category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | திறந்தநிலை பல்கலையிலும் உடனடி மாணவர் சேர்க்கை | சென்னை : சென்னைப் பல்கலைக் கழகத்தைப் போல, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்திலும், மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில், மாணவர் சேர்க்கையை உடனுக்குடன் நடத்தும் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, தொலைதூரக் கல்வி மையத்தில... |
தமிழகம் | முதல்வர் கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு | சென்னை: முதல்வர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று காலை திடீரென சந்தித்துப் பேசினார். ஒரு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, தமிழக முதல்வர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அரைமணி நேரம் இந... |
தமிழகம் | ஆன்லைன் பரிவர்த்தனையா? கவனமாக இருங்கள் | தகவல் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வளர்ந்து வரும் சூழலில் அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் மற்றும் மொபைல் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் கவனமாக இல்லையேல் பல இழப்புகளை சந்திக்க வேண்டிவரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
நகர வாழ்க்கை படு பிசியாகிவிட்ட நிலையில், பொதுமக்கள் தங்கள் தேவைக... |
தமிழகம் | மாணவர்களுக்கு நேரடியாக உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டம் | மாணவர்களின் வங்கி கணக்கில் ஆன்-லைன் மூலமாக கல்வி உதவித்தொகையை செலுத்தும் திட்டம் அரசால் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூ... |
தமிழகம் | சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் ஆயத்தம்: நாளை மறுநாள் சென்னையில் உயர்மட்ட ஆலோசனை | சென்னை: தமிழக அரசியல் கட்சிகளிடையே, சட்டசபை தேர்தல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தேர்தல் கமிஷனும், தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, நாளை மறுதினம் சென்னையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் ... |
தமிழகம் | கொடைக்கானலில் தொடர் மழை : கொய்மலர் ஏற்றுமதி பாதிப்பு | கொடைக்கானல் : கொடைக்கானலில் கொய்மலர்கள் நன்கு மகசூல் இருந்தும், தொடர் மழையால் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதியில் கொய்மலர்கள் (பொக்கே பூ) விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளையும் கார்னேஷன்,ஜெர்ப்பூரா பூக்கள் பெரிதாக இருப்பதால், பெங்களூரு, மும்பை, டில்லி உட்பட வெளியிடங்களுக்க... |
இந்தியா | புதைக்கப்படும் புலனாய்வுத் துறை : உரத்த சிந்தனை: எஸ்.ஆர்.சேகர் | மத்திய புலனாய்வுத் துறை - சி.பி.ஐ., என்றாலே, ஒரு பெருமிதம், மிடுக்கு, கம்பீரம். இப்படித் தான் சிலகாலம் வரை, நம் அனைவர் மனதிலும் சி.பி.ஐ., நின்றது. இப்போது அது பழங்கதை. இன்று சி.பி.ஐ., என்பது பபூனாக, மத்தியில் ஆட்சி செலுத்தும் கட்சியின் கையாளாக, ஏவலாளாக... புரியும்படி சொன்னால், ஆளும் கட்சியின் அடியாளாக செயல்படும் அவலம் ... |
தமிழகம் | ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் புதுமைப் பெண் | தர்மபுரி : தர்மபுரி அருகே ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் இளம் பெண். வறுமையால் தந்தை செய்த தொழிலை ஆர்வத்துடன் கற்று முன்னேற துடிக்கும் இப்பெண்ணை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி, பாரதி கண்ட புதுமைப் பெண் சமுதாயத்தை உருவாக்கி வருகின்றனர். பெண... |
இந்தியா | ராகுலுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி எப்போது? | புதுடில்லி : காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் இம்மாத இறுதியில் நடக்க இருக்கிறது. அதில் சோனியாவே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் சில காலங்களுக்கு ராகுல், அப்பதவிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வரும் 25ம் தேதி, காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நடக்க உள்ளது. கட்சி விதிகளின்படி, 10 ஆ... |
இந்தியா | தாக்கு பிடிக்க முடியுமா? உச்சத்துக்கு போனது பெட்ரோல் விலை | மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் ஒட்டு மொத்த வயிற்று எரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
இந்தாண்டில் மட்டும், இதுவரை மூன்று முறை பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2004ல் ஐ.மு., கூ... |
தமிழகம் | ராமநாதபுரம் கண்மாயில் மரம் பற்றாக்குறை : சரணாலயம் அமைய மாற்று ஏற்பாடு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரிய கண்மாயில் அமைய உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு மரங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை வனத்துறையினர் துவக்கி உள்ளனர். கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசன் வாரியாக வெளிநாட்டு பறவைகளின் வரத்து உள்ளது. குறிப்பாக பறவைகளின் இனப்பெருக்க காலங்கள் இந்திய கடலோர பகுதிகளில... |
தமிழகம் | ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் | தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று ஜெ., உத்தரவுப்படி நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருவர் மரநிழலில் ஒதுங்கி நின்றனர். மாவட்டச் செயலர் கெஞ்சிக் கேட்டதால், அவர்கள் சிறிது நேரத்திற்குப்பின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் உள்ளிட்ட தென... |
தமிழகம் | கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறை மீறி கட்டடம்? உரிய நேரத்தில் கள ஆய்வு: ஒரு நபர் குழு தகவல் | ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், விதிமுறைகளை மீறி புதிய கட்டடம் கட்டப்படுவதாக எழுத்த சர்ச்சை குறித்து ஆய்வு நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான ஒரு நபர் குழு, ஊட்டிக்கு வந்துள்ளது.
கோவையில் செம்மொழி மாநாடு முடிந்த மறுநாள், முதல்வர் கருணாநிதி, நிருபர்களிடம் பேசியபோது, கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறி ப... |
இந்தியா | வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி | தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் விவாதம் துவங்கிவிட்ட நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில், எந்தக் கட்சியினரும், "தில்லுமுல்லு' செய்ய முடியாத அளவிற்கு, தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியினர் மொத்தமாக விண்ணப்பங்களை கொண்டு வந்தால்... |
தமிழகம் | பாலைவனத்தில் வளரும் பேரிச்சை திண்டுக்கல்லிலும் அமோக விளைச்சல் | திண்டுக்கல் : பாலைவனத்தில் மட்டுமே விளையும் பேரிச்சை, திண்டுக்கல் அருகே பயிரிட்டு விவசாயி ஒருவர் நல்ல விளைச்சல் கண்டு சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடியில் டி.ஆர்., அன் சன்ஸ் பேரிச்சை தோட்டம் 13 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டில், கன்றுகள் நடப்பட்ட நிலையில், தற்போது பேரிச்சை நல்ல ... |
இந்தியா | எலக்ட்ரானிக் முறையில் சுங்க வரி வசூல் : தேசிய நெடுஞ்சாலைகளில் அறிமுகம் | நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், நவீன எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்க வரி வசூல் மேற்கொள்ளப்படவுள்ளது. வரும் 2012ம் ஆண்டு முதல், இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு... |
தமிழகம் | நூலகர்களுக்கு மாற்றுப்பணி வாய்ப்பு : எதிர்பார்க்கும் மாற்றுத்திறனாளிகள் | திண்டுக்கல் : நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்கள், மீண்டும் மாற்றுப்பணி வாய்ப்பு வழங்குவதற்கான அறிவிப்பை எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட மைய, கிளை, ஊர்ப்புறம் என ஆறாயிரத்து 500 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 800க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இந்நிலையில் நூலகர்களுக்கான மாற்றுப்பணி வழங்கியதில், மோசடி நடந... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் பேச்சு: இந்தியாவில் எடுக்கும் எண்ணெயை வெளிநாட்டிலும் விற்கலாம் என சட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையேற்றம், அம்பானிக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், மத்திய அரசு அளித்த பரிசாக அமைந்துள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கை: ப... |
தமிழகம் | கண்ணாடி நார் இழைப்படகுகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை | ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் புழக்கத்தில் உள்ள கண்ணாடி நார் இழைப்படகுகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை அனுப்ப, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில், பல்வேறு படகுகள் மூலம் மீன்பிடித்தொழில் நடந்து வருகிறது. சில படகுகள், மீன்பிடி வேடத்தில் சென்று சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றன. கண்ணாட... |
தமிழகம் | ஊனமுற்ற குதிரைக்கு மறுவாழ்வு : தினமலர் செய்தி எதிரொலி | அவனியாபுரம் : ஊனமுற்ற குதிரை குட்டிக்கு தினமலர் இதழ் செய்தி எதிரொலியால் மறுவாழ்வு கிடைத்து, சிவகாசிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரான்சை சேர்ந்த மனநல ஆலோசகர் ஜீன் கிறிஸ்டின் பியூ தமிழகத்திற்கு சுற்றுலா வந்தார். ஜூலை 13ல் மதுரை கோர்ட் அருகே இடது கால் வீக்கத்துடன், ஊனமான குதிரை குட்டியை பார்த்தார். பராமரிப்பின்றி நிற்க முட... |
தமிழகம் | ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் | கடலூர் : பார்வதிதேவிக்கு சிவபெருமான் பிரணவ உபதேசம் செய்த குரு தலமான கடலூர் மாவட்டம், ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன. சிதம்பரத்தில் இருந்து 32 கி.மீ., தொலைவில் இந்தக் கோவில் உள்ளது.
முருகப் பெருமான், தன் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது போல, தனது துணைவிக்க... |
இந்தியா | தோனிக்கு நிச்சயதார்த்தம் | டேராடூன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தோனியின் மிகவும் நீண்ட கால தோழியான சாக்ஷி ராவத்துக்கும், தோனிக்கும் டேராடூனில் மிகவும் எளிமையான முறையில் இந்நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, நெஹ்ரா, ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறை மீறி கட்டடம்? உரிய நேரத்தில் கள ஆய்வு: ஒரு நபர் குழு தகவல் | ஊட்டி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், விதிமுறைகளை மீறி புதிய கட்டடம் கட்டப்படுவதாக எழுத்த சர்ச்சை குறித்து ஆய்வு நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான ஒரு நபர் குழு, ஊட்டிக்கு வந்துள்ளது. கோவையில் செம்மொழி மாநாடு முடிந்த மறுநாள், முதல்வர் கருணாநிதி, நிருபர்களிடம் பேசியபோது, கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறி ... |
தமிழகம் | திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு யாகம் : கிரிக்கெட் வீரர் முரளிதரன் பங்கேற்பு | தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், ரசிகர்களுக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நேற்று காலை 6 மணியளவில், மனைவி மதிமலர் மற்றும் குடும்பத்தினரு... |
தமிழகம் | வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் சிங்கி இறால் | ராமநாதபுரம் : வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் குணம் சிங்கி இறால்களுக்கு உண்டு என்பதால், சர்வதேச அளவில் இதன் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இறால்களில் உயர்தர ரகத்தை சேர்ந்தவை சிங்கி இறால்கள். தோற்றத்திலும், விலையிலும் இவை பெரியதாகும். "பாலினுரிடே' குடும்பத்தை சேர்ந்த இவை பாறை வகை, ஆழ்கடல், மணல் சிங்கி என மூன்று வகைப்படுகிற... |
தமிழகம் | தொழிற்கல்வி கவுன்சிலிங்கில் குழப்பம் : அண்ணா பல்கலை துணைவேந்தர் விளக்கம் | சென்னை : சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கும் பொறியியல் கவுன்சிலிங்கில், அழைக்கப்பட்ட தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தொழிற்பிரிவு பொது மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள நேற்று காலை 9 மணிக்கு அழைக்கப்பட... |
தமிழகம் | என்.எல்.சி., தொழிலாளர்கள் உண்ணாவிரதம் ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொழிலாளர்களுக்கு ஆதரவாக நெய்வேலியில் வியாபாரிகள் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை, இழுபறி நிலையிலேயே உள்ளது. நேற்று முன்தினம் சென்னைய... |
இந்தியா | இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 120ஏக்கரில் பரந்துவிரிந்த முனையத்தை திறந்தார் பிரதமர் | புதுடில்லி: சர்வதேச அளவில் முக்கிய இடம் பெற உள்ள மிகப் பெரிய மூன்றாவது முனையத்தை, டில்லி சர்வதேச விமான நிலையத்தில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். "நாட்டின் உறுதி வாய்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து இன்றியமையாதது' என, அவர் குறிப்பிட்டார்.
டில்லி இந்திரா காந்தி ச... |
தமிழகம் | லாரி-பைக்-கார் மீது மோதல் : பைக்கில் சென்ற 2 பேர் பலி | திருநெல்வேலி : நெல்லை அருகே நான்குவழிச்சாலையில் டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பரிதாபமாக இறந்தனர். திருநெல்வேலி, சங்கர்நகர் பகுதியில் செயல்படும் சுண்ணாம்பு பவுடர் தொழிற்சாலையில் பாலாமடையை சேர்ந்த துரை(30), சூப்ரவைசராக பணியாற்றிவந்தார். நேற்றுமுன்தினம் மாலையில் 6 மணியளவில் தொழிற்சாலையில் இருந்து... |
இந்தியா | சித்து மனைவி கவலைக்கிடம் : தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி | புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பா.ஜ., எம்.பி.,யுமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில், அமிர்தசரஸ் தொகுதி பா.ஜ., எம்.பி., நவ்ஜோத் சிங்கின் மனைவி நவ்ஜோத் கவுர் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிப்ப... |
இந்தியா | நடிகை விஜயசாந்தி கைதாகி விடுதலை | ஐதராபாத்: கலவரத்தைத் தூண்டிவிடும் படியாக பேசியதால், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி நேற்று கைது செய்யப்பட்டு, பின், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆந்திராவில், தெலுங்கானா பகுதிகளில் வரும் 27ம் தேதி நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக நடந்த கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில், "தெலுங்கானா கோரிக்கைக்கு... |
இந்தியா | முன்னாள் பிரதமர்கள் ரூ.6 கோடி பாக்கி | புதுடில்லி: மூன்று முன்னாள் பிரதமர்கள் மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் ஆகியோர், சொந்த வேலைகளுக்காக பயன்படுத்திய விமான போக்குவரத்து செலவாக ஆறு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்டது. அதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில... |
தமிழகம் | டீசல் விலை உயர்வால் விசைப்படகு மீனவர்கள் விரக்தி | டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், விசைப்படகுகள் மூலமான மீன்பிடித் தொழில் முடங்கும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் கடலுக்கு சென்று மீன்களைப் பிடித்து வாழ்க்கை நடத்தி வருகின்றன.
மீன்பிடி தொழிலுக்காக ஆழ்கடல் பக... |
தமிழகம் | அண்ணாமலை பல்கலையில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் | சிதம்பரம் : பதிவாளருக்கு பணி நீட்டிப்பு கொடுப்பதை எதிர்த்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரிய, ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கடந்த மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் சட்டம், பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை மீறி, 69 வயதான பதிவாளர் ரத்தினசபாபதி மற்றும் பொறியியல் புல ... |
தமிழகம் | பேச்சுவார்த்தைக்கு அழைக்கக் கோரிய சங்கத்தின் மனுவை பரிசீலிக்க உத்தரவு | சென்னை : நிர்வாகத்துடன் நடக்கும் கூட்டத்துக்கு தொழிற்சங்கத்தை அழைக்கக் கோரி அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு, போக்குவரத்துத் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ் தாக்கல் செய்த மனு: கடந்த 2008ம் ஆண்டு எங்கள் தொழிற்சங்கம் பத... |
இந்தியா | கொடைக்கானலில் தொடர் மழை : கொய்மலர் ஏற்றுமதி பாதிப்பு | கொடைக்கானல் : கொடைக்கானலில் கொய்மலர்கள் நன்கு மகசூல் இருந்தும், தொடர் மழையால் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதியில் கொய்மலர்கள் (பொக்கே பூ) விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளையும் கார்னேஷன்,ஜெர்ப்பூரா பூக்கள் பெரிதாக இருப்பதால், பெங்களூரு, மும்பை, டில்லி உட்பட வெளியிடங்களுக்க... |
தமிழகம் | ஸ்டேட் வங்கி நாளை செயல்படுமா? அதிகாரிகள் வருவர்: ஊழியர்கள் ஸ்டிரைக் | மதுரை : ஊழியர்கள், நிர்வாகம் என்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மதிக்க கோரி, சென்னை வட்டார பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். ஆனால் அதிகாரிகள் வேலைக்கு வருவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய, சென்னை வட்டார ஸ்டேட் வங்கியில் 30ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். இதில் 25 ஆயிரம் பேர் ... |
தமிழகம் | பஸ்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு : மதுரை ஐ.ஜி., தகவல் | மதுரை : பந்த்தை முன்னிட்டு பஸ்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்கும்படி கட்டாயப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மதுரை ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் நமது நிருபரிடம் கூறியதா... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் வெளியீடு அறிவிப்பு : தமிழுக்கும் முக்கியத்துவம் தரலாமே | பழநி : வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்த அறிவிப்புகளை தமிழில் வெளியிட, அரசு உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதியை கணக்கில் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல், ஜூலை 1ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதற்கான அறிவிப்பை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர... |
தமிழகம் | விபத்துக்கான நஷ்டஈட்டை ஊழியரிடம் வசூலிப்பதா? வேளாண்மை இணை இயக்குனரின் உத்தரவு ரத்து | சென்னை : விபத்துக்கான நஷ்டஈட்டுத் தொகையை, டிரைவரிடம் வசூலிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. ஓசூரில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் டிரைவராக நாராயணா என்பவர் பணியாற்றினார். தர்மபுரி - பென்னாகரம் சாலையில் ஜீப்பை ஓட்டி வரும் போது, விபத்து ஏற்பட்டது. இதில், செல்வி என்கிற காய்கறி வியாபாரி ... |
தமிழகம் | தமிழகத்தில் ரூ.228 கோடியில் மேலும் எட்டு பாலங்கள் | சென்னை : தமிழகத்தில் மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் 228.5 கோடி ரூபாய் செலவில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள ரயில்வே கேட்டுகளை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிப்பவர்கள் ரயில்வே கேட்டை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. மேலும், ரயில் போக்குவரத்த... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் வேகமாக குறைகிறது மின் உற்பத்தி | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலியாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி வேகமாக குறைந்து வருகிறது. என்.எல்.சி., தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் கோரி, கடந்த 30ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி மெல்ல மெல்ல குறைந்து வ... |
தமிழகம் | மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் 18 மணி நேரம் சோதனை | மேல்மருவத்தூர் : மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 18 மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திண்டிவனம் அடுத்த மேல்மருவத்தூரில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், நர்சிங், பாலிடெக்னிக் உள்ளிட்ட ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்கள் அமைந்துள... |
தமிழகம் | அனைத்து பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பில் எஸ்.ஏ.எல்.எம்., கல்வி | தேனி : அனைத்து பள்ளிகளிலும், எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வித் திட்டம் (எஸ்.ஏ.எல்.எம்.,) இந்த ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து, ஆசிரியர்களுக்கு வரும் 10, 12, 13ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை செயல்வழி கற்றல... |
தமிழகம் | பழநியில் நாய்க்கடிக்கு தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரியில் அலைக்கழிப்பு | பழநி : பழநி அரசு ஆஸ்பத்திரியில் நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு அலைய விடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். பழநியில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளது.தினமும் பலர் கடிக்கு உள்ளாகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு பழநி அரசு ஆஸ்பத்திரியில் ஊசி போடுவதில் தாமதம் ஏற்படுகிறது.பூ வியாபாரி பொன்னி(45) கூறுகையில்,நாய் கடித்து அரச... |
தமிழகம் | அனுமதியில்லாத காட்டேஜ்களில் அடாவடி வசூல் | கொடைக்கானல் : சுற்றுலா பயணிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபடும், அனுமதியில்லாத காட்டேஜ் உரிமையாளர் களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.விடுமுறையை யொட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்தது. நகர்பகுதியிலுள்ள பெரும்பாலான ஓட் டல்களில் "அறை' காலியில்லாததால் பயணிகள் மிகவும் கஷ்டப்ப... |
தமிழகம் | உதவித்தொகை வங்கியில் செலுத்த திட்டம் | அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மாணவர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதில்லை யென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தும் திட்டத்தை அரச... |
தமிழகம் | பொதுக்கூட்டம் | கொடைக்கானல் : கொடைக்கானலில் நகர , ஒன்றிய, பேரூர் தே.மு.தி.க., சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் சின்னசாமி, மகளிரணி துணைச் செயலாளர் ராணித்தங்கம் தலைமை வகித்தனர். நகரச்செயலாளர் அருள்தாஸ் முன் னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றார். நலத் திட்ட உதவிகள் வழங்கி, தலைமை நிலையச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றிய ம.தி.மு.க., சார் பில், ஒன்றிய செயற்குழு கூட்டம், நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை வகித்தார். மாநில தலைமை செயற் குழு உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு தலைவராக விஜய்பழனிச்சாமி, உறுப்பினர்களாக ராஜா, நாகராஜ், சண்முகம் உட்பட ஏழுபேர் த... |
தமிழகம் | பரிசளிப்பு விழா | வேடசந்தூர் : வேடசந்தூரில் ஸ்டேட் பாங்க், டயட் அறக் கட்டளை இணைந்து கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம், அதிக மதிப் பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்தியது.பூவாத்தாள் பாலிமர்ஸ் உரிமையாளர் பொம்மணசாமி தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி மேலாளர் நாராயணன்,தலைமை ஆசிரியர்கள் ஜக்கரியா, ராமலிங்கம் முன்னிலை வகித் தனர்.டயட் அறக... |
தமிழகம் | இடையகோட்டை நங்காஞ்சியாற்று நீர் தேக்கம் பராமரிப்பில்லை | இடையகோட்டை : இடையகோட்டை நங்காஞ்சியாற்று நீர்த் தேக்கம் பராமரிப்பின்றி இருப்பதால் கரை, மறுகால் செல்லும் பாதை,வாய்க்கால் பகுதிகளில் முட்செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. இடையகோட்டையில் ஆயிரத்து 540 ஏக்கர், , சின்னக்காம்பட்டியில் 300 ஏக்கர் , வலைபட்டியில் 775 ஏக்கர் மற்றும் கரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 3 ஆ... |
தமிழகம் | திருப்பதி தேவஸ்தானம் ராஜபாளையம் தகவல் மையம் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் | ராஜபாளையம் : ராஜபாளையத்தில் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையம் மூலம் சுவாமி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய, முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 45 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
ராஜபாளையம் தென்காசி ரோடு சொக்கர் கோயில் அருகே, 2007ல் திருமலை திருப்பதி தே... |
தமிழகம் | வத்தலக்குண்டில் அவதி நேரம் அறிவிப்பு | வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு துணை மின் நிலையத்தில் 6ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் வத்தலக் குண்டு, பழைய வத்தலக் குண்டு, விராலிப் பட்டி, கணவாய்பட்டி,எழுவணம்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக் காது. மேற்கண்ட பகுதிகளில் வழக்கமாக இரண்டு மணி ÷ நர மின்தடை அமலில் உள்ள ந... |
தமிழகம் | மாணவர் மாயம் | வத்தலக்குண்டு : பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சக்திவேல்(18). இதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில், படித்து வந்தார். கடந்த ஜூன் 10ல் பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பட்டிவீரன்பட்டி போலீசார் சக்திவேலை தேடி வருகின்றனர். |
தமிழகம் | பெண் தற்கொலை கணவர் மீது வழக்கு | திண்டுக்கல் : நாயக்கர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி ஜெயலட்சுமி(36). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. ஜெயலட்சுமியை தந்தை வீட்டில் இருந்து மேலும் நகை வாங்கி வரும்படி, கருப்பையா வற்புறுத்தியுள்ளார். மனமுடைந்த ஜெயலட்சுமி, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஜ... |
தமிழகம் | மனைவிக்கு தீ: கணவர் கைது | கொடைக்கானல் : நாயுடுபுரத்தைச் சேர்ந்த தம்பதி சசிக்குமார்- பிரியா(28). திருமணமாகி ஆறு ஆண்டு ஆகிறது.சசிக்குமார் குடித்து விட்டு,மாமனார் வீட்டில் நகை,பணம் வாங்கி வரச் சொல்லி அடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரியாவை நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயற்சித்துள்ளார். காயங்களுடன் தப்பி அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்த... |
தமிழகம் | மூதாட்டி மீட்பு | குஜிலியம்பாறை : வேடசந்தூர் அருகே உள்ள ஆண்டியகவுண்டனூரை சேர்ந்தவர் கேத்தப்பகவுண்டர் மனைவி சுப்பம்மாள்(65). இவர், தனது உறவினரான முனியப்பன் என்பவருக்கு சொந்தமான, 50 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டார். வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கவேல் தலைமையிலான வீரர்கள், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சுப்பம்மாளை மீட... |
தமிழகம் | ஊராட்சி தலைவருக்கு மிரட்டல் | கன்னிவாடி: தர்மத்துப்பட்டி ஊராட்சி தலைவர் முத்துப்பிள்ளை. அரசு திட்டத்தின் மூலம் தர்மத்துப் பட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே ஊரைச் சேர்ந்த சேகர்(36), தனது வீட்டின் முன் கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். கன்னிவாடி போ... |
தமிழகம் | ரோடு மறியல்: 255 பேர் மீது வழக்கு | திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே சிலுக்குவார் பட்டியில், ஜூலை 2ல் குடிநீர் பிரச்னைக்காக சிலர் ரோடு மறியல் செய்தனர். முன்னறிவிப்பற்ற மறியலால், போக்குவரத்து பாதிப்படைந்து பயணிகள் அவதிப்பட்டனர். இப்பிரச்னை தொடர்பாக அய்யம்பாளையம் வி.ஏ.ஓ., மாணிக்கவாசகம், நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போஸ், அல்லிமுத்து, முருகன் மற்றும்... |
இந்தியா | பள்ளி தோழியை மணந்தார் இந்திய கேப்டன் தோனி | டேராடூன் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கும் நீண்ட கால பள்ளத்தோழிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி கேப்டன் தோனிக்கும், அவரது நீண்ட கால பள்ளித்தோழியான சாக்ஷி ராவத்துக்கும் டேராடூனில் உள்ள ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ... |
தமிழகம் | ஒரே நேரத்தில் மாறுதல் பெற்றும் பாதிப்பு : தலைமை ஆசிரியர்கள் வேதனை | மதுரை : ஒரே நேரத்தில் பணிமாறுதல் பெற்றும், வெவ்வேறு நாட்களில் விடுவிப்பு பெறுவதால், பாதிப்பு அடைவதாக தலைமை ஆசிரியர்கள் (அனைவருக்கும் கல்வி) வேதனை தெரிவித்தனர். கடந்த மாதம் நடந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வின் போது, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் வழங்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியால், ஆக. 2ம... |
தமிழகம் | பன்றிகளால் பயிர்கள் நாசம் | சாணார்பட்டி : திம்மண்ணநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தி.வடுகப்பட்டியில் பன்றிகள் பயிர்களை நாசம் செய் வதோடு சுகாதாரக் கேட்டையும் விளைவிக் கின்றன.சாணார்பட்டி ஒன்றியம் திம்மண்ணநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தி.வடுகபட்டி குடியிருப்பு பகுதிகளில் பன்றிகளை சிலர் மேயவிடுகின்றனர். இப்பன்றிகள் தலையாரிப்பட்டி, வேட்டைக்காரன்புதூர், ராமராஜபு... |
தமிழகம் | பாரம்பரிய அடையாளத்தை திருடும் பன்னாட்டு நிறுவனங்கள் : பறிபோகும் காப்புரிமை | மதுரை : இந்தியாவின் பாரம்பரிய, மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களின் காப்புரிமையை தக்கவைத்து கொள்ள, பன் னாட்டு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்தியாவின் பாரம்பரிய அடையாளங்கள் பறிபோகும் வாய்ப்புள்ளது.
பல தலைமுறைகளாக, ஒரே இடத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது விளைவிக்கப்படும் தானியங்களுக்கு உலகளவில் தனிமதிப்பு உள்ளன. இவ... |
இந்தியா | சோர்வில் பா.ஜ., | பிரதான எதிர்க்கட்சியான, பாரதிய ஜனதா கட்சி சமீபகாலமாக சோர்வில் உள்ளது. கட்சியின் நிர்வாகிகள், எந்த ஒரு வேலையும் இல்லாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிர்வாகிகளுக்கு எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை. காரணம், கட்சியின் தலைவர் கட்காரி தான். கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கட்காரி, சிறப்பான முறையில் செயல்படு... |
தமிழகம் | நலத்திட்டங்களால் அழியும் வனவளம் | திண்டுக்கல் : தமிழகத்தில், மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மலைவாழ் கிராமத்திலும், மக்களுக்கு தேவைகள் என்ன என்பதை கணக்கு எடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமாக குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை, ரோடு, விளையாட்டு மைதானம், சுகாதார நி... |
தமிழகம் | கோத்தகிரியில் கனமழை:தேயிலை பறிப்பு பாதிப்பு | கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் பெய்து வரும் கனமழையால், பசுந்தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.கோத்தகிரி சுற்றுவட்டார பெரும்பாலான நிலப்பரப்பில், தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசுந்தேயிலையில் நிலவும் தொடர் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் உட்பட இத்தொழிலை நம்பியுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பல இடங்களில், சிலந்... |
தமிழகம் | தொழிலாளர்கள் பணி ஓய்வு:தொழிற்சாலையில் பிரிவுபசாரம் | குன்னூர்:அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தை சார்ந்த பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, பிரிவுபசார விழா நடத்தப்பட்டது.அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் 32 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமன், ராதாகிருஷ்ணனுக்கு, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் சார்பில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. தொழிற... |
தமிழகம் | சிறப்பு அதிரடிபடையினர் சோதனை சந்தனக்கட்டை பறிமுதல்: 4 பேர் கைது | பழநி : மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் சந்தனக்கட்டை கடத்தியதாக 2 பெண்கள் உட்பட 4 பேரை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. பழநி சிறப்பு அதிரடிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை ஆழியாறு பகுதியில் சோதனை நடத்தினர். காட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் (29), அவரது ம... |
தமிழகம் | மேட்டூர் அணை வறண்ட பகுதியில் காய்கறி, கிழங்கு விவசாயம் | மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும், நீர்வரத்து தாமதமானதாலும், அணையின் வறண்ட நீர்பரப்பு பகுதியில் விவசாயிகள் காய்கறிகள், கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்துள்ளனர். மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி; நீர் இருப்பு 93.470 டி.எம்.சி., அணை மொத்தம் 151 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை ... |
தமிழகம் | மாணவர்கள் பதவியேற்பு | ஊட்டி:ஊட்டி ரெக்ஸ் பள்ளியில், மாணவப் பிரதிநிதிகளின் பதவிப்பிரமாணம் நடத்தப்பட்டது.பள்ளி தாளாளர் ஜான்ஜோசப் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி சிவசங்கரன், சிறப்பு விருந்தினராக பேசுகையில், ""மாணவர்களுக்கு உடற்பயிற்சி முக்கியம். கல்வி மட்டுமல்லாமல் விளையாட்டு துறைகளிலும் மாணவர்கள் ஈடுபட்டு சிறப்பு பெற வேண்டும். விளை... |
தமிழகம் | கொடைக்கானலில் தொடர் மழை கொய்மலர் ஏற்றுமதி பாதிப்பு | கொடைக்கானல் : கொடைக்கானலில் கொய்மலர்கள் நன்கு மகசூல் இருந்தும் தொடர் மழையால் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். கொடைக்கானல் மேல்மலை,கீழ்மலை பகுதியில் கொய் மலர்கள்( பொக்கே பூ) விவசாயம் செய்யப்படுகிறது.இங்கு விளையும் கார்னேஷன்,ஜெர்ப்பூரா பூக்கள் பெரிதாக இருப்பதால்,பெங்களூரு,மும்பை,டில்லி உட்பட வெளியிடங்களுக்கு தின... |
தமிழகம் | ஊட்டி டிராவல்ஸ் சங்கம்:வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு | ஊட்டி:வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, ஊட்டியில் உள்ள டிராவல்ஸ் சங் கம் ஆதரவு தெரிவித்துள்ளது.ஊட்டி டிராவல்ஸ் ஏஜென்ட் மற்றும் மேக்சி கேப் உரிமையாளர் சங்கத் தலைவர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா தொழிலை சார்ந்து ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. பல ஆண்டுகளாக சுற்றுலா தொழில் நலிவடைந்துள்ளதால் பாத... |
தமிழகம் | வேலை நிறுத்த ஆலோசனை:ஆதரவு திரட்ட தீர்மானம் | பந்தலூர்:வரும் 5ம் தேதி நடக்கவுள்ள வேலை நிறுத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம், கூடலூர் அ.தி.மு.க., ஒன்றிய அலுவலகத்தில் நடத்தப்பட்டது.அ.தி.மு.க., கூடலூர் ஒன்றிய செயலர் பத்மநாபன் தலைமை வகித்தார். விலைவாசி உயர்வு, கெரசின், சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வரும் 5ம் தேதி அமைதியான முறையில் வேலை நிறுத்தப் போரா... |
தமிழகம் | கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறை மீறி கட்டடம்? உரிய நேரத்தில் கள ஆய்வு: ஒரு நபர் குழு தகவல் | ஊட்டி:நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி புதிய கட்டடம் கட்டப்படுவதாக எழுத்த சர்ச்சை குறித்து ஆய்வு நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான ஒரு நபர் குழு, ஊட்டிக்கு வந்துள்ளது.
கோத்தகிரி கோடநாட்டில் உள்ள ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட் ஒவ்வொரு முறையும் பல்வேறு பிரச்னையில... |
தமிழகம் | வன ஊழியர்களுக்கு பிரிவுபசாரம் | கோத்தகிரி:தமிழ்நாடு வன அலுவலர் சங்கம் சார்பில், வனத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வன ஊழியர்களுக்கு, பிரிவுபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.வனவர் முனியாண்டி வரவேற்றார். வனவர் ராமன், வனத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வனக்காப்பாளர்கள் கோவிந்தசாமி, ஏழுமலை கவுரவிக்கப்பட்டனர். சங்க உறுப்பினர்கள் சார்பில், வடக்கு வனக்கோட்டம... |
தமிழகம் | தந்தை இறுதி காரியத்துக்கு விடுப்பு மறுப்பு விரக்தியில் போலீஸ்காரர் | கமுதி : தந்தை இறுதி காரியம் செய்ய விடுப்பு கொடுக்க எஸ்.ஐ.,செல்வி மறுப்பதால் அபிராமம் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் ராமமூர்த்தி விரக்தியில் உள்ளார். அபிராமம் ஸ்டேஷனில் தலைமைகாவலராக பணிபுரிபவர் ராமமூர்த்தி. இவர் கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாடுக்கு சென்ற போது,இவருடைய தந்தை அழகர்சாமி உடல்நலக்குறைவு காரணமாக... |
தமிழகம் | சேட்டை செய்த குரங்குகள்: வனத்துறை கூண்டில் சிக்கின | கோத்தகிரி:கோத்தகிரியில் தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிக்கப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி அரவேனு பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, வனத்துறை சார்பில் சில நாட்களுக்கு முன், தொல்லை கொடுத்த குரங்குகள் பிடிக்கப்பட்டு, முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.கோத்தகிர... |
தமிழகம் | தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மோசடி : துறை ரீதியிலான விசாரணை துவக்கம் | ஈரோடு : சத்தி அருகே ராஜன் நகர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 18 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது குறித்து துறை ரீதியாக விசாரணை நடக்கிறது. சத்தி அருகே ராஜன்நகர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலராக சுப்புராஜ் பணிபுரிகிறார். அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நகைக்கடன், பயிர்க்கடன் பெறும் போது, அவர்கள் கேட்கும் தொகையை... |
தமிழகம் | நிவாரண உதவி | ராமநாதபுரம் : மாவட்டத்தின் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடை நிவாரணத் தொகையை அமைச்சர் தங்கவேலன் வழங்கினார். கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், கூடுதல் கலெக்டர் பயிற்சி ஆனந்த், மின் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், பாஸ்கரன் டி.ஆர்.ஓ., பலரும் பங்கேற்றனர். |
தமிழகம் | விபத்தில் வியா-பாரி பலி | கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சி-ரங்கு-டியை சேர்ந்த-வர் மலைச்செல்வம் (38).இவர் பால் வியா-பா-ரம் செய்து வரு-கி-றார்.நேற்று முன்தி-னம் உத்த-ர-கோ-ச-மங்கை பகு-தி-யில் வியா-பா-ரத்தை முடித்துக்கொண்டு யமாஹா பைக்கில்(-ஹெல் மேட் அணி-ய-வில்லை) கீழக்கரை வந்து கொண்டு இருந்தார். ஆணை-குடி அருகே திருப்பத்தில் வந்த போது நிலை தடு-மாறி ... |
தமிழகம் | திருச்சி அருகே டாக்டருக்கு அடி - உதை | மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவரை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் சேர்க்க டாக்டர் கூறியதால், ஆத்திரமடைந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், டாக்டரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அருகே பிக்சாண்டார் கோவிலைச் சேர்ந்தவர் வினோத்(29). இவர் ந... |
தமிழகம் | போலி நிலப்பட்டா புத்ததகம் தயாரித்த இருவர் கைது | அரூர் : அரூரில் போலி நிலப்பட்டா புத்தகம் தயார் செய்த அச்சக உரிமையாளர் மனைவி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அரூர் தாலுகா பகுதியில் அதிக அளவில் போலி நிலப்பட்டா பலருக்கு வழங்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., ரஹித் ஆகியோர் கொண்ட குழுவினர்... |
தமிழகம் | மாநாடு வெற்றி; மறக்கப்பட்ட மக்கள் தொடர்புத்துறை! | கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, மாபெரும் வெற்றி பெற்றதில் மத்திய, மாநில அரசுத்துறைகள் பலவற்றுக்கும் பங்குண்டு. குறுகிய கால இடைவெளியில், வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றி, மாநாட்டுப் பணிகளையும் செய்து முடித்த பல்வேறு துறையினரும் பாராட்டுக்குரியவர்களே.மாநாடு வெற்றி பெற்றதற்கு வளர்ச்சிப் பணிகளும், பிரமாண்டமான வளர்... |
தமிழகம் | இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா | பொள்ளாச்சி:தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ஆலாங்கடவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இலவச நோட்டுப்புத்தகம் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். விழாவில், பிராமணர் சங்க தலைவர் கண்ணன், துணைத்தலைவர் பலராமன், செயலாளர் கணேஷ், குப்புச்சாமி ஆகியோர் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டுப்புத... |
தமிழகம் | இலவச வீடு தரும் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு | ராமநாதபுரம் :இலவச வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. மாவட்டத்தில் கடந்த மார்ச் 29ல் தொடங்கி பணி, கிராமம் வாரியாக நடத்தப்பட்டு நிறைவு பெற்றது. பல கிராமங்களில் ஆட்களின்றி நிறை... |
General | 112 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய நீராவி கப்பல்: மீனவர்கள் வீசிய வலையால் வெளியுலகிற்கு தெரிந்தது | ஆர்.எம்.எஸ்., டைட்டானிக் என்ற பிரிட்டிஷ் பதிவு பெற்ற உல்லாசக் கப்பல், கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது, கடலில் மூழ்கியது. இதில் 1500 பயணிகள் இறந்தனர்; 700 பேர் உயிர் தப்பினர். வரலாற்றில் ஒரு சோக முத்திரையை பதித்த இந்த சம்பவம் திரைப்படமாக உருவாகி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களி... |
தமிழகம் | அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தல் | பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் பஸ்கள் நிறுத்த வேண்டிய இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சியில் கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், பொள்ளாச்சி நோக்கி வரும் வாகனங்கள் ஓம்பிரகாஷ் தியேட்டர் ரோடு, ஜ... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் உண்ணாவிரதம் வாபஸ் : வேலை நிறுத்தம் தொடர்கிறது | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து சென்னையில் நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்று, வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்த... |
தமிழகம் | கொப்பரை விலை உயர்ந்தும் தேங்காய் விலை உயரவில்லை:தென்னை விவசாயிகள் விரக்தி | பொள்ளாச்சி:மழை சீசன் துவங்கியுள்ளதால் வெளிமார்க்கெட்டில் கொப்பரைக்கு கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. ஆனாலும், தேங்காய் விலை உயராமல் மந்தமாக உள்ளதால் விவசாயிகள் விரக்கியில் உள்ளனர்.கொப்பரை விலை உயர்ந்து வந்ததால், மார்க்கெட் கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக உள்ளது. தென்மேற்கு பருவமழை சீசனால் பொள்ளாச்சியில் ... |
தமிழகம் | பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலி கீழக்கரையில் குடம் குடிநீர் நான்கு ரூபாய் | கீழக்கரை : பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலியாக கீழக்கரையில் லாரிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் நான்கு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் நீரிலும் உப்பு தன்மை அ... |
தமிழகம் | ஜெயந்தி நாள் கூட்டம் | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நாராயணசர்மா சுவாமிகள் ஜெயந்தி நாள் கூட்டம் நடந்தது. தாசில்தார் (ஓய்வு) கஸ்தூரி ரங்கன் தலைமை வகித்தார். அனந்த நாராயணன், நேந்திரராமன், ராஜகோபாலன், காகம் டிரஸ்ட் நிறுவனர்கள் ராஜலெட் சுமி, சீனிவாசன், மணியண்ணா பேசினர். வைத்தி நாகராஜன் வரவேற்றார். ரெங்கராஜன், கஸ்தூரி ரங்கன், வைத்திநாகராஜன் நிர்வ... |
தமிழகம் | குழப்பத்தில் பயணிகள் | ராமநாதபுரம் : மாவட்டத்தில் ராமேஸ்வரம் சுற்றுலா தலமாக இருந்து வருவதால், பல மாவட்டங்களிலிருந்தும் இங்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி கோட்டத்துக்கு அடுத்தபடியாக மதுரை கோட்ட பஸ்கள் தான் இங்கு அதிகம். அக்கோட்டத்தின் "பி.பி' பஸ்கள் வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களை விட கூடுதல் பகுதியில் நின்று வருகின்றன. இதனால் ந... |
தமிழகம் | மூத்த குடிமக்கள் கூட்டம் | ராமநாதபுரம் : மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. தலைவர் சேசுராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இந்திராணி , சிவக்குமார், பாண்டியன், அன்சாரி பேசினர். |
தமிழகம் | தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்பு | லண்டன்: தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். உழைப்புக்கும், சேமிப்புக்கும் உதாரணமாக கூறப்படும் உயிரினம் எறும்பு. இது தன் உடல் எடையைவிட பல மடங்கு அதிக எடையை சுமந்து செல்லும் தனிச்சிறப்பு கொண்டது.
இதுகுறித்து, பிரிட்டன் கேம்பிரிட்ஜ... |
தமிழகம் | மணப்பாறை அருகே குண்டு வெடிப்பு இருவர் காயம் | மணப்பாறை : மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று மாலை திடீரென குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனும், பேத்தியும் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (50). இவர் மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் அருகே சாலையோரத்தில் செருப்பு தைக்கும் கடை... |
தமிழகம் | ஈராக்கில் திருடு போகும் தொல்லியல் பொருட்கள் | தாகிர்: ஈராக்கில், அமெரிக்கப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள மதிப்பு வாய்ந்த தொல்லியல் பொருட்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்களின் அட்டகாசம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. அவர்களை ஈராக் அரசால் தடுக்க இயலவில்லை.
சதாம் உசேனைப் பிடிப்பதற்காக, 2003ல் ஈராக்கில் அமெரிக்கப் படைகள்... |
தமிழகம் | கிராமப்புற காஸ் வினியோகம் குறித்த அறிவிப்பு காற்றில் பறந்தது | ராமநாதபுரம் : கிராமப்புறங்களில் காஸ் வினியோகம் செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்த முறையை காற்றில் பறக்க செய்து, கூடுதல் விலைக்கு காஸ் சிலிண்டர் வினியோகம் நடந்து வருகிறது. அரசின் இலவச காஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தபின், மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் காஸ் சிலிண்டர் புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கா... |
தமிழகம் | அ.தி.மு.க., கொடியேற்று விழாவில் ரகளை: பலர் காயம் | கரூர் : கரூரில் நடந்த அ.தி.மு.க., கொடியேற்று விழாவில், ஏற்பட்ட பிரச்னையில் தி.மு.க.,வினர் தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிளைகளிலும் கட்சிக் கொடி ஏற்றுவது மற்றும் தெருமுனைக் கூட்டங்களை மாவட்ட அ.தி.மு.க., செய்துவருகிறது. நேற்று முன்தினம் கரூர் 22வது வார்டு பகுதி பலிஜவார் நாயுடு தெ... |
தமிழகம் | எம்.ஜி.ஆர்.கல்வியல் கல்லூரி பட்டமளிப்பு | உச்சிப்புளி : உச்சிப்புளி புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வியல் கல்லூரியில் பி.எட்., மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. இயக்குனர் மங்களராஜ் வரவேற்றார். கல்லூரி தாளாளர் அன்வர்ராஜா பேசுகையில்,""ஆசிரியர் பணியானது,அற்பணிப்பு பணி .ஆசிரியர் பணிக்கு வருபவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல அறிவாளிகளை உருவாக்குவத... |
தமிழகம் | அகதிகள் முகாமில் மோதல் | தேவகோட்டை: தேவகேட்டை அகதிகள் முகாமில் வசிப்பவர் மாணிக்கம். இவரது மகளுடன், முகாமை சேர்ந்த சத்தியமூர்த்தி பேசிக்கொண்டு இருந்தார். இதை கண்ட, அவரது சகோதரர் பிரசாந்த், கண்டித்தார். மாணிக்கத்திடம் சென்று மகளை பற்றியும் எச்சரித்தார். இதனால் தகராறு ஏற்பட்டது. பிரசாந்த் கோஷ்டியினர் தாக்கியதில், மாணிக்கம் தரப்பை சேர்ந்த ஜெயராஜூக... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.