category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 1.3 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
சென்னை : நூல் கண்டுகள் என்ற பெயரில், மலேசியாவுக்கு கடத்த முயன்ற, 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். ஏஜன்சி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.திருப்பூரில் உள்ள மில் ஒன்றின் பெயரில், மலேசியாவுக்கு அனுப்புவதற்காக நூல் கண்டுகள் கொண்ட கன்டெய்னர் ஒன்று, சென்னை வந்தது...
இந்தியா
காதல் திருமணத்தை ரத்து செய்த கட்டப் பஞ்சாயத்து நிர்வாகம்
சண்டிகார்:காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை, ஜாதியை காரணம் காட்டி, அரியானா கிராமத்தைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்தார் பிரித்து வைத்தனர். அவர்களின் திருமணத்தை ரத்து செய்வதாகவும் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ளது சத்ரோயத் கிராமம். இங்கு, கட்டப்பஞ்சாயத்தாரின் ஆதிக்கம் கொடிக...
தமிழகம்
அத்வானி இன்று மதுரை வருகை
மதுரை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று மதியம் 12.05 மணிக்கு, டில்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு, மதியம் 1 மணிக்கு அவர் ராமேஸ்வரம் புறப்படுகிறார். அங்கு மாலை 4.15 மணிக்கு செல்லும் அவர், மாலை 6 மணிக்கு சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் தங்குக...
தமிழகம்
நட்சத்திர ஓட்டல் ஆக்கிரமித்திருந்த ஒன்பது கிரவுண்ட்:மீட்கும் பணியை துவங்கியது சென்னை மாநகராட்சி
சென்னை:நட்சத்திர ஓட்டல் ஆக்கிரமித்திருந்த ஒன்பது கிரவுண்ட் நிலத்தை, கைப்பற்றும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக மேற்கொண்டனர்.சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில், "தி பார்க்' நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல், மாநகராட்சிக்கு சொந்தமான ஒன்பது கிரவுண்ட் திறந்தவெளி நிலத்தை ஆக்கிரமித்து வாகன நிற...
தமிழகம்
கல்லூரி விடுதியில் இன்ஜி., மாணவர் மர்ம சாவு
சென்னை:சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதி பாத்ரூமில், மாணவர் ஒருவர், மர்மான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரன்கோவில், கோமதிமுத்துப்புரத்தைச் சேர்ந்தவர் ஞானதாஸ்; இவரின் மகன் வில்லியம்கேரி(19). இவர், செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரியி...
தமிழகம்
திருமண அழைப்பிதழ் கொடுக்கசென்றவர் விபத்தில் பலி
திருநெல்வேலி:திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றவர்கள் விபத்தில் சிக்கியதில், மணமகன் பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவலை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(31); சென்னையில் கோழிக்கடை வைத்துள்ளார். இவருக்கு நாளை மறுதினம் திருமணம் நடக்க இருந்தது. சேரன்மகாதேவி பகுதி நண்பர்களுக்கு "பார்ட்டி' வைத்துவிட்டு நேற்று முன்தினம...
தமிழகம்
டேங்கர் லாரிகளுக்கு நிபந்தனை: உரிமையாளர்களின் மனு தள்ளுபடி
சென்னை:விபத்துக்குள்ளாகும் டேங்கர் லாரிகளுக்கு தண்டனை விதிக்க வகை செய்து ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த நிபந்தனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.தென்மண்டல எல்.பி.ஜி., போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் தாக்கல் செய்த மனு:காஸ் சிலிண்டர்களை எங்கள் டேங்கர் லாரிகளில் ஏற்றி...
தமிழகம்
422 பேருக்கு எம்.பி.பி.எஸ்.,இடம் ஒதுக்கீடு
சென்னை:மருத்துவக் கவுன்சிலிங்கில் நேற்று 423 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்றும் தொடர்ந்து நடந்தது. நேற்று நடந்த கவுன்சிலிங்கிற்கு 426 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், மூன்று பேர் வரவில்லை.கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட 423 மாணவர்களில் ஒருவர் மட்ட...
தமிழகம்
செம்மொழி தபால் தலையை ஜூலை 4 வரை வாங்கலாம்
கோவை : செம்மொழி மாநாட்டின் கண்காட்சி அரங்கில் நடந்து வரும் தபால்துறை கண்காட்சி ஜூலை 4 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.இது பற்றி, கோவை மண்டல தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் குருநாதன் கூறியதாவது:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செம்மொழி சிறப்புத் தபால் தலையை, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா வெளியிட, முதல்வர் கருண...
தமிழகம்
கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி:புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
விருத்தாசலம்:விருத்தாசலம் புறவழிச்சாலை பணிகள் முடிந்தும், ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழ்நாடு ரோடு செக்டார் புராஜக்ட் மூலம் 20 கோடி ரூபாய் செலவில், கடலூர் ரோடு குப்பநத்தத்தில் இருந்து வே...
தமிழகம்
குடிகார மகனால் மனம் வெறுத்த தாய், மகளுடன் தற்கொலை
மதுரை:மதுரை கூடல்புதூர் அருகே, குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மகனால், மனம் வெறுத்த தாயும், சகோதரியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.மதுரை முடக்கத்தான் எஸ்.வி.டி. நகரைச் சேர்ந்தவர் பழனியாண்டி. ரேஷன் கடை ஊழியர். இவரது மனைவி பங்கஜவள்ளி(45). மகள் ஜெகதீஸ்வரி(24). மெட்ரிக் பள்ளி ஆசிரியையாக இருந்தார். மகன்கள் கணேஷ்...
தமிழகம்
சுற்றுலா படிப்பை பதிவு செய்தவர்களுக்கு அறிவிப்பு
மதுரை:மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தில் சுற்றுலா துகலை பட்டம், பட்டயம் படிப்பை பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் விபரம் இணையதளத்தில் (www.madurai.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது. மதுரை அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத...
தமிழகம்
வேலை கேட்டு கிராம மக்கள் மறியல்2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மதுராந்தகம் அடுத்த காவாத்தூர் ஊராட்சியில் காவாத்தூர், மாரிபுத்தூர், விளாகம், கம்சலபுரம், முருக்கஞ்சேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து ...
தமிழகம்
65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்மஅடி: வீட்டு மனை வாங்கி தருவதாக மோசடி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இலவச வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறி, 65 பெண்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வாங்கி, ஏமாற்றியவரை பெண்கள் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவர் "மக்கள் தளபதி' என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தி வ...
தமிழகம்
வானகரம் - அம்பத்தூர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வானகரம் : வானகரம்-அம்பத்தூர் நெடுஞ்சாலைப் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர்.மதுரவாயல் மேம்பாலத்தின் அருகே வானகரம்- அம்பத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை, கனரக வாகனங்களுக்கு முக்கிய போக்குவரத்து வழியாகும்.சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து அம்பத...
தமிழகம்
போலீசின் ஒரு நாள் அதிரடி கூத்து: மீண்டும் துவங்கியது ஆக்கிரமிப்பு
செங்குன்றம் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே போலீசார் நடத்திய ஒரு நாள் அதிரடியால் சாலையோரமிருந்த கடைகள் மற்றும் லாரிகள் அகற்றப்பட்டன. ஆனால் போலீசாரின் தொடர் நடவடிக்கை இல்லாததால், அப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.சென்னை-கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்...
தமிழகம்
மயிலை கபாலீஸ்வரர் கோவில் பிரசாத கடை ஏலம் : நிர்வாக அதிகாரியின் உத்தரவு செல்லாது: ஐகோர்ட்
சென்னை : மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பிரசாதக் கடைக்கான டெண்டரை ரத்து செய்தது செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெண்டரில் அதிகபட்ச விலையை குறிப்பிட்டவரிடம் கடையை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அசோக்நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தாக்கல் செய்த மனு:மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பிரசாதக் கடைக்கு பொது ஏலம் விடப்பட்ட...
தமிழகம்
கணவன் மீதுமனைவி புகார்
தண்டையார்பேட்டை : கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக, கணவன் மீது மனைவி புகார் செய்தார்.சென்னை மணலியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் துர்காதேவி (24). இவருக்கும் தண்டையார்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவிக்கும் (30) கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கூடுதல் வரதட...
தமிழகம்
சீனாவில் 110 கோடி போன்கள்
பீஜிங்: சீனாவில் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 110 கோடியைத் தாண்டிவிட்டதாக அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, சீனாவின் மொத்த மக்கள் தொகை, 130 கோடி. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலும், புதிதாக நான்கு கோடியே 80 லட்சம் பேருக்கு போன் இணைப்புகள் வழங்கியுள்ளது அந்நாட்டு அ...
தமிழகம்
தலையில் கல்லை போட்டு பெயின்டர் படுகொலை
வேளச்சேரி : வேளச்சேரியில் பெயின்டர் ஒருவர், தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் பிரச்னையா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.வேளச்சேரி, மேம்பால ரயில் திட்டம் நடக்கும் இடத்தில் ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது....
தமிழகம்
தொலைபேசி அதிகாரிக்கு ஓராண்டு சிறை
சென்னை : மோசடி வழக்கில் சென்னை தொலைபேசி பொறியாளருக்கும், அவரது மகனுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தில் உள்ள தொலைபேசி இணைப்பகத்தில் துணை கோட்டப் பொறியாளராக முத்துமணி குணராஜ் பணியாற்றினார்; இவரது மகன் அய்ன்ஸ்டீன்."ஏசி' யூனிட்டுகளை பழுது பார்க்க போலி நிறுவனத்...
தமிழகம்
குடோன் ஷட்டர் உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை
சென்னை : கொத்தவால்சாவடி தனியார் குடோன் ஷட்டரை உடைத்து 60 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஹரிகுமார்(36). கொத்தவால் சாவடி, சின்ன தம்பி முதலி தெருவில் தனியா மொத்த குடோன் வைத்துள்ளார்.இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் முடித்து குடோனை பூட்டிவி...
தமிழகம்
பணிமாறுதல் பெற்றுத் தர லஞ்சம்:மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது
சென்னை : பணிமாறுதல் பெற்றுத் தருவதாக கூறி 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி துப்புரவு ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஓய்வுப்பெற்ற போலீஸ்காரர் சரவணன் மகன் சுதாகர்(31). இவர், தண்டையார்பேட்டை சபாபதி தெருவில் உள்ள மாநகராட்சி ஒன்றாவது மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபு...
தமிழகம்
ரூபி ஸ்டோன் மோசடி ஆசாமி கைது
சென்னை : போலி கல்லை கொடுத்து அதை ரூபி ஸ்டோன் எனக் கூறி, 52 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் உமாகாந்த்(47).இவரிடம், எம்.கே.பி., நகர் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்த கதிரேசன்(49), ஒரு கல்லை கொடுத்து விஜயநகர பேரரசர்களின் ரூபி ஸ்டோன் எனவும்,...
தமிழகம்
ஆவடி சி.ஆர்.பி.எப்., வீரர் குடும்பத்திற்கு நிதியுதவி
ஆவடி : நக்சலைட் தாக்குதலில் இறந்த ஆவடி சி.ஆர்.பி.எப்., வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை, திருவள்ளூர் கலெக்டர் நேரில் வழங்கினார்.ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இவர், கடந்த மே 20ம் தேதி மேற்கு வங்க மாநிலம், மிட்னாப்பூர், ராம்நகரில் நடந...
தமிழகம்
வேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை தேவை
வடமதுரை: நான்கு வழிச்சாலையில் அசூர வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை(என்.எச்.45) நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலை பள்ளங்களின்றி ஒரே சீராக இருப்பதால் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அதிக வேகத்துடன் செல்ல விரும்ப...
தமிழகம்
பெண் மரணம் ஆர்.டி.ஓ., விசாரணை
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே எஸ்.வாடிப்பட்டி காலனியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி சந்திரா(23). மூன்று ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். ஜூன் 27ல் வீட்டில் சமையல் செய்தபோது, சேலையில் தீப்பிடித்ததால் காயமடைந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். ரெட்டியா...
தமிழகம்
சேதமடைந்த ரோடுகளால் போக்குவரத்து பாதிப்பு
தாண்டிக்குடி,: தாண்டிக்குடி மலைப்பகுதியில் சேதமடைந்த ரோடுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தாண்டிக்குடி-கொடைக்கானல் ரோடு கடுகுதடி, புல்லாவெளி-தடியன்குடிசை, கே.சி.பட்டி-பாச்சலூர் இடையேயான ரோடுகள் சேதமுற்று குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்றுள்ளது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் சேதமுற்ற ரோ...
தமிழகம்
ஆலயக்கவுண்டன்பட்டி பள்ளிகட்டடத்திற்கு சீரமைப்பு தேவை
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள ஆலயக்கவுண்டன் பட்டி தொடக்க பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தை சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை ஊராட்சியில் ஆலயக்கவுண்டன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இப்...
தமிழகம்
குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
மதுரை : மதுரை கான்சாமேட்டுத்தெரு, பச்சரிசிக் காரத் தெரு, தொட்டியங்கிணற்று சந்து, பெரியமறவர் தெரு, ஓபுளா சுப்பையர் சந்து, தென்னோலைக் காரத்தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நகைப்பட்டறைகள், நகைக் கடைகள், டீக்கடைகளில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் கோவிந்தன் தலைமையில் சோதனை நடத்தினர். இதில், 14 வயதிற்கு கீழ் பணியிலிருந்த குழந்...
தமிழகம்
முதலாவது பிளாட்பாரம் விரிவாக்கப்பணி தீவிரம்
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பாரம் விரிவாக்கப் பணி ஜரூராக நடக்கிறது.மதுரை ரயில்வே ஸ்டேஷனின் முதலாவது பிளாட்பாரத்தில் முக்கிய வழித்தடங்களில் செல்லும் முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவது வழக்கம். பிளாட்பாரத்தின் அகலம் 15 அடியாக இருப்பதால் ரயில் வரும்போது நெருக்கடி ஏற்படுகிறது.இதைத் தவிர்ப்பதற்காக ப...
தமிழகம்
சிறப்பு தேர்வு நிலை சம்பளம் கோரிய மனுக்கள்: பள்ளி கல்வி செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை; சிறப்பு தேர்வு நிலை சம்பளம் வழங்க கோரிய தலைமை ஆசிரியர் மனுக்களை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வி செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை நாராயண புரத்தை சேர்ந்த தனம் உட்பட நால்வர் தாக்கல் செய்த ரிட் மனு:நாங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடை நிலை ஆசிரியர்களாக பணியி...
தமிழகம்
ரயில்வே ஸ்டேஷனில் தென்மாவட்ட கோயில்கள் குறித்த தகவல் மையம்
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில், மீனாட்சி அம்மன் கோயில் சார்பில், தென்மாவட்ட கோயில்கள் குறித்த தகவல் மையம் திறக்கப்படவுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன், மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதி அருகே தகவல் மையம் திறக்கப்பட்டது. தனியார் மூலம் நிர்வகிக்கப்பட்ட இம்மையத்தில் பக்தர்களுக்கு கோயில் வரலாறு மற்றும் வெப்சைட் விபரங்கள் த...
தமிழகம்
போக்குவரத்து விதிமுறை மீறினால் சலுகை ரத்து
மதுரையில் தினமும் போக்குவரத்து விதிமுறை மீறல்களால் விபத்து நடந்து கொண்டு இருக்கிறது. சரக்கு வாகனங்களில் ஆட்களைச் ஏற்றிச் செல்லக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும் பலர் இதை கடைப்பிடிப்பதில்லை. இதற்கு காரணம், குறைவான செலவில், பயணிக்கவும், பொருட்களை ஏற்றிச் செல்லவும் வசதியாக உள்ளதுதான். இதன் பின் விளைவுகளை பயணம் செய்பவர்கள்...
தமிழகம்
ஏலம் விடப்படுவது அம்மன் புடவைகளா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், அம்மனுக்கு சாத்தப்படும் பட்டுபுடவைகளை ஏலம் விடுவதற்கு பதில், வேறு புடவைகளை ஏலம் விடுவதாக புகார் எழுந்துள்ளது.அம்மனுக்கும், சுவாமிக்கும் தினமும் பலர் நேர்த்தி கடனாக பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவைகளையும், வேட்டிகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவை குறிப்பிட்ட நாட்களுக...
தமிழகம்
எம்.எல்.ஏ.,வுக்காக காத்திருந்த ரதம்
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் எம்.எல்.ஏ., வருகைக்காக காத்திருந்த ரதம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக நகர்ந்தது. கோயில் திருவிழாவின் 16 வது நாள் தேரோட்டம் நடக்கும். தேர் சக்கரம், சட்டம், ரீப்பர்கள் உடைந்து மோசமாக உள்ளதால், தேர் இழுத்தால் அபாயம் ஏற்படும். எனவே இந்த திருவிழாவில் தேரை ஓட்டக்கூ...
தமிழகம்
அவதி நேரம் அறிவிப்பு
மதுரை: உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் பார்த்திபன் அறிவிப்பு:நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, உத்தப்பநாயக்கனூர், பா.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, கொப்பிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக் கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம், பு...
தமிழகம்
போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை: மதுரை விவசாயக் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., பிரிவின் சார்பில், உலக போதை மருந்து தடுப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இப்ராஹிம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கல்லூரியிலிருந்து மலையாளத்தான்பட்டி வரை ஊர்வலமாகச் சென்றனர். பேராசிரியர் க...
தமிழகம்
போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி
மதுரை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தோருக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் துவங்க உள்ளன.இவ்வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் நாளை மாலை 4 மணிக்கு நேர...
தமிழகம்
ஓவர்சியர் பணிக்கு பதிவுமூப்பு
மதுரை: மதுரை கலெக்டரால் அறிவிக்கப்பட்டுள்ள பணிமேற்பார்வையாளர் (ஓவர்சியர்) பணியிடத்திற்கு மாவட்ட பதிவுதாரர்களின் உத்தேச பதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அற்றவர்கள்: ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பெண்கள் 10.7.1997 வரையும், ஆதிதிராவிடர் (பொது) 28.9.1995 வரையும், மிகவும் பிற்பட்டோர் (பொது) 23.6.1997 வரையும், பகிரங...
தமிழகம்
மாவுமில்லில் ரேஷன் அரிசிபறிமுதல்: ஒருவர் கைது
மதுரை: மதுரை சிந்தாமணி ரோடு கண்ணன் காலனியில் ஒரு மாவுமில் உள்ளது. இங்கு ரேஷன் அரிசி அரைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் மாவட்ட வினியோக அலுவலர் முருகய்யா, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி, எஸ்.ஐ., சீனிவாசன் ஆகியோர் அ...
தமிழகம்
நிழற்குடை, கழிவறை இன்றி பஸ் பயணிகள் அவதி
பொன்னேரி : பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை வசதியில்லாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.பொன்னேரி பழைய பஸ் நிலையத்திலிருந்து ஏராளமான பயணிகள் தினமும் செங்குன்றம், கோயம்பேடு, பெரியபாளையம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.நிழற்குடை இல்லாததால் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயில்...
தமிழகம்
சத்துணவு ஊழியர்களைஅரசு ஊழியர்களாக்க கோரிக்கை
திருப்போரூர் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியக் கிளை மாநாடு திருப்போரூரில் நடந்தது.திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கிளை மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் சிவநேசன் தலைமை தாங்கினார். ஒன்றியப் பொருளாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். செயலர் மகிமைதாஸ் அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் சத்துணவு ஊழியர்க...
தமிழகம்
வேலை வாய்ப்பற்றவர்களுக்கு கட்டுமான பிரிவில் பயிற்சி
திருவள்ளூர் : மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள வேலை வாய்ப்பற்றவர்களுக்கு எல் அன்டு டி நிறுவனத்தால் சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டுமான பிரிவில், ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்நிறுவனத்தின் மூலம் சாரம் அமைத்தல், ஷட்டரில் கம்பி ...
தமிழகம்
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் : அதிகாரிகள் நடவடிக்கை தொடருமா
விருதுநகர்: மாவட்டத்தில் முறைகேடாக பயன்படுத்திய 55 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  இப்படை ரேஷன் கடைகளில் பொருள்களை முறைகேடாக வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வது, கடத்தல், பதுக்கல் போன்றவைகளை கண்டறிந்து நடவடிக்...
தமிழகம்
ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் தொடரும் வாகன திருட்டு: பயணிகள் அவதி
பொன்னேரி : ரயில்வே நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ரயில் நிலையங்களின் பார்க்கிங் டெண்டர் முடிந்தும், புதிய பார்க்கிங் கான்ட்ராக்டர்கள் நியமிக்கப்படாததால் ரயில் நிலையங்களில் பயணிகளின் வாகனங்கள் பாதுகாப்பின்றி கிடப்பதுடன், வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடப்பட்டு வருகின்றன.பொன்னேரி ரயில் நிலையத்தில், ரயில...
தமிழகம்
கெடு முடிந்தும் பணி முடியல,நோயாளிகளின் அவதியும் தீரல...
பேரம்பாக்கம் : அரசு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிக்கான காலக்கெடு முடிந்தும், பணி முடியாததால் குறுகிய இடத்தில் டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் முதல் நிலை ஊராட்சியில் உள்ளது 24 மணி நேர அரசு மருத்துவமனை. இங்கு மூன்று டாக்டர்கள் "ஷிப்டு' முறையில் பணிபுரிந்து வருகின்றன...
தமிழகம்
5 லட்சம் ரூபாய் செக் மோசடி, ஓராண்டு சிறை விதித்து தீர்ப்பு
திருவள்ளூர் : ஐந்து லட்சம் ரூபாய் செக் மோசடி செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பளித்தது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி; இவரது மகன் முரளி(41); எண்ணெய் வியாபாரி. இவர், வீட்டு மனை வாங்குவதற்காக தனது நண்பரான வேப்பம்பட்டு பகுதியைச் சேர...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
சத்திரப்பட்டி: பார்வர்டு பிளாக் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் எரிபொருள் விலை உயர்வை அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், அதை வாபஸ் பெற வலியுறுத்தியும் சத்திரப்பட்டியில் ஆர்ப்பாட் டம் நடந்தது.கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பொன்ராஜ், நிர்வாகி ராமர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர...
தமிழகம்
விபத்தில் இருவர் பலி: ரூ.8 லட்சம் நஷ்டஈடு
ஸ்ரீவில்லிபுத்தூர்: செங்குளத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ்(30). பால் வியாபாரியான இவர் 2002 பிப்., 20 மாலை 6.30 மணிக்கு அதே ஊரை சேர்ந்த சுந்தரம் டிராக்டரில் சிவகாசி - ஸ்ரீவி., ரோட்டில் வந்து கொண்டிருந்தார். செங்குளம் ஓடை அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் சுந்தரம், பாண்டியராஜ் பலியாயினர். பாண்டியராஜ் குடும்பத்தினர் மாவட்ட செஷன்ஸ்...
தமிழகம்
வேலி அமைப்பதில் மோதல்: 7 பேர் கைது
கும்மிடிப்பூண்டி : இரு வீட்டிற்கு இடையே வேலி போடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ளது என்.எம்.கண்டிகை கிராமம். இங்கு வசித்து வருபவர் சுப்பிரமணி(65). இவரது வீட்டின் அருகே அண்ணம்மா(45) என்பவர் வசித்து வருகிறார். இரு வீட்டிற்கும் இடையே அண்ணம்மா முள்வ...
தமிழகம்
சரிந்தது பாசிப் பயறு
விருதுநகர்,: விருதுநகரில் பாசிப்பயறு விலை மூடைக்கு மே மாதம் 6,500 ரூபாயாக இருந்தது. தற்போது 5,500 ரூபாயாக உள்ளது. 8,500 ரூபாயாக இருந்த பாசிப்பருப்பு தற்போது 7,500 ரூபாயாக உள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து புதுப் பாசிப்பயறு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் விற்பனைக்கு வரும். ஆனால் அங்கிருந்து இப்போதே விற்பனைக்கு வருவதால் ப...
தமிழகம்
வளைகாப்பு திருவிழா
சாத்தூர்: சாத்தூரில் நகராட்சி சார்பில் 87 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா  நடந்தது. நகராட்சி தலைவர் குருசாமி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் ருக்குமணி, தனலட்சுமி, சுகுணாதேவி ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்தனர். உணவு பரிமாறினர். சுகாதார அலுவலர் சுந்தரராஜன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர். வட்டார சு...
தமிழகம்
ஜூலை 3, 4ல்எஸ்.ஐ., தேர்வு
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் எஸ்..ஐ., வேலைக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 3ம் தேதி நடக்கிறது. 350 போலீசார், தேர்வு எழுத உள்ளனர். மேலும், எஸ்.ஐ.,வேலைக்கு நேரடியாக 1850 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான தேர்வு ஜூலை 4ம் தேதி அதே பள்ளியில் நடக்கிறது.
தமிழகம்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும், இலவச திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுக் கூட்டம் நடந்தது.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் முத்துக்கிருஷ்ணமராஜா, ஒன்றிய செயலாளர் முருகையா பா...
தமிழகம்
உண்ணாவிரதம்
விருதுநகர்: சிவகங்கை ஜமீனால் மதுரை ஆதீனத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி, விவசாயிகள் சங்கத்தினர் விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்தனர்.மாவட்ட தலைவர் குருசாமி தலைமை வகித்தார்.  பொருளாளர் நேரு, துணை செயலாளர் பால்ச்சாமி முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜய முருகன், மார்க்சிஸ...
தமிழகம்
ரோட்டரி நிர்வாகிகள் பதவி ஏற்பு
விருதுநகர்: விருதுநகரில் எலைட் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. தலைவர் சி. மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட கவர்னர் தேர்வு ஷாஜகான் பதவி ஏற்பு விழாவை நடத்தி வைத்தார். தலைவராக எஸ்.எஸ்.ஜி.வி. கணேஷ்குமார் பதவி ஏற்றார்.புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.விருதுநகர் மூத்த குடிமகன் நல் ...
தமிழகம்
ரத்த தான முகாம்
ராஜபாளையம்: கவிஞர் பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி ராஜபாளையத் தில் வ.உ.சி., ரத்த தான கழகம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. சங்க தலைவர் ராஜா, துணைத் தலைவர் கணேசன், உறுப் பினர்கள்தேன்ராஜ், குமார், சரவணன் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செய்தனர்.
தமிழகம்
நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனிப் பிரமோற்ஸவ தேரோட்டம்
சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனிப் பிரமோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அப்பன் சிம்ம, யானை, குதிரை, கருட வாகனங்களிலும் தாயார் அன்ன வாகனம், தோளுக்கினியான் புஷ்ப பல்லக்கு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று ஒன்பதாம் நாள் ...
தமிழகம்
தஞ்சையில் பன்றிக்காய்ச்சலால் ஒருவர் பலி
தஞ்சாவூர் :  தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தவருக்கு, பன்றிக்காய்ச்சல் நோய் இருந்தது தெரிய வந்துள்ளது.நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (57). இவருக்கு இருதயக்கோளாறு, மூச்சுத் திணறல், நீரிழிவு நோய் போன்ற பாதிப்பால், தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  சில நாட்களாக அவ்வப்போத...
தமிழகம்
ராஜகோபுரம் சீரமைக்க ரூ.1.50 கோடி நிதி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., வடபத்ரசாயி கோயில் ராஜகோபுர சீரமைப்புக்காக 1.50 கோடி ரூபாய் நிதி ஓதுக்கப்பட்டுள்ளது.ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட வடபத்ரசாயி கோயில் ராஜகோபுர பாலாலயம் ஜூன் 7ம் தேதி நடந்தது. ராஜகோபுர சீரமைப்பு பணிக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டா...
தமிழகம்
நான்கு ஆயிரம் சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு திட்ட அனுமதி: ஊள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி
விருதுநகர்: தமிழகத்தில் சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக மற்ற அனைத்து பகுதிகளிலும் நான்கு குடியிருப்புகள் அல்லது  4,000 சதுர அடிக்குள் கட்டுமான பணிக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் நாளை முதல் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி உள்ளாட்சி நிர்வாகங்கள...
தமிழகம்
பழநி உண்டியல் வசூல் ரூ.86 லட்சத்தை எட்டியது
பழநி : பழநி கோயில் உண்டியல் வசூல் 20 நாட்களில் ரூ.86 லட்சத்தை எட்டியது. 48 கிராம் எடையுள்ள தங்க கிரீடம், 362 கிராம் எடையுள்ள வெள்ளி பாதங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பழநி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோயில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.வசூல் வருமாறு.ரொக்கம் ரூ.85 லட்சத்து 82 ஆயிரத்து 798. தங்கம் ...
தமிழகம்
நூலகர்களுக்கு மாற்றுப்பணி வாய்ப்பு எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளிகள்
திண்டுக்கல் : நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்கள், மீண்டும் மாற்றுப்பணி வாய்ப்பு வழங்குவதற்கான அறிவிப்பை எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட மைய, கிளை, ஊர்ப்புறம் என ஆறாயிரத்து 500 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 800க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இந்நிலையில் நூலகர்களுக்கான மாற்றுப்பணி வழங்கியதில்,மோசடி நடந்...
தமிழகம்
தி.மு.க., தொழிற் சங்க பிரச்னை 17 அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தம் பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தி.மு.க., தொழிற் சங்கத்தினரிடையே ஏற்பட்ட(எல்.பி.எப்.,) கோஷ்டி பிரச்னையால், 17 அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்புடன், கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாயினர். அரசு போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களில் டிரைவர், கண்டக்டர்கள் உறுப்பினர்கள...
தமிழகம்
யானை தூக்கி வீசியதில் மீன்பிடி தொழிலாளி பலி
பழநி : பழநி பாலாறு-பொருந்தலாறு அணைப்பகுதியில் காட்டுயானை தூக்கி வீசியதில் மீன்பிடி தொழிலாளி இறந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள பொருந்தலாறை சேர்ந்த பால்சாமி மகன் நல்லமாயி(32). மீன்பிடி தொழிலாளி. அணைப்பகுதியில் காவல் பணியில் இருந்துள்ளார். வனப்பகுதியில் இருந்த காட்டுயானை ஒன்று பொருந்தலாறு அணைக்கு நேற்று காலை ...
தமிழகம்
அ.தி.மு.க.,தி.மு.க.,வினர் மோதல் திண்டுக்கல் அருகே கடையடைப்பு
வடமதுரை : எரியோட்டில் நேற்றுமுன்தினம் நடந்த அ.தி.மு.க., தெருமுனை பிரசார தாக்குதல் சம்பவத்தையடுத்து, அ.தி.மு.க., பிரமுகரின் டீக்கடையும் அடித்து நொறுக்கப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் கடந்த சில மாதங்களாக தி.மு.க., அ.தி.மு.க.,வ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை,: பெட்ரோலிய பொருள் விலை உயர்வை கண்டித்து, இந்திய கம்யூ., சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குணசேகரன் எம். எல்.ஏ., மாநில துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலா ளர்கள் தங்கமணி, சாத்தை யா, ஒன்றிய செயலாளர் கள் ராஜூ, சந்திரன், நகர் செயலாளர் சேகரன் பேசினர்.
தமிழகம்
மதகுபட்டி கொலை வழக்கு: மேலும் மூன்று பேர் கைது
மதகுபட்டி: மதகுபட்டி அருகே கத்தப்பட்டு கிராமத்தில் கடந்த 4 ம் தேதி திருவிழா நடந்தது. இவ்விழாவில் சகோதரர்கள் தமிழ், முத்து மற்றும் கீழக்கோட்டை பாண்டிகண்ணன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. சகோதரர்கள் கம்பியால் தாக்கியதில், ரமேஷ் காயமுற்றார். இது தொடர்பாக, இருவரும் மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தனர். கடந்...
தமிழகம்
சங்க கூட்டம்
சிவகங்கை: எச்.ஐ.வி., உள்ளோர் சங்க பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. ஏ.ஆர்.டி., மைய மருத்துவ அலுவலர் மங்களமுருகன் தலைமை வகித்தார். ஆலோசகர் சுபா வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் பேசுகையில், ""எச்.ஐ.வி., பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள் ளது. இதில் ...
தமிழகம்
குறைந்த மின் அழுத்த பிரச்னை கிராமத்தின் 10 ஆண்டு பரிதவிப்பு
காளையார்கோவில்: குறைந்த மின்அழுத்த பிரச்னையால், காளையார்கோவில் அருகே சாக்கூர் கிராமத்தினர், அவதிப்படுகின்றனர். இங்கு 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து, சாக்கூர், கொத்தமங்கலம், அஞ்சவயலுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதில், 400 க்கும் மேற்பட்ட வீட்டு, விவசாய இணைப்புகள் உள்ளன. இங்கு கடப்த 10 ஆண்டுகளாக ...
தமிழகம்
நல உதவி வழங்கல்
சிவகங்கை: கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது.இதில், ஆதிதிராவிட நலத்துறை மூலம் 10 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் காதொலி கருவி இருவருக்கு; கேபிள் "டிவி' தொழிலாளர் நல வாரியம் மூலம் 15 பேருக்கு அடையாள அட்டையை , கலெக்டர் மகேசன் காசிராஜன் வழங்கினார்.டி.ஆர்.ஓ., ச...
தமிழகம்
மாநில பூப்பந்தாட்ட போட்டி திருவெற்றியூர் அணி வெற்றி
ஓசூர்: ஓசூரில் நடந்த மாநில பூப்பந்தாட்ட போட்டியில் திருவெற்றியூர் அணி முதலிடத்தில் வெற்றி பெற்றது. ஓசூர் பூப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான ஏழாம் ஆண்டு பூப்பந்தாட்ட போட்டிகள் ஆவலப்பள்ளி ஹெட்கோ விளையாட்டடு அரங்கில் இரு நாட்கள் நடந்தது. போட்டிகளை வக்கீல் ஆதிவெங்கடாசலம் துவக்கி வைத்தார். திருச்சி, சென்னை, சேலம், திருப...
தமிழகம்
தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் யூனியனில் பல்வேறு பஞ்சாயத்துகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கூலி குறைவாக வழங்கப்படுவதை கண்டித்து தொழிலாளர் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் யூனியன் பையூர் பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சாயத்தி...
தமிழகம்
சென்னைக்கு கூடுதல் ரயில் பயணிகள் கோரிக்கை
காரைக்குடி: சென்னை- ராமேஸ்வரம் (எண்-6101) ரயில், தஞ்சாவூர் வழி இயக்கப்பட உள்ளது. இதனால், பழைய வழித்தடத்தில் மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டும். இந்த ரயில் இரவு 7.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழி, மறுநாள் காலை 9 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து மா...
தமிழகம்
தொழிலாளர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூலி குறைவாக வழங்குவதை கண்டித்து திடீர் சாலை மறியல் நடந்தது. ஊத்தங்கரை யூனியனிலுள்ள 34 பஞ்சாயத்துகளில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏரிகள் அகலப்படுத்தி தூர் வாருதல், மண் சாலை அகல...
தமிழகம்
வளைகாப்பு நிகழ்ச்சி
பாகனேரி: பாகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.மருத்துவ அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தாய் சேய் நல அலுவலர் உஷா முன்னிலை வகித்தார். சமுதாய செவிலியர் சித்ரா வரவேற்றார். நர்ஸ் அமிர்தவள்ளி, நளினி ஏற்பாடுகளை செய்தனர். நர்ஸ் விஜயராணி நன்றி கூறினார்.
தமிழகம்
முருகன் கோவில் கும்பாபிஷேகம்
ஓசூர்: ஓசூர் ஜெய் சங்கர் காலனி ஸ்ரீ அருள் முருகர் கோவிலில் நாளை (ஜூலை 1) கும்பாபிஷேகம் நடக்கிறது. ஸ்ரீ அருள் முருகா கோவில் வளாகத்தில் ஸ்ரீ த்ரிமுக கணபதி, ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீசோமேஸ்வரர் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் கடந்த 20 ஆண்டாக திருபணி நடந்து வந்தது. தற்போது, பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா இன்று 30ம் தே...
தமிழகம்
இரட்டை கொலை வழக்கு: 3 பேர் கோர்ட்டில் சரண்
ஓசூர்: தளி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தளி அடுத்த உப்பாரப்பள்ளியில் கடந்த 30ம் தேதி புதரில் இருவர் வெட்டி கொலை செய்தனர். தளி போலீஸார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்தவர்கள் கெம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கஜேந்திராரெட்டி (...
தமிழகம்
புதுமாப்பிள்ளை மர்ம சாவு
ஓசூர்: ஓசூர் அருகே புதுமாப்பிள்ளை தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்தார். ஓசூர் அடுத்த மத்திகிரி எம்.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் சதீஷ் (28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நளினி (21) என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் சதீஷை திடீரென காணவில்லை. உற...
தமிழகம்
இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷணகிரி ரவுண்டனாவில் வட்ட செயலாளர் கண்ணு தலைமையில் ஆர்ப்ப்டாடம்ம நடந்தது. போச்சம்பள்ளி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் வட்ட செ...
தமிழகம்
உழவர் சந்தையின் விற்பனை விலையில் மோசம்
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்களின் விலையானது, பட்டியலில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கவும் அரசு தரப்பில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தொடக்கத்தில் நிர...
தமிழகம்
வாரணாசி, புவனேஸ்வர் ரயில் ராமநாதபுரத்தில் நிற்க உத்தரவு
ராமநாதபுரம்: வாரணாசி, புவனேஸ்வர் ரயில் , ராமநாதபுரம், பரமக்குடியில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்திற்கு வாரணாசி மற்றும் புவனேஸ்வருக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் நிற்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது. புதி...
தமிழகம்
செய்யது ஹமீதா கல்லூரியில் ராகிங் தடுப்பு கமிட்டி கூட்டம்
கீழக்கரை: கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்கை தடுக்கும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டதின் படி, காரைக்குடி அழகப்பா பல்கலை கழகம் உத்தரவை தொடர்ந்து, கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரியில் 42 பேர் கொண்ட ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. முதல்வர் அபுல் ஹசன் சாதலி பே...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாடானை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாடானையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மோட்டார் பைக்கை மாட்டுவண்டியில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்லபட்டது. தாலுகா தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுராமு, தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொண்டிய...
தமிழகம்
தீயில் கருகி பெண் பலி
திருவண்ணாமலை: கீழ் பென்னாத்தூர் அருகே தீயில் கருகி பெண் இறந்தார். கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (40), இவர் சென்னையில் மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். அதனால், இவரது மகள் மகேஸ்வரி (18), அன்பழகனின் மாமியார் ஆதிலட்சுமி வீட்டில் வளர...
தமிழகம்
மது விற்ற ஒருவர் கைது
பரமக்குடி: கமுதக்குடி கிழக்குத்தெருவைச் சார்ந்த அருள்சாமி மகன் ரகபதி(39) என்பவர் சில மது பாட்டில்களை வைத்துக் கொண்டு கள்ள மார்க்கெட்டில் அனுமதியின்றி விற்பனை செய்து வந்தார். பரமக்குடி டவுன் எஸ்.ஐ.,சரவணக்குமார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
பெண் மாயம்
திருவண்ணாமலை: போளூர் கீழ்சாவடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சங்கீதா (18), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.சங்கீதா போளூரில் கம்யூட்டர் சென்டரில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த 26ம் தேதி கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற சங்கீதா வீடு திரும்பவில்லை. அத...
தமிழகம்
அபிராமம் அருகே இளம்பெண் எரித்து கொலை?
அபிராமம் அபிராமம் அருகே குடிசை வீட்டில் இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அபிராமம் அருகே உள்ளது வலசைவிக்கிரபாண்டிபுரம் .இந்த ஊரை சேர்ந்த இருளாண்டி என்பவர் குடிசை வீட்டில் தீ பற்றி எரிவதாக ,அப்பகுதி வி.ஏ.ஓ.,விஜயராகவனுக்கு நேற்று அதிகாலை இரண்டு மணிக்கு போன் ஒன்று வந்துள...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் 2,000 ஆசிரியர்கள் பங்கேற்பு
கோவை: கோவையில் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில், 2,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.சங்கத்தின் மாநிலத் தலைவர் சிங்காரவேல் தலைமையில் பங்கேற்ற இவர்கள் அனைவரும் தலையில் வெள்ளைத் தொப்பி, வெள்ளை சட்டைகள் அணிந்திருந்தனர். பெண் ஆசிரியைகள் மஞ்சள் சேலை அணிந்திருந்தனர். மாநாடுக்கு வந்திருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்...
தமிழகம்
வாகனங்களுக்கு தீ: நள்ளிரவில் நாசவேலை
கோவை: கோவை நகரில், தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நள்ளிரவில் மர்மமான முறையில் தீப்பிடித்து நாசமாயின. இதன் பின்னணி குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை நகரிலுள்ள பெரியகடை வீதி, ராஜவீதி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு தேவையான நகைகளை வடிவமைத்து தர...
தமிழகம்
கீழக்கரையில் போக்குவரத்து ஸ்டேஷன் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கீழக்கரை: கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது.ஆணையாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார். வரி மற்றும் வரியற்றஇனங்கள் கேட்பு,வசூல்,நிலுவை விபரம் வாசிக்கப்பட்டது. நகராட்சி கூட்ட அரங்கில் நவீன ல் கணினி மையம் அமைக...
தமிழகம்
தி.மலையில் பெண் கடத்தல் கள்ளக்காதலனுக்கு வலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே திருமணமான பெண்ணை கடத்தி சென்ற கள்ளக்காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த சேர்ப்பாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் கல்பனா (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ள...
தமிழகம்
ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பரிதாப பலி
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த ஜம்புகோணம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன் (35). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை முருதன் ஆட்டோவில் ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆரணி அடுத்த கெங்காசூடாமணி என்ற இடத்தில் நிலை தடுமாறி ஆ...
தமிழகம்
ரயிலால் வசூல் போச்சே : தனியார் பஸ் ஊழியர்கள் புலம்பல்
காரமடை: கோவை - மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதனால், பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துவிட்டதாக புலம்புகின்றனர், தனியார் பஸ் ஊழியர்கள்.கோவை - மேட்டுப்பாளையம் இடையே கடந்த முதல் தேதியில் இருந்து கூடுதல் பாசஞ்சர் ரயில் தினமும் மூன்று முறை இயக்கப்படுகிறது; இதற்கு, மக்கள் மத்தியில் பலத்த வரவேற...
தமிழகம்
எரிபொருள் விலை உயர்வு: கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்
அன்னூர்; பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து இ.கம்யூ.,மற்றும் மா.கம்யூ.,சார்பில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணை விலையை உயர்த்தியுள்ளது. இதைக்கண்டித்து இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., சார்பில் அன்னூர் கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.கம்யூ., ஒன்றியச் செயலாள...
தமிழகம்
அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்த அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:  வேலூர் மாவட்டத்தில் 13 சட்ட மன்ற தொகுதியில் 22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் ஃபோட்டோ இல்லாமல் உள்ள 9, 441 பேரின் ஃபோட்டோக்கள் சம்மந்த...
தமிழகம்
கண் பரிசோதனை முகாம்
குறிச்சி: சேவை கரங்கள் மக்கள் நற்பணி இயக்கம், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கே.ஜி., கண் மருத்துவமனை சார்பில், கண் குறைபாடுகளுக்கான இலவச பரிசோதனை முகாம் நடந்தது.சுந்தராபுரம் அருகிலுள்ள வி.எஸ்.எஸ்.எம்., உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமுக்கு, நற்பணி இயக்கத் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரி...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகம் வழங்கல்
வேலூர்: வேலூர் ஓட்டேரியில் அ.தி.மு.க., சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடந்தது. பலவன்சாத்து பஞ்சாயத்து அ.தி.மு.க., செயலாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வாசு நோட்டுப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். கண்ணமங்கலத்தை அடுத்த மேட்டுப்பாளையம் பள்ளியில் படிக்கும் நரிக்க...
தமிழகம்
புனித அந்தோணியார் தேர்த்திருவிழா
மேட்டுப்பாளையம் : புனித அந்தோணியார் தேர்த்திருவிழா மேட்டுப்பாளையத்தில் நடந்தது. மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோட்டில் கத்தோலிக்க புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இதன் தேர்த்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  பாடற்திருப்பலியை முதன்மை குரு ஆரோக்கியசாமி நிறைவேற்றினார். தொடர்ந்து திருப்பலி, மறையுரை, நவ...