category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சிக்-குன்-குனியா ஒழிப்பு மாதம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை | மடத்துக்குளம்:டெங்கு மற்றும் சிக்-குன்-குனியா ஒழிப்பு மாதம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் கொசு ஒழிப்பது குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மடத்துக்குளம் அருகே கணியூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்குட்பட்ட கிராமங்களில் டெங்கு, மற்றும் சிக்-குன்-கு... |
தமிழகம் | கட்டட அனுமதி வழங்க, அதிகாரம் மட்டுமே போதாது விழிப்புணர்வு அவசியம்: | திருப்பூர் : சென்னை தவிர மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிக்கு குறிப்பிட்ட அளவு வரை, உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது. ஊர்ப்புற வளர்ச்சி குறித்து போதிய விழிப்புணர்வு, உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. அதிகாரத்தை பயன் படுத்தி, விண்ணப்பிப்போர் அனைவருக்கும் அனுமதி வழங் கினால் எதிர்கா... |
தமிழகம் | விண்ணப்பம் பெற அலுவலர் இல்லை; பொதுமக்கள் அதிருப்தி | திருப்பூர் : வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம், திருப்பூரில் நேற்று நடந்தது; விண்ணப்பம் பெற மதியம் வரை அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல், இம் மாதம் 1ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பட்டியலை பார்வையிட்டு,பெயர் விடுபட்டிருந்தால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப... |
தமிழகம் | எகிப்தில் பழமையான நகரம் கண்டுபிடிப்பு | கெய்ரோ:எகிப்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதைய கெய்ரோ நகருக்கருகில் இருந்த பழமையான நகரத்தை, ரேடார் கருவிகள் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.எகிப்தின் 2ம் இடைக்காலமாக கருதப்படும் கி.மு., 1569 -1664 காலகட்டத்தில், ஆசிய நாட்டவர்களாக கருதப்படும் "ஹிக்சாஸ்' என்ற இனத்தவர், எகிப்து மீது படையெடுத்து 100 ஆண்டுகளுக்கும் ... |
தமிழகம் | காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் உடனடியாக நிரப்ப வேண்டுகோள் | திருப்பூர் : அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் வகையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.நடப்பு கல்வியாண்டு ஜூன் முதல் செயல்பட துவங்கியுள்ளது. கடந்தாண்டுகளை விட, இந்தாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கேற்ப பள்ளிகளில் ஆசிரியர... |
தமிழகம் | நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு முகாம் | திருப்பூர் : கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம், தாராபுரத்தில் வரும் 28ல் நடக்கிறது.கோவை தொழிலாளர் துணை கமிஷனர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா நல வாரிய தொழிலாளர்களுக்காக தனி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இ... |
General | மந்திரி மகளுக்கு வாக்குறுதி நிறைவேற்றினார் ராஜபக்ஷே | கொழும்பு:ஐ.நா., அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இலங்கை அமைச்சர் வீரவன்சாவின் மகளுக்கு கொடுத்த வாக்குறுதியை, அதிபர் ராஜபக்ஷே நிறைவேற்றினார்.இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்காக, குழு ஒன்றை ஐ.நா., சபை நியமித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் உள்ள ஐ.நா., அலுவலகம் முன், இலங்... |
தமிழகம் | மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு இடும்பன் நகர் மக்கள் மனு | திருப்பூர் : குடியிருப்பு பகுதிக்குள் செயல்படும் ஹாலோ பிளாக் தொழிற்சாலையை இடமாற்றக்கோரி, ஆண்டிபாளையம், இடும்பன் நகர் மக்கள் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு மனு கொடுத்துள்ளனர்.மனு விபரம்: ஆண்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இடுவம்பாளையம், இடும்பன் நகரில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்... |
தமிழகம் | சீனாவில் வெள்ளப்பெருக்கு: 50 பேர் பலி | பீஜிங்:சீனாவில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 15 பேரை காணவில்லை.இத னால், பலி எண்ணிக்க... |
தமிழகம் | போட்டோ எடுக்கும் பணி இன்று துவக்கம் கலெக்டர் தகவல் | திருப்பூர் : உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில், விடுபட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக போட்டோ எடுக்கும் பணி இன்று துவங்குகிறது. கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீடு திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 5,340 நபர்களுக்கு 12.97 கோடி செலவில் மருத்துவ ச... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | திருப்பூர் : திராவிட அனைத்து பிரிவு பேக்கேஜிங் தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக ராமச்சந்திரன், எல்.பி.எப்., தலைவராக தங்கமணி; பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். போர்மேன், ஹெல்பர், போல்டிங் உள்ளிட்ட ஆபரேட்டர்களை சங்கத்தில் உறுப்பினர்... |
General | வெடிகுண்டு மிரட்டல் விமானம் தரையிறக்கம் | ரியோ டி ஜெனிரோ:வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து, ஏர் பிரான்ஸ் விமானம் பிரேசிலில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து பிரான்சுக்கு நேற்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், ரியோ டி ஜெனிரோ விமான நிலை... |
தமிழகம் | மனுநீதி நாள் முகாம் | திருப்பூர் : செட்டிபாளையம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது; 14 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஆர்.டி.ஓ., சொக்கன் தலைமை வகித்தார். தாசில்தார் பாலசுப்ரமணியம், ஊராட்சி தலைவர் மாரப்பன் வரவேற்றார். எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பங்கேற்றார்.முகாமில், 13 விதவையர் மற்றும் ஒரு முதிர்கன்னிக்கு மாதாந்திர உதவி தொகைக்கான... |
தமிழகம் | வரைவு வாக்காளர் பட்டியலில் சிக்கல் வார்டு வாரியாக வெளியிட கோரிக்கை | திருப்பூர் : நல்லூர் நகராட்சி பகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பம், காலதாமதத்தை தவிர்க்க வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்து வெளியிட வேண்டும் என, நகர தி.மு.க., சார்பில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.மனு விபரம்:திருப்பூர் தெற்க... |
தமிழகம் | விபத்தில் காயமடைந்தவருக்கு எம்.பி., உதவி | அவிநாசி : திருப்பூர் அருகே விஜயாபுரத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் ஜெகதீசன் (27); பனியன் கம்பெனி தொழிலாளி. பெருமாநல்லூர் சந்தைப்பேட்டை சாலையை சேர்ந்த பொன்னையன் மகன் சிவசுப்ரமணியத்துடன் (32), பைக்கில் பெருந் துறை ரோட்டில், நேற்று காலை 10.30 மணிக்குச் சென்று கொண்டிருந்தார். சேலத்தில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு பஸ், பை... |
தமிழகம் | பூண்டியில் முழு சுகாதார பணி | அவிநாசி : திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்தோறும் முழு சுகாதார பணி நடக்கிறது. இம்மாதம், அம்மாபாளையம் பகுதி முழுவதும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.அம்மாபாளையம் - திருப்பூர் ரோடு, ராக்கியாபாளையம் ரோடு, உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் குப்பை அள்ளப்பட்டு, செடி, கொடி, முட்புதர்கள் அகற்றப்பட்டன. அனைத்து... |
தமிழகம் | இளைஞர் காங்., கூட்டம் | அவிநாசி : அவிநாசி தொகுதி இளைஞர் காங்., மாதாந்திர செயற்குழு கூட்டம், அவிநாசியில் நடந்தது. தொகுதி தலைவர் சத்யபிரீத்தா தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் சரவணக்குமார், எம்.பி., தொகுதி பொது செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சஞ்சய் வரவேற்றார்.நீலகிரி எம்.பி., தொகுதி இளைஞர் காங்., தலைவர் அடாஸ் எதாலத் பேச... |
தமிழகம் | காதலியை கொன்று பிணம் நாய்களுக்கு இரை | பிரேசிலியா:பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர் புருனோ பெர்னாண்டசின் மாஜி காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து,பிணத்தின் பாகங்களை நாய்களுக்கு இரையாக்கியது தெரிந்தது.பிரேசில் நாட்டு கால்பந்து விளை யாட்டு வீரர் புருனோ பெர்னாண்டஸ். இவருக்கு திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு எலீசா சாமுடிய... |
தமிழகம் | வடிகால் கட்டுவதில் "சிக்கல்' | திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு அமர்ஜோதி ஜெய்நகரில், வடிகால் பணி நிறைவு பெறாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நல்லூர் நகராட்சி ஜெய்நகர் கிழக்கு முதல் வீதியில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் வடிகால், அமர்ஜோதி ஜெய்நகரில் வடக்கு பகுதி வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அமர்ஜோதி ஜெய்நகர் தெ... |
தமிழகம் | விளையாட மைதானமில்லை | திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 13வது வார்டு கோல்டன் நகர் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மைதானம் இல்லை; மாணவர்கள் விளையாட இடமின்றி தவிக்கின்றனர்.தொட்டிய மண்ணரை, கணேசபுரம், சஞ்சய் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், கோல்டன் நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கின்றனர். பள்ளியில் இர... |
தமிழகம் | மின்வாரிய ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தேர்வு | திருப்பூர் : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது; வட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். அவிநாசி கோட்ட தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார். பல்லடம் கோட்ட தலைவர் ஜெகநாதன் வரவேற்றார். பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் ராமகிருஷ்ணன், மின் தொழிலாளர் முன்னேற்ற ... |
தமிழகம் | சிறுநீர் கழிக்க மாணவர்கள் அவதி அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் | அவிநாசி : ரோடு விரிவாக்கத்துக்காக, அவிநாசியில் வெட்டப்பட்ட மரங்கள், கடந்த ஒரு மாதமாக பள்ளி வளாகத்தில் கிடக்கின்றன. இதனால், பள்ளி குழந்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.அவிநாசியில் கடந்த மாதம் 2ம் தேதி சாலை விரிவாக்க பணிக்காக போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள அரசு துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் அகற்றும் பணி நடந்தது. பள்ளி வளாகத்தில்... |
General | அமெரிக்காவில் 90 வங்கிகளுக்கு மூடுவிழா | நியூயார்க்:பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதிபிரச்னையை சமாளிக்க முடியாமல் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் கடந்த ஓராண் டுக்கும் மேலாக பெரும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. அது, உலக அளவில் பொருளாதார மந்த நிலை யையும் ஏற்படுத்தியது.
நிதிப் பிர... |
தமிழகம் | குப்பை அள்ள ஒரே ஒரு தொழிலாளி கோடங்கிபாளையத்தில் அவலம் | பல்லடம் : கோடங்கிபாளையம் ஊராட்சியில் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவ்வூராட்சியில் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே இருப்பதால் பல இடங்களில் குப்பை தேங்கியுள்ளது.பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்கிபாளையம் ஊராட்சியில் பெரிய கோடங்கிபாளையம், சின்னகோடங்கிபாளையம், பெருமாக்கவுண்டன்பாளையம், ராசாகவுண்டன்பாளையம், காரணம்பே... |
தமிழகம் | அரசு மருத்துவமனைக்குள் போலீஸ் ரோந்து அவசியம் | திருப்பூர் : திருப்பூர் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன; இரவு பணியாற்றும் மருத்துவமனை ஊழியர், செவிலியர் அச்சப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, போலீசார் ரோந்து செல்ல வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, புறநோயாளிகள் பிரிவ... |
தமிழகம் | வேட்பாளர் அறிவிப்பு | திருப்பூர் : உள்ளாட்சி தேர்தலில் காலியாக உள்ள இடங்களுக்கு போட்டியிட, இ.கம்யூ., வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஏழாவது வார்டுக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.இ.கம்யூ., சார்பில் ஊத்துக்குளி துணை செயலாளர் சின்னச்சாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம் | உடுமலை : நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது; உட்கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். முருகானந்தம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சாலைப்பணியாளர்களுக்கு வேலை நிதியில் சம்பளம் வழங்குவதை தவிர்த்து அரசாணை அடிப்படையில் அரசு நேரடி நிதியில் வழங்க ... |
தமிழகம் | நாய் தொல்லை தாங்க முடியலை நகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி | பல்லடம் : பல்லடம் நகரப்பகுதியில் தெருநாய் பெருக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அவற்றை பிடித்து, கு.க., சிகிச்சை செய்ய, நகராட்சி நிர்வாகம் முன்வராததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன; 40 ஆயிரம் பொதுமக்கள் வரை வசிக்கின்றனர். அனைத்து வார்டுகளிலும் கடந்த ஓராண்டாக தெருநாய்... |
தமிழகம் | இலங்கை அரசை கண்டித்து சிவசேனா ஆர்ப்பாட்டம் | திருப்பூர் : ஐ.நா., ஆய்வுக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்காத, அதிபர் ராஜபக்ஷேவை கண்டித்து திருப்பூர் மாவட்ட சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இலங்கை ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக் கும் இடையே நடந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர் களின் மனித உரிமைகள் குறித்து விசாரிக்க, ஐ.நா., சபை ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக் ... |
தமிழகம் | பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் | உளுந்தூர்பேட்டை : பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று நிகும்பலா யாகம் நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அபிதகுசலாம்பிகை சமேத அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை தோறும் நிகும்பலா யாகம் நடந்து வருகிறது.நேற்று காலை 11 மணிக்கு துவங்கிய ஆனி மாத அமாவாசை யாகத்தில் சங்க... |
தமிழகம் | பா.ஜ., ஆர்ப்பாட்டம் | திருப்பூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் மாவட்ட பா.ஜ., சார்பில் குமரன் சிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பா.ஜ., மாவட்ட தலைவர் மணி தலைமை வகித் தார். பெட்ரோல், டீசல், காஸ் மற்றும்மண்ணெண்ணெய் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். |
தமிழகம் | திண்டிவனம் அருகே சிப்காட்:திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் | திண்டிவனம் : திண்டிவனம் அருகே அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு வழி காட்டுதல் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் வட்டம் வெண்மணியாத்தூர் சமத்துவபுரம் அருகே சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மொத்தம் 727 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற் பேட்டை அமைய உள்ளது. இதில் அரசு புறம்போ... |
தமிழகம் | பணத்துடன் ஓடிய கணக்காளர் கைது | பல்லடம் : தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டிய ஒரு லட்சம் ரூபாயுடன் தலைமறைவான கணக்காளரை, பல்லடம் போலீசார் கைது செய்தனர். கரைப்புதூர் ஊராட்சி அண்ணா நகரில் பனியன் லேபிள் கம்பெனி நடத்தி வருபவர் ஜெரால்டு (29). இவர், கம்பெனியில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதற்காக, கணக்காளர் கார்த்தி (2... |
தமிழகம் | கோவில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம் | விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் சீனுவாசன் பட்டாச்சாரியார் 2008ம் ஆண்டு இறந்ததால் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது இந்து அறநிலைய துறை வசம் ஒப்படைத்து திண்டிவனம் ஆய்வாளர் சிவாகரன் கடந்த 2ம் த... |
தமிழகம் | ஆடுகளுடன் கிரிக்கெட் விளையாடிய இ.ம., கட்சியினர் | பல்லடம் : இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட, இந்திய அணி சென்றதை கண்டித்து, பல்லடத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆடுகளுடன் கிரிக்கெட் விளையாடி, எதிர்ப்பு தெரிவித்தனர்.இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை ஐ.நா., சபை கண்டித்துள்ளது. இலங்கையில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட, இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அரசு... |
தமிழகம் | திருக்கோவிலூரில் ரயில் முன்பதிவு மையம் துவக்க வேண்டும் | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் துவக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம், காட்பாடி இடையிலான ரயில்பாதை 500 கோடி ரூபாய் மதிப்பில் அகலபாதையாக மாற்றப் பட்டுள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்து துவங்கிவிட்ட நிலையில், பயணிகள் ரயில் விரைவில் துவங்கப்படவுள்ளது. இதன்மூலம் பெங... |
தமிழகம் | சிவன் கோவிலில்முற்றோதல் நிகழ்ச்சி | திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய் நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.அம்பலவாணதம்பிரான் சுவாமிகள் தலைமை தாங்கினார். சென்னை அபிராமி அம்மை அறக்கட்டளையை சேர்ந்த சிவனடியார்கள் நேற்று காலை 8 மணி முதல் 12 மணிவரை மங்களாம்பிகை கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தினர்.முன்னதாக காலை 6 ம... |
தமிழகம் | ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் திண்டிவனத்தில் கலெக்டர் ஆய்வு | திண்டிவனம் : திண்டிவனம் தாலுகாவில் நடந்த ஓட்டுச்சாவடி சிறப்பு முகாம்களை கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார். திண்டிவனம் தாலுகாவில் விடுபட்ட வாக் காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் கடந்த இரு நாட் கள் நடந்தன. ஓட்டுச்சாவடிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடி மைய அலுவலர் களாக உள... |
தமிழகம் | வல்லத்தில் முன் சம்பா பருவத்திற்கு நெல், உளுந்து விதைகள் விற்பனை | விழுப்புரம் : வல்லம் வேளாண்மை அலுவலகத்தில் முன் சம்பா பருவத்திற்கு பொன்னி நெல் மற்றும் உளுந்து விதைகள் மானிய விலை யில் விற்பனை செய்யப்படுகின்றன.தமிழகத்தில் பெரும்பாலான மாவட் டங்களில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனத்தின் காரணமா கவும் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி விவ சாயிகள் கோடை உழவு செய்து ... |
தமிழகம் | திண்டிவனத்தில் இலவச கண் பரிசோதனை | திண்டிவனம் : திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் துவக்கி வைத்தார். புதுச் சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் 214 பேருக்கு பரிசோதனை செய்தனர். இவர்களில் 53 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் ர... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | செஞ்சி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேள னத்தின் (சி.ஐ.டி.யூ.) செஞ்சி பேரூராட்சி கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் குறவன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., வட்ட செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். புதிய தலைவராக காமராஜ்,செயலராக சூசை, பொருளாளராக சகாயராஜ், துணை தல... |
தமிழகம் | பணியாளர்களுக்கு அரசு நிதி வழங்கல் | திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சியில் ஓய்வு பெற்ற பணி யாளர்களுக்கு அரசு குடும்ப நல நிதி வழங்கப் பட்டது. திண்டிவனம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய சாரங்கபாணி, துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றிய நடராஜன், மணி, தமிழரசு ஆகியோர் கடந்த மாதம் 30 ம் தேதி ஓய்வுப் பெற்றனர். இவர்கள் நான்கு பேருக்கும் ஓய்வூதிய பலன்களில் ம... |
தமிழகம் | பஸ் மோதி சிற்ப தொழிலாளி பலி | தியாகதுருகம் : தனியார் பள்ளி பஸ் மோதியதில் தொழிலாளி இறந்தார்.தியாகதுருகம் அடுத்த குன்னியூரை சேர்ந்தவர்கள் அசோக் (28), அன்பு (30). இருவரும் கோவில் கோபுரங்களில் சிமென்ட் சிற்ப தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5ம் தேதி தியாகதுருகம் சந்தைமேடு அருகே இருவரும் பைக்கில் சென்றபோது கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற தனியார் பள்ளி பஸ் அ... |
தமிழகம் | பிக்பாக்கெட் அடித்த 3 பெண்கள் கைது | உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டை அருகே பிக்பாக்கெட் அடித்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர். எலவனாசூர்கோட்டை அடுத்த பல்பல்கான் தக்காவை சேர்ந்தவர் ஷேக்சம்சுதீன்(55). இவர் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு உளுந்தூர்பேட்டை செல்வதற்காக எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தத் தில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் மூன்று பெண்கள் பேச்சு... |
தமிழகம் | பூச்சி மருந்து குடித்து மூதாட்டி தற்கொலை | செஞ்சி : கஞ்சனூர் அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.கஞ்சனூர் அடுத்த மேல்காரணையை சேர்ந்த வரதராஜ் மனைவி ரத்தினம்மாள் (60). வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் மனம் உடைந்து கடந்த 10ம் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலன... |
தமிழகம் | லாரி மோதியதில் சிறுவன் பலி | தியாகதுருகம் : சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் லாரி மோதி இறந்தான்.தியாகதுருகம் அடுத்த கரீம்ஷா தக்காவை சேர்ந்த சையத் பெரூஸ், இவரது மனைவி ஜான்மா. இவர் நேற்று முன்தினம் தனது மகன் மிஷால் (5) உடன் கள்ளக்குறிச்சி சென்றுவிட்டு கரீம்ஷா தக்கா பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையோரம் நடந்து சென்றார்.அப்போது உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற... |
தமிழகம் | தகராறு செய்த மூவர் மீது வழக்கு | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த கனையார் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது அண் ணன் குமார். இருவருக்குமிடையே நிலம் சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி தங்கராஜின் மாடு குமார் நிலத்தில் தண்ணீர் குடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார், அவரது தந்தை மாணிக்கம், குமார் மகன் கவுதம்(19) ஆகியோர் ... |
தமிழகம் | தேர்தல் முன்விரோதத்தால் கோஷ்டி மோதல் பத்து வீடுகள் சூறை: 11 பேர் கைது | விக்கிரவாண்டி : தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. மோதல் தொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 11 பேரை கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் போலீஸ் சரகம் கல்லடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சக்கரவர்த்தி. இவர் அ.தி.மு.க., மாவட்ட எம்... |
தமிழகம் | மாற்று கட்சியினர் 200 பேர் தே.மு.தி.க.,வில் ஐக்கியம் | விழுப்புரம் : மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 200 பேர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலையில் தே.மு. தி.க., வில் இணைந்தனர்.விழுப்புரத்தில் உள்ள தே.மு.தி.க., மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அவரது முன்னிலையில் தியாகதுருகம் ஒன்றியம் விருகாவூர் தி.மு.க., செயலாளர் பாரதி, விழுப... |
தமிழகம் | ரேஷன் உளுந்து வேனில் கடத்தல்: துரத்தி பிடித்த தாசில்தார்கள் | விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் உளுந்து கடத்திச் சென்ற வேனை 40 கி.மீ., தூரம் தாசில் தார்கள் துரத்தி பிடித்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த புல்லூர் ரேஷன் கடையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு விற்பனை செய்ய உளுந்து மூட்டைகள் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தன. இதனை நேற்று மதியம் மர்ம நபர்கள் மாருதி வேனில்... |
தமிழகம் | பனப்பாடியில் 14ம் தேதிமனு நீதிநாள் | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த பனப்பாடியில் வரும் 14ம் தேதி மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.பனப்பாடி கிராமத்தில் வரும் 14ம் தேதி காலை 10.30 மணிக்கு விழுப்புரம் உதவி ஆணையர்(கலால்) தலைமையில் மனு நீதிநாள் முகாம் நடக்கிறது. இதில் பட்டா மாற்றம், முதியோர், உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விவசாயக் கூலி தொழிலாளர்கள், நலிந்தோர் ... |
தமிழகம் | திருநாவலூர் ஒன்றிய தி.மு.க., ஆலோசனை | உளுந்தூர்பேட்டை : திருநாவலூரில் ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். ஒன் றிய செயலாளர் வசந்தவேல் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட கவுன்சிலர் பழனி, ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சமுத்து, முருகன், நீர்பாசன சங... |
தமிழகம் | சர்க்கரை நோய் மூட்டுவலி சிகிச்சை முகாம் | விழுப்புரம் : விழுப்புரம் ஏ.ஆர். எஸ்., இயற்கை யோகா - ஓமியோபதி மருத்து வமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.விழுப்புரம் ஏ.ஆர். எஸ்., மருத்துவமனையில் சர்க்கரை நோய் மற்றும் மூட்டு வலி சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்த முகாமில் டாக்டர்கள் சீனிவாஸ், அனு... |
தமிழகம் | மணலூர்பேட்டை அரிமா சங்கம் சார்பில் கல்வி உதவி | திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.மணலூர்பேட்டை அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சுப்ரமணிய மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரிவையர் சங்க தலைவி பர்கத்பானு, லியோ சங்க தலைவர் துரை முன்னிலை வகித்தனர். செயலாளர் குழந்தைவேலு ... |
தமிழகம் | கிராம சபா கூட்டம் | திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டில் சிறப்பு கிராம சபா கூட்டம்நடந்தது.ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். எழுத்தர் கணேசன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவனேசன் முன்னிலை வகித்தார். வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டது. இதில் பெயர் விடுபட்டவர்கள், திருத்தம் செய்... |
தமிழகம் | கருத்தாய்வு கூட்டம் | திண்டிவனம் : தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் நல்லாவூர் உப வடி பாசன நீர்வள நிலவளத்திட்டம் குறித்த கருத்தாய்வுக் கூட்டம் நடந்தது. திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பிரபு பேசினார். தென்கோடிப்பாக்கம் ஏரிசங்க தலைவர் சங்கர், செயலாளர் சுப்ரமணியன... |
தமிழகம் | நகராட்சி குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் | விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி குப்பை தொட்டியில் பச் சிளம் குழந்தை பிரேதம் கண்டெடுக்கப் பட்டது. விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அடுத்த பூந் தோட்டப் பாதையில் நகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது. இதில் நேற்று காலை 9.30 மணியளவில் பச் சிளம் குழந்தை குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்தது. பிறந்து சில மணி நேரமே ஆன அந்... |
தமிழகம் | சண்முகபுரம் காலனி பகுதியில் குடிநீர் பைப் லைன் சீரமைப்பு | விழுப்புரம் : விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் குடிநீர் பைப் லைன் அடைப்பை நகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர். விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியில் குடிநீர் பைப் லைன் பழுதடைந்ததாக அப்பகுதி கவுன்சிலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் குடிநீர் பைப் லைன் பழுதான பகுதியை க... |
தமிழகம் | பாக பிரிவினையை பதியா விட்டால் பிரச்சனை வரும் | செஞ்சி : சொந்தங்களுக்குள் பாகப் பிரிவினை நடந்தாலும் பதிவு செய்யாவிடில் சந்ததியினருக்கு பிரச்னை வரும் என நீதிபதி மோகன்ராம் பேசினார்.செஞ்சி தாலுகா பாலப்பாடியில் செஞ்சி வட்ட சட்டபணிகள் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந் தது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி மோகன் ராம் பேசியதாவது:சிவில் வழக்குகளில் பெரும்பகுதி ஆவணங்களின் அடி... |
தமிழகம் | ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.கே. எஸ்., கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்ட மளிப்பு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜிலு, பொரு ளாளர் தமிழ்மணி முன் னிலை வகித்தனர். சேர் ... |
தமிழகம் | வடபாலை சுகாதார நிலையம் திறப்பு துணை இயக்குனர் அதிரடி நடவடிக்கை | செஞ்சி : வடபாலை கிராமத்தில் மின் இணைப்பு இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக மூடிக்கிடந்த துணை சுகாதார நிலையம் மீண்டும் செயல்படத் துவங்கியது.மேல்மலையனூர் ஒன்றியம் வடபாலை கிராமத்தில் கடந்த 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட துணை சுகாதார நிலையம் மின் கட்டண பாக்கியால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. மேல்புதுப்பட்டு, கீழ் புதுப்ப... |
தமிழகம் | மாணவிகள் கல்வி சுற்றுலா | கள்ளக்குறிச்சி: தேசிய பெண் கல்வி திட்டத்தின்கீழ் 5 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கல்வி சுற்றுலா சென்று வந்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த மாத்தூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பெண் கல்வி திட்டத் திற்கு உட்பட்ட மாத்தூர் நடுநிலைப்பள்ளி, பரிகம் தொடக்க பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி, மாதவச்சேரி நடுநிலைப்பள்ளி மற்றும் திரு முருகன் ந... |
தமிழகம் | நகராட்சி மருத்துவமனையை தரம் உயர்த்த அரசுக்கு கோரிக்கை | விழுப்புரம் : மாவட்ட மனித உரிமைகள் கழகத்தின் பொதுக் குழு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரம் ஜோதி மகாலில் நடந்தது. மாநில புரவலர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவரணி அமைப் பாளர் டாக்டர் ரவி முன் னிலை வகித்தார். அமைப் பாளர் அப்பாஸ் வரவேற் றார். மண்டல அமைப்பா ளர் பிச்சை முகமது பொதுக் குழுவின் நோக்கம் மற்றும... |
தமிழகம் | மின்கம்பத்தை புதுப்பிக்காததால் பெரியமாம்பட்டு மக்கள் அவதி | தியாகதுருகம் : பெரியமாம்பட்டு கிராமத்தில் மின்கம்பம் உடைந்து ஒருமாதமாகியும் புதிப்பிக்காததால் பொதுமக்கள் அவதிப் பட்டு வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு நடுத் தெருவில் இருந்த மின் கம்பம் கடந்த மாதம் பெய்த மழையின்போது வீசிய பலத்தகாற்றில் முறிந்து விழுந்தது. இதனால் கம்பிகள் அறுந்து மின்தடை ஏற் பட்டது. தற்காலி... |
தமிழகம் | பெண்ணை கற்பழிக்க முயற்சி இரண்டு வாலிபர்கள் கைது | திருக்கோவிலூர் : கண்டாச்சிபுரம் அருகே கணவருடன் சென்ற பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப் பட்டனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கடயம் கிராமத்தைச் சேர்ந்த மணி, அவரது மனைவி சுந்தரி(37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுப்பாளையத்தைச் சேர்ந்த நண்பர் கண்ணன்(38) என்பவருடன் நேற்று... |
தமிழகம் | கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு | விழுப்புரம் : வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மேல்தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஜனார்த்தனன் (30). இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் மேல்தெரு வழியாக சென்றார். அப்போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே இருந்த சிறுவழியில் பெரியகாலனியைச் சேர்ந்த தியாகு உள்ளிட்ட... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா | தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஒன்னியம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் விமலா நாராயணன் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் தமிழ்செல்வி முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., தாமரைசெல்வன் 250 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புகளை வழங... |
தமிழகம் | உண்ணாவிரதம் | தர்மபுரி: தர்மபுரி பாரதி புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் மின் வாரிய டிரைவர்களுக்கு இணையாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரி உண்ணாவிரதம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். துரைசாமி, ஆசைதம்பி, ஜோதி, குமரேசன், மகேஸ்வரன், ஆற... |
தமிழகம் | காமராஜரின் முதல்வன் விருது வழங்கும் விழா | தர்மபுரி: தர்மபுரியில் அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் மற்றும் மாவட்ட கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜரின் முதல்வன் விருது வழங்கும் விழா நாளை (ஜூலை 13) டி.என்.சி.,விஜய் மஹாலில்... |
தமிழகம் | ஊர்கவுண்டர் கொலை | தர்மபுரி: பாலக்கோடு அடுத்த கவுண்டனூரை சேர்ந்தவர் மாதப்பன் (56). ஊர் கவுண்டர். நேற்று முன்தினம் இரவு,மாட்டு கொட்டகையில் தூங்கி கொண்டிருந்த அவரை யாரோ கம்பியால் தாக்கி விட்டு தப்பினர்.அக்கம், பக்கத்தார் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
பென்னாகரம் டி.எஸ்.பி., பஞ்சவர்ணம், பாலக்கோடு இன்ஸ்பெ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | தர்மபுரி: தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை வகித்õதர். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் மாதேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர்கள் முனியன், மணி, தொழிற்கல்வி ஆசிரியர் ... |
தமிழகம் | சுகாதார நிலையத்தில் குழந்தை பலி : பொதுமக்கள் தர்ணா போராட்டம் | தர்மபுரி: தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிறந்து இரு நாட்களே ஆன குழந்தை நேற்று இறந்தது. மருத்துவர் மற்றும் பணியாளர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாப்பாரப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்(30). அவரது மனைவி சங... |
தமிழகம் | தார் சாலை பணி துவக்கம் | காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் யூனியன் பையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கீழ் பையூர் கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை 11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. யூனியன் சேர்மன் ஆதிமகேந்திரன் தலைமை வகித்து, சாலைபணியை துவக்கி வைத்தார். துணைச்சேர்மன் சக்திவேல், பஞ்சாயத்து தலைவர் சக... |
தமிழகம் | அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியம்மன் சேலை ஏலம் | சத்தியமங்கலம்: அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டு சேலைகளை ஏலம் எடுக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள மாரியம்மன் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி... |
தமிழகம் | மருத்துவ முகாம் | ஸ்ரீமுஷ்ணம் : சோழத்தரத்தை அடுத்த கோவிந்தநல்லூரில் பாஸ்டினா கல்வி அறக்கட் டளை, ரெஸ்ட்டு தொண்டு நிறுவனம் மற் றும் புதுச்சேரி பிம்ஸ் மருத் துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.ஸ்வீடு தொண்டு நிறுவன இயக்குனர் வேளாங் கண்ணி தலைமை தாங்கினார். இயக்குனர் சேவியர் பெர்னாண்டஸ் வரவேற் றார். தண்டேஸ்வரநல் லூர் அந்தோணியார் ஆலய ... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | கடலூர் : அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று கடலூரில் நடந்தது.மாநிலத் தலைவர் அனுசுயா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பிரேமா, ராணி முன்னிலை வகித் தனர். பொதுச் செயலா ளர் சிவகாமி வரவேற் றார். அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத் தலைவர் கருணாகரன், அமைப்பு செயலாளர் தாமஸ் மேரி... |
தமிழகம் | உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் | கடலூர் : உலக மக்கள் தொகை தினத்தையொட்டி செவிலிய மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கடலூரில் நடந்தது.உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கடலூர் அரசு மருத்துவமனையில் மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தமிழகத்தில் 19.2ஆக உள்ள பிறப்பு சதவீதத்தை 15ஆக குறைக்க பொதுமக்களிடை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு... |
தமிழகம் | குளித்தலை அருகே விவசாயிகள் கலந்துரையாடல் | குளித்தலை: குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், பயிர் மற்றும் ரகங்கள் குறித்தும்... |
தமிழகம் | மாத இறுதியில் சம்பளம் துப்புரவாளர்கள் கோரிக்கை | கடலூர் : துப்புரவு ஊழியர்களுக்கு மாத இறுதியில் சம்பளம் வழங்க வேண்டும் என கடலூர் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஐக்கிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் ஆவசர ஆலோசனைக் கூட்டம் கடலூர் பாபு கலையரங்கில் நடந்தது. வினாயகம் தலைமை தாங்கினார். ரகு, காமராஜ், ஆனந்த், அஞ்சலை, முனுசாமி முன்னிலை வகித்தனர். மதி வரவேற்றார். கூட்டத... |
தமிழகம் | குளித்தலை அருகே விவசாயிகள் கலந்துரையாடல் | குளித்தலை: குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், பயிர் மற்றும் ரகங்கள் குறித்தும... |
தமிழகம் | வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் படிவம் பற்றாக்குறை மக்கள் அவதி | கடலூர்: கடலூர் மாவட்டத் தில் கடந்த முதல் தேதி வெளியிடப்பட்ட சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் வாக்களர் சேர்க்கை, திருத்தம், மற் றும் மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கிடைக் காமல் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.கடலூர் மாவட்டத்தில் 2010ம் ஆண்டிற்கான சுருக்க... |
தமிழகம் | தாலுகா அலுவலக சான்றிதழுக்கு பொதுமக்கள் அலைக்கழிப்பு | குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற வரும் மக்கள், மூன்று அலுவலகங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண கரூர் டி.ஆர்.ஓ., உறுதியளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
குளித்தலை தாலுகா அலுவலகத்தில் குளித்தலை, தோகமலை, நங்கவரம் குறுவட்ட கிராமத்துக்கு உட்பட்ட மக்கள் பட்டா, சிட்டா, ஜாதி சான்... |
தமிழகம் | தன்னம்பிக்கை முகாம் | சிதம்பரம் : சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு தன்னம் பிக்கை முகாம் நடந்தது. சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி செந் தில்குமார் வரவேற்றார். மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி தலைவர் சரண் சிறப்பு விருந்தினராக பங் கேற்று ஆசிரியர்களு... |
தமிழகம் | முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் கூட்டம் | கரூர்: கரூர் முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ., முனிரத்தினம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் படைவீரர்களிடம் நிலுவை தொகை, பட்டா, ரேஷன் கார்டு, குழந்தைகள் படிப்புக்கான வசதி, வீட்டு வசதி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட மனு பெறப்பட்டது. உரிய துறை அலுவலர்களுக்கு மனுவை அளித்து, நடவடிக்கை எடுக... |
தமிழகம் | வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் | புவனகிரி : வங்கி அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் கீரப்பாளையத்தில் நடந்தது.வட்ட அளவில் வங்கி அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் கீரப்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்தியன் வங்கி மேலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நபார்டு வங்கி மேலாளர் ராஜகோபால்,... |
தமிழகம் | செயற்குழு கூட்டம் | புவனகிரி : வக்பு வாரியத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென கை கொடுக்கும் கை அமைப்பு முடிவு செய்துள்ளது.புவனகிரி-கடலூர் மெயின்ரோடு அலுவலகத்தில் கை கொடுக்கும் அமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனர் முகமது ரபீக் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் புவனகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு கொடுத்தும் ... |
தமிழகம் | இலக்கிய மன்ற துவக்க விழா | சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பை அடுத்த மஞ்சக்கொல்லை அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசு தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் முடியழகன், ஜெயகுமார், ஆனந்தி முன்னிலை வகித் தனர். செல்வராசு வரவேற்றார்.விழாவில் "வெளிச்சம் தெரிகிறது' என்ற தலைப் பில் இலக்கிய மன்றத்தை பொன்னம்பலம... |
தமிழகம் | சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு | சிதம்பரம் : சிதம்பரம், காட்டுமன் னார்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பொதுப்பணித் துறையின் கீழ் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. கடந... |
தமிழகம் | உண்ணாவிரதம் | கடலூர் : வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் மற்றும் முறையான ஓய்வூதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் (24 மணிநேரம்) உண்ணாவிரதம் கடலூரில் நடந்தது.சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி முழுநேர அரசு ஊழியராக்க வேண் டும். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்த... |
தமிழகம் | பண்ருட்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் | பண்ருட்டி : பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.சேர்மன் எழிலரசி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., க்கள் துரை, கல்யாண்குமார் முன் னிலை வகித்தனர். கூட் டத்தில் கவுன்சிலர் கம்சலிங்கம் பேசுகையில், "மேல்மாம் பட்டு கெம்ப் ளாஸ்ட் நிறுவனத்தினர் தொழிற் சாலை கழிவுகளைக் கொட்டி வருவதால் நிலத்தடி நீர் மோசமடைந்து வருகிற... |
தமிழகம் | கண்தானம் | சிதம்பரம் : சிதம்பரத்தில் இறந்த பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.சிதம்பரம் அம்மா பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி சரோஜினி தேவி (45). இவர் இறந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் முருகப்பன், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் பாலநாகசுப்ரமணியன், கமல்கி÷ஷார் ஜெயின், தன்னார்வ ரத்ததான கழகத் த... |
தமிழகம் | வேட்டமங்கலம் பஞ்.,ல் கால்நடை மருத்துவ முகாம் | வேலாயுதம்பாளையம்: வேட்டமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையத்தில் டி.என்.பி.எல்., நிர்வாகம், அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாம் நடத்தின.
மாடுகளுக்கு சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, நோய் மாதிரி ஆய்வுப்பணி, கன்றுகள்... |
தமிழகம் | கி.கிரி., மாவட்டத்தில் 25 பதவிக்கு 66 பேர் மனு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 25 பதவிகளுக்கு 66 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 ஒன்றியகுழு உறுப்பினர்கள், 4 பஞ்சாயத்து தலைவர்கள், 17 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் 1 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் ந... |
தமிழகம் | விற்பனையாளர் குடும்பத்திற்கு நிதியுதவி | பரங்கிப்பேட்டை : பணியின்போது இறந்த ரேஷன் கடை விற்பனையாளர் குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரிந்த மணிமாறன் பணியின்போது இறந்தார். அதையொட்டி கூட்டுறவு துறை ஐக்கிய பேரவை சார்பில் மணிமாறனின் மகள் நந்திதா பெயரில் 5 ஆயிரம் ரூப... |
தமிழகம் | பள்ளி சிறார் நல்வாழ்வு திட்ட மருத்துவ முகாம் | விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி சிறார் நல்வாழ்வு திட்ட மருத்துவ முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.வட்டார சுகாதார பள்ளியலாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர... |
தமிழகம் | விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் | நெல்லிக்குப்பம் : பி.என். பாளையத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த பி.என். பாளையத்தில் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மூலம் நீர்வள, நிலவள திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆராய்ச்சி நிலைய தலைவர் நசீர் அகமது தலைமை தாங்கி செம்மை நெல் சாகுபடி, பயிறு வகைகள், கரும்பு, மஞ்சள் சாகு... |
தமிழகம் | மின்வாரிய கணக்கீட்டாளர் சங்க மத்திய பேரவைக் கூட்டம் | கடலூர் : அகில இந்திய மின்வாரியம் கணக்கீட்டாளர் மற் றும் பணம் வசூலிப்பவர் கள் சங்க மத்திய பேரவை மற்றும் வட்ட பேரவைக் கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடந்தது.வட்டத் தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். மாநிலத் தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜனார்த் தனம், பொருளாளர் துரியானந்தன் முன்னிலை வகித்தனர்.பின்னர் நிர்வாகிக... |
தமிழகம் | கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் கணேசன் சார்பில் ஏழை மாணவர்கள், மாற்றுத்திறனாளி மற்றும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இலவச சீருடைகள், நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் பொன்னுசாமி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்கள் ஜெயபால், தட்சணாமூர்த்தி, வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர... |
தமிழகம் | திறப்பு விழா | விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த படுகளாநத்தம் கிராமத்தில் இந்திய கம்யூ., கட்சி கிளை திறப்பு விழா நடந்தது.கிளை செயலாளர் செல்லவேல் தலைமை தாங்கினார். பொன்னுசாமி, ராமசாமி, கிருஷ் ணன், சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணியன் கொடியேற்றி பேசினார். |
தமிழகம் | திட்டக்குடியில் இலவச மருத்துவ முகாம் | திட்டக்குடி : இறையூர் அருணா மேல் நிலைப் பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 170 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.திட்டக்குடி அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் கொத் தட்டை முத்துக்குமாரசாமி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை, மா... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.