category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வி.சி.,கள் இன்று ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் அலுவலகம் முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஒன்றிய மேலிட பொறுப்பாளர் தர்மலிங்கம் தலைமை வகிக்கிறார். மாவட்ட நிதி செயலாளர் அதியமான் வரவேற்கிறார். ஒன்றிய மேலிட துணை பொறுப்பாளர்கள் பொன்னரசன், காமராசு, மாது ஆகியோர் முன்னில...
தமிழகம்
சோழீஸ்வரர், அழகராய பெருமாள் தேர் : ஆக்கிரமிப்புகளால் சாலையில் நிறுத்தம்
நாமக்கல்: மல்லசமுத்திரம் சோழீஸ்வரர், அழகராய பெருமாள் ஸ்வாமி கோவிலில் நடந்த ஆனிமூல திருவிழா தேரோட்டம், சாலை ஆக்கிரமிப்பால் நடுரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் அடுத்த மல்லசமுத்தரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோழீஸ்வரர், அழகராய பெருமாள், செல்லாண்டி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிமூல திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நட...
தமிழகம்
மக்கள் தொடர்பு திட்டமுகாமில் 71 லட்சம் ரூபாய் நிதி உதவி
தர்மபுரி: அரூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அமுதா வழங்கினார். அரூர் அடுத்த கோட்டப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் அமுதா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கோட்டம்பட்டி, அரூர் சுற்றுவட்டார கிராமங்களை...
தமிழகம்
டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா
நாமக்கல்: தென்மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், முப்பெரும் விழா, வரும் 30ம் தேதி நடக்கிறது.தென்மண்டல மொத்த எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புதிய தேசிய பர்மிட் பெற்றுத்தந்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, மாநில லாரி உ...
தமிழகம்
இலவச சித்த மருத்துவ முகாம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த வேப்பமரத்துக்கொட்டாய் கிராமத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.சேலம் மகிலம் சித்த வைத்தியசாலை மல்லூர் மருத்துவர் சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஆதம் அண்ணாவி, மருத்துவர் செல்லத்துரை ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகி...
தமிழகம்
சைக்கிள் மீது மொபட் மோதி விவசாயி பலி
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(42). இவர் சைக்கிளில் தர்மபுரி பை-பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆத்தோரத்தான் கொட்டாய் அருகே சென்ற போது, எதிரே வந்த மொபட் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்...
தமிழகம்
குண்டலப்பட்டி பை- பாஸ் பிரிவில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்
தர்மபுரி: தர்மபுரி குண்டலப்பட்டி பை- பாஸ் பிரிவு சாலையில் சிக்னல் இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.பழைய தர்மபுரி குண்டலப்பட்டி பை- பாஸ் பிரிவு சாலையில், கிருஷ்ணகிரி- சேலம் நான்கு வழிச்சாலையில் இருந்து தர்மபுரி நகருக்கு செல்லும் சாலை பிரிகிறது. கிருஷ்ணகிரிய...
தமிழகம்
கோழி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது
பள்ளிபாளையம்: முன் விரோதம் காரணமாக, கோழி வியாபாரியை இரும்ப கம்பியால் தாக்கிய, வாலிபரை பள்ளிபாளையம் போலீஸார் கைது செய்தனர். பள்ளிபாளையம் அடுத்த கலியனூர் செம்பாரைக்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி (56). அவரது உறவினர் சண்முகம் (26). இருவரும் கூட்டாக நாட்டுக்கோழி பண்ணை வைத்திருந்தனர். அவர்களுக்குள் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக பி...
தமிழகம்
தாய் கழுத்தை அறுத்து கொலை : செய்த இரு மகன்கள் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே நகை தர மறுத்த தாயை, கழுத்து அறுத்து கொலை செய்த மகன்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரி அடுத்த சூடனூரை சேர்ந்த விவசாயி அண்ணாமலை. இவரது மனைவி காளியம்மாள்(79). இவர்களுக்கு வெங்கடேஷ்(54), கோவிந்தன்(46) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அண்ணாமலை இறந்து விட்டார். காளியம்மாள், குடும்ப சொத்தை சரிபாதியாக...
தமிழகம்
பெயர் வைக்க எதிர்ப்பு : மறியல் செய்த காங்., கட்சியினர் கைது
மேட்டூர்: ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு மாற்று பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்., கட்சியினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் தரை தளம் அமைப்பது, மேற்கூரை பழுது பார்த்தல் என 28 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு மாதமாக சீரமைப்பு பணி நடக்கிறது. விரைவில் சீரமைக்கப்பட்ட பஸ் ஸ்...
தமிழகம்
பைக் மீது லாரி மோதி விற்பனை அதிகாரி பலி
தர்மபுரி: தர்மபுரியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன விற்பனை அதிகாரி பலியானார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ்மகன் நித்யாநந்தா(27). இவர் தர்மபுரியில் தனியார் சிமெண்ட் கம்பெனியில் விற்பனை அதிகாரியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் இருந்து அதி...
தமிழகம்
பெட்டிக்கடை தீயில் நாசம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன்(50). இவர் அங்கு உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சீனிவாசனின் பெட்டிக்கடை தீ பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர்...
தமிழகம்
கொள்ளை போன கோவில் நகை விவசாய நிலத்தில் கண்டெடுப்பு : போலீஸார் விசாரணை
ப.வேலூர்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில், கடந்த மாதம் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதி விவசாய தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ப.வேலூர் அடுத்த பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் இருந்த உண்டியலை, கடந்த...
தமிழகம்
பேரணி
தர்மபுரி: தர்மபுரியில் சர்வதேச போதை பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தில் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது.தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் இருந்து துவங்கிய பேரணியை கலெக்டர் அமுதா துவக்கி வைத்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டம் மது விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் அறியாமை நிலை உள்ளத...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
ராசிபுரம்: அன்னை தெரசா இளைஞர் சங்கம் சார்பில், மரக்கன்று நடும் விழா ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளியில் நடந்தது. இளைஞர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி தலைமை வகித்தார். இளையோர் மன்றத் தலைவர் நல்லதம்பி வரவேற்றார். விழாவில், மரம் நடவேண்டியதன் அவசியம் குறித்தும், பயன் பற்றியும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட இள...
தமிழகம்
அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு தரிசன கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது., பவுர்ணமி நாட்களில் மட்டும், பக்தர்களிடம் சிறப்பு தரிசன கட்டணம் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ...
தமிழகம்
பஸ்சில் விவசாயியிடம் 5,000 ரூபாய் ஜேப்படி
ப.வேலூர்: ஓடும் பஸ்சில் விவசாயியிடம் 5,000 ரூபாயை ஜேப்படி செய்த இரண்டு வாலிபர்களை, ப.வேலூர் போலீஸார் தேடி வருகின்றனர். ப.வேலூர் அடுத்த பிலிக்கல்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (50). சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பேத்தியை பார்த்து வருவதற்காக ப.வேலூர் பஸ் ஸ்டாண்ட் வந்து, நாமக்கல் செல்லும...
தமிழகம்
கரும்பு விவசாயிகள் சங்க 27வது பேரவை கூட்டம்
மோகனூர்: சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் 27வது ஆண்டு பேரவை கூட்டம், நாளை (ஜூன் 29) மோகனூர் நவலடியான் திருமண மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. சங்கத்தலைவர் கந்தசாமி தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். பொருளாளர் வரதராஜன் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்கிறார். புதிய நிர்வாகிகள...
தமிழகம்
புடவையில் தீ பிடித்து இளம் பெண் காயம்
மோகனூர்: மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில், இளம்பெண் படுகாயமடைந்தார். மோகனூர் அடுத்த மல்லுமாச்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (26). சொந்தமாக லாரி வைத்துள்ள இவர் டிரைவராகவும் உள்ளார். அவரது மனைவி கண்ணகி (25). தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளன. நேற்று கண்ணகி, பால் காய்ச்சுவதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்...
தமிழகம்
தங்கமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா முள்ளங்குடி கிராமத்தில் வீற்றிருக்கும் தங்கமுத்து மாரியம்மன் கோவில், விநாயகர், காளியம்மன், பிடாரிஅம்மன், அய்யனார், சங்கிலிகருப்பன் மற்றும் கோவில் பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் ஜஞுன் 24ம் தேதி நடந்தது. இக்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 21ம்தேதி பூர்வாங்க பூஜைகள...
தமிழகம்
திருச்சி அருகே விபத்து இருவர் பரிதாப பலி
திருச்சி: கரூர் மாவட்டம் புலியூரைச் சேர்ந்தவர் சங்கர்(35). லாரி மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவரது மகன் அரவிந்த் (11). திருச்சி கேம்பியன் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். செம்மொழி மாநாட்டையொட்டி பள்ளியில் விடுமுறை விடப்பட்டது. அதனால் சொந்த ஊருக்கு அரவிந்த் சென்றார். விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட...
தமிழகம்
புதிய பல்வகை தொழில் நுட்ப கல்லூரி பணி துவங்குவதில் தாமதம் : பரிதவிக்கும் மாணவர்கள்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் மத்திய அரசின் பல்வகை தொழில் நுட்பக்கல்லூரி ஜூலையில் துவக்குவதாக அறிவிக்கப்பட்டும் எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை. உடன் பணிகளை துவங்க மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்துகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு கலைக்கல்லூரி, தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் தனியார் கல்...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வு : இ.கம்யூனிஸ்ட்- பா.ஜ., திருச்சியில் ஆர்ப்பாட்டம்
திருச்சி: திருச்சி மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருச்சி மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பெட்ரோலிய பொருட்களின் கடும் விலை உயர்வை கண்டித்து, புத்தூர் நால்ரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. விலைஉயர்வை உட...
தமிழகம்
அரசு போக்குவரத்துக்கழகத்தை சீரழிக்கும்' பெட்ரோல், டீஸல் விலை உயர்வு
தஞ்சாவூர்: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., குடந்தை கோட்ட பொதுச் செயலாளர் மதிவாணன் வெளியிட்ட அறிக்கை: அரசின் பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகம் மக்களுக்கான சேவை நிறுவனமாகும். பல விலைவாசி உயர்வு, அடிக்கடி உயரும் பெட்ரோல், டீஸல் விலை உயர்வால் அனைத்து பொ ருளின் விலையும் உயர்ந்துள்ளது. தமிழகத...
தமிழகம்
அரசு உயர்நிலைப்பள்ளி கட்டமைப்பு பணிக்கு பூமி பூஜை துவக்கம்
முசிறி: முசிறி யூனியன் வெள்ளூர் பஞ்சாயத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சம்பத் வரவேற்றார். இளநிலை பொறியாளர் கோபால், பணி மேற்பார்வையாளர் பரணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன், உதவி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன...
தமிழகம்
திருச்சியில் நாட்டு காய்கறிகளுக்கு மவுசு : இங்கிலீஷ் காய்கறி விலை உயர்வு எதிரொலி
திருச்சி: திருச்சி காந்தி காய்கறி மார்க்கெட்டில் மாலை சந்தை, காலை சந்தை என இரண்டு வகையான சந்தைகள் நடைபெறுகிறது. இதில், மாலை சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கள் மறுநாள் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது. காலையில் புதிதாக வந்த காய்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தவிர, காய்களின் தரத்தைப் பொருத்து விலையில் ஏற்றம், இறக...
தமிழகம்
விடுதி மாஜி வார்டன் மீது செக்ஸ் குற்றச்சாட்டு : தஞ்சையில் கலெக்டர் உள்ளிட்டோர் விசாரணை
தஞ்சாவூர்: தஞ்சை இளைஞர் விடுதி முன்னாள் வார்டன் மீது செக்ஸ் குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகள் கூறப்படுவது குறித்து கலெக்டர், விளையாட்டுத்துறை விடுதிகளுக்கான உறுப்பினர் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி ரோட்டில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கட்டுப்பாட்டில் இளைஞர் விடுதி உள்ளது. இதுபோன்ற...
தமிழகம்
புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணி, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு
அரியலூர்: கட்டுமானப் பணிகள் முழுமைபெறும் நிலையில் உள்ள அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2007 நவ., 23ம் தேதி துவக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக, அரியலூர் புறவழிச்சாலை அருகே உள்ள, அரசினர் தொழிற் பயிற்சி ...
தமிழகம்
ம.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
அரியலூர்: அரியலூர் ம.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட ம.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகளுக்கான உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் சின்னப்பா தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகளிடம் உறுப்பினர் அட்டைகளை வழங்கி, ம.தி.மு.க., அரச...
தமிழகம்
சிமெண்ட் ஆலையில் மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு: அரியலூர் கலெக்டர் தகவல்
அரியலூர்: மாற்றுத்திறனாளிக்கு அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமெண்ட் ஆலைகளின் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் கூறியுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சே ர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, சிமெண்ட் நிறுவனங்களில் வே லை வாய்ப்பு வழங்குவது பற் றி, சிமெண்ட் நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோசனை க...
தமிழகம்
தி.மு.க.,தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
அரியலூர்: அரியலூர் ஒன்றிய தி.மு.க., சார்பில், ராயம்புரம், சென்னிவனம் ஆகிய ஊர்களில் நடந்த, முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாள் விழா மற்றும் உலக தமிழ் செம்மொழி மாநாடு விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. தி.மு.க., அரியலூர் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் தலைமை வகித்தார். அரியலூர் நகர செயலாளர் முருகேசன் வரவேற்றார். தலைம...
தமிழகம்
தீ விபத்து: 13 குடிசைகள் எரிந்து நாசம்
பெ.நா.பாளையம்: கோவை, கவுண்டம்பாளையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 குடிசைகள் எரிந்து நாசமாயின. கவுண்டம்பாளையம் பி அண்ட் டி காலனி அருகே ஸ்ரீதேவி நகர் உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த கோட்டி, மல்லையா, மென்னாராவ்,ஜெயராஜ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் குடிசை அமைத்து வசிக்கின்றனர். நேற்று மதியம் இப்பக...
தமிழகம்
செம்மொழி மாநாடு நினைவாக மரக்கன்று நடும் பணி கரூரில் துவக்கம்
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நினைவு கூறும் வகையிலும், திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிக்கும் வகையிலும் பல்வேறு மரக்கன்று நடும் பணி துவக்க விழா நடந்தது. மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்து கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரும், தமிழரும் பெருமை கொள்ளும் வகையி...
தமிழகம்
கைத்தறியாளர் பிரச்சார பயணம் : ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் தீர்மானம்
கரூர்: ஏ.ஐ.டி.யு.சி., கைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் நெசவாளர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் கரூரில் நடந்தது. சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் நாட்ராயன், அக்சையா அறக்கட்டளை கலாராணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வடிவேலன் வாழ்த்தி பேசினார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கைத்தறி தொழிலாள ர்க...
தமிழகம்
பெட்ரோல் விலையேற்றம் : கரூர் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடந்தது. மாவட்ட தலைவர் சிவமணி தலைமை வகித்தார். துணை தலைவர் சிவசாமி முன்னிலை வகித்தார். பொது செயலாளர் சிவா, தாந்தோணி ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, மகளிர் அணி தலைவர் கவிதா, நகர தலைவர் செல...
தமிழகம்
கரூர் மாவட்ட மருந்தாளுநர் சங்க செயற்குழு கூட்டம்
கரூர்: தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. சங்க நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர் பாலகுமாரன் விளக்கி பேசினார். நிதிநிலை குறித்து பொருளாளர் குமரேசன் விளக்கினார். தலைமை மருந்தாளுநர் தியாகராஜன், கணேசன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சு...
தமிழகம்
நுகர்வோர் சங்கம் கண்டனம்
கரூர்: பெட்ரோல், டீஸல் விலை உயர்வை அம்பேத்கார் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் செயலாளர் செந்தில் முருகன், தலைவர் செல்வராஜ் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி டீஸல், பெட்ரோல், மண்ணைண்ணெய், காஸ் விலையை உயர்த்தியது பொது மக்களை மிகவும் பாதிப்படைய செய்...
தமிழகம்
ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி முகாம் : தோட்டக்கலை துறை ஏற்பாடு
லாலாபேட்டை: கிருஷ்ணராபுரம் தாலுகா, பழைய ஜெயங்கொண்டம் புதுப்பட்டியில் தோட்டகலைத்துறை மூலம் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி முகாம் நடந்தது. புதுப்பட்டி கிராம பஞ்சாயத்து துவக்க பள்ளியில் நடந்த முகாமில் தோட்டகலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் பேசினார். காய்கறி பயிர் சாகுபடி அவசியம், காய்கறி நாற்றங்கால் தயாரிப்பு, மேட்டுப்பாத்தி நாற்...
தமிழகம்
அமராவதி ஆற்றில் அமர்ந்து போராட்டம் : மக்கள் வாழ்வுரிமை இயக்கம் தீர்மானம்
கரூர்: அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆற்றில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த மக்கள் வாழ்வுரிமை இயக்கம் தீர்மானித்துள்ளது. மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சிறப்பு செயற்குழு கூட்டம், கரூர் காவேரியம்மாள் மண்டபத்தில் பொதுச்செயலாளர் குணசேகரன் தலைமையில் நடந்தது. துணை பொது செயலாள...
தமிழகம்
ரயில்வே பாதுகாப்பு வாரவிழா : ஏமூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு
கரூர்: அகில உலக ரயில்வே பாதுகாப்பு வாரவிழா முன்னிட்டு கரூர் அடுத்துள்ள ஏமூரில் ஆள் இல்லாத ரயில்வே லெ வல் கிராசிங் கடப்பது குறித்து பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடந்தது. சேலம் கோட்ட முதுநிலை பாதுகாப்பு அலுவலர் அண்ணாதுரை, ஏமூர் லெவல் கிராசிங் கடக்க வந்த அப்பகுதி மக்களிடம், ஆபத்தில்லாமல் லெவல் கிராசி...
தமிழகம்
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூர்: மின்நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு சின்னதாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் கரூர் மேற்பார்வை பொறியாளர், தலைமையில், நாளை 29ம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. எனவே, மின்நுகர்வோர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைபாடுகளுக்கு நேரில் ம னு செய்துபயன்பெறுமாறு கரூர் ம...
தமிழகம்
டி.எஸ்.பி.,மகன் தற்கொலை
மதுரை: மதுரை கூடல்புதூரை சேர்ந்த ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஜெனகரத்தினம். இவரது மகன் நாகராஜன் (42). இவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்தார். பணம் திரும்ப கிடைக்காததால், நாகராஜன் நேற்று விஷம் குடித்து தற் கொலை செய்து கொண் டார். கூடல்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் அப்துல்கலாம் கருத்துரை இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
திருநெல்வேலி : தமிழ் செம்மொழி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கருத்துரை இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளரும், த.மு.மு.க., மாநிலத்தலைவருமான ஜவாஹிருல்லா நெல்லையில் கூறியதாவது: மத்திய அரசு அறிவித்த...
தமிழகம்
குற்றால அருவிகளில் மிதமான தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலம் : குற்றால அருவிகளில் நேற்று மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் நடத்தினர். குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் சற்று குறைந்தது. கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. மெயின் அருவியில் பரவலாக தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் 4 கிளைகளிலும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது. இங்கு சுற்றுலா பயணிகள் கூட்ட...
தமிழகம்
நெல்லையில் இதுவரை 60 போலி டாக்டர்கள் கைது
திருநெல்வேலி: நெல்லையில் போலி டாக்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த வடக்கு சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன்(50). சொந்தமாக மெடிக்கல் ஸ்டோர்ஸ் நடத்தி வரும் இவர், அங்கிருந்தபடியே நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருந்து கொடுத்து வந்தார். கீழப்பாவூரை சேர்ந்தவர் பாஸ்கர்(40). இவ...
தமிழகம்
வள்ளியூர் அருகே இளம்பெண் மாயம்
வள்ளியூர்:வளளியூர் அருகே தோட்டத்திற்கு சென்ற இளம்பெண் மாயமானார்.வள்ளியூர் அருகேயுள்ள கண்ணநல்லூர் தாமரைகுளத்தை சேர்ந்த வைரவன் மகள் விஜயகுமாரி (18). இவர் ஊருக்கு அருகேயுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு சாப்பாடு கொண்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் சாப்பாடு கொண்டுவர சென்ற விஜயகுமாரி வீடு திரும...
தமிழகம்
நல்லூர் பகுதி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க பாங்குகள் மறுப்பு
ஆலங்குளம்:ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் பகுதி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க அனைத்து பாங்குகளும் மறுத்து வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆலங்குளத்தை அடுத்துள்ள நல்லூரில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகமாக உள்ளனர். இப்பகுதிக்கு கல்விக்கடன் வழங்க ஆலங்குளம் பாண்டியன் கிராம பாங்க், சிவலார்கு...
தமிழகம்
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் கல்வி சான்றிதழ் உடனடியாக வழங்க கோரிக்கை
சிவகிரி:சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு உயர் படிப்பிற்கு தேவையான கல்வி சான்றிதழ்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தமிழகமெங்கும் எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ் 2 முடிவுகள் வெளியாகி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், விவசாயம் மற்றும் கலை க...
தமிழகம்
பைபர் படகுகளுக்கு உரிமம் வழங்க ஆய்வு
ராமநாதபுரம்: இலங்கையில் பிரச்னை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழக பகுதிகளில் பைபர் படகுகளுக்கு உரிமம் வழங்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் போர் நடைபெற்றபோது, ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பைபர் படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. நாட்டுப்படகு, விசைப்ப...
தமிழகம்
பருவமழையை சரியாக கணிக்க புதிய ஆய்வு
புதுடில்லி: தென்மேற்கு பருவமழை துவங்கும் தேதியில், பெரும் வித்தியாசம் ஏற்பட்டிருப்பதால், வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் சரியான தேதியைக் கணக்கிட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பருவமழை பொதுவாக, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப் படி ஓரிரு நாட்கள் முன்பாகவோ, பின்பாகவோ துவங்கும். ஆனால், தற்போது, பல நாட்கள் இடைவெளியில் துவங்குகிறது. இ...
தமிழகம்
டிரைவர், கிளீனரை கட்டிபோட்டி ரூ.73ஆயிரம், மொபைல்போன் கொள்ளை
விருதுநகர்: விருதுநகர் அருகே வேன் டிரைவர் மற்றும் கிளீனரை கட்டிப்போட்டி ரூ.73ஆயிரம் பணம் மற்றும் செல் போனை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் வளசை, சூரம்பட்டியை சேர்ந்தவர் சேகர்(25), இவர் வேன் டிரைவராக உள்ளார். அதேபோல் இதேபகுதியை சேர்ந்தவர் மோகன்(19) இவர் சேகர் ஓட்டும் வேனில் கிளீனராக உ...
General
இந்தியா-கனடா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து
டொரன்டோ: இந்தியா-கனடா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இருநாட்டு பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்மூலம் மூலம் கனடா நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் அணுயுரேனியம் பெற இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், கனடாவிடம் இருந்து பெறும் ‌யுரேனியத்தை...
தமிழகம்
ஆண்டு விழா
சென்னை: 2010 -இளைஞர் ஆண்டு விழாவை, வேலூர் மறைமாவட்ட ஆயர் சவுந்தரராஜூ, சென்னை, சந்தோம் சர்ச்சில் கொடியேற்றி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்
General
மன்மோகனுக்கு ஒபாமா புகழாரம்
டொரன்டோ: ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம், உலக பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பது இ...
தமிழகம்
இலவச சீருடை வழங்கு விழா
சென்னை: செங்குன்றம் இஸ்லாமிய இளைஞர் நலச்சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை புழல் சிறை எஸ்.பி., ராஜேந்திரன் வழங்கினார்.
தமிழகம்
பொலிவியாவில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி
ல பஸ் : பொலிவியாவில் பயணிகள் பஸ் ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இருந்த ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்குள் 2 வது முறையாக நடைபெறும் மிகப் பெரிய விபத்து ...
இந்தியா
ஆந்திராவில் கைதிகளுக்கு புதிய திட்டம்
வேலூர் : ஆந்திராவில் சிறு குற்றங்கள் செய்து 3 முதல் 6 மாதங்கள் வரை தண்டனை பெறும் குற்றவாளிகளை சிறையில் அடைக்காமல், அவர்களுக்கு புதியமுறையில் சமூக சேவை செய்வது போன்ற தண்டனை வழங்கப்பட உள்ளதாக ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார். வேலூரில் சிறை காவலர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் பயிற்சி முகாமின்...
இந்தியா
பீகார் பிரசாரத்தில் மோடி பங்கேற்பு : கட்காரி உறுதி
பாட்னா : பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கட்டாயம் பங்கேற்பார் என பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அத்வானி, வருண் உள்ளிட்ட தலைவர்களும் திட்டமிட்டபடி பிரசாரத்தில் பங்கேற்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உமாபாரதியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக...
தமிழகம்
ஆத்தூரில் கிணற்றில் விழுந்து மான் பலி
ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த தென்குமறை பகுதியில் உள்ள 50 அடி விவசாய ‌கிணற்றில் தவறி விழுந்த மான் பரிதாபமாக பலியாகி உள்ளது. கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மான் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினரின...
இந்தியா
மதுராவில் சாலை விபத்து : 2 பேர் பலி
மதுரா : உத்திர பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கயாரா கிராமத்தில் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் ஒருவர் சம்பவத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்ததாக போலீசார் தெ...
இந்தியா
2,20,000 டிரக்குகள் விற்ப‌னை : டாடா இலக்கு
மும்பை : 2010-11ம் நிதியாண்டில் 2,20,000 இலகுரக டிரக்குகளை விற்ப‌னை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‌தங்கள் நிறுவனம் , கடந்த நிதியாண்டில் 1,58,000 டிரக்குகளை விற்பனை செய்துள்ளதாகவும், இதில் 1,10,000 ஏஸ் டிரக்குகளையும், 48,...
தமிழகம்
திட்டக்குடியில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை :பொதுப்பணித்துறை பாசன ஏரியான வெலிங்டன் ஏரியை சீர்படுத்தக்கோரியும், பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட கோரியும் வலியுறுத்தி கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அதிமுக சார்பில் நாளை காலை 10 மணி அளவில், திட்டக்குடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் ஜெ...
General
அமெரிக்காவில் இணையதளம் துவக்கியது இந்திய தூதரகம்
வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் புதிய இணையதளம் ஒன்று துவக்கப்பட உள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் இந்திய-அமெரிக்க உறவு குறித்த தற்போதைய தகவல்கள், உடன்பாடுகள், கொள்கைகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். www.indianembassy.org என்ற முகவரியைக் கொண்ட இந்த இணையதளம் இவ்வார இறுதியில் துவங்கப்பட உள்ள...
தமிழகம்
தலைமைச் செயலகத்தில் இனி அனைத்தும் தமிழ்
சென்னை : தலைமைச் செயலக நிர்வாகத்தில் அனைத்து கோப்புகளிலும் இனி தமிழில் கையெழுத்திடுவோம் என்றும், அனைத்து கடிதங்கள், அரசாணைகளை தமிழிலேயே வெளியிடுவோம் என்றும், தலைமைச் செயலக சங்கம் அறிவித்துள்ளது.தமிழக தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் சுந்தரேசன், செயலர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:செம்மொழி மாநாட்டில், 21ம் ந...
தமிழகம்
ஜார்ஜியா மாறுகிறது: ஸ்டாலின் சிலை அகற்றம்
திபில்சி: ஜார்ஜியாவின் முக்கிய நகரம் ஒன்றில் இருந்த ஸ்டாலின் சிலை, இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. நகரத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருப்பதால், சிலை எடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய சோவியத் குடியரசு நாட்டில் ஒன்றாக ஜார்ஜியா இருந்தது. 1991ல் ரஷ்யா உடைந்த போது, ஜார்ஜியா விடுதலை அடைந்தது. இந்நா...
General
ஜாக்சனின் கையுறைரூ.9.5 கோடி
லண்டன்:ஜாக்சனின் கையுறை 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள், அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. லாஸ் வேகாஸில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.இதில், ஜாக்சன் பயன்படுத்திய கையுறை 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இது எ...
இந்தியா
சட்ட விரோத சுரங்க தொழில்:3 மந்திரிகளுக்கு கமிஷன் நோட்டீஸ்
பெங்களூரு:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் சட்ட விரோதமாக சுரங்கப் பணியில் ஈடுபட்டது தொடர்பாக, கர்நாடக அமைச்சர்கள் மூன்று பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடக மாநில சுற்றுலா அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. அவரது சகோதரர் வருவாய்த் துறை அமைச்சர் கருணாகர ரெட்டி. இவர்களின் நெருங்கிய உதவியாளர் ம...
இந்தியா
நிதிஷ் - மோடி கருத்து வேறுபாட்டைதாண்டி தேர்தலில் தொகுதி உடன்பாடு
புதுடில்லி:பீகாரில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்பட்டுள்ளது.பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கட்சிகளுக்கு இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வெளியி...
இந்தியா
ஆந்திர சட்டசபை இடைத்தேர்தல்:பா.ஜ.,வுடன் டி.ஆர்.எஸ்., கூட்டணி
ஐதராபாத்:ஆந்திராவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை இடைத்தேர்தலில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டி.ஆர்.எஸ்., மற்றும் பா.ஜ., எம்.எல். ஏ.,க்கள் தங்களது பதவிகளை ராஜினாம...
தமிழகம்
முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு?
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 921 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறாத 32 பேர், தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், பல பேரின் பதிவு மூப்பு தேதி முன் தே...
இந்தியா
ஆந்திர சட்டசபை இடைத்தேர்தல் : பா.ஜ.,வுடன் டி.ஆர்.எஸ்., கூட்டணி
ஐதராபாத் : ஆந்திராவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை இடைத்தேர்தலில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டி.ஆர்.எஸ்., மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவிகளை ராஜின...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலச் செயலர் கதிரவன் பேட்டி :செம்மொழி மாநாடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து, கருணாநிதி, தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் புகழ் தேடிக்கொள்கிறார். கருணாநிதியின் குடும்பத் திருவிழாவாகவே, செம்மொழி மாநாடு நடந்தது. வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் ராமமூர்த்தி பேட்டி: பெரும்பாலா...
தமிழகம்
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவக்கம்
சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், மே 17 - 31ம் தேதி வரை வழங்கப்பட்டன. மருத்துவப் படிப்பிற்கு 18 ஆயிரத்து 131 பேர் விண்ணப்பித்தனர். இதில், 6,423 பேர் ஆண்கள்; 11 ஆயிரத்து ...
தமிழகம்
கராத்தே, ஊசூ விளையாட்டில் சாதித்த அண்ணன், தங்கைக்கு எம்.பி.பி.எஸ்., சீட்
சென்னை : கராத்தே, ஊசூ விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த அண்ணன், தங்கைக்கு, சென்னை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நேற்று துவங்கியது. மருத்துவப் படிப்பில் விளையாட்டி...
தமிழகம்
தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை : ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடுத்த வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. ஆண்டு தோறும் ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் இருந்து பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வேண்டும். இவ்வாறு அங்கீகாரம் பெற இந்த ஆண்டு புதிய விதிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ., விதித...
தமிழகம்
கொலை வழக்கில் ஆயுள் ஐகோர்ட் உறுதி செய்தது
மதுரை : தஞ்சையில் மனைவியை கொலை செய்தவருக்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த ஆயுளை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. தஞ்சை வடக்குதெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி உமாராணி. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமுற்ற ராமநாதன், மனைவியை கட்டையால் தாக்கினார். இதில் உமாராணி இறந்தார். ராமநாத...
தமிழகம்
பதிவு பெற்ற சித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை : போலீசாருக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
மதுரை : முறையாக பயின்று பதிவு சான்றிதழ் பெற்ற சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. குமரியைச் சேர்ந்த தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம் சார்பில் தாக்கலான மனு: சித்த மருத்துவர்களை போலீசார், போலி டாக்டர்கள் எனக்கூறி கைது செய்து துன்பு...
தமிழகம்
விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை : ஜாதி சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்யும் விழுப்புரம் ஆர்.டி.ஓ., நாளை கோர்ட்டில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னையன் என்பவர் தாக்கல் செய்த மனு: நான் மலைகுறவன் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகன் பிரகாஷுக்கு ஜாதி சான்றிதழ் கோரி விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வ...
தமிழகம்
22 ஆண்டுகளுக்கு முன் விற்ற வீட்டுக்கு பணம் செலுத்த வீட்டு வசதி வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை
சென்னை : கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்ட வீட்டுக்கு, வட்டியுடன் இறுதி விலையை செலுத்த வேண்டும் என, வீட்டுவசதி வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு நிபந்தனையுடன் கூடிய தடையை சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது. மந்தைவெளியைச் சேர்ந்த டி.வி.ரவி என்பவர் தாக்கல் செய்த மனு: தாம்பரத்தில் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டை எனக்க...
தமிழகம்
சிவகங்கை கொலை வழக்கில் தேடிய மூவர் கோர்ட்டில் சரண்
திருச்சி: சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். சிவகங்கை மாவட்டம் புத்தடிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ் (26). இவர் கடந்த 25ம் தேதி தனது டூவீலரில் சொக்கநாதபுரம் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பின்தொ...
தமிழகம்
இந்திய இளைஞர் அறிவியல் காங்கிரஸ் மாநாடு நிறைவு
செங்கல்பட்டு : இந்திய இளைஞர் அறிவியல் காங்கிரஸ் மாநாடு நிறைவு விழா, எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் நடந்தது.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய இரண்டாவது இந்திய இளைஞர் அறிவியல் காங்கிரஸ் அமைப்பின் மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 26ம் தேதி துவங்கியது.தேசிய ஆலோசனைக் க...
தமிழகம்
இரண்டு கூர்க்காக்களுக்கு ஆயுள் தண்டனை
சென்னை : கூர்க்காவை கொலை செய்த இரண்டு கூர்க்காக்களுக்கு சென்னை கூடுதல் செஷன்ஸ் கோர்ட், ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சென்னை வடபழனியில், இரவு நேர காவல் வேலை செய்து வந்தவர்கள் கணேஷ், பிரகாஷ். நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்காக்களான இருவரும் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நே...
தமிழகம்
போக்குவரத்து குறைவாக இருக்குமாம் : புறவழிச் சாலையின் அகலம் குறைப்பு
தியாகதுருகம் : நகருக்கு வெளியே செல்லும் புறவழிச் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு சாலையின் அகலத்தை குறைத்து இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை - சேலம் இடையே 1,000 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. எதிர்காலத்தில் ஆறு வழி...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் அனாதையாக ஒரு ஜீவன் : எங்கே போனது மனிதாபிமானம்
பல நாட்கள் சாப்பிடாததால், தோல் போர்த்திய எலும்புக்கூடாய், தவழ்ந்து செல்லக்கூட வழியில்லாமல், யாரையும் உதவிக்கு அழைக்க சக்தி இல்லாமல், அழுக்கு சட்டை, கைலியுடன், மதுரை அரசு மருத்துவமனையில், "யாராவது காப்பாற்றவார்களா' என்று 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஜீவன், வயிற்றுக்கும், தொண்டைக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தது. சாப்பாடு ...
தமிழகம்
பொறியியல் கவுன்சிலிங் துவக்கம்: விளையாட்டு வீரர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
சென்னை : பொறியியல் படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இன்று முதல் பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கிறது. இக்கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர...
தமிழகம்
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை : சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று பேர், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.கடந்த ஆண்டு தமிழகத்தை அச்சுறுத்திய, "ஸ்வைன் ப்ளு' என்ற பன்றிக் காய்ச்சல் நோய், தற்போது கேரள மாநிலத்தில் பரவி, ஏராளமானவர்களை பாதிப்ப...
தமிழகம்
தேசிய அளவிலான கராத்தே பயிற்சி முகாம்
சென்னை : சென்னை ஜே.ஜே., உள்விளையாட்டு அரங்கில், தேசிய அளவிலான கராத்தே பயிற்சி முகாம் ஆலன் திலக் கராத்தே பள்ளி இயக்குனர் சென்சாய். நீல்மோசஸ் தலைமையில் நடந்தது.ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அகில உலக கராத்தே பயிற்சியாளர் சென்சாய். டாமி மோரீஸ் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை கராத்தே பயிற்சியாளர்...
தமிழகம்
இரண்டு கூர்க்காக்களுக்கு ஆயுள் தண்டனை
சென்னை : கூர்க்காவை கொலை செய்த இரண்டு கூர்க்காக்களுக்கு சென்னை கூடுதல் செஷன்ஸ் கோர்ட், ஆயுள் தண்டனை விதித்துள்ளது.சென்னை வடபழனியில், இரவு நேர காவல் வேலை செய்து வந்தவர்கள் கணேஷ், பிரகாஷ். நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்காக்களான இருவரும் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன், நே...
தமிழகம்
நீல்மெட்டல் பனால்காவிடம் இருந்து மேலும் 4 வார்டு பணிகள் பறிப்பு
சென்னை நகரில் துப்புரவு பணி செய்யும், நீல் மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் இருந்து மேலும் நான்கு வார்டு பணிகளை திரும்பப் பெற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு நன்றி
சென்னை : கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து, அனைத்து வசதிகளும் செய்து தந்த தமிழக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளர் அரசுப் பணியாளர்கள் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகமே வியக்கும் வண்ணம் ம...
தமிழகம்
பெண்ணிடம் வழிப்பறி: கொள்ளையன் கைது
துரைப்பாக்கம் : ராஜிவ்காந்தி சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த செயினை, பறிக்க முயன்ற பைக் கொள்ளையன் ஒருவனை பொதுமக்கள் விரட்டி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.பெருங்குடி, குறிஞ்சிநகரை சேர்ந்தவர் லோகோமுருகன். இவரின் மனைவி சிவகாமி(...
தமிழகம்
இரண்டு கூர்க்காக்களுக்கு ஆயுள் தண்டனை
சென்னை : கூர்க்காவை கொலை செய்த இரண்டு கூர்க்காக்களுக்கு சென்னை கூடுதல் செஷன்ஸ் கோர்ட், ஆயுள் தண்டனை விதித்துள்ளது.சென்னை வடபழனியில், இரவு நேர காவல் வேலை செய்து வந்தவர்கள் கணேஷ், பிரகாஷ். நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்காக்களான இருவரும் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நேப...
தமிழகம்
தேக்கடியில் இரண்டடுக்கு படகு இயக்க அனுமதி
தேக்கடி : தேக்கடியில் இரண்டு அடுக்கு படகுகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேக்கடியில் சென்ற ஆண்டு செப்., 30 ல் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான படகு கவிழ்ந்து 47 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, முறையான தகுதிச் சான்றிதழ் பெறாத படகுகளும், இரண்டடுக்கு படகுக்கும் தேக்கடி ஏரியில் இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. மூன்று மாதங்களுக...
தமிழகம்
ஆனந்தவள்ளி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
தாம்பரம் : ஊரப்பாக்கம், ஆனந்தவள்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில், 1997ம் ஆண்டு முதல், "கே.கே.கல்வி அறக்கட்டளை' சார்பில் ஆனந்தவள்ளி பள்ளி ...
தமிழகம்
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை : சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று பேர், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தை அச்சுறுத்திய, "ஸ்வைன் ப்ளு' என்ற பன்றிக் காய்ச்சல் நோய், தற்போது கேரள மாநிலத்தில் பரவி, ஏராளமானவர்களை பாதிப்...
தமிழகம்
பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்
போரூர் : போரூர், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் வரும் 2ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:கர்ப்பப்பை அடி இறங்குதல், அதிக உதிரப்போக்கு, அடி வயிற்றில் வலி, சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் போன்றவற்றால் அவதிப்படும் பெண்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் பங்கு கொண்டு...
தமிழகம்
பேக்கரி கடையில் தீ விபத்து
வளசரவாக்கம் : பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து நாசமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலை ஜானகி நகரில் ஜெபராஜ் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது கடைகளில், நான்கு பேர் வேலை செய்கின்றனர். நேற்று காலை 11 மணியளவில், கடை ஊழியர் ஒருவர், பப்ஸ், சுவீட் உள்ளிட்ட...
தமிழகம்
விபத்திற்கு வழிவகுக்கும் மாற்றுப்பாதை அறிவிப்பு: இடுப்பையொடிக்கும் பள்ளங்கள்
விருதுநகர்: விருதுநகரில் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தும், ரயில்வே மேம்பாலத்தின் மீது ரோடு போடும் பணி இரண்டு ஆண்டுகளாக இழுபறியாக உள்ளது. நூறு அடிக்கு முன்பாக வைக்க வேண்டிய மாற்றுப்பாதை அறிவிப்பு பலகையும் முன்யோசனையின்றி வைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மாற்றுப்பாதையில் உள்ள பள்ளங்கள் இடுப்பையொடிக்கும...
தமிழகம்
முன்பதிவு செய்யாத பயணிகளால் நீண்ட தூர பயணிகளுக்கு சிக்கல்
சென்னை : சென்னை சென்ட்ரல் வரும் ரயில்களில் முன்பதிவு செய்யாத பயணிகள், ரயில்வே பணியாளர்கள் என்ற பெயரில், காட்பாடி மற்றும் அரக்கோணம் நிலையங்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் ஏறுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலையும், உடைமைகளை பறிகொடுக்கும் நிலையும் உள்ளது. டிக்கெட் பரிசோதகர்கள், ரயில் நிலைய அதிகாரிகள் கண்ட...
தமிழகம்
விமோசனம் பிறக்குமா
* நான்கு வழிச்சாலையின் முக்கிய நோக்கமே பயண நேரத்தை குறைப்பது, விபத்தை தவிர்ப்பது தான். மாவட்ட விளையாட்டரங்கம் அருகே உள்ள மாற்றுப்பாதை அறிவிப்பு பலகை பகல் நேரத்திலேயே தெரியாத நிலையில், இரவில் வரும் வாகனங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்களில் வேகமாக வரும் டிரைவர்களுக்கு மேம்பாலம் அருகே வந்த பின் தான் அறிவிப்பு ப...