category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அவரை,வெண்டை விலை சரிவு | ஒட்டன்சத்திரம்: கேரளாவில் ஸ்டிரைக் நடந்ததால் ஒட்டன்சத்திரத்தில் வெண்டை, அவரை விலை சரிந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நேற்று ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது. கேரளாவில் ஸ்டிரைக் நடக்கும்போது, அதனை பெரிதும் சார்ந்துள்ள ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி அடையும். இதனையொட்டி நேற்று ம... |
தமிழகம் | பழநியில் அருணாகிரிநாதர் விழா | பழநி: பழநியில் திருப்புகழ் அன்பர்கள் சார்பில் அருணகிரிநாதர் விழா நடந்தது. பழநி திருஆவினன்குடி கோயில் உட்பிரகாரத்தில் அருணகிரிநாதர் கோயில் உள்ளது. வேல், சேவல், மயில் வகுப்புக்கள் பாடி அருணகிரிநாதருக்கு பால், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்புகழ் இசை... |
தமிழகம் | தாண்டிக்குடியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு | தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் மழையும், சூறைக்காற்றும் வீசியதால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. தாண்டிக்குடி,பண்ணைக்காடு, மங்க ளம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை உள்ளிட்ட பகுதியில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. ஜூனில் இதுவரை 130.மி.மீ.... |
தமிழகம் | திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் மரம் சரிந்து தொழிலாளி பலி | தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நேற்று பனைமரம் சரிந்து விழுந்ததில், தொழிலாளி பலியானார். திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில், நாழிக்கிணறு மற்றும் சுற்றுப்பகுதியில் பல பனைமரங்கள் உள்ளன. நேற்று காலை 8.45 மணியளவில் "பவர் ஹவுஸ்' அருகில் ஒரு பனைமரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது. திசையன்விளை, தலை... |
தமிழகம் | கூடுதல் கட்டணம் வசூல் பஸ்கள் சிறைபிடிப்பு | பழநி: பழநி பாலசமுத்திரத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ், மினிபஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன. கடந்த மாதம் பாலசமுத்திரத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ்கள் சிறைபிடிக்கப்பட் டன. வருவாய்துறை முன் னிலையில் பேச்சுவார்த் தை நடந்தது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை என தனியார் பஸ் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. ... |
தமிழகம் | மருந்திற்கு கட்டுப்படாத காசநோய் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவல் | திண்டுக்கல்: தொடர் சிகிச்சைக்கு கட்டுப்படாத காசநோய் தாக்குதல், திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் அறிக் கை: திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப் பாட்டுத் திட்டம், மாவட்ட கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் காசநோய் உள்ளவர்களை கண்டறிந்து,... |
தமிழகம் | உருவ பொம்மைகள் எரிப்பு:40 பேர் கைது | திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப் பாட்டம் நடந்தது. சி.ஐ. டி.யூ., ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில துணைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
பின்பு காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல், பிரதமர் மன்மோகன்சிங், பெட்ரோலிய அமைச்சர் முரளிதியோரா, முதல்வர் கருணாநிதி ஆகி... |
தமிழகம் | அதிகாரி ஆய்வு | திண்டுக்கல்: தேசிய தோட்டக்கலை மற்றும் அபிவிருத்தி நிறுவனம், மத்திய அரசின் தோட் டக்கலை இயக்க திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மண்டலத்தில் 2009-10ம் ஆண்டின் திட்ட செயல்பாடுகளை, மத்திய தோட்டக்கலை இயக்க முதுநிலை ஆலோசகர் ஓம்பிரகாஷ் ஆய்வு செய்தார். வெங்காய விதை உற்பத்தி, வெங்காய சேமிப்பு பட்டறை குறித்த விபரங்க... |
தமிழகம் | அதிமுக கூட்டணி கட்சி சங்கங்கள் ஆதரவு திமுக கூட்டணி கட்சியும் பங்கேற்பதால் புதிய பரபரப்பு | தூத்துக்குடி : டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடக்கிறது. திமுக, தவிர அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்கின்றன. தேர்தல் வரும் நேரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சியும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... |
தமிழகம் | குடிநீர் கேட்டு பஸ் மறியல் | நிலக்கோட்டை: நிலக்கோட்டை பேரூராட்சியில் 3வது வார்டு பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இப்பகுதியினர் நேற்று நால்ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., பாலசுப்பிரமணி மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒரு மணி நேரத்தில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் கால் மணிநேரம் ... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை அபாய கட்டத்திற்கு போகும் என அதிகாரிகள் அதிர்ச்சி | தூத்துக்குடி : டீசல் விலை உயர்வினால் நெல்லை அரசு போக்குவரத்துகழகத்திற்கு மாதத்திற்கு 45 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் இந்த போக்குவரத்துகழகத்திற்கு டீசல் விலை உயர்வு மேலும் பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அரசு போக்குவரத்துகழகம் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட... |
தமிழகம் | பெட்ரோல் பங்க் திறப்பு விழா | பண்ணைக்காடு: கொடைக்கானல் மெயின் ரோடு ஊத்து பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் புதிய கிளையான பருவேந்திரமணி அன் கம்பெனியின் பெட் ரோல் பங்க் திறப்பு விழா நடந்தது. பாரத் பெட்ரோலிய கோவை மண்டல விற் பனை அதிகாரி இளஞ் செழியன் முதல் விற்பனை யை துவக்கி வைத்தார். பங்க் உரிமையாளர் ஆர்.தமிழ்முருகன், பண் ணைக்காடு ஒன்றிய தலைவர் க... |
தமிழகம் | பழநியில் அருணாகிரிநாதர் விழா | பழநி : பழநியில் திருப்புகழ் அன்பர்கள் சார்பில் அருணகிரிநாதர் விழா நடந்தது. பழநி திருஆவினன்குடி கோயில் உட்பிரகாரத்தில் அருணகிரிநாதர் கோயில் உள்ளது. வேல், சேவல், மயில் வகுப்புக்கள் பாடி அருணகிரிநாதருக்கு பால், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்புகழ் இச... |
தமிழகம் | உண்டு உறைவிட பள்ளி துவக்க விழா | திண்டுக்கல்: வடமதுரை ஒன்றியம், ஏ.கோம்பையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு உறைவிடப்பள்ளி துவக்க விழா நடந்தது. ஒன்றிய மேற்பார்வையாளர் மீனாம்பிகை தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பேபி, எஸ்தர்ராஜம் முன்னிலை வகித்தனர். இதில் ஐந்து முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி செல்லாத மாணவர்கள் சேர்க்கப்படும் மு... |
தமிழகம் | தூத்துக்குடி மாநகராட்சி புதிய பிரமாண்ட கட்டடம் | தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி புதிய பிரமாண்ட கட்டடத்தை நேற்று சென்னை கூடுதல் இயக்குநர் பிச்சை ஆய்வு செய்தார். தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி புதிய பிரமாண்ட கட்டடம் 4 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 99 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் கட்டடத்தில் லிப்ட் வசதி ம... |
தமிழகம் | கண்துடைப்பிற்கு நடந்த ஆக்கிரமிப்பு அகற்றம் | வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் கண்துடைப்பிற்காக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு பின் மீண்டும் கடைகளை வைக்க துவங்கி விட்டனர். வத்தலக்குண்டு போக்குவரத்து நெரிசலில் இங்கிருந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இரண்டு நாட்களாக பெயருக்காக நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றத்தில் கட்டடங்கள் இடிக்கப்படவில்லை. கடைகள... |
தமிழகம் | கருத்தாய்வு மைய பயிற்சி | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு சமச்சீர் பாடத் திட் டத்தில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையப் பயிற்சி நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆறாம் வகுப்பு படைப்பாற்றல் கல்வி முறையில் புதிய அணுகுமுறை குறித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளித்தொகுப்பு கருத்... |
தமிழகம் | அய்யலூரில் வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதில் தாமதம் | வடமதுரை: திண்டுக்கல்- திருச்சி இடையே அமைக்கப் பட்டு வரும் நான்கு வழிச் சாலை திட்ட பணியில் அய்யலூரில் மேம்பாலம் அமைகிறது. இதற்காக அதிகளவில் நிலம் தேவைப்பட்டதால் தற்போதைய கடைவீதி முழுவதுமே ரோடு பணிக் காக கையகப்படுத்தப் பட்டுள்ளது.
இதில் களர்பட்டி- எரியோடு ரோட்டிற்கு கிழக்கு பகுதியில் இருந்த இடங்களுக்குரிய இழப்பீட்டுத் த... |
தமிழகம் | தமிழகத்தில் காலியாக உள்ள 917 இடங்களுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் | தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 917 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்காக இ.வி.எம் மிஷின்கள் மாநிலம் முழுவதும் தயார்படுத்தப்பட்டு வருவதாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கிறிஸ்டோபர் சேவியர் நாயகம் தெரிவித்தார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு இடைத் தே... |
தமிழகம் | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை கொடுமை:கந்து வட்டி பிரச்னையா என போலீஸ் விசாரணை | சென்னை:கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்து வட்டி காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சென்னை ஜாபர்கான்பேட்டை, சேகர் நகர், செல்வ விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் இக்பால்(55). இவரது மனைவி அம்ருன்னிசா(44). இவர்களுக்கு ஒரு ம... |
தமிழகம் | பழநியில் தொடரும் மணல் திருட்டு: நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் | பழநி: பழநி பாலாறு-பொருந்தலாறு நீர் செல்லும் பாதையில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. பழநி அருகே பொதுப்பணித்துறையின் கீழ் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகள் உள் ளன. வரதமாநதி அணையில் இருந்து வெளியேறும் நீர் ஆயக்குடி வரை உள்ள குளங்களை நிரப்புகிறது. பாலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் சண்முகநதியாக சுமார் 20 கி.மீ., ஓடி,... |
தமிழகம் | பயிற்சி முகாம் | பழநி: பழநியில் வேளாண் மை, தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை திட் டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் காளிமுத்து முன்னிலை வகித் தார். தேசிய மாதிரி ஆய்வு அலுவலக கண்காணிப் பாளர் ஞானஜோதி, புள்ளியியல்துறை உதவி இயக்குனர் சீனிவாசன் ஆகியோர... |
தமிழகம் | செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெய்வீக மாங்கனி திருவிழா | கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் தெய்வீக மாங்கனி வரவழைத்தல் திருவிழா நடந்தது. அகில உலகத்தில் சாதாரண ஏழை எளிய குடும்பம் முதல் அரசாளும் அரசர்கள் வரை சிவனை நினைந்து தஞ்சம் அடைந்து பேரும் புகழும் பெற்றவர்கள் 63 நாயன்மார்கள். அந்த 63 நாயன்மார்களில் தாயும் தந்தையுமற்ற இறைவன் அம்மையே... |
தமிழகம் | பண்ணை வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை | சோழிங்கநல்லூர்:சோழிங்கநல்லூர் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில், வீட்டில் சமையல் வேலை செய்தவர், 40 சவரன் நகையை கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோழிங்கநல்லூர் பகுதியில் 1/194 என்ற முகவரி கொண்ட பண்ணை வீட்டில் வசிப்பவர் நந்தகோபால்(58). இவரது மனைவி லதா(41).நந்தகோபால் கோல்கட்டாவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை ... |
தமிழகம் | முன்விரோதம் கத்திக்குத்து | பழநி: சித்தையன்கோட்டை அருகே உள்ள போடிக்காமன்வாடியை சேர்ந்தவர் ராஜகோபால்(46). இவரது அண்ணன் மகன் பாண்டிராஜன்(25). முன்விரோதம் காரணமாக பாண்டியராஜன் கத்தியால் குத்தியதில் ராஜகோபால் பலத்த காயமடைந் தார். இவர் பழநி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளார். டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | ஸ்ரீவை.,யில் விழிப்புணர்வு பேரணி | ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஸ்ரீவை., கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பேரணியை பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் தியாகசெல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி செயலர் சண்முகநாதன், தலைமை ஆசிரியர் நல்லமுத்து மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து க... |
தமிழகம் | வாகனம் வழங்கல் | பழநி: த.மு.மு.க., சார்பில் ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள வாகன அர்ப்பணிப்பு விழா நடந்தது. விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி துணை தலைவர் ஹக்கீம், தி.மு.க., நகர செயலாளர் ஆ.வேலுமணி, தே.மு.தி.க., நகர தலைவர் வெங்கடசுப்ரமணி, த.மு.மு.க, மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மாநில செயலாளர் ஹாஜாகனி, மாவட்ட பொ... |
தமிழகம் | உதவி உபகரணங்கள் வழங்கும் விழா | ஒட்டன்சத்திரம்: அனைவருக்கும் கல்வி இயக்கம்,மாற்றுத் திறன் குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா தொப்பம்பட்டியில் நடந்தது. எய்டு-எட் ஆக்சன் தொண்டு நிறுவனம் மூலமாக அலிம்கோ நிறுவனத் திடமிருந்து பெறப்பட்ட உதவி உபகரணங்கள், வட்டார வள மைய மேற் பார்வையாளர் திருக் கண்... |
தமிழகம் | பாதிரியார் மீது பொதுமக்கள் புகார் | சென்னை:கட்டடம் கட்டுவதற்காக, பங்கு மக்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு வருவதாக, ஆதம்பாக்கம் பாதிரியார் மீது, பேராயரிடம் பங்குமக்கள் புகார் தெரிவித்தனர்.சென்னை, வேளச்சேரி, நேரு நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் நேற்று காலை சென்னை சாந்தோமில் உள்ள பேராயர் சின்னப்பா அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதி... |
தமிழகம் | நில மோசடி:மூவர் கைது | சென்னை:ஏற்கனவே விற்ற சொத்தை போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் வேறு ஒருவருக்கு விற்ற நில உரிமையாளர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.சூளைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் ரவிவர்மன், சசிக்குமார். இருவரும் வெளிநாட்டில் பணியாற்றுகின்றனர். ரவிவர்மனின் மனைவி பிரியா.சசிக்குமாரின் மனைவி கவிதா இருவரும் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ... |
தமிழகம் | புதூர் டவுன் பஞ்.,சில் திட்டப் பணிகள்: மாவட்ட கலெக்டர் பிரகாஷ் ஆய்வு | விளாத்திகுளம் : தூத்துக்குடி மாவட்டம், புதூர் டவுன் பஞ்., பகுதி வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். ரூ.46 கோடியே 60 லட்சத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட ஆரம்ப பணிகளை பார்வையிட கலெக்டர் பிரகாஷ் புதூர் டவுன் பஞ்.,க்கு வருக... |
தமிழகம் | இனிகோ நகர் மக்களுக்கு நலத்திட்ட உதவி | தூத்துக்குடி : ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் அறிவுரையின்படி இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்க... |
தமிழகம் | புன்னக்காயல் ஆலயத்தில் திருவிழா | தூத்துக்குடி : புன்னக்காயல் புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையின் சார்பில் அசிசிசபை திருவிழா கொண்டாடப்பட்டது. விழா திருப்பலியினை பங்குத்தந்தை வேதநாயகம் மற்றும் மரியஜான் ஆகியோர் இணைந்து செய்தனர். திருப்பலியை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் 101 ஏழைக் குடும்பத்தினருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் அறப்பணி விழா நடந்தது. விழாவி... |
தமிழகம் | ரேஷன் மண்ணெண்ணெய் வழங்குவதில் முறைகேடுகண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியல் | வண்ணாரப்பேட்டை:ரேஷன் கடையில், மண்ணெண்ணெய் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால், வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ரேஷன்கார்டு தாரர்களுக்கு, ரேஷன் கடையில் பொதுவினியோக பொருட்கள் வ... |
தமிழகம் | ரன்வேயில் தண்ணீர்:விமானங்கள் தாமதம் | திரிசூலம்:புறநகரில் பெய்த திடீர் மழையால் விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால், 13 விமானங்கள் தரை இறங்குவது மற்றும் புறப்படுவதில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று மலை திடீர் மழை பெய்தது. இதனால், விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. மழை நின்ற பின் தேங்கிய தண்ணீரை விமான நிலைய... |
தமிழகம் | வருஷாபிஷேக விழா | கோவில்பட்டி : கோவில்பட்டி காளியம்மன் கோயிலில் 3ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கோவில்பட்டி காளியம்மன் மற்றும் கருப்பசாமி கோயிலில் 3வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் ஸ்தபன கும்ப கலச பூஜை, புண்யாகவாஜனம், ருத்ரஜெயம், நவக்கிரக ஹோமம், பூ... |
தமிழகம் | மங்களபுரம் பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா | ஏரல் : மங்களபுரம் டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியின் புதிய பள்ளி கட்டிடத்தை எம்.பி., ஜெயதுரை திறந்து வைத்தார்.ஏரல் அருகேயுள்ள மங்களபுரம் டி.டி.டி.ஏ., பள்ளிக்கு, எம்.பி., தொகுதி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. திறப்பு விழாவில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் தலைமை வ... |
தமிழகம் | பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டலின் கீழ் 2,000 மாணவர்களின் மதிப்பெண்கள் மாறின | சென்னை : பிளஸ் 2 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களில், 2,000 பேரின் மதிப்பெண்கள் மாறியுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் நகலுக்கு 63 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி 8,... |
தமிழகம் | இலவச நோட்புக் வழங்கும் விழா | கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. கோவில்பட்டி புனித வின்சென்ட் தே பவுல் சபை வளனார் ஆலயம் சார்பில் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் சபை சார்பாக சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களுக்காக பங்குத்தந்தை அன்னாசாமி அடிகளா... |
தமிழகம் | தூத்துக்குடி மறைமாவட்ட மறைக்கல்வி மாநாடு துவங்கியது | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட மø றக்கல்வி மாநாடு நேற்று துவங்கியது. இதில் மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மற்றும் முதன்மை குருக்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவர்களுக்கு அரைமணி நேரம் மறைக்கல்வி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1984ம் ஆண்... |
தமிழகம் | இலவச சீருடை வழங்கும் விழா | கழுகுமலை : கழுகுமலை வின்சென்ட் தே.பவுல் சபையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. கழுகுமலையில் நூற்றாண்டு பாரம்பரியமிக்க தூய லூர்தன்னை தேவாலயத்தில் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல் பல்வேறு பக்த சபைகள் செயல்பட்டு வருகிறது. இதில் உலகம் தழுவிய அமைப்பாக செயல்பட்டு வரும் வின்சென்ட் தே. பவுல் ச... |
தமிழகம் | ஏ.டி.எம்., கார்டு இல்லாமல் அரசு ஆசிரியர்கள் அவதி | உத்திரமேரூர்:உத்திரமேரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏ.டி.எம்., கார்டுக்கு விண்ணப்பித்து ஏழு மாதங்களாகியும் கிடைக்காததால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.உத்திரமேரூர் மெயின் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெருநகர... |
தமிழகம் | காமராஜர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் காமராஜர் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. காமராஜர் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நிறுவனத் தலைவர் ஸ்டான்லி தலைமையில் நடந்தது. மாநில துணை அவைத் தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அற்புதராஜ் வரவேற்றார். மாநில வர்த்தக அணித்தலைவர் ... |
தமிழகம் | ஸ்ரீவை.,யில் பிராமணர் சங்க நிர்வாகிகள் கூட்டம் | ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் பிராமணர் சங்க நிர்வாகிகள் குழு கூட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் சங்க கட்டிடத்தில் வைத்து நடந்த கூட்டத்திற்கு கிளைத் தலைவர் ஸ்ரீனிவாசதாத்தம் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமி நரசிம்மன் வரவேற்றார். கூட்டத்தில் கிளை சங்கம் துவங்கிய 30வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்த வேண்ட... |
தமிழகம் | வாலிபர் கொலை வழக்கில் நான்கு பேர்...சரண்:காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு | ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது. இதுதொடர்பாக, நான்கு பேர் திருவள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் கிராம எல்லையில் உள்ள முள்புதரில் கடந்த 23ம் தேதி, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் முழுவதும் வெ... |
தமிழகம் | சாயர்புரம் அருகே கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி | சாயர்புரம் : சாயர்புரம் அருகே 3 கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்திருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோயில். இக்கோயிலின் பின் பக்க சுவரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் துளை... |
தமிழகம் | நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபடவேண்டும்: எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவுரை | செங்கல்பட்டு:இளைஞர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என, இந்திய இளைஞர் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்தார்.எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் இரண்டாவது இந்திய இளைஞர் அறிவியல் காங்கிரஸ் அமைப்பின் மாநாடு, ப... |
தமிழகம் | விஷம் குடித்து விவசாயி தற்கொலை | செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூரில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். செய்துங்கநல்லூர் அருகே விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் வனராஜ்(46) விவசாயி. இவருக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தினால் முகம் மற்றும் தலைப்பகுதி சுருங்கி இருக்கும். அதனைத் தெ õடர்ந்து அவருக்கு வலிப்பு நோயும் வந்துள்ளது... |
தமிழகம் | பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா | தூத்துக்குடி, ஜூன் 27- மாப்பிள்ளையூரணியில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 21ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், திருமுறை பாராயண நிகழ்ச்சிகள் நடந்தது. கும்பாபிஷேக விழாவன்று அதிகாலை மங்கள பூஜை, திருமுறைபாராயணம், நான்காம் கால யாக பூஜை, த்ரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, யாத... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி : பயிற்சி வகுப்பை ஒத்திவைக்க உத்தரவு | திண்டுக்கல் : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காரணமாக, ஜூலை 3ல் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட இருந்த பயிற்சி வகுப்பு, ஜூலை 24க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்வழி கற்றல், படைப்பாற்றல் வழிக்கல்வி நடைமுறையில் உள்ளன. தற்போது முதல், ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது... |
தமிழகம் | திருமண விழா | சாயர்புரம் : மறைந்த சாயர்புரம் போப் கல்லூரி பேராசிரியர் இஸ்ரவேல் மகன் இம்மானுவேலுக்கும், தென்காசி கணக்கபிள்ளை வலசையை சேர்ந்த சாமுவேல் மகள் ஷைனி ரெபேக்காவிற்கும் திருமணம் நடந்தது. சாயர்புரத்தில் நடந்த வரவேற்பு விழாவில் சாயர்புரம் போப் இன்ஜி.,கல்லூரி தாளாளர் ஜெகன், நாடார் பாதுகாப்பு பேர வை தலைவர் சுபாஷ் பண்ணையார், தூத்து... |
தமிழகம் | ரேஷன் கடைகளில் ஆய்வு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள ரேஷன் கடைகளில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் உத்தரவின் படி தூத்துக்குடி மா வட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்திலுள்ள 57 ரேஷன் கடைகளில் இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் படை குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அத்தியாவச... |
தமிழகம் | ரத்த தானம் | தூத்துக்குடி : கோவில்பட்டி வெற்றிநிச்சயம் ஆண்கள் சுய உதவிக்குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாம் கோவில்பட்டி மாவட்ட அரசு தø லமை ஆஸ்பத்திரியில் டாக்டர் சங்கரசுப்பு முன்னிலையில் நடந்தது. குழு ஊக்குநர், பிரதிநிதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்... |
தமிழகம் | ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் ஆலோசனை கூட்டம் | திருவள்ளூர்:மேல்நிலைக்கல்வி மாணவ, மாணவியருக்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் மேல்நிலைக்கல்வி மாணவ, மாணவியருக்காக உளவியல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உளவியல் டாக்டர் விருதகிரிநாதன் பேசுகையில், "மாணவ, மாணவியர் சரிவிகித உணவு உட்கொண்ட... |
தமிழகம் | போதை பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நடைபயணம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று உலக போதைப் பொருள் தடுப்பு தினத்தை ஒட்டி நடைபயணம் நடந்தது. இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் நேற்று போதைப்பொருள் தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தூத்துக்குடி கடலோர காவல்படை சார்பில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை ஒட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ... |
தமிழகம் | அருணகிரி நாதர் பிறந்த நாள் விழா | திருத்தணி:திருப்புகழ் பாடிய முருகபக்தர் அருணகிரி நாதரின் பிறந்த நாள் விழா திருத்தணியில் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு, ம.பொ.சி., சாலையில் சுந்தர விநாயகர் கோவிலிலிருந்து பஜனை குழுவினர் பாடல்கள் பாட அருணகிரிநாதர் திருஉருவப்படம் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மலைக்கோவில் வளாகத்தில் உள்... |
தமிழகம் | தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்து அரசு உத்தரவு | தேனி : வாழ்த்து அட்டையிலும் கோரிக்கை வைத்து, முதல்வருக்கு தொகுப்பூதிய பணியாளர்கள் தனித்தனியாக அஞ்சல் அட்டை அனுப்பியதையடுத்து, 782 பேரை பணிவரன் முறை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு 2003 ல் 12 ஆயிரம் பேரை 4000 ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்களாக நியமித்தது. அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செ... |
தமிழகம் | பரமக்குடியில் காற்றழுத்த தறி இயந்திரம் : அதிகாரிகள் குழுவினர் ஆய்வு | ராமநாதபுரம் : கர்நாடகாவில் உள்ளதை போல, பரமக்குடியிலும் காற்றழுத்த தறி இயந்திரம் பயன்பாட்டை கொண்டு வர, அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் ஏராளமான நெசவாளர்கள் உள்ளனர். அங்கு கைத்தறி முறையில் தயாராகும் ஜவுளிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இப்பகுதியில் உள்ள நெசவாளர்... |
தமிழகம் | பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் : அகில இந்திய ஆய்வுக்கு உத்தரவு | சிவகங்கை : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளின் விபரங்கள் குறித்த ஆய்வு நடத்த, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) உத்தரவிட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன்படி, அனைத்து மாநிலங்களிலும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படு... |
தமிழகம் | குற்றால சீசன் துண்டுக்கு அதிக வரவேற்பு | ராஜபாளையம் : குற்றால சீசன் துண்டுகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளதால், ஆண்டு முழுவதும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. குற்றாலத்தில் விற்கப்பட்ட ஒரு வகை துண்டின் ரகத்திற்கு "குற்றால சீசன்' துண்டு என வியாபாரிகள் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். மிகவும் மெலிதாகவும், ஈரத்தை எளிதாக உறிஞ்சும் வகையிலும் இத்துண்டு தயார... |
தமிழகம் | சேலத்தில் அதிகரிக்கும் முதியோர் இல்லங்கள் | பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் இக்கால தலைமுறையினரின் கொடுமையால், சேலம் மாவட்டத்தில், முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. சேலம் மாவட்டத்தில் 20க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. அரசு மானியம் பெறும் ஒரு சில முதியோர் இல்லங்களில், ஆதரவில்லாமல் தவிக்கும் முதியோருக்கு உணவு, இடம் இலவசமாக கொடுத்து பரா... |
தமிழகம் | கிராமங்களுக்கு மறுக்கப்படும் கடன்கள் | மதுரை : பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில் (பி.எம்.இ.ஜி.பி.,) கிராமப்புறங்களில் பெட்டிக்கடை அமைக்க மற்றும், வியாபாரக் கடன்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வருவதற்கு முன்பாக, 1984 ல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் (எஸ்.இ.இ.யு.ஒய்.,) உருவாக்கப்பட்டது. இதில், பெட்டிக்கடைக... |
தமிழகம் | அம்மன் சிலை கண்டெடுப்பு | மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே வயலில் வரப்பு சீரமைக்கும் போது கருங் கல்லில் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடனசபாபதி. இவருக்கு சொந்தமான வயல் திருச்சம்பள்ளி என்ற கிராமத்தில் உள்ளது. வயலில் வரப்பு சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது நான்கடி ... |
தமிழகம் | அலங்காநல்லூர் பேரூராட்சியில் பயனற்று கிடக்கும் சிறுவர் பூங்கா | அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் உள்ளாட்சி துறை அமைச்சர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா உள்ளது. பூங்காவின் உட்புறம் தரமற்ற இரும்பு வளையங்களால் அமைக்கப்பட்ட விளையாட்டு சாதன பொருட்கள் சில நாட்களில் துருப்பிடித்து காணாமல் போனது. பெரிய பூங்கா அம... |
தமிழகம் | அதிகாரத்தை மனம் போன போக்கில் பயன்படுத்த கூடாது: ஐகோர்ட் கிளை | மதுரை: சட்டம் வழங்கிய அதிகாரத்தை, அதிகாரிகள் மனம் போன போக்கில் பயன்படுத்த கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த மீர்பக்கான் தாக்கல் செய்த ரிட் மனு:நான் வணிகவரித்துறையில் அலுவலக உதவியாளராக 1969ல் பணியில் சேர்ந்தேன். 2007 ஜூலை 31ல் ஓய்வு பெற வேண்டும். ஓய்வு பெறும் நாளான்று என்னை சஸ்பெண்ட் செய... |
தமிழகம் | தொழிலாளி தற்கொலை | வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குரங்குத்தோப்பை சேர்ந்தகூலி தொழிலாளி முத்தன் மகன் முருகேசன் (40). இவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். |
தமிழகம் | கோயில் யானைகள் பராமரிப்பு: வண்டலூரில் பாகன்களுக்கு பயிற்சி | மதுரை: கோயில் மற்றும் தனியார் யானைகளை பராமரிப்பது குறித்து, பாகன்களுக்கு அடுத்த மாதம் வண்டலூர் வனஉயிரியல் பூங்காவில் வனத்துறை சார்பில், பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கோயில் மற்றும் தனியார் பராமரிக்கும் யானைகள் பெரும்பாலானவை பிச்சை எடுக்கவும், பாகன்கள் வருமானத்திற்கும் பயன்படுகின்றன. யானைகளை முறையாக பர... |
தமிழகம் | போதைப்பொருள் ஒழிப்பு கருத்தரங்கம் | அவனியாபுரம்: மதுரை அருப்புகோட்டை ரோடு ஆர்.எல்., இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீசில் போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களின் கருத்தரங்கம், நாடகம் நடந்தன. சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து தடுப்பு நாளை முன்னிட்டு ஸ்டடீசில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் ஆனந்தகுமார் வரவேற்றார்.
கல்லூரி இயக்குனர் மனோகரன் துவ... |
தமிழகம் | இசையால் கவர்ந்த கணேசன் | மதுரை: மதுரையில் ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப் சார்பில் நடந்த இசை விழாவில் திருச்சி எஸ்.கணேசன், இனிய குரல்வளத்தால் இசைப்பிரியர்களை மகிழ்வித்தார். இவர், தனது தந்தை சுப்பிரமணிய அய்யர் மற்றும் சங்கீத மேதைகள் தென்காசி முத்துசாமி, வெச்சூர் ஹரிஹர சுப்ரமணிய அய்யர், குமாரகேரளவர்மா ஆகியோரிடம் இசை பயின்று, சங்கீத சபாக்களில்... |
தமிழகம் | கோயில் விழா | பாலமேடு: பாலமேடு அருகே மறவ பட்டியில் மகமாயி அம்மன் கோயில் விழா மூன்று தினங்கள் நடந்தது. சிவாச்சார்யர் பாலசுப்பிரமணி தலைமையில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. விநாயகர், முருகன், கருப்பு சுவாமிகளுக்கு வழிபாடு முடிந்ததும் அம்மன் கரகம் தூக்கி வந்தனர். இரவு அம்மன் பூ பல்லக்கில் நகர் வலம் வந்து அருள்பாலித்தார். |
தமிழகம் | கணக்கு அலுவலர் பணியிடங்கள் காலி : ஓய்வுபெறும் ஆசிரியர்கள் பாதிப்பு | மதுரை : கல்லூரி கல்வி இணைஇயக்குனர் அலுவலகங்களில், கணக்கு அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால் ஆசிரியர், அலுவலர்களுக்கு ஓய்வூதிய பணபலன் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கு, அயல் துறை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். குறிப்பாக கருவூலத் துறையினரே பெரு... |
தமிழகம் | மின் திருட்டு ரூ.54 ஆயிரம் அபராதம் | மதுரை: மதுரையில் மின் திருட்டு தொடர்பாக நுகர்வோர் 11 பேரிடம் இருந்து 54 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மதுரை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் பெ.கி. அழகர்சாமி அறிவிப்பு: சமயநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கி. தங்கராஜ் (பொது) தலைமையில், 23 பொறியாளர்கள் அடங்கிய குழுவினர், வாடிப்பட்டி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட 2,... |
தமிழகம் | இலவச கருத்தரங்கு | மதுரை: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் இன்றும் , நாளையும் வணிகவியல் பயின்ற மாணவர்களுக்கு பட்டய கணக்கர் (ஆடிட்டர்) படிப்புகளுக் கான ஆலோசனை, பயிற்சி கருத்தரங்கு முன்னாள் மதுரை கோர்ட் தலைவர் தர்மர் நடத்துகிறார். விபரங்களுக்கு 0452-2603562ல் தொடர்பு கொள்ளவும். |
தமிழகம் | லாரி மோதி முதியவர் பலி | மதுரை: மதுரை நேதாஜி ரோட்டில் நேற்று காலை 4.30 மணிக்கு அன்னை ரோடுவேஸ் எனும் பெயர் கொண்ட லாரி (டிஎன்38 எச்4109) நேதாஜி ரோட்டில் சென்றது. அப்போது சாலையை கடக்க முயன்ற 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் மீது லாரி மோதியதில், அவர் பலியானார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | ஜெயங்கொண்டம் அருகே சொத்து தகராறில் போஸ்ட் மாஸ்டர் அடித்துக் கொலை | அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே சொத்து தகராறு காரணமாக போஸ்ட் மாஸ்டரை, அவரது சகோதரர்களே அடித்துக் கொலை செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா, மீன்சுருட்டி போலீஸ் சரகம், வெட்டியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் படையாட்சி மகன் வேல்முருகன்(45). இவர் அதே ஊரிலுள்ள தபால்நிலையத்தில், சப்-போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி... |
தமிழகம் | பதவி ஏக்கத்தில் பெண் போலீசார் | தேனி : தமிழகத்தில் 1991ல் கவர்னர் ஆட்சியின் போது 390 முதல் நிலை மகளிர் போலீசார் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் பாதி பேர் எஸ்.ஐ., நேரடி தேர்வு எழுதி சென்று விட்டனர். மீதமுள்ள சுமார் 200 பேருக்கு பத்தொன்பது ஆண்டுகள் ஆகியும் எந்த பதவி உயர்வும் கிடைக்கவில்லை. இவர்களின் கோரிக்கையை ஏற்று 2007ல் பதவி உயர்வு வழங்கப்படும் என... |
தமிழகம் | அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் | வேதாரண்யம்: வேதாரண்யம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., செய ல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் செம்போடையில் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிவானந்தம் வரவேற்றார். மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் எழிலரசு, பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், தொகுதி செயலாளர் சண்கராஜ் ஆகியோர் மு... |
தமிழகம் | மருத்துவ குறைகள் பற்றி புகார் கூறலாம் | சென்னை : டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகம் மீதான நுகர்வோர் வழக்குகளுக்கு இனி மருத்துவ கமிட்டியின் பரிந்துரை தேவையில்லையென, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து வக்கீல் ரவிகுமார் கூறியதாவது: சேவை குறைபாடு உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான வழக்குகள், நுகர்வோர் கோர்ட்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. விசாரணைக்கு எடுத்... |
தமிழகம் | கல்வித்துறை ஊழியரை கொலை செய்ய முயற்சி மனைவி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை | கடத்தூர்: தர்மபுரி அருகே கல்வித்துறை ஊழியரை கொலை செய்ய முயன்றது தொடர்பாக அவரது மனைவி உள்ளிட்ட மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரியை அடுத்த கடத்தூரை சேர்ந்தவர் துரைசாமி (54). இவர் மொரப்பூர் உதவி தொடக்க கல்வி அலுவகலத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி (50). இவர்களுக்கு இரு ம... |
இந்தியா | 10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியரா? : வறுமைக்கோடு உங்களுக்குக் கிடையாது | புதுடில்லி : சொந்த வீடு இருக்கிறதா? 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அரசு ஊழியரா? அப்படியானால் இனி நீங்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்பவர் தான். ஆம்..மத்திய அரசு வறுமைக் கோட்டுக் கான புதிய அளவுகோலை நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது 2010 ம் ஆண்டுக்கான வறுமைக்கோட்டுக் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ஒரு பூர்... |
தமிழகம் | இரவு நேர பஸ்கள் நிறுத்தம் கிராம பகுதி பயணிகள் தவிப்பு | தர்மபுரி: தர்மபுரியில் கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இரவு நேரத்தில் நிறுத்தம் செய்யப்படுவதால், பயணிகள் பெரும் பரிதவிப்புக்குள்ளாகி வருகின்றனர். கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் நோட்டீஸ்களை விநியோகம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தர்மபுரியில் நான்கு பேரை போலீஸ... |
தமிழகம் | தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் பீதி | தர்மபுரி: தர்மபுரி நகரப்பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் தொடர்ந்து தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு கடந்தாண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போதும், நகரை சுற்... |
தமிழகம் | பைக் மீது மினிலாரி மோதி வாலிபர் பரிதாப பலி | ஓசூர்: ஓசூரில் பைக் மீது மினி லாரி மோதியதில், வாலிபர் பலியானார்.ஓசூர் நேரு நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அப்பையாசாமி (48). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் செல்வராஜ் (40). இருவரும் நேற்று முன்தினம் ராயக்கோட்டை சாலையில் பைக்கில் சென்றனர். ஆஞ்சநேயர் கோவில் அருகே செல்லும் போது, எதிரே வந்த மினி லாரி பைக் மீது மோதியது. இதில்... |
தமிழகம் | பைக் மீது கார் மோதி வியாபாரி பரிதாப பலி | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த இண்டூர் நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாட்டு வியாபாரி சுப்பிரமணி (48). இவர் நேற்று முன்தினம் மாலை இண்டூரில் இருந்து சோம்பட்டிக்கு பைக்கில் சென்றார். சோம்பட்டி அருகே சென்ற போது, பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில், சுப்பிரமணி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்... |
தமிழகம் | மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் | தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான 14 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை, கலெக்டர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சு... |
தமிழகம் | விழிப்புணர்வு பேரணி | ஓசூர்: சூளகிரி கோட்டை அரசு பள்ளி சார்பில், மாற்றுத் திறன் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனிõவசன் பேரணியை துவக்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மணிமாறன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஆசீர்மோகன்ராஜ், ஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜான் ச... |
தமிழகம் | முதியோர் உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் | ஓசூர்: ஓசூர் தாலுகா அஞ்செட்டியில் முதியோர் உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் அருண்ராய் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., பிரபாகர் முன்னிலை வகித்தார். முகாமில், 83 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மற்றும் வேளாண் துறை மூலம் ஐந்து பேருக்கு மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் மற்றும் கைதெளிப்பான்களை கலெ... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி | தர்மபுரி: பென்னாகரம் அடுத்த சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மற்றும் கிராம கல்விக்குழு கூட்டம் நடந்தது. கிராம கல்விக்குழு தலைவர் மாதன் பேரணியை துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணி முடிவில் பள்ளி வளாகத்தில் கிராம கல்விக்குழு... |
தமிழகம் | குறைதீர் கூட்டம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் காஸ் விநியோகம் சம்பந்தமான குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., பிரபாகர் தலைமை வகித்தார். தாசில்தார் தீர்த்தகிரி வரவேற்றார். ஆர்.டி.ஓ., ரத்தினவேலு முன்னிலை வகித்தார். பெண்கள் அல்லாத வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குவது குறித்தும், காஸ் அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க... |
தமிழகம் | கறிக்கோழி வளர்ப்போர் நாளை முதல் வேலை நிறுத்தம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 28) முதல் கறிக்கோழி வளர்ப்போர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கிருஷ்ணகிரியில் விவசாய கறிக்கோழி வளர்ப்பு குடிசை தொழிலாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் ரவீ... |
தமிழகம் | நலத்திட்ட உதவி வழங்கும் விழா | தர்மபுரி: தர்மபுரி உதவும் உள்ளங்கள் சார்பில் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாதர் சங்க வளாகத்தில் நடந்த விழாவுக்கு, செயலாளர் சந்திரா ஆதிமூலம் வரவேற்றார். கனரா வங்கி சிறப்பு உதவியாளர் அல்லிராணி, ஜெயராஜ், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், கங்காபவானி ஆகியோர் பேசினர். ஐ.டி.பி.ஐ.,... |
தமிழகம் | வெள்ளி விழா | அரூர்: அரூர் அடுத்த நரிபள்ளி ஆர்.வி., உயர்நிலைப்பள்ளியில் வெள்ளி விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஸ்டாலின் வரவேற்றார். பள்ளி உதவி தலைமையாசிரியர் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட கல்வி அலுவலர் அரங்கநாதன் சிறப்பு வ... |
தமிழகம் | வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை | ஓசூர்: ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஓசூர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் மனோகரன் (35). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் 24ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார்.
நேற்று மு... |
தமிழகம் | கூட்டம் | தர்மபுரி: தர்மபுரி வாக்கர்ஸ் கிளப் காலாண்டு கூட்டம் வரும் 29ம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் இரவு 7 மணிக்கு நடக்கிறது. கவுன்சிலர் வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மாவட்ட விளையாட்டு அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஜான்டேனியல்ராஜூக்கு வரவேற்பு அளிப்பதோடு, சங்க நடவடிக்கை குடறத்து ஆலோசனை நடக்கிறது. கவுரவத்தலைவர... |
தமிழகம் | போக்குவரத்துக் கழகங்களுக்கு வரிவிலக்கோடு டீசல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை | திருநெல்வேலி:டீசல் விலை உயர்வினால் நெல்லை போக்குவரத்துக் கழகத்திற்கு தினந்தோறும் ரூ.1.70 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்துக் கழகங்களுக்கு வரிவிலக்கோடு கூடிய டீசல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.50 பைசாவும், டீசல் 2 ரூபாயும், ... |
தமிழகம் | கும்பாபிஷேகம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜூன் 28) நடக்கிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை பரவாசுதேவய்யர் தெருவில் நூற்றாண்டுகால பிரச்சித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கர்பக்கிரஹகம் மற்றும் கல் மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிற... |
தமிழகம் | வெடி விபத்தில் 2 பேர் பலி ஜூலை 12ல் ஆர்.டி.ஓ., விசாரணை | தர்மபுரி: பாலக்கோடு அருகே வெடி வெடித்து இரண்டு பேர் பலியானது தொடர்பாக வரும் ஜூலை 12ம் தேதி ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது. தர்மபுரி ஆர்.டி.ஓ., மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கை: பாலக்கோடு தாலுகா இண்டமங்கலம் தரப்பு குட்டப்பட்டி கிராமத்தில் சின்னகண்ணு என்பவரது நிலத்தில் கடந்த 2ம் தேதி கிணறு வெட்டி போது, வெடி விபத்து ஏற்பட்டு, கொ... |
தமிழகம் | மாங்கனி கண்காட்சியில் இன்று குழந்தைகள் போட்டி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாங்கனி கண்காட்சியில் இன்று கொழு, கொழு குழந்தைகள் போட்டி நடக்கிறது. மாலை 3 மணிக்கு கொழு கொழு குழந்தைகள் போட்டி. ஏற்பாடு: மருத்துவம் மற்றும் சுகாதார துறை. மாலை 5 மணிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்து... |
தமிழகம் | நெல்லை ஜங்ஷன் புரோட்டா கடை விவகாரம்:ஆர்.டி.ஓ., உத்தரவால் திடீர் திருப்பம்: போலீசார் பலத்த பாதுகாப்பு | திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் புரோட்டா கடை விவகாரத்தில் ஆர்.டி.ஓ., உத்தரவால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நெல்லை ஜங்ஷன் த.மு.ரோட்டில் புரோட்டா கடைக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடினர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நடந்துவருகிறது. இதற்கிடையே ஏற்கனவே அங்கு கடை நடத்திவந்த அ... |
தமிழகம் | வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே உயர் அழுத்த மின்கம்பம் அமைக்கும் பணி | திருநெல்வேலி:வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே உயர் அழுத்த மின் கம்பம அமைக்கும் பணிகள் நேற்று நடந்தது.நெல்லை வண்ணார்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ரூ.15 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. புதிய பாலம் ஆக.6ம் தேதி திறக்கப்படலாம் என தெரிகிறது. தற்போது ரோட்டின் இருபுறங்க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.