category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | குன்றத்துக்கோயில் புனிதம் காக்கப்படுமா | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைக்குப்போகும் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில். பழநி மலைக்கோயிலில் உள்ளது போன்று முருகன் சிலை இங்குள்ளது. இக்கோயிலில் தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது. கோயிலுக்குள் பகலில் சிறுவர்கள் பம்பரம், கிட்... |
தமிழகம் | வங்கிகளின் புதிய வட்டி : சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு : வர்த்தக சங்கம் கருத்து | மதுரை: வங்கிகளுக்கான புதிய வட்டி நடைமுறைகளால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும், என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.சங்க தலைவர் ஜெகதீசன் அறிக்கை: வங்கிகளின் வைப்பு நிதி, லாபம், நிர்வாக செலவுகளை கணக்கிட்டு கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை ஜூலை முதல் அமல்படுத்த வேண்டும், என ரிசர்வ் வங்கியின் அறி... |
தமிழகம் | பாதிரியாருக்கு முன் ஜாமீன் | கோவை : சர்ச் நிதி கையாடல் செய்த புகாருக்கு ஆளான பாதிரியார் ஜான் பாஸ்கோ, நேற்று கோவை கோர்ட்டில் சரண் அடைந்து முன் ஜாமீன் பெற்றார்.பீளமேடு, விமான நிலையச் சாலையில் புனித செபாஸ்தியார் சர்ச் உள்ளது. ரோமன் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றுபவர் ஜான் போஸ்கோ. இவர், சர்ச் நிதிய... |
தமிழகம் | தொடரும் வியாபாரிகள் ஸ்டிரைக் : இரண்டாம் நாளாக தடைபட்டது மாட்டுச்சந்தை | பொள்ளாச்சி : கேரளா மாட்டு வியாபாரிகள் ஸ்டிரைக்கை தொடர்வதால், இரண்டாம் நாளாக பொள்ளாச்சி மாட்டுச்சந்தை தடைபட்டது.பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்லும் லாரிகளை வழிமறித்து பணம் பறிப்பதற்கும், போலீசார் மாமூல் வசூலிப்பதற்கும் கேரளா மாட்டு வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ப... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் துவங்க கலந்தாய்வு | மதுரை: மாவட்ட தொழில் மையத்தின் மூலம், பிரதமரின் வேலைவாய்ப்புப் பெருக்கத் திட்டத்தின் கீழ் (பி.எம்.இ.ஜி.பி.,) மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்குவதற்கான பிரத்யேக கலந்தாய்வு விரைவில் துவங்க உள்ளது.மதுரையில் மாவட்ட தொழில் மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவீதத்தில் மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க வாய்ப்புஅளிக்கப்பட... |
தமிழகம் | மதுரைக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் | சோழவந்தான்,: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வைகை ஆற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து தண்ணீர் வாழைதோப்பிற்கு வீணாக பாய்கிறது. முள்ளிப்பள்ளம் வழியாக வைகை அணையில் இருந்து ராட்சத குழாய் பதிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முள்ளிப்பள்ளம் பகுதியில் நிலையூர் கால்வ... |
தமிழகம் | வக்கீல்கள் போராட்டம் போலீஸ் வெளியேற்றம் | மதுரை: மதுரையில் சில நாட்களுக்கு முன், வக்கீல் அக்பர்அலியை விளக்குத் தூண் போலீசார் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது பணி செய்ய விடாமல் தடுத்து திட்டியதாக வக்கீல் சங்க துணை தலைவர் நெடுஞ்செழியன், வக்கீல் அசோக் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை கண்டித்து நேற்று வக்கீல் கள் திடீர்... |
General | உலக கோப்பை கால்பந்து : இறுதி போட்டிக்கு நெதர்லாந்து தகுதி | கேப்டவுன் : உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிபோட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் உருகுவே அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேவை தோற்கடித்து முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. |
தமிழகம் | கோவில் பிரச்னை; பேரூராட்சி அலுவலகம் முற்றுகை | அவிநாசி : அவிநாசி, குமரன் காலனியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை அகற்றக் கோரி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்; கோவிலை அகற்ற விட மாட்டோம் என்று மற்றொரு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். இரு தரப்பினர் மாறி மாறி போராட்டம் நடத்தியதால், அதிகாரிகள் குழம்பினர்.
அவிநாசி பேரூராட்சி, நான்காவது வா... |
தமிழகம் | ரூ.13.4 லட்சத்தில் நலத்திட்ட உதவி | திருப்பூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம், ஊத்துக்குளி ஒன்றிய வட்டார வள மையம் சார்பில் பள்ளிகளுக்கு 13 லட்சத்து 39 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஊத்துக்குளி எஸ்.எஸ்.ஏ., வட்டார வள மையத்தில் நடந்தது. ஊத்துக்குளி... |
இந்தியா | சஸ்பென்ஸ்! தனி கட்சி துவக்குவாரா ரங்கசாமி...சோனியா வந்தால் தெரிந்து விடும் | முதல்வர் பதவியை இழந்ததால் அதிருப்தியில் உள்ள ரங்கசாமி, தனி கட்சி ஆரம்பிப்பாரா, காங்., கட்சியிலேயே தொடருவாரா என்பது இந்த மாதத்தில் வெட்ட வெளிச்சமாகி விடும். முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக போர்க் கொடி உயர்த்தினர். இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு காங்., தலைமை உத்தரவிட்டது.பதவி வி... |
இந்தியா | விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் | திருக்கனூர் : வேளாண்மை தொழில் நுட்ப முகமை சார்பில் விவசாயிகளுக்கு குழு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் திருக்கனூர் பாலமுருகன் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. வேளாண்மை தொழில் நுட்ப முகமையின் கூடுதல் மேலாண் இயக்குனர் ரவிபிரகாசம் தலைமை தாங்கினார். இணை மேலாண் இயக்குனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். திருக்கனூர் பகுதியை சுற்... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்ற கெடு | திருப்பூர் : நல்லூர், காங்கயம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கெடு விதித்துள்ளது. குறிப்பிட்டுள்ள அவகாசத்துக்குள் அகற்றிக் கொள்ள, நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில், நகராட்சி மேற்கு எல்லையான டி.எஸ்.கே., முதல் புதுப்பாளையம் பிரிவு வரை உள்ள ஆக்கிரமிப்புகள், மூன்று ... |
இந்தியா | புதுச்சேரி மாநில போலீசாருக்கு தமிழ்நாடு போலீசார் நீச்சல் பயிற்சி | புதுச்சேரி : தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி சார்பில் புதுச்சேரி மாநில போலீசாருக்கு இரண்டு நாள் நீச்சல் பயிற்சி கடலூரில் நேற்று துவங்கியது. பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட் தாக்குதல் போன்ற அச் சுறுத்தலை முறியடிக்க பல்வேறு மாநில போலீசாருக்கு தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்ப... |
தமிழகம் | லைசென்ஸ் முடக்கம் | திருப்பூர் : பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் பகுதிகளில் தெற்கு ஆர்.டி.ஓ., தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ரமணி, முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில் 266 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மட்டும் வரி, கட்டணங்கள் மற்றும் அபராத மாக மட்டும் 1.99 கோடி ர... |
தமிழகம் | வெளிநாட்டில் நர்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு: கலெக்டர் தகவல் | அரியலூர்: அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை:சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு ருத்துவமனைகளில், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான தீவிர கண்காணிப்பு பிரிவில் பணியாற்ற, இரண்டாண்டு அனுபவத்துடன், 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்.ஸி., தேர்வு பெற்ற பெண் நர்ஸூகள் தேவை. இதற்கான நேர்முக தேர்வு சவுதி அமச்சக தேர்வு குழுவின... |
இந்தியா | வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் வேண்டுகோள் | புதுச்சேரி : வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி ராகேஷ் சந்திரா கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் ... |
இந்தியா | ஓரம் போ... ஓரம் போ... மாகி பஸ் வருது! | புதுச்சேரி : புதுச்சேரி-மாகி வழித் தடத்தில் இயக்கப்படும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் மோசமான நிலையில் உள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். புதுச்சேரியில் இருந்து 640 கிலோ மீட்டர் தூரத்தில் மாகி அமைந்துள்ளது. மாகியில் வசிக்கும் மக்கள் புதுச்சேரிக்கு வருவதற்கும், திரும்பிச் செல்வதற்கு பஸ்களையே நம்பி உள்ளனர். புதுச்சேரியில் இருந்... |
தமிழகம் | தெற்கு தாமரைக்குளம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு | அரியலூர்: தெற்கு தாமரைக்குளம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்புவிழா நடந்தது.அரியலூர் அருகே தெற்கு தாமரைக்குளம் கிராமத்தில், ஒரு லட்ச ரூபாய் டால்மியா சிமெண்ட் ஆலை பங்களிப்பு நிதியுடன், 2.63 லட்ச ரூபாய் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா, முன்னாள் எம்.எல்.ஏ., அரி... |
இந்தியா | வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி | புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் ராகேஷ் சந்திரா துவக்கி வைத்தார். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி தலைமை தாங்கினார். நாட்ட... |
தமிழகம் | தே.மு.தி.க., தெருமுனை பிரச்சார கூட்டம் | அரியலூர்: அரியலூர் மாவட்டம், அரியலூர் பஞ்., யூனியனுக்குட்பட்ட உசேனாபாத் பிள்ளையார் கோயில் தெருவில், தே.மு.தி.க., சார்பில் நடந்த தெருமுனை பிரச்சார கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் தலைமை வகித்தார்.கிளை செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். ஒன்றிய பொருளாளர் செல்வராஜ், துணை செயலாளர்கள் செல்வராஜ், செந்தில்கு... |
தமிழகம் | ஈஷா யோகா பயிற்சி வகுப்பு இன்று துவக்கம் | அரியலூர்: அரியலூரில் இன்று ஈஷா யோக பயிற்சி வகுப்பு துவங்குகிறது.அரியலூர் பெருமாள் கோவில் தருவில் உள்ள ஜி.ஆர். திருமண மண்டபத்தில், 7ம் தேதி இன்று மாலை 6 மணிக்கு, ஈஷா யோகா மையத்தின் சார்பில், அறிமுக பயிற்சி வகுப்பு நடக்கிறது.தொடர்ந்து வருகிற 13ம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியில், அரியலூர் அரசு தலைமை மரு... |
இந்தியா | தடுப்பணை சீரமைக்கும் பணி | காரைக்கால் : காவிரி நீர் வருகையை எதிர்பார்த்து, காரைக்காலில் தடுப்பணைகள் சீரமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது. காரைக்கால் கடைமடை பகுதியில் ஆண் டுக்கு ஒரு முறை மட்டுமே நெல் சாகுபடி நடக்கிறது. மற்ற பருவங்களில் காய்கறி, உளுந்து, பயறு வகைகள் பயிரிடப்படுகிறது. காரைக்காலின் மொத்த விவசாயமும் காவிரி ஆற்றின் நீரையே நம்பி உள்ளது. ... |
இந்தியா | பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்புநான்காம் நாளாக பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதி | புதுச்சேரி : புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக பஸ்கள் 4வது நாளாக நேற்றும் இயங்காததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.,) தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கடந்த 3ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை... |
இந்தியா | கலந்துரையாடல் | புதுச்சேரி : முத்தரைப்பாளையம் சரசுவதி உயர்நிலை பள்ளியில் விழிப்புணர்வு உரையாடல் நடந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு, இந்த ஆண்டை உயிரிப் பன்மய ஆண்டாக அறிவித்துள்ளது. இதையொட்டி சரசுவதி பள்ளியில் நடந்த காட்டு உயிரிகளை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு செம்படுகை நன்னீரக தலைவர் ராம் மூர்த்தி... |
தமிழகம் | அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த நால்வர் கைது | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நான்கு பேரை மருவத்தூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.மருவத்தூர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்தளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக்கப்படும் படி நின்றிந்த நான்கு பேர... |
இந்தியா | அடிக்கடி இடம் மாறும் ரேஷன் கடை அரியூர் மக்கள் அவதி | புதுச்சேரி : அரியூரில் இயங்கும் ரேஷன் கடை அடிக்கடி இடம் மாறிக் கொண்டு இருப்பதால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர். அரியூரில் இரண்டு நியாய விலைக் கடைகள் உள்ளன. ஒன்று அரியூர் உலக வாழியம்மன் கோவில் பக்கத்தில் நிரந்தரமாக பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. மற்றொன்று பாரதி நகரில் இயங்கி வந்தது. இந்த 2 கடைகளிலும் ஆயிரத... |
தமிழகம் | பஞ்., தலைவரை கண்டித்து உண்ணாவிரதம் | அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிரந்தர குடிநீர் மற்றும் சுகாதார வசதி செய்து தரக்கோரி பஞ்சாயத்து தலைவரை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்கள் விழுதுபட்டி, பூதநத்தம், பாஞ்சாலிநகர். இப்பஞ்சாயத்தில் அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ச... |
தமிழகம் | ஒன்றிய அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள் | திருப்பூர் : கருக்கங்காட்டுப்புதூரில் பொதுக்கழிப்பிடம் அமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள், திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கருக்கங்காட்டுப்புதூர். இப்பகுதியில் உள்ள நாடார் காலனி, காளிகாம்பாள் நகர் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்கு பொ... |
இந்தியா | ஜே.சி., சார்பில் நலத்திட்ட உதவி | புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஜே.சி., இயக்கங்கள் சார்பில் தேசியத் தலைவர் வருகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லித்தோப்பு கீர்த்த மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜே.சி., புதுச்சேரி தலைவர் ஆனந்த சிவபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினரான ஜே.சி., மண்டலம் 16ன் தலைவர் திருநாவுக்கரசு வாழ்த... |
தமிழகம் | கிணற்றில் விழுந்த மாடுகள் உயிருடன் மீட்பு | பாலக்கோடு: பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த இரு பசு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.பாலக்கோடு அடுத்த கிழக்குபள்ளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜ் (40). இவருக்கு சொந்தமாக பசுமாட்டை நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது, கயிறு திடீரென அறுந்ததால் அங்குள்ள 40 அடி கிணற்றில் மாடு தவறி விழுந்தது.... |
இந்தியா | வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு | புதுச்சேரி : கோவையில் வக்கீல்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி வக்கீல்கள் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்தனர். கோவை மற்றும் நாமக்கல் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு... |
தமிழகம் | ஆதிதிராவிடர் , பழங்குடியினர் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு | ராமநாதபுரம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பல்வேறு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்புக்கு மேல் கல்வி பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்... |
தமிழகம் | போதையில் ரகளை செய்த இருவர் கைது | அரூர்: அரூரில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.அரூர் மஜீத் தெருவில் நேற்று முன்தினம் மாலை அரூர் எஸ்.ஐ., ரகீப் மற்றும் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு குடிபோதையில் நின்ற இரு வாலிபர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர். மேலும் பெண்கள் நடமாட்டம் அதிகள் உள்... |
இந்தியா | சிறைத்துறை ஊழியர்களின் குடும்பத்தினர் தர்ணா நடத்த முடிவு | புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறைத் துறை ஊழியர்களின் குடும்பத்தினர் நாளை தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி சிறைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் சம்பளம் வழ... |
தமிழகம் | கழனிகுடி ரோடு வளைவில் தேவை ஒளிரும் ஸ்டிக்கர் | தேவிபட்டினம்: தேவிபட்டினம் கழனிகுடி தேசிய நெடுஞ்சாலை வளைவில் விபத்துக்கள் நடப்பதால் விபத்தை தடுக்க , வாகனங்களுக்கு தெரியும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர் உள்ள கம்பங்கள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த வாரத்தில் சென்னையில் இருந்து வந்த சரக்கு லாரி, எதிரே வந்த லாரியின் ஒளி தெரியாமல் நிலை தடுமாறி வி... |
தமிழகம் | போர்வெல் போடுவதில் தகராறு: தம்பதியர் காயம் | பொம்மிடி: பொம்மிடி அருகே போர்வெல் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட தகராறில் தம்பதியர் காயம் அடைந்தனர்.பொம்மிடி அருகே பத்திரெட்டிஅள்ளி பெருமாள் நகரை சேர்ந்தவர் வேலன். இவரது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவர்களது தங்களது நிலத்தில் போர்வெல் போடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தின... |
தமிழகம் | கீழக்கரை மின்கம்பியில் தீ | கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மின்கம்பியில் நேற்று பகல் திடீரென மின்பொறி ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கீழக்கரையில் டிரான்ஸ் பார்ம் மற்றும் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளன. இதனால் ஏற்படும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வியாபாரிகள் என பலரும் அவதியடைகின்றனர்... |
தமிழகம் | ரோடு சேதத்தால் பயணத்தை தவிர்க்கும் வாகன ஓட்டிகள் | முதுகுளத்தூர்: வெண்ணீர்வாய்க்கால்- பாண்டிகண்மாய் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பயணத்தை தவிர்த்து வருவதோடு, அரசு, தனியார் பஸ்களும் ரத்து செய்யப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூரிலிருந்து வெண்ணீர்வாய்க்கால் வழியாக பாண்டிகண்மாய் செல்லும் ரோடு 25 கி.மீ., உள்ளது. கிராமங்களை அதிகமாக கொண்டுள்ள இந்த ... |
இந்தியா | போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தர்ணா | புதுச்சேரி : கோரிக்கையை வலியுறுத்தி, புதுச்சேரி பிரதேச போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 50 பஸ்கள் இயக்கப் பட்டு வருகிறது. இந்த பஸ்களில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ்களை நான்கு முறை இயக்க வே... |
இந்தியா | கல்விக்கடன் வழங்கல் | புதுச்சேரி : புஸ்சி தொகுதியைச் சேர்ந்த இருவருக்கு மேற் படிப்பிற்கான கல்விக் கடனை புஸ்சி ஆனந்து எம்.எல்.ஏ., வழங்கினார்.புஸ்சி தொகுதி ஆம்பூர் சாலையில் வசிக்கும் கமுருதீன் மகன் முகம்மது மன் சூர் அலி என்பவரின் மேல் படிப்பிற்காக 1 லட்சத்து 50 ஆயிரத்தில் 2ம் கட்டமாக 32 ஆயிரத்தையும், நைனியப்பா பிள்ளை வீதியைச் சேர்ந்த குமார் எ... |
தமிழகம் | பொறுப்பேற்பு | தர்மபுரி: தர்மபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களில் இணை பதிவாளராக மணிமாறன் பொறுப்பேற்றார்.இவர் வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது, மாறுதல் பெற்று தர்மபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக பொறுப்பேற்றார். அவரை கூட்டுறவு துறை ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். |
தமிழகம் | கிணறு தூர் வாரும் பணியில் கல் விழுந்து தொழிலாளி பலி | பாலக்கோடு: பாலக்கோடு அருகே கிணறு தூர் வாரும் பணியின் போது, கல் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி ரங்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாமி கரியன். இவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று முன்தினம் தூர் வாரும் பணி நடந்தது. இதில், 10 கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் கல் மற்றும் மணலை மேல அனுப்... |
தமிழகம் | டெப்போ அமையாததால் அதிருப்தி | தொண்டி: தொண்டியில் பஸ் டெப்போ அமையாததால் பொதுமக்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர். தொண்டியில் பஸ் டெப்போ அமைக்க உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் டெப்போ அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு தொண்டி பஸ்ஸ்டாண்டில் போக்குவரத்து பணிமனை அலுவலகம் திறக்கபட்டது. ஆனால் அந்த அலுவலகமும் செயல்படாமல் உள்ளது. இத... |
இந்தியா | சமூக பாதுகாப்பு நிதியுதவி வழங்கல் | புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதியில் குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார். ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம், அரியாங்குப்பம் தொகுதியில் குடும்பத் தலைவரை இழந்த 15 குடும்பங்களுக்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., நிவாரண தொகை வழங்கினார். தாசில்தார் தில்லைவேல், வருவாய் ஆய... |
தமிழகம் | ஆடியை எதிர்நோக்கும் பூ வியாபாரிகள் | திருப்பூர் : திருப்பூர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து, 30 ரூபாய் வரை விற்கிறது. ஆடியை எதிர்நோக்கி பூ வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.இந்த வார மார்க்கெட் நிலவரம்:திருப்பூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொருளாளர் ஆனந்த் கூறியதாவது:தக்காளி கிலோ 30 ரூபாய்; உருளை 24; சின்ன வெங்காயம் 30 முதல்... |
தமிழகம் | வளையப்பந்து போட்டியில் விருதுநகர் மாணவர்கள் சாம்பியன் | தர்மபுரி: தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான வளையப்பந்து போட்டியில் விருதுநகர் மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.தர்மபுரியில் மாநில அளவிலான இளையோர் வளையப்பந்து போட்டி இரு நாட்கள் நடந்தது. தர்மபுரி, விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வளை... |
தமிழகம் | சேதுபதி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு | ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் செயலாளர் முத்துராமன் அறிக்கை அளித்தார். புதிய நிர்வாகிகளாக வட்டார தலைவர் ராமகிருஷ்ணன், தலைவர் நாகராஜன் ,செயலாளர் சிவராஜ்,பொருளாளர் ராம்பிரபுக்கு முன்னாள் ஆள... |
இந்தியா | சுனாமி குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு கருக்களாச்சேரி கிராம மக்கள் அதிருப்திமறு | காரைக்கால் : காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராமத்தில் சுனாமி குடியிருப்புகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உடமைகளை இழந்தனர். அரச... |
தமிழகம் | மாணவர்களுக்கு பாராட்டு | கமுதி: அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 10,பிளஸ் 2 வகுப்பில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் அகமது லத்தீப் தலைமை வகித்தார். செயலாளர் ஹாஜி செய்யது இபுராகிம் முன்னிலை வகித்தார்.2009-2010 கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில், சந்தையியல் மற்றும் விற்பனைதிறனியல் பாடத்தில் ,மாநில அளவில... |
இந்தியா | 6 வீடுகள் வழங்க ஐகோர்ட் தடை | கருக்களாச்சேரியில் வழங்கப்பட்ட சுனாமி குடியிருப்புகளில் வீடு ஒதுக்குவதற்கான பட்டியலில் தேர்வு செய்யப்பட்டும் கடைசி நேரத்தில் வீடுகள் வழங்காதது குறித்து கருக்களாச்சேரியைச் சேர்ந்த நாகராஜ், விஜயக்குமார், கலைமணி, பொன்னழகன், பாப்பாத்தியம்மாள், வனிதா ஆகியோர் ரிட் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 6 வீடுகள... |
தமிழகம் | ம.தி.மு.க., ஆண்டு விழா | தர்மபுரி: தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் ம.தி. மு.க., சார்பில் கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா, விலைவாசி உயர்வை கண்டித்து பொதுக்கூட்டம் ஆகியவை இன்று (ஜூலை 7) நடக்கிறது.தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் தேவராஜன் தலைமை வகிக்கிறார். ஒன்றிய செயலாளர் முத்தியாலு, நகர பொறுப்பாளர் வஜ்ரவேலு, பொருளாளர் காவேரி, அவைத... |
இந்தியா | காரைக்கால் மதகடியில் காமராஜர் சிலை அமைக்கும் பணி | காரைக்கால் : காரைக்கால் மதகடி உப்பனாறு பாலம் அருகே புதிதாக காமராஜர் சிலை அமைக்க மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரியில் காமராஜர் பெயரில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் காமராஜர் சிலை, நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் காமராஜர் சிலை கிடையாது. காரைக்கால்... |
தமிழகம் | காலியாக இருக்கும் நகராட்சி அலுவலகம் ஊழியர்கள் இல்லாததால் மக்கள் தவிப்பு | தர்மபுரி: தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் பணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதில்லை. பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரி டவுன் பஞ்சாயத்து, 1964ம் ஆண்டில் முதல் நிலை நகராட்சியாக அந்தஸ்து பெற்று, 1987ம் ஆண்டு முதல் முதல் நிலை நகராட்சியாக உயர்ந்தள்ளது. 2001ம் ஆண்டு மக்கள... |
இந்தியா | விளக்கு பூஜை | வானூர் : எடச்சேரி கிராமத்தில் வீர மாகாளியம்மன், ஆஞ்சநேயர் சாமிக்கு 108 பால் குட அபிஷேகம், விளக்கு பூஜை நடைபெற்றது. வானூர் ஒன்றியம் எடச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன், ஆஞ்சநேயர் சாமி கோவிலில் 6ம் தேதி காலை 8 மணிக்கு 108 குட பாலபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு 108... |
தமிழகம் | குழந்தை காப்பகம் கட்ட நிதி ஒதுக்கீடு | திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி 9.5 லட்சம் செலவில் இரண்டு குழந்தைகள் காப்பகம், இரண்டு தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட உள்ளன.வேலம்பாளையம் நகராட்சி 15வது வார்டு ரங்கநாதபுரத்தில் 2.50 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி கூடம், இதே மதிப்பில் 19வது வார்டில் குழந்த... |
இந்தியா | கிரிக்கெட் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் | புதுச்சேரி : கிரிக்கெட் சங்கங்களின் செயலர்கள் மற்றும் வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு கிரிக்கெட் வீரரும், இளைஞர் காங்., பொதுச் செயலருமான ராமமூர்த்தி, பயிற்சியாளர் ராம்மோகன்சிங், பல்வேறு அணிகளின் செயலர்கள் வேலு, பாரதி, சண்முகம், ஜெகநாதன், விசுவநாதன், ச... |
இந்தியா | பள்ளி மாணவியை பிரம்பால் அடித்த விவகாரம் எம்.எல்.ஏ., - தே.மு.தி.க., செயலாளர் வாக்குவாதம் | புதுச்சேரி : மாணவியை பிரம்பால் அடித்த பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகருக்கும், தே.மு.தி.க., செயலாளர் செல்வத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் நோயல். இவரது மகள் டெய்சி(14), நெல்லித்தோப் பில் உள்ள இமாகுலேட் பள்ளியில... |
இந்தியா | லாஸ்பேட்டை தொகுதியில் அதிக நலத்திட்டங்கள்: ஷாஜகான் பெருமிதம்“ | புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதியில் அதிக அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் ஷாஜகான் பேசினார். லாஸ்பேட்டை தொகுதி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 650 பயனாளிகளுக்கு பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் இலவச காஸ் அடுப்புகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புகளை... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | பரமக்குடி: கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இலவச மருத்துவ திட்டமான ஐ.சி.ஐ.சி.ஐ., லோம் பார்டு , துறை சார்ந்த அதிகாரிகளால் உண்மையான நோயாளிகள் புறக்கணிக் கப்படுவதை கண்டித்து ,பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகம் முன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ... |
இந்தியா | கடலில் விழுந்து டிரைவர் தற்கொலை | புதுச்சேரி : ஆட்டோ டிரைவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (38). ஆட்டோ டிரைவரான இவர் மனநிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து ஜார்ஜ் நேற்று காலை வெளியேறி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஒதியஞ்ச... |
தமிழகம் | சீருடை வழங்கும் விழா | கீழக்கரை: கீழக்கரை அருகே முள்ளுவாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சீருடை வழங்கும் விழா ,கிராமக்கல்வி குழு தலைவர் நாகவேல் தலைமையில் நடந்தது.கிராம நிர்வாகிகள் சிவலிங்கம்,கணேசன்,நாகராஜன்,விஜயராஜ்,மகளிர் மன்ற தலைவி நாகம்மாள் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் வன்னி முத்து வரவேற்றார். கூடுதல் உதவி தொடக்க கல... |
இந்தியா | காமராஜர் கல்வி நிதியுதவி விரைவில் வழங்க தேசியவாத காங்., வலியுறுத்தல் | புதுச்சேரி : கல்விக் கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசியவாத காங்., வலியுறுத்தி உள்ளது. இது குறித்து தேசியவாத காங்., மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என அறிவித்தது. ஆனால் இதுவரையில் மாணவர்கள... |
இந்தியா | சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் இந்திய கம்யூ., வலியுறுத்தல் | புதுச்சேரி : பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. இந்திய கம்யூ., முத்தியால்பேட்டை கிளையின் 23வது மாநாடு ஜீவானந்தம் இல்லத்தில் நடந்தது. கிளை உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநாட்டுக் கொடியை திருவாதிரை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூ., நகரக்குழு செயலர் ஆனந்த... |
தமிழகம் | ரத்ததான முகாம் | ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யதம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் கல்லூரி நிறுவனர் டாக்டர் அப்துல்லா நினைவு நாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. தலைமை மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராசி மருத்துவமனை சார்ந்த மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.122 பேர் ரத்ததானம் செய்தனர். ஏ... |
இந்தியா | அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் | வானூர் : கோட்டக்குப்பம் அருகே அனுமதியின்றி மணல் எடுத்த 2 டிராக்டர்களை தாசில்தார் பறிமுதல் செய்தார். புதுச்சேரி பகுதியான கருவடிக்குப்பத்தில் இருந்து தமிழக பகுதியான கோட்டக்குப்பத்திற்கு உரிய அனுமதியின்றி மணல் எடுத்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், வானூர் தாசில்தார் வீரப்பன் தலைமையிலான அதிகாரிகள் கோட்டக்குப்பம்- இ.சி. ஆர... |
தமிழகம் | காந்திநகர் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு | திருப்பூர் : திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி கிளப், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழா, திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி கிளப் கட்டடத்தில் நடந்தது; உடனடி முன்னாள் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தா, ரோட்டரி மாவட்ட உதவி கவர்னர் முருகசாமி, கவர்னர் குழு பிரதிநிதி மன... |
இந்தியா | பகுதி நேர ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் | புதுச்சேரி : கோரிக்கையை வலியுறுத்தி, அரசு நூலகத்தில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களில் பகுதி நேர ஊழியர்கள் 85 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந... |
தமிழகம் | நோய் சூழல் கொண்ட பகுதிகளில் புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் குழந்தைகளுக்கு நோய்பரப்பும் சூழலில் உள்ளஇடங்களில் தொடங்கப்படும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்குவது தொடர்கிறது. கல்விக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு கல்விநிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. போட்டியின் காரணமாக சில நிறுவனங்கள் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை... |
இந்தியா | அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதி அம்பேத்கர் மக்கள் படை கோரிக்கை | புதுச்சேரி : அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அம்பேத்கர் மக்கள் படை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அம்பேத்கர் மக்கள் படையின் அமைப்பாளர் மூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் அம்பேத்கர் மக்கள் படை என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்ட... |
இந்தியா | ஜிப்மர் அருகே இறந்த மூதாட்டி யார் | புதுச்சேரி : ஜிப்மர் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத மூதாட்டி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோரிமேடு ஜிப்மர் மெயின் கேட்டில் கடந்த 27ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. இவரைப்பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் தன்வந்திரி நகர் போலீஸ் நில... |
தமிழகம் | ராமேஸ்வரம் கடலில் அந்தோணியார் பவனி | மண்டபம்: ராமேஸ்வரம் கடற்கரையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய விழா,சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் கடந்த ஜூன் 29 ம்தேதி துவங்கியது. ராமேஸ்வரம் பாதிரியார் மைக்கேல்ராஜ், அமல்ராஜ்,தங்கச்சிமடம் பாதிரியார் ஜேம்ஸ் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நேற்று காலை திருப்பலி நடந்தது.இரவில் படகில் அலங்கரிக்கப்பட்ட அந்தோணியார்... |
இந்தியா | ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி :கோரிக்கைளை வலியுறுத்தி வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களின் நலச்சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஓய்வு பெற்ற தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சமாக மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விலைவாசிக்கு ஏற்றபடி ஓய்வூதியத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி தர வேண்டும். பென்ஷனில் இருந்து ஏற்கனவே நீக்கப்... |
இந்தியா | வெற்றி விநாயகர் கோவிலுக்கு அறங்காவல் குழு நியமனம் | புதுச்சேரி : லாஸ்பேட்டை சக்தி நகர் வலம்புரி வெற்றி விநாயகர் கோவிலுக்கு புதிய அறங்காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். லாஸ்பேட்டை சக்தி நகரில் உள்ள வலம்புரி வெற்றி விநாயகர் கோவிலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய அறங்காவல் குழுவின் கவுரவத் தலைவராக தாசில்தார் திருஞானசம்பந்தம், தலைவராக சிவகுருநாதன், துணைத் தலைவராக வேல... |
தமிழகம் | ரயிலில் அடிபட்டு பெண் பலி | பரமக்குடி: பரமக்குடியை அடுத்த கமுதக்குடியில் பெட்டிக்கடை நடத்தி வரும் மணி மனைவி அமுதா(40). இவர் பஸ் ஏறுவதற்காக அவசரமாக ரயில்வே பாதையை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு பலியானார். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். |
இந்தியா | தந்தை தாக்கியதில் மகன் சாவு | புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் தந்தை தாக்கியதில் மகன் இறந்தார்.மேட்டுப்பாளையம், சாணரப் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதி (28). ஆட்டோ டிரைவரான இவர் குடித்து விட்டு வீட்டிற்கு பணம் தராமல் இருந்துள்ளார். ஜோதி வழக்கம் போல் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை, அவரது தந்தை முனுசாமி கண்டித்ததால் அவர்களுக்குள்... |
தமிழகம் | பரிசளிப்பு விழா | பரமக்குடி: பரமக்குடி இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. காசின் முகம்மது தலைமையில், அறக்கட்டளை கவுரவஆலோசகர் ஜலீல், கீழமுஸ்லிம் பள்ளி தாளாளர் சாதிக்அலி முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை மேனேஜிங் ... |
தமிழகம் | போலி பெயரில் பயனாளிகள் குடும்ப அட்டைகள் நீக்கம் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பகுதியில் போலி பயரில் பயனாளிகளின் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க, அரசு சலுகைகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். குடும்ப அட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வீடுகளில் ஆளில்லை என்ற காரணங்களால் பதிவு செய்த ரேஷன் கார்டுகளும் நீக்கம் செய்யப்பட்டுள... |
தமிழகம் | கடல்பாசி சார்ந்த தயாரிப்பில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடு | ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா தீவுகளில் கடல்பாசி சேரிக்க தடை விதித்த நிலையில், அதை சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடல் தாவரமான பாசிகள் மூலம் அகார், கேராஜினான், அல்ஜின் போன்ற வேதிய உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் தயாரித்து வருகின்றனர். இதற்கான தொழிற்சாலைகளுக்கு ராமநாதபுரம், த... |
தமிழகம் | கோயில் சிலை உடைப்பு | உச்சிப்புளி: ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தில் அய்யனார் கோயில் சிலை உடைக்கப்பட்டதால் திடீர் பதட்டம் உருவானது. உச்சிப்புளி அருகே பெருங்குளத்தில் அய்யனார் கோயில் உள்ளது.இங்குள்ள குதிரை சிலை உட்பட சில சிலைகளை சமூக விரோத கும்பலை சேர்ந்த சிலர் உடைத்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் பதட்டம் உருவானது.ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,கமலாப... |
தமிழகம் | ரூ.12.49 லட்சம் கையாடல்: வங்கி செயலாளர் கைது | மதுரை: மதுரையில் கூட்டுறவு வங்கியில் 12.49 லட்சம் மோசடி செய்ததாக, செயலாளராக இருந்த முத்து நேற்று கைது செய்யப்பட்டார். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இதன் செயலாளராக 2007-09ல் இருந்தவர் முத்து(42). இவரும், வங்கி அதிகாரிகள் அய்யப்பன், மணி, ராஜேந்திரனும் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்ததா... |
தமிழகம் | படகுகள் டீசல் அனுமதியில் தளர்வு கூடுதல் திறன் படகுகளுக்கு எதிர்ப்பு | ராமநாதபுரம்: விசைபடகுகளுக்கான டீசல் அனுமதியை அதிகாரிகள் தளர்த்தி உள்ளதால், கூடுதல் இழுவை திறன் கொண்ட படகுகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது அதிகரித்து வருவதால் இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடி படகுகளில் டீசல் கொண்டு செல்ல நிறைய கட்டுபாடுகள் கடைபிடிக்கப்பட்டன. இலங்கையில் புலிகளுக... |
தமிழகம் | புதருக்குள் சிக்கி கழிப்பிடமாக மாறிய குடிநீர் தொட்டி | கோபிசெட்டிபாளையம்: கோபி பார்வதி நகரில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி முட்புதரில் சிக்கி கழிப்பிடமாக மாறி வருகிறது.கோபி நகராட்சி 18வது வார்டு பார்வதி நகரில் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., காளியப்பன், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கிடு ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதி 12 லட்சம் ரூபாய் செலவில், புதிய ம... |
தமிழகம் | 80 அடி அகல ரோடு திறக்கக்கோரி நாளை சாகும்வரை உண்ணாவிரதம் | ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கவும், 80 அடி சாலையை திறக்க கோரியும், ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் தடையை மீறி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை துவக்குகின்றனர்.ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அமைக்கப்படும் மேம்பாலம் பணியை கை விட வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரப் சா... |
தமிழகம் | குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் | தாராபுரம் : தாராபுரம் - கரூர் மெயின் ரோட்டில் கொளத்துப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் டி.குமார பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.தாராபுரம் தாலுகா, கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது டி.குமாரபாளையம் கிராமம். இக்கிராமத்தில் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்க... |
தமிழகம் | காதலர்களிடம் நகை பறித்த சேலம் ஆசாமி சிக்கினான் | சேலம்: ஏற்காட்டில் தனிமையில் ஒதுங்கிய காதலர்களிடம் நகை பறித்தவரை போலீஸார் கைது செய்தனர்.கோடை வாஸ்தலமான ஏற்காடுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். மான்பூங்கா, ஏரி பூங்கா, லேடீஸ் ஷீட், ஜென்ஸ் ஷீட், ரோஸ் கார்டன், பக்கோடா பாயின்ட் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்க, ஏற்காடுக்கு புதுமண தம்பதிகள் மற்றும... |
தமிழகம் | லாரி கவிழ்ந்து இருவர் பலி | ஈரோடு: பவானி அருகே சாம்பல் ஏற்றும் டேங்கர் லாரி கவிழ்ந்ததில், லாரியில் பயணம் செய்த இரு கிளீனர்கள் பரிதாபமாக பலியாயினர்.அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் மகன் சண்முகம் (27). சாம்பல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரி டிரைவர். இவருக்கு துணையாக அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் நவநீதகிருஷ்ணன் (26), குமார் ... |
தமிழகம் | மானாமதுரையில் அசுர வேகத்தில் டிப்பர் லாரிகள்: விபத்துகள் அதிகரிப்பு | மானாமதுரை: மானாமதுரையில் மணல் அள்ளும் டிப்பர் லாரிகள் அசுரவேகத்தில் செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர். மானாமதுரையில், ஏராளமான செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. இதற்கு தேவைப்படும் செம்மண், கரம்பை, சவடு மண்ணை குளம், கண்மாய்கள், ஆற்றின் கரையோரத்தில் இருந்து எடுத்து செல்வர். செங்கல் தயாரிப்பில், மானாமதுரை முன்... |
தமிழகம் | குடிநீர் கேட்டு நகராட்சி தலைவரை சூழ்ந்த மக்கள் : வழக்கமான பதிலை நம்பி கலைந்து சென்றனர் | தாராபுரம்: தாராபுரம் நகராட்சியில் 21, 22வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு நகராட்சி தலைவரை சூழ்ந்து கொண்டனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தலைவர் கூறியதை நம்பி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தாராபுரம் நகராட்சியில் 21, 22வது வார்டுகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. அமராவதி ஆற்றில் தொடர் நீரோட்டம் தடைபட்டுள்ளது.... |
தமிழகம் | மாணவர்களுக்கு விருது | தேவகோட்டை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற தேவகோட்டை பகுதி மாணவர்களுக்கு, லயன்ஸ் சங்கம், சிவகாமி டிரஸ்ட் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். லயன்ஸ் நிர்வாகி பழனியப்பன் வரவேற்றார். தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். நகராத்தார் பள்ளி செயலாளர் ராமநாதன், நகராட்சி துணை... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில் 12 புதிய கழிவறைகள் | ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்காக 12 புது கழிப்பறைகள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. நோயாளிகளுடன் வருபவர்கள் பகல், இரவு நேரங்களில் மருத்துமனையில் முன்புள்ள சிமென்ட் தளத்தில் காத்திருக்கின்றனர்.உள்நோயாளிகளுக்கு அந்தந்த பிரிவில் தனியாக கழிப்பறை வசதி உள்ளது. பார்வையாளர்க... |
தமிழகம் | மாணவர்களுக்கு இடையே மோதல் : ஒருவனுக்கு காயம் | திருப்பூர் : திருப்பூர் கே.எஸ்.சி., பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு இடையே பள்ளியில் நேற்று தகராறு ஏற்பட்டது. இதனால், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சண்டையில், பிளஸ் 1 மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது, பள்ளி வளாகத்துக்கு வெளியே அவ்விரு பிரிவு மாணவர்கள... |
தமிழகம் | இடத்தகராறில் அரிவாள் வெட்டு | மானாமதுரை: கீழப்பசலையை சேர்ந்தவர் மணி (62). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டிக்கும் (40) விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, தகராறு ஏற்பட்டு, இரு குடும்பத்தினரும் அரிவாளால் மோதிக்கொண்டனர். மணி, பாண்டி காயம் அடைந்தனர். எஸ்.ஐ., முத்துராமலிங்கம் விசாரிக்கிறார். |
தமிழகம் | சித்தோடு சந்தைமேட்டில் தெருவிளக்குஅவசியம் | ஈரோடு: சித்தோடு சந்தைமேடு நெடுஞ்சாலை பாலம் அருகே தெரு விளக்குகள் எதுவும் எரியாததால், மக்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன.சித்தோடு சந்தைமேடு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் அருகே 70 அடிக்க... |
தமிழகம் | அண்ணாமலை பல்கலையில் போராட்டம் நடத்திய 12 பேர் கைது | சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் 12 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஓய்வு பெற்ற பதிவாளர், பொறியியல் புல முதல்வர் ஆகியோருக்கு பணி நீட்டிப்பு செய்யக் கூட... |
தமிழகம் | வாலிபர் பலி | மானாமதுரை: மானாமதுரை அருகே கொட்டக்காய்ச்சியேந்தலை சேர்ந்தவர் பழனியப்பன் (27). நேற்று மானாமதுரை வந்திருந்த இவர், இரவு 9.30 மணிக்கு, கிராமத்திற்கு ஆட்டோவில் சென்றார். ரயில்வே காலனி ஜீவாநகரை சேர்ந்த சுரேஷ் (27) ஓட்டினார். வழிவிடுமுருகன் கோயில் அருகே, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது. காயம் அடைந்த பழனியப்பன், மது... |
தமிழகம் | பெண் தீக்குளிப்பு | தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகரில் வசிப்பவர், டாக்சி டிரைவர் பிரகாஷ். மனைவி செல்வி (29). கடந்த 2006 ல் திருமணம் நடந்தது. பிரகாஷ் வீட்டு செலவுக்கு போதிய பணம் கொடுப்பதில்லை. செல்வியின் சகோதரர் குடும்ப செலவிற்கு உதவி செய்துள்ளார். குடும்ப நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், வேதனையடைந்த செல்வி, நேற்று முன்தினம் மாலை மண்ணென்னெய் ... |
தமிழகம் | தமிழகத்தை கலக்கிய ரவுடி கடலூர் போலீசில் சிக்கினார் | கடலூர் : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடியை கடலூர் மாவட்ட போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கடலூர், தஞ்சை, நாகை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள போலீஸ் சரகங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம் பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்... |
தமிழகம் | சுகாதார நிலைய வாயிலில் பாறைகள் | ஈரோடு: சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்புறம் கொட்டப்பட்ட பாறாங்கற்களை பயன்படுத்தி அந்த இடத்தையே முகம் சுழிக்கும் வகையில் மக்கள் மாற்றி வருகின்றனர்.சித்தோட்டில் கவுந்தப்பாடி சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஐந்து டாக்டர்கள் பணிபுரிகின்றனர். ஆப்ரேஷன் தியேட்டர், ஸ்கேனிங் வசதி உள்ளது. சித்தோடு, பேரோ... |
தமிழகம் | மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி | மானாமதுரை: கல்குறிச்சி, கீழப்பசலை, அன்னவாசல், மேலப்பசலை உள்ளிட்ட கிராமங்களில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். சட்டசபை தொகுதி செயலாளர் கணேசன், வட்டார காங்கிரஸ் நிர்வாகி திருமுருகன், இளைஞர் காங்., நிர்வாகிகள் பெரும்பச்சேரி செல்வமாரி, தங்கவேலு, ஆலடிநத்தம் கண்ணன் பங்கேற்றனர். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.