category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | ஜாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்துக் கட்சிகளிடம் கருத்து | புதுடில்லி : ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனைத்து கட்சிகளிடம் கருத்து கேட்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கணக்கெடுப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் தோல்வி அடைந்ததை அடுத்து, இம்முடி எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 வாரங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் கருத்து கேட்கப்படும் எனவும் மத்திய அரசு தெர... |
இந்தியா | காஷ்மீரில் தடையை மீறி ஊர்வலம் | ஸ்ரீநகர் : காஷ்மீரில் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல பிரிவினைவாதிகள் முடிவு செய்துள்ளனர். காஷ்மீரில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
தமிழகம் | சிறைகளில் தொலைப்பேசி வசதி : ஷ்யாம்சுந்தர் | பாளையங்கோட்டை : சிறைக்கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச சிறைகளில் தொலைப்பேசி வசதி செய்யப்பட உள்ளதாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷ்யாம்சுந்தர் தெரிவித்துள்ளார். சிறைகளில் மொபைல் போன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் சிறைத்துறை நடவடிக்கைகளை ஆய்வு ... |
இந்தியா | இந்திய நெக்லசுக்கு வரிவிலக்கு ரத்து | வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய தங்க நெக்லசுக்கு, அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக, அந்நாட்டு வணிக பிரதிநிதி ரோன் கிரிக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: அமெரிக்காவில், இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதனால், வளர்ந்து வரும் நாடுகள் பயனடைந்தன. தற்போது, அமெரிக்... |
தமிழகம் | பொது பந்த் : தமிழக அரசு எச்சரிக்கை | சென்னை : பந்த் நடைபெறும் ஜூலை 05ம் தேதியன்று இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பந்த் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கடைய... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங் துவங்கியது | திருச்சி : நடப்பு நிதியாண்டிற்கான ஆசிரியர் பயிற்சிக்கான கவுன்சிலிங் திருச்சியில் இன்று துவங்கியது. சிறப்பு மற்றும் தொழில் பிரிவிற்கான கவுன்சிலிங் இன்று நடைபெறுகிறது. இது ஜூலை 14ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
General | கால்பந்து : காலிறுதி போட்டிகள் இன்று துவக்கம் | போர்ட் எலிசபெத் : உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கள் இன்று துவங்குகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரேசில் அணியும், ஹாலந்து அணியும் மோதுகின்றன. நள்ளிரவு 12.00 மணிக்கு துவங்கும் மற்றொரு போட்டியில் கானா அணியும், உருகுவே அணியும் மோதுகின்றன. |
இந்தியா | ரூபாயின் மதிப்பு உயர்ந்தது | மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரு பைசா அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று 46.57 ஆக உள்ளது. நேற்று ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைவுடன் முடிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஐரோப்பிய மற்றும் ஆசிய நாணயங்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது. |
இந்தியா | தாக்குதல் தொடரும் : மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை | சட்டீஸ்கர் : பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் தொடரும் என மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுவதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர். சட்டீஸ்கர் வனப்பகுதியில் மாவோயிஸ்டு செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | ஆந்திராவில் மாவோயிஸ்டு தலைவர்கள் பலி | ஐதராபாத் : ஆந்திர மாநிலம் அதிலாபாத் பகுதியில் அதிரடிப் படையினர் நடத்திய என்கவுண்டரில் மாவோயிஸ்டு தலைவர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த எண்கவுண்டரில் மாவோயிஸ்ட் செய்தி தொடர்பாளர் அசாத் பலியாகி உள்ளார். அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கும் விழா | அன்னூர்: அன்னூரில் 16 பள்ளிகளை சேர்ந்த 660 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுகள் வழங்கப் பட்டது. அன்னூர் தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில் 42ம் ஆண்டு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தலைவர் தேவராஜன் தலைமையில் நடந்தது. கூடுதல் உதவி துவக்க கல்வி அலுவலர் ரங்கராஜூ, சிண்டிகேட் வங்கி கிளை மேலாளர் பாஸ்கரன், கவுன்சிலர் தனலட்சும... |
இந்தியா | வாட்டர் பியூரிபையர் தயாரிப்பில் இறங்குகிறது எல்ஜி | புதுடில்லி : வாட்டர் பியூரிபையர் தயாரிப்பில் இறங்க திட்டமி்ட்டுள்ளதாக எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எல்ஜி நிறுவன நிர்வாக இயக்குனர் மூன் ஷின் கூறுகையில், ஏர் மற்றும் வாட்டர் பியூரிபையர் மற்றும் பில்ட் இன் சிஸ்டம்ஸ் கிச்சன்ஸ் போன்ற புதிய பிரிவுகளில் நுழைய நிறுவனம் திட்டமி்ட்டுள்ளதாகவும், 2015ம் ஆண்டில் 45 ... |
தமிழகம் | குற்றாலத்தில் மது அருந்திய மின்வாரிய ஊழியர்கள் கைது | குற்றாலம் : குற்றாலத்தில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக விருதுநகர் மின் வாரிய ஊழியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | தூத்துக்குடியில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் | சென்னை : தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை மூட முயற்சி நடைபெற்று வருவதாக ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார். |
தமிழகம் | கே.எம்.எஃப் ஊழியர்கள் 80 பேர் கைது | சென்னை : ஸ்ரீபெரும்பத்தூர் கே.எம்.எஃப் தொழிற்சாலை ஊழியர்கள் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்களை துன்புறுத்தப்படுவதாக தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் ஜூன் 23ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் போராட்டத்தில் போலீஸ் தலையிடக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஊழி... |
தமிழகம் | திருவட்டாறில் எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம் | திருவட்டாறு : பேருந்துகளில் மறைமுகமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி திருவட்டாரில் எம்.எல்.ஏ., லீமா ரோஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பேருந்துகளில் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | மதுரையில் மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு | மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அடிக்கடி தீ விபத்து நிகழ்வதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடை உரிமையாளர்களிடம் முறையான உரிமம் உள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. |
தமிழகம் | சென்னையில் பள்ளி மீது நீதிபதியிடம் புகார் | சென்னை : சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மீது அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கோவிந்தராஜனை சந்தித்து பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், அதிக கட்டணம் செலுத்த சம்மதிப்பதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாகவும், மறுப்பு தெரிவித்தால்... |
தமிழகம் | நெல்லை கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் | நெல்லை : நெல்லை பேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை போராட்டம் தொடரம் என மாணவிகள் தெரிவித்துள்ளனர். |
தமிழகம் | காற்றழுத்த தாழ்வுநிலை : தமிழகத்தில் மழை | சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை தமிழகத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரிசாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதால் ஆந்திராவில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | சென்னையில் ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக் | சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் ரயில் டிரைவரை தாக்கியதை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்ப... |
தமிழகம் | சேலத்தில் சந்தன மரங்கள் கடத்தல் | சேலம் : சேலம் கலெக்டர் பங்களாவில் நேற்றிரவு சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தன மரங்களை கடத்திய மர்ம நபர்களை வனத்துறை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். |
தமிழகம் | அன்னூரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை | அன்னூர் : கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் போலீசார் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 60 பெண்கள் உட்பட 200 பேர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீட... |
இந்தியா | போட்டுத்தள்ளியது போலீஸ்., மாவோ., முக்கியப்புள்ளியை., | ஐதராபாத்: மாவோ., நக்சல்களின் முக்கியப்புள்ளியும் , பிரபலமானவருமான , மாவோ., நக்சல்கள் அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினரை போலீசார் சுட்டுத்தள்ளினர். இவர் நக்சல் தலைவர் வலதுகரமாக இருந்தவர். இன்று போலீசாருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இருவர் கொல்லப்பட்டனர். இதில் இன்னொருவர் குறித்த விவரம் இன்னும்... |
தமிழகம் | தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 சரிவு | சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.336 சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 14080 ஆக இருந்தது. இது இன்று 336 ரூபாய் சரிந்து 13744 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 1718ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 18475 ல் இருந்து 445 ரூபாய் குறைந்து ரூ. 18475 ஆக சரிந்துள்ளது. வெள்ளி ... |
தமிழகம் | முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் : 2 பேர் கைது | நெல்லை : முதல்வர், துணைமுதல்வர்,டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய 2 பேரை நெல்லை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது முதல்வர்,துணை முதல்வர், உயர்அதிகாரிகள் உள்ளிட்டோரை வெடிகுண்டு வைத்து கொலை செய்யப் போவதாக மிரட்டல் கடிதம் ஒன்று நெல்லையைச் ... |
தமிழகம் | கோவையில் வக்கீல்கள் கண்டன பேரணி | கோவை : கோவையில் வக்கீலை தாக்கிய போலீசை கைது செய்யக்கோரி கோவை மாநகர வக்கீல்கள் 600 பேர் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | இன்ஜினியரிங் கல்லூரிகளில் அதிரடி ரெய்டு | சென்னை : சென்னை, கோவை , கும்மிடிப்பூண்டி,மேல்மருவத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். கட்டாய நன்கொடையாக மாணவர்களிடம் வசூலித்த பல கோடி ரூபாய் பணம் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை நடைபெறுவதால் பல கல்லூரிகளில் மாணவர் ச... |
தமிழகம் | புளியங்குடியில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் | புளியங்குடி : நெல்லை மாவட்டம் புளியங்குடியில் சாமிலா பீவி(24) என்பவர் பிரசவத்திற்காக மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ட்யூட்டி டாக்டர் வராததால் பிரசவ வலியில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடு... |
தமிழகம் | உடுமலையில் சந்தன மரம் கடத்த முயன்ற 4 பேர் கைது | உடுமலைப்பேட்டை : உடுமலைப்பேட்டையில் சந்தன மரம் கடத்த முயன்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை உடுமலை வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ எடையுள்ள சந்தனமரம் மற்றும் 4 புலி நகங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
இந்தியா | கிரிக்கெட் தொடர் தேதியை மாற்ற கல்மாடி கோரிக்கை | புதுடில்லி : அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தேதியை மாற்றி அமைக்கக்கோரி காமன்வெல்த் விளையாட்டுக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லிடம் கோரிக்கை விடுத்தள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 3ம் தேதியன்று டில்லியில் துவங்க உள்... |
இந்தியா | பீகாரில் படகு கவிந்து விபத்து : 3 பேர் பலி | பாட்னா : பீகாரில் படகு ஒரு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. 40 பேர் பயணம் செய்த இந்த படகில் சென்றவர்களில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 10 பேரை காணவில்லை. கன்டக் ஆற்றில் கவிழ்ந்த படகில் பயணம் செயச்த மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். |
இந்தியா | இணையதளம் துவக்கினார் கரீனா கபூர் | மும்பை : பாலிவுட் பிரபலங்கள் பலர் டுவிட்டரில் இணைந்து வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளார். www.kareenakapoor.me என தனது இணையதளத்தை, கரீனா தானே வடிவமைத்துள்ளார். இந்த இணையதளத்தின் முகப்பு பகுதியில் கரீனா தன்னை பற்றிய குறிப்புக்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். இந்த ... |
இந்தியா | அரிசி இறக்குமதியை நிறுத்த பிலிப்பைன்ஸ் திட்டம் | மணிலா :அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பிலிப்பைன்ஸ், அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : நாட்டில் வேளாண்மை நல்ல முறையில் உயர்ந்துள்ளதாகவும், இதனா... |
தமிழகம் | வெளிநாட்டில் கிளைகளை திறக்கிறது தங்கமயில் ஜீவல்லரி | மதுரை : மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தங்கமயில் ஜீவல்லரி நிறுவனம், வெளிநாடுகளில் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், சமீபத்தில் மும்பை பங்குச்சந்தையில் பங்கு வர்த்தகத்தில் நுழைந்ததாகவும், அதில் வெற்றியும் பெற்றுள்ளதா... |
தமிழகம் | நாகையில் ஓஎன்ஜிசி சம்மளேன நிர்வாகி வீட்டில் சோதனை | நாகை : நாகப்பட்டினத்தில் ஓஎன்ஜிசி பெட்ரோலிய எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுசெயலர் சேதுபதி. இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சேதுபதியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். |
இந்தியா | பந்திற்கு ஒத்துழைப்பு தர பா.ஜ., வலியுறுத்தல் | புதுடில்லி : பெட்ரோல்,டீசல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஜூலை 05ம் தேதியன்று நடத்தப்பட உள்ள பந்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பா.ஜ., தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தி உள்ளார். நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக 45 கட்சிகள் இந்த முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இது நிச்சயம் வ... |
தமிழகம் | தமிழக ராணுவ வீரர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் உதவி | சென்னை : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் பயங்ரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலின் போது உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்டம் சிறியூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் ஆகிய ராணுவ வீரர்களின் குடும்ப... |
இந்தியா | போர்டு இந்தியா கார் விற்பனை 267 சதவீதம் அதிகரிப்பு | மும்பை : கார் தயாரிப்பில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ள போர்டு இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில், இதன் விற்பனை 267 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தங்கள் நி்றுவனம் ஜூன் மாதத்தில் 7,269 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 267 ச... |
General | விம்பிள்டன் டென்னிஸ் : பயஸ் ஜோடி அரையிறுதிக்கு தகுதி | லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-காரா பிளாக்(ஜிம்பாப்வே) ஜோடி கால் இறுதி ஆட்டத்தில் பால் ஹண்லே (ஆஸ்திரேலியா)-சான் யங் ஜான் (தைவான்) ஜோடியை 6-4, 6-7 (7/4), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. |
இந்தியா | லலித் மோடி விவகாரம் : நாளை சிறப்பு கூட்டம் | மும்பை : ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித்மோடி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு லலித்மோடி அளித்த விளக்கத்தை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதா என்பது பற்றிய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது. அதில் முக்கிய முட... |
தமிழகம் | கொடைக்கானல் பள்ளி தாளாளர் சரண் | கொடைக்கானல் : பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக கடந்த 2 வாரமாக தேடப்பட்டு வந்த கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட், இன்று கோர்ட்டில் சரணடைந்துள்ளார். |
இந்தியா | நடிகை விஜயசாந்தி மீது வழக்குப்பதிவு | ஐதராபாத் : பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையும், எம்.பி.,யுமான விஜயசாந்தி, முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது விஜயசாந்தி முறைகேடு செய்ததாக அவர் மீது பனராஜா மலைகள் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நட... |
இந்தியா | தாழ்தளப் பேருந்தை தயாரிக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் | கோல்கட்டா : சர்வதேச அளவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், தாழ்தளப்பேருந்துகள் உற்பத்தியில் களமிறங்குகிறது இதுதொடர்பாக, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் வில்பிரைடு ஹல்பர் கூறுகையில், இந்திய அளவில் ஆடம்பர கார்களை தயாரித்து வருவதாகவும் , தாங்கள் தஙகள் வர்த்தகத்தை மேம்படுத... |
இந்தியா | பவார் “பவர் “ குறைகிறது ! | புதுடில்லி: மத்திய அமைச்சர் சரத்பவார் அதிகாரத்தை குறைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி விரும்புவதாக டில்லி அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்ச தலைவரான சரத்பவார் ஐ.சி.சி. ( சர்வேதச கிரிக்கெட் வாரியம் ) தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் மத்திய அமைச்சர் பண... |
இந்தியா | மத்தியபிரதேச அமைச்சர் மிஸ்ரா திடீர் ராஜினாமா | போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அனூப் மிஸ்ரா, இளைஞர் ஒருவரை கொலை செய்ததாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா தொடர்பான கடிதத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்கிடம் அளித்தார். அவர் அந்த ராஜினாமா கடிதத்தை கவர்னர் ரமேஷ் தாகூருக்கு அனுப்பி உள்ளார்.... |
General | துருக்கியில் கலவரம் : 12 பயங்கரவாதிகள் பலி | தியார்யாகிர் : துருக்கியின் தெற்கு பகுதியில் உள்ள பெர்வாரி நகரத்தில் குர்தீஷ் கொரில்லா படையினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. இதில், 4 ராணுவ வீரர்கள் மற்றும் குர்தீஷ் பயங்ரவாதிகள் 12 பேர் பலியாகி உள்ளனர். கலவரத்தை அடக்கும் பணியில் துருக்கி விமான படையினர் ஈடுபட்டுள்ளனர். பய... |
இந்தியா | ராஜீவை பற்றி விமர்சனம் : கேரள சட்டசபையில் அமளி | திருவனந்தபுரம் : இன்று நடைபெற்ற கேரள சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வந்தனர். கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் நீதிபதி தீர்ப்பை விமர்சித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக இந்த கவன ஈர்ப்பு கொண்டு வரப்பட்டது. இதற்கு முதல்வர் அச்சுதானந்தம் பதில் அளித்து பேசுகையில்,... |
தமிழகம் | மைக்கேல் ஜாக்சன் மகன் தோல் நோயால் பாதிப்பு | லாஸ்ஏஞ்சல்ஸ் : பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகன் பிரின்ஸ் மைக்கேல்(13). இவர் “விடிலிகோ” என்ற ஒரு வித தோல் நோயினால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் தனது சகோதரி சிப் லிங்ஸ் பாரிஸ்(12), தம்பி பிரின்ஸ் மைக்கேல்2 (8) ஆகியோருடன் கோடை விடுமுறையை கழிக்க ஹவாலிக்கு சென்று இருந்தார். அப்போது அவரது தோள்பட்டையின் கீழ் பகு... |
இந்தியா | இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் கைது | ஜெய்பூர் : 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெய்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்வழக்கு தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் உட்பட 9 நிர்வாகிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். |
தமிழகம் | வீரமணி வீட்டில் கல்வீசி தாக்குதல் | சென்னை : தி.க., தலைவர் வீரமணி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளனர். அடையாரில் உள்ள இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளும் நொருக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | நெல்லையில் போலீசாரை குத்திய 2 பேர் கைது | நெல்லை : நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் ஒருவரை தாக்கி விட்டு நகை பறிக்கப்பட்டது. இவர்களை போலீசார் செல்வராஜ் மற்றும் ஞானவேல் ஆகியோர் துரத்திச் சென்றனர். இவர்களையும் கொள்ளையர்கள் கத்தியால் குத்தினர். இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட மறுகால் குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணி... |
தமிழகம் | திருச்சியில் அதிமுக மாநில இணைச் செயலாளர் கைது | திருச்சி : திருச்சி மாவட்ட அதிமுக மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் மாரியப்பன். கடந்த சில நாட்களுக்கு முன் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் சிலர் சுவர் இடிந்து விழுந்து பலியாகினர். உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய உதவித் தொகையை முறையாக வழங்காமல், போலி உறுப்பினர் அட்டையை பயன்படுத்தி மாரியப்ப... |
இந்தியா | பங்குசந்தையில் வர்த்தகம் சரிவில் முடிந்தது | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.38 புள்ளிகள் சரிந்து 17460.95 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.30 புள்ளிகள் குறைந்து 5237.10 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. |
இந்தியா | ஐதராபாத் - கோலாலம்பூர் விமான சேவை : ஏர்ஆசியா அறிமுகம் | ஐதராபாத் : ஐதராபாத் - கோலாலம்பூர் இடையேயான விமான சேவையை ஏர் ஆசியா விமான நிறுவனம் துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, ஏர்ஆசியா விமான நிறுவன உயர் அதிகாரி ஜாஸ்மின் லீ இன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : இந்த ஐதராபாத்-கோலாலம்பூர் இடையிலான விமான சேவை, வாரத்திற்கு 4 முறை இயக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய சேவையை பிரபலப்ப... |
இந்தியா | இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் 9 பேர் கைது ; ரூ. 300 கோடி நஷ்டத்திற்கு காரணமானவர்கள் | புதுடில்லி: ஜெய்ப்பூரில் நடந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் இறந்தனர். எண்ணெய் பொருள் எரிந்து கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2009 ல் அக்டோபர் மாதம் 30 ம் தேதி நடந்த சம்பவத்தில் இன்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்... |
தமிழகம் | அரசு பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு : எம்.எல்.ஏ. திடீர் தர்ணா | நாகர்கோவில் : அரசு பஸ்களில் அமல் படுத்தப்பட்டு வரும் மறைமுக கட்டண உயர்வை திரும்ப பெற கேட்டு எம.எல்.ஏ. நடத்திய தர்ணா போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்தழ சொகுசு பஸ், எல்.எஸ். எஸ்., டி.எஸ்.எஸ். என போர்டு போட்ட பஸ்கள்தான் அதிகமாக ஓடுகிறது. இதில் எந்த சிறப்பு வசதிகளும் கிடையாது. வழக்கமான எல்லா... |
இந்தியா | சபரிமலை மேல்சாந்தி தேர்வு விதிகள் தளர்வு | சபரிமலை : சபரிமலையில் மேல்சாந்தி தேர்வுக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி முன்னாள் மேல்சாந்திகளும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஒவ்வொரு கார்த்திகை முதல் தேதியும் நேர்முகத்தேர்வு மற்றும்குலுக்கல் மூலம் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு தேர்வு செ... |
தமிழகம் | போலீஸ் பயிற்சி கல்லூரி தேர்வு : மாநில அளவில் தேனி முதலிடம் | தேனி : சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி நடத்திய தேர்வில், தேனி பயிற்சி பள்ளியை சேர்ந்தவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். முதல் பத்து இடங்களில் ஏழு இடங்களை தேனி பள்ளி பெற்றதோடு, நூறு சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் 24 போலீஸ் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக தேர்வு செய்யப்பட்ட ப... |
தமிழகம் | இலவச வீடு கட்டும் திட்டம் : விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு | தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில், கணக்கெடுப்பில் விடுபட்ட பயனாளிகளுக்கு மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு இலவவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் பிப்., முதல் நடந்தது. சர்வே குழுவினர், கிராமங்களுக்கு சென்ற போது பூட்டப்பட்டு இருந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் சேர... |
இந்தியா | சாய்னாவுக்கு டி.எஸ்.பி., பதவி : அரியானா அரசு வழங்குகிறது | சண்டிகர் : தொடர்ந்து மூன்று பாட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நேவாலுக்கு டி.எஸ்.பி., பதவி வழங்க அரியானா அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் பூபேந்தர் ஹூடா சாய்னாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாட்மின்டன் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய்னாவுக்கு பாராட்டு தெரிவ... |
தமிழகம் | காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22ல் இடைத்தேர்தல் | திண்டுக்கல் : தமிழகத்தில் காலியாக உள்ள 923 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், ஜூலை 22ல் நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள இப்பதவிகளுக்கான தேர்தல் தொடர்பான தேதி அறிவிக்கப்பட்டது.நாளை (ஜூலை 3ல்) காலை 11 மணிமுதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஜூலை 10 வரை மனு... |
தமிழகம் | லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக கைது | சிவகங்கை : களவு போன டூவீலரை கண்டுபிடித்துக்கொடுக்க லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக பிடிபட்டார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலையடுத்த அழகாபுரியைச் சேர்ந்தவர் அன்புமலை. இவரது டூவீலர் கடந்த 13ம் தேதி காணாமல் போனது. இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் அன்புமலை புகார் செய்தார். டூவீலரை கண்டுபிடித்துத்... |
General | குவைத்தில் அனைத்து மகளிர் போலீஸ் படை | துபாய் : குவைத்தில், பாலியல் புகார், ஈவ்-டீசிங் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, பெண் சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. துபாயில், வணிக வளாகங்கள், கிளப்புகள் மற்றும் தியேட்டர்களில் பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வது, ஆண்களை பெண்கள் கிண்டல் செய்வது, அரவாணிகள் தொந்தரவு போன்றவை குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார... |
தமிழகம் | திருமணம் நின்ற பெண்ணை தாய் மாமன் மணந்தார் | வேலூர்: திருவலத்தில் ராணுவ வீரர் இரண்டாவது திருமணம் செய்ய முயன்றார். முதல் மனைவி தர்ணா செய்ததால், திருமணம் நின்றது. திருமணம் நின்ற பெண்ணை அவரது தாய் மாமன் மணந்தார். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர் டில்லியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மாங்காட்ட... |
General | உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி: பிரேசில் அதிர்ச்சி தோல்வி | போர்ட் எலிசபெத்: தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-பிரேசில் அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது. |
தமிழகம் | வேலூரில் இறந்ததாக கூறப்பட்ட வாலிபர் உயிர் பிழைத்ததால் பரபரப்பு | வேலூர்: வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்டவர் உயிர் பிழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அடுத்த காட்பாடி லத்தேரியைச் சேர்ந்தவர் பாபு (36). இவருக்கு வயிற்றில் கட்டி இருந்தது. இதை அகற்ற வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று (ஜூலை... |
தமிழகம் | தேர்தல் பணியில் உள்ளவர்களை இடம் மாற்றம் செய்ய தடை | தேனி : தேர்தல் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை பணியிட மாற்றம் செய்வதற்கும், புதியவர்களை நியமிப்பதற்கும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த பணிகள் நடைபெறுகின்றன. இறுதி வாக்காளர் பட்டியல் செப்., 15ல் வெளியிடப்பட உள்ளது. இதை தொடர... |
தமிழகம் | புதிய ரேஷன் கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் குறைப்பு | திண்டுக்கல் : புதிய ரேஷன் கார்டுகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, தலா இரண்டு லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில், புதிய ரேஷன் கார்டுகளுக்கு தலா ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை மூன்று லிட்டராக குறைத்து வினியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர... |
தமிழகம் | பிரான்ஸ் பயணியின் கருணை : குதிரைக்கு மறுவாழ்வு | மதுரை : பிரான்ஸ் சுற்றுலா பயணியின் கருணையால், மதுரையில் உடல் நலம் குன்றிய குதிரைக்கு, பிராணிகள் நலச் சங்கங்கள் மூலம் மறுவாழ்வு கிடைத்துள்ளது. பிரான்சை சேர்ந்த மனநல ஆலோசகர் ஜீன் கிறிஸ்டின் பியூ. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தார். தென்காசி அமர் சேவா சங்கத்தில் தங்கியிருந்தபோது, அப்பகுதியில்... |
தமிழகம் | கும்பகோணத்தில் மூப்பனார் சிலை: திறக்கிறார் பிரணாப் முகர்ஜி | கும்பகோணம்:மறைந்த ஜி.கே.மூப்பனார் முழு உருவ வெண்கலச் சிலையை, கும்பகோணத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை திறந்து வைக்கிறார்.கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் எதிரில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. துணை முதல்வர் ஸ்... |
தமிழகம் | தூத்துக்குடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை:தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு மூடு விழா நடத்த முயற்சிப்பதற்கும், குடிநீர், சாலை வசதி நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.அ.தி.மு.க., பொதுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடியில் இருந்து தெற்கே செல்ல... |
தமிழகம் | முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் நிறைவு : 1,398 பேருக்கு எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது | சென்னை : முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 1,398 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,645 இடங்கள் உள்ளன. இதில் 247 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 1,398 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்ப... |
இந்தியா | நடிகை விஜயசாந்தி கைதா? சர்ச்சைப் பேச்சால் பரபரப்பு | ஐதராபாத்:தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியைச் (டி.ஆர்.எஸ்.,)சேர்ந்த நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா பிரச்னையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்ற வதந்தி பரவியதால், ஆந்திராவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில், டி.ஆர்.எஸ்., கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசிய விஜயசாந்தி,"தெலுங்கானா கோர... |
தமிழகம் | சிதம்பரத்தில் குறிஞ்சி மலர் | சிதம்பரம் : சிதம்பரத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் பூத்துள்ளது. குறிஞ்சி மலர் எனும் அறிய வகை பூ, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்ற சிதம்பரம் பேராசிரியர் காமாட்சிநாதன். அண்ணாமலைப் பல்கலைக்கழ... |
இந்தியா | கொலையில் மகன் தொடர்பு:ம.பி., மந்திரி பதவியிழந்தார் | போபால்:மகன் மீது கொலை குற்றம் சாட்டப்பட்ட மத்திய பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனூப் மிஸ்ரா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை நேரில் சந்தித்து, மிஸ்ரா தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்; முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டார்.கடந்த வாரம், ம.பி.,யிலுள்ள பேலா என்ற கிராமத்தில் நடந்த நிலத... |
இந்தியா | நிலக்கரி சுரண்டும் மாபியா: மந்திரி அதிர்ச்சி தகவல் | கோல்கட்டா:நிலக்கரி சுரங்கங்களை கள்ளத்தனமாக இயக்கும் மாபியா கும்பல்களை, மாநிலங்கள் ஒடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கோல்கட்டாவில் இந்திய வர்த்தக கழகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "ஜார்க்கண்ட், ஒரிசா, சத்திஸ்கர் உள்ளிட்ட நிலக்... |
இந்தியா | சரத் பவாரிடம் இருந்து உணவுத் துறைபறிப்பு? கிரிக்கெட் ஆர்வத்தால் மந்திரியும் தயார் | மும்பை:மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாரிடம் இருந்து, உணவு மற்றும் பொது வினியோகத் துறைகளைப் பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக அவர் பதவியேற்றுள்ளதையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே, பொறுப் புகளை விட்டுக் கொடுக்க தயாராக உள்ளதாக சரத் பவாரும் சூசகமாக தெரிவ... |
இந்தியா | ராஜிவ் பற்றி முதல்வர் பேச்சு:கேரள சட்டசபையில் அமளி | திருவனந்தபுரம்:கேரள சட்டசபையில் மாநில முதல்வர் அச்சுதானந்தன் , முன்னாள் பிரதமர் ராஜிவ் பற்றித் தெரிவித்த கருத்தால், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.கேரளாவில் தெருமுனை அரசியல் கூட்டங்களுக்கு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஆளும் சி.பி.ஐ.,(எம்) கட்சிப் பிரமுகர் எம்.வி. ஜெயராஜன், இந்த உத்தரவை எதிர... |
இந்தியா | உ.பி.,க்கு நிதி அளிப்பதில் பாரபட்சம்:மத்திய அரசு மீது மாயாவதி சரமாரி புகார் | லக்னோ:உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்த நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக, அம்மாநில முதல்வர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.உத்தர பிரதேச முதல்வர் மாயாவதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் சூடுபிடித்துள்ளது. விரைவில் ... |
இந்தியா | லோக் ஆயுக்தா தலைவர் ராஜினாமா: கர்நாடக அரசுக்கு பெரும் பின்னடைவு | பாட்னா:கர்நாடகா லோக் ஆயுக்தா தலைவர் பதவியை நீதிபதி ஹெக்டே ராஜினாமா செய்தது சரியான முடிவு என, பீகார் லோக் ஆயுக்தா தலைவர் நீதிபதி பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஹெக்டே ராஜினாமாவால் கர்நாடக அரசுக்கு அரசியல் ரீதியில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை (லோக் ஆயுக்தா) தலைவராக இருந்த நீதிபதி சந... |
General | குவைத்தில் அனைத்து மகளிர் போலீஸ் படை | துபாய்:குவைத்தில், பாலியல் புகார், ஈவ்-டீசிங் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, பெண் சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.துபாயில், வணிக வளாகங்கள், கிளப்புகள் மற்றும் தியேட்டர்களில் பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வது, ஆண்களை பெண்கள் கிண்டல் செய்வது, அரவாணிகள் தொந்தரவு போன்றவை குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள... |
தமிழகம் | பொறியியல் கல்லூரிகள் அனுமதி விவகாரம் : 20ம் தேதிக்கு பிறகே தெளிவு பிறக்கும் | சென்னை : ஏ.ஐ.சி.டி.இ., புது விதிமுறைகள் தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கிவிட்டாலும், வரும் 20ம் தேதிக்கு பிறகே ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்ற கல்லூரிகள், இடங்கள் விவரம் தெரிய வாய்ப்புள்ளது என, கூறப்படுகிறது. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ந... |
General | டத்தோ சாமிவேலு விலக கோரிக்கை வலுக்கிறது | கோலாலம்பூர்:மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து டத்தோ சாமிவேலு விலகும்படி, அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.மலேசியாவின் ஆளும் கூட்டணியில் மலேசிய இந்தியன் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியின் தலைவராக டத்தோ சாமிவேலு உள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் இந்த கட்சி, எதிர்பார்த்த அளவுக்கு ... |
தமிழகம் | மகளிர் போலீஸ் படை: குவைத்தில் அமைகிறது | துபாய்:குவைத்தில், பாலியல் புகார், ஈவ்-டீசிங் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, பெண் சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.துபாயில், வணிக வளாகங்கள், கிளப்புகள் மற்றும் தியேட்டர்களில் பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வது, ஆண்களை பெண்கள் கிண்டல் செய்வது, அரவாணிகள் தொந்தரவு போன்றவை குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள... |
இந்தியா | 54 வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வாபஸ் : ஷாருக் உள்ளிட்ட பிரபலங்களுக்கு சிக்கல் | மும்பை : பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், கரன் ஜோகர் உள்ளிட்ட 54 வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஷாருக் கான் உள்ளிட்ட 24 வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு மட்டுமல்லாது, பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும்,... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | கள் இல்லை என்ற நிலை ஏற்படும்.உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு:கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி வரும் காலங்களில் கிராமத்தில் பட்டம் பெறாதவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளே... |
தமிழகம் | கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ் | வேலூர் : பெண் போலீசை மணந்து கொண்ட ராணுவ வீரர், அவருக்கு தெரியாமல் மீண்டும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்ற போது, முதல் மனைவி தர்ணா செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார். ராணுவ வீரர் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர், டி... |
தமிழகம் | சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த மறுப்பு : அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் | கோவை : தமிழகத்தில் அரசு புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வி முறையில் பாடம் நடத்தாமல், மெட்ரிக் முறையிலேயே மீண்டும் பாடம் நடத்தும் அத்துமீறலில் பள்ளி நிர்வாகங்கள் இறங்கியுள்ளன.
தமிழகத்தில் மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு பாட முறைகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. நான்கு பாட முறைகளி... |
இந்தியா | 8 ஆயிரம் பேர் நேற்று பனிலிங்க தரிசனம் | ஸ்ரீநகர் : காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும், அமர்நாத் யாத்திரை உற்சாகமாக தொடர்கிறது. நேற்று மட்டும், பனிலிங்கத்தை தரிசனம் செய்ய, எட்டாயிரம் பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். காஷ்மீரிலுள்ள புகழ்பெற்ற அமர்நாத் என்ற இடத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள பனியால் ஆன லிங்கத்தைத் தரிசனம் செய்ய, ஆண்டுதோறும... |
இந்தியா | தார் பாலைவனம் விரிவடைகிறது: புஷ்கர் ஏரி முற்றிலும் வற்றியது | ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் தார் பாலைவனம், தன் அருகிலுள்ள புகழ்பெற்ற புஷ்கர் ஏரியையும் உள்ளடக்கி இப்போது விரிவடைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். ராஜஸ்தானில் உள்ளது தார் பாலைவனம். அஜ்மீர் நகர் அருகில், ஆரவல்லி மலைத் தொடரின் அடிவாரத்தில் இந்துக்களின் புகழ் பெற்ற யாத்திரைத் தலமான புஷ்கர் உள்ளது... |
இந்தியா | பாழடைந்த தாகூர் இல்லம் : மத்திய அரசு நடவடிக்கை என்ன? | கேந்திரபாரா : ஒரிசாவில் பாழடைந்த நிலையில் உள்ள தேசக்கவி ரவீந்திரநாத் வாழ்ந்த வீட்டை சீரமைத்து நினைவுச்சின்னமாக அறிவிக்க சமூக ஆர்வலர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்று, "சித்திரன்கதா' நாட்டிய நாடகம். மணிப்பூரை சேர்ந்த அர்ஜுன் என்ற இளவரசரின் திருமண நிகழ்வுகளை... |
இந்தியா | பிரசாரம் செய்ய வரும்படி மோடிக்கு பீகார் பா.ஜ., அழைப்பு : ஐக்கிய ஜனதா தளம் சங்கடம் | ஆமதாபாத் : பீகாரில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்கும்படி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது. இதனால் கடுப்பான கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், "பா.ஜ., ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மோடி - பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளம... |
இந்தியா | சபரிமலை மேல்சாந்தி தேர்வு விதிகள் தளர்வு : மாஜி மேல்சாந்திகளுக்கு மீண்டும் வாய்ப்பு | சபரிமலை : சபரிமலையில், மேல் சாந்தி தேர்வுக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. இனி முன்னாள் மேல் சாந்திகளும், இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. சபரிமலையில், ஒவ்வொரு கார்த்திகை முதல் தேதியும் புதிய மேல்சாந்தி பதவி ஏற்கிறார். நேர்முகத்தேர்வு மற்றும் சன்னிதானத்தில் நடைபெறும் குலுக்கல் தேர்வு மூலம், இவர... |
இந்தியா | ஓய்வு பெற்ற ஆசிரியர் தயாரித்த டைனோசர் | திருச்சூர் : கேரளா, திருச்சூர் மாவட்டம், மாளா அருகே பாலிச்சேரியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(72). இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றி 12 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார்.தற்போது இவர், ஆறு ஆடி உயரம் கொண்ட டைனோசரை, தன் வீட்டு வளாகத்தில் உருவாக்கியுள்ளார். அவர் கூறியதாவது: சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருட்களைத் தயாரிக்க அதிக நேரம் ஒத... |
தமிழகம் | நெய்வேலியில் ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரம் : மின் வினியோகம் இன்று பாதிக்கும்? | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்வதால், இன்று முதல் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்.எல்.சி.,யில் பணிபுரியும் 14 ஆயிரத்து 232 தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை, நிலுவைத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக... |
தமிழகம் | இறுதி கட்டத்தில் சுரங்க பாதை: மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது? | பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகளை இணைக்கும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அடுத்த மாதம் முதல் பஸ் ஸ்டாண்ட் ரோடு போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியில் பழைய பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடி ஏற்பட்டதால், மத்திய பஸ் ஸ... |
தமிழகம் | கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை | பொள்ளாச்சி: கோழிப்பண்ணைகளில் ஐந்து பேட்ஜ்களில் குஞ்சு விட வேண்டும் என்று கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கோழிப்பண்ணையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ஆனைமலையில் நடந்தது. கூட்டத்திற்கு காளிமுத்து தலைமை வகித்தார்.கடந்த 15 ஆண்டுகளாக கோழி வளர்ப்பு கூலியாக கிலோவுக்கு 2.50 ரூபாய் வழங்கப்படுகிறது. கோழி வளர்க்க கிலோவுக்கு 10 ... |
தமிழகம் | கிணறு வெட்ட உத்தரவு நகல் வழங்க வேளாண் பொறியியல் துறைக்கு வேண்டுகோள் | பொள்ளாச்சி: வேளாண் பொறியியல் துறை மூலம் கிணறு வெட்டும் போது, அதற்கான உத்தரவு நகலை நில உரிமையாளரிடம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்திற்கு தாலுகா உபதலைவர் கோபால்ரத்தினம் முன்னிலை வகித்தார். உதவி செயலாளர் சவுந்தரராஜ், பொருளாளர் ராமசாமி உள்பட பலர் பேசினர்.சூர... |
தமிழகம் | சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு | வால்பாறை: வால்பாறையில் பெய்துவரும் தென்மேற்குப் பருவ மழையினால் சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடிநீர்மட்டம் உயர்ந்துள்ளது.வால்பாறையில் பெய்துவரும் பருவ மழையினால் சோலையாறு அணை நேற்றுமுன்தினம் காலை நீர்மட்டம் 62.83 அடியாக இருந்தது. நேற்று பகல் 1.00 மணி நிலவரப்படி 64.29 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.