category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
குடியிருப்புப்பகுதி தண்ணீரை வியாபாரம் செய்வதால்,பகுதிகளில் உறிஞ்சுவது தடுக்கப்படுமா
மதுரை: குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி, மதுரை நகருக்குள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரிவாக்க பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மதுரை நகரின் விரிவாக்க பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில்தான் உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகமே மதுரை நகரின் அருகாமையில் உள்ள ...
தமிழகம்
மாங்கனி கண்காட்சியில் இன்று பட்டிமன்றம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் மாங்கனி கண்காட்சியில் இன்று (ஜூன் 29) பட்டிமன்றம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை. மாலை 6 மணிக்கு ராஜவேல் குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சி. ...
தமிழகம்
சுதர்சனம் உடல் தகனம் முதல்வர் நேரில் அஞ்சலி
அமைந்தகரை : மறைந்த, தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு, முதல்வர் கருணாநிதி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்த எம்.எல்.ஏ., சுதர்சனம், கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சென்ற போது, நெஞ்சு வலியால் இறந்தார். அவரது ...
தமிழகம்
விவசாய கடன் திரும்ப செலுத்த வேண்டுகோள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகள் 75 சதவீத தவணை தவறிய கடன் தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று கட்டத்தவறிய, விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணதிட்டம் 2008-ன் கீழ் பயன்பெறு...
தமிழகம்
போதை ஒழிப்பு தின பேரணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினப்பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய பேரணியை கலெக்டர் அருண்ராய் துவக்கி வைத்தார். பேரணி பெங்களூரு சாலை, ரவுண்டானா வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிந்தது. ஆர்.டி.ஓ., அன்பரசு, உதவி ஆணையர் (கலால்) கஸ்தூரி, முதன்மை ...
தமிழகம்
நவீன சமையலறை ÷ஷாரூமில் தீ விபத்து உயரமான ஏணி இல்லாததால் வீரர்கள் தவிப்பு
மதுரை: மதுரை குட்ஷெட்தெருவில் நவீன சமையலறை ÷ஷாரூமில், நேற்று மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இரண்டு மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். உயிர்சேதம் இல்லை.மேலமாசிவீதியைச் சேர்ந்தவர் செந்தில். குட்ஷெட் தெருவில், நான்கு மாடி வாடகை கட்டடத்தில், கீழ்தளத் தில், "சூரியா கிச்சன் மெட்டல் கடை' நடத்துகிறார். நேற்று காலை 9.3...
தமிழகம்
நகராட்சியை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ஓசூர்: ஓசூர் நகராட்சியை கண்டித்து, நகராட்சி முன் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் முன்னாள் எம்.பி., ஆஸ்டின் தலைமை வகித்து, ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அன்பரசன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் சங்கர்ராஜ், பொருளாளர் சீ...
தமிழகம்
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்ற லாரி டிரைவர் மீது மற்றொரு லாரி கவிழ்ந்ததில் பரிதாபமாக இறந்தார். திருச்சி மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார் (24). இவர் திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். லாரி கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ம...
தமிழகம்
ரோட்டரி சங்க வெள்ளி விழா
மதுரை: மதுரையில் வடமேற்கு ரோட்டரி சங்கத்தின் வெள்ளி விழா நடந்தது.விழாவிற்கு சங்கதலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் ராமதியாகராஜன் வரவேற்றார். தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜாகோவிந்தசாமி, மாவட்ட ஆளுனர் புருசோத்தமன், துணை ஆளுனர் சுப்ரமணியம், முன்னாள் ஆளுனர் ரவீந்திரன், நிர்வாகிகள் ராமசாமி, திலகர் உட்பட பல...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி யூனியன் லக்கபத்தனப்பள்ளியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட பட்டுவளர்ச்சி துறை உதவி இயக்குனர் கோலப்பா பிள்ளை தலைமை வகித்தார். மத்திய பட்டுவாரிய விஞ்ஞானி ராமமூர்த்தி "வி1' மல்பரி ரகம் பயிரிடுவது குறித்தும் "சி.எஸ்.ஆர்'., வீரிய இன பட்டு வளர்ப...
தமிழகம்
கோயில் திருவிழா
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் பொட்டபட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் கரகம் ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். வெள்ளிமலை, குருவார்பட்டி, அம்மன்கோயில்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழகம்
கும்பாபிஷேகம்
பாலமேடு: பாலமேடு அருகே வலையபட்டியில் பெரியபட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி ஹேமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வேள்வி பூஜை முடிந்ததும் நேற்று காலை கோபுர விமானத்தில் புனிதநீர் ஊற்றினர். அம்மன், மூலவர், கருப்பு சாமி உட்பட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தமிழகம்
பெண்ணிடம் நகைபறிப்பு
மதுரை: மதுரை கீழவைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி (35). நேற்று முன் தினம் மாலை ஆரப்பாளையம் தரைப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இருவர், சரஸ்வதியின் இரண்டரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
மாணவர் மாயமானதை பதிவு செய்ய மறுத்த இரு மாவட்ட போலீசார்
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு மாணவர் திடீரென மாயமான நிலையில், இது தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரை பதிவு செய்யாமல், இருமாவட்ட போலீசாரும் அவரை மிரட்டி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மாரந்தையை சேர்ந்தவர் கார்த்திகேயன்(14). நீராவியில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஒன்பதாம் வகுப்பு தே...
General
இந்தியா புறப்பட்டார் பிரதமர் மன்மோகன் சிங்
டோரான்டோ : கனடாவில்நடந்த ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கிருந்து  இந்தியா புறப்பட்டார். இரவு பிராங்க்பர்ட் நகரில் ஓய்வெடுக்கும் பிரதமர் அங்கிருந்து டில்லி வந்து சேர்கிறார்.  கடந்த 16 வருடங்களில்  முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலுக்கு பின்னர் கனடா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங் ஆவார்.  கனடாவில் பிரத...
தமிழகம்
புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை ஒதுக்க குலுக்கல் எப்போது
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில், கடைகளை ஒதுக்க அடுத்த மாதம் 2ம் தேதி குலுக்கல் நடக்கிறது.புதிய மார்க்கெட் ஏற்கனவே திறக்கப்பட்டாலும் இன்னமும், பழைய மார்க்கெட்டில் இருந்து கடைகள் இங்கு மாறவில்லை. புதிய மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் டெபாசிட் செலுத்தாததே காரணமாக இருந்தது. தற்போது டெபாசிட் செலுத்தத் துவங்...
தமிழகம்
சுற்றுலா வந்தவர்களின் நகை, பணம் பறித்த கும்பலை மடக்கிய மக்கள்
தர்மபுரி: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வேனில் இருந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து தப்ப முயன்ற மர்ம கும்பலை பொதுமக்கள் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அவருடன் பணிபுரியும் 18 பேர...
தமிழகம்
போதும் என்ற மனமில்லாததே லஞ்சத்திற்கு காரணம் : முன்னாள் நீதிபதி பேச்சு
பெருங்குடி: போதும் என்ற மனமில்லாததே லஞ்சத்திற்கு காரணம் என ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராமலிங்கம், தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி முகாமில் பேசினார். இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் பெருங்குடி வலையபட்டி அருகே தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாம் துவக்கவிழா நடந்தது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த முக...
தமிழகம்
பழ.கருப்பையா மீது தாக்குதல் : இரண்டு தனிப்படைகள் அமைப்பு
சென்னை : அ.தி.மு.க., பேச்சாளர் பழ.கருப்பையாவை தாக்கியவர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வசித்து வருபவர் பழ.கருப்பையா. அ.தி.மு.க., பேச்சாளரான இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்த ஆறு மர்ம நபர்கள், அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில், பழ. கருப்பையாவை கை மற்றும் மு...
தமிழகம்
கள்ளச்சாவி திருடர்கள் அதிகரிப்பு
மதுரை: மதுரையில் கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து திருடுவது அதிகரிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன், செல்லூரில் லீலாவதி என்பவரின் வீட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து 25 பவுன், 32,000 ரூபாய் திருடப்பட்டது. இதே முறையில், நேற்று முன் தினம் தல்லாகுளத்தில் லதா(43) என்பவர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.இவர், குடும்பத்துடன் ஜூன்...
தமிழகம்
மிளகாய் பொடி தூவி ரூ. 12 லட்சம் வழிப்பறி
திருச்செங்கோடு : பெட்ரோல் பங்க் ஊழியர்களின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, 12 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு - ஈரோடு சாலை ராஜாகவுண்டம்பாளையத்தில், தாலுகா லாரி அசோசியேஷன் பெட்ரோல் பங்க் உள்ளது. பெட்ரோல் பங்கில் வசூலான 12 லட்சத்து 724 ரூபாயை வங்கியில் செ...
தமிழகம்
வீட்டு காஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிப்பு
மதுரை: மதுரை செல்லூரில், குடிசைத்தொழிலாக, வீட்டு காஸ் சிலிண்டர்களை முறைகேடாக, கார், ஆட்டோ ஓட்ட பயன்படுத்தியது எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணை மேலாளர்கள் மனோகர், ஆரியன், பாரத் பெட்ரோலியம் உதவி மேலாளர் சண்முகராஜா, இந்துஸ்தான் பெட்ரோலியம் உதவி மேலாளர் ஒபையா தலை...
தமிழகம்
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு
தர்மபுரி: சவூதி அரேபியாவில் செவிலியர் பணிக்கு வாய்ப்புகள் இருப்பதால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன முதன்மை செயலர் குத்சியாகாந்தி வெளியிட்ட அறிக்கை: சவூதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் முதியோர் தீ...
தமிழகம்
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் 2ம் கட்ட பணி விரைவில் துவக்கம்
தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூ. 276 கோடியில் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டமிட்டப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான முதல் கட்ட பணிகள் கடந்த பிப்ரவரியில் இருந்து துவங்கி நடந்து வருகிறது. ஒகேனக்கல் கூ...
தமிழகம்
அ.தி.மு.க., மாணவரணி ஆலோசனை கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் மாணவரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தலைவர் குமரன், இணை செயலாளர் ராஜசேகர், செந்தில்குமார், துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னலை வகித்தனர். அ.தி.மு.க., மாணவரணி மாநில செயலாளர் உதயகுமார் பேசினார்."பெட்ரோல், டீஸல் விலை உயர்வுக...
தமிழகம்
அரூரில் பரிசளிப்பு விழா
அரூர்: அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளிகள் அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 40 பேருக்கு ஆறுதல் பரிசும், 36 பேருக்கு கல்வி உதவிகளும் வழங்கப்பட்டன. அரூர் காமாட்சி ...
தமிழகம்
கம்யூ., ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. காட்டேரி பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினருமான சேகர் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சபாபதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜரெட்டி, மாவட்ட துணை செயலாளர் வரதராசுலு கலந்து கொண்டனர். "...
தமிழகம்
தரமான ரோடுகளுக்காக காத்திருக்கும் குடியிருப்புகள்
- நமது சிறப்பு நிருபர் -மதுரையில் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடிருப்புகளை கொண்ட முக்கிய பகுதி துரைச்சாமிநகர். இதனை மையமாக வைத்து வானமாமலை நகர், வேல்முருகன் நகர், தாய்மூகாம்பிகை நகர், நமச்சிவாய நகர் என பல குடியிருப்பு நகர்கள் உருவாகியுள்ளன. "குடியிருப்போர் குரல்' பகுதிக்காக துரைச்சாமிநகர் குடியிருப்போர் நலச்ச...
தமிழகம்
இரங்கல்
தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் சுதர்சனத்துக்கு அஞ்சலி செலுத்தும் அஞ்சலி கூட்டம் காமராஜர் சிலை முன் நடந்தது. மறைந்த சுதர்சனன் திருவுருவப்படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா ஆகியோர் மாலை அணிவித்தனர். தொடர்ந்...
தமிழகம்
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பல் கைது
சென்னை : வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அன்பழகன்(35), புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த முருகன்(35), லோகம்பாள்புரத்தைச் சேர்ந்த தர்மராஜ...
தமிழகம்
திடீர் தீ விபத்து 7 குடிசைகள் சாம்பல்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியன் திருவனப்பட்டியில் நடந்த தீ விபத்தில் ஏழு குடிசைகள் எரிந்து சாம்பலானது.திருவனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (35). இவரது குடிசை வீடு நேற்று முன்தினம் திடீரென் தீப்பிடித்து அருகில் இருந்த சீமராஜ், சாந்தி, வாசுகி, ராணி, அயோத்தி, நாகராஜ் ஆகியோரின் குடிசைகளும் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தில...
தமிழகம்
தம்பிக்கு இரண்டாம் தாரமாக்க முயன்ற தாயை எதிர்த்து மகள் போலீசில் தஞ்சம்
மேலூர்: தனது அக்காவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவரை திருமணம் செய்து கொள்ள தாயே வற்புறுத்தியதால், தனது காதலனுடன் பெண் போலீசில் தஞ்சம் புகுந்தார். சிவகங்கையை சேர்ந்தவர் செல்வராஜ், ராஜம்மாள் தம்பதியனர். இவர்களுக்கு கலைச்செல்வி, சேதுமணி(22) என இரண்டு பெண்கள். கலைச்செல்வியை ராஜம்மாளின் தம்பி வேல்முருகனுக்...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கல்
தர்மபுரி: தர்மபுரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஒன்று, நான்கு, ஐந்து, வார்டு கிளைகள் சார்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. நகர செயலாளர் பாபு தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர்கள் சாதிக்பாஷா கோவை சையது ஆகியோர் பேசினர். மாவட்ட தலைவர் கலந்தர், செயலாளர் இர்பான்பாஷா, பொருளாளர் ...
தமிழகம்
மதுரை வருவாய்த் துறையில் கவுன்சிலிங் முறை ரத்து
மதுரை: மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் இடமாறுதலுக்கான கவுன்சிலிங் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வருவாய்த்துறையில் அலுவலர்களின் இடமாறுதல், பதவி உயர்வுக்கு, கல்வி, மருத்துவத் துறையில் உள்ளது போல கவுன்சிலிங் முறை அமல்படுத்தப்பட்டது. உதயசந்திரன் கலெக்டராக இருந்த போது இதை அறிமுகம் செய்தார். வேறெந்த மாவட்ட வருவா...
தமிழகம்
நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்
மண்டபம் : மண்டபம் வடக்கு பகுதியிலிருந்து கடந்த 26ம் தேதி ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று 27ம் தேதி கரை திரும்பின. காளிமுத்து என்பவரது விசைப்படகு நேற்று காலை வரை கரை திரும்பவில்லை. மண்டபம் மீன்துறையில் புகார் செய்தனர்.இதனிடையே படகில் சென்ற மீனவர் முனியராஜ் நாட்டுப்படகில் கரை திரும்பினார். மண்டபம் மீன்த...
தமிழகம்
டவுன் பஞ்சாயத்து கவுன்சில் கூட்டம்
காரிமங்கலம்: காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து கவுன்சில் கூட்டம் நடந்தது. சேர்மன் வீரம்மாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா, செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். "பஞ்சாயத்து வரவு, செலவு கணக்கு சரிபார்த்தல்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். கவுன்சிலர்கள் சீனிவாசன், மாதப்பன், ரகு, மாரியப்பன், கோவிந...
தமிழகம்
மினி ஆட்டோ திருடியவர் கைது
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் திருடப்பட்ட மினி சரக்கு ஆட்டோ விருதுநகரில் மீட்கப்பட்டது. ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடுகின்றனர்.திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளம் அருகே வசிப்பவர் ராஜேந்திரன்(32). இருவருக்கு சொந்தமான ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி சரக்கு ஆட்டோவை(டி.என்.58 எல் 04...
தமிழகம்
பெண் மருந்தாளுநர்களுக்கு ஓய்வறை கேட்டு தீர்மானம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கக் கூட்டம் நேற்று நடந்தது.மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். அடுத்த இரு ஆண்டுகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ராமராஜன், துணைத் தலைவர் பாலமுருகன் பங்கேற்றனர். புதிய தலைவர் முத்துக்காமா...
தமிழகம்
குடிசைகளில் தீ
மதுரை: மதுரை அண்ணாநகர் எஸ்.எம்.பி., காலனியில், வைகை ஆற்றோரம் சிலர் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். நேற்று அதிகாலை 3.45 மணிக்கு திடீரென்று மூன்று குடிசைகளில் தீப்பிடித்தது. உயிர்ச்சேதம் இல்லை. தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
புதுகையில் கண்டன பேரணி
புதுக்கோட்டை: பெட்ரோலியப் பொருள் மீதான விலை உயர்வை கண்டித்து புதுகையில் நடந்த கண்டனப் பேரணியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் உட்பட ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. புதுக்கோட்டையில் விவசாயிகள், மீனவர்கள், கம்யூனிஸ்ட் கட்...
தமிழகம்
மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி
சேத்தூர் : ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(34). இவரும், அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பிள்ளையார் என்பவரிடம் செங்கல்சூளைக்கு மண் அள்ளும் தொழிலாளர் களாக பணியாற்றினர். நேற்று காலை 11 மணியளவில் மண் அள்ளுவதற்காக, கொறவன்குளத் திற்கு பரமேஸ்வரன் உட் பட நான்கு பேர் சென்றனர். பத்தட...
தமிழகம்
புதுகை கலெக்டர் ஆஃபீஸை கிராம மக்கள் முற்றுகை கோவில் வருஷாபிஷேகத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அரசநாயகி அம்மன் கோவிலில் இன்று (29ம் தேதி) நடைபெறவுள்ள வருஷாபிஷேகத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிராமப்பகுதி மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் நேற்று காலை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட ...
தமிழகம்
சமையலுக்கு தயாரான மான் கறி: ஒருவர் கைது
கூடலூர் : வீட்டில் சமையல் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மான் கறியை வனத்துறையினர் வீடு புகுந்து கைப்பற்றினர். ஒருவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் முண்டக்கயம் அருகே சாஜன் என்பவரது வீட்டில் மான்கறி இருப்பதாக வந்த தகவலையடுத்து, வனத்துறை பறக்கும்படை ரேஞ்சர் சாஜூ தலைமையில் சோதனை நடத்தினர். அப்போது சமையல் செய்வத...
தமிழகம்
சி.ஐ.டி.யூ., வாயிற்கூட்டம் புதுகையில் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கோரிக்ø ககளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் வா யிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன்பு நடந்த கூட்டத்துக்கு மண்டலத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சண்முகம், செயலாளர் செல்வராசு, துணைத் தலைவர் ஜியாவுதீன், மண்டலச் செயலாள...
தமிழகம்
அனுமதியில்லாத செக்யூரிட்டி சர்வீஸ் துப்பறியும் நிறுவனத்திற்கு தடை
திண்டுக்கல் : தமிழகத்தில் அரசின் அனுமதியில்லாமல் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ், துப்பறியும் நிறுவனம் நடத்துபவர்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. செக்யூரிட்டி சர்வீஸ் நடத்துபவர்களும், துப்பறியும் நிறுவனம் நடத்துபவர்களும் அரசிடம் முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். சில தனியார் மில்கள், தொழிற்சாலைகள் படிக...
தமிழகம்
வேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா
வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பத்தாமாண்டு கும்பாபிஷேக நிறைவு நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு புனித நீர் அடங்கிய கலசங்கரை சிவாச்சாரியார்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின், இக்கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். மேலும், துர்க்கை, விநாயகர் உட்பட பரிகார தேவத...
தமிழகம்
கொடைக்கானலில் மழை : படகு சவாரிக்கு தடை
கொடைக்கானல் : கொடைக்கானலில் மழை பெய்வதால் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.படகு சவாரியும் இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் பியர்சோலா,வெள்ளி நீர் வீழ்ச்சி,ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனைத் தொடர்ந்து பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்லும் ரோட்டி...
தமிழகம்
பெட்ரோல், டீஸல் விலை உயர்வு மார்க்சிஸ்ட் மறியல்; பலர் கைது
வேதாரண்யம்: மத்திய அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இந்த விலை உயர்வை கண்டித்தும், வாபஸ் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன்களிலும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் கடை...
தமிழகம்
பசுபதி பாண்டியன் கைது
சென்னை : முதல்வர் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதமிருக்க போவதாக அறிவித்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்த...
தமிழகம்
ஆலத்தூர் யூனியனை தனி தாலுகாவாக அறிவிக்கணும்: தே.மு.தி.க., தீர்மானம்
பெரம்பலூர்: குன்னம் சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் குன்னத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அத்தியூர் கணபதி தலைமை வகித்தார். வேப்பூர் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை காமராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட...
தமிழகம்
திருவானைக்காவல் யானைக்கு சிகிச்சை
ஸ்ரீரங்கம் : வாயு கோளாறால் அவதிப்பட்ட திருவானைக்காவல் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரர் கோவில் யானை சாந்தி(54). கோவில் விசேஷம், விழாக்களில் பங்கேற்பதுடன், பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் வந்தது. கடந்த 10 நாட்களாக இந்த யானை, வாயு கோளாறால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந...
தமிழகம்
அ.தி.மு.க., தெருமுனை பிரச்சாரம்
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே வேலாடிபட்டி கிராமத்தில் அ.தி.மு.க.,வின் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. தி.மு.க., அரசின் குறைபாடுகள், மின்வெட்டால் மக்களின் பாதிப்பு, மேட்டூர் அணை திறக்கப்படாமல் விவசாயிகள் படும் துயரங்கள், விலைவாசி உயர்வு குறித்து ஒன்றிய செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். வேலாடிபட்டி குமார்,...
தமிழகம்
ஊட்டியில் தொடரும் மழை
ஊட்டி : ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது; மழை தொடரும் பட்சத்தில், நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பார்சன்ஸ் வேலி, மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா, கோடப்பமந்து, ஓல்டு ஊட்டி மற்றும் கி...
தமிழகம்
ஆலத்தூர் யூனியனை தனி தாலுகாவாக அறிவிக்கணும்: தே.மு.தி.க., தீர்மானம்
பெரம்பலூர்: குன்னம் சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் குன்னத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அத்தியூர் கணபதி தலைமை வகித்தார். வேப்பூர் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை காமராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட...
தமிழகம்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் மகள்களை கொன்று தந்தை தற்கொலை
பட்டுக்கோட்டை : மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், தன் மகள்களுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் (43), கொத்தனாராக வேலை செய்கிறார். இவர் மனைவி சங்கரி (38); இவருக்கு கவிதா (12) சுவிதா (10) என, இரு மகள்கள் உள்ளனர். மனைவியை...
தமிழகம்
தி.பூண்டி அருகே கோவில் விழாவில் மோதல் இரு கம்யூ., கட்சியைச் சேர்ந்த 22 பேர் காயம்
திருத்துறைப்பூண்டி: கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் நடந்த மோதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 22 பேர் காயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த தோப்படிதிடலில் 2006ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பணம் வசூல் செய்து மாரியம்மன் கோவில் கட்டினர். மார்...
தமிழகம்
பீடி கேட்டு கைதிகள் உண்ணாவிரதம்
சேலம் : சேலம் மத்திய சிறை கைதிகள், பீடி கேட்டு திடீர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சேலம் மத்திய சிறையில், ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். நேற்று காலை கைதிகளின், "செல்' திறக்கப்பட்டதும், 50க்கும் அதிகமானோர், "பீடி, சிகரெட் சிறையில் புகைக்க அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, திடீர் உண்ணா...
தமிழகம்
கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொதுவினியோகம் மோசம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொது வினியோகம் படுமோசமாக நடந்து வருகிறது. அதிகாரிகளுக்கு முறையான கவனிப்பு செல்வதால் யாரும் கண்டுகொள்வதில்லை. கூட்டுறவு மூலம் மாவட்டத்தில் பலஇடங்களில் ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. சாதாரண ரேஷன் கடைகளில் இலை மறை காயாக பதுக்கல் சம்பவங்கள் நடக்கிறது என்றால், கூட்டுறவு...
தமிழகம்
அடுத்தகுடி கோயில் பூக்குழி விழா
திருவாடானை: திருவாடானை அருகே அடுத்தகுடி வீரசக்திஅம்மன் கோயில் விழா 18ம்தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி லட்சார்ச்சனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நேற்று அதிகாலை நான்கு மணிக்கு நடந்தது. ஏராளமானோர் பூக்குழி இறங்கினர். பறவை , சிலா , பால்காவடிகளும் எடுக்கபட்டது. அம்மனுக்கு சிறப்...
தமிழகம்
பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்
சாயல்குடி: கடலாடியில் பா. ஜ., ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட விவசாய அணி தலைவர் வில்வலிங்கம், ஒன்றிய பொது செயலாளர்கள் பெரியசாமி, ராமர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி செயலாளர் முருகவேல், மாநில பொ...
இந்தியா
துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி : காஷ்மீரில் தொடர்கிறது பதட்டம்
ஸ்ரீநகர் : காஷ்மீரில் கலவரக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. காஷ்மீரில் கடந்த வாரம் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலியானார். இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்த முயன்ற ஹூரியத் மாநாட்டு அமைப்பை ...
தமிழகம்
வீரமாகாளியம்மன் கோவிலில் ரூ.10 லட்சத்தில் திருப்பணி
கும்பகோணம்: நாச்சியார்கோவில் வீரமாகாளியம்மன் கோவிலில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருப்பணி வேலைகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 13 ஆண்டுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் ...
தமிழகம்
குறைதீர் கூட்ட பணியை எளிமைப்படுத்த முடிவு துறைகளுக்கு குறியீட்டு எண் வழங்கல்
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களின் பரிசீலனையை எளிமைப்படுத்த ஒவ்வொரு துறை மற்றும் அதன் கீழ் உள்ள செயல்பாடுகளுக்கு தனி குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையிலும் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடக்கிறது. இ...
தமிழகம்
விஷ ஜந்து, துர்நாற்றத்தில் மகாசக்தி நகர் மக்கள்
- நமது சிறப்பு நிருபர் குழு -நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஊரின் ஒதுக்குபுறமாக குடியிருக்க வந்த குடியிருப்பு வாசிகள், வரி செலுத்தியும், அடிப்படை தேவைகளான கழிவுநீர் கால்வாய், ரோடு, குடிநீர் கிடைக்காமல் கடந்த 15 ஆண்டுகளாக விஷ ஜந்துகள் ,துர்நாற்றத்திற்கிடையே வாழ்க்கை போராட்டம் நடத்துகின்றனர் ராமநாதபுரம் ம...
தமிழகம்
கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கத்தின் 2010 - 2011ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டுக்கோட்டையில் நடந்தது. முன்னாள் மாவட்ட ஆளுனர் அழகப்பன் பங்கேற்றார். மண்டலம் 16ன் துணை ஆளுனர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். அண்ணல் காந்தியடிகள் மனித நேய மன்ற தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ...
தமிழகம்
கமுதியில்தொடர் திருட்டுகள் இரவு பாதுகாப்பில் தொய்வு
கமுதி: கமுதியில் இரவு பாதுகாப்பில் தொய்வு ஏற்பட் டுள்ளதால், தொடர் திருட்டுகளால் மக்கள் பீதியில் உள்ளனர் . கமுதி பகுதியில் விவசாயமின்மை, படிப்பின் காரணமாக கலவரம், கொலை போன்ற குற்றங்கள் குறைந்துள்ளது என்றாலும் அவ்வப்போது பிரச்னைகள்,கொலைகளும் அரங்கேறுகின்றன . கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு ,இரவு நேர ரோ...
தமிழகம்
காங்., ஆஃபீஸில் நினைவஞ்சலி
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மறைந்த எம்.எல்.ஏ., சுதர்சனத்தின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.எல்.ஏ., சுதர்சனத்தின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்மூப்பனார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, தெற்கு மாவட்ட தலைவர் வரத...
தமிழகம்
பஸ்சை முற்றுகையிட்ட மக்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்திலிருந்து கொம்பூதிக்கு செல்லும் டவுன் பஸ் குறித்த நேரத்தில் கிளம்பாததால் பயணிகள் பஸ் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரத்திலிருந்து கொம்பூதிக்கு செல்லும் டவுன் பஸ் நேற்று காலை வழக்கம்போல் சென்று வந்தது. பகல் 12 மணிக்கு மேல் கிளம்பும் பஸ் பிற்பகல் மூன்று மணி வரை கிளம்பாமல் நின்...
தமிழகம்
பி.எஸ்.என்.எல்., இணைப்பில் மோசடி : கோடிக்கணக்கில் சுருட்டியவர்கள் கைது
புதுடில்லி : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.,) தொலைபேசி இணைப்பகத்தின், கம்ப்யூட்டர்களில் முறைகேடாக மாற்றம் செய்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர் உட்பட, ஐந்து பேரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்துள்ளனர். சர்வதேச அழைப்பிற்கான கட்டண மோசடி குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது....
தமிழகம்
கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகம் திருப்புல்லாணிக்கு மாற்ற முடிவு : மக்கள் அதிர்ச்சி
கீழக்கரை: கீழக்கரை டி.எஸ்.பி., அலுவலகத்தை திருப்புல் லாணிக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். கீழக்கரையில் 1994 ஜன., 17ம் தேதி டி.எஸ்.பி.,அலுவலகம் துவங்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாததால் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. கீழக்கரை, திருப்புல்...
தமிழகம்
டூவீலர் - பஸ் மோதல் 2 வாலிபர்கள் பலி
தஞ்சாவூர்: தஞ்சை அருகே மொபட்டுடன் தனியார் பஸ் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார். தஞ்சை அடுத்த சடையார்கோவில் தெற்கு நத்தம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் குமார் (21). இவரது நண்பர்கள் அதே ஊர் நடுத்தெரு கலியபெருமாள் மகன் வீரையன் (20), மேலத்தெரு கோவிந்தராஜ் மகன் மாதவன...
இந்தியா
வயிற்று பிழைப்புக்காக போராடும் காஷ்மீர் மாநில குஜ்ஜார் சிறுவர்கள்
ஸ்ரீநகர் : காஷ்மீரில், குஜ்ஜார் பழங்குடியின சிறுவர்கள் 10 ஆயிரம் பேர், குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, பழங்குடி ஆராய்ச்சி மற்றும் கலாசார அமைப்பு (டி.ஆர்.சி. எப்.,) ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், குஜ்ஜார் பழங்குடியின சிறுவர்கள் 10 ஆயிரத்திற்...
தமிழகம்
பிடிபட்ட கடல் அட்டைகள்
மண்டபம்: மண்டபம் வடக்கு பகுதியில் மன்டபம் வனத்துறையினர் நேற்று முன்தினம் வழக்கம்போல் ரோந்து சென்றனர்.கடல்பகுதியில் 53 சாக்கு மூடைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். மூடைகளில் தடைசெய்யப்பட்ட கடல் அட் டைகள் 530 கிலோ இருந்துள்ளன. பறிமுதல் செய்த வனத்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மண்டபம் இலங்கைக்கு அர...
தமிழகம்
ஹிந்து முன்னணி செயல்வீரர்கள் கூட்டம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் ஹிந்து முன்னணி செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ராஜானந்தம் தலைமையில் நடந்தது. நகர தலைவர் தினகர், நகர அமைப்பாளர் தமிழ்மோகன், செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஹிந்து முன்னணி மாநாட்டுக்கு தாராளமாக நிதியுதவி செய்...
தமிழகம்
ஜூலை 4ல் எஸ்.ஐ., பணிக்கான தேர்வு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்தவர்களுக்கு எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு ராமநாதபுரம் கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. துறை ஒதுக்கீட்டின் அடிப்படையில் விண் ணப்பித்தவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதியும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூலை நான்காம் தேதி காலை 10 மணிக்கும் நடை...
தமிழகம்
நடத்தையில் சந்தேகம் மகள்களை கொன்று தந்தை தற்கொலை
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவன், தன் மகள்களுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பெரியக்கோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (43). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது ...
தமிழகம்
உரக்கடைகளில் விலை விபர பலகை அவசியம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உரக்கடைகளில் விலை விபரங்கள் கொண்ட பலகையை கட்டாயம் வைக்க வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி கடந்த ஏப்.,ஒன்று முதல் உரங்களின் விற்பனை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி யூரியா உரத்தின் சில்லரை விற்பனை விலை 276.12 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூரியா அல்ல...
தமிழகம்
மாணவர் சேர்க்கை ஊர்வலம்
மண்டபம்: மண்டபம் ஒன்றியம் சமத்துவபுரம் துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் கிராம கல்விகுழு பொருளாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் கோமகன் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கலையரசி வரவேற்றார். உதவி ஆசிரியர் கோமளாதேவி, சத்துணவு அமைப்பாளர் நாகலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். பெற்றோர் ஆசிரியர் சங...
தமிழகம்
சிறுபான்மையினருக்கு 15% இடஒதுக்கீடு: முஸ்லிம் லீக் கோரிக்கை
பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை - சக்கராபள்ளி நகர இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் முப்பெரும் விழா மாவட்ட தலைவர் குலாம் மைதீன் தலைமையில் நடந்தது.  வேலூர் எம்.பி., அப்துல்ரஹீமான் பங்கேற்று பின் நிருபர்களிடம் கூறியதாவது: அசாதாரண முறையில் தவறு செய்துவிட்டு பத்து ஆண்டு காலமாக சிறையிலிருக்கும் ஆயுள் கைதிகளை...
தமிழகம்
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தியுள்ளதை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனையில் இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் துணை செயலாளர் களஞ்சியம் தலைமை வகித்தார். நகர் செயலாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மணிபாரதி, காதர், மாவட்ட துணை செயலாளர் முருகபூபதி...
தமிழகம்
வீட்டு வசதித்திட்ட ஃபோட்டோ எடுக்கும் பணிகள் தீவிரம்
கும்பகோணம்: கும்பகோணம் யூனியனில் அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஃபோட்டோ எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கும்பகோணம் யூனியனுக்கு உட்பட்ட 47 பஞ்சாயத்துக்களிலும் அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மற்றும் நிபந்தனை தகுதியுள்ள பயனாளிகளின் கணக்கெடுக்கும் பணி ஏறத்தாழ முடிவடைந்தது.  இதைத் தொடர்ந்து தற்ப...
தமிழகம்
பெட்ரோல் உயர்வு வர்த்தக சங்கம் எதிர்ப்பு
ராமநாதபுரம்: பெட்ரோல், டீசல், காஸ் விலை ஏற்றத்தை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறவாய்ப்புள்ளதால் விலை ஏற்றத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் கோவிந்தன் கேட்டுகொண்டுள்ளனர்.
தமிழகம்
விவசாயிகள் உண்ணாவிரதம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் மிளகாய் பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம் நடத்தினர். மாவட்ட செயலாளர் அரசுபாண்டியன் தலைமை வகித்தார். முத்திருளப்பன், லெக்கம்மாள், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். விவ...
தமிழகம்
கல்லூரி செல்ல மறுத்து வாலிபர் தற்கொலை
க.பரமத்தி: சின்னதாராபுரம் அருகே கல்லூரிக்கு படிக்க செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால், மனமுடைந்த வாலிபர் பூச்சிமருந்து குடிந்து தற்கொலை செய்துக் கொண்டார். சின்னதாராபுரம் நாவல்நகரை சேர்ந்த சுப்பரமணியம் மகன் வீரக்குமார் (23). இவர் உடுமலைபேட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்த போது பாதியில் கல்ல...
தமிழகம்
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம்
குளித்தலை: குளித்தலையில் இந்திய கம்யூனிஸ்ட் நகர கமிட்டி கூட்டம் சிவராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியசாமி, துணை செயலாளர் சேஷன் பங்கேற்றனர். வட்டக் குழு நிர்வாகிகள் ராஜேந்திரன், செல்வம், ராதா, மருதமுத்து, லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். தாலுகா செயலாளர் ராஜேந்திரன் வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர்...
தமிழகம்
குளித்தலை அருகே மருதூரில் சாலை ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
குளித்தலை: குளித்தலை அருகே மருதூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் பல இடங்களிலும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருதூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருதூர் முதல் மேட்டுமருதூர். மேட்டுமருதூர்- பணிக்கம்பட்டி, மேட்டுமருதூர் - கூடலூர், நடுப்பட்டி- ஆதிநத்தம் செல்லும் பிரதான சாலையின் இருபு...
தமிழகம்
தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம் குளித்தலையில் இன்று ஏற்பாடு
கரூர்: உடலுழைப்பு தொழிலாளர்களை வாரியத்தில் பதிவு செய்யும் சிறப்பு முகாம் குளித்தலை அருகே இன்று நடப்பதாக கரூர் தொழிலாளர் அலுவலர் செல்வராஜ் அறிவித்துள்ளார். அறிக்கையில் உள்ளதாவது: தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 16 நலவாரியங்களில் கட்டிடம் கட்டுதல், சாலைகள் மற்றும்...
தமிழகம்
பள்ளியில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5வது தூண் சார்பில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. 5 வது தூண் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப் பாளர் மாப்ப...
தமிழகம்
ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள்காப்பாளர்களுக்கான கவுன்சிலிங்
கடலூர்: கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக் கான ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நாளை 29ம் தேதி நடக்கிறது. இது குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் 2010-2011ம் ஆண்டிற்...
தமிழகம்
அ.தி.மு.க., குறைகேட்பு முகாம்
கரூர்: கரூர் மாவட்ட அ.தி. மு.க., சார்பில் மாவட்டந்தோறும் மக்கள் குறை கேட்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகுதி வாரியாக இடம் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைகேட்பு முகாம், கட்சி கொடியேற்றுதல் மற்றும் நலஉதவி வழங்குதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர...
தமிழகம்
மாரியம்மன் கோவிலில்5ம் தேதி தீமிதி உற்சவம்
கிள்ளை: சிதம்பரம் அருகே நவாப்பேட்டை கன்னி முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா ஜூலை 5ம் தேதி நடக்கிறது.சிதம்பரம் அருகே நவாப்பேட்டையில் கன்னி முத்துமாரியம் மன் கோவில் உள் ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டுத...
தமிழகம்
பற்றாக்குறை வாகனத்துடன் பரிதவிப்பு கரூர் தீயணைப்புத்துறையின் அவலம்
கரூர்: கரூர், புகளூர் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் பற்றாக்குறை தீயணைப்பு வாகனத்தை வைத்து சமாளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்த இரண்டு தீயணைப்பு வாகனத்தில் ஒன்று அரவக்குறிச்சிக்கு தற்காலிகமாக அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், புகளூரில் புதிதாக வாகனம் அளிக்கப்பட்டு,...
தமிழகம்
குண்டுகுளம் ஆலய விழா
தாயமங்கலம்: தாயமங்கலம் அருகே குண்டுகுளம் திருஇருதய ஆலய விழா நடந்தது.கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங் கியது. தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப் பலி நடந்தது. இரவு 8 மணிக்கு தேர்பவனி; 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகளின் பாட்டு கச்சேரி நடந்தது. குண்டுகுளம் பங்கு இறை மக்கள் பங் கேற்றனர். 27ம் தேதி காலை 8.30 ம...
தமிழகம்
சிதம்பரத்தில் 1,800 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு
கிள்ளை,: தெற்கு பிச்சாவரத்தில் பழுதடைந்த உப்பனாற்று வடிகால் ஷட்டர் சீர் செய்யப்படாததால் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் 1,800 ஏக்கர் விளை நிலங் கள் பாதிக்கப்பட் டுள்ளது.சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரம் கான்சாகிப் வாய்க்காலில் பாலம் கட்டி கடை மடை நீரை தேக்கி டி.எஸ். பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை வருவாய் கிர...
தமிழகம்
பாசன வாய்க்கால் சுவர் கட்டுமானம் பூமி பூஜை
குளித்தலை: குளித்தலையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. குளித்தலை தென்கரை பாசன வாய்க்கால் சபாபதிநாடார் தெருவழியாக காவிரிக்கு செல்லும் நடைபாதை மற்றும் 40 மீட்டர் வாய்க்கால் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய...
தமிழகம்
மதகுபட்டி அருகே கொலை தேடப்பட்ட மூவர் சரண்
சிவகங்கை: மதகுபட்டி அருகே நடந்த கொலை தொடர்பாக, திருச்சி கோர்ட்டில் மூவர் சரண் அடைந்தனர்.புத்திரிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் முத்து (30), தமிழ் (26). இவர்களுக்கும், கீழக்கோட்டையை சேர்ந்த பாண்டிக்கண்ணனுக்கும், கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது. இதில் பாண்டிக் கண்ணன் தரப்பை சேர்ந்த ரமேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது...
தமிழகம்
போலி டாக்டர்கள் நடமாட்டம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குளித்தலை: குளித்தலை மற்றும் தோகமலையில் மீண்டும் போலி டாக்டர் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்து போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் மாநிலம் முழுவதும் போலி டாக்டர் கண்டறிப்பட்டு போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். பலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. கரூர் மாவ...
தமிழகம்
அக்காவை தாக்கியதம்பி கைது
கடலூர்: அக்காவைத் தாக் கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.கடலூர் அடுத்த களையூர் காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி கலையரசி (34). இவரிடம் இவரது தம்பி ஆனந்தராஜ் நேற்று காலை சாராயம் குடிக்க பணம் கேட்டு தராததால் கலையரசியை ஆனந்தராஜ் திட்டி தாக்கினார்.இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செ...
தமிழகம்
கடலூர் பாரதி அரிமா சங்கநிர்வாகிகள் பதவி ஏற்பு
கடலூர்: கடலூர் பாரதி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.பாரதி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விழா கடலூரில் நடந்தது. அரிமா சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் மங்கையர்கரசி வரவேற் றார். முதல் நிலை துணை கவர்னர் கல்யாண்குமார் புதிய நிர்வாகி...
தமிழகம்
கோயில் விழாவில் மோதல்
மானாமதுரை: மானாமதுரை அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள் ளிட்ட ஒன்பது பேர் காயம் அடைந்தனர். பெரியகோட்டை அருகே முத்தரசன் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. நேற்று முன்தினம் நடந்த சேவுகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில், ஒலிபெருக்கியில் பாடிய பாடலுக்கு ஆடும்படி, சேதுராமச்சந்திரன் என்பவரை வற்புறுத்தினார...