category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
மங்களூரு விரைந்தனர் சி.ஆர்.பி.எப்., வீரர்கள்
புதுடில்லி சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 600 பேர், ஒரு டாக்டர் குழுவுடன், மங்களூரு விமான விபத்து நடந்த இடத்துக்கு நேற்று விரைந்தனர். கேரள மாநிலம் பரிங்கம் என்ற இடத்திலிருந்து, 300 வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவும், பெங்களூரிலிருந்து 300 வீரர்கள் கொண்ட மற்றொரு படைப் பிரிவும், நேற்று மங்களூருக்கு அனுப்பப்பட்டன. இவர்களுடன் ஒரு...
தமிழகம்
நகைக்கடையில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனுக்கு வலை
தூத்துக்குடி :  தூத்துக்குடி அருகே நேற்று முன்தினம், நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் உரிமையாளர் முருகனை கத்தியால் குத்தி, அங்கிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச் சென்றனர். புதுக்கோட்டை போலீசாரின் விசாரணையில், நெல்லை மாவட்டம் தளவாய்புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், கூட்டாளியோடு சேர்ந்து பைக்கில...
தமிழகம்
நடுக்காட்டில் பெண்ணை கொன்று நகை கொள்ளை
தூத்துக்குடி :  தூத்துக்குடி அருகே நேற்று நடுக்காட்டில், பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திக்கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 40,000 ரூபாய் தாலிச் செயினை கொள்ளையடித்துச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பு பனையேறும் தொழிலாளி சுடலைமணி. நேற்று அதிகாலை இவர் வழக்கம்போல், பனையேற...
இந்தியா
10 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய விபத்து
பெங்களூரு : மங்களூரில் நிகழ்ந்த விமான விபத்து, கர்நாடகாவில் இரண்டாவது பெரிய விபத்து. தேசிய அளவில் இது 11 வது விபத்து. 10 ஆண்டுகளில், இந்தியாவில் இரண்டாவது பெரிய விமான விபத்து. கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலுள்ள விமான நிலையத்தில், 1990ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மும்பையிலிருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க...
தமிழகம்
திருச்செந்தூரில் மே 27ல் வைகாசி விசாகம்
தூத்துக்குடி :  திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத்திருவிழா, மே 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்று கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், பகல் 10.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. அதன்பின், சுவாமி ஜெயந்திநாதர் தங்க...
தமிழகம்
நகை வாங்கவந்தது போல நடித்து ரூ.12 லட்சம் நகை கொள்ளை *கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி :  தூத்துக்குடி அருகே நகை வாங்க வந்ததுபோல் நடித்து நகைக்கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், உரிமையாளரை கத்தியால் குத்தி, அங்கிருந்த 12 லட்சம் ரூபாய்  தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல், ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சுப்பையா மகன் முருகன்(35), அங்கு வாகைக்குளம்- முட...
இந்தியா
விமான பைலட் பிரிட்டன் நாட்டவர்
மும்பை : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை ஓட்டி வந்த பைலட், பிரிட்டன் நாட்டுக்காரர்; செர்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்; 10 ஆயிரம் மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை ஓட்டிய அனுபவம் பெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவில் விமானத்தை ஓட்டி வருகிறார். குளூசிகா(53) என்பது அவர் பெயர். அவருடைய லைசென்சை, சிவில் விமானப் போக்க...
இந்தியா
உண்மையான காரணம் தெரியவில்லை
மங்களூரு : விமான விபத்துக்கான காரணம் குறித்து ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான காரணத்தை கூறி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் உண்மையான காரணம் தெரிய வரும் என, தெரிகிறது. மங்களூரு விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து, விமான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓடுபாதை துவங்கும் இடத்தில் விமானத்தை தர...
தமிழகம்
பல்கலை அறிவியல் பேரவை கருத்தரங்கு:சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி
திருநெல்வேலி:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 10வது அறிவியல் பேரவை கருத்தரங்கம் சித்த மருத்துவத்துறை சார்பில் மூலிகை கண்காட்சி செனட் அரங்கில் நடந்தது.அறிவியல் பேரவை கருத்தரங்கின் 2வது நாளில் துணைவேந்தர் சபாபதிமோகன் தலைமை வகித்து மூலிகை கண்காட்சியை திறந்துவைத்தார். சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சவுந்திரராஜன் து...
தமிழகம்
நலத்திட்ட உதவி வழங்கல்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சிஜிதாமஸ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஒ., கணேசன் வரவேற்றார். ஊராட்சி ஒன் றிய தலைவர் சுப்பாராஜ், நகராட்சி தலைவர் சிவபிரகாசம் வாழ்த்தி பேசினர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், 1,675 பயனாளிகளுக்கு 2.25 கோட...
தமிழகம்
திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்:காதலன் மீது இளம் பெண் போலீசில் புகார்
திருநெல்வேலி:தன்னை திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதாக மூன்றடைப்பு போலீசில் இளம்பெண் புகார் செய்துள்ளார்.மூன்றடைப்பு அருகேயுள்ள வடக்கு நெடுங்குளத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் கணேசன் (25). இவரும் அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் மகள் லதா ரத்னாவதி (21). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. த...
தமிழகம்
மாம்பழங்களில் கறுப்பு புள்ளிகளால் விலை குறைவு
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் மாம்பழங்களில் கறுப்பு புள்ளிகளால் விலை குறைந்துள்ளது.அய்யனார்கோயில், மருங்கூர், புரசம்பாறை, சம்மந்தபுரம், செண்பகத்தோப்பு, வாழைக்குளம்,சேத்தூர், தேவதானம் பகுதிகளில் ஆயிரக்கணக்கானஏக்கரில்மாந்தோப்புகள் உள்ளன. பெரும்பாலும் சப்பட்டை, பஞ்சவர்ணம் ரகங்களும், சில இடங்களில் ஆராரகங் களும் பயிரிடப்பட்டுள்...
தமிழகம்
மதுரையில் மைனர் கைதி தப்பி ஓட்டம்
மதுரை: மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சதீஷ் (17). திருட்டு வழக்கில் பழனி அடிவார ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர். மதுரையில் ஜே.எம்.3 கோர்டில் ஆஜர் செய்து, இரவு 9 மணிக்கு சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லும் போது, சதீஷ் தப்பி விட்டான். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
நம்பித்தலைவன் பட்டயம் கோயிலில் நாளை கொடை விழா துவக்கம்
திருநெல்வேலி:நம்பித்தலைவன்பட்டயம் முத்தாரம்மன் கோயிலில் நாளை (24ம் தேதி) கொடை விழா துவங்குகிறது.நம்பித்தலைவன்பட்டயம் முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா நாளை (24ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 5.30 மணிக்கு கொடி அழைப்பு, இரவு 9 மணிக்கு சாஸ்தா சிறப்பு, 10.30 மணிக்கு வில்லிசை, கரகம், மகுடம், செண்டா மேளம், குறவ...
தமிழகம்
மாணவிக்கு படிப்பு உதவி
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த தனலட்சுமி என்ற மாணவி வணிக மேலாண்மை பிரிவு பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பெற்றும் உயர் கல்வி பயில பெறமுடியாத நிலை உள்ளதாக அறிவித்திருந்தார்.இதையறிந்த கலசலிங்கம் பல்கலை வேந்தர் கலசலிங்கம், தனலட்சுமி உயர்கல்விக்காக, ஆனந்தம்மாள் கல்வி அறக்கட்டளை முழு உதவி செய்ய...
தமிழகம்
குறைதீர் கூட்டம்
விருதுநகர்:விருதுநகரில் காஸ் சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஏஜன்சிகள், நுகர்வோர் கலந்து கொண்டனர். நுகர்வோர்களின் புகார்கள் குறித்து தீர்வு காணப்பட்டது. தலைமை வகித்த கணேசன் டி.ஆர்.ஓ., பேசியதாவது: எப்போது வேண்டுமானாலும் காஸ் வேண்டி பதிவு செய்து கொள்ளலாம். சிலிண்டர் சப்ளை செய்ய ஐந்து கி.மீ.,க்குள் வீ...
தமிழகம்
விழிப்புணர்வு சங்க மாதாந்திர கூட்டம்
ஊட்டி: ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க மாதாந்திர கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: மலர் விவசாயம், தரமற்ற விதை வழங்குவதில் இடை தரகர்களின் பங்கு போன்றவற்றை களைய  வேண்டும்; இந்த ஆண்டு மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாக வசூலித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிப...
தமிழகம்
காங்., கூட்டம்
நரிக்குடி:நரிக்குடியில் இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருச்சுழி தொகுதி தலைவர் செல்வம் தலைமை வகித் தார். வட்டார கமிட்டி தலைவர் முகம்மது மூசா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர்கள் சிவாஜிபாலன், இலக்கியன், வட்டார கமிட்டி தலைவர்கள் ரவிச்சந்திரன், சங்கர் போஸ், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கஅதிமுக மகளிரணி செயல்பாடு அமையணும்: மாநில செயலாளர்
திருநெல்வேலி,:தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிமுக மகளிரணியின் செயல்பாடு அமையவேண்டும் என நெல்லையில் நடந்த அதிமுக மகளிரணி புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில செயலாளர் கோகுல இந்திரா பேசினார்.நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம் வண்ணார்பேட்டை...
தமிழகம்
ரேஷன் பொருட்கள் இருப்பு விபரம் பராமரிக்காத ஊழியர்களுக்கு அபராதம்
கூடலூர்:  கூடலூர் முதல் மைல் மற்றும் இரண்டாவது மைல் பகுதியில் ரேஷன் பொருட்களின் இருப்பு விபரத்தை சரியாக பராமரிக்காத கடை ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ., அபராதம் விதித்தார். கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன் தேவர்சோலை சாலை முதல் மைல் பகுதியில் உள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.  அங்கு பொருட்களின் இருப்பு விபரங்கள் சரியாக பராமரிக்கா...
தமிழகம்
ம.தி.மு.க., பொதுக்கூட்டம்
சத்திரப்பட்டி:விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சத்திரப்பட்டியில் ம.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.ஒன்றிய பிரதிநிதி பூமாரி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, மாந...
தமிழகம்
மாவட்ட கல்வி குழுக் கூட்டம்
விருதுநகர்:விருதுநகரில் நடந்த மாவட்ட கல்விக்குழு கூட்டத்திற்கு முதன்மை கல்விஅலுவலர் நாகராஜ முருகன் தலைமை வகித்தார். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோசனா ரத்தினாவதி, மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன்...
தமிழகம்
கேரள கிராமிய இசை நகழ்ச்சி
குன்னூர்:” நீலகிரி கலாச்சார சங்கத்தின் சார்பில் குன்னூர், கோத்தகிரியில் கேரள கிராமிய இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.நீலகிரி கலாச்சார சங்க அமைப்பாளர் அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி கலாச்சார சங்கம், நீலகிரி அரிமா சங்கத்துடன் இணைந்து வரும் 25ம் தேதி குன்னூர் உபாசி அரங்கில் கேரள கிராமிய கலாச்சார நி...
தமிழகம்
சிமைப்பு சாரா வாரியத்தில் தொழிலாளர்கள் சேர அழைப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்ட தொழிலாளர் நல வாரியங்களில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய வரும் 27ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. நீலகிரி மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு கட்டுமான த...
தமிழகம்
வழித்தடம் மாறி இயக்கப்படும் அரசு பஸ்களால் பயணிகள் அவதி
மஞ்சூர்: வழித்தடம் மாற்றி இயக்கப்படும் அரசு பஸ்களால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். மஞ்சூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஊட்டி, குன்னூரிலிருந்து தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு மக்கள் ஊட்டி, குன்னூருக்கு சென்று வருகின்றனர். தற்போது ஊட்டி, குன்னூர் பகுதிகளில் கோடை சீசன் என்பதால் ஏராளமான ச...
தமிழகம்
பழுதான மொபைல் போன் மாற்றி தராத டீலருக்கு அபராதம்
ஊட்டி: ஊட்டியில் தனியார் கம்பெனியின் வாங்கிய மொபைல் போன் இரு வாரத்தில் பழுதடைந்ததால், அதனை மாற்றித்தராத டீலருக்கு நுகர்வோர் கோர்ட் அபராதம் விதித்துள்ளது. ஊட்டி அருகே பரலட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவர் ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள தனியார் கம்பெனி டீலரிடம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி 6 ஆயிரம் ரூபாய்க்கு இரு ந...
தமிழகம்
ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
கூடலூர்: கூடலூர் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்; ஆல்டோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. கூடலூர் கோழிக்கோடு வழியாக கேரளாவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்துவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் அல்துல்சலாம் தலைமையில், அதிகாரிகள் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கோழி...
தமிழகம்
கூடலூரில் 27ம் தேதி வாசனை திரவிய கண்காட்சியில் கண்கவரும் நிகழ்ச்சிகள்
கூடலூர்: கூடலூரில் வரும் 27, 28ம் தேதிகளில் நடத்தப்படும் வாசனை திரவிய கண்காட்சிக்கு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது; பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவர ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 27, 28ம் தேதிகள...
தமிழகம்
கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு 27ம் தேதி எம்.பி.,ராமசுப்பு வருகை
ஆழ்வார்குறிச்சி:கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் வரும் 27ம் தேதி எம்.பி., ராமசுப்பு மக்கள் குறை கேட்டு மனுக்கள் பெற வருகிறார்.கடையம் ஒன்றியத்தில் வரும் 27ம் தேதி காலை 9.30 மணியளவில் பாப்பான்குளத்தில் துவங்கி தொடர்ந்து ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்., சிவசைலம், தர்மபுரமடம் (சம்பன்குளம்), கோவிந்தபேரி, மந்தியூர், வீ...
தமிழகம்
கொழுந்துமாமலை கோயிலில்27ம் தேதி வைகாசி விசாக விழா
திருநெல்வேலி:சேரன்மகாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 27ம் தேதி வைகாசி விசாக விழா நடக்கிறது.சேரன்மகாதேவி - களக்காடு மெயின் ரோடு மேல்புறம் செல்லும் ரோட்டில் கொழுந்துமாமலை அடிவாரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு...
தமிழகம்
வயிற்றுப்போக்கால் மக்கள் பாதிப்பு கிணற்று நீர் மாசுபட்டதே காரணம்
சாத்தூர்:சாத்தூர் அருகே பெரிய கொல்லப்பட்டியில் வாந்தி, வயிற்றுப் போக்குக்கு காரணம் கிணற்று நீர் மாசுபட்டதே காரணம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். பெரியகொல்லப்பட்டி, தெற்கூர்,தெற்குப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரிய கொல்லப்பட்டியில் உள்ள கிணற்றை நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். மே 21ல் கிணற்று குடிநீரை...
தமிழகம்
ஊனமுற்றோருக்கு தொழில் கடன்
விருதுநகர்:ஊனமுற்றவர்களுக்கு குறைந்த வட்டியில் தொழில் கடன் வழங்க மத்திய கூட்டுறவு வங்கிக்கு அரசு உத்தரவிட் டுள்ளது.40 சதவீதம் ஊனமுற்றவராகவும், 18 முதல் 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் நகர்புறத்தை சேர்ந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், கிராமங்களில் இருப்போருக்கு 1.50 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும்....
தமிழகம்
மானிய விலையில் கொள்கலன் விவசாயிகளுக்கு வழங்கல்
ராஜபாளையம்:நெல் உள்ளிட்ட தானியங்களை, விதைகளை சேமித்து வைப்பதற்காக முந்தைய காலங்களில், மண் அல்லது மரத்தால் ஆன குதிர்களை விவசாயிகள் உபயோகித்தனர்.இதில் சேமிக்கப்படும் பொருட்களை தேவைக்கு ஏற்ப, எடுத்து பயன்படுத் துவர். நாளடைவில், வீடுகளில் போதிய இடமின்மையால் குதிர் வைத்திருக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ் சமாக குறைந்து வருகிறது....
தமிழகம்
கோபியில் 50 நிமிடம் இடி, மின்னலுடன் பலத்த மழை
கோபிசெட்டிபாளையம்: கோபியில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. கோபியில் கடந்த இரண்டு மாதமாக கடும் கோடை வெப்பம் நிலவியது. 15 நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வதைத்தது. வங்கக்கடலில் தோன்றிய "லைலா' புயல் காரணமாக மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் நல்ல வெயிலடித்தது. மாலை 5 மணியளவில் திடீரென பலத்த ...
தமிழகம்
இருவர் பலி
வெள்ளகோவில்: வெள்ளகோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (22). பைக்கில் நேற்று முன்தினம் முத்தூர் ரோட்டில் சென்றார். பஸ்ஸை முந்த முயன்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதி பலியானார்.* சீவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். முத்தூர் ஊடையம் ரங்கசாமியுடன் மொபெட்டில் சென்றார். குழலிபாளையம் - முத்தூர் ரோட்டில் பங்களாத்தோட்...
தமிழகம்
தம்பி காதல் திருமணம் அண்ணன் குடும்பம் கடத்தல்
சாத்தூர்:சாத்தூர் அருகே தம்பி காதல் திருமணம் செய்ததால், அண்ணன் குடும்பத்தை பெண்ணின் உறவினர்கள் கடத்தினர். தப்பி வந்தவர் மனைவி, குழந்தையைமீட்டு தருமாறு போலீசில் புகார் செய்தார்.சத்திரப்பட்டியை சேர்ந் தவர் முத்துராஜ்(27). இவரது மனைவி வேலம்மாள் (24). இவர்களது 11 மாத குழந்தை அன்புராஜ் ஆகிய மூவரும் மே 11ம் தேதி சத்திரப்பட்ட...
தமிழகம்
சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
கொடுமுடி: நெடுஞ்சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்யவேண்டும். உட்கோட்டத்தில் பணியிட மாறுதல் தர வேண்டும், கொடுமுடி உட்கோட்ட பணியாளர்களுக்கு விடுமுறை தருவதில் உள்ள குளறுபடியை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலிய...
தமிழகம்
கோபி பகுதியில் பப்பாளி சாகுபடி தீவிரம்
கோபிசெட்டிபாளையம்: கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பப்பாளி சாகுபடி தொடங்கியுள்ளது. மாவு பூச்சி தாக்குதலால் ஏற்பட்ட உற்பத்தி குறைவால், பப்பாளிக்கு அதிக விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விவசாய பகுதியான கோபியில் நெல், மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிட்டு வந்தனர். ஐந்து ஆண்டாக விவசாய...
தமிழகம்
மின்சாரம் தாக்கி துப்புரவு ஊழியர் பலி
கவுந்தப்பாடி: மின்சாரம் தாக்கி துப்புரவு தொழிலாளி பலியானார். கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக கவுந்தப்பாடி அண்ணா காலனியை சேர்ந்த மணி (28) 10 ஆண்டாக பணிபுரிந்தார். நேற்று மதியம் 3 மணியளவில், குட்டிபாளையம் வெங்கமேடு கருப்புசாமி கோவில் அருகேயுள்ள தரைமட்டத் தொட்டியை சுத்தம் செய்தார். அ...
தமிழகம்
வாய்க்காலில் மிதக்கும் உடல்களால் துர்நாற்றம்
கவுந்தப்பாடி: வாய்க்காலில் மிதக்கும் ஆண், பெண் உடல்களை மீட்க போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளைம் - ஆண்டிபாளையம் ரோட்டில் வண்ணாமடை அருகேயுள்ள அண்ணமார் கோவிலுக்கு பின்புறம் தடப்பள்ளி வாய்க்கால் ஓடுகிறது. தற்போது பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், வ...
தமிழகம்
கல்வி பாதுகாப்பு குழு உண்ணாவிரதம்
ஈரோடு: கல்வி பாதுகாப்புக்குழு சார்பில் ஈரோட்டில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. பல்கலைக்கழக மானியக்குழு ஈரோடு கலைக்கல்லூரிக்கு வழங்கிய நிதியை கல்லூரி வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறு செய்த கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குழு அமைப்பாளர் செந்தாமரை தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு....
தமிழகம்
வீரப்பம்பாளையத்தில் வாலிபர் மர்மக்கொலை
ஈரோடு: ஈரோடு வீரப்பம்பாளையம் அருகே கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஈரோடு வீரப்பம்பாளையம் பிரிவு இரட்டை வாய்க்கால் பாலத்துக்கு அருகே பெட்ஷீட்டால் சுற்றப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது கை, கால்கள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன. தலையில் அரிவாளால் ...
தமிழகம்
உளுந்து, உளுந்தம் பருப்பு விலை உயர்வு
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் தஞ்சாவூர் உளுந்து விலை மூடைக்கு 500 ரூபாய், நயம் உளுந்தம் பருப்பு 200 ரூபாய் உயர்ந்துள்ளது.விருதுநகரில் கடந்த வாரம் தஞ்சாவூர் உளுந்து விலை மூடைக்கு 5,400 ரூபாயிலிருந்து 5,500 வரை இருந்தது. தற்போது 5,900 ரூபாயாக உள்ளது. 5,300லிருந்து 5,400 வரை இருந்த பர்மா உளுந்து 5,800 ஆகவும், 5,100...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவு அறிய வசதி
ஈரோடு: எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஈரோடு பி.எஸ்.என்.எல்., சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு முடிவு வெளியாகும் நாளன்று மாணவர்கள், 0424 - 225 25 25 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மார்க் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம்
11 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிய 11 எஸ்.ஐ.,க்கள் நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.கோபி எஸ்.ஐ., ரவி அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மொடக்குறிச்சி எஸ்.ஐ., பிரேமலதா ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சென்னிமலை எஸ்.ஐ., சலைராம் சக்திவேல் பர்கூருக்கும், கொடுமுடி எஸ்.ஐ., செந்தில்குமார் சூர...
தமிழகம்
ரயில்வே ஸ்டேஷனில் போலீஸார் கடும் சோதனை
ஈரோடு: ரயில்வே ஸ்டேஷன்களுக்கு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று போலீஸார் பயணிகளிடம் மெட்டல்டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்து அனுப்பினர். சென்னை சென்ட்ரல் உட்பட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக, தென்னக ரயில்வே மேலாளருக்கு மர்ம ஃபோன் வந்தது. இதன்படி, தமிழகத்தில் உள்ள முக்கி...
தமிழகம்
ப்ளஸ் 2 விடைத்தாள் நகல்: 2,350 பேர் விண்ணப்பம்
ஈரோடு: ப்ளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு 2,350 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 160 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 668 மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். 19 ஆயிரத்து 431 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆண்டுதோறும் மாணவர்கள் தங்கள் விடைத்தாளின் உண்மை நிலை அறிய மறுகூட்டலுக்கும், விடைத்தாள் நகல் கேட்டும் விண்ணப்பம் செ...
தமிழகம்
முதல் 10 மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி: கலெக்டர்
ஈரோடு: பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெறும் பத்து பேர், சிறந்த தனியார் பள்ளியில் படிப்பதற்கான செலவை அரசு ஏற்கவுள்ளது. ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் கூறியதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்...
தமிழகம்
ஈரோட்டில் தொடரும் தி.மு.க., பேனர் கிழிப்பு
ஈரோடு: ஈரோடு பகுதியில் தொடரும் பேனர் கிழிப்பு சம்பவத்தால் தி.மு.க., எதிர் கோஷ்டியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க., இரு கோஷ்டியாக செயல்படுகின்றனர். செம்மொழி மாநாட்டு வரவேற்பு பேனர்களை இரு கோஷ்டிகளும் வைத்துள்ளனர். மாவட்ட துணை பொறுப்பாளர் சச்சிதானந்தம் கோஷ்டியினர் வைக்கும் செம்மொழி மாநாட்டு பேனர்...
தமிழகம்
ஈரோட்டில் பந்த்: வீடு வீடாக பிட்நோட்டீஸ்
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் மேம்பாலம் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு லட்சம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மேம்பாலம் பணி நடக்கிறது. மேம்பால பணியால் பெரிய மாரியம்மன் கோவிலில் 15 அடி தூரம் வரை இடிக்கப்படுவதாக நெஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளன...
தமிழகம்
பயங்கரவாத எதிர்ப்பு தினம்
விருதுநகர்:அல்லம்பட்டியில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட் டது. இளைஞர் காங்., விருதுநகர் எம்.பி., தொகுதி பொதுச்செயலர் பிச்சைக் கனி, அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி பொதுச்செயலர் பெருமாள்சாமி, பிரதிநிதி அழகர்சாமி பங்கேற்றனர். விருதுநகர் சட்டசபை தொகுதி தலைவர் ராஜ்குமார், செயலர் மாரிக்கனி உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
வெடி விபத்து: 2 பேர் காயம்
விருதுநகர்: துலுக்கப்பட்டியில் அலங்கார் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கெமிக்கல் அறையில் நேற்று காலை 9 மணியளவில் தச்சு வேலை நடந்தது. அப்போது ஊழியர் ஒருவரின் சுத்தியல் கைதவறி ரசாயன மூடை மீது விழுந்தது. அதன் அதிர்வில் மூடையிலிருந்த மருந்து தீப்பிடித்து வெடித்தது. இதில் அந்த அறை சேதமடைந்தது. அங்கு பணிபுரிந்த சிந்தப்பள்ளி காளிய...
தமிழகம்
நகை பறிப்பு
விருதுநகர் மதுரை ரோட்டில் சிவகாமி நகரைச் சேர்ந்தவர் வசந்தா(47). மின்வாரிய உதவி இன்ஜினியரான இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது பின்னால் வந்த 30 வயது மதிக்கத்தக்கவர், வசந்தாவின் கழுத்திலிருந்த ஒன்பது பவுன் சங்கிலியை பறித்துச் கொண்டு சிறிது தூரத்தில் இன்னொருடன் சேர்ந்து பைக்கில் ஏறி தப்பின...
தமிழகம்
வேன் மோதி ஏட்டு பலி
விருதுநகர் பஜார் ஏட்டாக இருந்தவர் ராஜாக்கனி(50). நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் ஆயுதப்படை குடியிருப்பு விலக்கு அருகே சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மகேந்திரா மேக்ஸ் வேன் மோதியதில் பலியானார்.
தமிழகம்
டூ வீலர் மீது கார் மோதி சூப்பர்வைஸர் படுகாயம்
மோகனூர்: பைக் மீது கார் மோதிய விபத்தில், தனியார் கெமிக்கல் நிறுவன சூப்பர்வைஸர் படுகாயமடைந்தார்.மோகனூர் அடுத்த குமரிபாளையம் பஞ்சாயத்து மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் அருணகிரி (40). அவர் திருச்சி மாவட்டம் மேய்க்கல்நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ...
தமிழகம்
வாலிபர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: மம்சாபுரத்தை சேர்ந்தவர் பொன்னழகு(22). இவர், குளிப்பதற்காக நேற்று மதியம் 1 மணியளவில் ஹெல்மெட் அணியாமல் டி.வி. எஸ்., மொபட்டில் சென்றார். வேப்பங்குளம் கண்மாய் அருகே, நிலை தடுமாறி பனை மரத்தின் மீது மோதினார். தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
தமிழகம்
செபஸ்தியார் ஆலயத்தில் மே 25ல் தேர்த்திருவிழா
மோகனூர்: புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா மே 25ம் தேதி நடக்கிறது. மோகனூர் புதுத்தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 24ம் தேதி மாலை 6.30 மணிக்கு வேண்டுதல் தேர்பவனி நடக்கிறது. மே 25ம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலியும், இரவு 7 மணிக்கு சிறப்பு பொங...
தமிழகம்
மே 30ல் நாட்டுப்புற கலை விழா
நாமக்கல்: ராமகிருஷ்ணா கானசபா மற்றும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், தமிழிசை விழா, கிராமிய நாட்டுப்புற கலை விழா மே 30ம் தேதி நாமக்கல் எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில் நடக்கிறது.சபா தலைவர் வக்கீல் வேல் தலைமை வகிக்கிறார். செயலாளர் நாதமணி வரவேற்கிறார். மாவட்ட எஸ்.பி., பாரியின் மனைவி லதா குத்துவிளக்கு ஏற்றி துவக்...
தமிழகம்
கல்லூரி மாணவர்கள் அறையில் லேப்-டாப் திருட்டு: 2 பேர் கைது
ராசிபுரம்: கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து லேப்-டாப், 11 செல்ஃபோன்களை திருடிய இரு வாலிபர்களை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர். ராசிபுரம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் மாணவர்கள் தங்கி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள அறைகளில் புகுந்து ம...
தமிழகம்
அண்ணாமலைப்புதூர் பள்ளி: 94 சதவீதம் தேர்ச்சி
திருநெல்வேலி:அண்ணாமலைப்புதூர் மீனாட்சி செல்லையா நினைவு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.அண்ணாமலைப்புதூர் மீனாட்சி செல்லையா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 62 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர் செல்வராஜ...
தமிழகம்
கலிங்கப்பட்டி பகுதியில்நாளை மின்தடை
திருநெல்வேலி:கலிங்கப்பட்டி பகுதியில் நாளை (24ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சங்கரன்கோவில் மின்செயற் பொறியாளர் அசோக்குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கலிங்கப்பட்டி உபமின் நிலையத்தில் நாளை (24ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று இந்த உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோக...
தமிழகம்
சாக்கடை தேங்கிய ரோட்டில் மண் போடும் பணி தீவிரம்
தென்காசி;தென்காசியில் தற்காலிக சர்வீஸ் ரோட்டில் தேங்கி கிடக்கும் சாக்கடையை அப்புறப்படுத்த அப்பகுதியில் மண் போடும் பணி நடந்தது.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் பணி நடப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. முறையான சர்வீஸ் ரோடு அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர...
தமிழகம்
புளியங்குடி அருகேகள் விற்றவர் கைது
புளியங்குடி:புளியங்குடி அருகே கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.புளியங்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சுப்பிரமணியபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பனங்காட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் சுப்...
தமிழகம்
புளியங்குடியில் மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
புளியங்குடி:புளியங்குடியில் அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்காக மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புளியங்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுப்பிரமணியபுரம் மெயின்ரோட்டில் வந்த டிராக்டரை நிறுத்தி அதன் டிரைவர் அய்யனார் (42) என்பவரிடம் விசாரண...
தமிழகம்
பிற்பட்டோர் விடுதி மாணவர் சேர்க்கை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதியில் மாணவ, மாணவியரின் சேர்க்கை நடக்கிறது. ஈரோடு கலெக்டர் சுடலைக்கண்ணன் அறிக்கை: விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விடுதிக்கும் அவர்கள் வச...
தமிழகம்
செங்கோட்டை-ஈரோடு ரயிலை இயக்க சமாதான கூட்டத்தில் வலியுறுத்தல்
தென்காசி:செங்கோட்டை-ஈரோடு ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.செங்கோட்டையிலிருந்து ஈரோட்டிற்கு ரயில் இயக்கப்படும் என 2008-09 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலை உடனே இயக்க வேண்டும். பயணிகள் நலன் கருதி பொதிகை சூப்பர் பாஸ்ட் ரயிலில் கூடுதலாக 3 சாதாரண பெட்டி...
தமிழகம்
கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு: சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ஞான விநாயகர், சரஸ்வதி மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சென்ற 17ம் தேதி முதற்கால யாக பூஜை நடந்தது. 18ம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தத...
தமிழகம்
வாலிபரை வெட்டி கொலை முயற்சி: ஒருவர் கைது
வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.வீரகேரளம்புதூர் அருகில் உள்ள ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (33). டெலிபோன் பூத் வைத்துள்ளார். இதே ஊரை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). வக்கீல் தொழில் செய்து வருகிறார். முன்விரோதம் காரணமா...
தமிழகம்
விலை விபரமின்றி விற்பனை: 137 கடைகள் மீது நடவடிக்கை
ஈரோடு: விலை விபரம் குறிப்பிடாத பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 137 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தரப்படுத்தப்பட்ட எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதியின்படி, பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் மீது தயாரிப்பாளர், பேக்கர் முழு முகவரி, நிகர எடை, அளவு, விற்பனை வில...
தமிழகம்
முதல்வரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு
திருவேங்கடம்:தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவேங்கடத்தில் நேற்று முன்தினம் இரவு மதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில்சம்பத் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக திருவேங்கடம் டவ...
தமிழகம்
வெறிநாய் கடித்து 3 ஆடுகள் சாவு
ஆலங்குளம்:ஆலங்குளத்தில் வெறிநாய் கடித்து 3 செம்மறி ஆடுகள் இறந்தன.ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி வைத்திலிங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து. இவர் தனது வீட்டில் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் 3 ஆடுகளை நேற்று அதிகாலை வெறிநாய் கடித்து குதறியது. இதில் 3 ஆடுகளும் இறந்தன.
தமிழகம்
ஆலங்குளத்தில் ராஜிவ் நினைவு நாள்
ஆலங்குளம்:ஆலங்குளத்தில் ராஜிவ் நினைவு நாளை முன்னிட்டு காங்., கட்சியினர் எம்.பி., ராமசுப்பு தலைமையில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.ஆலங்குளம் நகர காங்., சார்பில் ராஜிவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் காமராஜர் சிலை அருகே ராஜிவ் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. நெல்லை எம்.பி., ராமசுப்பு மாலை அண...
தமிழகம்
தமிழ்நாடு பஞ்சாலை நிறுவன தொழிலாளர் போராட்டம் வாபஸ்
சிவகிரி: கூலி உயர்வு கேட்டு தமிழ்நாடு பஞ்சாலை நிறுவனத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. சிவகிரியில் தமிழ்நாடு பஞ்சாலை நிறுவனத்தில் 46 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான சீருடைகள், பள்ளி மாணவ, மாணவியர்க்கு தேவையான இலவச துணிகள் இங்கு உற்பத்தி செய்யப்...
தமிழகம்
நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,செயலாளர் இல்ல திருமண விழா
பாவூர்சத்திரம்:நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் ஆவுடையானூர் ரத்தினராஜ் - ரெஜினாபுஸ்பம் இல்லத் திருமண விழா நடந்தது.நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,செயலாளர் ஆவுடையானூர் ரத்தினராஜ் - ரெஜினாபுஸ்பம் மகன் பாவூர்சத்திரம் லிப்ரா மொபைல்ஸ் ஆனந்த், குழத்துப்புழா நவமணிநாடார் - சுந்தரி மகள் சுமித்ரா ஆகியோர் திருமணம் வி.கே.மாதா ஆடிட்...
தமிழகம்
சிவசைலபதி பரமகல்யாணி அம்பாள் வசந்த அழைப்பு விழா துவக்கம்
ஆழ்வார்குறிச்சி:கீழாம்பூரில் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாள் வசந்த அழைப்பு விழா துவங்கியது.சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிவசைலபதி பரமகல்யாணி அம்பாள் கோயில். பங்குனி மாதம் கடைசிநாள் ஆழ்வார்குறிச்சியில் தேர்திருவிழா நடக்கும். பரமகல்யாணி அம்பாள் ஆம்பூர் அக்ரஹாரம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. எனவ...
தமிழகம்
தகவல் அறியும் உரிமைசட்ட கமிஷனருக்கு வரவேற்பு
தென்காசி:நெல்லை மாவட்டத்திற்கு வந்த மாநில தகவல் அறியும் உரிமை சட்ட அமைப்பின் கமிஷனருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு மாநில தகவல் அறியும் உரிமை சட்ட அமைப்பின் கமிஷனர் பெருமாள்சாமி நெல்லைக்கு வந்தார். அவருக்கு மாவட்ட எக்ஸ்னோரா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, செயலா...
தமிழகம்
வி.சி., பிரமுகரை கைது செய்ய முயன்ற எஸ்.ஐ.,க்கு அடி
ஓமலூர்: ஓமலூரை அடுத்த காமலாபுரம் ஏர்போர்ட் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். இவர் மீது ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.  ஒரே நபர் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் ஓமலூர் போலீஸார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டினர். இதையறிந்த வசந்த்  ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் முடிவு
சேலம்: சேலம் மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் கட்சியினர் குடும்பத்துடன் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சேலம் மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்,  தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் சூடாமணி தலைமை வகித்தார். மாவட்ட செயல...
தமிழகம்
விருதுநகர் வியாபாரி கைது கூட்டுறவு சங்கத்தில் ரூ.39 லட்சம் மோசடி
ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 39 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய  விருதுநகர் பருத்தி வியாபாரி கைது செய்யப்பட்டார். ஆத்தூர் புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. ஆண்டு தோறும் பருவ காலத்தில் பருத்தி, மஞ்சள், கொப்பரை தேங்காய், எள் உள்ளிட்ட தான...
தமிழகம்
தண்ணீர் பந்தல் திறப்பு விழா
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் த.மு.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் அஜீஸ்கனி முன்னிலையிலும் நடந்தது. முதுகுளத்தூரில் காந்தி சிலை, தேரிருவேலி விலக்கு ரோடு, பள்ளிவாசல் பள்ளி எதிரில், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை என ஐந்து இடங்களில் தண்ணீர் பந்தல்...
தமிழகம்
பாவூர்சத்திரம் காமராஜர் சிலைக்கு பா.ஜ.,துணைத் தலைவர் மாலை அணிவிப்பு
பாவூர்சத்திரம்:மாநில பா.ஜ., துணைத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாவூர்சத்திரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பாவூர்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன் பா.ஜ., மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியேற்றி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மாரியப்பன், மாவட்ட பிரசார அணி அருள்செல்வன், மாவட்ட...
தமிழகம்
ப்ளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவு சேலத்தில் 4 மையங்களில் ஏற்பாடு
சேலம்: சேலம் மாவட்டத்தில் ப்ளஸ் 2 பதிவு செய்யும் மாணவர்களுக்கு, சேலம், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர் ஆகிய நான்கு மையங்களில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பெருமாள் கூறியதாவது:ப்ளஸ் 2 பதிவு செய்ய வருபவர்கள் ஏற்கனவே தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ப...
தமிழகம்
தென்காசியில் அதிமுக.,தெருமுனை பிரசாரம்
தென்காசி:திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தென்காசியில் நேற்று அதிமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.அதிமுக இளைஞரணி சார்பில் மாவட்டம் முழுவதும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்தும், அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்தும், விலைவாசி உயர்வினை கண்டித்தும் தெருமுனை பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. ...
தமிழகம்
ரத்ததான முகாம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஸ்ரீ ராமநாத ஐ.டி.ஐ., சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் கல்லூரி முதல்வர் கார்த்திக்குமார் தலைமையில் நடந்தது. இளநிலை பயிற்சி அலுவலர் முனியாண்டி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ரவிச்சந்திரராமவன்னி தொடங்கி வைத்தார். அரசு தலைமை மருத் துவமனை ரத்த வங்கி அதிகாரி சகாய ஸ்டீபன்ராஜ் தலைமையில் ரத்தம் சே...
தமிழகம்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சேலம்: சேலம் மாநகராட்சி பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நேற்று மாநகராட்சி சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சேலத்தில் ஏழு மேல்நிலைப்பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகளாக உள்ளன. இதில் நடந்து முடிந்த ப்ளஸ் 2 தேர்வில் 1,353 பேர் பங்கேற்றனர். இதில் 1,109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சத...
தமிழகம்
ஆத்தூரில் கனமழை
ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஐந்து மணி நேரம் மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பரவலாக மழை பெய்தது. ஐந்து மணி நேரம் வரை மழை பெய்ததில் பெத்தநாயக்கன்பாளையம், ஏத்த...
தமிழகம்
அரபுநாட்டில் டவர் அமைக்கும்போது தவறி விழுந்து சுயநினைவை இழந்த ஓட்டப்பிடாரம் வாலிபர்
திருநெல்வேலி:அரபுநாட்டில் டவர் அமைக்கும்போது தவறி விழுந்து சுயநினைவை இழந்த ஓட்டப்பிடாரம் வாலிபருக்கு பாளை.ஐகிரவுண்ட் ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கொத்தாலி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணபெருமாள்(33). இவரது மனைவி சண்முக லட்சுமி(30). இவர்களுக்கு வேலுத்தாய்(8), முருகன...
தமிழகம்
காவிரி நீர் திட்டத்தில் தொய்வு: ஏர்வாடியில் குடிநீர் தட்டுப்பாடு
ஏர்வாடி:ஏர்வாடியில் காவிரி குடிநீர் திட்ட பணிகள் முடிவடையாததால்குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏர்வாடி தர்காவிற்கு தினம் 100க்கணக்கான சுற்றுலாபயணிகள் வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப் பாட்டால் விரக்தியடைந்துள்ளனர். ஊராட்சியிலிருந்து காலை,மாலை இரு முறை நீர் வினியோகம் செய்யப்பட்டும் நிலத்தடி நீர...
தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் ஜூன் 10ம் தேதி ஸ்ரீருத்ரைகாதிசினி மஹாயக்ஞம்
திருநெல்வேலி:நெல்லை நெல்லையப்பர் கோயிலில் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி ஸ்ரீருத்ரைகாதிசினி மஹாயக்ஞம் நடைபெற உள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் ஸ்ரீருத்ரைகாதிசினி மஹாயக்ஞ அறக்கட்டளை நிர்வாகிகள் மகாலிங்கம், வீரராகவ சாஸ்திரிகள் மற்றும் ராமசாமி ஆகியோர் அனுப்பிள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:ஸ்ரீருத்திரைகாதிசினி மஹாயக்ஞ அறக்...
தமிழகம்
கொழுந்தியாளை அடைய அக்கா கணவர் முயற்சி தோழனை கணவனாக்கினார் கல்லூரி மாணவி
சேலம்: சகோதரி கணவர், தன்னை அடைய முயற்சி செய்வதை அறிந்த இளம்பெண், கல்லூரி தோழனை திருமணம் செய்து கொண்டார். எதிர்ப்பு தெரிவித்த சகோதரி கணவரால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார். சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம். அவரது மகள் பிரபா(19), அயோத்தியாப்பட்டணம் அருகே...
தமிழகம்
இஸ்கான் கோயிலில் 26ம் தேதிநரசிம்ம அவதாரத் திருவிழா
திருநெல்வேலி:நெல்லை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் 27ம் தேதி நரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெற உள்ளது.விழாவில் லெட்சுமி நரசிம்மருக்கு மகா அபிஷேகம், விசேஷ ஆராதனைகள் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிரார்த்தன...
தமிழகம்
தற்கொலை
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தம்மம்பட்டி ஒன்பதாவது வார்டு அருந்ததியர் தெ ருவைச் சேர்ந்தவர் மலர் (40). மலருக்கும், அதேபகுதியை சேர்ந்த மணிசேகர் என்பவருக்கும்  கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மணிசேகர் மனைவி தவமணி இதை கண்டித்தார்.   இந்நிலையில் நேற்று முன்தினம...
தமிழகம்
ஆத்தூர் ஸ்ரீ சாரதி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ஆத்தூர்: ஆத்தூர் அருகில் உள்ள நரசிங்கபுரத்தில் செயல்படும் ஸ்ரீ சாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ப்ளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆத்தூர் நரசிங்கபுரம் ஸ்ரீ சாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 77 மாணவ, மாணவிகள் ப்ளஸ்2 தேர்வு எழுதினர். அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ள...
தமிழகம்
கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு வேளாண் அமைச்சரிடம் மனு
சேலம்: கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண கோரி வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் சேலம் நார்பட்டு ஜோடி புரி உற்பத்தியாளர்கள் மனு அளித்தனர். சேலம் நார்பட்டு ஜோடிபுரி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூலி உயர்வு வேண்டி நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரகம் வாரியாக வியாப...
தமிழகம்
ஹவுசிங் போர்டில் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் காயம்
சேலம்: சேலம் அன்னதானப்பட்டியில் ஹவுசிங் போர்டு வீட்டின் முன் பகுதியில் உள்ள கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயம் அடைந்தனர். சேலம் அன்னதானப்பட்டி அல்லிக்குட்டை காலனியில் உள்ள ஹவுசிங் போர்டு "பி' பிளாக் செல்லும் நுழைவு வாயிலின் மேல்பகுதியில் உள்ள கைப்பிடி சுவர் நேற்று மாலை இடிந்து விழுந்தது. படிக்கட்...
தமிழகம்
நல்லம்மாள்புரத்தில் நலத்திட்டப் பணிகள்: அமைச்சர் பூங்கோதை திறப்பு
திருநெல்வேலி:நல்லம்மாள்புரம் ஆர்எஸ்ஏ நகர் குடிநீர் திட்டம், கசிவு நீர் குட்டை, பால் கறவைக் கூடம் திறப்பு விழா நடந்தது.மானூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட பஞ்., கவுன்சிலர் அன்பழகன், தென்கலம் பஞ்., மன்றத் தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் பூங்கோ...
தமிழகம்
மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 4,300 கனஅடியாக உயர்வு
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கோடைமழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 4,300 கனஅடியாக அதிகரித்தது. தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சிலநாட்களாக கோடைமழை தீவிரம் அடைந்துள்ளது.  சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 18ம் தேதி விநாட...
தமிழகம்
விபத்தில் 3 பேர் பலி
மேட்டூர்: மேச்சேரி அருகே நேற்று இரவு சாம்பல் ஏற்றி வந்த லாரியும் பைக்கும் மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். மேச்சேரி, பாணாபுரம் அடுத்த குதிரைக்காரன் புதூரை சேர்ந்த பார்த்திபன் (19), சதீஷ்குமார் (18),  ஜெகதீசன் (15). மூவரும் நேற்று இரவு 9.30 மணி அளவில் ஒரு பைக்கில் செங்காட்டூர் வழியாக மேச்சேரி நோக்கி சென்று கொண்டிரு...
தமிழகம்
பேட்டையில் ராஜீவ் நினைவு தினம்
திருநெல்வேலி:பேட்டையில் காங்., சார்பில் ராஜீவ்காந்தி 19ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.மயிலை கொம்பையா தலைமை வகித்தார். வேலாயுதம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பண்டாரம், அய்யம்பிள்ளை, குத்தாலம், தென்னம்பாண்டி, மணியன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.வன்முறை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை தொண்டர...
தமிழகம்
எஸ்.ஆர்.கே., பள்ளி100% தேர்ச்சி
சேலம்: சேலம் கந்தம்பட்டியில் செயல்படும் எஸ்.ஆர்.கே., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ப்ளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் கந்தம்பட்டி திருவாக்கவுண்டனூர் பைபாஸில் செயல்படும் எஸ்.ஆர்.கே., மெட்ரிக் மேல்நிலை 116 மாணவ, மாணவிகள் பள்ளியில் ப்ளஸ்2 தேர்வு எழுதினர். அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி ...