category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மன்னார் வளைகுடா தீவுகளில் ஒளிரும் மிதவைகள்: ஜூலை 7ல் மீனவர்கள் போராட்டம் | ராமநாதபுரம்:மன்னார் வளைகுடாவில், ஒளிரும் மிதவைகள் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மீனவர்கள், வரும் 7ல் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்.மன்னார் வளைகுடா தேசிய பூங்காவை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி 21 தீவுகளை நான்கு பகுதிகளாக பிரித்து மண்டபம், கீ... |
தமிழகம் | ரூ.7,500 சம்பளத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்: நேரடி தேர்வில் நியமிக்க ஏற்பாடு | திண்டுக்கல்:வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 7,500 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தமிழகத்தில், வேலை உறுதியளிப்பு திட்டத்திற்காக, 1,901 பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், இளநிலை... |
தமிழகம் | ரேஷன் பொருட்கள் கேட்டுமூதாட்டி உண்ணாவிரதம் | செஞ்சி:ரேஷன் பொருட்கள் கேட்டு, 75 வயது மூதாட்டி செஞ்சி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், மேல்ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (75). இவருடன், மகள் பாப்பாயி (41), பேரன் புரு÷ஷாத்தமன் (25) வசித்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு நடந்த ரேஷன் கார்டு ஆய்வின் போது, முத்தம்மாளின் ரேஷன... |
தமிழகம் | கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால்:கணவனை கொன்றோம்: மனைவி வாக்குமூலம் | சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே கணவனை அடித்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தில் மெடிக்கல் கடை நடத்தி வந்தவர் முனீஸ்வரன் (37). இவரது மனைவி சத்யா (32). கடந்த 29ம் தேதி இரவு தனது கள்ளக்காதலன் அபுதாகீர் (25), அவரது நண்பர் ஜெயராஜ் (27) என்பவருடன் சேர்ந்து முனீஸ்வ... |
தமிழகம் | கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முயற்சி:அலாரம் ஒலித்ததால் கொள்ளை கும்பல் ஓட்டம் | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் கூட்டுறவு வங்கியில், நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது. அலாரம் ஒலித்ததால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் தப்பியது.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த குஞ்சரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் குஞ்ச... |
தமிழகம் | செஞ்சி அருகே லாரி கவிழ்ந்து:ரூ.3 லட்சம் முட்டைகள் சேதம் | செஞ்சி:செஞ்சிஅருகே முட்டை ஏற்றி வந்த லாரி சாலை ஓரம் கவிழ்ந்ததில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து நாசமானது.சேலம் மாவட்டம் தலைவாசலிலிருந்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு நேற்று முன்தினம், நள்ளிரவு லாரியில் முட்டை ஏற்றி வந்தனர்.விழுப்புரம்-செஞ்சி மெயின் ரோடில், தென்புத்தூர் கூட்ரோடு அருகே எதிரே வந்த ... |
தமிழகம் | திருச்சி விமான நிலையத்திற்கு ஆபத்தா? மர்ம கார், மிரட்டல் கடிதத்தால் உஷார் | திருச்சி:திருச்சி விமானநிலையத்தில், நான்கு நாட்களாக நின்றிருந்த மர்ம காரும், நேற்று முன்தினம் வந்த மிரட்டல் கடிதமும், வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டாளர் தர்மராஜூக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.அதில், "மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையேற்... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் ஸ்டிரைக் தொடர்கிறது | நெய்வேலி:என்.எல்.சி., தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது.என்.எல்.சி.,யில் பணிபுரியும் 14 ஆயிரத்து 234 தொழிலாளர் மற்றும் ஊழியர்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.இ., ஆபரேட்டர... |
தமிழகம் | மூன்று பதிவு மாவட்டங்களின் எல்லைகள் மாற்றம்: ஆக., முதல் அமலுக்கு வருகிறது | கிணத்துக்கடவு:திருப்பூர் மாவட்டம் உதயமானதைத் தொடர்ந்து, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட பதிவு மாவட்டங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஆக., முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து புதிய திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.... |
இந்தியா | ஆஸி., குடியுரிமை சட்ட மாறுதல்: இந்தியர் பாதிக்கப்படமாட்டார்கள் | புதுடில்லி: ஆஸ்திரேலிய புதிய குடியுரிமை நடைமுறைகளால் அங்குள்ள இந்தியர்கள் பாதிக்காதவாறு, 2012ம் ஆண்டு வரை அந்நாட்டு அரசு சில சலுகைகளை அளித்துள்ளது என, மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள்,... |
தமிழகம் | ரூ.7,500 சம்பளத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களை நியமிக்க ஏற்பாடு | திண்டுக்கல் : வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 7,500 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில், வேலை உறுதியளிப்பு திட்டத்திற்காக, 1,901 பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட, ஊராட்சி ஒன்றியங்களுக்கான கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பணி மேற்பார்வையாளர்கள், நேரடி தேர்வு ... |
தமிழகம் | காந்திஜி பொருட்கள் ஏலம் விட்டது யார்? | ராஜ்கோட்:குஜராத் மாநிலத்தில் கஸ்தூரிபாய் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த காந்திஜி பயன்படுத்திய பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே கஸ்தூரிபாய் நினைவிடம் உள்ளது. இங்கு, காந்திஜி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, செருப்பு, தட்டு, கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போய்விட்டத... |
தமிழகம் | கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் பல லட்சரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை | புதுக்கோட்டை:கலெக்டர் அலுவலக கட்டடத்தில் செயல்பட்ட, மாவட்ட சத்துணவுத் திட்டம் மற்றும் பேரிடர் இன்னல் மேலாண்மை திட்ட அலுவலகத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோயுள்ளன.புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்கள் வசித்த அரண்மனை, தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகமாக இயங்கி வருகிறது. இங்கு, பல்வேறு அரசு துறை அலுவலகங... |
தமிழகம் | கணக்கெடுப்பு படிவங்கள் தட்டுப்பாடு:15ம் தேதிக்குள் பணி முடிப்பதில் சிக்கல் | பழநி:மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் வீட்டு கணக்கெடுப்பு படிவம் பற்றாக்குறையால் குறித்த காலத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கால நீட்டிப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜூன் 1ம் தேதியிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணி நடக்கிறது. ஒவ்வொருவரும் குறைந்தது, 150 முதல் 250 வீடுகள் வரை கணக்கெடு... |
தமிழகம் | கழுகுமலை முருகன் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம் | தூத்துக்குடி:கழுகுமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம், 16 ஆண்டிற்குப்பின் நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, யாகசாலை பூஜை கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. மொத்... |
தமிழகம் | கேரளாவில் மாட்டு வியாபாரிகள் ஸ்டிரைக்:பொள்ளாச்சியில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு | பொள்ளாச்சி:கேரளாவில் மாட்டு வியாபாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக 90 சதவீதம் மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீதமுள்ள 10 சதவீத மாடுகள் வளர்ப்பதற்காக விற்கப்படுகின்றன.பொள்ளாச்சி மாட்டுச்சந்... |
தமிழகம் | செம்மொழி கண்காட்சி அரங்கை பார்ப்பதற்காக தனியார் பள்ளி மாணவர்களிடம் வசூல் வேட்டை | கோவை:கோவையில் நடைபெற்று வரும் செம்மொழி கண்காட்சி அரங்கை காண அழைத்து வரப்படும் பள்ளி மாணவர்களிடம், அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச கண்காட்சிக்கும் பள்ளி நிர்வாகிகள் கட்டணம் வசூலித்து, பெற்றோரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.செம்மொழி மாநாட்டையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில், பண்டைத் தமிழர் நாகரி... |
தமிழகம் | வீர விருது பெற்ற தமிழருக்கு 2 லட்ச ரூபாய் பரிசு | கோவை:அசோக் சக்ரா வீர விருது பெற்ற கோவை இளைஞருக்கு, தமிழக அரசின் சார்பில் 2 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்குமார் (29); டேராடூனில் உள்ள ராணுவக் கல்லூரியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் வீர தீர சாகச செயல்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக் சக்ரா வீர விருத... |
தமிழகம் | காணாமல் போன சான்றிதழ்கள்செல்லத்தகாதவை என அறிவிப்பு | சென்னை:திருச்சியில் காணாமல் போன எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ்களை, செல்லாத மதிப்பெண் சான்றிதழ்களாக, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் கடந்த மாதம் 12... |
இந்தியா | பிடிபட்ட மந்திரி டில்லி திரும்பினார் | கொஹிமா: நேபாளத்தில் இந்திய பணத்தை வைத்திருந்ததற்காக பிடிபட்ட நாகலாந்து அமைச்சர் நேற்று டில்லி திரும்பினார். நாகலாந்து மாநில உள்துறை அமைச்சர் இம்காங் இம்சென். நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேபாளத்துக்கு சென்றார். காத்மாண்டுவில் உள்ள விமான நிலையத்தில் அமைச்சர் இம்சென்னின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டன. அவரத... |
தமிழகம் | விற்பனை வரி நிலுவைத் தொகை ஒரே முறை தீர்வுத் திட்டம் அமல் | சென்னை:தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விற்பனை வரி நிலுவையை ஒரே முறையில் தீர்க்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் செய்திக் குறிப்பு:கடந்த 2008ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவித்தபடி, 2002ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு முன்பு உள்ள வரி நிலுவைகளை ஒரே முற... |
தமிழகம் | கவின் கலைக்கல்லூரி 5ம் தேதி மீண்டும் திறப்பு | சென்னை:அரசு கவின் கலைக்கல்லூரி வரும் 5ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.தமிழக அரசின் செய்திக்குறிப்பு:அரசு கவின் கலைக்கல்லூரியில் இளங்கவின் கலை முதல், இரண்டு, மூன்றாமாண்டு, முதுகலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்கு பின் வரும் 5ம் தேதி கல்லூரி திறக்கப்படவுள்ளது.கல்லூரியை திறக்கும் போது... |
இந்தியா | பீகார் தேர்தல் பா.ஜ., - ஐ.ஜ.த., கூட்டணி | பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கைகுலுக்குவது போன்ற விளம்பர பேனரால் சர்ச்சை உருவானது. இதனால், கோபமடைந்த நிதிஷ் குமார், கோசி ஆற்று வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்காக ... |
இந்தியா | ராகுல் தொகுதிக்கு மாவட்ட அந்தஸ்து | லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ராகுல் தொகுதியான அமேதிக்கு மாவட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கான்பூர் திகாத் மாவட்டம், தலித் தலைவர் ராமாபாய் நகர் என்றும், அமேதி மாவட்டத்துக்கு சத்ரபதி சாகுஜி மகராஜ் நகர் என்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
உ.பி., அரசின் இந்த அதிரடி முடிவுகளை சில கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இர... |
தமிழகம் | போலீஸ் எஸ்.ஐ., எழுத்து தேர்வு:தேர்வாணையம் கெடுபிடி | சிவகங்கை:போலீசில் 1,095 ஆண், பெண் எஸ்.ஐ., பதவிகளுக்கான தேர்வு நாளை துவங்குகிறது. இதில் போலீஸ், அமைச்சு பணியாளர் வாரிசுகளுக்கு நாளை, மற்றவர்களுக்கு நாளை மறுதினம், அந்தந்த மாவட்ட மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது.இம்மையங்களில், கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர். இதுதொடர்பாக கெடுபிடி உத்தரவுகளை, தேர்வாணையம் பிறப்பி... |
தமிழகம் | கணக்கெடுப்பு படிவம் தட்டுப்பாடு:பணியை முடிப்பதில் சிக்கல் | பழநி:மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், வீட்டு கணக்கெடுப்பு படிவம் பற்றாக்குறையால், குறித்த காலத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன் முதல் தேதியிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணி நடந்து வருகிறது. ஒவ்வொருவரும், குறைந்தது 150 முதல் 250 வீடுகள் வரை கணக்கெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கட... |
தமிழகம் | பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு | கூடலூர்:பெரியாறு அணையில் இருந்து, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காக, ஜூன் 21 ல் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 க.அடி நீர் திறக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு பின் 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின் மழை குறைவால், அண... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் கவுரவம்:கேள்விக்குறியாகும் மேற்படிப்பு | காரைக்குடி:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் விருது பெற்ற காரைக்குடி கல்லூரி மாணவர் முத்துவேலு (21), வறுமையால் மேற்படிப்புக்கு வழியின்றி தவிக்கிறார்.காரைக்குடி அருகே பாதரக்குடியைச் சேர்ந்த இவர், தாய் ராஜேஸ்வரி, சகோதரர் பொன்னுசாமியுடன் வசிக்கிறார். தந்தை முத்து பல ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட... |
இந்தியா | பிரம்மபுத்திராவில் புதிய அணை? வெள்ளப் பெருக்கை தடுக்க திட்டம்: அசாம் மாநில அரசு தீவிரம் | கவுகாத்தி: பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்கும் வகையில், ஜெர்மன் நிபுணர்களின் உதவியுடன் புதிய திட்டத்தை செயல்படுத்த அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிரம்மபுத்திரா நதியிலும், அதன் துணை நதிகளிலும் ஆண்டு தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால், நான்கு லட்சம் ப... |
இந்தியா | தனிநபர் அந்தரங்கத்தை காக்கும் வகையில் புதிய சட்டம்: குழு அமைத்தது மத்திய அரசு | புதுடில்லி: தனிநபர் அந்தரங்கம் மற்றும் ஆவணங்களைக் காக்கும் வகையில், புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது குறித்து ஒரு முன்வரைவு தயாரிக்க, குழுவும் அமைத்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு குறிப்பாக, "ஆதார்' திட்டத்தில், அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய புலனாய்வுத்... |
இந்தியா | கொங்கன் ரயில் பாதையில் மீண்டும் ரயில்கள் இயக்கம் | மங்களூரு:கொங்கன் ரயில் பாதையில் மண், பாறை சரிவால் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து, சீர் செய்யப்பட்டு மீண்டும் துவங்கியது.பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக, மங்களூரு - மும்பை இடையே கொங்கன் ரயில் பாதையில் மண்ணும், பாறைகளும் இடிந்து விழுந்தன. மங்களூரு சந்திப்பின் சற்று தொலைவில் உள்ள குலசேகரா பகுதியில் கடந்த 27ம் த... |
தமிழகம் | குற்றாலத்தில் சீசன் அருமை:பயணிகளின் கூட்டம் குறைவு | திருநெல்வேலி:குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது.குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முழுமையாக ஏற்படவில்லை. வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலேயே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால், தற்போது ஜூன் மாதம் முடிந்துவிட்ட நிலையிலும் இன்னமும் சீசன் வறட்சியாகவே உள்ளது.கடந்த ஒரு மாதத்தில் அருவியில் அதிகபட்சமாக தண்ணீர் ... |
தமிழகம் | வயிற்றுப்போக்கு:சிறுமி பரிதாப சாவு | கள்ளக்குறிச்சி:சின்ன சேலம் அருகே வயிற்றுப்போக்கால் பாதித்த சிறுமி பரிதாபமாக இறந்தாள்.விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் அடுத்த தொட்டியம் ராஜதுரை மகள் புவனேஸ்வரி(4). இவளுக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவளது பெற்றோர் நேற்று காலை சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை ப... |
தமிழகம் | சிவசங்கர் மேனன் சீனா பயணம் | பீஜிங்: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக நாளை சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக, சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் க்யூன் கேங் கூறியதாவது: இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மூன்று நாள் பயணமாக, நாளை ... |
தமிழகம் | ஸ்ரீவி.,யில் நடமாடுவது சிறுத்தை கேமரா பதிவு மூலம் உறுதியானது | ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., செண்பகதோப்பு வனப்பகுதியில் நடமாடுவது சிறுத்தை என கேமராவில் பதிவான படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் வண்ணான் ஓடை, பளியன்பாறை, பேயனாற்று பகுதிகளில் புலிகள் நடமாடுவதாக அப்பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவித்தனர். பளியன்பாறை பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்த குட்டை... |
தமிழகம் | அரசு பிரசவ ஆஸ்பத்திரியை சுற்றி தூய்மை பேண நடவடிக்கை தேவை | ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு பிரசவ ஆஸ்பத்திரியை சுற்றியுள்ள பகுதியில் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜபாளையம் அரசு பிரசவ ஆஸ்பத்திரி, காந்தி சிலை ரவுண்டான பகுதியில் அமைந்துள்ளது. நகரின் முக்கியப் பகுதியில் இருக்கும் இந்த ஆஸ்பத்திரியில் நவீன வசதிகள் இருப்பதால், ராஜபாளையம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர... |
தமிழகம் | பிளவக்கல் அணை வரத்துக் கால்வாய்களில் மணல் திருட்டு | வத்திராயிருப்பு: பிளவக்கல் அணையின் வரத்து கால்வாய்களில் மணல் திருடப்படுவதால் நீர்வரத்து தடைபடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பிளவக்கல்லில் பெரியாறு, கோவிலாறு ஆகிய இரு அணைகளிலிருந்தும் கண்மாய்களுக்கு நீர் செல்லும் வரத்து கால்வாய்களில் கூமாப் பட்டி பகுதியில் உள்ள கால்வாய்களில் அதிகளவு மணல் திருடப்பட்டு வருகிறது... |
தமிழகம் | பள்ளி சுகாதார திட்டத்தில் 3.40 லட்சம்மாணவர்களுக்கு இலவச பரிசோதனை | விருதுநகர்: மாவட்டத்தில் பள்ளி சுகாதார திட்டத்தில் 3.40 லட்சம் மாணவர்களுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட உள்ளது.பள்ளிகளுக்கு நேரடியாக அரசு டாக்டர்கள் சென்று மாணவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்வர். மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். இதயநோய் உள்ளிட்ட நோய்கள் கண்டறியப்பட்டால் உயர் சிகிச் சைக்கு அரசு ஆஸ்பத்திரி... |
தமிழகம் | சுகாதாரமற்ற துப்புரவு ஊழியர் குடியிருப்பு சேதமுற்ற வீடுகளை சீரமைக்க வலியுறுத்தல் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் குடியிருக்க பயனற்ற நிலையில் உள்ள நகராட்சி துப்புரவு பணியாளர் வீடுகளை சீரமைக்க வேண்டும்.ஸ்ரீவி., திருவண்ணாமலை வெங்கடேஸ்வரபுரம் என்.பி.எஸ்., நகரில் நகராட்சி துப்புரவு பணியாளர் குடியிருப்பு உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஓட்டு வீடுகளில் 40 குடும்பங்கள் உள்ளன. கழிப்பறை உட்பட அ... |
தமிழகம் | பா.ஜ., கூட்டம் | காரியாபட்டி: காரியாபட்டியில் பா.ஜ., திருச்சுழி தொகுதி தொண்டர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் விஜயரகுநாதன் வரவேற்றார். கோட்ட பொறுப்பாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மோகனராஜூலு, மாவட்ட பொதுச் செயலாளர் வெற்றிவேல் பேசினர். ஒன்றிய அமைப்பாளர் ராமலிங்கம் ந... |
தமிழகம் | உலக போதை ஒழிப்பு தின ஊர்வலம் | காரியாபட்டி: காரியாபட்டியில் போலீசார், உலக போதை ஒழிப்பு தின ஊர்வலம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் பொம்மையாசாமி தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள், பொது மக்கள் மற்றும் போலீசார் கோஷம் எழுப்பியவாறு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சத்திரப்பட்டி: எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் சத்திரப்பட்டி நத்தம்பட்டி விலக்கு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் அசோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் பேசினர். |
தமிழகம் | வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 44,199 வாக்காளர்கள் சேர்ப்பு | விருதுநகர்: மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 822 மையங்களில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக 44 ஆயிரத்து 199 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், திருச்சுழி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் புதிதாக வாக் காளர்கள் சேர்க் ... |
தமிழகம் | யோகா பயிற்சி முகாம் | சாத்தூர்: சாத்தூரில் மாற்று மருத்துவ பிரச்சார சங்கத்தின் சார்பில் அக்குப்பிரஷர், மலர் மருத் துவம், யோகா பயிற்சி முகாம் நடந்தது. டாக்டர் கள் கிருபானந்தம், எஸ். வெங்கடாசலம், வி.ஆவுடேஸ்வரி, கே.வெள் ளைச்சாமி, எல்.பைரவன், சுமதி மற்றும் சிவகாசி யோகா ஆசிரியர் பாண்டியராஜன் மற்றும் மாணவர்கள் யோகா பயிற்சி அளித்தனர். மருத்துவ நூல... |
தமிழகம் | இரு ஆண்டுகளாக கைவரிசை காட்டி வந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பல இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்து நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கபுரம், திருக்குமரன் நகர், மீனாம்பிகை நகர், அஜிஸ் நகர் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பூட்டிய வீடுகளில் நகைகள், பொருட் கள் திருடு போயி... |
தமிழகம் | பால் விலை உயர்வு | விருதுநகர்,: விருதுநகரில் நேற்று முதல் பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்ந்தது. விருதுநகரில் பால்விலை இது வரை லிட்டருக்கு 20 ரூபாயாக இருந்தது. நேற்று முதல் 25 ரூபாயானது. பால் விலை உயர்ந்துள்ளதால் ஓட்டல்களில் டீ, காபி விலையும் விரைவில் உயர உள்ளது. |
தமிழகம் | பல்வகை நாற்றுகள் தயார் | ஊட்டி,: கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் விற்பனைக்கு தயாராக உள்ள பல்வகை நாற்றுக்களை, விவசாயிகள் வாங்கி பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது. ஊட்டி தோட்டக்கலை இணை இயக்குனர் (பொ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரியில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணையில், தரமான... |
தமிழகம் | ஜேசிஐ., கிளை இயக்கங்களுக்கு அழைப்பு : அங்கத்தினர்களுக்கு எச்சரிக்கை | மஞ்சூர்: கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.மஞ்சூர் சுற்றுவட்டார கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில், எல்லைப் பகுதி தேர்வு செய்யப்பட்டு, மையங்கள் மூலம் பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது.
"கோட்டா' முறையின் போது, குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள தொழிற்சாலைக்கு மட்டும... |
தமிழகம் | மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் : வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள்! | குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டாரத்தில், வன விலங்குகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; தனி மனித சுய நலத்தால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை, ஆங்காங்கே தொடர்கிறது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்து... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்க முயன்றவர் கைது | திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே போலி ஆவணம் தயாரித்து, நிலத்தை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். வடமதுரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(70). இவரது முதல் மனைவி ஜெயலட்சுமி, இரண்டாவது மனைவி ரெங்கநாயகி. இவர்களுக்கு பத்து குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணணுக்கு, வடமதுரை - வேடசந்தூர் ரோட்டில், ஏழு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ந... |
தமிழகம் | தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் அலுவலகம் முன் போராட்டம் | மஞ்சூர்,: மஞ்சூர் அருகே, தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மஞ்சூர் அருகே தாய்சோலையில், தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது; பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்குள்ள பழமையான கோவிலை சீரமைக்க இப்பகுதியினர் முடிவு செய்து, தொகை திரட்டியுள்ளனர். திட்டமிட்ட தொகை கிடைக்காத நிலையில், எஸ்... |
தமிழகம் | இளநிலை உதவியாளர் பணியிடம் | ஊட்டி இளநிலை உதவியாளர் மற்றும் உதவி கிடங்கு மேலாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனரால், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி கிடங்கு மேலாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி இன் சயின்ஸ் (வேதி... |
தமிழகம் | துப்புரவு பணியாளருக்குநினைவுப் பரிசு வழங்கல் | பந்தலூர்: பந்தலூர் சேரங்கோடு ஊராட்சியில் பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளருக்கு, பிரிவுபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.சேரங்கோடு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் வீரமுத்து; இவர் பணி ஓய்வு பெற்றதால், ஊராட்சி மன்ற வளாகத்தில் பிரிவுபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஊராட்சி உதவியாளர் சஜீத் வரவேற்றார்.
ஊராட்சி மன்றத்... |
தமிழகம் | குறைதீர்க்கும் நாள் கூட்டம்: காஸ் நுகர்வோர் பங்கேற்பு | கோத்தகிரி: கோத்தகிரியில், சமையல் காஸ் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. நுகர்வோருக்கு, சமையல் காஸ் தடையின்றி வினியோகிக்கவும், சிறப்பாக செயல்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது. கோத்தகிரி வட்டத்தில் உள்ள சமையல் காஸ் நுகர்வோர், தங்கள் குறைகள் குறித்து, கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலரிடமோ (94450-00261) ... |
இந்தியா | சுகாதாரத் துறை சார்பில்தொழுநோய் கணக்கெடுப்பு | புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் தொழுநோய் கணக்கெடுப்பு பணி நேற்று துவங் கியது.ஒதியன்சாலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் தாரணி, கணக்கெடுப்பு பணியை துவக்கி வைத்து, இப்பணி இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என கூறினார். மேலும், இது குறித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்புகளும், துண்டு பிரசுரம... |
தமிழகம் | ரசீது வழங்க மறுப்பு | ஊட்டி,: நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்க மறுக்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் உரிமை சங்கப் பொதுச் செயலர் அர்ஜுனன், மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனு:ஊட்டியில், நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு ரசீது கேட்கும் போது, பல கடைகளில் ரசீது ... |
இந்தியா | டிரைவரை தாக்கியகும்பல் மீதுவழக்கு பதிவு | புதுச்சேரி: முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கடத்திச்சென்று தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் ... |
இந்தியா | மாணவர்கள் பயன்பாட்டிற்கு இலவச ஜெராக்ஸ் மெஷின் | புதுச்சேரி:காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த மாணவர் களுக்காக இலவச ஜெராக்ஸ் மெஷின்களை காங்., செயலாளர் வாங் கித் தந்துள்ளார்.மாநில காங்., செயலா ளர் முனுசாமி தனது சொந்த செலவில் 2 ஜெராக்ஸ் மெஷின்களை காமராஜர் நகர் தொகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வாங்கி தந்துள்ளார். இதற்கான விழா தமிழ்ச் சங்க வளா கத்தில் நடந்... |
தமிழகம் | நூலக திறப்பு விழாவில் அறிவுரை: வரும் 9ல்உண்ணாவிரதப் போராட்டம் | கோத்தகிரி: கோத்தகிரி தாலுகா அலுவலக சாலையில் நடத்தப்பட்டு வரும் பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தி, வரும் 9ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. கோத்தகிரி பேரூராட்சி 18வது வார்டு கவுன்சிலரும், ம.தி.மு.க., ஒன்றிய செயலருமான வடிவேல், பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு:கோத்தகிரி பேரூராட்சி மூலம், பல மாதங... |
இந்தியா | சாலையில் குப்பையை கொட்டி இந்திய கம்யூ., போராட்டம் | புதுச்சேரி: சாலையில் குப்பையை கொட்டி இந்திய கம்யூ., கட்சி யினர் போராட்டம் நடத்தினர்.பிருந்தாவனம் பகுதியில் கடந்த சில நாட்களாக நகராட்சி சார்பில் குப்பைகள் அகற்றப்படாமல் உள் ளது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் இந்திய கம்யூ., எம்.எல்.ஏ., விஸ்வநாதன் மக னும், பிருந்தாவனம் பகுதி கிளை செயலாளரான கீர்த்திவர்மா சார்பி... |
தமிழகம் | தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஊழல் : ஊராட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு | பந்தலூர்: சேரங்கோடு ஊராட்சியில், தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.சேரங்கோடு ஊராட்சியில் மன்றக் கூட்டம் நடத்தப்பட்டது. ஊராட்சி உதவியாளர் சஜீத் வரவேற்றார். கடந்த மாத வரவு 4 லட்சத்து 5,324, செலவு 2 லட்சத்து 23 ஆயிரத்து 658 ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.
சுஜாதா: முதல் வார்டுக்கு உட்பட்ட எருமாட... |
இந்தியா | மறியல் செய்தவர்களை தட்டிக் கேட்ட பெண் | பிரதான சாலையான காமராஜர் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக மறியல் நடந்ததால் கார் உட்பட பல்வேறு வாகனங்களில் வந்தவர்கள் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் சிக்கித் தவித் தனர்.அப்போது காரில் வந்த வெளியூரை சேர்ந்த பெண் மணி ஒருவர், மறியல் செய்த வர்களிடம் இப்படி குப் பையை நடுரோட்டில் போட்டு ஏன் மறியல் செய்கிறீர்கள்; நாங்கள் வெ... |
இந்தியா | முதியோர் இல்லத்தில் அன்னதானம் | வானூர்,: கரூர் வைஸ்யா பாங்க் நிறுவனர் தினத்தை முன் னிட்டு முதியோர் இல்லத் தில் அன்னதானம் வழங்கப் பட்டது.கரூர் வைஸ்யா பாங்க்கை வெங்கடராம செட்டியார், ஆதிகிருஷ்ண செட்டியார் ஆகியோர் நிறு வினர். நிறுவனர் தினத்தை முன்னிட்டு, மொரட்டாண்டி அகத்தியர் நகரில் உள்ள முதியோர் சரணாலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.ம... |
இந்தியா | மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 110 பேர் கைது | காரைக்கால்: கோவில்பத்து காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 110 பேரை போலீசார் கைது செய் தனர். காரைக்கால் காஞ்சிபுரம் கோவில்பத்து காலனி பகுதியில் வசிக்கும் நூற் றுக்கணக்கான குடும்பத் தினருக்கு கடந்த பல ஆண்டுகளாக குடிநீர், மின்சாரம், மனைப் பட்டா உள்ளிட்ட வசதி கள் செ... |
இந்தியா | பெட்ரோல் விலை உயர்வு பா.ஜ., ஆர்ப்பாட்டம் | காரைக்கால்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண் டித்து காரைக்காலில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாநில விவசாய அணி தலைவர் இளங் கோவன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் துரைசேனாதிபதி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் சிவசுப்பிரமணியன், சுவாமிநாதன்... |
General | பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 25 பேர் பலி | லாகூர் : பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்த தற்கொலைப்படைத்தாக்குதலில் 25பேர் பலியானார்கள். 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள டாடா தர்பார் மசூதியில் 3 குறைந்த சக்தி கொண்ட குண்டுவெடித்தது. இந்த 3 குண்டுவெடிப்பில் 2, தற்கொலைப்படைத்தாக்குதல் என போலீசார் உறுதி செய்துள்ளனர். தாக்குதல் நடந... |
இந்தியா | ஏ.ஐ.டி.யு.சி., கண்டன ஆர்ப்பாட்ட பேரணி | காரைக்கால்: காரைக்காலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது.காரைக்காலில் இயங்கி வரும் பெரும் பாலான கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கள் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் அனைத்து சங்கங்களையும் ஒன்றியத்தோடு இணைத்துவிட வேண்டும், ஏ.ஐ.டி.யூ.சி., தொழி... |
தமிழகம் | வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை | திண்டுக்கல்: வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள், கல்வித்தகுதிக் கேற்ப உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.மாவட்ட கலெக்டர் வள்ளலார் அறிக்கை:அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை கல்வித்தகுதி அடிப்படையில் வழங்கப் படுகிறது. உடல் உறுப்பு நலம், மனநலம் குன்றுதல், காது கேளாமை ஆகியவற்றுடன்... |
இந்தியா | வாலிபர் தற்கொலை | புதுச்சேரி; உடல்நிலை பாதித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்பா கீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்தவர் யேசுதாஸ்(30). குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒதியஞ்ச... |
தமிழகம் | பி.காம்., படிப்புக்கு அமோக வரவேற்பு : கண்டுகொள்ளப்படவில்லை கலைப்பிரிவு | கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு பி.காம்., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களை தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். கலைப் பிரிவு பாடங்களை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் 2010-2011ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்... |
தமிழகம் | அன்னூரில் 660 மாணவர்களுக்கு இலவச நோட்டு வினியோகம் | அன்னூர்: அன்னூரில் 16 பள்ளிகளை சேர்ந்த 660 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுகள் வழங்கப் பட்டது.அன்னூர் தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில் 42ம் ஆண்டு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தலைவர் தேவராஜன் தலைமையில் நடந்தது. கூடுதல் உதவி துவக்க கல்வி அலுவலர் ரங்கராஜூ, சிண்டிகேட் வங்கி கிளை மேலாளர் பாஸ்கரன், கவுன்சிலர் தனலட்சும... |
தமிழகம் | சுற்றுச்சூழல் தின விழா | திருப்பூர்: உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நாள் விழா, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது; பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணக்குமார் தலைமை வகித்தார்.மரம் வளர்த்தல் என்ற தலைப்பில் பேச்சாளர் ராமசாமி பேசினார். டி.கே.டி., கல்லூரி பேராசிரியர் புரு÷ஷாத்தமன், ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பச... |
தமிழகம் | சமச்சீர் பாடங்கள் புறக்கணிப்பு மெட்ரிக் புத்தகம் வினியோகம் | அன்னூர்: அரசு அறிவிப்புக்கு மாறாக கோவை புறநகரில் சில தனியார் மெட்ரிக் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களுக்கு பதில் மெட்ரிக் பாட புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில், பள்ளிகளில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல பாடத்திட்டங்களின் கீழ் கல்வி பயிற்றுவிக்கப... |
தமிழகம் | காங்., கொடியேற்று விழா | பல்லடம்: காங்., கட்சியின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லடம் காங்., கட்சியினர் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடினர்.காங்., கட்சியின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு மருத்துவமனை அருகே கட்சி கொடியேற்று விழா நடந்தது.இளைஞர் காங்., பழனிவேல் ராஜ் தலைமை வகித்தார். பல்லடம் சட்டமன்ற இளைஞர் காங்., பொது செயலாளர் ராம... |
தமிழகம் | பாதாள சாக்கடை திட்டப்பணி ஆய்வு | கோவை: கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், நீர் சேகரிப்பு குழாய்கள் பதிக்கும் பணியை மேயர் வெங்கடாசலம்,கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து கோவை மாநகராட்சி அறிக்கை:கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை கால் வாய் திட்டத்தின்கீழ், நீர் சேகரிப்பு குழாய்கள் பதிக்கு... |
தமிழகம் | ஆய்வுக்கூட்டம் | ராமநாதபுரம்; மாவட்ட நூகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் பாலசுப்பிரமணியன் டி.ஆர்.ஓ., தலைமையில் நடந்தது. மாவட்ட வழங் கல் அலுவலர் நெல்லை வேந்தன், டாஸ்மாக் மண்டல மேலாளர் விஸ்வநாதன், பறக்கும் படைதாசில்தார் இந்திரஜித் உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். |
தமிழகம் | மூன்று பதிவு மாவட்டங்களின் எல்லைகள் மாற்றம் : | கிணத்துக்கடவு: திருப்பூர் மாவட்டம் உதயமானதைத்தொடர்ந்து, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட பதிவு மாவட்டங்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஆக., முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து புதிய திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.... |
தமிழகம் | செஸ் போட்டி நிறைவு | கோவை: இந்திய விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் செஸ் போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், நாக்பூரில் நடைபெறும் சாம் பியன் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்பர்.இந்திய விமானப்படை பயிற்சிக் கல்லூரி, கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ளது. விமானப்படையில் தலைமை மையத்தின் சார்பில் செஸ் போட்டிகள் நேற்று நிறைவு பெற்றன. ... |
தமிழகம் | திருத்த பட்டியலில் 8.26 லட்சம் வாக்காளர்கள் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் சுருக்கத்திருத்த பட்டியல் நேற்ற வெளியிடப்பட்டது. அதன்படி சட்டசபை தொகுதி வாக்காளர்கள் விபரம்: இப்பட்டியல் வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், போஸ்டு ஆபீஸ்கள், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா, நகராட்சி அலுவலங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சட்டசபை ஆ... |
தமிழகம் | நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்த அரசியல் அதிகாரிகள்: விழிப்பால் சொத்து மீட்பு | கோவை: காந்தி மாநகர் பகுதியில் 60 அடி நீளத்தில் நான்கரை கி.மீ., தூரமுள்ள நீர்நிலை புறம் போக்கை அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்து குடிசை போட்டனர். அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பல லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப் பட்டது. கணபதியிலுள்ள காந்திமாநகர் பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவில் 4,164 வீடுகள் வீட்டு வசதி வாரியத்தால்... |
தமிழகம் | ஆடு, மாடுகள் விஷ பூச்சிகள் இருப்பிடமாக கடலாடி பள்ளி | கடலாடி,: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று சுவர் இல்லாமல் ஆடு,ம õடுகள், விசப்பூச்சிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதனால், மாணவ, மாணவியர்கள் அச்சப்படுகின்றனர். கடலாடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுநீர் கழிக்க வசதியாக கட்டடம் இல்லாமல், வேலிக்கருவல் மறைவில் இருக்கவேண்டிய சூழலில் மாணவர்கள் உள்ளனர். பெண்கள் நிலை... |
தமிழகம் | அரசு பண்ணையில் மங்குஸ்தான் ரூ. 7.30 லட்சத்துக்கு ஏலம் | மேட்டுப்பாளையம்: கல்லாறு அரசு பழப்பண்ணையில் மங்குஸ்தான் பழம் அறுவடை செய்ய 7.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இரண்டு ஆண்டை விட இரண்டு மடங்கு விலை கூடுதலாக கிடைத்துள்ளது.மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு மலைப்பகுதி நீலகிரி மலை அடிவாரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. எலுமிச்சை, க... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல்வெளியீடு | பல்லடம்: பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, தாலுகா அலுவலகத் தில் தாசில்தார் குலோத் துங்கன், தேர்தல் துணை தாசில்தார் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.ஜன., 1ம் தேதி வரை 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர்களாக சேர்க் கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பார் வைக்காக பல்லடம் தாலுகா அலுவலகம், 71 ஓட்டுச்ச... |
தமிழகம் | சமச்சீர் பாடங்கள் புறக்கணிப்பு மெட்ரிக் புத்தகம் வினியோகம் | அன்னூர்,: அரசு அறிவிப்புக்கு மாறாக கோவை புறநகரில் சில தனியார் மெட்ரிக் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களுக்கு பதில் மெட்ரிக் பாட புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில், பள்ளிகளில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல பாடத்திட்டங்களின் கீழ் கல்வி பயிற்றுவிக்க... |
தமிழகம் | விபத்தில் வாலிபர் பலி | திருப்பூர்: கிருஷ்ணகிரி, பைப்பசெட்டிப்புதூரை சேர்ந்தவர் சீதாராமன். இவரது மகன் கார்த்தி (22). திருப்பூர் செரங்காடு பகுதியில் தங்கி, கம்பெனியில் வேலை செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, நண்பரின் "ஹோண்டா சைன்' பைக்கில் சென்றுள் ளார். செரங்காடு குடக்காரர் தோட்டம் அருகில் வேகத் தடை பகுதியில் சென்றபோது, பைக் தடுமாறி ரோட்டில... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | திருப்பூர்: திருப்பூர் அட்வகேட் அசோசியேஷனுக்கு, 2010-11ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தலைவராக சொக்கலிங்கம், துணை தலைவராக சுகுணாதேவி, செயலாளராக ராமசாமி, துணை செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக சுந்தர்ராஜன், ஆறு செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். |
தமிழகம் | மலைவாழ் மக்கள் பகுதியில்ரூ.1 கோடியில் குடிநீர் திட்டம் | பொள்ளாச்சி: ஆழியாறுக்குட்பட்ட மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை நீக்கும் வகையில், கோட்டூர் பேரூராட்சி சார்பில் புதிதாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஆழியாறுக்குட்பட்ட புளியங்கண்டி, மார்க்கெட் காலனி, ஆற்றுப்புறகாலனி, எல்.எப்.... |
தமிழகம் | பள்ளி சேர்க்கை ஊர்வலம் | திருப்பூர்: பள்ளி சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம், திருப்பூர் குமார் நகர் நகராட்சி ஆரம்பப்பள்ளி சார்பில் நடத்தப்பட்டது.கிராமக்கல்விக்குழு தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். பெண் கல்வியை போற்றுவோம்; கல்வியை கட்டாயமாக்குவோம்; கல்வி கற்பது அவசியம் என்ற தட்டிகளை ஏந்திச் சென்றனர... |
தமிழகம் | அரசு விற்கும் மானிய சிமெண்ட் விலை குறையுமா ? | பொள்ளாச்சி: வெளிமார்க்கெட்டில் தனியார் கம்பெனிகளின் சிமெண்ட் மூட்டை விற்பனை விலை குறைந்துள்ளதால், அரசு விற்பனை செய்யும் மானிய சிமெண்ட் மூட்டையின் விலையும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்களான சிமெண்ட், இரும்பு, மணல், செங்கல் போன்றவற்றின் விலை உயர்ந்து வந்ததால் வீடுகட்டும் பொதுமக்கள... |
தமிழகம் | விவசாயிகள் மறியல் போராட்டம் வாபஸ் | உடுமலை: ரோடு போடும் பணிகளின் போது சேதப்படுத்தப்பட்ட வாய்க்கால்களை சீரமைத்து தருவதாக ஒன்றிய அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும் உறுதியளித்துள்ளதால் மறியல் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றுள்ளனர்.உடுமலை அருகே எஸ். வல்லக்குண்டாபுரம் கிராமத்திலிருந்து சி.நாகூர் செல்லும் மண்பாதை கிராம இணைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார... |
தமிழகம் | வால்பாறையில் 25 மி.மீ., மழை | வால்பாறை,; வால்பாறையில் 25 மி.மீ., மழை பெய்தது. நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் அருவியாய் கொட்டுகிறது.வால்பாறையில் ஜூன் மாதம் முதல் தென்மேற்குப்பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையடுத்து மேல் நீராறு, அக்காமலை, கெஜமுடி, கீழ்நீராறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.வால்பாறை அடுத்துள்ள சின்னக்கல்லார... |
தமிழகம் | மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல் | மடத்துக்குளம்: உடுமலை அருகே, பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய கோரி மாணவர்கள், பெற்றோர் ஆறு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகேயுள்ள கணியூரில் அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, தமிழாசிரியராக மயில... |
தமிழகம் | வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு | வால்பாறை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வால் பாறை தாசில்தார் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் தாசில்தார் சந்திரன் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் போன்... |
தமிழகம் | ஐந்து ஊராட்சிகளில் வார்டு மறு சீரமைப்பு பணி | பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளில், முதல்கட்டமாக ஐந்து ஊராட்சிகள் வார்டுகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஊராட்சியில் ஒரு வார்டுக்கு பல உறுப்பினர்கள் இருக்கும் முறையை மாற்றி, வார்டுக்கு ஒரு உறுப்பினர் என்ற முறையில் சீரமைப்பு செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ஊராட்ச... |
தமிழகம் | குடும்ப பாதுகாப்பு நிதி | பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றிய மூன்று பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தனர். அதேபோன்று சிக்கஞ்செட்டியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றியவர் இறந்து விட்டார். அவர்களின் வாரிசுகளுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி தொகையாக தலா 1.50 லட்சம் வீதம், ஆறு லட்சம் ரூபாயை நகராட்சி தலைவர் ... |
தமிழகம் | தடுப்பணை பணிகளை தடுத்து நிறுத்திய ஊராட்சி நிர்வாகிகள் | உடுமலை: முறையான தகவல் அளிக்காமல், மாநில நெடுஞ்சாலையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பணை கட்டுமான பணிகளை ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி கிராம பிரிவு அருகே உப் பாறு ஓடை செல்கிறது. இந்த ஓடை பொள் ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலைய... |
தமிழகம் | என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம் | பொள்ளாச்சி: நரிக்கல்பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம் சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் நேற்று துவங்கியது. கோவை வேளாண் பல்கலை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார்.இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாம், கால்நடை பராமரிப்பு முகாம்,... |
தமிழகம் | ரேஷன் பணியாளர் சங்க கூட்டம் | சிங்கம்புணரி: ரேஷன் கடை பணியாளர் சங்க கூட்டம் சிங்கம்புணரியில் நடந்தது. வட்ட செயலாளர் சேம்ராஜ் தலைமை வகித்தார்.மாநில துணை தலைவர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாத்தையா பேசினார்.தீர்மானம்: அரசு அøமத்துள்ள ஒருநபர் குழுவிற்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் அதிகாரி நியமிக்க... |
தமிழகம் | உடற்கல்வி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம் | சிவகங்கை: அரசு, உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர்கள், தலைமை ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி முன்னிலை வகித்தார். பொதுக்குழுவின் செயலாளர் கண் ணப்பன், கடந்த ஆண்டு நடந்த போட்டிகள் குறித்து விளக்கம் அளித்தார். மன்... |
தமிழகம் | வரையாடுகளை பாதுகாக்கநடவடிக்கை எடுக்க கோரிக்கை | பொள்ளாச்சி; பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் வரையாடுகள் அதிகளவில் ரோட்டோரத்தில் சுற்றுவதால் ஆபத்து ஏற்படும் அபாயமுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், மாநில வனவிலங்கான வரையாடுகள் அதிகளவில் உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பில் 400க்கும் மேற்பட்ட வரையாடுகள் புலிகள் காப்பகத்தில் உள்ளன. சிறுத்தை, புலிகளின் முக்கிய உணவான வரையாடுகள் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.