category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சந்தையடியூர் முத்தாரம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா | உடன்குடி, : உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சந்தையடியூர் முத்தாரம்மன் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 27ம் தேதி மாலை 6 மணிக்கு கோதானம், புண்ணியாகத்துடன் துவங்கியது. கடந்த 29ம் தேதி வரை தினசரி காலை, மாலை பல்வே... |
தமிழகம் | தூத்துக்குடி- கொலும்பு இடையே முதற்கட்டமாக தனியார் பயணிகள் கப்பல் போக்குவரத்து | தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து முதற்கட்டமாக கொழுப்புவிற்கு பயணிகள் கப்பலை தனியார் மூலம் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய கப்பல் துறை செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுக வளாகத்தில் நிழல்படக் கருவிகள் மற்றும் உள்ளடக்கிய மின் இயக்கத்... |
தமிழகம் | சுய உதவி குழுக்களுக்கு கடைகள்:15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் | திருநெல்வேலி:சுய உதவி குழுக்கள் கடைகள் வசதியை பெற வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.நெல்லை மாவட்டத்தில் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பாளை புதிய பஸ்ஸ்டான்ட் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தை நவீனப்படுத்தி சுய உதவி குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வணிக வளாகத்தில் உ... |
தமிழகம் | சங்கரன்கோவிலில் ஆடித்தபசு 15ம் தேதி ஆரம்பம்:அடிப்படை வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு | திருநெல்வேலி:சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழாவையொட்டி அடிப்படை வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. இதுல் கலெக்டர் ஜெயராமன் கூறியதாவது:சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசு விழா வர... |
தமிழகம் | கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் பயன்:15ம் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்கலாம் | திருநெல்வேலி:கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன் பெற வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கிராம பஞ்.,களில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் கான்கீரிட் வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பாளர்கள் குடிசை வீடுகளை கணக்கெடுக்க வரும் போது கத... |
தமிழகம் | நெல்லையில் ஆக.27ம் தேதிஓய்வூற்றோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் | திருநெல்வேலி:நெல்லை மாவட்ட ஓய்வூற்றோர் குறை தீர்க்கும் நாள் குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் கிடைக்காமல் இருந்தால் தங்களுடைய குறைகளை தெரிவித்து வ... |
தமிழகம் | லாட்ஜ் அறையில் உயிருக்கு போராடிய முதியவர் மீட்பு: நெல்லையில் பரபரப்பு | திருநெல்வேலி:நெல்லையில் உள்ள லாட்ஜ் ரூமில் உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(57). இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் நெல்லை ஜங்ஷனில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். நேற... |
தமிழகம் | இந்தியாவில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க மாணவர் சமுதாயம் பாடுபடவேண்டும் | திருநெல்வேலி:நமது நாட்டில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க மாணவர் சமுதாயம் பாடுபடவேண்டும் என கலெக்டர் ஜெயராமன் பேசினார்.தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை நெல்லை மாவட்ட என்.எஸ்.எஸ்.,அமைப்பு சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு விழா பாளை.வ.உ.சி.,மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயராமன் த... |
தமிழகம் | எம்.ஜி.ஆர்.இளைஞரணிநிர்வாகிக்கு பாராட்டு | தென்காசி:தென்காசி நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.தென்காசி நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளராக கவுன்சிலர் மகபூப் மசூதுவை நியமனம் செய்து அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் இளைஞரணி தலைவராக அந்தோணி சயோத் ஜீவா, துணைத் தலைவர்களாக காஜாமைதீன், அருணா... |
தமிழகம் | கும்பிகுளத்தில் மாணவர்சேர்க்கை பேரணி | தென்காசி;கும்பிகுளத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.கும்பிகுளம் ஜானி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிராம கல்விக்குழு துணைத் தலைவர் புலமுத்து முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வ... |
தமிழகம் | செங்கோட்டையில் இலவசடெயிலரிங் பயிற்சி | தென்காசி:செங்கோட்டையில் பெண்களுக்கான இலவச டெயிலரிங் பயிற்சி துவக்க விழா நடந்தது.செங்கோட்டை அர்-ரஹ்மான அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இலவச டெயிலரிங் பயிற்சி துவக்க விழா அருணாச்சலம் தெருவில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இளைஞரணி செயலாளர் சர்தார் தலைமை வகித்தார். டெயிலரிங் ஆசிரியை ஜன்னத்துல் பிர்தவுஸ் முன்னி... |
தமிழகம் | வள்ளியூரில் புதிய வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல் | தென்காசி:வள்ளியூரில் புதிய வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க.கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வடக்கு வள்ளியூர் டவுன் பஞ்., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மகராசி, மாடசாமி ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:வள்ளியூரில் சுமார் 9 ஆயிரம் வீடுகளும், 300... |
தமிழகம் | குடிக்க பணம் கேட்டு தொல்லை: தந்தையை கொலை செய்த மகன் | திருவள்ளூர் : குடிக்க பணம் கேட்ட தந்தையை, கத்தியால் குத்திக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் ராஜாஜிபுரம் கணபதி நகரில் வசித்து வந்தவர் நாராயணசாமி மகன் ஈஸ்வரன். இவருக்கு ராசம்மாள் என்ற மனைவியும், குமார்(26), முருகன்(24) என இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் பழைய துணிகளைப்பெற்று, அதற்கு ஈடாக பிளாஸ்டிக் பொருட... |
தமிழகம் | தெற்கு கள்ளிகுளம் கோயிலில்கும்பாபிஷேகம் கோலாகலம் | தென்காசி:தெற்கு கள்ளிகுளம் முப்புடாதியம்மன், பத்ரகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.தெற்கு கள்ளிகுளம் முப்புடாதியம்மன், பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நிறைவு பெற்றதும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. விமான கலசங்களுக்கு ப... |
தமிழகம் | மின்வாரிய ஓய்வூதியோர் சங்க ஆலோசனை கூட்டம் | தென்காசி:தென்காசி மின் நகரில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட மாநாடு வரும் ஆக.10ம் தேதி நடக்கிறது. இது குறித்த வரவேற்பு ஆலோசனை கூட்டம் தென்காசி மின் நகரில் நடந்தது. வேதமாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் காந்தி, பொருளாளர் முகம்மது மின்னத்து... |
தமிழகம் | தம்பதிக்கு அடி: இருவர் கைது | திருவள்ளூர் : ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, அதற்கான பணம் தர மறுத்ததோடு, தம்பதியை உருட்டுக் கட்டையால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி விஷ்ணுபிரியா(21). இவர் பேரண்டூர் பஸ் நிலையத்தில் டிபன் கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் ... |
தமிழகம் | தென்காசியில் 5ம் தேதி வாடகை கார்கள் ஸ்டிரைக் | தென்காசி:தென்காசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 5ம் தேதி வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.தென்காசி வாடகை கார் டிரைவர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வரும் 5ம் தேதி பெ... |
தமிழகம் | சாலையை செப்பனிட்டதில் கவனக்குறைவு | திருவள்ளூர் : கால்வாய் சரிவர மூடாமல் சாலையை கவனக்குறைவாக செப்பனிட்டதால் அவ்வழியே சென்ற லாரி, பள்ளத்தில் சிக்கியது.திருவள்ளூர் ஜெ.என். சாலை அருகே அய்யனார் அவென்யூ உள்ளது. இப்பகுதிக்கு ஜெ.என். சாலையில் இருந்து செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது.கடந்த சில மாதங்கள... |
தமிழகம் | மாவட்ட விளையாட்டு கழக பொதுக்குழு கூட்டம் | தென்காசி:தென்காசியில் மாவட்ட விளையாட்டு கழக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது.நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு கழக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சக்திமோகன் தலைமை வகித்தார். மண்டல விளையாட்டு கழக ஆய்வாளர் பொன்னம்மாள் ... |
தமிழகம் | கண்டன ஆர்ப்பாட்டம் | திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிறுதொழில் செய்ய மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சாந்தகுமார் வரவேற்றார். ஒன்றிய மகளிர் அணி செயலர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்ட... |
தமிழகம் | எலுமிச்சை விளைச்சலை அதிகரிக்கும்நுண்ணூட்ட சத்துகள்: தோட்டக்கலை அதிகாரி விளக்கம் | திருநெல்வேலி:எலுமிச்சை விளைச்சலை அதிகரிக்கும் நுண்ணூட்ட சத்துகள் குறித்து கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:எலுமிச்சை ஒரு முக்கியமான பழப்பயிராகும். எலுமிச்சை சாகுபடியில் நுண்ணூட்ட சத்துகளின் பங்கு மிக முக்கியமானதாகும். பேரூட்ட சத்து... |
தமிழகம் | செங்குன்றம் சாலை விரிவாக்கம்; ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு | செங்குன்றம் : புதிய உயர்மட்டப் பாலத்தின் போக்குவரத்து வசதிக்காகவும், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன.
சென்னை செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, நடைபாதை கடைகள் மற்றும் வாகன "பார்க்கிங்' உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சு... |
தமிழகம் | தென்காசியில் வக்கீல் மீது தாக்குதல்:தந்தை, மகன்கள் 3 பேர் கைது | தென்காசி:தென்காசியில் வக்கீல் மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி அருகே குத்துக்கல்வலசை கே.ஆர்.காலனியில் வசிப்பவர் ராமலிங்கம் (32). வக்கீலான இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்கிறார். இடைகால் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி (53) என்பவருக்கு ராமலிங்கம் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொ... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில் இடவசதியின்றி நோயாளிகள், கர்ப்பிணிகள் கடும் அவதி | பள்ளிப்பட்டு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி மற்றும் படுக்கை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் உள்நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வங்கனூர், சஞ்சீவிபுரம், ஜி.சி.எஸ் கண்டிகை, கிருஷ்ணமராஜகுப்பம், புச்சிவெட்டிபள்ளி, எஸ்.வி.ஜி.ப... |
தமிழகம் | ஜாத்திரை திருவிழா | பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த கீச்சலம் கிராமத்தில் கெங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு களிமண்ணால் செய்து அலங்கரிக்கப்பட்ட கங்கையம்மன் சிலை வேப்பிலை குடிலில் வைக்கப்பட்டது.காலை 9 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தண்ணீரில் கரைக... |
தமிழகம் | லாரி மோதி பெண் பலி | திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, வெங்கத்தூர் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பார்வதி(57). இவர் நேற்று முன்தினம், கடைக்குச் செல்ல சாலையோரம் நடந்து சென்றார்.அப்போது பூந்தமல்லியில் இருந்து, திருவள்ளூர் நோக்கி வேகமாக சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, திருவள்ளூர் அரசு ம... |
தமிழகம் | கிணற்றில் தவறி விழுந்த மெக்கானிக் மீட்பு | நாமக்கல்: கிணற்றில் விழுந்த மின்மோட்டார் மெக்கானிக்கை நாமக்கல் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.நாமக்கல் அருகே லத்துவாடியை சேர்ந்த மோட்டார் மெக்கானிக் பாஸ்கர் (35). அவர் நேற்று மதியம் ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிணறு ஒன்றில் மின்மோட்டார் சரி செய்யும் பணியில் ஈடு... |
தமிழகம் | சாலை விரிவாக்க பள்ளம் தோண்டியதால் வினை : 2 ஆயிரம் தொலைபேசி இணைப்புக்கள் டெட் | திருவள்ளூர் : சர்வீஸ் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை பள்ளம் தோண்டியதால் திருநின்றவூர் மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் தொலைபேசி கேபிள்கள் பாதிக்கப்பட்டு 2,000 டெலிபோன் இணைப்புக்கள் செயலிழந்தன.
மாநில நெடுஞ்சாலைத் துறை, திருநின்றவூர் மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் இரு மேம்பாலங்களை அமைத்து வருகிறது.திருநின்றவூர் மேம்பாலத்தி... |
தமிழகம் | கணித திறனறி தேர்வில் கொங்குநாடு பள்ளி சாதனை | நாமக்கல்: கணித திறனறி தேர்வில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 39 பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியில் உள்ள கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எக்ஸலண்ட் எக்ஸாம்ஸ் சார்பில் கணித திறனறி தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் 300க்கும் ம... |
தமிழகம் | கட்டுனர் சங்க ஆண்டு விழா | நாமக்கல்: நாமக்கல்லில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடந்தது.விழாவுக்கு சங்க நிர்வாகி கணேசன் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பரிசு வங்கப்பட்டது. முன்னதாக, குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.சேல... |
தமிழகம் | வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு: ஜூலை 16 வரை பெயர் சேர்க்கலாம் | மதுரை: மதுரையில் வாக்காளர் வரைவு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஜூலை 16ம் தேதி வரை, புதிய வாக்காளராக சேர்க்க மனு அளிக்கலாம் என கலெக்டர் காமராஜ் கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும் 1.1.2010ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்தது. ... |
இந்தியா | கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பா டிஸ்சார்ஜ் | பெங்களூரூ: கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் ஹாலப்பா நெஞ்சு வலி காரணமாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தற்போது அவர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஷிமோகா நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருந்த நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி வரை மட்டுமே பெங்களூரூ ஐகோர்ட் ஜ... |
தமிழகம் | கிராம ஊராட்சிகளுக்கு குளோரின் மாத்திரைகள் | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக, ஊராட்சிதோறும் 3 கிலோ குளோரின் மாத்திரை, குடிநீரில் குளோரின் அளவை கண்டறிவதற்கு தேவையான உபகரணம் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ராஜசேகரன் கூறியதாவது: தமிழகத்தில் 1,537 ஆரம்ப சுகாத... |
தமிழகம் | விமானநிலைய ஊழியர் பலி | அவனியாபுரம்,: பைக்கில் சென்ற விமான நிலைய ஊழியர் ரங்கநாதன் ரோட்டில் நின்ற மாடு மீது மோதியதில் காயமடைந்து இறந்தார். மதுரை விமானநிலைய தகவல் தொடர்பு துறையில் உதவியாளராக இருந்தவர் ரங்கநாதன்(38). பெருங்குடியில் உள்ள விமானநிலைய ஊழியர் காலனியில் குடியிருந்தார். இவர் மனைவி லலிதா(33). இருவரும் ஜூன் 9ல், குழந்தைகளுக்கு நோட்டு வாங... |
தமிழகம் | விவசாயிகள் புள்ளி விபரம் இணை இயக்குனர் ஆய்வு | பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் அடிப்படை புள்ளி விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. அதை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) நேரில் ஆய்வு செய்தார்.பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளிடம் உள்ள நிலப்பரப்பு, சாகுபடி பரப்பு, சர்வே... |
தமிழகம் | மினி மாரத்தான் | மதுரை: மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு குறித்த மினி மாரத்தான் நடந்தது. டி.டி.கே. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் தனிக்கொடி துவக்கி வைத்தார்.பள்ளி மாணவர்கள் ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றொரு பிரிவாகவும்... |
தமிழகம் | பயணிகளை பாதுகாத்த பஸ் டிரைவர் பரிதாப பலி | நாமக்கல்: நெஞ்சுவலியை பொறுத்துக் கொண்டு நாமக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகளை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த தனியார் பஸ் டிரைவர், மருத்துவமனை கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.சேலம் மாவட்டம் சங்ககிரி கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார் (29). அவர் நாமக்கல்- ஈரோடு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ் டிரைவராக உ... |
தமிழகம் | கராத்தே | திருச்செங்கோட்டில் சோட்டாகான் அமைப்பு நடத்திய தேசிய கராத்தே குங்பூ போட்டியில் மதுரை மஞ்சா வர்மக்கலை அணி வெற்றி பெற்றது. மதுரை மஞ்சா வர்மக்கலை அணி மாணவர் பி. முகமது முஸ்தபா 60 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடம், 70 கிலோ அதிக எடை பிரிவில் எஸ். ராஜேஷ்குமார், பி. மாரிச்செல்வம் (கோவில்பட்டி) இரண்டாம் இடம், 55 கிலோ நடுத்தர எடை ... |
தமிழகம் | தாம்பரத்தில் ரூ.3 லட்சம் நகைகளை திருடிய பெண் கைது | பரங்கிமலை : தங்கையின் திருமணத்திற்காக, நகைகள் வாங்குவதுபோல 22 சவரன் நகைகளை நூதனமாக திருடிய கில்லாடி பெண்ணை, போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு தாம்பரம், கஸ்தூரிபாய் நகர், வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவர், இதே பகுதியில் தங்க... |
தமிழகம் | தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் விழா | நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சிறு தொழில் சங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சிறு தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட சிறுதொழில் சங்கத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய மேலாளர் ராசு முன்னிலை வகித்தார். நாமக்கல் கிளை மேலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். உதவி மண்டல மேலாளர் கிருஷ்ணன் திட்டங்க... |
தமிழகம் | இலவச மருத்துவ பரிசோதனை முகாம் | நாமக்கல்: நாமக்கல் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம், நாமக்கல் ஜேசீஸ் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.வட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். ஜேசீஸ் தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ராமசாமி வரவேற்றார்.முகாமில் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டுவலி, நரம்பியல் தொல்லை உ... |
தமிழகம் | பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை | செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே பாலாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக திகழ்வது பாலாறு. அரசு சார்பில் பாலாற்றில் சில இடங்களில் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. இக்குவாரிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணல் எட... |
தமிழகம் | நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் | நாமக்கல்: நாமக்கல் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தொழிலாளர் ஆய்வாளர் நடேசன் தலைமை வகித்தார். அந்தக் கூட்டத்தில் தனியார் துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுகான பணிப்பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சரியான எடைகற்கள் பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து நுக... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் வெளியீடு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டசபை தொகுதிகளில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிக விண்ணப்ப படிவங்களை கொடுப்பவர்கள் மற்றும் அதை வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும... |
தமிழகம் | முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை | ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே, வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நான்கு பேரை, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, மேவளூர்குப்பம் வயல்வெளியில் கடந்த 22ம் தேதி வாலிபர் ஒருவர் கொலையாகி கிடந்தார். விசாரணையில், அவர் சென்னை கொடுங்கைய... |
தமிழகம் | மொபைல் போனில் ஏற்பட்ட காதல் பள்ளி மாணவியர் 4 பேர் ஓட்டம் | மதுரை: மதுரையில் மொபைல் போனில் ஏற்பட்ட காதலால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவியர் 4 பேர், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். கோவையில் சுற்றி திரிந்த இவர்களை போலீசார் நேற்று மீட்டனர்.மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த நான்கு தோழியர், மாநகராட்சி பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகு... |
தமிழகம் | காதலியை ஏமாற்றிய காதலனுக்கு போலீஸ் முன்னிலையில் திருமணம் | மதுராந்தகம் : செய்யூர் அடுத்த ஈசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ராஜாவுக்கும், திண்டிவனம் அடுத்த வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகள் மஞ்சுளாவுக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், மஞ்சுளாவின் தங்கை தமிழ்செல்வி அடிக்கடி அக்கா வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது ராஜா த... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் | மதுரை: மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படும், என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாவது படித்து, அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் ஆறுமாத கால தை... |
தமிழகம் | பிக்பாக்கெட் அடித்த இளம்பெண் கைது | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்(42). இவர் நேற்றுமுன்தினம், மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே நின்றிருந்தார். அப்போது, அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த 150 ரூபாயை பெண் ஒருவர் பிக்பாக்கெட் அடித்துள்ளார். அந்தப் பெண்ணை, குமரவேல் கையும் களவுமாகப் பிடித்து, விஷ்ணுகாஞ்சி போல... |
தமிழகம் | தீ விபத்துக்கு காரணமானகடைகளின் லைசென்ஸ் ரத்து | மதுரை,: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தொடர்ந்து நடந்து வரும் தீ விபத்துக்கு காரணமான கடைகளில் லைசென்ஸ் ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பஸ்ஸ்டாண்டில் முருகேசன் என்பவர் நடத்திய கடையில் ஜூன் 21ல் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பல்வேறு "பிரஷர்' காரணமாக அந்த கடையில் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வில்லை. நேற்றும் பஸ... |
தமிழகம் | குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் | வாலாஜாபாத் : குண்ணம், தென்னேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பைப்புகள் உடைந்து போனதால் குடிநீர் வீணாகிறது.வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் தென்னேரி, அழுக்கஞ்சேரி, குண்ணம், சிறுமாங்காடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. வாலாஜாபாத் அருகே, பாலாற்றிலிருந்து பெரிய குழாய்கள் மூலம் சுங்குவ... |
தமிழகம் | சர்ச்சில் தீ விபத்து | மதுரை: மதுரை புதூர் லூர்துநகர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது வீட்டு மாடியில் கீற்றுக் கொட்டகை அமைத்திருந்தார். நேற்று மதியம் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால், அருகில் இருந்த சர்ச்சிற்கும் பரவியது.இதில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட பந்தல் தீப்பிடித்தது. தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அத... |
தமிழகம் | வந்தவாசியில் குறும்படம் திரையிடல் விழா | வந்தவாசி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் திண்ணை என்னும் இலக்கிய நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் குறும்படங்கள் திரையிடப்பட்டன. வந்தவாசி கிளைத் தலைவர் நா.இராதாகிருட்டிணன் தலைமை வகித்தார். எடிட்டர் பி.லெனின் இயக்கிய குற்றவாளி, நா.செல்வன் இயக்கிய இருட்டறை வெளிச்சம... |
தமிழகம் | குண்டர் சட்டத்தில் இருவர் கைது | செங்கல்பட்டு : தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.தாம்பரம் அடுத்த, பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கபாலி. இவரது மகன் மணிவண்ணன் (23). அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிபாலன் (23). இருவரும் கூட்டாக பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட... |
தமிழகம் | ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கப் பணி தாமதம் | தாம்பரம் : தாம்பரம் முதல் குரோம்பேட் டை வரை, ஜி.எஸ்.டி., சாலையில் விரிவாக்கப் பணிகள் தாமதமாகியுள்ளதால், சாலை அமைப்பதற்காக சமன்படுத்தப்பட்ட இடங்கள், பார்க்கிங் ஏரியாவாக மாறிவருகின்றன. இதை ஆரம்பத்திலேயே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாம்பரம் முதல் மீனம்பாக்கம் வரையுள்ள ஜி.எஸ்.டி., சாலையில் போதிய இடவசதி உள்ள இடங்களில்,... |
தமிழகம் | திருமண நிதி உதவி | செங்கம், : செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 184 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்தை எம்எல்ஏ போளூர் வரதன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கிரி தலைமை தாங்கினார். ஆணையர் ராகவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் லதா காசி, கவு... |
தமிழகம் | மதுரை சிறையில் கஞ்சா கடத்தல் தொடர்கிறது இதுவரை 310 கிராம் பறிமுதல் | மதுரை: மதுரை மத்திய சிறையில், கைதிகள் கஞ்சா கடத்தி வருவது அதிகரிக்கிறது. காவலர்கள் கண்டுகொள்ளாத நிலையில், சக கைதிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்று சம்பாதிக்கின்றனர். இதுவரை 310 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைதிகள் விசாரணைக்காக கோர்ட்டிற்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பும்போது, உடலில் எங்கெங்கு கஞ்சா, சிம்கார்ட... |
தமிழகம் | போலீஸ் எஸ்.ஐ., எழுத்துத் தேர்வு: மதுரையில் நாளை துவக்கம் | மதுரை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் மதுரையில் நாளையும், நாளை மறுநாளும் போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்துத்தேர்வு ஐந்து மையங்களில் நடக்கிறது. நாளை லேடிடோக் கல்லூரியில் போலீஸ் துறையைச் சேர்ந்த 885 பேருக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு எண் 2400112 மற்றும் 2404701 முதல் 2405554 வரை, 7400601 முதல் 7400727 வரை அழைக்கப்பட்... |
தமிழகம் | கர்நாடக உணவுத் திருவிழா | மதுரை: மதுரை பழங்காநத்தம் ஜி.ஆர்.டி., ரீஜென்சி ஓட்டலில் கர்நாடக உணவுத் திருவிழா துவங்கியது.ஓட்டல் பொது மேலாளர் முரளீதரன், மேலாளர் அருள் முருகன், தலைமை சமையல் கலை நிருபுணர் ஆறுமுகம் கூறியதாவது: கர்நாடகாவின் கொடகு, மங்களூரு, உடுப்பி பகுதிகளை சேர்ந்த ஒன்பது சைவ உணவுகள், ஐந்து அசைவ உணவுகள் தினமும் இடம்பெறும். கோரிகாசி, காய... |
தமிழகம் | போதைப் பொருள் எதிர்ப்பு ஊர்வலம் | திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு ஊர்வலத்தை, தாசில்தார் பரமேஸ்வரி துவக்கி வைத்தார். உசிலம்பட்டி ரோடு, மதுரை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. மண்டல கலால் அலுவலர் கங்காதரன், மண்டல துணை தாசில்தார் நீலகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் மூர்த்தி, ஹனீஸ் மற்றும் பி.கே.என்.... |
தமிழகம் | தொலைதூரக் கல்வியில் விவசாயம் | வேலூர்: விவசாயிகளுக்கு அனுபவப் படிப்போடு, சான்றிதழ் படிப்பும் தேவை எனும் நோக்கில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கடந்த 2005-ம் ஆண்டு முதல் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியை வழங்கி வருகிறது. விவசாயிகள், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாதவர்கள், சுயதொழில் தொடங்க முன்வருவோர், கிராம மகளிர், கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்கள் ... |
தமிழகம் | குடியாத்தத்தில் புதைசாக்கடை திட்டம் எப்போது? | குடியாத்தம் : குடியாத்தம் நகராட்சியில் புதைசாக்கடைத் திட்டம் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது என நகர்மன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். குடியாத்தம் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் எம். பாஸ்கர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் சௌந்தரராஜன், ஆணையர் சுப்பிரமணியன், பொறியாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்... |
தமிழகம் | கி.கிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு இந்தாண்டு 77 ஆயிரம் வாக்காளர் அதிகம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 10 லட்சத்து 88 ஆயிரத்து 413 பேர் இடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபோட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பணி நான்கு மாதமாக மேற்கொள்ளப்பட்டது. புதிய வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கோரி ஒர... |
தமிழகம் | ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கு.க., செய்த பெண் மீண்டும் கர்ப்பம் | ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி அடுத்த ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பமானதால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி பஞ்சாயத்து பேயனூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன்(32). இவரது மனைவி கீதா(29). இவர்களுக்கு ராகவேந்திரன்(13) என்ற மகனும், அர்ச... |
தமிழகம் | தொழிலாளர்கள் சாலை மறியல் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், கூலி குறைவாக வழங்குவதாக கூறி அடுத்தடுத்து பல இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அத்திப்பாடி பஞ்சாயத்தில் ஏரி தூர் வாரி அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 34 ரூபாய் வீதம் கூலி வழங்கப்பட்டதாக கூறப்... |
தமிழகம் | தீ விபத்தில் வீடு இழந்த குடும்பங்களுக்கு உதவி | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருவனப்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில், டூவீலர், பணம், ரேசன் கார்டுகள், உணவு தானியங்கள், மாணவ, மாணவிகளின் ... |
தமிழகம் | சாமல்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் அருண்ராய் தலைமை வகித்தார். தாசில்தார் தீர்த்தகிரி வரவேற்றார். எம்.எல்.ஏ., நரசிம்மன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், யூனியன் சேர்மன் சாந்தாகுணசேகரன், ஆர்.ஐ.,சேகர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புகழேந்தி ஆகியோர் முன்னி... |
தமிழகம் | மாங்கனி கண்காட்சியில் இன்று இன்னிசை கச்சேரி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் 18வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், இன்று(2ம் தேதி) இன்னிசை கச்சேரி நடக்கிறது. மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை. மாலை 6 மணிக்கு "புதியதோர் உலகம்' நாட... |
தமிழகம் | பள்ளி மாணவி திடீர் மாயம் | ஓசூர்: ஓசூரில் பள்ளி மாணவி திடீர் மாயமானார். ஓசூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சேகர். அவரது மகள் குமாரி(13). அவர் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். அ... |
தமிழகம் | இலவச வீட்டு வசதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பயளானிகள் விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் கீழ் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசை வீடுகளை கிராம நிர்வாக அலுவல... |
தமிழகம் | மாங்கூழ் தொழிற்சாலைகளில் 7 குழந்தை தொழிலாளர் மீட்பு | கிருஷ்ணகிரி: காவேரிபட்டணத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளில் வேலை செய்த குழந்தை தொழிலாளர்கள் ஏழு பேரை அதிகாரிகள் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தொழிற்சாலைகள் ஆய்வாளர் மனோகரன், ஓசூர் தொழிற்சாலைகள் ஆய்வாளர் தினகரன், டாக்டர் ராஜ்குமார், தேசிய குழுந்தை தொழிலாளர் திட்ட கள அலுவலர் பாலசந்திரன் மற்றும் திட்ட பணியாளர்கள் சே... |
தமிழகம் | தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கூடுதல் ரயில் | தாம்பரம் : தாம்பரம்- செங்கல்பட்டு இடையே கூடுதலாக ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.தற்போது, தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே தினசரி 162 மின்சார ரயில் சர்வீஸ்களும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 33 மின்சார ரயில் சர்வீஸ்களும் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில்களில் நேரங்கள் தற்போது... |
தமிழகம் | நகைக்கடை அதிபர் மகளை கடத்திய மூவருக்கு வலை | காவேரிபட்டணம்: காவேரிபட்டணத்தில் நகைக்கடை அதிபர் மகளை கடத்தி சென்ற மூன்று வாலிபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். காவேரிபட்டணம் தாம்சன் பேட்டையை சேர்ந்த தமிழரசு என்பவர் அப்பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மகள் பவித்ரா(18). ப்ளஸ் 2 படித்த இவரும் அதேபகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் நரசிம்மனும்(23) காதலித்தனர். இவர்களுடை... |
தமிழகம் | ராகவேந்திரர் கோவிலுக்கு வந்தவெள்ளி பொருட்கள் மாயம் | சென்னை : திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ராகவேந்திரர் கோவிலுக்கு, பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பூஜை பொருட்கள் மாயமாகின.
திருவல்லிக்கேணி, துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் ராகவேந்திரர் கோவில் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு பெங்களூரில் உள்ள என்... |
தமிழகம் | தடையை மீறி உண்ணாவிரதம்: 12 மாற்றுத் திறனாளிகள் கைது | சென்னை : தடையை மீறி, உண்ணாவிரதமிருந்த மாற்றுத் திறனாளிகள் 12 பேரை போலீசார் கைது செய்தனர். மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு, தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியதோடு, பல்வேறு வேலைவாய்ப்புக்களை வழங்கி வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், புத்தக கட்டுநர் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன.பட்டப் படிப்பை முடித்த, மதுரையைச... |
தமிழகம் | எடைக்கற்கள் தராசு பறிமுதல் | கோயம்பேடு : சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் கலைவாணி தலைமையில், 50 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சில்லரை வியாபாரிகளின் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், எடைக்கல்லில் முத்திரை இல்லாதது, எலக்ட்ரானிக் தராசு சரியான எடை காண்பிக்காததை கண்டுபிடித்தனர். இச்சோதனையில் 400 எடைக்கற்கள் மற்... |
தமிழகம் | வழிப்பறி கொள்ளையர்கள் கைது:40 சவரன் தங்க நகைகள் மீட்பு | துரைப்பாக்கம் : அடையாறு சரகத்தில், தனியாக செல்லும் பெண்களிடம் பைக்கில் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட, ஆறு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 40 சவரன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.அடையாறு போலீஸ் சரகத்தில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தது.
இது ... |
தமிழகம் | நாய் கடித்த பள்ளி மாணவி பலி | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வலிங்கம். இவரது மகள் வித்யா (12). அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கோடை விடுமுறையின் போது, அருகில் உள்ள நாகக்குடையான் கிராமத்தில் உள்ள பெரியம்மாள் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை ஒரு நாய் கடித்தது. சாதாரண சிகிச்சை மட்டும் வழங்கிவி... |
தமிழகம் | கன்டெய்னர் லாரி மோதி லாரி தீப்பிடித்தது : ரூ.44 லட்சம் மதுபாட்டில்கள் நாசம் | தாம்பரம் : சாலையோரம் நின்றிருந்த மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி மீது வேகமாக வந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் நாசமாயின.வளசரவாக்கத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு, சென்னை பை-பாஸ் சாலை வழியாக லாரி ஒன்று திருவண்ணாமலை ... |
தமிழகம் | முதல்வர் செக்யூரிட்டி எஸ்.பி.,க்கு 3வது முறையாக பணி நீடிப்பு | சென்னை : ஓய்வு பெற்ற பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.,க்கு மூன்றாவது முறையாக, பணி நீடிப்பு வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக காவல் துறையில் 1973ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர் தாமோதரன். இவர் முதல்வர் செக்யூரிட்டி பிரிவில் டி.எஸ்.பி, கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். பதவி உயர்வில் எஸ்.பி., ஆனார்.சென்னை நகரி... |
தமிழகம் | பழுதடைந்து போன விக்டோரியா விடுதி மாற்றம் வருமா? மாணவர்கள் ஏக்கம் | சென்னை: பராமரிப்பில்லாத கழிவறை, பாதுகாக்கப்படாத குடிநீர், பழுதாகும் மின்சாரம் என்று மாசுபட்டு வரும் சென்னை மாநில கல்லூரியின் விக்டோரியா விடுதி, முறையாக பராமரிக்கப்படுமா, புது மாணவர்களின் வருகையொட்டி புதுப்பிக்கப்படுமா என்று, கல்லூரி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னையின் எழிலார்ந்த கடற்கரையோரம் காமராஜர்... |
தமிழகம் | ஆதிதிராவிடர் நலத்துறையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் | சென்னை : ஆதிதிராவிடர் நலத் துறையில் 23 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை, அமைச்சர் தமிழரசி வழங்கினார். இத்துறை செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி அறிய, கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.ஆதிதிராவிட மக்களுக்கான தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக, கட்டணமி... |
தமிழகம் | சென்னையில் நாட்டின் மிக நீளமான மேம்பாலம் | அதிக போக்குவரத்து கொண்ட சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (இ.சி.ஆர்.,) போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை, நாட்டிலேயே அதிக நீளம் கொண்ட மிகப்பெரிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட உள்ளது. இந்த பாலம் 9.7 கி.மீ., தூரத்திற்கு, 1000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமையும்.
கடற்கரையையொட்ட... |
தமிழகம் | பன்றிக்காய்ச்சல் நோயால் யாரும் இறக்கவில்லை,சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் | நாகர்கோவில்: தொண்டைவலியுடன் காய்ச்சல் இருந்தால் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்யுங்கள் என குமரி மாவட்டத்தில் இரண்டு நாள் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கேரளம் மாநிலத்தையடுத்து குமரி மாவட்டத்திலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்த... |
தமிழகம் | விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகை | மார்த்தாண்டம்: பென்ஷன் நிலுகை தொகை கேட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்கள் பாங்க், டிரஷரி மூலம் மாதந்தோறும் பென்ஷன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்க... |
தமிழகம் | தேங்காப்பட்டணத்தில் கடல் கொந்தளிப்பு | புதுக்கடை: தேங்காப்பட்டணம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை.கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம்புத்தன்துறை, இனயம்சின்னத்துறை, இனயம், ஹெலன்காலனி உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 50 ஆயி... |
இந்தியா | பா.ஜ., தலைவர் குதிரையில்பயணம் | சண்டிகர்: மத்திய அரசு சமீபத்தில் உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா மாநில பா.ஜ., பொது செயலாளர் விஜய் கோயல்குதிரையில் பயணம் செய்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் சண்டிகர் பா.ஜ.,தலைவர் சஞ்சய் டாண்டன், மற்றும் மு... |
தமிழகம் | நித்யாணந்தா மீது பெண்சீடர்கள் தந்தை புகார் | ஆரல்வாய்மொழி: சொத்துக்காக மகள்களை, என்தம்பி மூளை சலவை செய்துள்ளார் என, நித்யாணந்தா பெண்சீடர்கள் தந்தை நிரூபர்களிடம் கூறினார். ஆரல்வாய்மொழி அடுத்த தோவாளையை சேர்ந்தவர் சிவபாலன். இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கு கிருஷ்ணேஷ்வரி என்ற நித்திய பிரிதானந்தா (29), சித்திரேஸ்வரி என்ற நித்திய பிரம்மானந்தா (28) என்ற இரண்டு மகள்... |
இந்தியா | மேற்கு வங்க மாநில தேர்தல்: மம்தா அறிக்கை | கோல்கத்தா: அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள மாநில சட்டசபைக்கான தேர்தலை இந்த ஆண்டே நடத்த வேண்டும “என திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோல்கத்தாவில்நடந்த கட்சி கூட்டத்தில் பேசும் போது அவர் கூறியதாவது: துர்கா பூஜை, ரம்ஜான் பண்டிகை விரைவில் வரஇருப்பதைபோல் மாநிலத்திற்கும் விரைவில் த... |
இந்தியா | காந்திஜி பொருட்கள் ஏலம் விட்டது யார் | ராஜ்கோட்:குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே கஸ்தூரிபாய் நினைவிடம் உள்ளது. இங்கு, காந்திஜி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, செருப்பு, தட்டு, கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போய்விட்டதாக இந்த நினைவிடத்தின் மேலாளர் ஜெய்சிங் ரதோட், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.இந்நினைவிடத்தின் முன்னாள் அறங்காவலர்கள், இந்த பொருட்களை அமெரிக்காவ... |
தமிழகம் | மீனாட்சியம்மன் கோயிலில் சோலார் மின்வசதி | மதுரை: தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை துணைப் பொது மேலாளர் சையது அகமது கூறியதாவது : ராமேஸ்வரம் கோயிலில் சோலார் மின்வசதி செய்ய நிர்வாகத்தினர் அணுகினர். ஆனால் கடற்கரை பகுதியில், மின்சாதன டியூப்களில் உப்பு படிவங்கள் அதிகம் சேரும் என்பதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மதுரை மீனாட்சி கோயிலில் சூரியஒளி மின்உற்பத்தி "ப... |
தமிழகம் | இஞ்சின் பழுது: குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாமதம் | விக்கிரவாண்டி:குருவாயூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்(6128) விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்தில் முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே 152வது கிலோ மீட்டர் தூரத்தில் வரும் போது மின்சார கோளாறு காரணமாக ரயில் இன்ஜின் பழுதாகி நின்றது. இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த ட... |
தமிழகம் | சேதுசமுத்திர திட்டம் மறுமதிப்பீடு செய்யப்படுமா? | தூத்துக்குடி:தூத்துக்குடியில் மத்திய கப்பல்துறை செயலர் மோகன்தாஸ் கூறியதாவது: சேதுசமுத்திர திட்ட மாற்றுப் பாதையில் தற்போது சுற்றுச்சூழல் ஆய்வுப் பணி நடக்கிறது. இத்திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, கோர்ட் தீர்ப்பிற்குப்பின்னரே சேதுசமுத்திர திட்டத்தை மறுமதிப்பீடு செய்வது உள்ளிட்ட அம்சங்கள... |
General | முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் | சென்னை : கோவை செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஜார்ஜ் கோட்டை செம்மொழி நூலக அரங்கில் நடைபெறம் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ம... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில் சமுதாய சமையல் கூடம் | உடுமலை:கோவை மண்டலத்தில், முதன்முறையாக உடுமலை அரசு மருத்துவமனை யில், பாரத் காஸ் சமுதாய சமையல் கூடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய அவசரத்தேவைகளுக்கு சுடுநீர் தயாரித்தல், நோயாளிகளுக்குத் தேவையான கஞ்சி வைத்துக்கொள்ளவும், மருத்துவரின் ஆலோசனையின் படி நோயாளிகளுக்கும், துணை இருக்... |
இந்தியா | பள்ளி பேருந்தில் தீ விபத்து : குழந்தைகள் தப்பினர் | புவனேஸ்வர் : ஒரிசா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பஸ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 35 குழந்தைகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்ட வசாக உயிர் தப்பினர். பஸ்சில் இருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகள் அனைவரும்பத்திரமாக உள்ளதாகபள்ளி முதல்வர்தெரிவித்தார்.இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி... |
தமிழகம் | பழைய அணைகளை புதுப்பிக்க கேரள அரசு திட்டம் | திருவனந்தபுரம்: கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியதாவது: கேரளாவில் உள்ள 15 பழைய அணைகள், மாநில நீர்ப்பாசனத் துறையும், கேரள மின்சார வாரியமும் இணைந்து, உலக வங்கி நிதி உதவியுடன் புதுப்பிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு,மத்திய நீர்ப்பாசன கமிஷனிடம் 211.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில... |
தமிழகம் | சேலம் அருகே தி.மு.க., கொடிக்கம்பம் வெட்டிச்சாய்ப்பு | ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தி.மு.க., கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பைத்தூர் கிராமத்தில் பாய்கடை பஸ் ஸ்டாப் அருகே உள்ள இந்த தி.மு.க., கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
தமிழகம் | கொடைக்கானல் தனியார் பள்ளி முதல்வர் கைது | திண்டுக்கல்: கொடைக்கானல் தனியார் பள்ளி முதல்வர் பாலியல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள பள்ளி தாளாளர் ஒருவர், மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தாளாளர் தப்பிச்செல்ல உதவியதாக பள்ளியின் முதல்வர் ஷீபாபால் கைது செய்யப்பட்டார். |
இந்தியா | ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.03 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 55.34 புள்ளிகள் அதிகரித்து 17564.67 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.30 புள்ளிகள் அதிகரித்து 5266.70 புள்ளிகளோடு காண... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.