category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | நாமக்கல்லில் வெளிமாநில லாரிகள் நிறுத்தம் | நாமக்கல் : பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதும் எதிர்கட்சிகள் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி 100க்கும் மேற்பட்டலாரிகள் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. |
இந்தியா | சத்தீஸ்கர் வருகிறார் மத்திய உள்துறை செயலாளர் | ராய்பூர் : மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை 2 நாள் பயணமாக நாளை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வருகிறார். தனது பயணத்தின் போது அவர் சத்தீஸ்கர் மாநில கவர்னர் சேகர் தத், முதல்வர் ராமன் சிங் மற்றும் உயர் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். மேலும் அங்கு பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செக் போஸ்டகளின் எண்ணிக்கை... |
தமிழகம் | கோவையில் செம்மொழி மாநாட்டு கண்காட்சி நிறைவு | கோவை : கோவையில் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கலைப்பொருள் கண்காட்சி நடந்தது.இந்த மாநாட்டில் இனியவை நாற்பது பேரணியில் பங்கேற்ற அலங்காரா ஊர்திகள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சிக்கு மக்கள் வரவேற்பு அதிகமாக இருந்ததையடுத்து ஜூலை 4ம் தேதி வரை நீட்டிக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். கண்காட்சியை லட்சகணக்கான மக்கள் பார்வையிட... |
தமிழகம் | கோவையில் ஜீப்-வேன் மோதல் : 16 பேர் படுகாயம் | கோவை : கோவையில் டெம்போ வேன், தனியார் ஜீப் மோதிய விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே அரவிந்த் மருத்துவமனை சார்பில் நடந்த கண் சிக்ச்சை முகாமுக்காக டெம்போ வேனில் டாக்டர்கள் உட்பட சிகிச்சை பெறுபவர்கள் வந்தனர். டெம்போ வேன் எதிரே தொழிலாளர்களை ஏற்றி கொண்டு வந்த அன்னூரை சேர்ந்த ஜீப் மீது மோதியது. ... |
தமிழகம் | பந்த்தையொட்டி ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது | ஒட்டன்சத்திரம் : பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாளை பந்த் நடத்துவதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்வெறிச்சோடி காணப்பட்டது.ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் காய்களில் 70 சதவீதத்திற்கும் மேல் கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.மீதமுள்ள காய்கறிகள் மாநிலத... |
தமிழகம் | பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து செல்வப்பெருந்தகை நீக்கம் | சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சுரேஷ்மானே கூறியுள்ளார். செல்வப்பெருந்தகை வகித்துவந்த மாில தலைவர் பொறுப்பில் ஆம்ஸ்டிராங் நியமிக்கப்பட்டுள்ளார். |
General | ஈரானில் இருவருக்கு தூக்கு தண்டனை | டெஹ்ரான் : போதை மருந்து, ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அமானுல்லா பவுரியன் மற்றும் யூனுஸ் ரஹ்மானி இருவரும் போதை மருந்து, ஆயுதம் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபட்டனர். மேலும் சட்டவிரோதமாக ஈரான் எல்லையைக் கடக்க முயன்றனர். அவ... |
தமிழகம் | கோபுர கலசத்துக்கு விலை ரூ.300 கோடி* கேரள பிரமுகர்களுக்கு வலை | நாகர்கோவில் : கோவில் கோபுர கலசத்துக்கு கேரளாவில் இருந்து வந்த சிலர், 300 கோடி ரூபாய் விலை பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு, தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-மணக்குடி ரோட்டிலுள்ள கீழசரக்கல்விளையில்,தேவி முத்தாரம்மன்கோவில் உள்ளது. இங்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கும... |
தமிழகம் | போடி தி.மு.க., தொழிற்சங்க தேர்தல்: போலீசார் தடியடி | போடி போடியில் அரசு போக்குவரத்துக் கழக தி.மு.க., தொழிற்சங்க (எல்.பி.எப்.,) தேர்தல் முடிந்த பின் ஏற்பட்ட கோஷ்டி தகராறை சமாளிக்க, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.தேனி மாவட்டம், போடி அரசு போக்குவரத்துக் கழக தி.மு.க., தொழிற்சங்கத்தின் (எல்.பி.எப்.,) கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல், காலை 7 மணிக்கு துவங்கியது. தே... |
தமிழகம் | லலித் மோடி மீது மோசடி வழக்கு | மும்பை : ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள லலித் மோடி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்படும் என்று பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர் கூறியுள்ளார். பி.சி.சி.ஐ.,யின் சிறப்பு புலனாய்வுக்குழு கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லலித் மோடி ரூபாய். 1200 கோடி அளவுக்கு மோசடி செய... |
தமிழகம் | இது உங்கள் இடம் | காலம் கடத்தினால் பயனில்லை...:வீ.சுந்தர மகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் 26 பேர், மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்!இம்மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதை, எப்படி இனிமேலும் பொறுத்துக் கொள்வது. மேலான ... |
General | விம்பிள்டன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால் | லண்டன் : லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் தாமஸ் பெர்டிச்சை 6-3,7-5,6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இது நடால் வெல்லும் 2வது விம்பிள்டன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | அரியவகை விலங்குகளின் தோல்கள் வைத்திருந்த நான்கு பேர் சிக்கினர் | நாமக்கல் :நாமக்கல் பகுதியில் அழியும் நிலையில் உள்ள அரியவகை வனவிலங்குகளை வேட்டையாடி, அதன் தோல்களை பதப்படுத்தி வைத்திருந்த நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் அரியவகை வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வனச்சரகர் ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர... |
தமிழகம் | தலைமறைவு குற்றவாளியிடம் இன்னும் இரண்டு சிறுத்தைதோல் | தேனி : வனத்துறையிடம் இருந்து தப்பி தலைமறைவாக உள்ள மணவாளனிடம் இன்னும் இரண்டு சிறுத்தை தோல்கள் உள்ளதாக கைதானவர்கள், வனத்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.தேனி, வருஷநாடு அருகே குமணன்தொழு ஊராட்சி எழுத்தர் துரைப்பாண்டி (35), கடமலைக்குண்டை சேர்ந்த செந்தில்குமார் (29), பொன்னன்படுகையை சேர்ந்த மணவாளன் (40) ஆகிய மூவரும் சேர்த... |
தமிழகம் | சொல்கிறார்கள் | ஆரோக்கியமான குழந்தை பெற... : குழந்தை பிறந்த உடன் உடல் ரீதியில் குறைபாடுகள் உள்ளதா என அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் டாக்டர் சேதுலிங்கன்: ஆரோக்கியமான தாயால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். ஊனமில்லா குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். அப்படிய... |
General | போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராஜபக்ஷே கமிஷன் விசாரிக்க முடிவு | கொழும்பு : இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்காக அதிபர் ராஜபக்ஷேவால் அமைக்கப்பட்டுள்ள கமிஷன், அடுத்த மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்கவுள்ளது. இலங்கையில் நடந்த போரில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக சர்வதேச அளவில் புகார் எழுந்தது. போரில் மனித உரிமை மீறல் நடந்ததா என்பது குறித்து விசாரிக்க ஐ.நா., ச... |
தமிழகம் | ராமதாஸ் ஆசை என்ன: தம்பிதுரை பேச்சு | மாமல்லபுரம்:பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் ஆசைபற்றி அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை விளக்கினார்.திருப்போரூர் தொகுதி அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை பேசியதாவது,கருணா... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: தமிழகத்தில் போதுமான பள்ளிகள் இல்லை; இருக்கும் பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லை. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கல்வி, குக்கிராம பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் தான் சமச்சீர் கல்வி என்று சொல்ல முடியும... |
தமிழகம் | கன்னியாகுமரியில் பேருந்துகள் மீது கல்வீச்சு | கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம், கொத்தியோடு, திருவட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்கள் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேருந்துகள் சேதமடைந்தன. இதனையடுத்து அந்த பகுதிகளுக்கு போலீசார் விரைந்துள்ளனர். |
தமிழகம் | பத்தாம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் தவறான படங்கள் | மதுரை : பத்தாம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் தவறான படங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு திருத்தப்பட்ட பதிப்புகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கணக்குப் பாடப் புத்தகத்தில் தவறான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கேள்விக்குரிய "வெண்படங்களை'... |
தமிழகம் | அரசு பஸ் டிரைவருக்கு திருமண கோஷ்டி செருப்படி | மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே விபத்தை ஏற்படுத்த இருந்த டிராவல்ஸ் வேன் டிரைவருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவருக்கு, வேனில் பயணித்த திருமண கோஷ்டி செருப்படி கொடுத்தது; நாற்காலியால் தாக்கியது. இதை கண்டித்து சக டிரைவர்கள் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மதுரையை ஸ்தம்பிக்கச் செய்தன... |
தமிழகம் | கோவையில் நிறைவு பெற்றது செம்மொழி கண்காட்சி : நீங்கா நினைவுகளுடன் மக்கள் விடை | கோவை : செம்மொழி மாநாட்டையொட்டி, கோவையில் நடைபெற்ற அரிய பொருட்கள் அடங்கிய கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. கண்காட்சி, பிரமாண்ட வெற்றி பெற உதவிய கல்வி அதிகாரிகள், ஊழியர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்தார். கோவையில் கடந்த ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்ம... |
தமிழகம் | குமரியில் மேலும் ஒரு போலி குழந்தைகள் காப்பகம் மூடல் | நாகர்கோவில்: கன்னியாகுமரியில் மேலும் ஒரு அனுமதி இல்லாத குழந்தைகள் காப்பகம் கண்டு பிடிக்கப்பட்டு மூடப்பட்டது. குழித்துறை, சுசீந்திரம், குளச்சல், கல்லுக்கூட்டம் ஆகிய நான்கு இடங்களில் அனுமதி இல்லாத குழந்தைகள் காப்பகம் கண்டு பிடிக்கப்பட்டு அங்கிருந்த குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆதரவற்ற குழந்தைகள் அரசு காப... |
தமிழகம் | கும்ப கலசத்தில் திராவகம் கசிவு : தெங்கம்புதூரில் பரபரப்பு | சுசீந்திரம்: தெங்கம்புதூர் அடுத்த சித்திரைதிருமகாராஜபுரம் தேவி முத்தாரம்மன் கோயில் கும்பகலசத்தில் நீலநிற திராவகம் தென்பட்டதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அருகே கீழ சரக்கல் விளை தேவி முத்தாரம்மன்கோயில் கலசத்தில் திடீர் கதிர்வீச்சு இருப்பதாக கூறி சிலர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு கோபுர கலசங்களை விலை ... |
தமிழகம் | காவல் துறை எஸ்.ஐ., பணிக்கு 60 ஆயிரம் பேர் தேர்வெழுதினர் | சென்னை : தமிழகம் முழுவதும் 56 மையங்களில் எஸ்.ஐ., பணிக்கான தேர்வு நேற்று நடந்தது. பொது பிரிவின்கீழ் 60 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக காவல் துறையில், 1,095 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காவல் துறையில் பணியாற்றும் பட்டதாரிகளுக்கு 20 சதவீதமும், பொது பிரிவினருக்க... |
தமிழகம் | விவேகானந்தரின் மகாசமாதி தின அன்னபூஜை: காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் பங்கேற்பு | கன்னியாகுமரி: சுவாமி விவேகானந்தரின் 108-வதுமகாசமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் அன்னபூஜை நடந்தது.வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மகா சமாதியடைந்த 108-வது ஆண்டு தினம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நேற்று நடந்தது.கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் நெல்லை,கன்னியாகுமரி,தூத்துகுடி,விருதுநக... |
தமிழகம் | காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் | கன்னியாகுமரி: காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்தரஸரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்தார்.இரண்டுநாள் சுற்றுபயணமாக காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்தரஸரஸ்வதிசங்கராசார்ய சுவாமிகள் குமரிமாவட்டம் வந்தார்.நேற்று காலை 8 மணியளவில் கார் மூலம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலுக்கு வந்... |
தமிழகம் | எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முறியடிக்க கெடுபிடி : பஸ், ரயில் பாதுகாப்புடன் ஓடும் | சென்னை : இன்று நாடு முழுவதும் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க தமிழக அரசு கெடுபிடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. தமிழத்தில் அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் களத்தில் குதிக்கின்றன. "பந்த்'தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ், ரயில்கள் ஓடுமென்றும், இயல... |
தமிழகம் | கன்னியாகுமரியில் 17 டன் அரிசி அன்ன பூஜை | நாகர்கோவில் : சுவாமி விவேகானந்தரின் 108வது நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 17 டன் அரிசியுடன் அன்ன பூஜை நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடு தோறும் சேகரிக்கப்பட்ட அரிசி, கேந்திரா அவைக் கூடத்தில் குவிக்கப்பட்டது. தொடர்ந்து அன்ன பூஜை நடைபெற்றது.
விழா... |
தமிழகம் | இன்று பந்த்: பாதுகாப்பு கருதி டேங்கர் லாரிகளுக்கு தடை | சிவகங்கை : நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பந்த் அறிவித்துள்ளதால், இன்று ஒரு நாள் காஸ், எண்ணெய் நிறுவன டேங்கர் லாரிகளை இயக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ.,- அ.தி.மு.க.,- கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளன. "பந்த்'தை முறியடிக்கும் விதத்தி... |
General | விம்பிள்டென் டென்னிஸ்: பயஸ் ஜோடி சாம்பியன் | லண்டன்: விம்பிள்டென் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் பயஸ்-காரா பிளாக் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.லண்டனின் நடைபெற்ற விம்பிள்டென் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் பயஸ்-காரா பிளாக் ஜோடி, மோடி-ரேமண்ட் ஜோடியை எதிர்கொண்டது. இதில் பயஸ்-காரா பிளாக் ஜோடி... |
தமிழகம் | பந்த்: காய்கறி விலை குறைவு | ஒட்டன்சத்திரம் : பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று பந்த் நடத்துவதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து காய்கறி விலை குறைந்து காணப்பட்டது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் காய்களில் 70 சதவீதத்திற்கும் மேல் கேரள வியா... |
தமிழகம் | கட்டாய திருமணம் : மணமாலையை வீசிச் சென்றார் மணப்பெண் | சேலம் : சேலத்தில் நேற்று கூலி தொழிலாளியின் மகளுக்கு கட்டாய திருமணம் முடிக்க பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். மணக்கோலத்தில் இருந்து மணமகள், மாப்பிள்ளை தாலி கட்டுவதற்கு முன் மணமாலையை கழற்றி வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் செரி ரோடு பாண்டியராஜன் தெருவை சேர்ந்தவர் நீம்பு(52); ரிக்ஷா தொழிலாளி. அவரது மனைவி சாந்தி(... |
தமிழகம் | பெருகும் வாகனங்கள்...! அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்...! | நாட்டின் மக்கள் தொகையைப் போலவே, வாகனப் பெருக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தான் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கான்ட்ராக்டர்கள் கோல்மால், அதிக... |
தமிழகம் | கோடநாடு எஸ்டேட்டில் ஹெலிகாப்டர் தளம் : ஊராட்சித் தலைவர் புகார் | ஊட்டி :கோடநாடு எஸ்டேட் விவகாரம் பூதாகரமாகி வெடித்து வருகிறது. எஸ்டேட்டில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரியிடம் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ளார்.
கோடநாடு எஸ்டேட்டில் நான்கு கட்டடங்கள் கட்ட அனுமதி கோரி எஸ்டேட் நிர்வாகம் சார்பில் ஊராட்சியில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த அனுமதியை வைத்துக்... |
தமிழகம் | பழநி ரோப்கார் ஜூலை 6 முதல் நிறுத்தம் | பழநி : பழநி கோயில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிக்காக வரும் 6 ம் தேதியில் இருந்து 20 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பழநி ரோப்காரில் ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து 660 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு கயிறு பொருத்தப்பட உள்ளது. சீவ் பகுதியில் உள்ள 48 சக்கரங்கள், கீழ் தளத்திலுள்ள கியர் பாக்ஸ்,... |
இந்தியா | உயிருக்கு ஆபத்து : அமர் சிங் புலம்பல் | லக்னோ:உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என, லோக் மஞ்ச் அமைப்பின் தலைவர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலராக இருந்த அமர்சிங் அக்கட்சியிலிருந்து விலகினார். தற்போது, "லோக் மஞ்ச்' என்ற அமைப்பின் தலைவராக அவர் உள்ளார்.
ல... |
இந்தியா | தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு பதில் அனுப்பினார் விஜயசாந்தி | ஐதராபாத்:சர்ச்சைக்குரிய வகையில் தெலுங்கானா பிரச்னை குறித்து பேசியதாக கைது செய்யப்பட்டு பின், விடுவிக்கப்பட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) எம்.பி., விஜயசாந்தி, தான் பேசியது குறித்து ஆந்திர மாநில தேர்தல் கமிஷனுக்கு பதில் அனுப்பியுள்ளார்.சில நாட்கள் முன்பு, ஆந்திராவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்திற... |
தமிழகம் | 200 கிலோ அபூர்வ களவாய் மீன் | மண்டபம் : ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன் தினம் மீன்பிடிக்க சென்று ,நேற்று கரை திரும்பிய ஒரு படகில் 200 கிலோ எடை யுள்ள அபூர்வ களவாய் மீன் பிடி பட்டது. மீனவர்கள் இதை மீன்கம்பெனியில் விற்றனர். மீனவர்கள் கூறியதாவது: களவாய் மீன் ஆழ்கடல் பகுதியில் வாழும்.தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையை கொண்டு மீன்பிடிதொழில்செய்யும் போது அதி... |
இந்தியா | ஆறு மாதங்களாக பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை சோனியா | புதுடில்லி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, கடந்த ஆறு மாதங்களாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதவில்லை.அரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நரேஷ் சாய்னி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதங்களின் விவரங்களை கேட்டிருந்தார்.மும்பைத்... |
இந்தியா | கிருஷ்ண தேவராயர் வழங்கிய ஆபரணங்கள் எங்கே: மாநில அரசு விசாரிக்க கோரிக்கை | நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் காணிக்கையாக வழங்கிய தங்கம், வெள்ளி ஆபரணங்கள் தற்போது காணாமல் போய்விட்டது என்பது பெரிய பிரச்னை ஆகிஇருக்கிறது. இது குறித்து மாநில அரசு உயர்நிலை குழுவின் விசாரணை மேற்கொண்டு தெளிவுபடுத்த வேண்டும் என, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவுக்கு வந்துள... |
இந்தியா | நெடுஞ்சாலை மேம்பாடு இன்று ஆலோசனை | புதுடில்லி : நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டு பணிகளில் 85 சதவீத பணிகள், தற்போது அரசு-தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. இதே அடிப்படையில், மாநில நெடுஞ்சாலை பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, அரசு-தனியார் பங்களிப்பை ஈர்க்கும் வகையில், மத்திய திட்ட கமிஷன் சிறப்பு ஆலோசனை கூட... |
இந்தியா | மூணாறு வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு:கேரளாவுக்கு மத்திய அரசு கண்டிப்பு | புதுடில்லி:மூணாறு வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு கேரள அரசை வலியுறுத்தியுள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மூணாறு வனப்பகுதி கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.மூணாறு வனப்பகுதியை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.இந்த நிலையில் சுற்றுலாத் ... |
இந்தியா | குஜராத்தில் முதன் முறையாக ஆன் - லைன் ஓட்டுப்பதிவு | புதுடில்லி:நாட்டில் முதன்முறையாக, குஜராத் மாநில நகராட்சித் தேர்தலில் ஆன்- லைன் மூலம் ஓட்டளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், தேர்தலில் ஆன் - லைன் மூலம் ஓட்டளிக்கும் முறை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில், முதன் முறையாக குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ந... |
General | நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு | லண்டன்:ஏதாவது முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களா? அப்படியானால் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்; மறந்தது ஞாபகம் வந்து விடும். ஆம்; ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், 24 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் ஒரு சோதனை செய்து... |
தமிழகம் | பிணத்தின் பாக்கெட்டில் இருந்த பணத்தை தந்த நேர்மை தொழிலாளி | கொழும்பு:பிணத்தின் பாக்கெட்டில் இருந்த 28,000 ரூபாயை, சவக்கிடங்கு தொழிலாளி நேர்மையாக அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள மட்டாராவைச் சேர்ந்த தொழிலதிபர் நிஷாந்தா குமாரா(49), தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.... |
General | இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண் வீராங்கனை உடல் கண்டுபிடிப்பு | லண்டன்:இங்கிலாந்தில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பெண் கிளாடியேட்டர் ஒருவரின் உடல் கிடைத்துள்ளது.ரோமப் பேரரசர்கள் ஆட்சியில், ஒரு மைதானத்தில் பல்லாயிரக் கணக்கானோர் காணும்படி, ஒரு வீரனுடனோ அல்லது மிருகத்துடனோ மோதி வெற்றி பெறுபவர்கள் "கிளாடியேட்டர்' என்று அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் இந்த வீர விளையாட்டைக் காண்பது ஒரு சி... |
தமிழகம் | பயங்கரவாதத்தை ஒழிக்க எதிர்க்கட்சிகளுடன் பேச்சு | இஸ்லாமாபாத்:பயங்கரவாதத்தை ஒழிக்க எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் லாகூரில் தர்கா ஒன்றில், மூன்று தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியதில் 40க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியாயினர்.பாகிஸ்தானில் உள்ள... |
General | ஆப்கனில் நடக்கும் போரில்வெளிநாட்டு வீரர் எவ்வளவு? | காபூல்:ஆப்கானிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை தற்போது இக்கட்டான நிலையை அடைந்துள்ளது என அமெரிக்க தளபதி தெரிவித்துள்ளார். தற்போது, ஒன்றரை லட்சம் வெளிநாட்டு வீரர்கள் ஆப்கனில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.அமெரிக்காவில் நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்த்த அல்-குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனை ஒ... |
தமிழகம் | ஈரானில் இருவருக்கு தூக்கு தண்டனை | டெஹ்ரான்:போதை மருந்து, ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு ஈரானில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அமானுல்லா பவுரியன் மற்றும் யூனுஸ் ரஹ்மானி இருவரும் போதை மருந்து, ஆயுதம் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபட்டனர். மேலும் சட்டவிரோதமாக ஈரான் எல்லையைக் கடக்க முயன்றனர். அவர்கள்... |
தமிழகம் | மினரல் வாட்டர் கம்பெனிக்கு எதிர்ப்பு : கிராம மக்கள் வெளியேறி போராட்டம் | திருநெல்வேலி : கடையநல்லூரில் தனியார் குடிநீர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ளது நயினாகரம். இங்குள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் கடையநல்லூர் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சுல்தான், "கூல் இன்' மினரல் வாட்டர் தயாரிக்கும் ஆலையை துவக்கியுள்ளார்... |
General | கடலில் குதித்து இந்தியர் தற்கொலை | கோலாலம்பூர்:முன்னாள் காதலியை கத்தியால் குத்தி விட்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்திய இளைஞரின் உடல் நேற்று மலேசியாவில் மீட்கப்பட்டது.மலேசியாவில் வசித்து வந்த இந்தியர் ஞானசுப்ரமணியம் தனசேகர குருக்கள். இவர் அங்கு வேலையில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சுப்ரமணியத்துக்கும், அவரது முன்னாள் காதலிக்கும் இடையே க... |
தமிழகம் | ரெய்டை தொடர்ந்து மேல்மருவத்தூரில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தது | மேல்மருவத்தூர் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் 18 மணி நேரம் இடைவிடாமல் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தவிரவும் நேற்று மேல்மருவத்தூர் கோவிலுக்கு அதிக பக்தர்கள் கூட்டம் வரவில்லை.
தமிழகம் முழுவதுமுள்ள பொறியியல், ம... |
தமிழகம் | சிகிச்சையில் இருந்தவர் தப்பி ஓட்டம் : ரயில் கொள்ளையரை பிடிப்பதில் சிக்கல் | மதுரை : மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க பிஸ்கட் சாப்பிட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பொன் பாலசுப்பிரமணியம் தப்பி ஓடியதால், ரயில் கொள்ளையரை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த ரயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன் பாலசுப்பிரமணியம்(25) மற்றும்... |
தமிழகம் | ஸ்ரீவை., புதிய பஸ்ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை | ஸ்ரீவைகுண்டம், ஜூலை 5- ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்கள் நிற்காத பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்., எல்லைக்குள் பிரதானமான பஸ் ஸ்டாப் இருந்தாலும் தூத்துக்குடி செல்லும் பஸ்களுக்கு மேடைபிள்ளையார் கோயில், பஜார் ஸ்டாப் கிழக்கே முஸ்லீம் ஸ்கூல் என்று இரண்டு ஸ்டாப்களும், வ... |
தமிழகம் | முதியோர் உதவித்தொகை ஆய்வு செய்து வழங்க கோரிக்கை | ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு விரைவில் வழங்கவிருக்கும் முதியோர் உதவித்தொகை பட்டியலில் வறுமைகோட்டில் பெயர் இல்லாதவர்களையும் ஆய்வுசெய்து சேர்த்து உதவித்தொகை வழங்கவேண்டும் என மாவட்ட கிராமவாழ் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் நயினார் குலசேகரன் மாவட்... |
தமிழகம் | உயிர்களை பலிவாங்க காத்திருக்கும் மரங்கள் | ஸ்ரீவைகுண்டம் : திருநெல்வேலி திருச்செந்தூர் ரோட்டில் உயிர்களை பலிவாங்க காத்திருக்கும் காய்ந்த மரங்களை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே திருநெல்வேலி திருச்செந்தூர் ரோட்டில், ரோட்டின் இருமருங்கிலும் பசுமையாக, அடர்த்தியாக மருது, புங்கன் ஆகிய மரங்கள் நூற்றுக்கணக்கான அடி உயரம் வ... |
தமிழகம் | சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கான தேர்வு | தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்திற்கான எழுத்துதேர்வு தூத்துக்குடி வ.உ. சி கல்லூரியில் நடந்தது. தமிழகம் முழுவதும் காவல்துறையில் காலியாக உள்ள சப்இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவ ட்டத்தில் உள்ள வ.உ.சி கல்லூரியில் இதற்கான எழுத்து தேர்வுகள் நடந்தது. மாவட்டம் முழு... |
தமிழகம் | மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் | தூத்துக்குடி: கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடப்பது போன்று தூத்துக்குடியிலும் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்று கடலோர மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.தூத்துக்குடி நகரம் முதல் வேம்பார் வரையிலான பெரியசாமிபுரம், கீழவைப்பாறு, சிப்பிக்குளம், பட்டிணமருதூர், தருவைக... |
தமிழகம் | முன் விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை | ஏரல்: ஏரல் அருகே அகரத்தில் முன் விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஏரல் அருகேயுள்ள அகரம் வடக்கு தெருவை சேர்ந்த தங்கபாண்டி மகன் ஞானசுந்தர்(27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாதக்கரை முத்து மகன் சுயம்பு(19) ஆகிய இரு... |
தமிழகம் | சாலைவிபத்தில் ஒருவர் பலி | தூத்துக்குடி : தூத்துக்குடியில் வாகனம் பைக் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தம்மாள்காலணி பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் மாரியப்பன்(35) அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு தூத... |
தமிழகம் | முக்காணி ஆற்றில் மூழ்கி தூத்துக்குடி வாலிபர் பலி | ஆத்தூர் : முக்காணி தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்தவர் முத்து, இவரது மகன் சிவணனைந்தபெருமாள்.(26). டிரைசைக்கிள் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் குளித்துக... |
தமிழகம் | கோவில்பட்டி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா | கோவில்பட்டி : கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்புபூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்தபன கும்ப கலச பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி ம... |
தமிழகம் | மாநகராட்சி பிரமாண்ட புதிய கட்டடம் சென்னை முதன்மை பொறியாளர் திடீர் ஆய்வு | தூத்துக்குடி, : துணை முதல்வர் திறக்க உள்ள தூத்துக்குடி மாநகராட்சி பிரமாண்ட புதிய கட்டடத்தை நேற்று சென்னை தலைமை பொறியாளர் ரகுநாதன் ஆய்வு செய்தார். வி.ஐ.பிக்களை முதலில் எந்த அறைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்ட கட்ட... |
தமிழகம் | புதூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை செயற்குழு கூட்டம் | விளாத்திகுளம் : புதூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை செயற்குழு கூட்டம் என்.வேடபட்டி கிராமத்தில் நடந்தது.புதூர் ஒன்றிய ஆதித்தமிழர் பேரவை செயற்குழு கூட்டம் என்.வேடப்பட்டியில் தமிழ்முத்து தலைமையில் நடந்தது. ஒன்றிய இளைஞரணி செயலாளர் உடையராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொது செயலாளர் கண்ணன், மாவட்ட செயல... |
தமிழகம் | போடி தி.மு.க., தொழிற்சங்க தேர்தல்: போலீசார் தடியடி | போடி : போடியில் அரசு போக்குவரத்துக் கழக தி.மு.க., தொழிற்சங்க (எல்.பி.எப்.,) தேர்தல் முடிந்த பின் ஏற்பட்ட கோஷ்டி தகராறை சமாளிக்க, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தேனி மாவட்டம், போடி அரசு போக்குவரத்துக் கழக தி.மு.க., தொழிற்சங்கத்தின் (எல்.பி.எப்.,) கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல், நேற்று காலை 7 மணிக்கு துவங்க... |
தமிழகம் | எட்டயபுரம் விவசாயிகள் சங்கபிரசார இயக்க பேரணி | எட்டயபுரம் : தமிழ்நாடு விவசாயிகள் சங்க எட்டயபுரம் தாலுகா குழுவினர் மூன்று நாட்கள் பிரசார இயக்கம் நடத்தினர்.எட்டயபுரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஈராச்சி நல்லையா துவக்கி வைத்தார். விவசாயத்தை பாதுகாப்போம். விவசாயிகளை பாதுகாப்போம் என கோரிக்கை வைத்து பிரசாரம் செய்தனர். முதல்நாள் படர்ந்தபுளி, கழுகாசலபுர... |
தமிழகம் | கோபுர கலசத்துக்கு விலை ரூ.300 கோடி : கேரள பிரமுகர்களுக்கு வலை | நாகர்கோவில் : கோவில் கோபுர கலசத்துக்கு கேரளாவில் இருந்து வந்த சிலர், 300 கோடி ரூபாய் விலை பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு, தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-மணக்குடி ரோட்டிலுள்ள கீழசரக்கல்விளையில்,தேவி முத்தாரம்மன்கோவில் உள்ளது. இங்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கும்... |
தமிழகம் | விளாத்திகுளத்தில் காங்., செயல்வீரர்கள் கூட்டம் | விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்.,செயல்வீரர்கள் கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. விளாத்திகுளம் தொகுதி பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்.,செயல்வீரர்கள் கூட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சத்யா நகரில் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி தலைவர் கண்ணன் தலைம... |
இந்தியா | பள்ளிக்கூடத்தில் தூங்கும் கிராம மக்கள் பாதுகாப்பு படையின் வேட்டையால் பீதி | மிட்னாபூர் : பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல் காரணமாக, மிட்னாபூர் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், வீடுகளில் தூங்குவது இல்லை; அங்குள்ள பள்ளியில் தான் தூங்குகின்றனர். இதனால், இந்த கட்டடம் பகலில் பள்ளிக் கூடமாகவும், இரவில் கிராம மக்களின் தூங்கும் இடமாகவும் செயல்படுகிறது. மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில் நக்சலை... |
தமிழகம் | அடையாள அட்டை வழங்கும் விழா | விளாத்திகுளம் விளாத்திகுளத்தில் தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா விளாத்திகுளத்தில் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்தது. விழாவிற்கு ஏஐடியூசி., துணைத் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். செயலாளர் நாகபாண்டி, நாகலாபுரம் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர்... |
தமிழகம் | மேளக் கலைஞர்களுக்கு பாராட்டு | புதூர்: புதூர் வட்டார ஜிம்பளா மேளக் கிராமிய கலைஞர்கள் பலர் கோவை உலகத் தமிழ்ச் செ ம்மொழிக் கலைவிழா மற்றும் பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தமைக்காக கலைஞர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி புதூரில் நடந்தது. கோவை உலகத் தமிழ்ச் செம்மொழிக் கலைவிழா மற்றும் பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதூர் குமாரசித்தன்பட்டி கரு... |
தமிழகம் | கோயில் நிலத்தில் ரூ.18 கோடியில் புதிய குளம் | உடன்குடி: உடன்குடி அருகே செட்டியாபத்து கோயில் நிலத்தில் ரூ.18 கோடியில் புதிய குளம் அமைக்கும் இடத்தை அதிகாரிகளுடன் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்வு செய்தார்.உடன்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவ மழை பொய்த்து விட்டதால் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டு உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் நல்ல முறை... |
தமிழகம் | கயத்தாறு பகுதியில் மக்கள் தொகைகணக்கெடுப்பு படிவம் தட்டுப்பாடு | கயத்தாறு : கயத்தாறு வட்டார பகுதிகளில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் தட்டுப்பாட்டால் ஆசிரியர்கள் பணி பெரும் பாதிப்படைந்துள்ளது.ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக கொடுக்கப்பட்ட படிவங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. 2ம் கட்டமாக என்.டி.ஆர்.படிவங்கள் கடந்த ஒரு வார... |
தமிழகம் | சமூக கோயில்களில் நாளை 6ம் தேதி ஆனித்திருவிழா | புதியம்புத்தூர்,: புதியம்புத்தூரில் அø னத்து சமூக கோயில்களிலும் 6ம் தேதி ஆனித்திருவிழா நடக்கிறது.இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில், செல்வ விநாயகர் கோயிலில் நாளை வில்லிசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. இன்று இரவு அம்மன்களுக்கும், சாமிகளுக்கும் மாக்காப்பு சாத்தி பூஜை நடக்கிறது.7ம் தேதி காலை... |
தமிழகம் | என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொருளாதார இழப்பு அதிகரிப்பு: இன்று தீர்வு? | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகரித்து வருகிறது. என்.எல்.சி., நிரந்தர தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி, கடந்த 30ம் தேதி இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மின் உற்பத்தி ப... |
தமிழகம் | மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் | செய்துங்கநல்லூர்,: செய்துங்கநல்லூரில் பெட்ரோலிய பொ ருட்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் வாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து செய்துங்கநல்லூரில் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்ட... |
தமிழகம் | பந்த் எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் குவிப்பு | தூத்துக்குடி : தமிழகத்தில் எதிர்கட்சியினர் நடத்தும் பந்த்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்சாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பெட்ரோல், டீசல், காஸ் போன்ற பொருட்களை மத்திய அரசு சமீபத்தில் உயர்த்திய... |
தமிழகம் | பள்ளி மாணவ, மாணவிகள் நடத்திய மாதிரி லோக்சபா தண்ணீர் சேமிப்பது குறித்து விவாதம் அசத்தல் | கூடலூர் : கூடலூர் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் மாதிரி லோக்சபா நடத்தி, தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து விவாதித்தனர். தண்ணீர் சேமிப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கூடலூர் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் சென்னையில் உள்ள "மாற்று மேலாண்மைக்கான சிறப்பு தகுதி ... |
தமிழகம் | பகலில் மின்னும் மின்விளக்கு: கண் துடைப்பானது மின்சிக்கனம் | திருச்செந்தூர்,: - மின் பற்றாக்குறை நேரத்திலும் திருச்செந்தூரில் பகலில் பளிச் என்று மின்னியது மின் விளக்கு.தமிழகத்தில் கடந்த வருடங்களில் அவ்வப்போது அரசினை இருட்டடிக்கச் செய்வது அடிக்கடி ஏற்படும் மின்தடையே ஆகும். மின் பற்றாக்குறையை சீர் செய்ய மின்வாரியமானது தமிழகம் முழுவதும் இரவு, பகல் பாராமல் ஒரு மணி நேரம், இரண்டு மணி ... |
தமிழகம் | மகளிர் சுயஉதவிக்குழு மகாசபை கூட்டம் | தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் அருகே அக்காநாயக்கன்பட்டி பகுதி களஞ்சிய மகளிர் சுயஉதவிக்குழு மகாசபை விழா நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தானம் அறக்கட்டளை சார்பில் முத்துநகர் வட்டார களஞ்சியம் இயக்கம் இயங்கி வருகிறது. இந்த வட்டார களஞ்சிய இயக்கத்தில் 11 ... |
தமிழகம் | 1,254 பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் | தேனி :மாவட்டத்தில் 1,254 பள்ளிகளுக்கு 90 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு மற்றும் பள்ளி மானியமாக வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளுக்கு பள்ளி பராமரிப்பு மானியமும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி மானியமும் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகிறது. 2010-11க்கான மானியத்தொகை... |
தமிழகம் | வருஷாபிஷேக விழா | ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி எஸ்.ஆர். எஸ். கார்டன் செல்வ விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.இதை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பபூஜை, ருத்ரஜெபங்கள், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து விமான அபிஷேகமும், மகா அபிஷேகமும், கும்ப அபிஷேகமும், மாலையில் சந்தன அலங்கார தீபாராதனையும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நட... |
தமிழகம் | பெரியகுளம் நகராட்சி நிலத்தில் தினமும் மரங்கள் வெட்டி கடத்தல் | பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்துள்ள மரங்கள் தினமும் வெட்டி கடத்தப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளிலே பெரியகுளம் நகராட்சிக்கு அதிகளவில் சொத்து உள்ளது. புல்பண்ணையில் 96 ஏக்கர், குழாய்தொட்டியில் 10 ஏக்கர், கொய்யாத்தோப்பு பகுதியில் 9 ஏக்கர் நிலம் உள்ளது. இவை தவிர சுடுகாட்டு பகு... |
தமிழகம் | பெரியதாழை அருகே 8-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் | பெரியதாழை : பெரியதாழை அருகேயுள்ள புத்தன்தருவை கிராமத்தில் 12 அம் ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். புத்தன்தருவையில் சுமார் 1 வருடகாலமாக விஏஓ., நியமிக்கப்படாமல் உள்ளது. விஏஓ., நியமிக்கக் கோரி பல தடவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு பலனில்லாததால், விஏஓ., நியமி... |
தமிழகம் | சங்கரா பகவதி கல்லூரிக்கு இன்று ஜகத்குரு ஜெயேந்திர சுவாமி வருகை | பெரியதாழை: தட்டார்மடம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இன்று காலை 12 மணிக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி வருகை தருகிறார். கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நடுகிறார். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் 75வது அவதார மஹோத்ஸவ விழா கல்லூரி வளாகத்தில் வைத்து ... |
தமிழகம் | ரேஷன் கார்டுக்கு சேவை குறைபாடு இழப்பீடு வழங்க உத்தரவு | தேனி : ரேஷன் கார்டுக்கு பொருள் சப்ளை செய்ததில் சேவைக்குறைபாடு செய்த தாலுகா வழங்கல் அலுவலர், வழங்கல் ஆய்வாளர் இழப்பீடு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.தேனி சிவராம் நகரை சேர்ந்தவர் கோதண்டராமன். லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஏட்டாக வேலை பார்க்கும் இவர், 1992ம் ஆண்டு முதல் ஒரே முகவரியில் வசித்து வருகிறா... |
தமிழகம் | வருஷாபிஷேக விழா | ஆறுமுகநேரி, ஜூலை 5- ஆறுமுகநேரி எஸ்.ஆர். எஸ். கார்டன் செல்வ விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.இதை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பபூஜை, ருத்ரஜெபங்கள், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து விமான அபிஷேகமும், மகா அபிஷேகமும், கும்ப அபிஷேகமும், மாலையில் சந்தன அலங்கார தீபாராதனையும், சகஸ்ரநாம அர்ச்சனை... |
தமிழகம் | செட்டியாபத்து கோயிலில் உண்டியல் காணிக்கை 9.50 லட்சம் | உடன்குடி, : உடன்குடி அருகே செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணியதில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் வசூலானது.செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயில் ... |
தமிழகம் | 15 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22ல் தேர்தல் | தேனி : கம்பம் நகராட்சியில் இரண்டு கவுன்சிலர்கள் உட்பட 15 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22ல் தேர்தல் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் முத்துவீரன் கூறியிருப்பதாவது:மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மரிக்குண்டு சிற்றூராட்சி தலைவர்(பொது), தாடிச்சேரி ஊராட்சி தலைவர்(பொது), மரிக்குண்டு ஊராட்சி நான்காவது வார்டு மெம... |
தமிழகம் | கம்பம் குடிநீர் சப்ளை பிரிவில் பணியிடங்களை குறைக்க முடிவு | கம்பம் :கம்பத்தில் குடிநீர் சப்ளை பிரிவில் ஐந்து பணியிடங்களை குறைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கம்பம் நகராட்சியில் குடிநீர் சப்ளை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மீட்டர் ரீடர் பணியிடங்களில் 5 பேர் பணியாற்றி வருகின்றனர். கம்பம் நகரில் 10 ஆயிரத்து 473 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒரு ஆண்டிற்கு குடிந... |
தமிழகம் | வீடுகளில் மின்தடைக்கு நிரந்தர தீர்வு 1 கிலோ வாட் சோலார் பவர் பேக் | புதூர்: மின்தடைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்காக, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் திட்டத்தை வீடுகளில் பயன்படுத்தலாம் என டெடா துணைப் பொதுமேலாளர் சையது அகமது தகவல் வெளியிட்டுள்ளார்.வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் இன்வெர்ட்டர்கள் பயன்படுத்... |
தமிழகம் | மூணாறில் ஆர்ப்பாட்டம் | மூணாறு : பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து மூணாறில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற் சங்கம் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்டோ மோட் டார் சங்கத்தினர் ஜீப், ஆட்டோ ஆகியவற்றை கயிற்றில் கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க பொது செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். இ.கம்யூ., மூணாறு மண்டல செயலாளர் முத்துப்பாண்டி, மூணாறு ... |
தமிழகம் | கடையடைப்பு செய்யக் கோரி செந்தூரில் நோட்டீஸ் விநியோகம் | திருச்செந்தூர்,: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசைக் கண்டித்து கடையடைப்பு செய்யக்கோரி அதிமுக.,வினர் திருச்செந்தூரில் கடை கடையாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர்.விலைவாசி உயர்வுக்கு அடிப்படை காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்தியில் ஆளும் காங்., மற்றும் மாநிலத்தில் ஆள... |
தமிழகம் | கூடுதல் விலைக்கு பால் விற்னை | தேனி : ஆவின் பால் பாக் கெட்டில் அச்சிடப்பட் டுள்ள அதிக பட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக கூடுதல் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தேனி தொழிலாளர் ஆய்வாளர் வாமதேவன் நாயர் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கூடுதல் விலைக்கு பால் விற்ற 15 வணிகர்கள் மற்றும் ஏஜென்டுகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் வி... |
இந்தியா | டீசல் விலை உயர்வால் மாற்று எரிபொருள்: ரயில்வே அடுத்த திட்டம் | புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதையடுத்து, மாற்று எரிபொருளை பயன்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.சமீபத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது. மேலும், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வே... |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | தேனி : தேனி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி சேர்க்கை விழிப்புணர்வு முகாம் உதவி தொடக்கல்வி அலுவலர் ராஜமுருகன் தலைமையில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயமணி, ஆர்.வி. அறக் கட்டளை நிறுவனர் ராமச் சந்திரன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர். |
தமிழகம் | தேக்கடியில் சந்தன மரங்கள் கடத்தல் தமிழகத்தை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு | கூடலூர் : தேக்கடியில் சந்தன மரங்கள் அதிகளவில் வெட்டி கடத்தப்படுவதும், இந்த கடத்தலில் தமிழகத்தை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளதும் கேரள வனத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தேக்கடி வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளன. சில மாதங்களாக சந்தன மரங்கள் வெட்டி கடத்துவது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்த கேரள அர... |
தமிழகம் | பயன்பட வேண்டிய இயந்திரம் பார்வைப் பொருளாகிப் போன அவலம் | ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் போஸ்ட் ஆபிஸில் தொடுதிரை தகவல் இயந்திரம் பழுதாகி பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லை. பயன்பட வேண்டிய இயந்திரம் பார்வைப் பொருளாகிய பரிதாபத்தால் மக்களுக்கு உபயோகப்படவில்லை. விரைவில் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் தலைமை போஸ்ட் ஆபிஸ் உள்ளது. ஸ்ரீவ... |
தமிழகம் | சாத்தை.,பி.டி.ஓ.,வுக்கு பிரிவுபச்சார விழா | செய்துங்கநல்லூர்: கருங்குளம் யூனியனில் பிடிஓ., (பஞ்.,) ஆக வேலை பார்த்து வந்த பேச்சியம்மாள் கயத்தாறு யூனியனுக்கு மாறுதலாகி சென்றுள்ளார். அவருக்கு பிரிவுபச்சார விழாவும், ஆழ்வார்திருநகரி யூனியனிலிருந்து கருங்குளம் யூனியனுக்கு மாறுதலாகி பஞ்., பிடிஓ., ஆக பொறுப்பேற்றுள்ள ராணிக்கு வரவேற்பு விழாவும் செய்துங்கநல்லூரில் கருங்குள... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.