category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா | கோவை: கோவை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் கலை விளையாட்டு போட்டி துவக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் பேசியதாவது:எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளையாட்டு துறை குறித்த முக்கியத்துவத்தை உணர்த்த... |
தமிழகம் | வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை உடலை கிணற்றில் வீசிய கொடூரம் | ஈரோடு:ஈரோட்டில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதுடன், உடல் கிணற்றில் வீசப்பட்டது.ஈரோடு அருகே சூளை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்திவேல் (27). இவர் சூளை எம்.ஜி.ஆர்., நகரில் வசித்து வந்தார். தறி ஆலைகளுக்கான ஆயில் விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு மூன்றரை வயதில் ரக... |
தமிழகம் | ஸ்பிரிங் ரக கோழி விலை சரிவு பண்ணையாளர்கள் அதிர்ச்சி | சென்னிமலை:பண்ணைகளில் வளர்க்கப்படும் ஸ்பிரிங் ரக கோழி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.முட்டை கோழி உற்பத்தியில் வரும் சேவல் குஞ்சுகளை தனியாக பிரித்து விடுகின்றனர். இதை ஸ்பிரிங் ரக கோழிகள் என பண்ணையாளர் அழைக்கின்றனர். சேவல் குஞ்சுகளையும் குறைந்த விலைக்கு... |
தமிழகம் | மனைவியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் கோவை கோர்ட்டில் தீர்ப்பு | கோவை: மனைவியை கோபத்தில் அரிவாளால் வெட்டி கொலைசெய்த கணவருக்கு, கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை இருகூர் அருகே உள்ள டி.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி(32). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகே ... |
தமிழகம் | கோடிக்கணக்கில் நிதி மோசடி பா.ஜ., பிரமுகருக்கு சம்மன் | புதுடில்லி :நிதி மோசடி தொடர்பாக பா.ஜ., தலைமையக பொறுப்பாளருக்கு டில்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.டில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகம் உள்ளது. இதன் பொறுப்பாளராக இருப்பவர் ஷியாம் சுந்தர் ஜாஜு. இவருக்கு எதிராக டில்லி கோர்ட்டுக்கு அனாமதேய கடிதம் ஒன்று வந்தது. அதில், அவர் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப... |
தமிழகம் | வால்பாறை லாட்ஜ்களில் வணிகவரித்துறையினர் சோதனை | வால்பாறை: வரி செலுத்தாத காட் டேஜ், லாட்ஜ்களில் வணிகவரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். வால்பாறையில் டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள், லாட்ஜ்கள் கட்டப்பட்டுள்ளன. காட்டேஜ் மற்றும் லாட்ஜ்கள் நிர்வகிப்போர் வணிகவரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் "டிமிக்கி' கொடுத்து ... |
தமிழகம் | அதிக கட்டணம் வசூலித்த மினிபஸ் சிறைப்பிடிப்பு : அதிக கட்டணம் வசூலித்ததால் பொதுமக்கள் ஆத்திரம் | கோவில்பட்டி : கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த மினிபஸ்சை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் அனைத்து பஸ்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆர்டிஓ.,எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது... |
தமிழகம் | கொப்பரை ஏலம் கிலோ ரூ.32.75 | பொள்ளாச்சி: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 32.75 ரூபாய் விலை கிடைத்தது. ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 45 பேர் 118 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரையை நான்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்த... |
தமிழகம் | கல்விக்கடன் வழங்காத பாங்க்குகள் குறித்து ரிசர்வ் பாங்க்கிற்கு கடிதம் : கலெக்டர் தகவல் | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக்கடன் வழங்காத சில தனியார் பாங்க்குகள் குறித்து ரிசர்வ் பாங்க்கிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார். தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்... |
தமிழகம் | இடைத்தேர்தல்: 12 இடங்களுக்கு 26 பேர் மனு தாக்கல் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான காலியாகவுள்ள 12 இடங்களுக்கு 26 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அனைத்து மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் வரும் 22ம் தேதிநடக்கிறத... |
தமிழகம் | சேதப்படுத்தப்பட்ட பி.ஏ.பி., வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை | பொள்ளாச்சி: தென்சித்தூரிலிருந்து ரமண முதலிபுதூருக்கு ரோடு போட்ட போது, சேதப்படுத்தப்பட்ட பி.ஏ.பி., கிளை வாய்க்காலை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்ப்பு நாள் முகாம் நடந்தது. இதில், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமியிடம், சோமந்துரை சித்தூரை சேர... |
தமிழகம் | தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை | கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி நாற்று நடவு செய்யும் விவசாயிகள் நுண்ணுயிரை தெளிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. கிணத்துக்கடவு மற்றும் செட்டியக்காபாளையம், நல்லட்டிபாளையம், கோவிந்தாபுரம், வடபுதூர், முத்துக்கவுண்டனூர், வீரப்பகவுண்டனூர் உட்பட 72 கிராமங்களில் உள்ள 600 ஹெக்டேர் பரப்பில் தக்காளி ... |
தமிழகம் | குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் இன்று ஆனித்திருவிழா | தூத்துக்குடி : குரங்கணி முத்துமா லை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றங்களை தடுக்க நான்கு இடங்களில் வீடியோ கா மிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திருவிழாவிற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல இடங்களில் இருந்து 24 மண... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உடனடியாக இந்த முடிவை மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர் வை கண்டித்து தொடர் போராட்... |
தமிழகம் | விவசாயிகள் மகிழ்ச்சி | மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மஞ்சூர் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக போதிய மழை இல்லாததால், மலை காய்கறி விவசாயிகள் மற்றும் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாலகொலா, மீக்கேரி, இத்தலார், எம்.பாலடா, கல்லக்கொரை
உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில், மலை காய்கறி தோட்... |
தமிழகம் | நலத்திட்ட உதவி குறித்து தெளிவு | ஊட்டி: முன்னாள் படை வீரர்களுக்கான நலத்திட்ட உதவி குறித்து, முகாம் வரும் 16ம் தேதி ஊட்டியில் நடத்தப்பட உள்ளது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ரமாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப் பிரிவில், போர் விதவையர், போரில் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்த... |
தமிழகம் | ஏரல் டாஸ்மாக் பார்களில் போலீசார் அதிரடி சோதனை: 5 பேர் கைது | ஏரல் : ஏரல் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; ஏரல் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள்... |
தமிழகம் | தேசிய அளவில் மீனவர்களுக்கு பயோ மெட்ரிக்கார்டு வழங்கல் : தூத்துக்குடியில் ஆய்வு துவங்கியது | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்களுக்கு பயோ மெட்ரிக் கார்டு வழங்கப்படுகிறது. இதற்கான சர்வே நேற்று துவங்கியது. இந்த பணியினை மீன்வளத்துறை இணை இயக்குநர் ரெங்கராஜூ ஆய்வு செய்தார்.
மத்திய அரசு மீனவர்களுக்கு தேசிய அளவில் எப்போதும் அவர்கள் முக்கிய ஆவணமாக பயன்படுத்தும் வகையில் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க உள்... |
தமிழகம் | வரும் 2050ம் ஆண்டில்"அம்மாடியோவ்!'மக்கள் தொகை சிறப்பு கருத்தரங்கில்"திடுக்' | குன்னூர்: வரும் 2050ம் ஆண்டின் உலக மக்கள் தொகை, 900 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., சபை தெரிவித்துள்ளது' என, மக்கள் தொகை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடு,வீடாக வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல் அளித்து, ஒத்துழைப்பு வழ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | ஊட்டி: இந்து முன்னணி சார்பில், குன்னூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்து முன்னணி கோவை - நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் இந்து முன்னணி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இம்மானுவேல், இந்து முன்னணி பொறுப்பாளர் சத்திவேலை மிரட்டி... |
தமிழகம் | முஸ்லீம் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டம் | குன்னூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக, நகர செயல் வீரர்கள் கூட்டம், குன்னூரில் நடத்தப்பட்டது. குன்னூர் நகரத் தலைவராக பாரூக், செயலராக ஆரிப் உல்லாஹ், பொருளாளராக முகமது அலி, துணைத் தலைவராக அன்வர் பாஷா, துணை செயலராக சலீம், நகர மருத்துவ அணி செயலராக அப்பாஸ், நகர தொண்டரணி செயலராக ரகமத்துல்லா தேர்வு செய்யப்பட்டனர். குன்னூர... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்பு: பயனாளிகளுக்கு வழங்கல் | கோத்தகிரி: தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி, கோத்தகிரி தேனாடு ஊராட்சி சார்பில், சோலூர்மட்டத்தில் நடத்தப்பட்டது. வார்டு உறுப்பினர் பரமசிவம் வரவேற்றார். கதர்வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக, இலவச காஸ் அடுப்பு வழங்கி பேசியதாவது:தமிழக அரசு சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்... |
தமிழகம் | பணம் படும்பாடு : பணத்தில் கிறுக்கும் ஆர்வலர்கள் திருந்த கோரிக்கை | புதூர் : புதூர் மற்றும் இதன் வட்டாரப் பகுதிகளில் தற்போது புழக்கத்தில் உள்ள பணங்களில் அதிக அளவு கிறுக்கல்களுடன் வலம் வருகிறது. இதன் மதிப்பை உணர்ந்து கிறுக்கல்களில் ஈடுபடும் ஆர்வலர்கள் இந்த செயல்பாட்டை உடனே நிறுத்தவும் அல்லது கிறுக்கல்கள் உள்ள பணங்களை பெற மறுக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண... |
தமிழகம் | தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் அதிமுக., ஆட்சி அமையும் : எஸ்.எஸ்.சந்திரன் பேச்சு | விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக., பொ துக் கூட்டத்தில் கலந்து கொ ண்ட நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் அதிமுக., ஆட்சி ஏற்படும் என்று பேசினார்.
விளாத்திகுளம் சட்டசபை தொகுதி அதிமுக.,சார்பில் அதிமுக., பொது செயலாளர் ஜெ.,யின் 62வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும... |
தமிழகம் | டாக்டர் பாஸ்கரன் கொலை 8 பேரிடம் விசாரணை | திண்டுக்கல் : திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 8 பேரிடம் நேற்று விசாரணை நடந்தது.திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கார்த்திக், மஞ்சுபார்கவி, சங்கர், விவேக், முகிலன், துரைப்பாண்டி, சபீர், உமர்முக்தார், செந்தில் ஆகிய 9 பேர்... |
தமிழகம் | மாரியம்மன் கோவிலில் 15ம் தேதி கும்பாபிஷேகம் | மஞ்சூர்: மஞ்சூர் அண்ணாநகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், வரும் 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது; பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.மஞ்சூர் ஓணிக்கண்டி, அண்ணாநகரில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள, பொதுமக்கள் முடிவு... |
தமிழகம் | வாலிபர் சங்க மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்வு | கோத்தகிரி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா மாநாடு, கோத்தகிரியில் நடத்தப்பட்டது.சி.ஐ.டி.யு., மாவட்ட இணை செயலர் காந்தி, துவக்கி வைத்தார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக அமிர்தலிங்கம், துணைத் தலைவராக குமார், செயலராக மகேஷ், துணை செயலராக ராஜா, பொருளாளராக ஆறுமுகம், கமிட்டி உறுப்பினர்களாக மகேஷ், பிரபு, து... |
தமிழகம் | அரியலூரில் அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா | அரியலூர்: அரியலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட மேலக்கருப்பூர், காமரசவல்லி, வாண்டராயன் கட்டளை, கண்டிராதித்தம் உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துக்களில் அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.தாசில்தார் கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். திருமானூர் பஞ்சாயத்து ஒனறிய சேர்மன் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் தண்டபாணி முன்னிலை வகித்தனர்... |
தமிழகம் | ஆட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் | அரூர்: மொரப்பூர், அரூர் பகுதியில் ஆட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மொரப்பூர் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் நேற்றிரவு மொரப்பூர் - தர்மபுரி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக லாரியில் 50 ஆட்களை ஏற்றி வந்த வாணியம்பாடியை சேர்ந்த டிரைவர் சீனிவாசன் (32), சரக்கு ஆட்டோக்களில் ஆ... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணம் வழங்கும் விழா | தர்மபுரி: தர்மபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் சமூக நீதித்துறை நிதியுதவி மற்றும் சேலம் ஆர்.பி., அறக்கட்டளை சார்பில் இலவச உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் அமுதா தலைமை வகித்து, மாற்று திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 18 மாணவ, மாணவிகளுக்கு 6 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் இலவச மின் மோட்டார் பொருந்திய ம... |
தமிழகம் | எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு ஏற்பாட்டுக்கு திட்டம் | ஊட்டி: ஊட்டியில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நீலகிரி மாவட்ட விளையாட்டு துறை சார்பில், ஊட்டி எச்.ஏ.டி.பி., அலுவலகத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. எய்ட்ஸ் விழிப்புணர்வை
ஏற்படுத்த, பொதுமக்கள் மற்றும் மாணவர்... |
தமிழகம் | வாகனம் மோதியதில் பெண் பரிதாப பலி | காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.தர்மபுரி - கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் உள்ள மாசிலாம்ட்டி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க பெண் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில், உடல் நசுங்கிய அப்பெண் சம்பவ இட... |
தமிழகம் | கல்வி விழிப்புணர்வு | ஊட்டி: முட்டிநாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பள்ளியில் துவங்கிய பேரணி, பஜார் வழியாக சிவசெந்தூரன் நகர், ஈஸ்வரன் நகர், செல்வி நகர் வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பள்ளி வயதுள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. தலைமை ஆசிரியர... |
தமிழகம் | கால்கள் விரைந்தன; கைகள் பெற்றன விளையாட்டுப் போட்டியில் அசத்தல் | குன்னூர்: குன்னூர் புனித ஜோசப் பள்ளி விளையாட்டு விழாவில், கண்கவர் கலை நிகழ்ச்சி, உற்சாகம் கிளப்பிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா நடத்தப்பட்டது. வெலிங்டன் ராணுவ மருத்துவமனை கமாண்டன்ட்.பிரிகேடியர் பிரசாத், சிறப்பு விருந்தினராக கொடிய... |
தமிழகம் | கல்வி உதவி | ஊட்டி: எச்.ஐ.வி., மற்றும் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவி வழங்கப்பட்டன. எச்.ஐ.வி., மற்றும் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளின் நலனுக்காக, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் "நீலகிரி பாசிட்டிவ் அசோசியேஷன் நெட்ஒர்க் (நிப்பான்)' செயல்படுகிறது. குழந்தைகளுக்கு, போஜன் அறக்கட்டளை சார்பில் கல்வி உ... |
தமிழகம் | ஏர்போர்ட்டில் ரூ.67 லட்சம் பொருட்கள் பறிமுதல் | திரிசூலம் : சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானப் பயணிகளிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில் 17 பயணிகளிடம் இருந்து67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்க... |
தமிழகம் | கரூர்- மதுரை "பைபாஸ்' தொடர் விபத்து : சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு | க.பரமத்தி: கரூர்-மதுரை பைபாஸ் சாலையில், மூலப்பட்டி பிரிவு சாலை அருகே மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். இதைக்கண்டித்து நாகம்பள்ளி பஞ்சாயத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, மலைக்கோவிலூர் அருகே ம... |
தமிழகம் | பெண்ணுக்கு அளிக்கும் கல்வி நாட்டுக்கு பெருமை சேர்க்கும்: துணைவேந்தர் பேச்சு | குளித்தலை: சுபம் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சார்பில் சுபசக்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி திறப்பு விழா குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் நடந்தது.அறக்கட்டளை தலைவர் சக்திவேல் வரவேற்றார்.பாரதிதாசன்
பல்கலைக்கழக துணை வேந்தர் பொன்னவைக்கோ தலைமை வகித்து பேசியதாவது: ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றால், அங்கு ... |
தமிழகம் | ஆமை வேகத்தில் விளையாட்டு மைதான கட்டுமானம் : நன்கொடை பற்றாக்குறையால் பணியில் தொய்வு | கரூர்: கரூரில் நான்கு ஆண்டு முன் துவங்கிய மாவட்ட விளையாட்டு மைதானம் கட்டுமான பணி, இதுவரை முடிவு பெறாமல் ஆமைவேகத்தில் நடக்கிற து. நன்கொடை பற்றாக்குறையே பணி நிறைவடையாததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக 1995ல் கரூர் பிரிக்கப்பட்டாலும், பல விஷயங்களில் மாவட்ட அந்தஸ்தை கரூர் முழு... |
தமிழகம் | குளித்தலையில் இலவச மருத்துவ முகாம் | குளித்தலை: குளித்தலை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கரூர் பரிவாலயம் தொண்டு நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய மாணவர்கள், குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
பரிவாலயம் தொண்டு நிறுவன இயக்குனர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர் பரமானந்தன், மேற்பார்வையாள... |
தமிழகம் | வேளாண் கருத்தரங்கில் மாணவிகள் பங்கேற்பு | குளித்தலை: திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி மைய மாணவிகள் கருத்தரங்கம் குளித்தலையில் நடந்தது.கல்லூரி ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர்கள் ராஜேந்திரன், நித்தியா வழிகாட்டுதலில் எட்டு மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர். தண்ணீர்பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நிர்வாகம், அரசு திட்டம் செயல்பாடு மற... |
தமிழகம் | கம்ப்யூட்டர் வழங்கல் | கரூர்: கரூர் மாவட்ட போலீஸ் அலுவலகம் தே வைக்கு, டி.என்.பி. எல்., நிர்வாகம் சார்பில் இரண்டு கம்ப்யூட்டர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.புகளூர் டி.என்.பி.எல்., ஆலை நிர்வாக கருத்தரங்கு அறையில் நடந்த நிகழ்ச்சியில், ஆலை தலைமை விழிப்புணர்வு அலுவலர் ஐ.ஜி., ராஜா, இரண்டு கம்ப்யூட்டர்களை வழங்கினார். கரூர் எஸ்.பி., தினகரன் பெற்றுக்க... |
தமிழகம் | தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கில பயிற்சி துவக்க விழா | பெரம்பலூர் : பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது மற்றும் எழுதுவது குறித்து வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். நடந்தது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணைத் தலைவர் கதி... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கலெக்டர் ஆய்வு | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கும் ஓட்டுச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளல், பாகம் மாறுதல் போன்றவற்றுக்கான வாக்காளர் பட்டியல் ச... |
தமிழகம் | ஜெ., பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டம்; மக்களும் திரள்வர்!அ.தி.மு.க.,நம்பிக்கை | கோவை: கோவையில் இன்று நடக்கும் அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டத்தில், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது மக்களும் பங்கேற்பார்கள் என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில், அ.தி.மு.க., சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல... |
தமிழகம் | வால்பாறையில் வாலிபரை தாக்கிய சிறுத்தை ஓட்டம் | வால்பாறை: வால்பாறை அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற உடுமலை வாலிபரை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தார். வால்பாறையில் சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இரவு, பகல் எல்லா நேரத்திலும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். உடுமலை, தேவனூர்புதூர் வல்லகுண்டாபுரத்தை சேர்ந்த மதுரைவீரனி... |
தமிழகம் | புதுகை கலெக்டர் ஆஃபீஸில் அறிவிப்பின்றி நடத்திய தீ விபத்து மீட்பு ஒத்திகை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தீயணைப்பு படையினரின், தீ விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒத்திகை என்ற விபரம் தெரிவிக்கப்படாததால், பத்திரிகையாளர்கள் உண்மையில் விபரீதம் நடந்துவிட்டதாக நினைத்து பதட்டத்துடன் அங்கு குவிந்தனர்.
குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு, தீ... |
தமிழகம் | மொபைல்ஃபோன் கடையில் திருடிய இரண்டு பேர் கைது | புதுக்கோட்டை: புதுக்கோட்டை டவுன் பகுதிகளில் மொபைல்ஃபோன் கடைகளை குறிவைத்து திருடிவந்த மர்ம நபர்களை அடையாளம் காணும் விதமாக இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இத்திருட்டில் திருக்கோகர்ணம் அடுத்த பாலன்நகர் ராஜப்பா மகன் மதன்ராஜ்(20), புதுக்கோட்டை டவுன் அண்ணாநகரைச் ... |
தமிழகம் | டாக்டர்கள் தின விழா | புதுக்கோட்டை: புதுகை ஐ.எம்.ஏ., சார்பில் டாக்டர்கள் தினவிழா நடந்தது.மாவட்டத் தலைவர் டாக்டர் ரவிக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் டாக்டர் சையது முகைதீன், மாவட்ட பொருளாளர் டாக்டர் பெரியசாமி, மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.சிறப்பாக பணி... |
தமிழகம் | அ.தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் | திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட 17வது வார்டு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்... |
தமிழகம் | குடோன் இல்லாததால் கொப்பரை கொள்முதல் நிறுத்தம் : பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல் | தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை பகுதியில் குடோன் வசதியில்லாததால், கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண பட்டுக்கோட்டை அடுத்த புனல்வாசல் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சவரிமுத்து தலைமையில் கலெக்டர் சண்முகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் உள்ளதாவது:பட்டுக்கோட்டை பகுதியில் பட்டுக்கோட்டை வேளாண்... |
தமிழகம் | கிராம வங்கி சேவை தொடர்பாளர்களுக்கு பயிற்சி கிராமிய சுய வேலைவாய்ப்பு மையத்தில் துவக்கம் | தஞ்சாவூர்: தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு மையத்தில் கிராமப்புற வங்கி சேவை வரிவாக்க திட்டத்துக்கான வங்கி சேவை தொடர்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ரவிகுமார், முதன்மை மேலாளர் பாஸ்கரன... |
தமிழகம் | ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க., தேர்தல் ஆலோசனை கூட்டம் | ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடத்தப்படுமென பேசப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தி.மு.க., வினர் இறங்கியுள்ளனர். தி.மு.க.,வுக்கு பலவீனமாக கருதப்படும் ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியி... |
தமிழகம் | திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவு | உடுமலை: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியம் மற்றும் நான்கு பேரூராட்சிகள் உட்பட 112 குடியிருப்புகள் பயன்பெற உள்ள திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் சோதனை முறையில் குடிநீர் வினியோகம் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குட... |
தமிழகம் | மருத்துவமனை கட்டிடம் திறப்பு | கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை நாள் விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா நடந்தது.
திருவிடைமருதூர் யூனியன் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாங்கம் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி புதுப்பிக்க... |
தமிழகம் | இரண்டு நாள் குடிநீர் "கட்' | உடுமலை: உடுமலை நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திருமூர்த்திமலை தலைமை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திலுள்ள இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் சுத்திகரிப்பு தொட்டிகள் பராமரிப்பு பணிகள் இன்றும்... |
தமிழகம் | மனு நீதி நாள் முகாம் | உடுமலை: உடுமலை தாலுகா, குறிச்சிக்கோட்டை உள் வட்டம், திருமூர்த்திநகர் கிராமத்திற்குட்பட்ட குழிப்பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு அரசு துவக்கப்பள்ளியில் வரும் 21 ம் தேதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு உடுமலை தாசில்தார் சபாபதி தெரிவித்துள்... |
தமிழகம் | விறுவிறுப்பு குறைந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் அ.தி.மு.க., புறக்கணிப்பு எதிரொலி | திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலை முக்கிய எதிர்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்ததால், தேர்தல் விறுவிறுப்பு குறைந்துள்ளது.தமிழகம் முழுவதும் ஜூலை 22ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலை முக்கிய எதிர்கட்சியான அ.தி.மு.க., தே.மு.தி.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட க... |
தமிழகம் | ஸ்ரீரங்கம் பகுதியில் ஆடு திருடிய மூன்று பேர் கைது | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் ஆடுகளை கடத்தி விற்பனை செய்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக தோப்பு, வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள் மாயமாகி வந்தன. ஆடுகள் மாயமாகும் சம்பவம் பற்றி ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இர... |
தமிழகம் | கூடுதல் கட்டணம்: தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு | உடுமலை: உடுமலை அருகேயுள்ள சின்னவீரம்பட்டியில் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை அருகேயுள்ள சின்னவீரம்பட்டி வழித்தடத்தில் அதிகளவு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, அரசு பஸ் கட்டணம் உயராது என அறிவித்துள்ள நிலையில் திடீரென உடுமலை ... |
தமிழகம் | பள்ளியை மாற்றியதால் விபரீதம்: 7ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு | திருச்சி: திருச்சியில் படித்த பள்ளியிலிருந்து மாற்றி வேறு பள்ளியில் சேர்த்ததால் மனமுடைந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி தீக்குளித்தார்.திருச்சி அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி உமல் பாத்திமா (37). மகள் தஸ்லிமா பாத்திமா (11). சில ஆண்டுகளுக்கு முன் முகமது அலி இறந்து விட்டார். தாயுடன் இருந்த தஸ்லிமா ... |
தமிழகம் | பொன்மலைப்பட்டியில் தீ விபத்து 2.5 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம் | திருச்சி: திருச்சி பொன்மலைப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு கடைகள் எரிந்து, 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.பொன்மலைப்பட்டி பஸ்ஸ்டாப் எதிரே டிஃபன் கடை வைத்துள்ளவர் சாமிக்கண்ணு. நேற்று காலை 11 மணியளவில் இவரது கடையில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவி, அருகில் இ... |
தமிழகம் | உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் 5,467 புதிய வாக்காளர்கள் விண்ணப்பம் | உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், இதுவரை புதிய வாக்காளர்களாக சேர்க்க கோரி 5,467 பேர் விண்ணப்பித்துள்ளனர். உடுமலை தாலுகா அலுவலகத்தில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் ஜூலை 1ல் வெளியிடப்பட்டது. உடுமலை சட்டசபை தொகுதியில் உடுமலை தாலுகாவில் 102 ஓட்டுச்சாவடிகளிலும், பொள்ளாச்சி தாலுகாவில... |
தமிழகம் | இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் | ஈரோடு:ஈரோடு இளைஞர் காங்கிரஸ் கிழக்கு சட்டசபை தொகுதியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், நலவாரியத்தில் உறுப்பினர் சேர்த்தல், காமராஜர் பிறந்தநாள் கொண்டாடுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டசபை தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமை வகித்த... |
தமிழகம் | மாவட்ட முக்கிய ரோடுகள் விரிவுபடுத்தாததால் அதிருப்தி | உடுமலை: உடுமலை உட்கோட்டத்தில் மாவட்ட முக்கிய ரோடுகள் பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் இருப்பதால் மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. தனது சொந்த மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சிறப்பு திட்டங்களின் கீழ் ரோடுகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தில் உள்ள பல மாவட்ட முக்க... |
தமிழகம் | மணல் அள்ள அனுமதி கோரி மனு: பரிசீலிக்க கலெக்டருக்கு உத்தரவு | திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள கோரும் மனுவை, 12 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தொட்டியம் வட்டார மணல் வண்டி தொழிலாளர் சங்கத் தலைவர் நடராஜன் தாக்கல் செய்த "ரிட்' மனு:எங்கள் சங்கத்தில் 100 உறுப்பினர... |
தமிழகம் | உடுமலையில் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் | உடுமலை: உடுமலை பகுதியில், காலை மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கப்படாததால், மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலை தாலுகாவில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், நூற்பாலைகள், காற்றாலை நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்கள் வளர்ந்து வரும் நகராக உள்ளது. ... |
தமிழகம் | ஆயுதப்படை போலீஸ் தற்கொலை முயற்சி | திருச்சி: திருச்சியில் காதல் தோல்வி காரணமாக, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீஸ்காரர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்தார்.திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சாலையில் உள்ள, தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணியில், துப்பாக்கி பழுது நீக்கும் பிரிவு போலீஸ்காரராக பணி புரிபவர் கார்த்திக் (26). இவர் போலீஸ் துறையில் பணிபுரியும் ஒரு ப... |
தமிழகம் | யோகமும், மனிதமாண்பும் பட்டயமளிப்பு விழா | உடுமலை: உடுமலை அறிவுத்திருக்கோவிலில், யோகமும் மனித மாண்பும் டிப்ளமோ கல்வி பட்டயமளிப்பு விழா நடந்தது. உடுமலை அறிவுத்திருக்கோவில், பாரதியார் பல்கலை., அவிநாசிலிங்கம் பல்கலைகழகங்களின் கல்வி மையமாக செயல்படுகிறது. 2008-09ம் கல்வியாண்டில் தேர்வு பெற்றவர்களுக்கு பட்டயமளிப்பு விழா நடந்தது. உலக சமுதாய சேவா சங்க கோவை மண்டல தலைவர... |
தமிழகம் | இ.ம.க., ஆர்ப்பாட்டம் | உடுமலை: ஐ.நா., விசாரணை குழுவை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செய்தி தொடர்பாளர் ரமணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ஐ.நா., விசாரணை குழுவினை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளா... |
தமிழகம் | துறையூர் அருகே கிராம மக்களுக்கு வாந்தி, பேதி | துறையூர்: துறையூர் அருகே சொரத்தூரில் அசுத்தமான நீரை குடித்த கிராம மக்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.துறையூர் அருகே சொரத்தூரில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. நேற்று காலை மேட்டு சொரத்தூர் காலனிக்கு, காவிரி கூட்டு குடிநீருடன் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத கிணற்றிலிருந்த குடிநீரும் கலந்து விநியோகிக்கப்பட்டது.இந... |
தமிழகம் | நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல் மஞ்சள் விலை கிடு கிடு | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நெல் உற்பத்தி குறைந்து போனதால், பல கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளன. மஞ்சளின் அசுர விலை ஏற்றமே, நெல் உற்பத்தி குறைந்து போனதற்கு காரணம்.ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 24 நெல் கொள்முதல் நிலையம் உள்ளன. தமிழக அரசால் நடத்தப்படும் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகளிடமிருந்து நேரடியாகவும், வியாபாரிகள் மூல... |
தமிழகம் | இடியும் நிலையில் கால்நடை மருந்தக கட்டடம் | உடுமலை: இடிந்து விழும் நிலையிலுள்ள பூளவாடி கால்நடை கிளை நிலைய கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள பூளவாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பூளவாடி வாரச்சந்தைக்கு தாராபுரம் பகுதியிலிருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தொற... |
தமிழகம் | குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை | உடுமலை: விதிமுறைகளை மீறி குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை கட்டப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகம் அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தனியார... |
தமிழகம் | கலெக்டர் அலுவலக கேன்டீனில் போலி டீ தூள் விநியோகம் | ஈரோடு: கலெக்டர் அலுவலக கேன்டீனில் போலி டீ தூள் பயன்படுத்துவதாக புகார் வந்ததையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு செய்து தரமான டீ தூளை பயன்படுத்த உத்தரவிட்டார்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மனு கொடுக்க வந்தவர்கள், கேன்டீனில் வழங்கப்படும் டீயில் போலி டீ தூள் வழங்கப்படுவத... |
தமிழகம் | ஹரிபாலா மால் முதலாமாண்டு விழா | ஈரோடு: ஈரோடு பிரப் சாலையில் உள்ள ஹரிபாலா மாலின் முதல் பிறந்தநாள் விழா மற்றும் முதல் தளம் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.ஈரோடு பிரப் சாலையில் உள்ள ஹரிபாலாமால் முதல் பிறந்தநாள் விழா மற்றும் முதல் தளம் திறப்பு விழா நடந்தது. முதல் தளத்தில் பெண்களுக்கான ஜீன்ஸ், ஜீன் டாப்ஸ், பெண்கள் உள்ளாடைகள், ஆண்களுக்கான ஆடைகள், பேன்சி நகை... |
தமிழகம் | நகராட்சி பள்ளி கட்டட பராமரிப்பு பணி பாதியில் நின்றதால் மாணவர்கள் தவிப்பு | உடுமலை: உடுமலை நகராட்சி பள்ளி கட்டட பராமரிப்பு பணி பாதியிலேயே நின்றதால், மரத்தடியில் மாணவர்கள் அமரவைத்து பாடம் எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலை நகராட்சி பகுதியில் 12 தொடக்கப்பள்ளிகளும், 5 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், சுகாதார கேடுகளுடனும் உள்ளது குறித்து தொடர்ந... |
தமிழகம் | சமுதாய சேவா சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கல் | ஈரோடு: உலக சமுதாய சேவா சங்கம், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஈரோடு கொங்கு கலையரங்கில் நடந்தது.மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் பேசியதாவது:ஆகஸ்ட் 14ம் தேதி மகரிஷி பிறந்த நாள் சென்னையில் கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்த... |
தமிழகம் | வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் தீர்மானம் | ஈரோடு: பெரும்பள்ளம், கீழபவானி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.ஈரோட்டில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பு, பொறுப்பாளர் லட்சுமணன், அமைப்பு செய... |
தமிழகம் | மாநகராட்சி துப்புரவு பணி விவகாரத்தி குழப்பம் :கவுன்சிலர்கள் விடாப்பிடியாக எதிர்ப்பு | சேலம்: சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியை தனியார் வசம் ஒப்படைக்க பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் துப்புரவு பணி விவகாரத்தில் குழப்பம் அடைந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் சேலம் மாநகராட்சியில் இரண்டு, ஏழு, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 29,... |
தமிழகம் | வாரியத்தேர்வில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை | ஈரோடு: தொழிற்நுட்ப இயக்ககம் நடத்திய ஏப்ரம் 2010 வாரியத் தேர்வில் குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை பெற்றனர்.ஏப்ரல் 2010 வாரியத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் தொழிற்நுட்ப இயக்ககம் வெளியிட்டது. இதில் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் பிரிவு மாணவர் சீனிவாசன் 591 மதிப்பெண் பெற்... |
தமிழகம் | பெண்ணை வெட்டிய விவசாயிக்கு சிறை | ஈரோடு: மலையம்பாளையம் அருகே கண்ணுடையாம்பாளையத்தை சேர்ந்தவர் வேணுகோபால், வியாபாரி. இவரது மனைவி சம்பூர்ணம் (53). இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். சென்ற 2009 நவம்பர் 10ம் தேதி கடன் தொடர்பாக சம்பூர்ணத்துக்கும், சுப்பிரமணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுப... |
தமிழகம் | தலைமை செயலகம் செல்ல முயன்ற 163 பேர் கைது | சேலம்: சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ஆக்கிரமிப்பு குடிசை வாசிகள், சென்னை தலைமை செயலகம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டதால், அவர்களை தடுத்து போலீஸார் கைது செய்தனர்.சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிசைகளை போட்டு ஆக்கிரமித்திருந்தனர்.
அதே இடத்தில் ... |
தமிழகம் | அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி | சேலம்: முத்தம்பட்டி அருகே அரசு பஸ் மோதியதில், கண்டக்டர் இறந்தார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(43). அவர் 20 ஆண்டுகளாக அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை ஆத்தூரில் இருந்து சேலம் வந்த பஸ்சில் பணியில் ஈடுபட்டிருந்தார்.முத்தம்பட்டி அருகே வந்தபோது, பஸ்சின் டயர் பஞ... |
தமிழகம் | இயற்கை உரத்தில் காய்கறி தோட்டம்அவிநாசி பேரூராட்சி மும்முரம் | அவிநாசி: அவிநாசி பேரூராட்சி சார்பில், இயற்கை உரங்கள் மூலமாக காய் கறி விளைவிக்கப்பட்டு, விற் பனை செய்யப்படுகிறது. முற்றிலும் இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை வாங்க, பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவிநாசி பேரூராட்சி உரப் பூங்கா, கைகாட்டிப்புதூரில் 2.75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பேரூராட்சி முழுவதும் சேகரிக்... |
தமிழகம் | உள்ளாட்சி அமைப்பு மேம்பாட்டு பயிற்சி: மேயர், பிரதிநிதிகள் பங்கேற்பு | சேலம்: ஏற்காட்டில் நேற்று உள்ளாட்சி அமைப்புகள் மேம்பாடு குறித்த பயிற்சி துவங்கியது. சேலம் மேயர் ரேகாபிரியதர்ஷினி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.தேசிய ஜவகர்லால் நேரு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலங்களில் உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்க... |
தமிழகம் | பயிற்சி முகாம் | கோபிசெட்டிபாளையம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் படைப்பாற்றல் கல்வி பயிற்சி முகாம் சத்தி வட்டார வளமையத்தில் நடந்தது.தாளவாடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்தார். அந்தியூர், கோபி, பவானி, சத்தி, பவானிசாகர், நம்பியூர், டி.என்.பாளையம், நம்பியூர் பகுதிகளை சேர்ந்த வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று... |
தமிழகம் | பெண் வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றம் | ஈரோடு: முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்ப பையில் இருந்து ஆறேகால் கிலோ எடையுள்ள கட்டி ஆப்ரேஷன் செய்து அகற்றப்பட்டது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாவாயி (55) கூலித்தொழிலாளி. இவருக்கு சில மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்... |
தமிழகம் | பனமரத்துப்பட்டி யூனியனில் திட்டப்பணிகள் துவக்க விழா | பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி யூனியன் கெஜ்ஜல்நாயகன்பட்டியில் புதிய கட்டிடங்களின் திறப்பு விழா, தார்சாலை பணி துவக்கவிழா மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.சேலம் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். பனமரத்துப்பட்டி யூனியன் சேர்மேன் பழனிசாமி, பி.டி.ஓ., செட்டிக்கவுண்டன், கெஜ்ஜல்நாயகன்... |
தமிழகம் | பொதுக்கழிப்பிடத்தில் இருள் பாதுகாப்பு இன்மையால் பீதி | திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண் டில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தில் மின் விளக்குகள் இல்லை; இக்கழிப்பிடத்துக்குள் செல்பவர்கள், பாதுகாப்பு இல்லாமல் பீதியடைகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் மேற்கு பகுதியில், மாநகராட்சி கட்டண கழிப்பிடம் உள்ளது. இதுதவிர, பஸ் ஸ... |
தமிழகம் | மேலும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி | சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் மேலும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியை துவங்க, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இடம் பெற... |
தமிழகம் | "காலைக்கதிர்' செய்தி எதிரொலி: தலைவாசல் எஸ்.ஐ., அதிரடி இடமாற்றம் | ஆத்தூர்: தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த பெண்ணை, கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டார்.ஆத்தூர் அருகே தலைவாசல் தேவியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பெரியம்மாள் (40). நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க சென்றார். பணியில் இருந்த எஸ்.ஐ., சா... |
தமிழகம் | அஞ்சல் பெட்டிகளை அதிகப்படுத்தலாமே! | திருப்பூர்: திருப்பூரில் பொதுமக் கள் பயன்பாட்டுக்கு ஏற்ப, அஞ்சல் பெட்டிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கையில், அஞ்சல் துறை ஈடுபட வேண்டும். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தால், கடி தப்போக்குவரத்து இளையதலைமுறையிடம் குறைந்து வருகிறது. அவர் கள் மத்தியில் அஞ்சல் துறையின் செயல்பாடுகளை கொண்டு செல்வது மிக அவசியம். பஸ் ஸ்டாண்ட், ம... |
தமிழகம் | பாதுகாப்பு இல்லாத பள்ளி மாடியில் குப்பைகளை அகற்றிய மாணவர்கள் | கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பு இல்லாத மொட்டை மாடி கட்டிடத்தில் ஏறி குப்பைகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோபி சரவணா தியேட்டர் சாலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின... |
தமிழகம் | பதவி உயர்வு கோரி வாயில் கூட்டம் | மேட்டூர்: பதவி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கை நிறைவேற்றக்கோரி மேட்டூர் அனல்மின் நிலையம் முன் தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் வாயில் கூட்டம் நடந்தது.மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 940 களப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அனைத்து கள உதவியாளர்களையும், பொருத்துனராக பதவி உயர்வு செய்ய வேண்டும்.
முகவர் முதல்நிலை, இரண்ட... |
தமிழகம் | குறுகிய காலத்தில் வடிகால் சிதைவு | திருப்பூர்: நல்லூர் நகராட்சி ஆறாவது வார்டு, ரிங் ரோட்டில் கட்டப்பட்டுள்ள வடிகால், குறுகிய காலத்தில் இடிந்து விழுந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: மழை நீர் வடிகாலின் ஆயுள்காலம் குறைந்தது ஐந்தாண்டுகளாவது இருக்க வேண்டும். மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு மண் சரிவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கட்டப் பட்ட ... |
தமிழகம் | மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு உதவி | மேட்டூர்: கொத்தடிமையாய் இருந்து மீட்கப்பட்ட நான்கு சிறுவர், சிறுமியருக்கு அரசு சார்பில் கொத்தடிமை உடனடி மற்றும் மறுவாழ்வு நிவாரண தொகை 80 ஆயிரம் ரூபாய் ஆர்.டி.ஓ., வேலு வழங்கினார்.திருப்பூர் மாவட்டம், சேனாபதி பாளையம், குருகத்தி என்ற இடத்தில் உள்ள கல் உடைக்கும் ஆலையில் ஓமலூர் தாலுகா, பெரியேரிபட்டி கிராமம், தனம் மகன் காசிந... |
தமிழகம் | கழிப்பிட வசதி தேவை பயணிகள் கோரிக்கை | திருப்பூர்: திருப்பூரில் இருந்து கோவை, கோபி, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்கள், புஸ்பா தியேட்டர் ஸ்டாப்பில் வெகுநேரம் காத்திருந்து புறப்படுகின்றன. பயணிகள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், புஸ்பா தியேட்... |
தமிழகம் | மக்கள் சமூக சேவை சங்க கூட்டம் | பல்லடம்: மாதப்பூர் மக்கள் சமூக சேவை சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாதப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. அதன் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். கூட்டத் தில், சங்க விதிகளுக்கு எதிராக செயல்பட்ட செயலாளர் நவீன்குமார் நீக்கம் செய்யப்பட்டதாக அறிக்கப்பட்டது. புதிய செயலாளராக சி... |
தமிழகம் | "புவி வெப்பமயமாதல்' விழிப்புணர்வு கருத்தரங்கு | நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.சேலம் எக்ஸ்னோரா மற்றும் யூத் எக்ஸ்னோரா இணைந்து புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது.மஹா பொறியியல் கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அசோக் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.