category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மண்டல பூஜை நிறைவு விழா
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது.கடம் வைத்து பூஜை, துர்கா பூஜை நடந்தது. பின், புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூல விக்ரகத்துக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை அவுரிக்காடு மருளாளிகள் செய்திருந்தனர். கோவ...
தமிழகம்
பணி ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்
கடலூர் : மாநில அரசு அலுவலர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி ஆணை வழங்கிடுமாறு சிவ இளங்கோ அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.சிவ இளங்கோ அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட் டம் மற்றும் மாவட்ட செயலாளர் கண்ணனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கடலூர் டவுன் ஹாலில் நடந்தது. செயலாளர் குணவேல் தலைமை தாங்கி...
இந்தியா
அதிகரிக்கும் கொலை சம்பவங்களால் பொது மக்கள் அச்சம்
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் பெருகி வரும் கொலை குற்றங் களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. மாதத் திற்கு மூன்று கொலைகள் என வரிசையாக அரங்கேறி வருகிறது. மக்கள் தொகை பெருக்கம்...
தமிழகம்
ஆசிரியருக்கு பரிசு
சிதம்பரம் : நெய்வேலி புத்தக கண்காட்சிகவிதை போட்டியில் முட்லூர் ஆசிரியர் முதல் பரிசு பெற்றார். என்.எல். சி., நிறுவனம் சார்பில் 13வது புத் தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண் காட்சியில் பார்வையா ளர்களுக்கு நடந்த கவிதை போட்டியில் சிதம்பரம் அருகே பி.முட்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் தமிழ்செல்வன் முதல்பரிசு பெற்ற...
இந்தியா
சமஸ்கிருத மொழி பயில இலவச பயிற்சி வகுப்பு
புதுச்சேரி : சமஸ்கிருத பாரதி தன்னார்வ அமைப்பு சார்பில் சமஸ்கிருத பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சமஸ்கிருத பாரதி சேவக் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:சமஸ்கிருத பாரதீ எனும் தன்னார்வ அமைப்பு, சமஸ்கிருதத்தில் பேச, படிக்க, எழுத பயிற்சி அளிக்கிறது. ஜாதி, மத வேறுபாடின்றி 13 வயதிற்கு மேற் பட்ட ஆர்வமுடைய அ...
தமிழகம்
இயந்திரம் மூலம் களை எடுத்தல் செயல் விளக்க முகாம்
சேத்தியாத்தோப்பு : எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நெல் லிக்கொல்லையில் இயந்திரம் மூலம் களை எடுத்தல் மற்றும் மண் அணைத்தல் செயல் விளக்க முகாம் நடந்தது.சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆலைப்பகுதி கோட்ட அலுவலகம் சார்பில் நெல்லிக்கொல்லை கிராமத்தில் இயந்திரம் மூலம் களை எடுத்தல் மற்றும் கரும்பு...
இந்தியா
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிஉள்ளாட்சித்துறை இயக்குனர் ஆய்வு
புதுச்சேரி : புதுச்சேரியில் புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் சிறப்பு முகாமை உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான புகைப் பட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான 851 வாக்க...
தமிழகம்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை கடைவீதியில் சப் இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி ரோந்து சென்றார். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற புதுப்பேட்டை கோரிப்பாளைய தெருவைச் சேர்ந்த முருகன் (55) என்பவரை கைது செய்து அவரிடமி...
இந்தியா
அதிகளவில் பிடிபடும் மத்தி மீன்கள் விலை போகாததால் கருவாடாக மாற்றம்
காரைக்கால் : காரைக்காலில் அதிகளவில் பிடிபடும் மத்தி மீன்களை கோழி தீவனத்திற்காக கருவாடாக காய வைக் கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காரைக்கால் கடல் பகுதியில் மத்தி மீன் சீசன் மார்ச் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். இந்த காலத்தில் கடலில் 5 முதல் 10 கிலோ மீட்டர் தூரத்தில், இதற் கென தயாரிக்கப்பட்ட விஷேச வலையைக் ...
இந்தியா
மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
புதுச்சேரி : காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஓவியர் மன்றம் சார்பில் நடந்த ஓவியப்போட்டியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள சேக்ரட் ஆர்ட் பெண்கள் பள்ளியில் நேற்று ஓவியப்போட்டி நடந்தது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு புதுச் சேரி ஓவியர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஓவியப் போட்டியில், 20...
தமிழகம்
சாமி கற்சிலைகள் திருட்டு
சேத்தியாத்தோப்பு : சோழதரம் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவிலில் சொக்கநாதர், பிரம்மா கற்சிலைகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பை அடுத்த புடையூரில் ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த சொக்கநாதர், பிரம்மா ஆகியோரின் கற்சிலை கோவில் வெளி ப...
தமிழகம்
சைக்கிள் திருடன் கைது
சேத்தியாத்தோப்பு : சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பை அடுத்த பாளையங்கோட்டையில் சோழதரம் சப் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் கொண்டசமுத்திரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் மக...
தமிழகம்
மாணவர்களுக்கு சீருடை கல்வி உபகரணம் வழங்கல்
பெரம்பலூர்: துறைமங்கலம் ஸ்ரீ ராமலிங்க ஜோதி அறநிலையம் சார்பில், மாணவர்களுக்கு சீருடை, கல்வி உபகரணம் வழங்கும் விழா, ஸ்ரீராமலிங்க ஜோதி நிலைய 34வது ஆண்டு விழா, புதிய அறநிலைய கட்டட மூன்றாம் ஆண்டு விழா, திருவேங்கடம் 119வது ஆண்டு நினைவு விழா, வள்ளற்பெருமான் வருகை தந்த 187வது ஆண்டு ஆகிய ஐம்பெரும் விழா நேற்று காலை நடந்தது. விழா...
இந்தியா
பாகூர் பள்ளியில் தாய்மொழி திருவிழா
புதுச்சேரி : பாகூர் பெண்கள் துவக்கப் பள்ளியில் தாய் மொழித் திருவிழா நடந் தது.பாகூர் இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு பேரவை நிறுவனத் தலைவர் முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைச் செயலர் ஜமுனாரவி வரவேற் றார். பொருளாளர் முருகு முத்துக்குமரன், துணைத் தலைவர் நாகஜோதி முன் னிலை வகித்தனர். செயலர் வெற்றிவே...
தமிழகம்
வாகன சோதனை: 10 பேர் மீது வழக்கு
சிறுபாக்கம் : வேப்பூரில் வாகன தணிக்கையின்போது 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வேப்பூர் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கடந்த இரண்டு நாட்களாக வேப்பூர் கூட்டுரோடு, நல்லூர் - கண்டப்பங்குறிச்சி சாலைகளில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல், லைசெ...
இந்தியா
கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுச்சேரி : அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 6, 7, 8 ம் வகுப்பு பயிலும் ஆதி திராவிட மாணவிகளுக்கான வாழ்க் கைத் திறன் மேம்பாட்டுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்றுமுன்தினம் நடந்த முகாமிற்கு பள்ளியின் துணை முதல்வர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ...
இந்தியா
தரமான உரங்கள் கிடைக்கவில்லை விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
காரைக்கால் : காரைக்கால் விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைக்க வகை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காரைக்கால் பிரதேச விவசாயிகள் சங்கத் தலைவர் கூறி உள்ளார்.இது குறித்து சங்கத் தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:வேளாண் துறையின் கீழ் பாசிக் நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்குவத...
தமிழகம்
மனித மேம்பாட்டு அறிக்கை கருத்து பரப்பு கூட்டம்
பண்ருட்டி : அண்ணாகிராமத்தில் மனித மேம்பாட்டு அறிக்கை கருத்து பரப்பு கூட்டம் நடந்தது.பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனித மேம்பாட்டு அறிக்கை கருத்து பரப்பு கூட்டம் அண்ணா திருமண மண்டபத்தில் நடந் தது. ஒன்றிய சேர்மன் கவுரி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் தமிழரசி, மனோகரன் முன் னிலை வகித்தனர். கூட்டத...
இந்தியா
போலீசாரை தாக்கிய டெம்போ ஓட்டுனர்கள் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
புதுச்சேரி : போலீஸ்காரர்களை தாக்கிய டெம்போ ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தியுள்ளது. காவலர் பொது நல இயக்கத் தலைவர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி போக்குவரத்து போலீஸ்காரர்களை தாக்கிய டெம் போ ஓட்டுனர்களின் லைசென்சை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். டி.ஜி.பி., நேரடியா...
தமிழகம்
மருத்துவமனையில் பாலியல் தொல்லை: இருவர் கைது
கடலூர் : கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளுடன் வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுடன் வந்து தங்கும் பெண்களிடம் சில விஷமிகள் பாலியல் தொல்லை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவு...
இந்தியா
வட்டி சதவீதத்தை குறைக்க வேண்டும் மகளிர் சுய சார்பு இயக்கம் கோரிக்கை
புதுச்சேரி : மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடனுக்கான வட்டி சதவீதத்தை குறைக்க வேண்டும் என சமம் மகளிர் சுய சார்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் 15வது பொதுக்குழு கூட்டம் குயவர்பாளையம் கீர்த்தி மகாலில் நடந்தது. இயக்கத் தலைவர் அன்பரசி ஜூலியட் தலைமை தாங்கினார். நிர...
தமிழகம்
நெடுஞ்சாலையோரம் இயங்கும் பள்ளி முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை
திட்டக்குடி : திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளிக்கு முன் வேகத் தடை இல்லாததால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைச்செருவாய், ஆக்கனூர், பாளைய...
தமிழகம்
ஸ்பெயின் அணிக்கு ரூ.142 கோடி பரிசு
ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. 2ம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.
இந்தியா
விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு சாவு
புதுச்சேரி : சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு உயிரிழந்தார்.திருக்கனூர் அடுத்த செட் டிப்பட்டு நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் (50). இவர், புதுச்சேரி போக்குவரத்து போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 20ம் தேதி பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்ப...
தமிழகம்
கடலூரில் இலவச கண்சிகிச்சை முகாம்
கடலூர் : கடலூர் சி.கே., மெட்ரிக் பள்ளி, சென்னை அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடத்தியது.இதில் கண்ணில் புரை, நீர் அடைப்பு, சீழ் வடிதல், நீர் அழுத்தம், பூவிழுதல், மாறுகண், மாலைக் கண், ஒற்றைத் தலைவலி, தூரப்பார்வை, கிட்டப்பார்வை உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதி...
தமிழகம்
ஜவ்வாது மலையில் கோடை விழா : அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலையில் 14-ம் ஆண்டு கோடை விழா தொடங்கியது. வனத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேணு கோபால் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு பாண் டியன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எ.வ. வேலு அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி, மலர் கண்காட...
தமிழகம்
அங்கன்வாடி குழந்தைகள் மைய செயற்குழு கூட்டம்
லாலாப்பேட்டை: பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து, லட்சுமணப்பட்டி அங்கன்வாடி குழந்தைகள் நல மையத்தில் கிராம செயற்குழு கூட்டம் நடந்தது. கவுன்சிலர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அங்கன்வாடி மைய பணியாளர், மக்களிடையே நல்லுறவு மேம்படுத்தவும், அங்கன்வாடி மூலம் நடைபெறும் பணிகள் அனைத்தும் பயனாளிகளுக்கு சென்றடையவும், மையங்களில...
இந்தியா
வீடுசார் தொழிலாளர் சங்கம் துவக்கம்
புதுச்சேரி :புதுச்சேரி பாலன் நகர் 45 அடி ரோடு ரெயின்போ நகர் சந்திப்பில் புதுச்சேரி மாநில வீடுசார் தொழிலாளர் சங்க திறப்பு விழா நடந்தது.கிளை செயலாளர் மஞ்சுளா வரவேற்றார். கிளை தலைவர் நைனம்மாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் துளசி, ஜமுனா, சின்னப் பொண்ணு முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் விச...
தமிழகம்
கிராமிய நையாண்டி இசைக்குழு சங்க பொதுக்குழு கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கிராமிய நையாண்டி இசைக் குழு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க சிறப்புத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் வீராசாமி, செயலாளர் செல்வராசு, பொருளாளர் ரவி, துணை செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். துணை பொருளாளர் இளவரசன் வரவேற்றார்.முன்னதாக பாலக்கரையில் தொடங்கி நையாண்டி ...
தமிழகம்
காதல் தகராறு: காதலனுக்கு அரிவாள் வெட்டு
திருவண்ணாமலை: செங்கம் அடுத்த கட்டநடுகூர் கிராத்தைச் சேர்ந்தவர் சபரி. இவர் அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு குடும் பத்த்தினருக்கும் தகராறு இருந்தது. சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சபரி, தனது அண்ணன் மகன் முருகனுடன் சென்றார். அப்போது அவரை முனியப்பன், ஜீவா, மணிம...
இந்தியா
வீடு கட்டுவதற்கான மானியம் நமச்சிவாயம் வழங்கினார்
புதுச்சேரி : உழவர்கரை தொகுதி பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான முதல் தவணையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த 810 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக காமராஜர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கும் விழா சுல்தான்பேட்டை ராக் இண்டர்நேஷனல் பள...
தமிழகம்
உற்பத்தி குறைவு: மல்லி, புளி விலை "கிடுகிடு'
பண்ருட்டி : உற்பத்தி குறைவால் மல்லி, புளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.புளி உற்பத்தி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு, ஆந்திரா மாநிலம் புங்கனூர் பகுதியில் புளி தேவைக்கு ஏற்ப விளைச்சல் இல்லை. இதனால் கடந்த ஆண்டை விட ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் அளவில் புளி விலை உயர்ந்துள்ளது.இதனால் கிருஷ்ணகிரி ஏசி கொட்டை புளி குவிண்டால் 1...
தமிழகம்
அகல் விளக்கு பூஜை
நெல்லிக்குப்பம் : பேரிச்சம்பாக்கம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆயிரத்து எட்டு அகல் விளக்கு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த பேரிச்சம்பாக்கம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாள் விழா நடந் தது. சிறப்பு அபிஷேகம் யாகம், தீபாராதனை நடந்தது. மக்கள் நலமுடன் வாழ இலுப்பை, நல்லெண் ணெய் கலந்து ஆ...
இந்தியா
இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கல்
புதுச்சேரி : புதுச்சேரி பிரதேச விஸ்வகர்ம, ஆபரண தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப் பட் டன.புதுச்சேரி பிரதேச விஸ்வகர்ம, ஆபரண தொழிலாளர் நலச்சங்க 9ம் ஆண்டு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா, ரத்ததானம் செய்தவர்களுக் குப் பாராட்டி விருது வழங்கும் விழா ஆகியவை நேற்று ராமலி...
தமிழகம்
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்க சுகாதார செவிலியர்கள் மாநாட்டில் தீர்மானம்
கடலூர் : கிராம சுகாதார செவிலியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என கடலூரில் நடந்த கிராம சுகாதார செவிலியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்க 4வது மாநில மாநாடு கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந் தது. மாநிலத் தலைவர் அலமேலு தலைமை தாங்கினார். ...
தமிழகம்
காரீப் பருவ பயறு வகை சாகுபடி மண்ணச்சநல்லூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் காரீப் பருவ பயறுவகை சாகுபடி முனைப்பு இயக்க முகாம் நடக்கிறது. மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ரெங்கராஜன் வெளியிட்ட அறிக்கை: மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் நடப்பு கோடை பருவத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதைப்பயன்படுத்தி மானாவாரி நிலங்களிலும், தோட...
தமிழகம்
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விருத்தாசலத்தில் மக்கள் கடும் அவதி
விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில் சாலையை அகலப்படுத்தும் பணி கிடப் பில் போடப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் பாலக்கரை நகரின் முக் கிய பகுதியாகும். இப்பகுதியில் சாலை குறுகிய அளவாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சாலை அகலப்படுத்தும் பணிக் காக நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த மூன்று மாதங்க...
தமிழகம்
பிரதோஷவழிபாடு
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.கந்தர்வக்கோட்டை ஸ்ரீ அமராவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்வாமி, அம்பாள், நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதியினர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழகம்
மருத்துவ முகாம்
கிள்ளை : சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் ஊராட்சி அழிஞ்சிமேட் டில் இந்து கனவு சிறகுகள் மையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். 124 பேர் பங் கேற்று சிகிச்சை பெற்றனர். டாக்டர் எத்திராஜ் தலைமையில் ஆண் டனி, பிரியதர்ஷினி உள்ளிட்ட டாக்டர் குழுவினர்கள் சிகிச்சையளித்தனர். ஒருங்க...
இந்தியா
நிர்வாகிகள் பதவியேற்பு
புதுச்சேரி : புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி கிளப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆனந்தா இன் ஓட்டலில் நேற்று நடந்தது.முன்னாள் தலைவர் வினோத் முரர்கா வரவேற்றார். முன்னாள் செயலர் நிஜாம் முன்னிலை வகித்தார். சங்க புதிய தலைவராக சுந்தர் (எ) சிதம்பரம், செயலராக ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள...
தமிழகம்
வி.ஏ.ஓ., பணியிடம் காலி சிறுபாக்கத்தில் மக்கள் அவதி
சிறுபாக்கம் : சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் மக்கள் கடுமையாக அவதியடைகின்றனர்.திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக இயங்கி வருகிறது. இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., ராமலிங்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளு...
இந்தியா
கடனை கேட்டபோது அவமானப்படுத்தியதால் கொலை செய்தேன் கைதான வாலிபர் வாக்குமூலம்
புதுச்சேரி : கொடுத்த கடனை கேட்கும் போது, பீடியால் என்னை சுட்டதால் முடித்திருத்தும் தொழிலாளியை கொலை செய்தேன் என கைதான வாலிபர் போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். முத்தரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (45). முடித் திருத்தும் தொழிலாளி. குடிப்பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து ...
இந்தியா
என்.ஆர்.எஸ்., பேரவை பெயர் பலகை திறப்பு விழா
புதுச்சேரி : என்.ஆர்.எஸ்., பேரவையின் பெயர் பலகை திறப்பு விழா நேற்று எல்லைப்பிள்ளைச்சாவடியில் நடந்தது. என்.ஆர்.எஸ்., பேரவை கவுரவத்தலைவர் பலராமன் வரவேற்றார். உழவர்கரை நகராட்சி சேர்மன் ஜெயபால் பேரவையின் பெயர் பலகையை திறந்து வைத்தார். என்.ஆர்.எஸ்., பேரவை மாநில தலைவர் முருகையன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழா...
தமிழகம்
மின் மோட்டாருக்கு ஏற்ற டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை
விருத்தாசலம் : விவசாயிகள் பயன்படுத்தும் மோட் டார்களின் குதிரைத் திறனை கணக்கிட்டு அதற்கேற்ற டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நிலத்தடி நீர் பாசன விவசாயிகள் பேரவை மாவட்டத் தலைவர் சேதுராமன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:கடலூர் மாவட்டத்தில் பருவந...
தமிழகம்
வேளாண் பொறியியல் துறையின் "போக்கு' இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை
கடலூர் : வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் இயந்திரங்கள் உரிய நேரத் தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.வேளாண்மை பொறியியல் துறை கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப் பத்தில் செயல் பட்டு வருகிறது. விவசாயத்திற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இவ்வலுவலகத்தின் மூலம் அரசே விவசாயிகளுக்கு தேவையா...
தமிழகம்
பேரூராட்சி மன்ற கூட்டம்
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை நகரில் 71 லட்சம் ரூபாயில் பல்வேறு வளர்ச் சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சிமன்ற கூட்டம் தலைவர் கீதா கலியமூர்த்தி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற...
தமிழகம்
பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா
கிள்ளை : கொத்தங்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை ஒன் றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 123 பள்ளிகளுக்கு மானிய நிதியாக 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய், பள்ளி மானியம் 8 லட்சம் ரூபாய், சிறப்பு கிராம கல்விக்குழு கூட்டத்திற்கு 37 ஆயிரத்து 200 ரூபாய் என ...
தமிழகம்
சரிவு தொடர்ந்தாலும், பசுந்தேயிலைக்கு...ஆறுதல் விலை
குன்னூர்:குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விலை சரிவு தொடர்ந்தாலும், பசுந்தேயிலைக்கு ஆறுதலான விலை கிடைத்துள்ளது; சராசரி விலை, கடந்தாண்டை ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது.குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை எண் 27க்கான ஏலம் நடத்தப்பட்டது; மொத்தம் 16.84 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு இருந்தது; இலை ரகம் 11.67 லட்சம்...
தமிழகம்
கணினி மாவட்ட துவக்க விழா
ஊட்டி:முழு கணினி மாவட்டம் துவக்க விழா, ஊட்டியில் இன்று நடத்தப்படுகிறது.அரசுத் துறைகளில் காகிதப் போக்குவரத்து மற்றும் காலதாமதத்தை குறைக்க, அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 5 மாவட்டங்கள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. ஆறாவதாக, நீலகிரி மாவட்டம், முழுமையாக கணினி மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது...
தமிழகம்
பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா: எஸ்.பி., பங்கேற்பு
கடலூர் : பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூரில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பரிசு வழங்கினார்.பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி தொலைபேசி மாவட்டத் தைச் சேர்ந்த மாணவர்களுக்கான இறகு பந்து மற்றும் நீச்சல் போட் டிகள் ந...
தமிழகம்
வாலிபரை தாக்கியவர் கைது
கடலூர் : போலீஸ் நண்பர் குழுவைச் சேர்ந்தவரை தாக்கியவர் கைது செய்யப் பட்டார்.சிதம்பரம் அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்தவர் பூமாலை மகன் பாண்டியன் (18). போலீஸ் நண்பர் குழுவில் (பிரன்ட்ஸ் ஆப் போலீஸ்) உள்ளார். இது அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (42) என்பவருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு நடந்...
தமிழகம்
இந்திய கம்யூ., நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி திட்டக்குடியில் மறியல்
திட்டக்குடி : திட்டக்குடி அருகே இந்திய கம்யூ., பெண் நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம கிளை நூலகம் கட்ட தீர்மானிக்கப்பட் டது. இதற்காக ஊராட்சி...
இந்தியா
பிரெஞ்சு- தமிழ் அகராதி எழுத முன்வர வேண்டும்ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி ஆசை
புதுச்சேரி : பிரெஞ்சு, தமிழ் மொழிகளில் புலமை பெற்றவர்கள் பிரெஞ்சு- தமிழ் அகராதி எழுத முன்வர வேண்டும் என சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி பேசினார்.பிரெஞ்சு மொழியில் புகழ்பெற்ற 25 கவிஞர்களின் பிரபலமான 50 கவிதைகளை ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியர் ராஜகோபாலன் "பிரபல பிரெஞ்சு கவிதைகள்' என்ற தலைப் பில் மொழிபெயர...
தமிழகம்
திருக்கண்ணாடி அறையில் சரநாராயண பெருமாள்
பண்ருட்டி ; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.பண்ருட்டி திருவதிகை ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன் னிட்டு மூலவர் பெருமாள், தாயார், சயன நரசிம்மர் ஆகிய சுவாமிகளுக்கு க...
தமிழகம்
ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் மாநாடு : துணை முதல்வரை அழைக்க முடிவு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரவி வரவேற்றார். மாநில பொருளாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் அரவிந்தன் ஆகியோர் பேசினர்.ஊர...
இந்தியா
சாராயத்தில் சிலந்தி பூச்சி, பூரான் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
புதுச்சேரி : புதுச்சேரி அரசால் வினியோகிக்கப்படும் சாராயத்தில் சிலந்தி பூச்சி இறந்து கிடக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, மாநில காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆரியப்பாளையத்தில் உள்ள அரசு சாராய ஆலையில் இருந்து மாநிலம் முழுவதும் சாராயக் கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்யப்பட...
இந்தியா
மருத்துவக் கல்லூரிக்கு இடம் உரிய இழப்பீடு வழங்க மனு
புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடம் வழங்கியவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கிடைத்திட முதல்வர் ஆவன செய்ய வேண்டுமென மருத்துவக் கல்லூரிக்கு நிலம் வழங்கியோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சங்கத் தலைவர் தண்டபாணி, முதல்வர் வைத்திலிங்கத்திற்கு அனுப்பியுள்ள மனு:கதிர்காமத்தில் துவக்கப்பட உள்ள காமராஜர் அரசு மருத்துவக் கல்ல...
தமிழகம்
நீரோடையாக மாறும் ஆறுகள்: விவசாயிகள் கவலை
ஊட்டி:பருவமழை தாமதமாகி வருவதால், ஆறுகள், நீரோடையாக உருமாறி வருகின்றன; காய்கறி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், பருவமழையில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், புயல் சின்னத்தின் போது மட்டுமே மழை பெய்கிறது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் குறைந்துள்ளது. மின் உற்பத்தியிலும், மக்களுக்கான நீர் வினியோகத்த...
இந்தியா
தெருமுனைக் கூட்டங்கள் நடத்த அனைத்து தமிழ் அமைப்புகள் முடிவு
புதுச்சேரி : அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி தெருமுனைக் கூட்டங் கள் நடத்த அனைத்துத் தமிழ் இலக் கிய அமைப்புகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.அனைத்துத் தமிழ் இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பின் கூட்டம் தனித்தமிழ் இயக்கத்தலைவர் தமிழமல்லன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், உலகத்தமிழக்கழகப்...
இந்தியா
மறியல் செய்த 50 பேர் கைது
காரைக்கால் : காரைக்காலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பச்சூர் கிராம மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க கோரி திருநள்ளார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். துணை கலெக்டர் ஆபேல் ரோசாரியோ, பேச்சுவார்த்தை நடத்தினார். மனைப்பட்டா வழங் குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது ச...
தமிழகம்
பஸ் வசதி இல்லை கிராம மக்கள் பாதிப்பு
ஊட்டி:ஊட்டி அருகே போர்த்தியாடா கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாததால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஊட்டி அருகே நஞ்சாடு ஊராட்சிக்கு உட்பட்ட போர்த்தியாடா கிராமத்தில், 300 குடும்பங்கள் வசிக்கின்றன; இப்பகுதிக்கு அரசு பஸ் வசதி இல்லாததால், ஒரே ஒரு மினி பஸ் மட்டும் இயக்கப்படுகிறது; இதுவும் பல நேரங்களில் நேரம் தவறுவதால், அத்தியாவசி...
தமிழகம்
மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் திருட்டு
தஞ்சாவூர்: தஞ்சையில் தனியார் நிறுவன மருந்து பிரதிநிதி வீட்டில் திருட்டு நடந்தது. தஞ்சை சீனிவாசபுரம் திருநகரைச் சேர்ந்தவர் பத்மநாபன். மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி பிரமிளா. கடந்த மூன்று நாட்களுக்கு முன் பத்மநாபன் மற்றும் குடும்பத்தார் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு நேற்று காலை வீடு த...
இந்தியா
மருத்துவ பரிசோதனை முகாம்
புதுச்சேரி : லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலை விஜய் மருத்துவமனையில் இலவச சிறப்பு ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் நடந்தது.ஜே.சி.ஐ., ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் புதுச்சேரி மெட்ரோவும், நட்பு வட்டம் இலக்கிய அமைப்பும் இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மெட்ரோ ஜேசி தலைவர் ஆனந்த சிவபாலன் தலைமை தாங்கினார். ச...
இந்தியா
பதவியேற்பு விழா
புதுச்சேரி : புதுச்சேரி மத்திய அரிமா சங்க பதவியேற்பு விழா கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.விழாவில் புதிய தலைவர் சிவக்கொழுந்து, செயலாளர் சாரங்கபாணி, பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோருக்கு முன்னாள் அரிமா கவர்னர் அசோக்குமார் சோர்டியா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.முன்னாள் கவர்னர் ராஜலட்சுமி செல்வகாந்தி முன்னிலை வகித்தார்....
இந்தியா
கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க ஜானகிராமன் கோரிக்கை
புதுச்சேரி : கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என மாநில தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருபுவனை கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அரசு அமைத்த இரு நபர் குழு பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டு...
இந்தியா
காரைக்காலில் வீதிக்கு வந்தது வார சந்தை வரி வசூலித்தாலும் வசதிகள் இல்லை
காரைக்கால் : காரைக்காலில் வாரசந்தை நடத்த இடம் இல்லாததால், வார சந்தை வீதிக்கு வந்தது. நகராட்சி வரி வசூல் செய்தாலும் கடும் வெயிலில் தவிப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.காரைக்காலில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் பழைய பஸ் நிலையத்தின் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடலில் வார சந்தை நடக்கும். இங்கு காய்கறிகள்...
இந்தியா
ஊசுட்டேரியில் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க செம்படுகை நன்னீரகம் வலியுறுத்தல்
புதுச்சேரி : பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரியில் பறவைகள் வேட்டையாடப்பட்டு வருவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென முதல்வருக்கு செம்படுகை நன்னீரகம் அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரிக்கு நிலத்தடி நீர் வளத்தை வழங்குகின்ற ஏரிகளில் ம...
இந்தியா
போராட்டம் நடத்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் முடிவு
காலாப்பட்டு : ஆறாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என புதுச்சேரி பொறியியல் கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.புதுச்சேரி பொறியியல் கல்லூரி ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை கருத்தரங்க அறையில் நடந்தது. சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் நரசிம்மா வரவேற்றார். செயலாளர...
இந்தியா
கல்லூரிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி :வில்லியனூர் கஸ்தூர்பா மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மாணவி ஜானகி வரவேற்றார். கல்லூரி முதல்வர் வசந்தகுமாரி முதன்மை உரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப் பாளர் வாசுகி சிறப்புரையாற்றினார். சப் கலெக்டர் அருணாசலம் வாக்களிப்பின் முக்கியத்...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு கணித மன்றம் துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுபாஷ் வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளி சார்பில் கணித மன்ற துவக்க விழா நடந்தது.மேல்நிலை கணித பிரிவு மாணவர்களால் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சுபாஷ் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பெருமாள்சாமி மன்றத்தை துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் கனகரத்தினம் முன்னிலை ...
இந்தியா
முப்பெரும் விழா
புதுச்சேரி : புதுச்சேரி மகளிர் உலகம் சமூக நற்பணி இயக் கம் சார்பில் சீர்மிகு சிற்றிதழ் எழுத்தாளர் விருது வழங்குதல், அன்னை சிவகாமி பெயரில் சாதனையா ளர்களுக்கு விருது வழங்குதல், பாவலர்களுக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.இயக்க நிறுவனர் தாமோதரன் வரவேற்றார். புதுச் சேரி மத்திய கலால் துறை கண...
இந்தியா
நடன அரங்கேற்றம்
புதுச்சேரி:கம்பன் கலையரங்கில் லிசே பிரான்சே பள்ளி மாணவி துளசி சிந்தியா பாஸ்கரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.லிசே பிரான்சே பள்ளி பிளஸ் 2 மாணவி துளசி சிந்தியா பாஸ்கர், காமராஜர் நகர் நீலா நிருத்யாலயா நாட்டியப் பள்ளியில் முறைப்படி நாட்டியம் பயின்றார். சிதம்பரம், தஞ்சாவூரில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் இவருடைய நடனம் அரங்க...
இந்தியா
கப்பல் கேப்டன் கொலை வழக்கு புதுச்சேரியில் 4 வாலிபர்கள் கைது
புதுச்சேரி : புதுச்சேரியில் கப்பல் கேப்டன் கொலை வழக்கில் நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் விஜயரங்கம் (62); கப்பல் கேப்டன். சென்னை பனையூரில் குடும்பத்துடன் வசித்து வந்த விஜயரங்கம், தனது மகன் நிச்சயதார்த்த அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக, கடந்த 9ம் தேதி புதுச்சேரிக...
தமிழகம்
கரும்பு அறுவடைக்கு உள்ளூர் ஆட்கள் கிடைக்காததால் பற்றாக்குறை
பொள்ளாச்சி : ஆனைமலை பகுதியில், கரும்பு அறுவடை துவங்கியுள்ள நிலையில், உள்ளூரில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளதால், கர்நாடகா மற்றும் வட மாநிலங்களிலிருந்து குடும்ப சகிதமாக ஆட்கள் அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில், ஆனைமலை சுற்றுப்பகுதிகளான சுப்பேகவுண்டன்பு...
தமிழகம்
சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம்: பக்தர்கள் அதிருப்தி
பொள்ளாச்சி : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அமாவாசையையொட்டி நேற்று இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ...
தமிழகம்
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் குப்புசாமி மற்றும் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பொள்ளாச்சி அடுத்த வடுகபாளையத்தில் இருந்து ஆர்.பொன்னாபுரம் செல்ல...
தமிழகம்
தடுப்பு சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் குடியிருப்பு கண்டு கொள்ளாதஅதிகாரிகள்
வால்பாறை : வால்பாறையில் இடிந்து விழும் நிலையில், ஆபத்தான நிலையில் இருக்கும் வீடுகளுக்கு தடுப்பு சுவர் உட்பட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை டவுன் பகுதியில், கடந்த 2008ம் ஆண்டு தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்த நிலையில் 300 க்கும் மேற்பட்ட வீடு...
தமிழகம்
மாணவர்களுக்கு உதவித்தொகை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.அறக்கட்டளை செயலாளர் வெங்கட்ராகவன் வரவேற்றார். தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். நிறுவனர்கள் காஜாஉசேன், பரணிதரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி முதல்வர் ராஜ்குமார்...
தமிழகம்
இளைஞர் காங்., நிர்வாகிகள் கூட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், இளைஞர் காங்., லோக்சபா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி லோக்சபா தலைவர் ரசணாம்பிகை வரவேற்றார். இளைஞர் காங்., மாநில பொதுச்செயலாளர் மோகனாம்பாள் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஒவ்வொரு பொதுச் செயலாளருக்கும், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்டு சட்டசபை, பிரத்யேக பொறுப்புகள் பிரித்து வழங்கப்ப...
தமிழகம்
முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுபாஷ் கலை அறிவியல் கல்லூரியில், இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவில், முதல்வர் பெருமாள்சாமி வரவேற்றார். கல்லூரி தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கனகரத்தினம் முதலாமாண்டு வகுப்புகளை துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் ஜெகதீஸ்வரி நன்றி கூறினார்.அதேபோ...
தமிழகம்
முதல்வர் விருதுக்கு விண்ணப்பம் பயிற்றுனர்களுக்கு வாய்ப்பு
ஊட்டி:விளையாட்டில் சிறந்த வீரர்களை உருவாக்கிய பயிற்றுனர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களிடமிருந்து, முதல்வர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நம் மாநிலத்தில் சிறந்து விளங்கும் 2 பயிற்றுனர்கள் மற்றும் 2 உடற்கல்வி ...
தமிழகம்
பாதையை பராமரிக்க வலியுறுத்தல்
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே ஆற்றுப்பாதையை பராமரிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கணியூர் ஊர்பகுதியில் இருந்து ஆற்றுக்கு வெங்கிட கிருஷ்ணா மேல் நிலைப்பள்ளி வழியாக செல்ல வேண்டும். ஒரு கிலோமீட்டருக்கு மேல் நீளமுள்ள இந்த ஆற்று பாதை தற்போது மண் சாலையாக உள்ளது. அமராவதி ஆற்றங்கரையில் பழைய ஆயக்கட்டு பாச...
தமிழகம்
பாரதிதாசன் பல்கலை., இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியானோர் பரிந்துரை
திருச்சி: திருச்சி பாரதிததாசன் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தகுதியானோர் பரிந்துரைக்கப்பட உள்ளனர். இதுகுறித்து திருச்சி கலெக்டர் (பொ) தட்ஷிணாமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளரால் தெரிவிக...
தமிழகம்
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற மூன்று பேர் கைது
திருச்சி: தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றதாக திருச்சியில் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீரங்கம் நெல்சன்ரோட்டை சேர்ந்த மணி மகன் கோபாலகிருஷ்ணன் (29). பீம நகரைச் சேர்ந்த ராமநாதன் (48). உறையூர் மேட்டுத்தெருவை...
தமிழகம்
வேலைவாய்ப்பு ஆஃபீஸ் பதிவு புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு
திருச்சி: திருச்சி மாவட்ட கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: கடந்த 2006 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2009 டிசம்பர் 31ம் தேதி வரை பல்வேறு காரணங்களால் தங்களது பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் தகுதியான நபர்கள் அவரவர் பதிவு செய...
தமிழகம்
கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடந்தது. சிறுதொழில் பாதுகாப்பு அணி செயலாளர் திருமூர்த்தி வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். இதில், வரும் 16ம் தேதி கோவையில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமையில் நடக்கும் இந்துக்கள...
தமிழகம்
திருச்சியில் மேம்பாலத்திலிருந்து விழுந்தவர் பலி
திருச்சி: திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பார்வையற்ற வாலிபர் பரிதாமாக இறந்தார். திருச்சி விமானநிலையம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). பார்வையற்றவர். இவர் நேற்று காலை டி.வி.எஸ்., டோல்கேட் அருகே மேம்பாலத்தில் நடந்து சென்றார். அப்போது, கால் தவறி பாலத்தின் பக்கவாட்டிலிருந்து கீழே...
தமிழகம்
போக்குவரத்து தானியங்கி சிக்னல் துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து தானியங்கி சிக்னலை கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி., கண்ணன் துவக்கி வைத்தார்.பொள்ளாச்சி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்...
தமிழகம்
இடைத்தேர்தல்: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலுக்கு தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரீசிலினை இன்று நடக்கிறது.பொள்ளாச்சி தாலுகாவில், வேட்டைக்காரன்புதூர், சமத்தூர், கிணத்துக்கடவு ஆகிய மூன்று பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வீரல்பட்டி, ஆனைமலை ஒன்றியத்தில் ஜல்ல...
தமிழகம்
தேனீ வளர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த சின்னநெகமம் உழவர் மன்றம் சார்பில் தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.உழவர் மன்ற தலைவர் பழனிசாமி வரவேற்றார். நெகமம் யூனியன் வங்கி கிளை மேலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். சின்ன நெகமம் ஊராட்சி துணைத்தலைவர் பானுரேகா முன்னிலை வகித்தார். மதுரை வி.பி.எஸ்., இயற்கை தேனீ பண்ணை நிர்...
தமிழகம்
30 வாகனங்களில் செல்ல அ.தி.மு.க.,வினர் முடிவு
பொள்ளாச்சி : கோவையில், நாளை நடக்கும் கண்டன பொது கூட்டத்திற்கு பொள்ளாச்சியிலிருந்து 30 வாகனங்களில் அ.தி.மு.க.,வினர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நாளை (13ம் தேதி) கோவை வ.உ.சி., மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், கட...
தமிழகம்
மஞ்சள் சாகுபடி இரு மடங்கு அதிகரிப்பு
பொங்கலூர் : பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் சாகுபடி பரப்பு, கடந்தாண்டை காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக மழை குறைவு காரணமாக, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆண்டு முழுவதும் அதிகளவில் தண்ணீர் தேவைப்படுவதால், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, விவசாயிகள் குறைந்த அளவே மஞ்சள் சாகுபடி செய்திருந்...
தமிழகம்
ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி: ஆந்திர மாநிலத்திற்கு லாரியில் கடத்தவிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு பொன்னேரி போலீசார் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் த...
தமிழகம்
ஊக்கத்தொகை வழங்கும் விழா
ராசிபுரம்: நகர தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ராசிபுரத்தில் நடந்தது.அறக்கட்டளை தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர் ÷ஷாபனா, கிருத்திகா, மாணவர் கா...
தமிழகம்
சாலை விரிவாக்கம் செய்ய நூலகம் இடிப்பு
சேலம்: சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகஸ்ட் 20ம் தேதி திறக்கப்படுவதையொட்டி, அப்பகுதியில் இருந்த கிளை நூலக கட்டிடம் இடிக்கும் பணி துவங்கியது. சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா ஆகஸ்டு 20ம் தேதி நடக்கிறது. அதையொட்டி அப்பகுதியில் உள்ள சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. அரச...
தமிழகம்
மாவட்ட குழு கூட்டம்
நாமக்கல்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாள் கலைஞர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத்தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட உதவித் தலைவர்கள் ராமச்சந்திரன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சங்க துணைத்தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், "என்ன செய்யப்போகிறோம்'...
தமிழகம்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
மோகனூர்: சேலம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் நேற்று மோகனூர் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த பாலசுப்ரமணியம், பரமத்தி ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சேலம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முத்தமிழ் முதல்வன் மோகனூர் இ...
தமிழகம்
விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் கிடைக்காத அவலம்
கோபிசெட்டிபாளையம்: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கு கிராம பகுதியில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் செல்வதால், விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி, அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன், தடப்பள்ளி பாசன பகுதிகள், குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம், ஒரத்துப்...
தமிழகம்
புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புஅகற்றதிணறல்
சேலம்: சேலம் நரசோதிப்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடிசை போட்ட மக்களை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறினர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் சுமார் 15 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. சில ஆண்டுகளாக அந்த ந...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் 17 பதவிக்கு 40 பேர் போட்டி8 பேர் போட்டியின்றி தேர்வு
நாமக்கல்: மாவட்டத்தில் காலியாக உள்ள 17 உள்ளாட்சி பதவிகளுக்கு 40 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எட்டு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனு செய்துள்ளதால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர், கபிலர்மலை யூனியன் கோப்பணம...