category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | குறுகிய இடத்தில் செயல்படும் மார்க்கம்பட்டி வாரச்சந்தை | மார்க்கம்பட்டி: குறுகிய இடத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் மார்க்கம்பட்டி வாரச் சந்தையை வேறு இடத் திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கம்பட்டி சந்தை வாரந்தோறும் சனியன்று நடக்கிறது. இங்கு மக்களுக்கு தேவையான மளி கை பொருட்கள், காய்கறி , துணி உட்பட அனைத்து பொருட்களும் குறைந்த விலைக்கு கிடைக்கும்... |
தமிழகம் | கத்திமுனையில் ஆட்டோ கடத்தல்:பெண் உள்ளிட்ட ஐந்து பேர் கைது | சென்னை:நூதனமுறையில் ஆட்டோவை கடத்திய ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, பாரிமுனையில் உள்ள கோவிந் தப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி; ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 19ம் தேதி இரவு 10:30 மணியளவில் பாரிமுனையில் ஆட்டோவுடன் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது ஒரு பெண், பெரம்பூர் புதிய மேம்பால... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி., அவசர உத்தரவு | திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத் தில் நிலுவையில் இருக் கும் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய முத்துச் சாமி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத் தில் ஏராளமான திருட்டு மற்றும் கொலை, கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை... |
தமிழகம் | கும்பாபிஷேக விழா | தாண்டிக்குடி:தாண்டிக்குடி அருகேயுள்ள பட்லாங்காட்டில் சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விநாயகர் வழிபாடு, மகாசங்கல்பம்,ஸ்பரிசாகுதி, கனி மூலிகை வேள்வி, பேரேளி வழிபாட்டுடன் கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந் தது. சிறப்பு அபிஷேகம் மற் றும் ஆராதனை நடந்தது. |
தமிழகம் | ஏழு நாள் போலீஸ் காவல் மூன்று நாளில் முடிவு:காலாவதி குடோன் அதிபர் சிறையிலடைப்பு | சென்னை:ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட காலாவதி குடோன் அதிபரை, மூன்றே நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.சென்னை வண்ணாரபேட்டை ஜி.ஏ. சாலையில் குடோனை வாடகைக்கு பிடித்து அதில் காலாவதி உணவுப் பொருட்கள் மொத்த விற்பனை நடந்து வந்தது.அந்த குடோனுக்கு கடந்த மாதம் 30ம் தேதி "சீல்' வைக்க... |
தமிழகம் | பணத்திற்காக குழந்தையை விற்ற கணவன் தேனியில் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு | திண்டுக்கல்: பணத்திற்காக குழந்தையை கணவர் விற்றார். எச்.ஐ.வி., பாதித்த தாயின் கோரிக்கையை ஏற்று தேனியில் இருந்து போலீசார் மீட்டனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(38), சலவை தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி(35). இவர்கள் இருவரும் எச்.ஐ.வி.,வால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற 10வயது மகனும், ஒன்... |
தமிழகம் | ராணுவ பணிக்கு எழுத்துத் தேர்வு தேனியில் 5 நாட்கள் இலவச பயிற்சி | திண்டுக்கல்: ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்துத் தேர்விற்கு, தேனியில் ஐந்து நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.
மே 10 முதல் மே 16 வரை ... |
தமிழகம் | சர்வதேசபேட்மிட்டன் போட்டி | சென்னை:யோனக்ஸ்-சன்ரைஸ் இந்தியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிட்டன் போட்டிகள், வரும் ஜூன் 8ம் தேதி துவங்குகிறது.தமிழக கவர்னர் பர்னாலா துவக்கி வைக்கிறார். துவக்க விழாவையொட்டி, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.முன்னதாக போட்டியில் பங்கேற்கும் வீரர் களுக்கான, தகுதி சுற்று ஆட்டம் நடக்கிறது. ஆடவர் ஒற்றையர், இரட்டையர், மகள... |
தமிழகம் | நகை பட்டறையில் இருந்து 20 சவரனுடன் தொழிலாளி மாயம் | சென்னை:வேலை பார்த்த இடத்தில் இருந்து, 20 சவரன் நகையுடன் மாயமான, நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, சைதாப்பேட்டை, வினாயகம் பேட்டை தெருவைச் சேர்ந்தவர் சபரிபாபு (40). இவர், சைதாப்பேட்டை பஜார் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.இவரது பட்டறையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோல்கட்டாவை சேர்ந்த சையது ... |
தமிழகம் | காலாவதியான மிளகாய் பொடி பாக்கெட் ரேஷன் கடைகளில் விற்பனை பொதுமக்கள் முற்றுகை | திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ரேஷன் கடையில் காலாவதியான மிளகாய்பொடி, கெட்டுபோன அரிசி, சர்க்கரை விற்கப்பட்டது.இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அருகேயுள்ள வன்னியப்பாறைப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது.இந்த கடையில் அரிசி, சர்க்கரை வாங்க வருபவர்களிடம் மிளகாய் பொடி,சோப் வாங்க வேண... |
தமிழகம் | ரேஷன் பொருள் வழங்கக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் | நீலாங்கரை:ரேஷன் பொருட்களை சரிவர வழங்காத ரேஷன் கடையை கண்டித்து, கிழக்கு கடற்கரை சாலையில் 200க்கும் மேற் பட்டோர், நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலாங்கரை அடுத்த பனையூர் கிழக்கு கடற் கரை சாலையில் பொது வினியோக ரேஷன் கடை உள்ளது. இங்கு, கானாத் தூர், நீலாங்கரை மீனவ க... |
தமிழகம் | பழநியில் விசாக திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் | பழநி: வைகாசி விசாக திருவிழா துவக்கமாக பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடந்தது.கொடியேற்றத்திற்கு முதல் நாள் இரவு பெரியநாயகியம்மன் கோயிலில் கிராமசாந்தி,மேற்கு ரத வீதியில் வாஸ்துசாந்தி நடந்தது.
கொடியேற்றத்தையொட்டி விநாயகர் பூஜை, ஆறு கலசங்கள் வைத்து மயூரயாகம், முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷ... |
தமிழகம் | அரசு பொது மருத்துவமனைக்கு ராஜிவ் பெயர் சூட்ட கோரிக்கை | சென்னை:ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, ராஜிவ் ரத்ததானம் இயக்கம் சார்பில், சென்னை அரசு பொது மருத்துவமனையில், 100 இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.முன்னாள் எம்.பி., டாக்டர் முருகேஷ் தலைமையில், கவிஞர் ஜோதி ராமலிங்கம் முன்னிலையில், ரத்ததான முகாம் நடந்தது. ரத்த வங்கி பேராசிரியர் டாக்டர் செல்வராஜ், முகாமை துவக்கி வைத்தார். முருகன்,... |
தமிழகம் | ராஜிவ் நினைவு தினம்: ரத்ததான முகாம் | சென்னை:முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் முனியப்பா மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சத்தியமூர்த்தி பவனில் ராஜிவின் 19வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. மலர்களால்... |
தமிழகம் | போலி பாஸ்போர்ட்:ஒருவர் கைது | திரிசூலம்:மலேசியாவிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜா (28). இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டட வேலை செய்வதற்காக, மலேசியாவிற்கு சென்றார்.அவரை பணியமர்த்திய நிறுவனம், குறைவான சம்பளம் கொடுத்ததால், ராஜா நாடு திரும்பிவிட திட்டமிட்டார். ஆனால், அவரி... |
தமிழகம் | கவிழ்ந்தது கன்டெய்னர்: லாரிபோக்குவரத்து பாதிப்பு | ராயபுரம்:துறைமுகத்தில் இருந்து வெளியேறிய கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் ராயபுரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை துறைமுகத்தில் இருந்து இயந்திர பாகங்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பொன்னேரி செல்வதற்கு கன்டெய்னர் லாரி புறப்பட்டது.துறைமுகம் "ஏ' கேட் வழியாக வந்த அந்த கன்டெய்னர் லாரி, கிழக்கு கல் மண்டபம் சாலையில் திரும்... |
தமிழகம் | சத்துணவு பணியாளர் மீண்டும் தேர்வு சத்துணவு பணியாளர் படிப்பு விபரம்சேகரிக்க உத்தரவு | திண்டுக்கல்: சத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக, அவர்களது படிப்பு விபரம் சேகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு சமீபத்தில் நடந்தது. அதே நேரத்தில் சத்துணவு ஊழியர்களுக்கான தேர்வு விரைவில் நடக்க உள்ளது.
சத்துணவு பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களு... |
தமிழகம் | நரம்பியல் துறை டாக்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | கீழ்ப்பாக்கம்:பிரபல நரம்பியல் துறையின் டாக்டர் வேல்முருகேந்திரனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விழா எடுக்கப்பட்டது.சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நரம்பியல் துறையில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகளை செய்த டாக்டர் வேல்முருகேந்திரனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்டான்லி அரசு மருத்துவக் ... |
தமிழகம் | போலி அக்குபஞ்சர் மருத்துவரால் பாதிப்பு:நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு | சென்னை:போலி அக்குபஞ்சர் மருத்துவரால் பாதிக்கப் பட்டவருக்கு நஷ்டஈடு வழங்க, சென்னை நுகர் வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஆவடியைச் சேர்ந்த கணேஷ், ஆதம் பாக்கத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் நாராயணன், கீழ்ப்பாக்கம் குமரன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக நுகர் வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2002ம் ஆண்டு... |
தமிழகம் | மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உற்சவ விழா | ஆர்.எஸ்.மங்கலம்: சாத்தமங்கலம் மாடக் கோட்டை முனீஸ்வரர் கோயில் 26ம் ஆண்டு உற்சவ விழா மற்றும் 52ம் ஆண்டு விழா நடந்தது. மே 20ல் கிராம மக்கள் பூ தட்டு எடுத்து வந்து பூச்சொரியுடன் விழா தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாள் கிராமத்தினர் பால்காவடி, ரதக்காவடி, பறவைக்காவடி, மயில்காவடி, இளநீர் காவடி, பன்னீர் காவடி எடுத்து நேர்த்தி க... |
தமிழகம் | மாற்று திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் | சென்னை:மாற்று திறனாளிகளுக் கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் வரும் 27ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.செவி திறன் குறையுடையோர், வாய் பேச முடியாதவர் களுக்கு தகுதி அடிப்படையில் மாதம் 400 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் படுகிறது.இத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படவுள்ள செவிதிறன் குறையுடையோர் மற் றும் வாய் பேச முடியாதவ... |
தமிழகம் | பூட்டிய வீட்டில்நகை, பணம் திருட்டு | சென்னை:வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் திருமணத் திற்கு சென்றவரது நகை மற்றும் பணம் திருடப்பட்டது.சென்னை, கீழ்ப்பாக்கம், செகரட்ரியேட் காலனி, நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேணு (28). சிவசேனா கட்சியின் வடசென்னை மாவட்ட செயலராக உள்ளார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன், வீட்டை பூட்டிவிட்டு உறவ... |
தமிழகம் | நவபாஷாணத்தில் கழிவுகளை அகற்ற தானியியங்கி கருவி | தேவிபட்டினம்:தேவிபட்டினம் நவபாஷணத்தில் தானியியங்கி கழிவு அகற்றும் கருவி பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக மாவட்டத் தில் சிறந்த தலமாக தேவிபட்டினம் உள்ளது. வெளியூர் பக்தர்கள் மற்றும் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இங்கு, அருவெறுப்பு காட்சிகள் அதிகம் உள்ளது. நவபாஷாணத்தை சூழ்ந்து கொள்ளும் கழிவு நீர... |
தமிழகம் | ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.8.50 லட்சம் சுருட்டல் | பெருமாநல்லூர்: பெருமாநல்லூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம், அவரிடம் வேலை பார்த்தவரே ரூ.8.50 லட்சத்தை திருடி கொண்டு தப்பியோடினார். பெருமாநல்லூர் அருகே பூலுவபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவரிடம், திருவள்ளூர் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த தயாளன் மகன் மூர்த்தி (23), என்பவர் பணம் வசூலிக்கும் வேலையில்... |
தமிழகம் | அவிநாசி அருகே கார் மோதி விபத்து மாணவர் காங்., தலைவர் படுகாயம் | அவிநாசி: அவிநாசி அருகே, நேற்று நடந்த சாலை விபத்தில், அகில இந்திய மாணவர் காங்., தலைவர் படுகாயம் அடைந்தார். அகில இந்திய மாணவர் காங்., தலைவர் ஹைபி ஈடன் (35), கேரளாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு ஜீப்பில் நண்பர் ஹரீப் முகம்மது உடன் நேற்று மதியம் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோவை - காந்திபுரத்தை சேர்ந்த ஹரிஹர சுதன் ஜீ... |
தமிழகம் | அரசு ஆவணங்களுடன் தலைமறைவானதாக புகார் | அவிநாசி: அரசு ஆவணங்களுடன் தலைமறைவாகி விட்டதாக, பட்டம்பாளையம் ஊராட்சி உதவியாளர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் ஈஸ்வரமூர்த்தி. திருப்பூர் ஒன்றியம், பட்டம்பாளையம் ஊராட்சி உதவியாளராக பணிபுரிந்தார். இவர் மே முதல் தேதி நடந்த கிராம சபை ... |
தமிழகம் | வாகனம் மோதி ஒருவர் பலி | சத்திரக்குடி: பரமக்குடி சத்திரக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்காக ஆட்டோவில் முனியாண்டி(55) இவரது மனைவி ஆறுமுகவள்ளி(52) மற்றும் உறவினர்கள் அம்மாஞ்சி(55), ராமையா(50) ஆகியோர் சென்றுள்ளனர். ஆட்டோ சத்திரக்குடி சமுதாயக்கூடம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. படுகாயம் அடைந்த அனைவரையும் ராமநாதபுரம் அரசு ... |
தமிழகம் | பாசி பாரெக்ஸ் நிதி நிறுவன இயக்குனர் வீட்டின் முன் சமையல் முதலீட்டாளர்கள் காத்திருப்பு | திருப்பூர்: பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதிநிறுவன இயக்குனர் வீட்டின் முன், நேற்று சமைத்து சாப்பிட்ட முதலீட்டாளர்கள், முதலீடு செய்த பணத்தை பெறாமல் ஊருக்கு திரும்புவதில்லை என கூறி, காத்திருந்தனர். திருப்பூர் அவிநாசி ரோட்டில் பாசி பாரெக்ஸ் டிரேடிங் லிட்., நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குனர்களாக, திருப்பூர் பாப்பா நகரைச்... |
தமிழகம் | குடிநீருக்காக அமராவதி அணை திறப்பு | உடுமலை: அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக, வினாடிக்கு 700 கன அடி வீதம் நான்கு நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பாசனத்திற்கும்,குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக உள்ளது. ஐந்து மாதமாக மழை இல்லாததால், அணை நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. அமராவதி ... |
தமிழகம் | 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு மொபைல் போன் | அவிநாசி: அவிநாசி தொகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விரைவில், மொபைல்போன் வழங்கப்பட உள்ளது.இந்தியா முழுவதும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் நூறு நாள் வேலை என்பதால், கிராமப்புற பகு... |
தமிழகம் | ஓட்டல்களின் சமையல் அறை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை | அவிநாசி: செம்மொழி மாநாட்டுக்காக, ஓட்டல்களின் சமையல் அறைகளை சுத்தமாக, நவீனமயமாக வைத்திருக்க வேண்டுமென்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் அடுத்த மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, அவிநாசியில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் சுகா... |
தமிழகம் | திடீர் மோதல் | சாயல்குடி:சாயல்குடி அருகே மடாத்தாகுளத்தை சேர்ந்த ஜெனீஸ், சந்தனம் என்பவருக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது. பிரச்னைக்கு காரணமாக அதே ஊரை சேர்ந்த வேதமுத்து(68) இருந்து வந்ததால், ஆத்திரமடைந்த சந்தனம் உறவினர்கள், வேதமுத்துவை தாக்கினர். காயமடைந்த வேதமுத்து மதுரை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாயல் குடி போல... |
தமிழகம் | இந்து முன்னணி கூட்டம் | திருப்பூர்: கரூரில் நடக்கும் ஆறாவது மாநில மாநாடு குறித்த விளக்க ஊழியர் கூட்டம், இந்து முன்னணி கிழக்கு மாநகர் சார்பில் நடந்தது. ஆர்.வி.ஈ., நகர் தெற்கு மற்றும் முத்து நகர் கிளை களில் நடந்த கூட்டத்துக்கு, மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இரண்டு கிளைகளில் இருந்தும் 500 பேர் மாநாட்டில் பங்கேற்பதென முடிவு செய்யப்... |
தமிழகம் | நிரம்பி வழியும் குடிநீரேற்று தொட்டி தண்ணீரும், மின்சாரமும் விரயம் | தாராபுரம்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளவாய்பட்டணத்தில் குடிநீர் பணியாளர்கள் கண்காணிப்பு இல்லாததால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி கீழே வழிந்தோடு கிறது. குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால், குடிநீர் விரயமாவதை தடுக்க வேண்டும். தாராபுரம் - உடுமலை ரோட்டில் தளவாய்பட்டணம் கிராமத்தில் 5,000க்கும் மேற்பட... |
தமிழகம் | பெண் பலி | எமனேஸ்வரம்:பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் கிராமத்தை சேர்ந்த திருநாட்செல்வி(24) க்கும், பிரமையனுக்கும் கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் தினம் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் திருநாட்செல்வி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ... |
தமிழகம் | பள்ளி மாணவர் பலி | பரமக்குடி: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஜீவா(12). செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த இவர், பள்ளி விடுமுறைக்காக கலையூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த நான்காம் தேதி காலையில் பாட்டி போட்டு வைத்த காபியை குடிக்க சென்ற போது, சூடு இல்லாததால் தானே மண்ண... |
தமிழகம் | மஞ்சள் பயிரிட விவசாயிகள் ஆயத்தம் | திருப்பூர்: மஞ்சள் பயிரிடுவதற்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேவையான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி கலந்து உழவு செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. திருப்பூரின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளான, அமராவதிபாளையம், கோவில் வழி, காளிபாளையம், கொடு வாய், பெருந்தொழுவு ஆகிய இடங்களில் வாய்க்கால் பாசனம் பெறும் பகு... |
தமிழகம் | அஞ்சலகத்தில் பார்சல் சேவை துவக்கம் | திருப்பூர்: திருப்பூர் ஆர்.எம்.எஸ்., தபால் நிலையத்தில், ஒருமுகப்படுத்தப்பட்ட பார்சல் சேவை மையம் நேற்று துவக்கப்பட்டது. அஞ்சலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பார்சல் சேவைகளை, ஒரே இடத்தில் பெறும் வித மாக, "ஒருமுகப்படுத்தப் பட்ட பார்சல் சேவை மையம்' துவக்கப்பட்டுள் ளது. திருப்பூர் ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்.எம்.... |
தமிழகம் | பிளஸ் 2 மதிப்பெண் பதிவு செய்ய ஐந்து இடங்களில் சிறப்பு முகாம் | திருப்பூர்:பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ள நிலையில், மதிப்பெண் பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய, திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழ் வரும் 26ம் த... |
தமிழகம் | கடையில் மதுபானம் விற்ற 3 பேர் கைது | ராமநாதபுரம்:அத்துமீறி கடையில் வைத்து டாஸ்மாக் மதுபானம் விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்டிக் கடைகளில் வைத்து மதுபானங்கள் விற்பதாக அடிக்கடி புகார்கள் வருகிறது. இது குறித்து பிரதீப்குமார் எஸ்.பி.,யின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் நடத்தி வரும் சோதனையில் நேற்று மூன்று பே... |
தமிழகம் | திருப்பூரில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற...தவிக்கும் மாநகராட்சி!: | திருப்பூர்: திருப்பூரில் குப்பையை அகற்றுவது தீராத தலைவலியாக உள்ளது. அதிலும், குப்பையோடு பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்வதால், சாக்கடை கால்வாயில் அடைத்துக் கொள்கின்றன. கழிவு நீர் ரோட்டில் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து பொதுமக்களிடம் ... |
தமிழகம் | நூதன முறையில் 4 கார்கள் திருட்டு: ஆந்திராவை சேர்ந்த 8 பேர் கைது | திருவள்ளூர்:திரைப்பட குழுவினர் என்று கூறி, வாடகை கார் டிரைவர்களுக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நான்கு கார்களை கடத்தி சென்ற எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.திருவொற்றியூர் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷெரீப் (30). இவரிடம், அஜய் குப்தா என்பவர், தான் மும்பையை சேர்ந்த திரைப்படக் குழுவை சார்ந்தவன் என்றும... |
தமிழகம் | டாஸ்மாக் கடைகளின் அருகே சரக்கு விற்பனை: ஏழு பேர் கைது | பொன்னேரி:டாஸ்மாக் கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக சரக்கு விற்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் உட்பட பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் அனுமதி பெறாத பார்களில் சட்டவிரோதமாக சரக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பார்களில் இரவு நேரங்களில் சரக்கு வி... |
தமிழகம் | மயிலாடுதுறை அருகே கோவில் திருப்பணியின் போது 13 ஐம்பொன் சாமி சிலைகள், செப்பு ஏடுகள் கண்டெடுப்பு | மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவிலில் மண்டபம் கட்ட தோண்டிய பள்ளத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 ஐம்பொன் சாமி சிலைகள், 85 செப்பு ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கழுக்காணி முட்டம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் உள்ளது. 10ம் நூற்றாண்டில் கட்ட... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு: குடிசை வீடு அகற்றம் | திருத்தணி:ஆதிதிராவிட குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளில் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடு கட்டியவர் மீது வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து குடிசை வீட்டை அகற்றினர்.திருத்தணி தாலுகா களாம்பாக்கம் காலனி கிராமத்தில் 28 ஆதிதிராவிடர்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு பயனா... |
தமிழகம் | குன்னூரில் இன்று பழக்கண்காட்சி துவக்கம் | குன்னூர்: ஊட்டியில் நடந்த கோடை விழாவின் தொடர்ச்சியாக, பழமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 52வது ண்டு பழக்கண்காட்சி, இன்றும், நாளையும் நடக்கிறது. பழக்கண்காட்சியில், 150 வகைக்கும் மேற்பட்ட குளிர் மற்றும் வெப்ப மண்டலங்களில் விளையும் பழங்கள் வைக்கப்பட உள்ளன. பூங்காவின் முகப்பில் பழங்களால் ஆன அலங்கார வளைவு அமைக்கப்பட்டு... |
தமிழகம் | ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் | கும்மிடிப்பூண்டி:ஐந்து பஸ்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற, இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகளை, வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய் தனர்.கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு, பஸ்கள் மூலம், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்து. இதையடுத்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான அலுவலர்க... |
தமிழகம் | ராஜிவ் காந்தி நனைவு தினம் காங்., கட்சியினர் அனுஷ்டிப்பு | கோத்தகிரி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 19வது நினைவு தினம், நீலகிரி மாவட்ட காங்., கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட காங்., கட்சி அலுவலகத்தில் காலை 11.00 மணியளவில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஊட்டி நகரத் தலைவர் கெம்பையா தலைமை வகித்தார். நஞ்சன், ஹரி, ரவிகுமார், மு... |
தமிழகம் | கலப்பட பெட்ரோல் விற்ற இருவர் கைது | திருவள்ளூர்:ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலைய பகுதிகளில், அனுமதியின்றி கலப் பட பெட்ரோல் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது.அவரது உத்தரவின்பேரில், ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலைய எஸ்.ஐ., செல்வரத்தினம் மற்றும் போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.அப்போது மோகினிபுரம் கிராமத்தில், கலப்பட பெட்... |
தமிழகம் | நீர்மட்டம் சாலையோரம் விபத்து தடுப்பு அமைப்பு | பந்தலூர்: பந்தலூர் நீர்மட்டம் சாலையோரத்தில், வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.பந்தலூர் - கூடலூர் சாலையில் நீர்மட்டம் வனப்பகுதி சாலையோரத்தில், மழை காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு வாகனப் போக்குவரத்து தடைபட்டு வந்தது. கடந்தாண்டு மழை பெய்த போது இப்பகுதியில் 4 இடங்களில் மண் சரிந்து, கனரக வாகனங்கள் செல... |
தமிழகம் | பட்டா பெயர் மாற்றம் கோரி ஜமாபந்தியில் குவியும் மனுக்கள் | திருவள்ளூர்:வருவாய் துறையினரும், சார்பதிவாளர்களும் இணைந்து பட்டா வழங்காததால் பட்டா பெயர் மாற்றம் கோரி, ஜமாபந்தியில் மனுக் கள் குவிந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, சார்பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு செய்யும் போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய, 40 ரூபாய் கட்டணத்தை மக்கள் செலுத்துகின்றனர்.அரசு விதிப்படி பத்த... |
தமிழகம் | காய்கறிகள் வரத்து குறைவு ஆனால்... அதிகரித்தது விலை | ஊட்டி: ஊட்டியில், காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு உட்பட காய்கறிகள் பெரும்பாலான இடங்களிலும், முள்ளங்கி, டர்னிப், சில இடங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. பலரின் கவனம், தேயிலை விவசாயத்துக்கு திரும்பியதால், காய்கறிகளின் உற்பத்தி குற... |
தமிழகம் | நாக வாகனத்தில் வாசீசுவரர் வீதியுலா | திருவள்ளூர்:திருப்பாசூர் தங்காதலி அம்மன் சமேத வாசீசுவரசுவாமி கோவில் பிரமோற்சவ விழா நான்காம் நாளான நேற்று முன்தினம் நாக வாகனத்தில் உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.திருவள்ளூர் அடுத்த திருப்பாசூரில் உள்ளது தங்காதலி அம்மன் சமேத வாசீசுவர சுவாமி கோவில். இக்கோவில் பாடல்பெற்ற சிவ தலங்களில் 16வது தலமாக ... |
தமிழகம் | மணல் கடத்த முயற்சி மூன்று லாரிகள் பறிமுதல் | கூடலூர்: மேட்டுப்பாளையத்திலிருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு மணல் கடத்த முயன்ற மூன்று லாரிகளை, வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன் உத்தரவின் படி, கூடலூர் மண்டல துணை தாசில்தார் முத்து தலைமையில் வருவாய் துறையினர், ஊட்டி சாலையில் உள்ள வனச் சோதனை சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டன... |
தமிழகம் | சாதனை மாணவிக்கு பாராட்டு | மஞ்சூர்: பொதுத் தேர்வில், பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பிளஸ் 2 பொதுத் தேர்வில் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுமித்ரா, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். பள்ளியில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், தலைமை ஆசிரியர் தேவன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் முன்னிலை வகித்... |
தமிழகம் | ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் இருவர் கைது; கார், லாரி சிக்கின | கூடலூர்: கோவையிலிருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற, ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையிலிருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக கேரளாவுக்கு எரிசாராயம் கடத்துவதாக, கூடலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் டி.எஸ்.பி., குமரேசன் உத்தரவின் படி, எஸ்.ஐ., ராஜு, போலீசார்... |
தமிழகம் | குன்னூர் பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பவர்கள் அவதி | குன்னூர்: குன்னூரில், சமவெளிப் பகுதி பஸ்கள் நிறுத்தத்தில், மின் விளக்குகள் எரியாததால், பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் சிரமப்படுகின்றனர். குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை உட்பட பல இடங்களுக்கு, ஏராளமானோர் தினமும் சென்று வருகின்றனர். தற்போது, கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், குன்னூரில் வசிப்போரின் வீடுகளுக்கு, சம... |
தமிழகம் | குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி | கோத்தகிரி: மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் பெற்றோர், வட்டார வள மையத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கோத்தகிரி வட்டார வள மையம் மூலம் மாற்றுத் திறனுடைய குழந்தைகளை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அவர்களின் தன்மைக்கு ஏற்ப பள்ளியிலும், பகல் நேர பாதுகாப்பு மையத்திலும் சேர்த்து கல்வி வழ... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ரயில்வே போலீசார் மெத்தனம் | பொன்னேரி:ஆந்திர மாநிலத்திற்கு, புறநகர் ரயில்கள் மூலம் கடத்தப்படும் ரேஷன் அரிசியை தடுப்பதில் ரயில்வே போலீசார் மெத்தனம் காட்டி வருகின்றனர்.பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், எண் ணூர், திருவொற்றியூர் உள் ளிட்ட சென்னை சென்டரலில் இருந்து, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் ரயில் நிலையங்களில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு... |
தமிழகம் | கூடலூச்ல் மின்தடை நுகர்வோர் அதிருப்தி | கூடலூர்:” கூடலூர் பகுதியில் தொடர்ந்து நிலவும் மின்தடையால், மின் நுகர்வோர் அதிருப்தியடைந்துள்ளனர். கூடலூரில் 50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கூடலூர் மின்வாரிய புதிய அலுவலக கட்டடத்தை, கடந்த 3ம் தேதி திறந்து வைத்து பேசிய கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல், ""தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மின்தடை இல்லை. மின்துற... |
தமிழகம் | குன்னூரில் இன்று பழக்கண்காட்சி துவக்கம் ரசிக்கலாம்... ருசிக்கலாம்...!: போக்குவரத்தில் மாற்றம்: போலீ | குன்னூர்: குன்னூர் சிம்ஸ்பூங்காவில் இன்று துவங்கவுள்ள பழக்கண்காட்சியை முன்னிட்டு, விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; குன்னூர் மவுண்ட்ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நீலகிரியில் நடத்தப்பட்டு வரும் கோடைவிழாவின் தொடர்ச்சியாக, குன்னூர் சிம்ஸ்பூங்காவில் இன்றும், நாளையும், காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பழக்... |
தமிழகம் | மர்ம கும்பலை கைது செய்யக்கோரி வியாபாரிகள் கடை அடைப்பு | கும்மிடிப்பூண்டி:குடிபோதையில் கடையை அடித்து உடைத்து உரிமையாளரை தாக்கிவிட்டு, தப்பிச் சென்ற மர்ம கும்பலை கைது செய்யக்கோரி, அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் கடை அடைப்பு நடத்தினர்.கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பாலமுருகன்(25). இவரது சகோதரர் வேலு. இருவரும் தச்சூர் கூட்டுச் சாலையில் டீக்கட... |
தமிழகம் | திருவிழாவில் மோதல்:ஆர்.டி.ஓ., சமரசம் | திருத்தணி:திருத்தணி அடுத்த, தாழவேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா 18ம் தேதி நடந்தது. அன்று மாலை அம்மனுக்கு பூ அலங்காரம் செய்வது குறித்து மோகன், நாகராஜ் ஆகிய இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது.இதனால் ஜாத்திரை திருவிழா பாதியில் நின்றது. இச்சம்பவம் குறித்து வி.ஏ.ஓ., சந்திரன், ஆர்.ஐ., விஜயகுமாரி ஆ... |
தமிழகம் | தர்கா கந்தூரி விழா கொடியேற்றம் | மண்டபம்:மண்டபம் அருகே உச்சிப்புளி புதுநகரம் நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா தர்ஹா கந்தூரி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதுநகரம் பள்ளிவாசலிருந்து குதிரைகளுடன் கொடி ஊர்வலமாக புறப்பட்டு மகான் கட்டியப்பா தர்ஹாவை வலம் வந்து நாஷர் ஆண்டனர் தர்ஹாவை அடைந்தது. அங்கு ஹாஜி முகம்மது இஸ்மாயில் கொடியேற்றினார். மே 24ல... |
தமிழகம் | ரூ.60 லட்சம் திருட்டு பொருட்கள் மீட்பு:உரியவர்களிடம் டி.ஐ.ஜி., ஒப்படைப்பு | திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், திருடுபோன 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மீட்டு உரியவர்களிடம், காஞ்சி சரக டி.ஐ.ஜி., ஒப்படைத்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில் வழிப் பறி, கொள்ளை மற்றும் திருட்டுகளை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்.பி., வனிதா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் திருவள்ளூர் சப்-டிவிஷனில் நடந்த ... |
தமிழகம் | கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம் | ராமநாதபுரம்:கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியா வசமிருந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நாளிலிருந்து தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது அபாயகரமாகி வருகிறது. மீன்பாடு அதிகம் கொண்ட கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தா... |
தமிழகம் | மண்டபம் அருகே வேன்கள் மோதல் மூவர் பலி; எட்டு பேர் காயம் | மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மஹேந்திரா வேன்கள் நேருக்குநேர் மோதி கொண்டதில் மூவர் பலியானர்.எட்டுபேர் காயமடைந்தனர். ராமேஸ்வரம்-மதுரை நெடுஞ்சாலையில் உள்ள மண்டபத்தில், நேற்று காலை ஆறு மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து வந்த மஹேந்திரா வேன் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நோக்கி சென்றது.
இது போல் தேனியை சேர்ந்த மஹேந்தி... |
தமிழகம் | சீனாவுக்கு ,கடல் அட்டைகள் கடத்த முயன்ற இருவர் கைது | மண்டபம்: ராமேஸ்வரத்திலிருந்து சீனாவுக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற இருவரை மண்டபம் வனத்துறையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் கடல் மார்க்கமாக சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுகின்றன. நேற்று மண்டபம் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, ராமேஸ்வரத்தை சேர்ந்த பாண்டி(28),பாலகுரு(27) ஆகியோர் ,தடை செய்யப்பட்ட கடல் அ... |
தமிழகம் | கிளை சிறையில் கைதிகளை பார்க்க வருபவர்களிடம் வசூல் | பெரியகுளம்:பெரியகுளம் கிளைசிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க வருபவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பெரியகுளம் கிளை சிறைக்கு தேனி, அல்லிநகரம், ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து கைதிகள் கொண்டுவரப்படுகின்றனர்.
கைதிகளை பார்ப்பதற்கு சிறை காவலர்களிடம் மனு கொடுத்து இலவச... |
தமிழகம் | காஞ்சி, திருவள்ளூரில் ராஜிவ்காந்தி நினைவு தினம் | காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டத்தில், ராஜிவ் காந்தி நினைவு தினம் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுஷ்டிக்கப் பட்டது.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்(பொறுப்பு) சிவராசு தலைமையில், அரசு ஊழியர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்தனர்.காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர பொதுச் செயல... |
தமிழகம் | செய்யூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு:1,753 பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு | செய்யூர்:செய்யூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 1753 கோரிக்கை மனுக்கள் வந்தன.செய்யூர் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி, கடந்த 4ம் தேதி முதல் 19ம் தேதி வரை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. பட்டா மாற்றம் கோரி 1143 மனுக்கள், வீட்டுமனைப்பட்டா மாற்றம் கோரி 407 மனுக்கள், முதியோர் உதவித்தொகை கோரி 84 மனுக்கள், குடும்ப அ... |
தமிழகம் | கொட்டும் மழையிலும் விடாது மணல் கடத்தல் | அரக்கோணம்அரக்கோணம் தாலுகா தக்கோலம் கல்லாறு ஆற்றுப்படுகையில் கொட் டும் மழையிலும் டிராக்டரில் மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.அரக்கோணம் தக்கோலம் ஆற்றுப்படுகையில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது. "லைலா' புயல் தாக்குதல் நடந்து கொண்டே இருந்த போதும் டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளில் மணல் கொள்ளை அடித்து வரும் சம்பவம் ... |
தமிழகம் | இன்றைய மின்தடை | காஞ்சிபுரம்:ஓரிக்கை துணை மின்நிலையத்தில், இன்று (22ம் தேதி) மின்தடை ஏற்படுமென மின்வாரியம் அறிவித்துள்ளது.காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறயுள்ளது. எனவே காஞ்சிபுரம் நகரின் சில பகுதிகளான பெரியார் நகர், காமராஜர் வீதி, ஓரிக்கை தொழிற் பேட்டை, கலெக்டர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற... |
தமிழகம் | பிளஸ் 2 மாணவ மாணவிகள் வசதிக்காக சிறப்பு முகாம்:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு | ஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத் தில், பிளஸ் 2 தேர்வு முடிந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வரும், மாணவ மாணவிகளுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 14ம் தேதி வெளியானது. வரும் 26ம் தேதி பள்ளிகளில் சான்றிதழ்கள் வழங் கப்படுமென அறிவிக்கப... |
தமிழகம் | திருப்போரூரில் சுகாதார மேளா | திருப்போரூர்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி அளவிலான சுகாதார மேளா திருப்போரூரில் நடந்தது.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுகாதார மேளாவை காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., மூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் விஜயலட்சுமி, துணைத் தலைவர் உஷா, பேரூராட்சி தலைவர் செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டார ... |
தமிழகம் | ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்., கட்சியினர் மலர் அஞ்சலி | ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அவரது 19ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி இறந்த இடத்தில் ராஜிவ் அறக்கட்டளை சார்பில், 21 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நேற்று அவரது 19ம் ஆண்டு நினைவு... |
தமிழகம் | ஆன்-லைன் இணைப்பில் தடை:ஜமாபந்தி பணிகள் பாதிப்பு | பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் ஆன்-லைன் இயக்கம் தடைபட்டதால், ஜமாபந்தி பணிகளும், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலையுள்ளது.பள்ளிப்பட்டு தாலுகாவில் ஜமாபந்தி நடந்து வருகிறது. "லைலா' புயலால் மின்சாரம் தடைப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். தற்போது தாலு... |
தமிழகம் | லைலா புயலால் உப்பு உற்பத்தி பாதிப்பு | திருப்போரூர்:கேளம்பாக்கம், திருப் போரூர் பகுதியில் கோடை மழையால் உப்புத்தொழில் பாதிக்கப் பட்டுள்ளது. திருப்போரூர் மற்றும் கேளம் பாக்கம் பகுதிகளில் உப்பளங் கள் உள்ளன. திருப்போரூரில் ரசாயன உப்பு, கேளம் பாக்கத்தில் சமையல் உப்பு தயாரிக்கப்படுகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் உப்பு உற்பத்தி அமோகமாக நடந்தது. நூற்றுக் கணக்கா... |
தமிழகம் | கிராமப்புற சாலைகள் பராமரிப்பு செய்ய ஆய்வு | கம்பம்: கம்பம் மற்றும் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியங்களுகுட்பட்ட 64 கிராம இணைப்புச் சாலைகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்ய ஆய்வு பணிகள் துவங்கியுள்ளது. கம்பம் ஒன்றியத்தில் 38 சாலைகளும், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 24 சாலைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட கிராமப்புற சாலைகளை சீரமைக்க, தேனி மாவட்ட திட்ட அலுவலரை... |
தமிழகம் | பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரியம்மன் தேர் நாளை வெள்ளோட்டம் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மரத்தினாலான புதிய தேர் நாளை வெள்ளோட்டம் விடப்படுகிறது. கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஏழடி உயரத்தில் தேக்கு மரத்தினாலான தேர் அமைக்கப்பட்டுள்ளது. தேர் வடிவமைக்கும் பணிகள் முடிவடைந்த ந... |
தமிழகம் | வெடிகுண்டு வழக்கில் அனீபா விடுதலை | பூந்தமல்லி:பாபர் மசூதி இடிப்பை கண்டித்து, தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் எக்ஸ் பிரஸ் ரயில்களில் நடந்த, தொடர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 பேரை போதிய ஆதாரம் இல்லாததால், விடுதலை செய்து பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.பாபர் ம... |
தமிழகம் | தேவாரம் பகுதி விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் ஆர்வம் | தேவாரம்:தேவாரம் பகுதி விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை இப்பகுதியில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலேயே தேவாரம் பகுதியில் அதிகளவு வறட்சி காணப்படுகிறது.
எனவே வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்... |
தமிழகம் | மதுராந்தகத்தில் சாலை மறியல் | மதுராந்தகம்:சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மதுராந்தகம் நகருக் குள் செல்ல மதுராந்தகம் கால்நடை மருத்துவமனை அருகில் வழியிருந்தது. அதன் வழியாக அனைத்து பஸ்களும் உள்ளே வந்து சென்றன. இவ்வழியை, சில ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூடியது. அதன்பின் அனைத்து பஸ்களும் மேம்பாலம் வழியாக மதுராந்தகம் நகருக்கு ... |
தமிழகம் | சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம் | பெரியகுளம்: பெரியகுளம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர். டிரைவர் கைது செய்யப்பட்டார். பெரியகுளம் நேருநகரைச் சேர்ந்தவர் டிரைவர் கோபி (25). பெரியகுளம் முருகமலைநகர், அனுமார்கோயில் தெரு, காந்திநகரைச் சேர்ந்தவர்களான ஜெயக்கொடி(45), பூபதி (25), மகேஸ்வரி (45), கவிதா (20), டோபி (25), பாண்டிச் செல்வி (12), பா... |
தமிழகம் | மேல்மங்கலம் ராஜவாய்க்கால் தூர்வார நடவடிக்கை தேவை | தேவதானப்பட்டி: மேல்மங்கலம் ராஜவாய்க்காலில் இருந்து சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் வரை உள்ள நீர் வரத்து வாய்க்காலை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் தூர்வார வேண்டும். பெரியகுளம் வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளைக்கரடு அணை அருகே ஆற்றில் தடுப்பணை கட்டி தனி வாய்க்கால் மூலம் சில்வார் பட்டி சிறுகுளம் கண்மாய், நல்லகர... |
தமிழகம் | போடியில் சீரமைக்கப்படாத பரமசிவன் கோயில் ரோடு | போடி:போடி பரமசிவன் கோயிலுக்கு போடியிலிருந்து முந்தல் ரோடு வழியாக 3 கி.மீ., தூரம் செல்லவேண்டும். சுப்புராஜ்நகர் - புதுக்காலனி வழியாக சென்றால் ஒன்றரை கி.மீ., தூரத்தில் சென்று விடலாம். இக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம், பவுர்ணமி, கார்த்திகை தீப நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.
மேலு... |
தமிழகம் | கிராம ஊராட்சிகளில் கூடுதல் பணியாளர் நியமனம் வேண்டும் | தேவதானப்பட்டி: கிராம ஊராட்சிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணிச் சுமையை குறைக்க கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிகளில் ஊராட்சி உதவியாளர் ஒருவர் பணியில் உள்ளனர்.
வீட்டுவரி, குடிநீர் குழாய்வரி வசூலித்தல், தெருவிளக்கு பராமரிப்பு, வார... |
தமிழகம் | விபத்துக்கு வழிவகுக்கும் தனியார் பஸ்களின் வேகம் | கம்பம்: தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களை முந்திக்கொண்டு பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக தனியார்பஸ்கள் செல்கின்றன. ... |
தமிழகம் | கரூர் வைஸ்யா வங்கி லாபம் 42.48 சதவீதம் அதிகரிப்பு | சென்னை: கரூர் வைஸ்யா வங்கியின் நிகரலாபம், கடந்த நிதியாண்டில் 42.48 சதவீதம் அதிகரித்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் இயக்குனர்கள் கூட்டம், கரூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 2009-10 ஆண்டிற்கான, வங்கியின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2009-10ம் நிதியாண்டில், கரூர் வை... |
தமிழகம் | மேலக்கல்லூர் பகுதியில் இன்று மின்தடை | திருநெல்வேலி:மேலக்கல்லூர் பகுதியில் இன்று (22ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி மின்செயற் பொறியாளர் கங்காதரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:மேலக்கல்லூர் உபமின் நிலையத்தில் இன்று (22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் இன்று இந்த உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெ... |
தமிழகம் | தென்காசியில் ரயிலில் இருந்து தவறி விழுந்தபெண் கால் துண்டிப்பு | தென்காசி:தென்காசியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் ரயில் சக்கரத்தில் சிக்கியதால் அவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது.மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் ரவிகலா ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி வேலம்மாள் (48). இவர் நேற்று காலையில் தென்காசியில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக மதுரை-செங்க... |
தமிழகம் | ரயில்வே மேம்பாலம் கட்டும் பகுதியில் குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம் | தென்காசி:தென்காசியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பகுதியில் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.தென்காசியில் ரயில்வே மேம்பால பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. ரயில்வே கேட்டின் வடபகுதியில் 5 பில்லர்களும், தென்பகுதியில் ஒரு பில்லரும் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து பணிகள் நடக்க அப்பகுதியி... |
தமிழகம் | குற்றாலத்தில் இன்று பெரியாரியல் பயிற்சி முகாம் நிறைவு | தென்காசி:குற்றாலத்தில் துவங்கிய பெரியாரியல் பயிற்சி முகாம் இன்று (22ம் தேதி) நிறைவடைகிறது.குற்றாலம் கேரள பொதுப்பணித்துறை ராஜா பங்களாவில் பெரியாரியல் பயிற்சி முகாம் கடந்த 19ம் தேதி துவங்கியது. புரட்சியாளர் பெரியார், தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் என்ற தலைப்புகளில் கலி பூங்குன்றன் பேசினார். இயக்க வரலாறு, உலகம் படைப்பா, பர... |
தமிழகம் | பெத்தநாடார்பட்டியில் ஆலோசனை கூட்டம் | பாவூர்சத்திரம்:பெத்தநாடார்பட்டியில் சரத்குமார் மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.பெத்தநாடார்பட்டியில் நடந்த சரத்குமார் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய மன்ற தலைவர் துரைமுருகன் தலைமை வகித்தார். மதியழகன், ஆறுமுககனி, செல்வன் முன்னிலை வகித்தனர். மாணவரணி செயலாளர் சதீஷ் வரவேற்றார். பொன்குமார், பிரபாகரன், கபிலோஸ்டாலின், ராஜ் பேசினர... |
தமிழகம் | பாவூர்சத்திரம் ஆலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை | பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் மேற்கு அந்திரேயா ஆலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.பாவூர்சத்திரம் மேற்கு அந்திரேயா ஆலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலை 6.30 மணிக்கு சேகர குரு ஆசீர்வாதம் ராஜ்குமார் ஜெபத்துடன் பண்டிகை ஆரம்பமானது. இந்திய மிஷனரி சங்கத்தினர் பல்சுவை நிகழ்ச்சி நடத்தினர்.இரண்டாம் நாள... |
தமிழகம் | ஆவுடையானூரில் விடுமுறை வேதாகம பயிற்சி | பாவூர்சத்திரம்:ஆவுடையனூரில் விடுமுறை வேதாகம பயிற்சி நடந்தது.ஆவுடையானூர் எஸ்.பி.என்.வளாகத்தில் தென்காசி ஏ.ஜி.சபை சார்பில் விடுமுறை வேதாகம பயிற்சி 5 நாட்கள் நடந்தது. பயிற்சியில் ஆவுடைசிவனுபட்டி, கைக்கொண்டார் தெரு, மாடியனூர், கருவேல்நாடார் தெரு மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் இருந்து 3 வயது முதல் 15 வரையுள்ள 137 மாணவ, ம... |
தமிழகம் | ராஜிவ் நினைவு நாள் | திசையன்விளை:திசையன்விளையில் காங்., சார்பில் ராஜிவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.திசையன்விளை பழைய பஸ் ஸ்டாண்டில் ராஜிவ் திருவுருவ படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காங்., மாநில சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கே.பி.கே. ஜெயக்குமார், இளைஞர் காங்., நகர தலைவர் அலெக்ஸ், நகர காங்., தலைவர்... |
தமிழகம் | உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் 26ம் தேதி வைகாசி விசாக திருவிழா துவக்கம் | திசையன்விளை:உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வரும் 26ம் தேதி துவங்குகிறது.தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில். இக்கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிக முக்கிய விழா வைகாசி விசாக திருவிழாவாகும். இவ்விழாவிற்கு நெல்லை, தூத்துக்குடி... |
தமிழகம் | சேர்வலார் கோயிலில் 25ம் தேதி கொடை விழா | விக்கிரமசிங்கபுரம்:சேர்வலார் சங்கிலி பூதத்தார், காந்தாரி அம்மன் கோயில் கொடை விழா வரும் 25ம் தேதி நடக்கிறது.சேர்வலார் சங்கிலி பூதத்தார், காந்தாரி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி கோயில் வளாகத்தில் கால்நாட்டு வைபவம் நடந்தது. வரும் 24ம் தேதி காலை 6 மணிக்கு கூடு பாறையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், ... |
தமிழகம் | புதுவாழ்வு நகரில்குடும்ப ஆசீர்வாத முகாம் | ஆழ்வார்குறிச்சி:புதுவாழ்வு நகரில் குடும்ப ஆசீர்வாத முகாம் நடந்தது.மத்தளம்பாறை அருகேயுள்ள புதுவாழ்வு நகரில் புதுவாழ்வு தியான நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பாக 9வது தேசிய புதுவாழ்வு குடும்ப ஆசீர்வாத முகாம் கடந்த 20ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நடந்த முகாமில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.