category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
திறப்பு விழா
சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.,சாலையில் தானியங்கி சிக்னலை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் திறந்து வைத்தார் .
தமிழகம்
தொழில் முனைவோருக்கு உதவி: ரிசர்வ் வங்கி குழு ஆலோசனை
சென்னை: சென்னையில் நடந்த ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டத்தில், சிறு, நடுத்தர தொழில் முனைவோரை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, சென்னை, மும்பை, கோல்கட்டாவில் நடத்தப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் வழ...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
மும்பை : இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 181.81 புள்ளிகள் அதிகரித்து17833.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 55.60 புள்ளிகள் அதிகரித்து 5352.45 புள்ளிகளாக வர்...
தமிழகம்
டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்,
சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், திருவல்லிக்கேணியில் நடந்தது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்-(ஏ.ஐ.டி.யு.சி.,) மாநில செயற்குழு கூட்டம், திருவல்லிக்கேணியில் நடந்தது. மாநிலத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். தென் சென்னை மாவட்ட செயலர் பெருமாள் வரவேற்றார். மாநில பொதுச் செயலர் ராமன்,...
தமிழகம்
விபத்துகள் சிறப்பு பயிற்சி முகாம்
சென்னை: தேசிய பாதுகாப்பு குழுமம் தலைமையகம் மற்றும் தமிழ்நாடு பிரிவும் இணைந்து, அரும்பாக்கம், ராதா ரீஜன்ட் ஓட்டலில் தேசிய அளவிலான, இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாமை நடத்தியது. இதில் விபத்துகள், நிகழ்வுகள், பதிவு, விசாரணை மற்றும் பரிசோதனை குறித்து விளக்கப்படுகிறது. முகாமின் துவக்க விழாவில், தமிழ்நாடு தலைமை தொழிற்சாலைகள்...
General
இலங்கையில் ‌ஐ.நா., தூதரகம் மூடல்
நியூயார்க் : இலங்கை ஐ.நா., தூதரகம் மூடப்பட்டது. இலங்கைக்ககான ஐ.நா., தூதர் திரும்பப்பெறப்பட்டார். இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரின் போது போர்க்குற்றங்கள் நடந்தது குறித்து விசாரிக்க ஐ.நா., விசாரணைக் குழு நியமித்தது. இதற்கு இலங்கை முழுவதும் பரவலாக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஐ.நா., அலவலகத்தை பல்வேறு அமைப்ப...
General
கால்பந்து வெற்றியை கணிக்கும் ஆக்டோபஸ்சுக்கு கொலை மிரட்டல் !
புதுடில்லி : கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என துல்லியமாக கணித்துக் கூறும் ஆட்டோபஸ்சுக்கு கொலை மிரட்டல் குவிந்துள்ளது. 19வது சர்வதேச கால்பந்து போட்டிகள் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முக்கிய போட்டிகளில் எந்த அணி வெல்லும் என ஆக்டோபஸ் பால் கணித்துக்...
General
இலங்கையில் ஐ .நா., அலுவலகம் மூடல் ; அதிகாரிகள் திரும்ப அழைப்பு : பான் கி மூன் எரிச்சல்
கொழும்பு : புலிகளை கொல்வதில் இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்பதை முதலில் உலக அளவில் தெரியப்படுத்தியது ஐ.நா., அதிகாரிகள் தான். இந்த நாள் முதல் இலங்கை பெரும் அதிருப்தியில் இருந்து வந்தது. ஆனால் இது போன்று நடக்கவில்லை என்றும், ஆதாரங்கள் இல்லையென்றும் கூறி வந்தது. இது தொடர்பான விஷயத்தில் இலங்கை ஐ.நா.,வுடன் ஒத்துப...
இந்தியா
ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை முயற்சி
புதுடில்லி : டில்லியில் ஒரு பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவன் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்தான். பள்ளிக் கட்ட‌டத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றான். 2 கால்களும் முறிந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படு...
தமிழகம்
ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
புதுடில்லி : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று மாலை ரூபாயின் மதிப்பு 46.86/87 ஆக முடிந்திருந்தது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்து 46.74ஆக வர்த்தகமாகியிருந்தது.
தமிழகம்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கோரி புதுப்...
தமிழகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 104 குறைந்தது
சென்னை : தங்கம் விலை குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 708 க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 104 குறைந்து. ஒரு பவுன் தங்கம் 13 ஆயிரத்து 664 ரூபாய்க்கு ‌விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 31.55 க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
நெல்லையில் புதிய மேம்பாலம் : அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
திருநெல்வேலி : நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை வன்னாரப்பேட்டை குறுக்கே பைபாஸ் சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரூ. 16.4 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ‌பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் : தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ...
இந்தியா
கேரளாவில் 300 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
திருவனநதபுரம் : கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ஒரு பஸ்சில் இருந்து 300 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துணை ஜனாதிபதி கண்ணூருக்கு வரவிருக்கும் நிலையில் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம்
மதுரை அப்பார்ட்மென்ட் கொலை வழக்கு : 3 பேர் கைது
மதுரை : மதுரை அப்பார்ட்மென்ட் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை எஸ்.எஸ்.காலனியில் அப்பார்ட்மென்ட் குடியிருப்பில் கயல்விழி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் கயல்விழி கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்தக் கொலை வழக்கு தொடர்பாக அவரது உறவினர்கள் கண்...
தமிழகம்
சொத்துக்காக தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்களுக்கு ஆயுள்
திருச்சி : சொத்துக்காக ‌தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்களுக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை அளித்துள்ளது. திருச்சி ஐயம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (57). இவரது மகன்கள் செந்தில்குமார் (28), பாலமுருகன் (25), சக்திவேல் (23). தங்கராஜ் குடும்பத்தகராறு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தங்கராஜூக்...
தமிழகம்
மதுரை தி.மு.க., தொண்டர் கொலை விவகாரம் : 3 பேர் கைது
மதுரை : மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தி.மு.க., தொண்டர் செந்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை தி.மு.க., தொண்டர் செந்தில் (24). இவர் ‌நேற்று கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக கருப்பசாமியோகராஜ், அற்புதம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம்
காங்கிரசில் இணைகிறார் செல்வப்பெருந்தகை
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்த நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் , குலாம் நபி ஆசத் முன்னிலையில் அவர் காங்கிரசில் இணைகிறார்.
தமிழகம்
தஞ்சாவூரில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஊதிய குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 100 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம்
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை திட்டம் தொடக்கம்
சென்னை : தமிழில் படித்தவர்களுக்கு ‌அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழில் படித்தவருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தி திட்டத்தின் கீழ் முதன் முதலில் பேதுரு என்பவருக்கு பணி நியமன ஆண...
தமிழகம்
துணை முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை
திருச்சி : துணை முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார். திருச்சியில் இன்றும் நாளையும் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 4000 பேர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று தி.மு.க., வில் இணைகின்ற...
இந்தியா
காங்கிரஸ் உயர்நிலை கூட்டம் கூடியது
புதுடில்லி : காங்கிரஸ் கட்சி உயர்நிலைக் கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. கட்சி மேலிடத்தின் எதிர்ப்பை மீறியும் ‌ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுள்ள யாத்திரை, காஷ்மீர் விவகாரம், ஆகியன குறித்து கட்சி உயர்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழகம்
தேசிய ஊரக ‌வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் பண மோசடி‌ செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் கல்பகனூர் பகுதியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதிலாக 70 ரூபாய் மட்டும் கொடுப்பதாக தெரிவித்து சேலம் -...
தமிழகம்
மதுரையில் திருடு போன நகை, பணம் மீட்பு
மதுரை : மதுரையில் பல்வேறு சமயங்களில் திருடு போன ரூ. ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியம் இவற்றை உரியவரிடம் வழங்கினார்.
தமிழகம்
நீலகிரி மலை ரயிலுக்கு புதிய இன்ஜின் : அதிகாரிகள்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் நீலகிரி மலை ரயி‌ல் இன்ஜினை ஆய்வு செய்தனர். விரைவில் இந்த ரயிலுக்கு புதிய இன்ஜின் கொண்டு வரப்படும் என்றனர். மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்...
தமிழகம்
3வது இடத்தை ஜெர்மனி பிடிக்கும் : ஆக்டோபஸ் ஆரூடம்
ஜெர்மனி : உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3வது இடத்தை ஜெர்மனி பிடிக்கும் என ஆக்டோபஸ் பால் கணித்துக் கூறியுள்ளது.
தமிழகம்
நாகையில் பயிர் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்த 3 பேர் கைது
நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கியின் எழுத்தர் கார்த்திகேயன், செயலாளர் ஜெயராமன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சுயம்புநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றொரு வி.ஏ.ஓ., முனியாண்டியை போ...
தமிழகம்
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
சிவகாசி : சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்தன. வேலையாட்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
தமிழகம்
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும், இதனை தடுக்க மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை‌ வலியுறுத்தியும் ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். ஜூலை 14ம்‌ தேதியன்று சென்னையிலும் ; 16ம் தேதியன்று வேதாரண்யத்திலும் ஆர்ப்பாட...
இந்தியா
பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா ? நிதின் கட்காரி ஆவேச கேள்வி
புதுடில்லி: பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா? என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. இவரது கேள்வியில் எவ்வித தவறும் இல்லை என பா.ஜ., தரப்பி...
தமிழகம்
பயிற்சி முகாம்
கோவை: கோவை, ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆரம்ப கல்வியில் கற்றல் மதிப்பீடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகம்
பின்லேடன் மகனுக்கு மனநோய்
லண்டன் : ஒசாமா பின் லேடனின் மகன் ஒமர் பின் லேடனுக்கு மனச்சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது,. போதை வஸ்துகளை அதிக அளவில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட மனச்சிதைவு நோய் சிகிச்சைக்காக அவர் லண்டனில் ஒரு மனநல மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். 29 வயதான ஒமர், 54 வயததான பிரிட்டன் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர...
இந்தியா
அப்சல் குரு குறித்த கருத்து : கட்காரிக்கு காங்., கண்டனம்
புதுடில்லி : பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா இதனால் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. காட்காரி பேச்சுக...
தமிழகம்
ஜம்முவில் ஆயுத குவியல் !
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அடையாள இலக்கு பொறித்த ஆயுதங்கள் ஜம்முவில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பது உறுதி செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.. ஜம்முவில் கடந்த 10 நாட்களாக கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இங்கு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பத...
தமிழகம்
பொதுக்குழு கூட்டம்
மதுரை: மதுரை சவுராஷ்டிர பெண்கள் வித்யா சங்க பொதுக்குழு கூட்டம், சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சங்கத்தின் மூன்றாண்டு கால தலைவராக ராதாகிருஷ்ணன், உபதலைவராக ஜவஹர்பாபு, பொருளாளராக ஷோபனா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகம்
காஷ்மீர் விவகாரம் : பிரணாப் முகர்ஜியுடன் அத்வானி சந்திப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த அத்வானி, காஷ்மீர் விவகாரம் கவலையளிப்பதாக தெரிவித்தார்.
தமிழகம்
லஷ்கர் பயங்கரவாதிகள் அனுப்பிய ஆயுதக் குவியல் ஜம்முவில் பறிமுதல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா சின்னம்  பொறித்த ஆயுதங்கள் ஜம்முவில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பது உறுதி செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜம்முவில் கடந்த 10 நாட்களாக கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இங்கு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதால் சற...
தமிழகம்
இசை நிகழ்ச்சி
சென்னை: சென்னை லலித கலா வேதிகா சார்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அன்னமாச்சார்யா கிருதிகளை பி.எஸ்.ரங்கநாத் பாடினார். கே.சங்கர் வயலின் இசைக்க, பாலசுப்ரமணியம் மிருதங்கம் வாசித்தார்.
இந்தியா
கோவா மாஜி அமைச்சர் பச்சியோவுக்கு 7 நாள் போலீஸ் காவல்
பனாஜி : கோவா மாநில சுற்றுலாத் துறை மாஜி அமைச்சர் மிக்கி பச்சியோ அவரது தோழி நாடியாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சரணடைந்தார். உடல் நலக் குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று கைது செய்யப்பட்டார். மர்மகோவா கோர்ட்டில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் அவரை 7 நாள் காவலில் எடுத்தனர்.
தமிழகம்
புகை பாதிப்பு நமக்கு தான்!
உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று முன் தினம் கடைபிடிக்கப்பட்டது. பூமி எந்தெந்த வகையில் பாதிக்கப் படுகிறது; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன நாம் என்ன செய்ய வேண்டும்; என்பது குறித்து எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடத்தினாலும் வாகன ஓட்டிகள் திருந்துவதாய் தெரியவில்லை. நடவடிக்கை எடுக்கவேண்டிய போக்குவரத்து த...
General
பிபா உலகக்கோப்பையை ஸ்பெயின் வெல்லும் : ஆக்டோபஸ் கணிப்பு
பெர்லின் : 2010 பிபா உலகக்கோப்பையை ஸ்பெயின் அணி வெல்லும் என பெர்லின் ஓபர்ஹூசன் கடல்வாழ் உயிரின பூங்காவில் உள்ள ஆக்டோபஸ் கணித்துள்ளது. முன்னதாக, 3வது இடத்தை ஜெர்மனி அணி வெல்லும் எனவும் ஆக்டோபஸ் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
பெரியாறு அணை அருகே புதிய அணை : வரைபடத்தை வெளியிட்டது கேரள அரசு
கூடலூர் : பெரியாறு அணை அருகே கட்டுவதற்கான புதிய அணையின் வரைபடத்தை கேரள அரசு வெளியிட்டு அடுத்த கட்ட பிரச்னையை துவக்கியுள்ளது. பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு வரைபட அமைப்பை தயார் செய்வதற்காக, கடந்த மே மாதத்தில் கேரள நீர்பாசனத்துறை இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையில் ஒரு குழுவை கேரள அரசு நியமித்தது. இக்குழு புதிய அ...
தமிழகம்
மதுகுடிக்க பணம் தரமறுத்த மனைவியை கிணற்றுக்குள் தள்ளிவிட்ட கணவர்
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த மனைவியை, கணவர் கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். அதில், மனைவி படுகாயத்துடன் உயிர்தப்பினார். திருச்செந்தூர், பிச்சிவிளைபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா(52), இவரது மனைவி செல்வி(45). இவர்களுக்கு ஏழு மகன், மூன்று மகள் உள்ளனர். எந்த வேலைக்கும் போகாமல் ஊர்சுற்றித்திரிந்த ...
இந்தியா
ஜி.எஸ்.எல்.வி., தோல்விக்கு காரணம் என்ன? ஆய்வு முடிவில் தகவல்
பெங்களூரு : ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்றாம் நிலை இன்ஜினுக்கு திரவ ஹைட்ரஜன் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சிக்கலே அந்த ராக்கெட்டின் தோல்விக்கு காரணம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி., டி-3 என்ற ராக்கெட்டை ஏவியது. முற்றிலும் உள்நாட்டில் தயாரி...
General
கூகுள் இணையதள தேடுதல் சேவை லைசன்ஸ் : புதுப்பித்தது சீனா
நியூயார்க் : சீனாவில் கூகுள் இணையதள தேடுதல் சேவையை தொடர அந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல இணையதள தேடுதல் சேவையை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்திற்கும், சீன அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் கூகுள் நிறுவனம் தனது சேவையை தொடர லைசன்சை புதுப்பிக்க சீனா மறுத்து விட்டது. ...
தமிழகம்
மீனவர் வலைகளை கண்காணிக்க வனத்துறை ஏற்பாடு
ராமநாதபுரம் : மீனவர்களின் வலைகளைக் கண்காணிக்க, வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மன்னார் வளைகுடாவில் ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் வசித்து வருகின்றன. தற்போது இவற்றின்எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதைத் தொடந்து, பல உயிரினங்களை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தடை உயிரினங்கள், மீனவர் வலைகளில் சிக்குவது அத...
தமிழகம்
தூத்துக்குடி அருகே டயர் வெடித்து தொழிலாளி பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே டயரில் காற்று பிடிக்கும் போது, அது திடீரென வெடித்ததில் தொழிலாளி பலியானார். தூத்துக்குடி, அக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(38), அங்கு வல்கனைசிங்(டயர்களை பஞ்சர் பார்ப்பது) கடைவைத்துள்ளார். இன்று ராமகிருஷ்ணன், கம்ப்ரசர் மூலம் சிமின்ட் கலவை இயந்திரத்தின் ஒரு டயரில், ஏர் பிடித்...
தமிழகம்
தரங்கம்பாடியில் நன்றி தெரிவிக்கும் நாள் நிகழ்ச்சி
நாகை : கிறிஸ்தவ போதகர் பார்த்லோமஸ் இந்தியாவிற்கு வந்து 304 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், தரங்கம்பாடியில் தமிழ் இவான்ஞலின் லுத்தரன் சர்ச் சார்பில் நன்றி தெரிவிக்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது. சரியாக 304 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில், மதபோதகர் பார்த்தலோமஸ் ஜிகன்பாக் என்பவர் ந...
இந்தியா
பஞ்சாப் சட்டசபை சபாநாயகர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை
சண்டிகர் : லஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பாக பஞ்சாப் சட்டசபை சபாநாயகர் நிர்மல் சிங் கலோன் மற்றும் 14 பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகம்
பாம்பன் பாலம் பணி: திருச்சி ரயில் மண்டபத்தில் நிறுத்தம்
மண்டபம் : பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் நடக்கும் பணியால் ஜூலை 14முதல் 16 வரை திருச்சி-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபத்தோடு நிறுத்தப்படுகிறது. பாம்பன் தூக்கு பாலத்தின் வலுத்தன்மையை அதிகப்படுத்த இருபுறமும் நான்கு பில்லர்கள் அமைக்கும் பணி கடந்த 20 நாட்களாக நடக்கிறது.பாலத்தின் இருபுறம் உள்ள கடல்பகுதியில் பணி நடந்தாலும் ர...
தமிழகம்
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ஈரோடு : அ.தி.மு.க., ஒரு கட்சியே அல்ல. அது ஒரு கம்பெனி. அந்த கம்பெனியில் பணிபுரிய விருப்பம் இல்லாததால் அதிலிருந்து விலகி தி.மு.க., வில் இணைந்துள்ளேன் என தி.மு.க.,வில் இணைந்த ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் சிவக்குமார் தெரிவித்தார். திருச்சியில் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.,வில் இணைந்த அவர், தினமலர...
தமிழகம்
நெல்லையில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி
திருநெல்வேலி : நெல்லையில் இன்றிரவு ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். நெல்லையில், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில், இன்றிரவு 8 மணி முதல் நகரின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் பெரும்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. மின்வெட்டு காரணமாக மக்கள...
தமிழகம்
சேலத்தில் ரகசிய பூஜையுடன் பாதாள சாக்கடை பணி துவக்கம்
சேலம் : சேலம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2009ல், துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திட்டப் பணி துவங்காத நிலையில், தமிழக முதல்வரின் சேலம் வருகையை முன்னிட்டு, மாநகராட்சி மேயர் வார்டில், ரகசிய பூமி பூஜை நடந்து, பணி துவக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில், 2006ம் ஆண்டு, 149 கோடியே 39 லட்சம் ரூபாய் ம...
தமிழகம்
இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை : சிதம்பரம் பதில்
சென்னை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட பிரச்னைகளை குறித்து, இந்திய வெளிவிவகாரத் துறை இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கும் என, முதல்வர் கருணாநிதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதிலளித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒருவர் படுகொலை செய்ய...
தமிழகம்
சென்னை கப்பல் நிறுவன ஊழியர் குண்டுவீசி கொலை
புதுச்சேரி: புதுச்சேரியில், சென்னையைச் சேர்ந்த கப்பல் நிறுவன ஊழியர் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பனையூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயரங்கன். சென்னையிலுள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகன் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி சென்றுள்ளார். புதுச்சேரி நைச்சிகுப்ப...
தமிழகம்
இது உங்கள் இடம்
தள்ளுபடி திட்டம்: யாருக்கு லாபம்? ச.கணபதி, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எழுதுகிறார்: ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்து வாங்கினால், இலவச பத்திரப்பதிவு என்பது சாத்தியமே இல்லாதது. ஏதோ ஐந்தாயிரம் ரூபாயை தள்ளுபடி செய்தது போல், திட்டத்தை கவர்ச்சிகரமாக அறிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் ஐந்தாயிரம் ரூபாய் முத்திரை தீர்வை மற்றும் ...
இந்தியா
சொல்கிறார்கள்
மக்களின் ஆர்வமே எங்களின் வளர்ச்சி! இயற்கை உரங்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் கணேசமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி: பத்தாண்டுகளுக்கு முன், இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் சொந்தமாகத் தொழில் தொடங்கினோம். சென்னையில் இயற்கை உரங்கள் தயாரிப்பாளர்கள் அப்போது யாருமில்லை. ஆரம்பத்தில் மண்புழு உரம் தயாரித்து, ஒரு கி...
தமிழகம்
நெல்லையில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் : கனிமொழி நடத்துகிறார்
திருநெல்வேலி : கனிமொழி எம்.பி.,நெல்லையில் நாளையும், நாளை மறுநாளும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயற்சி முகாமில் பங்கேற்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக தி.மு.க.,சார்பில் வேலைவா...
தமிழகம்
16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ., முடிவு
காஞ்சிபுரம்:சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மட்டும் வழங்கும் கல்வி உதவித் தொகையை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் ராகவன் கூறியதாவது:சிறுப...
இந்தியா
சாமி சிலை திருட்டு: ஜார்க்கண்டில் பந்த்
ராஞ்சி : சின்னமஸ்திகா கோவிலில் திருடப்பட்ட சாமி சிலையை மீட்டுத்தரக் கோரி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில், உலகப்புகழ் பெற்ற சின்னமஸ்திகா கோவிலில் உள்ளது. இங்குள்ள சாமி சிலை, தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கடந்த 2ம் தேதி மர்ம நபர்கள் திரு...
தமிழகம்
இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை:முதல்வருக்கு சிதம்பரம் பதில்
சென்னை:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட பிரச்னைகளை குறித்து, இந்திய வெளிவிவகாரத் துறை இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கும் என, முதல்வர் கருணாநிதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதிலளித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒருவர் படுகொலை செய்யப்...
தமிழகம்
ஜெயலலிதா - வைகோ திடீர் சந்திப்பு
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.இவர்கள் இருவரின் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. தமிழக மீனவர் படுகொலை தொடர்பாக இலங்கை, இந்திய அரசுகளைக் கண்டித்து வரும் 14ம் தேதி சென்னையில், வரும் 16ம் தேதி வேதாரண்யத...
தமிழகம்
4 பேருக்கு பதில் 10 பேரை விடுவிக்க அமெரிக்கா – ரஷ்யா பரஸ்பர முடிவு
வாஷிங்டன்:தங்கள் நாட்டில் உளவு பார்த்தவர்களை பரஸ்பரம் விடுவிக்க அமெரிக்காவும், ரஷ்யாவும் சம்மதம் தெரிவித்துள்ளன.அமெரிக்காவில் உளவு பார்த்ததாக ரஷ்ய உளவு நிறுவனங்களைச் சேர்ந்த 10 பேர் கடந்த ஜூன் 27ல் கைது செய்யப்பட்டனர். நியூயார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.போலியான அடையாள ஆவண...
General
இலங்கை - ஐ.நா., உறவு விரிசல்
கொழும்பு:இலங்கையில் செயல்பட்டு வந்த ஐ.நா., அலுவலகம் மூடப்பட்டதை அடுத்து, இலங்கை ஐ.நா., இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது, மனித உரிமை மீறப்பட்டதாகவும், போர்க் குற்றம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக சிறப்பு குழு...
தமிழகம்
கார் டிரைவர் கொலையில் சென்னை தொழிலதிபர் மகன் சிக்கினார்!
சென்னை : சகோதரியுடனான தொடர்பை விட மறுத்த கார் டிரைவரை, கடத்தி கொன்று பிணத்தை கொடைக்கானல் மலையில் வீசிய வழக்கில் தொழிலதிபர் மகன் கைது செய்யப்பட்டார். தொழிலதிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, மந்தைவெளிப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). தொழிலதிபர். கப்பல் மற்றும் விமானம் மூலம் வெளிநாடுகளு...
தமிழகம்
மனித வெடிகுண்டு: 49 பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் யக்காகுண்ட் என்ற பழங்குடிப் பகுதியில் அரசுப் பிரதிநிதி அலுவலகம் அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மனித வெடிகுண்டு ஒருவன், கூட்டத்துக்குள் புகுந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், பெண்கள், குழந்தைகள் உட்பட 49 பேர் பலியாயினர்; 73 பேர் படுகாயம் அடைந்தனர்.சம்...
தமிழகம்
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தர பெயர் பட்டியல் வெளியீடு
நெய்வேலி : என்.எல்.சி.,யில் பணி நிரந்தரப்படுத்துதல் தொடர்பாக 7,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. என்.எல்.சி., நிறுவனத்தில் 11 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மருத்துவம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகி...
இந்தியா
உ.பி., காங்., தலைவர் யார்?கட்சி மேலிடம் தீவிர பரிசீலனை
புதுடில்லி:உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்க காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உத்தர பிரதேசத்தில் 2012ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. தற்போது ஆளும் க...
இந்தியா
சர்ச்சைக்குரிய பேச்சு தவிர்ப்பு:ஸ்ரீகாகுளத்தில் ஜெகன் யாத்திரை
ஸ்ரீகாகுளம்:கட்சி மேலிடம் எச்சரித்த பின்னும், தொடர்ந்து யாத்திரை செய்து வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்றார்.ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து, பலர் அதிர்ச்சியிலும் தற்கொலையிலும் தங்கள் உயிரை மாய்த்தனர். அவர்கள...
இந்தியா
ஒய்.எஸ்.ஆர். பெயரில் கட்சி: கமிஷனிடம் 2 பேர் மனு
புதுடில்லி:ஆந்திராவில் கட்சி மேலிட உத்தரவை மீறி, காங்கிரஸ் எம்.பி., ஜெகன் மோகன், சர்ச்சைக்குரிய யாத்திரை துவக்கியுள்ள நிலையில், அவரது தந்தையான மறைந்த ராஜசேகரெட்டி பெயரில் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சிகளை பதிவு செய்ய வேண்டும் என, இரண்டு பேர் தலைமை தேர்தல் கமிஷனை அணுகியுள்ளனர்.ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகரரெட்டி, ஹெலிகா...
தமிழகம்
கால்நடை மருத்துவப் படிப்பு கவுன்சிலிங் பி.வி.எஸ்சி., படிப்பில் 174 பேருக்கு இடம்
சென்னை : கால்நடை மருத்துவப் படிப்பிற்கு நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 174 பேருக்கு பி.வி.எஸ்சி., படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில், பி.வி.எஸ்சி., - பி.எப்.எஸ்சி., - பி.டெக்., (உணவு பதப்படுத்துதல்) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இப்...
தமிழகம்
தமிழில் இன்ஜினியரிங் படிக்க 22 பேர் தயார் : தனியார் கல்லூரிகளிலும் அமல்படுத்த கோரிக்கை
சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில் முதல் ஐந்து நாட்களிலேயே, தமிழ் வழி பொறியியல் படிப்பில் 22 பேர் சேர்ந்துள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பதால், அங்குள்ள சிவில், மெக்கானிக்கல் தமிழ் வழிப் படிப்பில் அதிக "கட்-ஆப்' மதிப்பெண் எடுத்த மாணவர்களும் சேர்ந்துள்ளனர். தனியார் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் படிப்...
தமிழகம்
கண்டிப்பாக பா.ம.க., தனித்து போட்டி இல்லை: அன்புமணி ஆறுதல்
சென்னை : பா.ம.க., மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநில தலைவராக மீண்டும் கோ.க.மணி, பொதுச் செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக அக்பர் அலி சையத், மாநில இளைஞர் அணி தலைவராக அன்புமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, ...
இந்தியா
காங்., தலைவர் வீட்டில் தாக்குதல்:முதல்வர் கண்டனம்
ராய்பூர்:காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு, சத்திஸ்கர் முதல்வர் ராமன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் ஆசாத், அண்மையில், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து, மாவோயிஸ்டுகள் சத்திஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாவட்டங்களில், அண்மையில்...
இந்தியா
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை : 24ம் தேதி உயர் அதிகாரிகள் கூட்டம்
கோட்டயம் : முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான உயர் அதிகாரிகள் கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெறும். இதில், தமிழ்நாடு மற்றும் கேரள அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் தரப்பு வாதங்களை முன் வைப்பர். கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில், அம்மாநிலம் புதியதாக அணை கட்டுவதற்கு தமிழகம், எதிர்ப்பு தெரிவித்து வருக...
தமிழகம்
கள் இறக்குவது குறித்த நீதிபதி குழு அறிக்கை : ஆய்வு செய்து முடிவெடுக்க தமிழக அரசு உத்தரவு
சென்னை : கள் இறக்க அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சிவசுப்ரமணியன் தலைமையிலான குழுவின் அறிக்கை ஏகமனதாக இல்லை எனக் கூறியுள்ள தமிழக அரசு, தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை செய்ய, நீதிபதி ...
இந்தியா
சாமி சிலை திருட்டு: ஜார்க்கண்டில் பந்த்
ராஞ்சி : சின்னமஸ்திகா கோவிலில் திருடப்பட்ட சாமி சிலையை மீட்டுத்தரக் கோரி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில், உலகப்புகழ் பெற்ற சின்னமஸ்திகா கோவிலில் உள்ளது. இங்குள்ள சாமி சிலை, தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கடந்த 2ம் தேதி மர்ம நபர்கள் திர...
தமிழகம்
அண்ணாசாலையில் மறியல் செய்த பொதுமக்கள் : வாகன ஓட்டியை தாக்கிய எஸ்.ஐ.,யால் பரபரப்பு
சென்னை : சிக்னல் முடியும் முன், சாலையை கடந்த இருசக்கர வாகன ஓட்டியை அடித்த டிராபிக் எஸ்.ஐ.,யை கண்டித்து, அண்ணாசாலையில் பொதுமக்கள் மறியல் நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, அண்ணா சாலையில் முக்கியமான சந்திப்புகளில் ஒன்று, ஸ்பென்சர் சந்திப்பு. இந்த சந்திப்பு பகுதியில் எப்போதுமே அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொது...
தமிழகம்
விமான நிறுவனங்களில் வேலை என மோசடி : பி.இ., பட்டதாரிகளை ஏமாற்றிய வாலிபர் கைது
திரிசூலம் : விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக, பி.இ., படித்த இளைஞர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கிரண் (28). இவரது பெற்றோர் பொதுத்துறை விமான நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். திருமணமான கிரண், தனது மனைவியுடன் பல்லாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாட...
தமிழகம்
இறையாண்மைக்கு எதிராக பேச்சு : வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு
சென்னை : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவுக்கு எதிராக வரும் 21ம் தேதி, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஅண்ணாமலை மன்றத்தில், "ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில்...
தமிழகம்
நெல்லையில் புதிய பாலங்கள்:அமைச்சர் திறந்து வைத்தார்
திருநெல்வேலி:நெல்லையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.நெல்லையில் வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பை பாஸ் சாலையில் 16.40 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் ஆகஸ்ட் 6ல் துணைமுதல்வர் ஸ்டாலின் துவக்கிவைக்கிறார். முன்னதாக அதனை நெடு...
தமிழகம்
வேலைவாய்ப்பு பயிற்சி:கனிமொழி நடத்துகிறார்
திருநெல்வேலி:கனிமொழி எம்.பி.,நெல்லையில் இன்றும் நாளையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயற்சி முகாமில் பங்கேற்கிறார்.நெல்லை மாவட்டத்தில் உள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக தி.மு.க.,சார்பில் வேலைவாய்ப்பு முகா...
தமிழகம்
தந்தையை கொன்ற மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
திருச்சி : சொத்துக்காக தந்தையை அடித்துக் கொன்ற மகன்களுக்கு, ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சி அருகே நவல்பட்டு அய்யம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் (57) சாந்தா (53) தம்பதியருக்கு, செந்தில்குமார் (28) பாலமுருகன் (25) சக்திவேல் (23) என, மூன்று மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் அடிக்கடி ஏற்பட்...
தமிழகம்
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சம்மன்
மதுரை : சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு தொடர்பாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க, மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டது. சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் நடக்கிறது. இதில் மாஜி அமைச்சர்கள் செல்வகணபதி, ஈஸ்வரிமூர்த்தி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தி உட்பட எட்டு பேர் குற்றவாளிகள...
தமிழகம்
சோனியா, ராகுல் பேரவை துவக்கினால் காங் மேலிடம் நடவடிக்கை: ராஜீவ் சத்தே
திருநெல்வேலி:சோனியா, பிரியங்கா, ராகுல் பேரவைகள் அமைப்பவர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்சத்தே தெரிவித்தார்.இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இளைஞர் காங்கிரசில் உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு இளைஞர் காங்.,உறுப்பினர்களுக்கு அடையாள அட்ட...
தமிழகம்
டி.ஜி.பி.,க்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு
சென்னை : டி.ஜி.பி.,க்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கை, தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம் தாக்கல் செய்துள்ளது. முதன்மைச் செயலரின் கடிதத்தின் முடிவு குறித்து அரசிடம் விளக்கம் பெற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.குமார் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் 2,7...
இந்தியா
யானை சின்னம் சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி : பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை சின்னத்தை ஒதுக்கீடு செய்வதில், தேர்தல் கமிஷனே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில், விதிமுறைகளை மீறி யானை சின்னத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. இந்த மனு ம...
தமிழகம்
பி.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
பொன்னேரி : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நேற்று மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நேற்று பகல் 12 மணிக்கு பி.டி.ஓ., அலுவலகம் வந்த கலெக்டர் அங்குள்ள சமூக நலத்துறை, பொறியியல் துறை கிராம ஊராட்சித்துறை அலுவலகங்களுக்கு சென்றார்.அங்கு பெரும்பான்மையான அலுவலர்கள் பணியில் இல்லாததால் இருக்கைகள் காலி...
இந்தியா
நித்யானந்தா, ஹாலப்பா நிபந்தனைகள் தளர்வு
பெங்களூரு : பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, சாமியார் நித்யானந்தா ஆகியோருக்கு, கர்நாடகா ஐகோர்ட் விதித்திருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஹாலப்பா மீதான குற்றச்சாட்டு விசாரணை முடிவடையும் வரை, நகரை விட்டு எங்கும் செல்லக்கூடாது; சொந்த தொகுதியான சொரபாவுக்கு செல்லக்...
தமிழகம்
தொகுப்பு வீடுகள் பெற முடியாமல்இருளர் இன மக்கள் அவதி
பள்ளிப்பட்டு : வீட்டுமனைப்பட்டா இல்லாததால் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளை பெற முடியாமல் இருளர் இன மக்கள் 30 வருடங்களாக பாழடைந்த குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த சின்ன நாகபூடி ஊராட்சியில் அடங்கியது இருளர் காலனி. இங்கு 20 க்கும் மேற்பட்ட குடிசைகளில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருளர் இன மக்கள் வாழ்...
தமிழகம்
வார்டு இடைத்தேர்தல்தி.மு.க., மட்டும் மனு
பொன்னேரி ; கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். இதுவரை தி.மு.க., வேட்பாளர் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.நேற்று தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி(29), செயல் அலுவலர் ஜெயக்குமாரிடம் மனு தாக்கல்...
தமிழகம்
காவில் குளத்தில்ஆண் பிணம் மீட்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில், ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பிணத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த நபருக்கு 35 வயது இருக்கலாம். இவர் யார், எந்த ஊர் எனத் தெரியவில...
தமிழகம்
அரசு அலுவலகம் எதிரில் மழைநீர் பொதுமக்கள் தவிப்பு
பொன்னேரி : நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரில், தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், நேற்று காலை பலத்த மழை பெய்தது. மழைநீர் சாலைகளில் கழிவுநீருடன் சேர்ந்து ஆறாக ஓடியது. பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம...
தமிழகம்
சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இருந்த பெண் பிணத்தை போலீசார் மீட்டனர். கற்பழித்துக் கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த, தொழுவூர் சுடுகாடு அருகே முட்புதரில் சாக்கு மூட்டை ஒன்று இருப்பதாகவும், அதிலிருந்து பிணவாடை வீசுவதாகவும் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந...
தமிழகம்
பொன்னேரியில் அதிகம் சோழவரத்தில் குறைவு
திருவள்ளூர் : மாவட்டத்தில் பொன்னேரியில் நேற்று அதிகளவாக 37 மி.மீ., மழை பதிவானது. அதே நேரத்தில் சோழவரத்தில் 2 மி.மீ., மழை தான் பெய்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையில், பொன்னேரியில் அதிகபட்சமாக 37 மி.மீ., மழையும், கும்மிடிப்பூண்டியில் 8 தாமரைப்பாக்கத்தில் 3 மற்றும் சோழவரத்தி...
தமிழகம்
விசாரணைக்கு ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டர் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு
திண்டுக்கல் : திண்டுக்கல் கோர்ட்டிற்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தாத இன்ஸ்பெக்டர் சம்பளத்தை பிடித்தம் செய்து விசாரணைக்கு வருபவர்களின் செலவிற்கு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆதி, மயில்வாகணன், அய்யப்பன், பவுன்ராஜ் உட்பட 29 பேர், கடந்த 30.6.2001ல் மு...
இந்தியா
சங்கரராமன் கொலை வழக்கு ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி : காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிர...
இந்தியா
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விவகாரம் : மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடில்லி : குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்த பரிந்துரைகளுக்கு பதில் அளிக்காத, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது தொடர்பாக, சில பரிந்துரைகளை தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோ...
தமிழகம்
சாலை ஆய்வாளர்கள் பற்றாக்குறை வளர்ச்சி பணிகள் கடும் பாதிப்பு
மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் சாலை ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், ஊராட்சிகளில் நடக்கும் பல வளர்ச்சி பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. மேலும், சில ஊராட்சிகளில் போதிய நிதி இருந்தும் செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்...
தமிழகம்
தற்காலிக டைப்பிஸ்ட்களுக்கு ஒரு நாள் நீக்கம், பணி நிரந்தரம் செய்யாததால் கலக்கம்
திண்டுக்கல் : தமிழகத்தில் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் தற்காலிக டைப்பிஸ்ட் 3 ஆயிரம் பேர் ஒரு நாள் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு இன்னும் பணி நியமன உத்தரவு வராததால் சிக்கல் நீடிக்கிறது.தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக டைப்பிஸ்ட்கள் (10) ஏ ஒன்) 3 ஆயிரம் பேர...