category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த ஆலங்கரை ஸ்ரீசெல்வ விநாயகர், நவக்கிரக மூர்த்தி மஹா கும்பாபிஷேகம் மற்றும் பஞ்சலோக ஸ்ரீவிநாயகர் சிலை, மாரியம்மன் சிலைக்கு கண் திறப்பு விழா நடந்தது.இதையொட்டி, ஸ்ரீகணபதி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், ரஷாபந்தனம் முதல் கால யாக பூஜை, திரவியஹோமம், தீபாராதனையும், எந்திரஸ்தாபனம் மற்... |
தமிழகம் | பணவீக்கம் 10.55 சதவீதமாக அதிகரிப்பு | புதுடில்லி : நாட்டின் பணவீக்கம் 10.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி பணவீக்கம் 10.16 சதவீதமாக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் பணவீக்கம் 10.16 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | போலி சான்றிதழ் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை | சென்னை : போலி சான்றிதழ் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களில் 40க்கும் மேற்பட்டோர் போலி மதிப்பெண் பட்டியல் கொடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர வெளிமாநில மாணவர்கள் ... |
இந்தியா | பெல்காம் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் : அசோக் சவான் | புதுடில்லி : பெல்காம் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். பெல்காம் எல்லை விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசிய பின், நிருபர்களிடம் பேசிய அவர், பெல்காம் பகுதியில் கன்னட மொழியை புகுத்துவதை தடைவிதிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டு... |
தமிழகம் | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 மட்டும் அதிகரிப்பு | சென்னை : சென்னையில் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 721க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 768க்கு விற்கப்படுகிறது. |
இந்தியா | கர்நாடகா அரசியல் நெருக்கடி : டில்லியில் பா.ஜ., ஆலோசனை | பெங்களூரு : கர்நாடகாவில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து பா.ஜ., உயர்மட்டக்குழு இன்று டில்லியில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியை காப்பாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
General | பயிற்சிக்கு வராமல் ஊர் சுற்றியதால் சோயப்மாலிக் நீக்கம் | இஸ்லாமாபாத் : கிரிக்கெட் பயிற்சிக்கு வராமல் புது மனைவியுடன் ஊர் சுற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஆஸி., க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் அண்மையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்... |
தமிழகம் | இலங்கைத் துணை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் : வைகோ, பழநெடுமாறன் கைது | சென்னை : சென்னையில் இலங்கை துணை தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ மற்றும் பழநெடுமாறன் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ முன்னர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வைகோ,... |
இந்தியா | நக்சலைட்டுகளை ஒடுக்க ஒருங்கிணைந்த அதிரடிப் படை : சிதம்பரம் | புதுடில்லி : நக்சலைட்டுகளை ஒடுக்க ஒருங்கிணைந்த அதிரடிப் படை அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நக்சலைட்டுகளை ஒடுக்குவது குறித்து டில்லியில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு... |
இந்தியா | ஆத்தூரில் சாலை மறியல் | ஆத்தூர் : ஆத்தூரில் புதிதாக செக்போஸ்ட் அமைத்ததை கண்டித்து சாலை மறியல் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பூமரத்துப்பட்டி, முட்டல் மலை கிராமத்தில் வனக் கோட்ட அலுவலர் திடீரென செக்போஸ்ட் அமைக்க உத்தரவிட்டுள்ளார். வனவிலங்கு கடத்தல், சாராய விற்பனை ஆகியவை நடப்பதாகவும், அதனை தடுக்கவே செக்போஸ்ட்... |
தமிழகம் | பிரதமரின் ஆலோசகர் எனக் கூறி கோயிலில் சிறப்பு தரிசனம் | ஜம்மு : பிரதமரின் ஆலோசகர் எனக் கூறிக் கொண்டு வைஷ்ணவ தேவி கோயிலில் சைரன் காரில் போலீஸ் பாதுகாப்புடன் வந்து தரிசனம் செய்தவர் போலி நபர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனது பெயர் மன்மோகன்சிங் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர் பஞ்சாபில் இருந்து சைரன் பொருத்திய 3 க... |
தமிழகம் | இன்ஜி., கவுன்சிலிங்கில் போலி சான்றிதழ் : அமைச்சர் தகவல் | சென்னை : போலி சான்றிதழ்களை அளித்து இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ச... |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு | மும்பை : வர்த்தக நேர முடிவின் போது பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சரிவுடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47.74 புள்ளிகள் சரிந்து 17938.16 ஆக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14 புள்ளிகள் சரிந்து 5386.15 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. |
General | சார்லஸ் சோப்ராஜ் தீர்ப்பு ஒத்திவைப்பு | காத்மாண்டு : கடத்தல் மற்றும் கொலை வழக்கில் சிக்கிய சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சோப்ராஜ் நேபாள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தான். அவனது மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். |
இந்தியா | பாகிஸ்தான் சென்றடைந்தார் கிருஷ்ணா | இஸ்லாமாபாத் : இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பாகிஸ்தான் சென்றடைந்தார். பாக்., விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் : உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த மாதம் பாகிஸ்தான் சென்ற போது மும்பை தாக்குதலுக்கு பாக்., தொடர்பு இருப்பதாக ஹெட்லி கூறியது குறித்து ஆலோசித்திருந்தார். அது தொடர்பாக நாளை... |
General | கசாப் வாக்குமூலத்தை பதிவு செய்தவர்களை அனுப்பி வையுங்கள் : பாக்., புது கோரிக்கை | இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் கோர்ட்டில் கூறிய வாக்குமூலங்களை பதிவு செய்த போலீஸ் உயர் அதிகாரிள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளை பாகிஸ்தான் உள்ளூர் கோர்ட்டில் சாட்சியளிக்க அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் புது கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தான் உள் துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்திய துணை தூ... |
தமிழகம் | மேட்டுப்பாளையத்தில் சாலை மறியல் : பதட்டம் | மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் சாராய வியாபாரியை கொலை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. சாராய வியாபாரி. இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை கோர்ட்ட... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை : மாணவியின் கால்நரம்பு பாதிப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஐந்தாம் வகுப்பு மாணவி கலைமீனாக்கு நடந்த தவறான சிகிச்சையால் அவரது கால்நரம்பு பாதித்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் கொத்த தெருவை சேர்ந்த கணேசன் மகள் கலைமீனா(10). அக்ரஹாரம் ரோட்டில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவரது வலது கால் விரலில் லேச... |
General | வாழ்நாளில் 100 முறை ஹேர் ஸ்டைலை மாற்றம் செய்யும் பெண்கள் | லண்டன் : 13 முதல் 65 வயதுள்ள பெண்கள் தங்கள் வாழ்நாளில், 100 முறை தங்களது ஹேர் ஸ்டைலை மாற்றுவதாக ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது. ஹேர் லேயரிங், முடியை குறைத்துக் கொள்வது, டை பண்ணுவது போன்ற விஷயங்கள் இதில் அடக்கம். இதுகுறித்து ஆய்வு நடத்திய நிறுவனத்திடம் தங்களது ஹேர் ஸ்டைலை மாற்றுவதற்கு அவர்கள் கூறிய காரணம்... ஜஸ்ட் வாண்... |
தமிழகம் | கோவையில் நீராதார பாதுகாப்பு வரலாறு குறித்த கண்காட்சி | கோவை : கோவையில் நீராதார பாதுகாப்பு வரலாறு குறித்த 2 நாள் கண்காட்சியை, வரும் 17ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார். இக்கண்காட்சியில் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா கால நீர் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட பண்டைய முறைகளும் தற்போதைய முறைகளும் இடம்பெறும். நீராதாரங்களை பாதுகாக்கும் முறையை எடுத்துக்காட்டும் வித... |
தமிழகம் | தூத்துக்குடி வெளித்துறைமுகம் ரூ.4,350 கோடியில் விரிவாக்கம் | தூத்துக்குடி : சரக்கு கையாளும் திறனை அதிகப்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி வெளித்துறைமுகம் 4,350 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் ஒன்றான, தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது, ஆண்டிற்கு சராசரியாக 22.81 மில்லியன் டன் சரக்கு கையாளப்படுகிறது. துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை... |
இந்தியா | உடனடியாக டீசல் விலை உயர்வு இல்லை : பெட்ரோலியத்துறை செயலர் | புதுடில்லி : டீசல் விலையில் உடனடியாக உயர்வு ஏதும் இல்லை என பெட்ரோலியத்துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார். டில்லியில் இதுகுறித்து அவர் கூறுகையில், பெட்ரோலிய நிறுவனங்கள் இனி மாதம் ஒரு முறை விலையை நிர்ணயம் செய்யும் என தெரிவித்துள்ளார். |
தமிழகம் | தம்மம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு | தம்மம்பட்டி : சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பெரிய சாமி தலைமையில் நடந்த இந்த சோதனையில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். தம்மம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகரித்து வருவதாக வந்த புகாரையடுத்து இந்த ... |
இந்தியா | ஆப்டோஸ் சாலஞ்சர்ஸ் டென்னிஸ் : சோம்தேவ் முன்னேற்றம் | புதுடுடல்லி : ஆப்டோஸ் சாலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சோம்தேவ் தேவ் வர்மன் முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் ஆப்டோஸ் நகரில் சாலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் சோம்தேவ் ஜப்பானின் யூச்சி சுகிதாவை 5-7, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வென்றார். |
இந்தியா | தவறியது பருவமழை : 15 சதவீத மழை குறைவு | திருவனந்தபுரம் : கேரளத்தில் தென்மேற்கு பருவமழை, இதுவரை பெய்ததை விட இவ்வாண்டு 15 சதவீதம் குறைந்தது. ஆண்டுதோறும் கேரள மாநிலத்திற்கு தென்மேற்கு பருவமழை தான் முக்கியமாக நீர் ஆதாரத்திற்கு வழி வகுக்கும். இப்பருவமழை ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து ஜூலை மாதம் 12 வரை நீடிப்பது வழக்கம். இக்காலகட்டத்தில் பொதுவாக 101 செ.மீ., மழை... |
தமிழகம் | ஆசிரியர் தேர்வு பட்டியல் : இணையதளத்தில் வெளியீடு | சென்னை : தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று வெளியிடப்பட்டது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2009-10ம் கல்வியாண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், வி... |
தமிழகம் | சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்கு | பெருந்துறை : பஞ்சாயத்து சமுதாயக்கூடத்தை விரைவாக கட்டி முடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த கருக்கம்பாளையத்தில் பஞ்சாயத்து சார்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வரும் இடம் தனக்கு சொந்தமானது... |
தமிழகம் | விபத்தில் சிக்கிய வங்கி வாகனம் : ரூ. ஒன்றேகால் கோடி மீட்பு | மாமல்லபுரம் : வங்கிப்பணத்தை கொண்டு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. கால்வாயில் கவிழவிருந்த வாகனத்திலிருந்து ரூ. ஒன்றேகால் கோடி பத்திரமாக மீட்கப்பட்டது. புதுச்சேரியிலிருந்து இன்று மாலை சுமார் ரூ. ஒன்றேகால் கோடியுடன் தனியார் வங்கி வாகனம் ஒன்று சென்னையை நோக்கி புறப்பட்டது. வாகனம் கல்பாக்கத்தையடுத்த பெருமாள் சேரி என்ற இடத... |
இந்தியா | இது உங்கள் இடம் | ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளை! அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை மறுபடியும் உயர்த்தி, பொதுமக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிகட்டிக் கொண்டது மத்திய அரசு. பெட்ரோலியப் பொருட்களின் விலையை எப்போது ஏற்றினாலும், மத்திய அரசு ஒரு வழக்கமான பதிலை அளிப்பது வாடிக்கை. அதாவது, சர... |
தமிழகம் | சொல்கிறார்கள் | உழைப்பால் மட்டுமே சாத்தியமானது: ராஜன் ஐ கேர் மருத்துவமனையின் இணை இயக்குனர் சுஜாதா மோகன்: கண் தொடர்பான மேற்படிப்பை சங்கரா நேத்ராலயாவில் பண்ணும் போதுதான் மோகனை சந்தித்தேன். அவரின் அப்பா டாக்டர் ராஜனும் கண் மருத்துவ நிபுணர் தான். மோகனுக்கு இந்த துறை மேல் வெறின்னு சொல்லலாம். எனக்கும் இது விருப்பமான பாடம். இந்த ஈர்ப்பு தான்... |
தமிழகம் | ஜெயலட்சுமி மனு : ஐகோர்ட் தள்ளுபடி | மதுரை : மதுரையில் சி.பி.ஐ., பதிவு செய்த மோசடி வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரி (சிவகாசி)ஜெயலட்சுமி தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த சில நகை கடை உரிமையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக ஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன... |
தமிழகம் | உணவுத்துறை கமிஷனர் மாற்றம் | சென்னை : உணவுத்துறை கமிஷனர் ராஜாராமன், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனராக பணியாற்றிய ராஜாராமன் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை கவனிக்க, திட்டமிடுதல் வளர்ச்சி மற்றும் சிற... |
தமிழகம் | வைகோ தலைமையில் 300 பேர் கைது | சென்னை : இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, ஊர்வலமாக புறப்பட்டு சென்ற ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உட்பட 300 பேரை, போலீசார் கைது செய்தனர்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ... |
தமிழகம் | பொதுக்கூட்டம் நடத்துகிறார் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., | திருப்பூர் :கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, மா.கம்யூ.,வில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தனது தனிப்பட்ட செல்வாக்கை காட்ட, ஆதரவாளர்களைத் திரட்டி இன்று திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறார்.தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கியும், திருப்பூர் சட்டசபை தொகுதிக்கு செய்யப்பட்ட வளர்ச... |
தமிழகம் | சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் : காங்கிரசார் நான்கு பேர் கைது | சென்னை : ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சத்தியமூர்த்திபவனில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். அங்கு காமராஜர், கக... |
இந்தியா | காஷ்மீர் பிரச்னையை தூண்டுவது யார்?பா.ஜ., ஜெட்லி புகார் | பெரோஸ்பூர் : பாகிஸ்தானிய பிரிவினைவாத அமைப்புகள் காஷ்மீரில் பிரச்னையை தூண்டி விடுவதாக, பாரதிய ஜனதா தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக கலவரம் நடப்பதால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கூறியதாவது:பாகிஸ்தானில் உள்ள ... |
தமிழகம் | கைகளை பின்னால் கட்டியபடி "பைக்' ஓட்டிய வாலிபர் சாதனை | சேலம் : சேலத்தைச் சேர்ந்த வாலிபர், லிம்கா சாதனை முயற்சியாக, இரண்டு கைகளை பின்னால் கட்டியபடி மோட்டார் சைக்கிளில், சேலத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணித்தார். சேலம் அம்மாப்பேட்டை குண்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத். இவர் ஐந்து ஆண்டுகளாக லிம்கா சாதனை செய்வதற்கான முயற்சியில், தீவிர... |
இந்தியா | லாலு கட்சியுடன் தொகுதி பங்கீடு பஸ்வான் தகவல் | புதுடில்லி : பீகார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:பீகார் தேர்தலுக்காக ராஷ்டிரிய ஜனதா தளம... |
தமிழகம் | கைதான மின்வாரிய தலைமை இன்ஜினியர் வீட்டில் ரூ.20 லட்சம் சிக்கியது | சென்னை : மின்வாரிய தலைமை இன்ஜினியர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு நடத்திய சோதனையில், படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 20 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள் சிக்கியுள்ளன.
சென்னை மாநகர் மின்வாரிய தலைமை இன்ஜினியர்(தெற்கு) சீனிவாச... |
தமிழகம் | ரயிலில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை | காரைக்குடி : சென்னை ரயிலில் வந்த ஆண் குழந்தையை காரைக்குடி ரயில்வே ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சென்னை- ராமேஸ்வரம் ரயில் நேற்று அதிகாலை 1.40 மணிக்கு, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில் நின்றவுடன், பயணிகள் இங்கு இறங்கினர். அப்போது, முன்பதிவு ரயில் பெட்டியில் (எஸ்-7), ரத்தம் படிந்த நிலையில், ப... |
தமிழகம் | இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்வு: ஆய்வில் பகீர் தகவல் | சிங்கப்பூர் : இந்திய பெருங்கடலில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, கொலராடோ பல்கலைக் கழக விஞ்ஞானிகளும், தேசிய வானிலை மைய விஞ்ஞானிகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டு... |
தமிழகம் | செக்கானூரணி, உசிலம்பட்டி பகுதிகளில் 33 பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு | உசிலம்பட்டி : செக்கானூரணி, உசிலம்பட்டி பகுதிகளில், நேற்று 33 அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டக் கோரி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி பகுதிகளில் க... |
General | ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : கார்கள் எரிப்பு | மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது. இந்திய மாணவர்களின் கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடிலாய்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் சிலர், "எங்களை ஆஸ்திரேலிய இளைஞர்கள் கும்பல் ஒன்ற... |
தமிழகம் | அமெரிக்காவில் இந்திய மாணவர் பரிதாபமாக சுட்டுக் கொலை | வாஷிங்டன் : அமெரிக்காவில், ஐதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் அருண்குமார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரிங் மாணவரான அருண்குமார் நாரோத்(26), வெர்ஜினியாவில் உள்ள ஸ்ட்ராபோர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மேற்படிப்பு படித்து வந்தார். மேலும், படிப்பு செல... |
தமிழகம் | கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மனைவி : கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது | தேனி : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவி கொலை செய்த பெண், அவரது கள்ளக்காதலன் உட்பட நான்கு பேரை ஒன்பது மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், கொடைக்கானல் ரோட்டில் உள்ள டம்டம்பாறை மலைச்சரிவில் 2009 அக்., 10 ல் 50 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. தேவதானப்பட்டி போலீச... |
இந்தியா | கடன் தொல்லையால் சினிமா நடிகர் தற்கொலை | பெங்களூரு: கடன் தொல்லையால் கன்னட சினிமா நடிகர் இந்தூகார் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். கன்னட சினிமாவில் நடித்து வந்தவர் இந்தூகார். இவர் தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார். இவர் பல கன்னட சினிமாவில் நடித்துள்ளார். சில படங்களும் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் தயாரித்த சில படங்கள் சரியாக ஓடாமல் நஷ்டம் ஏற்... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் : விஜய் நடித்த குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா ஆகிய ஐந்து படங்கள் மூலம், திரையரங்க உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர் நஷ்டஈடு தொகையை தரும்வரை, அவரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,... |
தமிழகம் | போலி "சிம் கார்டு'களால் குற்றங்கள் அதிகரிப்பு : போலீசாரின் விசாரணையில் "பகீர்' தகவல் | சென்னை : விதிமுறைப்படி ஆவணங்களை பெறாமல் புதிய இணைப்புக்களை மொபைல் போன் நிறுவனங்கள் வழங்குவதால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. மொபைல்போன் நிறுவனங்களின் அலட்சியம் காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இன்றைய நிலையில், பாமர மக்கள் கூட மொபைல்போனை பயன்படுத்துகின்றனர். தமிழகத்த... |
தமிழகம் | பெண் ஊழியருக்கு டார்ச்சர் : டாக்டருக்கு போலீஸ் வலை | திருநெல்வேலி : லேப் டெக்னீஷியனுக்கு டார்ச்சர் கொடுத்த டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாளையங்கோட்டையில் செயல்படும் ஜெயராஜ்அன்னபாக்கியம் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலைபார்த்தவர் அமிர்தகனி(35). அந்த மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் டாக்டர் கிளாட்வின் என்பவர், அமிர்தகனியிடம், "த... |
தமிழகம் | மாவட்ட வன அலுவலர் மீது மனைவி வரதட்சணை புகார் | தேனி : தேனி மாவட்ட வன அலுவலர் மீது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக அவரது மனைவி லாவண்யா மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். தேனி மாவட்ட வன அலுவலர் ஸ்ரீனிவாச ஆர்.ரெட்டி(44). இவரது மனைவி லாவண்யா(32). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், எட்டு வயதில் மகளும் உள்ளனர். தனது மனைவி லாவண்யாவை டிரைவர் சாகுல் ஹமீது கடத்திச... |
தமிழகம் | மாணவர் குடித்து தற்கொலை முயற்சி : கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மறியல் | குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணவர் பூச்சி மருந்து குடித்ததை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பாலாஜி (20). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் கல்ல... |
தமிழகம் | நாமக்கல் லஞ்ச டி.எஸ்.பி., சொத்து விவரம் சேகரிப்பு | நாமக்கல் : லஞ்ச டி.எஸ்.பி.,யின் சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க, உயர் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கணக்கில் வராத அவரின் சொத்துக்களை முடக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக் கடத்தல் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் பிரமுகர்கள் ஷேக் நவீத், சண்முகம், ரவி ஆகிய மூவர் மீதும், மேல் நடவடிக்கை எடுக்காமல் இரு... |
தமிழகம் | தண்டவாளத்தில் விரிசல் : பல்லவன் எக்ஸ்பிரஸ் தாமதம் | விழுப்புரம் : கல்லக்குடி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக விழுப்புரத்திற்கு வந்தது. திருச்சியிலிருந்து சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் (எண் 2606) ரயில் நேற்று காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வந்தது. இந்த ரயில் கல்லகம் - கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷன் இடையே வந்த போது, அப்பகுதி... |
தமிழகம் | 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருட்டு | மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சிலை திருடு போனது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருக்களம்புதூரில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சவுந்திரவள்ளியம்மன் உடனுறை வில்வாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வெ... |
இந்தியா | நக்சல் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவை : முதல்வர் மாநாட்டில் முடிவு | நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை விரைவாக எடுத்துச் செல்வதற்கு, ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள 400 காவல் நிலையங்களை, 800 கோடி ரூபாய் செலவில் முழுமையாக நவீனமாக்கவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நக்சலைட்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநி... |
இந்தியா | ஆண்டுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டதால் குளோரின் சிலிண்டரில் திடீர் கசிவு: 78 பேர் பாதிப்பு | மும்பை : மும்பை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களிலிருந்து குளோரின் வாயு திடீரென கசிந்தது. இதனால், அப்பகுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறலும், சுவாசக் கோளாறும் ஏற்பட்டது. இதில், ஏழு தீயணைப்பு வீரர்கள் உட்பட 78 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து த... |
இந்தியா | காஷ்மீரில் பதட்டம் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு | ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பதட்டமான சூழ்நிலை நேற்றும் ஏற்பட்டதால், அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்ததால், அதை அடக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், சிலர் உயிரிழந்தனர். ஆர்ப்பாட்டக்... |
இந்தியா | சட்ட விரோத குவாரி விவகாரம் வெடிக்கிறது : சட்டசபையில் அமளி | பெங்களூரு : சட்ட விரோத குவாரி தொழில் மோசடியை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வலியுறுத்தி, கர்நாடகா சட்டசபை மற்றும் மேலவையில் காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மூன்றாவது நாளாக நேற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சபாநாயகர் போப்பய்யா முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. கடும் கூச்சல், குழப்பம் நில... |
General | இந்தியா- பாகிஸ்தான் பேச்சு எப்படி ? இன்று மாலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு | இஸ்லாமாபாத் :மும்பை தாக்குதலுக்குப் பின், முதன்முறையாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினார். கலையில் நடந்த இந்த பேச்சு மதியம் வரை தொடர்ந்தது. மாலையில் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசுகின்றனர். இந்த பேச்சுக்கென நேற்று பாகிஸ்தான் தலைநக... |
இந்தியா | காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை | புதுடில்லி : காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், தற்போது குடும்ப கவுரத்தை பாதுகாப்பதற்காக காதலர்களை கொலை செய்யும் கவுரவக் கொலை நடைபெற்று வருகிறது. படித்தவர்கள், பாமரர்கள், நகரம், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரிக... |
தமிழகம் | அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் மாணவியின் கால்நரம்பு பாதிப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், 5ம் வகுப்பு மாணவிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால், அவரது கால்நரம்பு பாதித்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம், கொத்ததெருவை சேர்ந்த கணேசன் மகள் கலைமீனா (10). அக்ரஹாரம் ரோடில், தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவரது வலது கால் விரலில் லேசான க... |
இந்தியா | பயங்கரவாதிகளுடன் மோதல் : "பூஞ்ச்'சில் ராணுவ மேஜர் பலி | ஜம்மு : பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஒருவர் பலியானார். இரண்டு பயங்கரவாதிகளும் பலியாயினர். கர்னல் உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அ... |
இந்தியா | அனல்மின் நிலையம் அமைவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: மூவர் பலி | சோம்பேட்(ஆந்திரா) : ஆந்திர மாநிலம் சோம்பேட்டில், தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய அனல் மின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூவர் பலியானார்; 80 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு ஆந்திரக் கட்சிகள் கடும் கண்டனம் தெ... |
தமிழகம் | திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் பாரம்பரியமிக்க நீராவி இன்ஜின் ரயில் இயக்கம் | திருவாரூர் : திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மீட்டர் கேஜ் ரயில் பாதையில் நீராவி இன்ஜின் ரயில் சிறப்பு ஓட்டம் நடத்தப்பட்டது. தென்னக ரயில்வே துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளையும் மாற்றி அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் தற்போது திருவாரூர் - க... |
தமிழகம் | திருச்சி அண்ணா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர்கள் இன்று அறிவிப்பு | திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு பேராசிரியர் தேவதாஸ் மனோகரனும், பாரதிதாசன் பல்கலைக்கு கல்லூரி முதல்வர் மீனாவும் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது. திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு சில மாதங்களுக்கு ம... |
தமிழகம் | தூத்துக்குடி வெளித்துறைமுகம் ரூ.4,350 கோடியில் விரிவாக்கம் | தூத்துக்குடி : சரக்கு கையாளும் திறனை அதிகப்படுத்தும் பொருட்டு, தூத்துக்குடி வெளித்துறைமுகம் 4,350 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதுகுறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாளை நடக்கிறது. நமது நாட்டிலுள்ள 12 பெரிய துறைமுகங்களில் ஒன்றான, தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது, தெற்கு அலைதடுப்பு சுவரில் 8 கப்... |
தமிழகம் | கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில தர நிர்ணயக் கவுன்சில் | சென்னை : தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்திற்கும் தரநிர்ணயச் சான்று வழங்குவதற்காக தனி கவுன்சில் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 578 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 62 அரசு கல்லூரிகள், 133 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 383 தனியார் கல்லூரிகள்.
தேசிய அளவில் கல்லூரிகளுக்கு தர நிர்... |
தமிழகம் | ஆசிரியர் தேர்வு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு | சென்னை : தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலிக தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2009-10ம் கல்வியாண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், ... |
தமிழகம் | கோவை வேளாண் பல்கலையில் தமிழில் பட்டமளிப்பு விழா | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், கோவை வேளாண் பல்கலையின் 31வது பட்டமளிப்பு விழா தமிழில் நடத்தப்பட்டது. வரும் ஆண்டுகளில் அனைத்து பட்டமளிப்பு விழாக்களும் தமிழில் மட்டுமே நடத்தப்படும் என, பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நேற்று நடந்த 31வத... |
இந்தியா | சபரிமலை நடை நாளை திறப்பு : நிறப்புத்தரி உற்சவம் 23ம் தேதி | சபரிமலை : ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படும். பூஜைகள் முடிவடைந்து வரும் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். நெற்கதிர்கள் கொண்டு நடத்தப்படும் நிறப்புத்தரி உற்சவம் வரும் 23ம் தேதி நடைபெறுவதால், அதற்காக அய்யப்ப சுவாமி கோவில் 22ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு, உற்சவம் முடிந்த பின் 23ம் தேதி இரவு அடைக்கப்... |
General | இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்வு: ஆய்வில் பகீர் தகவல் | சிங்கப்பூர் : இந்திய பெருங்கடலில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கொலராடோ பல்கலைக் கழக விஞ்ஞானிகளும், தேசிய வானிலை மைய விஞ்ஞானிகளும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வானிலை மாற்றத்தின் காரணமாக கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த... |
தமிழகம் | நடராஜர் கோவிலில் 8வது முறையாக உண்டியல் திறப்பு : ரூ.25 லட்சம் உண்டியல் வருமானம் | சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நட... |
தமிழகம் | பொறியியல் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் ஆக., 5ம் தேதி வரை நடக்கிறது | சென்னை : பொறியியல் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நாளை துவங்குகிறது. தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில், 2010-11ம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவ... |
தமிழகம் | துணைவேந்தர் தேர்வுக்குழு அமைப்பு | சென்னை : அழகப்பா மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களின் புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், நாமக்கல் செல்வம் கல்வி மைய தலைவர் செல்வராஜ், வித்யாவிகாஷ் கல்வி மைய ம... |
தமிழகம் | நெல்லை, கோவை, தஞ்சையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் | சென்னை : சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வரும் அக்டோபரில் அண்ணா சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் புதிதாக ஒன்பது பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் கூறியதாவது: நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை சாஸ்திரி பவன் வளாகத்தில் இயங்கி வரும் செ... |
தமிழகம் | பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை, அதிக கட்டணம் : புகார்களை பெறவும், விசாரணை நடத்தவும் குழு அமைப்பு | சென்னை : தனியார் பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை, அதிக கட்டணம் குறித்து புகார்களை பெறவும், விசாரணை மற்றும் ஆய்வு நடத்தவும், தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கவுன்சில் துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார் பொறியியல் கல்... |
தமிழகம் | தொலைக் கல்வி தொடர்பு வகுப்புகள் | மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள் ஜூலை 17, 18ம் தேதி நடக்க உள்ளது. இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடக்க உள்ளது. இளங்கலை முதலாண்டு, 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு, முதுகலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் சிவகாசி கார... |
இந்தியா | ஆந்திராவில் ஐந்து தொகுதிகளுக்கு ஓட்டு சீட்டுகள் அடிப்பதில் தீவிரம் | ஐதராபாத் : ஆந்திராவில் 12 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில், ஐந்து தொகுதிகளில் ஓட்டுச் சீட்டுகளைப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஒரு தொகுதியில் 64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் அங்கு, மின்னணு ஓட்டு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது என்பதால் தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காக ஓட்டுப் ... |
இந்தியா | பருவமழை தவறியது 15 சதவீத மழை குறைவு | திருவனந்தபுரம் : கேரளத்தில் தென்மேற்கு பருவமழை, இதுவரை பெய்ததை விட இவ்வாண்டு 15 சதவீதம் குறைந்தது. ஆண்டுதோறும் கேரள மாநிலத்திற்கு தென்மேற்கு பருவமழை தான் முக்கியமாக நீர் ஆதாரத்திற்கு வழி வகுக்கும். இப்பருவமழை ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து ஜூலை மாதம் 12 வரை நீடிப்பது வழக்கம். இக்காலகட்டத்தில் பொதுவாக 101 செ.மீ., மழை... |
இந்தியா | லஷ்கர் பயங்கரவாதி விகாருதீன் கைது | ஐதராபாத் : லஷ்கர் -இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி விகாருதீன் அகமது என்ற விகாருதீனை, ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு மே 18ம் தேதி, பாலக்நுமா பகுதியில் ஊர்க்காவல் படை வீரர் பாலாராஜுவைக் கொன்றது; இந்த ஆண்டு மே 14ம் தேதி, ஐதராபாத்தின் ஷகாலி பாண்டா பகுதியில் சிறப்பு போலீஸ் படை கான்ஸ்டபிள் ரமேஷை ... |
இந்தியா | டாக்டர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை | புதுடில்லி : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, டாக்டர் ராகேஷ் வர்மா வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சப்தர்ஜங் மருத்துவமனையில் இதயநோய் டாக்டராக பணிபுரிபவர் ராகேஷ் வர்மா. இவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தி ... |
இந்தியா | டில்லியில் கட்டடம் இடிந்து 6 பேர் சாவு | புதுடில்லி : டில்லியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், 3 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாயினர். டில்லியில், உஸ்மான்பூர் அருகே உள்ள பிரம்மபுரியில் நேற்று அதிகாலை 4.25 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், ஒரு பெண், அவரது 3 மகன்கள் மற்றும் 2 மருமகள்கள் உள்ளிட்ட 6 பேர் உடல் நசுங்கி பலியாயினர். தீய... |
இந்தியா | குருவாயூர் கோவில் யானைக்கு உடல்நலக் குறைவு அதிகரிப்பு | குருவாயூர் : குருவாயூர் கோவில் பிரபல யானையான பத்மநாபனுக்கு, உடல் நலக் குறைவு அதிகரித்து மதம் பிடித்து நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த பக்தர்கள் வருத்தமுற்றனர். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சீவேலி (உற்சவர் எழுந்தருளல்) நிகழ்ச்சி உள்ள அனைத்து நிகழ்ச்சிகளில... |
இந்தியா | பென்ஷனோ வெறும் ரூ.11 தான் அதை பெறுவதற்கோ ரூ.15 செலவு | காசர்கோடு : பீடித் தொழிலாளியான பெண்ணுக்கு பென்ஷன் வெறும் 11 ரூபாய் தான். இது கேரளாவில் வழங்கப்படும் குறைந்தபட்ச பென்ஷன் தொகை. ஆனால் அதை பெறுவதற்காக அவர் செலவிடவேண்டிய தொகையோ 15 ரூபாய். அதனால் பென்ஷன் வாங்காமலேயே அவர் இருக்கிறார். கேரள மாநிலம் காசர்கோடு அருகே கல்லுக்கூட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சீதா;விதவை. இவர் சிறு வய... |
இந்தியா | ஆடைகள் களையப்பட்டு கசையடி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | கத்திகார்(பீகார்) : தன் இரண்டாவது கணவனை மறுமணம் செய்வதற்கு இளம்பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது ஆடைகள் களையப்பட்டு, கசையடி வழங்கப்பட்ட கொடுமையான சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இதுகுறித்து கத்திகார் பகுதி போலீசார் கூறியதாவது: பீகாரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் (35) ஒருவரது கணவர், திருமணமாகி நான்காண்ட... |
இந்தியா | கடன் தொல்லை: நடிகர் தற்கொலை | பெங்களூரு : கடன் தொல்லையால், கன்னட சினிமா நடிகர் இந்தூகார் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். கன்னட சினிமாவில் நடித்து வந்தவர் இந்தூகார். இவர் தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார். இவர், பல கன்னட சினிமாவில் நடித்துள்ளார்; சில படங்களும் தயாரித்து இயக்கியுள்ளார். இவர் தயாரித்த சில படங்கள் சரியாக ஓடாமல் நஷ்டம் ... |
தமிழகம் | தம்மம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தில் சோதனை | தம்மம்பட்டி : தம்மம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 8,155 ரூபாய் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளது. அங்கு பத்திரம் பதிவு செய்ய கூடுதல் தொகை வசூலிப்பதாகவும், முறைகேடு நடப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்... |
தமிழகம் | பன்றிக் காய்ச்சல் சோதனையில் குளறுபடி : சுகாதார துறையின் மெத்தனத்தால் பாதிப்பு | திருநெல்வேலி : பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து சுகாதாரத் துறையினர் மெத்தனத்தால், தென்மாவட்டங்களில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டபோது, தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சுகாதாரத் துறையினர் கூறினர். சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் சோதனை மைய முடிவுகளில் பலருக்க... |
தமிழகம் | தவிப்புமலைக் கிராம மக்கள் இருளில் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிப்பு | தாண்டிக்குடி: கொடைக்கானல் மலைப்பகுதியில் முழுமையான மின்சப்ளை அளிக்க முடியாத நிலையில் தொடர்ந்து மலைக் கிராம மக்கள் இருளில் தவிக்கின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் நீடித்த மின் சப்ளை பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீழ்மலை, மேல்மலை பகுதியை மையமாக கொண்டு கொடைக்கானலில் துணை மின் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்க... |
தமிழகம் | வேம்பார்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு | சாணார்பட்டி: வேம்பார்பட்டி ஊராட் சியில் குடிநீர் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண் ணீர் எடுப்பதால் அனைத்து வீடுகளுக்கும் கிடைப்பதில்லை. வேம்பார்பட்டி ஊராட்சியில் கோபால் பட்டி, வேம்பார்பட்டி, விலக்கு ரோடு, செடிப் பட்டி, மொட்டையக்கவுண்டன்பட்டி ஆகிய இடங்களிலுள்ள வீடுகள், ஓட்டல்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்... |
தமிழகம் | திண்டுக்கல் ஐ.டி.ஐ.,யில் மாணவிகள் சேர்க்கை | திண்டுக்கல்: மாவட்ட கலெக்டர் வள்ளலார் அறிக்கை: திண் டுக்கல் நத்தம் ரோடு ஐ.டி.ஐ.,யில் (பெண்கள்) நேரடி சேர்க்கை துவங்கியுள்ளது. கம்மியர் கருவி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதன பராமரிப்பு, டெய்லரிங் போன்ற பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது. பத்தாம், பிளஸ் 2 கல்வித்தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விலை... |
தமிழகம் | கொடைக்கானலில் தொடர் விபத்தைத் தடுக்க நடவடிக்கை | கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. கொடைக்கானலில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகள் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல்,கிளாசிக் ஓட்டல் சந்திப்பு,பாரடைஸ் சந்திப்பு,அண்ணா சாலை சந்திப்பு, பேத்துப் பாறை சந்திப்பு,அடுக்கம் சந்திப்பு, கொடைக்க... |
தமிழகம் | திண்டுக்கல் நூலகத்தில் "குட்டீஸ்' பகுதி புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் | திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நூலகத்தில் சிறுவர்களுக்கான சிறப்பு பகுதி துவக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர், சிறுமிகளிடம் நூலகம் வந்து செல்லும் பழக்கத்தை அதிகப்படுத்த இப்பகுதி துவக்கப் பட்டுள்ளது. இவர்கள் படிப்பதற்கேற்ப காமிக்ஸ், பொது அறிவு புத்தகங்கள் பல இங்குள்ளன. சிறுவர்களுக்கான விளையா... |
தமிழகம் | ரோடு வசதியில்லாததால் பஸ் சேவை நிறுத்தம் | நத்தம்: நத்தம் பண்ணுவார் பட் டியிலிருந்து மதுக்காரம் பட்டிக்கு செல்லும் ரோடு பழுதடைந்துள்ளது. நத்தம் நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட பண்ணுவார்பட்டியிலிருந்து மதுக் காரம்பட்டிக்கு 3 கி.மீ., தூரம் ரோடு செல்கிறது. இந்த ரோடு அமைக் கப் பட்டு பல ஆண்டுகளாகிறது. மழை நீரால் அரிக்கப் பட்டு கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்ப... |
தமிழகம் | ஆசிரியரை ஏமாற்றிய வாலிபர் கைது | நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே ஆசிரியரை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார். நிலக்கோட்டை அக்ரகாரப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகள் சுதா(23). இவர் செம்பட்டி அருகே உள்ள காமுபிள்ளை சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இப்பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் வேல்முருகன்(27). கோழி... |
தமிழகம் | மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில் | சென்னை : ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும், ஆடிப்பூர விழாவை முன்னிட்டும், கோவை - மேல்மருவத்தூர், திருப்பூர் - மேல்மருவத்தூர் மற்றும் பாட்னா - சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக... |
தமிழகம் | வடமதுரை ஒன்றியக் கூட்டம் | வடமதுரை: வடமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கமிஷனர் மோகன்ராஜ், கூடுதல் கமிஷனர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறியாளர் ஜான்பிரிட்டோ, மேலாளர் ஆறுமுகம், வேளாண்மை உதவி இயக்குனர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். பாகாநத்தம் ஊராட்சி மலைப்பட்டி, மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பப... |
இந்தியா | உ.பி., மந்திரி நந்தி பிழைப்பாரா? | லக்னோ : வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உ.பி., அமைச்சர் நந்தகோபால் குப்தா என்ற நந்தி, தொடர்ந்து உயிருக்குப் போராடி வருகிறார். மருத்துவ நிபுணர்கள் பலர் அவரைக் கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில், உ.பி.,யின் நிறுவன நிதித்துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா வீட்டு வாசலில் வெடிகுண்டு வெடித்தது. இதில்... |
தமிழகம் | அனுமதியில்லாத இடத்தில் பஸ்கள் நிறுத்துவதால் அபாயம் | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பஸ்களை நிறுத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்லில் அரசு ஆஸ்பத்திரி, செயின்ட் ஜோசப் ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் விபத் துக்களை தவிர்க்க பேரிகார்டுகள் வைக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் ஒதுக்கப் பட்ட இடம் நீங்கலாக ரோட்டிலும் வாகனங்கள் நிறுத்த... |
தமிழகம் | போட்டியின்றி தேர்வு | வடமதுரை: வடமதுரை பேரூராட்சி 3வது கவுன்சிலர் பழனிச்சாமி இறந்ததால், இடைத்தேர்தல் நடந்தது. இறந்த பழனிச்சாமியின் மனைவி லட்சுமி(தி.மு. க.,) ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந் ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.