category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வேலைவாய்ப்பு பயிற்சி திட்ட துவக்க விழா
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உள்ள ராமகிருஷ்ண இன்ஜி., கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி திட்ட துவக்க விழா நடந்தது. விழாவில், கல்லூரி இணை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில், மனோநிலை மாற்ற நிகழ்வுகள், தன் னம் பிக்கை மேம்பாடு, ஆளுமை திறன் வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள...
தமிழகம்
சத்துணவு ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. கோவையில் காந்திபுரம், தமிழ்நாடு ஓட்டல் முன் நேற்று காலை துவங்கிய இப்போராட்டம் இன்று காலை 10.00 மணி வரை நடக்கிறது. மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து தலைமை வகித்தார். 2...
தமிழகம்
சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் அழுகிய மூதாட்டி உடல்
அரியலூர்: அரியலூர் அருகே காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் டால்மியா சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. சிமெண்ட் ஆலை சுரங்க பிரிவு ஊழியர்கள், சுரங்க பகுதியை பார்வையிட சென்ற போது, சுரங்க "பி' பிளாக் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம், நாய்கள் கடித்து குதறி அழுகிய நிலையில் கிடந்தது. விசாரண...
தமிழகம்
ஒரு வழிப்பாதையாக மாற்ற எதிர்ப்பு போலீஸ் கமிஷனரிடம் மக்கள் மனு
கோவை: சாயிபாபாகாலனி என்.எஸ்.ஆர்.,ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு கொடுத்தனர்.கோவை,சாயிபாபாகாலனி என்.எஸ்.ஆர்.ரோடு - அழகேசன் ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்ற மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. இந்நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிப்போர் மற்றும...
தமிழகம்
ஆண்டு விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் காமராஜ் தேசிய பேரவையின் 14ம் ஆண்டு விழாவும், காமராஜரின் 108 வது பிறந்த நாள் விழாவும், வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பிளஸ் 2, பத் தாம் வகுப்பு தேர்வில் பள் ளியில் முதல் மதிப்பெண் பெற்ற 8 மாணவ, மாணவியருக்கு 501 ரூபாய் பரிசு வழங்குதல். துவக்கப் பள்ளியை சேர்ந்த 100 மாணவ, மாணவி...
தமிழகம்
ரயில்வே கேட் மீண்டும் மூடல்
சோமனூர்: சோமனூர் ரயில்வே பாலம் கட்டுமானப் பணிக் காக சோமனூர் ரயில்வே கேட் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. பாலம் கட்டும் பணிக் காக மெயின்ரோடு பகுதியில் ரோட்டின் மையப்பகுதியில் தூண்கள் அமைக்க பெரிய அளவிலான குழிகள் தோண்டும் பணி துவங்கியது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டுமானப் பணிக்காக...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு உதவுபவரா; காத்திருக்கிறது மாநில அரசின் விருது
கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்தவர்களுக்கு மாநில அரசின் சார்பில் விருது வழங்கப்படவுள் ளது; விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் அறிக்கை:மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு, தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போத...
தமிழகம்
காஞ்சி ஜெயேந்திரர் ஜூலை 11ம் தேதி கும்பகோணம் வருகை
கும்பகோணம்: காஞ்சி ஜெயேந்திரர் ஜூலை 11ம் தேதி கும்பகோணம் வருகிறார்.காஞ்சி ஜெயேந்திரர் 11ம் தேதி காலை 8 மணிக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா கல்லூரிக்கு வருகிறார். அங்கிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வருகிறார். அவருக்கு கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பெட்ரோல் பங்க் அருகில் அன்று மாலை 3 மணிக்கு பக்தர்கள் சார்பில் ...
தமிழகம்
டவுன் பஸ் ஸ்டாண்ட் முன் ஆட்டோ பவனியால் நெரிசல் அதிகரிப்பு
தர்மபுரி: தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்ட் முன் அதிக அளவில் ஆட்டோக்கள் அணி வகுத்து நிற்பதால், தேவையற்ற நெரிசலும், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.தர்மபுரியில் 350க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளது. நகரப்பகுதியில் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் ஆட்டோக்களில் ஏற்றி செல்ல பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்க...
தமிழகம்
ஆட்கள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ, டிராக்டர் பறிமுதல்
தர்மபுரி: மொரப்பூர் மற்றும் அரூர் அருகே ஆட்கள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மற்றும் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.மொரப்பூர் போலீஸ் எஸ்.ஐ., மாதையன் தலைமையில் போலீஸார் மொரப்பூர் - தர்மபுரி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ...
தமிழகம்
பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பயன் இல்லைவேலைக்கு ஏங்கும் ஆசிரியர்கள்
கோவை: பி.எட்., படித்த பிற பாட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணியில் அமர்த்தும் தமிழக அரசு, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த மாணவர்களை கண்டு கொள்ளாமலே உள்ளது. விரைவில் தங்களை பணியமர்த்தும் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதுபற்றி பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் கூறியதாவது:தம...
தமிழகம்
ஊர் காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர் காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. ஊர் காவல்படை ஏரியா கமாண்டர் தண்டபாணி வெளியிட்ட அறிக்கை:தர்மபுரி எஸ்.பி., சுதாகர் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆண், பெண் ஊர் காவலர்கள் விரைவில் தேர்வு செய்ய உள்ளனர். இப்பணிக்கு குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.ஸி., த...
தமிழகம்
இடைத்தேர்தலுக்கு மூவர் மனுத்தாக்கல்
சோமனூர்: கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இடைத் தேர்தலுக்கு நேற்று மூன்று பேர் மனுத்தாக்கல் செய்தனர்.கருமத்தம்பட்டி பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 5ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.நேற்று பிற்பகலுக்க...
தமிழகம்
இளம்பெண் மர்ம சாவு கணவர், மாமனாருக்கு 5 ஆண்டு சிறை
தர்மபுரி: தர்மபுரி அருகே குடும்ப தகராறில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்த வழக்கில் கணவர் மற்றும் மாமனாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கி தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தர்மபுரி செக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் மலர்கொடி (26). இவருக்கும் பச்சனம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரா...
தமிழகம்
வாகனங்கள் சிறைபிடிப்பு
அன்னூர்:அன்னூர், பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி பகுதியில் குளம், குட்டை, ரோட்டோரப் பள்ளங்களில் சிலர் பவுண்டரி கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை பிள்ளையப்பம்பாளையம் மயானம் அருகே உள்ள பள்ளத்தில் மூன்று டிராக்டர்கள் பவுண்டரி கழிவுகளை கொட்ட கொண்டு வந்தபோது, தகவல் அறிந்து ஊராட்சி தலைவர் ர...
தமிழகம்
தனியார் பஸ் மோதி பெண் பரிதாப பலி
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே ரோட்டை கடக்க முயன்ற பெண் தனியார் பஸ் மோதி பரிதாபமாக இறந்தார்.காரிமங்கலம் அடுத்த மாட்டிலாம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி செல்வம் (40). இவர் மாட்டிலாம்பட்டி பிரிவு ரோட்டில் நடந்த சாலை பணியில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று காலை 10 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள சாலையை கட...
தமிழகம்
ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவிலில் பூஜை
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை இன்று (ஜூலை 10) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. வரும் காலங்களில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஸ்வாமிக்கு காலை 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் சிறப்பு பூஜைகள், அமாவாச...
தமிழகம்
கிணற்று நீரை எடுத்துச் சென்றதண்ணீர் லாரிகளுக்கு சிறைசாமளாபுரம் விவசாயிகள் ஆவேசம்
சாமளாபுரம்: கிணற்று நீரை லாரிகளில் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தண்ணீர் லாரிகளை தடுத்து எச்சரித்து அனுப்பினர். சாமளாபுரம் குளத்தின் அருகே விவசாய கிணறுகள் உள்ளன. கிணற்றிலிருந்து லாரிகள் மூலம் சோமனூர் பகுதியில் உள்ள சைசிங் மில்கள், திருப்பூர் பகுதி டையிங் பேக்டரிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்படு...
தமிழகம்
கண்ணை மறைக்குதே!ரேஸ்கோர்ஸில் விளம்பர பலகைகள் பொலிவை இழக்கிறது மாநகர பகுதி
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் உதவியால், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி விளம்பர மையமாக மாறியுள்ளது. கோவை நகரின் அழகான பகுதியான ரேஸ்கோர்ஸில், மாநகராட்சி சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. காலையும், மாலையும் அங்கு பல ஆயிரம் பேர் "வாக்கிங்' செல்கின்றனர். மரங்கள், செடி, கொடிகளுடன் குளுமைக்குப் பெயர் பெற்ற பகுதியாக ரேஸ்கோ...
தமிழகம்
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பெ.நா.பாளையம்: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளது. வேலைவாய்ப்பு பதிவை, 2006 முதல் 2009 வரை பலர் புதுப்பிக்க தவறியுள்ளனர். 2006 ஜன., முதல் தேதியில் இருந்து டிச., 30,2009 வரையுள்ள காலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள், இம்மாதம் 5ம் தேதி ...
தமிழகம்
பாரதியார் பல்கலை விளையாட்டு பி.எஸ்.ஜி., நிர்மலா சாம்பியன்கள்
கோவை: பாரதியார் பல்கலை அனைத்துக்கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவர் பிரிவில் பி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லூரியும், மாணவியர் பிரிவில் நிர்மலா பெண்கள் கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன.பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் 2010-11ம் ஆண்டுக்கான செயற் குழு கூட்டம் நேற்று பாரதியார் பல்கலை வளாகத்தில் நடந்தது. ...
தமிழகம்
மைசூரு பலாப்பழம் கோபியில் குவிப்பு
கோபிசெட்டிபாளையம்:கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து கோபிக்கு டன் கணக்கில் பலாப்பழம் வரத்தாகியுள்ளது. சீஸன் காலத்தில் மட்டுமே விளையும் பலாப்பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். முக்கனிகளில் மாம்பழமும், பலாப்பழமும் குறிப்பிட்ட சீஸன் காலத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு ருசிக்க கிடைக்கிறது. தமிழகத்தில் கடலூர...
தமிழகம்
புளியங்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
புளியங்குடி:புளியங்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.புளியங்குடி ரோட்டரி ஹாலில் நடந்த விழாவில் புதிய தலைவராக ராஜகோபாலன், செயலாளராக முகம்மது யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் பதவிபிரமாணம் செய்து வைத்தார். பி.டி.சாமி ரோட்டரி வணக்கம் கூறினார். விழாவில் 10 மற்றும் 12ம் வக...
தமிழகம்
மாணவருக்கான கூடைப்பந்து ராஜலட்சுமி பள்ளி சாம்பியன்
கோவை: மாவட்ட அளவில் பள்ளி மாணவருக்கான கூடைப் பந்து போட்டியில் ராஜலட்சுமி மில்ஸ் மேல்நிலை பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. ஒய்.எம்.சி.ஏ.,கூடைப்பந்து கிளப் சார்பில் 54வது ஆண்டு மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி ஒய்.எம்.சி.ஏ.,வளாகத்தில் மின்னொளியில் நடந்து வருகிறது.பள்ளி சப்-ஜூனியர் 13 வயதுக்குட்பட்ட மாணவருக்கான பிரிவில் 16...
தமிழகம்
புளியங்குடி இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
புளியங்குடி:புளியங்குடி இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் இன்ஜினியரிங் கல்லூரி அரங்கில் நடந்த விழாவிற்கு சுதா வெங்கடேஷ் தலைமை வகித்தார். ராஜேஸ்வரி இன்னர்வீல் வணக்கம் கூறினார். சுதா வெங்கடேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பீனா ரானாசிங் கலந்து கொண்டார். அவரை சுப்...
தமிழகம்
கைகொடுக்கிறது பவானிசாகர்! கைவிட்டது குண்டேரிப்பள்ளம்!
கோபிசெட்டிபாளையம் : பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருவதால், கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் திட்டமிட்டபடி தண்ணீர் திறந்து விடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்றாண்டை விட பவானிசாகர் அணையில் தற்போது தண்ணீர் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பவானிசாகர் அணைய...
தமிழகம்
வேளாண் உற்பத்தியில் பசுந்தாள் உரங்கள்:வேளாண் அதிகாரி விளக்கம்
தென்காசி:வேளாண் உற்பத்தியில் பசுந்தாள் உரங்கள் குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நமது நாட்டில் அதிகரித்து வரும் ஜனத்தொகைக்கு ஏற்பவும், விளை நிலப்பரப்பு குறைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டும் வேளாண் உற்பத்தியை பெர...
தமிழகம்
சென்னையில் அரவாணிகள் தங்கும் விடுதி
ஈரோடு:ஆதரவற்ற அரவாணிகள் சென்னை செல்லும் போது தங்குவற்காக, தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் சார்பில் இடைக்கால தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் சாலையில் உள்ள இந்திராநகரில் இந்த இடைக்கால தங்கும் விடுதி இயங்கி வருகிறது. சென்னை செல்லும் அரவாணிகள் மற்றும் ஆதரவற்ற அரவாணிகள் இந்த விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்...
தமிழகம்
மண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவு உரம்
தென்காசி:தென்னை நார் கழிவு உரம் மண்ணை வளமாக்கி பயிர் விளைச்சலை பெருக்குகிறது என செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கழிவு பொருட்களில் இருந்து பயனுள்ள உற்பத்தி செய்து விளை நிலங்களுக்கு இட்டு மகசூலை பெருக்குதல் தொன்று தொட்டு நம் நாட்டில...
தமிழகம்
இளையோர் தொழிற்திறன் பயிற்சி:விண்ணப்பிக்க வேண்டுகோள்
பாவூர்சத்திரம்:இளையோர் தொழிற்திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் இளையோர் தொழிற்திறன் பயிற்சி 2010-11ம் ஆண்டிற்கு நடத்திட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேசனரி பயிற்சிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி. வயது...
தமிழகம்
அரசு மாதிரி பஞ்.,பணிக்கு சிவநாடானூர் பஞ்.,தேர்வு
பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்., அரசு மாதிரி பஞ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் 19 யூனியனில் கீழப்பாவூர் யூனியனில் உள்ள 21 கிராம பஞ்.,களில் சிவநாடானூர் பஞ்.,அரசு மாதிரி பஞ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இதனால் இப்பஞ்., பகுதியில...
தமிழகம்
கூண்டோடு இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள்
ஈரோடு:சென்னம்பட்டி அருகே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கூண்டோடு இடிந்து விழும் நிலையில், படுமோசமாக உள்ளது. பழுதடைந்து போன வீடுகளை பராமரிக்க பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை கூறியும் மெத்தனப்போக்கை கையாண்டு வருவதால், உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னம்பட்டி பஞ்சாயத்து கல்லாவரங்...
தமிழகம்
தென்காசி அருகே ரூ.1.30 கோடியில் பாலம்:அமைச்சர் சாமிநாதன் திறந்தார்
தென்காசி:தென்காசி அருகே 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திறந்து வைத்தார்.தென்காசி அருகே அம்பாசமுத்திரம் ரோட்டில் அழுதகண்ணியாற்றின் மீது குறுகலான பாலம் இருந்தது. இவ்வழியேதான் தென்காசியில் இருந்து கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூ...
தமிழகம்
தென்காசி ஆசாத் நகர் பாலம்கட்டும் பணி; அமைச்சர் ஆய்வு
தென்காசி:தென்காசி ஆசாத்நகர் சிற்றாற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்திற்கான பணியை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆய்வு செய்தார்.தென்காசி ஆசாத்நகர் சிற்றாற்றின் மீது சுமார் 2 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆற்று பகுதிக்குள் வாணம் தோண்டும் பணி ஜே.சி.பி.இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட...
தமிழகம்
கடையநல்லூர் தொகுதி வந்த அமைச்சர் சாமிநாதனுக்கு சிறப்பான வரவேற்பு
கடையநல்லூர்:கடையநல்லூர் தொகுதிக்கு நேற்று வருகை தந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கடையநல்லூர் தொகுதியில் கட்டப்பட்ட சிங்கிலிபட்டி உயர்மட்ட பாலம் மற்றும் கிளாங்காடு உயர்மட்ட பாலம் ஆகியவற்றை திறந்து வைத்திட தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கட...
தமிழகம்
சங்கரன்கோவில் பகுதியில்13ம் தேதி மின்தடை
திருநெல்வேலி:சங்கரன்கோவில் பகுதியில் வரும் 13ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சங்கரன்கோவில் மின்செயற் பொறியாளர் அசோக்குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:சங்கரன்கோவில் உபமின் நிலையத்தில் வரும் 13ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று இந்த உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம்...
தமிழகம்
கருத்தப்பிள்ளையூரில் தீக்குளித்துபெண் தற்கொலை
ஆழ்வார்குறிச்சி:கருத்தப்பிள்ளையூரில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.கருத்தப்பிள்ளையூர் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் இருதயராஜ் மனைவி அமலிஅருள்மேரி (37). இவருக்கு 16, 14 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருதயராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் அலைவாராம். கடந்த 6ம் தேதி அமல...
தமிழகம்
கடையம் அருகே தூக்குபோட்டுமுதியவர் தற்கொலை
ஆழ்வார்குறிச்சி:கடையம் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடையம் அருகேயுள்ள பால்வண்ணநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் அய்யப்பன் (55). இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. அய்யப்பன் வேலைக்கு எங்கும் செல்லாமல் பொறுப்பில்லாமல் இருந்துள்ளார். இதனால் அய்யப்பனுக்கும், அவ...
தமிழகம்
கம்ப்யூட்டர் சிட்டா வழங்குவதில் தாமதம்: மக்கள் அதிருப்தி
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், கம்ப்யூட்டர் சிட்டா கேட்டு விண்ணப்பம் கொடுக்கும் பொதுமக்களுக்கு அடுத்த நாள் வழங்குவதால் அதிருப்தியடைந்துள்ளனர்.பொள்ளாச்சி தாலூகா அலுவலகத்தில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், தேவம்பாடிவலசு, தேவராயபுரம், கோவிந்தாபுரம், நெ.10 முத்தூர் உட்பட 131 கிராமங்களின் நிலங...
தமிழகம்
சேற்றில் சிக்கி காட்டெருமை சாவு!
வால்பாறை: வால்பாறை அருகே சேற்றில் சிக்கி காட்டெருமை மர்மமான முறையில் இறந்தது.வால்பாறை அடுத்துள்ளது உருளிக்கல் எஸ்டேட். இங்குள்ள சேடல்டேம் பகுதியில் 5 வயது மதிக்கதக்க பெண் காட்டெருமை நேற்றுமுன்தினம் இரவு சேற்றில் சிக்கி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் ஆரோக்கியர...
தமிழகம்
சித்தோட்டில் உரிய நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் அலைபாயும் மக்கள்
ஈரோடு: சித்தோடு நால்ரோட்டில் பயணிகள் நிழற்குடை அருகே பஸ்கள் நிற்காததால், மக்கள் அங்குமிங்கும் அலைபாய்கின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட நிழற்குடைகளும் வீணாகின்றன. ஈரோட்டில் - கோபி நெடுஞ்சாலையில் உள்ள சித்தோட்டில் நான்கு முக்கிய ரோடுகள் சந்திக்கின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த இடத்தில் அடிக்கடி ...
தமிழகம்
வள்ளியூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
தென்காசி:வள்ளியூர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.வள்ளியூரில் லயன்ஸ் சங்க 21வது பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு வள்ளியூர் லயன்ஸ் சங்க தலைவர் பண்ணை செல்வகுமார் தலைமை வகித்து வரவேற்றார். செயலர் பேராசிரியர் முருகேசன், பொருளாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தனர். பட்டையத் தலைவர் கிரிகோரி ரத்தினராஜ்...
தமிழகம்
நான்குநேரியில்ஆர்ப்பாட்டம்
நான்குநேரி:நான்குநேரி தாலுகா அலுவலகம் முன் வருவாய்த்துறை அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.நான்குநேரி தாலுகா லெத்திகுளம், மூங்கிலடி பகுதியில் தானிய சேமிப்பு கிட்டங்கி, பாதுகாப்பு மையம் மற்றும் பேரிடர் மேலாண்மை தகவல் மையம் கட்டுவதை வருவாய்த்துறை அதிகாரி நிறுத்தியுள்ளதையும், தலித் மக்களுக்கு முதியோர் உதவித் தொகை ம...
தமிழகம்
காலிங்கராயன் கால்வாய்க்கு நாளை நீர் திறப்பு
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் ஆயக்கட்டு பூமிகளுக்கு, முதல் போக பாசனத்துக்காக, நாளை முதல் நவம்பர் 15ம் தேதி வரை பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படவுள்ளது. விவசாயிகள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் சுடலைக்கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம்
கேரள மருத்துவக்கழிவு லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்ந...
தமிழகம்
களக்காடு அருகே பட்டாசு கடைக்காரர் வெட்டிக் கொலை
களக்காடு:களக்காடு அருகே பட்டாசு கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.களக்காடு அருகேயுள்ள தேவநல்லூரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (33) பட்டாசு கடை நடத்தி வந்தார். கடந்த 6ம் தேதி அருண் (எ) உலகநாதன் (22) குடிபோதையில் தகராறு செய்ததை சுடலைக்கண்ணு தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், சுடலைக்கண்ணுவை அரிவாளால் தாக்கி...
தமிழகம்
தடை செய்த பகுதியில் அத்துமீறி குளித்த ஏழு பேருக்கு அபராதம்
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தடை செய்த பகுதிகளில் அத்துமீறி குடித்தும், ஆற்றில் குளித்த ஏழு பேருக்கு, தலா ரூ.ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சில பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகள். இதில், நேற்று முன்தினம் உடுமலையை சேர்ந்த ஏழு பேர், நவமலை ஆற்று பகுதியில் குடி...
தமிழகம்
ஆலங்குளத்தில் சமாதான கூட்டம்
ஆலங்குளம்:கடங்கனேரி பஞ்., வீட்டு குடிநீர் இணைப்பு முறைகேடு தொடர்பாக ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கனேரி பஞ்.,சில் 205 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க அனுமதிக்கப்பட்டது. இதனை வழங்க பஞ்., உறுப்பினர்கள் சிலரும், இடைத்தரகர்களும் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் த...
தமிழகம்
ஹைபாரஸ்ட் ரோடு சீரமைப்பு மீண்டும் அரசு பஸ் இயக்கம்
வால்பாறை: ஹைபாரஸ்ட் எஸ்டேட் ரோடு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பஸ் இயக்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ளது நல்லமுடி எஸ்டேட். இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஹைபாரஸ்ட் எஸ்டேட். இந்த ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் அரசு பஸ் கடந்த மாதம் 15ம் தேதி திடீரென நிறுத்தப்பட்டது.இதனையடுத்து மாவட்ட கலெக...
தமிழகம்
மாணவர்களை கோபியில் தவிக்க விட்டு வேறு ஊருக்கு சென்ற திங்களூர் டவுன் பஸ்
கோபிசெட்டிபாளையம்: கோபி நாதிப்பாளையம் வழியாக திங்களூர் செல்லும் அரசு டவுன் பஸ் திடீரென வேற்று பாதையில் இயக்கப்பட்டததால், 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோபி பஸ் ஸ்டாண்டில் தவித்தனர். கோபி சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கோபி நகரில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் படி...
தமிழகம்
தக்காளி தரம் பிரித்து கேரளாவுக்கு அனுப்பும் பணி தீவிரம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிக்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் தக்காளி தரம் பிரித்து கேரளா பகுதிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாகியுள்ளது. பொள்ளாச்சி சந்தைக்கு, உடுமலை, முக்கோணம், பூலாங்கிணறு, வடக்கி பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாட்டு தக்காளியும், கர்நாடகா பகுதியிலிருந்து "ஹைபீரிட்' தக்காளியும் வரத்து...
தமிழகம்
கோத்தகி¶யில் அரங்கேறும் திக்...! அச்சத்தில் பொதுமக்கள் கடமையை செய்யத்தடுமாறும் அதிகாரிகள்
கோத்தகிரி: கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கோத்தகிரியில் அதிகளவு குக்கிராமங்கள் உள்ளன. கோத்தகிரி பேரூராட்சி மட்டுமே நகரமாக உள்ளது; 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோத்தகிரியில், கோத்தகிரி மற்றும் சோலூர்மட்டம் பகுதியில் காவல் நிலையங்கள் உள்ளன.தெங்குமரஹாடா, கூக்கல்தொரை...
தமிழகம்
அடிப்படை வசதி கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையின் அவலநிலையை கண்டித்து அ.தி.மு.க., போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க., மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் அமீது வெளியிட்டுள்ள அறிக்கை:வால்பாறை அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லை. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் தொழிலாளர்களை கோவை, பொள்ளாச்சி போன்ற மருத்துவமனைக்கு ...
தமிழகம்
கனிமொழி எம்.பி.நாளை சிவகிரி வருகை
சிவகிரி:சிவகிரியில் நாளை (11ம் தேதி) திமுக சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கனிமொழி எம்.பி.கலந்து கொள்கிறார்.நெல்லை மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு படித்த, வேலையற்ற இளைஞர், இளம் பெண்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு தனியார் வேல...
தமிழகம்
சென்றாம்பாளையத்தில் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சென்றாம்பாளையத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிணத்துக்கடவு தேவராயபுரம் ஊராட்சி சென்றாம்பாளையம் கிராமத்தில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை தேவைகளில் ஒன்றான சுகாதார வளாகம் கட்டப்படவில்லை. இப்பகுதி மக்களும் சுகாதார வளாகம் கட்டிக்க...
தமிழகம்
கோவிலில் மாதாந்திர பூஜை
ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலடா கீழ் அப்புக்கோடு ஸ்ரீ ஆனந்தமலை முருகன் கோவிலில், 8ம் தேதி, கிருத்திகை மற்றும் ஏழு ஹெத்தையம்மன்களுக்கு மாதாந்திர பூஜை நடத்தப்பட்டது. காலை 10.00 மணியளவில், சித்தி செல்வ விநாயகர், ஸ்ரீ ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டன. காலை 10.30 ...
தமிழகம்
புளியங்குடியில் நூதன முறையில்மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
புளியங்குடி:புளியங்குடியில் மணலுடன் சுண்ணாம்பு கலந்து நூதன முறையில் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி பகுதியில் புளியங்குடி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் மணலுடன் சிறிதளவு சுண்ணாம்பு கல...
தமிழகம்
குறைதீர்ப்பு முகாமில் 84 மனுக்களுக்கு தீர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த பி.நாகூரில் குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் குறைதீர்ப்பு நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு, குடிமை பொருள் வழங்கல் துறை தனி தாசில்தார் குப்புசாமி தலைமை வகித்தார். தனி நில வருவாய் ஆய்வாளர்கள் திருமலைசாமி, தங்கராசு உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், மொத்தம் 102 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ரே...
தமிழகம்
மார்க்கெட் பகுதியில் ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு
ஊட்டி: ஊட்டி மார்க்கெட் பகுதியில் மீட்கப்பட்ட ஆந்தை, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊட்டி மார்க்கெட் பழைய தபால் அலுவலகம் பகுதியில், நேற்று காலை பதுங்கியிருந்த ஆந்தையை காக்கைகள் கொத்திக் கொண்டிருந்தன. இதைக் கண்ட பாலா உட்பட இளைஞர்கள் மூவர், காக்கைகளை விரட்டி, நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்கு தகவல் தெரிவித்தனர்...
தமிழகம்
அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு கணக்கெடுப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் ஆயிரத்து 21 குடிசைகள் மட்டுமே தகுதியுடையவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில், "அரசின் வீட்டு வசதி திட்டத்தின்' கீழ் குடிசைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பின் போது...
தமிழகம்
அரசு கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
வால்பாறை: வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு நேற்று முதல் துவங்கியது. வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு பி.எஸ்.சி., (கம்ப்யூட்டர் சையின்ஸ்), பி.காம்., (சி.ஏ), பி.ஏ...
தமிழகம்
கடையம் பகுதியில் மணல் அள்ளிய 21 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆழ்வார்குறிச்சி:கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 21 மாட்டு வண்டிகளும், அனுமதியின்றி சரள் மண் அள்ளிய டிராக்டர் மற்றும் ஜேசிபியும் பறிமுதல் செய்யப்பட்டது.சேரன்மகாதேவி சப்-கலெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால், வருவாய் ஆய்வாளர்கள் பொதிகாசலம் (க...
தமிழகம்
சத்துணவு அமைப்பாளரை கண்டித்து முற்றுகை மாணவர்களின் பெற்றோர் ஆத்திரம்
பந்தலூர்: பந்தலூர் அம்பலவயல் அரசு ஆரம்பப் பள்ளி சத்துணவு அமைப்பாளரை இட மாற்றம் செய்ய வலியுறுத்தி, பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் அம்பலவயல் அரசு ஆரம்பப் பள்ளியில் 217 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான சத்துணவு தரமில்லாமல் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வந்தது. இதுகுறித்த...
தமிழகம்
குற்றாலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
குற்றாலம்:குற்றாலம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளியில் குற்றாலம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆறுமுகபாண்டியன், ஷாஜகான் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் கவர்னர் பாஸ்கரன் கலந்து கொண்டார். குற்றாலம் ரோட்டரி சங...
தமிழகம்
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம்
கோபிசெட்டிபாளையம்: கோபி அக்கரை கொடிவேரி பஞ்சாயத்தில், ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர் கூட்டம் பஞ்சாயத்து தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது.முகாமில் 100க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோபி வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, ஆர்.ஐ., சிவகாமி, காங்கிரஸ்...
தமிழகம்
தெருமுனை பிரச்சாரம்
கவுந்தப்பாடி: ஈரோடு பெரியமாரியம்மன் நில மீட்பு இயக்கத்தினர் கவுந்தப்பாடியில் தெருமுனை பிரச்சாரம் செய்தனர். கவுந்தப்பாடி, சலங்கபாளையம், ஓடத்துறை, பி.மேட்டுப்பாளையம் ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் பிரச்சாரம் நடந்தது. ஒன்றிய கோயில் மீட்பு இயக்க அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் துவக்கிவைத்தார். ஒன்றிய தலைவர் சுப்பிரமணிசாமி முன்னிலை வ...
தமிழகம்
மகளிர் குழுவுக்கு கடன்
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில் பொது சேவை மையம் திறப்பு விழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 8.85 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் மலர்விழி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்ட பொதுமேலாளர் ரேணுகாதேவி...
தமிழகம்
நிர்வாகிகள் கூட்டம்
குன்னூர்: ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. ஜேசிஐ., மண்டல துணைத் தலைவர் குமாரவெங்கடேஸ்வரன், சிறப்பு விருந்தினராக பேசினார். இளைய ஜேசி பிரிவு மண்டல இயக்குனர் சிவலிங்கன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தலைவர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். உறுப்பினர்கள் சசிரேகா, செந்தாமரை, மோகனா, அலெக்ஸ், ரத...
தமிழகம்
பட்டியலில் பெயர் இல்லையா...? உறுதி வாய்ப்பை தவற விடாதீங்க...
ஊட்டி: இணையதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெறாத மனுதாரர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுக அழைப்பு விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பயின்று ப...
தமிழகம்
உண்ணாவிரதப் போராட்டம் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பு
ஊட்டி: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஊட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; சட்ட ரீதியான குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; மலைப் பிரதேசங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மலைப்படி மற்றும் குளிர்காலப்...
தமிழகம்
புதிய படகு இல்லத்தில் அசத்தும் விளையாட்டு
ஊட்டி: ஊட்டி படகு இல்லத்தின் மறுகரையில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தில், புதிய பொழுது போக்கு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு சுற்றுலாத் துறை, மாருதி திரில்லர் நிறுவனம் சார்பில், ஊட்டி படகு இல்லத்தில் பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன; இதில், "ஜார் பால்' என்ற 12 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட ...
தமிழகம்
புலிக்கல் தொடர் தீ விபத்தை தடுக்க மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த புலிக்கல் கிராமத்தில் அம்மனின் கோபத்தை தணிக்க 250 குடங்களில் பக்தர்கள் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த புலிக்கல் காலனியில் கடந்த 6ம் தேதியில் இருந்து கூரை வீடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தன. அம்மன் கோபத்தால் தான் வீடுகள...
தமிழகம்
ஆக்கிரமிப்பில் திணறும் கரூர் பஸ் ஸ்டாண்ட் : நடவடிக்கை எடுப்பதில் நகராட்சி மெத்தனம்
கரூர்: கரூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல் குறித்து நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. கவுன்சிலர் சிலர் ஆதரவுடன் நடக்கும் அத்துமீறல் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களும் தயங்குகின்றனர். கரூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டு 1987ல் துவங்கப்பட்டது. தற்போது 55 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும்...
தமிழகம்
துன்புறுத்திய கணவர் கைது
கூடலூர்: தேவாலா பொன்னூர் பகுதியில், மனைவியை துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார். தேவாலா பொன்னூர் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ்வரன் (30); இவருக்கும், மசினகுடியை சேர்ந்த வேணி என்பவருக்கும் திருமணமாகி, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது; வேணியின் சகோதரி கவிதாவையும் யோகேஷ்வரன் திருமணம் செய்துள்ளார்; இவர்களுக்கு, 11 மாதத்தில...
தமிழகம்
தொடர்ந்தது கஞ்சா விற்பனை குண்டர் சட்டத்தில் கைது
கூடலூர்: கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த கூடலூரை சேர்ந்த நபர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கூடலூர் எஸ்.எஸ்., நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (51); கர்நாடக மாநிலம் குண்டல்பேட் உட்பட பல பகுதிகளிலிருந்து கஞ்சா வாங்கி வந்து, கூடலூரில் விற்பனை செய்தது தொடர்பாக, கூடலூர் போலீசில் 11 வழக்குகள் பதிவ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோர் விவரங்களை அளிக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை  திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் தங்களை பற்றிய விவரங்களை வட்டாட்சியர் அல்லது நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர்  ராஜேந்திரன் அறிவித்துள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு கட்டமாக வீட்டுப் பட்டியல்-கணக்கெடுப்பு, மற்றும் மக்கள் தொகை பதிவேட...
தமிழகம்
உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட் மூடும் முடிவு ஒத்திவைப்பு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் மேம்பாலப் பணிக் காக ரயில்வே கேட் நிரந்தரமாக மூடி வைக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு அடிக்கடி கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் 14 கோடி ரூ...
தமிழகம்
பள்ளிக்கு வரவழைக்க பேரணி மாணவர்கள் விழிப்புணர்வு
ஊட்டி: பள்ளி செல்லா மாற்றுத் திறனுடைய குழந்தைகளை கண்டறியும் சிறப்பு விழிப்புணர்வு இயக்கம், தும்மனட்டியில் நடத்தப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், தரமான துவக்கக் கல்வி அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் உரிய கல்வி வழங்க, பள்ளி செல்லா மாற்றுத் திறனுடைய குழந்தைகளை கண்டறியும் சிறப்பு விழிப்புண...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் : 4 பேர் வேட்புமனு தாக்கல்
திருவண்ணாமலை  உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட, திருவண்ணாமலை மாவட்டத்தில்  4 பேர் மனு செய்தனர். மொத்தம் 57 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  மொத்தம் 29 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், கண...
தமிழகம்
ரயில் பாதை தகர்ப்பு சம்பவம்: ஆர்.டி.ஓ., விசாரணை துவக்கம்
திண்டிவனம்: சித்தணி கிராமத்தில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது குறித்து திண்டிவனம் ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை துவங்கியது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலிருந்து திண்டிவனம் செல்லும் வழியில் உள்ள சித்தணி கிராமம் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த மாதம் 12ம் தேதி அதிகாலை குண்டு வெடித்தது. இச்சம்பவம் குறித்து தி...
தமிழகம்
சிவநாடானூர் பஞ்.,சில் அரசுகட்டடங்கள் புதுப்பிக்கும் பணி
பாவூர்சத்திரம்:சிவநாடானூர் பஞ்.,சில் பழுதான அரசு கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கட்டடங்களை சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்.,சில் உள்ள அரசு கட்டடங்கள் அனைத்தும் ச...
தமிழகம்
கலைஞர் வீட்டு வசதி திட்டம்:கீழப்பாவூர் யூனியனில் 111 பேர் தேர்வு
பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் யூனியனில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் 111 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 2010-2016 வரை கீழப்பாவூர் யூனியன் பஞ்., வாரியாக பூலாங்குளம் பஞ்.,சில் 27 பேர், ப...
தமிழகம்
புளியங்குடி அருகேபெண்ணிடம் செயின் பறிப்பு
புளியங்குடி:புளியங்குடி அருகே தனியாக பைக்கில் சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.புளியங்குடி அருகேயுள்ள தலைவன்கோட்டையை சேர்ந்தவர் கோட்டூர்சாமி தேவர் மனைவி சண்முகத்தாய் (57). இவர் நெற்கட்டும்செவலில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை தனது ...
தமிழகம்
தொழிற்சாலையில் குவியுது; வயிறு கவ்வுது! கூட்டுறவு தொழிற்சாலை ஆதங்கம்
மஞ்சூர்: ஆண்டு முழுவதும் கோட்டா முறை, உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூள் தேக்கம், வினியோகித்த பசுந்தேயிலைக்கு முறையாக பணம் வழங்காதது என, அங்கத்தினர்களை திண்டாட வைத்து சிக்கித் தவிக்கிறது இத்தலார் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை. நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, மேற்குநாடு, இத்தலார், கைகாட்ட...
இந்தியா
சங்கரராமன் கொலை வழக்கு ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிரு...
தமிழகம்
திசையன்விளையில் விஷம்குடித்து ஒருவர் பலி
திசையன்விளை:திசையன்விளையில் விஷம் குடித்து ஒருவர் இறந்தார்.ஆலங்குளம் அருகேயுள்ள அருணாசலப்பேரியை சேர்ந்தவர் குழந்தைவேலு (50). இவர் திசையன்விளை ஜேம்ஸ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் திசையன்விளை அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு ...
தமிழகம்
முதல்வர் விருது பெற ஆசையா? விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு
ஊட்டி: முதல்வர் விருது பெற, விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ( 2 ஆண்கள், 2 பெண்கள்), மு...
தமிழகம்
3 மாணவர்கள் மாயம்:தென்காசி அருகே பரபரப்பு
தென்காசி:தென்காசி அருகே ஒரே நாளில் 3 மாணவர்கள் மாயமானது குறித்து இலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் சுபாஷ் (எ) குட்டி (17). இவர் தென்காசியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும் இடைகால் ராஜன் மகன் சிவக்குமார் (16), ரத்னசாம...
தமிழகம்
மாங்கனி கண்காட்சியில் இன்று நடன நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் மாங்கனி கண்காட்சியில் தர்மபுரி கின்னஸ் சாதனை குழுவினர் பங்கேற்கும் நடன நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை. மாலை 6 மணிக்கு இந்திய மாநிலங்களின் கலை நிகழ்ச...
தமிழகம்
கல்பனா சாவ்லா விருது
ஊட்டி: துணிகர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துணிகர செயல்களில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு, தமிழக அரசு சார்பில், வரும் சுதந்திர தினவிழாவில், கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. துணிகர செயல்களில் ஈடுபட்ட பெண்க...
தமிழகம்
தென்காசியை தலைமையிடமாக கொண்டு கோட்டசெயற்பொறியாளர் அலுவலகம் துவக்கப்படும்: சுவாமிநாதன்
கடையநல்லூர்:நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக 400 கோடி ரூபாய் செலவில் சாலை வசதிகளும், பாலங்களும் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தென்காசியை தலைமையிடமாக கொண்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் விரைவில் துவங்கப்படும் எனவும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் தெரிவித்தார்.கடையநல்லூர் தொகுதி சிங்கில...
தமிழகம்
இன்றும், நாளையும் வாக்காளர் சேர்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சியைச் சேர்ந்த மூன்றாம் தெரு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்காள...
தமிழகம்
இளையோர் தொழில் திறன் பயிற்சி:40 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கல்
திருநெல்வேலி:இளையோர் தொழில் திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் இளையோருக்கான தொழில் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் ரேடியோகிராபி, சோனோ கிராபி பயிற்சி பெற்ற 40 பேருக்கு சான்றிதழ், வேலை உத்தரவு, பயிற்சியாளர் ஊக்க தொகையை கலெக்டர் ஜெயராமன் வழங்கினார்.இதில் மகளிர்...
தமிழகம்
மீனவர் பலியான சம்பவம் : இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் புறக்கணிப்பு
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அக்கிராம மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்கச் செல்லாமல் புறக்கணித்தனர். இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இருந்து இரண்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக...
தமிழகம்
மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிரடி:நெல்லை பஸ்ஸ்டான்டில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்
திருநெல்வேலி:நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டான்ட் பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் நேற்று அகற்றப்பட்டன.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி 1 மற்றும் 2வது வார்டுகளில் "நகர்மலர்' செய்தி எதிரொலியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள...
இந்தியா
ரூ.20 லட்சம் கையாடல் கூட்டுறவு சங்க மேலாளர் கைது
புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 19 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்த மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, அப்பகுதியில் உள்ள மக்கள், நகைகளை அடகு வைத்து பணம் ...
தமிழகம்
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: படம் எடுக்க வாய்ப்பு
வேலூர் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை புகைப்படம் எடுத்துக் கொள்ளாத பயனாளிகள் வேலூர் மாவட்ட  க‌லெக்டர் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர்  ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர்   வெளியிட்டிருப்பதாவது:  கலைஞரின்   மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தி...
தமிழகம்
நெல்லை மாநகராட்சியில் நடமாடும் வாகனம்:வரி வசூல் முகாம் 12ம் தேதி ஆரம்பம்
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் நடமாடும் வாகனம் வரி வசூல் முகாம் 12ம் தேதி ஆரம்பமாகிறது.நெல்லை மாநகராட்சியில் நிலுவை மற்றும் நடப்ப வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரி வசூல் வாகனம் வார்டு வாரியாக அனுப்பபட்டு வரி வசூல் தீவிரப்படுத்த்பபட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி பகுதி...
தமிழகம்
மகளிர் குழுக்களுக்கு கடனூதவி
வேலூர், செய்யாறு அருகே 5 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.20 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. வாழ்குடை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் தனி அலுவலர் ராஜேந்திரன்  கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து, இயற்கை வேளாண்மை மற்றும் நவீன முறை விவசாயம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி...
தமிழகம்
திருக்குமரன் மருத்துவமனையில் இலவச காப்பீடு திட்டம் துவக்கம்
திருச்செங்கோடு : திருச்செங்கோட்டில் உள்ள திருக்குமரன் மருத்துவமனையில் இலவச காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதித்துள்ளது.அதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவில், நகராட்சி சேர்மன் நடேசன் தலைமை வகித்து திட்டத்தை துவக்கி வைத்தார். டாக்டர் யோகானந்தன் வரவேற்றார். திட்ட அலுவலகத்தை யூனியன் சேர்மன...