category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தண்டவாளம் விரிசல் : நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
கள்ளிக்குடி : திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் இரவு 9.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நெல்லையிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் சமத்துவபுரம் அருகேயும், கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் கள்ளிக்குடியிலும், பொதிகை எக்ஸ்பிரஸ் விருதுநகரிலும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் த...
தமிழகம்
மதுரையில் ஐம்பொன் சிலைகளுக்கு குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு மையம்
மதுரை : மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவிலில், மூன்று மாவட்ட கோவில்களின் ஐம்பொன் சிலைகளை பாதூக்க, 37 லட்சம் ரூபாயில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது. கள்வர் எச்சரிக்கை மணியுடன் கூடிய இம்மையம், 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் இருக்கும். தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத கோவில்களில் ...
தமிழகம்
குற்றாலத்தில் போலீஸ் சோதனை : குத்தகைதாரர்கள் 13 பேர் கைது
திருநெல்வேலி : குற்றாலத்தில் குளிக்க அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூனில் துவங்கும் சீசனுக்கு வரும் பயணிகளிடம் பல்வேறு வகைகளிலும் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய இடங்களில் வாகனங்கள் ந...
இந்தியா
தேசிய அரசியலில் பலம் பெறும் பகுஜன் சமாஜ்
புதுடில்லி:ராஜ்ய சபாவில் அதிக உறுப்பினர்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையை பகுஜன் சமாஜ் கட்சி பெற்றுள்ளது. இதனால் தேசிய அரசியலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.ராஜ்ய சபாவுக்கு புதிதாக 55 எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 14 மற்றும் 17ம் தேதிகளில் நடந்தது. இதில் உ.பி.,யில் ஆ...
தமிழகம்
மனைவி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்த கவுன்சிலர் பதவி நீக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர், தனது மனைவி பெயரில் கான்ட்ராக்ட் எடுத்தது தெரிய வந்ததால், அவரை பதவி நீக்கம் செய்து கமிஷனர் முத்துக்கண்ணு உத்தரவிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 27வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சந்தானமூர்த்தி. இவரது மனைவி சரோஜா, நகராட்சியில் ஒப்பந்தக்கரராக ப...
இந்தியா
கூச்சல் குழப்பத்திற்கு இடையே மசோதாக்கள் நிறைவேற்றம்
பெங்களூரு:சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவுக்கிடையிலும் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால் எதிர்க்கட்சியினர், மசோதா பேப்பர்களை கிழித்தெறிந்து சபையில் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சட்ட விரோத குவாரி நடவடிக்கை குறித்த விசாரணையை, சி.பி.ஐ., யிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தி தொடர்ந்து நான்கு நாட்களாக சட்டசப...
இந்தியா
ஜஸ்வந்த் சிங்கிற்கு இனி இரண்டாம் வரிசையில் இடம்
புதுடில்லி:பா.ஜ.,வில் இணைந்த பின்னும் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங், பார்லிமென்டின் பின்வரிசையில் அமர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.பா.ஜ.,வின் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த ஜஸ்வந்த்சிங் கடந்த லோக்சபா தேர்தல் வரை ராஜ்யசபாவின் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாக அவர் ...
தமிழகம்
ஆடி பொறந்தாச்சு : ஆடி ஸ்பெஷல்
நாளை ஆடி மாதம் பிறக்கிறது. தேவலோகத்தில் தை முதல் ஆனி வரை பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவுப் பொழுதாகவும் உள்ளது என்பது புராண நம்பிக்கை. இதன் அடிப்படையில் பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரமே ஆடிமாதப்பிறப்பு. இதனை தட்சிணாயண புண்ணியகாலம் என்பர். இந்த மாதத்தின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். மணவாழ்வு தரும் ஆடி...
தமிழகம்
லஞ்ச வழக்கில் சிக்கிய டி.எஸ்.பி., சிறையில் அடைப்பு : ஜாமீன் மனு தள்ளுபடி
நாமக்கல் : லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.,க்கு ஜாமீன் வழங்கக் கோரி, நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். நாமக்கலில் கோழிப்பண்ணை பிரச்னை தொடர்பாக, காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் நவீத், சண்முகம், ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வ...
தமிழகம்
பட்டுப்புழுக்களை கொல்லாமல் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை அறிமுகம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் எஸ்.கே.பி., பிரதர்ஸ் ஜவுளி நிறுவனம் பட்டுப் புழுக்களை கொல்லாமல் தயார் செய்யப்படும் அகிம்சா பட்டு நூலை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட பட்டு சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். பட்டுச் சேலைகள் தயாரிப்பதற்காக ஆயிரக்கணக்கான பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. ஒரு பட்டுச்சேலை உற்பத்தி செய்ய,...
தமிழகம்
1,000 டாக்டர்கள் பங்கேற்கும் மருத்துவ கருத்தரங்கம் : சத்ய சாய் நிறுவனம் நடத்துகிறது
சென்னை : தமிழக சத்ய சாய் நிறுவனம் சார்பில், சென்னை ராமச்சந்திரா பல்கலையில் நாளை, மருத்துவ சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்கின்றனர். சத்ய சாய் நிறுவனம் சார்பில் புட்டபர்த்தியிலும், பெங்களூரு ஒய்ட்பீல்டிலும் பிரமாண்டமாக இரண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் நிறுவப்பட்...
இந்தியா
ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சியினர் சஸ்பெண்ட்: துப்பாக்கி சூடு சம்பவத்தால் பெரும் அமளி
ஐதராபாத்:ஆந்திராவில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் நேற்று ஆந்திர சட்டசபையில் எதிரொலித்தது. எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், 57 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையும் மறு தேதி குறிப்பிடாமல் ...
இந்தியா
சிதம்பரம் - ஜோன்ஸ் முக்கிய பேச்சு
புதுடில்லி:மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் நேற்று சந்தித்துப் பேசினார். பயங்கரவாத எதிர்ப்பு விஷயத்தில் இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், இந்தியா வந்தார்...
தமிழகம்
சுயநலத்துடன் பொதுநல வழக்குகள் : தலைமை நீதிபதி எச்சரிக்கை
மதுரை : சுயநலத்துடன் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யக்கூடாது, என ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தது. தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி எம்.ஜெயபால் கொண்ட பெஞ்ச், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குகளை விசாரிக்கிறது. நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளுக்காக தாக்கலான ஏழு பொதுநல வழக்குகளை இந்த பெஞ்ச்...
இந்தியா
அமெரிக்கா போல இந்திய ரூபாய்க்கு இனி தனிச்சின்னம்
புதுடில்லி : இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம், அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளைப் போல இனி நமது கரன்சிக்கு என்று இதன் மூலம் பிரத்யேக அடையாளம் அமையும்; அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைக்கும் வரும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பொருளாதாரத் துறையில் இந்தியா வேகமாக ...
தமிழகம்
செமன்யாவுக்கு ஒரு நீதி; சாந்திக்கு ஒரு நீதியா?
மும்பை : ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வாங்கிய வீராங்கனை சாந்தியை(28) ஞாபகம் இருக்கிறதா? அவர் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற பிரச்னையில், அவர் விளையாடுவதற்கான தடை இன்னும் நீடிக்கிறது. ஆனால், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த கேஸ்டர் செமன்யா(21) மீதான தடை நீக்கப்பட்டு, அவர் விளையாட்டில் பங்கேற...
இந்தியா
துப்பாக்கி லைசென்ஸ்: கேட்டதும் இனி கிடைக்காது
துப்பாக்கி லைசென்ஸ் இனி கேட்டதும் உடனடியாக பெற முடியாது. போலீஸ் விசாரணை முடிந்த பின்பு பெறும் வகையில் அதற்கான சட்டத்தை திருத்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய அமைச்சரவை, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று கூடியது. அப்போது எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை விளக்கி நிருபர்களிடம் அமைச்சர் அம்...
தமிழகம்
அரசு வக்கீலை நியமிக்காததால் சுதாகரன் வழக்கு தள்ளிவைப்பு
சென்னை : மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணை, அரசு வக்கீல் நியமிக்கப்படாததால் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வரின் வளர்ப்பு மகனாக இருந்தவர் சுதாகரன். சின்ன எம்.ஜி.ஆர்., நற்பணி மன்றத்தை துவங்கினார். இந்த மன்றத்தின் செயலராக கோபுஸ்ரீதர் என்பவர் இருந்தார். மன்றத்தின் பணத்தை கையாடல் செய்...
General
பாக்., தளபதி அதிபருடன் சந்திப்பு
இஸ்லாமாபாத்:இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள் ளார். அங்கு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட் டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி, அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை ச...
தமிழகம்
போக்குவரத்துக் கழக உதவி பொறியாளர் பதவி : தகுதி குறித்த அப்பீல் மனு தள்ளுபடி
சென்னை : உதவி பொறியாளருக்கான தகுதி குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. விழுப்புரம் மாவட்டம் வெட்டிபெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன்; பி.இ., மெக்கானிக்கல் படிப்பில் 59 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றார். சேலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓரா...
இந்தியா
ம.பி., பா.ஜ.,வின் பிரமுகர் நீக்கம்
போபால்:ம.பியில், பா.ஜ., தலைவர்களில் ஒருவரான லஷ்மண்சிங், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.முன்னாள் எம்.பி.,யும், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலருமான திக் விஜய் சிங்கின் இளைய சகோதரருமான லஷ்மண்சிங், பா.ஜ.,வில் உறுப்பினராக இருந்துவந்தார். இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, மத்திய ...
தமிழகம்
போலி சான்றிதழ் மூலம் பி.இ - எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர்களுக்கு நெருக்கடி
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்துள்ள விவகாரத்தை அடுத்து, கடந்த ஐந்தாண்டுகளில் மாணவர் சேர்க்கையில் அளிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்களையும் சரிபார்க்க, சம்பந்தப்பட்ட துறையினர் முடிவெடுத்துள்ளனர். இதனால், பி.இ - எம்.பி.பி.எஸ்., படித்து வரும் மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது....
இந்தியா
பயங்கரவாதி ஹெட்லிக்கு எதிராக புது மனு தாக்கல்
புதுடில்லி : பயங்கரவாதி ஹெட்லி மற்றும் ராணாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கக் கோரி, டில்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை, தேசிய புலனாய்வு நிறுவனம் வாபஸ் பெற்றது. அதற்கு பதிலாக புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகளான டேவிட் ஹெட்லிக்கும், தகாவூர் உசேன் ராணாவுக்கும் மும...
இந்தியா
பீகாரில் கூட்டணி பலம்: லாலு பிரசாத் பேட்டி
புதுடில்லி:ராஷ்டிரிய ஜனதாதளம் - லோக் ஜனசக்தி கூட்டணி உறுதியாக உள்ளது என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலுபிரசாத் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:மதசார்பு என்று பா.ஜ.,வும், மதசார்பின்மை என்று காங்கிரசும் கூறிக்கொண்...
இந்தியா
ஷீரடி கோவிலுக்கு ரூ. 5 கோடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, 5 கோடி ரூபாயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இனி திருடர்கள் அல்லது பயங்கரவாதிகள் யாராவது கோவிலினுள் நுழைந்தாலே நிர்வாகிகள் உஷாராகி விட முடியும். ஷீரடி சாய்பாபா கோவிலில் சமீப காலங்களில் நடந்த 500 சங்கிலி பறிப்ப...
இந்தியா
நண்பர்களை கிண்டலடிக்க "இன்டர்நெட்' வசதி
புதுடில்லி : எட்டில் இருந்து 15 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகள், சக மாணவர்களை கேலி, கிண்டல் செய்வதற்காக இன்டர்நெட்டை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைய தலைமுறையினர் எதிர்நோக்கியுள்ள இந்த பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. டில்லியைச் சேர்ந்த 14 வயது மாணவி சுருதி (பெயர் மாற்றப்ப...
இந்தியா
210 ஆண்டு பழமை வாய்ந்த பொற்கோவில் கதவு பழுது பார்ப்பதற்காக அகற்றப்பட்டதால் எதிர்ப்பு
அமிர்தசரஸ் : சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலின் நுழைவாயிலிலுள்ள 210 ஆண்டு பழமை வாய்ந்த கதவு, பழுது பார்க்கும் பணிக்காக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கதவு சோமநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்ற பின்னணியும் தெரிய வந்துள் ளது. சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுவது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில்...
General
"இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலை காலி':மாறிவரும் ஜப்பானிய கம்பெனிகள்
டோக்கியோ: ஆங்கில வாசனையே அறியாத ஜப்பானியர்கள், தற்போது ஆங்கிலம் கற்றுக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர்.ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, உள்ளூரில் பல்வேறு நுகர்பொருட்களின் சந்தையும் குறைகிறது. அதனால், பல ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் சில்லறை வர்த்தகத்தை உலகளாவிய அளவில் கொண்...
இந்தியா
மும்பையில் குளோரின் கசிவு பாதிப்பு : சிகிச்சை பெற்றவர்கள் 65 பேர் டிஸ்சார்ஜ்
மும்பை : மும்பையில் குளோரின் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 பேர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மும்பை துறைமுகத்தின் ஒரு பகுதியான ஹாஜிபந்தர் என்ற இடத்தில், குளோரின் வாயு அடங்கிய சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து நேற்று முன்தினம் குளோரின் வாயு கசிந்தது. காற்றில் பர...
தமிழகம்
அ.தி.மு.க., கோரிக்கை மனு
சென்னை:தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை செயலரிடம் அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் இன்று வழங்குகின்றனர்.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு போக்குரவத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இதையொட்ட...
தமிழகம்
கனிமொழி தலைமையில் வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி:நெல்லையில் 77 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள வேலைவாய்ப்பு முகாமுக்கான பயிற்சியை, கனிமொழி எம்.பி., நேற்று துவக்கி வைத்தார்.நெல்லை மாவட்ட இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக, தி.மு.க., சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று துவங்கி, ஜூலை 18ம் தேதி வரை மூன்று நாட்கள், பாளையங்கோட்...
இந்தியா
ராணுவ வீரர்கள் முகாம் திரும்பினர் : பிரிவினை தலைவர்களுக்கு காவல்
ஸ்ரீநகர் : காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ராணுவ வீரர்கள், தங்கள் முகாமுக்கு திரும்பத் துவங்கியுள்ளனர். காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்ததால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 15 பேர் உயிரிழந்தனர். இதனால், துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்புப் படையினர் ...
தமிழகம்
முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
சென்னை : முக்கிய பதவிகளில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அலாவுதீன், அசோக் வரதன் ஷெட்டி, சோமநாதன், நிரஞ்சன் மார்டி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: நில சீர்திருத்தத் துறை கமிஷனர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தனி அதிகாரி, டான்சி நிறுவன தலைவர் ஆகிய பதவிகளில் இருந்த அலாவுதீன், அவற்ற...
தமிழகம்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றத்துடன் துவக்கம்
திருநெல்வேலி : சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழாவை ஒட்டி, நேற்று காலை 5.25 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்புபூஜைகள், வீத...
இந்தியா
உ.பி., அமைச்சர் நந்தி மீதான தாக்குதல்: 2 பேர் கைது
லக்னோ:உத்தர பிரதேச அமைச்சர் நந்தகோபால் குப்தா என்ற நந்தி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தின் முத்திரைத்தாள் துறை அமைச்சரான நந்தி என்கிற நந்தகோபால் குப்தாவை குறிவைத்து, மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், அமைச்...
தமிழகம்
எம்.சி.ஏ - எம்.பி.ஏ., கவுன்சிலிங் 21ல் துவக்கம்
கோவை : அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயஉதவி பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான ரேங்க் பட்டியல், வெப் சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும் 21ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதல் கட்ட கவுன்சிலிங...
தமிழகம்
பாம்பன் பாலத்தில் ராட்சத கிரேன் உதவியுடன் பணிகள்
ராமேஸ்வரம் : பாம்பன் தூக்கு பாலத்தின் வலுவை அதிகப்படுத்த ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு குழாய் பொருத்தும் பணி நடந்தது. பாம்பன் ரயில் பாலம் மையத்தில் கப்பல் செல்வதற்காக திறக்கப்படும் ஜெட்ஜர் தூக்குபாலத்தின் வலுவை அதிகப்படுத்துவதற்கு, கடலுக்குள் பாலத்தை தாங்கி நிற்கும் நான்கு தூண்களுக்கு அருகில் மேலும் நான்கு தூண்களை கட...
இந்தியா
சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங் : செய்னா நேவல் "நம்பர்-2'
புதுடில்லி : சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய நட்சத்திரம் செய்னா நேவல் 2வது இடத்துக்கு முன்னேறினார். பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பி...
தமிழகம்
துணைவேந்தர்கள் நியமனம்
சென்னை : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக மீனாவும், திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தராக தேவதாஸ் மனோகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரும், எஸ்டேட் ஆபீசருமான தேவதாஸ் மனோகரன், திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி இந்திராக...
தமிழகம்
பி.எப்., கூடுதல் ஆணையர் நியமனம்
சென்னை : தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின், கூடுதல் பொது ஆணையராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர், உத்தரபிரதேசம், பீகாரில் இப்பதவியை வகித்து வந்தார். தமிழகம், கேரளாவிலுள்ள மண்டல மற்றும் துணை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலங்களின் நிர்வாகப் பணி...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் கல்வி ரொக்கப் பரிசு அதிகரித்து வழங்க தமிழக அரசு உத்தரவு
சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கல்வி ரொக்கப் பரிசை அதிகரித்து வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அரசின் உத்தரவு: தமிழை பயிற்று மொழியாக கொண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டண...
தமிழகம்
வேக கட்டுப்பாட்டுக் கருவி நாளை செயல்முறை விளக்கம்
விருதுநகர் : பள்ளி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து செயல் முறை கண்காட்சி மதுரையில் நாளை நடக்கவுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்லாமல் கட்டுப்படுத்த வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. புது வாகனங்களுக்கு உடனடியாகவும், பழைய வா...
தமிழகம்
பல்கலைக்கு ஊழியர்கள் நியமனம் அவசியம்
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் சமீபத்தில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதைப் போல ஊழியர்களும் நியமிக்கப்பட வேண்டியது அவசியம். மதுரை காமராஜ் பல்கலையில் சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனத்தில் ஏற்பட்ட பல்வேறு தடைகளை நீக்க துணைவேந்தர் கற்பககுமாரவேல் நடவ...
தமிழகம்
திருத்தணி முருகன் கோவிலில் இலங்கை அமைச்சர் தரிசனம்
திருத்தணி : இலங்கை நாட்டின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மெல்வீன் சில்வா, தன் குடும்பத்துடன் நேற்று மதியம் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார். அப்போது, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாலை அணிவித்து வரவேற்றார். பின், மூலவர், உற்சவர், ஆறுமுக சுவாமி, ஆபத்சகாய விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய சன்னிதிகளுக்கு அமைச்சர் ...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் ஆய்வு பணியில் சத்துணவு ஊழியர்
சிவகங்கை : வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் சத்துணவு ஊழியர்களை ஈடுபடுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க, கெடு இன்றுடன் முடிகிறது. அதற்கு பின், விண்ணப்பங்களின் மீது...
தமிழகம்
சாலை பாதுகாப்புக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு
விருதுநகர் : தமிழகத்தில் சாலை பாதுகாப்புக்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க ஆண்டு தோறும் சாலை பாதுகாப்புக்கு, மாவட்டம் தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கு ரூ.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து போக்குவ...
தமிழகம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கும்பாபிஷேகம்
மன்னார்குடி : ஆயிரம் ஆண்டுகள் பழமையான மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவிலில், வரும் ஆக., 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோவிலில், மொத்தம் 16 ராஜகோபுரங்கள் உள்ளன. ராஜகோபுரங்களில் கிழக்கு ராஜகோபுரத்தின் 11 கலசங்கள் செய்து கொடுக்க பல அன்பர்கள் முன்வந்துள்ளனர். வடக்கு குபேர திசையில் ஐந்து கலசங்களை, திருச்சியைச் ...
தமிழகம்
திண்டுக்கல்லில் சிறப்பு திருப்பலி,பிரார்த்தனை : 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். திண்டுக்கல்லில் பிஷப் பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி துவங்கியது.இதில் குருக்கள், துறவியர்கள், பங்குத்தந்தைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிறப்பு கருத்தரங்கு,ஆய்வுகள் நடந்தன. திண்...
இந்தியா
முதியோர் நலனுக்கு தேசிய ஆணையம் : மத்திய அரசு திட்டம்
புதுடில்லி : முதியோர் நலனை பாதுகாக்கும் வகையில், தேசிய முதியோர் ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் தேசிய முதியோர் ஆணையத்திற்கு சிறப்பதிகாரங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: முதியோரை நலனை பாதுகாக்கும் வகையில், கடந...
இந்தியா
கோவை - கொச்சி இணைக்க தமிழக அரசு சம்மதம்
திருவனந்தபுரம் : தமிழகத்தின் பெரும் தொழில் நகரான கோவையையும், கேரளாவில் பெரிய தொழில் நகரான கொச்சியையும் இணைக்க, தமிழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மிகப்பெரும் தொழில் நகர் கோவை. அதேபோல், கேரள மாநிலத்தில் பெரிய தொழில் நகர், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சி. இவ்விரு தொழில் நகரங்களையும் இடைவழியாக இணைக்கவும், அத...
இந்தியா
தண்டவாளத்தை கடந்து செல்ல யானைகளுக்கு மேம்பாலமா?
ஜல்பகுரி : மேற்கு வங்கம் ஜல்பகுரி பகுதி அடர்ந்த வனப்பிரதேசம். இங்கு யானைகள் கூட்டம், கூட்டமாக செல்வது வழக்கம். ஜல்பகுரியிலிருந்து பலகாட்டா என்ற பகுதிக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. இந்த ரயில் பாதையை கடந்து செல்லும் போது, யானைகள் விபத்தில் அடிபட்டு பலியாவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், இங்கு 10க்கும...
இந்தியா
விடுதியில் இருந்து ரயிலுக்கு ராகிங் கொடுமை பரவுகிறது
பாலக்காடு : தமிழக எல்லையோர மாவட்டமான கோவையில் செயல்படும் பல்வேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம். இவர்களில் பெரும்பாலோர் ரயில்களில் தினமும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். தற்போது கல்லூரிகளில் ராகிங் செய்தால், கடும் தண்டனை விதிக்கப...
இந்தியா
கனடா விசாவுக்காக தந்தையையும் மகனையும் மணந்த பெண்
சண்டிகார் : கனடா வாழ் இந்தியரான ராஜேந்தர் சிங் மான் (60), கடந்த 2001 ம் ஆண்டு கனடாவிலிருந்து, இந்தியா சண்டிகாரில் நிரந்தரமாக குடியேறினார். கனடா நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியை அவர் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில், பிரியா இந்தர் கவுர் என்ற இளம்பெண், அவரது வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் வாடகைக்கு குடிவந்தார். ...
தமிழகம்
ஊராட்சி உதவியாளர்களின் சம்பள உயர்வை பிடித்தம் செய்யும் பி.டி.ஒ., உத்தரவுக்கு தடை
மதுரை : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் யூனியனில் 18 ஊராட்சி உதவியாளர்களின் சம்பள உயர்வு நிலுவையை பிடித்தம் செய்யும் பி.டி.ஒ., உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.ராஜபாளையம் யூனியன் தெற்கு வெங்கநாலூர் ஊராட்சி உதவியாளர் ராமசுப்பு உட்பட 18 பேர் தாக்கல் செய்த ரிட் மனு: ஊராட்சி உதவியாளர்களாக பணிபுரிகிறோம்...
தமிழகம்
வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.1.36 கோடியை செலுத்தும்படி மருந்து நிறுவனத்திற்கு உத்தரவு
சென்னை : வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாயை செலுத்துமாறு, மருந்து நிறுவனத்துக்கு லோக் அதாலத் உத்தரவிட்டது. அண்ணாநகர் மேற்கில் பெர்பெக்ட் பார்மச்சூட்டிக்கல் நிறுவனம் உள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு கோடியே 52 லட்சத்து 782 ரூபாய், இந்த நிறுவனம் தர வேண்டும். இதுதொடர்பான பிரச்னை, மாநில சட்டப் பண...
தமிழகம்
மாஜி அமைச்சர் குடும்ப தொழிற்சாலை: கருத்து கேட்க உத்தரவு
சென்னை : தி.மு.க., எம்.பி.,யான டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினர் அமைக்க உள்ள தொழிற்சாலை குறித்து முடிவெடுக்கும் முன், அனைவரும் கருத்து தெரிவிக்க போதிய சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த கிராம விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய...
தமிழகம்
மனைவியை கொல்ல முயற்சி : கணவனுக்கு 7 ஆண்டு சிறை
சென்னை : ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகிலுள்ள ஏனாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுரிராஜ். இவருக்கும் அனகாபுத்தூரில் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தேவி என்பவருக்கும் காதல் திருமணம் நடந்தது. தேவி...
தமிழகம்
வைகோ, பழ நெடுமாறன் கடலூர் சிறையில் அடைப்பு
கடலூர் : சென்னையில் கைது செய்யப்பட்ட வைகோ, பழ நெடுமாறன் நேற்று அதிகாலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரியும், இலங்கைத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைகோ, பழ நெடுமாறன், நடராஜன் உள்...
தமிழகம்
கார் மீது லாரி கவிழ்ந்து இருவர் பலி
தர்மபுரி : தர்மபுரி அருகே கார் மீது லாரி கவிழ்ந்ததில், இருவர் பரிதாபமாக இறந்தனர். தர்மபுரி அடுத்த கம்பைநல்லூர் கரிவேலம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (40); அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்கு கரிவேலம்பட்டிக்கு வந்திருந்த சரவணன், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், கொடுமுடி கோவில் சென்று விட்டு,...
தமிழகம்
வரதட்சணை கொடுமையால் மனைவி கொலை: கணவர் கைது
தேவதானப்பட்டி : வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி கொலை செய்ததாக, கெங்குவார்பட்டியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி மனோகரனை போலீசார் கைது செய்தனர். கெங்குவார்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த பின்னியப்பன் மகன் மனோகரன் (28). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்த...
தமிழகம்
நிர்வாணமாக ஓடிய கைதியால் திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் : திருப்பத்தூர் கோர்ட்டில் கைதி நிர்வாணமாக ஓடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பீடி தொழிலாளி மோகன்ராஜ் (40); மனைவி சித்ரா (30). கடந்த 2008ம் ஆண்டு சித்ராவுடன் ஏற்பட்ட தகராறில், மகள் பிரியங்காவை (10) கொலை செய்த மோகன்ராஜ், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வ...
தமிழகம்
அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை
கும்மிடிப்பூண்டி : ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கோவில்களின் பூட்டை உடைத்து, இருப்பதை சுருட்டி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை-கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது சக்திவேட்டம்மன் கோவில். நேற்று முன்தினம் அந்த கோவிலின் கிரில் கேட் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற கொள்ளையர்கள், 2 கிராம் ...
தமிழகம்
மாணவியரிடம் நகை "அபேஸ்' செய்த ஆசிரியர் எங்கே?
புதுக்கோட்டை : தனியார் மெட்ரிக் பள்ளியில், மாணவியரிடமிருந்து நூதன முறையில் நகைகளை பறித்துச் சென்ற ஆசிரியரை, போலீசார் தேடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், ஐடியல் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. 1,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு பாடம் நடத்த, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்க...
தமிழகம்
மகள்களின் தலைமுடியை வெட்டி சித்ரவதை செய்த தந்தை கைது
ஓசூர் : தன் இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மகள்களின் தலைமுடியை வெட்டி, வீட்டில் அடைத்து வைத்து, சித்ரவதை செய்த தந்தையை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பரீத்(40); மனைவி பர்சானா (35). அவர்களுக்கு 20 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஆயிஷா (14), பாத்திமா (20) என ...
தமிழகம்
போலி சான்றிதழ் கொடுத்து பதவி பெற்றதாக பேரூராட்சி பெண் தலைவர் மீது புகார்
ஈரோடு : போலி சான்றிதழ் கொடுத்து, தலைவர் பதவி பெற்ற, அம்மாபேட்டை பேரூராட்சி பெண் தலைவர் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 2006க்கு முன் பேரூராட்சி தலைவர் பதவி பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. சுழற்சி முறையில் 2006 உள்ளாட்சி தேர்தலின் போது, ஊராட்சி தலைவர் பதவி மல...
தமிழகம்
மாணவரிடம் மதுபாட்டில்கள் பறிமுதல்
சென்னை : பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் வருணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாதவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மின்ட் சந்திப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்றார். அப்போது ரோந்து வந்த ஏழுகிணறு போலீசார், அவர் வைத்திருந்த பேக்கை சோதனையிட்டனர். அதில் 56 ஒயின் பாட்டில்கள் ...
தமிழகம்
ரூ.ஒரு கோடி மதிப்புக்கு 14 கார்கள் திருடிய 3 பேர் கைது! எட்டு கார்கள் பறிமுதல்
சென்னை : சென்னை திருவான்மியூர், குமரன் நகர், தேனாம்பேட்டை, அபிராமபுரம் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கார்களை திருடிய மூவரை போலீசார் கைது செய்து, எட்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி, சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் டி.டி.கே., சாலையில் ப...
தமிழகம்
சத்துணவில் இறந்து கிடந்த பல்லி 19 மாணவர்களுக்கு சிகிச்சை
திருப்போரூர் : கொட்டமேடு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவில் பல்லி இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 19 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருப்போரூர் அருகேயுள்ளது கொட்டமேடு கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 119 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று, பகல் 12.40 மணிக்கு ...
தமிழகம்
பஸ் பயணியிடம் 4.35 லட்சம் ரூபாய் கொள்ளை : கைக்குழந்தையுடன் 2 பெண்கள் கைது
மதுராந்தகம் : அரசு பஸ்சில் பயணம் செய்த பயணியிடம், 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த மாமியார், மருமகள் கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்டியில் ராஜா இரும்பு கம்பெனி உள்ளது. இங்கு சென்னை பெரம்பூர் வெற்றி நகரைச் சேர்ந்த வல்லப்பன் மகன் பூபதி (34) விற்பனை பிரிவில் வேலை செய்து வருகிறார். செங்கல்பட்டு, மத...
தமிழகம்
அரசு பஸ் டிரைவரை தாக்கிய போலீசார் : திடீர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் அரசு பஸ் டிரைவரை போலீசார் தாக்கியதால், இரண்டு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதுகுளத்தூரில் நேற்று வாரச்சந்தை நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலீசாரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். பாலமுருகன் எஸ்.ஐ. , தலைமையில் பாதுகா...
தமிழகம்
திருவானைக்கோவில் யானை மரணம்
திருச்சி : பஞ்ச பூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கோவில் யானை சாந்தி, நேற்று இறந்தது. தொடர்ந்து 48 ஆண்டாக கோவிலில் சேவை செய்த சாந்திக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1962ம் ஆண்டு, மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் உள்ள நண்பருக்கு, அவரது சென்னை வீட்டில் பராமரிக்கப்பட்...
தமிழகம்
தொடரும் ஊழியர் பற்றாக்குறை மின் கணக்கீடு பணியில் சிக்கல்
காரைக்குடி : கணக்கீட்டாளர் பற்றாக் குறையால், காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் மின் கணக்கீடு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரைக்குடி மின்வாரிய அலுவலகத்தின் கீழ் தேவகோட்டை, கானாடுகாத்தன், கல்லல், புதுவயல், கண்டரமாணிக்கம் உட்பட 10 பிரிவு அலுவலகங்கள்; ஒரு லட்சத்து 40 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. பற்றாக்குறை:கணக்கீட்ட...
தமிழகம்
சாரண இயக்க பொதுக்குழு கூட்டம்
சிவகங்கை : சாரணர் இயக்க பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் பகீரதநாச்சியப்பன், சு.பா.தே.வி., பள்ளி தாளாளர் வேங்கடகிருஷ்ணன், 21ம் நூற்றாண்டு மெட்ரிக்., பள்ளி முதன்மை முதல்வர் விவேகானந்தன், முதல்வர் விக்டோரி...
தமிழகம்
கொடியேற்றம்
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் கோயில் ஆடி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பூஜைகளை தெய்வசிகாமணி, குமார் பட்டர் செய்தனர். அபிஷேகம் நடந்தது. பத்து நாட்களும் அம்பாள் சிம்மம், கிளி, ரிஷப வாகனங்களில் காட்சி அளிப்பார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் அங்குச்சாமி, கோயில் ஸ்தானிகர...
தமிழகம்
கிராம தலையாரிகள் சங்க கூட்டம்
சிவகங்கை : வேலையிழந்த கிராம தலையாரிகள் சங்க மாவட்ட கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருமால் அழகு முன்னிலை வகித்தார். துணை தலைவர் சண்முகம், செயலாளர் நாராயணன், செயற்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, சண்முகசிவா, முத்துக்கணேசன், முத்தழகு, சுப்பிரமணியன் பங்கேற்றனர்.தீர்மா...
தமிழகம்
கிராமப்புற அரசு பள்ளிகள் தேய்கின்றன : சரிகிறது மாணவர் எண்ணிக்கை
சிவகங்கை : மாவட்டத்தில் 10 மாணவர்கள் கூட இல்லாத 50 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. சம்பளம், பராமரிப்பு நிதி என பல வகையில் அரசு நிதி வீணாகிறது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முன்முயற்சிகள் உடனடியாக துவக்கப்பட வேண்டும். இம்மாவட்டத்தில் 690 அரசு துவக்கப்பள்ளி, 240 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1:40 என்ற வ...
தமிழகம்
தி.நகரில் ரூ. 81 லட்சம் கொள்ளையில் கூலிப்படை தொடர்பு அம்பலம்
சென்னை: சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவன பணம் 81 லட்சம் ரூபாய் கொள்ளை சம்பவத்தில் கூலிப்படையினர் தொடர்பு அம்பலமாகியுள்ளது. ஐந்து பேர் போலீசார் வசம் சிக்கியுள்ள நிலையில், மேலும் முக்கிய தாதாக்கள் இருவர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, தி.நகர்., உஸ்மான் சாலையில் போத்தீஸ் ஜவுளி நிறுவனம்...
தமிழகம்
துவரை செயல் விளக்க கூட்டம்
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தேசிய விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் துவரை செயல்விளக்க திட்ட கூட்டம் நடந்தது. ஆடி பட்டத்தில் நஞ்சை, புஞ்சையில் பயிர் செய்ய ஐ.சி.பி.எல், ரக துவரை தலா விவசாயிக்கு 20 கிலோ வீதம் ஒரு கிலோ விதை 56 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. நிரந்தர நீர் பாசன வசதி உள்ள விவசாயிகள் சிங்கம்புணரி விவசாய வளர்ச்ச...
தமிழகம்
மகளிர் சுய உதவி குழு நிர்வாக பயிற்சி
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியம் அ.காளாப்பூரில் மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வக்குமார் துவக்கி வைத்தார். மகளிர் குழு செயல்பாடு, மேம் பாட்டிற்கான திட்டங்கள், அரசு மானியம்,கடன்வசதி, சமுதாய பங்களிப்பு, சுயதொழில் குறித்த பயிற்சி அளித்தனர். ஒருங்கிணைப்பாளர் கு...
தமிழகம்
மாவட்ட செஸ் போட்டியில் கேந்திரிய பள்ளி சாம்பியன்
காரைக்குடி: காரைக்குடியில் நடந்த மாவட்ட செஸ் போட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி காரைக்குடியில் நடந்தது. இதில், 400 மாணவர்கள் பங்கேற்றனர். ஏழு முதல் 25 வயதினருக்கு ஆறு பிரிவாக போட்டி நடந்தது. லயன்ஸ் நிர்வாகி லட்சுமணன் தலைமை வகித்தார். மாநில செஸ் கழக...
தமிழகம்
நிர்வாகிகள் பதவியேற்பு
காரைக்குடி : ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா காரைக்குடியில் நடந்தது. தலைவராக சாமி, செயலாளராக சொக்கலிங்கம், பொரு ளாளராக ராஜேந்திரன் தேர்வாகினர். முன் னாள் கவர்னர் அழகப்பன் முன்னிலை வகித்தார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது, ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிக...
தமிழகம்
அவமானத்தால் வக்கீல் தற்கொலை: 10 பேர் கைது
திருநெல்வேலி : காதலியை சந்திக்க வந்து அடிஉதைப்பட்ட வக்கீல், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கு காரணமான 10 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நம்பிநகரை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன்(28). வக்கீலான இவருக்கும், ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் ஆக பணியாற்றும், ஒரு பெண்ணுக்கும் பழக...
தமிழகம்
மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள்
சிவகங்கை : காமராஜர் பிறந்த நாள் விழா, பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை: வண்டவாசி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். கல்வி குழு தலைவர் நாகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் வரவேற்றார். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் பரிசு வழங்கின...
தமிழகம்
அறை ஒதுக்கீட்டில் அதிருப்தி : தகவல் ஆணையர் தங்க மறுப்பு
மதுரை : மதுரை சர்க்யூட் ஹவுசில் முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியுற்ற மாநில தகவல் ஆணையர் சாரதாநம்பி ஆரூரான், அதில் தங்க மறுத்து விட்டார். பின்,அவருக்கு கீழ்தளத்தில் வேறு அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டது. மாநில தகவல் ஆணையர்களாக இருப்பவர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமகிருஷ்ணன், டாக்டர் சாரதா நம்பி ஆரூரான்...
தமிழகம்
இருவர் காயம்
தேவகோட்டை : தேவகோட்டை அருகே புத்தூரைச் சேர்ந்தவர் கண்ணன் (32). இவர், உறவினர் செல்வசதீஷ் (17), பிராந்தனி கிராமத்தில் இருந்து ஹீரோ ஹோண்டா டூவீலரில் தேவ கோட்டை நோக்கி சென்றனர். தேவகோட்டை - ராமேஸ்வரம் சென்ற மாருதி கார், டூவீலரில் மோதியது. இதில், இருவரும் காயமுற்றனர்.
தமிழகம்
சங்க கூட்டம்
காரைக்குடி : காரைக்குடியில், அமராவதிபுதூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம் நடந் தது. தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அமராவதி, ஒய்யக் கொண் டான், வேட்டைக் காரன்பட்டி கண்மாய்களில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டாருடன் இலவச மின் இணைப்பு செய்வது, கண்மாயில் ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றுவது என தீர்மானித்தனர். ஆட...
தமிழகம்
ரூ.350 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பூபதி (28). இவரது தம்பி ஏழுமலை கடந்த 6ம் தேதி கோகலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ் மோதி காயமடைந்தார். முண்டியம்பாக்கத்தில் உள்...
தமிழகம்
கோஷ்டி மோதல் எட்டு பேர் காயம்
திருப்புத்தூர்: நெற்குப்பை கீழத்தெருவை சேர்ந்தவர் பாபு (35). நேற்று முன்தினம் காலை வடுகபட்டியில் நடந்த திருமணத்திற்கு சென்றார். அங்கு அதே ஊரை சேர்ந்த மலைக்கண்ணன் (35), கோபி (35) இருந்தனர். இருவருக்கும், பாபு கடன் கொடுத்துள்ளார். பணத்தை திரும்ப கேட்டதற்கு, "பணத்தை ராஜேஷிடம் (38) கொடுத்து விட்டோம்' என்றனர். வீடு திரும்பி...
தமிழகம்
செஸ் போட்டியில் மாணவர் முதலிடம்
சிங்கம்புணரி : வெங்கடேஸ்வரா மழலையர் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர் பழனி விஸ்வநாத், செஸ் போட்டியில் முதலிடம் பெற்றார்.அமராவதி புதூர் பொறியியல் கல்லூரியில் நடந்த ஜூனியர் பிரிவு போட்டியில் இரண்டாம் இடம், கலைவாணி செஸ் அகாடமி சார்பில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்றார். தாளாளர் கண் ணன், முதல்வர் பிரீத்தா பாராட்டினர்.
தமிழகம்
போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த மூவர் விவரம் தயார்
சென்னை : பிளஸ் 2 போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மாணவர்களிடம் பணம் பறிக்கும் மூவரின் விவரம் தெரியவந்துள்ளது. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், சில மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து மேற்படிப்பு படிக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் விவ...
தமிழகம்
பெண்ணை கொன்று நகை திருடியவருக்கு ஆயுள்
சிவகங்கை : திருப்புவனத்தில் பெண்ணை கொன்று, நகை திருடியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.திருப்புவனம் அருகே தட்டான்குளத்தை சேர்ந்த பாலு மனைவி தனம் ( 40). மீன் விற்பனை செய்து வந்தார். கடந்த 2008 ஜூன் 5 ம் தேதி காலை 9.30 மணிக்கு, மதுரையில் இருந்து கழுகேர்கடை விலக்கில் இறங்கி, நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்த, கழுகேர...
தமிழகம்
மின் மோட்டார் திருடிய இருவர் கைது
காளையார்கோவில் : செவல்புஞ்சையை சேர்ந்தவர் அங்குச்சாமி (39). இவரது தோட்டத்தில் இருந்த மின் மோட்டார், கடந்த 12 ம் தேதி திருடு போனது. எஸ்.ஐ., திருநாவுக்கரசு, போலீசார் விசாரித்தனர். நற்புதத்தை சேர்ந்த மருதுபாண்டியன் (29), புலிக்கண்மாய் செபஸ்திராஜா (29) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.  இப்பகுதிக...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் ஆய்வு பணியில் : சத்துணவு ஊழியர்: கமிஷன் உத்தரவு
சிவகங்கை : வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில், சத்துணவு ஊழியர்களை ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க, கெடு இன்றுடன் முடிகிறது. அதற்கு பின், விண்ணப்பங்களின் மீது...
தமிழகம்
குற்றாலத்தில் யாகம் நடக்குது ரெட்டி சகோதரர்களை காணோம்
திருநெல்வேலி : குற்றாலத்தில் நடக்கும் யாகத்தில் கர்நாடக அமைச்சர் களான ரெட்டி சகோதரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. குற்றாலம் மெயின்அருவி காசிமேஜர்புரம் ரோட்டில் உள்ளது மவுனச்சாமியார் மடம். சித்தேஸ்வரானந்தபாரதி என்பவர் நிறுவிய இந்த மடம் சித் தேஸ்வரி மடம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த சில தினங்களாக கர்நாடகத்தை சேர்ந்த...
தமிழகம்
தமிழக மீனவர்களை விரட்டியடித்து மீன்களை பறித்த இலங்கை கடற்படை
மண்டபம் : தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து மீன்களை பறித்தனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்; மீன்களை பறித்தனர். மீனவர்களிடம்...
தமிழகம்
மதுரை மின்வாரிய கான்ட்ராக்டரிடம் சென்னை பஸ்சில் ரூ.50 ஆயிரம் அபேஸ்
சென்னை : மதுரை மின்வாரிய கான்ட்ராக்டரிடம் சென்னை மாநகர பஸ்சில் ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், கோ.புதூர், அழகர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (45); மதுரையில் மின்வாரிய பணிகளுக்கான கான்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் காலை மதுரையில் இருந்து சென்னை வந்தார். அண்ணா ச...
தமிழகம்
கோவை காதல்ஜோடிக்கு ராமேஸ்வரத்தில் திருமணம்
மண்டபம் : கோவை மாவட்டம் குரும்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(30). வெல்டிங் பட்டறை வைத்துள்ள இவரும் , பக்கத்து வீட்டை சேர்ந்த சுகானாபேகமும்(21) பல ஆண்டுகளாக காதலித்தனர்.இருவர் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டு ஓடினர்.ராமேஸ்வரம் வந்த இவர்கள், அங்குள்ள நம்புநாயகி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர...
இந்தியா
மது கிடைக்காததால் நோயாளி ஆத்திரம் : மருத்துவமனையில் சக நோயாளி கொலை
கொச்சி : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளி தாக்கியதால் பலியானார். இத்தாக்குதலில் மேலும் நான்கு நோயாளிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற...
இந்தியா
போதையில் பாகன், காவலுக்கு யானை : போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி
ரான்னி : போதையிலிருந்த பாகன், சாலையில் அமர்ந்ததால் அவருக்கு ஏதும் நேராமல் இருக்க காவலுக்கு அவருடன் சென்ற யானையும் சாலையில் நின்றதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே ரான்னியில் இருந்து ஜண்டாயிக்கல் கிராமத்திற்கு யானையுடன் பாகன் சென்றார். போதையில் இருந்த அவர், அக்கிராமத்தில் ...
தமிழகம்
ரோட்டில் முறிந்து விழும் மரங்கள்
மண்டபம் : மண்டபம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரப்பன்வலசை பகுதியில்ரோடு ஓரத்தில் சவுக்கு மரங்கள் உள்ளன. இதில் சில மரங்கள் ரோட்டை மறித்த வண்ணம் வளர்ந்துள்ளன. எடை அதிகம் கொண்ட லாரிகள்,கண்டெய்னர்கள் செல்லும்போது சவுக்கு மரத்தில் உரசி செல்லும் நிலை உள்ளது.சில நேரங்களில் பஸ்கள் மீதும் உரசும் நிலை உள்ளது. வனத்துறையினர்...