category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மது விற்ற மாணவன் சிக்கினான்
சென்னை : பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் வருணன் (பெயர் மாற்றப்பட் டுள்ளது). தனியார் கல்லூரிமாணவன். நேற்று முன்தினம் மாலை மின்ட் சந்திப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்றான். அப்போது ரோந்து வந்த ஏழுகிணறு போலீசார், அவர் வைத்திருந்த பேக்கை சோதனையிட்டனர். அதில் 56 ஒயின் பாட்டில்கள் இருந்தன. அவனிடம் விசாரித்து போ...
இந்தியா
காப்பர் கம்பி திருட்டு: மர்ம நபருக்கு வலை
திருக்கனூர் : கூனிச்சம்பட்டு கிராமத்தில் இரண்டு இடங்களில் இருந்த டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகளை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமம் மணலிப்பட்டு சாலையிலும், கூனிச்சம்பட்டு பழைய ஏரிக்கரையிலும் உள்ள இரண்டு மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய காப்ப...
தமிழகம்
பூட்டை உடைத்து 2 கடைகளில் திருட்டு
விருத்தாசலம் : நள்ளிரவில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.மங்கலம்பேட்டை கர்ணத்தம் ரோட்டில் அரிசி கடை வைத்திருப்பவர் முருகன். அருகில் குமார் என்பவர் ஸ்டுடியோ வைத்துள்ளார். இருவரும் நேற்று காலை கடைக்கு வந்தபோது பூட்டு உடைந்திருந்தது. கடை உள்ளே சென்று பார்த்ததில் முருகன் கடையில் 35 ஆய...
தமிழகம்
சுமோ மோதி விவசாயி பலி
சிதம்பரம் : மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி டாடா சுமோ மோதி இறந்தார்.சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(34). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு குமராட்சியில் இருந்து சிதம்பரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தார். திருநாரையூர் அருகே வந்தபோது எதிரில் வேகமாக வந்த டாடா சுமோ மோதியது. படு...
இந்தியா
மானிய விலை உரத்தில் வெடிபொருள் தயாரிப்பு காரைக்காலில் ஒரு தொழிற்சாலை சிக்கியது
காரைக்கால் : காரைக்காலில் மேலும் ஒரு குளோரைடு தொழிற்சாலையில், விவசாயத்திற்காக மானிய விலையில் வழங்கப்படும் பொட்டாசியம் உரத்தை முறைகேடாக வாங்கி பயன்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.காரைக்கால் மேலகாசாக்குடியில் உள்ள காரைக்கால் குளோரைடு, வைகை குளோரைடு ஆகிய தொழிற் சாலைகள், தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப...
தமிழகம்
மின்சாரம் தாக்கி மாணவன் பலி
திருமுல்லைவாயல் : திருமுல்லைவாயல், இ.எஸ்.ஐ., அண்ணாநகரை சேர்ந்த சீனு மகன் சாலமன் (11); தனியார் பள்ளி மாணவன். அதே பள்ளியில் படித்து வரும் மற்றொரு மாணவன் சுனில் (7). கடந்த 13ம் தேதி இருவரும் மின்கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாலம...
தமிழகம்
லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
கடலூர் : லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப் பட்டனர்.கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த சுந்தரசெட்டி தெரு ராஜா (47), திருவாசக பிள்ளை தோட்டம் ரவி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா
இளம்பெண் மாயம்
புதுச்சேரி : முத்திரையர்பாளையம் பாம்பாட்டி தெருவில் வசிக்கும் மணிகண்டன் மகள் அலமேலு (18). பிளஸ் 2 படித்துள்ள இவர், கடந்த 10ம் தேதி காலை மயிலம் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா அமைச்சர் மாலை அணிவிப்பு
கடலூர் : காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி மாவட்ட தி.மு.க., சார்பில் கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு உட்பட பலர் உடனிருந்தனர்.காங்., ச...
இந்தியா
ரவுடி கழுவா செந்தில் கொலை வழக்கு: ஆயுள் கைதியிடம் விசாரணை
புதுச்சேரி : ரவுடி கழுவா செந்தில் கொலை வழக்கு தொடர் பாக ஆயுள் தண்டனை கைதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கழுவா செந் தில், பாலாஜி ஆகிய இருவரும் கடந்த மாதம் 18ம் தேதி இரவு மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பெரியகடை போலீசார் வழக்கு...
இந்தியா
மின்சாரம் தடையின்றி வழங்க வலியுறுத்தல்
புதுச்சேரி : புதுச்சேரியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜெ., பேரவை செயலாளர் ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியின் அனைத்து பகுதியிலும் அறிவிக்கப்படாத மின்வெட் டால் பொதுமக்கள் பெரும் அவதி...
தமிழகம்
வேப்பூரில் எம்.பி., அழகிரி பேச்சு
சிறுபாக்கம் : கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத் திய அரசு சாதனை படைத் துள்ளதாக எம்.பி., அழகிரி பேசினார்.வேப்பூர் பஸ் நிலையத்தில் காமராஜர் 108வது பிறந்த நாள் விழா நடந் தது. காங்., மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நீதிராஜன் முன்னிலை வகித்தார். பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப் பட்ட கொடிக...
தமிழகம்
மாதா கோவில் திருவிழா
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை புனித அடைக்கல மாதா கோவிலில், 21ம் ஆண்டு தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த 4ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தினமும் பிரார்த்தனைக் கூட்டம் மற்றும் ஜெபக்கூட்டம் நடந்தது. நேற்று முன்தினம் தேரில் அடைக்கல அன்னை தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. பங்கு தந்தை பெலிக்ஸ்பிலிப்...
இந்தியா
கலிதீர்த்தாள் குப்பத்தில் தண்ணீர் விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி : கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் தண்ணீர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை பள்ளியின் துணை முதல்வர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி, மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தண்ணீ...
தமிழகம்
இந்திய மருத்துவ சங்கம் கடலூரில் ஆர்ப்பாட்டம்
கடலூர் : மத்திய அரசின் மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்து சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசின் மூன்றரை ஆண்டு மருத்துவப் படிப்பு திட்டம் மற்றும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் பதிவு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், இந்...
இந்தியா
காமராஜர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி : புதுச்சேரியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அண்ணா சாலை-காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய இணை அமைச் சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம், அமைச் சர்கள் ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ., க்கள் லட்சுமி நாராயணன், தியாகராஜன், முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், முன்னாள்...
இந்தியா
திருக்கனூரில் இன்று கும்பாபிஷேகம்
திருக்கனூர் : திருக்கனூர் சப்த கன்னியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.திருக்கனூர், மண்ணாடிப்பட்டிற்கு செல்லும் சாலையில் உள்ள சப்த கன்னியம்மன் கோவிலில் கும் பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், தீபாராதனை நடந்தது.மாலை 6.30 மணிக்கு வாஸ்...
தமிழகம்
வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிஅறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு
பண்ருட்டி : கோர்ட் தடை உத்தரவினால் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஓதுவார் உள் ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அறநிலையத்துறை உதவி ஆணையர் கூறினார். பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது: -திருவ...
இந்தியா
ஆதித்யா வித்யாஸ்ரமம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
புதுச்சேரி : பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரமம் மேல் நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாணவர் ஆதித்யா லோகேசன் வரவேற்றார். பள் ளியின் புரவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தாளாளர் அசோக் ஆனந்த் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி இசை, நாட்டிய சங்கத் தலைவர் ஜெகதீசன், பாரதியார் பல்கலைக் கூட மிருதங்க துறை விரிவுரை...
தமிழகம்
லேப்டாப் திருடியவர் கைது
சிதம்பரம் : லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிப் பவர் முகேஷ்குமார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எஞ்ஜினியரிங் படித்து வரும் இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றார். சற்று நேரம் கழித்து வந்தபோது அறையில் வைத்திருந்த லேப்டாப் திருடு போயிருந்தது.இதுகுறித்த ...
இந்தியா
அவ்வையார் கல்லூரியில் மாணவர் தின விழா
காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரியில் காமராஜரின் பிறந்த நாள் விழா மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவர் நரசிம்மன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தமிழரசி தமிழ்மணி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவிகள் பபிதா, பிரியங்கா, கலைவாணி, ஹனிஸ்பாத்திமா, திவ்யா, துர்கா, கனகா, ...
இந்தியா
பிளஸ் 1 வகுப்புகள் 19ம் தேதி துவக்கம்
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பள்ளிகளில் வரும் 19ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பு துவங்கும் என பள்ளிக் கல்வி இயக்குனர் சுந்தரவடிவேலு தெரிவித்துள் ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2010-11 கல்வியாண்டின் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் 50 சதவிதம்...
தமிழகம்
திருமணம் நிச்சயித்த வாலிபர் அரசு பஸ் மோதி பலி
கடலூர் : கடலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் அரசு பஸ் மோதி இறந்தார்.கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந் தவர் காளியப்பன் மகன் காளிதாஸ் (25). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந் நிலையில், காளிதாஸ் நேற்று காலை புதுச்சேரி சென்று புதிய மோட்டார் பைக் வாங்கிக் கொண்டு, மாலை ...
தமிழகம்
டிப்பர் லாரி மோதி விவசாயி பலி
பண்ருட்டி : மொபட்டில் சென்ற விவசாயி டிப்பர் லாரி மோதி இறந்தார்.பண்ருட்டி அடுத்த சாத்தமாம்பட்டு காலனியை சேர்ந்தவர் மாயவேல்(35). இவர் நேற்று மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அப் போது டிப்பர் லாரி மோதி இறந்தார்.இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மணவாளன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
தமிழகம்
பரிக்கல் கோவில் உண்டியல்கள் திறப்பு காணிக்கையில் 100 ரூபாய் கள்ள நோட்டு
உளுந்தூர்பேட்டை : பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கிராமத் தில் உள்ள லஷ்மி நரசிம் மர் கோவிலில் உள்ள 3 உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆன்மிக அன்பர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினர்.அப்போது 100 ரூபாய் (எண்: டிஎல்ஓ 73814...
தமிழகம்
வைகோ பழ நெடுமாறன் கடலூர் சிறையில் அடைப்பு
கடலூர் : சென்னையில் கைது செய்யப்பட்ட வைகோ, பழ நெடுமாறன் நேற்று அதிகாலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரியும், இலங்கைத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைகோ, பழ நெடுமாறன், நடராஜன் உள்...
இந்தியா
போக்குவரத்து போலீசார் எண்ணிக்கையை உயர்த்த எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் கோரிக்கை
புதுச்சேரி : நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து போலீசாரின் எண் ணிக்கையை அதிகரித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நற்பணி இயக்கத்தின் பொதுச் செயலர் பாஸ்கரன், உள்துறை அமைச்சர் வல்சராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனு விபரம் வருமாறு:புதுச்சேரி மாநில உ...
தமிழகம்
வீராணம் திட்ட பாலத்தின் கீழ் மெகா பள்ளங்கள் தினமலர் செய்தி எதிரொலியால் மூடப்பட்டன
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் புதிய வீராணம் திட்ட பாலத்தின் கீழ் தோண்டிய பள்ளங்கள் தினமலர் செய்தி எதிரொலியால் சமப்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் தலைநகரான சென்னை மக்களின் குடிநீர் தேவைக் காக உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் இர...
தமிழகம்
திட்டக்குடியில் தேர் திருவிழா
திட்டக்குடி : திட்டக்குடி திரவுபதை அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திட்டக்குடி திரவுபதை அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும், இரவில் மகாபாரதம் சொற்பொழிவும் நடந்தது.கடந்த 2ம் தேதி திரவுபதை அம்மன் திருக்கல் ...
தமிழகம்
காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்
கவரைப்பேட்டை : காமராஜரின் 108வது பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக, கவரைப் பேட்டை ஊ.ஒ.தொ.பள்ளி, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், ஊராட்சித் தலைவி இந்திரா திருமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிராம கல்விக் குழு தலைவர் கே.எம்.சீனிவாசன், விழாவிற்கு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.தேவேந்தி...
தமிழகம்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு
திருப்போரூர் : பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆக்கிரமிப்பு இடத்தில் மண்ணை சமன் செய்த எட்டு தொழிலாளர்களை கைது செய்தனர். திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் ஊராட்சி கருங்குழி பள்ளம் பகுதியில், தகவல் தொழில்நுட்ப சாலையையொட்டி 200 ...
தமிழகம்
ஆதரவு திரட்டும் முகாம்
வத்திராயிருப்பு :ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான ஆதரவு திரட்டும் முகாம் வத்திராயிருப்பில் நடந்தது. யூனியன் சேர்மன் கொண்டம்மாள், பேரூராட்சி துணை தலைவர் முருகேசன் குத்துவிளக்கேற்றினர். மாவட்ட திட்ட அலுவலர் அழகு செல்வி தலைமை வகித்தார். வட்டார அலுவலர் ராஜம் வரவேற்றார். புள்ளி...
இந்தியா
தலைமையாசிரியர் மீது மாணவி புகார்
கான்பூர்: கான்பூரில் உள்ள பள்ளி மாணவி ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது புகார் செய்துள்ளார். புகாரில் டியூசன் கற்று தரும் ஆசிரியர் மற்ற மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய பின்னர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறி...
தமிழகம்
கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் பருவமழைக்காக மக்கள் "தவம்'
சோமனூர் : சோமனூர் சுற்றுப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர் ஆதாரம் குறைந்து வற்றிவிட்டன. இதனால் ஏராளமான கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. ஊராட்சி நிர்வாகங்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன.சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர், கணியூர், கிட்டாம் பாளையம், பதுவம்பள்ளி மற்றும் காடுவெட்டி...
தமிழகம்
காமராஜர் பிறந்தநாள் விழா
கோவை : முன்னாள் முதல்வர் காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, மாநகர் மாவட்ட காங்.,அலுவலகத்தில் நடந்தது.கோவை மாநகர் மாவட்ட காங்.,கமிட்டி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தல், திருக்குறள் புத்தகம் வழங்குதல், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்க...
தமிழகம்
போட்டியின்றி வார்டு உறுப்பினர் தேர்வு
பேரூர் : இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி, முதல் வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில், போட்டியின்றி செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சியின் முதல் வார்டு உறுப்பினராக இருந்த சுந்தரம், கடந்த மாதம் 22ம் தேதி இறந்தார். இதையடுத்து, உறுப்பினர் பதவிக்க...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
விருதுநகர் :விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்துணவு ஊழியர்கள்,அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட போலீசாரைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் நடந்தது. வட்டக்கிளை செயலாளர் பிச்சை, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மோகனவல்லி தாயார், கிளைத் தலைவர் எஸ். முருகே...
தமிழகம்
இன்ஜி., கல்லூரிகள் சங்க தலைவராக பரமசிவம் தேர்வு
கோவை : கோவை அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் இன்ஜி.,கல்லூரிகள் சங்கத்தின் புதிய தலைவராக, மகாராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் பரமசிவம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 150க்கு மேற்பட்ட இன்ஜி.,கல்லூரிகள், கோவை அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகி...
தமிழகம்
லயன்ஸ் சங்க கூட்டம்
சத்திரப்பட்டி :சத்திரப்பட்டி அக்சயா லயன்ஸ் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட கவர்னர் ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் கவர்னர்கள் முருகப்பன், ராஜூ முன்னிலை வகித்தனர்.தலைவராக கலுசுலிங்கம், செயலாளராக சீத்தாராமன், பொருளாளராக சவுந்திரராஜன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை கவர்னர்கள் மணி, யேசுபாலன...
தமிழகம்
ஸ்ரீவி.,க்கு வரும் பக்தர்கள் கழிப்பறை வசதியின்றி சிரமம்
ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கழிப்பறை வசதியின்றி சிரமமப்பட்டு வருகின்றனர். குற்றாலம் சீசன் துவங்கியுள்ளதால் அங்கு செல் லும் பக்தர்கள் வழியில் உள்ள ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கும் வருகின்றனர். இவர்களுக்காக போதிய கழிப்பறை வசதி இல்லை. சில ஆண்டுகளாக தேரடி அருகே இயங்கி வந்த கழிப்பறை சில நாட்...
தமிழகம்
வக்கீல் மரணமடைந்தால் ரூ.10 லட்சம் வழங்க கோரிக்கை
மேட்டுப்பாளையம் : பணியின் போது மரணமடையும் வக்கீல் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டுமென, வக் கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மேட்டுப்பாளையத்தில், இந்திய வக் கீல்கள் சங்கத்தின் கிளை துவக்க விழா நடந்தது. வேலுசாமி தலைமை வகித்தார். "சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வக்கீல்கள் மற்றும் அவர்...
தமிழகம்
தண்ணீர் தொட்டி திறப்பு
விருதுநகர் :ரோசல்பட்டி ஊராட்சி முதல் வார்டு கே.கே.எஸ்.எஸ்.என். நகரில் மினி பவர் பம்புடன் கூடிய தண்ணீர் தொட்டி திறப்பு விழா நடந்தது. இளைஞர் பேரவைத் தலைவர் ஜான் கென்னடி வரவேற்றார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்தார். கவுன்சிலர் பிச்சைக் கனி, ஊராட்சித் தலைவர் சேதுரா...
General
புதைந்திருந்த 900 குண்டுகள் ஜப்பானில் கண்டுபிடிப்பு
டோக்கியோ:ஜப்பானில் பூமிக்கு அடியில் வெடிக்காத நிலையில் இருந்த 900 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்துவதற்கு தயாரிக்கப்பட்டவை என போலீசார் தெரிவித்தனர். ஒகினவா நகரில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றின் விரிவாக்கப் பணிகள் துவங்குவதற்கு, பூமியில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கு அடியில் வெடிக்காத ...
தமிழகம்
வாக்காளர்களாக சேர 14,000 பேர் விண்ணப்பம்
விருதுநகர் : மாவட்டத்தில் புதிய வாக்காளர்களாக சேர 14,123 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்து உள்ளனர்.விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ஸ்ரீவில்லிப் புத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரையுறுக்கப்பட்ட ஓட்டு சாவடி ம...
தமிழகம்
அரசின் நிதி தாமதத்தை தவிர்க்க ஊராட்சி : கணக்குகள் தேசிய வங்கிகளுக்கு மாற்றம்
சிவகாசி :மத்திய, மாநில அரசின் நிதி, மானியங்கள் காலதாமதமின்றி ஊராட்சிகளுக்கு சென்றடைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஊராட்சி கணக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.ஊராட்சிகளுக்கும் மாநில நிதிக்குழு மானியம், ஒப்படைப்பு வருவாய், மத்திய நிதிக்குழு மானியம் உள்ளிட்ட அரசின் இதர மானிய தொகைகள் அரசிடமிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு...
தமிழகம்
மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை
கோவை : பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சீருடை வழங்கும் விழா, கோவில் கருப்பகவுண்டர் அறக்கட்டளை சார்பில், காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக்ஹசன்ஷா வரவேற்றார். கோவில் கருப்பகவுண்டர் அறக் கட்டளை நிர்வாகி சுகுமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் ரவிக்குமார், சுப...
தமிழகம்
அரசு பிரசவ ஆஸ்பத்திரியில் புரோக்கர்கள் ஆதிக்கம் : அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தான் ரத்தம்
ராஜபாளையம் : ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் திரியும் புரோக்கர்கள் ஆதிக்கத்தால், உயிர் காக்கும் ரத்தம் வாங்க அதிக பணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஏழை எளியோர் தள்ளப்பட்டுள்ளனர்.ராஜபாளையம் அரசு பிரசவ ஆஸ்பத்திரியில் ஏழை எளிய கர்ப்பிணிகள், குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜபாளையம் தாலுகா மட்டுமல்லாது சங்கரன்கோவி...
தமிழகம்
பெண்ணை தாக்கிய இருவர் கைது
சாத்தூர் : ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மனைவி மகாலட்சுமி (34). இவருக்கும் பக்கத்து வீட்டிலுள்ள நாகம்மாளுக்கும் இடையே வாறுகால் தகராறு இருந்தது, சம்பவத்தன்று நாகம்மாளின் மகன் வைரபிரகாஷ் (24), மருமகன் ஜெயகுமார் (28) ஆகிய இருவரும் மகாலட்சுமியை தாக்கினர். இவரது புகாரின்படி, இருவரையும், சாத்தூர் தாலுகா போலீசார் க...
தமிழகம்
பெண்ணிடம் நகை பறிப்பு
விருதுநகர் : விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் லீலா(54). இவர் நேற்று மதியம் 12.45 மணிக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர், லீலா கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் நகையை பறித்து கொண்டு அருகில் டூவீலரில் காத்திருந்த நபருடன் தப்பி சென்றார். லீலா ...
தமிழகம்
பரிசளிப்பு விழா
நரிக்குடி :வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில்,அரசு பொதுத்தேர்வில் 10ம் வகுப்பு, பிளஸ் 2ல் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கே.எஸ்.ஓ., அறக்கட் டளை நிறுவனர் பஷீர்அகமது தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. உசேன்...
தமிழகம்
ஒரு மாத பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
கோவை : தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 10ம் தேதி, பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை அனாதையாக தவித்தது. மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்தனர். கடந்த 11ம் தேதி இக்குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கோவை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு செவிலியர்களின் ...
தமிழகம்
மிளகாய் பொடி தூவி செயின் பறித்தவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் : சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் கருப்பசாமி(36). இவர் நேற்று முன்தினம் நாச்சியார்பட்டி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஸ்ரீவி., தாலுகா இன்ஸ்பெக்டர் ராமசாமி விசாரித்ததில் அவர் பல இடங்களில் பெண்களின் கண்களில் மிளகாய் பொடி தூவி செயின் அறுத்ததாகவும், பல இடங்களில் மோட் டார் சைக்கி...
தமிழகம்
மாமியாரை வெட்டிய மருமகனுக்கு சிறை
ஸ்ரீவில்லிபுத்தூர் : சின்ன அத்திக்குளத்தை சேர்ந்தவர் கந்தம்மாள் (56). இவர் முன்னாள் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய தலைவர். இவரது மகள் முருகேஸ்வரி, இவருக்கும் படிக்காசுவைத்தான்பட்டி முருகனுக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பாக விவாகரத்து வழக்கு ஸ்ரீவி.,சப் கோர...
தமிழகம்
பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் : ஆதிவாசி கிராமங்களில் அச்சம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்திலுள்ள ஆதிவாசி கிராமங்களில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக - கேரள எல்லையையொட்டிய பகுதிகளில் விழிப்புணர்வு மருத்துவ முகாம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந் துள்ளது.கேரளாவில், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்க...
தமிழகம்
முற்றுகிறது சுடுகாடு பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் முன் மறியல்
தளவாய்புரம் : கோயில் அருகே தடையை மீறி சுடுகாட் டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சித்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.தளவாய்புரத்தில் தொப் பையன்குளம் சுப்பிரமணிய சுவாமி அருகேயுள்ள இடத்தை அப்பகுதியினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக...
தமிழகம்
அரியலூர் சிமென்ட் ஆலையில் எம்.பி.,க்கள் குழு நேரில் ஆய்வு
அரியலூர்: அரியலூர் சிமென்ட் ஆலைகளில் எம்.பி.,க்கள் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது.சிமெண்ட் ஆலையை வணிக ரீதியாக மேம்படுத்துவது பற்றி ஆய்வு செய்வதற்காக, லோக்சபா வணிக பிரிவு நிலைக்குழு சார்பில், 6 எம்.பி.,க்கள் கொண்ட குழு, அரியலூர் ராம்கோ மற்றும் டால்மியா சிமெண்ட் ஆலைகளில் ஆய்வு நடத்துவதற்காக அரியலூர் வந்தது. லோக்சபா நிலைக்...
தமிழகம்
பெண்ணிடம் செயின் பறிப்பு
குறிச்சி : மதுக்கரை, க.க.சாவடி அருகிலுள்ள மாரிசெட்டிபதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்; இவரது மனைவி யசோதா(30). இவர், வீட்டருகே நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இருவர் ஐந்து பவுன் செயினை பறித்துச் சென்றனர். க.க.சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
தமிழகம்
காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டம்
விருதுநகர் : விருதுநகரில் காமராஜர் பிறந்த தினவிழா நடந்தது. காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் சண்முகம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் புரந் தேஸ்வரி, மாணிக்க தாகூர் எம்.பி., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல அமைப்புகள் சார்பில் ஊர்...
தமிழகம்
"நல்லி சில்க்ஸ்' புதுப்பிக்கப்பட்ட ÷ஷாரூம் திறப்பு
கோவை : நல்லி சில்க்ஸ் சேல்ஸ் டிப்போவின் புதுப்பிக்கப்பட்ட ÷ஷாரூம் திறப்பு விழா கோவை, ராஜவீதியில் நடந்தது. சென்னை நல்லி சின்னசாமிசெட்டி ஜவுளி நிறுவனத்தின் கோவை கிளை, ராஜவீதியில் செயல்படுகிறது. இதன் புதுப்பிக்கப்பட்ட ÷ஷாரூமை, நல்லி சில்க்ஸ் உரிமையாளர் நல்லி குப்புசாமி திறந்து வைத்தார். நல்லி கார்த்திக் புதுக்கணக்கை துவக்...
தமிழகம்
அரியலூரில் காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம்
அரியலூர்: அரியலூரில் காமராஜர் சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினரால் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினவிழாவை முன்னிட்டு, அரியலூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவசிலைக்கு, எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர...
தமிழகம்
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசு வழங்கல்
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் தேவாங்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பரிசு வழங்கும் விழா, ஜெங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது.விழாவில் சங்கத்தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கோவை வேல்முருகன் சார்பில், கல்வி உதவித்தொகையை ராஜாராம் வ...
தமிழகம்
மனைவி பெயரில் கான்டிராக்ட் எடுத்த கவுன்சிலர் பதவி நீக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் தனது மனைவி பெயரில் கான்டிராக்ட் எடுத்தது தெரிய வந்ததால் அவரை பதவி நீக்கம் செய்து கமிஷனர் முத்துக்கண்ணு உத்தரவிட்டார்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 27 வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.,வை சேர்ந்த சந்தான மூர்த்தி இருந்து வந்தார். இவரது மனைவி சரோஜா ...
தமிழகம்
வீட்டு உரிமையாளர் கொலை வாலிபர் கைது; நண்பருக்கு வலை
பெ.நா.பாளையம் : வீட்டு உரிமையாளரை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்; அவரது நண்பரை போலீசார் தேடுகின்றனர்.கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோவில்மேடு, டி.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(73). இவருக்கு சொந்தமான வீட்டில் ஆனந்த்(55) என்பவர் வசிக்கிறார். நேற்று முன்தினம், மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ...
தமிழகம்
அரியலூர் மாவட்டத்தில் பட்டா மாற்றல் முகாம்
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு பட்டா மாற்றல் முகாம் நடக்கிறது.கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை:அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், உள்ள பிர்கா தலைமையிடத்தில், சிறப்பு பட்டா மாற்றல் முகாம், கீழ்கண்ட விபரப்படி வெள்ளிதோறும் நடக்கிறது. அரியலூர் தாலுகா, அரியலூர் பிர்காவில் வருகிற 16ம் தேதி வெள்ளி...
தமிழகம்
ஆசிரியை தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் : தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(27). இவர் கூமாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது பாட்டியுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிங்கம்மாள்புரம் தெரு வசித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி சென்று விட்டு வந்த பின் பாட்டியை தண்ணீர் பிடிக்க சொல்லி கூறியுள்ளார். அ...
தமிழகம்
வேக கட்டுப்பாட்டு கருவி நாளை செயல்முறை விளக்கம்
விருதுநகர் : பள்ளி வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து செயல் முறை கண்காட்சி மதுரையில் நாளை நடக்கவுள்ளது.தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்லாமல் கட்டுப்படுத்த வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. புது வாகனங்களுக்கு உடனடியாகவும், பழைய வாக...
தமிழகம்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
தா.பேட்டை: தா.பேட்டை யூனியன் எம்.கருப்பம்பட்டியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு யூனியன் கவுன்சிலர் பெரியசாமி, அவைத்தலைவர் வீரமுத்து, முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் சேகரன் தலைமை வகித்து மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். தா.பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சிவக்கண்ணன் தலைமையில் மர...
தமிழகம்
2012க்குள் அனைத்து நடுநிலைப்பள்ளிகளை : உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த முடிவு
விருதுநகர் : தமிழகத்தில் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகளையும் 2012க்குள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.மத்திய அரசு 14 வயது வரை அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி வழங்கப்பட உள்ளது. இதற...
தமிழகம்
கிழக்கு கடற்கரை சாலை ஆய்வு பணிகள் நிறைவு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள கிழக்கு கடற்கரை சாலை பணிகளை விரைவாக நிறைவேற்றும் வகையில் டீடெய்ல் புராஜெக்ட் ரிப்போர்ட் (டி.பி.ஆர்) ரெடியாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அறிக்கை அளிக்கப்பட்டு அடுத்த ஆண்டில் பணிகளை துவக்கும் வகையில் வேகமான நடவடிக்கை த...
தமிழகம்
சாலை பாதுகாப்புக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு
விருதுநகர் : தமிழகத்தில் சாலை பாதுகாப்புக்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க ஆண்டு தோறும் சாலை பாதுகாப்புக்கு மாவட்டம் தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கு ரூ.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செ...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
கிருஷ்ணகிரி: காமராஜர் பிறந்த நாளையொட்டி தொழிலாளர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணகிரி சங்கர மடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.கிருஷ்ணகிரி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாதன் தலைமை வகித்தார். சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி தன்ராஜ் ...
தமிழகம்
சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.வேப்பனப்பள்ளி யூனியன் கொரல்நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி யூனியன் நெக்குந்தி அரசு நடுநிலைப்பள்ளிகளில் நேற்று முன்தினம் சத்துணவு முட்டை சாப்பிட்ட நூற்றுக்கு மே...
தமிழகம்
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு "லேப்டாப்'
கிருஷ்ணகிரி: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெற்ற 36 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கலெக்டர் அருண்ராய் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார். ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: சென்னையில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மற்றும் பழநெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ம.தி.மு.க., சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் மாதையன் தலைமை வகித்தார். துணை செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் மகாலிங்கம், மாநில மாணவரணி நிர்...
தமிழகம்
மனு நீதி நாள் முகாம்
பொங்கலூர் : வாவிபாளையத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில், 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மனு நீதி நாள் முகாம், வாவிபாளையத்தில் நடந்தது; மாவட்ட தனி துணை கலெக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். பல்லடம் தாசில்தார் குலோத்துங்கன்வரவேற்றார்.மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன; 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 52 மனு...
தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 ஆரம்ப சுகாதார நிலைய சித்தா, ஆயுர்வேதா பிரிவுக்கு தனி கட்டிடம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 14 ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத பிரிவுக்கு ஒரு கோடியே 62 லட்ச ரூபாய் செலவில் கட்டிடம் கட்டும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு...
தமிழகம்
கோவை காதல்ஜோடிக்கு ராமேஸ்வரத்தில் திருமணம்
கோவை : கோவை மாவட்டம் குரும்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(30). வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சுகானாபேகமும் (21) பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்களாம். இருவர் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டை விட்டுஓடினர். ராமேஸ்வரம் சென்ற இவர்கள், அங்குள்ள நம்புநாயகி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் செ...
தமிழகம்
புதூர் அருகே நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளியில் இருபெரும் விழா
புதூர் : புதூர் அருகே உள்ள நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி உபகரணம் வழங்கும் விழா மற்றும் பள்ளி வளர்ச்சி நிதி வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா நடந்தது. நாகலாபுரம் எஸ்.ஏ. என்.மேல்நிலைப்பள்ளியின் உயர்நிலை பிரிவு மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை, புத்தக...
தமிழகம்
புறம்போக்கில் இருந்த வீடுகள் அகற்றம்: வருவாய்த்துறையினர் திடீர் நடவடிக்கை
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் புறம்போக்கில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டது.வேதாரண்யத்தில் பொது அலுவலக புறம்போக்கு இடத்தில் மங்கையற்கரசி, தெரசாள், ராஜமாணிக்கம், ரெங்கநாதன், அருணாசலம், நாகலட்சுமி, ரவி ஆகிய ஏழு பேர் வீடு கட்டி இருந்தனர். இப்பகுதியில் 30 ஆண்டுக்கும் மேலாக இவ்விடத்தில் அவர்கள் குடியிருக்கின்றனர்.தற்போது இந்த இடத...
தமிழகம்
இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி: அ.தி.மு.க., சார்பில் வழங்கல்
வேதாரண்யம்: இலங்கை ராணுவத்தினர் தாக்கி இறந்த மீனவர் குடும்பத்துக்கு அ.தி.மு.க., சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் இலங்கை ராணுவத்தால் கடந்த ஏழாம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டார். எட்டுப்பேர் நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, மத்தி...
தமிழகம்
பனிமலர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கோலாகலம்
பெரம்பலூர்: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளி வளாக திடலில் கோலாகலமாக நடந்தது.விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கலியபெருமாள் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கட்ராமன் வரவேற்றார். பள்ளி ஆலோசகர் சந்திரசேகர் தவே முன்னி...
தமிழகம்
சிறுதுளி அமைத்த தடுப்பணையால் விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி
கோவை : சிறுதுளி அமைப்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளையொட்டியுள்ள பகுதிகளில் தடுப்பணைகள் கட்டியதால் விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கும், அன்றாட பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தினர், விவசாயப்பணிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் உருவாக்கப்பட்ட ...
தமிழகம்
மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் கருத்தரங்கம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது.கருத்தரங்கத்துக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, ...
தமிழகம்
விஷம் குடித்து பெண் பலி
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மாரியம்மாள் (40). விவசாயக்கூலி வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் 12 ஆண்டுக்கு முன் இறந்ததால் இவர் தனியாக வசித்து வந்தார்.இவர் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை நேற்று முன்தினம் இரவில் குடித்தார். தஞ்சை மருத்துவக் க...
தமிழகம்
புதுகை, அரியலூர், பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உண்ணாவிரதத்தில், ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வதற்காக அரசு சார்பில், அமைக்கப்பட்ட ஒருநபர் குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்தவேண்டும். அரசுத்துறைகளில் பணியாற்றிவரும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மத்திய அரசு ஊழிய...
தமிழகம்
உலக ரத்ததான தின விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர்: தஞ்சையில் சுகாதாரத்துறை சார்பில் உலக ரத்ததான தின விழிப்புணர்வு பேரணியை பாரத் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணி மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. ரத்ததானம் செய்வது பல உயிர்களை காப்பதாகும். ஒருவர் வழங்கும் ரத்தம் பல நேரங்களில் பலர் உயிரை காக்க பயன்படும். ரத...
தமிழகம்
கோர்ட் புறக்கணிப்பு வாபஸ் வக்கீல்கள் சங்கம் முடிவு
கோவை : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக, கோவை வக்கீல்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது.கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வக்கீல் கலையரசன்(38). ஜூன் 29 மாலை, டூ வீலரில் அலுவலகம் வந்த இவரை, ஆயுதப்படைப் போலீஸ் ஏட்டு முத்துப்பழனியப்பன் ...
தமிழகம்
இ.கம்யூ., கட்சியினர் ஓட்டு சேகரிப்பு
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரின் 17வது வார்டு பதவிக்கான இடைத்தேர்தல் 22ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி சார்பில், இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் முருகையன் போட்டியிடுகிறார்.திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை யூனியன் பகுதியில் கிராமந்தோறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டங்களை கூட்ட...
தமிழகம்
தவறு செய்தால் கண்டிக்க வேண்டும் பயந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது :
தூத்துக்குடி : தவறு செய்தால் கண்டிக்க வேண்டும். பயந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது என்று தூத்துக்குடி பள்ளியில் நடந்த காமராஜர் விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி பகவதி தெரிவித்தார். காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் உள்ள அனை...
தமிழகம்
அடிப்படை வசதி இல்லாத அரசு மருத்துவமனையால் வேதனை : நோயாளிகளின் சிரமம் தொடர்கிறது
வால்பாறை : வால்பாறை அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாததாலும், டாக்டர் பற்றாக்குறையினாலும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.வால்பாறை டவுன் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1928ம் ஆண்டு அரசு மருத்துவமனை கட்டப்பட்டு, தற்போது விரிவு படுத்தப்பட்ட நிலையில் பெரிய மருத்துவமனையாக செயல்படு...
தமிழகம்
தமிழகத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2905 கோடி ஆதி திராவிட நலத்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
கோவில்பட்டி : தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2905 கோடி ஆதி திராவிட நலத்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளது. மேலும் இந்தாண்டு 893 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது என கோவில்பட்டி அருகே உருளைகுடியில் நடந்த விழாவில் தமிழக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி பேசினார். கோவில்பட்டி யூனியனை...
தமிழகம்
ஈச்சன்கோட்டை பண்ணையில் 12 கால்நடை ஏலம் அறிவிப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஈச்சன்கோட்டை உயரின கால்நடை பெருக்குப்பண்ணையில் பண்ணை உபயோகம் நீங்கலாக கழிவு செய்யப்பட்ட 12 கால்நடைகள் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி காலை 11 மணிக்கு பண்ணை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஈச்சன்கோட்டை உயரின கால்நடை பெருக்குப்பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:ஒரு பசு, ஒரு கிடேரி, ஒன்பது பொலிக்காளை, ஒர...
தமிழகம்
தமிழகத்தில் விவசாயிகள் கூட்டு பொறுப்புக்குழுவிற்கு தனிநபர் கடன் வழங்க அரசு உத்தரவு
தூத்துக்குடி : விவசாயிகள் கூட்டு பொறுப்புக்குழுவிற்கு தனிநபர் மத்திய கால கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் பயன்பெறலாம் என்று மத்திய கூட்டுறவு பாங்க் தனி அதிகாரி செந்தமிழ்செல்வி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு பாங்க் மற்றும் மாவட்டம் முழுவதும...
தமிழகம்
சின்கோனா பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லை : மாணவர்களின் கல்வி பாதிப்பு
வால்பாறை : சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டேன்டீ). இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 450 மாணவர்கள் உள்ளனர். சின்னக்கல்லார், பெரியகல்லார், டூபைத்திரி, ரயான்டிவிஷன், உபாசி, சின்கோனா, ஈட்டியார், சிறுகுன்றா, காஞ்சமலை...
தமிழகம்
இலவச காஸ் வழங்கும் விழா
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட் சிக்கு உட்பட்ட 32 மற்றும் 35வது வார்டு மக்களுக்கு இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்பு வழங் கும் விழா நேற்று நடந்தது. ஜோதிநகர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் நடந்த விழாவுக்கு நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ, கவுன்சிலர்கள் ரங்கநாதன், கவுதமன், நுகர் பொருள் வாணி...
தமிழகம்
ம.தி.மு.க.,- இ.கம்யூ., மறியல்: தஞ்சாவூரில் 27 பேர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்குவதை கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக்கோரி சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ மற...
தமிழகம்
உடுமலை, வால்பாறை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா
வால்பாறை : வால்பாறை, உடுமலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியை விக்டோரியா தலைமையில் நடந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இன்னாச்சிமுத்து பரிசு வழங...
தமிழகம்
தஞ்சையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மேகநாதன், மாவட்ட செயலாளர் கோபால்சாமி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மனோகரன், பிற சங்க நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, சந்திரமவ...
தமிழகம்
லட்சுமி நரசிம்மருக்கு சுதர்சன ஹோமம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது.பொள்ளாச்சியில் பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் சனிக்கிழமைகளில் மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. நாளை (17ம் தேதி) காலை 6.00 மணிக்கு துவங்கும் ஹோமம் 8.00 மணி வரை நடக்கிறது.வரும் 19ம் தேதி நரசிம்மர் ஜென்ம நட்சத்திரமான சுவாதி அ...
தமிழகம்
மாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்: கும்பகோணம் சிங்காரதோப்பில் ஜோதி தந்த முத்து இறக்கும் மாரியம்மன் கோவில் உள்ளது.இங்கு ஸ்ரீமுத்துமுனீஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீசுந்தரமகாகாளியம்மன், தேவிபச்சைகாளியம்மன் மற்றும் பல பரிவாரங்களும் அமைந்த கோவிலாக உள்ளது. அரசலாற்றங்கரை வடபாகத்தில் அமைந்துள்ள இங்கு ஜோதி தந்த முத்து இறக்கும் மாரியம்மனுக்...