category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பன்றிக்காய்ச்சல் எதிரொலி: சுற்றுலா தலங்களில் கண்காணிப்பு
சிவகங்கை: பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கானாடுகாத்தான், இடைக்காட்டூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், வெளிநாட்டு பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழக சுகாதார துறையும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கண்காணிக்க உத்தரவி...
தமிழகம்
எலக்ட்ரிசியன் பலி
உடுமலை: உடுமலையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசியன் இறந்தார்.உடுமலை ஸ்ரீ ராம் நகரிலுள்ள வீட்டில் மின் சாதனங்கள் பொருத்தும் பணியில் ஏழு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  நேற்று மதியம் பணியில் இருக்கும் போது, மின்சாரம் தாக்கி கங்காதரன் லே அவுட்டை சேர்ந்த எலக்ட்ரிசியன் விக்னேஷ் (20) இறந் தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விச...
தமிழகம்
அரசு மருத்துவமனையில் சமுதாய சமையல் கூடம்
உடுமலை : உடுமலை அரசு மருத்துவமனையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாரத் காஸ் நிறுவனம் சார்பில் சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம், பி.என்.ஜி., ஆகிய துறைகளின் பரிந்துரையின்படி, மாநிலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களின் வசதிக்காக சமுதாய சமையல் கூட அமைக்க அறிவுறுத்தப்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் கவுரவம் கேள்விக்குறியாகும் மேற்படிப்பு
காரைக்குடி: உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் விருது பெற்ற காரைக்குடி கல்லூரி மாணவர் முத்துவேலு (21),வறுமையால் மேற்படிப்புக்கு வழியின்றி தவிக்கிறார். காரைக்குடி அருகே பாதரக்குடியை சேர்ந்த இவர், தாய் ராஜேஸ்வரி, சகோதரர் பொன்னுச்சாமியுடன் வசிக்கிறார். தந்தை முத்து பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டார். சி...
தமிழகம்
வட்டார கல்விக்குழு கூட்டம்
உடுமலை: உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார கல்விக்குழு கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., முகமது உசேன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., (ஊராட்சிகள்) மரியடெல்லஸ் முன்னிலை வகித்தார்.உடுமலை அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் தனபாக்கியம் வரவேற்றார். உதவித்தொடக்க கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன், கூடுதல் உதவித்தொடக்க கல்வி அலு...
தமிழகம்
போலீஸ் எஸ்.ஐ., எழுத்து தேர்வு : தேர்வாணையம் கெடுபிடி
சிவகங்கை: நாளை துவங்கும் எஸ்.ஐ., பதவிக்கான தேர்வில், விண்ணப்பதாரரின் உறவினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது. தேர்வு மையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடவேண்டும், எஸ்.பி.,க்களுக்கு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் கடுமையான உத்தரவிட்டுள்ளது. போலீசில் 1,095 ஆண், பெண் எஸ்.ஐ., பதவிகளுக்கான தேர்வு நாளை துவங்குகிறது. இதில் ...
தமிழகம்
வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு குறைகள் நிவர்த்தி செய்ய அழைப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆர்.டி.ஓ., நேற்று வெளியிட்டார். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை ஆகிய ...
தமிழகம்
கேரளாவில் மாட்டு வியாபாரிகள் ஸ்டிரைக் பொள்ளாச்சியில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு
பொள்ளாச்சி: கேரளாவில் மாட்டு வியாபாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக 90 சதவீதம் மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீதமுள்ள 10 சதவீத மாடுகள் வளர்ப்பதற்காக விற்கப்படுகின்றன. பொள்ளாச்சி மாட்டுச்...
தமிழகம்
வீர விருது பெற்ற தமிழருக்கு 2 லட்ச ரூபாய் பரிசு
கோவை: அசோக் சக்ரா வீர விருது பெற்ற கோவை இளைஞருக்கு தமிழக அரசின் சார்பில் 2 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்குமார் (29); டேராடூனில் உள்ள ராணுவக்கல்லூரியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் வீர தீர சாகச செயல்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக் சக்ரா வீர விருத...
தமிழகம்
மத்திய சிறையில் கைதிகளுக்கு தயாராகும் உணவை பரிசோதித்த நீதிபதிகள்
கோவை: மத்திய சிறையில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக கூறி கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததால் நேற்று முன் தினம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று நீதிபதிகள் சிறைக்குள் சென்று கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை பரிசோதித்தனர். கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 2,200 பேர் அடைக்கப் பட்டுள்ளனர். நேற்று முன்...
தமிழகம்
பள்ளிகளுக்கு செலவின நிதி ஒதுக்குவதில் தாமதம்
தேவாரம்: நடப்பு கல்வி ஆண்டிற் கான எழுது பொருள் மற்றும் சில்லரை செலவினங்களுக்கான நிதி அனைத்து ஒன்றிய பள்ளிகளுக்கும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் கதிர்காமன் கூறியதாவது; உத்தமபாளையம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான ஊக...
தமிழகம்
வெண் பன்றி வளர்ப்பு குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தில் கால்நடைகள் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.நீர்வள நிலவள திட்டம், நல்லாவூர் ஆறு உப வடிநில பகுதி சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் அப்துல்சமது முகாமை துவக்கி வைத் தார். கால்நடை மருத்துவர்...
தமிழகம்
கோஷ்டி மோதல்:7பேர் கைது
ஜெயமங்கலம்: அ.புதூரில் இருதரப்பினர் கோஷ்டியாக மோதிக் கொண்டதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் ஒன்றியம், அ.புதூரைச் சேர்ந்த முருகன் மற்றும் பெரியகருப்பன் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. இவர்களுக்கு சொந்தமான வயல...
தமிழகம்
செஞ்சி தாலுகாவில் கலந்தாய்வுக் கூட்டம்
செஞ்சி: செஞ்சி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.செஞ்சி தாலுகாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள கணக்கீட்டாளர்கள், மேற் பார்வையாளர்களுடன் பணி முன்னேற்றம் குறித்த கலந்தாய்வு நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மீனாட்சி தலைமை தாங்கினார். சப் கலெக்டர் (பயிற்சி...
தமிழகம்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
உளுந்தூர்பேட்டை; பாதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. உளுந்தூர் பேட்டை சண்முகம் நினைவு கல்வி மன்றம் சார்பில் மாணவ, ...
தமிழகம்
நகராட்சி மரங்கள் கடத்தல் கவுன்சிலர் குற்றச்சாட்டு
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சீத்தாலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) மோனி, துணைத்தலைவர் அப்துல்சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு:பன்னீர்செல்வம்: நகராட்சி கூட்டம் நடக்கும் போதெல்லாம் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுகிறது. கூட்டம் நடப்பது குறித்து அஜண் டாவை மின்அலுவலகத்திற்கு...
தமிழகம்
சேஷசமுத்திரம் கிராம மக்கள் வரும் 5ம் தேதி உண்ணாவிரதம்
சங்கராபுரம்: சேஷசமுத்திரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கண் டித்து வரும் 5ம் தேதி உண் ணாவிரதம் நடக்கிறது. தமிழக முதல்வருக்கு சேஷசமுத்திரம் கிராம மக் கள் அனுப்பியுள்ள மனு: சங்கராபுரம் ஒன்றியம் சேஷசமுத்திரம் குன்று மேட்டு தெருவில் வசிக் கும் சிலர் பொது குடிநீர் குழாயில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்து வருக...
தமிழகம்
அகரகோட்டாலம் கிராமத்தில்மின் நுகர்வோர் குறைகேட்பு
கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அமலோற்பவநாதன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் கவிதா முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடமிருந்து குடிசை வீட்டிற்கான இலவச மின்சாரம், டிரான்ஸ்பார்மர் பழு...
தமிழகம்
தேவாங்கர் பாலிடெக்னிக் துவக்கம்
தேவதானப்பட்டி: தேவாங்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் தேவதானப்பட்டி தண்ணீர் பந்தல் அருகில் தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரி இந்த கல்வியாண்டு முதல் செயல்பட உள்ளது. கல்லூரி தலைவர் நித்யானந்தம், செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது; இருபாலரும் பயிலும் கல்லூரியில் 10ம் வகுப்பில் 60 முதல் 74 சதவீத மார்க் பெற்றவர்களுக்கு ...
தமிழகம்
திண்டிவனம் நகர பகுதியில்மின் நிறுத்த நேரம் மாற்றம்
திண்டிவனம்: திண்டிவனம் நகரில் மின்நிறுத்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.திண்டிவனம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அப்துல் ரஹீம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:திண்டிவனம் நகரில் மூன்று மின்பாதைகளில் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நேற்று முதல் மின் நிறுத்த நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்படி நேரு வீதி, செஞ...
தமிழகம்
விலைவாசி இந்த ஆட்சியில் மட்டுமா ஏறுகிறது : அமைச்சர் பொன்முடி கேள்வி
உளுந்தூர்பேட்டை: விலைவாசி இந்த ஆட் சியில் மட்டுமா ஏறுகிறது என அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.திருவெண்ணெய் நல்லூர் அடுத்த சித்தலிங்கமடத்தில் அரசின் இலவச டிவி வழங்கும் விழா நடந் தது. கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினர். ஊராட்சி தலைவர் பொன்னன் வரவேற்றார். உயர் கல்வித்துறை அமைச் சர் பொன்முடி கலந்து கொண்டு...
தமிழகம்
சீருடை பணியாளர் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
தேனி: சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகசுந்தர் கூறியதாவது; தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கான சிறப்பு பயிற்சி வக...
தமிழகம்
மனுநீதி நாள் முகாம்
விழுப்புரம் விழுப்புரம் வட்டம் நல்லாப்பாளையம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். கலிவரதன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., முத்துசாமி முன் னிலை வகித்தனர். நல் லாப்பாளையம் கிராம மக் களிடமிருந்து 202 மனுக் கள் பெறப்பட்டது.முகாமில் 55 பேருக்கு பட்டா மாறுதல், 53 பேருக்கு பழங்குடியினர் சாதிச்ச...
தமிழகம்
செம்மொழி கண்காட்சிக்காக பள்ளி மாணவர்களிடம் வசூல் வேட்டை
கோவை: கோவையில் நடைபெற்று வரும் செம்மொழி கண்காட்சி அரங்கை காண அழைத்து வரப்படும் பள்ளி மாணவர்களிடம், அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச கண்காட்சிக்கும் பள்ளி நிர்வாகிகள் கட்டணம் வசூலித்து பெற்றோரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.செம்மொழி மாநாட்டையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில், பண்டைத் தமிழர் நாகரீ...
தமிழகம்
கோவை மாவட்டத்தில் 18 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள்
கோவை: கோவை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலில், 18 லட்சத்து 81 ஆயிரத்து 516 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி முதல் தேதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பின், வீடு வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக பெயர் சேர்க்கவும், முகவரி மாறியவர்களின் பெயர்களை...
தமிழகம்
பொறியியல் மேற்படிப்பு விண்ணப்பம் விநியோகம்
விழுப்புரம் விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் மேற்படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவங்கியது. தமிழகத்தில் எம்.டெக்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட பொறியியல் பட்ட மேற்படிப்பிற்கான பொது மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த மே 29ம் தேதி துவங்கி டான் செட் நுழைவுத் தேர் வுகள் இரண்டு நாட்கள் நடந்தது...
தமிழகம்
விருது பெற்றவருக்கு பாராட்டு விழா
தேனி அரவிந்த் கண் ஆஸ் பத்திரி தலைவர் நம்பெருமாள்சாமி க்கு தேனி மாவட்ட அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் பராட்டு விழா தேனியில் நடந்தது. உலகில் தலை சிறந்த 100 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரி தலைவர் நம்பெருமாள் சாமி தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதற்கான பாராட்டு விழா ராமகிருஷ் ணன் எம்.எல்.ஏ., த...
தமிழகம்
ஒருவர் பலி
தேனி: பெரியகுளம் வடகரை பட்டாபுளி மேலத்தெருவை சேர்ந்தவர் முத் தையா (58). இவர், ரோட்டில் நடந்து சென்றபோது ஜீப் மோதி இறந்தார். பெரியகுளம் போலீசார் டிரைவர் அஜ்மல்கானை கைது செய்தனர்
தமிழகம்
ஒருவர் கைது
தேனி: போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (49). நேற்று முன்தினம் இரவு இவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இதே பகுதியை சேர்ந்த திருப்பதி (25) உள்ளே புகுந்து திருட முயன்றார். அப்போது ஞானசேகரன் விழித்துக் கொண்டதால், திருப்பதியை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற...
தமிழகம்
தற்கொலை
தேனி: தேனி என்.ஆர்.டி., நகரை சேர்ந்தவர் பிரிஜேஸ் (30). இவருக்கு திருமணம் ஆகி 40 நாள் ஆகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் பிரிஜேஸ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
தேனி: கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் மகேஷ்ராஜா கூறியதாவது; தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான, 16 வயதிற்கு உட்பட்டோருக்கு தேனி மாவட்ட கிரிக்கெட் அணிக் கான தேர்வு நடைபெற உள்ளது. 1994 செப்டம்பர் 1 க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். இதில் பங்கு பெறும் வீரர்கள் தங்களுடைய வயது சான்றிதழுடன் ...
தமிழகம்
பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு
கூடலூர்: பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காக திறந்து விடப்படும் நீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காக ஜூன் 21 ல் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு பின் 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின் மழை குறைவால் அணையில் இருந்...
தமிழகம்
வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் தொலைதூர கல்வியில் சான்றிதழ் படிப்புகள்
விழுப்புரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற் றும் தொலைதூர கல்வி இயக்ககத் தின் மூலம் 21 சான்றிதழ் படிப் பிற் கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.தமிழ்நாடு வேளாண்மை பல் லைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் மூலம் மகளிர் மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும்வகையில் சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட...
தமிழகம்
சுத்தானந்தன் படத்திறப்பு விழா
விழுப்புரம்: தென் னிந்திய செங்குந்த மகா ஜன சங்க தலைவர் மறைந்த சுத்தானந்தன் படத்திறப்பு நடக்கிறது. விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நாளை காலை நடை பெறும் விழாவிற்கு செங் குந்தர் சங்க இளைஞரணி மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்குகிறார். சுத் தானந்தன் படத்தை மாநில இளைஞரணி அமைப் பாளர் திருமாவளவன் திறந்து வைக்கிறார். ஏற் ...
தமிழகம்
133 டன் பாய்லர் ஏற்றி வந்தலாரிக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்
விக்கிரவாண்டி: அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுவாமிநாதன், ஜெய்சங்கர் ஆகியோர் விக்கிரவாண்டி டோல் கேட் அருகே நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். திருச்சியிலிருந்து சென்னைக்கு ம...
தமிழகம்
செஞ்சி ஆக்கிரமிப்பு அகற்றம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
செஞ்சி: செஞ்சி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வக்கீல் சக்திராஜன் என்பவர் முதன்மை மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கடந்த ஏப். 28ம் தேதி நீதிபதி ...
தமிழகம்
கொள்ளிடம் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாண்டியன், ஆணையர் திருமலைவாசன், மேலாளர் கிளமண்ட் அந்தோணிராஜ், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், கணக்கர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட விவாதம் வருமாறு: குகநாதன் (காங்.,): கொள்ளிடம் குடிநீர் சரிவர கிடைக்க...
தமிழகம்
தி.மு.க., நகராட்சி தலைவர் பதவி விலகக் கோரி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி: மன்னார்குடி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்தும், நகராட்சி தலைவர் பதவி விலகக் கோரியும், நகராட்சி நுழைவாயில் முன் கண்களில் கறுப்பு துணி கட்டிக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி கூட்டம் தலைவர் கார்த்திகா உத்தமன் (தி.மு.க) தலைமையி...
தமிழகம்
பள்ளி மாணவன் கடத்திக் கொலை:வாலிபருக்கு இரட்டை ஆயுள்
மரக்காணம்:மரக்காணத்தில் பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் சிறை மற்றும் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர் ராமமூர்த்தி. இவரது வளர்ப்பு மகன் மணிகண்டன்(10). இவர், கடந்த 2007ம் ஆண்டு அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்...
தமிழகம்
ஆழித்தேரோடும் வீதிகளில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
திருவாரூர்: திருவாரூரில் ஆழித்தேரோடும் வீதிகளில் சிமென்ட் சாலை 5.76 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணியை கலெக்டர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார். உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் ஆழித்தேரோட்டம் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில், ஆழித்தேரோடும் நான்கு வீதிகளும் நிரந்தரமாக சிமென்ட் சாலை அமைக்க சுற்றுலாத்துறை ...
தமிழகம்
டெல்டா ரோட்டரி சங்க சாசன பதவியேற்பு விழா
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கத்தால் முன்மொழியப்பட்ட திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்க சாசன பதவியேற்பு விழா நடந்தது. தாய் சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுனர் கோவிந்தராஜ், டெல்டா ரோட்டரி சங்க புதிய தலைவராக கணேசன், செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் ரகுராமன் மற்றும் நிர்வ...
தமிழகம்
நெல்லையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
திருநெல்வேலி:கடையநல்லூரில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். மேலக்கடையநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அலங்காரம். இவரது மகள் நாககோபிகா(2). இவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. கடையநல்லூர் தனியார் மருத்துவமனை, நெல்லை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.த...
தமிழகம்
போலி ஆவணம் தயாரித்துநிலம் விற்க முயன்றவர் கைது
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே போலி ஆவணம் தயாரித்து, நிலத்தை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.வடமதுரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(70). இவரது முதல் மனைவி ஜெயலட்சுமி, இரண்டாவது மனைவி ரெங்கநாயகி. இவர்களுக்கு பத்து குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணணுக்கு, வடமதுரை - வேடசந்தூர் ரோட்டில், ஏழு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் நான்...
தமிழகம்
குடந்தையில் நாளை மூப்பனார் சிலை திறப்பு: முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு
கும்பகோணம்: கும்பகோணத்தில் நாளை காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் உருவ வெங்கல சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில், மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால், முன்னேற்பாடு பணிகளை நேற்று தஞ்சை கலெக்டர் சண்முகம் நேரில் ஆய்வு செய்து, அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கும்ப...
தமிழகம்
காணாமல் போன மாணவி பெற்றோரிடம் ஒப்படைப்பு
குளித்தலை: பல்லடம் அருகே சின்னகவுண்டன்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரை மகள் எஸ்தர்மேரி(15). பல்லடம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்றார். கடந்த மாதம் 21ம் தேதி பல்லடத்தில் இருந்து குளித்தலை அருகே கடவூரில் வசிக்கும் தாத்தா வண்ணத்து சின்னப்பன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், அடுத்த நாளே அவர் காணாமல் போனதாக, தந்தை ...
தமிழகம்
கரூரில் பி.எம்.எஸ்., நிர்வாகிகள் கூட்டம்
கரூர்: பி.எம்.எஸ்., மாவட்ட அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் அகில பாரத துணை தலைவர் சதாசிவா தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மத்திய அரசு ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலையை உயர்த்தியுள்ளது. மேலும், பெட்ரோல், டீஸல் வில...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கான கல்வி விழிப்புணர்வு பேரணி
கும்பகோணம்: கும்பகோணத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கும்பகோணம் மகாமக குளம் கரையில் இருந்து துவங்கிய பேரணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணிக்கு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், அன்பழகன், நகராட்சி த...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இரண்டு நாள் சிறப்பு முகாம் அறிவிப்பு
தஞ்சாவூர்: 'கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு ஜூலை ஒன்றாம் தேதி ஒரு சுருக்க முறைத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர தங்கள் வீட்டருகே உள்ள வரையறுக்கப்பட்ட மையங்களில் படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்' என கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டார். க...
தமிழகம்
தஞ்சையில் மக்கள் நேர்காணல் முகாம்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் ஜூன் 23ம் தேதி திருவிடைமருதூர் தாலுகா திருமாந்துறையில் டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் தலைமையில் நடக்க இருந்த மக்கள் நேர்காணல் முகாம் ஜூலை 14ம் தேதி நடக்கிறது. பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு கிராமத்தில் ஜூலை 14ம் தேதி நடக்...
தமிழகம்
பெட்ரோல், டீஸல் உயர்வு கண்டித்து சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தலைமை தபால் ஆஃபீஸ் முன் நகர சி.ஐ.டி.யூ., மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய், காஸ் விலை உயர்வை கண்டித்தும். இதை உடன் வாபஸ் பெற வேண்டும். விலை நிர்ணய உரிமையை முதலாளிகளுக்கு வழங்கக்கூடாது. மக்கள் வாழ்வை சீரழிக்கக்கூடாது. முதலாளிகளின் லாப வெற...
தமிழகம்
வேளாண்சார் சான்றிதழ் கல்வித் திட்டம் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கரூர்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திறந்த வெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் வேளாண் சார்ந்த சான்றிதழ் படிப்புகள் குறித்து இயக்குனர் வள்ளுவபாரிதாசன் அறிவித்துள்ளார்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்று...
தமிழகம்
நூலகத்துறை பணியாளர் கழக நிர்வாகிகள் தேர்வு
கரூர்: தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர்கள் கழகம் கிளை கரூர் மாவட்டக்கூட்டம் மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமையில் நடந்தது.மாநில துணை பொதுச்செயலாளர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். தலைவராக உப்பிடமங்கலம் கிளை நூலக நூலகர் பிச்சை முத்து, துணை தலைவராக லாலாப்பேட்டை தர்மர், செயலாளராக மருதூர் ஆனந்தகணேசன், பொருளாளராக ...
இந்தியா
மைசூர் அருகே ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
மைசூர்: கர்நாடக மாநிலம் கொல்லேகால் கிராமத்தில் உள்ள பஸ்ஸ்டாண்ட் அருகில் 200 ஜெலட்டின் குச்சிகள் கிடந்ததாக கிராம போலீசார் தெரிவித்தனர்.மேலும்அவர்கள் தெரிவிக்கையில் இந்த அளவிற்கான குச்சிகளின் தேவை மற்றும் இதனை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்திவருவதாக தெரிவித்தனர்.
தமிழகம்
குடந்தையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு சரிபார்த்துக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு
கும்பகோணம்: கும்பகோணம் கோட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று ஆர்.டி.ஓ., அசோக்குமார் வெளியிட்டார். வரவுள்ள சட்டசபை தேர்தலில் 18 வயது நிரம்பிய தகுதி படைத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் 2010 ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு சேர்க்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கும்...
தமிழகம்
நெடுஞ்சாலையில் குகைவழிப் பாதை வீரராக்கியம் மக்கள் உண்ணாவிரதம்
கரூர்: கிருஷ்ணராயபுரம் தாலுகா, வீரராக்கியம் அருகே இடமாற்றப்பட்ட பஸ் ஸ்டாப் மீண்டும் பழைய இடத்தில் அமைக்கவும், நெடுஞ்சாலையில் குகைவழிப்பாதை அமைக்கக் கோரி பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வீரராக்கியம் அருகே ஏற்கனவே இருந்த பஸ் ஸ்டாப் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்தது. இந்...
தமிழகம்
டாஸ்மாக் கடையில் தகராறு ஒருவர் காயம்; இருவர் கைது
க.பரமத்தி: சின்னதாராபுரம் டாஸ்மாக் மதுக்கடையில் மதியக்கூடலூரை சேர்ந்த ராமலிங்கம்(65) மது வாங்கிக்கொண்டு மீதி தொகை கேட்டுள்ளார். அப்போது சின்னதாராபுரத்தை சேர்ந்த பாண்டியன்(42), முருகேசன்(45), தொக்கப்பட்டி ராஜேஷ்(50) ஆகியோர் மதுபானம் கேட்டு வந்தனர்.தங்களுக்கு மதுபானம் அளித்துவிட்டு, ராமலிங்கத்துக்கு பாக்கி தொகை அளிக்க கூ...
தமிழகம்
கல்லூரி நிர்வாகத்துக்கு எதிரான தட்டியை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
குளித்தலை: குளித்தலை அரசு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன தட்டி வைத்ததை எதிர்த்து, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் தலைமையில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.குளித்தலையில் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. இரண்ட...
தமிழகம்
காணாமல் போன மாணவி பெற்றோரிடம் ஒப்படைப்பு
குளித்தலை: காணாமல் போனதாக தேடப்பட்ட மாணவி, மீட்கப்பட்டு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.பல்லடம் அருகே சின்னகவுண்டன்பாளையத்தை சேர்ந்த செல்லத்துரை மகள் எஸ்தர்மேரி(15). பல்லடம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்றார். கடந்த மாதம் 21ம் தேதி பல்லடத்தில் இருந்து குளித்தலை அர...
தமிழகம்
சிலை திறப்பு
குளித்தலை: குளித்தலை அடுத்துள்ள நெய்தலூரில் சமத்துவபுரத்தில் ஈ.வெ.ரா., சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திட்ட அலுவலர் கவிதா திறந்து வைத்தார்.பஞ்சாயத்து தலைவர் வேலாயுதம், துணை தலைவர் முருகேசன், யூனியன் கமிஷ்னர் மணி, கவுன்சிலர்கள் ஞானசேகர், இந்திரா, மற்றும் கிளார்க் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம்
ஜோதிட ஆராய்ச்சியாளர் மாநாடு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் தென்னிந்திய ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடந்தது.ஸ்ரீரங்கம் தெற்குவாசல் ஆர்யவைஸ்யா தர்மசத்திரத்தில் நடந்த மாநாட்டுக்கு முரளி பட்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்க செயலாளர் விஜயசாரதி அனைவரையும் வரவேற்றார். பஞ்சாங்க ஆசிரியர் சபரி சதாசிவம், சிவதாசன் ரவி கோவை கவிதா, சேலம...
தமிழகம்
தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., பிரதிநிதிகள் கூட்டம் நாளை கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்.பி., பழனிசாமி, கொள்கை பரப்பு அணி இணை செயலாளர் சண்முகம், முன்னாள் எம்.பி., சின்னசாமி முன்னிலை வகிக்கின்றனர். நிர்வாகிகள் பங்கேற்குமாறு மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் தெரிவித...
தமிழகம்
வள்ளுவர் கல்லூரியில் போதை எதிர்ப்பு நாள்
கரூர்: கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் என்.எஸ்.எஸ்., முகாம் திட்டத்தில் உலக போதை மருந்து கடத்துதல் மற்றும் தவறாக பயன்படுத்துவதற்கான எதிர்ப்பு நாள் கடைபிடிப்பு கல்லூரியில் நடந்தது. கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டிகள் நடந்தன. போதையில்ஏற்படும் வீழ்ச்சி, கள்ளுண்பவன் கற்றும் கல்லாதவன் என்ற தலைப்புகளில் கட...
தமிழகம்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
திருச்சி: திருச்சி பெரியமிளகுபாறையைச் சேர்ந்தவர் லூயிஸ். பெயிண்டர். இவரது மனைவி மாலா. நேற்று முன்தினம் காலை லூயிஸ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி மாலாவோ பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். 2 மணி நேரம் கழித்து மாலா வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறையி...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 9,78,000 வாக்காளர்கள்
தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வெளியாகிய வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 78 ஆயிரம் வாக்காளர் இடம் பெற்றுள்ளனர். வழக்கம் போல் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். புதிய வாக்காளர் சேர்க்க முதல் நாளான நேற்று மக்கள் ஆர்வம் காட்டினர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் நேற்ற...
தமிழகம்
தா.பேட்டை யூனியனில் பட்டா மாறுதல் முகாம்
தா.பேட்டை: தா.பேட்டை யூனியனில் உள்ள வளையெடுப்பு, தும்பலம், புலிவலம் ஆகிய கிராமங்களில் பட்டா மாறுதல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது.மண்டல துணை தாசில்தார் கஸ்தூரி ரங்கன் தலைமையில் வளையெடுப்பு கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 46 மனுக்கள் பெறப்பட்டு, 41 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஐந்து மனுக்கள் த...
தமிழகம்
கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டி :  கோவில்பட்டியில் சுகாதாரமின்றி செயல்படும் கழிவறைக்கு செப்டிக் டே ங்க் கட்டக்கோரி சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலருடன் பொதுமக்களும் தேமுதிகவினரும் மாவட்ட கலெக்டரை முற்றுகையிட் டு மனுக் கொடுத்தனர். கோவில்பட்டி நகராட்சியின் 18வது வார்டு ஊரணித் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வர...
தமிழகம்
பாடத்தில் வரக் கூடிய ஒரு சிலவற்றை நேரடியாக அவர்கள் கண்டறியும் புதிய முறை
தூத்துக்குடி: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடத்தில் வரக் கூடிய ஒரு சிலவற்றை நேரடியாக அவர்கள் கண்டறியும் வகையில் அவர்களை முக்கிய இடத்திற்கு அழைத்து சென்று அவர்கள் அதனை எளிதில் புரிந்து கொள்ள செய்யும் புதிய முறை நேற்று தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் ப...
தமிழகம்
துறையூர் பகுதியில் மின் ஆய்வு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வசூல்
துறையூர்: துறையூர் பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய, இணைப்புகளில் மின்திருட்டு, விதிமீறல் செய்தவர்களிடம் 55 ஆயிரத்து 680 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.மின்வாரிய துறையூர் கோட்ட செயற்பொறியாளர் கருப்பையா தலைமையில் துறையூர் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள், களப்பணியாளர்கள் ...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு., ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம்,:  எட்டயபுரத்தில் பெட்ரோல் டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  விலை உயர்வு அø னத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.  இந்நிலையில் பெட்ரோல் டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து எட்டயபுரத்தில் சி....
தமிழகம்
பெட்ரோல் உயர்வுக்கு எதிர்ப்பு: ஆட்டோ ஓட்டுநர் அட்டை அணிந்து பணி
தூத்துக்குடி : தூத்துக்குடியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணி செய்தனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 5ம் தேதி அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேலைநிறுத்தம் நடக்கிறது. இன்று இதனை கண்டித்து இடதுசாரி இயக்...
தமிழகம்
ஐடியல் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று துவக்கம்
தூத்துக்குடி:  தூத்துக்குடி அழகர் மஹாலில் ஐடியல் ஹோம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்குகிறது.தூத்துக்குடியில் 17வது முறையாக ஐடியல் ஹோம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சனி மற்றும் ஞாயி...
தமிழகம்
முசிறியில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா
முசிறி: முசிறியில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி இந்திய மருத்துவ கழக மண்டபத்தில் நடந்தது.உறுப்பினர் செல்வம் வரவேற்றார். துறையூர் நீதித்துறை நடுவர் எழில் வேலவன் முன்னிலை வகித்தார். தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் சுப்ரமணியன், துளசிநாதன், ரமேஷ்பாபு, செயலாளர் வெங்கட்ராமன் பேசினர்....
தமிழகம்
அகரம் பெருமாள் கோயிலில் கருட சேவை
வல்லநாடு, ஜூலை 2- வல்லநாடு அருகேயுள்ள அகரம் தசாவதார பெருமாள் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் அஞ்சேல் என்ற தசாவதார பெருமாள் கோயில்களின் முதலாமாண்டு வருஷாபிஷேகத்தை முன்ன...
தமிழகம்
விஸ்வ ஹிந்து பரிஷத் செயல்வீரர்கள் கூட்டம்
வல்லநாடு :  வல்லநாட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் கருங்குளம் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வல்லநாட்டிலுள்ள சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு கருங்குளம் ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்கராஜ்பாண்டியன் மற்றும் நங்கமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் தளபதிகைலாசம் முன்னிலை வகித்தார். கூட்ட...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உரிமையுள்ள பாத்தியப்பட்ட கிராமங்களில் வசிக்கும் எஸ்.சி., மக்களுக்கு, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கோரி புதிய தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற ஆர...
தமிழகம்
நஷ்டஈடு வழங்காதஅரசு பஸ் ஜப்தி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் அரசு பஸ்சை தூத்துக்குடி முதலாவது விரைவு மன்றம் ஜப்தி செய்தது.தூத்துக்குடி அருகே முள்ளக்காடு நேசமணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் இளையராஜ் (18). இவர் உறவினர் ஒருவருடன் முள்ளக்காடு பஸ்ஸ்டாப் பகுதியில் சைக்கிளில...
தமிழகம்
புதூர் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள்வேலை நிறுத்தம்
புதூர் :  புதூர் அருகே உள்ள நாகலாபுரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நாகலாபுரம் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் நடந்தது.தலைவர் சாமிகன்னு தலைமையில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நாகலாபுரம் சுற்ற...
தமிழகம்
அதிசய இரட்டை மாம்பழம்
காயல்பட்டணம்: காயல்பட்டணம் சீதக்காதி தெருவில் அதிசயமான மாம்பழம் விற்பனைக்கு வந்தது. இதை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர். காயல்பட்டணம் சீதக்காதி தெருவில் பாரூக் அலி மகன் அப்துல்லா. இவரிடம் இந்த அதிசயமான இரட்டை மாம்பழம் கிடைத்ததால் அந்தப் பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.
தமிழகம்
நிதியில் முறைகேடு பணத்தை திருப்பி செலுத்த உத்தரவு
ஈரோடு: மொடக்குறிச்சி யூனியனில், அரசு ஊக்கத்தொகையில் கட்டப்படும் கழிப்பிடம் கட்டுவதில் முறைகேடு காரணமாக, பணத்தை திருப்பி செலுத்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மொடக்குறிச்சி யூனியன், புஞ்சை காளமங்கலம் பஞ்சாயத்து பொதுமக்களுக்கு, 2007-09ல் இலவச கழிப்பிட வசதி கட்டப்பட்டது. முழு சுகாதார இயக்கத்தி...
தமிழகம்
வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைந்த சம்பளம் வழங்கியதை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதை கண்டித்து தொழிலாளர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பஞ்சாயத்திக்குட்பட்ட நெடுவாசல் கிராமத்தில் உள்ள விளாங்குட...
தமிழகம்
ஜெயேந்திர சுவாமிகள் சுரண்டைக்கு வருகை
சுரண்டை:சுரண்டைக்கு இன்று (2ம் தேதி) ஜெயேந்திர சுவாமிகள் வருகை புரிகிறார்.சுரண்டையில் ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி கடந்த 1995ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை கல்வியில் மட்டுமல்லாமல் பல்வேறு கலைகளிலும் சாதனை படைத்து வருகின்றது. இங்கு சிறந்த போதனை அளிக்கப்படுவதால் மாணவர்கள் சிறந்த சாதனை படைத்து வருகின்றனர். தற்போது இப்...
தமிழகம்
திருச்செந்தூர் புதிய பஸ் ஸ்டாண்டை திறக்க வலியுறுத்தி வரும் 17ல் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி:   திருச்செந்தூரில் பல லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டை இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததைக் கண்டித்து வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக., செயலாளர் ஜோயல் விடுத்துள்ள அறிக்கையில் கூறி...
தமிழகம்
இலத்தூர் கோயிலில்கும்பாபிஷேகம்
புளியரை;இலத்தூர் மூலிகை பண்ணை நாகலிங்க சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இலத்தூர் சனிபரிகார கோயில் அருகே மூலிகை பண்ணை உள்ளது. இப்பண்ணையில் உள்ள நாகலிங்க சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு முதல் நாள் மாலை மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை நட...
தமிழகம்
ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்ராக் சங்க பதவியேற்பு விழா நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்...
தமிழகம்
ரூ.2 சம்பளத்தில் அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்கள்
தூத்துக்குடி: இரண்டு ரூபாய் சம்பளத்திற்கு தினமும் வேலை செய்யும் எங்கள் மீது முதல்வர் கடைக்கண் பார்வை விழ வேண்டும் என்று கலெக்டர் ஆபிசில் தற்காலிக ஊழியர் ஒருவர் மனு கொடுத்தார். இந்த காலத்தில் இப்படி ஒரு சம்பளமா என்று அனைவரும் வியந்தனர். தமிழகத்தில் மாதத்திற்கு பல ஆயிரம் சம்பளம் வாங்குவோரும் இருக்கின்றனர். மாதத்திற்கு 6...
தமிழகம்
பத்தமடை அருகே டிராக்டரின்டயரில் சிக்கி டிரைவர் பலி
சேரன்மகாதேவி:பத்தமடை அருகே டிராக்டரின் டயரில் சிக்கிய டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.பத்தமடை நம்பிராஜன் தெருவை சேர்ந்தவர் பாப்புதேவர் மகன் சங்கர் (38). விவசாய தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பிரமநாயகம் என்பவரின் டிராக்டரில் டிரைவராக இருந்தார். நேற்று இவர் கரிசூழ்ந்தமங்கலம் அருகே கான்சாபுரம் பகுத...
தமிழகம்
மணல்கடத்தலை தடுக்க சென்ற இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்லமுயற்சி:கல்லிடை அருகே 3பேர் கைது
அம்பாசமுத்திரம்:கல்லிடைக்குறிச்சி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதுகல்லிடைக்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட மணிமுத்தாறு பிரதான கால்வாய் பகுதியிலிருந்து அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட...
தமிழகம்
முதியோர் உதவித்தொகை மனு : செந்தூர் எம்எல்ஏ., தகவல்
உடன்குடி: திருச்செந்தூர் தொகுதியில் புதியதாக முதியோர் பண உதவி திட்டத்திற்கு மனு செய்திருப்பவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தமிழக துணை முதல்வர் திட்ட உதவியினை வழங்குவார் என குலசேகரன்பட்டணத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். குலசேகரன்பட்டணத்தில் தமிழக அரசு சார்பில் 317 பயனாளிகளுக்கு இ...
தமிழகம்
கோயில் கொடை விழா
சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகேயுள்ள சடையன்கிணறு முத்தாரம்மன் கோயில் கொடை விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல்நாள் கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. இரவில் வில்லிசை மற்றும் மகுட ஆட்டம் நடந்தது. இரண்டாம் நாள் அம்மன் தீச்சட்டி ஊர்வலமும், மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டும் நடந்தது. வில்லிசை மற்றும் கலை நிகழ்ச்ச...
தமிழகம்
சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சி
விளாத்திகுளம் :  விளாத்திகுளத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விளாத்திகுளம் பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் சுயஉதவிக்குழு பொறுப்பாளர்களுக்கு பண்பு மற்றும் இயக்கமாக ஒன்றிணைவது குறித்த பயிற்சி முகாம் விளாத்திகுள...
தமிழகம்
நெல்லையில் 3, 4 தேதிகளில் நான்கு மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்துத்தேர்வு
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு நாளை (3ம்தேதி), நாளை மறுநாள் (4ம்தேதி) நான்கு மையங்களில் நடக்கிறது. 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.தமிழக காவல்துறை ஆண், பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு வரும் 3, 4 தேதிகளில் நடக்கிறது. நெல்லை...
தமிழகம்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம் :  சாத்தான்குளத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணைய், காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியதை ரத்து செய்திடவும், பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கியதைக் கைவிட வலியுறுத்தியும் சாத்தான்குளம் ஒன்றி...
தமிழகம்
சாத்தை.,யில் அதிமுக., கொடியேற்று விழா
சாத்தான்குளம் :  சாத்தான்குளத்தில் அதிமுக., கொடியேற்று விழா நடந்தது.  சாத்தான்குளம் யூனியன் சடையன்கிணறு, சடையன்கிணறு காலனியில் அதிமுக., கொடியேற்று விழா நடந்தது. ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். கிளைக் கழகச் செயலாளர்கள் செம்புலிங்கம், சண்முகவேல், ஒன்றிய பாசறை துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ...
தமிழகம்
செல்போன் புழக்கத்தை கட்டுப்படுத்த கைதிகளுக்கு டெலிபோனில் பேசும் வசதி
திருநெல்வேலி:அரசு அனுமதி கிடைத்ததும் மத்திய சிறைகளில் கைதிகளுக்கு டெலிபோனில் பேசும் வசதி அளிக்கப்படும் என சிறைத்துறைத்தலைவர் ஷியாம்சுந்தர் தெரிவித்தார்.தமிழக சிறைத்துறைத்தலைவர் ஏ.டி.ஜி.பி., ஷியாம்சுந்தர் நேற்று பாளை. மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய சிறைகளில் ஆ...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளம் :  விளாத்திகுளம் அருகேயுள்ள சிங்கிலிபட்டி பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த குமரகுரு துவக்கி வைத்தார். தலைமையாசிரியை பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார். பேரணியில் கல்வியின் அவசியம் குறித்து சிவக்குமார் பேசினார். பேரணி முக்கிய வீதி...
தமிழகம்
தேமுதிக, இந்திய கம்யூ., ஆர்பாட்டம்
கோவில்பட்டி, : கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்ட இளையரசனேந்தல் பிர்காவின் அனைத்து அரசுத்துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்ற வலியுறுத்தி இளையரசனேந்தலில் தேமுதிக மற்றும் சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருநெல்வேலி மாவட்டத்துடன் இருந்த இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 கிராமங்கள் கடந்த இரண்டாண்டுகளுக...
தமிழகம்
என்.இ.எப்.டி.மூலம் இ-பேமன்ட் நடைமுறை:வருங்கால வைப்புநிதி அதிகாரி வேண்டுகோள்
திருநெல்வேலி:உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் வைப்பு தொகையை வரவு வைப்பதற்கான (என்.இ.எப்.டி மூலம் இ-பேமன்ட்) நடைமுறை தற்போது நெல்லை வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள தங்களது கணக்குகளை முடித்து வைப்பு நிதி தொகையைப் பெற...
தமிழகம்
கோவில்பட்டி கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டி: கோவில்பட்டி குடிநீர் பிரச்னை குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கவுன்சிலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கோவில்பட்டி நகராட்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் நேற்று  ஆய்வுக்காக வந்திருந்தார். தொடர்ந்து சேர்மன், கமிஷ்னர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கோவில்பட்டி ...
தமிழகம்
எட்டயபுரம் தாலுகா ஆபிசில் கணக்கெடுப்பு பயிற்சி
எட்டயபுரம் : எட்டயபுரம் தாலுகா ஆபிசில் சென்ஸஸ் துறை துணை இயக்குநர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாமை நடத்தினார்.எட்டயபுரம் தாலுகா ஆபிசில் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் தாலுகாக்களை சார்ந்த விஏஓ.,க்கள் மற்றும் டவுன் பஞ் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான கிராம மற்றும் டவுன் விபரக் கையேடு த...
தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் 1.04 லட்சம் பெயர்கள் நீக்கம்:கடந்த ஆண்டை விட 27,408 வாக்காளர்கள் அதிகம்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும் 1.04 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27 ஆயிரத்து 408 வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சங்கரன்கோவில் 1,72,888 வாக்காளர்கள், வாசுதேவநல்லூர் 1,72,012...