category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
போலி கரன்சி பறிமுதல்
புதுடில்லி : நேபாளத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1.45 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி கரன்சி ரூபாய் நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பரைச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் சிங். டில்லியில், நபி கரீம் என்ற இடத்தில் போலி நோட்டுகளை சப்ளை செய்த போது, போலீசார் இவரை கைது செய்தனர். இவரிடமிருந்து நூற்ற...
தமிழகம்
நெல்லையில் த.மு.மு.க., ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:நெல்லையில் த.மு.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நெல்லை டவுன் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவர் முகமதுஆசிக் கடந்த ஆண்டு ஜூன் 27ம்தேதி பாளை. அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தில் பயிற்சி பெற்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுதொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகள், விளையாட்டு அரங்க அலுவல...
தமிழகம்
நெல்லையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டம்
திருநெல்வேலி:வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் உணவு ஆய்வாளர் பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா அரசு அலுவலர் ஒன்றிய கூட்ட அரங்கில் நேற்று ...
தமிழகம்
மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் ஆகிய விலை உயர்வினை கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அம்பை சேக் தாவூது தல...
தமிழகம்
தனியார் பஸ் மீது கல்வீசி தாக்குதல்:பாளை.யில் 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி:பாளை.யில் தனியார் பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டை சேர்ந்த செல்லையா மகன் பெருமாள்(32), ஆறுமுகம் மகன் பாஸ்கர்(24). நண்பர்கள். இருவரும் ஊருக்கு செல்வதற்காக பாளை.வண்ணார்பேட்டையில் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது வண்ணார்பேட்டைக்கு வந்த...
தமிழகம்
வீரவநல்லூர் அருகே சைக்கிளில்இருந்து விழுந்த சிறுவன் பலி
வீரவநல்லூர்:வீரவநல்லூர் அருகே சைக்கிளில் இருந்து விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளியில் வசிப்பவர் சுடலை. இவரது மகன் சந்துரு (ஒன்றரை வயது). கடந்த 1ம் தேதி மாலை வீட்டு வாசலில் மூன்று சக்கர சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த சந்துரு திடீரென கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம...
தமிழகம்
மர்மநோய் எதிரொலி கால்நடைகளுக்கு சிறை
பேரூர்:மர்மநோயால் மேய்ச்சலுக்கு கால்நடைகளை விவசாயிகள் அனுப்பவில்லை. தொண்டாமுத்தூர் அருகேயுள்ள, பச்சாபாளையம் கிராமத்தில், மூன்று நாட்களில் கால்நடைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தன. கால்நடை மருத்துவர்களும் ரத்தமாதிரி, காதுகளின் துண்டுகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். நோய் தடுப்புஊசி போடப்பட்டும், கால்நடைகள...
தமிழகம்
கழுநீர்குளத்தில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
வீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் அருகேயுள்ள கழுநீர்குளத்தில் குளக்கரையை உடைத்து மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.வீ.கே.புதூர் வட்டாரத்தில் மணல் திருட்டை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வீ.கே.புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து சென்...
தமிழகம்
குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவானவருக்கு வலை
கோவை:ஒன்றரை வயது குழந்தையை பஸ் பயணியிடம் ஒப்படைத்து, தலைமறைவான போதை ஆசாமியை போலீசார் தேடுகின்றனர். கருமத்தம்பட்டி அருகேயுள்ள வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(28); விசைத்தறி தொழிலாளி. நேற்று காலை இவர் தன் மனைவி செல்வி(20)யுடன் பீளமேடு சிட்ரா பஸ் ஸ்டாப் வந்தார். பேரூர் வரை செல்லும் (தடம் எண்;2) டவுன் பஸ்சில் ஏ...
தமிழகம்
சேரன்மகாதேவி அருகே பள்ளி கட்டடம் திறப்பு
சேரன்மகாதேவி:சேரன்மகாதேவி அருகே புதிய பள்ளி கட்டடத்தை வேல்துரை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.சேரன்மகாதேவி அருகேயுள்ள மேலஉப்பூரணி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 9.75 லட்சம் மதிப்பில் மூன்று கூடுதல் வகுப்பறைகள், சமையலறை, குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியன புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப...
தமிழகம்
போலி பட்டா பாஸ் புத்தகங்கள் தயாரிப்பு : வருவாய்த் துறை ஊழியருக்கு வலைவீச்சு
தர்மபுரி : அரூரில் போலி பட்டா பாஸ் புத்தகங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட அச்சக உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட வருவாய்த்துறை ஊழியரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ராமலிங்கம். கச்சேரிமேட்டு பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே ஆர்.கே. என்ற பெயரில் அச்சகம் நடத...
தமிழகம்
தென்காசியில் மாணவர்சேர்க்கை பேரணி
தென்காசி:தென்காசியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.தென்காசி காட்டுப்பாவா உயர்நிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்பணர்வு பேரணி நடந்தது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மதுஉசேன் துவக்கி வைத்தார். இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் 470 பேரும், ஆசிரியர்கள் 15 பேரும் கலந்து கொண்டனர்.பேரணி பள்ளிய...
தமிழகம்
பூலாங்குளத்தில் கிடாபால் சுரக்கும் அதிசயம்
தென்காசி:ஆலங்குளத்தை அடுத்த பூலாங்குளத்தில் ஆட்டுக் கிடா ஒன்றுக்கு அதிசயமாக பால் சுரக்கிறது.பூலாங்குளத்தை சேர்ந்தவர் துரை (34). இவர் பூலாங்குளத்தில் மட்டன் கடை வைத்துள்ளார். இவர் கடையில் இறைச்சி விற்பனை செய்வதற்காக ஆடுகளை வாங்குவது வழக்கம். இதேபோல் கடந்த வாரம் மேலப்பாளையம் சந்தையில் இருந்து 20 ஆடுகளை வாங்கி வந்தாராம்.இ...
தமிழகம்
தென்காசியில் எல்.ஐ.சி.முகவர் சங்க துவக்க விழா
தென்காசி:தென்காசி எல்.ஐ.சி.கிளை முகவர்களின் புதிய சங்கமான லிக்காய் துவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு திரவியராஜகுமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுந்தரநந்தன், கோட்ட செயல் தலைவர் முருகன், பொருளாளர் ஜெயராமன், மாநில உறுப்பினர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைப்பின் தலைவராக ராமர், செயலாளராக சீவலப்பெரியான், பொர...
தமிழகம்
கூடாரம் காலி அரசு கல்லூரியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை : முதல்வர் முதல் இயக்குனர் வரை இல்லை
கோவை:கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் உட்பட ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இன்று கல்லூரி மீண்டும் திறந்து செயல்படவுள்ள நிலையில், கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் உட் பட காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.கோவை அ...
தமிழகம்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி! ரூ.5 லட்சம் சுருட்டிய பலே ஆசாமி கைது
பல்லாவரம் : பிரிட்டன் மற்றும் புருனே நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் 5.62 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜஸ்தான் மாநிலம் தே.கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சிங். இவரது மகன் ஹார்டே சிங் (20). இவர், கடந்த மாதம் 28ம் தேத...
இந்தியா
மூணாறு வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு : கேரளாவுக்கு மத்திய அரசு கண்டிப்பு
புதுடில்லி : மூணாறு வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு கேரள அரசை வலியுறுத்தியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மூணாறு வனப்பகுதி கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.மூணாறு வனப்பகுதியை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுல...
இந்தியா
டில்லி மெட்ரோ ரயிலுக்கு குண்டு வைத்ததாக புரளி
புதுடில்லி : டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் பதட்டம் ஏற்பட்டது. டில்லியில் போக்குவரத்து நெரிசலை, மெட்ரோ ரயில் போக்குவரத்து குறைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் நொய்டா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவ...
தமிழகம்
அண்ணா மார்க்கெட்டில் நிரம்பி வழியும் குப்பை: வியாபாரிகள் அவதி
கோவை :சாய்பாபா கோவில் எதிரிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா தினசரி காய்கறி மார்க் கெட்டில் கடந்த ஒரு மாதமாக அள்ளப்படாமல் கிடக்கும் குப்பையால் வியாபாரிகள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவில் எதிரிலுள்ள அண்ணா காய்கறி மார்க்கெட் வளாகத்தில், குப்பைகள...
தமிழகம்
மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த சிறுவன் கைது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டான். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அம்மனியம்மன் கோபுர வாசல் அருகே நந்தவனம் என்னும் இடத்தில் கடந்த 30ம் தேதி கோவிலுக்கு வந்த மூதாட்டி, படுகொலை செய்யப்பட்டார்....
தமிழகம்
கழிப்பிடமான பள்ளி வளாகம் அவதியில் ஆசிரியர், மாணவர்
கோவை :வழியில் செல்லும் மக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பிடமாக மாறிவருகிறது வீராசாமி முதலியார் உயர்நிலை பள்ளி வளாகம். கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலுக்கு அருகே உள்ள துணி வணிகர் மேல்நிலை பள்ளிக்கும், தாமஸ் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வீராசாமி முதலியார் பள்ளி அமைந் துள்ளது. முதல் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை 700 க்கும்...
தமிழகம்
சாலை விபத்து குறைக்க விழிப்புணர்வு பிரசாரம்
குறிச்சி:மதுக்கரை ஒன்றிய ம.தி. மு.க., சார்பில், சாலை விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது. ஒத்தக்கால்மண்டபத்தை அடுத்த பிரிமியர் மில்ஸ் பஸ் ஸ்டாப் அருகே துவங்கிய பிரசாரத்துக்கு, மதுக்கரை ஒன்றிய ம.தி.மு.க., பொறுப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்து பேசுகையில்,""கடந்தாண்டு நாடு முழுவதும் நடந்த வாகன விபத்தில் பலி...
தமிழகம்
கடையநல்லூர் அருகே மினரல் வாட்டர் தொழிற்சாலை திறப்பு
கடையநல்லூர்:கடையநல்லூர் அருகேயுள்ள நயினாரகரத்தில் விஸ்வா இன்டஸ்ட்ரீஸ் கூல்இன் மினரல் வாட்டர் தொழிற்சாலை திறப்பு விழா நேற்று நடந்தது.கடையநல்லூர் அருகேயுள்ள நயினாரகரம் வள்ளியம்மாள்புரத்தில் விஸ்வா இன்டஸ்ட்ரீஸ் சார்பில் கூல்இன் மினரல் வாட்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று வள்ளியம்மாள்புரம் விஸ...
தமிழகம்
நடைபாதைகளை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு
கோவை :கோவை மாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை அதன் அருகேயுள்ள கடைக்காரர்கள் உடைத்து ஆக்கிரமிக்க துவங்கியுள்ளனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னிட்டு கோவை நகரில் மேம்பாடு பணிகளுக்கு பல கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியது. புதிய தார் சாலைகள், பூங்காக்கள், டைல்ஸ் பதிக...
தமிழகம்
கடையநல்லூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: ஊரை காலி செய்ததால் பரபரப்பு
கடையநல்லூர்:கடையநல்லூர் அருகே தனியார் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊரை விட்டு காலி செய்தனர். அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.கடையநல்லூர் அருகே உள்ள நயினாரகரம் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதியில் உள்ள ப...
தமிழகம்
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் : உதவி துவக்கக் கல்வி அலுவலர் நிலை என்ன?
மதுரை : சென்னையில் இன்று நடைபெறும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் 3 சதவீத இடங்களை, உதவி துவக்கக் கல்வி அலுவலர்களுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. துவக்கக் கல்வித் துறையில் 2007ம் ஆண்டுவரை நேரடியாக உதவி துவக்கக் கல்வி அலுவலர் நியமனம் கிடையாது. அந்த ஆண்டின் அரசு உத்த...
தமிழகம்
மாவட்ட கூடைப்பந்து போட்டி சி.எஸ்.ஐ., சர்வஜன பள்ளி வெற்றி
கோவை :மாவட்ட அளவில் சிறுவருக்கான கூடைப்பந்து போட்டியில் சி.எஸ்.ஐ., பி.எஸ்.ஜி.,சர்வஜன பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.ஒய்.எம்.சி.ஏ.,கூடைப்பந்து கிளப் சார்பில் 56வது ஆண்டு வெங்கடகிருஷ்ணன் கோப்பை பள்ளி மாணவருக்கான கூடைப்பந்து போட்டி நேற்று ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் மின்னொளியில் நடந்தது. 14 வயதுக்குட்பட்ட சிறுவருக்கான போட்டியி...
தமிழகம்
குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் மூழ்கி ஒருவர் பலி
குற்றாலம்:குற்றாலம் மெயின் அருவி தடாகத்தில் மூழ்கி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.குற்றால மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக மெயின் அருவியில் நேற்று திடீரென தண்ணீர் கூடியது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கூட்டமாக வெளியே வந்தனர். இந்நிலையில் குற்றாலம் சுற்றுலா வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக்நகரை சேர்ந்த செந்தூர்க...
தமிழகம்
பிராணிகளை கொண்டு செல்ல கட்டுப்பாடு : விதிமுறைகளை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு
சென்னை : பிராணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது, விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வாணிஸ்ரீ ஞானேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "பிராணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது, விதிமுறைகளை...
தமிழகம்
குற்றாலத்தில் மினிலாரியில் இருந்துதவறி விழுந்து வாலிபர் பலி
குற்றாலம்:குற்றாலத்தில் மினி லாரியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தென்திருப்பேரை பேட்மாநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேஷ் (20). இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் நேற்று செங்கல்சூளைக்கு சொந்தமான மினிலாரியில் குற்ற...
தமிழகம்
ரயில் மறியலுக்கு முயன்ற பாரத்சேனாவினர் கைது
கோவை :பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற, பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜ.,- அ.தி.மு.க.,உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று நாடு தழு...
தமிழகம்
திசையன்விளையில் யாதவ மகாசபை பொதுக்கூட்டம்: தேவநாதன் பங்ககேற்பு
திசையன்விளை:திசையன்விளையில் நடந்த யாதவ மகாசபை பொதுக்கூட்டத்தில் அகில உலக யாதவ மகாசபை தலைவர் டாக்டர் தேவநாதன் கலந்து கொண்டார்.நெல்லையில் வரும் 11ம் தேதி வீரன் அழகுமுத்துகோன் சிலை நிறுவும் விழா நடக்கிறது. இது தொடர்பான பிரசார பொதுக்கூட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதி யாதவ மகாசபை சார்பில் திசையன்விளை செல்வமருதூர், பெரியம்மன் ...
இந்தியா
சத்யம் முன்னாள் அதிபர் சிறையில் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதி
ஐதராபாத் : நிதி மோசடியில் சிக்கிய சத்யம் தகவல் தொழில்நுட்ப நிறுவன முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணா, சிறையில் கம்ப்யூட்டர் பயன்படுத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஆனால், இணையதளம் மற்றும் பென்டிரைவ் பயன்படுத்த கோர்ட் அனுமதி அளிக்கவில்லை. பிரபல சத்யம் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்தவர் ராமகிருஷ்ணா. இவர் 8,00...
தமிழகம்
ஊரக வேலை திட்டத்தில் கூலி குழப்பம் வீதிக்கு வந்து போராடும் தொழிலாளர்கள்
தர்மபுரி : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலியில் குளறுபடி ஏற்படுவதால் தொழிலாளர்கள் தினமும் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை தொடர்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கிராம பகுதிகளில் ஏரி, குளங்கள் தூர் வார...
தமிழகம்
புளியங்குடி லயன்ஸ் சங்கநிர்வாகிகள் பதவியேற்பு
புளியங்குடி:புளியங்குடி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.டி.என்.புதுக்குடி வி.ஆர்.மஹாலில் புளியங்குடி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர் வியாக...
இந்தியா
ராஞ்சி கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று திறப்பு
ராஞ்சி: நவீனப்படுத்தப்பட்ட ராஞ்சி கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று திறப்பு விழா நடைபெறுகிறது.விழாவில் பிசிசிஐ தலைவர் மனோகர் மற்றும் செயலாளர் சீனிவாசன் கலந்து கொள்கின்றனர். ஜார்கண்ட் மாநில கவர்னர் பரூக் ஸ்டேடியத்தை திறந்து வைக்கிறார். மேலும் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, அர்ஜூன் முண்டா, சபாநாயகர் சிபி.சிங் உட்பட பலர் கல...
தமிழகம்
மரத்தில் ஆட்டோ மோதி ஏழு பேர் காயம் : மீட்பு பணிக்கு உதவினார் போலீஸ் கமிஷனர்
அன்னூர் :கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ ரோட்டோர புளியமரத்தில் மோதியதில் ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்.கோவையை சேர்ந்தவர் ஷேக்முஸ்தபா (40); மாங்காய் வியாபாரி. அன்னூர் அருகே ஒரு தோட்டத்தில் மாங்காய் பறிக்க ஆட்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை சரக்கு ஆட...
தமிழகம்
சிவகிரியில் இருபெரும் விழா
சிவகிரி:சிவகிரியில் இருபெரும் விழா நடந்தது.சிவகிரி ஸ்டேட் வங்கி கிளை மேலாளராக பணியாற்றிய விக்டர் ஜான் பிரபாகரன் தென்காசி கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். தென்காசி கிளையில் பணியாற்றிய ராமநாதன் சிவகிரி கிளைக்கு புதிய மேலாளராக பதவியேற்றார். மேலாளர் விக்டர்ஜான் பிரபாகரனுக்கு பிரிவு உபசார விழாவும், புதிய மேலாளர் ராமநாதனுக்கு வர...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை:தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை தேசிய அடையாள அட்டைகள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட...
தமிழகம்
ரத்தின வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கோவை:கோவை பீளமேடு அருகில் உள்ள ஆனந்த ரத்தின வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பீளமேடு, சவுரிபாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் அமைந் துள்ளது ஆனந்த ரத்தின வலம்புரி விநாயகர் கோவில். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி நடந்தது. காலை 7.00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, நாடி சந்தானம், மகாபூர...
தமிழகம்
நீர்பாசன சங்கத்தின் ஒப்பந்தத்தை மீறியதாக தகவல்:கீழாம்பூரில் பரபரப்பு, பதட்டம்
ஆழ்வார்குறிச்சி:நீர்பாசன சங்கத்தின் ஒப்பந்தத்தை மீறி தண்ணீர் திறந்து விடுவதாக கிடைத்த தகவலால் கீழாம்பூரில் நேற்று பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.கடனாநதி நீர்பாசன விவசாயிகள் சங்க கூட்டம் சிற்றாறு வடிநில உபகோட்டம் அம்பாசமுத்திரம் அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி காலை நடந்தது. தற்போது கடனா அணையில் 48.30 அடி தண்ணீர் உள்...
தமிழகம்
மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி
ஊத்தங்கரை: ஊத்தங்கரைஅருகே மர்மக் காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ஊத்தங்கரை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கோவிந்தாபுரம் பஞ்சாயத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக கொம்மம்பட்டு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள், விவசாயம் மற்ற...
தமிழகம்
ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர்கோயிலை சீரமைக்க கோரிக்கை
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோயிலை சீரமைத்து தர வேண்டுமென காங்கிரசார் முதல்வருக்கு மனு செய்துள்ளனர்.ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் ராமநதி ஆற்றின் முன் வன்னியப்பன் - சிவகாமி அம்பாள் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோயில் கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலாகும். இக்...
தமிழகம்
முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
அரூர்: அரூர் அருகே நரிப்பள்ளி வெங்கட்ராமபுரத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் ஐந்து நாட்கள் திருவிழா நடந்தது.முதல் நாள் கொடியோற்றமும், இரண்டாம்நாள் மாவிளக்கும், மூன்றாம் நாள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. இறுதி நாளில் மஞ்சள் நீரா...
தமிழகம்
500 வக்கீல்கள் மீது போலீசார் வழக்கு
கோவை:அனுமதியின்றி கண்டன ஊர்வலம் நடத்திய 500 வக்கீல்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  கோவை,பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வக்கீல் கலையரசனுக்கும், கோவை மாநகர் ஆயுதப் படை போலீஸ் ஏட்டு முத்துப்பழனியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வக்கீல் தாக் கப்பட்டார். ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். போலீசார...
தமிழகம்
பாவூர்சத்திரம் சென்ட்ரல் லயன்ஸ்சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் சென்ட்ரல் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா எஸ்.கே.டி. இயற்கை யோகா ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் ஜெபதாஸ் தங்கராஜா தலைமை வகித்தார். பொருளாளர் நாகரத்தினம் வரவேற்றார். செயலாளர் ரவீந்திரன் அறிக்கை சமர்பித்தார். அன்பின் கிறிஸ்டோபர் கொடிவணக்கமும், பட்டையத் தலைவர் பால...
தமிழகம்
கீழப்பாவூரில் இருபெரும் விழா
திருநெல்வேலி:கீழப்பாவூர் திருவள்ளுவர் கழகத்தில் இருபெரும் விழா நடந்தது.ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் திருவள்ளுவர் கழகத்தில் 45வது ஆண்டு விழா மற்றும் நெல்லை கவிஞர் கணபதி சுப்பிரமணியனுக்கு பல்கலை செல்வர் பட்டம் வழங்கி பாராட்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. விழாவிற்கு இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமை வகித்தார். டவுன் ...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
பேரூர்:சிறுநீரகம் மற்றும் கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை முகாம், மாதம்பட்டியில் இன்று நடக்கிறது.மாதம்பட்டியிலுள்ள, பத்மாவதி மருத்துவமனையில் காலை 8.00 மணிக்கு முகாம் துவங்கி, மதியம் 1.00 மணி வரை நடக்கிறது. ரத்தம் கலந்து சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரக பாதையில் அடைப்பு, சிறுநீரகத்தில் கல் மற்றும் தகுதியுள்ளோர்க்கு இலவச சி...
தமிழகம்
போதையில் மயங்கி விழுந்தவர் பலி
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே குடிபோதையில் மயங்கி கிடந்த வாலிபர் பலியானார். காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி பிரிவு ரோடு அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் குடிபோதையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தா...
தமிழகம்
தென்மலையில் சங்க துவக்க விழா
திருநெல்வேலி:தென்மலை கிராமத்தில் தமிழ்ச் செம்மொழி நலிந்த கலைஞர் நல்வாழ்வு சங்கம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு தென்மலை பஞ்.,தலைவர் கருத்தபாண்டியன் தலைமை வகித்தார். தேவர் மகாசபை தலைவர் மாடசாமி தேவர் முன்னிலை வகித்தார். கலை பண்பாட்டு துறை இளநிலை இயக்குநர் கணேசன் வாழ்த்துரை வழங்கி, சங்கத்தை துவக்கி வைத்தார்.விழாவில் சங்க...
தமிழகம்
விவசாயிகளுக்கு தகவல் தர தானியங்கி வானிலை மையம்
ஆத்தூர் : வெப்பநிலை, மழையளவு, ஈரப்பதம் அறிந்து விவசாயிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 224 வட்டாரத்தில் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், விழுப்புரம், கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பருவ காலத்துக்கு ஏற்ப...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பந்த்:போக்குவரத்து ஐ.என்.டி.யு.சி.பங்கேற்காது
திருநெல்வேலி:வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஐ.என்.டி.யு.சி., பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய பந்த் இன்று (5ம் தேதி) நடக்கிறது. இந்த போராட்டம் குறித்து ஐ.என்.டி.யு.சி., மாநில அமைப்புச் செயலாளர் ஆவுடையப்பன்...
தமிழகம்
உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல்: முதல் நாளில் மனு தாக்கல் இல்லை
கோவை:உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் ஜூலை 22ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 10 ம் தேதி கடைசி தேதி; பரிசீலனை ஜூலை 12ம் தேதி பகல் 11.00 மணி முதல் பகல் 3.00 மணி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை ஜூலை 14 ம் தேதி திரும்ப பெற்றுக்கொள்ள...
தமிழகம்
கற்கும் பாரதம் மையம் துவக்க விழா
தர்மபுரி: கடத்தூர் அரசு துவக்கப்பள்ளியில் கற்கும் பாரதம் பயிற்றுனர் மைய துவக்க விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ராணி பாலு தலைமை வகித்து மையத்தை துவக்கி வைத்தார். வட்டார வள மேற்பார்வையாளர் சவேரியம்மாள் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதையன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, தலைமையாசிரியர்கள் சேகர், அன்புரோஸ...
தமிழகம்
பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி
வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை உணவுத் தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாழப்பாடி பகுதியில் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி, கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாற்று படுகை கிராமங்கள் மற்றும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாய...
தமிழகம்
பந்த்திற்கு இரு சக்கர வாகனஉரிமையாளர்கள் சங்கம் ஆதரவு
திருநெல்வேலி:பந்த்திற்கு இரு சக்கர வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் நலச் சங்க ஆலோசனை கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாளை., யில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.பி.ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் நங்கமுத்து முன்னிலை வகித்தார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர் இசக்கியப்பன், மாநில துணை ச...
தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் பக்தர் பேரவையினர் உழவாரப்பணி
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் பக்தர் பேரவை சார்பில் உழவாரப்பணி நடந்தது.காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் பக்தர் பேரவை சார்பில் மாதந்தோறும் நெல்லையப்பர் கோயிலில் உழவாரப்பணி செய்யப்பட்டு வருகிறது. பேரவை தலைவர் முத்தையா சிவா தலைமையில் நேற்று நடந்த உழவாரப்பணியில் 30 பேர் கலந்து கொண்டனர். கோயில் மதில் சுவர், சுற்றுச்...
தமிழகம்
ராகவேந்திரா ஸ்வாமி கோவிலில்வரும் 14ம் தேதி மகா கும்பாபிஷேகம்
தர்மபுரி: தர்மபுரி ஸ்ரீ விஜய விட்டல கிருஷ்ண, ஆஞ்சநேய, ராகவேந்திர ஸ்வாமிகள் கோவில் மற்றும் ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உடுப்பி ஸ்ரீ புத்திகே மடம் கிளைக்கு சொந்தமான ராகவேந்திர ஸ்வாமிகள் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஜயவிட்டல கிருஷ்ண, ஆஞ்சநேய, ஸ்ர...
தமிழகம்
நெல்லை சக்தி விநாயகர் கோயிலில்நாளை மண்டலாபிஷேக நிறைவு விழா
திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் சக்திவிநாயகர் கோயிலில் நாளை (6ம் தேதி) மண்டலாபிஷேக விழா நடக்கிறது.நெல்லை சிந்துபூந்துறை கீழத்தெரு சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி நடந்தது. இதையடுத்து தினந்தோறும் மண்டல பூஜைகள் நடந்துவந்தது. மண்டல பூஜையின் நிறைவு நாளான 6ம் தேதி மண்டல பூஜை நிறைவு வ...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் முனியன் பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளி வளாகத்தில் முடிந்தது. முன்னதாக, "இளமையில் கல்' என்ற தலை...
தமிழகம்
திருவனந்தபுரத்தில் வரும் 11ம் தேதி பிராமண சமூக நவீன சுயம்வர நிகழ்ச்சி
திருநெல்வேலி:திருவனந்தபுரத்தில் பிராமண சமூகத்தினருக்கான மாபெரும் நவீன சுயம்வரம் நிகழ்ச்சி வரும் 11ம் தேதி நடக்கிறது.திருவனந்தபுரம் போர்ட் லலித் கல்யாண மகாலில் 11ம் தேதி நடைபெறவுள்ள நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழ், துளுவம், தெலுங்கு, நம்பூதிரி, கன்னட பிராமின், ஐயங்கார் என அனைத்து பிரிவினருக்கும் தனித்தனியே வரண்கள் பட...
தமிழகம்
3 கன்றுகள் ஈன்ற பசு
அரூர்: அரூர் அடுத்த பெத்தூரை சேர்ந்தவர் குப்பு (42). பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். சினையாக இருந்த அந்த பசு, மூன்று கன்றுகளை ஈன்றது. கன்றுகளும், மாடும் சுகமாக உள்ளன. அப்பகுதி மக்கள், துள்ளிக்குதிக்க தயாராகும் கன்றுகளை பார்த்துச்செல்கின்றனர். குப்பு கூறுகையில், ""பால் கறந்து விற்று பிழைப்பு நடத்தி வந்தேன். தற்போது ம...
தமிழகம்
வார்டு பணிக்கு நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் முடிவுக்கு வந்தது கவுன்சிலர் உண்ணாவிரதம்
குறிச்சி:வெள்ளலூர் பேரூராட்சியில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, இரு கவுன்சிலர்கள் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. வெள்ளலூர் பேரூராட்சியின் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் தமிழரசி, ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சக்திவேல்; இருவரும் அ.தி.மு.க., வைச் சேர்ந்தவர்கள். ஒன்றாவது வார...
தமிழகம்
கல்வி அதிகாரி பொறுப்பேற்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவராக (பொறுப்பு) அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கரும்பாசலம் பொறுப்பேற்றுள்ளார்.பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவராக ராஜகோபால் கடந்த 2008ம் ஆண்டு முதல் பணியாற்றினார். இவர், கடந்த ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றதையடுத்து, தற்காலிக டி.இ.ஓ.,வாக பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு பெண்கள...
தமிழகம்
மகளிர் குறைதீர்கூட்டம்
தர்மபுரி: தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மகளிர் குறைதீர் கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ., மணிவண்ணன் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 49 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.இயற்கை மரண நிவாரண நிதியாக 23 பேர்களுக...
தமிழகம்
மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
பொள்ளாச்சி :பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி இளநிலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தரமான ஆய்வக வசதிகளுடன் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் நகர சேவை மையத்தில...
இந்தியா
ஐ.ஐ.எம்.,களில் அதிகரிக்கும் மாணவியர்
பெங்களூரு : இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,), 2010-12ம் கல்வியாண்டுக்கான மாணவியரின் சேர்க்கை முன்பை விட குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், கோழிக்கோடு ஐ.ஐ.எம்., மில் ஒரு வகுப்பில் 10 சதவீதம் பெண்களே இருந்தனர். இந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுதான் இந்த ஆண்டின் அ...
தமிழகம்
தொழிலாளர் பற்றாக்குறையால் எஸ்டேட் நிர்வாகம் திணறல்! வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர் வரவழைப்பு
வால்பாறை :வால்பாறை எஸ்டேட்டுகளில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை எஸ்டேட் நிர்வாகத்தினர் வரவழைக்கின்றனர். வால்பாறையில் உள்ள 50க்கும் மேற் பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட் டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வால்பாறையில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலா...
தமிழகம்
மருத்துவ முகாம்
மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஆரம்ப சுகாதார மையம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடந்தது.மடத்துக்குளம் பெரியவட்டராரம் பகுதியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணியூர் வட்டார சுகாதார மையத்தினர் இலவச மருத்துவ முகாமை நடத்தினர். மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் நடந்த முகாமில் ஸ்கேன், ரத்தபரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான ...
தமிழகம்
மக்கள் நலப்பணியாளர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி:மக்கள் நலப்பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மாநில அமைப்பாளர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மா...
தமிழகம்
மண் ரோடாக மாறிய தார் ரோடு
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் முதல் வீரப்பகவுண்டனூர் வரை செல்லும் தார் ரோடு, அதிகப்படியான பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளால் பழுதடைந்துள்ளது.கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன்புதார் முதல் வீரப்பகவுண்டனூர் வரையுள்ள எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு போடப்பட்டது. இவ்வழியாக மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பணி ஆணை வழங்கல்
அரியலூர்: அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார்துறை சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் தேர்வுபெற்ற, பயனாளிகளுக்கான பணி நியமன உத்தரவை, மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் வழங்கினார். அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கத்தில், தனியார்துறைகள் மூலம், மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. தனியார்...
இந்தியா
10 ஆயிரம் பேரை தேர்வு செய்கிறது எல்.ஐ.சி.,
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. தற்போது எல்.ஐ.சி.,யில், முதல் நிலை அதிகாரிகள் 21 ஆயிரம் பேர் உட்பட ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல், பிரிட்டன், மொரீஷியஸ், கென்யா, நேபாளம், இ...
தமிழகம்
பருவமழை: விவசாய பணி தீவிரம்
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில் மீண்டும் பருவ மழை துவங் கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு பகுதிகளில் ஆண்டுதோறும் கேரளாவில் மழை துவங்கும்போது, இப்பகுதியில் பருவமழை துவங்குவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் 9ம் தேதி முதல் கேரளாவில் பருவமழை துவங்கியது. இதனை தொடர்ந்து கிணத்துக் கடவு பகுதியில், பருவமழை தூற...
தமிழகம்
பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு: அ.தி.மு.க., வேண்டுகோள்
பொள்ளாச்சி:பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.அ.தி.மு.க., பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் அறிக்கை வருமாறு:மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணை விலையை உயர்த்தியதால், பொதுமக்கள் பாதிக்க...
தமிழகம்
சாட்சி சொல்ல ஆஜராகாத இன்ஸ்.,க்கு பிடிவாரண்ட்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.புதுக்கோட்டை கோட்டைப்பட்டிணத்தில் கடந்த 2005 ஆண்டு இதே பகுதியை சேர்ந்த மீனவர் சிவக்குமார் என்பவருக்கும் நாகை மாவட்டம் வானமா பகுதியை சேர்ந்த வாசு உட்பட ஏழு பேர் கொண்ட கும்பலுக்கும், மீன்பிடிப்ப...
தமிழகம்
கருவை மரங்கள் கடத்தல் தாசில்தார் ஆய்வு
ஆலங்குடி : ஆலங்குடி அருகே குளமங்கத்தில் குளத்துப் பகுதியில் உள்ள கருவை மரங்களை வெட்டி கடத்தி செல்வதாக வந்த தகவலையடுத்து, ஆலங்குடி தாசில்தார் ராமர் சம்பவஇடத்துக்கு சென்று பார்வையிட்டார்.அப்போது, அங்கு கருவை மரங்கள் வெட்டிய பாதி மரங்களை கடத்தி சென்று விட்டனர். மீதமுள்ள மரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. மரங்களை வெட்டுவது குற...
இந்தியா
சாலை விபத்தில் 7 பேர் பலி 6பேர் காயம்
பரசாத்: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் போலீஸ்காரர் உட்பட 7 பேர் பலியாயினர்.6 பேர் வரை படுகாயமடைந்தனர். மற்றொரு விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் காரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மற்றொரு போலீஸ்காரர் காயம் அடைந்தனர்.
தமிழகம்
பருவமழை தீவிரம்: ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்கிறது
பொள்ளாச்சி:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், முக்கிய அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆழியாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவநிலை துவங்கியது. பருவநிலை மாறியதும் லேசான மழை பெய்யத்துவங்கியது. வால்பாறை...
தமிழகம்
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த பெரியகோட்டையைச் சேர்ந்தவர் தங்கசாமி மகள் சாந்தி (11). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், இவரது வீட்டில் உ...
தமிழகம்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் காத்திருப்பு அறை திறப்பு
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாராப்பூர் பஞ்சாயத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், 87 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகள் காத்திருப்பு அறையினை கலெக்டர் சுகந்தி திறந்து வைத்தார்.ஈசா பசுமைக்கரங்கள் மற்றும் மாவட்ட சுகாதார நிர்வாகமும் இணைந்து சுகாதார நிலையத்தில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி...
தமிழகம்
மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மனித நேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர செயலாளர் அப்துல்பசீர் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் தமீமுன் அன்சாரி பேசினார். கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்குஇடம் ஒதுக்கி தர மக்கள் கோரிக்கை
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச சேவை 108 ஆம்புலன்ஸ் தற்போது பத்து இடங்களில் செயல்பட்டு வருவதால், மக்கள் பெரிதும் பயனடைகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல குக்கிராமங்களில் மாட்டு வண்டி போக முடியாத இடங்களில் கூட 108 ஆம்புலன்ஸ் சென்று விபத்து ஆபத்து போன்ற இடர்பாடுகளில் உள்ளவர்களை முதலுதவி செய்து பின் மருத்துவம...
இந்தியா
மந்த்ராலயத்தில் ரயில்கள் நிறுத்தம்
குண்டக்கல் : சென்னை - மும்பை, டெல்லி - பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மந்த்ராலயம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. பிரசித்தி பெற்ற ராகவேந்திர சுவாமி கோவில் ஆந்திர மாநிலம் மந்த்ராலய நகரில் அமைந்துள்ளது. ராகவேந்திர சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, கடந்த 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து ...
தமிழகம்
மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கல்
பொள்ளாச்சி:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், பொள்ளாச்சி கூட்டுறவு நகர வங்கி பணியாளர்கள், தமிழ்நாடு ஊர்காவல் படையினர்கள் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில் நடந்த விழாவில், அரசு போக்குவ...
தமிழகம்
முதியவர் கடத்தல் வழக்கு: ஒருவர் கைது
பண்ருட்டி: முதியவரை காரில் கடத் திய வழக்கில் ஒருவர் கைது செய்யப் பட்டார்.பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (59). இவர் கடந்த மாதம் 26ம் தேதி இரவு கீழ்கவரப் பட்டு பஸ் நிறுத்தத் தில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெங்கடகிருஷ...
தமிழகம்
கண்சிகிச்சை முகாம்
மடத்துக்குளம் :மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.மடத்துக்குளம் ஜே.எஸ். ஆர் அறக்கட்டளை, உடுமலை லயன்ஸ் கிளப் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. வாசவி திருமண மண்டபத்தில் நடந்த முகாமுக்கு உடுமலை எம்.எல்.ஏ., சண்முகவேலு தலைமை வகித்தார். குமரலிங்...
இந்தியா
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச காப்பீடு: மத்திய அரசு திட்டம்
புதுடில்லி : அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச காப்பீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீமா (ஆர்எஸ்பிஎம்) திட்டத்தின் படி வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை குடும்ப...
தமிழகம்
மோசடி ஆசாமி சிறை வைப்பு: போலீஸ் விசாரணை
பண்ருட்டி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவரை சிறை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அடுத்த சிறுவத்தூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த 2007ல் கன்னியாகுமரியில் காற்றாலை மின் திட்ட பணியில் வேலை செய் தார். அப்போது மதுரை ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவருடன் பழக்...
தமிழகம்
வேர் அழுகல் நோயால் வெங்காய வளர்ச்சி பாதிப்பு
பொங்கலூர் :பொங்கலூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம், வேர் அழுகல் நோய் தாக்குதல் காரணமாக, பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொங்கலூர், கண்டியன்கோவில், தொங்குட்டிபாளையம், உகாயனூர், வாவிபாளையம், அலகுமலை, அவினாசிபாளையம், பெருந்தொழுவு போன்ற பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி ...
தமிழகம்
கடலூர் மாவட்டத்தில் திருட்டு அதிகரிப்பு: டி.ஐ.ஜி., மாசானமுத்து
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் திருட்டு அதிகரித்து வருவது உண்மைதான் என டி.ஐ.ஜி., மாசான முத்து கூறினார். கடலூருக்கு வருகை தந்த டி.ஐ.ஜி., மாசானமுத்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நாளை (இன்று) நடைபெறவுள்ள வேலை நிறுத் ததையொட்டி அனைத்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட் டுள்ளன. வழக்கம்போல் பஸ்கள் ஓடும். திறந்த...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
பொங்கலூர்:அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று நடத்தும் பொது வேலை நிறுத்தம் குறித்த ஆலோசனை கூட்டம், பொங்கலூரில் நடந்தது. பல்லடம் தொகுதி செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி, இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் லோகந...
இந்தியா
நக்சல் ஒழிப்பில் இனி ஹெலிகாப்டர்கள் : மத்திய அரசு திட்டம்
புதுடில்லி : நக்சல் ஒழிப்பில் மாநிலங்களில் அதிக இடங்களில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் நடந்த நக்சல்களின் தாக்குதலில், எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எப்.,) ஹெலிகாப்டர்களின் உதவியால், மரணத...
தமிழகம்
மூதாட்டி பலி
கடலூர்: சமையல் செய்த மூதாட்டி தீயில் கருகி இறந்தார்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலையாத்தூர் சாவடி தெருவைச் சேர்ந்தவர் நீலாம்பாள் (60). இவர் கடந்த 2ம் தேதி மாலை விறகு அடுப்பில் சமையல் செய்தபோது, எதிர் பாராத விதமாக அவரது சேலையில் தீ பரவியது. ஆபத்தான நிலையில் நீலாம்பாளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ந...
இந்தியா
மராட்டிய சிவாஜியாக நடிக்கிறார் சஞ்சய் தத்
மும்பை : மராட்டிய மன்னர் வீர சிவாஜி வேடத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நீதிமன்ற வழக்கு, சிறைவாசம் என்று பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்து வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இப்போது அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இந்நிலையில், மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் வாழ்க்கை வரல...
தமிழகம்
கொ.மு.க.,சார்பில் பல் சிகிச்சை முகாம்
கோவை :கொ.மு.க., சார்பில் நடந்த இலவச பல் சிகிச்சை முகாமில் 135 பேர் பயனடைந்தனர்.கொங்கு நாடு முன்னேற்றக்கழகம், ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பில் நேற்று இலவச பல் சிகிச்சை முகாம் நடந்தது. பூமார்க்கெட் ஸ்ரீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில் நடந்த முகாமை, கொங்கு நாடு முன்னேற்றக்கழக கோவை மாநகர தலைமை அமைப்பாளர் ...
தமிழகம்
அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
பெரம்பலூர்: பெரம்பலூர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று பெரம்பலூரில் நடந்தது.விழாவுக்கு அரிமா சங்க தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்றார். சாசன தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர் தனபாலன் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார்.மண்டல தலைவர்...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் பெரம்பலூரில் அனைத்து கட்சி கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்தப்பணிகள் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடந்தது.மாவட்ட கலெக்டர் விஜயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டசபைத் தொகுதியில் 255 ஓட்டுச்சாவடிகள், குன்னம்...
தமிழகம்
வக்கீல் - போலீஸ் பேச்சில் தீர்வு ஏற்படவில்லை : கோர்ட் புறக்கணிப்பு இன்று தொடர்கிறது
கோவை:வக்கீல் - போலீஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர, மாவட்ட நீதிபதி தலைமையில் நடந்த சமரச பேச்சில் முடிவு ஏற்படவில்லை. இதனால், வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு மேற்கொள்கின்றனர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையம், நியூ ஸ்கீம் ரோட்டைச் சேர்ந்தவர் வக்கீல் கலையரசன்(39). சில நாட்களுக்கு முன் மணி மேல் நிலைப்பள்ளி அருகே, இவருக்கும் ஆ...
தமிழகம்
திருச்சியில் விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் பயிற்சி பெற அழைப்பு
திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை தகுதி வாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி, கடந்த இரண்டாம் தேதி துவங்கியது. ஜூலை 15ம் தேதி வரை நடக...