category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொகுதி தலைவர் முஜிபுர்ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சவுக் கத்அலி, யாசீன், பொதுச் செயலாளர் அப்துல்கரீம் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தல...
தமிழகம்
ரேஷன் கடைகளில் போலி ரேஷன் கார்டுகள் சிவில்சப்ளைத்துறை இன்று இறுதி முடிவு
திண்டுக்கல்: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நூறு சதவீத ரேஷன் கார்டுகள் தணிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து போலி ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை,விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட 14 மாவட்டங்களில் போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக நூறு சதவீத ஆய்வு ...
தமிழகம்
இலவச இயற்கை மருத்துவ முகாம்
கடலூர் : கடலூர் யோகம் தொண்டு நிறுவனம் தேசிய இயற்கை மருத்துவக் கழகம் (புனே) சார் பில் கடலூர் ஒன்றியம் சாத்தங்குப்பத்தில் இலவச இயற்கை மருத்துவ முகாம் நடந்தது. தொண்டு நிறுவன செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். ராமாபுரம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் இலவச இயற்கை மருத்துவ முகாமை துவக்கி வைத் தார். சிறப்பு விருந்தினர் சிதம்பரம் அண்ணா...
தமிழகம்
பழக்கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை பழக்கடைகளில் சுகாதரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பழக்கடைகளில் பழங்கள் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா என அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்...
தமிழகம்
அடையாளம் தெரியாதவர் மரணம்
கடலூர் : திருச்சி அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாதவர் இறந்தார். திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் - சமுத்திரம் இடையேயான ரயில் பாதையில் நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்தார். ஊதா நிற கட்டம் போட்ட கைலியும், நீல நிற அரைக்கை சட்டையும், கரும் பச்சை நிற கால்சட்டையும் அணிந்திருந்தார். சட்...
தமிழகம்
கழிவு நீர் அகற்றும் லாரிகள் பழுது திண்டிவனம் மக்கள் அவதி
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் கழிவு நீர் அகற்றும் லாரிகள் பழுதடைந்துள்ள தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.திண்டிவனம் நகராட்சிப் பகுதியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின் றனர். நகரில் 30 ஆயிரம் வீடுகள் உள்ளன. நகரில் உள்ள வீடுகளில் உள்ள கழிவறைகள் நிரம்பியதும், கழிவு நீரை அகற்ற திண்டிவனம் நகராட்சியில் 2 லாரிகள் ...
தமிழகம்
விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்
கடலூர் : கடலூரில் விவசாயிகள் குறை கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் 9ம் தேதி நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் 9ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் தோட்ட...
தமிழகம்
கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம்
கடலூர் : அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க வேன் பிரசார வாயிற் கூட்டம் கடலூர் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன் நடந்தது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பென்ஷனை அரசு ஏற்க வேண்டும். வேலை பளு தண்டனைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்ப...
தமிழகம்
அரசு அலுவலக வளாகத்தில் திறந்த நிலையில் தபால் பெட்டி
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பி.டி.ஓ., அலுவலக வளா கத்தில் உள்ள தபால் பெட்டி எந்த நேரமும் திறந்த நிலையில் உள்ளது. உளுந்தூர்பேட்டை ஒன்றிய அலுவலக வளா கத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்களின் கடிதப் போக்குவர...
தமிழகம்
புவி வெப்பமாதல் விழிப்புணர்வு முகாம்
கிள்ளை : சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரம் மற்றும் டி.எஸ்.பேட்டையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராமநாதன் வரவேற்றார். ஊராட்சி தலைவர்கள் வாசுசரவணன், ...
தமிழகம்
குடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்சல் மோட்டார் பறிமுதல்
கடலூர் : கடலூர் முதுநகரில் குடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய மோட்டாரை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடலூர் முதுநகர் 42வது வார்டில் சுண்ணாம்புக்கார தெருவில் குடிநீர் குழாயில் மோட்டார் வைத்து தண் ணீர் உறிஞ்சப்படுவதால் பெரும்பாலான வீடுகளில் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். இது குறித்த புகாரின...
தமிழகம்
வாயிற் கூட்டம்
பண்ருட்டி : சி.ஐ.டி.யு., சார்பில் பண்ருட்டி அரசு போக்குவரத்து பணிமனை கிளை முன் ஊதிய மாற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடந்தது. பாஸ்கரன் தலைமை தாங்கினார். செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். பணிமனை செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். இதில் மாநிலக் குழு விஜயகோபால், பொருளாளர் சகாதேவன், துணை செயலாளர் வேலு உள்ளிட்டோர்...
தமிழகம்
பெண்ணாடம் கோவில் திருக்குளத்தின் புனிதத்தன்மை காக்கப்படுமா?
பெண்ணாடம் நகரின் மையத்தில் உள்ள பிரளயகாலேஸ்வரர் திருக் குளம் கழிவுநீர் குளமாக உள்ளதை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடத்தில் புகழ்பெற்ற பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. பிரளயம் வந்தபோது நந்தி திரும்பி நுழைவு வாயிலை பார்த்து ஊரை காப் பாற்றியதாக வரலாறு உள்ளது. தேவேந் திரனின் வாகனமான பெண், பசு மற்றும் ஐராவ...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள், மேற் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். கணக்கெடுப்பு பணிகளை ஜூலை 15 க்குள் முடிக்கவும், படிவம் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களை நிர்த்தி செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மக்கள் தொ...
தமிழகம்
பெண்ணை கட்டிப்போட்டு 20 பவுன் நகை கொள்ளை
திருப்பூர்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு, மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர், சிக்கண்ணா கல்லூரியை அடுத்த விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாரநாத்; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி லட்சுமி பிரியா; ஏழு வயதில் மகன் உள்ளான். வழக்கம்போல்...
தமிழகம்
சிலிண்டர் வழங்கும் விழா
வருஷநாடு: க.மயிலை ஒன்றியம், சிங்கராஜாபுரம் ஊராட்சியில் காஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் வசந்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மூக் கையா பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புக் களை வழங்கினார். ஒன்றியகுழுத் தலைவர் தமிழரசன், வட்ட வழங்கல் அலுவலர் அமர் நாத், தி.மு.க., ஒன்றியச் செயலாளர் இளவழுதிப்பாண்டி...
தமிழகம்
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி அலுவலர் அறிவிப்பு
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் வரி செலுத்தப்படாத குடிநீர் இணைப்பு துண் டிக்கப்படும் என செயல் அலுவலர் அறிவித் துள்ளார். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண் டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்டவை...
தமிழகம்
பிரிவு உபச்சார விழா
வருஷநாடு: வருஷநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்தவர் ராஜ். இவர், பணி ஓய்வு பெறுவதால் பிரிவு உபச்சார விழா நடந்தது. ஒன்றியத்தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் ராதாகிருஷ்ணணன், வருஷநாடு வங்கி செயலாளர் பார்த்தசாரதி, மயிலாடும்பாறை வங்கி செயலாளர் திருமாலை,கூட்டுறவு சங்கத்தின் ம...
தமிழகம்
சுப உப்பலவாடியில் பூட்டிக் கிடக்கும் சமுதாயநலக் கூடம்
கடலூர் : கடலூர் அருகே சுனாமி நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடப் பணிகள் முடிந்தும் மக்கள் பயன் பாட்டிற்கு வராமல் பூட் டிக் கிடக்கிறது. கடலூர் ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்டது சுபஉப்பலவாடி கிராமம். இக்கிராமம் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பாதிக்கப் பட் டது. அதற்காக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வீடுகள் உள்ளிட்...
தமிழகம்
குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சல்
கடலூர் : கடலூர் அருகே குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு வயலுக்கு தண்ணீர் பாசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகியது தெரியவந்துள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரம் மலைப் பகுதியிலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப் பட்டு கடலூர் நக...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்த மனு விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண் ணப்பங்கள் வழங்கும் பணியை ஆர்.டி.ஓ., முத்துசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். விழுப்புரம் மாவட்டத் தில் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இவை கலெக்டர் ஆர்.டி. ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி,...
தமிழகம்
தேனியில் பெண் மாயம்
தேனி: அரண்மனைப்புதூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சுகந்தி (30). இவர், நகைகளை அடகு வைத்து விட்டு வருவதாக கூறி வங்கிக்கு சென்றார். திரும்ப வீட்டிற்கு வரவில்லை. ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
தீவனத்திற்காக இடம் பெயரும் தென்மாவட்ட செம்மறி ஆடுகள்
சிறுபாக்கம் : கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தென் மாவட்ட செம்மறி ஆடுகள் தீவனத்திற்காக இடம் பெயர்கின்றன. தமிழக தென் மாவட் டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மலை ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் ஆடு வளர்ப்பின...
தமிழகம்
தீ மிதி திருவிழா
கிள்ளை : சிதம்பரம் அருகே நவாப்பேட்டை கன்னி முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது. சிதம்பரம் அருகே நவாப்பேட்டை கன்னி முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தீ மிதி விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கன்னிகாபரமேஸ்வரி மற்றும் பேச்சியம்மனுக்கு தினசரி அபிஷ...
தமிழகம்
திருக்கோவிலூர் பேரூராட்சியில் செயல்அலுவலர் இல்லாத அவலம்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு முழுநேர செயல்அலுவலர் நியமிக்கப்படாததால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அலைகழிக்கப் படுகின்றனர். திருக்கோவிலூர் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் 47 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நகராட்சி அள விற்கு வளர்ந்துவிட்ட இப் பேரூராட்சிக்கு கடந்த இரண்டு மாதங்களாக செய...
தமிழகம்
வைகை அணை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை இல்லை... வாய்பில்லாத நிலைவசதிகள்
ஆண்டிபட்டி: வைகை அணை பகுதியில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் போதிய வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்ட பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணையை தவறாமல் பார்த்து செல்கின்றனர். தொலை தூரப்பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணி...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
திண்டிவனம் : திண்டிவனத்தில் மாற்றுத் திறனுடையோ ருக்கான கல்வி விழிப் புணர்வு பேரணி நடந்தது.மாவட்ட அனைவருக் கும் கல்வி இயக்கம், சென்னை வி.எக்செல் கல்வி அறக்கட்டளை இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். திண்டிவனம் காந்தி திட லில் துவங்கிய பேரணி யில் திண்டிவனம் காமாட்சி விலாஸ் நடுநி லைப் பள்ளி, நாகம்மாள் நடுநிலைப் பள்ளி,...
தமிழகம்
அனுமதியில்லாத சைக்கிள் ஸ்டாண்ட் மூட கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
கம்பம்: கம்பத்தில் அனுமதியின்றி செயல்படும் சைக்கிள் ஸ்டாண்ட்களை மூட கவுன் சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கம்பம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்தது. ஓவர்சீயர் பன்னீர்செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவாதம் வருமாறு: சிவமணி: மகப்பேறு உதவி செக்கை மாற்ற வங்கியி...
தமிழகம்
திண்டிவனத்தில் சிக்னல் இயங்கும் முன்பே சேதம்
திண்டிவனம் : திண்டிவனத்தில் போடப்பட்டுள்ள சிக்னல் இயக்குவதற்கு முன்பே சேதமடைந்தது.திண்டிவனம் நகரில் போக்குவரத்து சீராக நடக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு சிக்னல்கள் அமைக்கும் பணி நடந்தது. திண்டிவனம் நேரு வீதியில் காமராஜ் சிலை, ஆர்.எஸ்., பிள்ளை தெரு, செஞ்சி பஸ் நிலையம், காந்தி சிலை மற்றும் காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்க ப...
தமிழகம்
போடியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
போடி: போடி நகராட்சி காலனியில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 100 க்கும் மேற்பட்ட வீடுகளை நகராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது. போடி நகராட்சி காலனியில் துப்புரவு பணியாளர்களுக்காக 60 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட வீடுகளில் 48 வீடுகளில் மட்டும் பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். மீதமுள்ள 12 வீடுகள் பூட்டிய...
தமிழகம்
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
விழுப்புரம் : அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய பயணியை போலீசார் கைது செய்தனர். தளவானூரிலிருந்து நேற்று காலை விழுப்புரம் நோக்கி அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் பூந்தோட் டத்தைச் சேர்ந்த ராஜா(22), பஸ் படியில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதனை கண்டக்டர் ஜோசப்(48) தட்டிக் கேட்ட தால் ஆத்திரமடைந்த ராஜா அவரை தாக்கினார...
தமிழகம்
விபத்துகளை தவிர்க்க ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் : மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நான்கு வழிச்சாலை தமிழகத்தில் அதிகளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 75 கி.மீ., தூரத்திற்கு உள்ளது. இந்த சாலையில் அதிகளவு விபத்துகள் நடந்து வருகின்றன. விபத்துகளை தவிர்க்கவு...
தமிழகம்
மூணாறில் டாடா கம்பெனி வசம் உள்ள நிலத்தை கையகப்படுத்த தடை
மூணாறு: மூணாறில் டவுன்ஷிப் அமைப்பதற்காக டாடா கம்பெனி வசம் உள்ள நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள தேயிலை எஸ்டேட்கள் அனைத்தும் குத்தகை அடிப்படையில் டாடா கம்பெனி வசம் உள்ளது. இதில் பணியாற்றி தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி கே.டி.எச்.பி., கம்பெனி என செயல்...
தமிழகம்
நியூட்ரினோ ஆய்வுக்கூடம் நாளை கலந்தாய்வு
தேனி: நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைப்பது தொடர் பாக கிராம மக்கள் பங் கேற்கும் கலந்தாய்வு கூட் டம் நாளை நடக்கிறது. உத்தமபாளையம் தாலுகா பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைய உள்ளது. இது குறித்து பொட்டிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் கருத்துக்களை கேட்பதற்கான கலந்தாய்வு கூட்டம் நாளை மாலை 3.30 மணிக்கு ரா...
தமிழகம்
இலவச பட்ட படிப்புகள்
தேனி: வசதியில்லாதவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உட்பட 100 பேருக்கு இலவசமாக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை நடந்து வருகிறது. ஜவகர் பவுண்டேசன் மற்றும் ரிசர்ச் அறக் கட்டளை சார்பில் நடப்பு ஆண்டு தேனி மாவட் டத்தை சேர்ந்த ஏழைகள், ஆதரவற்றோர், கைம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 100 பேருக்கு கட...
தமிழகம்
பெற்றோருக்கு அடங்கி நடக்கவேண்டும்
தேனி: தாய், தந்தைக்கு அடங்கி நடப்பவன் அகில உலகத்தையும் அடக்குவான் என திருச்சி கல்யாணராமன் பேசினார். தேனி வசந்தமஹாலில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது. இதில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது; தருமனிடம் எமன் கேள்வி கேட்டான். வீட்டில் இருப்பவனுக்கு யார் தோழன்? மனைவி. சாப்பாடு போடும் போது அவள் தாய், யோசனை சொல்லும் போத...
தமிழகம்
மதிக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் செயல்பட வேண்டும்
விழுப்புரம் : கிராம மக்கள் மதிக்கும் வகையில் ஊராட்சி தலை வர்கள் சேவை ஆற்றிட வேண்டும் என்று எக்ஸ் னோரா அமைப்பின் இயக் குனர் நிர்மல் பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் விழுப்புரம் கலெக் டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளையும் சிறந்த ஊராட்சிகளாக மாற்றுவது குறித்து பய...
தமிழகம்
பிரிவு உபச்சார விழா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ., மற்றும் பம்ப் ஆபரேட்டருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. தி.மு.க.,ஒன்றிய செயலாளர் வைகை சேகர் தலைமை வகித்தார். பி.டி.ஓ., ராஜகோபால், ஒன்றிய துணைத்தலைவர் பன்னீர்செல்வம், ஏத்தகோயில் ஊராட்சி தலைவர் சொக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெறும் பி.டி.ஓ., கூடாண்டி, ...
தமிழகம்
பிக்பாக்கெட் அடித்தவர் கைது
தியாகதுருகம் : வாலிபரிடம் பிக்பாக்கெட் அடித்தவரை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் அடுத்த சிங்காரப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(27). இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அங்கு வந்த சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூரை சேர்ந்த சங்கர்(24) என்பவர் பாண்டியன் பாக்கெட்டில் வைத்திருந்...
தமிழகம்
மண்டலாபிஷேகம்
கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் விழா நடந்து வருகிறது. சுவாமி சுந்தரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அபிஷேகம், ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட் டது. பஜனை மற்றும் பாராயண நிகழ்ச்ச...
தமிழகம்
அட்வகேட் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு
செஞ்சி : செஞ்சி அட்வகேட் அசோசியேஷனுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.செஞ்சி அட்வகேட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு வக்கீல்கள் ஆத்மலிங்கம், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் புதிய தலைவராக வக்கீல் விஜயகுமார், துணை தலைவர் செல்லபாண்டியன், செயலாளர் தர்மலிங்கம், துணை செயலாளர் சுதாகர், பொருளாளர் ...
தமிழகம்
ஒருவர் பலி
தேனி: ஆண்டிபட்டி அருகே அனுப்பபட்டியை சேர்ந்தவர் ராஜகோபால் (58). இவர், மதுரை ரோட்டில் எட்டுக்கண் பாலம் அருகே நடந்து செல்லும் போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் பலியானார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம்
ஒருவர் கைது
தேனி: அனுமந்தன்பட் டியை சேர்ந்த மார்க்கண் டேயன் (38) ரோட்டில் நடந்து செல்லும் போது, கோவிந்தன்பட்டியை சேர்ந்த முகமதுஷெரீப் (62) இவரை விபச்சார பெண்களிடம் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். போலீசார் முகமதுஷெரீபை கைது செய்தனர்.
தமிழகம்
உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட் வரும் 9ம் தேதி முதல் மூடப்படுகிறது
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட் மேம்பாலம் கட்டும் பணிக்காக வரும் 9ம் தேதி முதல் மூடப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு அடிக்கடி கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 14 கோடி ரூபாய் செலவில் மேம்ப...
தமிழகம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடங்க முடிவு
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதலில் சேர்ந்த மாணவர்கள் வரும் பிப்ரவரியில் ஐந்தாம் ஆண்டு இறுதி தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் தேன...
தமிழகம்
திருமணத்தை தடுக்க கர்ப்பிணி காதலி திடீர் உண்ணாவிரதம்
செஞ்சி : காதலன் ரகசிய திருமணம் செய் வதை அறிந்து, கர்ப்பிணி காதலி, அவர் வீட்டு முன் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் கெஜலட்சுமி (21). இவரும், கணக்கன் குப்பம் உறவினர் முருகன் மகன் பிரகாஷும் (22), கடந்த ஓராண் டாக காதலித்து வந்தனர். கெஜலட்சுமி எட...
இந்தியா
இந்திய அணிக்கு புதிய மானேஜர்
ராஞ்சி: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜராக ரஞ்சிப் பிஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 18 ம் தேதி காலேவில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணிக்கு ரஞ்சிப் பிஸ்வால் மானேஜராக நியமிக்கப...
தமிழகம்
வயிற்றுப்போக்கால் குழந்தை சாவு
சங்கராபுரம் :சங்கராபுரம் அடுத்த மணலூர் கிராமத்தில் திடீர் வயிற்றுப் போக் கால் இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட் டம் சங்கராபுரம் அடுத்த மணலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பலருக்கு திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. மணலூர் கூலித் தொழிலாளி சபாபதி, இவரது மன...
தமிழகம்
எருமப்பட்டியில் நாளை மின்தடை
நாமக்கல்: எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், ஜூலை 8ம் தேதி எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி ...
தமிழகம்
இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூல் டி.ஆர்.ஓ., விசாரணைக்கு உத்தரவு
தேனி: இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூல் செய்வதாக தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் மீது வந்த புகாரையடுத்து, புகார்தாரர்கள் முன்னிலையில் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி நேரில் விசாரணை நடத்த உள்ளார்.  தேனி வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிபவர் செல்வம். இடைத்தரகர்கள் மூலம் சட்டவிதிகளுக்கு முரணாக இவர், பொதுமக்களை ஏமாற்றி முறைகேடாக ...
தமிழகம்
விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு இரண்டு பேர் உயிருடன் மீட்பு
விழுப்புரம் : விழுப்புரத்தில் செப்டிக் டேங்கிற்குள் இறங்கிய கட்டடத் தொழிலாளி, விஷ வாயு தாக்கி இறந்தார். மேலும் இருவர், மூச்சுத் திணறி மயக்கமடைந்தனர். விழுப்புரம் ஆசாகுளம் என்.எஸ்.கே., நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டட மேஸ்திரி. இவருடன் இரண்டு தொழிலாளர்கள், நேற்று காலை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே உள...
தமிழகம்
போடியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி
போடி: போடி அருகே பி. தர்மத்துப்பட்டியில் வாந்தி, வயிற்று போக்கால் ஒருவர் பலியானார். 40 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பி. தர்மத்துப்பட்டி. இப்பகுதியில் சுத்திகரிக்கப்படாமலும், போதுமான அளவு குளோரின...
தமிழகம்
தாழ்வாக பறந்த விமானத்தால் ப.வேலூரில் பெரும் பரபரப்பு
நாமக்கல்: ப.வேலூர் அடுத்த குன்னமலையில் நேற்று காலை தாழ்வாக பறந்து சென்ற விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் ப.வேலூர் அடுத்த குன்னமலை, சித்தம்பூண்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில், தங்கத்தைவிட விலை உயர்ந்த பிளாட்டினம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விலை உயர்ந்த பிளாட்டினம் தோண்டி எடுக்கும் போது, அ...
தமிழகம்
நான்கரை மணி நேரம் மின்தடை: வணிக நிறுவனத்தினர் அவதி
நாமக்கல்: பரமத்தி சாலையில், நேற்று மாலை 3 மணியிலிருந்து இரவு 7. 30 மணி வரை திடீர் மின்தடை ஏற்பட்டது. நகரின் ஒரு பகுதி முழுவதும் இருளில் மூழ்கியதால், வணிக நிறுவனத்தினரும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.நாமக்கல், பரமத்தி சாலையில் உள்ள துணை மின்நிலையத்திலிருந்து நகரப் பகுதிக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது. இந்த துண...
தமிழகம்
கிணற்றில் தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பலி
மோகனூர்: கிணற்றில் தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.தர்மபுரி மாவட்டம் மாவுட்டிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி (33). கட்டிட மேஸ்திரியான அவர் மோகனூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில், கட்டிட பணிக்காக அங்கேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு சக பணியாளர்களுடன் தூங்கிய பொன்னுசாமியை திடீரென காணவில்லை.அதி...
தமிழகம்
டாஸ்மாக் பார், பூக்கடையில் தாக்குதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ப.வேலூர்: ப.வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, டாஸ்மாக் பார் மற்றும் பூக்கடைகளை நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ப.வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டி பார் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10. 30 மணியளவில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் பாரை அடித்து நொ...
தமிழகம்
ஆழியாறு அணையில் படகு சவாரி ரத்து
பொள்ளாச்சி: ஆழியாறு அணைக்கட்டு பகுதியில், பருவ மழை பொழிவதால் அணையில் படகு இயக்குவது பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை சீசன் தீவிரமடைந் துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நான்கு நாட்களாக மழை பொழிவு அதிகளவில் உள்ளது. ஆழியாறு அணைக்கட்டு பகுதியில், நேற்று காலை 8.00 மணி வரை 10.5 மி.மீ., மழை பெய்துள்ளது. மழை ...
தமிழகம்
வேலைவாய்ப்பு புதுப்பிக்க சலுகை
சென்னை: வேலைவாய்ப்பு பதிவை 2006ம் ஆண்டு முதல் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, ஒரு முறை புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2006, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு முறை சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2009ம் ஆண்டு...
தமிழகம்
குழந்தை தொழிலாளர்கள் கண்காணிப்பு: கலெக்டர்களுக்கு உத்தரவு
திண்டுக்கல்: சுமங்கலி திட்டத்தின் கீழ், குழந்தை தொழிலாளர்கள் தனியார் மில்களில் பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை கண்காணிக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நூற்பு மில்களில் இளம் பெண்கள் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் இதற்காக வேன்கள...
இந்தியா
இலங்கை டெஸ்ட்: ஜாகிர் கான் அவுட்
புதுடில்லி: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து, தோள்பட்டை காயம் காரணமாக ஜாகிர் கான் நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் அபிமன்யு மிதுன் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 18 ம் தேதி காலேவில் துவங்குகிறது. இத்த...
General
ஒலிம்பிக் தூதராக உசேன் போல்ட் நியமனம்
மும்பை: சிங்கப்பூரில் நடக்க உள்ள இளைஞர் ஒலிம்பிக் தொடரின், தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் வரும் ஆக. 14 ம் தேதி முதல் 26 வரை இளைஞர் ஒலிம்பிக் தொடர் நடக்க உள்ளது. இத்தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில், இதன் தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு பீஜிங...
தமிழகம்
மரத்தில் கார் மோதி ஊராட்சி தலைவர் பலி
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே மரத்தில் கார் மோதி ஊராட்சி தலைவர் பலியானார். மடத்துக்குளம் ஒன்றிய துங்காவி ஊராட்சியை சேர்ந்தவர் நாட்ராயன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஊராட்சி தலைவராக உள்ளார். இவருடைய சொந்த ஊரான காரத்தொழுவுத்தில் இருந்து உடுமலை நோக்கி காரில் சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில...
இந்தியா
11ம் தேதி முழு சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியாது
இந்தூர்: வருகிற ஜூலை 11ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. ஆனால் இந்த அரிய நிகழ்வை இந்தியாவில் காண முடியாது. இந்த சூரிய கிரகணம் 11ம் தேதி இரவு 10.39மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 3.27 மணிக்கு நிறைவடையும். இந்த அரிய நிகழ்வை அர்ஜென்டினா, சிலி உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் காணமுடியும். அன்றைய தினம் அமாவாசை என்பதால் ...
இந்தியா
மாவோயிஸ்டு பந்த் : ரயில்வே பாதுகாப்பு தீவிரம்
கோல்கட்டா :மாவோயிஸ்டு முக்கிய தலைவர் ஆசாத் (எ ) ராஜ்குமார் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, மாவோயிஸ்டுகள் 48 மணி நேரம் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து நக்சல் தாக்கம் உள்ள மாநிலங்களில் ரயில்வே அதிக உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம...
இந்தியா
இந்திய எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர் : இந்திய எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டாரில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2 நாட்களில் 2வது முறையாக எல்லையில் பாக்., ராணு...
தமிழகம்
ஆத்தூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் குடிநீர் வினியோகத்தை‌ முறைப்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஆத்தூர் நரசிங்கபுரம் 3ம் நிலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1 மாத காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படு்த்தக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்ற...
தமிழகம்
ஆத்தூரில் புள்ளி மான் மர்ம சாவு
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் புள்ளி மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஆத்தூர் தியாகனூர் பகுதி இந்திரநகரில் புள்ளி மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. புள்ளி மான் மர்ம சாவு குறித்து வன இலாகாவினர் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
தமிழகம்
செம்மொழி மாநாடு : வாசகர்கள் அனுப்பிய கவிதை, கட்டுரைகள்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, தினமலர் தனி இணையதளத்தை உருவாக்கி இருந்தது. தமிழ் ஆர்வலர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுடைய படைப்புகளை அனுப்புமாறு கேட்டிருந்தோம். ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் தங்கள் படைப்புகளை அனுப்பி இருந்தனர். பெரும்பாலோருடைய படைப்புகள் சிறப்பாக இருந்தன. இருப்பினும் உலக...
தமிழகம்
ஆண்டு விழா
சென்னை: சேலம் ஸ்ரீஅக்ஷயம் தொண்டு நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் வரதகுட்டி மற்றும் அச்சங்க உறுப்பினர் கி.கோபிநாத் ஆகியோர் மாற்று திறனாளி ஒருவருக்கு, மூன்று சக்கர வண்டி வழங்கினர். உடன், ராஜபார்த்திபன், மணிலால் மற்றும் பலர்.
தமிழகம்
உதவி
சென்னை: மஞ்சு பவுண்டேஷன்ஸ்(பி) லிட் நிறுவனம் சார்பில், அந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி வித்யாசாகர், பிரேம வாசம் இல்லக் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக வாஷிங் மிஷின் வழங்கினார்.
தமிழகம்
வைர விழா
சென்னை: அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்க சென்னை-2, மண்டல வைர விழா, மயிலாப்பூரில் உள்ள சங்க ஸ்வஸ்திக் மண்டபத்தில் நடந்தது. தலைவர் பாலசுப்ரமணியன், செயலர் ஆனந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
தமிழகம்
இட ஒதுக்கீடு
சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் கல்லூரி அனுமதி சீட்டை, நித்தின்(டேபிள் டென்னிஸ்), எஸ்.ஹரினி(சதுரங்கம்) ஆகியோருக்கு பல்கலைக் கழக வேந்தர் பச்சைமுத்து வழங்கினார். உடன், இயக்குனர் ஆர்.பால சுப்ரமணியன், பதிப்பாளர் என்.சேதுராமன் மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் ...
தமிழகம்
எஸ்.எம்.எஸ்., சேவை
சென்னை: வாக்காளர் பட்டியல் விவரங்களை, மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா சென்னையில் துவக்கி வைத்தார்.
தமிழகம்
உதவித் தொகை
சென்னை: இ.எஸ்.ஐ., திட்டத்திலுள்ள ராஜீவ்காந்தி சிராமிக் கல்யாண் யோஜனா என்ற வேலை இழந்தோருக்கான உதவித்தொகையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் சென்னையில் வழங்கினார். உடன் தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலர் பிரபாகர் ராவ்,ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா,இ.எஸ்.ஐ., தமிழ்நாடு கூடுதல் கமிஷனர் பரசுராமன்.
தமிழகம்
அடையாள அட்டை வழங்கு விழா
சென்னை: தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., அடையாள அட்டையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் சென்னையில் வழங்கினார். உடன் தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலர் பிரபாகர் ராவ்,ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா,இ.எஸ்.ஐ., தமிழ்நாடு கூடுதல் கமிஷனர் பரசுராமன்.
தமிழகம்
கண்காட்சி
சென்னை: இந்திய தேர்தல் கமிஷனின் வைர விழாவையொட்டி சென்னையில், போட்டோ கண்காட்சியை தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் தேர்தல் கமிஷனர்கள் குரைஷி, சம்பத், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா.
தமிழகம்
செஞ்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல்
செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செஞ்சி வடபுத்தூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப் புலனாய்வு ( மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ) போலீசுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டி.எஸ்.பி., ராஜராஜன் தலைமையிலான போலீசார் நேற்...
இந்தியா
காஷ்மீர் விவகாரம் : பிரதமர் தலைமையில் கேபினட் கூட்டம்
ஸ்ரீநகர் : காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பாதுகாப்பு கேபினட் கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீரில் கட்டுக்கு அடங்காமல் இருக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை எந்த விதத்தில் பயன்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
தமிழகம்
கடலூரில் பிரபல ரவுடி கைது
கடலூர் : கடலூரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் மீது கடலூர் , புதுச்சேரி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் நேற்றிரவு போலீசார் ர...
தமிழகம்
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 120 குறைவு
சென்னை : தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 120 சரிந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 712 க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 696க்கு விற்கப்படுகிறது. வெள்ளியில் விலை ஒரு கிராம் ரூ. 31. 55 க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
சென்னை திரும்பினார் ஜெயலலிதா
சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை திரும்பினார். கடந்த மாதம் 11ம் தேதியன்று சென்னையில் இருந்து கோடநாடு வந்தார் ஜெயலலிதா. இன்று காலை 10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கோவையில் வருகிற 13ம் தேதி அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஜெயலலிதா ...
தமிழகம்
நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி சாட்சியளிக்க மேட்டூர் கோர்ட் உத்தரவு
மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூர் முதலாவது குற்றவியல் கோர்ட் நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி சாட்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது. நடிகை குஷ்பு தமிழ்ப் பெண்கள் கற்பு குறித்து வாரப்பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். குஷ்பு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‌மேட்டூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் மேற்கு...
தமிழகம்
திருமங்கலத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
திருமங்கலம் : திருமங்கலத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலம் கப்பலூர் சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கான்டராக்ட் லாரி ஒன்றில் இருந்து டீசல் திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் லாரி டிரைவர் உதவியுடன் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது. ஆஸ்டின்பட்டி எஸ்.ஐ.,...
இந்தியா
தென் பிராந்திய கடற்படை தளபதி சுட்டுக் கொலை
புதுடில்லி : இந்திய கடற்படை தென் பிராந்திய தளபதி எஸ்.எஸ். ஜம்வால், கொச்சியில் கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்., துரோநாச்சார்யாவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்.
தமிழகம்
கோவை வக்கீல்கள் 6வது நாளாக கோர்ட் புறக்கணிப்பு
கோவை : கோவையில் வக்கீல்கள் கடந்த 30ம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கஙளே நேரில் ஆஜராகி , வழக்குகளுக்கு வாய்தா பெற்றுச் சென்றனர். கோவையில் கடந்த மாத‌ம் கலையரசன் என்ற வக்கீல் தாக்கப்பட்டார். வக்கீலை தாக்கிய 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என வக்கீல்கள் அறிவித்...
தமிழகம்
ஆத்தூரில் போலி பத்திரங்கள் வழங்கி மோசடி
ஆத்தூர் : ஆத்தூரில் போலி பத்திரங்கள் , போலி கையெழுத்து என மோசடியில் ஈடுபட்டவரை போலீலசார் தேடி வருகின்றனர். சேலம் மாட்‌டம் ஆத்தூர் தலைவாசல் தாலுகாவில் சிட்டா அடங்கல், ‌திரும உதவித் தொகை பத்திரம் ஆகியவற்றை போலியாக தயாரித்து கொடுத்தும், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., தாசில்தார் ஆகியோரது கையெழுத்தை ‌போலியாக போட்டும் நூதன மோசடியில் ஈடு...
தமிழகம்
நாமக்கல்லில் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி சிறுமி போலீசில் புகார்
பரமத்திவேலூர் : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி 13 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர் எல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பூவேந்திரன். இவரது மகள் மீனா (13). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமியு...
தமிழகம்
மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தி்ல் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர் சேர்க்கை
மதுரை : மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக முருகேசன் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் : வருகிற 2010 - 2011 கல்வி ஆண்டில் மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என ‌தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றார். ...
இந்தியா
காஷ்மீர் கலவரம் : ராணுவம் குவிப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் கட்டுக்கு அடங்காமல் வெடித்து வரும் கலவரத்தை அடக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தெங்புரா மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் பூதாகரமாக வெடித்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அங்கு அமைதியை நிலைநாட்ட ராணுவம் வரவழைக...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரி்ந்து 17471.03 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 47.95ஆக வர்த்தகமாகியிருந்தது.
General
உலககோப்பை கால்பந்து : ஸ்பெயின் - ஜெர்மனி இன்று மோதல்
ஜோகனஸ்பெர்க் : தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது அரையிறுதி இந்திய நேரப்படி இன்றிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இன்று வெற்றி பெறும் அணி பைனலில் நெதர்லாந்து அணியுடன் மோதும்.
தமிழகம்
நெல்லையில் போலீஸ் எஸ்.பி., தலைமையில் ரெய்டு
திருநெல்வேலி : நெல்லையில் போலீஸ் எஸ்.பி., தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் அண்மையில் நடந்த பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் திருட்டு வாகனங்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இன்று எஸ்.பி. ஆஸ்ரா கார்க் தலைமையில் அதிரடி வாகன சோதனை நடந்தது. அப்போது முறையான ஆவணங்கள் இல்லாத 500 வாகனங்கள் பறிம...
தமிழகம்
மாமல்லபுரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு : 2 பேர் கோர்ட்டில் சரண்
திருவள்ளூர் : மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28ம் தேதி இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்கொலை என வழக்கு பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து விசார‌ணை முடுக்கி விட்டனர். விசாரணையில் இறந்தவர் முகமது அலி என்பது தெரியவந்தது. சென்னையைச் சேர்ந்த...
தமிழகம்
பரிசளிப்பு விழா
மதுரை: ரயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் உதவியாளர் தர்மராஜூக்கு, கூடுதல் கோட்ட மேலாளர் வெங்கடசுப்ரமணியன் பரிசு வழங்கினார்.
தமிழகம்
உதவித் தொகை
மதுரை: திருநகர் டவுன் கிளப் நடத்திய விழாவில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு, மதுரை மன்னர் கல்லூரி செயலாளர் விஜயராகவன் உதவித்தொகை வழங்கினார்.
தமிழகம்
பொதுக்குழுக் கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ரெடிமேட் மற்றும் டெக்ஸ் டைல்ஸ் டீலர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. தலைவர் திரேன் கே.கங்கர் வரவேற்றார். செயலாளர் நெல்லை கணேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் பத்மநாபன் ஆண்டறிக்கை வசித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் காமராஜ், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரன் பங...
தமிழகம்
ஆத்தூரில் தேரோட்டம்
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறுவாச்சூர் செல்ல மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவுக்காக ‌10 லட்சம் ரூபாய் செலவில் 55அடி உயரத் தேர் புதிதாக செய்யப்பட்டிருந்தது. தேரில் துர்க்கையம்மன் அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். 2...
தமிழகம்
டாக்டர்கள் தின விழா
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டர்கள் தின விழா துணை தலைவர் குருசங்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்திய மருத்துவர் சங்க மதுரை மீனாட்சி கிளைத் தலைவர் முகுந்தராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் நரம்பியல் டாக்டர் சீனிவாசன் பேசியதாவது : நோயாளிகளின் நோயின் தன்மையை அறிவதும், தடுப்பதுமே டாக்டர்கள் முக்கிய க...
தமிழகம்
பதவி ஏற்பு விழா
மதுரை: மதுரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில், தலைவராக பொறுப்பேற்ற கார்மேகமணியிடம், முன்னாள் தலைவர் கோபிநாத் சான்றிதழ் வழங்கினார். அருகில் இடமிருந்து மாவட்ட கவர்னர் வள்ளியப்பன், செயலாளர் ஆன்டனி பிரேம்குமார்.
தமிழகம்
துவக்கவிழா
மதுரை: மதுரை லேடிடோக் கல்லூரி இயற்பியல் துறையின் சார்பில் இயற்பியல் இளநிலை ஆய்வு பாடப்பிரிவு துவக்கவிழா நடந்தது. துறைத் தலைவர் பியூலா வரவேற்றார். முதல்வர் மெர்ஸி புஷ்பலதா பேசுகையில்,"உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், மாணவர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்,'என்றார். இயற்பியல் முதுகலை சங்கத்தை, முன்னாள் துறைத...