category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
குடிநீர் கோரி பெண்கள் மறியல்
சேலம்: சேலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீராணம் மெயின் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியில் ஒரு மாதமாக மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. பொதுமக்கள் குடிநீர் கேட்டு பல ம...
தமிழகம்
அரவாணிகள் 6 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கல்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் அரவாணிகள் 6 பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் அர வாணிகள் 6 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார். பொதுமக்களிடம் இருந்து ...
தமிழகம்
காமதேனு அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
விழுப்புரம் : விழுப்புரம் காமதேனு அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர். விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்த விழாவில் சங்கத்தின் 2010-2011ம் ஆண்டிற்கான புதிய தலைவராக தன்ராஜ், செயலாளர் நடராஜன், பொருளாளர் சேகர் மற்றும் நிர்வாகிகளுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் தணிகாசலம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதுச் ...
தமிழகம்
கருங்கல்லூரில் மோதல்மேலும் ஒருவர் கைது
மேட்டூர்: கருங்கல்லூரில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக மேலும் ஒரு வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.கருங்கல்லூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், ஏப்ரல் 16ம் தேதி நடந்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக கொளத்தூர் போலீஸார் 758 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அசம்பாவிதம் தடுக்க மூன்று மாதங்களாக கருங்கல்லூரில் போலீஸ் பாதுகாப்ப...
தமிழகம்
சங்கராபுரம் ஜமாபந்தியில் ரூ.3.55 லட்சம் அரசு உதவிகள்
சங்கராபுரம் : சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு தாசில்தார் ஜெயகுமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில் தார் வைகுண் டவரதன், கல்வராயன்மலை தனி தாசில்தார் மூர்த்தி, மண் டல துணை தாசில்தார் விஜயா முன் னிலை வகித்தனர். மண்டல துணை தாசில் த...
தமிழகம்
வள்ளலார் மன்றத்தில் ஆனி மாத பூச விழா
சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆனி மாத பூச விழா நடந்தது. சங்கராபுரம் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் திருச்சபையில் நடந்த விழாவிற்கு மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துகருப்பன், வைத்திலிங்கம், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா மாவட்ட தலைவர் வரதராஜன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் வடிவேல...
தமிழகம்
பஞ்., தலைவர்கள் கூட்டம்
செஞ்சி : வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணி குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான விளக்க கூட்டம் நடந்தது. வல்லம் ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி மைங்களின் பணிகள், குழந்தை வளர்ச்சி மற்றும் மகளீருக்கான அரசு திட்டங்கள் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர...
தமிழகம்
ரோட்டரி சங்க விழா சங்கராபுரம்
சங்கராபுரம் : ரோட்டரி சங்கம் சார்பில் அவார்ட் நைட் விழா நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி மண்ட பத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் சண்முகம், முத்துகருப்பன், அருணாசலம், கோபால், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி அறக்கட்டளைக்கு பணம் கொடுத்தவர...
தமிழகம்
வாழை இலை கட்டுகளின் விலை வீழச்சி : கவலையில் விவசாயிகள்
மானாமதுரை: மானாமதுரையில் வியாபாரிகள் வாழை இலை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுவதால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். இங்கு திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மாரநாடு, அன்னியனேந்தல், முத்தனேந்தல் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பல ஆண்டுகளாக வாழை பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு வீசிய சூறாவளிக்காற்றால் ...
தமிழகம்
உபகரணங்கள் வழங்கும் விழா
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பி.டி.ஒ., அலுவலகத்தில் மாற் றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சுந்தரம் முன்னிலை வகித்தனர். சேலம் ஆர்.பி., தொண்டு நிறு வனத்தின் சார்பில் 3 சக்கர சைக்கிள்களை 50 பேருக்கு ஒன்றிய சேர்மன் வக்கீல் வெங் கடாசலம் வழ...
தமிழகம்
புதிய மின்மாற்றி துவக்க விழா
விழுப்புரம் : சாலையம்பாளையம் கிராமத்தில் புதிய மின் மாற்றி துவக்க விழா நடந்தது. வளவனூர் நகர் பிரிவை சேர்ந்த சாலையம் பாளை யத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப் பட்டது. இதனை உதவி செயற் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி துவக்கி வைத்தார். இளமின் பொறியாளர் வசந்தகுமார், ராஜாராம் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம்
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் 20 பேர் நியமனம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் கூடுதலாக 20 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராமம்) என்ற இரண்டு பதவிகள் உள்ளன. தேசிய ஊரக வேலையளிப்பு திட்டம் செயல்பட துவங்கியபோது ஒவ்வொரு ஒன்றியத்...
தமிழகம்
வீரணாமூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
செஞ்சி : வல்லம் ஒன்றியம் வீரணாமூர் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் மகேஸ்வரி அரிதாஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரியம்மாள் ராஜ்குமார் முன் னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஞானபிரகாசம் வரவேற்றார். டாக்டர்கள் சண்முகம், அர்ச்சனா, ரகுநாத், வெங்ககிடேசன் ஆகியோர் சிகிச்...
தமிழகம்
குறைந்த மின் அழுத்த பிரச்னை கிராமத்தினர் 10 ஆண்டுகள் பரிதவிப்பு
காளையார்கோவில்: குறைந்த மின்அழுத்த பிரச்னையால், காளையார்கோவில் அருகே சாக்கூர் கிராமத்தினர், அவதிப்படுகின்றனர். இங்கு 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து, சாக்கூர், கொத்தமங்கலம், அஞ்சவயலுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதில், 400 க்கும் மேற்பட்ட வீட்டு, விவசாய இணைப்புகள் உள்ளன. இங்கு கடப்த 10 ஆண்டுகளாக ...
தமிழகம்
கஞ்சா வியாபாரிகுண்டாஸில் கைது
சேலம்: சேலத்தில் கஞ்சா வியாபாரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.ராசிபுரம் காட்டுநாய்க்கன்பட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி மூர்த்தி(45). அவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மூர்த்தி கஞ்சா விற்பனை செய...
தமிழகம்
புதுபாலப்பட்டில் மாணவர்கள் பேரணி
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்வராயன் மலையை சேர்ந்த புதுபாலப்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிராம கல்வி குழு தலைவர் வெங்கடேசன் பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் வரவேற்றார...
தமிழகம்
காரைக்குடியில் ரேஷன் அரிசி மூடைகள் அதிகாரிகள் துணையுடன் அரங்கேற்றம்கடத்தல்
காரைக்குடி: காரைக்குடியில் இருந்து கேரளாவிற்கு, அதிகாரிகள் உடந்தையுடன் ரேஷன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதால், கார்டுதாரர்கள் அரிசி கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர். காரைக்குடி தாலுகாவில், 120க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் அரிசி, சர்க்கரை, மளிகை பொருட்களை வாங்க...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (1ம் தேதி) வாக்காளர் சுருக்க திருத்தப்பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்காளர் சுருக்க திருத்தப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள் வது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் பழனிசாமி பேசி...
தமிழகம்
கருத்தாய்வு மையக் கூட்டம்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வட்டார வளமையத்தின் சார்பில் கருத்தாய்வு மையக் கூட்டம் நடந்தது. திருப்பாலப்பந்தல் மற்றும் திருக்கோவிலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் கருத்தாய்வு மையக் கூட்டம் நடந்தது. மேற்பார்வையாளர் புவனேசுவரி கூட்டத்தை துவக்கி வைத்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அருளப்பன், க...
தமிழகம்
சாக்கோட்டையில் தேரோட்டம்
காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஜூன் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அன்று மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரம் முடிந்து வீ...
தமிழகம்
உருது பள்ளி ஆசிரியர் கூட்டம்
தியாகதுருகம் : தமிழ்நாடு உருது பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய உருது பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அப்துல்மஜ்ஹர் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை வகித்தார். பல்வேறு மாவட்டத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செம்மொழி மாநாடு வெற்றிபெற ...
தமிழகம்
விழுப்புரத்தில் பயிற்சி முகாம்
விழுப்புரம் : சாலை பாதுகாப்பு குழுவினருக்கு விழுப்புரத்தில் பயிற்சி முகாம் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களிடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் 25 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் கொண்ட சாலைப் பாதுகாப்புக்குழு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவினருக்கான பயிற்சி முகாம் நேற்று ...
தமிழகம்
மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம் : அரியலூர் வட்டம் ஒடியந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் ஆய்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரியலூர் வட்டம் ஒடியந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் மற்றும் பாசன நீர் ஆய் வின் முக்கியத்துவம் மற் றும் மண் ஆய்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழுப்புரம் வேளாண்மை அலுவலர் செல்வபாண்டியன் மண் ஆ...
தமிழகம்
மறுமலர்ச்சி வன்னியர் சங்க புதிய நிர்வாகிகள் நியமனம்
விக்கிரவாண்டி : மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட மறுமலர்ச்சி வன்னியர் சங்க தலைவராக முருகதாஸ், துணை தலைவராக சேகர், துணை செயலாளராக அண்ணாமலை, பொருளாளராக பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இளைஞர் அணி தலைவராக ரவி, செயலாளராக அறிவொளி, மகளிரணி தலைவி...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கல்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தம்பிபட்டியில் நகர் இளைஞர் காங்., சார்பில் மாணவர்களுக்கு இலவச மரக்கன்று, நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. காங்., பொதுக்குழு உறுப்பினர் அபிமன்யூ தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் பழனியப்பன், ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், நகர் தலைவர் கணேசன் ப...
தமிழகம்
உண்டு உறைவிடப் பள்ளியில் துணை இயக்குனர் ஆய்வு
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிடப்பள்ளியில் கல்வித் துறை அதிகாரி ஆய்வு செய்தார்.ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந் துள்ள கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிடப்பள்ளியில் கல்வித்துறை துணை இயக்குனர் ரஞ்சனிதேவி ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளின் கற்றல் அடைவுத்திறனை பாடவாரியாக ஆய்வு ச...
தமிழகம்
ஆசிரியர் மன்ற கூட்டம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே திருக்களாப்பட்டியில் வட்டார ஆசிரியர் மன்ற கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாசன் தலைமை வகித்தார். சந்திரா முன்னிலை வகித்தார். தீர்மானம் : தமிழ் வழி கல்வியில் பட்டம் பெறுவோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க செம்மொழி மாநாட்டில் உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி. 10 ம் வகுப்பு...
தமிழகம்
சிவகங்கையில் மின்வெட்டு நோயாளிகள் அவதி
சிவகங்கை: மின்வெட்டால், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சி.டி., ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ்ரே எடுக்க முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஆப்பரேஷன் செய்வதிலும் இழுபறியும் நீடிக்கிறது. இங்கு, 1,000 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள், 200 க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் காலை 8 முதல் 10 மணி வரை, சிவகங்க...
தமிழகம்
கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 11ம் தேதி நடக்கிறது.திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் பேச்சு போட்டிகள் நடக்கிறது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் திலகவதியார் (திருநாவுக்கரசர் தமக்கையார்), புனிதவதியார்...
தமிழகம்
ஆசிரியர்களுக்கு பயிற்சி
சிவகங்கை: பொது தேர்வில், பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், ஆசிரியர் பயிற் சிக்கான துவக்க விழா சிவகங்கையில், நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் சேக்கப்பன் வரவேற்றார். அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாண...
தமிழகம்
பீகாரில் ஜூலை 10-ல் போராட்டம் : லாலு அறிவிப்பு
சென்னை: ஜூலை 5-ம் தேதி நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று லாலு பிரசாத் யாதவ்தெரிவித்தார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறுதெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஜூலை 5-...
தமிழகம்
கரூர் மாவட்டத்தில் வாழை சாகுபடி...திசு வளர்ப்பில் விழிப்புணர்வு தேவை
கரூர்: மாவட்டத்தில் வாழை சாகுபடியை அதிகரிக்க கொண்டு வரப்பட்ட திசு வளர்ப்பு வாழை சாகுபடி திட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் விவசாயிகளிடம் வரவேற்பை இழந்துள்ளது.நாட்டின் தொன்மையான பழப்பயிர்களில் வாழை முக்கிய இடம் பெறுகிறது. கரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மொத்த பரப்பளவான 92 ஆயிரத்து 740 ஹெக்டேரில், 10 ஆயிரத்த...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
மானாமதுரை: மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் மானாமதுரையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். துணை தலைவர் ஜோசப்ராஜன் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் (சுகாதாரம்) ரகுபதி, துவக்கி வைத்தார். செயல் அலுவலர் சஞ்சீவி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்செல்வி, ஆய்வாளர்கள் ராமநாதன், ஞானசேகரன், உணவு ஆய்வாளர் முத்துர...
தமிழகம்
கோடங்கிப்பட்டியில் மலேரியாஎதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
கரூர்: தாந்தோணி அருகே கோடங்கிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மருத்துவ அலுவலர்(பொ) தினேஷ்குமார் தலைமை வகித்தார். கோடங்கிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், கிராம சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் பங்க...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
காரைக்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காரைக்குடியில் சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர் துணை செயலாளர் காசிம்முஸ்தபா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் காசிநாதன், துணை தலைவர் அழகர்சாமி, மாவட்ட செயலாளர் என். காசிநாதன் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் வெங்கடேசன், செயலாளர் காசிநாதன், து...
தமிழகம்
இளம்பெண் மர்ம சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
காரைக்குடி: காரைக்குடி அருகே அமராவதி புதூரை சேர்ந்தவர் ஓட்டல் ஊழியர் சுமன். இவரது மனைவி ஜீவரத்தினம் (24). இருவருக்கும் 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர், காரைக்குடி வேலைக்கு சென்று வருவார். அவரது மனைவி வீட்டில் தனியாக இருந் தார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி இரவு வீட்டிற் குள் விளக்கு எரியவில்லை. இதில் சந்தே...
தமிழகம்
காஷ்மீர் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் உடல் அடக்கம்
காளையார்கோவில்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர்நீத்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாகலிங்கம் உடல், அவரது சொந்த ஊரான சிறியூரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சீறியூரை சேர்ந்தவர் நாகலிங்கம் (25). இவர், மெட்ராஸ் ரெஜிமெண்டல் பிரிவில் ராணுவவீரராக தேர்வு செய்யப்ப...
தமிழகம்
விழுப்புரம் - புதுச்சேரி ரயில்கள் இன்று முதல் நேரம் மாற்றம்
விழுப்புரம் : விழுப்புரம் - புதுச்சேரி இடையே செல்லும் ரயில்களின் நேரம் இன்று (1ம் தேதி) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில் காலை 6.35, காலை 10 மணி, மதியம் 2.35 மற்றும் மாலை 6.15 மணிக்கும் புறப்படும். திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரயில் விழுப்புரத்தில...
தமிழகம்
சமச்சீர் கல்வி திட்ட பாட புத்தகங்கள் தட்டுப்பாடு : தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவதி
விழுப்புரம் : சமச்சீர் கல்வி திட்ட பாடபுத்தகத்திற்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்தாண்டு (2010-2011) 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட் டுள்ளது. கடந்த மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து பள் ளிகளுக்கும் சமச்சீர் கல்வி திட்ட பாட புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு அற...
தமிழகம்
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 16 மாவட்டத்திற்கு ரூ.11.50 கோடி நிதி பற்றாக்குறையால் தவிப்பு
சிவகங்கை: வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள 16 மாவட்டங்களில், ஆழ்துழாய் மூலம் குடிநீர் வினியோகிக்க 11.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்தது. இதனால், பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் க...
தமிழகம்
கடலூர் கோர்ட்டில் 6 பேருக்கு 6 மாதம் சிறை
கடலூர் : ஈமச்சடங்கில் பங்கேற்றவரை தாக்கிய 6 பேருக்கு கடலூர் கோர்ட்டில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதே ஊரில் ஈமச் சடங்கு ஒன்றிற்கு சென்றார். அன்று மாலை 7 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த ஊர் தலைவர் சதா...
தமிழகம்
மருந்து கடை உரிமையாளர் மர்ம சாவு : உடலை மறைக்க முயன்ற மனைவி கைது
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மருந்துக் கடை உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை, ரகசியமாக காரில் ஏற்றி அனுப்ப முயன்ற மனைவியை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். மதுரை மாவட்டம் மயிலம்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் முனீஸ்வரன்(38). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஆவாரம்பட்டியை சேர்ந்த பெரியசாமி...
தமிழகம்
ஸ்ரீவி., கல்வி மாவட்டம் உதயம்
விருதுநகர்: புதிதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கல்வி மாவட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மாவட்டம், 62 பள்ளிகளுடன் செயல்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 121 பள்ளிகளும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 74 பள்ளிகளும் உள்ளன. இந்த இரு கல்வி மாவட்டங்களில் விருதுநகர் கல்வி மாவட்டம், பெரிய கல்வி ம...
தமிழகம்
குடிநீர் பிரச்னை: மக்கள் அவதி
சத்திரப்பட்டி: அய்யனாபுரம் வடக்கு மற்றும் தெற்கு தெருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். இங்கு தற்போது வாரம் ஒரு முறை, சில மணி நேரம் மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், தனியாரிடம் ஒரு குடம் ரூ.2.50க்கு வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மேலராஜகுலராமன் ஊராட்சி ...
தமிழகம்
நீர்நிலையில் கொட்டப்படும் வீடுகளின் கட்டட கழிவுகளால் அபாயம்... பெரிய கண்மாய் காணாமல் போகும்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதால் மழைகாலத்தில் மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் பொதுபணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாய் உள்ளது. அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளின் ஓடைகள் வழியாக கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரும். கண்மாயை சு...
தமிழகம்
ஸ்டவ் வெடித்து பெண் பலி
அருப்புக்கோட்டை: ராஜிவ் நகரை சேர்ந்த மகேந்திரன் மனைவி இந்திரா (32). இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்ய ஸ்டவ் பற்ற வைத்தார். எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்ததில் காயமடைந்த இந்திரா, மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். தாலுகா போலீசார் விசாரித்தனர்.
தமிழகம்
லோடு வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
விருதுநகர்: திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் பெரியசாமி(44). இவர் வாடிப்பட்டியிலிருந்து லோடுவேனில், அடிமாடுகளை ஏற்றிக்கொண்டு புளியங்குடி சென்று கொண்டிருந்தார். நத்தம்பட்டி விலக்கு அருகே சென்ற போது பின்புற டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. வேனில் வந்த பெரியசாமி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். டிரைவர் காளிராஜ...
தமிழகம்
மனைவியை பாட்டிலால் தாக்கிய கணவர் கைது
ராஜபாளையம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராயப்பன் (35). கொத்தனாரான இவர் அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வந்ததை மனைவி மாதா(30) தட்டிக்கேட்டதால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ராயப்பன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததை மாதா கண்டித்ததால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மாதா தலையில் பீர்பாட்டிலால் ராயப்பன் தாக்க...
தமிழகம்
தம்பதியருக்கு வெட்டு: 3 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள டி. மானகசேரியைச் சேர்ந்தவர் சக்திவேல்(48). இவருக்கும் இவரது அண்ணன் சண்முகத்துக்கும் (50)இடப்பிரச்னை தகராறு ஏற்பட்டது. இதில் சக்திவேலையும் இவரது மனைவியையும், சண்முகம் உட்பட மூன்று பேர் அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தினர். இது குறித்து சக்திவேல், மல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார், மூன்...
தமிழகம்
மனைவியை அடித்த கணவன் கைது
சாத்தூர்: ஆலங்குளம் அருகே வச்சக்காரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (29). குடிபழக்கம் உள்ளவர், சம்பவத்தன்று கரி மூட்டம் போட வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை இவரது மனைவி சீனியம்மாள்(24) கண்டித்தார். ஆத்திரம்மடைந்த சீனிவாசன், சீனியம்மாளை அடித்து உதைத்தார். காயமட...
தமிழகம்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் மணிகண்டன். இவரிடம் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ராபின்சன் மனைவி அமலா என்பவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 1.10 லட்ச ரூபாய் வாங்கினார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மணிகண்டன் ...
தமிழகம்
இலவச காஸ் இணைப்பு வழங்குவதில் தாமதம்
விருதுநகர்: அரசு ஒதுக்கீடு செய்த இலவச காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் மேம்படுத்தும் விதமாக இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கி வருகிறது. மாவட்டத்திற்கு 2009-10ல் 19 ஆயிரத்து 300 இணைப்புகள் ஒதுக்கீடு செய்தது. இதுவரை 6 ஆயிரத்து 597 இலவச இணைப்புகள் மட்...
தமிழகம்
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இல்லை சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம்
வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக உள்ளதால் வழக்குகளை விசாரிக்க முடியாமலும், சட்டம் ஒழுங்கும் சீர்கெடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு 43 கிராமங்கள் உள்ளன. சுமார் 50,000 மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் நூறுக்கும் மேற்பட்ட ப...
தமிழகம்
ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை குவிந்து கிடக்கும் குப்பைகள்கவுன்சிலர்கள் சரமாரி புகார்
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் போடவில்லை. வார்டுகளில் குப்பை அள்ளுவதில்லை. நகராட்சி என்னதான் செய்யப்போகிறது என கவுன்சிலர்கள் சரமாரி புகார் கூறினார்.விருதுநகர் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் கார்த்திகா தலைமையில் நடந்தது. கமிஷனர் ஜான்சன், நகரமைப்பு அலுவலர் மாலதி, கவுன்சிலர்கள் கலந்...
தமிழகம்
சட்டவிழிப்புணர்வு முகாம்
நரிக்குடி: திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியபட்டியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி மீனாட்சி, மாஜிஸ்திரேட் கணபதிசாமி முன்னிலை வகித்தனர். மண்டபசாலை ஊராட்சி தலை...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கும் விழா
சாத்தூர்: சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் மற்றும் புத்தக பை வழங்கும் விழா நடந்தது. டாக்டர் முனுசாய் கேசவன் தலைமை வகித்தார். தொழிலதிபர் லட்சுமணதேவர், வக்கீல் குப்பையாண்டி, கருப்பசாமி இளைஞர் காங்., நிர்வாகிகள் மைக்கேல், மல்லீஸ்வரன்,ராஜேஸ், பெரியசாமி முன்னில...
தமிழகம்
துவங்கிய உடனே முடிந்த நகராட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் முடிவடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சிலர், உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயற்சித்தனர்.ராஜபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில், தலைவர் மகாலட்சுமி தலைமையில் துவங்கியது. துணைத் தலைவர் சுப்பராஜா முன்னிலை வ...
தமிழகம்
மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்த கணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அருகே மனைவியின் கள்ளக்காதலனை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். பாணான்குளத்தை சேர்ந்தவர் திருப்பதி(35). இவரது மனைவி முனீஸ்வரி(30). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத முத்துக்கருப்பன்(27) என்பவருக்கும், முனீஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்த...
தமிழகம்
நிலமோசடி செய்தவர்களை கைது செய்ய கோரி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
காரியாபட்டி: நில மோசடி செய்தவர்களை கைது செய்ய கோரிபாதிக்கப்பட்டவர்கள் காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். திருத்தங்கலைச் சேர்ந்த யோக மாருதி நிறுவனத்தினர், காரியாபட்டி அருகே வேப்பங்குளத்தில் "பிளாட்' போட்டு குலுக்கல் முறையில் இட விற்பனை செய்து வந்தனர். மாதம் 150 ரூபாய் செலுத்த வேண்டும். குலுக்கலில் பரிசு விழுந்...
தமிழகம்
தோட்டக்கலைத் துறையில் பழக்கன்றுகள் விற்பனை
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., பூவாணியில் அரசு தோட்டக்கலை பண்ணைகள் உள்ளன. இங்கு வீடுகளில் அழகுக்கு வளர்க்கும் செடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது மா-30 ரூபாய், நெல்லி(ஒட்டு)-25, கொய்யா-12, சப்போட்டா-30, கறிவேப்பிலை-5, பப்பாளி-5, இலவு-5, வேம்பு-5, வீட்டில் வளர்க்கப்படும் அழகு செடிகள் -5 ரூபாய்க்கும் விற்கப்படு...
தமிழகம்
மனைவியை அனுப்ப மறுத்த சகலையை கொன்றவருக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த சகலையை வெட்டி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(46). இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நாகராஜ் குடும்பத்தோடு திருப்பூரில் பனியன் கம்பென...
தமிழகம்
இடமாறுதல் உத்தரவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் இன்று பணியில் சேர அறிவுரை
விருதுநகர்: கவுன்சிலிங்கில் இடமாறுதல் உத்தரவு பெற்ற உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இன்றே பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள்...
தமிழகம்
மாற்று திறன் மாணவர்களுக்காக மாவட்டம் தோறும் மாதிரிப்பள்ளி
விருதுநகர்: தமிழகத்தில் மாற்று திறன் மாணவர்களுக்காக மாவட்டதோறும் மாதிரிப்பள்ளி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 லட்ச ரூபாயில் மாதிரிப்பள்ளி அமைக்கப்பட உள்ளது. இதேபோல் 2 லட்ச ரூபாயில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆதார வள மையம், மாவட்டத்தில் பத்து பள்ளிகளில் மாற்று திறனாளிகளுக்கான மேம்படுத்தப்பட...
தமிழகம்
தனிப்பிரிவு போலீஸாருக்கு சி.யு.ஜி.,மொபைல்ஃபோன் வழங்கல்
வேலூர்: வேலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு மொபைல்ஃபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.வேலூர் மாவட்டத்தில் எட்டு சப் டிவிஷன்களில் கீழ் 64 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. 70 தனிப்பிரிவு போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர்.மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்கள் வரு...
தமிழகம்
விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் பயன்பாட்டுக்கு வரும் முன் சரிந்த மேம்பாலம்
விருதுநகர்: விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் ஆர்.ஆர். நகரில் கட்டப்பட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே பக்கவாட்டு சுவர் சரிந்தது. இதனால் பாலம் உடைந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.ஆர். நகர் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் சிமென்ட் ஏற்றுவதற்காக சரக்கு ரயில் பாதை இரு...
தமிழகம்
ஆதிதிராவிடர் நலக்குழுஆலோசனை கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் நலக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் அமுதா தலைமை வகித்து, குழு உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 21 கோரிக்கைகள் குறித்து 15 நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும். ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் ...
தமிழகம்
கிறிஸ்தவ ஆலயம் மீது கல்வீச்சு
ஓசூர்: ஓசூர் கிறிஸ்தவ ஆலயம் மீது கல் வீசிய பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலை ரயில்வே ஸ்டேஷன் அருகே திரு இருதய ஆண்டவர் ஆர்.சி., கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஆலயத்தின் நுழைவு வாயில் அருகில் மாதா கெபி உள்ளது. கெபியில் கண்ணாடி கூண்டுக்குள் மாதா சிலை உள்ளது.நேற்று காலை ...
தமிழகம்
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியில் இன்று வெளியிடப்படுகிறது. பெயர்கள் சேர்க்க, நீக்க, மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் வரும் 16ம் தேதி வரையில் பெறப்படுகிறது என்று கலெக்டர் அமுதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தர்மபுரி மாவட்டம் தர்மப...
தமிழகம்
இந்தியன் வங்கிகிளை திறப்பு விழா
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா நடந்தது.கலெக்டர் அமுதா குத்துவிளக்கு ஏற்றி, வங்கி கிளையை துவக்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 37 லட்சத்துக்கான கடனுதவிகளை வழங்கினார்.இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் சடகோபன், மேலாளர் செல்வராஜ், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் கணேசன், ...
தமிழகம்
காலி பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சுகாதாரத்துறை, கூட்டுறவு வங்கி மற்றும் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால், சான்றிதழ் சரி பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் உதவி நிரவலர் மற்றும் ச...
தமிழகம்
திறப்பு விழா
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் அமுதா குத்துவிளக்கு ஏற்றி, வங்கி கிளையை துவக்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 37 லட்சத்துக்கான கடனுதவிகளை வழங்கினார்.இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் சடகோபன், மேலாளர் செல்வராஜ், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் கணேசன்,...
தமிழகம்
மின் நுகர்வோர் குறை தீர் முகாம்
மதுரை: மதுரை மின் வாரிய சமயநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கோ.ராமநாதன் அறிவிப்பு:சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், இன்று காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர் தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூ...
தமிழகம்
ஒரே நாளில் 20 பேர் ஓய்வு
மதுரை: மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் பரமானந்தம் நேற்று பணியில்இருந்து ஓய்வு பெற்றார். இவருடன் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, எஸ்.ஐ.,க்கள் விஜயராஜ், ராமசாமி உட்பட 20 போலீசார் ஓய்வு பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் அந்தந்த ஸ்டேஷன் போலீசார் சார்பில் பிரிவு உபசார விழா நடந்தது.
தமிழகம்
கோயில் விழாவில் மோதல் :18 பேர் மீது வழக்கு
நாகமலை: நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்தில் சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் சில நாட்களுக்கு முன் நடந்தது. இது தொடர்பாக இதே ஊரைச் சேர்ந்த சி.கருப்பையா மற்றும் வி.பி.கருப்பையா தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டை போலீசில் கருப்பையா வும் வி.பி.கருப்பையா வும் புகார் செய்துள்ளனர...
தமிழகம்
கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலரின் நிர்வாகத்துக்கு உட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிகாலியிடங்கள் நிரப்படவுள்ளன. அதன்படி, ஏதாவது பட்டப்படிப்புடன் கூடிய கூட்டுறவு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவு செய்த பதிவுதாரர்கள் எஸ்.சி....
தமிழகம்
லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறத்தில் மாருதி ஆம்னி கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் இறந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சிவக்குமார் (34). இவரது தங்கை மதுரைசாமி மனைவி மகேஸ்வரி (30)  உட்பட மூன்று பேர் நேற்று முன்தினம் இரவு மாருதி ஆம்னி காரை வாடகைக்கு எடுத்துக்கொண்ட...
தமிழகம்
கணவன் திட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கணவன் திட்டியதால் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் மனைவி கனிமொழி (26). இவர் தனது குழந்தைகள் சுமித்ரா (4), சுஜிதா (3) ஆகியோருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டி.களத்தூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு ச...
தமிழகம்
உலக போதை ஒழிப்பு தின பேரணி
அரியலூர்: அரியலூரில் உலக போதை ஒழிப்பு தின பேரணி நடந்தது. அரியலூர் மாவட்ட அளவிலான போதை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு பேரணி, அரியலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் நிகழ்ச்சி தலைமை ஏற்று, போதை ஒழிப்பு தின உறுதிமொழியை படித்தார். அதை பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ...
தமிழகம்
அ.தி.மு.க., கொடி,பேனர் கிழிப்பு குடிபோதையில் வாலிபர்கள் ரகளை
மன்னார்குடி: மன்னார்குடி கீழராஜ வீதியில் அ.தி.மு.க., கொடி மற்றும் பேனரை கிழித்த வாலிபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழராஜ வீதி 10வது வார்டில் அ.தி.மு.க., கொடிக்கம்பம் மற்றும் அதன் அருகே தட்டியில் பேனர் விளம்பரம் வைத்திருந்தனர்.  அப்பகுதியைச் சேர்ந்த அக்பர் (28), சேணைக்கரை சேகர் (28) ஆக...
இந்தியா
கேரளாவில் பன்றிக்காய்ச்சல் நோய்: 4 பேர் பலி
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாயினர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் 59 பேர் வரை இந்த நோயால் தாக்கப்பட்டிருந்தனர். இதில் 36 பேர் வரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காய்ச்சலால...
தமிழகம்
கரூர் அரசு மருத்துவமனை புதுப்பித்தும் பலனில்லை: டாக்டர்களின் அலட்சியத்தால் தொடரும் வேதனை
கரூர்: கரூர் தலைமை அரசு மருத்துவமனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் நவீன கட்டிடம் மற்றும் கருவிகள் கொண்டு வரப்பட்டும், பெரும்பாலான டாக்டர்களின் அலட்சியம் காரணமாக  நோயாளிகளுக்கு முழுப்பயன் கிடைக்காத நிலையே தொடர்கிறது. கரூர் தலைமை அரசு மருத்துவமனையில் சராசரியாக மாதந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வ...
தமிழகம்
வேலாயுதம்பாளையம் அருகே மாணவர் சேர்க்கை பேரணி
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் காந்தியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. புகழிமலை அருகில் ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு தீவிர மாணவர் சேர்க்கைக்கான பேரணி நடந்தது. குழுந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பள்ளி பருவத்தில் வேலைக்கு குழந்தைகளைஅனுப்புவதற்கு எதிர்ப்ப...
தமிழகம்
குழந்தை உரிமை பாதுகாக்க குழு அமைப்பு: அட்டை வழங்கி டி.ஆர்.ஓ., துவக்கிவைப்பு
கரூர்: குழந்தை உரிமை பாதுகாக்கும் கிராம செயல்பாட்டாளர்களுக்கான கருத்தரங்கம் கரூர் சைக்கோ அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. கலை பண்பாட்டு இயக்க தø லவர் விமலாதித்தன் தலைமை வகித்து பேசுகையில், ""வன்முறைக்கும், துன்புறுத்தும் தண்டனைக்கும், வாய்மொழியாக, உட ல்ரீதியாக உணர்வு ரீதியாக ஆளாகாமல் வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ...
தமிழகம்
ரேஷன் கடை கெரஸின் விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் புகார்
கரூர்: கரூர் மாவட்டத்திலுள்ள மண்ணெண்ணெய் பங்குகளில் விநியோகிப்பதில் முறைகேடு நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பசுபதிபாளையத்தில் உள்ள மண்ணெண்ணெய் பங்க் முன் சாலை மறியலில் அமர மக்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மொத்த விற்பனை கூட்டுறவு சங்கத்தின் கீழ் மாவட்டத்தில் எல்.என்.சமுத்திரம், பசுபதிபாளையம், பெர...
தமிழகம்
கரூர் யூனியன் தலைவர் மீதான விசாரணைக்கு தடையாணை
கரூர்: கரூர் யூனியன் தலைவர் வளர்மதி(தி.மு.க.,) பதவி விலகக்கோரி அனைத்து கட்சி கவுன்சிலர்கள் 12 பேரும் தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஃபிப்., 18ம் தேதி நடந்த யூனியன் அவசர கூ ட்டத்தில், "பொதுநிதியில் நடத்தக்கூடிய பல்வேறு பணிகளை மன்றத்துக்கு தெரியாமல் டெண்டர் விடுத்து பல கோட...
தமிழகம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் மத்திய அரசின் பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாச்சியார்கோவில் அண்ணா சிலை அருகே போராட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். விலை உயர்வால் இனி மக...
தமிழகம்
அ.தி.மு.க., கிளை செயலாளர் கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அ.தி.மு.க., கிளைச் செயலாளர் மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சடைவளந்தை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாஸ்கரன் (45). அ.தி.மு.க., கிளைச் செயலாளர். இவரது மனைவி சுமதி. மகளிர் குழு தலைவியாக உள்ளார். பாஸ்கரின் உறவினர் விசுவநாதன் என்பவருக்கு ...
தமிழகம்
குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி
கும்பகோணம்: திருவிடைமருதூரில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி வட்டார அளவில் நடந்தது. வட்டார கல்விக்குழு தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்து, மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு காலிபர் உபகரணங்களை ...
தமிழகம்
தமிழகத்தில் 1,095 போலீஸ் எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துத் தேர்வு: திருச்சி சரகத்தில் 5,475 பேர் பங்கேற்பு
திருச்சி: தமிழகம் முழுவதும் நடக்கும் போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்துத்தேர்வில் திருச்சி சரகத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்து மொத்தம் ஐந்தாயிரத்து 475 பேர்  பங்கேற்கின்றனர். தேர்வு எட்டு மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் துறைக்கு ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் எஸ்.ஐ., பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு மூன்...
தமிழகம்
ஜோதிட மாநாடு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடந்தது. ஸ்ரீரங்கம் தெற்குவாசல் ஆர்யவைஸ்யா தர்மசத்திரத்தில் நடந்த மாநாட்டுக்கு முரளி பட்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்க செயலாளர் விஜயசாரதி அனைவரையும் வரவேற்றார். பஞ்சாங்க ஆசிரியர் சபரி சதாசிவம், சிவதாசன் ரவி கோவை கவிதா, சேலம் காந்தி ஆக...
தமிழகம்
கொங்கு இளைஞர் பேரவை கொடியேற்று விழா
க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றிய கொங்கு இளைஞர்கள் பேரவையின் சார்பாக கொடியேற்று விழா,பெயர் பலகை திறப்பு விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா க.பரமத்தியில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட அமைப்பாளர் கார்வேந்தன், மாவட்ட மகளிரணி த...
தமிழகம்
தார்சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
க.பரமத்தி: புன்னம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டக்கடை - சடையம்பாளையம் தார்சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதை புதுப்பித்து தருமாறு மாவட்ட கலெக்டரிடம் பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். க.பரமத்தி யூனியன், புன்னம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டக்கடை - சடையம்பாளையம் சாலை ஒன்றரை கி.மீ., தூரம் உடையது. இதன் வழியாக நூல்மில...
இந்தியா
ரத்தோருக்கு பென்ஷன் ரத்து
புதுடில்லி: ஹரியானா மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி., ரத்தோருக்கு வழங்கப்பட்ட வந்த பென்ஷன் ரத்து செய்யப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரத்தோருக்குவழங்கப்பட்டுள்ள மற்றொருதண்டனையாக இது கருதப்படுகிறது.தற்போது மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ரத்தோர் ஜாமீனில் உ...
தமிழகம்
காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை: ரயில்வே அமைச்சகம் நடவடிக்கைக்கு காத்திருப்பு
புதுக்கோட்டை: காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வழி திருவாரூர் வரையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ள அகலப்பாதை திட்டப் பணிகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகல ரயில்ப்பாதைக...
தமிழகம்
நெல்லைக்கு ரயிலில் வந்த பயணி சாவு
திருநெல்வேலி: நெல்லைக்கு ரயிலில் வந்த பயணி உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். திருச்செந்தூர் பூச்சிக்காடு பள்ளிபத்து ராஜநாடார் மகன் ஆத்திகன் (55). இவர் நேற்று ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திருநெல்வேலி வந்தார். உடல் நலம் சரியில்லாத அவரை அழைத்துச் செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடல் நிலை மோசமா...
தமிழகம்
முக்கூடலில் மா.கம்யூ.,நூதன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி: முக்கூடலில் மா.கம்யூ.,சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து முக்கூடலில் மா.கம்யூ.,சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டையை கழற்றி திருநீறு பட்டை, நாமம் போட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழ...
தமிழகம்
மா மரங்களில் கவாத்து செய்தல் தோட்டக்கலை அதிகாரி விளக்கம்
திருநெல்வேலி: மா மரங்களில் கவாத்து செய்தல் குறித்து கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மா மரங்களில் கவாத்து செய்வதால் நல்ல விளைச்சல் பெறலாம். கவாத்து செய்வதற்கு ஏற்ற காலம் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களாகும். மா மரங்களில் தேவையற்ற உட்...
தமிழகம்
கீழாம்பூரில் மகாசபை கூட்டம்
ஆழ்வார்குறிச்சி: கீழாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகாசபை கூட்டம் நடந்தது. கீழாம்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடந்த மகாசபை கூட்டத்திற்கு சங்க தனி அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆம்பூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் முத்தையாபிள்ளை, கடையம் தொடக்க வேளாண்மை கூட்டு...
தமிழகம்
கடையத்தில் 20ம் தேதி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
ஆழ்வார்குறிச்சி: கடையத்தில் வரும் 20ம் தேதி புதிய தமிழகம் சார்பில் இலவச காஸ் வழங்க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கடையம் ஒன்றிய புதிய தமிழகம் கட்சி செயலாளர் முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பாசமுத்திரத்தில் மிகவும் முக்கியமான யூனியன் கடையமாகும். இங்கு பல்வேறு தொழில்களை செய்து வரும் ஏழை...
தமிழகம்
மகளிர் சுய உதவிக்குழு தலைவி கழுத்தை நெரித்து கொலை தென்காசி அருகே பரபரப்பு
தென்காசி:தென்காசி அருகே சீவநல்லூரில் கழுத்தை நெரித்து மகளிர் சுய உதவிக்குழு தலைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி அருகே சீவநல்லூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி கனியம்மாள் (50). இவர்களின் மகள் முத்துமாரி. இவருக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். வேலு கடந்த...