category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு, வாழை சாகுபடி
ஈரோடு: வெள்ளோடு அருகே சொட்டு நீர் பாசனத்தில் கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் வசதி பெறும் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மூலம் ஆண்டுதோறும் 2.7 லட்சம் ஏக்கர் வரை விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட வ...
தமிழகம்
கோஷ்டி மோதலில் பயங்கரம் : வளத்திகுமார் கூட்டாளியை வெட்டி கொல்ல முயற்சி
சேலம்: சேலத்தில் இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பிரபல ஆள் கடத்தல் ரவுடி வளத்தி குமாரின் நெருங்கிய கூட்டாளியை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி வளத்தி குமார். அவரது கூட்டாளி மணிகண்டன். ரவுடி வளத்திகுமாருடன் ஆள் கடத்தல் வழக்கில் மணிகண்டன் ...
தமிழகம்
காப்பீடு திட்ட அட்டை பெற மணிக்கணக்கில் காத்திருப்பு
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்க ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ், ஈரோட்டில் அந்தந்த வார்டுகளில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. எனினும், பல அட்டைகளில் தவறு காரணமாக அவை வழங்கப்படவில்லை. மாநகராட்சி...
தமிழகம்
நிலத்தகராறில் குடிசைக்கு தீ
ஆத்தூர்: ஆத்தூர் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக குடிசைக்கு தீ வைத்ததாக எட்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (73). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (25) என்பவருக்கும் இடையே விவசாய நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளத...
தமிழகம்
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்துக்கு மட்டம்! படி மட்டுமே பெறும் கவுன்சிலர்களால் அதிருப்தி
சேலம்: சேலம் மாநகராட்சியில் வார்டு பிரச்னை குறித்து விவாதம் செய்வதற்காக மாதம் ஒரு முறை நடத்தப்படும் மாநகராட்சி மாமன்ற கூட்டங்களுக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் அடிக்கடி மட்டம் போடுகின்றனர். கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் பஞ்சப்படியை மட்டும் பெற்று செல்வதால், பல வார்டுகளில் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்...
தமிழகம்
போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும், அனைத்து பஸ்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டதால், நேற்று நடந்த "பந்த்'தின் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் சார்பில் நேற...
தமிழகம்
வட மாநிலங்களில் மழையால் பெட்ஷீட்டுக்கு கிராக்கி
சென்னிமலை: வட மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை எதிரொலியாக, சென்னிமலை பெட்ஷீட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னிமலை வட்டாரத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறிகளில் பெட்ஷீட் அதிகளவில் உற்பத்தியாகிறது. இங்கிருந்து, வட மாநிலங்களுக்குதான் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. ஃபிப்ரவரியில் இருந்து நான்கு மாதங்களாக வட மாநிலங்க...
தமிழகம்
பாரியூர் கோவில் கடை ரூ.4.30 லட்சத்துக்கு ஏலம்
xகோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் வாயிலில் கட்டப்பட்ட புதிய கடைகள் நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின.பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடக்கும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அமாவாசை, பவுர்ணம...
தமிழகம்
ராசிபுரத்தில் முழு அடைப்பு
ராசிபுரம்: பந்த் காரணமாக ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, அண்ணாசாலை, பட்டணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியை சேர்ந்த டிரைவர்கள் விடுமுறையில் சென்றதால், மாற்று டிரைவர்கள் வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. அ...
தமிழகம்
குறைந்த விலையில் காட்டன் சட்டை துணி
ஈரோடு: ஈரோடு கோ-ஆப்டெக்ஸில் ஏராளமான காட்டன் சட்டைத் துணிகள் குறைந்த விலையில் குவிந்துள்ளன.ஈரோடு கோ-ஆப்டெக்ஸில் ஏராளமான காட்டன் சட்டைத் துணிகள் வந்துள்ளன. துணி விலை மிகவும் குறைவாக உள்ளது. காட்டன் சட்டை மீட்டர் 82 ரூபாய்க்கு விற்க வேண்டியது; 70 சதவீத தள்ளுபடி விலையில் 28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏராளமான டிஸைன்களில் ச...
தமிழகம்
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ராசிபுரம்: வாய்ஸ் ஆஃப் காட் பாலிடெக்னிக் கல்லூரியில், நடப்பாண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கப்பட்டது. நாமக்கல் அடுத்த எருமப்பட்டி ஏ.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், வாய்ஸ் ஆஃப் காட் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி நிறுவனர் மணி தல...
தமிழகம்
கொட்டாங்குச்சிக்கு திடீர் மவுசு: ஒரு டன் ரூ.4,500
வாழப்பாடி: உருக்காலை, கெமிக்கல் தொழிற்சாலைகள், கொசு விரட்டி, சாம்பிராணி மற்றும் அகர் பத்திகள் தயாரிப்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதால், கேட்பாரற்று கிடந்த கொட்டாங்குச்சிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு டன் கொட்டாங்குச்சி 4,500 ரூபாய் வரை விலை போவதால், தேங்காயை உடைத்து கொப்பரை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள...
தமிழகம்
இருவருக்கு சிகிச்சை உணவு விஷமானதால் சிறுவன் பலி
ப.வேலூர்: ப.வேலூர் அருகே விஷமாக மாறிய உணவை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது தாயும், மற்றொரு சிறுவனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ப.வேலூர் அருகே ஆனங்கூரை சேர்ந்தவர் சுப்ரமணி (30). அவர் செங்கல் சூளையில் குடும்பத்துடன் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுப்ர...
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 2 லட்சம் நலத்திட்ட உதவி
நாமக்கல்: மக்கள் குறைதீர் கூட்டத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சகாயம் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் கொடுத்த மனுக...
தமிழகம்
பெருந்துறை 2வது குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் நிறைவு
பெருந்துறை:பெருந்துறை, க.செ.பாளையம், சென்னிமலை இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டப்பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.சுதந்திர தின பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சென்னிமலை டவுன் பஞ்சாயத்து மக்கள் தேவைக்கு இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்தது. திட்டச் செலவில் 332.25 ல...
தமிழகம்
இடைத்தேர்தல் ஐந்து பேர் மனுத்தாக்கல்
சேலம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. சேலம் மாவட்டத்தில் நகராட்சி கவுன்சிலர், ஒன்றியக்குழு கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 21 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. மல்லிகுட்டை, அமரகுந்தி, பச்சமல...
தமிழகம்
ரயில் இன்ஜினுக்கு ஆயில், டீஸல் கொண்டு செல்லும் குழாய் சீரமைப்பு
ஈரோடு: ஈரோடு ரயில் இன்ஜின்களுக்கு ஆயில் மற்றும் டீஸல் கொண்டு செல்லும் இரும்பு குழாய்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றப்படுகிறது. வருவாயில் முன்னணியில் உள்ள ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. ஸ்டேஷனில் நான்கு பிளாட்ஃபாரங்கள் உள்ளன. பெட்டிகளுடன் இன்ஜின்களை இணைக்க "ஷ...
தமிழகம்
ரோட்டோரம் நடக்கும் பார் பயணிகள் முகம் சுளிப்பு
மேட்டூர்: மேட்டூர், சின்னபார்க் டாஸ்மாக் கடை அருகிலுள்ள பகுதி ஒப்பன் பார் ஆக மாறியுள்ளது பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.மேட்டூர், சின்னபார்க் பஸ் ஸ்டாப் எதிரில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. மேட்டூரில் இருந்து ஈரோடு மார்க்கம் செல்லும் அனைத்து பஸ்களும் சின்னபார்க் வழியாகவே செல்கின்றன. ஈரோடு மார்க்கம் செல்லும் பஸ்ஸூக்கா...
தமிழகம்
பாரத் பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்கம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த மாணிக்கம்பாளையம் பாரத் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி சேர்மன் பொன்னுசாமி தலைமை வகித்தார். முதல்வர் முருகன் வரவேற்றார். தாளாளர் கோகுலநாதன் முன்னிலை வகித்தார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் முத...
தமிழகம்
2 பவுன் நகைக்கு பெண் கொலை
சேலம்: சேலம் அருகே இரண்டு பவுன் தங்க நகைக்காக மர்ம கும்பல் வீட்டில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்த பெண் முகத்தில் தலையணை அமுக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது.சேலம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடியை சேர்ந்தவர் ரத்தினசாமி. அவரது மனைவி பழனியம்மாள்(60). கடந்த சில ஆண்டுக்கு முன்பு ரத்தினசாமி இறந்து விட்டார். பழனி...
தமிழகம்
பனமரத்துப்பட்டி ஏரியில் மணல் திருட்டு : தடுக்க ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரியில் மண் கடத்தலை தடுக்க, ஆயுதப்படை போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி 2,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 2005ம் ஆண்டு ஏரி ஆக்கிரமிப்புகள் முழுவதும் காலி செய்யப்பட்டு, ஏரியை சுற்றி முள்வேலி அமைக்க...
தமிழகம்
நிலம் மோசடி கோபி தம்பதி புகார்
ஈரோடு: போலி பத்திரம் தயாரித்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்டதாக, எஸ்.பி.,யிடம், கோபி தம்பதியினர் புகார் மனு அளித்துள்ளனர். கோபி யூனியன் கூகலூர் சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. இவரது கணவர் பழனிச்சாமி. ஜெயமணிக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று ஏக்கர் புஞ்சை பூமி கூகலூரில் இருக்கிறது. போலி...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷன் முன் தர்ணா தலைவாசலில் 21 பேர் மீது
தலைவாசல்: தலைவாசல் அருகே நிலத்தகராறு தொடர்பாக மூ.மு.க., பிரமுகரை கைது செய்ததை கண்டித்து போலீஸ் ஸ்டேஷன் முன் தர்ணா போராட்டம் நடத்திய 21 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைவாசல் அருகே உள்ள சித்தேரி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த கதிர்வேல், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட துணைச்செயலலாளராக உள்ளார். அவருக்கும், அதே...
தமிழகம்
சித்தோட்டில் நாளை மின்தடை
ஈரோடு: சித்தோடு பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது.சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.இவ்வேளையில், சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல் பாளையம், பி.பெ.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், காலிங்...
தமிழகம்
நிலத்தகராறில் குடிசைக்கு தீ
ஆத்தூர்: ஆத்தூர் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் காரணமாக குடிசைக்கு தீ வைத்ததாக எட்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (73). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவேல் (25) என்பவருக்கும் இடையே விவசாய நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளத...
தமிழகம்
எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி விழா
பவானி: குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி முதலாண்டு துவக்க விழா நடந்தது.கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். உதவி தலைவர் மதன் கார்த்திக் முன்னிலை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பார்வதி குத்துவிளக்கு ஏற்றினார். பல்லகவுண்டம்பாளையம் "சக்தி ஆட்டோ காம்பொனன்ட்' பொது மேலாளர் பழனிசாமி பேசினார். முத்தாயம்மாள்...
தமிழகம்
சேலத்தில் ஒன்பது எஸ்.ஐ.,க்கள் பதவி உயர்வு
சேலம்: சேலத்தில் ஒன்பது எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக டி.ஜி.பி., லத்திகா சரண் மாநிலம் முழுவதும் 146 எஸ்.ஐ.,க்களை இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.சேலம் மத்திய சிறை கண்காணிப்பு எஸ்.ஐ., கேசவன், சிறப்பு புலன் விசாரணை பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மல்லியக்கரை எஸ்.ஐ., சண்ம...
தமிழகம்
வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு
ஈரோடு: ஈரோட்டில் வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு நகரில் சம்பத்நகர், பெரியார் நகர், முத்தம்பாளையம் திட்டங்களில் வீடு கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 25 ஆண்டுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். நில உரிமையாளர்களுக்கும், வீட்டுவசதி வாரியத்தினரு...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீஸல், மண்ணென்ணெய், காஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிபாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகம்
இயந்திரத்தில் கை சிக்கி பெண் பலி
சேலம் : சேலத்தில் தனியார் காட்டன் மில்லில் வேலை செய்த பெண் தொழிலாளி, இயந்திரத்தில் சிக்கி இறந்தார். சேலம் காரிப்பட்டி அருகே உள்ள சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி சொர்ணம்(47) அதே பகுதியில் உள்ள எஸ்.பி., ஸ்பின்னிங் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நூல் நூற்கும் இயந்திரத்தில் நின்று வேலை பார்த்து ...
தமிழகம்
சூதாட்டம் 6 பேர் கைது
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த ரமேஷ்(34), சின்னு(40), சரவணன்(37), முருகன்(34), கோவிந்தராஜ்(46), ரமேஷ்(30) ஆகியோர், கஸ்பா பேட்டை பகுதியில் கும்பலாக சூதாடியதாக கைது செய்யப்பட்டனர். தாலுகா எஸ்.ஐ., வேலுமணி விசாரிக்கிறார்.
தமிழகம்
குறைதீர் கூட்டம்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. 335 மனுக்கள் பெறப்பட்டன. 15 பேருக்கு 2.41 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், ஐந்து பேருக்கு வி.ஏ.ஓ., பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.திருப்பதி ரயில் ஈரோட்டில் நிற்க எம்.பி., வலியுறுத்தல்ஈரோட...
தமிழகம்
சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்: பாலங்களுக்கு பாதுகாப்பு
சென்னை: சென்னை நகரில் மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மர்ம போனை தொடர்ந்து பாலங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை பேசிய மர்ம நபர், சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாலங்களை குண்டு வைத்து த...
தமிழகம்
தமிழக சட்டத் துறை கூடுதல் செயலர் நியமனம்
சென்னை: தமிழக அரசின் சட்டத்துறை இணைச் செயலர் கதிர்வேலுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த வீரமணி ஓய்வு பெற்றுள்ளார்.
தமிழகம்
வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறை: வால்பாறை அருகே மீண்டும் சிறுத்தை, மாட்டுத்தொழுவத்தில் புகுந்து கன்றுக் குட்டியை கொன்றது. வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட் டில் சூப்பிரவைசராக வேலை செய்துவருபவர் சுப்பையா. இவருக்கு சொந்தமான பசுமாட்டை கடந்த மாதம் சிறுத்தை கொன்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 1.00 மணிக்கு மாட்டுத்தொழுவத்தில் புகுந்த ...
தமிழகம்
கேரளாவில் 61 பேருக்கு பன்றி காய்ச்சல்
திருவனந்தபுரம் : கேரளாவில் 61 பேர், எச்1 என்1 காய்ச்சலால் அவதிப்படுகின்றனர் மேலும், 12 ஆயிரத்து 425 பேர் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் பன்றிக் காய்ச்சலால் திருவனந்தபுரத்தில் மூன்று பேரும், கொல் லத்தில் 3, ஆலப்புழாவில் 6, கோட்டயத்தில் ஒருவரும், எர்ணாகுளத்தில் 28 பேரும், திருச்சூரில்...
இந்தியா
மத்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம்: சரத் யாதவ்
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு தழுவிய அளவில் பந்த் நடந்தது. இதில் பா.ஜ., கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறுகையில் நாடு தழுவிய அளவில் நடந்த பந்த்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சிகள், வணிக நிறுவனங்கள், லா...
இந்தியா
பிரதமரின் திருப்பதி வருகை ரத்து
புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் திருப்பதி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் வரும் 9ம் தேதி மாலை திருப்பதி வருகிறார். பின்னர் மறுநாள் காளஹஸ்தி அருகே மன்னாவரம் கிராமத்தில் மின் உற்பத்தி உதிரிபாக தொழிற்சாலை, மற்றும் ரேணிகுண்டாவில் புதிய விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்...
தமிழகம்
மீண்டும் யாத்திரையை துவங்குகிறார் ஜெகன்
ஐதராபாத்: ஆந்திராவில் வரும் வியாழக்கிழமை மீண்டும் யாத்திரையை துவங்கப்போவதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இவருடைய மரணத்தை அறிந்த ஏராளமான தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்த தொண்டர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூற, கடந்த மே மாதம் க...
General
தாய்லாந்தில் போதைபொருள் கடத்திய இந்தியர் கைது
பாங்காக்: தாய்லாந்தில் நாட்டில் போதைபொருள் கடத்திய இந்தியர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து நாட்டிற்கு வந்த விமானம் ஒன்றில் சந்தேகபடும் படியாக வந்த நபர் ஒருவரை போலீசார் விசாரித்தனர். அப்போது அவரிடமிருந்து 7.5கிலோ அளவுள்ள கேட்டமைன் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடியாகும். இதனையடுத்த...
இந்தியா
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டு தலைவர் கைது
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் மேற்கு மித்னாபூரில், மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சந்தோ சிங்கை போலீசார் கைது செய்தனர். சந்தோ சிங் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் முக்‌கிய குற்றவாளி. மேலும் லால்கரில் சி. ஆர்.பி.எப்., ( மத்திய ரிசர்வ் போலீஸ் படை ) வீரர்கள் 6 பேரை படுகொலை செய்த விவகார...
தமிழகம்
தமிழக சட்டசபைத் தேர்தல் முன் ஏற்பாடு : சென்னையில் ஆலோசனை
சென்னை : தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா சென்னை வந்துள்ளார். அவருடன் தமிழக தலைமை தேர்தல் அ‌திகாரி நரேஷ் குப்தா, உள்துறை செயலர், தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை...
General
உலக கோப்பை கால்பந்து : முதல் அ‌ரையிறுதியில் உருகுவே - நெதர்லாந்து மோதல்
ஜோகனஸ்பர்க் : 19வது சர்வதேச உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தென்ஆப்ரிக்காவில் நடைபெறுகிறது. முதல் அரையிறுதிப் ‌போட்டியில் உருகுவே அணி நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது.
இந்தியா
ஸ்ரீநகரில் மீண்டும் பதட்டம்
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தெங்புராவில், இளைஞர் ஒருவர் காணாமல் போனதை கண்டித்து கல் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் கும்பல் திடீர் போராட்டத்தில் குதித்தது. நிலைமையை சமாளிக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்ததார். இதனால் அங்கு மீண்டு...
General
மாரடோனா விரைவில் ராஜினாமா !
பியூனஸ் ஏரிஸ் : அர்ஜென்டினா கால்பந்து அணி பயிற்ச்சியாளர் டியகோ மாரடோனா விரைவில் ராஜினாமா செய்வார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. உலககோப்பை கால்பந்து போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது அர்ஜென்டினா . அந்த அணியின் பயிற்ச்சியாளர் நேற்று முன் தினம் தாயகம் திரும்பினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த ப...
General
ஆஸ்‌திரேலியாவில் இந்திய உணவகத்துக்கு தீ
கான்பரா : ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகத்துக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதில் உணவகம் முற்றிலுமாக சேதமடைந்தது. ஆஸ்திரேலியாவில் சிட்னி மாகாணத்தில் இந்திய உணவகத்துக்கு நேற்றிரவு மர்ம நபர்கள் வேண்டுமென்றே தீ வைத்துள்ளனர். உணவகத்தில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர வி...
General
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா ‌எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 80 சென்டுகள் சரிந்து 71.34 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியிருந்தது. பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 52 சென்டுகள் சரிந்து 70.95 அமெரிக்க ட...
தமிழகம்
மதுரை சிறையில் கைதி தற்கொலை முயற்சி
மதுரை : மதுரை சிறையில் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜா (39) . இவர் வத்தலகுண்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்துக்காக தண்டனை பெற்று கடந்த 2008ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் பீடி கேட்டு தகராறு செய்த ராஜா , திடீரென மரத்தின் மீது ஏற...
தமிழகம்
தமிழகம், புதுச்சேரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போலீசாரை கண்டித்து இன்று ஒரு நாள் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் அண்மையில் வக்கீல் ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இது போல் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நட...
இந்தியா
ஆந்திர அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் : விஜயசாந்தி ஆவேசம்
ஐதராபாத் : தெலுங்கானாவில் இடைத்தேர்தல் பிரசாரத்தி்ல் ஈடுபட்டிருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி., விஜயசாந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனையடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. பலத்த பரபரப்புக்கு மத்தியில் அவரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வ...
தமிழகம்
திருப்பூரில் சாலை மறியல்
திருப்பூர் : குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக் கோரி திருப்பூரில் 100 பெண்கள் உட்பட 1000 பேர் சாலை மறியல் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் பேரூராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் முறையாக குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை என்பது அப்பகுதி மக்களின் புகார் . இந்நிலையில் ...
இந்தியா
நக்சல் பாதிப்பை ஒடுக்க ராணுவம் இல்லை : ஜி.கே.பிள்ளை
ராய்ப்பூர் : நக்சலைட்டுகள் தாக்கம் அதிகம் உள்ள பகுதியில், நக்சல்களை ஒடுக்க ராணுவம் ஈடுபடுத்தப்படாது என மத்திய உள் துறைச் ‌செயலர் ஜி.கே.பிள்ளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான கேபினட் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் நக்சல்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தை பயன்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்...
தமிழகம்
சிவகிரியில் சாலை விபத்து : 2 பேர் பலி
திருநெல்வேலி : சிவகிரியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசியைச் சேர்ந்த கணேசன் (50), சவுந்திரராஜன் (52), ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் குற்றாலத்துக்குச் சென்றனர். குற்றாலத்துக்குச் சென்று விட்டு திரும்பும் போது சிவகிரி அருகே கார் மரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த கணேசன் , சவுந்திராஜன...
General
சிட்னியில் இந்திய உணவகம் மீது வெடிகுண்டு தாக்குதல் ? ; மர்மநபர்கள் தப்பி ஓட்டம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பெரும் வெடி சப்தத்துடன் தீ பிடித்து எரிந்தது. இது வெடிகுண்டு தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆஸி., யில் இனவெறி தாக்குதல் அவ்வப்போது நடந்து வருகிறது. இது போன்ற இன வெறித்தாக்குதலை அடக்குவதில் இந்தியாவும், ஆஸி.,யும் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்...
தமிழகம்
நெல்லையில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் தே.மு.தி.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று நடந்த நாடு தழுவிய பந்த்தில் தே.மு.தி.க., கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து இன்று நெல்லையில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 32 குறைந்தது
சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 32 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 724க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 32 குறைந்து ஒரு பவுன் ‌தங்கம் ரூ. 13 ஆயிரத்து 792க்கு விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 31. 30க்கு விற்கப்படுகிறது.
இந்தியா
டில்லியில் பருவ மழை ‌தீவிரம்
புதுடில்லி : டில்லியில் பருவமழை தொடங்கியது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தெற்கு, கிழக்கு, வடக்கு டில்லியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
தமிழகம்
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
சிவகாசி : சிவகாசி விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். சிவகாசி விளாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி கமாராஜபுரம் காலனி. இப்பகுதி மக்கள் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படுவதில்லை என கூறி இன்று திடீ‌ரென காலையில் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகம்
சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய கோரி மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூரில் சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தாரை, தப்பட்டையுடன் வந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் நங்கவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட காசகுட்டை பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு சுடுகாடு வசதியில்லை. இதுவரை அவ...
தமிழகம்
காதலன் வீட்டு முன் இளம் பெண் தர்ணா
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் காதலன் வீட்டு முன் இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். செஞ்சி தாலுகா கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் கஜலட்சுமி (21). இவருக்கு இவரது உறவுக்கார பையனான பிரகாஷ் (22) க்கும் இடையில் காதல் இருந்தது. கஜலட்சுமி 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் பிரகாசுக்கு ரகசிய...
தமிழகம்
எஸ்.எம்.எஸ்., மூலம் வாக்காளர் பட்டியல் விபரம் : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை அறிமுகம்
சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்கம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள புதியதாக எஸ்.எம்.எஸ்., சேவை துவக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா எஸ்.எம்.எஸ்., சேவையை துவக்கி வைத்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லகானி கூறுகையில் ...
இந்தியா
7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் சந்திப்பு
புதுடில்லி : மாவோயிஸ்டு பாதிப்பு அதிகமுள்ள மேற்குவங்கம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒரிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்  ஆகிய 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 14ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம். 7 மாநிலங்களின் டி.ஜி.பி., க்கள், உள்துறை செயலர்கள் ஆகியோர் இந்த ச...
இந்தியா
மத்திய அமைச்சரவையில் மாற்றம்
புதுடில்லி : மத்திய உணவு, வேளாண் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக சரத்பவார் உள்ளார். இவர், சமீபத்தில் ஐ.சி.சி.,யின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்த பவார், அமைச்சரவையில் தன் பளுவைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம...
General
ஹபீஸ் சையத் வெளிநாடு செல்ல தடை
லாகூர் : ஜமாத் உத் தாவா தலைவர் ஹபீஸ் சையத் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சையத். பாகிஸ்தான் அரசு 23 இயக்கங்கங்களை தடை செய்யப்பட்ட இயக்கங்களாக அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஹப...
தமிழகம்
ஓட்டுக்கு காசு கொடுத்தால் கடும் நடவடிக்கை ; நவீன்சாவ்லா எச்சரிக்கை
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுத்தால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கென சிறப்பு அதிகாரிகள்  நியமிக்கப்படுவார்கள் என அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடும் முகமாக சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லா பேட்டியளித்தார். தமிழகத்தில் முன்கூட்டி தேர்தல் நடக்கு...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 173 புள்ளிகள் அதிகரித்து 17614.48 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 53 புள்ளிகள் சரிந்து 5289.05 புள்ளிகளாக முடிந்திருக்கிறது.
தமிழகம்
உலக வங்கியில் கடன் வாங்கி குவித்தார் முதல்வர் !
சென்னை: தமிழக அபிவிருத்தி திட்டத்திற்காக உலக வங்கியிடம் சுமார் 3 ஆயிம் கோடிகளை மேலும் கடன் வாங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஏற்கனவே பல கோடிக்கணக்கில் நடந்த அபிவிருத்தி பணிகள் தவிர்த்து கூடுதலாக சுகாதாரம் மற்றும் சாலைப்பணிகள் மேம்பாட்டுக்கு இந்த நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...
தமிழகம்
தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா பேட்டி
சென்னை : தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வராது என தலைமை தேர்‌தல் கமிஷனர் நவீன் சாவ்லா தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தல் முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா நேற்று சென்னை வந்தார். அவர் இன்று தேர்தல் கமிஷன் வைர விழா கண்காட்சியை தொ‌டங்கி வைத்தார். அதில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான...
இந்தியா
எல்லையில் ஊடுருவல் அதிகரித்துள்ளது : அந்தோணி
பெங்களூரு : இந்திய எல்லையில் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் அந்தோணி தெரிவித்தார். இருப்பினும் கடந்த ஆண்டுகளை விட எல்லையில் வன்முறை சம்பவங்கள் குறைந்திருப்பதாகவும் , சுற்றுலா பயணிக‌ளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகம்
சேலத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை
சேலம் : சேலம் மாவட்டம் சிவதாபுரத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய வெடிமருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு 6 ஆயிரம் கிலோ வெடிமருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள், வெடி உப்பு, 6 ஆயிரம் மீட்டர் டெட்டனேட்டர் வயர் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலை குறித்து சேலம் துணை கமிஷனர் ஜான் நிக்கல்சன், ஆர்.டி.ஓ...
தமிழகம்
சேர்க்கை ஆணை வழங்கல்
சென்னை: பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் ரேங்க் பெற்ற நந்தகுமாருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சேர்க்கை ஆணையை வழங்கினார். உடன், சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர்ஜவகர், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட்.
தமிழகம்
அப்பல்லோ மருத்துவமனையில் நவீன மூட்டு அறுவை சிகிச்சை
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், கால் மூட்டுகளில் ஏற்படும் நீர்க் கட்டிகளை, நுண் துளைகள் மூலம் அகற்றும் புதிய அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லெனின் கூறியதாவது: இதுவரை இந்தியாவில் கால் மூட்டுகளில் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்னைக்கு, ...
தமிழகம்
பாராட்டு விழா
சென்னை: தனியார் நிறுவனம் தேசிய அளவில் நடத்திய சர்வேயில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு 5வது இடம் அளித்திருந்தது. இதையடுத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது பெற்ற பேராசிரியர் சித்ரா, சாகித்ய அகாடமி விருது பெற்ற ப...
தமிழகம்
ஜூலை 14ம் தேதி மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர உத்தரவு
சென்னை : எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கு தேர்வான மாணவர்கள் ஒரு வாரம் முன்னதாககல்லூரியில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வான மருத்துவ மாணவர்கள் ஜூலை 14ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 21ம் தேதி சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த...
General
இந்தியா-சீனா பேச்சுவார்த்தையை துவக்க முடிவு
பீஜிங் : எல்லை பிரச்சனை தொடர்பாக  இந்தியா மற்றும் சீனா   பேச்சுவார்த்தையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.  பிரதமர் மன்மோகன் சிங்கின்  சிறப்பு தூதராக   4 நாட்கள் பயணமாக சீனா வந்துள்ள  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறுகையில்,  எல்லை பிரச்சனை, கூட்டு ராணு...
இந்தியா
காஷ்மீரில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி
காஷ்மீர் : காஷ்மீரில் மாநிலம் மய்சூமா என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமøயில் சிகிச்சை பெற்று வருகிறார்.
General
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முரளிதரன் ஓய்வு
கொழும்பு : இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறப்பபோவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்புவில் நடக்கும்இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பின்   ஜூலை 18ம் தேதி டெஸ்ட், டுவென்டி-20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறப்போவதாக தகவ...
தமிழகம்
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் தேர் ரூ.3.50 லட்சத்தில் சீரமைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர் 3.50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேர் ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தின் 2வது பெரிய தேரான இக் கோயிலின் தேர் மிகப்பழமை வாய்ந்தது. கடந்த மாதம் தேர் விரைவாக ஓடுவதற்கு வசதியாகவும் ரோடுகளில் பள்ள...
தமிழகம்
விழுப்புரம் மாவட்டத்தில் மர்ம தீயால் மக்கள் பீதி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம்  நெடுமொழியனூரில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த பள்ளி மாணவிகள் உடையில் திடீரென தீப்பிடித்தது. தீக்காயங்களுடன்இருவரும்  விழுப்புரம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே பலமுறை  மர்மமான முறையில் பல வீடுகளில் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து போலீ...
தமிழகம்
சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் லஞ்சம்வாங்கிய திருவேகம்புத்தூர் போலீஸ் எஸ்.ஐ.,யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம்  திருநல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கைய்யா. இவருக்கும் , இவரது பக்கத்து வீட்டுக்காரர் சாத்தையா என்பவருக்கும் இடப்பிரச்சனை  ஏற்பட்டு ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் க...
தமிழகம்
தொழில் போட்டியில் மோதல் : வக்கீல், குமாஸ்தா கைது
திருநெல்வேலி : வக்கீல்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வீட்டை சேதப்படுத்திய வக்கீல், குமாஸ்தா கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(42). அம்பை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார். ஏற்கனவே அரசு வக்கீலாக இருந்துள்ளார். இவருக்கும் வேலாயுதம்நகரை சேர்ந்த வ...
General
இலங்கை அகதிகள் வருகை : ஆஸி.,யில் தடை நீங்கியது
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறும் இலங்கை அகதிகளுக்கான தடையை, அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை குறைவு என்பதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள், இந்த நாட்டில் தஞ்சம் புகுந்து வந்தனர். இலங்கையில் போர் நடந்த காலத்தில் அகதிகள் போர்வையில் புலிகள் பலர், ஆஸ்திரேலியாவில் குடியேறுவதை...
தமிழகம்
திருச்சியில் பெண் அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
திருச்சி : திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் திருமண உதவி தொகை அளிக்க லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலராக பணிபுரியும் ஜெயலட்சுமி என்பவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் அண்ணாமலை என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம்
குழந்தை தொழிலாளர்கள் கண்காணிப்பு : கலெக்டர்களுக்கு உத்தரவு
திண்டுக்கல் :  சுமங்கலி திட்டத்தின் கீழ், குழந்தை தொழிலாளர்கள் தனியார் மில்களில் பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை கண்காணிக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நூற்பு மில்களில் இளம் பெண்கள் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் இதற்காக வேன்...
தமிழகம்
இந்தியாவில் ஆண்டு தோறும் ஒன்பது லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: நிபுணர் தகவல்
நாகர்கோவில் :  இந்தியாவில் ஆண்டு தோறும் ஒன்பது லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பாலு டேவிட் கூறினார். கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் தினமும் 150 முதல் 200 பேர் புற்று நோய் சிகிச்சைக்காக வருக...
இந்தியா
ஏவுகணை சோதனை வெற்றி
சந்திப்பூர் :ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் விண்ணிலிருந்து விண்ணைதாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. முதல்முறையாக இரவில் நடந்த சோதனை வெற்றியடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தமிழகம்
1.5 டன் கடத்தல் அரிசி பறிமுதல் :கடை ஊழியர் உள்பட 5 பேர் கைது
ஈரோடு: கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன்கடை ஊழியர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பங்களாப்புதூரை அடுத்த கொங்கர்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான முழு நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. கணக்கம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (41) ஊழியராக பணிபுரிகிறார்...
தமிழகம்
இது உங்கள் இடம்
தமிழ் வளர்ச்சி சுருங்கியது ஏன்? ரா.தங்கசாமி, நெல்லையிலிருந்து எழுதுகிறார்: உலகம் முழுவதும் பேசப்படும் ஆங்கில மொழி போன்று, இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு மொழியாக நம் தமிழ்மொழி வளர்வதை தடுத்தது தி.மு.க., ஆட்சி தான். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என்று அறிவித்தவுடனேயே, தமிழின் வளர்ச்சி சுருங்கி விட்டது.நாடு முழுவதும் ...
இந்தியா
மாளிகைப்புரத்தம்மன் கோவில் வாஸ்து சாஸ்திரப்படி விரிவாக்கம்
சபரிமலை : சபரிமலை மாளிகைப்புரத்தம்மன் கோவில், வாஸ்து சாஸ்திரப்படி விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கோவிலில் புதிய கொடிமரம் மற்றும் சுற்றுப்பிரகாரம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்ப சுவாமி சன்னிதானத்திற்கு அடுத்து, மாளிகைப்புரத்தம்மன் கோவிலுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்...
தமிழகம்
தேர்தல் கமிஷனின் சிறப்பை விளக்கும் புகைப்பட கண்காட்சி
சென்னை:இந்தியத் தேர்தல் கமிஷனின் சிறப்பை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா நேற்று துவக்கி வைத்தார்.இந்தியத் தேர்தல் கமிஷனின் வைர விழாவையொட்டி, தேர்தல் கமிஷனின் சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை, கடந்த ஜனவரியில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் டில்லியில் துவக்கி வைத்தார். இக்கண்...
தமிழகம்
எம்.ஜி.ஆர்., பல்கலை மாணவர் கொலை வழக்கில் சத்யபாமா பல்கலை மாணவர்கள் எட்டு பேர் கைது
நீலாங்கரை:எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழக மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சத்யபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த எட்டு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டனர். மேலும், 15 மாணவர்களை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். மாணவர்கள் குடிபோதையில் கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.பிளஸ் 2 மாணவர்களை, பல்கலைக் கழகங்களில் கமிஷன் அடிப...
தமிழகம்
காஷ்மீர் கலவரம் பலி எண்ணணிக்கை 4 ஆனது
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந் நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் 4 பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும் 70 பேர் வரை காயம் அடைந்தனர்.இச்சம்பவம்...
தமிழகம்
ஒரே பாடப் புத்தகத்திற்கு இரண்டு விலை:தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் குழப்பம்
சென்னை:சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பாடப் புத்தகங்களுக்கு இரண்டு விதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஒரே மாதிரியான கல்வி முறையாக சமச்ச...
தமிழகம்
போலி மருந்து விற்பனை :2 பேரின் ஜாமீன் ரத்து
சென்னை : போலி மருந்து விற்பனை வழக்கில் இரண்டு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் ரத்து செய்தது.போலி மருந்துகளை விற்பனை செய்ததாக சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், அப்ரோஸ்கான், கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பின், இருவருக்கும் எழும்பூர் கோர்ட் ஜாமீன் வழங்கியது. கைது செய...
தமிழகம்
சொல்கிறார்கள்
வண்டி சத்தத்தை வைத்தே பழுதை கண்டுபிடிப்பேன் : பெண் மெக்கானிக் பானு: என் கணவர் மோகன் 40 வருஷமா டூ- வீலர் மெக்கானிக்கா இருக்காரு. அவர் வண்டிகளை ரிப்பேர் செய்யும்போது ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் என எடுத்துக் கொடுத்து, அவருக்கு உதவியா இருப்பேன். அவர் வெளியே எங்காவது போயிட்டா, வரும் கஸ்டமர்களைத் திருப்பி அனுப்ப மனசு இல்லாம, நான...
தமிழகம்
சிறுநீரக மாற்று சிகிச்சை ஒன்பது பேருக்கு அனுமதி
சென்னை : அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள, ஒன்பது பேருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.கோவையிலுள்ள கோவை கிட்னி சென்டரில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கோரி ஒன்பது பேர், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.இம்மனு, நீதிபதி தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. கோவை கி...
தமிழகம்
பாசன கால்வாய்களில் 2 லட்சம் தேக்குமரங்கள்
மதுரை:மதுரை மாவட்டத்தில், பெரியாறு- வைகை பாசனக் கால்வாய்களில் மேலும் 2 லட்சம் தேக்குமரங்கள் நட, வனத்துறை திட்டமிட்டுள்ளது. பர்னிச்சர்கள் தேவை அதிகரிப்பதால் மியான்மார், இந்தோனேசியா, மலேசியா, கானா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து தேக்குமரங்களை இறக்குமதி செய்கின்றனர். அந்நாடுகளிலும் தேக்கு மரங்கள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ள...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு:படிவங்களுக்கு தட்டுப்பாடு
மதுரை:மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான படிவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தேசியப் பணியாக நடந்து வருகிறது. ஆசிரியர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை 15 வரை முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பும், அடுத்த கட்டமாக 2011ல் மக்கள் தொகையும் க...
தமிழகம்
நாகர்கோவில், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில், செங்கோட்டைக்கு வாராந்திர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (0605) வியாழக் கிழமை தோறும் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு...
தமிழகம்
தலைமை பொறியாளர்களாக 15 பேருக்கு பதவி உயர்வு
சென்னை : பொதுப்பணித் துறையில் முதல் முறையாக, 15 பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர்களாக ஒரே நேரத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறையில், முதன் முறையாக ஒரே நேரத்தில் ஒரு பெண் பொறியாளர் உட்பட, 15 பொறியாளர்களுக்கு, தலைமைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்ட...