருகே முத்தனம்பாளையம் கவுண்டர் தோட்டம் கனராஜ் மனைவி ஜோதிமணி. இவர் நேற்றுமுன்தினம் இரவு டி.வி.எஸ்.,50 டூ வீலரில் தென்னிலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்ப...
தமிழகம்
விசாரிக்க தயக்கம் காட்டிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி : கொலை குறித்து தகவல் அறிந்தும், நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (45). இவரது மனைவி சித்திரை வடிவு. குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். சங்கரநாராயணன், அதே ஊரில் வசிக்கும் சித்திரைவடிவு தந்தை தங்கப் பாண்டியனிடம்...
தமிழகம்
கவரிங் நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.4.60 லட்சம் மோசடி
சிவகாசி : சிவகாசி அருகே கவரிங் நகைகளை தொடக்க கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து 4.60 லட்ச ரூபாய் மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி தாலுகா, மாரனேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. அதில் சில நாட்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலக...
தமிழகம்
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடந்தது.திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வீதி உலா நடந்தது. நேற்று அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் முதலில் நான்கு ரதவீதகளில் முதன்முதலாக வலம்...
இந்தியா
முதல்வருக்காக அமைக்கப்பட்ட மேடை ஐகோர்ட் உத்தரவுபடி அதிரடி அகற்றம்
திருவனந்தபுரம் : கேரள முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக சாலை ஓரமாக அமைக்கப்பட்ட விழா மேடை, ஐகோர்ட் உத்தரவு காரணமாக அதிரடியாக அகற்றப்பட்டது. முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நேற்று மாலை நெய்யாற்றிங்கரா நகராட்சியில் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. விழாவுக்காக, நாகர்கோவில் - திருவனந்தபுரம...
இந்தியா
கோல்கட்டா ஐகோர்ட்டில் வக்கீல்கள் பெரும் ரகளை
கோல்கட்டா : கோல்கட்டா ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி அறையை வக்கீல்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோல்கட்டா ஐகோர்ட்டில், கோர்ட்டில் பணிபுரியும் அதிகாரிகளுக்காக ஒரு குறிப்பிட்ட அறையை ஒதுக்கி, தலைமை நீதிபதி மொகித் ஷா உத்தரவிட்டார். இதற்கு வக்கீல்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 60க்கும் மேற்பட்ட வக்க...
தமிழகம்
கடலில் மாயமான கரன்ட் மீட்டர் கருவி தேடும் பணியில் ஒரு பகுதி கண்டெடுப்பு
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை நடுக்கடல் பகுதியில் ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த கரன்ட் மீட்டரின் ஒரு பகுதி கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போய், நேற்று கண்டெடுக்கப்பட்டது. சேதுசமுத்திர திட்டத்தின் கீழ் கொச்சியில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி மண்டலத்தின் சார்பில் கடந்த ஃபிப்., 12ம் தேதி கோடிய...
தமிழகம்
இலவச நிலம் வழங்கலில் மோசடி புகார் : வருவாய்த்துறையின் விசாரணை துவக்கம்
திண்டுக்கல் : வத்தலக்குண்டு அருகே அரசு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தில் மோசடி புகார் குறித்து வருவாய்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக் குண்டு அருகே சந்தையூர் கிராமம் உள்ளது. இங்குள்ள தாதப்பட்டி, ராஜதானிக்கோட்டை, தெற்கு வலையபட்டி, வடக்கு வலையபட்டி கிராம மக்களிடம், அரச...
தமிழகம்
வேதை அருகே வீட்டில் பொருட்கள் திருட்டு
வேதாரண்யம்: வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் செந்தில்குமார் (32). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, காற்றுக்காக கதவு திறந்து வைக...
தமிழகம்
சவுதிஅரேபியாவில் நர்சு பணி பதிவு செய்து கொள்ள அழைப்பு
புதுக்கோட்டை: சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நர்சுகளாக பணியாற்ற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுடைய பெயர்களை சென்னையில் உள்ள அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சவுதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் க...
தமிழகம்
தீயில் கருகி பெண் பலி: ஆர்.டி.ஓ., விசாரணை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தீயில் கருகிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த கரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக்முகம்மது(25). இவரது மனைவி பஜாரியா(20). இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே ஆகிறது. கணவன், மனைவி இருவ...
தமிழகம்
மணமகள் தாயிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்
சென்னை:சென்னை, அண்ணாநகர், 11வது அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முரளிசங்கர் (54). இவரது மனைவி ஜாய். இவர்களது மகள் திவ்யாவின் திருமணம்,நடைபெற்றதுதிருமணத்தின் போது, மணமகளின் தாய் ஜாய் தனது கையில் 40 ஆயிரம் ரூபாய் மொய்ப்பணம் அடங்கிய பையை வைத்திருந்தார். மணமக்களைஆசீர்வதிக்க உறவினர்கள் அழைத்த நிலையில், அவரது கையில் வைத்திருந்த...
தமிழகம்
கடையை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் அதிரடி கைது
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே பேன்ஸி ஸ்டோர் பூட்டை உடைத்து மொபைல்ஃபோன்கள், ரீசார்ஜ் கூப்பன்களை ருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (37). போச்சம்பள்ளி அடுத்த அகரத்தில் பேன்ஸி டோர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இவரது பேன்சி ஸ்டோர் பூட்டை உடைத...
தமிழகம்
அண்ணனை கொலை செய்த தம்பி கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சோமார்பேட்டை ஆசாத் நகரை சேர்நதவர் சரவணன் (32). இவரது மனைவி பீரம்மா (28). சரவணனின் தம்பி பீரன் (30). இவரது மனைவி கவிதா (26). சரணவனும், பீரனும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். சகோதரரர்களக்கு இடையே வீட்டு நிலம் பிரிப்பத்தில் முன் விரோதம் இருந்தது. நேற்று காலை பீரம்மா வீட்டை தண்ணீ...
தமிழகம்
மாங்கனி கண்காட்சியில் இன்று இன்னிசை கச்சேரி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் மாங்கனி கண்காட்சியில் இன்று இன்னிசை கச்சேரி நடக்கிறது. மாலை 5 மணிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை. மாலை 6 மணிக்கு சென்னை தீபா நாடக மன்றம் வழங்கும் விழிப்புணர்வு நாடகம். ஏற்பாடு: மாங்கனி ...
தமிழகம்
இளம் பெண் தற்கொலை முயற்சி
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே இளம் பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரத்தை சேர்ந்தவர் எல்.ஐ.சி., ஏஜன்ட் சந்திரசேகர். இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன் தினம் சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ண...
தமிழகம்
மாயமான குழந்தை பிணமாக மீட்பு
கிருஷ்ணகிரி: கல்லாவி அருகே மாயமான குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. போச்சம்பள்ளி அடுத்த கல்லாவி பாப்புசெட்டிப்பட்டியை சேர்ந்த தங்கராஜ்-சுசிலா தம்பதியரின் குழந்தை ஜெயஸ்ரீ (3). கடந்த நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் படுத்திருந்த ஜெயஸ்ரீ மாயமானார். இது குறித்து சுசீலா கல்லாவி போலீஸில் புகார் செய்தார். மாயமான குழந்தையை போலீஸார...
தமிழகம்
குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சந்தைபேட்டை சேர்ந்தவர் சஞ்சீவன் (28). இவரது மனைவி செண்பகம் (23). இவர்களுக்கு ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சதா (5), சஞ்சய் (2) என இரு குழந்தைகள் உள்ளனர். பெயிண்ட...
தமிழகம்
தீயில் கருகி பெண் மர்ம சாவு
திருவண்ணாமலை: ஆரணி அருகே தீயில் கருகி பெண் மர்மான முறையில் இறந்தார். ஆரணி சைதாப்பேட்டை நாடக சாலைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி அமுதா (30), மணிகண்டன் சந்தைமேடு பகுதியில் தள்ளு வண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். அமுதா வீட்டிலேயே மாவு அரவை வைத்து தொழில் நடத்தி வந்தார். மணிகண்டனுக்கும், அமுதாவுக்...
தமிழகம்
போலி பில் தயாரித்து 12 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி
திருவண்ணாமலை: போலி பில் தயாரித்து 12 டன் ரேஷன் அரிசி கடத்திய போது லாரியுடன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். செங்கம் அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் பறக்கும்படை தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆர்.ஐ., பஞ்சமூர்த்தி மற்றும் காளிதாஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த லார...
தமிழகம்
திருச்சி அருகே வி.ஏ.ஓ., கைது லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி
மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே பட்டா வழங்க கூலித்தொழிலாளியிடம் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவி மங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா மனைவி தமிழரசி(50). கூலித்தொழிலாளியான அவருக்கு 2004ல் இரண்டு சென்ட் நிலம் அரசு சார்பில் ...
தமிழகம்
விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டம் எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆவேசம்
திருச்சி: ஜப்தி செய்த டிராக்டர்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். விவசாயிகளிடமும், அவர்களது குடும்பத்தாரிடமும் தரக்குறைவாக நடந்து கொண்ட எஸ்.பி.ஐ., கடன் வசூல்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சியில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து, அரைநிர்வாணப் போராட்டம் நடத்தியது பெரும் பர...
தமிழகம்
திருச்சியில் பள்ளி கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
திருச்சி: திருச்சியில் பள்ளி கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள கல்லாங்காடு பகுதியில் கமலா நிகேதன் கல்வி நிறுவனம் சார்பில், புதிய பள்ளிக்கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடப்பணிகள் கடந்த சில மாதங்களாக விறு...
தமிழகம்
தண்டவாளத்தில் ஆலமரம் விழுந்ததால் திருச்சி ரயில்கள் 6 மணி நேரம் தாமதம்
திருச்சி: விருதாச்சலம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆலமரம் விழுந்ததால், திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதமாத திருச்சி வந்து சென்றன. விருதாச்சலம் அருகே கோ.பூவனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே பழமையான பெரிய ஆலமரம் உள்ளது. நேற்று முன்தினம் வீசிய காற்றில் இந்த மரம் திடீரென அருகிலிருந்த தண்டவாளத்தில் சாய்ந்தது. இதி...
தமிழகம்
செம்மொழி மாநாடு எதிர்ப்பு போஸ்டர் ஒட்டிய 20 பேர் கைது
திருச்சி: கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய 20 பேரை பாலக்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவையில் நடந்து வரும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்கள் அடங்கிய போஸ்டர் நேற்று காலை காந்தி மார்க்கெட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது....
தமிழகம்
ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. கோவில் யானை ஆண்டாள் தங்கக்குடத்தில் புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீரெங்கநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் அன்று ஆனி திருமஞ்சனம் என்றழைக்கப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநா...
தமிழகம்
புனித ஸ்நாபக அருளப்பரின் திருவிழா தேர்பவனி கோலாகலம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே என்.பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பர் தேவாலயம் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி நடந்த நவநாள் விழாவில் விழாவில் மணப்பாறை மறை வட்ட அதிபர் கபிரியேல், பெரியகுளத்துப்பட்டி, பங்குத்தந்தை மெர்லின், நாமகிரிப்பேட்டை ஷாஜி, ...
தமிழகம்
குறைந்த நேரத்தில் கல்விக்கடன் வழங்குங்கள் ஆய்வுக்கூட்டத்தில் வங்கியாளர்களுக்கு தஞ்சாவூர் கலெக்டர் வே
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் கிருஷ்ணபிரசாத் வரவேற்றார். கலெக்டர் சண்முகம் பேசியதாவது: கடந்தாண்டு வணிக வங்கிகள் வேளாண் கடனாக 920.18 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டு, 967.26 கோடி ரூபாய் அதாவது 105 சதவீத கடன் வழங்கி உள்ளது. விவ...
தமிழகம்
கர்நாடகத்திடம் இருந்து நீர் பெற நடவடிக்கை தஞ்சை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: கடந்தாண்டு கூட்டுறவு மூலம் பயிர் கடன் 38 கோடி வழங்க இலக்கு நிர்ணயித்து 81.4 கோடி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் 90 கோடிக்கு மேல் கடன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் பெற்ற விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த...
தமிழகம்
ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று ஆனி தெப்பத்திருவிழா
மன்னார்குடி: வைணவ ஸ்தலங்கள் சோழநாட்டில் பல உள்ளன. அவைகளில் ஆச்சாரியார்களால் போற்றிப்புகழப்பட்ட திருப்பதியாக விளங்கும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் ஹரித்திரா நதி எனும் குளத்தில் பவுர்ணமி நிலவில் இன்று (26ம் தேதி) தெப்பத்திருவிழா நடக்க உள்ளது. ஸ்ரீவித்யராஜகோபாலன் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் மூலம் மக்களுக்கு அருள்ப...