category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு தப்பிய வாலிபர் உட்பட 5 பேர் கைது
வேலூர் : காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்தின் போது, தப்பி ஓடிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்பன். இவரது மகள் கலைச்செல்வி(19). இவர், தன் எதிர் வீட்டைச் சேர்ந்த குணசேகரன்(24) என்பவரை இரு ஆண்டாகக் காதலித்தார். காதலர்க...
இந்தியா
பஸ் எரிப்பு ஊராட்சி அலுவலகம் தகர்ப்பு
நாக்பூர் : மகாராஷ்டிராவில் அரசு பஸ் எரிப்பு, ஒரிசாவில் ஊராட்சி அலுவலகம் குண்டு வைத்துத் தகர்ப்பு மற்றும் சத்திஸ்கரில் மூன்று பேர் குரல்வளை அறுத்துக் கொலை என்று, நக்சலைட்கள் பல்வேறு கொடூரச் செயல்களில் நேற்று ஈடுபட்டனர். சமீபத்தில் ஆந்திராவில் நக்சலைட்களின் மூத்த தலைவரான செருகுரி ராஜ்குமார் என்ற ஆசாத் என்பவர், போலீசாரால்...
இந்தியா
61 பேருக்கு பன்றி காய்ச்சல் 12,425 பேருக்கு சிகிச்சை
திருவனந்தபுரம் : கேரளாவில் 61 பேர், எச்1 என்1 காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். மேலும், 12 ஆயிரத்து 425 பேர் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக் காய்ச்சலால் திருவனந்தபுரத்தில் மூன்று பேரும், கொல்லத்தில் 3, ஆலப்புழாவில் 6, கோட்டயத்தில் ஒருவரும், எர்ணாகுளத்தில் 28 பேரும், திருச்சூரில...
இந்தியா
யு.பி.எஸ்.சி., தேர்வு முறையில் மாற்றம்? தேர்வெழுத காத்திருப்போர் குழப்பம்
புதுடில்லி : யு.பி.எஸ்.சி., தேர்வுகள் அடுத்தாண்டு முதல் பல்வேறு புதிய மாற்றங்களுடன் நடத்தப்படுமென்ற அறிவிப்பு வெளியானாலும், தேர்வுகள் எவ்வாறு நடக்குமென்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வெழுத உள்ளவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். "மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் சிவிஸ் சர்வீஸ் தேர்வுகளில் சீர்த...
இந்தியா
சமையல் அறைக்கு மட்டுமே 45 கோடி ரூபாயில் பொருட்கள்
புதுடில்லி : காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சமையல் ஏற்பாட்டுக்கான பொருட்களுக்கு மட்டும் 33 கோடி ரூபாயை செலவழிக்க, காமன்வெல்த் போட்டிகள் அமைப்புக் கமிட்டி திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டதை விட இப்போது 12 கோடி ரூபாய் அதிகமாக செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காமன்வெல...
தமிழகம்
கொல்லப்பட்ட போலீஸ்காரர் மனைவிக்கு ஆசிரியை வேலை
சென்னை :விருதுநகர் மாவட்டத்தில் ரவுடியால் வெட்டிக் கொல்லப்பட்ட போலீஸ்காரரின் மனைவிக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவை துணை முதல்வர் வழங்கினார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்த நாகரத்தினம், கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று, பாதுகாப்பு பணியில் இருந்த போது, குமார் என்ற ரவுடியா...
தமிழகம்
ஏற்காட்டில் பேரிக்காய் விளைச்சல் அபாரம் குத்தகை எடுக்க வியாபாரிகள் போட்டி
சேலம் : ஏற்காட்டில் நடப்பு ஆண்டு பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், தோட்டங்களை குத்தகைக்கு எடுக்க அதிக அளவில் வியாபாரிகள் குவிந்துள்ளனர். ஏற்காட்டில் பேரிக்காய் அறுவடை துவங்கியதையடுத்து, சேலத்தில் இருந்து தினந்தோறும் ஐந்து லாரிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பேரிக்காய் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. ஏற்க...
தமிழகம்
தமிழகம் முழுவதும் லட்சுமி குபேரர் உலா
சென்னை : சென்னை வண்டலூர் ரத்னமங்கலம் லட்சுமி குபேரர் சன்னிதியில் இன்று வருஷாபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் குபேரர்-சித்ரலேகா தம்பதியினர் தமிழகம் முழுவதும் உலா செல்கின்றனர். கடந்த 4ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை மற்றும் கிளி வரவழைக்கப்பட்டு குபேர பகவானுக்கும், சித்ரலேகாவிற்கும் திருக்கல்யாண வைப...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் சுகாதாரமான உணவு வினியோகம்: அரசு விளக்கம்
சென்னை : செம்மொழி மாநாட்டில் சுகாதாரமான உணவு தயார் செய்யப்பட்டு, எவ்வித முறைகேடுமின்றி மக்களுக்கு வழங்கப்பட்டதாக, உணவுத் துறை செயலர் ஸ்வரன் சிங் தெரிவித்துள்ளார். உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலர் ஸ்வரன் சிங் வெளியிட்டுள்ள விளக்கம்: உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தருவோருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்க, முத...
தமிழகம்
திருமண பதிவில் குளறுபடி காலக்கெடு எத்தனை மாதம்
காரைக்குடி : திருமணத்தை பதிவு செய்வதற்கான காலக்கெடுவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எத்தனை மாத கெடுவுக்குள் பதிய வேண்டும் என்பது குறித்து அரசு தெளிவாக்க வேண்டும். அனைத்து திருமணங்களையும், பதிவாளர் அலுவலகங்களில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, கடந்த நவம்பரில் அரசு உத்தரவிட்டது. கிராமம், கோயில், சமுதாய கூடத்தில் நடக்கும் த...
தமிழகம்
என்.எல்.சி.,யில் ஒப்பந்த தொழிலாளர்கள் முயற்சியால் மின் உற்பத்தி கணிசமாக உயர்வு
நெய்வேலி : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தீவிர முயற்சியால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதி இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருக...
தமிழகம்
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 480க்கு மார்க்கிற்கு மேல் பெற்றவர்களுக்கு கல்வித்துறை சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஆயிரத்து 100 மாணவிகளுக்கு இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 33 பேருக்கு லேப்டாப் வந்துள்ளது. மாநில அளவில், மாவட்ட அளவில் முதல் மூன...
தமிழகம்
124 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு
தூத்துக்குடி : தமிழகத்தில் 124 போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீசில், 1999ம் ஆண்டில் எஸ்.ஐ., பணியில் சேர்ந்த 124 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏட்டாக இருந்து சீனியாரிட்டி அடிப்படையில் மேற்குறிப்பிட்ட ஆண்டில் எஸ்.ஐ.,ஆன 104 பேருக்கும், நேரடியா...
தமிழகம்
பஸ் மறியலில் ஈடுபட்ட பா.ஜ., மற்றும் கம்யூ. கட்சியினர் கைது
தூத்துக்குடி,: பந்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் பஸ் மறியலில் ஈடுபட்ட பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர் ந்தவர்களை போலீசார் ø கது செய்தனர்.பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல்காஸ் விலை உயர்வை கண்டித்து எதிர்காட்சிகள் சார்பில் நேற்று நாடு முழுவதும் பந்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு நேற்று தூத்...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பந்த் தோல்வி
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கட்சிகள் அறிவித்திருந்த பந்த் தோல்வியடைந்தது. பொதுமக்களின் மாமூல் வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. கோவில்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க...
தமிழகம்
கர்நாடகத்தில் உற்பத்தி கடும் பாதிப்பு : வெண்பட்டுக் கூடுகள் விலை உயர்வு
உடுமலை : கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வெண்பட்டுக் கூடுகளுக்கு தேவை அதிகரித்து, விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் பட்டுத்துணிகள் உற்பத்திக்கு 26 ஆயிரம் டன் பட்டுக்கூடு தேவை உள்ள நிலையில், 18 ஆயிரத்து 500 டன் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால், உள்நாட்டில் உற்பத்தியாகும் வெண்பட்டுக் கூடுகளுக்க...
தமிழகம்
இடைத்தேர்தல் 3 பேர் வேட்புமனு
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் நேற்று மூன்று இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் 47 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கியது. நேற்று வேட்புமனு தாக்கலின் இரண்டாம் நாளில் 3...
தமிழகம்
வல்லநாட்டில் பஸ் மறியல்
வல்லநாடு : வல்லநாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் மறியல் போராட்டம் நடந்தது.மா.கம்யூ., கட்சியின் கருங்குளம் யூனியன் சார்பாக வல்லநாட்டில் நடந்த பஸ் மறியல் போராட்டத்திற்கு கருங்குளம் யூனியன் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு பஸ் ஸ்டாப்பில்...
தமிழகம்
செய்துங்கநல்லூரில் கம்யூ., மறியல்
செய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூரில் மறியல் செய்த கம்யூ., கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தினர். இந்த பந்த்-க்கு ஆதரவாக கருங்குளம் ஒன்றிய கம்யூ.,கட்சியினர் செய்துங்கநல்லூரில் மறியல் நடத்தினர். ஒன்றிய குழு உறுப்பினர் அப்பாக்க...
தமிழகம்
வேன் மோதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம்
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் ரோட்டில் நடந்து சென்றவர் மீது கூரியர் சர்வீஸ் வேன் மோதி ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி அருகேயுள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் என்பவரது மகன் மருதையா(25). இவரது அண்ணன் முத்துக்குமார்(30). இரும்பு வியாபாரம் செ...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பந்த் வெற்றியடைந்தது.முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையொட்டி ஸ்ரீவைகுண்...
தமிழகம்
கொம்மடிக்கோட்டையில் ஜெயேந்திரர் அவதார திருவிழா
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை சங்கரா பகவதி கலை அறிவியல் கல்லூரியில் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமியின் 75வது அவதார மஹோத்ஸவ விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி செயலாளரும், தாளாளருமான ஆனந்தா அமிர்தம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சிவநாகராஜன் வரவேற்றார். விழாவிற்கு வருகை தந்த ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிக்...
தமிழகம்
செந்தூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்செந்தூர் : திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடப்பதால் நாளை புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்ப...
தமிழகம்
இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் வீடுகள் ஒதுக்கீடு பணிகள் முடக்கம்
தேனி : இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில், நடப்பு ஆண்டில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி முடக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பங்களிப்பான 75 சதவீதம் நிதியில் 26 ஆயிரத்து 250 ரூபாயும், மாநில அரசின் பங்க...
தமிழகம்
மடத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா
தூத்துக்குடி : மடத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது.தூத்துக்குடி அருகே மடத்தூரில் இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கொடை விழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கொடை விழா கடந்த வெள்ளியன்று 208 திருவிளக்கு பூஜையுடன் துவங்கி...
தமிழகம்
கரிசல் முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
உடன்குடி, : தட்டார்மடம் அருகே கரிசல் முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.கரிசல் முத்தாரம்மன் கோயில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் இரண்டு நாட்கள் யாகசாலை பூஜை மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தது. மூன்றாவது நாள் அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி பூஜை ...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
உடன்குடி : உடன்குடி பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி மாலை பள்ளியில் இருந்து துவங்கி தேரியூர், ஆண்டிவிளை, வைத்திலிங்கபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றது. கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பே...
தமிழகம்
சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிய ஆறு இடங்களில் கருவிகள்
ராமநாதபுரம் : சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் விதமாக, மன்னார் வளைகுடாவில், மேலும் ஆறு இடங்களில் கருவிகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றத்தில் கடலின் இயல்பு நிலை மாறுவது வழக்கம். அதே சீற்றமானது பேரழிவையும் ஏற்படுத்தும் என்பதற்கு சுனாமி சரியான உதாரணம். சுனாமி பேரலையின் தாக்கத்திலிருந்து இ...
தமிழகம்
அரிவாளை காட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது
வல்லநாடு : வல்லநாட்டில் அரிவாளை கொண்டு மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக முறப்பநாடு போலீசார் 3 பேரை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, வல்லநாடு அருகேயுள்ள வசவப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் ஆற்றுபாலத்தின் அருகில் சென்று கொண்டிருந்த போது வல்லநாடு வடக்குத் தெருவைச் சேர்ந்த ஊய்க்காட்டான் ...
தமிழகம்
என்எல்சி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை : புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு சில நாட்களாக என்எல்சி யில் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனைதொடர்ந்து சென்னையில் இரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனையடுத்து  வேலைநிறுத்த போராட்டம்  வாபஸ் பெறப்ப...
தமிழகம்
சட்டத் துறை கூடுதல் செயலர் நியமனம்
சென்னை : தமிழக அரசின் சட்டத்துறை இணைச் செயலர் கதிர்வேலுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த வீரமணி ஓய்வு பெற்றுள்ளார்.
தமிழகம்
சாத்தை.,பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தேர்வில் சாதனை
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். பயிற்றுவித்த ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ...
தமிழகம்
உடன்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை
உடன்குடி : உடன்குடி வாரச்சந்தையில் வழக்கமாக கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, பா.ஜ., சிபிஎம்., கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது. இதைக் கண்டித்து எதிர் கட்சிகள் பாரத் பந்த் அறிவித்திருந்தனர்...
இந்தியா
முறைகேடாக சுரங்கம் : மத்திய அரசு கேள்வி
புதுடில்லி : கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் வனத்துறை விதிகளை மீறிய மூன்று சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் சந்தூர் வனப்பகுதியில் எஸ்.பி.,மினரல்ஸ், டிரைடன்ட் மினரல்ஸ், வேயம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சுரங்கங்கள் நடத்தி ...
தமிழகம்
உதிரமாடன்குடியிருப்பில் தண்ணீர் பிரச்னை
உடன்குடி : உடன்குடி அருகே உதிரமாடன்குடியிருப்பு கிராமத்தில் குடிநீர் பிரச்னை சம்பந்தமாக எம்எல்ஏ.,அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.உடன்குடி பஞ்.,யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் பஞ்.,க்குட்பட்ட உதிரமாடன்குடியிருப்பு, கந்தசாமிபுரம், செம்புலிங்கபுரம் ஆகிய ஊர்களுக்கு உடன்குடி-சாத்தான்குளம் கூட்டுக்...
தமிழகம்
செந்தூரில் வருமுன்காப்போம் முகாம்
திருச்செந்தூர், ஜூலை 6- திருச்செந்தூரில் நடந்த வருமுன் காப்போம் மருத்துவ முகாமை எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.பிச்சிவிளை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருச்செந்தூர் இந்து துவக்கப்பள்ளியில் நடந்த வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமில் திருச்செந்தூர் யூனியன் சேர்மன் உமாதேவி தலைமையும், மருத்துவ அலுவ...
தமிழகம்
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
வல்லநாடு : வல்லநாட்டில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,வல்லநாட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கோமதி(22). சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்த போது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோ மதி தனது உடலில்...
தமிழகம்
இளைஞர் காங்.,நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடி : தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்.,தலைவர் பெருமாள் சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்.,தலைவர் எம்எல்ஏ., சுதர்சனம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வரும் 9ம் தேதி நடக்க உள்ள நிகழ்ச்சியில், அகில இந்திய இளைஞர் ...
தமிழகம்
மதசார்பற்ற ஜனதாதள இளைஞர் அணி கூட்டம்
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்ட மத சார்பற்ற ஜனதாதள இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேந்திரபூபதி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராஜ், மாநகர இளைஞரணி தலைவர் கோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சொக்கலிங்கம் கலந்து கொண்டு பேசினார். மதச்சார்பற்ற ஜனதா மாநில பொத...
தமிழகம்
வேதக்கோட்டையில் மனுநீதி நாள் முகாம்
உடன்குடி : உடன்குடி அருகே வேதகோட்டைவிளையில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 22 பேருக்கு திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., உதவிகள் வழங்கினார்.உடன்குடி பஞ்., யூனியன் ஆதியாக்குறிச்சி பஞ்.,வேதகோட்டைவிளையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., பாக்கியம் தேவகிருபை தலைமை வகித்தார். ஆதியாக்குறிச்சி பஞ்., தலைவர் கலையரசி,...
தமிழகம்
வீடுகளில் கைவரிசை காட்டிய திருடன் கைது
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே பல மாதமாக வீடுகளில் நகை மற்றும் பொருட்களை திருடி வந்த திருடனை போ லீசார் கைது செய்தனர். மே லும் அவனிடத்திலிருந்து 6 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது ஓட்டப்பிடாரம் அருகே கவர்னர்கிரியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பழனிச்சாமி(35). இவர் அப்பகுதியில...
தமிழகம்
கூட்டுறவு பாங்க் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்க கோரிக்கை
சாத்தான்குளம் : கூட்டுறவு பாங்க் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பாங்க் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பாங்க் அனைத்து பணியாளர்கள் சங்கம் சாத்தான்குளம் ஒன்றி...
தமிழகம்
கோடநாட்டில் அனுமதிக்குப் பின் கள ஆய்வு
ஊட்டி : நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் விதிமுறை மீறிய கட்டடம் தொடர்பாக, கள ஆய்வுக்கு அனுமதி கிடைத்த பின், ஒரு நபர் குழு விசாரணையைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் கட்டடம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஒரு நபர் குழுவை அரசு நியமித்தது. நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி உதயச்சந்திரன் கடந்த 2 மற்றும் 3ம் தே...
தமிழகம்
போலீஸ் வேலைக்கு போலிச் சான்றிதழ் நெல்லை வருவாய் ஆய்வாளர் கைது
திருநெல்வேலி : போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவருக்கு போலி கையெழுத்திட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி, வீரவநல்லூர் லட்சுமணன் மகள் கோகிலவாணி(23). 2008ல் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். அவரின் ஜாதிச் சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, போலியானது என தெரிய வந்தது. இது குறித்...
இந்தியா
காரைக்கால் - நாகூர் ரயில் பாதை பணிகள் தீவிரம் : இந்தாண்டு இறுதியில் ரயில்கள் ஓடும்
காரைக்கால் - நாகூர் ரயில் பாதை அமைக்கும் பணியும், காரைக்காலில் ரயில் நிலையம் கட்டும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. காரைக்கால் - பேரளம் இடையே ரயில் போக்குவரத்து கடந்த காலத்தில் நடந்தது. போதிய வருவாய் இல்லாததால், 20 ஆண்டுகளுக்கு முன் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. தண்டவாளங்களையும் அடியோடு ...
இந்தியா
இவர், இப்படி...
நாட்டியத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த தம்பதியர் : இந்திய கலாசாரத்துக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக, பிரபல பரத நாட்டிய கலைஞர் தம்பதியான தனஞ்செயன் - சாந்தாவுக்கு பெருமை மிகுந்த ஜி.டி.பிர்லா விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், பழம் பெருமை வாய்ந்த நாட்டிய கலைஞர்கள் மட்டும் இல்லாது, பலருக்கு பரத நாட்டிய குருவாகவும் விளங்கி வ...
தமிழகம்
கருணை அடிப்படை பணி நியமனம்: அரசு புது உத்தரவு
சென்னை : கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு, அரசு ஊழியர் இறந்து மூன்றாண்டுக்குள் விண்ணப்பிக்கும் தேதியை கணக்கில் கொண்டு, தகுதிகள் நிர்ணயிக்கப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை பொறுத்தவரை, மரணமடைந்த அரசு ஊழியரின் 18 வயதுக்குட்பட்ட வாரிசுதாரருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழ...
தமிழகம்
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு அழகர்கோவில் ரோட்டில் அலுவலகம்
மதுரை : அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் மதுரை மையம், அழகர்கோவில் ரோட்டில் உள்ள மதுரை காமராஜ் பல்கலையின், தொலைதூர கல்வி இயக்கக கட்டடத்தில் செயல்பட உள்ளது. தமிழகத்தில், அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் மையங்கள் கோவை, திருச்சி, நெல்லையில் உள்ளன. புதிதாக அமையும் மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் துணைவேந்தராக முருகேசன் நியமிக்கப்...
தமிழகம்
காற்றாடி நூல் கழுத்தறுத்து இளைஞர் பலி: 10 பேர் கைது
எம்.கே.பி., நகர் : டூவீலரில் சென்ற டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர், காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தறுத்து இறந்தது தொடர்பாக, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை வளசரவாக்கம் சுப்பிரமணியபுரம், 17வது முதல், குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி(28); டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர். இவரது மனைவி நித்யா(25). இவர்களுக்கு இரண்டு பெண் கு...
தமிழகம்
வாடகை தர முடியாததால் தம்பதி தற்கொலை
பல்லாவரம் : வறுமை காரணமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வாடகை கேட்டு நச்சரித்த வீட்டு உரிமையாளரின் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் நாகேஸ்வரராவ். இவருக்கு சொந்தமான வீடு சங்கர்நகரை அடுத்த ...
தமிழகம்
குடிநீர் வாரிய இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவான்மியூர் : திருவான்மியூர், காமராஜ் நகரில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. திருவான்மியூர், காமராஜ் நகர், தெற்கு அவென்யூ, 26வது கிழக்கு தெருவில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிரவுண்டு நிலம் உள்ளது.இந்த நிலத்தை அப்பகுதியை சேர்ந்த அரசி...
தமிழகம்
அப்பல்லோ மருத்துவமனையில் நவீன மூட்டு அறுவை சிகிச்சை
சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில், கால் மூட்டுகளில் ஏற்படும் நீர்க் கட்டிகளை, நுண் துளைகள் மூலம் அகற்றும் புதிய அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லெனின் கூறியதாவது:இதுவரை இந்தியாவில் கால் மூட்டுகளில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்னைக்கு, ...
தமிழகம்
பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை
சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழ்காணும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும்.தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன், ராஜிவ் காந்தி, ராஜசேகரன், துர்காதேவி, சாஸ்திரி, பரமசிவம் மற்றும் இந்திராகாந்தி நகர்கள், சி.ஐ.எஸ்.எப்., குடியிருப்பு, பேசின், ஈ.எச்., சாலைகள். சோத்து பெரும்பேடு, நெ...
தமிழகம்
போலீஸ் வேலைக்கு போலிச் சான்றிதழ் : நெல்லை வருவாய் ஆய்வாளர் கைது
திருநெல்வேலி : போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவருக்கு போலி கையெழுத்திட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, வீரவநல்லூர் லட்சுமணன் மகள் கோகிலவாணி(23). 2008ல் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். அவரின் ஜாதிச் சான்றிதழை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, போலியானது என தெரிய வந்தது. இது குறித...
தமிழகம்
இன்ஸ்பெக்டர்கள்120 பேருக்கு பதவி உயர்வு
சென்னை : போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 120 பேருக்கு டி.எஸ்.பி., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், நந்தகுமார், உளவுப் பிரிவு(நிர்வாகம்) இன்ஸ்பெக்டர் விஜயகுமார், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிபவர்களி...
தமிழகம்
தாயின் நடத்தையில் சந்தேகப்பட்ட தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்
மேலூர் : தாயின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவரை கொலை செய்ய முயன்ற தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை மேலூர் போலீசார் கைது செய்தனர். மேலூர் முனியாண்டிகோவில் பள்ளத்தை சேர்ந்தவர் ராசு(50). திருச்சியில் இவரது நண்பனை வெட்டிக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை ஆனவர். இவருக்கு ராஜேஸ்வரி(48) என்ற மனைவியும் அழகர்...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பந்த்:109 பெண்கள் உட்பட 916 பேர் கைது
சென்னை : சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புறநகர் பகுதியில் 109 பெண்கள் உட்பட 916 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்க...
தமிழகம்
நெல்லையில் 500 பேர் கைது
திருநெல்வேலி : நெல்லையில் நேற்று காலையில் இருந்தே பஸ் போக்குவரத்து பாதிப்பின்றி நடந்தது. 20 சதவீத கடைகள் மட்டுமே அடைத்திருந்தன. நெல்லை ஜங்ஷனில் மறியலில் ஈடுபட வந்த பா.ஜ., கட்சியினர் 29 பேர் கைதாகினர்.மறியலில் ஈடுபட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் 89 பேர் கைதாகினர். புதிய தமிழகம் கட்சியினர் 21 பேர் கைதாகினர். தென்காசி, சங்கர...
தமிழகம்
உழவர் தின மாநில மாநாடு குற்றாலத்தில் நடந்தது
திருநெல்வேலி : உழவர் தின மாநில மாநாடு குற்றாலத்தில் நடந்தது. ஆண்டுதோறும் ஜூலை 5ம் தேதி உழவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குற்றாலம் கலைவாணர் அரங்கில் நேற்று மாநில மாநாடு நடந்தது. உழவர் உழைப்பாளர் கட்சி தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான செல்லமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் திருநாவுக்கரசு, ப...
தமிழகம்
கிராம மக்கள் அதிரடி நடவடிக்கைரசாயனக்கழிவு லாரி சிறை பிடிப்பு
செய்யூர் : ரசாயனக் கழிவுகள் கொட்டவந்த லாரியை, பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.சூணாம்பேடு அடுத்துள்ளது வில்லிப்பாக்கம் கிராமம். இங்கு 400 ஏக்கர் பரப்பில் உப்பளம் உள்ளது. இங்குள்ள பத்மா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் ரசாயன உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு கெம்பாப் என்ற தலைமை நிறுவனம், புதுச்சேரியில் உள...
தமிழகம்
பள்ளிப்பட்டு அருகே வாந்தி, பேதி மருத்துவமனையில் 120 பேர் அனுமதி
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே, வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 120 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நான்கு மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த, மேல்நிலை தண்ணீர் தொட்டியிலிருந்து சப்ளையான குடிநீரை பொதுமக்கள் குடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அய்யனேரி கிராமத்தில், நேற்ற...
தமிழகம்
தி.மு.க., எம்.பி.,யின் குடும்ப தொழிற்சாலை கருத்து கேட்பு மனு மீதான உத்தரவு எப்போது?
சென்னை : தி.மு.க., எம்.பி.,யான டி.ஆர்.பாலுவின் குடும்பத்துக்கு சொந்தமாக அமைக்கப்பட உள்ள தொழிற்சாலை குறித்த கருத்து கேட்புக் கூட்டத்தை மீண்டும் நடத்தக் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த கிராம விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்...
தமிழகம்
நாளைய மின்தடை
திருவள்ளூர் : திருநின்றவூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், கொசவன்பாளையம், அன்னம்பேடு, கொரட்டூர், நெமிலிச்சேரி, நடுக்குத்தகை, பாலவேடு, பாக்கம், மேலப்பேடு, புலியூர், முத்தாபுதுப்பேட்டை, வேப்ப...
தமிழகம்
என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை : என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, நேற்று நள்ளிரவே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது, நிலுவைத் தொகைகளை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி., தொழிலாளர்கள், கடந்த 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட...
தமிழகம்
அம்மி கல்லால் அடித்து அண்ணன் கொலை : தம்பி கைது
திருவள்ளூர் : தனது மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததால் ஆத்திரமடைந்து அம்மி கல்லால் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவருக்கு ரமேஷ் (35), கோபி (32) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணன், தம்பிகளான இவர...
தமிழகம்
குளக்கரையை மீட்க கோரிக்கை
காஞ்சிபுரம் : ஆட்டுபுத்தூர் கிராமத்திலுள்ள குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது ஆட்டுப்புத்தூர் கிராமம். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராம நுழைவு வாயில...
தமிழகம்
தியாகியின் பேத்திக்கு மருத்துவ சீட் பரிசீலிக்க தேர்வு குழுவுக்கு உத்தரவு
சென்னை : சுதந்திரப் போராட்ட வீரரின் பேத்திக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் ஒதுக்கக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, தேர்வுக் குழுவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெர்லின் லார்ட்ஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "எனது தாத்தா சிங்கராயர், சுதந்திரத்துக்காக போராடியவர். தியாகிகளின் குழந...
தமிழகம்
வாலிபரை வெட்டிய மர்ம கும்பலுக்கு வலை
மாதவரம் : பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த போது, கிண்டல் செய்து வம்பில் ஈடுபட்ட வாலிபரை வெட்டியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் வேலு(35). இவர் நேற்று முன் தினம் மாலை மாதவரம் திருவள்ளுவர் தெருவில், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்(2...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேச்சு: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்கனவே மக்கள் துன்பப்படும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. இந்த விலை உயர்விற்கு தி.மு.க., அரசு ஆதரவு அளித்ததன் மூலம், மக்கள் நலனுக்கு எதிரான கட்சி என்பதை தி.மு.க., வெளிப்படுத்தி உள்ளது. ப...
தமிழகம்
மாணவியிடம் தகாத முறையில் நடந்த பள்ளி தாளாளர் முன்ஜாமீன் தள்ளுபடி : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : கொடைக்கானலில் பூடான் நாட்டு மாணவியிடம் தகாத முறையில் நடந்ததாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் கோரிய கொடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கொடைக்கானல் கொடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட். இப் பள்ளியில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவியர் உதவி தொகை பெற்று படிக்கின் றனர். ...
தமிழகம்
பந்த் பாதிப்பால் காய்கறி, பழம் விலை கோயம்பேட்டில் வாங்க ஆளில்லை
கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில், வியாபாரம் படுமோசமாக இருந்தது. குறிப்பிட்ட காய்கறி மற்றும் பூக்களை குறைந்த விலைக்கு விற்றப்போதும் வாங்கி செல்ல ஆளில்லாததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்வை எதிர்த்து, முக்கிய ...
தமிழகம்
விளம்பரத்தில் பெயர் அழிக்கும் காங்கிரஸ் கோஷ்டி பிரச்னை
செங்குன்றம் : கோஷ்டி பூசல் காரணமாக கட்சியின் சுவர் விளம்பரங்களில், சிறுபான்மை துறை தலைவரின் பெயர் சுண்ணாம்பு மற்றும் சாணி பூசி அழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.பம்மது குளம், ஈஸ்வரன் நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் அப்துல் சமீது (38). இவர் திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத்தலைவராக இருந்து வர...
தமிழகம்
வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கோரிய மனு : அரசிடம் தகவல் பெற ஐகோர்ட் உத்தரவு
சென்னை : வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு, அரசிடம் தகவல் பெறுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னிய சமூகம் இடம் பெற்றுள்ளது. அருந்ததியினர்,...
தமிழகம்
முன்கூட்டியே விடுவிக்கக்கோரி ஆயுள் தண்டனை கைதி ஐகோர்ட்டில் மனு
மதுரை : அருப்புக்கோட்டை அருகே மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி, முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி மனு செய்து மதுரை ஐகோர்ட் கிளையில் நேரில் ஆஜராகி வாதாடினார். அருப்புக்கோட்டை புளியம் பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகள் சுபலட்சுமி(11). தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வார். 1998 மார்ச் 4ம்...
தமிழகம்
குடந்தை மாலிக்கு பாராட்டு விழா
சென்னை : குடந்தை மாலியின் நாடக பொன்விழாவையொட்டி, ஐந்து நாடகங்கள் மற்றும் பாராட்டு விழா, சென்னையில் நடந்தன.தமிழ் நாடக உலகில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்ப, சமுதாய சிந்தனை சீர் நாடகங்களை தயாரித்து, இயக்கி, நடித்து வருபவர் குடந்தை மாலி. இவருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை, திரிசக்தி குழுமத்தின் தலைவர் சுந்தரராமன் வழங...
இந்தியா
மனைவியுடன் இருக்க வேண்டும் பெர்னாண்டஸ்: ஐகோர்ட் முடிவு
புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தன் மனைவி லீலா கபீருடனேயே இருக்க வேண்டும் என்று டில்லி ஐகோர்ட் கூறியுள்ளது. பா.ஜ., ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தற்போது, "அல்சீமர்' என்ற மறதி நோயால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் தன் மனைவி லீலா கபீருடன் இருக்கிறார். ஆனால் அவர், தங்...
தமிழகம்
குடிநீர் குழாய்களை திருடிய 3 பேர் கைது:
ஆவடி: ஆவடியில் குடிநீர் திட்ட குழாய்களை திருடிச் சென்ற இரண்டு டிரைவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குழாய்கள் மீட்கப்பட்டன.ஆவடி நகராட்சியில், 103.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப் பண...
தமிழகம்
பஸ்கள் இயங்கின; பயணிகள் இல்லை : வெடிகுண்டு மிரட்டல்:பாலங்களுக்கு பாதுகாப்பு
சென்னை : சென்னை நகரில் மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மர்ம போனை தொடர்ந்து பாலங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 3:30 மணியளவில் பேசிய மர்ம நபர், சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாலங்களை ...
தமிழகம்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு காத்திருந்த பஸ்கள்
கோயம்பேடு : கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் நேற்று வழக்கம் போல் பஸ்கள் இயங்கின. இருப்பினும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்ததால், வளாகம் முழுவதும் பஸ்கள் பல மணி நேரம் "பார்க்கிங்' செய்யப்பட்டு கிடந்தன.எதிர்க்கட்சிகள் நேற்று பந்த் நடத்திய நிலையில், கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து செல்லும்...
தமிழகம்
கிணற்றில் குதித்து தற்கொலை 2 குழந்தைகள் பலி; தாய் மீட்பு
குளித்தலை: குளித்தலை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில், குழந்தைகள் மட்டும் இறந்தனர். தாய் உயிருடன் மீட்கப்பட்டார்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகமலை சின்னதேவன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி பரமேஸ்வரி (26). இருவருக்கும்  பத்து ஆண்டுக...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
காரைக்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காரைக்குடியில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சாத்தையா, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி, நகர துணை செயலாளர் குழந்தைராச...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை
சிவகங்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலையில்லாத மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. தகுதி: 2010 ஜூன் 30 ம் தேதி அன்று, ஒரு ஆண்டு பதிவு மூப்பு இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயதுவரம்பு, ஆதிதிராவிடர் 45; பிற வகுப்பினருக்கு 40 க்குள். பத்து ஆண்டு...
தமிழகம்
வாக்காளர் சேர்க்கை காங்., முனைப்பு
சிவகங்கை: மாவட்ட காங்., தலைவர் ராஜரத்தினம் அறிக்கை: சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ளது. காங்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் விடுபட்ட வாக்காளர்களை கண்டறிந்து, சேர்க்கும் பணியில் ஈடுபடவேண்டும். இம்மாதம் 15ம் தேதி வரை, வாக்காளர் சேர்க்கை நடக்கிறது. இது தவிர, வரும் 10, 11ம் தேதிகளில் அந்தந்...
தமிழகம்
பா.ஜ., நகர் நிர்வாகி தேர்வு
காரைக்குடி: காரைக்குடியில் பா.ஜ.,நகர் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக, மாவட்ட பொது செயலாளர் குரு.நாகராஜன், முத்துராமலிங்கம் இருந்தனர். அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முன்னிலை வகித்தார். அமைப்பாளர் ராஜேந்திரன், கோட்ட பொறுப் பாளர் சொக்கலிங்கம், இளைஞரணி பொது செயலாளர் சபரிநாதன் உட்பட நிர்வாகிகள் ...
தமிழகம்
பதவியேற்பு
காரைக்குடி: ஹெரிடேஜ் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, காரைக்குடியில் நடந்தது. தலைவர் தேனப்பன் தலைமை வகித்தார். செயலாளர் புதிய தலைவராக கந்தசாமி, செயலாளராக நாச்சியப்பன் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகிகளை முன்னாள் கவர்னர் குரியச்சன் அறிமுகம் செய்து வைத்தார். துணை கவர்னர் முத்தையா, சங்காரபுரம் ஊராட்சி தலைவர...
தமிழகம்
இலவச வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு
சிவகங்கை: கலெக்டர் மகேசன் காசிராஜன் அறிக்கை: இலவச வீடு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை சேர்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் குடிசை வீடுகளை, நிலையான வீடுகளாக மாற்ற மார்ச் 29 முதல் ஏப்., 30 ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பூட்டப்பட்டிருந்த பூட்டப்பட்டிருந்த வீடுகள் குறித்து விபரம் அறிய...
தமிழகம்
ரேஷன் கடையில் அயோடின் உப்பு விற்பனை கட்டாயம்
சிவகங்கை: ரேஷன் கடைகளில், அயோடின் உப்பு பாக்கெட்களை கார்டுதாரர்களுக்கு கட்டாயம் விற்குமாறு, விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தைராய்டு, சர்க்கரை நோயால், மாநிலத்தில் 8 சதவீதம் பேர் பாதித்துள்ளனர். இந்நோய் தாக்குதலுக்கு காரணம் அயோடின் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது தான். எனவே, அயோடின் சத்துக்களை அதிகரிக்க, ரேஷ...
தமிழகம்
தமிழகம் முழுவதும் லட்சுமி குபேரர் உலா
சென்னை : சென்னை வண்டலூர் ரத்னமங்கலம் லட்சுமி குபேரர் சன்னிதியில் இன்று வருஷாபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் குபேரர்-சித்ரலேகா தம்பதியினர் தமிழகம் முழுவதும் உலா செல்கின்றனர்.கடந்த 4ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை மற்றும் கிளி வரவழைக்கப்பட்டு குபேர பகவானுக்கும், சித்ரலேகாவிற்கும் திருக்கல்யாண வைபவ...
தமிழகம்
சைக்கிள் நிறுத்த இடம் இன்றி மாணவிகள் அவதி
மானாமதுரை: மானாமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில், சைக்கிள்களை நிறுத்த இடமின்றி, மாணவிகள் தவிக்கின்றனர். இங்கு, மானாமதுரை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் மாணவிகள் வருகின்றனர். இதில், நூற்றுக்கணக்கான மாணவிகள் சைக்கிளில் வருகின்றனர். மாணவிகள், தங்களது சைக்கிளை நிறுத்த, பள்ளி வளாகத்திற்குள் ஸ்டாண்ட் வசதி இல்லை....
தமிழகம்
சங்க கூட்டம்
திருப்புத்தூர்: மாற்றுத் திறனாளிகள் நல சங்க மாவட்ட குழு கூட்டம், திருப்புத்தூரில் நடந்தது. தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். தென் மாவட்ட தலைவர் பகீரத நாச்சியப்பன் பேசினார். செயலாளர் இளங்கோவன், பொருளாளர் நந்தகுமார், மாவட்ட குழு பெரியசாமி, கண்ணன் பங்கேற்றனர். தீர்மானம்: மாநில அளவிலான மாநாடு நடத்துவது, அதில், மத்திய, மாநி...
தமிழகம்
அகதிக்கு 7 ஆண்டு சிறை
சிவகங்கை: பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக, தாயமங்கலம் அகதிகள் முகாமை சேர்ந்தவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. அகதிகள் முகாமை சேர்ந்த மதுரைவேல் மகள் புஷ்பமாலா (18). வீட்டில் தனியாக இருந்த இவரை, முகாமில் வசிக்கும் மயில்வாகனன் மகன் ஜீவா (28), கடந்த 2000 ம் ஆண்டில் கற்பழித்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார...
தமிழகம்
மருத்துவ முகாம்
இளையான்குடி: எஸ். காரைக்குடியில் வருமுன் காப்போம் மருத் துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மதியரசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் ராம்குமார் தலைமையில் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
தமிழகம்
வாலிபர் பலி
சிவகங்கை: சிவகங்கை காளவாசலை சேர்ந்தவர் கண்ணன் (38). நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, மதுரை ரோட்டில் நடந்துசென் றார். பனையூரை சேர்ந்த ரமேஷ், சிவகங்கை - மதுரை ரோட் டில், ஹீரோ ஹோண்டா வாகனத்தில் சென்ற போது, கண்ணன் மீது மோதியது. கண்ணன் அதே இடத்தில் பலியானார். எஸ்.ஐ., வடிவேல்முருகன் விசாரிக்கிறார்.
தமிழகம்
முதியவரிடம் பணம் திருட்டு
திருப்புத்தூர்: கருப்பூரை சேர்ந்தவர் சின்னையா (62). நேற்று காலை, திருப்புத்தூர் இந்தியன் வங்கிக்கு சென்று நகையை வைத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வெளியில் வந்து, தனது மொபட்டை எடுத்த போது டயர் பஞ்சராகி இருந்தது. பள்ளிவாசல் தெரு அருகே பஞ்சர் பார்க்க சென்றார். அப் போது அவரது உடலில் அரிப்பு ஏற்பட்டது. பணப்பையை அருகில்...
தமிழகம்
கோ-ஆப்டெக்சில் பட்டு சேலை அறிமுகம்
காரைக்குடி: காரைக்குடி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், புதிய ரக பட்டு சேலை (சாப்ட் சில்க்) அறிமுக விழா நடந் தது. மண்டல மேலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பட்டு சேலை விற்பனையை துவக்கி வைத்தார். மேலாளர் செல்லையா, பொறியாளர் மணி பங்கேற்றனர். இங்கு பட்டு சேலைகள் 20 சதவீத தள்ளுபடியில், 3200 ...
தமிழகம்
திருமணத்திற்கு பிறகும் காதல் வாலிபர் கொலை; புதுப்பெண் காயம்
மானாமதுரை: மானாமதுரை அருகே கட்டிக்குளத்தை சேர்ந்த விஜயன் மகள் மேகலா (19). இவருக்கும் கே.புதுக்குளத்தை சேர்ந்த சிவக்குமாருக்கும் (24), சில ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. இதற்கு மேகலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, காளிதாஸ் என்பவருக்கு, ஜூன் 2ம் தேதி திருமணம் செய்து வைத்தனர். திருமணமான 11 வது நாளில் மேகலா, ...
தமிழகம்
திருமண பதிவில் குளறுபடி காலக்கெடு எத்தனை மாதம்?
காரைக்குடி: திருமணத்தை பதிவு செய்வதற்கான காலக்கெடுவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எத்தனை மாத கெடுவுக்குள் பதிய வேண்டும் என்பது குறித்து அரசு தெளிவாக்க வேண்டும். அனைத்து திருமணங்களையும், பதிவாளர் அலுவலகங்களில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, கடந்த நவம்பரில் அரசு உத்தரவிட்டது. இதன்படி கிராமம், கோயில், சமுதாய கூடத்தில் நடக...
தமிழகம்
2 ஆண்டுகளே ஆன விடுதி கட்டடத்தில் விரிசல் உயிர் பீதியில் மாணவர்கள்
கமுதி: கோவிலாங்குளம் சீர்மரபினர் அரசு விடுதி கட்டடம் கட்டி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.கமுதி ஒன்றியத்துக்குட் பட்ட கோவிலாங்குளத் தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக கட்டப்பட்ட சீர் மரபினர் விடுதி கட்டடம் பல இடங்களில் விரிசல் அடைந்து, எந்த நேரத்திலும் இடிந்த...
தமிழகம்
திருப்புல்லாணி பகுதியில் கபடி போட்டி நடத்த தடை
திருப்புல்லாணி: இளைஞர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோடை காலத்தில் கிராமங்களில் இரவு,பகலாக கபடி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியை நடத்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்கி இளைஞர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, வெள்ளிக்கோப்பை பரிசாக ...
தமிழகம்
கணவாய் கருவாடு
கிலோ ரூ.1500கீழக்கரை: கீழக்கரை,ஏர்வாடி,முத்துபேட்டை பகுதியில் ஏராளமான விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்த பகுதியில் அதிகமான சீலா மீன்கள் பிடிபடுவதால் விற்பனையாகாத மீன்களை மணலில் புதைத்து கருவாடாக்கி கிலோ 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கணவாய் க...