category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஏற்கட்டில் சுற்றுலா பயணிகளிடம் ரூ.1.90 லட்சம் நகை கொள்ளை | ஏற்காடு: ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த விழுப்புரம் மாவட்ட பயணிகளிடம் ரூ.1.90 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. விழுப்புரம் பண்ருட்டி மெயின் ரோடு பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். நேற்று முன்தினம் இவருடன் 12 பேர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் ஏரி அருகில் உள்ள நவீனம் ட்ரீம் என்னு... |
தமிழகம் | பால்பண்ணை மேலாளரை தாக்கி ரூ.5.86 லட்சம் வழிப்பறி | வாழப்பாடி: வாழப்பாடி அருகே தனியார் பால் பண்ணை மேலாளரை வழிமறித்து தாக்கிய மூன்று பேர் 5.86 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூர் அபிநவம் கிராமத்தில் அமிர்தா பால் பண்ணை நிறுவன குளிரூட்டும் நிலையம் உள்ளது. மேலாளராக வாழப்பாடி எழில் நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி (50) பணிபுரிந்து வருகிறார். நேற... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம்:மாணவ, மாணவியருக்கு இந்தியன் வங்கி பாராட்டு | திருநெல்வேலி:நெல்லையில் இந்தியன் வங்கி சார்பில் தமிழ் மற்றும் இதர மொழிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பிளஸ் 2 மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழா நடந்தது.இந்தியன் வங்கி நெல்லை வட்டாரத் தலைவர் மற்றும் துணைப் பொது மேலாளர் மெய்யப்பன் நினைவுப் பரிசுகள் வழங்கி சாதனை புரிந்த மாணவ, மாணவியரைப் பாராட்டினார். சிறந்த மாணவர்களை ... |
தமிழகம் | மேலப்பாளையத்தில் தேசிய பிரசார தினம் | திருநெல்வேலி: மேலப்பாளையம் அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இந்திய அளவில் தேசிய பிரசார தினம் இன்று கொண்டாடப்படுகிறது.மேலப்பாளையம் அஹமதிய்யா ஜமாஅத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு கூட்டுத் தொழுகையுடன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. காலை 9 மணிக்கு தென் மண்டல அமீர் அப்துல் காதிர் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறத... |
தமிழகம் | மகளிர் குழுவை சுய லாபத்திற்கு பயன்படுத்திய தம்பதி பெண்கள் திடீர் சாலை மறியல் | மேட்டூர்: டபில்யூ.சி., டபில்யூ.சி., தொண்டு நிறுவனம், மகளிர் சுய உதவி குழுவிற்கு சுழல்நிதி வழங்குவதில், சுய உதவி குழுவினரிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது, சுயஉதவி குழுவை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்தியது, மேட்டூர் ஆர்.டி.ஓ.,விசாரணையில் தெரியவந்தது. மேட்டூரை மையமாக கொண்டு இயங்கி வரும் டபில்யூ.சி., டபில்ய... |
தமிழகம் | முக்கூடல் பகுதிகளில் அதிரடி சோதனை:ரூ.10 ஆயிரம் பொருட்கள் அழிப்பு | திருநெல்வேலி:முக்கூடல் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் அழிக்கப்பட்டன.நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா மைதீன் உத்தரவின் பேரில் முக்கூடல் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.இதில் வட்டார மருத்துவ அலுவலர் நிதிஷ்பாபு தலைமையில் வட்டார அலுவலர்... |
தமிழகம் | பாளை.யில் பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி:மதுரை அணி சாம்பியன் | திருநெல்வேலி:பாளை.,யில் நடந்த பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டி சென்றது.பாளை ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள பார்வையற்றோர் பள்ளி மைதானத்தில் எட்வர்ட் ஜோனாத்தான் கோப்பைக்கான பார்வையற்றோர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4 அணிகள் கலந்து ... |
தமிழகம் | ஸ்படிகலிங்க பூஜையில் தர்மதரிசன அனுமதி கோரி இந்து முன்னணி போர் | ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஸ்படிகலிங்க தரிசனத்தில் பக்தர்களுக்கு தர்மதரிசன அனுமதி வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பா.ஜ.,நிர்வாகிகளை போலீசார் கைதுசெய்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு நடைபெறும் ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு பக்தர்களிடம் 50, 15 ரூபாய் என கோயில் நிர்... |
தமிழகம் | சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடம்:இலவச முன்னோடி பயிற்சி வகுப்பு ஆரம்பம் | திருநெல்வேலி:சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான இலவச முன்னோடி பயிற்சி வகுப்புகள் பாளை.,யில் நேற்று ஆரம்பமானது.நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்படும் காவல் துறை ஆண்/பெண் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான இலவச முன்னோடி பயி... |
தமிழகம் | துறையூர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் | துறையூர்: துறையூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் வளர்மதி, ஆணையர் ஸ்டான்லி, இன்ஜினியர் கார்த்தி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரவணன், மாணிக்கம், பாலு, சுகுமார், வீராசாமி, ஆறுமுகம், ராஜேந்திரன், செல்வராணி, காந்திமதி, மகேஸ்வரி, ராதா, விஜயராகவன், பொம்ம... |
தமிழகம் | மாநகராட்சியை அழகுபடுத்த அதிரடி நடவடிக்கை:நெல்லையில் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் | திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியை அழகுபடுத்த பல்வேறு விபரங்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது.நெல்லை மாநகராட்சியை அழகுபடுத்த மெயின்பாத் என்ற நிறுவனம் மூலம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அறிக்கை தயாரிக்கப்படுகிறது.இதன் முதற்கட்டமாக நெல்லை, பாளை, மேலப்பாளையம் உட்பட பல்வேறு முக்கிய இடங்கள் போட்டோ ... |
தமிழகம் | இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை | ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அடையாளம் தெரியாத இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.ராமநாதபுரம் காவனூர் பாலம் அருகே நைட்டி அணிந்த 18 வயதுள்ள இளம் பெண் கழுத்தில் துண்டால் நெரித்த நிலையில் இறந்து கிடந்தார். சமீபத்தில் குழந்தை பிறந்து அறுவை சிகிச்சை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன.
இறந்த பெண் யார்? எந்த ஊர்? யா... |
தமிழகம் | தென்காசி, செங்கோட்டையில்பலாப்பழம் விற்பனை ஜோர் | தென்காசி:தென்காசி, செங்கோட்டை பகுதியில் பலாப்பழம் விற்பனை தீவிரமடைந்துள்ளது.முக்கனிகளில் ஒன்றான பலா பழம் சீசன் துவங்கியுள்ளது. தமிழகத்தில் பண்ருட்டி பகுதியில் விளையும் பலா பழத்திற்கு தனி சுவை உண்டு. தற்போது பலா அறுவடை நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் விற்பனைக்கு கேரளாவில் இருந்து பலா பழம் கொண்டு வரப்படுகிறது. கேரளா... |
தமிழகம் | திருச்சியில் எரிக்கப்பட்ட விதவைப்பெண் சாவுகள்ளக்காதலன் மீது கொலை வழக்குப்பதிவு | திருச்சி: திருச்சியில் கள்ளக்காதலனால் எரிக்கப்பட்ட விதவைப்பெண்ணும் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்தவர் பூபதி (30). விதவையான இவருக்கு பசுபதி (8) என்ற மகனும், பவித்ரா (6) என்ற மகளும் இருந்தனர். பூபதிக்கும், காந்திமா... |
தமிழகம் | தண்ணீர் குழாய் அமைக்கும் பணி: போக்குவரத்துக்கு தடை | தென்காசி:தென்காசியில் தண்ணீர் குழாய் அமைக்கும் பணிக்காக ரயில்வே ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக ரயில்வே ரோடு வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் எளிய ரக வாகனங்கள் மட்டும் ரயில்வே ரோட்டில் செல்ல அனுமதிக்கப... |
தமிழகம் | மகா மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல் விழா | ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் கீழக்கொண்டயம்பேட்டை பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமகாமாரியமமன் கோவில் பூச்சொரிதல் விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பக்தர்களின் அலகு குத்தி காவடி எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கின்றது. பிறகு அம்மன... |
தமிழகம் | கரிவலம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்இல்ல திருமண வரவேற்பு விழா | திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் தேவா (எ) தேவதாஸ் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.கரிவலம்வந்தநல்லூர் ஓய்வு தலைமையாசிரியர் ராஜேந்திரன் மகன் சிவப்பிரகாஷ், ஓட்டல் அதிபர் முருகன் மகள் விக்னேஸ்வரி ஆகியோர் திருமண வரவேற்பு விழா கரிவலம்வந்தநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருமண மண்டபத்... |
தமிழகம் | உப்பாற்று பாலத்திலிருந்து வேன் கவிழ்ந்து ஒருவர் பலி | மண்ணச்சநல்லூர்: சமயபுரம் அருகே டிராவல்ஸ் வேன் பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் பலியானார். 15பேர் படுகாயமடைந்தனர். சென்னை-அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 15 பேர் நேற்று முன்தினம் தேக்கடிக்கு சுற்றுலா செல்வதற்காக மஹிந்திரா வேனில், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சென்றனர். வேனை சென்னை மணலியைச் சேர்ந்த சையது ப... |
தமிழகம் | லாரி மீது லாரி மோதல் கிளீனர் பரிதாப பலி | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே நேற்று அதிகாலை நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளீனர் பலியானார். ஜெயங்கொண்டத்திலிருந்து எள் ஏற்றிய லாரி மதுரைக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. துவரங்குறிச்சி அருகேயுள்ள சேத்துப்பட்டி அருகே வரும்போது லாரியை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் சுப்ரமணி(27... |
தமிழகம் | திமுக.,தனியாக தேர்தலை சந்தித்தாலும்தனிப்பெரும்பான்மை கிடைக்கும்: கி.வீரமணி ஆரூடம் | தென்காசி:தமிழகத்தில் திமுக தனித்து தேர்தலை சந்தித்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கக்கூடிய வகையில் பொதுமக்கள் மனநிலை இருப்பதாக திராவிடக் கழக பொது செயலாளர் கி.வீரமணி தெரிவித்தார்.குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் நிகழ்ச்சிக்கு நேற்று வருகை தந்த திராவிட கழக பொது செயலாளர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-மத்தியில... |
தமிழகம் | திருச்சியில் டி.பி.எல்., 20-20 போட்டி முத்தையா முரளிதரன் நேரில் வாழ்த்து | திருச்சி: திருச்சியில் நேற்று துவங்கிய வாசன் எஸ்டேட்ஸ் டி.பி.எல்., 20-20 போட்டியின் மூன்றாவது ஆட்டத்தை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் துவக்கிவைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சியில் மேப் டிரஸ்ட் சார்பில், நடத்தப்படும் வாசன் எஸ்டேட்ஸ் டி.பி.எல்., 20-20 கிரிக்கெட் போட்டி நேற்று காலை பெல் நி... |
தமிழகம் | இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் கடத்திய விவகாரம் விரிவான விசாரணைக்கு ஐ.ஜி., உத்தரவு | திருச்சி: வெளிநாட்டில் வேலைபார்த்தவரின் மனைவியைக் கடத்தி வைத்துள்ளதாக புகார் கூறப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மீது விரிவான விசாரணை நடத்த மத்திய மண்டல ஐ.ஜி., (பொறுப்பு) வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விசாரணை அதிகாரியாக அரியலூர் ஏ.டி.எஸ்.பி., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
... |
தமிழகம் | கொடிக்குறிச்சி யு.எஸ்.பி.பள்ளி: 100 சதவீதம் தேர்ச்சி | சுரண்டை:பிளஸ் 2 பொது தேர்வில் கொடிக்குறிச்சி யு.எஸ்.பி.பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. பள்ளியில் 11 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து பேரும் முதல் வகுப்பில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவி சீதாலெட்சுமி 1114 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம... |
தமிழகம் | ஹெல்மெட் கொள்ளையர் பெண்ணிடம் செயின் பறிப்பு | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர்கள் இரண்டரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரோ புளோராணி (23). இவருக்கு இன்று ஞாயிறு திருமணம் நடக்கவுள்ளது. இதற்காக அவர் நேற்றுமுன்தினம் தனது தோழியுடன் திருவானைக்காவல் பெரியார் நகரில் உள்ள அலங்காரகடை... |
தமிழகம் | சுப்புலாபுரம் பள்ளிக்கு போதுமானஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை | திருவேங்கடம்:சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளிக்கு போதுமான ஆசிரியப் பணியிடங்கள் வழங்க முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.ப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் 476 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதற்கு அரசு அனுமதி வழங்கிய 7 ஆசிரிய... |
தமிழகம் | திருச்சி அருகே வாலிபர் கொலையால் பரபரப்பு | திருச்சி: திருச்சி அருகே புள்ளம்பாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பதை கண்டறிய போலீஸார் முயற்சித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லக்குடி-பளிங்காநத்தம் சாலையில் நேற்றுமுன்தினம் காலை 30வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடைய கழுத்திலும், உடலிலும் ... |
தமிழகம் | குருவிகுளம் யூனியனில் திட்டபணிகளுக்கு நிதி ஒதுக்கீடு | திருவேங்கடம்:குருவிகுளம் யூனியன் குழு சிறப்பு கூட்டத்தில் 32 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக உள்கட்டமைப்பு திட்ட பணிகள் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.குருவிகுளம் பஞ்., யூனியன் குழு சிறப்பு கூட்டம் யூனியன் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் குழு தலைவர் விசுவாமித்திரன் தலைமை வகித்தார். ... |
தமிழகம் | விவசாயிகளுக்கு மானிய விலையில் மருந்து ஸ்பிரேயர் | மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் வட்டாரத்தை சேர்ந்த பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள், பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.கைத்தெளிப்பான்கள் மானிய விலையில் ரூ.800க்கும், விசைத்தெளிப்பான்கள் மானிய விலையில் ரூ.2000க்கும் மண்ணச்சநல்லூர் வேளாண்மை விரிவாக்க ம... |
தமிழகம் | குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை | ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சியில் தொற்று நோய் பராவமல் இருக்க காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும். தனியார் லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை பொது மக்கள் வாங்கி பருக வேண்டாம்,' என , ராமநாதபுரம் கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கேட்டுகொண்டுள்ளார்.
... |
தமிழகம் | கயிலை விநாயகர் கோயிலில் 25ம் தேதி வருஷாபிஷேகம் | தென்காசி:தென்காசி அருகே கயிலை விநாயகர் கோயிலில் வரும் 25ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது.தென்காசி அருகே ஆய்க்குடி ரோட்டில் கயிலை விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 25ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. 10.30 மணி முதல் 12 மணிக்குள் கயிலை விநாயகருக்க... |
தமிழகம் | மே 28ல் குறைதீர் நிகழ்ச்சி | திருவாடானை:திருவாடானை தாலுகா புல்லூர் குரூப் நகரிகாத்தான் கிராமத்தில் மே 28ம் தேதி, மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் கணேசன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற உள் ளது. நகரிகாத்தான், மல்லனூர், ஆக்களூர் கிராம மக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், என, தாசில்த... |
தமிழகம் | சவர தொழிலாளர்கள் சங்க கூட்டம் | தென்காசி:கடையநல்லூரில் மருத்துவ சவர தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.கடையநல்லூர் நகர மருத்துவ சவர தொழிலாளர்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழகத்தில் மீண்டும் மேலவை கொண்டு வர இருக்கும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ சவர தொழிலாளர் இன மக்க... |
தமிழகம் | ஆசிரியர் கவுன்சலிங்கில் தொடரும் சர்ச்சை : தகுதியற்றோருக்கு பதவி உயர்வு | திருச்சி: திருச்சியில் நடந்து வரும் ஆசிரியர் கவுன்சிலிங்கில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பணிமூப்பில்லாத தகுதியற்றோருக்கு பதவி உயர்வு வழங்கியதாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் புகார் தெரிவித்தனர். திருச்சி சையது முர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக... |
தமிழகம் | ராஜீவ் நினைவு தினம் | ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் 19வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் லோக்சபா தொகுதி காங்., தலைவர் கருசுப்பிரமணியன் உட்பட பலர் ரத்த தானம் செய்தனர். மாவட்ட தலைவர் ரவிசந்திர ராமவன்னி, ஹசன்அலி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ரவி, துல்கீப், நகர் தலைவர் முத்துராமலிங்கம், மாணவர் காங்., மா... |
தமிழகம் | உண்ணாவிரதம் | பரமக்குடி:நேருஜி மைதானத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மோதிலால் தலைமையில் நடைபெற்ற போராட்டத் தில், ஏஐடியுசி மாவட்ட தலைவர் பெருமாள், குப்புச் சாமி, மோதிலால் முன் னிலை வகித்தனர்.
அண்ணா தொழிற்சங்கத் தைச் சேர்ந்த அய்யான், கிருஷ்ணமூர்த்தி உட்பட பல்வேறு சங்... |
தமிழகம் | கரூரில் பல்வேறு அமைப்பினர் ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு | கரூர்: கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.கரூர் பஸ் ஸ்டாண்டு அருகில், வைத்திருந்த ராஜீவ் திருஉருவ படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கரூர் அரசு மருத்துவமனையில் சட்... |
தமிழகம் | பெண்ணுக்கு சிறுநீரக ஆப்ரேஷன்: டி.என்.பி.எல்., நிதியுதவி வழங்கல் | வேலாயுதம்பாளையம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்.,) அறக்கட்டளை சார்பில், சிறுநீரக ஆப்ரேஷன் செய்வதுக்கு பெண் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.கரூர் மாவட்டம், புதுக்குளத்துப்பாளையம், கட்டபொம்மன் தெருவில் வசித்து வரும் கவிதா என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்... |
தமிழகம் | விளையாட்டு போட்டி | லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பிள்ளப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் இப்போட்டியில் குழந்தைகளின் திறமை முன்னேற்றத்துக்கான செயல்திட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றுள் பேச்சு, எழுத்து, ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. பிள்ளப்பாள... |
தமிழகம் | இன்ஜினியரிங் விண்ணப்பங்கள் வினியோகம் | ராமநாதபுரம்:ராமநாதபுரம் செய்யதம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 26 முதல் வழங்கப்பட உள் ளது. டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி., படித்தவர்கள் கவுன்சிலிங் மூலம் இன்ஜினியரிங் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு சேர்ந்து படிக்க இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களு... |
தமிழகம் | குளித்தலை மஹா மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி | குளித்தலை: குளித்தலை ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது.குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில், கடந்த இரண்டாம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 16ம் தேதி பெரியபால்குடம், அரண்மனை மாவிளக்கு, 18ம் தேதி தேர்வடம் பிடித்தல், பூக்குழி இறங்குதல், 20ம் தேதி முத்துபல்லக்கு நிகழ்... |
தமிழகம் | கோயில் மணி திருட்டு | பரமக்குடி:பரமக்குடியை அடுத்த அரியனேந்தல் கிராமத்தில் உள்ள கருமலையான் கோயிலில் கட்டப்பட்டிருந்த 9000 ரூபாய் மதிப் புள்ள வெண்கல மணி திருடப்பட்டுள்ளது. தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | காட்டுமுன்னூர் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் | க.பரமத்தி: க.பரமத்தி அருகே காட்டுமுன்னூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மதுரை வீரன், சேடச்சியம்மன், கன்னிமார் சுவாமி கோவில்களின் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட காட்டுமுன்னூர் ஸ்ரீமதுரை வீரன், சேடச்சியம்மன், கன்னிமார் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சிதலடைந்திருந்த கோவிலை ஏழு இலட்... |
தமிழகம் | விழிப்புணர்வு நாடகம் | திருப்புத்தூர்:கும்மங்குடி தமிழ்நாடு கல்வியியல் கல்லூரியில், கல்வி விழிப்புணர்வு நாடகம், மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. குன்றக்குடி தருமை பள்ளி கணித ஆசிரியை கலையரசி தலைமை வகித்தார். மின் பொறியாளர் அருண் மொழி முன்னிலை வகித்தனர். |
தமிழகம் | துப்பாக்கி சுடும் பயிற்சி | காரைக்குடி: பள்ளி, கல்லூரி என். சி.சி., மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் நடந்தது.சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 10 நாட்கள் பயிற்சி பெறுகின்றனர்.
துப்பாக்கி சுடுதல், மேப் ரீடிங், தடை தாண்டுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். கர்னல் நஞ்ச... |
தமிழகம் | கரூர் அருகே வேன் கவிழ்ந்து 28 பேர் காயம் | கரூர்: கரூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 28பேர் காயமடைந்து, சிகிச்சைப் பெறுகின்றனர்.கரூர் மாவட்டம் சேங்கல் அடுத்துள்ள சின்னகிணத்துப்பட்டி ஸ்ரீ பகவதியம்மன் கோவிலில் வைகாசித் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வருவதுக்காக, "407' வேனில், மதுக்கரை செல்லாண்டிம்மன... |
தமிழகம் | மார்க்சிஸ்ட் நகர் குழு கூட்டம் | தேவகோட்டை: மார்க்சிஸ்ட் கட்சி நகர் குழு கூட்டம், நிர்வாகி தேவி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், செயற்குழு உறுப்பினர் மாணிக்கம், தாலுகா செயலாளர் செல்வராஜ், நகர் செயலாளர் ஸ்டாலின், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு வசதி இல்லை. இதனால் ஏஜன்ட்களிடம் டிக்கெட் வா... |
தமிழகம் | எச்.ஐ.வி., பாதித்தோரின் குழந்தைகளுக்கு காப்பீடு | சிவகங்கை: எச்.ஐ.வி.,- எய்ட்ஸ் பாதித்தோர் நலச்சங்க தலைவர் சாந்தி அறிக்கை: இந் நோயால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு, இலவச காப்பீடு செய்யப்பட உள்ளது. வயது 15 க்குள் இருக்கவேண்டும்.
அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள முடியும். இத்திட்டம் வரும் 28ம் தேதிக்குள் முடிகிறது. விண்ணப்பம் வேண்டுவ... |
தமிழகம் | சுகாதார வளாகம் கட்ட கோரிக்கை | திருப்புவனம்: திருப்புவனம் புதூரில் மகளிர் சுகாதார வளாகம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு பொது கழிப்பறை வசதி இல்லை. பிரமனூர் கால்வாயை ஒட்டியுள்ள வி.ஏ.ஒ., அலுவலகம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இப்பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதில் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
திறந்த வெளியில் கழி... |
தமிழகம் | சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா நிறைவு | மானாமதுரை:மானாமதுரையில் மூன்று நாட்கள் நடந்த சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா நேற்று நிறைவடைந்தது. கடந்த 20 ம் தேதி துவங்கிய விழாவில், கர்நாடக சங்கீத கலைஞர்கள், சதாசிவருக்கு ஆராதனை செய்தனர். மகா ஆராதனை நாளான நேற்று, காலை 7 மணிக்கு உஞ்சவிருத்தி; 9 மணி முதல், 108 மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் ... |
தமிழகம் | காலிப்பணியிடங்களால் தொய்வு சான்றிதழ் கிடைக்காமல் பரிதவிப்பு | மானாமதுரை:வருவாய் துறையில் காலி பணியிடங்களால், மானாமதுரை தாலுகாவில் சான்றிதழ் கிடைக்காமல், மக்கள் பரிதவிக்கின்றனர். வருமானம், இருப்பிட சான்றுகள், அரசு நலத்திட்டங்களுக்கான கையெழுத்து பெற, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமானோர் வருகின்றனர்.
ஆனால், பணியிடங்கள் காலியாக இருப்பதால், சான்று கிடைக்காமல் ம... |
தமிழகம் | பொதுக்குழு கூட்டம் | பென்னாகரம்: பென்னாரம் அடுத்த மஞ்சிநாய்க்கனள்ளியில் குறிச்சான் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க தலைவர் சிக்குராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜோதிரங்கன், செயலாளர் முத்தப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ராயப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். "குறிஞ்சான் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் உடனடியாக வழங்கிட வேண்டும்.... |
தமிழகம் | காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது | காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி பகுதியில் சிவக்குமார் என்பவரது சொந்தமான நிலத்தில் தனியார் நிறுவன மொபைல்ஃபோன் டவர் உள்ளது. டவரில் ஏறி அதிலிருந்த எட்டு அடி அளவிலான காப்பர் வயரை வாலிபர் ஒருவர் எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார். அப்போது, அங்கு நின்ற சிவக்குமார் அவரை பிடிக்க முற்பட்ட போது தப்பியோடினார். பொதுமக்கள்... |
தமிழகம் | கால் தவறி கிணற்றில் விழுந்த விவசாயி பலி | அரூர்: அரூர் அருகே கால் தவறி கிணற்றில் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.அரூர் அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் விவசாயி காமராஜ் (45). இவருக்கு சொந்தமான தடுப்பு சுவர் இல்லாத கிணற்றின் அருகே கால்நடைகளுக்கு காமராஜ் நேற்று முன்தினம் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தடுக்கி கிணற்றுக்குள் விழுந்தார். இதில... |
தமிழகம் | முத்து மாரியம்மன் கோவில் ஆண்டு விழா | அரூர்: அரூர் போலீஸ் குடியிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் 32ம் ஆண்டு விழா நடந்தது.டி.எஸ்.பி., சீனிவாசன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். இதனையடுத்து கூழ் ஊற்றுதலும், அக்னி கரகம், எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பின்னர் கடைவீதி விநாயகர் கோவிலில் சக்தி அழைத்து பூங்கரகத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான ப... |
தமிழகம் | எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.ஐ., பணி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் விண்ணப்பிக்கலாம்.எஸ்.பி., சுதாகர் வெளியிட்ட செய்திகுறிப்பு:தமிழகத்தில் காலியாக உள்ள எஸ்.ஐ., பணிக்கு வரும் ஜூலையில் தேர்வு நடக்கிறது. தர்மபுரி மாவட்டம் கல்வியற... |
தமிழகம் | இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம் | பாலக்கோடு: பாலக்கோடு அருகே இளம் வயது திருமணம் அதிகாரிகள் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.பாலக்கோடு அடுத்த தொட்டபாவளியை சேர்ந்தவர்கள் செல்வம், மல்லிகா தம்பதி. இவர்களது 15 வயது மகளுக்கும், பி.செட்டியைஅள்ளியை சேர்ந்த சரோஜா மகன் முனிராஜ் (27) என்பவருக்கும் நாளை (மே 24) வெள்ளிச்சந்தை வெங்கடாஜலபதி கோவிலில் திருமணம் நடத்த... |
தமிழகம் | இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாது தலைமை வகித்தார். பர்கூர் ராஜிவ், ஊத்தங்கரை வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் ராஜா வெங்கட்ராமன் ... |
தமிழகம் | இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. தயொட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. பாலக்கோடு பார்லிமென்ட் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த ரத்ததான முகாமுக்கு, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ராஜபிரகாஷ் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ... |
தமிழகம் | ரூ.40 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல் | ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு விழாவில், பயனாளிகளுக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பு நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., பிரபாகர் வழங்கினார். தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்கி நடந்து வந்தது. தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகள், புகார் தொடர்பாக... |
தமிழகம் | கிராமங்களில் மாசு கலந்த குடிநீர் அபாயம்மாவட்ட நிர்வாகம் தொடர் அலட்சியம் | தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பல கிராமங்களில் கோடை வெயில் உக்கிரம் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பாதுகாப்பற்ற குடிநீரை மக்கள் பருகும் அவலம் உள்ளது. குடிநீர் பிரச்னை குறித்த புகார்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர் அலட்சிய போக்கு காட்டி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கிராம பகுதிகளை அதிகம் உள்ளடக்க... |
தமிழகம் | ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சம் மதிப்பு நகை கொள்ளை | ஓசூர்: ஓசூரில் வீட்டு பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தின்னூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராம்மோகன் (42). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா.
இவர் தனது இரு மகன்களுடன்... |
தமிழகம் | சாக்கடை நீர் கலப்பு | எரபையனஅள்ளி காலனி பகுதியில் பல இடங்களில் மெயின் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் குடிநீரில் கலந்துள்ளது. அந்த நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யாத நிலையில், சாக்கடை கழிவுகள் மெயின் குழாய்களில் தேங்கியிருந்துள்ளன. அந்த கழிவுடன் திடீரென குடிநீர் விநியோகம் செய்த... |
தமிழகம் | தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணை தலைவர் காஞ்சனா கமலநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார்.
"தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகி... |
தமிழகம் | மாசு கலந்த குடிநீர் குடித்த 3 பேர் பரிதாப பலி : பென்னாகரம் அருகே பரிதாப சம்பவம் | பென்னாகரம்: பென்னாகரம் அருகே மாசு கலந்த குடிநீர் பருகிய மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர். 34 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட எரபையனஅள்ளி பஞ்சாயத்து. இப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட காலனி பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு எரப... |
தமிழகம் | அரசு பள்ளிகளில் முதலிடம்: மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் ப்ளஸ் 2 தேர்வில் முதல் இடம் பிடித்த மற்றும் தமிழ்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாரத் கல்வி அறக்கட்டளை சார்பில் தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் ப்ளஸ் 2 தேர்வில் பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சகுந்... |
தமிழகம் | கள்ளச்சாராயம் விற்ற பெண்: 3 மாதம் ஊருக்குள் நுழைய தடை | கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண் மூன்று மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து போச்சம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது. போச்சம்பள்ளி அடுத்த பாரூர் போலீஸ் சரகத்தில் அதிக அளவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடந்து கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமுல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கர்... |
தமிழகம் | லாரி - கார் மோதியதில் சேலம் நீதிபதி காயம் | வேலூர்: வேலூர் அருகே லாரி மீது கார் மோதியதில், சேலம் நீதிபதி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதி ராஜசேகர் (54), அவர் மனைவி விமலா (52) மற்றும் அலுவலக உதவியாளர் ஜார்ஜ் (39) ஆகியோருடன் வேலூர் வழியாக "சவேரா' காரில் சென்னை சென்றார். காரை ராஜசேகர் ஓட்டினார். நேற்று காலை 11 மணிக்கு வேலூர் அடுத... |
தமிழகம் | மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி | ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் மலை கிராமம். இந்த கிராமத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் இருளர் இன மக்கள். இவர்கள் அடந்த காட்டுப்பகுதிக்கு சென்று தேன் எடுப்பது மற்றும் மூலிகை பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும்... |
இந்தியா | தேக்கடி படகு நிறுத்த பகுதிக்கு பயணிகளிடம் கெடுபிடி வசூல் | தேக்கடி: தேக்கடியில் படகு சவாரி செய்யாதவர்களிடமும், நுழைவுக்கட்டணம் என்ற பெயரில் கெடுபிடி வசூல் செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் புலம்பி வருகின்றனர். தேக்கடியில், சுற்றலா பயணிகள் விரும்பி செல்வது படகு சவாரி. சில மாதங்களுக்கு முன் நடந்த படகு விபத்திற்குப் பின், சுற்றுலா பயணிகளிடையே படகு சவாரி சற்று அச்சத்தை ஏற்படுத்தியு... |
தமிழகம் | மக்கள் தொடர்பு திட்ட முகாம் | ஓசூர்: ஓசூர் அடுத்த பி.செட்டிப்பள்ளியில் வரும் 26ம் தேதி மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடக்கிறது.தாசில்தார் மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் தாலுகா மத்திகரி உள்வட்டத்தை சேர்ந்த எஸ்.முதுகானப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட பி.செட்டிப்பள்ளி கிராமத்தில் வரும் 26ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் சண்முகம்... |
தமிழகம் | குழந்தைகள் கடத்தி விற்பனை: பாதிரியார் கைது | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குழந்தையை கடத்திய, சென்னையை சேர்ந்த கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாதிரியாரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு பாதிரியாரை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் சென்ற 18ம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பேரிகையை சேர்ந்த ராமக்கா என்பவரத... |
தமிழகம் | கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாப பலி | திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.பெரணமல்லூர் அடுத்த சென்னந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (43). இவர் நேற்று முன் தினம் அவரது விவசாய நிலத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இருப்பினும் அ... |
தமிழகம் | தீயில் கருகிபெண் சாவு | திருவண்ணாமலை: தானிப்பாடியில் இளம் பெண் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் பலத்த தீக்காயம் அடைந்தார். தானிப்பாடியை சேர்ந்தவர் திருப்பதி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த தாஜூனும் (25), பெங்களூருவில் ஆசிரியர் பயிற்சி படித்தனர் .அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த... |
தமிழகம் | தொழிலாளி பலி | திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு மேல்செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் மகபூப்பாஷாவிடம் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று முன்தினம் இருவரும் தூர் வாரிக்கொண்டிருந்தனர். அப்போது, டிராக்டர் மூலம்... |
தமிழகம் | மறவமங்கலத்தில் பஸ் ஸ்டாண்ட் பயணிகள் எதிர்பார்ப்பு | மறவமங்கலம்:மறவமங்கலம் ஊராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தப்பட் டுள்ளது.அத்தியவாசிய பொருட் கள் வாங்கவும், பள்ளிக்காகவும் சுற்றுப்புறத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இங்கு வருகின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்ட் இன்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து இப்பகுதியினர் கூறியதாவது:
சந்திரன்: பஸ் ஸ்டாண்ட்க்கு ஒ... |
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கு இலவச பயிற்சி தன்னார்வ நிறுவனங்களுக்கு அனுமதி | சிவகங்கை:மாற்று திறனாளிகளின் சுய வேலைவாய்ப்பு தகுதியை மேம்படுத்தும் வகையில், மாவட்டம் தோறும் தொழிற் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.இதற்காக, இலவச தங்கும் வசதியுடன் கூடிய தொழிற் பயிற்சி கூடங்களை தன்னார்வ நிறுவனங்கள் செயல்படுத்தும்.
முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, கோவை, திருச்சி, ... |
தமிழகம் | குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் பெற்று பயனடைய அழைப்பு | தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகம் தலைமையில் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நடந்தது. வருவாய்த்துறை அலுவலர்களின் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் தமிழக அரசின் உத்தரவுப்படி நடப்பாண்டு முதல் குடும்பத்தின் முதல் பட்டதாரி உயர் கல்வி பயில்வதுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என... |
தமிழகம் | வேலை உறுதி திட்டத்தில் 494 பணிக்கு ரூ.16.89 கோடி அனுமதி: கலெக்டர் தகவல் | தஞ்சாவூர்: தஞ்சை யூனியன் சூரக்கோட்டை, மடிகை பஞ்சாயத்துக்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தூர்வாரும் பணிகள் நடப்பதை கலெக்டர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார். சூரக்கோட்டை பஞ்சாயத்து கீழவஸ்தாசாவடி பாசன வாய்கால் நான்காயிரத்து 300 மீட்டர் நீளத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் 50 பணியாளர்கள் மூலம் தூ... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்ற மே 26 வரை கெடு: தஞ்சை கலெக்டர் அதிரடி உத்தரவு | தஞ்சாவூர்: தஞ்சை நகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளவர்கள் மே 26ம் தேதிக்குள் ஆக்ரமிப்புக்களை அகற்றிக் கொள்ள வேண்டும், என கலெக்டர் சண்முகம் தெரிவித்தார். தஞ்சை நகரில் பெரிய கோவில் கட்டி ஆயிரமாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதால் பல்வேறு வளர்ச்... |
தமிழகம் | இப்கோ - டோக்கியோ நிறுவன காப்பீடு வசதி கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்த அழைப்பு | தஞ்சாவூர்: கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியுடன் இப்கோ - டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு 2009 அக்டோபர் 20ம் தேதி முதல் வங்கி மூலம் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தனி நபர் விபத்து காப்பீடு, வாகனங்கள் காப்பீடு, மருத்துவர் காப்பீடு மற்றும் இதர பொது காப்பீடு திட்டங்களும் செ... |
தமிழகம் | கோயில் கட்டுவதாக ஆதிதிராவிடர் இடம் மோசடி: தாசில்தார் விசாரணை | காரைக்குடி:பலவான்குடியில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆதிதிராவிடருக்கு சொந்தமான இடத்தை மீட்க வலியுறுத்தப்பட்டுள்ளது.காரைக்குடி தாசில்தாரிடம் அப்பகுதியினர் கொடுத்த மனு:பலவான்குடி- ஆத்தங் குடி ரோட்டில் ஆதிதிராவிடர் குடியிருப்பு இருந்தது. இந்த இடத்தில் ஒரு தரப்பினர் கோயில் கட்டுவதாக கூறியதையடுத்து, குடியிருப்பு காலி செய்யப்பட்டது... |
தமிழகம் | நரிக்குறவர் வீடுகள் தீயில் நாசம் | மன்னார்குடி: மன்னார்குடி நரிக்குறவர் காலனியில் 120 வீடுகள் உள்ளன. இந்த இடம் ரயில்வேத்துறைக்கு சொந்தமானது. தற்போது, நீடாமங்கலம் - மன்னார்குடி ரயில்பாதை அமை க்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை ரயில்வே அதிகாரிகள் மூன்று பேர், நரிக்குறவர்களை சந்தித்து, ""மே 25ம் தேதிக்குள் இந்த இடத்தை காலி செய்து விட வேண்டும்,'' என... |
தமிழகம் | செம்மொழி கருத்தரங்கு | திருப்புத்தூர்:முற்போக்கு எழுத் தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தக தின கண்காட்சி, செம்மொழி கருத்தரங்கு திருப்புத்தூரில் நடந்தது.எழுத்தாளர் சுந்தரராசன் தலைமை வகித்தார். நிர்வாகி முத்துக்குமாரன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் திருவாசகன் வரவேற்றார்.
கவுரவ தலைவர் மாணிக்கம்,விவசாயிகள் சங்க செயலாளர் முத்துராமலிங்கம்... |
தமிழகம் | தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகி தமிழ்மணி உட்பட பலர் பேசினர். அரசுத்துறையில் காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இதுக... |
தமிழகம் | சேவுகப்பெருமாள் திருக்கல்யாணம் | சிங்கம்புணரி:சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி திரு விழாவில், நேற்று முன்தினம் இரவு திருக் கல்யாணம் நடந்தது.கோயில் முன் மண்டபத்தில் சுவாமியை ஊஞ்சலில் வைத்து சிவாச் சாரியார்கள் தாலாட்டினர். பிறகு திருக்கல்யாண உத்ஸவம் நடந்தது. கன்னி பெண்கள் மஞ்சள், குங் குமம், தாலிக்கயிறு வழங்கி நேர்த்தி செலுத் தினர். பெண்கள் மாவிளக்கு வைத்த... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிக்கு இலவச செயற்கை கால்கள் வழங்கல் | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், கோவை மிட்டவுன் ரோட்டரி மாவட்டம், ரோட்டரி சங்கம் வண்டாலியா சார்பில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால் பொருத்தும் விழா திருத்துறைப்பூண்டியில் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜாராமன் வரவேற்றார். திருவாரூர் கலெக்டர் சந்திரசேகரன் மாற்றுத்திறனா... |
தமிழகம் | உழைக்கும் பெண்கள் பேரவை கூட்டம் | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உழைக்கும் பெண்கள் தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சி.ஐ.டி.யூ., உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைச் செயலாளர் செல்வந்திரி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மகாலட்சு, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மனோகரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம... |
தமிழகம் | தீவிரவாத எதிர்ப்பு நாள் | சிவகங்கை:கலெக்டர் அலுவலகத் தில் தீவிரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப் பட்டது. கலெக்டர் (பொறுப்பு) சிவஞானம் தலைமை வகித்தார். அதிகாரிகள், ஊழியர் பங்கேற்றனர். |
தமிழகம் | டவுன் பஸ் பயணியிடம் ரூ.9,500 பிக்பாக்கெட் | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருந்து டவுன் பஸ்ஸில் சென்ற வியாபாரியிடம் ஒன்பதாயிரத்து 500 ரூபாய் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது. தஞ்சை அடுத்த திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). வாழை இலை வியாபாரி. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தனது மகளுக்கு தங்க நகை வாங்க பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை எடுத்துக... |
தமிழகம் | லாரி மோதிய விபத்தில் இருவர் பலி | தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த மகாராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் தனவேந்தன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் சரபோஜி (24). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் பல்சர் பைக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திருக்காட்டுப்பள்ள... |
தமிழகம் | இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டம் | நெல்லிக்குப்பம்: தரமில்லாமல் பணிகள் நடப்பதால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்ணாகிராமம் ஒன்றிய இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் பாரதி வரவேற்றார். மாவட்ட தலைவர் பாலவீரவேல் சிறப்புரையாற்றினார். செயலாளர் மணிமா... |
தமிழகம் | விவசாயிகள் குறைதீர் கூட்டம் | சிவகங்கை:விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) சிவஞானம் தலைமை வகித்தார். தோட்டக்கலை துறையில் செயல்படும் திட் டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. திருப்புவனம், திருப்பாச்சேத்தியில் வெற்றிலை சாகுபடி அழிய கூடிய நிலையில் உள்ளது குறித்து, விவசாயிகள் தெரிவித்தனர். மாட்டு தீவனங்கள... |
தமிழகம் | நியமனம் | சிதம்பரம்: தே.மு. தி.க., திட்டக் குடி சட்டசபை தொகுதி பொறுப் பாளராக அக் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முகம்மது அயூப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். புதிய பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள அவரை அக்கட்சியின் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்தினர். |
தமிழகம் | கல்லூரி ஆண்டு விழா | காரைக்குடி:தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. செயலாளர் தண்டபாணி வரவேற்றார். தாளாளர் பெரியதம்பி வரவேற்றார். வளாகத் தேர்வில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் பழனியப்பன், லியோபெலிக்ஸ், சரவணன், பாஸ்கரன், கார்த்திகேயன், புனிதா பங்கேற்றனர். பேராசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார். |
தமிழகம் | வீரமாகாளி அம்மன் கோவில் கிடாவெட்டு | கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் வீரமாகாளி அம்மன் கோவில் கிடா வெட்டுத்திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு முதல் நாள் கிராமப்பகுதிகளில் மாட்டு வண்டிகளில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வந்தனர். நேற்று அதிகாலை தேர்பவனி புறப்பட்டு மீண்டும் நிலையை அடைந்ததும், கோவில் பூசாரிகள் உருமி அடித்து, அருள்வரம் பெற்று ஒவ்வொர... |
தமிழகம் | உயர்கல்வித்துறை அமைச்சருக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் மனு | சிதம்பரம்: உயர்கல்வி படிக்க வன்னியர் (எம்.பி.சி.,) மாணவர்களுக்கு 35 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்ற புதிய ஆணையை வெளியிட வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து உயர்கல் வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்க தலைவர் மணிவண்ணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: ம... |
தமிழகம் | விவசாயிடமிருந்து உளுந்து நேரடி கொள்முதல் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உளுந்தினை அவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி, மாற்றுப் பயிர் சாகுபடி... |
தமிழகம் | இரண்டாமிட மாணவிக்கு பஞ்சாப் நேஷனல் பாங்க் பரிசு | சிதம்பரம்: பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் இரண் டாமிடம் பெற்ற சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு பஞ்சாப் நேஷனல் பாங்க் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. சிதம்பரம் வீனஸ் மெட் ரிக் பள்ளி மாணவி பிரியா பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அள வில் இரண்டாமிடம் பெற்றார். இதனை பாராட்டி பஞ்சாப் நேஷனல் பாங்க் சார்பில் பரிசு வழங்கப்பட... |
தமிழகம் | சொத்துப்பிரச்னையில் தந்தை கொலை: மகன்கள் வெறிச்செயல் | அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சரகம், கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரியப்பன்(60). இவருக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் நான்கு மகன்களும் உள்ளனர். நான்கு மகன்களில் மூவருக்கு திருமணமாகி விட்டது. மாரியப்பன் குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. சம்பவத்தன்று தங்களுக்கு சொந்தமான நிலத... |
தமிழகம் | அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | அரியலூர்: அரியலூரில் சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட கிளை சார்பில், அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் தலைமை வகித்தார். ஒன்றிய கன்வீனர் ஜெயராமன் வரவேற்றார்.
சமூக நலத்துறையில் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.