category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் துவக்கம்
அரியலூர்: பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் அரியலூரில் நேற்று முன்தினம் துவங்கி நடக்கிறது. தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கான பஞ்.,யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 2010ம் ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி...
தமிழகம்
முதியவர் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை
அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டிராதீர்த்தம் கீழத்தெருவை சேர்ந்த, வெள்ளையன் மகன் கணேசன்(77). இவரது மனைவி நீலாவதி(65), திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். முதியவரான கணேசனை கண்டிராதீர்த்தம் கிராமத்திலுள்ள அவரது மருமகள் பராமரித்து வந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி திருப்பூரில் ...
தமிழகம்
ஆனைவாரி ஓடை நீர்வள திட்டத்தில் பணியாற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு அழைப்பு
அரியலூர்: ஆனைவாரி ஓடை நீர்வள திட்டத்தில் பணியாற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை:அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், ஆனைவாரி ஓடை உப வடிநில பகுதி நீர்வள நில வள திட்டத்தின்கீழ், செந்துறை தாலுகா, வஞ்சினபுரம் தொகுப்பு கால்நடை மருந்தக பிர...
தமிழகம்
அரியலூரில் ஜூலை 15ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
அரியலூர்: அரியலூரில் ஜூலை 15ம் தேதி நடக்கும் ஓய்வூதியர் குறைதீர்நாள் கூட்டத்தை முன்னிட்டு, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட குறைகளை விண்ணப்பிக்கலாம்.இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை:அரியலூர் மாவட்டத்தில் 2010 ஜூலை மாதத்துக்கான ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம், 2010 ஜூலை 15ம் தேதி கா...
தமிழகம்
டாக்டரை கட்டி போட்டு 100 பவுன் நகை ரூ.1.50 லட்சம் கொள்ளை: கும்பல் அட்டகாசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் டாக்டரை கட்டிப்போட்டு 100 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளைடித்து சென்ற நான்கு பேர் கொண்ட மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் வசிப்பவர் டாக்டர் சுப்பராயன் (84). இவரது மனைவி பரிமளா. இவர்களது  மகன் டாக்டர் செந்தில...
இந்தியா
போயிங் நிறுவனம் தன் குழுவை அனுப்பியது
புதுடில்லி: மங்களூரு விமான விபத்து நடந்த இடத்துக்கு, தொழில்நுட்ப ரீதியில் உதவி புரிவதற்காக, போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனம், ஒரு குழுவை அனுப்பியுள்ளது. மங்களூரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், போயிங்-737 ரக விமானமாகும். போயிங்-737 லிருந்து 800 வரையிலான விமானங்கள், 1998 முதல் விமானச் ...
தமிழகம்
வேடசந்தூர் ஒன்றிய கூட்டம்
வேடசந்தூர்:வேடசந்தூர்ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் நடராசன் தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையாளர்கள் துரைராஜ், சாம்.சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். சமத்துவபுரப்பணிகள் முடிவுற்ற நிலையில் சமத் துவபுர திட்ட கணக்கில் போதிய நிதி இல்லாததாலும் திருத்திய நிர்வாக அனுமதிக்கு ஏற்ப பொது நிதியிலிருந்து ஒரு லட்சம் கடனாக வழங்குவது. ...
தமிழகம்
பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன்
கீரனூர்:பழநி சப் டிவிஷனில் கீரனூர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. தொப்பம்பட்டி ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டேஷன் கட்டப்பட்டது. இன்று கட்டடத்தின் பல பகுதிகள் சேதமாகியுள் ளது. ஸ்டேஷனின் உட்புறம் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுகின்றன. சில போலீசார் காயமும் அடைந்துள்ளனர். கட்டடத்தின் வெளிபுறமும் அதேநிலைதான். ஸ்டே ஷன் ...
தமிழகம்
கார் டிரைவர் அடித்துக் கொலை காதலியின் தந்தை கைது
வேடசந்தூர்:வேடசந்தூர் அருகே கார் டிரைவரை கொன்ற காதலியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.வேடசந்தூர் அருகேயுள்ள நத்தப்பட்டியில் கார் டிரைவர் வடிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்தார்.வேடசந்தூர் போலீசார் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த வடிவேலின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையின் பின்புறம் த...
தமிழகம்
சாயப்பட்டறை தொழிலாளர் கூலி பிரச்னையால் ஸ்டிரைக் நீடிப்பு
சின்னாளபட்டி:சின்னாளபட்டி சாயப் பட்டறை தொழிலாளர் கூலி உயர்வு பிரச்னையில் தொழிலாளர் நலத்துறைஆணையம் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். சின்னாளபட்டியில் 40க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இவற்றில் 500க்கும்மேற்பட்ட தொழிலாளர் கள் உள்ளனர். இவர்கள் கூலி உயர்வு கோரி கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இவர்க...
தமிழகம்
எலியை ஒழிக்க தகுந்த பருவம் விவசாய அதிகாரி ஆலோசனை
வடமதுரை;வடமதுரை வட்டாரத்தில் நீர் இருப்பு இல்லாமல் சாகுபடியற்ற நிலங்களில் ஒரு சில முன்னெச்சரிக்கை பணிகள் செய்ய ஏற்ற தருணம் இது. விவசாயத்தில் அதிக அளவில் இழப்பினை ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியமானவை. எலிகள் 50 முதல் 100 கிராம் தானியத்தை உணவாக உண்ணுவதற்கு சுமார் ஒரு கிலோ முதல் 1.25 கிலோ வரை சேதம் செய்கின்றன. இதனாலேயே 10...
தமிழகம்
நேரடி உளுந்து சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? சென்னை குடிநீருக்காக அதிகாரி மறைமுக எதிர்ப்பு
கடலூர்: உளுந்து நேரடி விதைப் புக்கு தண்ணீர் விடவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை தொழில் நுட்ப ரீதியாக பயன்படுத்த முடியாது என வேளாண்மை உதவி இயக் குநர் கூறியதால் குறைகேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. கடலூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயி ரவீந் திரன் பேசும்போது, "நெல் அறுவடைக்கு மாவட் டத்தி...
தமிழகம்
சிதம்பரம் பகுதியில் ராஜிவ்காந்தி நினைவு தினத்தையொட்டி ரத்ததானம்
சிதம்பரம்: ராஜிவ்காந்தி நினைவு தினத்தையொட்டி சிதம்பரத்தில் காங்., கட்சியினர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர். இளைஞர் காங்., மற்றும் நகர காங்., கமிட்டி சார்பில் நடந்த நிகழ்ச் சிக்கு சிதம்பரம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்.,தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பாபு சந்திரசேகர், நாகராஜ், மூப்பனார் ...
தமிழகம்
வழிப்பறியை தடுக்க தனிப்படை
பட்டிவீரன்பட்டி:பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி கொள்ளையர் களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.வத்தலக்குண்டு-திண்டுக்கல் ரோட்டில் இரவில் பெண்களை காட்டி வாகனங்களில் கொள்ளை அடிக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் தொடர்ந்து மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. பட்டிவீரன்பட்டி, செம்பட்டி போலீசார் கொள்ளையர்களை பிடிக்க...
தமிழகம்
வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடம் புவனகிரி பள்ளியில் திட்டம்
புவனகிரி: புவனகிரி சுப்ரமணியபாரதியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளா ளர் டாக்டர் அன்பழகன் பேசுகையில், "இப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு எல்.சி.டி., மூலம் வகுப்புகள் நடத் தப்...
தமிழகம்
வடமதுரையில் தொடர் திருட்டு
வடமதுரை:வடமதுரையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் திருட்டுக்கள் நடந்துள் ளன.காணப்பாடி, புதுப்பாளையம், சித்தூர், ஆண்டிமாநகர், வடமதுரை அண்ணாநகர், ரெட்டியப்பட்டி பகுதியில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை மற்றும் பணப்பையை பறித்து சென்ற சம்பவங் கள் நடந்தன. லக்கன்தெரு பகுதியில் ரோட்டில் நின்றிருந்த...
தமிழகம்
மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
குஜிலியம்பாறை:வடுகம்வாடி ஊராட்சி புளியம்பட்டியில், மின் துறை சார்பில் மின் நுகர் வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கலைவாணிசேகர் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் தீபன் ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம், சேதமடைந்த மின் கம்பம் மாற்ற கோருதல், எர்த் கம்பி மாற்ற கோருதல் உள்ளிட...
தமிழகம்
டாஸ்மாக் ஊழியர் சங்க மாநாடு
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டாஸ் மாக் ஊழியர் சங்க மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராமு தலைமை வகித் தார். சி.ஐ. டி.யூ., மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் ஆறுமுக நயினார், டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ராஜ்குமார், மாநில பொது செயலாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். பணிநிரந்தரம், வே லை நீக்கப்பட்டவர்களுக்கு பணி...
தமிழகம்
நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
வேடசந்தூர்:வேடசந்தூர் வட்டார நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் நல சங்க பொதுக்குழு கூட்டம் கவுரவ தலைவர் சவுந்திரராசன் தலைமையில், தலைவர் தில்லை சந்திரசேகரன் முன்னிலையில் நடந்தது. செயலாளர் நேரு மாணிக்கம் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜெயராமன் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்தார். செயற் குழு உறுப்பினர் சுந்தரராஜபெருமாள...
தமிழகம்
முதல்வர் நாளை கோவை வருகை மாநாட்டு பணிகள் குறித்து ஆய்வு!
கோவை: செம்மொழி மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட, முதல்வர் கருணாநிதி நாளை கோவை வருகிறார். கோவையில் அடுத்த மாதம் 23ல் இருந்து 27ம் தேதி வரையிலும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றன. மாநாட்டுக்கான ஆய்வரங்கம், மாநாட்டுப் பந்தல்...
தமிழகம்
கருத்தரங்கு துவக்க விழா
காந்திகிராமம்:காந்தி கிராம பல்கலை., யில் ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றத்தின் மாநாடு,கருத்தரங்கு துவக்க விழா நடந் தது. துணை செயலாளர் காசிராசன் வரவேற்றார். தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். துணை தலைவர் சண்முகம் நூல்களை வெளியிட்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ர...
தமிழகம்
மாநாட்டு பந்தல்; கான்கிரீட் போட்டு தூண்களை பலப்படுத்த முடிவு!: பாதுகாப்புக்கு பொதுப்பணித்துறையும் உற
கோவை: செம்மொழி மாநாட்டுப் பந்தலின் இரும்புத் தூண்கள் முழுவதுமாக, கான்கிரீட் தளம் கொண்டு பலப்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி கூறியுள்ளனர். கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் மட்டுமே நடக்கின்றன. இதற்காக,...
தமிழகம்
தனியார் பஸ்- வேன் மோதல்; ஒருவர் பலி
தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு அருகே சரக்கு வேனும் தனியார் பஸ்சும் மோதியதில், ஒருவர் பலியானார். மூன்றுபேர் காயமடைந்தனர். மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(39). இவர் குடும்பத்துடன் ஈச்சர் வேனில், வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு, ஈரோட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். தாடிக்கொம்பு அகரம் பிரிவு அருகே செல்லும் போது, எதிரே வந்த...
தமிழகம்
கொ.மு.க., சிறை நிரப்பும் போராட்டம் : பல்வேறு அமைப்புகள் ஆதரவு
திருப்பூர்: கொங்கு முன்னேற்ற கழக சிறை நிரப்பும் போரட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர், சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கள் இறக்க அனுமதிக்க வேண்டும்; கரும்பு டன்னுக்கு 2,500 வழங்க வேண்டும்; மானாவாரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 ரூபா...
தமிழகம்
ராமபட்டிணத்தில் ஜமாபந்தியில்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராமபட்டிணம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில், பொதுமக்களிடம் இருந்து 429 மனுக்கள் பெறப்பட்டு, ஒன்பது மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. பொள்ளாச்சி தாலுகாவுக்கான ஜமாபந்தி தாசில்தார் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்தது. தாசில்தார் வெங்கடேசன், தனித்தாசில்தார்கள் குப்புசாமி, சாந்தாமண...
தமிழகம்
சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்,: பாலின பாகுபாடின்றி கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது; மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். "இளநிலை உதவியாளர் பணிக்கு இணையான பதவிக்கு தகுதி பெற்ற ஆண் ஊழியர்களுக்கு, பாதிப்பான வகை...
இந்தியா
க.குச்சிப்பாளையத்தில் பிரமோற்சவ விழா
புதுச்சேரி: க.குச்சிப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் பிரமோற்சவ விழா இன்று துவங்குகிறது. மண்ணாடிப்பட்டு கொம்யூன் க.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் அய்யனாரப்பன் கோவிலில் மூன்று நாள் பிரம்மோற்சவ விழா இன்று (23ம் தேதி) துவங்குகிறது. விழாவையொட்டி இன்று முத்து மாரியம்மனுக்கு கூழ் வார்த்தலும், இரவு ...
இந்தியா
கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல்
புதுச்சேரி: தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களை உடனடியாக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என, அரசுக்கு பா.ஜ., கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து பா.ஜ., மாநில தலைவர் தாமோதர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டும், பள் ளிகளின் தரம் உயரவில்லை. தேர...
இந்தியா
கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவர் இன மரபினர் நலச்சங்கம் கோரிக்கை
புதுச்சேரி: கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி பிரதேச மருத்துவர் இன மரபினர்கள் நலச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. புதுச்சேரி பிரதேச மருத்துவர் இன மரபினர்கள் மற்றும் பியூட்டி பார்லர், சலூன் தொழில்புரிவோர் தலைமை சங்க துவக்க விழா புனித அந்தோணியார் திருமண மண்டபத்தில் நே...
இந்தியா
சமூக பாதுகாப்பு நிதியுதவி அமைச்சர் வழங்கினார்
புதுச்சேரி: ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மூன்று குடும்பங்களுக்கு அமைச்சர் ஷாஜகான் நிதியுதவி வழங்கினார். லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. சாமிப்பிள்ளைத்தோட்டம் வசந்தா, பெரிய காலாப்பட்டு வனிதா ஆகியோருக்...
இந்தியா
முற்றுகை போராட்டம் நடத்த மக்கள் நலவாழ்வு சங்கம் முடிவு
புதுச்சேரி: கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்காவிட்டால் முற்றுகைப் போராட் டம் நடத்த ரெட்டியார்பாளையம் புதுநகர் மக்கள் நலவாழ்வு சங்கம் முடிவு செய்துள்ளது. சங்கத் தலைவர் ரகுபதி, செயலர் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ரெட்டியார்பாளையம் புதுநகரில் பிரதான சாலையில் "எல்' மற்றும் "யூ' வடிவில் கழிவுநீர் வாய்க...
இந்தியா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
புதுச்சேரி: சுற்றுச்சூழல் தினத்தை முன் னிட்டு புதுச்சேரி அரசின் அறிவி யல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பள்ளி மாணவர் களுக்கு ஓவியப் போட்டி நடத்து கிறது. இது குறித்து அத்துறையின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தி...
இந்தியா
ஜிப்மரில் பைக் திருட்டு: சென்னை வாலிபர் கைது
புதுச்சேரி: ஜிப்மர் வளாகத்தில் 6 மோட்டார் சைக்கிள்களை திருடிய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  ஜிப்மர் மருத்துவமனை வளாகத் தில் தொடர்ந்து வாகன திருட்டு நடந்து வருகிறது. இதனை தடுக்க சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த் உத்தரவுப்படி எஸ்.பி., நந்தகோபால் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரதாஸ், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்...
இந்தியா
பொறியியல் சேர்க்கை தகுதி மதிப்பெண் குறைக்க தே.மு.தி.க., வலியுறுத்தல்
புதுச்சேரி:” பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண் டும் என தே.மு.தி.க., வலியுறுத்தி உள்ளது. தே.மு.தி.க., வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலர் செல்வம் (எ) செல்வ ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பொறியியல் படிப்பில் சேர தமிழகத் தில் 5 சதவீத தகுதி மதிப்பெண்களை குறைத்துள்ளது போல் புதுச்சேரியில் உள்ள அனைத...
தமிழகம்
கள்ளந்திரியில் நடந்த மீன்பிடி திருவிழா: மக்கள் ஏமாற்றம்
அழகர்கோவில்:கள்ளந்திரி கண்மாயில் மீன் இல்லாததால், மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஐந்து கோயில் முத்தன் சுவாமி கோயிலுக்கு சொந்தமான கண்மாய் கீழக்கள்ளந்திரியில் உள்ளது. இங்கு நேற்று நடந்த மீன் பிடி திருவிழாவில், மதுரை, சிவகங்கை, நத்தம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிர...
தமிழகம்
வியாபாரிகள் தப்பி ஓட்டம்
எழுமலை: சேடபட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமையில், ஆய்வாளர்கள் சுப்பாரெட்டி, பாண்டியன், முருகேசன், அண்ணாத் துரை, இளங்கோவன் ஆகியோர் மங்கல்ரேவு, அத்திபட்டி, நாகையாபுரம் ஆகிய கிராமங்களில் 32 கடைகளை சோதனையிட்டனர்.அப்போது காலாவதியான மிட்டாய், அப்பளம், ஊறுகாய், குளிர் பானங்கள், சிப்ஸ், சேவு, முறுக்கு போன்ற...
தமிழகம்
வாலிபர் கொலை
மதுரை:மதுரை செல்லூர் அய்யனார்கோயில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தென்னரசு மகன்கள் சுரேந்திரன் (19), நரேந்திரன் (21). இவர்களுக்கும், அதேபகுதியை சேர்ந்தவர் ராஜகொடி மகன்கள் அருண்குமார், பிரேம்குமார், மகள் ஆதிலட்சுமிக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது.சம்பவத்தன்று சுரேந்திரனையும், நரேந்திரனையும் சிலர் கத்தியால் குத்தி விட்டு தப்...
தமிழகம்
மாங்கொட்டை திருவிழா
மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் இருந்து நேற்று பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி மேலூருக்கு எழுந்தளிருனார். இதை மேலூர் மக்கள் மாங் கொட்டை திருவிழாவாக கொண்டாடினர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி ஊர்வலம், சிவன் கோயிலில் முடிவடைந்தது. மே 25ல் திருவாதவூரில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
தமிழகம்
பெண்ணிடம் நகை அபகரிப்பு
மதுரை நரிமேடு மருதுபாண்டியன் மெயின் ரோட்டை சேர்ந்த ராமு மகள் பானு மனநலம் பாதிக்கப்பட்டவர். அதேபகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கார்மேகம் (35). இவர், திருமண ஆசை காட்டி பானு அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியை அபகரித்தார். செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ஜேப்படி திருடன் கைது
மதுரை திருநகர் நெல்லையப்பபுரம் முதலாவது தெருவை சேர்ந்தவர் லட்சுமி நரசிம்மன் (42). இவர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருநருக்கு பஸ்சில் புறப்பட்டார். நெரிசலை பயன்படுத்தி நரசிம்மன் பாக்கெட்டில் வைத்திருந்த பத்து கிராம் தங்க சங்கிலியை மர்ம நபர் திருட முயன்றார். அவரை பிடித்து விசாரிக்கையில் தேனி அல்லிநகரை ச...
தமிழகம்
ரத்தக்கறை படிந்த பைக்
மதுரை டவுன் தீயணைப்பு நிலையம் அருகே நேற்று காலை ரத்தக்கறை படிந்த ஸ்கூட்டி (டிஎன்59யு 2730) சாலையோரம் கிடந்தது. போலீசார் விசாரிக்கையில், எல்லீஸ் நகர் ராஜ்குமார் குப்தாவிற்கு சொந்தமானது என தெரிந்தது. இவரது மகன் ரிப்புகுப்தா (35) நேற்று அதிகாலை தீயணைப்பு நிலையம் அருகே பைக்கில் சென்றபோது, கீழே விழுந்து தலையில் காயமடைந்தார்...
தமிழகம்
கிணற்றில் வாலிபர் உடல்
மதுரை கரும்பாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (17). இவர், நேற்று மதியம் நண்பர்களுடன் பாண்டிகோயில் அருகேயுள்ள 60 ஆழ கிணற்றில் குளிக்க சென்றனர். கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. கிணற்றில் குதித்த முத்துப்பாண்டி மூச்சுத்திணறி பலியானார். தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அதிகாரி செழியன் தலைமையில் குழுவினர் உடலை ...
தமிழகம்
மைனர் கைதி தப்ப ஓட்டம்
மதுரை:மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சதீஷ் (17). திருட்டு வழக்கில் பழனி அடிவார ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர். மதுரையில் ஜே.எம்.3 கோர்டில் ஆஜர் செய்து, இரவு 9 மணிக்கு சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லும் போது, சதீஷ் தப்பி விட்டான். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்தியா
மங்களூரு விரைந்தனர் சி.ஆர்.பி.எப்., வீரர்கள்
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 600 பேர், ஒரு டாக்டர் குழுவுடன், மங்களூரு விமான விபத்து நடந்த இடத்துக்கு நேற்று விரைந்தனர்.கேரள மாநிலம் பரிங்கம் என்ற இடத்திலிருந்து, 300 வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவும், பெங்களூரிலிருந்து 300 வீரர்கள் கொண்ட மற்றொரு படைப் பிரிவும், நேற்று மங்களூருக்கு அனுப்பப்பட்டன. இவர்களுடன் ஒரு...
தமிழகம்
மதுரை - நிஜாமுதீன் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
மதுரை: ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பு: மதுரையில் இருந்து நேற்று இரவு 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - நிஜாமுதீன் சம்பர் கிராந்தி எக்ஸ்பரஸ், மதுரையில் இருந்து இன்று காலை 7 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதமாக வருவதால் ஒருநாள் மட்டும் மாற்றம் செய்யப்படுகிறது என குறிப்படப்பட்டுள்ளது.
தமிழகம்
நகராட்சி எச்சரிக்கை
மேலூர்: மேலூர் நகரில் வினியோகிக்கப்படும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். உணவு விடுதிகளில், மருத்துவமனைகள், கடைகளில் காய்ச்சிய நீரை பயன்படுத்த வேண்டும். பாலிதீன் பாக்கெட் குடிநீரை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் திறந்த வெளி குளம், கண்மாய்களில் உள்ள நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டாம், என நகராட்சி கமிஷனர் அய்யனா...
தமிழகம்
நிதி மோசடி வழக்கு 36 ஆயிரம் பேர் புகார்
மதுரை:மதுரையில் பாராமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, பணம் திருப்பி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் நிறுவன உரிமையாளர் ஷேக்முகைதீன் கைது செய்யப்பட்டார். முதலீடு செய்த 36 ஆயிரம் பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து, வழக்கு நடந்து வருகிறது. இந...
தமிழகம்
தாயார் இறுதி சடங்கில் பங்கேற்க விசாரணை கைதிக்கு அனுமதி ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை:போதை பொருள் வழக்கில் கைதாகி மதுரை சிறையிலுள்ள விசாரணை கைதிக்கு, அவரது தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள மூன்று நாட்கள் அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் கருணாகரன். போதை பொருள் கடத்த உதவியாக இருந்ததாக போதை பொருள் தடுப்பு போலீசாரால் கைதாகி மதுரை சிறையில் உள்ளார். இவரது தாயார் கஸ்தூர...
தமிழகம்
மாநில உயிரினங்கள் பாதுகாக்கப்படுமா?
மதுரை:உலகில் அனைத்து நாடுகளும் தங்கள் தேசிய அடையாள சின்னங்களான பறவைகள், விலங்குகள், மரங்கள், பூக்களை பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி உயிரினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில மலர், மரம்,விலங்கு, பறவைகளை நாம் எந்த அளவில் பாதுகாக்கிறோம் என்பது கேள்வி குறியா...
தமிழகம்
கைக்கு கிடைத்தும் வாய்க்கு எட்டாத தற்காலிக ஊழியர்கள்
மதுரை:தமிழகத்தில், பெரும்பாலானோருக்கு பணி நிரந்தரம் கிடைத்த நிலையிலும், அந்த வாய்ப்பு கிடைக்காமல் 427 தற்காலிக ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் 2003ல் நடந்த அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கின் போது, 15 ஆயிரத்து 500 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின் அந்த எண்ணிக்கை குறைந்து 11 ஆயிரம் வரை பணியில் இருந்தனர். த...
இந்தியா
உயிரியலில் 39 மாணவர்கள் தோல்வி: கூனிச்சம்பட்டு பள்ளியின் நிலை இது
திருக்கனூர்: கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்தில் 39 மாணவ- மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். இப் பள்ளியில் 132 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் 68 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள் ளனர். தேர்ச்சி சதவீதம் 52. இந்த பள்ளி கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 53 சதவீதம் தேர்ச்சி அளித்தது...
இந்தியா
கலைஞர்கள் நல வாரியப் பணி துவக்கம் அமைச்சருக்கு மக்கள் கலைக்கழகம் நன்றி
புதுச்சேரி: கஞைகர்கள் நல வாரியம் அமைப்பதற்கான பணிகளை துவக்கிய அமைச்சர் ஷாஜகானுக்கு மக்கள் கலைக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. கலைஞர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி, மக்கள் கலைக்கழகம், நலித்த தெருக்கூத்து கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து கோனேரி ராமசாமி தலைமையில் பேரணி நடத்தினர். பின், அமைச்சர் ஷாஜகானை சந்தித்து மனு கொட...
இந்தியா
உணவுத்திருவிழா: சுற்றுலாத்துறை ஏற்பாடு
புதுச்சேரி: சுற்றுலாத்துறை சார்பில், ஒருவார கால உணவுத்திருவிழா நாளை துவங்குகிறது. இது குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை நாளை (24ம் தேதி) முதல் 30ம் தேதி வரை பழைய துறைமுக வளாகத்தில் ஒருவார கால உணவுத்திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள் ளது. இந்த உ...
இந்தியா
வேத பாட சாலையில் பயில அந்தண சிறுவர்களுக்கு அழைப்பு
புதுச்சேரி: மொராட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், அடுத்த மாதம் 14ம் தேதி ஆரம்பமாகும் வேத சிவாகம பாடசாலையில் வேதாத்யயணம் செய்ய ஆர்வமுள்ள அந்தண சிறுவர்கள் வரவேற்கப்படுகின்றனர். உலகிலேயே மிக உயரமான 27 அடி பஞ்சலோக விஸ்வரூப சனீஸ்வர பகவான் எழுந்தளி உள்ள மொராட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், அடுத்த மாதம் 14ம் தேதி வேத சிவாகம ...
இந்தியா
எல்.ஐ.சி.,யில் வேலை வாய்ப்பு நேர்காணல் இன்று நடக்கிறது
புதுச்சேரி:எல்.ஐ.சி., அலுவலகத்தில் முழுநேர,பகுதி நேர வேலை வாய்ப்புக்கான முகாம் இன்று நடக்கிறது.  புதுச்சேரி அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி., கிளை-2வது அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. எல்.ஐ.சி.,யில் காப்பீட்டு ஆலோசகர் பதவிக்கான (முழுநேர, பகுதி நேரம்) நேர்காணலில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்...
இந்தியா
அன்னை ராணி கான்வென்ட் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி
புதுச்சேரி: பிளஸ் 2 தேர்வில் காட்டேரிக்குப்பம் அன்னை ராணி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப் பள்ளியில் 62 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 60 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 97 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. இப்பள்ளி மாணவி சரண்யா 1141 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ...
இந்தியா
மங்களூரு விமான விபத்து : பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்
புதுடில்லி: மங்களூரு விமான விபத்து குறித்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் பிரியங்கா சோப்ரா வரை அனைவரும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து அமிதாப் பச்சன், "ட்விட்டர்' இணையதளத்தில், "இது மிகக் கொடூரமானது; மிகவும் வருத்தத்துக்குரியது. அதைப் பார்க்கும் போது நம் மனத...
தமிழகம்
போலி பேரிங் விற்பனை: 4 கடைக்காரர்கள் கைது
கும்மிடிப்பூண்டி:போலி பேரிங் விற்பனை செய்த நான்கு கடைகளின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்து போலி பேரிங்குகளை பறிமுதல் செய்தனர்.இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை முக்கிய உதிரி பாகமாக பேரிங் உள்ளது. எஸ்.கே.எப்., என்ற பன்னாட்டு நிறுவனம் தயாரிக்கும் பேரிங்குகள் இந்தியா முழுவதும் விற்கப்பட்டு வருகிறது. அதே பெயர...
தமிழகம்
மாணவி உட்பட இருவர் கருகி பலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவி உட்பட இருவர் சமையல் செய்யும்போது தீப்பிடித்து பரிதாபமாக இறந்தனர்.ஓட்டேரி அடுத்த கீரப்பாக்கம் வினாயகபுரத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம். இவரது மகள் கவுரி(15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை வீட்டில் சமையல் செ...
தமிழகம்
நாளைய மின்தடை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த மாகரல் மற்றும் முசரவாக்கம் துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.எனவே மாகரல், ஆற் பாக்கம், களக்காட்டூர், பெரியநத்தம், ஆசூர், காவாந்தண்டலம், இளையனார் வேலூர், நெய்யாடுபாக்கம், காவாம்பயிர், ஆதவப்பாக்கம், புலிவாய், புத் தளி, கம்மராஜபுரம், தம்மனூர், மலையாங் குளம், படூர், க...
தமிழகம்
தூத்துக்குடி நடுக்காட்டில் பெண்ணை கொன்று நகை கொள்ளை
தூத்துக்குடி; தூத்துக்குடி அருகே நேற்று நடுக்காட்டில், பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திக்கொலை செய்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 40,000 ரூபாய் தாலிச்சங்கிலியை பறித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பு பனையேறும் தொழிலாளி சுடலைமணி. நேற்று அதிகாலை இவர், வழக்கம்போல் பனை மரம் ஏறுவத...
தமிழகம்
மதுரை சிறையில் கைதிகள் இருவர் சாவு ; ஆர்.டி.ஓ., விசாரணை
மதுரை:  மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இரண்டு கைதிகள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தனர். ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார். சிவகங்கை மாவட்டம் மாரநாட்டை சேர்ந்தவர் பழனி (40). கொலை வழக்கில் தண்டனை பெற்று, மதுரை மத்திய சிறையில் கடந்த மார்ச் 10ல் அடைக்கப்பட்டார். இவருக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அ...
தமிழகம்
ஆலங்குடி சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம்
சென்னை: ஆலங்குடி சுவாமிகளின் 75வது ஆராதனை மகோத்சவம், 26ம் தேதி வெகுவிமரிசையாக நடக்க இருக்கிறது. சோறுடைத்த பெருமை கொண்ட சோழநாட் டின், முடிகொண்டான் கிராமத்தின் அருகே ஆலங்குடியில் அவதரித்தவர், ஆலங்குடி சுவாமிகள் என்று பக்தர்களால் அழைக்கப்படும், ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சரஸ்வதி சுவாமிகள். இளம் வயதிலேயே வேத சாஸ்திரங்கள் கற்றுணர்ந்...
தமிழகம்
ஒரே மாதத்தில் இரண்டு,மூன்று பாலிசிகள் இருந்தால் ஒரே நோட்டீஸ் : எல்.ஐ.சி.,யில் புதிய முறை
மதுரை: எல்.ஐ.சி.,யில் ஒரே மாதத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகள் பெற்றவர்களை ஒருங்கிணைத்து, ஒரே நோட்டீஸ் வழங்கும் வகையில் மதுரை கோட்டத்தின் சார்பில் மதுரையில் புதிய சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. மதுரை கோட்டத்துக்குட்பட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள 25 கிளைகள், 16 துணைக் கிளைகள் மூலம் கடந்தாண்டு ஆறுலட்சம் பாலிசிகள் பெறப்பட்...
இந்தியா
ஊடுருவலை ஊக்குவிப்பதற்காக பயங்கரவாதிகளுக்கு சம்பள உயர்வு
புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பயிற்சி பெற்று, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஊடுருவி தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால், எல்லை பாதுகாப்பு படையின் தீவிர கண்...
இந்தியா
இந்தியாவில் சர்வதேச இணையதள மாநாடு
பெங்களூரு: சர்வதேச இன்டர்நெட் வலைதள அமைப்பின்(தீதீதீ), 20வது சர்வதேச மாநாடு, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது.மாநாட்டில் இன்டர்நெட் தந்தை என்றழைக்கப்படும் வின்சென்ட் சர்ப் மற்றும் வலைதளத்தை உருவாக்கிய, சர் டிம் பெர்னர்ஸ்லீ கலந்து கொள்கின்றனர். இன்டர்நெட் வலைதள சேவை, தற்கால வாழ்வின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்...
தமிழகம்
திருச்செந்தூரில் மே 27ல் வைகாசி விசாகம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி, கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்படுகிறது. பகல் 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், பகல் 10.30 க்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. அதன்பின், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, முனிகுமாரர்களுக்கு சாபவ...
தமிழகம்
கொடைக்கானல் - பழனி ரோட்டில் பஸ் விபத்து : 7 பேர் காயம்
கொடைக்கானல்: கொடைக்கானல் - பழனி ரோட்டில் சுற்றுலா பஸ், தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் ஏழு பேர் காயமடைந்தனர். சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள், டூரிஸ்ட் பஸ்சில் கொடைக்கானலுக்கு வந்தனர். நேற்று மாலை 6.30 மணிக்கு, மலைப்பகுதியில் இறங்கும் போது, பேத்துப்பாறை என்ற பகுதியில் டூரிஸ்ட் பஸ் தடுமாறி, சுற்றுச்சுவரில் மோதியது. ...
தமிழகம்
மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 4,300 கனஅடியாக உயர்வு
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கோடைமழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 4,300 கனஅடியாக அதிகரித்தது. தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சிலநாட்களாக கோடைமழை தீவிரம் அடைந்துள்ளது. சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 18ம் தேதி விநாடி...
தமிழகம்
வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் தூர்வாரப்படும் வைகை அணை
மதுரை: வைகை அணையில், 980 மில்லியன் கனஅடிக்கு ஆக்கிரமித்துள்ள வண்டல் மண்ணை, 170 கோடி ரூபாயில் தூர் வாரி, கூடுதலாக ஆயிரம் மில்லியன் கன அடிக்கு தண்ணீர் தேக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பக்குழு, வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் அணையை தூர் வாரும். பொன்விழா ஆண்டை கடந்த நிலையில், அணையின் மொத்த கொள்ளளவில...
General
ஏ.டி.பி., டென்னிஸ் : போபண்ணா ஜோடி தோல்வி
நைஸ்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் இரட்டையர் பைனலில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் அசம் உல்-ஹக்-குரோஷி ஜோடி தோல்வியடைந்து ஏமாற்றியது. பிரான்சில் உள்ள நைஸ் நகரில், ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் அசம் உல்-ஹக்-குரோஷி ஜோடி,...
தமிழகம்
உலக கல்லீரல் அழற்சி தினம்
சென்னை: உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடந்த விழாவில் தமிழக சுகாதார அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ”குடிப்பழக்கமும் மக்களும்' என்ற புத்தகத்தை வெளியிட சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் பெற்றுக் கொண்டார். உடன் கல்லூரி டீன் மோகனசுந்தரம்,பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண...
இந்தியா
போதையில் கார் ஓட்டிய பெண்ணால் விபத்து : 2 பேர் பலி
புதுடில்லி : டில்லி கண்டோன்மன்ட் பகுதியில் நேற்றிரவு குடிபோதையில் கார் ஓட்டி வந்த பெண் ஒருவர், காரை அட்டோ மீது பலமாக மோதினார். இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் ராணுவ அதிகாரியின் மனைவி என தெரியவந்துள்ளது.
இந்தியா
மங்களூரு விபத்து : விசாரணைக்குழு ஆய்வு
மங்களூரு : மங்களூரு விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர். கறுப்புப் பெட்டியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் விபத்தில் பலியான 158 பேரில் 83 பேரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியுள்ளது. அந்த உடல்களில் இருந்து செல்களை எடுத்து டி.என்.ஏ., பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்...
தமிழகம்
திண்டுக்கல்லில் சாலை விபத்து : 2 பேர் பலி
வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று காலையில் காரும் - லாரியும் மோதிக் கொண்டதில் காரில் இருந்த 2 பேர் இறந்தனர். வேடசந்தூர் அருகே கார் சென்று கொண்டிருந்த முன்னாள் சென்ற லாரியில் மோதி விபத்து நடந்துள்ளது. இறந்து போன இருவரும் திருச்சங்கோட்டைச் சேர்ந்த கணவன் - மனைவி என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. வி...
தமிழகம்
சர்ச் வாசலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை
திருநெல்வேலி : நெல்லையில் கிறிஸ்துவ தேவாலயம் முன்பு 7 மாதக் ஆண் குழந்தை ஒன்று அனாதையாக விடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்க‌ோட்டை, தக்காரம்மாள்புரம் பகுதியில் சர்ச் ஒன்று இருக்கிறது. இங்கு இன்று காலையில் 7 மாத ஆண் குழந்தை ஒன்றை யாரோ அனாதையாக விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இ...
தமிழகம்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநாடு
சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 57வது மாநாடு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்றது.விழாவில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதிக்கு ஒன்றியத்தின் தலைவர் சூரியமூர்த்தி நினைவு பரிசு வழங்கிகவுரவித்தார்.
தமிழகம்
புத்தக வெளியீட்டு விழா
சென்னை: கவிஞர் வாலி எழுதிய ”தமிழ் கடவுள் 'புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா புத்தகத்தை வெளியிட திரைப்பட் இயக்குனர் பாலச்சந்தர் , தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் பெற்றுக்கொண்டனர் உடன் கவஞர் வாலி ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம் ,பதிப்பாளர் ஸ்ரீநிவாசன் மற்றும் நெல்லை கண்ணன்.
தமிழகம்
உங்களால் முடியும்
சென்னை: தினமலர் நாளிதழ் சார்பில் குரோம்பேட்டை எம்.ஐ.டி., வளாகத்தில் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் உங்களால் முடியும் நிகழ்ச்சியில், சாஸ்தா கல்வி குழும துணை தலைவர் பேராசிரியர் கார்த்திகேயன், டாக்டர் றைமண்ட் உ<த்தரியராஜ் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் காந்தி ஆகியோர் உள்ளனர்.
தமிழகம்
11 ஆராய்ச்சியாளர்களுக்கு விருது அறிவிப்பு
சென்னை:  தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பாக பல்‌வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 ஆராய்ச்சியாளர்களுக்கு  தமிழ்நாடு  விஞ்ஞானிகள்  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் தலைமையிலான 30 பேர் குழு இந்த ஆராய்ச்சியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. இந்த விருதுக்காக 83 பேர் பரிந்துரை...
தமிழகம்
சென்னை திரும்புகிறார் விஸ்வநாதன் ஆனந்த்
சென்னை : 4 வது முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இன்று சென்னை திரும்புகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கோரியா தலைநகர் சோபியாவில் நடந்த செஸ் போட்டியில் ஆனந்த் பல்கேரிய நாட்டின் கிராண்ட் மாஸ்டரும் அதிரடி ஆட்டக்காரருமான வெசேலின் டோபலோவை வென்...
இந்தியா
கூர்காலீக் தலைவர் கொலை வழக்கு : 45 பேர் கைது
டார்ஜிலிங் : மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கூர்கா லீக் தலைவர் மதன் தமாங் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை போலீசார் 45 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் கூர்கா ஜனமுக்தி மோர்சா இயக்கத்தின் இளைஞர் பிரிவு தலை...
தமிழகம்
ஆத்தூரில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தனலெட்சுமி (25). இவருக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சேர பஸ்சில் வந்தனர். அப்போது பஸ்சிலேயே தனலட்சுமிக்கு குழந்தை வெளியில் வரத் துவங்கி...
தமிழகம்
பாரத ஸ்டேட் பாங்க் பாராட்டு விழா
கோவை: பாரத ஸ்டேட் வங்கியின் கோவை கிளஸ்டர் கீழ் உள்ள கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பிளஸ்2 தேர்வில் முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் தேர்வில் அதிகளவில் மதிப்பெண்கள் பெற்ற ஸ்டேட் பாங்க் ஊழியர்களின் குழந்தைகள் ஆகிய...
இந்தியா
இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு
புதுடில்லி : இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் சஜ்மால் , கிராந்தி, கோடா பகுதிகளில் இருக்கும் இந்திய ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனால் எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்தியா
சங்கரன்கோவில் அருகே கோயில் விழா சர்ச்சை : மலைக்கு சென்ற மக்கள்
திருநெல்வேலி: சங்கரன்கோவில் பந்தபுளி கிராமம் பகுதியில் கண்ணநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு வழிபாடு செய்வது தொடர்பாக நீண்ட காலமாக இரு தரப்பு மக்கள் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. ஒரு பிரிவினர் மக்கள் கோயில் வழிபாடு உரிமை கேட்டு ஊரை காலி செய்து விட்டு எட்டிசேரி மலைக்கு சென்றனர். இதனையடுத்து சமரசம் செய்யும் விதம...
தமிழகம்
திருவள்ளூரில் ஸ்டவ் வெடித்து தாய், மகள் பலி
திருவள்ளூர் : திருவள்ளூரில் ஸ்டவ் வெடித்து தாய், மகள் பரிதாபமாக பலியாகினர். திருவள்ளூர் மாவட்டம் எல்லஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரமணி (38), மகள் இமயவள்ளி (18). இன்று காலையில் மண்ணெண்ணை ஸ்டவ்வில் சமயல் செய்து கொண்டிருந்த போது ஸ்டவ் வெடித்தது. இதில் ரமணி, இமயவல்லி உடல் கருகி இறந்தனர். சம்பவம் குறித்து...
இந்தியா
உலகம் சுற்றிய முதல் இந்தியர்
மும்பை : இந்திய கடற்படை அதிகாரியான திலிப் டோண்டே, தனி நபராக படகில் உலகம் முழுவதும் வெற்றிகரமாக சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். 276 நாட்களில் அவர் உலகை சுற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு - 2009 ஆகஸ்ட் 19ம் தேதி திலிப் தனது பயணத்தை தொடங்கினார். நேற்று மும்பை துறைமுகத்துக்கு வந்தடைந்த அவரை குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்ற...
தமிழகம்
ஈரோட்டில் டூவீலரில் சென்ற சகோதரிகளிடம் நகை பறிப்பு
ஈரோடு : ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் டூவீலரில் சென்ற சகோதரிகளிடம், செயின் பறிக்கப்பட்டது. விஜயமங்கலம் பகுதியில் சகோதரிகள் 2 பேர் மொப்பட்டில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள், பெண்களிடம் இருந்து நகையை பறித்துச் சென்றனர். பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வரு...
இந்தியா
ஒரிசாவில் கனமழை : உப்பு உற்பத்தி பாதிப்பு
புவனேஸ்வர் : லைலா புயல் ஒரிசா நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்ஜம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் கப்பல் ஒன்றில் இருந்த கசிந்த எண்ணெ...
இந்தியா
கருப்பு பெட்டி கிடைத்தது
மங்களூரு : மங்களூரு விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பு பெட்டி டில்லியில் இருக்கும் சிவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். கருப்பு பெட்டியில் பதிவானவற்றை அறிவதில் இந்திய அதிகாரிகளுக...
இந்தியா
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் ஜார்கிராமில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஜார்கிராமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்த மத்திய கூட்டு படையினர் கண்ணிவெடி சத்தம் கேட்டு சம்பவ பகுதிக்கு வந்தனர். அங்கு பதுங்கி‌யிருந்த மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்...
இந்தியா
மிசோரம் செல்கிறார் சிதம்பரம்
புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வடகிழக்கு மாநிலமான மிசோரம் செல்கிறார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சிதம்பரம் மிசோரம் செல்கிறார். மிசோரம் பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க் கிழமை அன்று அசாம் செல்கிறார். அங்கு அம்மாநில முதல்வர் தருண் கோகோய், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பா...
தமிழகம்
வடசென்னையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : ஜெ.,
சென்னை : வட சென்னையில் வருகிற 25ம்‌ தேதி அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : காலாவதி மற்றும் போலி மருந்துகள் விற்பனை குறித்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில், இந்த வழக்கை சி...
General
மங்களூரு விபத்து : பிரான்ஸ் அதிபர் வருத்தம்
மங்களூரு : மங்களூருவில் ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலியான சம்பவத்துக்கு பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி வருத்தம் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்‌மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விமான விபத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
General
ஆப்கனில் கண்ணிவெடி தாக்குதல் : 5 பேர் பலி
காபூல் : ஆப்கனில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 5 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணிவெடி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியாமல் நிலத்தை உழுத போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தியா
அம்பானி சகோதரர்கள் சமரசம்
மும்பை : கோதாவரி ஆற்றுப் படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரி வாயு பங்கீட்டு விவகாரத்தில் அம்பானி சகோதரர்களிடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குடும்ப ஒப்பந்தம் செல்லாது என்றும் இது குறித்து அம்பானி சகோதரர்கள் 6 வாரத்துக்குள் சமரசம் செய்து கெ...
இந்தியா
சல்வார் கமீஸ் அணிந்து வந்ததால் ஆசிரியைக்கு கடும் மிரட்டல்
பராசத் : சல்வார் கமீஸ் அணிந்து பள்ளிக்கு வந்த ஆசிரியைக்கு மிரட்டல் போன் வந்தது. இதனால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ககோலி தத்தா என்பவர், மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்திலிருந்து வந்து குமா என்ற இடத்திலுள்ள ரவீந்திர வித்யாபீடம் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். சமீபத்தில் அம்மாநில ஐகோர்ட், பள்ளி ஆ...
தமிழகம்
காலாவதி மருந்து விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை : ஜெ.
சென்னை : காலாவதி மருந்து விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார். இதை வலியுறுத்தி வட சென்னையில் வருகிற 25ம்‌ தேதி அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : காலாவதி மற்றும் போலி மருந்துகள...
General
விமான விபத்து : துபாய் அதிபர் இரங்கல்
துபாய் : மங்களூரு விமான விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தாருக்கு துபாய் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயத் அல் நய்யான் மற்றும் துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் , பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தனித்தனியாக இரங்கல் குறிப்பை அனுப்பியுள்ளனர். மோ...