category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | அரசு பாலிடெக்னிக் கல்லூரி கவுன்சிலிங் | தூத்துக்குடி : அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டவர்கள் எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு சிவில் இன்ஜினியரிங் பாட பிரிவினை ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்தனர். கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி காரணமாக இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாண... |
தமிழகம் | இன்ஜினில் கோளாறு காரணமாக முத்துநக் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம் | தூத்துக்குடி -விழுப்புரம்-விருதாசலம் இடையே முத்துநகர் ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேர கால தாமதத்துடன் தூத்துக்குடி வந்து சேர்ந்தது. இதன் காரணமாக நெல்லைக்கு செல்ல வேண்டிய பாசஞ்சர் ரயிலும் தாமதத்துடன் புறப்பட்டு சென்றது.
தூத்துக்குடி மாநகர மக்கள் சென்னை செல்வதற்கான ஒரே ஒரு ரயில் முத்துநகர் சூப்பர் பாஸ்ட்... |
தமிழகம் | மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் பங்கேற்பு | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் கலெக்டர் விஜயகுமார் தலைமையில் பாதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் விஜயகுமார் குன்னம் தாலுகாவை சேர்ந்த ஐந்து நபர்களுக்கு தமிழக அரசின் நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும... |
தமிழகம் | மினி பஸ் கண்ணாடி உடைத்த 3 பேர் மீது போலீஸார் வழக்கு | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தையமுத்து மகன் சின்னதம்பி (28). இவர் மினி பஸ் டிரைவராக உள்ளார். இவருக்கும் க.எறையூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் முருகேசன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் சின்னதம்பி மினி பஸ்ஸை பெரம்பலூர் நோக்கி ஓட்டி வ... |
தமிழகம் | பண்ருட்டியில் 2 மணிநேரமின் நிறுத்த நேரம் மாற்றம் | பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் இரண்டு மணி நேரம் மின்நிறுத்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :-பண்ருட்டி பூங்குணம் துணை மின் நிலைய மின் விநியோகத்தில் நகரம் மின் பாதையில் வ.உ.சி.நகர், எல்.என்.புரம், திருவள்ளுவர் நகர், பூங்குணம், கணிசப்பாக்கம் ஆகிய பகுதிகள... |
தமிழகம் | நெய்வேலியில் இலவச மருத்துவ முகாம் | நெய்வேலி: நெய்வேலியை அடுத்துள்ள காந்தி கிராமத்தில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடந்தது.வடக்குத்து ரோட்டரி சங்கம், அன்னை முல்லை கல்வி மற்றும் சமூக சேவை அறக் கட்டளை இணைந்து புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையுடன் நடத்திய இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நெய்வேலியை அடுத்த காந்தி கிராமம் முல்லை மழலையர் பள்ளியில் நடந்தது.... |
தமிழகம் | பிளஸ் 2 சிறப்பு தேர்வு துவங்கியது | கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுகள் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர் வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அரசு அறிவித் துள்ள சிறப்பு தேர்வு எழுதுவதற்காக விண் ணப் பித்திருந்தனர். இதன்படி சிறப்பு தேர்வுகள் நேற்று துவங்கியது. கடலூரில் 3 மையங்களிலும், விருத்த... |
தமிழகம் | கண்காணிப்பு குழு கூட்டம் | கடலூர்: கிராம அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் மற்றும் குழந்தைகள் திறனறியும் கூட்டம் வெள்ளக்கரையில் நடந்தது.ஊராட்சி தலைவர் விஜயராகவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் செல்வி, மீனாட்சி ஆகியோர் குழந்தைகள் திட்டம் பணிகள் மற் றும் குழந்தைகள் திறனறிவு பற்றி சிறப்புரையாற... |
தமிழகம் | தீ விபத்து: தே.மு.தி.க., நிவாரணம் | சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே தீ விபத்தில் பாதிக் கப்பட்ட குடும்பத்தினருக்கு தே.மு.தி.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. சேத்தியாத்தோப்பை அடுத்த தண்டேஸ்வரநல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன் 19 வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சில்வர் பாத்திரங்கள், குடம், பாய், வேட்ட... |
தமிழகம் | அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர்: உள்ளாட்சி அமைப்புகள் திடீர் அறிவிப்பு | கடலூர்: அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என உள் ளாட்சி அமைப்புகள் திடீரென அறிவித்து வருவதால், ஏற்கனவே மனைகளை வாங்கியவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக கிராமப் பகுதி மக்கள் நகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்வது கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கடலூர்... |
தமிழகம் | சித்தேரி ஊராட்சியில் வரும்முன் காப்போம் முகாம் | சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே சித்தேரி ஊராட்சியில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஆசைவினோத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மகேஸ்வரி தலைமையில், டாக்டர்கள் உதயகுமார், சுரேஷ்குமார், பிரபாகரன், கனிமொழி, கலைச்செல்வி, ர... |
தமிழகம் | பண்ருட்டியில் இன்று நகரமன்ற கூட்டம் | பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர இயல்புக் கூட்டம் இன்று நடக்கிறது.பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் மாதாந் திர இயல்புக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு சேர்மன் பச்சையப்பன் தலைமையில் நடக்கிறது.இதில் நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி, துணை சேர்மன் கோதண்டபாணி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர். |
தமிழகம் | தேசிய புள்ளியியல் நாள் விழா | சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் நேற்று நடந்த தேசிய புள்ளியியல் நாள் விழாவில். புள்ளியியல் துறை துணை இயக்குனர் சுப்பிரமணியம் பேசினார். உடன் பி.ஐ.பி., கூடுதல் இயக்குனர் ஜெனரல் ரவீந்திரன்,சம்பங்கி ராமன்,சசி. |
தமிழகம் | முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா | ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் சந் திப்பு விழா பள்ளி வளா கத்தில் நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் புனிதவள்ளி தலைமை தாங்கினார். சபீதா வரவேற்றார... |
தமிழகம் | பிரசார முகாம் | நெய்வேலி; நெய்வேலி டவுன் ஷிப் போலீசார் சார்பில் போதை ஒழிப்பு பிரசார முகாம் நடந்தது.இன்ஸ்பெக்டர் சேகர் முன்னிலை வகித்தார். என்.எல்.சி., பொது மருத்துவமனை டாக்டர் கள் பிரேம்குமார், குணசேகரன், தாஸ் ஜெய்சிங் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில் உழவர் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த லெனின், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏரா... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கல் | குறிஞ்சிப்பாடி: வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய அறுவை சிகிச்சை கூடத்திற்கு ஓ.பி. ஆர்., கல்வி நிறுவனங்கள் சார்பில் இன்வெர்ட்டர் வழங்கப்பட்டது. வடலூர் ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்கள் சார் பில் வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறுவை சிகிச்சை கூடத் திற்கு மின்வெட்டால் பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது. இதை நிவர்த்தி செய்யும் வகைய... |
தமிழகம் | சிதம்பரத்தில் டாக்டர்களுக்கான கருத்தரங்கம் | சிதம்பரம்: சிதம்பரத்தில் டாக்டர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.இந்திய மருத்துவ கழகம் சிதம்பரம் கிளை, சென்னை கோர்டீஸ் மலர் மருத்துவமனை இணைந்து டாக்டர்களுக் கான சிறப்பு கருத்தரங்கை நடத்தியது. டாக்டர் சிவப் பிரகாசம் தலைமை தாங்கினார். மருத்துவக் கழக சிதம்பரம் கிளை செயலா ளர் அசோக்குமார் வரவேற்றார். கோர்டீஸ் மலர் மரு... |
தமிழகம் | ஊராட்சிமன்ற கூட்டம் | புவனகிரி: மேலமூங்கிலடி ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது.ஊராட்சித் தலைவர் செல்வி சதானந்தம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கதிரேசன் வரவேற்றார். கூட்டத் தில் மேலமூங்கிலடி ஊராட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் மூலம் மேலத் தெருவில் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாற்று ஆழ்துளை கிணறு அமை... |
இந்தியா | காப்பக உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் சமூக நலத்துறை அலுவலருக்கு 2 ஆண்டு சிறை | புதுச்சேரி: குழந்தைகள் காப்பக உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், சமூக நலத் துறை அலுவலருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப் பட் டது. புதுச்சேரியைச் சேர்ந்த ராஜசேகர், குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்காக மாநில ச... |
இந்தியா | கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரவுடி தற்கொலை முயற்சி | புதுச்சேரி: கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரவுடி திடீரென விஷம் குடித்து தற் கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி முருங்கப் பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவுடி ராக்கெட் ராஜா (30). இவர் மீது வெடிகுண்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த இரண்... |
தமிழகம் | திட்டக்குடியில் விவசாயிகள் சங்கபிரசார இயக்கம் | திட்டக்குடி: திட்டக்குடியில் விவசாய சங்கம் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் மின்வெட்டு, விலையேற் றம், கரும்பு டன் ஒன்றுக்கு 2,500 ரூபாய் மற்றும் நெல் குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் திட்டக்குடியில் ந... |
இந்தியா | போலி ஆவணம் தயாரித்து ரூ.60 லட்சம் நில மோசடி: மூன்று பேர் கைது | புதுச்சேரி: போலி ஆவணம் தயாரித்து 60 லட்சம் ரூபாய் நில மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி உழவர்கரையைச் சேர்ந்தவர் உபநாஸ் சேவியர். இவரது மனைவி லூர்துமேரி (58). இவர்களுக்கு சொந்தமான 7200 சதுர அடி நிலம் லாஸ் பேட்டை ஆனந்தா நகரில் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 60 லட்சம்.இந்த நிலத்தை கடந... |
தமிழகம் | அரசு பள்ளியில் புகையால் அவதி | கோபிசெட்டிபாளையம்: கோபி அரசு பள்ளி அருகே திடீரென எழுந்த புகையால் மாணவ, மாணவியர் பெரும் பாதிப்படைந்தனர். கோபி - ஈரோடு ரோட்டில் பொலவகாளிப்பாளையத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து மையம், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகே செயல்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து மையத்தில் 15 குழந்தைகள், நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்... |
தமிழகம் | கடலூரில் தொழில் முனைவோருக்கான ஆறு வார கால பயிற்சி முகாம் துவக்கம் | கடலூர்: தொழில் முனைவோருக்கான ஆறு வார கால பயிற்சி முகாம் கடலூரில் துவங்கியது.மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம் சார்பில் கடலூர் பீச் ரோடு ரங்கநாதன் நகரில் இயங்கும் வாஷ் தொண்டு நிறுவனத்தில் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது. இயக்குனர் செல்வகணபதி வரவேற்றார்.பயிற்சியில் கதர் கிரா... |
இந்தியா | குழந்தைகள் கடத்தல் வழக்கு கோர்ட்டில் லலிதா ஆஜர் | புதுச்சேரி: குழந்தைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக, லலிதாவை புதுச்சேரி போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.குழந்தை கடத்தல் தொடர்பாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த லலிதாவை, தமிழக போலீசார் கைது செய்தனர். லலிதா வீட்டில், எவ் வித ஆவணமும் இல் லாமல் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகளை, போலீசார் மீட்டனர். கைதான லலிதா, வேலூர... |
தமிழகம் | சந்தேகத்தில் மனைவி கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை | ஈரோடு: நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த சித்ரவேல் மகன் ராஜேஷ் (33). இவர், ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் வசித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்அதே பகுதியை சேர்ந்த பர்வின் பானுவை (23) காதலித்து திருமணம் செய்தார். திருமணத்... |
தமிழகம் | மினி பஸ் இயக்க நுகர்வோர் பாதுகாப்பு மையக் குழு கோரிக்கை | சேத்தியாத்தோப்பு: அனுமதிக்கப்பட்ட வழியில் மினி பஸ்சை இயக்க நுகர்வோர் பாதுகாப்பு மையக் குழு கோரிக்கை விடுத் துள்ளது.இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையக் குழுத் தலைவர் அருளரசன் கலெக்டர் மற் றும் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:சேத்தியாத்தோப்பு கிளாங்காடு, சர்க்கரை ஆலை குறுக்குரோடு, ஆனைவா... |
இந்தியா | டூ அரசு சட்டக் கல்லூரியில் இந்திய பார் கவுன்சில் குழு ஆய்வு | காலாப்பட்டு: புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர் பாக, இந்திய பார் கவுன்சில் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் உள்ளன. இக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு... |
தமிழகம் | பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம் | கடலூர்: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் விலை உயர்வை கண் டித்து பா.ஜ., சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப் பா ளர் எழிலரசன் தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு குணா, இளைஞரணி செயற்குழு அகஸ்திய பாரதி, இளைஞரணி செயலாளர் ராஜா, மாநில செயற்குழு கற்பகம் மோகன் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுக்க... |
இந்தியா | வாய்க்கால்களைத் தூர் வாரஇந்திய கம்யூ., வலியுறுத்தல் | புதுச்சேரி: முதியோர் பென்ஷன் பெற விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக பென்ஷன் வழங்க வேண்டும் என இந்திய கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூ., உழவர்கரை வட்டார குழு கூட்டம் கவுன்சிலர் பலராமன் தலைமையில் புதுப்பேட்டை ராமையா மன்றத்தில் நடந்தது.நடந்த வேலைகள் குறித்து வட்டார செயலாளர் சேதுசெல்வம் பேசினார். விசுவநாதன் எம்... |
தமிழகம் | கைதிகள் உண்ணாவிரத பின்னணி சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை | சேலம்: சேலம் மத்திய சிறையில் பீடி கேட்டு கைதிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் பின்னணியில் தூண்டுதல் உள்ளதா என சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய சிறையில் 1,000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றம் தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் காலை வழக்கம் போல "ச... |
தமிழகம் | ஊரக வளர்ச்சித்துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம் | கடலூர்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப் பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் திட்ட இயக்குநரின் அநாகரிகமான பேச்சினால் மனமுடைந்த சாலை ஆய்வாளர் சித்ரா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண் டார். இந்த செயலை கண் டித்து கடலூர் பீச்ரோட் டில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி... |
தமிழகம் | முதியவரின் கவனத்தை சிதறடித்துரூ.2 லட்சம் திருட்டு: மூவருக்கு வலை | கடலூர்: முதியவரின் கவனத்தை சிதறடித்து 2 லட் சம் ரூபாயை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவர் நேற்று முன்தினம் மதியம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள இந்தியன் பாங் கிற்கு சென்று தனது கணக் கில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் எடுத் தார்... |
தமிழகம் | 40 ஆண்டுகளாக புதுப்பிக்காத ரோட்டில் 46-புதூர் மக்கள் அவதி | ஈரோடு: 46-புதூர் பஞ்சாயத்து ஆனைக்கல்பாளையத்தில் 40 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத மண் ரோட்டில் பொதுமக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். ஈரோட்டிலிருந்து அவல்பூந்துறை செல்லும் வழியில் 46-புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆனைக்கல்பாளையம் கிராமம் உள்ளது. லக்காபுரம், வெள்ளாபாளையம், கருக்கம்பாளையம், கரூர் ரோடு ஆகியவற்றை அடைய இந்த கிரா... |
தமிழகம் | டி.எஸ்.பி.,யை முற்றுகையிட்ட பொதுமக்கள் | பண்ருட்டி: பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி டி.எஸ். பி.,யை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.பண்ருட்டி அடுத்த நத்தத்தைச் சேர்ந்த கண் ணன் மகள் மகேஸ்வரி (22). இவர் ஒறையூரைச் சேர்ந்த கிருஷ்ணனுடன் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந் தார். இந்நிலையில் மகேஸ்வரியிடம் கிருஷ் ணன் வரதட்சணை கேட் டுள்ளார். இந்நிலையில் நேற... |
தமிழகம் | சுற்றுலா வந்தவரிடம் நகை அபேஸ் | சிதம்பரம்: சிதம்பரம் சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்தவரிடம் நகைகள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுருதி மற்றும் குழந்தைகளுடன் சிதம்பரம் சுற்றுலா வந்தார். கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று காரை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்தனர். திரும்பி வந்து பார்த... |
தமிழகம் | பெண் கடத்தல்: வாலிபருக்கு வலை | பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகையில் பெண்ணை கடத் திச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி திருவதிகை கடலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மகள் கீதா (16). இவர் பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரனை காதலித்தார். இந்நிலையில் கீதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 25ம் தேதி பிரபாகரனு... |
இந்தியா | மக்கள் தொகை கணக்கெடுப்புதூர்தர்ஷனில் இன்று விளக்கம் | புதுச்சேரி: புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று ஒளிபரப்பாகும் தொலைப்பாலம் நிகழ்ச்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.புதுச்சேரி தூர்தர்ஷன் இயக்குனர் துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று (30ம் தேதி) மாலை 5.30 மணிக்கு நேயர்கள் நேரடியாக தொலைபேசி வழியே உரையாடும் தொ... |
தமிழகம் | மரத்திலிருந்து விழுந்த முதியவர் பலி | கடலூர்: புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவர் இறந்தார்.கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையத் தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (58). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழம் உலுக்கிய போது தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். |
தமிழகம் | தவறி விழுந்த கிளீனர் பலி | கடலூர்; பொக்லைன் இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த கிளீனர் இறந்தார்.கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையம் ஆகாஷ் கார்டனில் ஜே.சி.பி., பொக்லைன் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் சேப்ளாநத் தத்தைச் சேர்ந்த அருள்செல்வன் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகே உட்கார்ந்திருந்த கிளீனர் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த சிவராஜா (25) தவறி கீழே விழு... |
இந்தியா | வணிக உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் | புதுச்சேரி: புதுச்சேரியில் வணிக உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாமில் நேற்று 125 பேர் புதிதாக உரிமம் பெற்றனர்.புதுச்சேரி வர்த்தக சபை மற்றும் புதுச்சேரி நகராட்சி இணைந்து, வணிக உரிமம் புதியதாக பெறுவது மற்றும் பழைய உரிமத்தை புதுப்பித்துக் கொள்வதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி புதுச்சேரி வணிக... |
தமிழகம் | விருத்தாசலம் அருகேதிடீர் சாலை மறியல் | விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி செய்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலைக்கு மண் அணைக் கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒருசிலரின் வீடுகளுக்கு முன் இருந்த மண்ணை வெட்டும் போது, எங்கள் வ... |
தமிழகம் | அறச்சலூரில் தனியார் பஸ் டிரைவர் மர்ம மரணம் | ஈரோடு: அறச்சலூர் அருகேயுள்ள தோட்டத்தில் தனியார் பஸ் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அறச்சலூர் வடுகப்பட்டி அருகே ஞானபுரத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (50). ஈரோடு - அறச்சலூர் செல்லும் தனியார் பஸ்ஸில் டிரைவராக இருந்தார். இவருக்கு பாப்பாத்தி (47) என்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம், பணியை முடி... |
தமிழகம் | புவனகிரியில் இன்று கண் சிகிச்சை முகாம் | புவனகிரி: புவனகிரியில் ராகவேந் திரர் புனித அறக்கட் டளை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.புவனகிரி ராகவேந்திரர் கோவில் வளாகத்தில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடக்கும் முகாமில் கண்புரை, மாறுகண், கருவிழிகள், பார்வை கோளாறு, சர்க் கரை நோயாளிகள் மற் றும் குழந்தை... |
இந்தியா | மத்திய அமைச்சரிடம் நிர்வாகிகள் வாழ்த்து | புதுச்சேரி: புதுச்சேரி பிரதேச காங்., எஸ்.சி., பிரிவு புதிய பொறுப்பாளர்கள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கத்திடம் ஆசி பெற்றனர்.புதுச்சேரி பிரதேச காங்., எஸ்.சி., பிரிவு தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து நியமிக்கப் பட்டுள்ளார். துணைத் தலைவராக சாமிநாதன், வீரமுத்து தேர்வு செய்யப்பட்டுள் ளனர். மாநில அம... |
தமிழகம் | பூட்டிக்கிடக்கும் சைக்கிள் ஸ்டாண்ட் | ஈரோடு: பள்ளபாளையத்தில் யாருக்கும் உபயோகமின்றி சைக்கிள் ஸ்டாண்டு பூட்டிக் கிடக்கிறது. பள்ளபாளையம் டவுன் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2007-08ல் பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பயனடைய பஞ்சாயத்து சார்பில் சைக்கிள் ஸ்டாண்டு நிறுவப்பட்டது. சைக்கிள் ஸ்ட... |
தமிழகம் | கோல்டன் சிட்டி அரிமா சங்க புதிய நிர்வாகி பதவி ஏற்பு | கடலூர்: கடலூர் கோல்டன் சிட்டி அரிமா சங்க புதிய நிர்வாகி பதவி ஏற்பு விழா கடலூரில் நடந்தது.அரிமா சங்க தலைவர் புரு÷ஷாத்தமன் வரவேற் றார். மாவட்ட துணை ஆளுனர் கல்யாண் குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.கணேஷ் மூக்கையா புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். தணிகாசலம் சேவை திட்டங்களை துவக்கி ... |
இந்தியா | தொழில் முனைவோருக்கு உணவு பதப்படுத்துதல் பயிற்சி | புதுச்சேரி: தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பின் தொடக்க விழா நடந்தது.மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்கோ), மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து, தொழில் முனைவோருக்கான இந்த பயற்சி வகுப்பை நடத்துகிறது.தொடர்ந்து 6 வாரம் நடக்கும் ... |
தமிழகம் | ப்ளஸ் 2 உடனடி தேர்வு ஆரம்பம் | ஈரோடு: ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கிய ப்ளஸ் 2 சிறப்பு உடனடித்தேர்வில் 14 மாணவியர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டத்தில் 2009-10ம் கல்வியாண்டில் 20 ஆயிரத்து 658 மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 19 ஆயிரத்து 431 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மூன்று அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியடைந்த... |
தமிழகம் | முகத்துவாரத்தில் கரை தட்டிய விசைப்படகு உடைந்து சேதம் | கிள்ளை: சிதம்பரம் அருகே முடசல் ஓடை முகத்துவார அடைப்பால் கரை தட்டிய விசைப்படகு உடைந்து சேதமானது.சிதம்பரம் அருகே முடசல்ஓடை பகுதி முகத்துவாரம் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் விசைப்படகில் கடலில் மீன் பிடிக்கக் செல்லமுடியாமல் பாதிக் கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை வைத் தும் நடவடிக்கையும் எடுக்கப்ப... |
இந்தியா | கற்றலின் இனிமை கருத்தரங்கம் | புதுச்சேரி: புதுச்சேரி புனித லூயிஸ் தே கொன்சாகா உயர்நிலைப் பள்ளியில் கற்றலின் இனிமை கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடந்தது.உப்பளம் சயின்தாலஜி வாலண்டியர் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை மேரிஜாக்குலின் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார்.மாணவர்கள் கல்வி பயிலும் போது ஏற்பட... |
தமிழகம் | முனைவர் பட்டத்திற்கு வாய்மொழித் தேர்வு | விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ் சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது.விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது. கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.தமிழ்த் துறை தலைவர் முத்தழகன் முன்னிலை வகித்தார்.தமிழ் ... |
இந்தியா | இலவச ரிக்ஷா வழங்கல் | புதுச்சேரி: ராகுல் தேசிய பேரவை சார்பில் ரிக்ஷா தொழிலாளிக்கு இலவச ரிக்ஷாவை அமைச்சர் வல்சராஜ் வழங்கினார்.தனது ரிக்ஷாவில் பயணம் செய்த 1250 குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடி, 25 ஆண்டுகளாக சேவை செய்து வரும் ரிக்ஷா மாமா என அழைக்கப்படும் சவுரிநாதனின் சேவையை பாராட்டி, ராகுல் தேசிய பேரவை சார்பில் புதிய ரிக்ஷா வழங்கப்பட்டது.நிகழ... |
தமிழகம் | சாவடிபாளையத்தில் இன்று சட்ட முகாம் | ஈரோடு: சாவடிபாளையத்தில் இன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. உலக குழந்தை தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், ஈரோடு அருகே சாவடிபாளையம் புதூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இன்று மாலை 6 மணிக்கு, சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயசங்கரன் தலைமை வ... |
இந்தியா | போலீசாருக்கு ஊதிய நிலுவைத் தொகை காவலர் பொதுநல இயக்கம் கோரிக்கை | புதுச்சேரி: புதுச்சேரி போலீசாருக்கு 6வது சம்பளக் குழு நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என காவலர் பொதுநல இயக்கத்தின் பொதுச் செயலாளர் கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி போலீசாருக்கு 6வது சம்பளக் குழு பரிந்துரைப்படி 30 சதவீதம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, இதுவரை காவல்துறைக்கு வழ... |
தமிழகம் | இரட்டை பிள்ளையார் கோவிலில்பொருட்கள் விற்பனை உரிமம் ஏலம் | கடலூர்: கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சனை பொருட்கள் விற்பனை உரிமம், சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்டவை 38 ஆயிரத்து 550 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சனை பொருட்கள் விற்பனை, தேங்காய் சேகரிக்கும் உரிமம் மற்றும் கோவிலில் உள்ள மாமரம், சைக்கிள் ஸ்டாண்ட் ஆகிய... |
தமிழகம் | கழிவு நீர் தேங்குவதால் தொற்றுநோய் அபாயம் | புவனகிரி: புவனகிரி தில்லை நகரில் கழிவு நீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.புவனகிரி தில்லை நகர் 10 ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா, சாலை வசதி, குடிநீர் வசதி உள் ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளுடன் உருவாக் கப்பட்டது. இந்நகரில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்... |
இந்தியா | மண்ணெண்ணெய் விலை உயர்வு மறு பரிசீலனை செய்ய கோரிக்கை | புதுச்சேரி: மண்ணெண்ணெய் விலை உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சி கூறியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு காரணங்களை காட்டி அடிக்கடி பெட்ரோல், டீசல் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் அத்தியாவசிய பொருட்களான ம... |
தமிழகம் | மேலவையில் பிரதிநிதித்துவம் அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல் | கடலூர்: தமிழக அரசின் சட்ட மேலவையில் அரசு அலுவலர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநிலத்தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தமிழகத் தில் அமையவுள்ள... |
தமிழகம் | பூட்டிக் கிடந்த வட்டாரவள மைய அலுவலகம் | பண்ருட்டி: பண்ருட்டி அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மைய அலுவலகம் நேற்று காலை 10.15 மணிவரை திறக்காமல் பூட்டிக் கிடந்தது.பண்ருட்டி பூங்குணம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் வட்டார வள மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று காலை 10.15 மணி வரை திறக்கப்படாமல் பூட்டியிருந்தது. அதன் பிறகு வட்டார வள மைய பயிற்றுநர் கோம... |
இந்தியா | கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் தர்ணா | வில்லியனூர்: திருபுவனை கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.நூற்பாலை நுழைவு வாயிலில் நடந்த தர்ணாவிற்கு புதுச்சேரி மில் தொழிற்சங்க செயலர் ஆவணியப்பன் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் குணசேகரன் வரவேற்றார். சி.ஐ.டி.யூ., செயலர் முருகன், தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் ராஜாங்கம், கலிவரதன், தேவராசு, சேகர்,... |
தமிழகம் | மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை | கடலூர்: கடலூர் மாவட்டத் தில் நேற்று பரவலாக பெய்த மழையில் அதிக பட்சமாக காட்டுமைலூரில் 17 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலூர் மாவட்டத் தில் நேற்று இரவு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மழை அளவு விவரம் மி.மீ.,ல் வருமாறு:காட்டுமைலூர் 17, வேப்பூர் 15, லக்கூர் 13, கடலூர்,தொழுதூர் 9, குப்பநத்தம் 8.6, மே.மாத்தூர், விருத்தாசலம் 8,... |
தமிழகம் | உண்டு உறைவிடப் பள்ளி முறைகேடு புகார் எதிரொலி சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு | பண்ருட்டி: காடாம்புலியூர் கஸ் தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிட பள்ளி நிர்வாகம் கலெக்டரின் உத்தரவின் பேரில் வடலூர் சுத்த சன் மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டது. பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத் தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்... |
தமிழகம் | கல்லிடைக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. | அம்பாசமுத்திரம்:கல்லிடைக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.அம்பை., பகுதியில் அஞ்சல் நிலையங்களில் காலியாகஉள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புதல், பாபநாசம் புராஜெக்ட் அஞ்சலகத்தில் மோசடியில் ஈடுபட்ட நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரியும், கல்லிடைகுறிச்சியில் போஸ்ட் மாஸ்டராக பணியா... |
தமிழகம் | கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்: துர்நாற்றம் வீசும் பஸ் நிலையம் | விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.விருத்தாசலம் நகரத்தில் பிரதான சாலையாக ஜங் ஷன் ரோடு, கடைவீதி இருப்பதால் இந்த இரண்டு சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இப்பகுதியில் உள்ள கடைகள், டீ கடைகள், ஒயின் ஷாப்புகளில் பயன்படுத்தப்படும் பி... |
இந்தியா | குடியிருப்புகள் கட்டும் பணி ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஆய்வு | புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டும் பணியை ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர் வார்டு பகுதியில் உள்ள கே.சி.நகர் மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், மழைக் காலங்களில் இப்பகுதி குடிசைவாழ் மக்கள் பெரும் பாதிப்பு ... |
தமிழகம் | ஆதிபுரீஸ்வரர் கோவிலில்108 சங்காபிஷேகம் | நெல்லிக்குப்பம்: எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேம் நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரில் பழமையான பத்மதளநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கும்பாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 108 சங்கு சிறப்பு பூஜைகள் யாகங் கள் முடிந்து அபிஷேகம் நடந்தது. லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப... |
இந்தியா | போக்குவரத்துவிழிப்புணர்வு முகாம் | வில்லியனூர்: வில்லியனூர் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமிற்கு, பள்ளி தாளாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சரஸ்வதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து இன்ஸ்பெ... |
தமிழகம் | ஊராட்சி தலைவர் தாக்கு: 5 பேர் மீது வழக்கு | கடலூர்: ஊராட்சி தலைவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நாதன். அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரங்கி. இவர் ஊராட்சி தேர்தலில் அருள்நாதனை எதிர்த்து நின்று தோற்றவர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று ... |
இந்தியா | வீடு கட்டுவதற்கு மான்ய தொகைசிவா எம்.எல்.ஏ., வழங்கினார் | புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் ராஜிவ்காந்தி பாதுகாப்பு திட்டநிதியுதவியை சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த, வறுமைக் கோட்டில் உள்ள குடும்பத்தில் இறந்தவர்களின் குடும்பங் களுக்கு வருவாய்த் துறை மூலம் ராஜிவ்காந்தி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இயற்கை ம... |
தமிழகம் | நெல்லை மாவட்டத்தில் 13 ஆயிரம் எக்டேரில்செம்மை நெல் சாகுபடி செய்ய திட்டம்: வேளாண் அதிகாரி தகவல்ஞி | தென்காசி:நெல்லை மாவட்டத்தில் 13 ஆயிரம் எக்டேரில் செம்மை நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் கூறினார்.தென்காசி அருகே பண்பொழியில் செம்மை நெல் சாகுபடியில் இயந்திர நடவு குறித்த செயல் விளக்க முகாம் நடந்தது. நெல்லை வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசும் போது... |
இந்தியா | போலீஸ் - பொது மக்கள் நல்லுறவு கூட்டம் | புதுச்சேரி: முதலியார்பேட்டை நூறு அடி சாலை கணேஷ் திருமண மண்டபத்தில் பொதுமக்கள்- போலீஸ் நல்லுறவுக் கூட் டம், தெற்குப் பகுதி எஸ்.பி., நந்தகோபால் தலைமையில் நேற்று நடந்தது.இக் கூட்டத்தில் பொதுமக்கள் கூறியதாவது:சில பிரச்னைகளுக்கு போலீசார் வழக்கு பதியாமல் காலம் கடத்துகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்னையில் ஈடுபடுகின்... |
இந்தியா | நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில்மரக்கன்றுகள் தத்தெடுக்கும் திட்டம் | புதுச்சேரி: லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று தத்தெடுக்கும் திட்டத்தின் துவக்க விழா நடந்தது.லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை மற்றும் கெயில் இந்தியா நிறுவனத்தின் புதுச்சேரி பிரிவு இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்... |
இந்தியா | ஓவியப் போட்டி பரிசளிப்பு | புதுச்சேரி: சுப்பையா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எல்லோரா ஓவியப் பள்ளி சார்பில் தியாகி சுப்பையா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஓவியப் போட்டி நடந்தது. இப்போட்டியில் வெற்... |
தமிழகம் | தென்காசி நகராட்சி அலுவலகத்தில்குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை | தென்காசி:தென்காசி நகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சி சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.தென்காசி நகராட்சி பகுதியில் வாரம் இருமுறை போதுமான அளவு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போது வாரம் ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யபடுகிறது. அந்த தண்ணீரும் நள்ளிரவு நேரத்தில் வருகிறது. வாட்ட... |
இந்தியா | தீப்பந்தம் கொளுத்தும் போராட்டம்ஊராட்சி தலைவர் எச்சரிக்கை | புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கத்தில் பழுதடைந்த மின் கோபுர விளக்கை சீரமைக்காவிட்டால், தீப்பந்தம் கொளுத்தும் போராட்டம் நடத்தப் போவதாக ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன்நாதன் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கரிக்கலாம்பாக்கம் நான்கு சாலை சந்திப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. இவ... |
இந்தியா | புதுச்சேரி என்.சி.சி., மாணவர் இமயமலை சிகரம் ஏறி சாதனை | புதுச்சேரி: இமயமலையிலுள்ள கங்கோதரி சிகரத்தை அடைந்து புதுச்சேரியை சேர்ந்த என்.சி.சி., மாணவர் பாலமுருகன் சாதனை செய்துள்ளார்.இது குறித்து புதுச்சேரி கடற்படை பிரிவு என்.சி.சி., கமாண்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த பாலமுருகன் மலையேறும் சாகசத்தி... |
தமிழகம் | லாரி வாடகை நாளை முதல் 20 சதவீதம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு | திருநெல்வேலி:நெல்லையில் நாளை (1ம்தேதி) முதல் லாரி வாடகை 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக நாடு முழுவதும் சரக்குப்போக்குவரத்துக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லையில் லாரி உரிமையாளர்கள் சங்கக்கூட்டம் தலைவர் வேணி பாலச... |
தமிழகம் | பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்ககுழு அமைக்க இளைஞர் காங்., வலியுறுத்தல் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது.நெல்லை பார்லிமென்ட் தொகுதி இளைஞர் காங்., தலைவர் வி.பி.துரை முதன்மைக்கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் கூட... |
இந்தியா | பெட்ரோல், டீசல் விலை உயர்வு மா. கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம் | காரைக்கால்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலர் வின்சென்ட் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலியபெருமாள், ராஜசேகரன், ரவி, திவ்யநாதன், சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஐக்கிய முற்போக்கு க... |
தமிழகம் | நெல்லை டவுனில் இலவசநோட்டு வழங்கும் விழா | திருநெல்வேலி:நெல்லை டவுன் சுப்புலட்சுமி மகாலில் வானொலி நண்பர்கள் வட்டம் மற்றும் பிரண்ட்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.மதுரை வீரன் தலைமை வகித்தார். வானொலி நண்பர்கள் வட்டத் தலைவர் அருணா சிவாஜி, செயலாளர் அப்துல்லா முன்னிலை வகித்தனர். பிரண்ட்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் ... |
இந்தியா | பாரத ஸ்டேட் பாங்க் சார்பில் 3 இடங்களில் ஏ.டி.எம்., திறப்பு | காரைக்கால்: காரைக்கால் பாரத ஸ்டேட் பாங்க் சார்பில் பி.கே. சாலை, நெடுங்காடு, திருபட்டினம் ஆகிய 3 இடங்களில் புதிதாக ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த ஏ.டி.எம்., மையங் களை சென்னை வங்கியின் வட்டார பொது மேலாளர் பிரசாத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருச்சி மண்டல உதவி பொது மேலாளர் ஜோசப்சந்திரன், காரைக்கால் கிளை... |
இந்தியா | முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் | “காரைக்கால்: முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து முப்படை நலத் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காரைக்கால் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற் கான விண்ணப்... |
இந்தியா | உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாக 13 பேர் கைது | சாஜப்பூர்: மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக லட்சுமி நகர் அருகே 13 பேரை ம.பி., மாநில போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிவராத இயக்கமான ஜெயிஸ் இ முகம்மது இயக்கத்தை ஆதரித்து பேசியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ராம்ஜி ஸ்ரீவத்சவா தெரிவித... |
இந்தியா | இலவச காஸ் சிலிண்டர்ஷாஜகான் வழங்கினார் | புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் சிகப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு அமைச்சர் ஷாஜகான் இலவச காஸ் சிலிண்டர் வழங்கினார். லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கணபதி செட்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, சிகப்பு நிற ரேஷன் அட்டைதாரர்கள் 1200 பேருக்கு இலவச காஸ் சிலிண்டர்... |
இந்தியா | பெட்ரோல் விலை உயர்வுதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் | ஆர்ப் பாட்டம் நடந்தது.தே.மு.தி.க., சார்பில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பாலாஜி தியேட்டர் எதிரில் துவங்கிய பேரணி அண்ணா சிலை அருகே முடிவடைந்தது.அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலர் செல்வம் (எ) செல்வராஜ் தலைமை தாங்கி, கோ... |
இந்தியா | காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் நமச்சிவாயம் உறுதி | புதுச்சேரி: புள்ளியியல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.புதுச்சேரி பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்ககம் சார்பில் புள்ளியியல் தின விழா நேற்று நடந்தது. அண்ணாமலை ஓட்டலில் நடந்த விழாவில், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்ககத்தின் இயக்குனர... |
தமிழகம் | களை கட்டாத வர்த்தகத்தால் தொடருது விலை வீழ்ச்சி : விலை நிர்ணயம் இல்லாததால் முன்பணம் | குன்னூர்: குன்னூர் தேயிலை ஏலத்தில் உள்நாட்டு வர்த்தகம் களைகட்டாததால் விலை வீழ்ச்சி தொடர்கிறது; தேயிலைத் தூளின் குறைந்தபட்ச விலை 34 ரூபாயாக சரிந்தது; பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாமல், முன்பணம் வழங்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை எண் 25க்கான ஏலம் நடத்தப்பட்டது; மொத்தம் 19.... |
தமிழகம் | இரங்கல் கூட்டம் | பந்தலூர்: தமிழக சட்டசபை காங்., கட்சி தலைவர் சுதர்சனம் மறைவுக்கு, பந்தலூர் சேரம்பாடியில், அனைத்து கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. காங்., நிர்வாகி அப்துல் கலாம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அனீபா, சந்திரமோகன், விஜயசிங்கம், ஆசிர், சங்குட்டன், சத்யன், மகாவிஷ்ணு (தி.மு.க.,), பஷீர் (மு.லீக்), காளிமுத்து (அ.தி.ம... |
தமிழகம் | சஆதரவற்ற பெண்கள், மூதாட்டிகள் போதைக்கு அடிமையாகும் அவலம் | மேட்டூர்: மதுவின் போதைக்கு அடிமையாகும் ஆதரவற்ற பெண்கள், மூதாட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களின் ஒன்று மேட்டூர். இங்குள்ள அணை, பூங்கா ஆகியவற்றை பார்வையிட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பலர் த... |
தமிழகம் | ஐந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை | சேலம்: சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கலையரசி தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ராஜ்மோகன், ஆதிதிராவிட நல அலுவலர் ராஜசேகரன், தாசில்தார் ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, உடல் ஊனமு... |
தமிழகம் | கழிவுநீர் சங்கமத்தால் மேட்டூர் 20வது வார்டு மக்கள் அவதி | மேட்டூர் 20வது வார்டு மின்வாரிய குடியிருப்பு, நேருநகர் சுடுகாடு பகுதியில் கழிவுநீர் வெளியேற வழியின்றி பல ஆண்டுகளாக குட்டை போல தேங்கி நிற்பதால் துர்நாற்றம், கொசுதொல்லையால் சுற்றுபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேட்டூர் 20வது வார்டில் நேருநகர், பெரியார் நகர், வீரபாண்டிய கட்டபொம்மன் நகர், திலகர் நகர், சவ... |
தமிழகம் | இந்தியாவின் முதல் பெண் புனிதர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு | சேலம்: இந்தியாவின் முதல் பெண் புனிதர் பட்டம்பெற்ற கன்னியாஸ்திரி அல்போன்சாவின் உருவம் பொறித்த நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கோட்டயம் அருகில் உள்ள குடமாளூரில் 1910ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ஜோசப் - மேரி தம்பதியருக்கு மகளாக பிறந்தவர் அல்போன்சா. சிறுவயது முதலே இறைப்பணியில் மிகுந்த ஆர்வம் காட்டினா... |
தமிழகம் | சமையல் செய்த போது தீப்பிடித்து பெண் பலி | சேலம்: மேட்டூரை சேர்ந்தவர் குமார். அவரது மனைவி லதா(25), வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மண்ணெண்ணெய் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ, லதா சேலையில் பட்டு தீப்பிடித்தது. உடல் முழுவதும் தீயில் சிக்கி லதா படுகாயம் அடைந்தார். அவரை மேட்டூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு ச... |
தமிழகம் | துப்பாக்கி சூடு நடத்திய கிராமத்தில் தகராறு ஒருவர் கைது; இருவருக்கு போலீஸ் வலை | மேட்டூர்: கோஷ்டி மோதல் தொடர்பாக போலீஸார் துப்பாக்கி சூடு நடத்திய கிராமத்தில் நேற்று முன்தினம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. அது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீஸார் மேலும் இருவரை தேடி வருகின்றனர். மேட்டூர் தாலுகா, கருங்கல்லூர் மாரியம்மன் கோவிலில் மேளம் அடிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அப்பகுதியை சேர்ந்த இரு இனத்தவர்கள் ... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலையைகுறைக்க ம.ம.மு.க., வலியுறுத்தல் | திருநெல்வேலி:பெட்ரோல், டீசல் விலையுர்வை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அக்கழகத்தின் நெல்லை மாவட்ட துணை தலைவர் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:மத்திய அரசின் முதலாளித்துவக் கொள்கை காரணமாக சிறுதொழில், வியாபாரம் நசுங்கி நடுத்தர... |
தமிழகம் | ஆண்டு விழா | திருநெல்வேலி:நெல்லையில் இண்டஸ்ட்ரீயல் எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் பேரவை ஆண்டு விழா கூட்டம் நடந்தது.டவுன் வங்கி ஊழியர் சங்கத் தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். உதவிச் செயலாளர் சுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். உதவித் தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஏஐடியுசி., தலைவர் ஆறுமுகம் தொடக்கவுரையாற்ற... |
தமிழகம் | தாழையூத்தில் சுரங்கப்பாதை: தேமுதிக., வலியுறுத்தல் | திருநெல்வேலி:தாழையூத்து தென்கலம் ரோடில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என தேமுதிக., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் சங்கர்நகர்- தாழையூத்து நகர பொறுப்பாளர் கொம்பையா பாண்டியன் அனுப்பிள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:தாழையூத்து தென்கலம் ரோடில் ஒரு சுரங்கப்பாதை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் மி... |
தமிழகம் | ரூ.3.65 லட்சம் மின் கட்டணம் பாக்கி ஆதி திராவிட நல மாணவியர் விடுதியில் இணைப்பு துண்டிப்பு | சேலம்: ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிக்கு 2004ம் ஆண்டு முதல் மின் கட்டணம் செலுத்தப்படாததால், எந்நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மாணவிகள் உள்ளனர். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தங்கி படிக்க அரசு சார்பில் விடுதி வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டது. அவர்களுக்கு தேவையான வ... |
தமிழகம் | மாற்றுத்திறனுடையோர்சங்க செயற்குழு கூட்டம் | திருநெல்வேலி:நெல்லை மாவட்ட மாற்று திறனுடையோர் நல்வாழ்வு சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் செய்யது சிக்கந்தர் முன்னிலை வகித்தார். பொருளாளர் நடராஜன் வரவேற்றார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் முகைதீன் அப்துல் காதர், கருத்தப்பாண்டி, சுப்புராஜ், கோயில் பிச்சை, சுந்தர் ராஜ் உட்பட பலர் க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.