category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஆம்னி பஸ் - டாரஸ் லாரி மோதல்: 23 பேர் படுகாயம்
கடலூர் : கடலூர் அருகே ஆம்னி பஸ் - இரும்பு லோடு டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 23 பேர் படுகாயமடைந்தனர். வேளாங்கண்ணியில் இருந்து ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இரும்பு துகள் ஏற்றிய டாரஸ் லாரி விழுப்புரத்திலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 2 ...
தமிழகம்
3 மாதமாக ஏமாற்றிய குடிநீர் தாராபுரம் அருகே மறியல்
தாராபுரம்:கொளத்துப்பாளையம் அருகே டி.குமாரபாளையத்தில் மூன்று மாதமாக குடிநீர் வராததால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று கரூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.தாராபுரம் தாலுகா கொளத்துப்பாளையம் பஞ்சாயத்து டி.குமாரபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.பொன்னிவாடி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் இக்...
தமிழகம்
ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க கூட்டம்
இளையான்குடி: ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க கூட்டம் இளையான்குடியில் நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். கிளை நிர்வாகி காந்தி வரவேற்றார். மாநில துணை தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஊராட்சி உதவியாளர், மக்கள் நலபணியா...
தமிழகம்
ஈரோட்டில் வக்கீல் சங்கத்தினர் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
ஈரோடு:வக்கீல்களை தாக்கும் போலீஸாரை கண்டித்து ஈரோடு பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.தமிழக உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் நடந்த மோதல் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கை பாதித்தது. இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கோவை, தர்மபுரி, நா...
தமிழகம்
8 பஞ்., களுக்கு 22ல் இடைத்தேர்தல்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு கிராம பஞ்சாயத்துகள், இரண்டு பஞ்சாயத்து யூனியன் வார்டுகள், இரண்டு டவுன் பஞ்சாயத்து வார்டுகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கிவிட்டது. வரும் 22ம் தேதி தேர்தல் நடக்கிறது.சென்னிமலை பஞ்சாயத்து யூனியன் 11வது வார்டு, அம்மாபேட்டை பஞ்சாயத்து யூனியன் ஐந்தாவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடக்...
தமிழகம்
இந்திய கம்யூ., கூட்டம்
சிவகங்கை: இந்திய கம்யூ., ஒன்றிய, நகர பேரவை கூட்டம் சிவகங்கையில் நடந்தது. ஒன்றிய (தெற்கு) செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு செயலாளர் ராஜூ, நகர் செயலாளர் கங்கைசேகரன் முன் னிலை வகித்தனர். குணசேகரன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் தங்கமணி, மாநில குழு உறுப்பினர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.பையூர் காட்டு குடியிருப்பில் வசிப்பவர...
தமிழகம்
நூல் விலை உயர்வு: பனியன் ஏற்றுமதியில் 6.8 சதவீதம் சரிவு
திருப்பூர் : அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் தத்தளித்து வருகிறது. கடந்தாண்டு வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, கடந்த மே மாத வர்த்தகம் 6.8 சதவீதம் குறைந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய வளர்ச்சி இருக்காது என, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத...
தமிழகம்
தென்னை கருப்பட்டி விலை 4 வாரமாக சரிவு
கோபிசெட்டிபாளையம்:தென்னை கருப்பட்டி விலை மூன்று வாரமாக குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் 4.50 ரூபாய் குறைந்தது.திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் நடந்து வருகிறது. கோபி, பெருந்துறை, கடத்தூர், டி.என்.பாளையம்...
தமிழகம்
லயன்ஸ் சங்க கூட்டம்
சிவகங்கை: லயன்ஸ் சங்க கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராதா தலைமை வகித்தார். நிர்வாகி பகீரதநாச்சியப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் சின்னையா, பொருளாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, வரும் 18 ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழகம்
பாரியூரில் ரூ. 7 லட்சத்தில் தங்கத்தேர் நிறுத்துமிடம்
கோபிசெட்டிபாளையம்:பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் நிலையம் கட்டிடப் பணி நடந்து வருகிறது.தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் திருப்பணி இரண்டு ஆண்டுகளாக 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. தங்கம் விலை உயர்வு காரணமாக, ...
தமிழகம்
சாக்கடையில் சரிந்தது பஸ் பயணிகள் தப்பினர்
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டா ண்ட் அருகே, அரசு டவுன் பஸ் சாக்கடையில் இறங்கியது.உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியில் வரும் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் ரோடு வழியாக செல்லும். இந்நிலையில், நேற்று இரவு அமராவதி மானுப்பட்டி செல்லும் 11 சி பஸ், ( டி.என் 38-0381),பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியில் வந்தது. பைபாஸ் ரோட்டில் திரும்பும்போது, சா...
தமிழகம்
தமிழில் பெயர் பட்டியல்
காரைக்குடி: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வலியுறுத்தி, தமிழர் பண்பாட்டு மனித நேய மன்றத்தினர் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன்படி, காரைக்குடி அரசு மருத்துவமனையில் 300 தமிழ் பெயர்கள் கொண்ட பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிய பூங்கா காசிபாளையம் நகராட்சி கவனிக்குமா?
ஈரோடு:காசிபாளையம் நகராட்சி சிறுவர் பூங்கா, விஷ ஜந்துக்கள் மற்றும் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.ஈரோடு கரூர் பைபாஸ் ரோட்டில் காசிபாளையம் நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா உள்ளது. டவுன் பஞ்சாயத்தாக காசிபாளையம் இருந்த காலத்தில் துவங்கப்பட்ட பூங்காவில், சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கு, பெரியவர்கள் உடற்பயிற்ச...
தமிழகம்
22 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள்...விரைவில் பட்டியல் தயார்ரத்து
சிவகங்கை: மாவட்டத்தில் நடந்த நூறு சதவீத ஆய்வில், மேல் முறையீடு இறுதி வாய்ப்பிற்கு பின், 22 ஆயிரம் ரேஷன் கார்டுகள் போலி என உறுதியாகியுள்ளது. இக்கார்டுகளின் பட்டியல் ரேஷன் கடைகளில்,விரைவில் ஒட்டப்படும்.மாவட்டத்தில் 639 ரேஷன் கடைகளில், மூன்று லட்சத்து 73 ஆயிரத்து 713 கார்டுகள் உள்ளன. இக்கார்டுகளுக்கு மாதந்தோறும், 7,000 டன...
தமிழகம்
அனுமதியற்ற கல் குவாரிகளை தடுக்க முடிவு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் அனுமதி இன்றி நடக்கும், குவாரிகளை தடுத்து நிறுத்துவதென, தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்தனர். பூலாங்குறிச்சி ஊராட்சி பகுதியில், போலியாக செயல்படம் குவாரிகளை தடுக்ககோரி, இன்று உண்ணாவிரதம் அறிவித்தனர். இது குறித்த சமாதானக்கூட்டம், திருப்புத்தூர் தாலுக...
தமிழகம்
பன்றிக் காய்ச்சலுக்கு தயார் நிலையில் தனி வார்டு ஈரோடு அரசு மருத்துவமனை உஷார்
ஈரோடு:ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் பன்றி காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நோய் எளிதில் பரவக்கூடியது. கேரள மாநில மக்கள் அதிகம் வந்து செல்லும், ஈரோடு மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், முறையான சிகிச்சையளிக்கவும், ஈரோடு அரசு மருத்துவ...
தமிழகம்
புத்தாக்க பயிற்சி
மானாமதுரை: பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கான புத்தாக்க பயிற்சி, ஊராட்சி ஒன்றியய அலுவலகத்தில் நடந்தது. தேசிய மாதிரி ஆய்வக நிறுவன கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் கிறிஸ்டிஇன்பராஜ் வரவேற்றார். பாதிக்கப்பட்ட தானியங்களை கணக்கிடும் முறை குற...
தமிழகம்
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 19 முதல் வேலை நிறுத்தம்
உடுமலை : ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தக்கோரி தமிழகத்திலுள்ள பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக்குழு, வரும் 19ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் 16 கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகளும், இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இவற்...
தமிழகம்
புன்செய் புகளூர் டவுன் பஞ்.,ல் இடைத்தேர்தல்
வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் காலியாகவுள்ள கவுன்சிலர் பதவிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.வேலாயுதம்பாளையம் புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஏழாவது வார்டு கவுன்சிலராக இருந்த ரமேஷ் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதற்கான இடைத்தே ர்தல் நடத்தப்படாமல் இ...
தமிழகம்
நீலகிரியில் 100 இடங்களில் ராமாயண சொற்பொழிவு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 100 இடங்களில், ராமாயண சொற்பொழிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில் ஆனைகட்டியில் இயங்கும் தர்ம ரக்ஷண சமிதி சார்பில், ராமாயணம் குறித்த சொற்பொழிவாற்றும் சான்றோர்களின் சிறப்பு கூட்டம் ஊட்டி ராகவேந்திரா கோவில் மண்டபத்தில் நடந்தது.
தமிழகம்
உணவுப்படி ரூ. 100 ஆக உயர்வு போலீசார் எதிர்பார்ப்பு
சிவகங்கை: பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசாருக்கு உணவுப்படியை 75 ரூபாயில் இருந்து, 100 ஆக உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்சி மாநாடு, கோயில் விழா என பாதுகாப்பு பணிக்காக போலீசார் வெளி இடங்களுக்கு செல்கின்றனர். இதற்கு ஒரு நாளுக்கு உணவுப்படியாக 75 ரூபாய் தரப்படுகிறது. தவிப்பு: ஆனால், ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை ப...
தமிழகம்
க.பரமத்தி யூனியன் பகுதியில் இலவச காஸ் அடுப்பு வழங்கல்
க.பரமத்தி: க.பரமத்தி யூனியனுக்கு உட்பட்ட மூன்று பஞ்சாயத்துகளில் அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.முன்னூரில் நடந்த விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் சாரதா தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ரமேஷ்பாபு, அரவக்குறிச்சி தாசில்தார் உத்தமன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி மு...
தமிழகம்
9ம் தேதி முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
கரூர்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை ஒன்பதாம் தேதி மாலை 4 மணிக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.எனவே, முன்னாள் படைவீரர், படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர் தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக அ...
தமிழகம்
பயிற்சி முகாம்
ஊட்டி : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், ஊட்டி வணிக தோட்டக்கலை மையத்தில், மொட்டுக்காளான் மற்றும் சிப்பிக்காளான் பயிற்சி முகாம் நடந்தது. வணிக தோட்டக்கலை மைய தலைவர் மற்றும் பேராசிரியர் விஜயகுமார் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார்.ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் மோகன், மொட்டு காளான் மற்றும் சிப்பிக்காளான்...
தமிழகம்
பெண்களுக்கான தொழிற்பயிற்சி கரூரில் ஜூலை 15ல் துவக்கம்
கரூர்: அடைக்கலமாதா அன்னை கல்வி மற்றும் கருணை அறக்கட்டளை, மத்திய அரசின் நேரு யுவகேந்திரா, கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவை சார்பில், மகளிர்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் கரூர் சர்ச் கார்னரில் உள்ள சி.எஸ்.ஐ., தொழிற்பயிற்சி பள்ளியில் ஜூலை 15ம் தேதி துவங்குகிறது.பயிற்சி முகாமில் பெண்களுக்கான தையல் பயிற்சி, அழ...
தமிழகம்
இளைஞர்களை கவர புது திட்டம் தமிழக அரசின் அடுத்த சலுகை
சிவகங்கை: படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக, சி.எம்.இ.ஜி.பி., எனும் சுயதொழில் திட்டத்தை அரசு செயல்படுத்தள்ளது. மாவட்ட தொழில் மையம், கதர் கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் மூலம், பிரதமரின் சுயவேலை உருவாக்கும் திட்டத்தை (பி.எம்.இ.ஜி.பி.,), மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில் திட்ட...
தமிழகம்
குளித்தலை-மணப்பாறை சாலையில் இரண்டு புதிய பாலங்கள் அமைப்பு
குளித்தலை: குளித்தலை - மணப்பாறை சாலையில் 19.25 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பாலங்கள் கட்டப்படுகிறது.குளித்தலை - மணப்பாறை சாலை இருபுறங்களிலும் நான்கு மீட்டருக்கு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலையிலுள்ள குறுகிய பாலங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தற்போது குறுகிய பாலம் அகற்றப்பட்டு சாலையின் அகலத்துக்கு தகுந்தா...
தமிழகம்
தி.மு.க., ஊராட்சி தலைவர் கைது: சூலூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
சூலூர்: இடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, அரசூர் ஊராட்சி தலைவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் போலீஸ் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த அன்பரசு. இவர் சகோதரர் கோவிந்தராஜ். நேற்று...
தமிழகம்
குளித்தலை கட்டளை மேட்டுவாய்க்காலில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
குளித்தலை: குளித்தலை கட்டளை மேட்டு வாய்க்காலில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குளித்தலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நெல், வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாயனூர் தடுப்பணையிலிருந்...
தமிழகம்
போராட்டத்தில் குதித்த எச்.பி.எப்., தொழிலாளர்கள்
ஊட்டி : ஊதிய உயர்வு மற்றும் எச்.பி.எப்.,ஐ புனரமைக்கக் கோரி தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகத்தின் கீழுள்ள எச்.பி.எப்., தொழிற்சாலையை புனரமைக்க வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. புனரமைப்பு தொடர்பாக, மத்திய கனரக தொழிற்சாலை துறை...
தமிழகம்
தொடரும் லஞ்ச வேட்டை; சிக்கும் போலீசார் நேற்று எஸ்.ஐ., கைது
காளையார்கோவில்: அடிதடி பிரச்னையில் வழக்கு பதிய, 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற, சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் எஸ்.ஐ., ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். தேவகோட்டை செவ்வாய்பேட்டை அருகே திருநல்லூரை சேர்ந்தவர் தங்கையா. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சாத்துக்கண்ணுவுக்கும், நிலப்பிரச்னை உள்ளது. இதுகுறித்து தேவகோட்டை...
தமிழகம்
மலேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
கரூர்: தாந்தோணி யூனியன் கோவிந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தேசிய மலேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் கதிர்வேல் துவக்கி வைத்தனர். பள்ளி...
தமிழகம்
டான் டீ மேற்பார்வையாளர் சம்பள உயர்வால் மகிழ்ச்சி
குன்னூர் : அண்ணா அரசு டான் டீ அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் ராயப்பன் தலைமையில் நடத்தப்பட்டது. சங்க துணைத் தலைவர் வள்ளுவநேசன், ஆலோசகர் கதிரேசன், பொருளாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.அரசு தேயிலை தோட்ட கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் நீலகிரி, வால்பாறை பகுதிக...
தமிழகம்
பாரதீய மஸ்தூர் சங்க கிளை கொடியேற்று விழா
கரூர்: கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி கிளையில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் கொடியேற்று விழா நடந்தது.தலைவர் கோபால் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் முத்தையா முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் முனுசாமி வரவேற்றார்.மாவட்ட தலைவர் துரைரவி பங்கேற்று சங்க கொடியேற்றினார். பஞ்சாயத்து தலைவர் ராஜ்கபூர் பெயர்பலகை திறந்து வைத்தார். கட்டு...
தமிழகம்
தொழிலாளர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
குளித்தலை: குளித்தலை யூனியன் அலுவலகத்தில் கரூர் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.முகாமில் நல வாரிய கண்காணிப்பாளர் ஹேமலதா, உதவியாளர் பாலசுப்பிரமணியன், திராவிடமணி ஆகியோர் புதிய உறுப்பினர் சேர்க்கை மனுக்களை பெற்றனர். 30 பேர் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.நலவார...
தமிழகம்
அரசு பஸ் இயக்கினால் சிக்கலில்லை : இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
பந்தலூர் : கூடலூர்-புளியம்பாறை வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க வலியுறுத்தி நேற்று கூடலூர் - கோழிக்கோடு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது.நெல்லியாளம் நகராட்சி 5ம் வார்டு மற்றும் தேவர்சோலை பேரூராட்சி 10ம் வார்டு உள்ளடங்கிய பகுதியாக உள்ளது புளியாம்பாறை கிராமம். இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற...
தமிழகம்
கூவாச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி: புதிய கட்டட திறப்பு விழா
திருநெல்வேலி:கூவாச்சிப்பட்டி பஞ்., யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.மேலநீலிதநல்லூர் யூனியன் கூவாச்சிப்பட்டி பஞ்., யூனியன் நடுநிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள் புதிதாக கட்டடப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் தலைவர் சிங்கப்புலிபாண்டியன் தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்த...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
கூடலூர் : மாற்று திறனுடைய குழந்தை குறித்த விபரங்களை தெரிவிக்க வலியுறுத்தி, கூடலூரில் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடலூர் வட்டா வள மைய மேற்பார்வையாளர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:கிராம பகுதிகளில் மாற்று திறனுடைய குழந்தைகள் குறித்து விபரங்களை அறியும் வகையில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம...
தமிழகம்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் உரிய துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, விரைவான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வாங்கல் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு கால் இழந்த மாணவர் பெரியசாமிக்கு 45 ஆயிரம் ர...
தமிழகம்
விபத்தில் தியாகி பலி
திருப்பூர் : திருப்பூரில், வேன் மோதி மொழிப்போர் தியாகி பலியானார்.திருப்பூர், பூச்சக்காடு பகு தியைச் சேர்ந்தவர் பங்காரு (62); மொழிப் போர் தியாகி. நேற்று காலை மங்கலம் ரோட்டில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த "ஈச்சர்' வேன் (டி.என்.,37 எச் 7174) மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய...
தமிழகம்
கால்வாய் பணி துவக்கம்
கோத்தகிரி : கோத்தகிரியில் கால்வாயை மூடும் பணி நடந்து வருகிறது.கோத்தகிரி பஸ் நிலைய சாலையில், இருப்புறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த இரு மாதங்களுக்கு முன், அகற்றப்பட்டன.இதில், ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை; மாறாக, கண் துடைப்புகாக அகற்றப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையி...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மஞ்சூர் :மஞ்சூர் பகுதியில் 28 தபால் நிலையங்கள், 22 பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் விண்ணப்பங்கள் அளிக்குமாறு குந்தா தாசில்தார் அழைப்பு விடுத்துள்ளார்.குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் ஒப...
தமிழகம்
கொடியேற்று நிகழ்ச்சியில் மோதல் அ.தி.மு.க.,வினர் ஏழு பேர் கைது
கரூர்: கரூரில் அ.தி.மு.க., கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தி.மு.க.,வினர் அளித்த புகாரின் பேரில், அ.தி.மு.க.,வினர் ஏழு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவு கரூர் நகராட்சியின் 22வது வார்டு பகுதி பலிஜவார் நாயுடு தெருவில் அ.தி.மு.க., கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் தி.மு.க.,வினர் நுழைந...
தமிழகம்
பெண்ணை கட்டிப்போட்டு 20 பவுன் நகை கொள்ளை
திருப்பூர் : வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு, மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், சிக்கண்ணா கல்லூரியை அடுத்த விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாரநாத்; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி லட்சுமி பிரியா; ஏழு வயதில் மகன் உள்ளான். வழக்கம்போல...
தமிழகம்
நீலகிரி நெடுஞ்சாலையை அகலப்படுத்த திட்டம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆயத்தம்
குன்னூர் : மேட்டுப்பாளையம் - கூடலூர் கக்கனல்லா வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. நீலகிரியின் பிரதான சாலையாக உள்ள மேட்டுப்பாளையம் - கூடலூர் சாலை பல மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. ஆங்கிலேயேர் காலத்தில் அமைக்கப்பட்ட இச்சாலை ...
தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ஊட்டி : பொது சுகாதாரத்துறை சார்பில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பொது சுகாதாரத்துறை சார்பில் அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நீலகிரியில் முதற்கட்டமாக கலெக்டர் அலுவல ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முக...
தமிழகம்
பள்ளியை சீரமைக்க கோரி கடை அடைப்பு, உண்ணாவிரதம்
திருச்சுழி: திருச்சுழி அருகே கல்லூரணியில் பள்ளியை சீரமைக்க கோரி கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடந்தது. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லூரணி கிராமத்தில் எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி உள்ளது. சுற்று பகுதியில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர் இந்த பள்ளியின் கட்டடங்கள் மோசமாக இருப...
தமிழகம்
வியாபாரிக்கு அரிவாள் வெட்டு வெள்ளகோவிலில் பரபரப்பு
வெள்ளகோவில் : ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், பட்டப்பகலில் பப்ஸ் வியாபாரியின் கையை வெட்டியது, வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளகோவில், காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்குத்தூஸ் (42); இவருக்கு நான்கு மனைவியர். தினமும் பப்ஸ் எடுத்துக் கொண்டு கடை கடையாய் சென்று வியாபாரம் செய்வார். சம்...
தமிழகம்
நுழைவு வாயிலில் வரவேற்பு காட்சி கோபுரத்துடன் செயற்கை பூங்கா
குன்னூர் : நீலகிரியின் நுழைவு சாலையில் உள்ள காட்டேரி அரசு தோட்டக்கலைப் பண்ணையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க செயற்கை பூங்கா அமைக்கும் பணி துவங்கியுள்ளது; இயற்கை காட்சிகளை ரசிக்க காட்சி கோபுரமும் அமைக்கப்படவுள்ளது.குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழப்பண்ணை உள்ளது. 47 ஏக்...
தமிழகம்
பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில் விலைவாசி உயர்வு, மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடந்தது.நகர எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பேச்சாளர்கள் நடிகை சரஸ்வதி, நடிக...
தமிழகம்
ஒரே கூரையில் 6 ஆயிரம் மூ­லிகை தாவரங்கள்
கோத்தகிரி : கோத்தகிரி அருகே 6 ஆயிரம் வகையான மூலிகை செடிகள் கொண்ட பிரமாண்டமான மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இயற்கையை மனிதன் அழிக்க துவங்கியதால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளில் மூலிகை செடிகளின் அழிவும் ஒன்றாகும். இத்தகைய அழிவுகளால், நமது நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மூலிகை செடிகளே மீதமுள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவி...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:நெல்லையில் பெட்ரோல், டீசல், சமையல்வாயு விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெட்ரோல், டீசல், சமையல்வாயு விலையை உயர்த்திய மத்திய அரசு, பெட்ரோல் பொருட்கள் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து பாளை. யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கணேஷ்குமா...
தமிழகம்
மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் மதிப்பீடு முகாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மற்றும் மதிப்பீட்டு முகாம் இன்று (ஜூலை 7) துவங்குகிறது.கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மற்றும் மதிப்பீட்டு முகாம் நடத்தி அறுவை சிகிச்...
தமிழகம்
பர்னஸ் ஆயில் இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்க எதிர்ப்பு
குன்னூர் : பர்னஸ் ஆயில் இன்ஜினை கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படுவதை கண்டித்து, குன்னூரில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், நிலக்கரியை எரிபொருளாக கொண்ட நீராவி இன்ஜின் இயக்கப்படுகிறது. பழமை வாய்ந்த நிலக்கரி இன்ஜினில் அடிக்கடி ஏற்படும் கோளாறு, இழுவை திறன் குறைவு, தரமான ந...
தமிழகம்
நூறு நாள் வேலை திட்டத்தில் குறைந்த சம்பளம் அதிகாரிகளின் ஜீப்பை முற்றுகை
காரியாபட்டி: நூறு நாள் வேலை திட்டத்தில் குறைந்த சம்பளம் வழங்குவதாக பிரச்னை ஏற்பட்டது. சமாதானம் செய்ய முயன்ற அதிகாரிகளின் ஜீப்பை பயனாளிகள் முற்றுகையிட்டனர். காரியாபட்டி கம்பிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மந்திரிஓடையில் நூறு நாள் வேலை திட்டத்தில் பயனாளிகள் கண்மாய், ஊரணி தூர்வாரும் பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்...
தமிழகம்
சிக்னல் இல்லாமல் விபத்து அதிகரிப்பு
ஓசூர்: ஓசூர் அடுத்த மத்திகிரி நான்கு ரோடு சந்திப்பு கூட்டு ரோட்டில் போக்குவரத்து சிக்னல் இல்லாதாதல், அடிக்கடி வாகன விபத்து மூலம் உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது.ஓசூர் அடுத்த மத்திகிரி அருகே ஓசூர், கெலமங்கலம், தளி மற்றும் தேன்கனிக்கோட்டை சாலைகள் சந்திக்கும் கூட்டு ரோடு உள்ளது. இப்பகுதியில் தனியார் பள்ளிகள், ஆர்.டி.ஓ., அல...
தமிழகம்
பாளை.,யில் வீடு,கடைகளில் கொள்ளை வழக்கு:பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி கைது
திருநெல்வேலி:பாளை. பகுதியில் வீடு, கடைகளில் தங்கநகைகள், பொருட்களை கொள்ளையடித்த குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி கைது செய்யப்பட்டார். 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 26 பவுன் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டது.நெல்லையில் பாளை., பெருமாள்புரம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடு, கடைகளில் முன்புறக்கதவுப்பூட்டை உடைத்து தங்...
தமிழகம்
அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சலிங்
கிருஷ்ணகிரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரிகளில் இன்று (ஜூலை 7) மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கராஜீ வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலை மற்றும் அறவியில் கல்லூரியில் 2010-11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந...
தமிழகம்
பாராட்டு விழா
சிவகாசி: சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் ஷேக் தாவூதுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். தமிழாசிரியர்கள் ஜீனத் நிஷா, மணிமாறன், உதவி தலைமை ஆசிரியர் குருநாதன், பள்ளி வாசல் இமாம் நூருல்லா வாழ்த்தினர்....
தமிழகம்
ஐந்தருவியில் படகு சர்வீசுக்கு தாயாராகி புதுப்பொலிவுடன் காணப்படும் படகுகுழாம்.
குற்றாலம்:ஐந்தருவி படகு குழாமில் விரைவில் படகு சர்வீஸ் துவங்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் அபாரமாக துவங்கி 3 மாதங்களும் சுற்றுலா பயணிகளின் வரத்தால் குற்றாலம் குதூகலமடையும். இந்த ஆண்டு சீசன் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி முதல் லேசாக துவங்கியது. பின்பு பருவமழை சரி...
தமிழகம்
கள் இறக்கிய 7 பேர் கைது
ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை பகுதியில் கள் இறக்கிய ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.சிங்காரப்பேட்டை மற்றும் சாமல்பட்டி போலீஸார் திடீர் சாராய ரெய்டுக்கு சென்றனர். அப்போது கள் இறக்கிய மாரி (28), முருகன் (50), சேகர் (47), முருகேசன் (42), ஆறுமுகம் (32), செந்தில்குமார் (32), குமார் (35) ஆகிய ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம்
ஆய்வு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி சார்பாக துப்புரவு தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, நகராட்சி அலுவலக கூடுதல் கட்டடம், நவீன மின் தகன மேடை நடைபெறும் பணிகளை நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் பார்வையிட்டார். மண்டல பொறியாளர் தேவராஜ், நகராட்சி தலைவர் சிவபிரகாசம், துணை தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ரேவதி, ஏ.இ. குணசீல...
தமிழகம்
பேட்டை காயிதே மில்லத் ஆஸ்பத்திரியில்டாக்டர்கள் பற்றாக்குறை; கவுன்சிலர் புகார்
திருநெல்வேலி:பேட்டை காயிதே மில்லத் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக மாநகராட்சி மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் புகார் கூறினார்.நெல்லை மண்டல வார்டுக்குழு கூட்டம் மண்டல தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. உதவிக்கமிஷனர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:ராமலி...
தமிழகம்
புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்
வேதாரண்யம்: வேதாரண்யம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹெல்பேஜ் இந்தியா, முதியோர் நல இயக்கம் சார்பில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடந்தது.மயிலாடுதுறை முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் தலைமை வகித்தார். முதியோர் நல இயக்கத்தலைவர் அருணாசலம் வரவேற்றார். புஷ்பவனம் கிராம கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன் திட்டம் குறித்த...
தமிழகம்
பதவி உயர்வு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத் தில் 3 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் டி.எஸ்.பி.,க் களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் டி.எஸ். பி.,யாக பதவி உயர்வு பெற்று விளாத்திகுளத்துக்கும், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் பொம்மையசாமி டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்துக்கும், வெம்பக் கோட்டை இன்ஸ்பெ...
தமிழகம்
லாரி டிரைவர் திடீர் சாவு
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே லாரி டிரைவர் திடீரென இறந்தார்.வேதாரண்யம் அடுத்த மருதூர் கிராமத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அழகாபுரி காந்தி நகரைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் லாரியில் கீற்றுக்கட்டு ஏற்றி வந்தார். மருதூரில் கீற்றுக்கட்டுகளை இறக்கிவிட்டு அங்குள்ள லாரி ஷெட்டில் படுத்திருந்தார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு...
தமிழகம்
ரத்ததான முகாம்
சிவகாசி: சிவகாசி சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மஸி கல்லூரியில் என்.எஸ். எஸ்., திட்டம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி செயலாளர் தர்மர் தலைமை வகித்தார். முதல்வர் தங்க திருப்பதி வரவேற்றார். டாக்டர் கதிரேசன், ஜேசீஸ் தலைவர் தனசேகரன், இன்ஜினியர் சிவபிரான் வாழ்த்தி பேசினர். 60 மாணவ, மாணவியர் ரத்தம் வழங்கினர். உதவி பேர...
தமிழகம்
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை ராஜபதி கோயில் விஜயம்
திருநெல்வேலி:ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராஜபதி சிவன் கோயிலுக்கு நாளை (8ம் தேதி) விஜயம் செய்கிறார்.ராஜபதியில் கைலாஷ் டிரஸ்ட் சார்பில் கைலாசநாதர் கோயில் (கேது ஸ்தலம்) கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. காளகஸ்திக்கு நிகரான இக்கோயில் மண்டல பூஜையில் பங்கேற்க ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை 8ம் தேதி ராஜபதி செல்கிறார்.இ...
தமிழகம்
மூதாட்டியிடம் நகை பறிப்பு
விருதுநகர்: கல்குறிச்சி நாடார் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் புஷ்பம் (70).இவர் அருப்புக்கோட்டை மதுரை மெயின் ரோட்டில் வேப்பமுத்து பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது தெற்கிலிருந்து வடக்காக டூ வீலரில் வந்த இரண்டு பேர் புஷ்பத்திடம் மந்திரி ஓடைக்கு எப்படி செல்லவேண்டும் எனக் கேட்டனர். அப்போது டூ வீலரில் பின்னால் அமர்ந்திருந்தவர...
தமிழகம்
சோடா பாட்டிலால் தாக்கியவர்கள் கைது
விருதுநகர்: ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (37).இவர் ரைஸ் மில் ரோட்டிலுள்ள பாரில் வரவு செலவு கணக்கு பார்க்கும் வேலை பார்க்கிறார்.தாட்கோ காலனியைச் சேர்ந்த முருகன் (32), சரவணன் (34) இருவரும் கடைக்கு மது குடிக்க வந்தனர். கடையின் ஓரத்தில் முருகன் சிறு நீர் கழிக்கச் சென்றபோது கணேஷ்குமார் கண்டித்ததால...
தமிழகம்
தோட்டக்கலை பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தோட்டக்கலை பண்ணை தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் அரசப்பன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் சிங்கமுத்து, விவசாய தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் சுந்த...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு:ஆசிரியர்கள் அதிருப்தி
தென்காசி:மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்ப படிவம் தட்டுப்பாடு காரணமாக கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள முடியாததால் இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்திய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு பணி தற்போது நடந்து வருகிறது. இ...
தமிழகம்
தவறி விழுந்த மில் ஊழியர் பலி
விருதுநகர்: ராஜபாளையம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் முருகன்(48). இவர் அங்குள்ள மில்லுக்கு வேலைக்குச் சென்ற போது மில் கேட் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்ட இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து அவரது மகன் செந்தில் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்...
தமிழகம்
கறி விருந்தில் இருதரப்பினர் மோதல்; மூன்று பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கறி விருந்தின் போது இருதரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் வீடுபுகுந்து தாக்கியதாக தி.மு.க., கவுன்சிலர் உட்பட மூன்றுபேரை போலீஸார் கைது செய்தனர்.புதுக்கோட்டை டவுன் கோவில்பட்டி மலையடி கருப்பர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இ...
தமிழகம்
பள்ளி வேன் சாய்ந்ததில் மாணவர்கள் லேசான காயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சிலட்டூரில் தனியாருக்கு சொந்தமான விவேகானந்தா நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சிலட்டூர், அறந்தாங்கி, குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 390 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்காக வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.நேற்று காலை 9 மண...
தமிழகம்
ஆசை காட்டி மோசம் 2 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புது சென்னாகுளத்தை சேர்ந்தவர் பாமா(22). அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(21). இவர்களிருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாமாவிடம் சந்திரன் உடலுறவு வைத்துள்ளார். பின் பாமா தன்னை திருமணம் செய்ய சந்...
தமிழகம்
கண்டபடி நேரம் காட்டும் அறந்தை மணிக்கூண்டு
புதுக்கோட்டை: அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் உள்ள மணிகூண்டின்(கிளாக் டவர்) கடிகாரம் பழுதடைந்து கண்டபடி நேரம் காட்டுவதால் பயணிகளுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட் இடநெருக்கடியினால் அல்லோகலப்பட்டு வருகிறது. இருந்தும் பயணிகளின் வசதிக்காக ரோட்டரி சங்கம் சார்பில், மணிக்கூண்டு எழ...
தமிழகம்
தகராறு: 6 பேர் மீது வழக்கு
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் மீரா பீவி(58). நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியை சேர்ந்த சக்திகுரு(48), கணேசன்(35), நாகராஜ்(36) ஆகியோர் மீரா பீவி புதிதாக கட்டிவரும் வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதை மீரா பீவி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த மூவரும், மீரா பீவியை தாக்கி...
தமிழகம்
உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 10ம் தேதிக்குள் மனுத்தாக்கல் செய்ய அழைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை இம்மாதம் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர் சுகந்தி வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பஞ்சாயத்து யூனியன் 13வத...
தமிழகம்
ஆலங்குளம் பகுதியில்வேளாண் அதிகாரிகள் ஆய்வு
தென்காசி:ஆலங்குளம் பகுதியில் திட்ட பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆலங்குளம் வட்டாரத்தில் ஊத்துமலை, சோலைச்சேரி, நெட்டூர் பகுதிகளில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை செயல் விளக்க திடல்கள் மற்றும் மண்புழு கழிவு உர திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நெல்லை வேளாண்மை ...
தமிழகம்
வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி புகார்: கணவன் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவனை போலீஸார் கைது செய்தனர்.ஆத்தூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (36). பால் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரியும் அவருக்கும், அதேபகுதியை சேர்ந்த சித்ரா (33) என்பவருக்கும் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணமானது.குழந்தை இல்லாததால், சக்திவே...
தமிழகம்
செங்கோட்டையில்பாராட்டு விழா
தென்காசி:செங்கோட்டையில் மனித உரிமைகள் கழகம் சார்பில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.செங்கோட்டை வட்டார பகுதி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மனித உரிமைகள் கழகம் சார்பில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா செங்கோட்டை ஏ.வி.எம்.டிரஸ்ட் அலுவலக வளாகத்தில்...
தமிழகம்
மாநகராட்சியில் உதவி கமிஷனர் பணியிடம் மீண்டும் பொறுப்பு அதிகாரிகள் வசம் திணிப்பு
சேலம்: சேலம் மாநகராட்சியில் மீண்டும், மீண்டும் உதவி கமிஷனர் பணியிடங்கள் பொறுப்பு அதிகாரிகள் வசம் திணிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதால், நிர்வாக பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் உதவி கமிஷனர்(பணிகள்), உதவி கமிஷனர் கணக்கு, உதவி கமிஷனர் வருவாய் ...
தமிழகம்
போதை பொருள் ஒழிப்பு பேரணி:செந்திலாண்டவர் பாலிடெக்னிக் பங்கேற்பு
தென்காசி:தென்காசி இயந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த போதை பொருள் ஒழிப்பு பேரணியில் செந்திலாண்டவர் பாலிடக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.தென்காசி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் குற்றாலத்தில் போதை பொருள் ஒழிப்பு தின பேரணி நடந்தது. சுற்றுலா பயணிகள் மத்தியில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
சேலம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சேலம் கிளை சார்பில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் 125 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் உருவான 625 பணியிடங்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உய...
தமிழகம்
காதலர்களிடம் நகை பறித்த சேலம் ஆசாமி சிக்கினான்
சேலம்: ஏற்காட்டில் தனிமையில் ஒதுங்கிய காதலர்களிடம் நகை பறித்தவரை போலீஸார் கைது செய்தனர்.கோடை வாஸ்தலமான ஏற்காடுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். மான்பூங்கா, ஏரி பூங்கா, லேடீஸ் ஷீட், ஜென்ஸ் ஷீட், ரோஸ் கார்டன், பக்கோடா பாயின்ட் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்க, ஏற்காடுக்கு புதுமண தம்பதிகள் மற்றும...
தமிழகம்
திருத்தங்கலில் கண்தான விழிப்புணர்வு முகாம்
சிவகாசி: திருத்தங்கல் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சிவகாசி பட்டாசு நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் டெல் பினா தாமஸ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சண்முக கனி, லயன்ஸ் சங்க தலைவர் தனசேகரன், திருத்தங்கல் லயன்ஸ் சங்க தலைவர் ராதாகிருஷ்ண ராஜா முன்னிலை வகித்தனர். கண்தான மாவட்ட ...
தமிழகம்
நிர்வாகிகள் கூட்டம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மற்றும் எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.சேலம் கிழக்கு புறநகர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் ஆர்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் ...
தமிழகம்
அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டாய நன்கொடை வாங்கும் தலைமை ஆசிரியரை கண்டித்தும், அவரை பணிமாற்றம் செய்யக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையத்தில் அரசு உர்நிலைப்...
தமிழகம்
விபத்து காப்பீடு வழங்கல்
சிவகாசி: சிவகாசியில் என்னார்கே சேப்டி மேட்சஸ் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த தொழிலாளி மாரியப்பன் 2009 ஜூன் 19ல் ஏற்பட்ட சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது குடும்பத்திற்கு தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற் சாலை தொழிலாளர்களுக்கான கூட்டு தனிநபர் விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் ரூ.50,000 காசோலையை மனைவி பாக்கிய லட்சுமியி...
தமிழகம்
பிணம் புதைக்க மயானம் இல்லாததால் விரக்தி தாலுகா அலுவலகம் முன் நூதன போராட்டம்
மேட்டூர்: பிணத்தை புதைக்க மயானம் இல்லாததால் பாதிக்கபட்ட கிராம மக்கள் மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு பாடையுடன் அமர்ந்து, ஒப்பாரி பாடி நூதன போராட்டம் நடத்தினர்.மேட்டூர் தாலுகா, நங்கவள்ளி அருகே, பாசக்குட்டை கிராமத்தில் அருந்ததியர் இனத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மாயான வசதி இல்லாததால் பாசக்...
தமிழகம்
அஷ்டமி பூஜை வழிபாடு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் சுவாமிக்கும், விசாலாட்சியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் பைரவருக்கு 18 வகையான அபிஷேகங்களும், லட்சார்ச்சனையும், பஜனை வழிபாடும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. பைரவர் கமிட்டி ...
தமிழகம்
மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஊழியர் மீது தாக்குதல்
சேலம்: ஓமலூர் அருகே மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி, மின் ஊழியர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.திருவண்ணாமலையை சேர்ந்த மணி(40), ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி மின்வாரிய உதவி பொறியாளர் நிலை 2 அலுவலகத்தில், கட்டணம் வசூலிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் வழக்...
தமிழகம்
தெடாவூரில் 9ல் மின்தடை
சேலம்: தெடாவூர் மின் நிலையத்தில் ஜூலை 9ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி தெடாவூர் துணை மின் நிலையத்தில் வரும் 9ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை தெடாவூர் பகுதியில் உள்ள தெடாவூர், கெங்கவல்லி, ஆணையாம்ட்டி, வீரகனூர், கிழக்கு ராஜாபாளையம், பின்னனூ...
தமிழகம்
சேலம் தெய்வீகம் மண்டபத்தில் கைவினை பொருள் கண்காட்சி
சேலம்: சேலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பிரபலமான கைவினை பொருட்களின் கண்காட்சி துவங்கியுள்ளது.வடகிக்கு பிராந்திய கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறிகள் மேம்பாட்டு நிறுவனத்தின் சென்னை கிளையான பூர்பஸ்ரீ விற்பனை நிலையம், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் ஆதரவுடன் இக்கண்காட்சி சேலம் தெய...
தமிழகம்
நரசோதிப்பட்டியில் குடிசைகள் சேதம்
சேலம்: சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை மர்ம கும்பல் சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.சேலம் நரசோதிப்பட்டி காமராஜர் காலனி பகுதியில் 350 குடிசை வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவற்றில், 150 வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா கிடைக்காதவர்கள் ஆத்திரமடைந்து, ஜூன் 27ம்...
தமிழகம்
சிறைக்குள் மொபைல் ஃபோன் பதுக்கிய கைதியிடம் விசாரணை
சேலம்: சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி பயன்படுத்திய மொபைல் ஃபோனை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(28). இவர் கொலை வழக்கு தொடர்பாக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையில் ரோந்து...
தமிழகம்
சேலம் ராஜகணபதி கோவில் தேங்காய் தொட்டியால் அவதி
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலின் சிதிலமடைந்த நிலையில் உள்ள தேங்காய் உடைக்கும் தொட்டியால் தினமும் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ராஜகணபதி கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்களும், விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வழிபாடு நடத்துகின்றனர்.சேலம் மாநகரில் பிரசித்தி...
தமிழகம்
சிவகிரி அருகே வேன் விபத்து:சிவகாசியை சேர்ந்த 2 பேர் பலி
திருநெல்வேலி:குற்றாலத்தில் இருந்து திரும்பும்போது வேன் விபத்துக்குள்ளானதில் சிவகாசியை சேர்ந்த இருவர் பலியானார்கள்.சிவகாசியை அடுத்துள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த சிலர் ஒரு ஆம்னி வேனில் நேற்றுமுன்தினம் குற்றாலம் வந்தனர். குளித்து விட்டு மாலையில் ஊர் திரும்பினர். மாலை 6.30 மணியளவில் நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே சென்றுகொண்...
தமிழகம்
நெல்லை அருகே கார் விபத்து:கேரளாவை சேர்ந்தவர் பலி
திருநெல்வேலி:நெல்லை அருகே கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கானூரை சேர்ந்த டேனியல் மகள் ஜூலி(22). இவரும் இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சுப்ரியா(30), ஷாலி(14) ஆகியோர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் தங்கள் உறவினரை சந்திக்க வந்திருந...