category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பிளஸ் 2 போலி மதிப்பெண் சான்றிதழ் விலை ரூ.10 ஆயிரம் | சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் தொடர்புடைய ஓய்வு பெற்ற உதவி தலைமையாசிரியர், கல்லூரி கல்வி இயக்குனரக கிளார்க் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு சான்றிதழுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை இவர்கள் வசூலித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோரிடம் தொடர்ந்து விசா... |
இந்தியா | காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் ராகுல் ஆலோசனை : தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்ததால் பரபரப்பு | தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து ராகுல் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நிலையில், தமிழகத்தின் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ள ராகுல், மாநிலத்தில் அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி சாதக, பாதகங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்துள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க... |
தமிழகம் | நாகர்கோவிலில் மாநில தடகள போட்டி துவக்கம் | நாகர்கோவில் : நாகர்கோவிலில்மாநில அளவிலான மூன்று நாள் தடகள போட்டிகள் நேற்று துவங்கியது. தமிழ்நாடு தடகளசங்கமும், கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கமும் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் மாநிலத்தின் 28 மாவட்டங்களில் இருந்து மூவாயிரம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்களுக்கு 54 போட்டிகளும், பெண்களுக்கு 53 போட்... |
தமிழகம் | மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு | பெருங்குடி : கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வெடுக்க, டில்லியிலிருந்து ரேலிகேர் என்ற தனியார் நிறுவன தனி விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல்படேல் நேற்று மாலை 5 மணிக்கு மதுரை வந்தார். அவரை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையாபாண்டியன்,காங்.,முன்னாள் எம்.பி. ராம்பாபு, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட... |
தமிழகம் | நிலையில்லாத காற்றாலை மின் உற்பத்தி* திணறும் மின் வாரியம் | உடுமலை : காற்று சீசன் இந்தாண்டு கை கொடுக்காததால், காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாமல், ஏற்ற, இறக்கங்களுடன் நிலையில்லாமல் உள்ளது. இதனால், நான்கு மாதங்களாக மின் பற்றாக்குறையை சமாளிப்பதில், மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காடு கணவாய் வழியாக வரும் காற்றை மையமாகக் கொண்டு, ... |
தமிழகம் | கொடைக்கானலில் கட்டட வரைபட அனுமதி கட்டணம் உயர்கிறது | கொடைக்கானல் : கொடைக்கானலில் கட்டட வரைபட அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொடைக்கானல் நகராட்சியில், வீடுகள் கட்ட நகரமைப்பு பிரிவில் அனுமதி பெற வேண்டும். 2,500 சதுர அடிக்குள் கட்டடம் கட்ட நகரமைப்பு அனுமதி வழங்குகிறது.
2,500 மேல் 3,000 சதுர அடிக்குள் கட்டடம் கட்ட, திண்டுக்கல் டி.ஆர்.ஓ., தலைமையி... |
தமிழகம் | டாக்டர்கள் சங்கத்தின் ரத்த தான டைரக்டரி | கம்பம் : ஐ.எம்.ஏ., தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் சார்பில் ரத்ததானம் செய்யும் நபர்களின் விலாசங்கள் அடங்கிய டைரக்டரி வெளியிடும் பணிகள் நடந்து வருவதாக மாநில தலைவர் சுகுமார் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: உடல் உறுப்புகள் தானம் மற்றும் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, டாக்டர்கள் சங்கங்கள் பல்வேறு முயற்சிகளில் இறங்கி... |
தமிழகம் | மாணவியருக்கு 20ம் தேதி மறு தேர்வு | வேலூர் : திருவள்ளுவர் பல்கலை மாணவியருக்கு, வரும் 20ம் தேதி மறு தேர்வு நடக்கிறது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கு உட்பட்ட ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், பட்டப் படிப்பு செமஸ்டர் தேர்வு எழுதிய 229 மாணவியரின் விடைத்தாள்கள் காணாமல் போனது. இதையடுத்து, இந்த மாணவியருக்கு வரும் 20ம் தேதி மறு தேர்வு நடத்த, திருவள்ளுவர் பல்... |
தமிழகம் | கோவில் கோபுரங்களை பாதுகாக்க திட்டம் * ஆய்வு பணிகள் ஜரூர் | சிவகங்கை : அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் ஐந்து நிலை கோபுரங்களை பாதுகாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.தமிழகத்தில் அறநிலையத்துறை, மடங்கள், தனியார் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 355 கோவில்கள் உள்ளன. இதில், அறநிலைய துறையின் கீழ் உள்ளவை 34 ஆயிரத்து 315. இதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாம... |
தமிழகம் | துபாயில் கொத்தனார் வேலை :23, 24ம் தேதி ஆளெடுப்பு | சென்னை : துபாயில் கொத்தனார், இரும்பு கம்பியில் சாரம் கட்டுபவர்கள், சென்டரிங் கார்பென்டர்கள், ஸ்டீல் பிக்சர்கள் வேலைக்கு, 23ம் தேதி தஞ்சாவூரிலும், 24ம் தேதி காரைக்குடியிலும் நேர்முகத் தேர்வு நடக்கிறது.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துபாயில் முன்னணி நிற... |
தமிழகம் | கிழக்கு சென்னை தேசிய கூடைப்பந்து:மேற்கு ரயில்வே வெற்றி | சென்னை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் மேற்கு ரயில்வே ஆண்கள் அணி 63-54 என்ற புள்ளிக் கணக்கில் சத்யபாமா அணியை வீழ்த்தியது.தேசிய அளவிலான 2வது ஜேப்பியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் ஜேப்பியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதில் இரண்டாம் நாள் ஆட்டத்தில், மேற்கு ரயில்வே மற்றும் சத்யபாமா... |
தமிழகம் | மளிகை சாமான்கள், எரிபொருள் செலவை உயர்த்தி தர வேண்டும் | கம்பம் : சத்துணவு மையங்களுக்கு மளிகை பொருள் மற்றும் எரி பொருள் செலவு தொகையை, அரசு அதிகரித்து வழங்க வேண்டும், என தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: மாநிலம் முழுவதும் கிராமப்பகுதிகளில் 39 ஆயிரத்து 853 மையங்கள், நகரப்பகுதிகளில் ஆயிரத்து 810 மையங்... |
தமிழகம் | பருவ மழை சூடு பிடிப்பதால் இந்திய ரோந்து பணிக்கு சிக்கல் | ராமநாதபுரம் : பருவ மழை சூடுபிடித்துள்ளதால், இந்திய எல்லைப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பருவ மழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாலையில் கொட்டித்தீர்க்கும் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது. பகலில் லேசான வெயில... |
தமிழகம் | பணியில் போலீசார் இறந்தால் வாரிசுக்கும் போலீஸ் வேலை | திண்டுக்கல் : தமிழகத்தில், போலீஸ் துறையில் பணியாற்றும் போது இறப்பவர் வாரிசுக்கு, போலீஸ் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், போலீஸ் துறையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் இறக்க நேர்ந்தால்,அவரின் வாரிசுகள் படித்திருந்தால், தகுதிக்கு ஏற்ப அமைச்சுப் பணியாளர் பணி வழங்கப்படும். தற்போது வாரிசுதாரர்களின் உடல் தக... |
தமிழகம் | ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வுக்கான அறிவிப்பு | திண்டுக்கல் : ரயில்வே ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என, ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ., மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் பேசினார்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) புதுப்பிக்கப்பட்ட கிளை துவக்க விழா நடந்தது.
மண்டல தலைவர் ரா... |
தமிழகம் | கோவில்களில் கும்பாபிஷேகம் | பேரம்பாக்கம் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், பிள்ளையார்குப்பம் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.மங்கள ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: மணவாளநகர் மங்கள ஈஸ்வரி சமேத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி இரவு 9 மணிக்கு கலச ஸ்தாபனம், மகா தீபாராதனை நடந்தது. மறுநாள் 15ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7... |
தமிழகம் | விடுதலை போராட்ட தியாகிகளுக்கு கலைஞர் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தல் : குமரி கலெக்டர் தகவல் | நாகர்கோவில் : உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் விடுதலை போராட்ட தியாகிகள், முன்னாள் கிராம முன்சீப்கள், மற்றும் அரசு பொதுநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ விடுத்துள்ள செய்திக் க... |
தமிழகம் | இடம், நிதி ஒதுக்கியும் வாடகையில் இயங்கும் அரசு அலுவலகங்கள் | பேரம்பாக்கம் : பேரம்பாக்கத்தில் பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் முக்கிய அரசு அலுவலகங்கள் பல வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. கடந்த 27 ஆண்டுகளாக சார் பதிவாளர் அலுவலகம் ஊராட்சி எல்லையில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்கி வருக... |
தமிழகம் | மின்சார துறையினர் அலட்சியம்விவசாயிகளின் பயிர்கள் சேதம் | திருத்தணி : வயல்வெளியில் திருடு போன மின்கம்பங்களுக்கு ஒயர்கள் பொருத்தப்படாததால், பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி, விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.திருத்தணி மின்சார கோட்டத்திற்கு உட்பட்ட வேலஞ்சேரி, தாழவேடு, தும்பிகுளம், அருங்குளம், சிவாடா, நெமிலி, அரும்பாக்கம், பனப்பாக்கம், மத்தூர், பொன்பாடி உட்பட 2... |
தமிழகம் | பைக்கில் சென்றமுதியவர் பலி | பள்ளிப்பட்டு : வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பாராஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் கோட்டீஸ்வர் (54). இவர் சோளிங்கரிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.நேற்று பணி முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் கரிக்கல் அருகே எதிரே வந்த சைக்கிள் மீது மோதி... |
தமிழகம் | மயக்க பவுடர் தூவி5 சவரன் நகை கொள்ளை | திருத்தணி : திருத்தணி பழைய பஜார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (60). இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் வெளிக்கதவை திறந்து சில மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர்.தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மயக்க பவுடர் தூவினர். பின்னர் அடுத்த அறைக்குள் சென்று அங்கிருந்த பீரோவை உட... |
தமிழகம் | கணவன், மாமனார் உட்பட நால்வருக்கு 13 ஆண்டு சிறை : வரதட்சணை கொடுமை வழக்கில் தீர்ப்பு | திருவள்ளூர் : திருமணமான மூன்றாவது மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவன், மாமியார், மாமனார், மைத்துனர் ஆகிய நால்வருக்கு தலா 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகல்மேடு கிராமத்... |
தமிழகம் | விவசாய தொழில் பாதிப்பு: கட்டட தொழிலுக்கு மாறினர் | திருத்தணி : போதுமான அளவு மழை பெய்யாததால், விவசாய தொழிலை துறந்து விவசாயிகள் கட்டட வேலைக்குச் செல்லும் நிலை உருவாகி வருகிறது.திருத்தணி தாலுகாவில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலை நம்பி தான் வாழ்கின்றனர். சிலர் மட்டும் பஜாரில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.கடந... |
தமிழகம் | சாலையின் நடுவில் நிற்கும் பஸ்கள் வாகன ஓட்டிகள், மக்கள் கடும் அவதி | திருவள்ளூர் : திருவள்ளூர் நகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், முக்கிய வளைவுகளில் பஸ்களை சாலையின் நடுவே நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள சென்னை - திருவள்ளூர் -திருப்பதி, திருவள்ளூர்-சென்னை சாலைகள் குறுக லாக இருப்பதாலும், சி.வி.... |
தமிழகம் | குத்தகை பணம் கட்டாத தமிழ்நாடு ஓட்டலுக்கு "சீல்' | திருத்தணி : குத்தகை பணம் தராததால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டதுதிருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் முருகம்பட்டு கிராமம் அருகே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், தமிழ்நாடு ஓட்டல் நடத்தப்படுகிறது. இதை, அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் குத்தக... |
தமிழகம் | மர்ம நோய்: கிராம மக்கள் பீதி | கும்மிடிப்பூண்டி: கிராம மக்களை அடுத்தடுத்து மர்ம நோய் தாக்கியதில் ஏராளமானோர் வாந்தி, பேதியில் அவதிப்பட்டு வருகின்றனர். அடுத்தடுத்த கிராமங்களுக்கு நோய் பரவி வருவதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிப்புத்தூர் கிராமம். அங்குள்ள சின்ன காலனியை சேர்ந்த மக்களை, கடந்த மூன்று ... |
தமிழகம் | துறைமுக விரிவாக்கம் அவசியம் : கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் ஆதரவு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு துறைமுக விரிவாக்கம் மிகவும் அவசியம் என்று நேற்று மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். உடனடியாக பணிகளை துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஒன்றிரண்டு மீனவர்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் 4 ஆய... |
தமிழகம் | 24 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை | சென்னை : தமிழறிஞர்கள் 24 பேரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான, பரிவுத்தொகை ஒரு கோடியே 58 லட்ச ரூபாயை அவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் கருணாநிதி வழங்கினார். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட சான்றோர்களின் படைப்புகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், அவர்களின் நூல்... |
தமிழகம் | பட்டமளிப்பு விழா | மதுரை:மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் நடந்த விழாவில், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சேர்மன் நம்பெருமாள்சாமி, மாணவிக்கு பட்டம் வழங்கினார். அருகில் கல்லூரி தாளாளர் கருமுத்து கண்ணன், முதல்வர் அபய்குமார். |
தமிழகம் | கூடுதல் சம்பளம் கேட்டு ஆர்.டி.ஒ.,அலுவலகம் முற்றுகை | உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி, குமரர்கோயில் பகுதி மக்கள் நூறு நாள் வேலைக்கு செல்கின்றனர். இதில் மிகக் குறைவாக சம்பளம் நிர்ணயிப்பதாககூறி பணிக்கு வந்த பெண்கள் உசிலம் பட்டி ஆர்.டி.ஒ., அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களுடன் உசிலம்பட்டி ஆர்.டி.ஒ., சங்கர், வருவாய் துறை, ஊராட்சி ஒன... |
தமிழகம் | ம.தி.மு.க.,ஆர்ப்பாட்டம் | மதுரை: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவை சிறையில் இருந்து விடுவிக்க கோரி, அக்கட்சியினர் மதுரை ஸ்காட் ரோட்டில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.நகர் செயலாளர் பூமிநாதன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சின்னச்செல்லம், பொருளாளர் ஆசைதம்பி, தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். |
தமிழகம் | மின் இணைப்புக்கு பெற்ற கட்டணத்தை திருப்பி வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு | மதுரை: மதுரையில் மின் இணைப்பு வழங்காத மின்சார வாரியம், அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத்தை திருப்பி வழங்கும்படி, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.மதுரை உத்தங்குடியை சேர்ந்த புஷ்பவள்ளி தாக்கல் செய்த புகார் மனு:உத்தங்குடியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று வீடுகள் மற்றும் ஸ்டோர் ரூமுக்கு மின் இணைப்பு வேண்டி வாரியத்திடம் விண்ணப்பித்த... |
தமிழகம் | போக்குவரத்து மாற்றம் : தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி கமிஷனர் உத்தரவு | மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுமதித்து வெள்ளோட்டம் பார்க்குமாறு கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்த பஸ் ஸ்டாண்ட் அருகில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஜூலை 7ல் கட்டபொம்மன் சிலை ரவுண்டானா அகலம் குறைக்கப்பட்டது. நிரந்தரமாக இப்பகுதிய... |
தமிழகம் | மொபைல் சார்ஜ் போடுவதில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து | அவனியாபுரம்: பெண்ணிடம் மொபைலை சார்ஜ் போடச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.அவனியாபுரம் காட்டுமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் சரவணன்(25), மகாராஜன். இருவரும் உறவினர்கள். சரவணனின் உறவினர் பாண்டிசெல்வி, நேற்று முன்தினம் தன் மொபைலை சார்ஜ் போட சொல்லி மகாராஜனிடம் கொடுத்தார். இதை பார்த்த சரவணன... |
தமிழகம் | மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா | மதுரை: மதுரை மாவட்டம் ஊர்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜான்கென்னடி அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பேன்சி வரவேற்றார். ஆசிரியர் பீட்டர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியருக்கு இலவசமாக புத்தக பைகள் வழங்கப்பட்டன. ஆச... |
தமிழகம் | ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., போட்டியின்றி தேர்வு | கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஊராட்சியில் 2வது வார்டு கவுன்சிலராக இருந்த பள்ளபட்டியைச் சேர்ந்த பரமசிவம் சில மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தார்.இதையடுத்து அந்த வார்டிற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வலைச்சேரிபட்டியைச் சேர்ந்த ஜீவானந்தம், பள்ளபட்டியைச் சேர்ந்த பாண்டி, செல்வம், சேவுகப்பெருமாள் மற்றும் தி.மு.க., சார்பில்... |
தமிழகம் | உதவி கமிஷனர்கள் பொறுப்பேற்பு | மதுரை: மதுரை அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராக தனபால், நகர் குற்றப்பிரிவு உதவி கமிஷனராக குலாம் பொறுப்பேற்றுக் கொண்டனர்.போக்குவரத்து பிரிவில், நகர் உதவி கமிஷனராக மகுடபதி, தல்லாகுளம் உதவி கமிஷனராக சோமசுந்தரம் பொறுப் பேற்றுக் கொண்டனர். |
தமிழகம் | பெண்ணிடம் நகை பறிப்பு | மதுரை : மதுரை புதூரைச் சேர்ந்தவர் சண்முகம். வெளிநாட்டில் வசிக்கிறார். இவரது மனைவி சிவகாமி(32). நேற்று முன் தினம் டூவீலரில் தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்தார். அப்போது சைக்கிளில் வந்த நபர், அவரை நிறுத்தி, முகவரி கேட்பது போல், சிவகாமி கழுத்தில் இருந்த எட்டரை பவுன் நகையை பறித்துச் சென்றார். தல்லாகுளம் போலீசார் விசாரி... |
தமிழகம் | மதுரை விமான நிலைய புதிய டெர்மினல்15 நாளில் திறப்பு | பெருங்குடி: கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வெடுக்க, டில்லியிலிருந்து ரேலிகேர் என்ற தனியார் நிறுவன தனி விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல்படேல் நேற்று மாலை 5 மணிக்கு மதுரை வந்தார். அவரை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையாபாண்டியன், காங்., முன்னாள் எம்.பி., ராம்பாபு, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட... |
தமிழகம் | பைக்குகள் மோதல்: ஒருவர் பலி | மேலூர்: மேலூர் அருகில் உள்ள பெருங்காலக்குடியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர், நேற்று மாலை 4 மணிக்கு மேலூர் வந்துவிட்டு, திருச்சி பஸ் ஸ்டாண்ட் டைம் கீப்பர் ஆறுமுகம்(35) என்பவருடன் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.திருவாதவூர் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் வந்தபோது, எதிரே வந்த கொட்டகுடி சுப்பிரமணி(55) பைக்க... |
தமிழகம் | ஒரு ருத்திராட்ச மாலையின் விலை ரூ.19 லட்சம் | மதுரை: மதுரை மேலவெளிவீதி பூம்புகார் விற்பனை நிலையத்தில், 21 முகங்கள் கொண்ட ருத்திராட்ச மாலை 19 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இங்கு முதன்முறையாக, ஜூலை 31 வரை ஆன்மிக பொருட்கள் சிறப்புக் கண்காட்சி நடக்கிறது. நேற்று கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். கண்காட்சியில் ஒன்று முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் கொண்ட மால... |
தமிழகம் | பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி | கொட்டாம்பட்டி: திருப்புத்தூர் அருகேஉள்ள எம்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர்(30). ஆட்டோ டிரைவர். இவர் தனது நண்பர் கண்ணனுடன் நேற்று மதியம் 12 மணிக்கு டூவீலரில் மேலூருக்கு வந்தார். டூவீலரை கண்ணன் ஓட்டிவந்தார்.(இருவரும் ஹெல்மெட் அணியவில்லை). கருங்காலக்குடி அருகே நான்கு வழிச் சாலையில் திரும்பியபோது, எதிரே மேலூரிலிருந்து ச... |
தமிழகம் | ஆட்டோ மோதி முதியவர் பலி | மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமு(70).நேற்றுமுன் தினம் உறவினர் சுரேஷ் குமாரு டன், விஸ்வநாதபுரம் ரோடு - தபால் தந்தி நகர் ரோடு சந்திப்பில் நடந்து வந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் இறந்தார். |
தமிழகம் | விளாச்சேரியில் ரூ.30 லட்சத்தில் தார்ச்சாலை, வடிகால் பணிகள் | திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் ரூ. 30 லட்சத்தில் தார் சாலை மற்றும் வடிகால் கட்டும் பணிகள் நடக்கிறது. மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் விளாச்சேரி பரிதிமாற் கலைஞர் அரசு நினைவிடம் அருகிலிருந்து திருநகர் ஆரம்ப பகுதிவரை 1.2 கி.மீ., தூரம் தார்சாலையும், தண்ணீர் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கும் 50 மீட... |
தமிழகம் | தேனூரில் மனுநீதி நாள் முகாம் | பரவை: பரவை அருகே தேனூரில் நேற்று வடக்கு வட்ட வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் மனு நீதிநாள் முகாம் நடந்தது. முகாமிற்கு மதுரை கலெக்டர் காமராஜ் தலைமை வகித்தார். தேனூர் ஊராட்சி தலைவர் பா.மாலதி, துணைதலைவர் பீர்முகமது முன்னிலை வகித்தனர். ஆர்.ஐ.,அம்பலத்தரசு வரவேற்றார். ஜூன் 14 லில் இருந்து 500 க்கு மேற்பட்ட மனுக்க... |
தமிழகம் | வனத்துறை டிரைவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஐகோர்ட் உத்தரவு | மதுரை: வனத்துறை டிரைவர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷன் சிபாரிசுபடி சம்பள உயர்வை, நிலுவையுடன் வழங்க, அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த தமிழ்நாடு வனத்துறை ஊர்தி டிரைவர்கள் சங்க மாநில தலைவர் ஜெயக் கொடி தாக்கல் செய்த ரிட் மனு:வனத்துறையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். ஆறாவது சம்பள கமிஷன், தேர்வு மற்றும... |
தமிழகம் | சிறுதொழில் துறை சார்பில் நவரத்தினம் கண்டறியும் பயிற்சி | மதுரை: மதுரை கே.புதூர் சிறிய, மிகச்சிறிய, நடுத்தர தொழில் அமைச்சக தொழிற்பேட்டையில் நவரத்தினம் மற்றும் வைரம் கண்டறியும் செய்முறை பயிற்சி முகாம் ஜூலை 27 ல் துவங்கி ஐந்து நாட்களுக்கு நடக்கிறது.இந்திய அரசின் சிறிய, மிகச்சிறிய நடுத்தர தொழில் (எம்.எஸ். எம்.இ.,) உதவி இயக்குநர் சிவலிங்கம் வெளியிட்ட அறிக்கை:நவரத்தினம், வைரத்தை ப... |
தமிழகம் | வட்டார கல்விக்குழு கூட்டம் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், வட்டார கல்விக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கல்வித்துறை அதிகாரிகள் பேசியதாவது:ஒன்றியத்திற்குட்பட்ட 100 பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ., மூலம் கழிப்பிட வசதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ஆறு பள்ளிகளில் தனித்தனி கழிப்பிட வ... |
தமிழகம் | விவசாயிக்கு அரிவாள் வெட்டு | கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய கூலித் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். கிணத்துக்கடவு அடுத்துள்ள குருநல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருமூர்த்தி(42). இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்னை அமைத்துள்ளார். அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னுவை வேலைக்கு சேர்த்திருந்தார். சரியாக வேலை பா... |
தமிழகம் | கொலை மிரட்டல்: ஒருவர் கைது | வால்பாறை: போலீசை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் காரராக பணிபுரிபவர் ஐயப்பன். இவர் நேற்று முன்தினம் ஆனைமலையில் உள்ள டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று விட்டு, இரவு 8.30 மணிக்கு அரசு பஸ்சில் வால்பாறை வந்தார். அப்போது பஸ்சில் அமர்ந்திருந்த வால்பாறை டவுன் பகுதியை சேர்... |
தமிழகம் | புதிய நிர்வாகிகள் தேர்வு! | பொள்ளாச்சி: தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் மின்வாரிய உரிமை ஒப்பந்ததாரர்கள் சென்ட்ரல் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர்கள் அய்யாசாமி, விஸ்வநாதன், மற்றும் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொள்ளாச்சி கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொள்ளாச்சி கிளை தல... |
தமிழகம் | "திருட்டை தடுக்க பொதுமக்கள் போலீசுக்கு ஒத்துழைக்கணும்' | பொள்ளாச்சி: குடியிருப்பு பகுதிகளில் அறிமுகம் இல்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கொடுத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையம் ஊராட்சி தங்க விநாயகர் நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க துணைத்தலைவர் க... |
தமிழகம் | சமய நெறிமுறை பயிற்சி | பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டிணம் அருணாசல அட்சர மணமாலை சேவை மையம் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கு சமய நெறி முறைப் பயிற்சி நடந்தது. கோட்டூர் ராமர் கோவிலில் நடந்த பயிற்சி முகாமிற்கு நடராஜ் தலைமை வகித்தார். அன்பு, அறிவு, அருள் தலைப்பில் சொற்பொழிவும், அறிவியல் வினாடி வினா போட்டியும், தேவார பாடல்களும்... |
தமிழகம் | மூன்று மாதத்தில் ரூ. 5 கோடி விவசாய கடன்! | பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள கனரா வங்கிகள் மூலம் நடப்பு ஆண்டில் மூன்று மாதத்தில் 30 பயனாளிகளுக்கு ஐந்து கோடி ரூபாய் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாக மண்டல மேலாளர் தெரிவித்தார். பொள்ளாச்சியிலுள்ள கனரா வங்கிகளின் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் சக்தி ஓட்டலில் நடந்தது. வங்கியின் வாடிக்கையாளர்கள் பேசும்போது, "பொள்ளாச்சி வ... |
தமிழகம் | கண் பரிசோதனை முகாம் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி அஞ்சல் துறை மற்றும் கோவை வாசன் ஐ கேர் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. பொள்ளாச்சி அஞ்சலகத்தில் நடந்த முகாமை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அண்ணாமலை துவக்கி வைத்தார். தலை மை அஞ்சலக அதிகாரி பாலசுப்பிரமணியம், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயராஜ் உள்ளபட பலர் பங்கேற்றனர்.அஞ்சலக ஊழியர்கள்... |
தமிழகம் | தண்ணீரின்றி மக்கள் முற்றுகை | அன்னூர்: குப்பனூரில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி தலைவரை முற்றுகையிட்டனர். குப்பனூர் ஊராட்சியில் ஆலாங் குட்டை, சொலவம்பாளையம், அழகேபாளையம், குன்னியூர், குழியூரில் 4,000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு பவானி ஆற்று குடிநீர் பொகலூரை அடுத்த மன்னாரங்கம்பெனி மேட்டில் உள்ள மெயின் குழாயில் இருந்து சப்ளை ... |
தமிழகம் | குடிநீர் குழாயில் அழுகிய எலி : மருத்துவமனையில் 4 பேர் அனுமதி | பேரூர்: குடிநீர் குழாயில், அழுகிய நிலையில் எலியின் உடல் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அசுத்தமான நீரைக் குடித்த நான்குபேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொண்டாமுத்தூர் அருகே, புத்தூர் புதுக்காலனி உள்ளது. இங்குள்ள பட்டத்தரசியம்மன் கோவில் பகுதியில் 350 குடும்பங்கள் உள்ளது. கோவில் தெற்குப்புறத்திலுள்ள, குடிந... |
தமிழகம் | பொறுப்பேற்பு | கோவை: கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனராக பங்கஜவல்லி பொறுப்பேற்றார்.கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனராக பதவி வகித்து வந்த ராமமூர்த்தி, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அந்த பணியிடம் சில மாதங்களாக காலியாக இருந்தது. சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வந்த பங்கஜவல்லி, புதிய இணை இயக்க... |
தமிழகம் | நன்னடத்தையை மீறிய விடுதலை கைதி மீண்டும் கைது செய்ய போலீசார் தீவிரம் | கோவை: குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அஸ்ரப் மீதான நன்னடத்தை விடுதலையை ரத்து செய்து, மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆத்துப்பாலம், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அஸ்ரப். தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப் பட்ட இவருக்கு தனிக் கோர்ட் 13 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தமிழக மு... |
தமிழகம் | "கிராமிய கலையை பாதுகாக்க கோரிக்கை | பொள்ளாச்சி: மறைந்து வரும் கிராமிய கலைகளை பாதுகாக்க வேண்டும் என்று இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு விழாவில் கோரிக்கை வைக்கப்பட்டது. பொள்ளாச்சியில் உலக வேள்விக்குழு சார்பில் இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு விழா நடந்தது. தென்னிந்திய தென்னை உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். வேள்விக்குழு மாநில கவுரவ தலைவர் ம... |
தமிழகம் | குழந்தைகள் வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம் | மடத்துக்குளம்: மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பயிற்சி முகாம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சியை சேர்ந்த தலைவர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி முகாம் மட... |
தமிழகம் | வால்பாறையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு | வால்பாறை: வால்பாறையில் இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக நேற்று பொதுமக்களின் யல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறையில் கடந்த மாதம் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்யத் துவங்கியது. இதனையடுத்து அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொகுப்பு அணைகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அப்பர்ஆழியாறு மற்றும... |
தமிழகம் | பொதிமூட்டைகளாக பள்ளி குழந்தைகள் ஆட்டோக்களில் விதிமீறல் தடுக்கப்படுமா? | பொள்ளாச்சி: ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்கின்றனர். குழந்தைகளை காலை நேரத்தில் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதில் பெற்றோர்களுக்கு அசவுகரியங்கள் உள்ளதால், ஆட்டோ அல்லது பள்ள... |
தமிழகம் | கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டி: பி.எஸ்.ஜி., நிர்மலா கல்லூரி சாம்பியன் | கோவை: பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவர் பிரிவில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியும், மாணவியர் பிரிவில் நிர்மலா மகளிர் கல்லூரியும் சாம்பியன் பட்டம் பெற்றது. பாரதியார் பல்கலை உடற்கல்வி துறை சார்பில் 2010 - 11ம் ஆண்டுக்கான செயற்குழு கூட்டம், பாரதியார் பல்கலையில் நடந்தது. கூட்டத்தில்,... |
தமிழகம் | 70 ஆண்டுகளை நிறைவு செய்தது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை | கோவை: கோவை பெரியகடைவீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோவை, கடைவீதி கிளையின் 70ம் ஆண்டு விழா நடந்தது. கிளை உதவி பொதுமேலாளர் மாரியப்பன் வரவேற்றார். கோவை மண்டல பொதுமேலாளர் பழனிச்சாமி தலைமை வகித்து பேசியதாவது: கோவை மண்டலத்துக்குட்பட்ட கோவை, திருப்பூர், ந... |
தமிழகம் | இளைஞர் மன்ற விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு | கோவை: இந்திய அரசின் நேரு யுவகேந்திரா சார்பில் சிறந்த இளைஞர் மன்றத்துக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரு யுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அறிக்கை: இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் 2009-10ம் ஆண்டுக்கான இளைஞர், மகளிர் மன்றம் மற்றும் சிறந்த இளைஞர், மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது ... |
தமிழகம் | பீடம்பள்ளியில் இன்று மின்தடை | கோவை: பீடம்பள்ளி துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதை மற்றும் மின்னூரட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இன்று காலை 9.00 முதல் மாலை 5.00 வரை, கலங்கல், பட்டணம், பீடம்பள்ளி, பாப்ப ம்பட்டி, அக்கநாயக் கன் பாளையம், பட்டணம்புதூர், நடுப் பாளையம் ஒரு பகுதி. சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம், ... |
தமிழகம் | மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள் : விளையாட இடம் கிடைக்காமல் சிறுவர்கள் | கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட விளையாட்டு மைதானங்கள், கண்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதாலும், வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாலும், மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் விளையாட இடம் கிடைக்காமல் சிறுவர்கள் தவிக்கின்றனர். இம்மைதானங்களை பழையபடி விளையாட்டு மைதானங்களாக மாற்ற கோரி மா... |
தமிழகம் | துரத்திக் கடித்தது வெறிநாய் : அரசு மருத்துவமனையில் 10 பேர் அனுமதி | கோவை: வெறிநாய் துரத்திக் கடித்ததால் மூன்று குழந்தைகள் உள்பட 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தெருக்களில் நாய்கள் கூட்டமாக செல்வதும், தனியாகச் செல்லும் நபர்களை துரத்துவதும் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. "வீடுகளில் லைசென்ஸ் இல்லாமல் நாய் வளர்க்கக்கூடாது' என்ற நிலை இருந்தாலும், தெருக்களில் நடந்த... |
தமிழகம் | அனைத்து தரப்பினருக்கும் கடன் வழங்குவது கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் "பெருமிதம்' | கும்பகோணம்: கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவில் கும்பகோணம் கூட்டுறவு நகர வங்கி புதிய கிளை தொடக்க விழா கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவாஜி தலைமையில் நடந்தது.சரக துணைப்பதிவாளர் ஜெயராஜ் வரவேற்றார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி புதிய கிளையை துவக்கி பேசியதாவது:கும்பகோணத்தில் 1919ல் துவங்கிய கூட்டுறவு நாண... |
தமிழகம் | பள்ளிப்படிப்புடன் பொது அறிவும் அவசியம் : கல்வி வளர்ச்சி நாளில் டி.ஆர்.ஓ., அட்வைஸ் | தஞ்சாவூர்: தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:காமராஜர் கிராமப்புற மக்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கரை கொண்டு பல திட்ட... |
தமிழகம் | விலைவாசி உயர்வை கண்டித்து தே.மு.தி.க., பொதுக்கூட்டம் | பாபநாசம்: பாபநாசத்தில் தே.மு.தி.க., சார்பில் விலை உயர்வு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.பாபநாசம் கீழ வீதியில் காவிரி டெல்டா விவசாயத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும், பெட்ரோல், டீஸல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பாபநாசம் தொகுதி... |
தமிழகம் | மாநில அளவில் செஸ் போட்டி துவக்க விழா | பாபநாசம்: பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஆர். எஸ்.மஹாலில் கிங் பான் செஸ் அகடமி, இந்திரஜித் நினைவு அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டி சோழன்நெடுமுடிகிள்ளி தலைமையில் நடந்தது.செயலாளர் ஜாகீர் உசேன் வரவேற்றார். நிறுவனர் வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார். மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டியை பாபநாசம் எம்.எல்... |
தமிழகம் | அண்ணலக்ரஹாரத்தில் இயற்கை வேளாண் விழிப்புர்ணவு கருத்தரங்கு | கும்பகோணம்: தமிழகம், புதுச்சேரி இயற்கை வேளாண் இணையம், மருதாநல்லூர் ரெசி டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் அண்ணலக்ரஹாரத்தில் இயற்கை வேளாண் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சமூக சேவகர் கூனஞ்சேரி வீரமணி வரவேற்றார். இயற்கை வேளாண்மை இணையத்தின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சரோ... |
தமிழகம் | ஆண்டு விழா | கோவை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோவை கடைவீதி கிளையின் 70ம் ஆண்டு விழா நடந்தது. மண்டல பொதுமேலாளர் பழனிச்சாமி பேசினார். அருகில், கிளை உதவி பொதுமேலாளர் மாரியப்பன். |
தமிழகம் | ஆண்களும் கருத்தடை செய்து கொள்ளணும்: மக்கள் தொகை தினத்தில் வலியுறுத்தல் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் திலகர் திடலில் இருந்து உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி, சங்கீத மஹாலை அடைந்தது. அங்கு நடந்த கருத்தரங்கில் இணை இயக்குனர் (மருத்துவம்) முகம்மது ஜான் வரவேற்றார்.
துணை இயக்குனர் (சுகாதாரம்) மதிவாணன் பேசியதாவது: உல... |
தமிழகம் | காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர் குறைதீர்க்க ஜூலை 29ல் கூட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:தஞ்சையில் காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர் கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலக பிரதான கட்டிடத்தில் ஜூலை 29ம் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் சண்முகம் தலைமையில் நடக்கிறது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள சமையல் காஸ் முகவர்கள், நுகர்வோர்களுக்கு புதிய நிரப்பப்பட்ட காஸ் சிலிண்டர்க... |
தமிழகம் | குடந்தை பகுதியில் காமராஜர் பிறந்தநாள் விழா | கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் மேகலா நகரில் உள்ள நேஷனல் வித்யாலயா நர்சரி அன் பிரைமரி பள்ளியில் நேற்று முன்தினம் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நேஷனல் வித்யாலயா பள்ளி மூலம் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மார்க் பெறும் மாணவருக்கு 1000 ரூபாய் ரொக்கப்பரிசு ஆண்டு தோறும் வழங்கப்படுவது வழ... |
தமிழகம் | யூனியன் வளர்ச்சி பணி: கலெக்டர் நேரடி ஆய்வு | தஞ்சாவூர்: தஞ்சை யூனியனில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.நடப்பு 2010 - 11ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாரியம்மன் கோவில் அருகே காடவராயன்குளத்தில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி நடக்கிது.தர்மாம்பாள் நகரில் 3.40 லட்சம் ரூபாயில் நூலக கட்ட... |
தமிழகம் | கண் சிகிச்சை முகாம் | பந்தலூர்: பந்தலூர் மேங்கோரேஞ்சில், நாளை, இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட உள்ளது.கூடலூர் நுகர்வோர் மக்கள் மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், பந்தலூர் மேங்கோரேஞ்ச் மருத்துவமனையில், நாளை, இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட உள்ளது. காலை 10.00 மண... |
தமிழகம் | மின் இணைப்பு விவகாரம்: 30ல் உண்ணாவிரதம் | பந்தலூர்: பந்தலூர் சேரங்கோடு மற்றும் நாயக்கன்சோலை பள்ளிகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, உண்ணாவிரதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் நவரத்தினம், குருநாதன், அந்தோணி, நாயக்கன்சோலை பள்ளி பி.டி.ஏ., தலைவர் சிவனடியார் இணைந்து, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: பந்தலூர் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்... |
தமிழகம் | மன ஊக்கமிருந்தால் வெற்றிக்கு ஏது தடை? சாதிக்கிறார் குக்கிராம வாலிபர் | கோபிசெட்டிபாளையம்:மாநில அளவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில், கோபி வெள்ளங்கோவிலை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர், ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். வெள்ளாங்கோவிலை சேர்ந்த சண்முகம் - பழனியம்மாள் தம்பதியினர் மகன் சீனிவாசன் (26); பிறவியிலேயே கால் ஊனமாக பிறந்தார். சிறுவயது முதலே வ... |
தமிழகம் | விவசாயிகளின் மஞ்சள் மோகத்தால் நெல் விலை உயர்வு | கோபிசெட்டிபாளையம்:மஞ்சள் விலை உயர்ந்ததால் கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதி விவசாயிகள் மஞ்சள் சாகுபடியை அதிகப்படுத்தினர். நெல் சாகுபடி பரப்பளவு கணிசமாக குறைந்ததால், நெல் விலை உயர்ந்துள்ளது.அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ்பவானி, குண்டேரிப்பள்ளம் அணை பாசனப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் மு... |
தமிழகம் | மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா :மாணவ, மாணவியர் உற்சாகம் | ஊட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, நீலகிரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. ஊட்டி தூனேரி குருகுலம் பள்ளியில், மாணவி சிந்து வரவேற்றார். பள்ளி தாளாளர் அர்ஜுனன், தேசியக் கொடியேற்றினார். முதல்வர் வாசுகி பேசினார். பள்ளி மாணவர் பேரவைத் தேர்தலில், தலைவியாக ஷாலினி தேவி, உப தலைவியாக அனுஷா தேர்வு செய்யப்பட்ட... |
தமிழகம் | உறுப்பினர் கல்வித் திட்ட நிகழ்ச்சி | மஞ்சூர்: நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில், மஞ்சூர் எடக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், உறுப்பினர் கல்வித் திட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டுறவு சங்க நிர்வாகி தருமன் வரவேற்றார்."எடக்காடு பகுதியில், அதிகளவு தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தேயிலைக்கு போதிய விலை கிடைப்பதில்லை. வங்க... |
தமிழகம் | புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு: "அமைதி' நிலவ நடவடிக்கை | ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.,யாக காளிராஜ் மகேஷ்குமார் பொறுப்பேற்றார்.நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த கபில்குமார் சராட்கர், கோவை மாவட்ட எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டார்; பெரம்பலூர் எஸ்.பி.,யாக இருந்த காளிராஜ் மகேஷ்குமார், நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றார். திருநெல்வேலியை சேர்ந்த இவர்,... |
தமிழகம் | மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் | மஞ்சூர்: மஞ்சூர் அண்ணாநகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மஞ்சூர் அருகே அண்ணாநகர் கிராமத்தில் 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் திருப்பணிகளை பொதுமக்கள் மேற்கொண்டனர்; பணிகள் முடிந்து நேற்று முன்தினம் காலை 7.00 மணிக்கு கணபதி பூஜை, 8,00 ... |
தமிழகம் | பனை கருப்பட்டி விலை ரூ. 1.10 உயர்வு | கோபிசெட்டிபாளையம்:தென்னை கருப்பட்டிக்கு தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், பனை கருப்பட்டி விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் 10 பைசா வரை அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் நடந்து வருகிறது.கோபி, குன்னத்தூர், பெருந்துறை, சிறுவலூர், கொளப்பலூர், கெட்டிசேவியூ... |
தமிழகம் | தாங்கிப் பிடித்து தாக்குப் பிடிக்கும் : மலைச்சரிவுகளில் அரிய வகை மரக்கன்றுகள் நடவு | குன்னூர்: நீலகிரியில், நிலச்சரிவை தாங்கிப் பிடிக்கும் சக்தி வாய்ந்த வேர்களை கொண்ட மரங்களை, மலைச் சரிவுகளில் நடவு செய்ய, வனத்துறை முனைப்பு காட்டியுள்ளது. நிலச்சரிவு, மண்சரிவு போன்ற இயற்கையின் சீற்றம், மலை மாவட்ட மக்களை அதிகமாகவே ஆட்டம் காண செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் பருவ மழையின் போது, குன்னூர் - மேட்டுப்பாளையம்... |
தமிழகம் | பிளாட்ஃபாரத்தில் தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் : லாரி மோதி குழந்தைகள் பலியானதால் சோகம் | ஈரோடு:ஈரோடு நகரின் மையப்பகுதியில் பிளாட்ஃபாரத்தில் குடியிருக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசிக்க இடமின்றி தவிக்கின்றனர். நேற்று இக்குடும்பத்தினர் மீது லாரி மோதி இரு குழந்தைகள் பலியான சம்பவம், மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு பஸ் ஸ்டாண்டு அருகே பார்க் ரோடு பிளாட்ஃபாரத்தில், பூம்பூம் மாட்டுக்காரர்கள் ஏராளமானோர் த... |
தமிழகம் | புவியியல் பாடத்தில் "தங்கம்' கூடலூர் மாணவியர் சாதனை | கூடலூர்: கோவை பாரதியார் பல்கலைக் கழக அளவில், கூடலூர் கல்லூரி மாணவியர் இருவர், தங்கப் பதக்கம் பெற்று சாதித்துள்ளனர். கோவை பாரதியார் பல்கலைக் கழக அளவில், கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரி மாணவியர் வினோலியா மெர்சி, மலர்விழி, பி.எஸ்சி., புவியியல் மற்றும் எம்.எஸ்சி., புவியியல் பாடத்தில் முதல் இடம் பெற்றுள்... |
தமிழகம் | சிறப்பு பிரிவு உதவியாளர் பணி அறிவிப்பு பெயர் இருக்கான்னு உறுதி செய்யுங்க... | ஊட்டி: சிறப்பு பிரிவு உதவியாளர், திட்ட உதவியாளர், இருட்டறை உதவியாளர் பணிக்கு, பட்டியலில் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்ய அழைப்பு விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சி.ஐ.டி., இன்டெலிஜென்ஸ் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீசால், சிறப்பு பிரிவு உதவியாளர் ப... |
தமிழகம் | சாஸ்திரிநகர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க கோரி மனு | ஈரோடு:ஈரோடு சாஸ்திரிநகர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க கோரி, காசிபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் தட்சிணாமூர்த்தி கலெக்டரிடம் மனு அளித்தார்.மனுவில் கூறியுள்ளதாவது:ஈரோடு சாஸ்திரி நகரில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். சென்னிமலை சாலைக்கும் சாஸ்திரி நகருக்கும் இடையே ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக சாஸ்திரி நகர் ... |
தமிழகம் | குப்பை மேடாக மாறிய கள்ளிப்பட்டி வாரச்சந்தை | டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் யூனியன் கள்ளிப்பட்டி வாரச்சந்தை முறையாக பராமரிக்கப்படாததால் குப்பை மேடாக மாறியுள்ளது.கொண்டையம்பாளையம் பஞ்சாயத்து கள்ளிப்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. விவசாய கிராமமான கள்ளிப்பட்டியில் விவசாயிகளும், விவசாய கூலியாட்களும் அதிகம் வசிக்கின்றனர். ஞாயிறன்று கூடும் வா... |
தமிழகம் | கொலை குற்றவாளிகள் மீது நடவடிக்கை கலெக்டர், எஸ்.பி.,யிடம் சூளை மக்கள் மனு | ஈரோடு:ரேஷன் அரிசி கடத்தல் கும்பலால் சூளையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், ஊர் மக்களுக்கு பாதுகாப்பு கோரியும் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.ஈரோடு சூளை அருகே எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (27). ர... |
தமிழகம் | விபத்தில் 15 பேர் காயம் | ஊட்டி: ஊட்டி அருகே நடந்த லாரி விபத்தில், 15 பேர் காயமடைந்தனர். கோஸ் மூட்டைகள் ஏற்றிய லாரி, ஊட்டி எமரால்டு- கல்லக்கொரை சாலையில், நேற்று சென்றுக் கொண்டிருந்தது; 18 பேர் பயணித்தனர். டி.மணியட்டி மணலாடா பகுதியில், எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. ஓட்டுனர் ரங்கசாமி (40), சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுரேஷ்குமார் (28), ராஜேஷ் ... |
தமிழகம் | கல்வியில் பின்தங்கிய சிறுமிகளுக்கு அகராதி | ஈரோடு:ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வியில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு, தேசிய சிறப்பு பெண் கல்வி திட்டத்தின் கீழ், இலவசமாக அகராதி வழங்கப்படவுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் குண்டடம், மூலனூர், அம்மாபேட்டை, அந்தியூர், நம்பியூர் ஆகிய ஐந்து யூனியன்களில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வியில் பின் தங்கிய குழந்தைகள் அதிகம் ... |
தமிழகம் | வரும் 23ல் வரி வசூல் உரிமம் | கூடலூர்: கூடலூரில், தமிழக - கேரளா மாநில எல்லையில் உள்ள நான்கு மையங்களின் நுழைவு வரி வசூல் உரிமம், வரும் 23ம் தேதி நடத்தப்படுகிறது. தமிழக-கேரளா எல்லையான கூடலூர் நாடுகாணி, சோலாடி, தாளூர் மற்றும் பாட்டவயல் நுழைவுப் பகுதிகளில், சுங்க வரி சாவடி அமைத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, வாகனங்களுக்கு வர... |
தமிழகம் | ரூ. 17 கோடியில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை சீரமைப்பு: நபார்டு வங்கி திட்டத்துக்கு அரசு அனுமதி | கோபிசெட்டிபாளையம்:கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களை சீரமைக்க, 17 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான நபார்டு வங்கி திட்டத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து 30 கில... |
தமிழகம் | விதை உற்பத்தியாளருக்கு ஸ்டேட் வங்கியில் சலுகை | தாராபுரம்: தாராபுரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விதை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்க கூட்டம் நடந்தது.கோவை மண்டல மேலாளர் சீனிவாசன் பேசியதாவது:விவசாயிகள், நெல் அரவை ஆலைகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் நலன் கருதி பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.