category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வீட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை | சென்னை : லாரி புரோக்கரின் வீட்டை உடைத்து, மர்ம நபர்கள் 15 சரவன் நகைகள், 20 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்து தப்பினர். நெசப்பாக்கம் ராஜிவ் நகர், நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன்; லாரி புரோக்கர். நேற்றுமுன்தினம் குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு போயிருந்தார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், பூட்டை உடை... |
தமிழகம் | இருளில் மூழ்கும் தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை | தாம்பரம் : ஜி.எஸ்.டி., சாலையில் சென்டர் மீடியன் விளக்குகளில் பெரும்பாலானவை எரியாததால் இரவில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஜி.எஸ்.டி., சாலையில் கிண்டி முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை சென்டர் மீடியன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் விளக்குகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கள் பராமரிக்க வேண்டும். ஆனால், யாரும் மு... |
தமிழகம் | பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு : இல.கணேசன் கண்டனம் | நாகர்கோவில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.நாகர்கோவில் நகர பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாநில முன்னாள் பா.ஜ., தலைவர... |
தமிழகம் | நடுரோட்டில் எச்சரிக்கை போர்டு ஜி.எஸ்.டி., சாலையில் விபத்து | தாம்பரம் : தாம்பரம் சானடோரியத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், சாலையின் நடுவில் உள்ள போர்டும், கற்களும் அகற்றப்படவில்லை. தாம்பரத்தை அடுத்த சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி., சாலையை மழை நீர் கடந்து செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் அமைக்கும் பணி நடந்தது.இதற்காக விபத்துக்கள் ஏ... |
தமிழகம் | மோட்டார் சைக்கிள் மோதி சென்னை கல்லூரி மாணவர் பலி | செஞ்சி : கெடார் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சென்னை கல்லூரி மாணவர் இறந்தார். விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வெங்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தமிழரசன் (20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இவர் நேற்று காலை 9.30 மணிக்கு வெங்கந்தூரைச் சேர்ந்த... |
தமிழகம் | பி.எஸ்.எம்.எஸ்., டாக்டர்கள் கோரிக்கை ஐகோர்ட் அதிரடி உத்தரவு | மார்த்தாண்டம்: தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ்., படித்த டாக்டர்கள் தங்கள் மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவம் செய்யலாம் என மதுரை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அதிகமான போலி டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் தகுந்த கல்வி பயிலாமல் கிராம பகுதியில் முழு வேகத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால்... |
தமிழகம் | கட்டண ரசீது இல்லாமல் பணம் வசூலிப்பு | கொடைக்கானல் : கொடைக்கானல் அப்பர்லேக் வியூவில் நகராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் பயணிகள்"டெலஸ்கோப்' மூலம் ஏரியின் எழில்மிகு தோற்றத்தை கண்டுரசிப்பர். தற்போது ரசீது வழங்காமலேயே, நுழைவுக்கட்டணம் 3மூன்று ரூபாய் வரை, குறிப்பாக வெளிமாநில பயணிகள... |
தமிழகம் | பஞ்சாபில் குமரி ராணுவ வீரர் மர்ம காய்ச்சலுக்கு பலி | மார்த்தாண்டம்: பஞ்சாபில் மார்ம காய்ச்சல் தாக்கி உயிரிழந்த குமரி ராணுவ வீரரின் உடல் நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.மார்த்தாண்டம் அருகே பம்மத்தை சேர்ந்தவர் ஜாண்றோஸ் மகன் தினேஷ்(30). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் விடுப்பில் சொந்த ஊர் வந்துவிட்டு 15 நாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம... |
தமிழகம் | கடலூரில் சுழற்காற்று : பொதுமக்கள் வியப்பு | கடலூர் : கடலூர் நகரில் நேற்று மதியம் திடீரென சுழற்காற்று வீசியதால், மக்கள் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர். கடலூரில் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு சுழற்காற்று வீசியது. மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள கலெக்டர் அலுவலக சாலையில் திடீரென சுழற்காற்று (மினி டொர்னாடோ) வீசியது. தரையில் இருந்து வானத்தை நோக்கி சுழன்று கண்ணுக்க... |
தமிழகம் | டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., ம.ம.க., ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., மற்றும் ம.ம.க., கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.மனித நேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் நேற்று நெல்லையில் கூறுகையில், ""சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயராத போது இந்தியாவில் பெட்ரோல்,டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வு தேவையற்றது. இ... |
தமிழகம் | லாரி மீது பைக் மோதல் சென்னை வாலிபர் பலி | திண்டிவனம் : லாரி மீது மோட்டார் பைக் மோதியதில், சென்னை வாலிபர் இறந்தார். அவரது மனைவி, மகள் படுகாயமடைந்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மாறன்(32). இவர் கடந்த 25ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு தனது மனைவி தனலட்சுமி(31), மகள் மகாலட்சுமி(5) ஆகியோருடன் மோட்டார் பைக்கில் சென்றுள்ளா... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., உடலுக்கு மத்திய அமைச்சர் அஞ்சலி | சென்னை:சென்னை செனாய் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள, மறைந்த தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உடலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, "சுதர்சனம் எளிமையானவர்; பழகுவதற்கு இனிமையானவர்; கடின உழைப்பாளி. எனக்கு அவருடன் 40 ஆண்டுகாலம் பழக்கம் உண்ட... |
தமிழகம் | வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி: ஒருவர் கைது | பரங்கிமலை : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் 4.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அயனாவரம், கே.எச்., சாலையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (29); டிராவல்ஸ் நிறுவன பணியாளர். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சையது அபுதாகிர்(34). இவர் வெளிநாடுகளுக்கு... |
தமிழகம் | கோவில்பட்டியில் கலந்தாய்வு கூட்டம் | கோவில்பட்டி : கோவில்பட்டியில் குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமை மீதான மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் பள்ளியில் குழந்தைகள் உரிமைக்கான தென்னக கூட்டமைப்பு சார்பில் நடந்த குழந்தைகளுக்கான தரமான கல்வி உரிமை மீதான மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டத்திற்கு புனித ஓம் கல்வியியல் கல்லூரி தா... |
தமிழகம் | ரயில் மறியலுக்கு முயற்சித்த 14 பேர் கைது | திருப்பூர் : பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும், திருப்பூரில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ம... |
தமிழகம் | நாசரேத்தில் வணிகர் சங்க விழா | நாசரேத் : நாசரேத் வணிகர் சங்க 10வது ஆண்டுவிழாவில் அரசு பொதுத் தேர்வில் மூன்று இடங்களைப் பெற்ற நாசரேத் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். நாசரேத் பஞ்., தலைவர் மாமல்லன், துணை தலைவர் ஆறுமுகம், தணிக்கையாளர் மத்தேயு, ஜெபசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செ... |
தமிழகம் | நெல்லையில் இதுவரை 60 போலி டாக்டர்கள் கைது | திருநெல்வேலி : நெல்லையில் போலி டாக்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த வடக்கு சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன்(50). சொந்தமாக மெடிக்கல் ஸ்டோர்ஸ் நடத்தி வரும் இவர், அங்கிருந்தபடியே நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து கொடுத்து வந்தார்.
கீழப்பாவூரை சேர்ந்தவர் பாஸ்கர்(40). இ... |
தமிழகம் | ரயிலில் அடிபட்டு இருவர் பலி | கொருக்குப்பேட்டை : குடிபோதையில் தள்ளாடியபடி தண்டவாளத்தைக் கடந்த தொழிலாளிகள் ரயிலில் அடிபட்டு பலியானர். பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ண ராஜா தோட்டம், 3வது தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(43), கொருக்குப்பேட்டை சீனிவாசபுரம், கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் உதயா(42). இவர்கள் பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை... |
தமிழகம் | பசுவந்தனை- கோவில்பட்டி ரோடு சீரமைப்பு | பசுவந்தனை : பசுவந்தனையில் இருந்து கோவில்பட்டி செல்லும் ஒருவழிச் சாலையாக உள்ள ரோடுகள் மிகவும் மோசமாக இருப்பதால் அதனையும் இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் அல்லது தற்சமயம் பழுது பார்க்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்ததை தினமலரில் செய்தியாக வெளியிட்டதை ஒட்டி ரோடு சரி செய்யப்பட்டது.
பசுவந்தனையில் இருந்து கோவில்பட்டி, கயத்... |
தமிழகம் | கிறிஸ்தவ இளைஞர் ஆண்டு விழா | சென்னை : கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறைமாவட்ட இளைஞர் ஆண்டு துவக்க விழா, சாந்தோம் சர்ச்சில் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.மயிலை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறைமாவட்ட இளைஞர் ஆண்டு துவக்க விழா, சாந்தோம் சர்ச்சில் நேற்று துவங்கியது. விழாவிற்கு பிஷப் சின்னப்பா தலைமை வகித்தார்.விழாவில், இளைஞர் வளர்ச்சி திட்டங்கள், உறுதிமொழியேற... |
தமிழகம் | குலசை.,யில் ரூ.260 லட்சம் செலவில் 72 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டுவிழா | உடன்குடி,: குலசேகரன்பட்டணத்தில் ரூ.260 லட்சம் செலவில் 72 வீடுகள் கட்டப்படவுள்ளது. திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.அவசர கால சுனாமி மறு சீரமைப்பு திட்டத்தின் மூலம் குலசேகரன்பட்டணம் காமராஜர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 72 வீடுகள் கட்ட ரூ.260 லட்சம் நிதி ஒதுக்க... |
தமிழகம் | குற்றாலம் சென்றவர் லாரி மோதி பலி | திருநெல்வேலி : குற்றாலத்திற்கு பைக்கில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில், ஒருவர் பலியானார். தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(28). இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் தூத்துக்குடி பொன் சுப்பையா நகரை சேர்ந்த தங்கத்துரை(32). இவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ... |
தமிழகம் | சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை | அடையாறு : ஐ.ஏ.எஸ்., படிக்கும் கனவு, நனவாகாததால் சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கமலேசன். இவரது மகன் வினோத் ராஜேஷ்குமார். இவருக்கும் தனலெட்சுமி(27) என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இருவரும் ராஜிவ் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் ... |
தமிழகம் | பஸ்சில் கொள்ளை முயற்சி | திருவான்மியூர் : ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(52). இவரது மனைவி பத்மா(48). இருவரும் தி.நகர் செல்வதற்காக தடம் எண்: பி.பி19 பஸ்சில் பயணித்தனர்.பஸ்சில் நெரிசல் காரணமாக நின்று சென்றனர். திருவான்மியூரை நெருங்கும்போது, பத்மாவின் பின்புறத்தில் இருந்து ஒருவர், அவரது ஐந்து சவரன் செயினை இழுப்பது தெரிந்தது. உடனே அவர் கூச்... |
தமிழகம் | பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் ஜூலை16ம் தேதி கும்பாபிஷேகம் | பசுவந்தனை பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் 41 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் ஜூலை 16ம் தேதி நடைபெறுவதால் கோயில் திருப்பணி வேலைகள் முடுக்கி விடப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.
கயத்தாறு சமஸ்தானத்திற்குட்பட்ட பசு கூட்டங்களில் ஒரு பசு மட்டும் தினமும் கூட்டத்தை விட்டு விலகி அருகில் உள்ள குளத்தில் நீராடி விட்டு வில்வ மரத்... |
தமிழகம் | ஒப்பந்தக்காரர்களுக்கான ஆய்வு கூட்டம் | விளாத்திகுளம் : விளாத்திகுளம் யூனியனில் நடந்த ஒப்பந்தக்காரர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வலியுறுத்தி பேசினார்.விளாத்திகுளம் யூனியனில் நிலுவை மற்றும் நடப்பு ஆண்டு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒப்பந்தக்காரர்களுக்கான ஆய்வுக... |
தமிழகம் | ஒட்டு முறையில் புதிய சட்டை :சாத்தான்குளம் டெய்லர் தயாரித்துள்ளார் | உடன்குடி : சாத்தான்குளத்தைச் சேர்ந்த டெய்லர் நூல் தையல் இல்லாமல் ஒட்டு முறையில் புதிய சட்டை தயாரித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். டெய்லரிங் படிப்பு படிக்காமல் தனது அனுபவத்தினால் டெய்லர் கடை நடத்தி வருகிறார். டெய்லரிங்கில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐய்யப்பன் புதிய... |
தமிழகம் | இலவச நோட்புக் வழங்கும் விழா | கயத்தாறு,: கயத்தாறில் த.மு.மு.க. சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா த.மு.மு.க அலுவலகத்தில் வைத்து நடந்தது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.... |
தமிழகம் | வருஷாபிஷேக விழா | தூத்துக்குடி, : ஆழ்வார்திருநகரி பரிபூரண சந்தி விநாயகர் மற்றும் அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது.சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் உலகநாதன் மற்றும் அகிலாண்ட ஈஸ்வரி நற்பணி மன்ற நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், பட்சிராஜன்,... |
தமிழகம் | சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி | தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தொண்டு நிறுவனங்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஆவடி தியாகராஜ மூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி... |
தமிழகம் | திருச்செந்தூரில் விவசாய தொழிலாளர் சங்க பணிக்குழு கூட்டம் | திருச்செந்தூர் திருச்செந்தூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பணிக்குழு அமைப்புக் கூட்டம் நடந்தது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய 7-வது மாநாடு வரும் ஜூலை 17, 18, 19 தேதிகளில் நடக்கிறது. மாநாட்டிற்கு முன்னேற்பாடாக தூத்துக்குடி மாவட்ட தயாரிப்பு வேலைகள் குறித்த பணிக்குழு அமைப்புக் கூட்டம் நடந்த... |
தமிழகம் | அழகர்கோவில் மலையில் ஆங்காங்கே கிடக்கும் மர்ம சிலைகள்: கலை நயமிக்கவை வனத்தில் வீணாகும் அவலம் | மதுரை:மதுரை அழகர்கோவில் மலையில் கலைநயம் மிக்க பல சிலைகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. வனத்தில் கிடக்கும் சிலைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையில் பழமையும், புராதன சிறப்பும் வாய்ந்தது அழகர்கோவில். இக்கோயில் இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயில் அடிவாரத்தில் இருந்து சோல... |
தமிழகம் | கோயிலில் சிலிண்டர் வெடித்து தீ பக்தர்கள் சிதறி ஓட்டம் | அழகர்கோவில்:அழகர்கோவிலில் நடந்த விசேஷ விழாவில் காஸ் சிலிண்டர் வெடித்து தீ பிடித்ததில் பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர்.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் நேற்று காதுகுத்து, திருமணம் என 25க்கும் மேற்பட்ட விழாக்கள் நடந்தன. பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த விழாவில் சமையலுக்கு காஸ் சிலிண்டரை பயன் படுத்தினர்.
காஸ் அடுப்... |
தமிழகம் | குடியிருப்பில் தண்ணீர் தட்டுப்பாடு குடங்களுடன் அலையும் போலீசார் | திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் இரண்டு மாதங்களாக தண்ணீர் தட்டுபாடு நிலவுகிறது. இங்கு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 1995ல் திறக்கப்பட்டது. 50 வீடுகளில் போலீசார் குடி உள்ளனர். அங்கு வீட்டு உபயோக தண்ணீருக்காக நான்கு ஆழ்குழாய்கள் அமைக்க... |
தமிழகம் | பஞ்சு லோடு ஏற்றிய லாரி தீயில் நாசம் | ஆத்தூர்: தலைவாசல் அருகே பஞ்சு லோடு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள லாரி, பஞ்சு பேல்கள் நாசமானது.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து ஆத்தூர் அருகே தார்வாயில் உள்ள ராசி ஸ்பின்னிங் மில்லுக்கு பஞ்சு பேல்கள் ஏற்றிய லாரி வந்தது. சங்ககிரியைச் சேர்ந்த ராஜேந்திரன் லாரியை ஓட்டி வந்தார். நேற்று... |
தமிழகம் | கள்ளச்சாவி மூலம் வீட்டில் நகை, பணம் திருட்டு | மதுரை:மதுரை செல்லுர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் லோடுமேன் ஆசைதம்பி. இவரது மனைவி லீலாவதி(32). நேற்று காலை தங்கை குடும்பத்தினருடன் அழகர்கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு, சுயராஜ்யபுரத்தில் உள்ள தங்கை வீட்டில் தங்கினார். நேற்று அதிகாலை, தங்கை குடும்பத்துடன் வே... |
தமிழகம் | இளம்பெண் பலி | வாழப்பாடி: வாழப்பாடி அருகே விளக்கு தவறி விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் பலியானார்.வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (27). அவரது மனைவி வனிதா (23). அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த வாரம் இரவு நேரத்தில் பால் காய்ச்சுவதற்காக வனிதா எழுந்தார். அப்போது மண்ணெண்ணய் விளக்கு கீழே விழு... |
தமிழகம் | டிராக்டர் பறிமுதல் | தலைவாசல்: தலைவாசல் அருகே கட்டுக்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தலைவாசல் அருகே வீ.ராமநாதபுரம் பகுதியில் கெங்கவல்லி தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த கண்ணன் என்பவரது டிராக்டரை சோதனையிட்டனர். அதில் கட்டுக்கல் இருப்பது தெரியவந்ததையடுத்து டிர... |
தமிழகம் | ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்ட்டிற்கு மாற்று பெயர் வைக்க கோரி நாளை உண்ணாவிரதம் | நங்கவள்ளி: ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்ககோரி ஜூன் 29ம் தேதி காங்., சார்பில் ஜலகண்டபுரம் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. கடந்த 1975ல் காங்., கட்சியை சேர்ந்த ராமநாத செட்டியார் நங்கவள்ளி யூனியன் தலைவராக இருந்தார். அப்போது ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் சூட்ட உள்ளாட... |
தமிழகம் | இசை மூலம் நோய் தீர்க்கும் நிகழ்ச்சி | சேலம்: ஸ்ரீ அன்னமைய்யா ஆஸ்ரம் டிரஸ்ட் சார்பில் இசை மூலம் நோய்களை குணமாக்கும் நிகழ்ச்சி சேலம் டவுன் வாசவி மஹாலில் நடந்தது. அப்பல்லோ மியூசிக் தெரபி மைய இயக்குனர் டாக்டர் மைதிலி பங்கேற்று பேசினார். கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். எவரெஸ்ட் பாண்டுரங்கன், உஷா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்த... |
தமிழகம் | பா.ஜ., செயற்குழு கூட்டம் | திருப்பரங்குன்றம்:இந்து மாணவர்களுக்கு மற்ற மாணவர்களை போன்று சலுகைகள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் ஜூலை 22ல் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திருப்பரங் குன்றத்தில் நடந்த மதுரை புறநகர் மாவட்ட செயற் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில தலைவர் கந்தன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயல... |
தமிழகம் | கலைஞர்களுக்கு பாராட்டு | சேலம்: சேலத்தில் ஷாவ்லின் டிரஸ்ட் சார்பில் நடந்த யோகக்கலை விழாவில், கலாச்சார துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். சேலம் சீரங்கபாளையத்தில் ஷாவ்லின் ஆதிசக்தி டிரஸ்ட் சார்பில் யோகக்கலை விழா- 2010 நடந்தது. வைஸ்யா கல்லூரியின் முதல்வரும், ஹோம்கார்டு ஏரியா கமாண்டருமான வெங்கடேசன், தர்மபுரி கோட்ட வன அலுவலர்... |
தமிழகம் | நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீ பிடித்தது | சேலம்: சேலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரண்டு இடங்களில் மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சேலம் சன்னியாசி குண்டு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வீட்டுக்கு மேல் கூரை அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு திடீரென்று ... |
தமிழகம் | சேலம் உழவர்சந்தைகளின் முன் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு... கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் | சேலம்: சேலம் உழவர்சந்தைகளின் முன்பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை வைத்துக் கொள்வதால், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.சேலம் மாநகரில் சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர்சந்தைகளில் அ... |
தமிழகம் | ஆத்தூர் விற்பனை சங்கத்தில் மஞ்சள் விலை சரிவு | ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்துக்கு குறைந்தளவே மஞ்சள் மூட்டைகள் வந்தன. குவிண்டால் 15 ஆயிரத்து 895 ரூபாய்க்கு விற்பனையானது. ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய முதல் ஏலத்தில் குவிண்டால் மஞ்சள் 10 ஆயிரத்து 789 ரூபா... |
தமிழகம் | பெருமாள்கரடில் திடீர் குடிசைகள் பட்டா கேட்டு மக்கள் போராட்டம் | சேலம்: சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் வசித்து வரும் மக்கள் பட்டா கேட்டு, பெருமாள்கரடு குன்றில் குடிசைகள் அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள காமராஜர் காலனியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 350 வீடுளில் வசிக்கின்றனர். இதில், 150 குடும்பங்களுக்கு மட்டுமே நிலப்பட்டா வழ... |
தமிழகம் | குட்டையில் மூழ்கி சிறுவன் பலி | சேலம்: சேலம் பெரிய சீரகாபாடியில் குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான். பெரிய சீரகாபாடியை சேர்ந்தவர் திருவண்ணாமலை மகன் மகாலிங்கம்(10). சில நாட்களாக பெய்த மழையில் திருவண்ணாமலையின் வீட்டுக்கு அருகில் இருந்து குட்டையில் நீர் நிரம்பி இருந்தது. நேற்று சிறுவன் மகாலிங்கம் குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தான். திடீரென தவறி குட்ட... |
தமிழகம் | பாசிப்பயறு உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் | ஈரோடு: விவசாயத்துக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மாற்றுப்பயிராக விவசாயிகள் பாசிப்பயறு சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் முக்கிய பயிர்களாக நெல், மஞ்சள், கரும்பு, வாழை, நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், சூரியகாந்தி பயிரிடுகின்றனர். மானாவாரி மற்றும் இரண்டாம் போகத்தில் நிலங்களில் பருத்தி, நிலக... |
தமிழகம் | ஜெயேந்திர சுவாமிகள் நாளை சேலம் வருகை | சேலம்: சேலம் காஞ்சி பீடத்தில் நாளை நடக்கும் மகோத்ஸவம் நிகழ்ச்சியில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்கிறார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நாளை 29ம் தேதி மாலை 5 மணிக்கு சேலம் வருகிறார். மரவனேரியில் உள்ள காஞ்சி பீடத்தில் நடக்கும் 75வது ஜெயேந்திரர் மகோத்ஸவத்தை துவக்கி வைத்து பேசுகிறார்... |
தமிழகம் | ஜாதி சான்று குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை | தலைவாசல்: தலைவாசல் அருகே மலைக்கிராம மக்களுக்கு மலையாளி ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டார். தலைவாசல் அருகே சின்னக்கல்வராயன் மலை அடிவாரத்தில் மணிவிழுந்தான் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பூமரத்துப்பட்டி, முட்டல், சக்தி நகர் போன்ற குக்கிராமங்கள் உள்ளன. அங்கு மலைவாழ் மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ... |
தமிழகம் | கேரள வியாபாரிகள் நேரடி வணிகம் : செவ்வாழை விவசாயிகள் மகிழ்ச்சி | கோபிசெட்டிபாளையம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள கிராக்கியால் செவ்வாழை தாரின் விலை 450 ரூபாயை தாண்டியுள்ளது. விவசாயிகளை தேடி, வியாபாரிகள் தோட்டத்துக்கு சென்று செவ்வாழை தாரை கொள்முதல் செய்து வருவதால், கூடுதல் லாபம் கிடைக்கிறது. கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கதளி, நேந்திரம் மற்றும் செவ்வ... |
தமிழகம் | விவசாயி பலி | வாழப்பாடி: வாழப்பாடி அருகே பாம்பு கடித்ததில் விவசாயி பலியானார். வாழப்பாடி அருகே ரங்கனூரை சேர்ந்தவர் சேட்டு (41); விவசாயி. சம்பவத்தன்று அவர் தோட்ட வேலையில் ஈடுபட்டபோது பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தார் விரைந்து சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இர... |
தமிழகம் | கோபி மகளிர் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம் | கோபிசெட்டிபாளையம்: திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது. கோபி புதுப்பாளையத்தை சேர்ந்த மனோகரன் மகன் மோகன்குமார் (25) டிப்ளமோ படித்து விட்டு, திருப்பூரில் வேலை செய்து வருகிறார். குருமந்தூர் ஒட்டர் கரட்டுபாளையத்தை சேர்ந்த செல்லப்பன் மகள் கவுசல்யா (24) பி.எட்., வரை பட... |
தமிழகம் | ஆத்தூரில் ரேஷன் அரிசி பதுக்கல் விவகாரம் போலீஸ், வருவாய்த்துறையினர் உடந்தை? | ஆத்தூர்: ஆத்தூர் அருகே ரேஷன் அரிசி பதுக்கப்பட்டது தொடர்பாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூரை சேர்ந்தவர் தாமோதரன். லாரி உரிமையாளர். தனக்கு சொந்தமான (கே.ஏ.01- சி 1375) லாரியில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நெற்பதர் மூட்டைகளை ஏற்றிச்சென்று, ஆத்தூர் தெற்குகாட்டை சேர்ந்த ... |
தமிழகம் | பயணிகள் நிழற்குடையின்றி வெள்ளோடு மக்கள் மரத்தடியில் தஞ்சம் | ஈரோடு: வெள்ளோடு பஸ் நிறுத்தத்தில் எவ்வித நிழற்குடையுமின்றி பயணிகள் மரத்தடியில் தஞ்சம் புகுகின்றனர். ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் வடமுகம் வெள்ளோடு உள்ளது. இக்கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளனர். இப்பகுதி மக்கள் அனைத்து அத்தியாவசிய தேவைக்கும் ஈரோடு வர வேண்டியுள்ளது. வெள்ளோட்டில் ஈரோடு, சென்னிமலை, அ... |
தமிழகம் | முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசிப்பெருவிழா | ஆத்தூர்: ஆத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த வைகாசி பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். ஆத்தூர் தெற்கு உடையார் பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசிப்பெருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். கடந்த 11ம் தேதி அமாவாசை தினத்தன்று மகாகணபதி ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை, ... |
தமிழகம் | தியாகராஜர் பாலிடெக்னிக் கவுன்சலிங் 30ல் துவக்கம் | சேலம்: சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 30ம் தேதி துவங்குகிறது. சேலம் சூரமங்கலத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெனிக் கல்லூரி 52 ஆண்டுகளாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது. இக்கல்லூரியின் 2010 -11ம் ஆண்டின் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான க... |
தமிழகம் | ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை | சேலம்: சேலத்தில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். ஆத்தூர், புத்திர கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்(22); கட்டிட தொழிலாளி. இவர் வேறு சாதி பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, அதிருப்தி அடைந்த கணேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவருக்கு சேலம் ... |
தமிழகம் | இலவச நோட்டு புத்தகம் வழங்கல் | ஈரோடு: வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. ஈரோடு வீரப்பன் சத்திரம் நான்காவது வார்டுக்குட்பட்ட வீ.ஜி.பி., நகரில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. அ.தி.மு.க., துணை செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். கவுன்சிலர் சண்முகவள்ளி உதயக்குமார், அ.தி.மு.க., நகர பொறுப்பாளர் அய்ய... |
தமிழகம் | 80 அடி சாலை அமைக்க வலியுறுத்தி தீர்மானம் | ஈரோடு: ஈரோடு நகரில் 80 அடி சாலையை அமைக்க வலியுறுத்தி, பைனான்ஸ் அசோசியேஷன் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஈரோடு பைனான்ஸ் அயோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் வருடாந்திர மகாசபை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. புதிய தலைவராக முத்துச்சாமி, செயலாளராக சண்முகசுந்தரம், பொருளாளராக குமாரசுவாமி, துணைத்தலைவர்களாக வே... |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | கவுந்தப்பாடி: பி.மேட்டுப்பாளையத்தில் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்க்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் அந்தியூர் தொகுதி செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். திருப்பூர் தொகுதி பொதுச்செயலாளர் ராஜாசத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். நகர தலைவர் தினேஷ்குமார் வரவேற்றார். சட்டசபை தொ... |
தமிழகம் | கிராமப்புறத்தில் டாக்டர் பணி : இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு | ஈரோடு: கிராமப்பகுதியில் குறைந்த கல்வித்தகுதி உடைய மருத்துவ படிப்பு படித்தவர்களை பணி நியமனம் செய்வதற்கு ஐ.எம்.ஏ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஐ.எம்.ஏ., கிளை தலைவர் டாக்டர் சுகுமார் கூறியதாவது: மருத்துவத் துறையில் பணியாற்ற மூன்றரை ஆண்டு மருத்துவ படிப்பு படித்தவர்களை கிராமப்புறங்களில் பணி நியமனம் செய்ய மத்திய அரச... |
தமிழகம் | பெட்ரோல் விலை உயர்வுடன் 50 பைசா கூடுதலாக வசூல் | ஈரோடு: பெட்ரோல் விலை உயர்வுடன், சில்லரை பிரச்னையால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கூடுதலாக 50 பைசா பங்க்கள் வசூலிக்கின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீஸல் விலை நேற்று முன்தினம் இரவு முதல் உயர்ந்துள்ளது. புதிய விலையை நேற்று முன்தினம் இரவே பெட்ரோல் பங்க்கள் அமல்படுத்தின. நேற்று முன்தினம் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 51.75 ரூப... |
தமிழகம் | தொழிலாளி தற்கொலை | பெருந்துறை: நாமக்கல் மாவட்டம் பூலக்காட்டூரை சேர்ந்தவர் சுரேஷ் (26). இவர் தறி வேலை செய்து வந்தார். பெருந்துறை சேனடோரியத்தில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கு 80 ஆயிரம் ரூபாய் கடன் இருந்தது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கினர். மனம் உடைந்து, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷ... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | பெருந்துறை: பெருந்துறை வக்கீல்கள் சங்க தேர்தலில் தலைவராக மணியன் தேர்வு செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து நான்காவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. துணைத் தலைவராக செந்தில்குமார், செயலாளராக வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினராக விஜயராகவன், நூலகராக கவிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். |
தமிழகம் | கொங்கு பாலிடெக்னிக் வகுப்புகள் துவக்கம் | பெருந்துறை: பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின், முதலாமாண்டு டிப்ளமோ வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி அறக்கட்டளை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர் தேவராஜன், தாளாளர் சச்சிதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயமுத்தூர் ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிட... |
தமிழகம் | அடிப்படை வசதியில்லாமல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி | ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியுறுகின்றனர். ஈரோடு பஸ்ஸ்டாண்டில், முன்பகுதியில் உள்ள மூன்று பிளாட்பாரத்தில் தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களும், பின்பகுதியில் நகரப்புற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. தற்போது மினி பஸ்கள் நிறுத்துவதற்கான பஸ் ஸ்டாண்டு, திருச்சி மத்த... |
தமிழகம் | டவுன் பஸ் வழித்தடத்தை மாற்றி அமைக்க கோரிக்கை | மதுரை:பள்ளி மாணவர்கள், பெற்றோர், விவசாயிகள் வசதிக்காக டவுன்பஸ் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மதுரை திருநகர் தோப்பூரில் சிவானந்த சேவாஸ்ரமம் சார்பில் ஏழை குழந்தைகளின் கல்வி, மருத்துவம், ஆதரவற்றோருக்கான இல்லம் செயல் படுகிறது. இப்பகுதியில் நான்கு வழிச் சாலைக்காக ரோடு அகலப்படுத்தும் பணி... |
தமிழகம் | அடிப்படை வசதியில்லாமல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி | ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியுறுகின்றனர். ஈரோடு பஸ்ஸ்டாண்டில், முன்பகுதியில் உள்ள மூன்று பிளாட்பாரத்தில் தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களும், பின்பகுதியில் நகரப்புற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. தற்போது மினி பஸ்கள் நிறுத்துவதற்கான பஸ் ஸ்டாண்டு, திருச்சி மத்த... |
தமிழகம் | பால்வளத்துறை கமிஷனரிடம் பால் ஏஜன்டுகள் கோரிக்கை மனு | ஈரோடு: நடைமுறையில் உள்ள சிக்கலை களைய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கமிஷன் உயர்த்தி தர வேண்டும் எனவும் ஆவின் பால் ஏஜண்டுகள் பால்வளத்துறை கமிஷனர் அபூர்வ வர்மாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். நேற்று ஈரோடு நகருக்கு பால்வளத்துறை கமிஷனர் அபூர்வ வர்மா வந்தார். அவரை ஈரோடு பால் ஏஜண்டுகள் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில் கூறியிர... |
தமிழகம் | மின் நுகர்வோர் குறைதீர் முகாம் | மதுரை:மதுரை மின் வாரிய திருமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.ஆர். முருகேசன் அறிவிப்பு: கள்ளிக்குடி பிரிவு அலுவலகத்தில், திருமங்கலம் செயற் பொறியாளர் தலைமையில், நுகர்வோர் குறைதீர் முகாம் வரும் 29ம் தேதி காலை 11 முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. இதில், கள்ளிக்குடி பிரிவு அலுவலகத்திற்கு உட் பட்ட நுகர்வோர் தங்களின் குறைகள... |
தமிழகம் | நடவு இயந்திர செயல் விளக்கம் | ஈரோடு: மேவானி மற்றும் பாரியூர் நஞ்ச கவுண்டம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு நடவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க முகாம் இருநாட்கள் நடந்தது. கோபி சரக துணைப்பதிவாளர் சந்தானம், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாபு, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் லோகநாதன் ஆகிய... |
தமிழகம் | மறியல் செய்த காங்., கட்சியினர் கைது | மேட்டூர்: ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு மாற்று பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்., கட்சியினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் தரை தளம் அமைப்பது, மேற்கூரை பழுது பார்த்தல் என 28 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு மாதமாக சீரமைப்பு பணி நடக்கிறது. விரைவில் சீரமைக்கப்பட்ட பஸ் ஸ்... |
தமிழகம் | அந்தியூர் அருகே இரு விபத்தில் இருவர் பலி | அந்தியூர்: அந்தியூரில் இரண்டு இடத்தில் நடந்த விபத்தில் இருவர் பலியாகினர். டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (40). இவரது மனைவி மஞ்சு (35). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம், இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக மூர்த்தி அந்தியூர் வந்தார். சந்தியபாளையம் பிரிவில் உள்ள "டூ வீலர்' கடையில் வண்ட... |
தமிழகம் | சத்தியில் கடும் கோடைகாற்று : வாழை விவசாயிகள் விரக்தி | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் ஒரு வாரமாக கோடை காற்று வீசுவதால் வாழை விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் மஞ்சள், வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் வாழை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். வாழைகள் தற்போது அறுவடை தருணத்தில் உள்ளது. காரணம் அடுத்த மாதம் ஆடியில் கோடைகாற்று அதி... |
தமிழகம் | குடிநீரில் நெளியும் புழுக்கள் : பெருந்துறை மக்கள் அவதி | பெருந்துறை: பெருந்துறை பகுதியில் விநியோகம் செய்யப்படும், காவிரி குடிநீரில் புழுக்களுடன் வருவதால், தண்ணீரை அருந்தும் மக்கள் அவதிப்படுகின்றனர். பெருந்துறை மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு, பல ஆண்டாக காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வந்து, விநியோகம் செய்யப்படுகிறது. இப்பணியை த... |
தமிழகம் | கோபியில் வாழைத்தார் ஏலம் : ரூ.3 லட்சத்துக்கு விற்பனை | கோபிசெட்டிபாளையம்: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 3,500 வாழைத்தார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் ஏலம் போனது. சமீபத்தில் வீசிய சூறாவளி காற்றால் வாழைத்தார் வரத்து குறைந்தது. கோபி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் இரண்டு முறை வாழைத்தார் ஏலம் நடக்கிறது. கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து நூ... |
தமிழகம் | போதை எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு | மதுரை:மதுரையில் பெய்த் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக போதை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப் பட்டது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி கமிஷனர் ராஜாமணி, டாக்டர் ராஜேந்திரன் பங்கேற்றனர். முன்னதாக திட்ட இயக்குனர் சுதாகர் வரவேற்றார். ஆற்றுநர் கருப்பசாமி பேசினார். |
தமிழகம் | இறுதி கட்டத்தை எட்டியது இயந்திர நெல் நடவுப்பணி | கோபிசெட்டிபாளையம்: கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதியில் நெல் நடவு இயந்திரம் மூலம் நாற்று நடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியில் முதல்போக சாகுபடி பணிகள் இரண்டு மாதமாக நடந்து வருகிறது. விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல்... |
தமிழகம் | சீன வானொலி நேயர் கருத்தரங்கு | பெருந்துறை: அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 22 வது கருத்தரங்கு மற்றும் பாராட்டு விழா, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடந்தது. மன்ற தலைவர் செல்வம் தலைமை வகித்தார். கொங்கு பண்பலை சமுதாய வானொலி நிலைய இயக்குனர் தங்கராஜ் வரவேற்றார். சீன வானொலி நேயர் மன்ற தலைமை செயலாளர் பரமசிவன், பொருளாளர் ரவிச்சந்திரன், ஈர... |
தமிழகம் | விவசாய தொழிலாளர் கூட்டம் | ஈரோடு: தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்டக் குழு கூட்டம் ஈரோடு மாவட்ட சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், மாநில செயலாளர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் பேசினர். |
தமிழகம் | ஓட்டல்களில் டிபன், சாப்பாடு விலை உயர்வா? | மதுரை:மதுரை ஓட்டல்களில் டிபன், சாப்பாடு விலையை அதிகரிக்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்திய அரசு ஜூன் 25ல் திடீரென்று உயர்த்தியது. லாரி வாடகை, சரக்கு கட்டணத்தை உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் வி... |
தமிழகம் | நம்பியூரில் இளைஞர் காங்., கூட்டம் | கோபிசெட்டிபாளையம்: திருப்பூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நம்பியூர் அருண் மஹாலில் வரும் 30ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. தொகுதி தலைவர் ஜவஹர் பாபு தலைமை வகிக்கிறார். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அர்த்தனாரி பேசுகிறார். |
தமிழகம் | கடம்பூர் மலைப்பகுதியில் மழை இல்லை : குட்டையாக மாறியது பெரும்பள்ளம் அணை | சத்தியமங்கலம்: கடம்பூர் வனப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை தண்ணீர் இல்லாமல் குட்டையாக காட்சியளிக்கிறது.சத்தியமங்கலம் அடுத்துள்ளது கே.என்., பாளையம். இதன் அருகே உள்ளது பெரும்பள்ளம் அணை. இந்த அணை கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் வீணாக பவானி ஆற்றில் கலக்காமல் இப... |
தமிழகம் | பெண்கள் பஸ் போக்குவரத்து மீண்டும் துவக்கப்படுமா? | அவனியாபுரம்:பெருங்குடி, வலையங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், காரியாபட்டி செல்லும் டவுன்பஸ்கள் அவனியாபுரம் வழியாக செல்கின்றன. காலையில் இப்பகுதி விவசாயிகள் காய்கறி, கீரைகளை பஸ்சில் ஏற்றி மதுரைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். மூடைகள் அதிகமாக இருப்பதால், பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.
கிராமங்... |
தமிழகம் | சமத்துவபுர இடம் கலெக்டர் ஆய்வு | ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் சமத்துவபுரம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியில் சமத்துவபுரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஊத்தங்கரை யூனியன் கதவணி பஞ்சாயத்தில் சேலத்தில் இ... |
தமிழகம் | பெண் பலி | கிருஷ்ணகிரி: கடலூர் மாவட்டம் மாலியம் ஆடுர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி காமாட்சி(40). இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் மாம்பழக்கூழ் தொழிற்சாலையில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். தொழிற்சாலை முன், சாலையை கடந்தபோது அந்த வழியே வந்த மினி லாரி காமாட்சி மீது மோதியது. காயம் அடைந்த காமாட்சி, அர... |
தமிழகம் | மாங்கனி கண்காட்சியில் இன்று இசைக்கச்சேரி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் 18வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் இன்று (28ம்தேதி)அருண் இன்னிசை கச்சேரி நடக்கிறது.மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி ஏ.இ.எஸ்.., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை. மாலை 6 மணிக்கு துளசியம்மன் கலை... |
தமிழகம் | இளம் பெண்ணை கற்பழித்தவர் கைது | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த ஜமீன்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி(16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 21ம் தேதி இரவு உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அதேபகுதியை சேர்ந்த அந்தோணி(28) என்பவர், சாந்தியை வழிமறித்து, அருகில் உள்ள முட்புதருக்குள் தூக்கி சென்று கற்பழித்தார். வெளியே சொன்னால் கொலை செய்த... |
தமிழகம் | மாணவன் மாயம் | கிருஷ்ணகிரி: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளியில் படித்த பர்கூர் மாணவன் திடீரென்று மாயமானான்.பர்கூர் சந்தகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கன்(45). ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுதந்திரகுமார்(15) ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வந்தான். விடுமுறையில் பர்க... |
தமிழகம் | அங்கன்வாடி பணியிடம் நிரப்புவதில் தாமதம்: விண்ணப்பதாரர்கள் கலக்கம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெற்று மூன்று மாதங்களாகியும் பணியிடம் நிரப்பப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 316 குறு மையங்களில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் 35 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கிருஷ... |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட விஷ்வ வீர சைவ யுவ வேதிகே அமைப்பின் ஆலோசனை கூட்டம் ஓசூரில் நடந்தது. மாவட்ட தலைவர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரேவண்ணா, மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், மேஜர் முத்தேகவுடரு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லோகேஷ், முன்னாள் தாசில்தார் பசுவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செலயாளர் நட... |
தமிழகம் | புதுப்பெண் தற்கொலை | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த துரிஞ்சிப்பட்டி குட்டூரை சேர்ந்தவர் சுரேஷ் (26). இவருக்கும் தானம்பட்டியை சேர்ந்த அமுதா(19) என்பவருக்கும் கடந்த 24ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து அமுதா, கணவருடன் தானம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம் இரவு அமுதா, அப்பகுதியில் உள்ள ராஜு என்பவரது விவசா... |
தமிழகம் | கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு சான்று சரிபார்க்க அழைப்பு | கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் சிவில் இன்ஜினியர் பணியிடம் நிரப்பட உள்ளதால் தகுதியானர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவை சரிபார்த்துக்கொள்ளலாம்.கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை மூலம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், சிவி... |
தமிழகம் | மனைவி போலீஸில் புகார் கணவன் உட்பட 5 பேர் கைது | கிருஷ்ணகிரி: சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பாலாஜி நகரை சேர்ந்தவர் சுஜாதா(27). இவருக்கும் கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனியை சேர்ந்த மகேந்திரன்(29) என்பவருக்கும் மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கணவன் மகேந்திரன் குடும்பத்தினர் கொடுமை செய்வதாக சுஜாதா கிருஷ்ணகிரி மகளிர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசார... |
தமிழகம் | அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட அ.தி.மு.க., மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.அமாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் முனுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி செயலாளர் தங்கமுத்து வரவேற்றார். மாநில மாணவர் அணி செயலாளர் உதயகுமார் வரும் சட்டசபை தேர்தலிலின் போது மாணவரணி நிர்வாகிகளின் செயல... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., உடலுக்கு சிதம்பரம் அஞ்சலி | சென்னை: சென்னை செனாய் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள, மறைந்த தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உடலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இரவு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, "சுதர்சனம் எளிமையானவர்; பழகுவதற்கு இனிமையானவர்; கடின உழைப்பாளி. எனக்கு அவருடன் 40 ஆண்டுகாலம் பழக்கம் உண்டு. ... |
தமிழகம் | செயல்படாத நூலகம்: வாசகர்கள் அதிருப்தி | கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி ஒன்றியம் பாண்டாங்குடியில் 1992ல் பகுதி நேர நூலகம் துவக்கப்பட்டது. இங்கு தினக்கூலி அடிப்படையில் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இடையில் சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த நூலகம் 2002ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒரு பணியாளருடன் நூலகம் செயல்பட்டு வந்தது. 2008ம் ஆண்டு அக்... |
தமிழகம் | தென்னை ஓலைக்கு கடும் தட்டுப்பாடு : துடைப்பம் விலை விர்ர்... | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை ஓலைக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுவதால் துடைப்பத்தின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், அரசம்ப... |
தமிழகம் | இளம்வயது திருமண முயற்சி : மகளிர் குழு உறுப்பினர் நீக்கம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணத்துக்கு ஆதரவாக செயல்பட்ட, மூன்று மகளிர் குழு உறுப்பினர்களை மகளிர் திட்ட அலுவலர் அதிரடியாக நீக்கினார். தர்மபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 24ம் தேதி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 11 இளம்வயது திருமணங்கள் நடக்க இருந்தது. தகவல் அறிந்த கலெக்டர் அ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.