category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சென்னையில் 14ல் பீடித்தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை
திருநெல்வேலி:சென்னையில் வரும் ஜூலை மாதம் 14ம் தேதி பீடி சுற்றும் தொழிலாளர் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு முழுவதும் உள்ள பீடி சுற்றும் 7 லட்சம் தொழிலாளர்கள் சம்பளம், பஞ்சப்படி உயர...
தமிழகம்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,தேர்வுகள் 3ம் தேதி முதல் ஆரம்பம்
திருநெல்வேலி:தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடியாக பட்டப் படிப்பு படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 3ம் தேதி முதல் தேர்வுகள் ஆரம்பமாகிறது. தொடர்ந்து அனைத்து இளங்கலை முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு தேர்...
தமிழகம்
மேலப்பாளையம்-பாளை கரையோர சாலைசீரமைத்து விரைவில் மின் விளக்கு வசதி:அமைச்சர் மைதீன்கான் உறுதி
திருநெல்வேலி:மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் முதல் பாளை ஊசி கோபுரம் வரை உள்ள கரையோர சாலைக்கு மின்விளக்குகள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் மைதீன்கான் உறுதி கூறினார்.மேலப்பாளையம் மண்டல தலைவர் மைதீன் தலைமையில் கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் மைதீன்கானை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மேல...
தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் ரத்து:போலி கார்டுகள் பட்டியல் விரைவில் வெளியீடு
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு 2வது மேல்முறையீடு விண்ணப்பங்களை அளிக்க இன்று (30ம் தேதி) கடைசி நாளாகும். வரும் 15ம் தேதிக்கு பிறகு போலி ரேஷன்கார்டுகளின் பட்டியல் வெளியிடப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் வீடு, வீடாக ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் சுமார் 50 ஆயிரம் போ...
தமிழகம்
பொது இடத்தில் புகை பிடித்த 12 பேருக்கு ரூ.1,200 அபராதம்
மோகனூர்: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் நடந்த ஆய்வில், பொது இடங்களில் புகைப்பிடித்த 12 பேருக்கு தலா 100 ரூபாய் வீதம் மொத்தம் 1,200 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மாவட்ட பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சேகர் உத்தரவின்படி, மோகனூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாநிதி த...
தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் 6 மையயங்களில்பிளஸ் 2 உடனடி தேர்வு ஆரம்பம்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ் 2 உடனடி தேர்வு நேற்று ஆரம்பமானது.கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொது தேர்வில் ஒன்று முதல் 3 பாடங்கள் வரை பெயிலானவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று ஆரம்பமானது. மாவட்டத்தில் சேரன்மகாதேவி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நான்குநேர...
தமிழகம்
ரத்த தான முகாம்
திருவெண்ணெய்நல்லூர்: இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் சுப்பராயன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் முருகன், ஆய் வாளர் நடராஜன் முன் னிலை வகித்தனர். விழுப் புரம் அரசு மருத்துவ கல் லூரி டாக்டர் அருட்செல் வன் தலைமையிலான குழுவினர் 25 பேரிடமிருந்து ரத்தம் சேக...
தமிழகம்
மனைப்பட்டா வழங்கக்கோரி வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை
திருச்செங்கோடு: பட்டா வழங்கக் கோரி, இலங்கை தமிழர்கள் மண்டகபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தை 4 மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு அடுத்த மண்டகபாளையம் பாரதி நகரில் இலங்கை தமிழர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. பட்ட...
தமிழகம்
கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவில் திருப்பணிகள் துரிதம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காமாட்சி அம்மன் கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி கமலா நேரு தெருவில் நூற்றாண்டுகளாக ஓட்டு கொட்டகைக்குள் காமாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. தற்போது காமாட்சி அம்மன் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. சிறப்பு பெற்ற ஸ்தபதிகள் குழுவினர் கோவிலை வடிவமைத்து வருக...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்: மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். சி.இ.ஓ., மல்லிகா, கலால் உதவி ஆணையாளர் அனெக்ஸ் லைலா, கோட்ட அலுவலர் பெரியதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணி...
தமிழகம்
குமாரபுரி கோவிலில்2ம் தேதி கும்பாபிஷேகம்
விழுப்புரம்: வளவனூர் அடுத்த குமாரபுரியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி நடக்கிறது.இதையொட்டி இன்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. 1ம் தேதி காலை 2ம் கால யாக சாலை பூஜை, கோபுர ...
தமிழகம்
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் முதலிடம்
ராசிபுரம்: ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் வாரியத் தேர்வில், பல துறைகளில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கடந்த 2010 ஏப்ரல் மாதம் நடந்த வாரியத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் மாநில அளவில் முதலிடம் பெற...
தமிழகம்
பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்குஇலவச 3டி அனிமேஷன் பயிற்சிக்கு அழைப்பு
திருநெல்வேலி:பி.சி, எம்.பி.சி மாணவ, மாணவிகளுக்கு இலவச 3டி அனிமேஷன் பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழகத்தை சேர்ந்த சிறுபான்மையினர் அல்லாத, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த படித்த மாணவ, மாணவிகளுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு பெறக் ...
தமிழகம்
கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் சிங்காரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் ரங்கசாமி முன்னிலை வகித்து பேசினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீஸல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி கோஷம் எ...
தமிழகம்
ஆய்வு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த ஆசிரியர்கள்
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆய்வு கூட்ட நெரிசலில் ஆசிரியர்கள் சிக்கித் தவித்தனர்.திண்டிவனம் தியாகி சண்முகம் பிள்ளை தெருவில் உள்ள கே.டி.ஆர்., திருமண மண்டபத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி பல ஆசிரியர்கள் தவித்தனர். இந்த கூட்டத்திற்கு ...
தமிழகம்
10 மளிகை பொருட்கள் பொட்டலம் ரூ.25 ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம்
திருநெல்வேலி:10 மளிகை பொருட்களை 25 ரூபாய் விலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்று கொள்ளலாம்.தமிழ்நாடு அரசு சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் 10 மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலம் 25 ரூபாய் என்ற விலையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.இதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், கடலை பருப்பு, சீரகம் தலா 5...
தமிழகம்
கோவை செம்மொழி மாநாட்டிற்கு பதிலாகதொழில் நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கலாம்:இந்து தேசிய காங்.,ஆவேசம்
திருநெல்வேலி:கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு பதிலாக புதிய தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று இந்து தேசிய காங்., நிறுவன தலைவர் மதுசூதன பெருமாள் கூறினார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அத்யாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன...
தமிழகம்
காவல்துறை உதவி ஆய்வாளர் பணி: ஜூலை 3-ல் எழுத்துத் தேர்வு
புதுக்கோட்டை : தமிழக காவல் துறையில் மாநிலம் முழுதும் காலியாக உள்ள 1,095 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ​ ​ இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ​ ​ காவல் உதவி ஆய்வாளர் ​(ஆண்,​​ பெண்)​ காலிப்பணியிடங்களுக்கான ​ எழுத்துத் தேர்வுகளி...
தமிழகம்
உதவி இயக்குனரை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரபிரசாத் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் ஊர...
தமிழகம்
மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், வன உரிமைச்சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநிலத் துணை தலைவர் சின்னமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வக...
தமிழகம்
தமிழகத்தில் சிறுபான்மை மாணவ, மாணவிகள்:கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
திருநெல்வேலி:தமிழகத்தில் கல்வி உதவி தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழில்/தொழில் நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
கந்தவர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம்,​​ கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் பெட்ரோல்,​​ கேஸ்,​​ டீசல்,​​ மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ​ ​ விவசாயத்தை,​​ நாட்டை,​​ நீர்வளத்தைப் பாதுகாக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வ...
தமிழகம்
அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றமாநகராட்சி பணியாளர் குழந்தைகளுக்கு பாராட்டு
திருநெல்வேலி:அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற நெல்லை மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.நெல்லை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கம் சார்பில் சர்வதேச பொதுப்பணி தினம் மற்றும் 10ம் வ குப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளு...
தமிழகம்
பெருவளூர் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை
செஞ்சி: பெருவளூர் கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் ஒன்றாக பெருவளூர் ஊராட்சி உள்ளது. இங்...
தமிழகம்
நெல்லை அரசு போக்குவரத்து கழகம்:ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
திருநெல்வேலி:அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.பாளை.வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். வக்கீல். இவர் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு பாய்ன்ட் டூ பாய்ன்ட் அரசு பஸ்சில் ...
தமிழகம்
தவ்கீத் ஜமாஅத் பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் சார்பில் மந்தைவெளியில் பொதுக்கூட்டம் நடந்தது.விழுப்புரம் மேற்கு மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பக்கீர்முகம்மதுஅல்தாபி சிறப்புரை நிகழ்த்தினார். நகர துணைத் தலைவர் உஸ்மான் அலி முன்னிலை வகித்தார்.இதில்,நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கல்
திருக்கோவிலூர்: இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டது.திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அருளப்பன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, இந்து மக்கள் கட...
தமிழகம்
உழவர் மன்றம் திறப்பு விழா
செஞ்சி: தையூர் மற்றும் சொரத் தூரில் உழவர் மன்ற திறப்பு விழா நடந்தது.செஞ்சி தாலுகா சொரத் தூர் மற்றும் தையூர் கிராமங்களில் நபார்டு வங்கியின் அங்கீகாரத்துடன் கூடிய உழவர் மன்றங்கள் திறக்கப்பட்டன. சொரத் தூரில் மகாத்மா காந்தி உழவர் மன்றமும், தையூரில் டாக்டர் அப்துல் கலாம் உழவர் மன்றமும் துவக்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு சங்கங...
தமிழகம்
பாவூர்சத்திரத்தில் திமுக, காங்., பிரதிநிதிகள் அதிமுகவில் இணைந்தனர்.
பாவூர்சத்திரம்:கல்லூரணியில் நடந்த அதிமுக விழாவில் திமுக, காங்., கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக நெல்லை மாவட்ட அவைத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில் அதிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நெல்லை மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான அண்ணாமலை தலைமை வகி...
தமிழகம்
வி.ஆர்.எஸ்., கல்லூரியில்கவுன்சிலிங் பயிற்சி முகாம்
திருவெண்ணெய்நல்லூர்: அரசூர் வி.ஆர்.எஸ்., கல்லூரி பேராசிரியர்களுக்கு கவுன்சிலிங் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரியின் முதன்மை செயலாக்க அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் அன்பழகன், புல தலைவர் குருமணி முன்னிலை வகித்தனர். புதுச்சேரி பல்கலைக்கழக அகாடமி உதவி பேராசிரியர் ராமலிங்கம், உளவியல் துறை பேராசிரியர் ரங்க...
தமிழகம்
கடையநல்லூர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
தென்காசி:கடையநல்லூர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு லயன்ஸ் சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் செல்லையா அறிக்கை வாசித்தார். லயன்ஸ் சங்க மாவட்ட ...
தமிழகம்
இறைச்சி கடைகளை மாற்றசன்மார்க்க சங்கம் கோரிக்கை
செஞ்சி: செஞ்சியில் இறைச்சி கடைகளை மீன் மார்க்கெட் பகுதிக்கு மாற்ற சன்மார்க்க சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.செஞ்சியில் நகர சமரச சுத்த சன்மார்க்க சங்க கூட்டம் நடந்தது. நகர செயலாளர் தணிகாசலம் தலைமை தாங்கினார். முனுசாமி, சர்தார் சிங், ரங்க நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ஜனா...
தமிழகம்
ஆர்.பி.பள்ளி மாணவர்களுக்குகல்வி உதவி தொகை வழங்கல்
தென்காசி:இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரை இழந்த மாற்று திறனுடைய மற்றும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் 140 பேருக்கு கல்வி உதவி தொகையாக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சென்னை தொழிலதிபர் சண்முகம் வ...
தமிழகம்
பாப்பனப்பட்டில் சட்ட உதவி முகாம்
விழுப்புரம்: பாப்பனப்பட்டில் இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.விழுப்புரம் அருகே உள்ள பாப்பனப்பட்டு கிராமத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் மற்றும் சட்ட உதவி முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் அம்சவள்ளி கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். விழுப்புரம் தலைமைக் குற்றத்துறை நடுவர் மான்விழி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து புகா...
தமிழகம்
மாணவர்களுக்கு வரவேற்பு
உடுமலை: உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில், நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு  அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்லூரி முதல்வர் ராமன் தலைமை வகித் தார். கல்லூரிச் செயலர் வித்யாசாகர் முன் னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா வரவேற்றார்.  முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்க...
தமிழகம்
பொது நூலகத்தில் முப்பெரும் விழா
தென்காசி:தென்காசி அரசு பொது நூலகத்தில் முப்பெரும் விழா நடந்தது.தென்காசி வ.உ.சி.நினைவு அரசு பொது நூலகத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, நூலக புரவலர்களாக இணைந்தவர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா, புதிய புரவலர் சேர்ப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது....
தமிழகம்
வளவனூரில் இலவச சிறப்புதியான முகாம்
விழுப்புரம்: வளவனூர் பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் இலவச சிறப்பு தியான முகாம் துவங்கியது.இம் முகாமில் மன அழுத்தம், வாழும் கலை, பிராணம்(மூச்சு பயிற்சி) உள்ளிட்ட தியான முறைகள் கற்று தரப்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 8.30 மணி வரையிலும், ஞாயிற்று கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு தியான முகாம் நடக...
தமிழகம்
குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த மிதமான நீரிலும் உற்சாக குளியல் நடத்திய சுற்றுலா பயணிகள்.
குற்றாலம்:குற்றால அருவிகளில் தண்ணீர் தண்ணீர் குறைந்தது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது.பருவமழை சரியாக பெய்யாததால் குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. குற்றாலம் மெயின் அருவியில் சுமாராக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் 5 கிளைகளிலும் விழுந்த நீரில் ...
தமிழகம்
ரேஷன் கடை ஊழியர் மாயம்
தென்காசி:தென்காசி அருகே திடீரென மாயமான ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசி அருகே வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் நெல்லையப்பன் (51). இவர் நயினாரகரத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி ரேஷன் பொருட்களின் அளவு குறைந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் கண்டிப்பார்கள் என நினை...
தமிழகம்
மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன்: அதிர்ச்சியில் மாமனாரும் உயிரிழந்தார்
மடத்துக்குளம்: உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக மாமியாரை வெட்டிக்கொன்றார் மருமகன். மனைவி கொலை செய்யப்பட்டதை அறிந்த கணவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி. இவரது மகள் பத்மாவதி(30). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராஜனுக்கும்(35), கடந்த 95ம் ஆண்டு திருமண...
தமிழகம்
செஞ்சி பெரியகரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது
செஞ்சி: செஞ்சி பெரியகரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.செஞ்சி பெரியகரம் ராஜாதேசிங்கு அரசு பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த 27ம் தேதி திடீரென பழுதானது. இதனால் இப்பகுதி வீடுகளுக்கு அன்று பகல் நீண்ட நேரம் மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள டிரான்ஸ்பா...
தமிழகம்
மலைவாழ் மக்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
உடுமலை: வன உரிமை சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் உடுமலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுசூதனன் தலைமை வகித்தார். மலைவாழ் சங்க தலைவர் செல்வன், துணை தலைவர் தாடகன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், 2006 ம் ஆண்டு வன உரிமை சட...
தமிழகம்
கள்ளக்குறிச்சி அரிமா சங்கத்தினர் மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டுகள் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அரிமா சங்கம், டாக்டர் ஆர்.கே. எஸ்., கல்லூரி லியோ சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜெகதீசன், சத்தீஷ்குமார் மற் றும் ...
தமிழகம்
மலைவாழ் மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வலியுறுத்தல்
உடுமலை: மலை வாழ் மக்களுக்கு அரசு உத்தரவின் அடிப்படையில் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலையில், திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க  கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார்.  செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். இதில், மலை வாழ் ம...
தமிழகம்
போதை ஒழிப்பு பிரசாரம்
விழுப்புரம்: மாவட்ட சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த பிரசாரத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் பாபு செல்வதுரை தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் கனகராஜ் வரவேற்றார். தமிழ் நாடு ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதரன் தலைமையில் தொண்டு...
தமிழகம்
சுதர்சனம் மறைவுக்கு அஞ்சலி
உடுமலை: உடுமலை நகர காங்., சார்பில், மறைந்த சட்டசபை காங்., தலைவர் எம்.எல்.ஏ., சுதர்சனத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் குமாரசாமி, ரத்தினவேல், சாஸ்திரி சீனிவாசன், சிவக்கனிசுபாஷ் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உடுமலை சட்டமன்ற இளைஞர் காங்., தலைவர் சரவணக்குமார், மடத்துக்க...
தமிழகம்
விழுப்புரம் அரிமா சங்கத்தினர்மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
விழுப்புரம்: விழுப்புரம் அரிமா சங் கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் சங்க தலைவர் குபேரன், அரிவையர் சங்கத் தலைவி மேரிஆப்ரகாம், லியோ சங்கத் தலைவர் திலீப்குமார் ஆகியோருக்கு முன் னாள் மாவட்ட ஆளுனர் செல்வகாந்தி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.நிகழ்ச்சி...
தமிழகம்
கழிவு நீர் குளமாக மாறியுள்ள ரோடு: கண்டு கொள்ளாத நகராட்சி
உடுமலை: ரோட்டை ஆக்கிரமித்துள்ள கழிவுநீரை நகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை - தாராபுரம் ரோட்டில் சென்டர் மீடியன் அருகே தனியார் லாட்ஜ் மற்றும் பிற தனியார் கடைகள் உள்ளன. மக்கள் நெரிசல் மிகுந்த பஸ் ஸ்டாப் அருகே, போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில் கடந்த சில நாட்களாக சாக்கட...
தமிழகம்
செஞ்சி சாரதா பள்ளியில் இலவச கண் பரிசோதனை
செஞ்சி: செஞ்சி சாரதா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.அரிமா சங்க தலைவர் முருகன் தலைமை தாங் கினார். ஆலோசகர்கள் கண்ணன், மணி வண்ணன், பரமசிவம், சுப்ரமணியன், கணேசன் முன்னிலை வகித் தனர். பாரத் கேஸ் நிர்வாகி சொர் ணலதா வர வேற்றார். பாரத் பெட் ரோலியம் மண்டல ஒருங் கிணைப் பாளர் கோபிகிருஷ்ணன், துணை...
தமிழகம்
சேம்பர் அனுமதியை பயன்படுத்தி சூளைக்கு மண் எடுக்கும் லாரிகள்
மடத்துக்குளம்: சேம்பருக்கு வழங்கப்பட்ட பர்மிட்டை பயன்படுத்தி கட்டை சூளைகளுக்கு மண் எடுத்து வரும் லாரிகள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடத்தூர் பகுதி விவசாய நிலங்களில் இருந்து சேம்பருக்கு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாய நிலங்களில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் மண்எடுக்க கூடாது எனவும்...
தமிழகம்
கால்நடைகளுக்குசிகிச்சை முகாம்
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த பெத்தானூரில் நில வள, நீர் வள திட்டம் சார்பில் கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம் நடந்தது.சின்னசேலம் உதவி கால்நடை மருத்துவர் ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வாசுதேவன், ஏரிப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தொட்டியம் இளங்கலை கால்நடை உதவி மருத்துவர் பாண்டியன் ...
தமிழகம்
மகளிர் குழுவுக்கு சுயதொழில் பயிற்சி
உடுமலை: உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தர மதிப்பீடு பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆயத்த ஆடை தயாரித்தல் பயிற்சி வழங்கபட்டது. உடுமலை வட்டாரத்தில் 2009-10ம் ஆண்டு பொருளாதார கடன் பெற தர மதிப்பீட்டில் எட்டு சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்களுக்கு ஒன்றிய அலுவலக சுய உதவிக்குழு பயிற்சி கூடத்...
தமிழகம்
ரயில் தண்டவாளத்தில் மீண்டும் கற்கள் : ஊத்துக்குளி அருகே பரபரப்பு
திருப்பூர்: ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தண்டவாளத்தில் இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரயில்கள் மோதியது; நேற்று முன்தினம் இரவு நடந்த இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன் ரயில்வே பாலம் உள்ளது; நேற்று முன்தினம் இரவு இப்பாலத்துக்கு...
தமிழகம்
மக்கள் நலப்பணியாளர்கள் ஜூலை 2ல் ஆர்ப்பாட்டம்
உடுமலை: மக்கள் நலப்பணியாளர்கள் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு முன்பு ஜூலை 2ம் தேதி ஆர்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.உடுமலையில், திருப்பூர் மாவட்ட மக்கள் நலப்பணியாளர் சங்க மாவட்டச் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் குனராஜ் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மோகன சுந்...
தமிழகம்
நல்லாற்றில் சாயக்கழிவு: பொதுமக்கள் புகார்
திருப்பூர்: அங்கேரிபாளையம் பகுதியில் நல்லாற்றில் சாயக்கழிவு நீர் தேங்கியிருப்பதால், அருகில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்று தண்ணீர் பல்வேறு கலர்களில் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்பூர், 11 செட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது அங்கேரிபாளையம். இப்பகுதியில் ஆதிதிராவிடர் காலனியில் 100 வீடுகள், கிழக்க...
தமிழகம்
அடுத்ததாக, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியா? சுமைக்கு மேல் சுமை
திருப்பூர்: ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை ஆசிரியர்கள் மேற் கொண்டு வருகின்றனர். இப் பணி, ஜூலை 15ம் தேதி வரை நீடிக்கும். இந்நிலையில், நாளை முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தரப் பட்டுள்ள இரு வேறு பணியால், சுமை அதிகரிப்பதோடு, மாணவர்களுக்கு கல்...
தமிழகம்
குழந்தைகள் மீட்பு
திருப்பூர்: படிக்க வைப்பதாக கூறி, ஸ்பின்னிங் மில்லில் வேலைக்கு சேர்க்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர்.முருகம்பாளையத்தில் வசித்து வந்த துரைராஜ், பாக்கியலட்சுமி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தை கவனிக்காமல் துரைராஜ் விட்டுவிட்டார்.இதனால், மனம் உடைந்த பாக்கியலட்சுமி வீட்டை விட்...
தமிழகம்
பரிசளிப்பு விழா
திருப்பூர்: விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் பிரிஸம் கம்ப்யூட்டர் சென்டர் சார்பில் ஐம்பெரும் விழா, மெஜஸ்டிக் கல்வி வளாகத்தில் நடந்தது. கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த 100 பேருக்கு சான்றிதழ், என்.ஆர்.கே.,புரம் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 30 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. 2009-10ம் கல்வ...
தமிழகம்
திருப்பணி துவக்க விழா
அவிநாசி: அவிநாசி அருகே கருமாபாளையத்தில் கோவில் திருப்பணி துவக்க விழா நடந்தது.கருமாபாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவுற்றது.இதையடுத்து கோவிலில் மீண்டும் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்ய திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.திருப்பணி துவக்க விழா கோவில் வளாகத்தில் நடந்தது....
தமிழகம்
குப்பை தொட்டியில்லை: நாறுகிறது, நால் ரோடு
பல்லடம்: பல்லடம் நால்ரோட்டில் குப்பைத்தொட்டி வசதி இல்லாததால், அருகில் உள்ள பள்ளத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம், பஸ் பயணிகளை மூக்கை பிடிக்கச் செய்கிறது. பல்லடம் நால்ரோடு பொள்ளாச்சி ரோடுபிரிவில் உள்ள ஸ்டாப்பில், பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், செஞ்சேரிமலை, உடுமலை பகுதிகளுக்குச் ...
தமிழகம்
அன்னதானம்
திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.எட்டாவது வார்டு தி.மு.க., செயலாளர் ஜாபர்வல்தாரீஸ் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் மணி கொடியேற்றினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். இளைஞரணி த...
தமிழகம்
மகளிர் குழுவுக்கு தொழில் பயிற்சி
திருப்பூர்: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஆயத்த ஆடை மற்றும் கைத்தறித்தொழில் தொடர்பாக பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற குழுவினருக்கு மானியத்துடன் தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், 2009-10ம் ஆண்டுக்கு, 84 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஆயத்த ஆடை தயாரி...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
அவிநாசி: சின்னேரிபாளையம் ஊராட்சி, வலையபாளையத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.கிராம கல்விக்குழு உறுப்பினர் வேலுசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தமிழகம்
நிலக்கடலை வரத்து குறைகிறது
அவிநாசி: சேவூரில் நடந்து வரும் நிலக்கடலை ஏலத்துக்கு வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.சேவூர், புளியம்பட்டி ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை நிலக்கடலை ஏலம் நடக்கும். நிலக்கடலை பருவம் முடிந்து விட்டதால், கடந்த சில வாரங்களாக வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வார ஏலத்துக்கு...
தமிழகம்
புது அங்கன்வாடி கட்டநல்லூரில் பரிசீலனை
திருப்பூர்: நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையத்தில் புதிதாக அங்கன்வாடி கட்ட, நகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.நல்லூர் ஐந்தாவது வார்டில் மருதப்ப நகரில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் அம்மையத்தை, குப்பாண்டம்பாளையத்தில் புதிய கட்டடம் ஏற்படுத்தி, மாற்றம் செய்ய வேண்டும்...
தமிழகம்
ஜவுளி உற்பத்தியை நிறுத்த முடிவு
பல்லடம்: ஜவுளிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கும் வரை நூல் கொள்முதல் செய்வதை, முதல்கட்டமாக 10 நாட்களுக்கு நிறுத்தி, ஜவுளி உற்பத்தியை நிறுத்த, பல்லடம் தாலுகா  விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.பல்லடம் தாலுகா விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்க கூட்டம், அதன் தலைவர் சின்னசாமி தலைமையில் கொங்கு வேளா...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
திருப்பூர்: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீடு திட்டத்தின் கீழ் ஸ்ரீகுமரன் மருத்துவமனை மற்றும் தாய் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம், பொன்னி நர்சரி, பிரைமரி பள்ளியில் நடந்தது. குமரன் மருத்துவமனை தலைவர் செந்தில் குமரன், தாய் அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தனர்.காது, மூக்கு, தொண்டை, கர்ப்பப்பை உள்ளி...
தமிழகம்
நோட்டு, புத்தகம் வழங்கும் விழா
திருப்பூர்: பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடந்தது.தமிழ்நாடு பாட்டாளி அமைப்புசாரா தொழிலாளர் சங்க நிர்வாகி தங்கவேல் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் படையாச்சி முன்னேற்ற சங்கம், பாட்டாளி அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் மற்றும் மாகாளியம்மன் அறக்கட்டளை சார்பில் இலவச நோட்டு, பு...
தமிழகம்
பட்டமளிப்பு விழா
திருப்பூர்: திருப்பூர், செஞ்சுரி பவுண்டேசன் கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது; தாளாளர் சக்திதேவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.செஞ்சுரி பவுண்டேசன் கல்வியியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் வர்கீஸ் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவியர் வாழ்வில் வெற்றி பெறுவது ...
தமிழகம்
ரத்ததான முகாம்
திருப்பூர்; முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 13வது ரத்த தான முகாம் நடந்தது; கே.எஸ்.சி., பள்ளி உதவி தலைமையாசிரியர் தங்கவேல் தலைமை வகித்தார். முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். கஜலட்சுமி தியேட்டர் உரிமையாளர் சாமிநாதன், முகாமை துவக்கி வைத்தார். 150 பேர் பங்கேற்றன...
தமிழகம்
முருங்கை காய் விலை உயர்வு : மகிழ்ச்சியில் விவசாயிகள்
பொங்கலூர்: முருங்கை காய் விலை உயர்வால்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள், முருங்கையை தனியாக பயிர் செய்யாமல், ஊடுபயிராகவே பயிரிடுகின்றனர். இதற்கு குறைவான தண்ணீர் இருந்தால் போதுமானது. மாதக்கணக்கில் தண்ணீர் இல்லாமல் போனாலும், மரம் பட்டுப்போகாது. மழை பெய்ததும் மீண...
தமிழகம்
வரைபட புள்ளிவிபர அறிக்கை தயாரிப்பு
திருப்பூர்: வரும் 2011ல் மாநகராட்சி விரிவடைவதற்கேற்ப, வார்டு பிரிப்பது தொடர் பான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அதற் காக, ஊராட்சிகளில் வரைபடத்துடன் கூடிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.திருப்பூர் மாநகராட்சியுடன் எட்டு ஊராட்சிகளை இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. அதற்காக, ஊராட்சிகளின் மொ...
தமிழகம்
இன்ஜி., பட்டப்படிப்பு பதிவுமூப்பு: இணைய தளத்தில் சரிபார்க்கலாம்
திருப்பூர்: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் பதிவு செய்தவர்கள், இணைய தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிப்ளமோ இன் சி...
தமிழகம்
வாழும் கலை அமைப்பிடம் பணம் கேட்டு மிரட்டல்
பெங்களூரூ: பெங்களூரூவை தலைமையிடமாக கொண்டு வாழும் அமைப்பு நடந்து வருகிறது.இதனை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்நிலையில் இவ்வமைப்பிற்கு ஒரு மர்ம நபர் போன் செய்து 42 கோடி ரூபாய் அளவிற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளான் இது குறித்து அமைப்பின் நிர்வ...
தமிழகம்
தெற்கு ரயில்வே கால அட்டவணை இன்று வெளியீடு
சென்னை: தெற்கு ரயில்வேயின் இந்த ஆண்டிற்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. சென்னை தெற்கு ரயில்வே கோட்டத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் பொது மேலாளர் தீபக் கிரிசன் வெளியிடுகிறார். மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் குறித்த தகவல்களும் உள்ள மாற்றி அமைக்கப்பட்ட ரயில்களின் எண்கள் மற்றும் நேரங்கள் குறித்தும் ...
தமிழகம்
ஓடும் வேனில் தீ பிடித்தது
மேலூர்: விருதுநகரில் இருந்து மேலூர் வழியாக நான்கு வழிச்சாலையில் காலியான ஈட்சர் வேன் ஒன்று சென்றது. இதில் மின் கசிவு காரணமாக வேனின் முன்புறத்தில் தீப்பற்றியது. வேன் டிரைவர் மனோகர்(41) கீழே குதித்து தப்பினார். மேலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வேனின் முன் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. மேலூர் போலீசார் விசாரித...
தமிழகம்
422 பேருக்கு எம்.பி.பி.எஸ்.,சீட்
சென்னை: மருத்துவக் கவுனசிலிங்கில் 423 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் 426 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்..3 பேர் வரவில்லை. கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட 423 மாணவர்களில் ஒருவர் மட்டும் பி.டி.எஸ் படிப்பை தேர்வு செய்தார...
தமிழகம்
மேலவளவு நினைவு தினம் : போலீசார் குவிப்பு
மேலூர்: மேலவளவு படுகொலை சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. திருமாவளவன் உட்பட பல்வேறு கட்சியினர் மேலவளவில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதற்காக ஏ.டி.எஸ்.பி., தங்கராஜ் தலைமையில் மேலூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக நான்கு டி.எஸ்.பி.,கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 61 எஸ்.ஐ.,கள் உட்பட மொத்தம் ...
இந்தியா
மருத்துவ நுழைவுத்தேர்வு: நாடு முழுவதும் ஒரே தேர்வு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவ கல்லூரிகளில் சேர ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் இது நடைமுறைக்கு வருகிறது.பாடத்திட்டம் மற்றவைகுறித்து சி.பி.எஸ்.இ., வாரியத்தை அணுக மருத்துவ கவுன்சிலங்கின் கவர்னர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகம்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல்
மதுரை: சோழவந்தான் தனியார் ஆஸ்பத்திரியில் 50 வயது ஆணின் உடல்நிலை மோசமாக உள்ளது என உறவினர்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர்மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கூறினர்.ஆனால் 108 ஊழியர்கள் வ...
தமிழகம்
பழநி உண்டியல் வசூல் ரூ.86 லட்சத்தை எட்டியது
பழநி; பழநி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது. அதில்,ரொக்கம் 85 லட்சத்து 82 ஆயிரத்து 798 ரூபாய். தங்கம் 720 கிராம். வெள்ளி 9,562 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் கரன்சிகள் 631. தங்கத்தினால் ஆன 48 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் ஒன்றும், 362 கிராம் கிராம் எடையுள்ள வெள்ளி பாதங்கள் ...
தமிழகம்
உயரமான தேசிய கொடி கம்பம்
மதுரை:திருவள்ளூர் ஆயுதப்படை மைதானத்தில் தமிழகத்திலேயே மிக நீளமான 75 அடி உயர தேசியக் கொடி கம்பம் உள்ளது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 65 அடி உயர தேசியக்கொடி கம்பம் அமைக்கப் பட்டுள்ளது. இது தமிழகத்தின் 2-வது உயரமான கம்பமாகும். இதில் போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தேசியக் கொடி ஏற்றினார்.
தமிழகம்
தாண்டிக்குடியில் பலாப்பழ சீசன்
தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, கொடலங்காடு, அரசன்கொடை, பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழங்கள் தற்போது அதிக அளவில் விளைந்துள்ளது. பலாவில் தற்போது முட்டம் வரிக்காய், சிங்கப்பூர், பண்ருட்டி, பேச்சிப்பாறை-1, பாலூர்-1, 2 உள்ளிட்ட ரகங்க...
தமிழகம்
ரயிலில் பெண் பயணியிடம் 90 சவரன் நகை கொள்ளை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் சேவியர் ராஜ்; இவரது மனைவி பிரமிஷா. கடந்த வாரம் இருவரும், சென்னையில் நடந்த உறவினர் இல்லத் திருமணத்திற்குச் சென்றனர்.அங்கிருந்து 25ம் தேதி, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நாகர்கோவில் வந்தனர்.வீட்டுக்குச் சென்று பார்த்த போது, 90...
தமிழகம்
பணியில் இருந்த ராணுவ வீரர் திடீர் மரணம்
வாடிப்பட்டி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் திடீரென மரணமடைந்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் மகன் சரவணபாபு (வயது 31 ), இவர் 1998ல் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். காஷ்மீரில் அதிக காலம் பணியாற்றிய அவர் சமீபத்தில் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு...
இந்தியா
5 மாநிலங்களில் நக்சலைட்டுகள் பந்த்
ராஞ்சி : ஜார்கண்ட், மேற்குவங்கம், ஒரிசா, பீகார், சட்டீஸ்கர், உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மகாராஷ்டிர மாநிலத்தில் காட்சிரோலி ,பாந்திரா, மத்தியபிரதேசத்தில் சந்திராபூர், பாலாகாட் ஆகிய மாவட்டங்களிலும் பந்த்துக்கு நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
General
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 76 அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்தது. நியுயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 13 சென்டுகள் குறைந்து 75.81 அமெரிக்க டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 23 சென்டுகள் குறைந்து 75.21 அமெரிக்க டாலரா...
இந்தியா
நக்சல் தாக்‌குதலுக்கு சட்டீஸ்கர் முதல்வர் கண்டனம்
ராய்ப்பூர் : சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், நாராயணபூர் மாவட்டம், தோராய் பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 26 வீரர்கள் இந்த தாக்குதலில் பலியானார்கள். நக்சலைட்டுகள் கோழைகள் போல் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறிய ராமன்சிங், சி.ஆர்.பி.எப்., வீர...
இந்தியா
அமர்நாத் யாத்திரை தொடங்கியது
ஸ்ரீநகர் : அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது. முதல் கட்டமாக 500 யாத்திரிகள் அமர்நாத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா
ஜம்முவில் தொடரும் பதட்டம்
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கிறது. சோபூர், அனந்தநாக், பாரமுல்லா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
General
நேபாள விமான நிலையத்தில் நாகலாந்து உள்துறை அமைச்சர் கைது
காத்மாண்டு : நாகலாந்து உள்துறை அமைச்சர் இம்காங் இம்சென் நேபாள தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அமைச்சரின் பெட்டியில் இந்திய ரூபாய் இருந்தது. இந்தியாவின் 500 ரூபாய் நோட்டுகள் , நேபாலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை உள்ள நிலையில், கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டுகளுடன் அமைச்சர் கைது செய்யப்பட்டத...
தமிழகம்
ஆத்தூரில் ஆட்டோ தொழிற்சங்கம் ஸ்டிரைக்
ஆத்தூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆத்தூரில் ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஸ்டிரைக் நடைபெறுகிறது. மாட்டு வண்டி மீது ஆட்டோவை ஏற்றி , மாடுகளுக்கு பதிலாக ஆட்டோ டிரைவர்கள‌ே வண்டியை இழுத்துச் சென்று நாதன ‌போராட்டம் நடத்தினர்.
தமிழகம்
கோவையில் கமிஷனர் அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை
கோவை : கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர். கோவையில் வக்கீலை தாக்கிய போலீஸ்காரரை கைது செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகம்
கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு
கொடைக்கானல் : மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டைச் சேர்ந்தவர் விஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலிலுள்ள பள்ளியில் தங்கிப்...
இந்தியா
அமர்நாத் யாத்திரை தற்‌காலிகமாக நிறுத்திவைப்பு
ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால், உத்தம்பூரில் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாலையில் யாத்திரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
General
500 ரூபாய் கட்டுக்களுடன் உள்துறை அமைச்சர் கைது ; நேபாள போலீசார் உட்கார வைத்தனர்
காத்மாண்டு : நேபாளத்தில் 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் கட்டுக்களுடன் நாகலாந்து உள்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டார். நாகாலந்து உள்துறை அமைச்சர் இம்காங் எல் இம்சன். இவர் யார் என்று தன்னை நிரூபிக்க முடியவில்லை . நேபாள நாட்டுக்கு சென்று இந்தியா திரும்பும் போது இவர் போலீசில் சிக்கியுள்ளார். நாகலாந்து உள்துறை அமைச்சர் நே...
தமிழகம்
திருவாரூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : ஜெ., அறிவிப்பு
சென்னை : திருவாரூரில், நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்டசியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை தட்டிக் கேட்காத தி.மு.க. அரசைக் கண்டித்து திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (1.7.2010...
தமிழகம்
திருப்பூரில் ‌காவல் நிலையம் அருகே பெண் தற்கொலை முயற்சி
திருப்பூர் : திருப்பூரில் காவல் நிலையம் அருகே பெண் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் கலா. இவர் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் கொடுக்க வந்தார். குடும்பத் தகராறு காரணமாக அவர் ஸ்‌டேஷன் அருகிலேயே தீக்குளிக்க முயன்றார். சுற்றி இருந்தவர்கள் தடுத்து நிறுத்...
தமிழகம்
உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் லஞ்ச ஒழிப்பு சோதனை
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் அரசுப் பள்ளியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை அரசுப் பெண்கள் பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து அங்கு ‌லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டள்ளனர்.
தமிழகம்
கோவை மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
கோவை : கோவை மத்திய சிறையில் 50 கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கோவை மத்திய சிறைக் கைதிகள் 200 பேர் இன்று காலையில் உணவு தரமற்றதாக இருப்பதாக கூறியும் , சிறைக்குள் பீடி வழங்க வேண்டும் என கோரியும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் 150 கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்....