category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
General
சீனாவில் பலத்தமழை: நிலச்சரிவில் சிக்கி 100பேர் பலி
பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்சோவ் மாகாணத்தில் கடந்த ஒருவார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக இம்மாகாணத்தில் இரண்டு ஊர்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 100பேர் பலியாகினர். மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது வருகிறது.
தமிழகம்
உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதே இலக்கு: சாய்னா
சென்னை: உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதே தமது இலக்கு, என்று பாட்மின்டனில் ஹாட்ரிக் பட்டம் வென்று நாடு திரும்பிய செய்னா நேவல் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடந்த பாட்மின்டன் போட்டியில் மீண்டும் தங்கம் வென்ற சாய்னா நேவல் ஹாட்ரிக் பட்டம் வென்றார். இதற்கு முன்னர் இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஓபன் ச...
தமிழகம்
தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தப்பின
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி-எலாவூர் இடையே நேற்றிரவு பாதுகாப்பு பணியில் ரயில்வே தலைமை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விரிசல் குறித்து உடனடியாக தகவல் தொடர்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ஐதராபாத் நோக்கி செ...
இந்தியா
மத்திய அமைச்சர் சிதம்பரம் அடுத்தவாரம் காஷ்மீர் பயணம்
புதுடில்லி: காஷ்மீரில் நடந்து வரும் கலவரம் குறித்து ஆராய அடுத்தவாரம் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அடுத்தவாரம் காஷ்மீர் செல்கிறார். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். இதனையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இதனால் அம்மாநிலத்தில் பதற்றமான...
தமிழகம்
திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் தேரோட்டம் துவங்கியது
சிவகாசி : திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் , கலெக்டர் சண்முகம், ஒன்றியத் தலைவர் வனராஜா ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகம்
தமிழகத்தில் 21 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
சென்னை : தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி. திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து , பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு குறித்து இன்று சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதார துறை செயலர் சுப்புர...
General
உலக கோப்பை கால்பந்து : இன்றைய போட்டிகள்
ஜோகனஸ்பர்க் : உலககோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றது. லீக் போட்டிகள் முடிவுகள் முடிவுபெற்று, நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. நாக் அவுட் சுற்றில் இன்று பெராகுவே - ஜப்பான் அணிகளும் ; போர்ச்சுகல் - ஸ்பெயின் அணிகளும் மோதுகின்றன.
இந்தியா
பெட்ரோல் , டீசல் விலை உயர்வு : டில்லியில் இடதுசாரிகள் ஆ‌லோசனை
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து டில்லியில் இடதுசாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த் நடத்துவது குறித்தும், பந்த்துக்கான தேதியை இறுதி செய்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிந்து 17534.09 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 77.35 புள்ளிகள் சரிந்து 5256. 15 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது.
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க.,ஸ்டிரைக்
சென்னை : பெட்ரோல் , டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக் நடைபெறும் என அ.தி.மு.க., அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., - இடதுசாரிகள் உள்ளிட்ட 7 கட்சிகள் கலந்து கொள்கின்றன.
தமிழகம்
திருப்பூர் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் : போலீஸ் விசாரணை
திருப்பூர் : திருப்பூர் ஊத்துக்குளி அருகே ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் டிரைவர் தண்டவாளத்தில் பாறாங்கல் இருப்பதை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி விட்டார். பின்னர் கல் அகற்றப்பட்ட பிறகு ரயில் கிளம்பிச் சென்றது. தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்கள் குற...
தமிழகம்
கோவையில் பைக்குகளுக்கு மர்ம நபர்கள் தீ
கோவை : கோவை மாவட்டம் செல்வபுரம், சாவித்திரி நகர் பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைக்குகளை மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்துள்ளனர். சாவித்திரி நகரில் நகை பட்டறையில் வேலை பார்க்ககும் சிலர் தாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் வாசலில் பைக்குக‌ளை நிறுத்தி வைத்திருந்தனர். இன்று அதிகாலையில் திடீரென வீட்டின் ...
இந்தியா
காஷ்மீரில் பதட்டம் : போலீசுடனான மோதலில் 3 பேர் காயம்
ஸ்ரீநகர் : காஷ்மீரில் சோபூர் மாவட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அனந்தநாக் மாவட்டத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். சோபூர் மாவட்டத்தில் இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தது தொடர்பாக மாநில...
தமிழகம்
விமான ஊழியர்களுக்கு பயிற்சி
சென்னை: சென்னை அண்ணாநகரில், அமெரிக்கா விமான பைலட்டுகளுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் சார்பு பள்ளி இயங்கி வருகின்றது. இதில் விமான பணிப்பெண்(ஏர் ஹோஸ்டர்ஸ்), பிளைட் ஸ்டுவர்ட்டுகளுக்கான(விமான ஆண் பணியாளர்) பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகம்
சான்றிதழ் வழங்கு விழா
சென்னை: ஊரப்பாக்கம், ஆனந்தவள்ளி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசு,சான்றிதழ்களை பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சைதை கிட்டு வழங்கினார்.உடன் பள்ளி தாளாளர் கணபதி .
தமிழகம்
மேட்டூரில் காதலன் வீட்டு முன் காதலி போராட்டம்
மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூரில் காதலன் வீட்டின் முன் காதலி போராட்டத்தில் ஈடுபட்டார். மேட்டூர் சதுரம்வாடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வேலன். நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக இருக்கிறார் . இவரது மகள் புவனேஸ்வரி (20). இவருக்கும் பொன் நகர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி , வி.ஏ.ஓ.,மணியின் மகன் பாலமுருகன் என்ற பால...
தமிழகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 குறைந்தது
சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 753க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 024க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
மேட்டூரில் காதல் கணவன் வீட்டு முன் இளம் பெண் நியாயம் கேட்டு போராட்டம்
மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூரில் காதல் கணவன் வீட்டின் முன் இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் சதுரம்வாடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வேலன். நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக இருக்கிறார் . இவரது மகள் புவனேஸ்வரி (20). இவருக்கும் மேட்டூர் பொன் நகர் பகுதியைச் சேர்ந்த ...
இந்தியா
ரத்தோர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சண்டிகர் : இளம் பெண் ருச்சிகா வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அரியானா மாநில மாஜி டி.ஜி.பி., ரத்தோர் ஜாமீன் மனு வருகிற 1ம் தேதிக்கு ( ஜூலை 1ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா
காஷ்மீரில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் சோபூர், பாரமுல்லா மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீசாருடனான மோதல் வலுவடைந்துள்ளதை அடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
General
ஆன்டர்சன் விவகாரத்தில் அமெரிக்கா சாதகமான முடிவெடுக்கும் : பிரதமர்
போபால் விஷ வாயு கசிவு சம்பவம் நடந்த போது , யூனியன் கார்பைட் நிறுவனத்தின் சி.இ.ஓ., வாக இருந்த வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் கனடா சென்ற பிரதமர் மன்‌மோகன்சிங் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். ஆன்டர்சன் விவகாரத்தில், அ...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் : லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
மதுரை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து ஸ்டிரைக் நடத்தப்போவதாக மதுரை லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த லசரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் சாத்தையா கூறுகையில் : ஏற்கனவே லாரி உரிமையாளர்கள் சரக்கு கட்டண உயர்வால் பாதிக்க...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி ஸ்டிரைக் : எதிர்கட்சிகள் அறிவிப்பு
‌புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி நாடு தழுவிய ஸ்டிரைக் நடைபெறும் என அ.தி.மு.க., - ம.தி.மு.க., ஆகிய எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெ‌ண்ணெய் விலையை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இந்நி...
General
ஈராக்கில் குண்டு வெடிப்பு : 8 பேர் பலி
பாக்தாத் : ஈராக்கில் இரு வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் இறந்தனர். 18‌ பேர் படுகாயமடைந்தனர். வடக்கு ஈராக்கில் இந்த சம்பவம் நடந்தது. குண்டு வெடிப்பு நடந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
தமிழகம்
அத்வானி நாளை ராமேஸ்வரம் வருகை
சென்னை : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நாளை ‌ராமேஸ்வரம் வருகிறார். நாளை மறுநாள் ( ஜூலை 1ம் தேதி) அன்று புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் ஆரோவில்லுக்குச் செல்கிறார். அங்கிருந்து நாளை மறுநாள் மீண்டும் சென்னை வரும் அவர், சென்னையில் சில நிகழ்ச்சிகளில பங்கேற்கிறார்.
தமிழகம்
ஜூலை 3ல் கும்பகோணத்தில் மூப்பனார் சிலை திறப்பு
கும்பகோணம் : ஜூலை 3ம் தேதி கும்பகோணத்தில் மூப்பனார் சிலை திறக்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிலையை திறந்து வைக்கிறார். தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
தமிழகம்
ரயில் தண்டவாளத்தில் மீண்டும் கற்கள் : ஊத்துக்குளி அருகே பரபரப்பு
திருப்பூர் : ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தண்டவாளத்தில் இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரயில்கள் மோதியது ; நேற்று இரவு நடந்த இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன் ரயில்வே பாலம் உள்ளது; நேற்று இரவு இப்பாலத்துக்கு ஒரு கி.மீ.,க்கு ம...
இந்தியா
காந்தமால் கலவரம் : பா.ஜ., எம்.எல்.ஏ., வுக்கு 7 ஆண்டுகள் சிறை
புதுடில்லி : ஒரிசா மாநிலம் காந்தமாலில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியவர்கள் மீது வன்முறை தாக்குதல் ந‌டத்தப்பட்டது. இந்த வழக்கில் பா.ஜ., எம்.எல்.ஏ., மனோஜ் பிரதானுக்கு தொடர்பு இருப்பது கோர்ட்டில் நிரூபணமானது. இதனையடுத்து மனோஜ் பிரதானுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோர்‌ட் உத்தரவிட்டது.
தமிழகம்
யானை தூக்கி வீசியதில் மீன்பிடி தொழிலாளி பலி
பழநி : பழநி பாலாறு-பொருந்தலாறு அணைப்பகுதியில் காட்டு யானை தூக்கி வீசியதில், மீன்பிடி தொழிலாளி இறந்தார்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள பொருந்தலாறை சேர்ந்த பால்சாமி மகன் நல்லமாயி(32); மீன்பிடி தொழிலாளி. அணைப்பகுதியில் காவல் பணியில் இருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில், பொருந்தலாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு...
தமிழகம்
என்.எல்.சி.,யில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த எச்சரிக்கை
நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்கள் சங்கம்,  என்.எல்.சி., நிர்வாகம் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக  நாளைக்கும் இறுதி முடிவு எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால்  நாளை இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தம் செய்யப்படும்என்றும். நாளை மாலை 6 மணி வரை பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் நிர்வாகத்திற்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
தமிழகம்
கிருபாபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் யாளி உடைந்தது
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர்  சிவன் கோவில் கோபுரத்தில் இருந்த யாளி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவில், சுந்தரரை தடுத்தாட்கொண்டு, "பித்தா பிறைசூடி' என பாடப் பெற்றதாகும்.கி.பி.13ம் நூற்...
தமிழகம்
துப்பாக்கிகளுடன் மதுரையிலிருந்து சென்ற விமானம்
அவனியாபுரம் : விளையாட்டிற்கு பயன்படும் துப்பாக்கிகள் (ஸ்போர்ட்ஸ் ரைபிள்)  மதுரை விமானநிலையத்திலிருந்து சென்னை சென்றன.திருச்சியிலிருந்து சென்னைக்கு அதிகாலையில், இந்தியன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து இருந்தது. திருச்சி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் தயாராகும், இந்த ரக துப்பாக்கிகள், அந்த விமானத்தில் சென்னை செல்லும். திருச்சிய...
இந்தியா
காஷ்மீர் கலவரம் : ஓமர் அப்துல்லா மன்னிப்பு கோரினார்
ஜம்மு :  காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கலவரங்களுக்கு அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா மன்னிப்பு கோரியுள்ளார். காஷ்மீர் மாநிலம் சோபோர் மற்றும் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பல இடங்களில் பேராட்டம் மற்றும் கலவரம் நடந்து வருகிறது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலவரம் குறித்து பேட்டியளித்த அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா,  மா...
தமிழகம்
அடிப்படை வசதிகள் இல்லாத இன்ஜினியரிங் கல்லூரிகளில் அட்மிஷன் ரத்து
அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது. மேலும், இரு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்...
இந்தியா
செய்னா நேவலுக்கு ரூ.5 லட்சம் விருது
ஜாஜீர் :  இந்தோனேஷியா ஓபன் சீரிஸ் உட்பட 3 தொடர்களை கைப்பற்றிய இந்திய பாட்மிடன் வீராங்கனை செய்னா நேவலுக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அரியானா மாநில பாட்மிடன் சங்கம் அறிவித்துள்ளது.  இந்த முடிவு அந்த அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.  பட்டம் வென்றதன்  மூலம் செய்னா இந்தியாவிற்கு பெருமை சேர்த்...
தமிழகம்
65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்ம அடி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இலவச வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறி, 65 பெண்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வாங்கி, ஏமாற்றியவரை  பெண்கள் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்(41).  இரண்டு வருடங்களுக்கு முன் இவர் தாயார் குளம், கரிக்...
தமிழகம்
ரயில் இன்ஜின் பழுது : முத்து நகர் எக்ஸ்பிரஸ் தாமதம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில்  இன்ஜின் பழுதானதால் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது.சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு (2693) புறப்பட்ட முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று  இரவு 11.32 மணிக்கு உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அப்போது, திடீரென இன்ஜின் பழுதானதால் ரயில் நின்றது. தகவலறிந்த...
இந்தியா
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட தாக்குதல் : 26 போலீசார் பலி
நாராயண்பூர் : சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 70க்கும் மேற்பட்ட   மத்திய ரிசர்வ் போலீசார் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்ட்கள்  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 க்கும்  மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீசார் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர்  காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த தாக்குதலில் 90...
இந்தியா
சோனியாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
புதுடில்லி : டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை  ஆந்திரா முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தை மறைந்த போது தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களை சந்திக்க போவதாக கூறி பாதயாத்திரையை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கினார். இதனால் தெலுங...
இந்தியா
கோல்கட்டாவில் 5 மாவோயிஸ்ட்கள் கைது
கோல்கட்டா : கோல்கட்டாவில் 5 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.  மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜிக்கு நெருங்கியவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மதுசூதனன் மோன்டால்,சச்சின் கோஷல்,  ராஜேஸ் மோன்டல் ஆகியோர் அம்தாலா என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர். சித்தார்த்தா மோன்டல் மற்றும் சஞ்சய் மோண்டல் ஆகியோர் கரியா என்ற இடத...
தமிழகம்
ஆத்தூர் அருகே மின்னல் தாக்கி மாடுகள் பலி
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே   மின்னல் தாக்கியதில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும் அறிவழகன் என்பவருக்கு சொந்தமான வீடும் சேதமடைந்தது.
இந்தியா
தேச விரோத சக்திகள் காஷ்மீரில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி : சிதம்பரம்
புதுடில்லி : காஷ்மீர் மாநிலத்தில் சமூக விரோத சக்திகள் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் அவர் சமூக விரோத சக்திகள் ஈடுபடுவது குறித்து தகவல்களும் கிடைத்துள்ளதாகவும், ஒரு சில பயங்கரவாதிகளும் கலவரத்தை ஈடுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், மாநிலத்தில் சட்...
தமிழகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க திட்டம்
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தில் , சிமென்ட் தளத்தை அகற்றி, களிமண், மணலை நிரப்பி, நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்படவுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன், இக்குளத்தில் சிமென்ட் பூசப்பட்டு, ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு, தொட்டியாக மாற்றப்பட்டது. தரைக்கு அடியில் தண்ணீர் ஊற வாய்ப்பில்லாமல் போனதாலும், க...
இந்தியா
மாவோயிஸ்டுகள் வெறித்தாக்குதல் : துணை ராணுவப்படை வீரர்கள் 26 பேர் பலி
ராய்ப்பூர் : சத்திஸ்கரில் துணை ராணுவப்படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 ராணுவத்தினர் பலியாயினர்.சத்திஸ்கர், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், மாவோயிஸ்ட் வேட்டையில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர், மாலை தங்களது முகாம்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை நோக்கி, மாவோயி...
தமிழகம்
போலீசாரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா
ஆத்தூர்: தலைவாசல் அருகே போலீசார் பொய்யான வழக்கு பதிவுவதாக கூறி கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சித்தேரி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கும் மூவேந்தர் முன்னேற்றக்கழக மாவட்ட துணைச்செயலாளர் கதிர்வேலுக்கும்   நிலப்பிரச்சனை உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் ...
தமிழகம்
65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்ம அடி: வீட்டு மனை வாங்கி தருவதாக மோசடி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இலவச வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறி, 65 பெண்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வாங்கி, ஏமாற்றியவரை பெண்கள் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்(41). இவர் "மக்கள் தளபதி' என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த...
தமிழகம்
திருப்பதி கோவிலில் ரோசய்யா சாமி தரிசனம்
திருப்பதி :  திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், ஆந்திர முதல்வர் ரோசய்யா  சாமி தரிசனம் செய்தார்.தேவஸ்தானம் சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆந்திர முதல்வர், ரோசய்யா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய,   திருமலை வந்தார்.கோவிலுக்கு வந்த அவரை, தேவஸ்தான அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்ற...
இந்தியா
சொல்கிறார்கள்
சேவை செய்ய இந்தியா வந்தேன் :பார்வையற்ற மாணவர்களுக்காக இலவச பள்ளி நடத்தும் ஜின்னா: நெல்லை மாவட்டம் ஏர்வாடி தான் சொந்த ஊர். என் 13வது வயதில் ஏற்பட்ட விபத்தில் பார்வை இழந்ததால், கல்வி தடைபட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின், 18வது வயதில், மீண்டும் பள்ளியில் சேர்ந்தேன். ஆனால், ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்க வேண்டிய கட்ட...
தமிழகம்
இது உங்கள் இடம்
வேடிக்கை காட்டாதீர்கள்!எஸ்.குருநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயின் விலைகளை சகட்டு மேனிக்கு உயர்த்தி, நாட்டு மக்களின் வயிற்றில் தீ மூட்டி உள்ளது.ஏறிய விலைகள், ஏறியது தான்; அது குறைக்கப்பட்ட போவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அரசு உயர்த்தியுள்ள விலைகள்...
இந்தியா
குழந்தைகள் கடத்தல் வழக்கு:கோர்ட்டில் லலிதா ஆஜர்
புதுச்சேரி:குழந்தைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக, லலிதாவை புதுச்சேரி போலீசார் கோட்டில் ஆஜர்படுத்தினர்.குழந்தை கடத்தல் தொடர்பாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த லலிதாவை, தமிழக போலீசார் கைது செய்தனர். லலிதா வீட்டில், எவ்வித ஆவணமும் இல்லாமல் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகளை, போலீசார் மீட்டனர். கைதான லலிதா, வேலூர் சிறை...
தமிழகம்
புதுச்சேரி தலைமைச் செயலர் கோர்ட்டில் ஆஜர்
சென்னை:கோர்ட் அவமதிப்பு வழக்கில், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் புதுச்சேரி தலைமைச் செயலர், சட்டத் துறைச் செயலர் ஆஜராகினர்.புதுச்சேரி லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் பிரான்ஸ்; நூலகர் பணியில் சேர்ந்தார். தனக்கு 1990, 96ம் ஆண்டுகளில் சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னையில் உள்ள மத்தி...
தமிழகம்
வங்கியில் வாடிக்கையாளர் பணம் மோசடி:வங்கி ஊழியருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை
காஞ்சிபுரம்:வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கிலிருந்து முறைகேடாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த பாரத ஸ்டேட் வங்கி ஊழியருக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மின்நகரை சேர்ந்தவர் மோகன். காஞ்சிபுரம் காந்தி ரோடில் இயங்கி வந்த பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் தனது சேமிப்பு கணக்கில், 1996ம் ஆண்டு ஒ...
தமிழகம்
தொலைபேசி அதிகாரிக்கு ஓராண்டு சிறை
சென்னை:மோசடி வழக்கில் சென்னை தொலைபேசி பொறியாளருக்கும், அவரது மகனுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மேற்கு மாம்பலத்தில் உள்ள தொலைபேசி இணைப்பகத்தில் துணை கோட்டப் பொறியாளராக முத்துமணி குணராஜ் பணியாற்றினார்; இவரது மகன் அய்ன்ஸ்டீன். "ஏசி' யூனிட்டுகளை பழுது பார்க்க போலி நிறுவனத்து...
தமிழகம்
மயிலை கபாலீஸ்வரர் கோவில் பிரசாத கடை ஏலம்:நிர்வாக அதிகாரியின் உத்தரவு செல்லாது: ஐகோர்ட்
சென்னை:மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பிரசாதக் கடைக்கான டெண்டரை ரத்து செய்தது செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெண்டரில் அதிகபட்ச விலையை குறிப்பிட்டவரிடம் கடையை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அசோக்நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தாக்கல் செய்த மனு:மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பிரசாதக் கடைக்கு பொது ஏலம் விடப்பட்டத...
தமிழகம்
குண்டர் சட்டத்தில் 17 பேர் கைது:விடுவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை:தென் மாவட்டங்களில் குண்டர் சட்டத்தில் கைதான 17 பேரை விடுதலை செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் மீது போலீசார் உடன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியது.மதுரை, சிவகங்கை உட்பட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேர், அந்தந்த போலீஸ் கமிஷனர் மற்றும் கலெக்டர்களால், குண்டர் சட்டத்தில்...
தமிழகம்
காதலன் வீட்டு முன் அமர்ந்து பெட்டி,படுக்கையுடன் இளம்பெண் போராட்டம்
மேட்டூர்:மேட்டூர் அருகே காதலன் வீட்டு முன், பெட்டி, படுக்கையுடன் இளம்பெண் போராட்டம் நடத்தினார்.சேலம் மாவட்டம், மேட்டூர் சதுரங்காடியை சேர்ந்தவர் நகராட்சி லாரி டிரைவர் தமிழ்வேலன். அவரது மகள் புவனேஸ்வரி (20); தனியார் மொபைல் கடையில் வேலை பார்க்கிறார்.மேட்டூர் பொன்னகரை சேர்ந்த வி.ஏ.ஓ., மணியின் மகன் பாலமுருகன் (எ) பாலாஜி; எம...
தமிழகம்
சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை ஏமாற்றிரூ.20 ஆயிரம் மோசடி: வழிகாட்டிக்கு வலை
சென்னை:தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜப்பானிய பெண்ணை ஏமாற்றி 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் மோமொகோடா (30). இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த வாரம் வந்த இவர், 20ம் தேதி சென்னை, எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். மதுரையை சுற்றிப் பார்க்க விரும்...
தமிழகம்
கிருபாபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் யாளி உடைந்தது
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவில் கோபுரத்தில் இருந்த யாளி உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவில், சுந்தரரை தடுத்தாட்கொண்டு, "பித்தா பிறைசூடி' என பாடப் பெற்றதாகும்.கி.பி.13ம் நூற்றாண...
தமிழகம்
தஞ்சையில் பன்றிக் காய்ச்சல் ஒருவர் பலி
தஞ்சாவூர்:நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (57). இவருக்கு இருதயக்கோளாறு, மூச்சுத் திணறல், நீரிழிவு நோய் போன்ற பாதிப்பால், தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வப்போது காய்ச்சலும் இருந்ததால், இவரது சளியை எடுத்து பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்காக, மருத்துவமனை நிர்வாகம், சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தது. ப...
தமிழகம்
யானை தூக்கி வீசியதில்மீன்பிடி தொழிலாளி பலி
பழநி:பழநி பாலாறு-பொருந்தலாறு அணைப்பகுதியில் காட்டு யானை தூக்கி வீசியதில், மீன்பிடி தொழிலாளி இறந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள பொருந்தலாறை சேர்ந்த பால்சாமி மகன் நல்லமாயி(32); மீன்பிடி தொழிலாளி. அணைப்பகுதியில் காவல் பணியில் இருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில், பொருந்தலாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு ...
தமிழகம்
அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் மோதல்: திண்டுக்கல் அருகே கடையடைப்பு
வடமதுரை:திண்டுக்கல் அருகே எரியோட்டில், அ.தி.மு.க., தெருமுனை பிரசாரத்தில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, அ.தி.மு.க., பிரமுகரின் டீக்கடையும் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து, வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில், கடந்த சில மாதங்க...
General
ரஷ்யாவுக்காக உளவு பார்த்த 11 பேர் கைது
வாஷிங்டன் : ரஷ்யாவுக்காக உளவு பார்த்த 11 பேரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் ஓய்ந்து, தற்போது இருநாடுகளும் நேசத்தோடு பழகி வருகின்றன. இருப்பினும், ரஷ்ய உளவு அமைப்பான எஸ்.வி.ஆர்., பலருக்கு பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் உளவு பார்க்கும் வேலையை செய்து வந்துள்ளது.எஸ்.வி.ஆர்., உத்தரவின் பேரில் ...
தமிழகம்
ரயில் இன்ஜின் பழுது: முத்து நகர் எக்ஸ்பிரஸ் தாமதம்
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் இன்ஜின் பழுதானதால் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது.சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு (2693) புறப்பட்ட முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன் தினம் இரவு 11.32 மணிக்கு உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அப்போது, திடீரென இன்ஜின் பழுதானதால் ரயில் நின்றது.தகவ...
இந்தியா
திருப்பதி கோவிலில் ரோசய்யா சாமி தரிசனம்
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், ஆந்திர முதல்வர் ரோசய்யா நேற்று சாமி தரிசனம் செய்தார்.தேவஸ்தானம் சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆந்திர முதல்வர், ரோசய்யா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய, நேற்று முன்தினம் திருமலை வந்தார்.கோவிலுக்கு வந்த அவரை, தேவஸ்தான அதிகாரிகள் பாரம்பரி...
தமிழகம்
மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 1.3 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை:நூல் கண்டுகள் என்ற பெயரில், மலேசியாவுக்கு கடத்த முயன்ற, 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஏஜன்சி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.திருப்பூரில் உள்ள மில் ஒன்றின் பெயரில், மலேசியாவுக்கு அனுப்புவதற்காக நூல் கண்டுகள் கொண்ட கன்டெய்னர் ஒன்று, சென்னை வந்தது. ...
தமிழகம்
தஞ்சையில் பன்றிக்காய்ச்சலால்ஒருவர் பலி
தஞ்சாவூர்: தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவருக்கு, பன்றிக்காய்ச்சல் நோய் இருந்தது தெரிய வந்துள்ளது.நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (57). இவருக்கு இருதயக்கோளாறு, மூச்சுத் திணறல், நீரிழிவு நோய் போன்ற பாதிப்பால், தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.சில நாட்களாக அவ்வப்போது கா...
தமிழகம்
ரயிலில் பெண் பயணியிடம் 90 சவரன் நகை கொள்ளை
நாகர்கோவில்:உறவினர் இல்லத் திருமணத்திற்காக சென்னை வந்து, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண் பயணியிடம், 90 சவரன் நகைகளை கொள்ளை அடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் சேவியர் ராஜ்; இவரது மனைவி பிரமிஷா. கடந்த வாரம் இருவரும், சென்னையில் நடந்த உறவினர் இல...
தமிழகம்
மாமியாரை வெட்டிக் கொன்றார் மருமகன்:அதிர்ச்சியில் மாமனாரும் உயிரிழந்தார்
மடத்துக்குளம்: உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக மாமியாரை வெட்டிக்கொன்றார் மருமகன். மனைவி கொலை செய்யப்பட்டதை அறிந்த கணவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள வேடப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் பத்மாவதி(30). இவருக்கும், மைசூரைச் சேர்ந்த ராஜனுக்கும்(35) கடந்த 95ம் ஆண்...
தமிழகம்
இரவு முழுவதும் கழிப்பறையில்தவித்த குழந்தை: காலையில் மீட்பு
தேனி:தேனியிலுள்ள பள்ளி ஒன்றின் கழிப்பறையில், இரவு முழுவதும் தவித்த குழந்தையை காலையில் பொதுமக்கள் மீட்டனர். தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கார்மேகத்தின் மகன் நவீன்குமார் (3). நேற்று மாலை 5.45 மணி வரை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, பின் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் ...
தமிழகம்
குழந்தைகளுடன் காப்பக பொறுப்பாளர் மாயம்? திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர்:திருப்பூர் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்திய பொறுப்பாளர், குழந்தைகளை கடத்திச் சென்றதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர், சந்திராபுரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி உதயக்கனி (25). இவர்களுக்கு யுவராணி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. பத்து மாதங்களுக்கு முன்...
தமிழகம்
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் ஆலமர செடிகள்
சிதம்பரம்:வரலாற்று சிறப்புவாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்கள் முறையாக பராமரிப்பின்றி ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. நாளுக்கு நாள் இச்செடிகள் அதிகரித்துவரும் நிலையில், மரமாக வளர்ந்து கோபுரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்...
தமிழகம்
மெட்ரோ ரயில்: ஒப்பந்ததாரர்கள் முடிவு
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்கள் அமைக்க சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதுடன், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தினசரி ஆ...
தமிழகம்
மதுரை செல்லூரில் ஐம்பொன் சிலை பாதுகாப்பு மையம்: ஜூலை இறுதியில் திறப்பு
மதுரை:ஐம்பொன் சிலைகளை பாதுகாக்க முடியாத நிலையில் உள்ள கோவில்களுக்காக, மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவிலில், சிலை பாதுகாப்பு மையம் திறக்கப்படுகிறது.தமிழகத்தில் பல கோவில்களில், விலை மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை பாதுகாக்கும் வசதிகள் இல்லை. கள்வர் எச்சரிக்கை மணி, காவலர்கள் இல்லாததால், எளிதாக சிலைகள் திருடும் கும்பல், புர...
தமிழகம்
பழநி உண்டியல் வசூல்:ரூ.86 லட்சத்தை எட்டியது
பழநி:பழநி கோவில் உண்டியல் வசூல் 20 நாட்களில் 86 லட்சம் ரூபாயை எட்டியது. 48 கிராம் எடையுள்ள தங்க கிரீடம், 362 கிராம் எடையுள்ள வெள்ளி பாதங்களை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பழநி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில்,ரொக்கம் 85 லட்சத்து 82 ஆயிரத்து 798 ரூபாய். தங்கம் 72...
தமிழகம்
கோவை மாநாட்டு கருத்தரங்குகளில் குளறுபடி
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் கருத்தரங்கம் என்பது வருங்காலத் தமிழ் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைக்கப்பட்ட முக்கிய நிகழ்வாகும்.ஆனால், வெளிநாட்டு அறிஞர்களும், மற்ற அறிஞர்களும் அதிக சிரமப்பட்டனர். இந்த மாநாட்டிற்கு மொத்தம் 50 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திர...
தமிழகம்
சமச்சீர் கல்வி திட்ட தமிழ்ப்பாடபுத்தகங்கள் எழுதும் பணி தீவிரம்
மதுரை:சமச்சீர் கல்வி முறையில் தமிழ்ப் புத்தகங்கள் தயாரிப்பில், நிபுணர் குழு தீவிரமாக உள்ளது.பள்ளி கல்வித் துறையில் மாநில பாடத் திட்டம், மெட்ரிக், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் கல்வி முறைகளை ஒன்றிணைத்து சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வ...
தமிழகம்
சோலார் மின்சக்தி உபகரணங்களுக்கு சலுகைகள்
மதுரை:மதுரை மாவட்டத்தில், சோலார் மின்சக்தி உபகரணங்களை பயன்படுத்துவோருக்கு, தமிழ்நாடு எரிசக்தி முகமை (டெடா) சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.தெருக்கள், நிறுவனங்களின் வளாகங்களில் சேலார் மின்கம்பம் அமைப்பதற்கு 28 ஆயிரம் ரூபாய். இதற்கான மானியம் 9,600 ரூபாய். 18 வாட் சோலார் விளக்கு 7,000 ரூபாய். மானியம் 2,500 ரூபாய். 37 வாட...
இந்தியா
காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் தயார்
பாலக்காடு:கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட, தமிழகத்தில் இருந்து கும்கி யானைகள், வாளையார் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.தமிழக - கேரள எல்லையில், வாளையார் வனப்பகுதி உள்ளது. இவ்வனப்பகுதியைச் ஒட்டி புதுச்சேரி, கஞ்சிக்கோடு, வாளையார் போன்ற பல கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்குள்...
தமிழகம்
தி.மு.க., தொழிற் சங்க பிரச்னை:17 அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தம்
திண்டுக்கல்:திண்டுக்கலில் தி.மு.க., தொழிற்சங்கத்தினரிடையே (எல்.பி.எப்.,) ஏற்பட்ட கோஷ்டி பிரச்னையால், 17 அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாயினர்.தி.மு.க., தொழிற்சங்கத்தின்(எல்.பி.எப்.,) சார்பில், திண்டுக்கல், தேனி...
தமிழகம்
ஐம்பொன் விநாயகர் சிலை கண்டெடுப்பு
வாழப்பாடி:பேளூர் தாந்தோன்றீஸ்வரர் கோவில் பராமரிப்பு பணியின் போது, ஐம்பொன் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் தாந்தோன்றீஸ்வரர் கோவிலில், கருவறை அருகே வடக்கு திசையில், சுவாமி சிலைகள் இருந்த பீடத்தில், மார்பிள் பதிக்கும் பணி, நேற்று காலை நடந்தது. அப்போது, தரைதளத்தில் இருந்து இரண்டடி உ...
தமிழகம்
துப்பாக்கிகளுடன் மதுரை விமானம்
அவனியாபுரம்:விளையாட்டிற்கு பயன்படும் துப்பாக்கிகள் (ஸ்போர்ட்ஸ் ரைபிள்) நேற்று மதுரை விமானநிலையத்திலிருந்து சென்னை சென்றன.திருச்சியிலிருந்து சென்னைக்கு அதிகாலையில், இந்தியன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து இருந்தது. திருச்சி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் தயாராகும், இந்த ரக துப்பாக்கிகள், அந்த விமானத்தில் சென்னை செல்லும். திருச...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பில்ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள்
தேனி:மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ல் நடக்கிறது. இதையொட்டி வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஈடுபடுத்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களை தொகுப்பூதிய அடிப...
தமிழகம்
பாசி முதலீட்டாளர்கள் முதல்வரிடம் முறையிட முடிவு
திருப்பூர்:பாசி முதலீட்டாளர்கள் சென்னை சென்று, முதல்வரை சந்தித்து முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.திருப்பூரில் செயல்பட்ட பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதி நிறுவனத்தில், ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இதில், பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு உரிய பணம் திரும்ப கிடைக்கவில்லை. நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்த...
தமிழகம்
ஐம்பொன் விநாயகர் சிலை கண்டெடுப்பு
வாழப்பாடி : பேளூர் தாந்தோன்றீஸ்வரர் கோவில் பராமரிப்பு பணியின் போது,  ஐம்பொன் விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது.  சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர்  தாந்தோன்றீஸ்வரர் கோவிலில்,  கருவறை அருகே வடக்கு திசையில், சுவாமி சிலைகள் இருந்த பீடத்தில், மார்பிள் பதிக்கும் பணி,  காலை நடந்தது. அப்போது, தரைதளத்தில் இருந்து  இரண்டடி ...
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வில் பாசாங்கு: எதிர்க்கட்சிகள் மீது தியோரா புகார்
புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மண்ணெண்ணெய்  மும்முடங்கு விலை   உயர்த்தப்பட்ட போது கண்டு கொள்ளாத எதிர்க்கட்சிகள், தற்போது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாசாங்கு செய்கின்றன என, மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை...
தமிழகம்
சுதர்சனத்தின் இடத்தை பிடிக்கப் போவது யார்? மேலிடத்தின் பரிசீலனையில் நான்கு பெயர்கள்
தமிழக காங்கிரசின் சட்டசபை கட்சித் தலைவர் பதவியை பிடிப்பதற்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த பதவிக்காக மூத்த எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரின் பெயர்கள், காங்கிரஸ் மேலிடத்தின் பரிசீலனைக்கு வந்துள்ளது. புதிய தலைவர் யார் என்பது இன்னும் இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக காங்கிரசின் சட்ட...
தமிழகம்
தி.மு.க., தொழிற் சங்க பிரச்னை :17 அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தம்
திண்டுக்கல் : திண்டுக்கலில் தி.மு.க., தொழிற்சங்கத்தினரிடையே (எல்.பி.எப்.,) ஏற்பட்ட கோஷ்டி பிரச்னையால், 17 அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாயினர். தி.மு.க., தொழிற்சங்கத்தின்(எல்.பி.எப்.,) சார்பில், திண்டுக்கல், த...
தமிழகம்
ஒரு கல்லூரியில் அட்மிஷன் ரத்து; 2 கல்லூரிகளில் சீட்கள் குறைப்பு
சென்னை : அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு தனியார்பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது. மேலும், இரு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாபல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: சென்னை அண்ணாபல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்...
General
விண்வெளிக் கொள்கை: இந்தியாவுக்கு முக்கியத்துவம்
வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையை அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக உள்ள அமெரிக்கா நேற்று முன்தினம் புதிய விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்கு இணக்கமாக செயல்படுவதாக இந்த கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து...
தமிழகம்
செம்மொழி மாநாடு பாதுகாப்பு:போலீசாருக்கு விடுப்பு மறுப்பு
சிவகங்கை:கோவை செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு சென்ற போலீசாருக்கு, சிறப்பு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலருக்கு விடுப்பு மறுக்கப்படுவதால் புலம்பி வருகின்றனர்.கோவை செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஐந்து நாட்களாக பணியில் ஈடுபட்டு களைத்து போன போலீசாருக்கு, மூன்று நாள் விடுப்பு அனுமதித்து, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ள...
தமிழகம்
ராமேஸ்வரம் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்:பரமக்குடியிலும் ராமநாதபுரத்திலும் நிற்கும்
சென்னை:வாரணாசி மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பரீட்சார்த்த முறையில் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் நிலையங்களில் வரும் டிசம்பர் மாதம் வரை நின்று செல்லும்.புவனேஸ்வர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் (எண்.8496, எண்.8495) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும், வாரணாசி - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் (எண்.4260, எண். 4259) வாரா...
தமிழகம்
தூண்டுதலின் பின்னணியில் யார்?அதிகாரிகள் தீவிர விசாரணை
சேலம்:சேலம் மத்திய சிறை கைதிகள், பீடி, சிகரெட் புகைக்க கேட்டு நடத்திய உண்ணாவிரத போராட்ட பின்னணியில், தூண்டுதல் உள்ளதா என, சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சேலம் மத்திய சிறை கைதிகள் 50 பேர், பீடி, சிகரெட் புகைக்க அனுமதி கோரி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சி...
தமிழகம்
நகராட்சி கூட்ட அரங்கில் தி.மு.க., பெண் கவுன்சிலர் தர்ணா
தர்மபுரி:  தர்மபுரியில் பாதாள சாக்கடை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, தி.மு.க., பெண் கவுன்சிலர், நகராட்சி கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி நகராட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்தகுமார் ராஜா உள்ளார். துணை தலை...
இந்தியா
கந்தமால் கலவர வழக்கு:பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கு சிறை
புல்பானி:ஒரிசாவில் உள்ள கந்தமால் கலவரத்தில் நடந்த கொலையில் தொடர்புடையதாக, பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவருக்கு விரைவு கோர்ட் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.கந்தமால் மாவட்டத்தில் நடந்த மதக்கலவரத்தின்போது புதேதி என்ற கிராமத்தை சேர்ந்த பரிகிதா திகல் என்ற கிறிஸ்தவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய...
இந்தியா
கள்ளச்சாராய தொழிலைவிட்டு பால் வியாபாரத்திற்கு மாற்றம்
போபால்:மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராய தொழிலில் கொடிகட்டி பறந்த கிராமத்தினர், பால் வியாபாரிகளாக மாறியுள்ளனர்.மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் ஓடும் துதி ஆற்றின் கரையில் பயோரா மற்றும் சாரங்பூர் இடையில் உள்ள கிராமத்தினர் பலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை குலத்தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆற்றின் கரை முழுவதும் கள்ளச்சார...
தமிழகம்
முதல்வரை அவதூறாக பேசியதாகக் கூறி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சஸ்பெண்ட்
மதுரை: முதல்வரைப் பற்றி தவறாக பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சி (அ.தி.மு.க.,) தலைவர் சாலைமுத்துவை மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி, சஸ்பெண்ட் செய்தார். இதனால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சா...
இந்தியா
டில்லி போலீஸ் ஸ்டேஷன்களில் 30 ஐம்பொன் சிலைகள்
புதுடில்லி:சிலை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட 30 ஐம்பொன் சிலைகள் டில்லி போலீஸ் ஸ்டேஷன்களில் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.பழங்கால கோவில்களில் உள்ள சாமி சிலைகளை சமூக விரோதிகள் கடத்திச் சென்று வெளிநாடுகளில் விற்க முயற்சி செய்கின்றனர். கடத்தப்படும் சிலைகளை போலீசார், புலன் விசாரணை ந...
இந்தியா
மூளையைத் தாக்கும் பன்றிக் காய்ச்சல்:மும்பை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
மும்பை:நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறை உருவாக்கும், பன்றிக் காய்ச்சலுக்கான எச்1 என்1 வைரஸ், இப்போது மூளை மற்றும் பிற உறுப்புக்களையும் தாக்கும் என, மும்பை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.சமீபத்தில் பெய்த கனமழையால் மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவ ஆரம்பித்தது. கடந்த மே மாதம், மாநிலம்...
இந்தியா
பிரிட்டிஷ் ஆட்சியில் அழிக்கப்பட்ட நகரம்: அகழ்வாராய்ச்சி துவக்கம்
லக்னோ:உத்தரபிரதேசத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அழிக்கப்பட்ட தொழில் நகரத்தை அகழ்ந்தெடுக்கும் பணியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக முதல் சுதந்திர போராட்ட கிளர்ச்சி தோன்றியதாக கருதப்படும், உ.பி., மாநிலத்தில் உள்ள மகுவாதாபர் என்ற தொழில் நகரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் க...
இந்தியா
ரயில்வே தேர்வில் முறைகேடு எதிரொலி:கடுமையான விதிமுறை அமலுக்கு வருகிறது
புதுடில்லி:ரயில்வே தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, எதிர்காலத்தில் நடக்கவுள்ள தேர்வுகளில் கடுமையான விதிமுறைகளை கையாள ரயில்வே தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரிய தலைவரின் அதிகாரத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த ரயில்வே வாரிய தேர்வில், பெருமளவ...