category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
விளக்க கூட்டம்
சத்திரப்பட்டி: கிள்ளிகுளம் விவசாயக் கல்லூரி மாணவர்கள் சார்பில் அயனாபுரத்தில் செம்மை நெல் சாகுபடி விளக்கக் கூட்டம் நடந்தது. வாகைகுளம் நீர்பாசன சங்கத் தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். செம்மை நெல் சாகுபடி பயன்கள் குறித்து மாணவர் கள் சுப்புராஜ், மணிகண் டன், சிவராமன், சேகர், சிவசந்திரன் விளக்கினர்.
தமிழகம்
கள்ள நோட்டுகளை தயாரித்து வங்கிகளில் ஊடுருவ செய்தனரா? : கைதானவர்களிடம் விசாரணை
மதுரை : மதுரையில் கள்ள நோட்டு தயாரித்த வழக்கில், பலசரக்கு கடை உரிமையாளர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். வங்கிகளில் கள்ள நோட்டு ஊடுருவ செய்ததில் இவர்களுக்கு தொடர்பு உண்டா என விசாரணை நடக்கிறது. மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(44). இவர், கள்ள நோட்டுகள் தயாரித்ததாக பல்வேறு வழக்குகள் நிலு...
தமிழகம்
தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் 40 ஏக்கர் நிலம் தேர்வு
ஊட்டி:ஊட்டியில் அமையவுள்ள தேசிய தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துக்கான இடத்தை, மத்திய அமைச்சர் ராஜா ஆய்வு செய்தார்.இந்தியாவில் முதன்முறையாக, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேசிய தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக் கப்பட உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள பட்பயர் பகுதியில், கால்நடை பராமரிப்புத...
தமிழகம்
லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
விருதுநகர்: தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சேர்ந்தவர் மணிராஜ்(33).இவர் நாமக்கல்லிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் இரவு 3 மணிக்கு லாரியை ஓட்டி வந்துகொண்டிருந்தார்.லாரி விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி விலக்கு அருகே வந்தபோது திடீரென பிரேக் போட்டதால் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மணிராஜ் லாரிக்கடியில் சிக்கி...
தமிழகம்
ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி : ஆந்திர மாநிலத்திற்கு லாரியில் கடத்தவிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு பொன்னேரி போலீசார் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் த...
தமிழகம்
குடிபோதையில் மிரட்டியவர் கைது
சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்தையா (40). இவர் மெயின் பஜாரிலுள்ள சலூன் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது குமார் (34) என்பவர் குடிபோதையில் வந்து முத்தையாவைத் திட்டி கொலை மிரட்டல் விட்டார். இது குறித்து முத்தையா சாத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் குமாரைக் கைது செய்தனர்.
தமிழகம்
லாட்ஜில் தங்கிய இளம் பெண் கொலை! உடன் தங்கிய வாலிபருக்கு "வலை'
மாமல்லபுரம் : மாமல்லபுரம் லாட்ஜில் தன்னுடன் தங்கியிருந்த பெண்ணை கொலை செய்துவிட்டுதப்பி ஓடிய வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர். மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே லாட்ஜ் ஒன்று உள்ளது. இங்கு, நேற்று காலை 10.30 மணிக்கு வாலிபர் ஒருவர், பெண்ணுடன் வந்து ரூம் எடுத்து தங்கினார். தன் பெயர் கணேசன் என்றும், தாங்கள் இருவரும் கணவன், மன...
தமிழகம்
நந்தி சிலை மாயம்
அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் அருகே இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான ராமலிங்கா கோயில் உள்ளது.இந்த கோயில் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது கோயிலுக்கு வெளியே இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள கல்லால் ஆன நந்தி சிலையைக் காணவில்லை. இது குறித்து கோயில் அறங்காவலர் ராமதாஸ்(40) அருப்புக் கோட்டை ...
தமிழகம்
பெட்ரோல் திருடிய வாலிபர் கைது
மறைமலைநகர் : பெட்ரோல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வாகனங்களுக்கு தேவையான பெட்ரோலை, வீட்டிலேயே இருப்பு வைத்திருப்பது வழக்கம். இரு தினங்களுக்கு முன் வீட்டு வராண்டாவில் 40 லிட்டர் பெட்ரோலை கேனில் வைத்திருந்தார்.மறுநாள் பார்த்த போது பெட்ரோல் கா...
தமிழகம்
முதியவர் பலி
வெம்பக்கோட்டை: சிவகாசியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(65). மனநிலை சரியில்லாமல் இருந்தார். இவர் பேர்நாயக்கன்பட்டி ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்தார்.அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த முனியசாமி அவர் மீது மோதினார். இதில் தலையில் அடிபட்ட மாரியப்பன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். வெம்பக்கோட்டை போலீ...
தமிழகம்
ரூ.28 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் : இலங்கை வாலிபர்கள் இருவர் கைது
திரிசூலம் : இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மற்ற சிலரிடம் நடத்திய சோதனையில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை தலைநகர் கொ...
தமிழகம்
மணல் டிராக்டர் பறிமுதல்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியில் ஸ்ரீவி. தாசில்தார் மாரிமுத்தம்மாள், வருவாய் ஆய்வாளர் நடராஜன் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம் கண்மாயில் அனுமதியின்றி மண் திருடி வந்த மேலக்கோபாலபுரத்தை சேர்ந்த இரு டிராக்டர்கள் சிக்கின. அவற்றில் ஒன்று அதிகாரிகள் முன்னிலையில...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா
மாமல்லபுரம் : பொன்பதிர்கூடம் ஊராட்சியில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.பொன்பதிர்கூடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு திருக்கழுக்குன்றம் ஒன்றியக் குழுத் தலைவர் சம்பூர்ணம் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு ஆறுமுகம் எம்.எல்.ஏ., பயனாளிகள் 600 பேருக்கு இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார்.திருக்கழுக்க...
தமிழகம்
தனியார் பள்ளி ஆசிரியை படுகொலை : கொலையாளியை பிடிக்க தனிப்படை
ஆர்.கே.நகர் : தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(53). தங்க சாலையில் உள்ள அரசு அச்சக ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா(47). அதே பகுதியில் உள்ள தனியார் ப...
தமிழகம்
பம்ப் செட் மோட்டார்கள் திருட்டு
விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள மிளகாய் பட்டியைச் சேர்ந்தவர் தர்மவேல் (51).இவரது வயல்காடு கிணற்றிலிருந்த பம்ப்செட்டை யாரோ திருடிச் சென்றனர். தியாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (46). இவரது தோட்டத்து கிணற்றிலிருந்த பம்ப் செட்டை யாரோ திருடிச் சென்றனர். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விச...
தமிழகம்
கல்லூரி பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு : சவுத் இண்டியன் பாராமெடிக்கல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.காருண்யா கல்வி அறக்கட்டளையின் கீழ் செங்கல்பட்டில் சவுத் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் ஏழாமாண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. செங்கல்பட்டு டி.ஈ.எல்.சி., சபை போதகர் அகஸ்டின் தலைமை தாங்கினார...
தமிழகம்
டிராக்டர் மோதி ஒருவர் பலி
திருத்தங்கல் ஆலாவூரணியைச் சேர்ந்தவர் ராமர்(36). முதலிபட்டி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்தார். இவர் நேற்று மாலையில் முதலிபட்டியிலுள்ள கோயில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ராமர் மீது மோதியதால் இறந்தார். வச்சக்காரப்பட்டி இன்ஸ்பெக்டர் ராம்ராஜ் விசாரிக்கிறார்.
தமிழகம்
அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
செங்கல்பட்டு : செங்கல்பட்டில் அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் 62வது பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு நகர அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. விழாவிற்கு நகர செயலர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயல...
தமிழகம்
கணவருக்கு ஆர்வமில்லை : புதுப்பெண் தற்கொலை
திருநெல்வேலி : இல்வாழ்க்கையில் கணவருக்கு ஆர்வமில்லை எனக்கூறி, இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஊத்துமலையை அடுத்த சோலைசேரியை சேர்ந்த இளங்காமணி மகள் சக்தி(20). இவருக்கும், சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரனுக்கும் நான்கு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் தம்பதிகள், பெண்ணின் பெற்றோர...
தமிழகம்
மணல் திருடும் கும்பலின் கொடூரச் செயல் விவசாயி கொலை
ராஜபாளையம்: மணல் திருட்டு குறித்து போலீசாரிடம் தகவல் கூறிவிடுவார் என்ற பயத்தில் விவசாயியை மணல் திருடும் கும்பல் கொலை செய்தது. ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(58). மனைவி, 5 குழந்தைகள் உள்ளனர். பெருமாள், பெத்தவநாச்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அழகுதேவன்குளம்...
தமிழகம்
லாட்ஜில் தங்கிய பெண் கொலை : உடன் தங்கிய வாலிபருக்கு "வலை'
மாமல்லபுரம் : மாமல்லபுரம் லாட்ஜில் தன்னுடன் தங்கியிருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே லாட்ஜ் ஒன்று உள்ளது. இங்கு, நேற்று காலை 10.30 மணிக்கு வாலிபர் ஒருவர், பெண்ணுடன் வந்து ரூம் எடுத்து தங்கினார். தன் பெயர் கணேசன் என்றும், தாங்கள் இருவரும் கணவன், மன...
தமிழகம்
கழிவுநீர் குட்டையாக மாறிய முடிச்சூர் சாலை
தாம்பரம் : முடிச்சூர் சாலை பாரதி நகர் பஸ் ஸ்டாப் அருகே சாலையின் பெரும்பகுதி கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது.சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாம்பரம் - முடிச்சூர் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மழை நீர் கால்வாய் முறையின்...
தமிழகம்
சின்னாளபட்டி அருகே லாரி பெட்டியின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை
அம்பாத்துரை : சின்னாளபட்டி அருகே நிறுத்தியிருந்த லாரியில் பெட்டியை உடைத்து, 6 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, அம்பாத்துரை போலீசார் விசாரிக்கின்றனர். சின்னாளபட்டி அருகே கலிக்கம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் காரைக்காலில் உள்ள தனியார் சோப் கம்பெனியில் லாரி டிரைவராக உள்ளார். வாடிப்பட்டி அருகேயுள்ள ...
தமிழகம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் நெல்லையில் கனிமொழி பங்கேற்பு
திருநெல்வேலி:நெல்லையில் 77 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள வேலைவாய்ப்பு முகாம் பயிற்சியை கனிமொழி எம்.பி., நேற்று துவக்கிவைத்தார்.நெல்லை மாவட்டத்தில் உள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த இளைஞர்கள், பெண்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக, தி.மு.க., சார்பில் வேலைவாய்...
தமிழகம்
நாகர்கோவிலில் ரூ. 2 கோடி போதை பொருட்களுடன் நான்கு பேர் கைது
நாகர்கோவில் : நாகர்கோவிலில் இரண்டு கோடி ரூபாய் போதைப் பொருட்களுடன் நின்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும்படி நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போதைப் பொருள் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், ஒரு கிலோ ...
தமிழகம்
ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் மோதல் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு : மூன்று வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக் குள்ளான தில் தேசிய நெடுஞ் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மகேந்திரா வேன் ஒன்று நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்றது. இதன் பின்னால் பொலீரோ காரும், அதன்பின் தொடர்ந்து டாடா ஏஸ் மினிடோர் வேனும் சென...
தமிழகம்
அனுமதியின்றி தயாரித்த வாணவெடி வெடித்ததில் நான்கு பேர் படுகாயம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வீரக்கல் அருகே அனுமதியின்றி வாணவெடி தயாரித்த போது விபத்து ஏற்பட்டு, நான்கு பேர் காயமடைந்தனர். செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லை சேர்ந்த கணேசன் மனைவி அமுதா (40). இவர் வீட்டிற்கு பின்புறம் அனுமதியின்றி, வாணவெடி தயாரித்துள்ளார். இவருக்கு உதவியாக இதே பகுதியைச் சேர்ந்த செல்வம்(50),...
தமிழகம்
பன்றிக் காய்ச்சலை தடுக்க சிறப்பு முகாம்
நகரி : பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க திருமலையில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என சித்தூர் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி லலிதாகுமாரி தெரிவித்தார்.திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க நாடு முழுவதுமிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். வெளிமாநிலங்களிலிருந்து வரும் இவர்கள் மூலம் பன்றிக் க...
தமிழகம்
தொண்டி அருகே மோதல் போலீசார் குவிப்பு
தொண்டி : தொண்டி அருகே காதலித்த பெண்ணை,வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர் அழைத்து சென்றதால், இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொண்டியில் வசிக்கும் ஒரு பிரிவை சேர்ந்த பெண்ணை, நம்புதாளையை சேர்ந்த வேறு ஒரு பிரிவு இளைஞர், காதலித்து ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். இதை கண்ட பெண்...
தமிழகம்
குண்டும், குழியுமாக காணப்படும் பஸ் நிலையத்துக்கு விமோசனம் கிடைக்குமா?
பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் பஸ்நிலையம் குண்டும், குழியுமாக உள்ளதால் மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதில் பயணிகள் நடக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி. இங்குள்ள பஸ் நிலையத்திற்கு தினசரி 50க்கும் மேற்பட்ட அரசு மற்...
தமிழகம்
ஆந்திர மது 1120 பாட்டில்கள் பறிமுதல்: பெண் கைது
கும்மிடிப்பூண்டி : ஆந்திர மாநில சீப் குவார்ட்டர் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1120 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கும்மிடிப்பூண்டி அருகே மீனவ குப்பமான சின்ன மாங்கோடு கிராமத்தில் ஆந்திர மாநில சீப் குவார்ட்டர் மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு த...
தமிழகம்
கணவரை காப்பாற்றக்கோரி சேலம் நடிகை போலீசில் தஞ்சம்
திருச்சி : காதலுக்காக முஸ்லிமாக மாறிய சேலம் நாடக நடிகை, தனது பெற்றோரிடமிருந்து தன்னையும், தனது கணவரையும் காப்பாற்றக் கோரி, திருச்சி மகளிர் போலீசில் தஞ்சம் புகுந்தார். சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி மகள் சாரா (20); மேடை நாடக நடிகை. இவர், உள்ளூர் கேபிள் "டிவி' தொடர்களிலும் நடித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எர...
தமிழகம்
வீர ராகவ சுவாமி கோவில்தெப்ப உற்சவம்
திருவள்ளூர் : ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோவிலில் உற்சவர், தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத அமாவாசையை ஒட்டி, திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ விழா நடப்பது வழக்கம். அதே போல், இந்தாண்டிற்கான விழா நேற்று துவங்கியது.முதல் நாளான நேற்று...
தமிழகம்
குஜிலியம்பாறையில் ஓராசிரியர் பள்ளிகளால் பாதிப்பு ஆசிரியர் பற்றாக்குறையால் இடைமுறிவு அதிகம்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் மூன்று தொடக்க பள்ளிகளில் ஓராசிரியரும், தரம் உயர்த்தப்பட்ட நான்கு நடுநிலை பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 74 தொடக்க, 16 நடுநிலை பள்ளிகள் உள்ளன. போதிய பள்ளிகள் இருந்தும், இப்பகுதியில் தான் இடைமுறிவு மாணவர்கள் அதிகம் ...
தமிழகம்
நாளை அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
கோவை:பெட்ரோல், டீசல், கெரசின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, கோவையில் நாளை அ.தி.மு.க., சார்பில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.சமீபத்தில் மத்திய அரசு, பெட்ரோல், டீசல், கெரசின் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், அத்...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் மனு தாக்கல்
பள்ளிப்பட்டு : காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், கடைசி நாளான நேற்று முன்தினம் மனுக்களை தாக்கல் செய்தனர்.பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் திருமால்ராஜுபேட்டை ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அக்கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ஏழுமலை, வெங்கட லட்சுமணன், ஜெயபால், கோவிந்தசாமி, ரமாவதி, தேவேந்திரன், கோவிந்தம்ம...
தமிழகம்
மூன்றாவது நாளாக உண்ணாவிரதமிருந்த அங்கன்வாடி ஊழியர்கள் 1,200 பேர் கைது
சென்னை : பணி நிரந்தரம் கோரி, சென்னையில் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்த அங்கன்வாடி பணியாளர்கள் 1,200 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், "தங்களை பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், சட்ட ரீதியான ஓய்வூதியம் வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள ...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் இல்லாததால் பாதிப்பு
குஜிலியம்பாறை: வேடசந்தூர் தாலுகா பகுதியிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற் கான படிவ தட்டுப் பாட் டால் கணக்கெடுப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித் துள்ளனர். மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி ஜூலை 15-க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக, 6-8 கணக்கெடுப்பாளர்களுக்கு, ஒரு சூப்பர்வைசர் வீதம் நியமிக்கப்...
தமிழகம்
விஷ்வ இந்து பரிஷத் மாநாடு
திருவள்ளூர் : விஷ்வ இந்து பரிஷத் வடக்கு மண்டல மாநாடு திருவள்ளூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கட்ராம சர்மா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கேசவன் குட்டி முன்னிலை வகித்தார்.இதில் "அனுமந்த சக்தி ஜாகன ஷம்தி' என்ற பெயரில் நகர மற்றும் கிராம மக்களை தொடர்பு கொண்டு அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க ஆகஸ்...
தமிழகம்
சூதாட்டம்: ஆறு பேர் கைது
திருவள்ளூர் : வெவ்வேறு பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி.,வனிதாவுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மப்பேடு அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் பணம் வைத்து மங்காத்தா சூதாட்டம் ஆடிக்கொண்டு இருந்த தமிழ்ச்செல்வன்(48), குமார்(48) ஆக...
தமிழகம்
அரசு மருத்துவமனைக்குள் கழிவுநீர் தேக்கம் : நோய் அபாயம்
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குள் கழிவுநீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோயாளிகளுக்கும், பொது மக்களுக்கும் மேலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.திருவள்ளூர் ஜே.என்., சாலையில் உள்ளது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை. இங்கு, குழந்தைகள் நலப்பிரிவு இயங்கி வருகிறது. இக்கட்டடத்தின் அருகில் கழிவு நீர் தேங...
தமிழகம்
மீனவர் பலியால் வேதாரண்யத்தில் 4வது நாளாக போராட்டம்
வேதாரண்யம் : இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்டு மீனவர் இறந்த சம்பவத்தையடுத்து, நான்காவது நாளாக வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தினர், கடலுக்குள் செல்லாமல் போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை ராணுவத்தினர் நிர்வாணப்படுத்தி தாக்கினர். அதில், ...
தமிழகம்
வேன்- லாரி மோதல் 38 பேர் காயம்
தாடிக்கொம்பு: திண்டுக்கல் சீலப்பாடி அருகே வேனும், லாரியும் மோதி கொண்டதில் 38 பேர் காயமடைந்தனர். வடமதுரை தென்னம் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் வேல்முருகன் (22). இவருக்கு தேனியில் பெண் பார்க்க, இவரது உறவினர்கள் 30 க்கும் மேற் பட்டோர் ஒரு வேனில் நேற்று காலையில் புறப் பட்டனர். வேன் திண்டுக்கல் சீலப்பாடி பிரிவு அருகே வ...
தமிழகம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு
பொன்னேரி : அனைத்து ரயில் நிலையங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என, ரயில் பயணிகள எதிர்பார்க்கின்றனர். சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத் தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 16 ரயில் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்தும் ஆயிரக்கணக் கான பயணிகள் சென்னை மற்...
தமிழகம்
விபத்தில் ஒருவர் பலி
திண்டுக்கல்: நத்தம் மெய்யம் பட் டியை சேர்ந்தவர் துரையன் மனைவி தமிழரசி (45). இவர் சிவகுளம் பாலம் அருகில் ரோட்டின் இடது ஓரமாக நடந்து சென்ற போது, பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
தமிழகம்
தூத்துக்குடியில் வாலிபர் கொலை
தூத்துக்குடி : தூத்துக்குடியில் வாலிபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி ராஜபாண்டிநகரை சேர்ந்த ஜீவராஜ் மகன் விஜயகுமார் (34). உப்பள தொழிலாளி. இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று பகலில் ஒரு கோவில் அருகே விஜயகுமார் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த தெரிந்த நபர் ஒருவர், நண்...
தமிழகம்
சிலைக்குள் ரூ.2 கோடி போதைப் பொருள் கடத்தியவர் கைது!
திரிசூலம் : இந்தோனேஷியா நாட்டிற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை சிலைக்குள் வைத்து கடத்த முயன்ற நபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அபிபுல்லா பெய்க்(35). இவர், வெளிநாட்டிற்கு கேட்டமின் போதைப் பொருளை கடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய வருவாய்புலனாய்வுத் துறையி...
தமிழகம்
இருவர் தற்கொலை
திண்டுக்கல்: சாணார்பட்டி குரும்பபட்டியை சேர்ந்தவர் தமிழன் மகன் சசிகுமார்(22). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த, இவர் நேற்று விஷம் குடித்து தற் கொலை செய்து கொண் டார். *ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரபட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (55). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந் தார். இவர், விஷம் குடித்து தற்கொலை செய்து...
தமிழகம்
குண்டும், குழியுமானது அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய சாலை
அயப்பாக்கம் : அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலைகள் அனைத்தும் மோசமாகி விட்டதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர்.சென்னை நகரில் மக்கள் நெருக்கடி, சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அம்பத்தூ...
தமிழகம்
காசிமேடு கடற்கரை வார்ப்பில் குடிமகன்கள் அட்டகாசம் : "வாக்கிங்' செல்வதில் சிக்கல்
காசிமேடு : பொதுமக்கள் காற்று வாங்க வந்து செல்லும் காசிமேடு கடற்கரை வார்ப்பு பகுதியை, குடிமகன்கள் திறந்தவெளி பார்களாக மாற்றியுள்ளனர். இதனால், குழந்தைகளுடன் வந்து செல்லும் பெண்கள், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.வடசென்னையில் திருவொற்றியூர், காசிமேடு, புது வண்ணார பேட்டை, ராயபுரம் பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் பலர் பார்க...
தமிழகம்
சுடுகாட்டு பாதை தகராறு செய்தவர்கள் மீது வழக்கு
வேடசந்தூர்: வேடசந்தூர் கொன்னாம்பட்டி மக்களின் சுடுகாடு தோப்புபட்டி அருகே உள்ளது. இந்த ஊர் மக்கள் பிணத்தை எடுத்து செல்லும் பாதை முட்புதர்கள் நிறைந்தது. இந்த ஊர் மக்கள் மெயின் ரோட்டில் சென்று தோப்புப்பட்டிகாலனி பகுதி வழியாக பிணத்தை எடுத்து சென்றனர். இதனை தோப்புப் பட்டி மக்கள் மறித்து தகராறு செய்தனர். இந்த மோதலில் குப்புச...
இந்தியா
கப்பல் கேப்டன் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது
புதுச்சேரி : புதுச்சேரியில் கப்பல் கேப்டன் கொலை வழக்கில் நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் விஜயரங்கம் (62); கப்பல் கேப்டன். சென்னை பனையூரில் குடும்பத்துடன் வசித்து வந்த விஜயரங்கம், தனது மகன் நிச்சயதார்த்த அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக, கடந்த 9ம் தேதி புதுச்சேரிக...
தமிழகம்
கேளம்பாக்கத்தை பேரூராட்சியாக மாற்ற கோரிக்கை
திருப்போரூர் : நகர் பகுதியாக வளர்ந்துள்ள கேளம்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கேளம்பாக்கம், சென்னை புறநகர் பகுதியில் அதிவேகமாக வளர்ந்த நகரமாக மாறியுள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். அடுக்கு மாடிகுடியிருப்ப...
தமிழகம்
நடுவழியில் பழுதாகி நின்றது சரக்கு ரயில்
வடமதுரை: திண்டுக்கல்- கரூர் ரயில்பாதையில் இன்ஜின் பிரேக் சிஸ்டத்தில் ஏற் பட்ட கோளாறால் சரக்கு ரயில் நடுவழியில் நின்றது. தூத்துக்குடியில் இருந்து திண்டுக்கல் வழியே கரூர் சென்ற சரக்கு ரயில் எரியோடு- பாளையம் ஸ்டேஷன்களுக்கிடையே பிரேக் சிஸ்டத்தில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்றது. இதனையடுத்து ஈரோட்டில் இருந்து மாற்று இன்ஜ...
இந்தியா
மொபைல் கோபுரம் தகர்ப்பு
மல்கான்கிரி : ஒரிசாவில், தனியாருக்கு சொந்தமான மொபைல் போன் கோபுரத்தை, மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தகர்த்துள்ளனர். ஒரிசா மாநிலம், மால்கான்கிரி மாவட்டத்தில் உள்ள பலிமேளா டவுன் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான மொபைல் போன் கோபுரத்தை, மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் வெடி வைத்து தகர்த்தனர். நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட நக்ச...
தமிழகம்
அபாய நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி
செய்யூர் : அபாய நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை இடித்துத் தள்ள வேண்டும் என அகரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.சூணாம்பேடு அடுத்துள்ளது அகரம் கிராமம். இங்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராம மக்களின் குடிநீர் தேவையைப் போக்க இங்கு 20 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு க...
தமிழகம்
சூணாம்பேடு காலனியில் காவல் உதவி மையம்
செய்யூர் : குற்றச் செயல்களை தடுக்க சூணாம்பேடு காலனியில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.செய்யூர் தாலுகாவில் உள்ளது சூணாம்பேடு ஊராட்சி. இது 13 கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஊராட்சியாகும். சூணாம்பேடு காலனியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து ஆகிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. மேலும் இங்குள்ள இரண்டு...
தமிழகம்
மனைவியை வெட்டியவர் கைது
வேடசந்தூர்: வேடசந்தூர் அருகேயுள்ள எஸ்.வாடிப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் பிச்சை. இவர் தனது மøனைவி பூங்கொடி (35) நடவடிக் கையில் சந்தேகம் அடை ந்து, அவரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த பூங்கொடி ஆபத் தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சையை கைது ...
தமிழகம்
அடுத்த ஆண்டு தேதி குறிப்பிட்டு அரசு பஸ்சில் பயணச்சீட்டு சப்ளை
பள்ளிப்பட்டு : அரசு பஸ்சில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட பயணச் சீட்டில் அடுத்த ஆண்டிற்கான தேதி குறிப்பிட்டு சீட்டு வழங்கப்பட்டது.திருத்தணியிலிருந்து புச்சிரெட்டிபள்ளி வழியாக பொதட்டூர்பேட்டைக்கு தடம் எண் 97 கே அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு திருத்தணி பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட...
தமிழகம்
தி.மு.க., பொதுக்கூட்டம்
வடமதுரை: வடமதுரையில் ஒன்றிய தி.மு.க., சார்பில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ராயல் தலை மை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப் பாளர் சொக்கலிங்கம், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் நாகராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் ராமகிர...
தமிழகம்
சாலையில் நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
திருவள்ளூர் : திருவள்ளூர்-திருத்தணி நெடுஞ்சாலையில் வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வாகனங்களும், அவ்வழியே செல்லும் லாரிகளும் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருவள்ளூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சி.வி.நாயுடு சாலை திருத்தணி-திருப்பதி நெடுஞ்சாலையாக விளங்குகிறது. இச்சாலையில் வேலைவாய்ப்பு அலுவல...
தமிழகம்
தாண்டிக்குடியில் 91.மி.மீ., மழை
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர்ந்து இரு நாட்களாக பெய்த கன மழை காரணமாக மாலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் 91.மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலையடுத்து மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படுகிறது. தாண்டிக்குடி, பண் ணைக்காடு, தடியன்குட...
தமிழகம்
பெண் ஆசையில் வீட்டிற்குள் புகுந்த அ.தி.மு.க., பிரமுகருக்கு தர்ம அடி
கமுதி : கமுதி அருகே பெண் ஆசையில், நள்ளிரவில் அத்துமீறி வீடு புகுந்த அ.தி.மு.க., நகர் செயலரை, அக்கம் பக்கத்தினர் சிறை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அபிராமம் அ.தி.மு.க., நகர் செயலராக இருப்பவர் நாகராஜன். இதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர் அயூப் கான். இவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் நாகராஜன், நேற்று ...
தமிழகம்
பெண் தற்கொலை
வடமதுரை: வடமதுரை பி.கொசவபட்டியை சேர்ந்த கிருஷ் ணன் மனைவி ஏர்ம் மாள் (38). 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 17 வயதில் மகள் உள்ளார். குடும்ப பிரச் னைக்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
பெரியாறு அணையில் 57 மி.மீ.,மழை
மதுரை : முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 116.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1223 மில்லியன் கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 600 மி.கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 26.77 அடி. அணைக்கு நீர் வரத்து 302 மி.க.,அடி. அணையிலிருந்து 41 மி.க.,அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிற...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரியில் திருடியவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் பாதாள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துப்புரவு தொழிலாளி சிவமணி(29). இவர் சீலப்பாடி அருகே விபத்தில் சிக்கி திண்டுக் கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தவர் களிடம் ஆஸ்பத்திரி ஊழி யர் என கூறி பிக்பாக்கெட் அடித்துள்ளார். இவரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள் நகர் வடக்கு போலீசில் ஒப்படைத் த...
தமிழகம்
திண்டுக்கல்லில் தமிழக பிஷப்கள் பங்கேற்கும் பேரவை கூட்டம்
திண்டுக்கல்: தமிழக பிஷப்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. திண்டுக்கல் மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புச்சாமி கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மறை மாவட்டத்தில் முதன் முறையாக தமிழக பிஷப் பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது.இதன் தொடக்கவிழா முள்ளிப்பாடி பிஷப் இல்லத்தில் இன்று காலை 1...
தமிழகம்
அனுமதியில்லாமல் வாணவெடி தயாரிக்கும் போது விபத்து:4 பேர் காயம்
திண்டுக்கல்: செம்பட்டி வீரக்கல் அருகே அனுமதியில்லாமல் வாணவெடி தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டத்தில் 4 பேர் காயமடைந்தனர். செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லை சேர்ந்த கணசேன் மனைவி அமுதா(40). இவர் வீட்டிற்கு பின்பு அனுமதியில்லாமல் வெட்டவெளியில் வாணவெடி தயாரித்துள்ளார். இவருக்கு உதவியாக இதே பகுதியை சேர்ந்த செல்வம்(50), சேகர்,...
தமிழகம்
சின்னாளபட்டியில் லாரி பெட்டியின் பூட்டை உடைத்து ரூ 6 லட்சம் கொள்ளை
அம்பாத்துரை: சின்னாளபட்டி அருகே நிறுத்தியிருந்த லாரியில் பெட்டியை உடைத்து ரூபாய் 6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரித்து வருகின்றனர். சின்னாளபட்டி அருகே கலிக்கம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் காரைக்காலில் உள்ள தனியார் சோப் கம்பெனியில் லாரி டிரைவராக உள்ளார். வாடிப்பட்டி அருகேயுள...
தமிழகம்
திருமங்கலத்தில் திடீர் குடிசைகள் அடிக்கடி நடக்கும் ஆக்கிரமிப்பு
திருமங்கலம்: திருமங்கலம் பாப்பான்குளம் குட்டநாயக்கன் கண்மாய்கரையில் திடீர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் குடிசைகளை அமைத்தனர். திருமங்கலம் ராஜாராம் தெருவில் நகராட்சிதலைவர் தமிழரசியின் வீடு உட்பட முக்கிய பிரமுகர்களின் வீடுகள் உள்ளன. இந்த தெருவிற்கு எதிர்புரம் உள்ளது பாப்பான்குளம் குட்டநாயக்கன் கண்மாய். இந்த கண்மாய்க்கரையி...
தமிழகம்
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் 24ம் தேதி நடக்கிறது
புதுடில்லி : பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் எதிர்க்கட்சிகள் கடும் எரிச்சல் அடைந்துள்ள நிலையில், வரும் 24ம் தேதி தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. முதல்வர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய மாநில ...
தமிழகம்
போலி டாஸ்மாக் கடை நடத்தியவர் கைது
திருமங்கலம்: திருமங்கலம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (56). இவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டின் பின்புறம் வைத்து விற்று வந்துள்ளார். மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தினகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்திய போது 100 மது பாட்டில்கள் கைப் பற்றப்பட்டன. கணேசனை கைதுசெய்து...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்
பெரியகுளம்: தென்கரை போலீஸ் ஸ்டேஷன் பெரியகுளம் கோர்ட் வளாகத்தில் வசதியற்ற கட்டடத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது இங்கிருந்து தாமரைக்குளம் பேரூராட்சி காலேஜ்விலக்கு அருகே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி எஸ்.பி., பாலகிருஷ்ணன் இதனை திறந்து வைத்தார்.
தமிழகம்
தனியார் வசம் மேலூர்நகராட்சி தெரு விளக்குகள்
மேலூர்: மேலூர் நகராட்சி கூட்டம் தலைவர் தமிழரசி தலைமையில் கமிஷனர் அய்யனார் முன்னிலையில் நடைபெற்றது.மேலூரின் 27 வார்டுகளில் உள்ள 1437 தெருவிளக்குகளை பராமரிக்க இரண்டு மின்வாரிய ஊழியர்கள் போதவில்லை. இதனால் 90சதவித விளக்குகள்எரிவதில்லை.இதனை சரிசெய்வதற்காக ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சத்து 35 ஆயிரம் விதம் மூன்று ஆண்டுக்கு 19 லட்சத்...
தமிழகம்
கூடலூரில் 56 மி.மீ.,மழை தண்ணீரில் மிதந்த வீடுகள்
கூடலூர்: கூடலூரில் பெய்த கன மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. விடிய விடிய பொதுமக்கள் தூங்காமல் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலையில் கூடலூரில் 56 மி.மீ., மழை பெய்தது. சுல்லக்கரை ஓடையில் இருந்து வெளியேறிய காட்டாற்று வெள்ள நீர் ஓடையைக் கடந்து மெயின் ரோட்டை சேதப்படுத்தியது. இங்கிருந...
தமிழகம்
மரபுச் சின்னங்களை பாதுகாக்க விழிப்புணர்வு
மதுரை: மதுரை மன்னர்திருமலைநாயக்கர் மகாலில் மரபுச் சின்னங்கள்பாதுகாப்பு பற்றிய விழிப் புணர்வு முகாம் நடந்தது. தொல்லியல் துறை உதவி இயக்குனர் சந்திரவாணன் பேசியதாவது: இம்மகாலை கட்டிய மன்னர் திருமலை நாயக்கர், ஒரு இடத்தில் கூட தனது பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், நம்மவர்கள் பாரம்பரிய மரபுச் சின்னங் களின் மீது பெயர்களை எழுதுதல்...
தமிழகம்
சாலைப் பணியாளர் வாரிசுக்கு வேலைவாய்ப்பு கோரிக்கை
மதுரை: பணியில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் சிங்கராயன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.தமிழ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க...
தமிழகம்
குறைந்த அழுத்த மின்சப்ளை இருளில் மூழ்கும் தெருக்கள்
தேவதானப்பட்டி: குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை ஆவதால் இந்திரா காலனியில் விளக்குகள் எரியாமல் தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளன. பெரியகுளம் ஒன்றியம், முதலக்கம்பட்டி ஊராட் சிக்கு உட்பட்ட இந்திரா காலனியில் 200 வீடுகள் உள்ளன. காலனி பகுதியில் சப்ளை ஆகும் மின்சாரம் குறைந்த அழுத்தத்துடன் உள்ளது. இதனால் வீட்டில் உள்ள விளக்குகள் சரி...
தமிழகம்
"தென்மேற்கு பருவமழையால் பலனில்லையே' : விரக்தியில் விவசாயிகள்
மதுரை: தொடர்ந்து 2 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், இருபோக சாகுபடி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.பெரியாறு, வைகை அணையை நம்பி பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. சமீபத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு பெரியாறு அணையில் நீர் திறந்து விடப்பட்டது. அதேபோல மதுரை மாவட்டத்தில் கள்ளந்திரி...
தமிழகம்
நெல்கொள்முதல் மையம் விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி: மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் மனுக்கொடுத்துள்ளனர். மேல்மங்கலத்தில் பெரியகுளம் வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு அணை அருகே தடுப்பணை கட்டி ராஜவாய்க்கால் மூலம் நீர் கொண்டு சென்று ஆயிரம் ஏக்கர் பரப்பில் முதலாம், இரண்டாம்போக நெல் சாகுபடி நடந்து வரு...
தமிழகம்
பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் மீண்டும் உயர்வு
கூடலூர்: பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட் டம் உயரத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்தது. இரவு பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 1223 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 116.40 அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு 600 கன அடி நீர் திறந்...
தமிழகம்
நுரை ததும்பும் குடிநீர்.. பல்லாங்குழி ரோடு.. இதுதான் எச்.எம்.எஸ்.காலனி
மதுரை மாநகராட்சி 72வது வார்டுக்கு உட்பட்டது எச்.எம்.எஸ்.காலனி. மதுரா கோட்ஸ் ஆலை தொழிலாளர்களுக்காக எச்.எம்.எஸ்.,சங்க முயற்சியில் 1983ல் உருவானது. தற்போது 220 பிளாட்களில் 4000 பேர் வசிக்கின்றனர். ஐந்து தெருக்களை டூவீலரில் வலம் வந்தபோது, தடுமாறி கீழே விழாத குறை. அந்தளவு ரோடுகள் மோசம். மெயின் ரோடு ஆறு மாதங்களுக்கு முன் புத...
தமிழகம்
ஒரு கோடி பி.எட்., பட்டதாரிகள் தேவை : துணைவேந்தர் தகவல்
திருப்பரங்குன்றம்: வரும் ஆண்டுகளில் ஒரு கோடி பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வி பல்கலை துணைவேந்தர் பத்மநாபன் பேசினார். மதுரை திருநகர் அருகே தனக்கன்குளம் சார்லஸ் பி.எட்., கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியதாவது: ஆசிரியர்களுக்கு சமுதாயம் உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளத...
தமிழகம்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேல்நிலைத்தொட்டி தேவை
தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் நிலவும் குடிநீர் தட்டுப் பாட்டை சரி செய்ய கூடுதல் மேல்நிலைத் தொட்டி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளதால் கால்நடைகளும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. ம...
தமிழகம்
ஒருவர் பலி
போடி: போடி திருமலாபுரத்தை சேர்ந்தவர் சங்கர் (35). நேற்று போடியில் பெய்த பலத்த மழையால் பெரியாண்டவர் ஹைரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிய சங்கர் இறந்தார். தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர்.
தமிழகம்
உயிர் பரவல் தடுக்கப்பட்டால் பிரச்னைகள் உருவாகும் : கருத்தரங்கில் தகவல்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் துளிர் அறிவியல் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், துளிர் அறிவில் மையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் உயிர் தொழில்நுட்பம், பருவகால மாற்றங்கள், உயிரி பல்வகைமை, நியூட்ரினோ போன்ற அறிவியல் சார் கருத்துக்கள் குறித்து பள்ளிக் குழந்தைகளில் அறிவியல் ஆர்வலர்...
தமிழகம்
பாஸ்போர்ட் எடுப்பதற்காக போலி ஆவணம் தயாரிப்புதேனியில் நான்கு பேர் கைது
தேனி: தேனியில் போலி ஆவணம் தயாரித்து பாஸ் போர்ட் எடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தேனியில் கேட்டரிங் காலேஜ் நடத்தி வருபவர் சீனிவாசன் (30). இவர் மதுரையை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்கள் முத்தையா, ராமகிருஷ் ணன் மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து போலியாக பிறப்பு சான்று, வாக்காளர் அடையாள அட்டை தயாரித்துள்ளனர். இதன் ...
தமிழகம்
எம்.ஏ.வி.எம்.எம்., பாலிடெக்னிக்மாணவர் விடுதி திறப்பு விழா
மதுரை: மதுரை ஜி.எம்.எஸ்., எம்.ஏ.வி.எம்.எம்., பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி புதிய மாணவர் விடுதி திறக்கப்பட்டது.அழகர்கோவிலில் மதுரை ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் மகாஜன சபை சார்பில் நடைபெறும் ஜி.எம்.எஸ்., - எம்.ஏ.வி.எம்.எம்., பாலிடெக்னிக் கல்லூரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளா...
தமிழகம்
மூதாட்டி மீது வழக்கு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப் பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் மகள் சுதா. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த அடைக்கலம் மகன் கருப்பசாமிக்கும் காதல் இருந்தது. அப் போது இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுதாவின் பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்ப...
தமிழகம்
கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி: சமீபத்தில் நாடு தழுவிய பந்த் நடந்த போது உசிலம்பட்டியில் தி.மு.க., வினர் கடைகளை திறக்க கோரியதையும், பஸ்ஸ்டாண்டிற்குள் இருந்து சந்தைக்குள் செல்லும் பாதைச் சுவர் வைத்து அடைத்ததைக் கண்டித்தும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அ.தி.மு.க., நகர் செயலாளர் பூமாராஜா தலைமை வகித்தார். உசிலம்பட்டி...
தமிழகம்
ஊர்வலம்
செக்கானூரணி: நாகமலைபுதுக் கோட்டை பிரம்மா குமாரிகள் அமைப்பு மற்றும் செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி இணைந்து போதை ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஊர்வலம் நடந்தது. துவக்க விழாவில் பிரம்மா குமாரி ஆஷா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மலர்க்கொடி துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் துவங்கி செக்கானூரணி, தேன்கல...
தமிழகம்
வீரிய ஒட்டுரக விதை நெல் சப்ளையில் தனியார்கள் விதைகளின் ஆதிக்கம், கவனமாக இருக்க அறிவுரை
தேனி: வீரிய ரக நெல் விதைகளை அதிகம் பயன்படுத்துவதில் தனியார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். விதை கொள்முதல் செய்யும் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும் என விவசாயத்துறை அறிவுறுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் தற்போது நெல் விதைப்பு பணிகள் நடந்து வருகின்றன. விவசாயத்துறை சார்பில் ஏ.டி.டி., 36, ஐ.ஆர்., 50 ரக அரிசி விதைகள் சப்...
தமிழகம்
உதவி பொறியாளர் இல்லாமல் காமாட்சிபுரம் விவசாயிகள் தவிப்பு
தேனி: காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் உதவிப்பொறியாளர் இல்லாததால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைக்கு உள்ளாகின்றனர். சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் உதவி பொறியாளர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளது. ஓடைப்பட்டி துணை மின்நிலைய உதவி பொறியாளர் பொறுப்பு பணிகளை கவனித்து வருகிறார். இவர் பெரும்பாலான நே...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி யானைப்பாகன்களுக்கு பயிற்சி
மதுரை: தமிழகத்தில் கோயில் மற்றும் தனியார் பராமரிக்கும் யானைகளை பாகன்கள் முறையாக பராமரிப்பது கிடையாது. தேவையான உணவு கிடைக்காததால், யானைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தொற்றுநோய்க்கு ஆளாகின்றன. தொடர்ந்து ஒரே இடத்தில் நிற்க வைப்பதால் கால்களில் புண் ஏற்படுகிறது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மரகதவல்லிக்கு இப்பி...
தமிழகம்
விசாரணை நடக்கும் போதே சந்தனமரம் வெட்டிகடத்தல்
கூடலூர்: சந்தன மரம் கடத்தல் தொடர்பாக பறக்கும்படையினரின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே தேக்கடி வனப்பகுதியில் சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் வனத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேக்கடி வனப்பகுதியில் சந்தன மரங்கள் சில மாதங்களாக வெட்டி கடத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக வனத்துறை பறக்க...
தமிழகம்
அரசரடியில் மின்தடை
மதுரை: மதுரை அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள் ளன. இதனால் சம்மட்டிபுரம்,முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம். எஸ்.காலனி, டோக்நகர், விராட்டிப்பத்து, முடக்குச் சாலை, இ.பி.காலனி, வ.உ.சி., மெயின் ரோடு, ஜெயில் ரோடு, மேலபொன்னகரம், ரயில்வ...
தமிழகம்
சென்னை கார் டிரைவர் பாபு உடலை அடையாளம் காட்டிய பெற்றோர்
ஆண்டிபட்டி: சென்னையில் கொலை செய்யப்பட்டு கொடைக்கானல் மலையில் வீசப்பட்ட கார் டிரைவர் பாபுவின் உடலை பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பிறகு பாபுவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை மந்தைவெளிபாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி மகள் தீபாவி...
தமிழகம்
குப்பை அள்ளும் ஆட்டோக்கள் பழுதால் துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறை
மதுரை: மதுரை மாநகராட்சியில் குப்பை அள்ளும் ஆட்டோக்கள் அடிக்கடி பழுதாவதால் குப்பை அள்ளும் பணி பாதிக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்களின் பற்றாகுறையும் சுகாதார கேட்டிற்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் குப்பை அள்ள, ஒரு வார்டு ஒதுக்கப்பட வேண்டும். சிறு சந்துகளில் சென்று வர வேண்டும் என்பதற்கா...
இந்தியா
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி -சி 15
சென்னை : சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் சதீஷ் தெரிவித்துள்ளதாவது: கார்ட்டோசாட் - 2 பி செயற்கைக்கோள் மற்றும் அல்சாட் - 2ஏ, ஐசாட் - 1, டிசாட் - 1, ஸ்டட்சாட் ஆகிய துணை செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்...
தமிழகம்
குடும்ப தகராறு கணவரை வெட்டிய மனைவி கைது
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே குறிஞ்சிநகரை சேர்ந்தவர் முருகேசன்(40). இவரது இரண்டாவது மனைவி லதா (36). இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 9ம் தேதி இங்கு வந்த பெண், அவர் கொண்டு வந...