category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | துப்புரவு பணிக்கு அழைப்பு | மதுரை: மதுரையை குப்பையில்லா நகரமாக்க மாநகராட்சி மூலம் நான்கு மண்டலங்களிலும், மே 25 முதல் குப்பைகளை அகற்றும் பணி துவங்குகிறது. அன்று வடக்கு, 26 ல் கிழக்கு, 27 ல் மேற்கு, 28 ல் தெற்கு மண்டலத்திலும் பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். துப்புரவு ஊழியர்கள் 2500 பேர் ஈடுபடுவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவர் பட... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு ஆறாயிரம் பேர் | மதுரை:ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான மத்திய தேர்வாணைய குழுவின் (யு.பி.எஸ்.சி.,) தேர்வு நாளை (மே 23) நடக்க உள்ளது. இத் தேர்வின் மாநில பார்வையாளராக பால் உற்பத்தித் துறை கமிஷனர் அபூர்வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் 20 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு விருப்பப் பாடத்திலும், மாலை 3.30 க்கு பொது அறி... |
தமிழகம் | மொபைல் போன் திருட்டு | தேனி: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ். இவர், தேனியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். இங்கு, தியேட்டர் ஒன்றில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது, மொபைல் போனை யாரோ திருடிச் சென்று விட்டனர். |
தமிழகம் | காதலர்கள் புகலிடமான சிறுவர் பூங்கா | தர்மபுரி: தர்மபுரி நகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா காதலர்கள் புகலிடமாகி வருவதால், சிறுவர்களை பூங்காவுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையுள்ளது. நகராட்சி நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரி நகரில் பொழுது போக்கிற்கு குறிப்பிட்டு சொல்லும்படியான இடங்கள் இல்லை. பெரும்பாலானவர்கள் தியேட்டர்களின் த... |
தமிழகம் | பெண் மாயம் | மதுரை:மதுரை வசந்தநகரை சேர்ந்தவர் நரசிம்மலு (35). மனைவி வசீராபானு (29). இவர்கள் 14 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். சில தினங்களுக்கு முன் நரசிம்மலு சென்னை சென்றிருந்தார். அப்போது வசீராபானு மாயமானார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | வெளிநாட்டு ஆந்தை சிக்கியது | திருமங்கலம்:திருமங்கலம் டிராவலர்ஸ் பங்களாவில் நேற்று சில காக்கைகள்ஒரு பறவையை துரத்தி வந்தன. அங்கு இருந்தவர்கள் காக்கைகளை விரட்டி விட்டு, அந்த பறவையை பிடித்து பார்த்த போது, அது வெள்ளை நிறத்தில் இருந்த அபூர்வ வகை வெளிநாட்டு ஆந்தை என, தெரியவந்தது.அந்த ஆந்தையை உசிலம்பட்டி வன சரக ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். |
தமிழகம் | பெண் கடத்தல் வாலிபருக்கு வலை | அரூர்: அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கேசவன் (45). இவரது மகள் சரண்யா (22). கடந்த 18ம் தேதி வீட்டில் சரண்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்ராஜின் மகன் சுரேஷ் (19) ஆசைவார்த்தை கூறி சரண்யாவை கடத்தி சென்றுவிட்டார். இது குறித்து கேசவன் அரூர் போலீஸில் புகார் செய்தார். புகாரில், "... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் காலரா பலி 6 ஆக உயர்வு | உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகுதியில் காலராவிற்கு நேற்று மேலும் ஒருவர் பலியானார். இத்துடன் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பரவி வரும் காலராவினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலராவிற்கு இதுவரையில் ஐந்து பேர் பலியாயிருந்தனர். ... |
தமிழகம் | பஸ் ஸ்டாப் துவக்க விழா | மதுரை:மதுரை - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆனைமலைஸ் டயோட்டா (ஏ.ஆர்.சி., குரூப்) நிர்வாகத்தின் சார்பில் புதிய பஸ் ஸ்டாப் திறக்கப்பட்டது. திருமங்கலம்டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆனைமலைஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். |
தமிழகம் | தேனி, மதுரை மாவட்டத்தில் பயிர்க்கடன் ரூ.90 கோடி | தேனி:தேனி, மதுரை மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க 90 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில் தேனி மாவட்டத்திற்கு 40 கோடி, மதுரை மாவட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு... |
தமிழகம் | ஊராட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: தி.மு.க., ஒ.செயலாளர் | தேனி:கோகிலாபுரம் ஊராட்சி தலைவர் என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் ஆதராமற்றவை, பொய்யானவை என உத்தமபாளையம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் முல்லை க.சேகர் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோகிலாபுரம் ஊராட்சியில் ஒரு காஸ் இணைப்பு வழங்க பயனாளிகளிடம் 500 ரூபாய் வசூல் செய்தனர். எனவே வட்ட வழங... |
தமிழகம் | திருமலை நாயக்கர் மகாலில் புத்தக விற்பனை நிலையம் | மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலில் புத்தக விற்பனை நிலையம், புதிதாக அமைக்கப்படுகிறது.மகால் நாடக சாலை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் வெளியிடப் படும் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அரிய படைப்புகளான இவற்றை பார்வையிட பார்வையாளர்கள் விரும்பினர்.இதனால் தற்போது, மகால் நுழைவுக் கட்டணம் வழங்கும் பகுதியில் புதிதா... |
தமிழகம் | ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு | தர்மபுரி: தர்மபுரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ராஜிவ் திருவுருவப்படத்துக்கு, நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா மாலை அணிவித்து, தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதி மொழி ஏற்றனர்.முன்னாள் ம... |
தமிழகம் | புரோக்கர் கைது | மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் புரோக்கர்களை பிடிக்க கலெக்டர் காமராஜ்,நேற்று மாலை 10 பேர் கொண்ட 3 குழுக் களை அனுப்பினார்.அலுவலர்கள் சோதனையில், சிம்மக்கல்லை சேர்ந்த புரோக்கர் பன்னீர் செல்வத்தை (55) பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவர் கார் டிரைவர். |
தமிழகம் | மது பதுக்கி விற்ற இருவர் கைது | அரூர்: பொம்மிடி அருகே டாஸ்மாக் மது பதுக்கி விற்பனை செய்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.பொம்மிடி அடுத்த வேங்கடஅள்ளியை சேர்ந்தவர் மகேஸ்வரி (40). இவர் அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொம்மிடி எஸ்.ஐ., அர்ஜூனன் வேங்கடஅள்ளி ப... |
தமிழகம் | கள்ளழகருக்கு அமைத்த ஆழ்குழாய் நீரை அரசு மருத்துவமனைக்கு பயன்படுத்த கலெக்டர் உத்தரவு | மதுரை:கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்காக, அமைக்கப்பட்ட இரு ஆழ்குழாய்களை, தினமலர் செய்தி காரணமாக, அரசு மருத்துவமனைக்கு பயன்படுத்த கலெக்டர் காமராஜ் உத்தரவிட்டார். சித்திரைத் திருவிழாவின்போது, ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் இறங்க, மாநகராட்சி சார்பில் கரை ஓரம் ஆயிரம் அடிக்கு இரு ஆழ்குழாய்கள் அமைக்கப் பட்டு, தண்ணீர் வி... |
தமிழகம் | குழந்தைகளுக்கு இருமல் மருந்து பற்றாக்குறை | மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இருமல் பற்றாக்குறை இருப்பதால், சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழந்தைகள் நலப்பிரிவு வெளிநோயாளிகள் பிரிவுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றனர். கடும் வெயில் காரணமாக, பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி, இருமல் தொந்தரவு ஏற்படுகிறது. இக்குழந்தைக... |
தமிழகம் | நிதி முறைகேடு ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்கு | சேத்தூர்: சேத்தூர் அருகே ஜமீன்கொல்லங்கொண்டான் ஊராட்சி தலைவர் பால்சாமி(60), துணைத் தலைவர் ஆறுமுகசாமி (58), எழுத்தர் இளைய ராஜா (32). இவர்கள், 2009-2010 நிதியாண்டில் ஊரக வளர்ச்சி நிதியில் முறைகேடு செய்து 8 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக ஊராட்சி ஏ.பி.டி.ஓ., சாந்தி, சேத்தூர் ரூரல் போலீசில் புகார் செய்தார... |
தமிழகம் | மாநில கபடி போட்டி | விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னராமலிங்கபுரத்தில் மகாத்மா காந்தி சமூக நலம், கல்வி அறக்கட்டளை மற்றும் கோல்டன் ஸ்டார் கபடி குழு சார்பில் மாநில அளவிலான கபடிப் போட்டி நடந்தது. டி.எஸ்.பி., பிச்சை தலைமை வகித்தார். வாடியூர் ஊராட்சித் தலைவர் சீதாரமணி முன்னிலை வகித்தார். அர்ஜூனா விருதுபெற்ற சர்வதேச கபடி வீரர் மணத்தி. கணேசன் ச... |
தமிழகம் | தீவிரவாத எதிர்ப்பு நாள் | சோழவந்தான்:சாழவந்தான் நகர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 20 வது ஆண்டு நினைவு நாள், தீவிரவாத எதிர்ப்பு நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. நகர் காங்.,தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். தொகுதி அமைப்பாளர் வையாபுரி மாவட்ட பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். ராஜிவ் படத்திற்கு முன்பு தொண்டர்கள் இரண்டு... |
தமிழகம் | நூல் அறிமுக விழா | ராஜபாளையம்:ராஜபாளையத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, நூல் அறிமுக விழா நடந்தது. தமிழர் தன்மான பாசறை தென்மண்டல அமைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித் தார். அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மனோகரன் பேசினார். ம.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் விநாயக மூர்த்தி, "ஈழம்-இன்னும் நூறாண்டு போராடுவோ... |
தமிழகம் | விபத்து காப்பீடு வழங்கல் | ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ ஸ்பின்னர்ஸ் மில்லில் பணிபுரிந்த தொழிலாளி ஆதிமூலம், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் மனைவி ராஜேஸ்வரியிடம், விபத்து காப்பீடு, கிராஜூட்டி மற்றும் இதர பணப் பலன் களுக்கான தொகை மொத்தம் 4 லட்சம் ரூபாய் காசோலையை டெக்ஸ் டைல் பிரிவு தலைவர் காந்திமதிநாதன் வழங்கினார். மனித வள மேம்ப... |
தமிழகம் | ராஜாக்கமங்கலம் அகழ்வாராய்ச்சிபொருட்களை பாதுகாக்க ஏற்பாடு:திருமலை நாயக்கர் மகாலில் தனி இடம் | மதுரை:நெல்லை மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை பாதுகாக்க, மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தனி இடம் ஒதுக்கப்படுகிறது.ராஜாக்கமங்கலத்தில் இரணியன் குடியிருப்பு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணி துவங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் கிடைத்த நர... |
தமிழகம் | குரு பூஜை விழா | வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் குரு பூஜை விழா மந்திதோப்பில் நடந்தது. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் அம்மையப்பன் முன்னிலை வகித்தார். ஈசன் வழிபாடும், அன்னப்படையல் வழிபாடும், கோயில் குருக்கள் பழனிச்சாமி ஓதுவாரின் பன்னிருதிருமுறை வழிபாடும், தேவாரம், திருவாசக பாராயணமும் அன்னதானமும் ... |
தமிழகம் | வடக்கு தாலுகாவில் ஜமாபந்தி நீட்டிப்பு | மதுரை:மதுரை மாவட்டத்தின் பெரிய தாலுகாவான மதுரை வடக்கு தாலுகாவில் மட்டும் ஜமாபந்தி மே 28ம் தேதி வரை நீடிக்கிறது.மதுரை மாவட்டத்தில் மே 11 ல் ஜமாபந்தி துவங்கியது. ஏழு தாலுகாக்களில் துவங்கிய ஜமாபந்தி, மே 20 ல் ஆறுதாலுகாக்களில் முடிந்தது. மிகப்பெரிய தாலுகாவான மதுரை வடக்கு தாலுகாவில் மட்டும் மே 28 வரை நீடிக்கிறது. மற்ற தாலுக... |
தமிழகம் | காலில் விழாதவரை தாக்கியவர் கைது | விருதுநகர்:வத்திராயிருப்பு உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(32).இவர் அங்குள்ள கருப்பசாமி கோயிலில் சாமி ஆடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சங்கரேஸ்வரனை (32) காலில் விழச் சொன்னார். சங்கரேஸ்வரன் காலில் விழாததால் அவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது.
அங்குள்ள சைக்கிள் கடையருகே சங்கரேஸ்வரன் வந்தபோது ப... |
தமிழகம் | ஆடு மேய்ப்பதில் பிரச்னை தாக்கியவர் கைது | விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (50).இவரும் அதே ஊரைச் சேர்ந்த அய்யாக்கன்னும் ஆடு மேய்ப்பவர்கள். அய்யாக்கன் ஆடுகளை ஓட்டிச் சென்றபோது இந்த ஆடுகளோடு,பின்னால் வந்த கருப்பையாவின் ஆடுகளும் கலந்து சென்றன. இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அய்யாக்கன் கருப்பையாவை கம்பால் தாக்க... |
தமிழகம் | குடும்ப தகராறு பெண் தீக்குளித்து தற்கொலை | ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி.,அருகே அத்திக்குளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(28). இவர் பழையஇரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கார்த்தீஸ்வரி(25). இருவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 19ம் தேதி இவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கார்த்தீஸ்வரி தன் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ... |
தமிழகம் | உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு பயிற்சி | மதுரை:குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை கிளை சார்பில், உணவுப்பாதுகாப்பு நடைமுறை பயிற்சி மே 26 முதல் 28 வரை, மதுரை கோர்ட் அருகில் உள்ள மெட்ரோபோல் ஓட்டலில் நடக்கிறது.ஓட்டல் நடத்துபவர்கள், கேட்டரிங் முடித்தவர்கள், புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். காலை 10 முதல் மதியம் ... |
தமிழகம் | பயிற்சி பள்ளியில் டி.ஜி.பி., ஆய்வு | மதுரை:மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பெண்கள் போலீஸ் பயிற்சி பள்ளியில் நேற்று இத்துறையின் டி.ஜி.பி., பாலச்சந்திரன் ஆய்வு செய்தார். பயிற்சி பெறும் மாணவியருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பின், அவர்கள் தங்கும் அறைகள், உணவுக்கூடம் போன்றவற்றை ஆய்வு செய்தார். மாவட்ட எஸ்.பி., மனோகர், கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன் உடனிருந... |
தமிழகம் | ஆறு ஆட்டோக்கள் பறிமுதல் | மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று காலை கலெக்டர் காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, அவர் வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தப் பட்டிருந்தன. அவரது கார் மற்றும் இதர வாகனங்கள் செல்ல முடியவில்லை. உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட ஆறு ஆட்டோக்களை... |
தமிழகம் | மாநில அளவிலான ஹாக்கி போட்டி | வாடிப்பட்டி:மதுரை வாடிப்பட்டியில் நேற்று துவங்கிய மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், எவர்கிரேட் அணி 7:0 புள்ளிகள் பெற்று சேலம் அணியை வீழ்த்தியது.வாடிப்பட்டி எவர்கிரேட் ஹாக்கி சங்கத்தின் 13வது மாநில ஹாக்கி போட்டியை, பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி துவக்கினார். கவுன்சிலர்கள் பாப்பையன், ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தனர். சென்னை ... |
தமிழகம் | கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | ராஜபாளையம்: கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்களில் ஒரு பிரிவினர், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 17 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ... |
தமிழகம் | போலீசாரை தாக்க முயன்ற இருவர் ஓட்டம்; ஒருவர் கைது | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரோந்து சென்ற போலீசாரை ஆயுதங்களால் தாக்க முயன்ற இருவர் தப்பி ஓட்டம்,ஒருவர் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை செம்பட்டி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு போலீசார் கனகராஜ், கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகப்படும்படியாக மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். போலீஸ்காரர்களை கண்... |
தமிழகம் | அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வாட்டர் ஃபில்டர் | அரியலூர்: அரியலூர் அரிமா சங்கம் சார்பில், அரியலூர் அரசு மருத்துவமனைக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலா வாட்டர் ஃபில்டர் வழங்கப்பட்டது. மேற்கண்ட வாட்டர் ஃபில்டரை மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் இயக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க தலைவர் வக்கீல் மனோகரன், செயலாள் செல்வராஜ், பொருளாளர் செந்தில்குமார், புதிய செயலாளர் வாரணவாசி ர... |
தமிழகம் | கஞ்சா பதுக்கியவர் கைது | சிவகாசி: திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்தவர் குமார்(29). இவர் செங்கமலநாச்சியார்புரம் - சிவகாசி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். இவரை திருத்தங்கல் எஸ்.ஐ., முருகன் விசாரித்த போது அவரிடம் 22 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். கஞ்சாவை கைப்பற்றி குமாரை கைது செய்தனர். |
தமிழகம் | மஞ்சள் சாகுபடி உயர்வால் சேனை டன் ரூ. 21 ஆயிரம் | கோபிசெட்டிபாளையம்: கோபி சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டதால், சேனைக் கிழங்கு உற்பத்தி வெகுவாக குறைந்து, தற்போது ஒரு டன் சேனைக்கிழங்கு விலை 21 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
விவசாய நிலங்களை அதிகம் கொண்ட கோபி பகுதியில் நெல், கரும்பு, வாழை, மஞ்சளுக்கு அடுத்தபடியாக சேனைக் கிழங்கை விவசாயிகள் ஊடுபயிர... |
தமிழகம் | புயல் ஓய்ந்ததால் கடலுக்கு வேதை மீனவர்கள் பயணம் | வேதாரண்யம்: புயல் ஓய்ந்து மீண்டும் வெயில் வாட்டத்துவங்கியதால், கடலுக்கு மீனவர்கள் பயணத்தை துவங்கினர். கடந்த நான்கு நாட்களாக வங்கக்கடலில் மையங்கொண்ட புயல் நேற்று முன்தினம் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்ல... |
தமிழகம் | மது குடிக்க பணம் தராத தந்தையை கொல்ல முயற்சி | சிவகாசி: மீனம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி கிரகம்(40). எம்.ஏ.,பட்டதாரியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தந்தை பேச்சிமுத்து (62)விடம் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வது வழக்கம்.
அந்தோணி கிரகம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். தந்தை பணம் தராம... |
தமிழகம் | நெல் சாகுபடி பணி தீவிரம் : வயலில் முளைத்த கடைகள் | கோபிசெட்டிபாளையம்: கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதிகளில் முதல்போக சாகுபடிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெளி மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் வசதிக்காக வயல்வெளியில் தற்காலிக கடைகள் தோன்றியுள்ளன.
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் 15ம் தேதி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாச... |
தமிழகம் | தீக்காயம் அடைந்த பெண் பலி | வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த பாமணியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகள் உதயா (24). திருமணம் ஆகவில்லை. மனநிலை சற்று பாதித்தவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதயா, மணக்காட்டில் உள்ள பாட்டி சவுந்தரம் வீட்டுக்கு வந்தார். நேற்று இரவு பாட்டி சவுந்தரத்துக்கு வெண்ணீர் வைத்துக் கொடுக்க அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றினார். அப்போது, பரவிய ... |
தமிழகம் | குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது | வேதாரண்யம்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.வேதாரண்யம் கீழவீதியைச் சேர்ந்தவர் சிவசண்முகம் மகன் மயில்வாகணன் (26). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு வழக்கில் இவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நாகை எஸ்.பி., மகேஷ்வர்தயாள், வேதாண்யம் டி.எஸ்.பி., ராஜ... |
தமிழகம் | ரத்த தானம் | நரிக்குடி:அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.ராமநாதபுரம் பாராளுமன்ற இளைஞர் காங்.,தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்., தலைவர் செல்வம்,சிவகுமார்,மாவட்ட தலைவர்கள் சிவாஜிபாலன், துரைப்பாண்டியன், வட்டார காங்., தலைவர்கள் மு... |
தமிழகம் | கடன் பணம் திரும்பத்தராததால் சாராய வியாபாரி குத்திக்கொலை | வேதாரண்யம்: வாங்கிய கடனை திரும்பத் தராததால் தந்தையும், மகனும் சேர்ந்து சாராய வியாபாரியை குத்திக்கொலை செய்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு போலீஸ் சரகம் மாராச்சேரியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி கன் புலவேந்திரன் (35). சாராய வியாபாரி. இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த முருகையன் மகன் மகிழ்மன்னன் (27) என்பவர் கூலி வேலை பா... |
தமிழகம் | வன்முறை எதிர்ப்பு உறுதி மொழி | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அரசு ஆஸ்பத்திரியில் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி ஊழியர்கள் வன்முறை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர்.மருத்துவ அதிகாரி பால்ராஜ் தலைமையில் டாக்டர்கள், செவிலியர், ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர். |
தமிழகம் | மேம்பாலத்தை கண்டித்து மே 28ல் ஈரோட்டில் பந்த் | ஈரோடு: ஈரோடு மேம்பாலம் பணிக்காக பெரிய மாரியம்மன் கோவில் இடிக்கப்படுவதை கண்டித்து வரும் 28ம் தேதி ஈரோட்டில் பந்த் நடக்கிறது. பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
கமிட்டி தலைவர் சந்திரசேகரன் பேசியதாவது:மேம்பாலம் பணிக்காக பெரிய மாரியம்மன் கோவிலை 14.5 அடி வரை அகற்ற அறங்காவல் கு... |
தமிழகம் | வைகாசி விசாக விழா | சேத்தூர்: தெற்கு வெங்காநல்லூர் சந்தனமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அக்கினி சட்டி, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாக கமிட்டியினர் ஏற்பாடு செய்தனர். |
தமிழகம் | டூவீலர் மீது கார் மோதல் ஒருவர் பரிதாப பலி | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆய்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னான் மகன் ரெங்கராயர் (40). இவர் நேற்று மதியம் 3 மணிக்கு தனது டி.வி.எஸ் எக்ஸ்.எல்., டூவீலரில் பேரையூர் கிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்ட... |
தமிழகம் | சாத்தூர் அருகே வாந்தி, வயிற்று போக்கு பெண் பலி:காலரா பரவுவதாக கிராம மக்கள் பீதி | சாத்தூர்:சாத்தூர் அருகே பெரியகொல்லப்பட்டியில் வாந்தி, வயிற்று போக்கு காரணமாக பெண் பலியானார். காலரா பரவியுள்ளதாக கிராம மக்கள் பீதியில் உள்ளனர். சாத்தூர் அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி, தெற்கூர், தெற்குப்பட்டி ஆகிய கிராமங்களில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடி நீருக்காக அடிகுழாயையும், பெர... |
தமிழகம் | அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போலீஸ் ஏட்டு பலி | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த ஏட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். புதுக்கோட்டை எஸ்.பி., அலுவலக கண்ட்ரோல் ரூமில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கருப்பையா(45). இவர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் தனது ஹீரோ ஹோண்டா டூவீலரில் காரைக்குடி சென்றுவிட்டு மீண்டும் புதுக்கோட... |
தமிழகம் | இலவச வீடு திட்டம்:கட்டுமான பணியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் | விருதுநகர்: அரசின் இலவச வீடு திட்டத்தில் கட்டுமான பணிக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொத்தனாராக பயன்படுத்த முடிவு தமிழகம் முழுவதும் ஓலைக் கூரைகளை கணக்கெடுப்பு செய்து தகுதியுள்ளவர்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டி... |
தமிழகம் | 7, 8 வகுப்புக்கு பயிற்றுவிக்க உபகரணம் தயாரிப்பு பயிற்சி | ஈரோடு: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு கல்வி பயிலும் மாணவ, மாணவியர்க்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.
கல்வி கற்பிக்கப்படும் வகுப்பறை சூழலில் "கற்றல் கற்பித்தல் நிகழ்வு' மிகவும் இன்றியமையாதது. இதில், ஆசிரியர்களுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கு... |
தமிழகம் | புதுகை அருகே ரவுடி வெட்டிக்கொலை: வக்கீல் கொலைக்கு பழிக்குப்பழியா? | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வக்கீல் கார்த்திகேயன் படுகொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரபல ரவுடி நாகேந்திரனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த ஆறுபேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். புதுகை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்தவர் வக்கீல் கார்த்திகேயன்(35). நிலப்பிரச்சனை தொடர்பாக கடந்த ஜூலை இரண்ட... |
தமிழகம் | கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்ட படிப்புகள் புதிதாக துவக்கம் | விருதுநகர்: தமிழகத்தில் உள்ள இருபது கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில், கோவை பாரதியார் பல்கலையுடன் இணைந்து இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை துவக்கியுள்ளன. கூட்டுறவு லோண்மை நிலையங்கள்: தமிழகத்தில் இருபது கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கூட்டுறவுத்துறை சார்ந்த டிப்ளமோ, பட்டப்படிப்புகள் மட்டுமே கற்... |
தமிழகம் | புதுகை அருகே நகை, பணம் கொள்ளை: கும்பல் அட்டகாசம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நள்ளிரவு வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவணத்தான்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. இவரது மகன்கள் முருகேசன்(44), சந்திரன்(41) இருவரும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்... |
தமிழகம் | கம்பத்தில் லாரி மோதி பரபரப்பு | ஈரோடு: சூரம்பட்டி நான்கு சாலையில் டெலிஃபோன் கம்பத்தில் லாரி மோதியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நேற்று இரவு 7 மணி அளவில் ஈரோடு நோக்கி வந்த லாரி, சூரம்பட்டி நான்கு ரோட்டில் ம.தி.மு.க., அலுவலகம் எதிரேயுள்ள டெலிஃபோன் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கம்பம் சாய்ந்தது. சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற... |
தமிழகம் | இயற்கை விவசாயம்: கருத்தரங்கில் கோரிக்கை | மானாமதுரை: விவசாய தொழிலாளர் கருத்தரங்கு மானாமதுரையில் நடந்தது. மக்கள் அமைப்பு தலைவர் ஆதி தலைமை வகித்தார்.செயலாளர் சவரிமுத்து முன்னிலை வகித்தார். திருப்புவனம் பகுதி தலைவர் அம்மாசி வரவேற்றார். தோட்டக்கலை துறை உதவி மேலாளர் மகேஸ்வரன், பொறியாளர் வனராஜ், விவசாய அலுவலர் கோகிலா சக்தி பங்கேற்றனர்.
விவசாய கருவிகள் இயங்கும் முறை... |
தமிழகம் | மாஜி பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிப்பு | கும்பகோணம்: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் நினைவு நாள் ரத்ததான முகாம் நேற்று கும்பகோணத்தில் நடந்தது. கும்பகோணம் சட்டசபை தொகுதி மற்றும் மயிலாடுதுறை பார்லிமென்ட் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரா... |
தமிழகம் | தகராறு இருவர் கைது | மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவர் ஒரு திருமணத்திற்கு சென்ற போது, கோட்டை நகரை சேர்ந்த வேலாயுதம் (56) தரப்பினரரோடு தகராறு ஏற்பட்டது. சுப்பிரமணியம் மகன் சுரேஷ்குமார் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த வேலாயுதம், நண்பர்கள் ஆறுமுகம், மூர்த்தி, முருகன் கடப்பரையால் தாக்க முயன்றனர். அருகில் இ... |
தமிழகம் | வேதப்பாறை நீர்த்தேக்க திட்டம் செயல்பாட்டுக்கு வருமா? | டி.என்.பாளையம்: கள்ளிப்பட்டி அருகே வேதப்பாறையில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஓடிவரும் காட்டாற்று நீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்தினால், 2000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
டி.என்.பாளையம் வட்டாரம் விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டது. குருவை சாகுபடி தமிழகத்திலேயே டி.என்.பாளையம் பகுதியில்தா... |
தமிழகம் | டாஸ்மாக் மதுவில் தண்ணீர் கலப்பு கலால் துறையினர் அதிரடி சோதனை | கும்பகோணம்: டாஸ்மாக் மது பாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வது தொடர்பாக குடிமகன்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து கும்பகோணம் பகுதியில் நேற்று கலால் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். கும்பகோணம் கோட்டத்தில் 96 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 45 டாஸ்மாக் கடைகள் பார் அனுமதி பெற்று இயங்கி ... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி ஒருவர் பலி | சிவகங்கை: காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணியை சேர்ந்தவர் குமார் (35). ஒலிபெருக்கி அமைக்கும் பணி செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன், சிவகங்கை முதலியார் தெருவில் நடந்த கோவில் திருவிழாவில், கம்பத்தில் ஏறினார். மின்சாரம் தாக்கி கீழே விழுந்து, மதுரை தனியார் மருத்துவமனையில் இறந்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்.ஐ.,வடிவ... |
தமிழகம் | மேம்பாலத்துக்கு எதிர்ப்பு வீடுகளில் கறுப்பு கொடி | ஈரோடு: ஈரோட்டில் அமையும் மேம்பாலத்தால் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஆபத்து நேரிடும் எனக் கூறி, பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் ஈரோட்டில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடக்கிறது.
பன்னீர்செல்வம் பூங்காவில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் துரிதமாக நடக்கிறது. மேம... |
தமிழகம் | ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணத்திருவிழா இன்று கோலாகல துவக்கம் | கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா இன்று தொடங்குகிறது.காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் 26வது திருத்தலமாக திகழ்வது மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேசுவரசுவாமி கோவில் ஆகும். இது காசி, திருவண்ணாமலை, திருத்தில்லை முதலான சிவத்தலவரிசையில் 11வது தி... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | சிவகங்கை: அரசனூர் ஊராட்சி செம்பூரில், பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், ஒன்றிய தலைவர் தங்கராஜ், பொருளாளர் இளையராஜா, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஜபருல்லா பேசினார். நிர்வாகி பஞ்சவர்ணம் நன்றி கூறி... |
தமிழகம் | கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு | கும்பகோணம்: கும்பகோணத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கும்பகோணம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களும், தாலுகா அலுவக ஊழியர்களும் கும்பகோணம் தலைமையிடத்து துணை தாசில்தார் அருண்மொழி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்ட... |
தமிழகம் | காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | மானாமதுரை: சமையல் காஸ் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம், மானாமதுரை தாலுகா அலுவலகத்தில், வரும் 28ம் தேதி நடக்கிறது. சிலிண்டர் தட்டுப்பாடு, கூடுதல் கட்டணம் போன்ற குறைபாடுகளை தெரிவிக்கலாம் என, கலெக்டர் (பொறுப்பு) சிவஞானம் தெரிவித்தார். |
தமிழகம் | பழுதான வீடு: மழையால் இடிந்தது | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பழுதான வீடு மழையால் இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடியதால் உயிர் தப்பினர். தஞ்சை தெற்கு வீதி கீரக்கடைச்சந்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். தூத்துக்குடி வருவாய்த்துறையில் பணி செய்கிறார். இவரது வீட்டில் கடந்த பத்தாண்டாக மாரிமுத்து (45) என்பவர் வசிக்கிறார். இவர் தஞ்சை கலைத்தட்டுக்கள் செய்து வ... |
தமிழகம் | சதாசிவ பிரம்மேந்திராள் விழா பரவசத்தில் ஆழ்த்திய நாதஸ்வரம் | மானாமதுரை: மானாமதுரை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில், ஷேக் மெக்பூப் சுபானி தம்பதியினரின் நாதஸ்வர இசை நடந்தது. பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் ஷேக் சின்னமவுலானாவின் மகள் ஷேக் மெக்பூப் சுபானி, கணவர் கலிபா நேற்று முன்தினம் நடந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். இவர்களது நாதஸ்வர இசை, ரசிகர்களை பரவசப்படுத்தியது. ... |
தமிழகம் | அம்மனுக்கு வெள்ளி கவசம் உபயம் | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திங்களூரில் நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரன் ஸ்தலமான கைலாசநாத சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த டாக்டர் மணிரத்னம் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளிக்கவசம் செய்து உபயமாக கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜிடம் வழங்கினார். ... |
தமிழகம் | தஞ்சை டி.ஆர்.ஓ., திடீர் மாற்றம் | தஞ்சாவூர்: தஞ்சை டி.ஆர்.ஓ., கருணாகரன் சென்னை ஆவின் நிறுவன துணை பொது மேலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று தனது பொறுப்பை கலெக்டர் சண்முகத்திடம் ஒப்படைத்தார்.இவருக்கு பதிலாக, சென்னை சுற்றுலாத்துறை பொது மேலாளர் சுரேஷ்குமார் தஞ்சை டி.ஆர்.ஓ. ,வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மே 28ம் தேதி தஞ் சை டி.ஆர்.ஓ., வாக... |
தமிழகம் | இடம் மாறுகிறது கச்சேரி வீதி கார் ஸ்டாண்டு | ஈரோடு: ஈரோட்டில் மேம்பாலம் கட்டமைப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் கச்சேரி வீதி இனி கச்சேரி ரோடாக மாற்றப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட போக்குவரத்து டி.எஸ்.பி., நாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே புதிய மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக துவங்கி நடந்து வருகிறது. காந்திஜி ரோட்டில் உள்ள ... |
தமிழகம் | நள்ளிரவில் வாட்ச்மேன் கழுத்து அறுத்து கொலை | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை இஞ்சிக்கொல்லை அருகே தம்பிக்கோட்டை பிரகதீஷ் என்பவருக்கு சொந்தமான கட்டுமனை உள்ளது. அதை சில சமூக விரோதிகள் ஆக்கிரமித்து அபகரிக்க திட்டமிட்டனர். இதை அறிந்த பிரகதீஷ் தன்னிடம் வேலை பார்த்த திருவாரூர் மாவட்டம் ஓவரூர் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் சுரேஷ் (28) என்பவரை வாட்ச்மேனாக கொட்டகை போட்டு பிரச... |
தமிழகம் | அச்சத்துடன் அரசு குடியிருப்புகளில் வசிப்போர்... பராமரிப்பு கிலோ என்ன விலை? | சிவகங்கை: அரசு ஊழியர்களுக்காக பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட குடியிருப்புகள், பராமரிப்பு இன்றி சிதைந்து வருகின்றன. இவற்றை பராமரிக்க ஊழியர் சம்பளத்தில் தொகை பிடித்தம் செய்யப்பட்டாலும், அதை செலவு செய்ய அரசு தயங்குவதால், வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரியில் அரசு குடி... |
தமிழகம் | தஞ்சையில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அரசு பஸ் மோதி நேற்று முன்தினம் இரவு வாலிபர் இறந்தார். நாகை மாவட்டம் திருப்பூண்டி அக்ரகாரத்தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (25). இவர் தஞ்சாவூர் கீழவாசலில் தங்கி, ஏர்டெல் நிறுவனத்தில் டெக்னிஷியனாக பணி செய்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நாஞ்சிக்கோட்டை ரோட்டில் இருந்து தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்... |
தமிழகம் | மாவுப்பூச்சி தாக்குதலால் கத்தரிக்காய் விளைச்சல் குறைவு | கோபிசெட்டிபாளையம்:கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாவுப்பூச்சி தாக்குதலால் கத்தரிக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே, வரும் திருமண சீஸனில் கத்தரிக்காய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் கத்தரிக்காயை பொதுமக்கள் உணவில் பயன்படுத்தி வருகின்றனர். டிசம்பர் - ஜனவரி மற்றும... |
தமிழகம் | அம்பேத்கர் மக்கள் கழக செயல்வீரர்கள் கூட்டம் | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜோதிபாசு, தெற்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் புனல்ரவி பங்கேற்றார். ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வர... |
தமிழகம் | குறைதீர் கூட்டம் | புதுவயல்: புதுவயல் மின்வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும் 25 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. நுகர்வோர், விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம். |
தமிழகம் | ராஜிவ் நினைவு நாள் | சிங்கம்புணரி: எஸ்.புதூரில் ராஜிவ் நினைவு நாள் கூட்டம் நடந்தது. வட்டார காங்., தலைவர் ரமணி தலைமை வகித்தார். நிர்வாகி கோபால் முன்னிலை வகித் தார். மகிளா காங்., தலைவர் சந்திரா, இளைஞர் காங்., செயலாளர் லோகநாதன், நிர்வாகிகள் சுந்தரம், தவசீலன் பங்கேற்றனர். |
தமிழகம் | பெண்ணிடம் சில்மிஷம்: ஒருவர் கைது | திருவண்ணாமலை: ஆரணி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மாலா. இவர் கடந்த 13ம் தேதி இரவு வெயில் உக்கிரத்தினால் புளுக்கமாக இருந்ததால் அவர் வீட்டை திறந்து வைத்துவிட்டு தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கி கொண்டிருந... |
தமிழகம் | தகராறு | சிவகங்கை:சிவகங்கை அருகே கோவானூரை சேர்ந்தவர் ஜெகன் (23). இவரது தம்பிக்கு ஜாதி சான்று கேட்டு, சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். சான்றிதழ் வாங்க நேற்று மதியம் 2 மணிக்கு, அங்கு சென்றார். உதவியாளர் மூர்த்தியிடம் (36) சான்றிதழ் கேட்டுள்ளார்.
இப்பணியில் வேறு உதவியாளர் உள்ளார். அவரை தொடர்பு கொள்ளுமாறு,' மூர்த்தி க... |
தமிழகம் | மஹா யாகம் | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு நேற்று (மே 21) முதல் வரும் 28ம் தேதி வரை அதிருத்ர ஜெப மஹா யாகம் நடக்கிறது.நேற்று அருணாசலேஸ்வரர் கோயில் அலங்கார மண்டபத்தில் ஹாலாஸ்யநாத குருக்கள், தியாகராஜகுருக்கள் மற்றும் இளவரசு பட்டம் ரமேஷ் குருக்கள் தலைமையில் மஹாயாகம் துவக்க... |
தமிழகம் | நெடுஞ்சாலை துறையின் சான்று ஆசிரியர் கவுன்சிலிங்கில் குளறுபடி | சிவகங்கை:நெடுஞ்சாலை துறையினரின் தவறான சான்றுகளால், ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்கில் குளறுபடி ஏற்படுகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங், கடந்த 20ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் நடக்கிறது. கணவன், மனைவி இருவரும் அரசு துறைகளில் பணிபுரியும்பட்சத்தில்; வெவ்வேறு ஊர்களில் இருந்தால், அந்த ஆச... |
தமிழகம் | ஹோட்டல்களில் உடைந்த முட்டை : உடல் உபாதையால் மக்கள் பாதிப்பு | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் இரவு கடைகளில் உடைந்த முட்டையை பயன்படுத்தி உணவு வகைகள் சமைப்பதால் பொதுமக்களுக்கு உடல் உபாதை ஏற்படுகிறது. வேலாயுதம்பாளையம் சுற்றுப்பகுதியில் ஹோட்டல் மற்றும் இரவு கடைகளில் மட்டும் தினசரி குறைந்தபட்சம் ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழி முட்டை பயன்படுத்தப்பட... |
தமிழகம் | கி.கிரியில் கன மழையால் வெயில் உக்கிரம் தணிந்தது | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதியில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. அக்னி நட்சத்திர வெயில் வாட்டி எடுத்த வேளையில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ச... |
தமிழகம் | திருச்சி ஆசிரியர் கவுன்சிலிங்கில் தொடரும் சர்ச்சை: தகுதியற்றோருக்கு பதவி உயர்வு வழங்கியதாக புகார் | திருச்சி: திருச்சியில் நடந்து வரும் ஆசிரியர் கவுன்சிலிங்கில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நேற்று நடந்த துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பணிமூப்பில்லாத தகுதியற்றோருக்கு பதவி உயர்வு வழங்கியதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புகார் தெரிவித்தனர்.திருச்சி சையது முர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆ... |
தமிழகம் | திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி மனைவியை கொடுமைப்படுத்திய கணவனுக்கு எட்டாண்டு சிறை | திருச்சி: திருச்சி அருகே காதல்மணம் புரிந்த மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவனுக்கு எட்டு ஆண்டு சிறைதண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள கருத்தாழம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (22). விவசாயியான இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த பழனியாண்டி மகள் பார்வதிக்கும் (22) கடந்த 2005ம... |
தமிழகம் | ஜூன் 18ல் மாங்கனி கண்காட்சி துவக்கம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 18வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் ஜூன் 18ம் தேதி துவங்கி ஜூலை 11ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்த போதிருந்து கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது.... |
தமிழகம் | பட்டப்பகலில் ரூ.2.11 லட்சம் வழிப்பறி: ஹெல்மெட் நபர்களால் திடீர் பரபரப்பு | திருச்சி: திருச்சியில் ஆயில் நிறுவன வசூல் பணத்தை வங்கியில் கட்டச் சென்றவரை டூவீலரிலிருந்து தள்ளிவிட்டு இரண்டு லட்சத்து 11 ஆயிரம் பறித்துச் சென்ற ஹெல்மெட் நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் மேச்சினஸ் இந்தியா என்ற ஆயில் மொத்த வியாபார நிறுவனம் இயங்கி வருகிறது. ஸ்ரீராம் என்பவர் நிறுவனத்தின்... |
தமிழகம் | அச்சக தொழிலாளர்கள் நலச்சங்க துவக்க விழா | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் அச்சக தொழிலாளர்கள் நலச்சங்க துவக்க விழா நடந்தது. ராகவன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் சீனிவாசன், செயலாளர் தயாளன், பொருளாளர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ராஜசேகர் வரவேற்றார். எம்.எல்.ஏ., செங்குட்டுவன் சங்கத்தை துவக்கி வைத்து அச்சக தொ... |
தமிழகம் | எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம் | திருச்சி: தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) ரயில்வே டிராக் டிபார்ட்மென்ட் கவுன்சில் சார்பில், கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் பழனிவேல், துணைத் தலைவர்கள் முருகானந்தம், சண்முகசுந்தரம், கிருஷ்ணசாமி, பொருளாளர் பாலகண்ணன் உள்பட பலர் பங்... |
தமிழகம் | கோர்ட் சென்று சிறை திரும்பிய கைதியிடம் கஞ்சா பறிமுதல் | திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் உமர் மைதீன் (26). இவர் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த ஃபிப்., முதல் விசாரணை கைதியாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார்.வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் அவர் மணப்பாறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் அன்றிரவு சிறைக்கு திரும்பிய உமர்மை... |
தமிழகம் | பகுஜன் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம் | திருச்சி: பகுஜன் சாமஜ் கட்சி சார்பில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதிகிராஃப்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசின் மகளிர் இடஒதுக்கீடு மோசடி மற்றும் விலையேற்றக் கொள்கையைக் கண்டித்து ரயில்வே ஜங்ஷன் காதிகிராஃப்ட் அருகே நேற்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத்தலைவர் வேங்கைராஜா தலைமை வகித... |
தமிழகம் | ஓய்வுபெற்ற ஆசிரியர் பஸ் மோதி பரிதாப பலி | மணப்பாறை: மணப்பாறை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மோதியதில், டூவீலரை ஓட்டிச் சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னன் (82). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் நேற்று காலை 9 மணியளவில் மணப்பாறை அடுத்துள்ள நல்லாண்டவர... |
தமிழகம் | மணப்பாறை அருகே இருதரப்பினர் மோதல்: நான்கு பேர் காயம் | மணப்பாறை: மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினரிடையே நடந்த மோதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு ஏட்டு உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.மணப்பாறை அருகே புத்தாநத்ததில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மருங்காபுரி பிரிவு ரோடு அருகே நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டம் நட... |
தமிழகம் | ராஜிவ் நினைவு தினம் 265 பேர் ரத்ததானம் | நாமக்கல்: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த முகாமில் 265 பேர் ரத்ததானம் வழங்கினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம், நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி மஹாலில் நடந்தது. நாமக்கல் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்... |
தமிழகம் | லத்துவாடி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா | மோகனூர்: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டம் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மோகனூர் யூனியன் லத்துவாடி பஞ்சாயத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேர்திருவிழா வெகுவிமரிசையாக ... |
தமிழகம் | கலெக்டரிடம் கொடுக்கும் ரேஷன் கார்டு மனுக்கள் மாயம்! நீக்கம் செய்யப்பட்ட கார்டுதாரர்கள் நிலை என்ன? | சேலம்: சேலம் மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், நீக்கம் செய்யப்பட்ட கார்டுதாரர்கள், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஒரிஜினல் முகவரி சான்றுடன் விண்ணப்பித்து, புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்ட மனுக்களில் பல குப்பைக்கு செல்லும் நிலை ... |
தமிழகம் | குடிநீர் டேங்க் உடைந்து கிடக்கும் அவலம் கண்டுகொள்ளாத பஞ்., நிர்வாகம் | பனமரத்துப்பட்டி: மூக்குத்திபாளையம் கிராமத்தில் குடிநீர் டேங்க் உடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளமால் அலட்சியாக உள்ளதால், குடிநீரில் தொற்று நோய் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட மூக்குத்திபாளையம் பஞ்சாயத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பஞ்சாயத்... |
தமிழகம் | நார்பட்டு உற்பத்தியாளர் சங்கநிர்வாகி மண்டை உடைப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை | சேலம்: சேலம் நார்பட்டு ஜோடிபுரி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை மீறி நார்பட்டு உற்பத்தி செய்ததை கண்டித்ததால், தகராறு ஏற்பட்டது. அதில், கல் வீசி தாக்கியதில் சங்க பொருளாளர் மண்டை உடைந்தது.
கொண்டலாம்பட்டி போலீஸார் விசாரணையை தாமதப்படுத்தியதால், உறுப்பின... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.