category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
விபத்தில் 7 பேர் காயம்
கோபிசெட்டிபாளையம்: வரப்பாளையம் பகுதியை சேர்ந்த வேலப்ப கவுண்டர் மகன் முத்துசாமி (33); வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் உள்பட ஆறு பேரை ஏற்றி கொண்டு குன்னத்தூர் ரோடு வடுகப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். நல்லுசாமி என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில், வேனில் இருந்த முத்துசாமி உள்பட ஏழு பேரும் காயமடைந...
தமிழகம்
கோபியில் கலாமுக்கு உற்சாக வரவேற்பு
கோபிசெட்டிபாளையம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கோபி வழியாக கார் மூலம் சத்தி சென்றார். கோபி பஸ் ஸ்டாண்டில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.சத்தி பண்ணாரியம்மன் இன்ஜினியரிங் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் பிரிவு புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதற்காக டில்லியில் இருந்து விமானம் மூலம் சே...
தமிழகம்
சென்னிமலை இடைத்தேர்தலில் மும்முனை போட்டி
சென்னிமலை: சென்னிமலை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.தமிழகம் முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி தேர்தல் நடக்கிறது. சென்னிமலை யூனியனில் தி.மு.க., வசம் இருந்த 11வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் இடைத்தேர...
தமிழகம்
மின்சார இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்
ஈரோடு: பவானி கோட்ட அலுவலகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.பழைய உரிமையாளர்களின் பெயர்களில் உள்ள மின்சார இணைப்புகளை புதிய உரிமையாளர்களின் பெயர்களில் மாற்றம் செய்ய, மின்வாரியம் சார்பில் 23,24 இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. அன்று எல்லா பிரிவு அலுவலர்களும்...
தமிழகம்
ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
கோபிசெட்டிபாளையம்: கோபி கல்வி மாவட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 10 நாள் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் தொடங்கியது.தொடக்கப்பள்ளி முதலே மாணவ, மாணவியர்க்கு கம்ப்யூட்டர் திறனை அறிமுகப்படுத்தும் பொருட்டு, "அனைவருக்கும் கல்வி இயக்கம்' மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொடக்கப்பள்...
தமிழகம்
தற்கொலை
கோபிசெட்டிபாளையம்: கூதாம்பியை சேர்ந்த சென்னியப்ப கவுண்டர் மனைவி நல்லாம்மாள் (70); நரம்பு தளர்ச்சி நோய் இருந்தது. வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு நல்லாம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.திங்களூர் போலீஸ் எஸ்.ஐ., சண்முகம் விசாரிக்கிறார்.
தமிழகம்
கோவில் விழா
xகோபிசெட்டிபாளையம்: கடத்தூர் மகா முனியப்பன் கோவிலில் வரும் 28ம் தேதி ஆடி திருவிழா நடக்கிறது.கடந்த 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 27ம் தேதி படைக்கலம் புறப்படுதல், 28ம் தேதி காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல், இரவு பொங்கல் வைத்தல், 29ம் தேதி ஆடித்திருவிழா, ஆகஸ்ட் 2ம் தேதி மறுபூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை அறங்காவலர...
தமிழகம்
ஆடிப்பண்டிகை கொண்டாட தேங்காய் சுடும் குச்சி விற்பனைக்கு வந்தாச்சு
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனைக்கு வந்துள்ளன.ஆடிப்பண்டிகையின் போது, சேலம் மாவட்ட மக்கள் தேங்காய் சுட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.ஆடிப்பண்டிகை தினத்தன்று மாலையில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தேங்காயில் துளையிட்டு, அதனுள் அரிசி, நாட்டுச்சர்க்கரை, எள் மற்றும் பொடி...
தமிழகம்
செட்டியூர் பள்ளியில் அரை கி.மீ., தூரம் தண்ணீர் குடம் சுமக்கும் மாணவர்கள்
மேட்டூர்: செட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் அரை கி.மீ., தூரமுள்ள மெயின்ரோட்டிற்கு வந்து மாணவர்கள் குடத்தில் நீர் எடுத்து செல்வது பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.கொளத்தூர் ஒன்றியம், செட்டியூர் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. பாலமலை அடிவாரத்தில் புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது. பள்ளியில் க...
தமிழகம்
நெத்திமேடு மின் தடை ஒத்திவைப்பு
சேலம்: சேலம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சேலம் நெத்திமேடு துணை மின் நிலைய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:நெத்திமேடு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்...
தமிழகம்
வெறிநாய் கடித்து10 பேர் மருத்துவமனையில் அனுமதி
கோவை:வெறிநாய் துரத்திக் கடித்ததால் மூன்று குழந்தைகள் உள்பட 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கரும்புக்கடை, ரமலான் நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதோடு, சில வெறி நாய்கள் மக்களை கலங்கடித்து வருகின்றன. நேற்று காலை, ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த அம்ஜத்(3), முகமது இப்ராகிம்(2.5), பைசல்(5) ஆகிய...
தமிழகம்
கழிவுநீர் ஓடையாக மாறிய ரயில்பாதை: சேகோ மில் மீது பொதுமக்கள் புகார்
பனமரத்துப்பட்டி: பல கோடி ரூபாய் மதிப்பில் சேலம்- கரூர் அகல ரயில் பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளம், சேகோ கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறியுள்ளது. ரயில் பாதையில் கழிவுநீரை தேங்கவிட்ட சேகோ மில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்- கரூர் அகல ரயில் பாதை திட்டத்திற்கு மல்லூர் வேங்காம்பட...
தமிழகம்
கைதியிடம் மொபைல் ஃபோன் பறிமுதல்
சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதி பதுக்கி வைத்து இருந்த மொபைல் ஃபோனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒசூரை சேர்ந்த கைதி சீனிவாசன். இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைத்து வைக்கப...
தமிழகம்
நகை, பணம் திருடிய வாலிபர் கைது
ஆத்தூர்: ஆத்தூரில் கால்நடை மருந்துவ ஆய்வாளர் தங்கியிருந்த லாட்ஜ் அறை கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கால்நடை மருத்துவ ஆய்வாளர் கமல்பாபு (27). அவர் தலைவாசல் அருகிலுள்ள நாவக்குறிச்சி கால்நடை மருந்தகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அவர், ஆத்தூர்...
தமிழகம்
அதிக போதையில் ஆத்தூரில் இருவர் பலி
ஆத்தூர்: ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையத்தில் குடிமகன் இருவர் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரவிச்சந்திரன் (37). அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் போதையில் இருந்த ரவிச்ந்திரன், பெரியமாரியம்மன்...
தமிழகம்
அரசு டாக்டர் மீது மர்ம கும்பல் தாக்குதல்
ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர் மீது நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.தம்மம்பட்டியை சேர்ந்தவர் டாக்டர் அசோக்குமார். அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணியை முடித்து விட்டு தனது காரில் தம்மம்பட்டிக்கு புறப்பட்டார்.அவரது கார் ஆத்தூர்- துறையூர் ரோட்டில் மல்லியக்...
தமிழகம்
இளம்பெண் கடத்தல்
ஓமலூர்: ஓமலூர் அருகே கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்தன், கூலி தொழிலாளி. அவருடைய மனைவி ராமக்காள் (36). இரும்பாலையில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்...
தமிழகம்
கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து 6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
பெரியதாழை : தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பில் கிறிஸ்தவ ஆலயத்தின் பின்னால் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பாலானது. கோவிலில் திருவிழா ஏற்பாட்டுடன் நேற்று கொடியேறிய நாளில் இச்சம்பவம் நடந்துள்ளதால் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொக்கன்குடியிருப்பு புனித வ...
தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மிக விரைவில் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது. இதன் முன்னோட்டமாக நேற்று மாநகராட்சி உரங்கிடங்களில் 200 துப்புரவு பணியாளர்கள் மூலம் ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டது. மெல்லிய பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. த...
தமிழகம்
கணக்கு பாடம் இனி மாணவர்களுக்கு கசக்காது : செயல்முறை வடிவில் பாடம் நடத்த புதிய திட்டம்
தூத்துக்குடி : கணக்கு பாடம் மாணவர்களுக்கு கசக்கும் நிலையை போக்க அதனை எளிய முறையில் செயல்முறை விளக்கம் போல் புரிய வைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள இரண்டு நிபுணர்கள் மூலம் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கணக்கு பாடம் என்றால் பெரும்பாலான மாணவ,மாணவிகள...
தமிழகம்
மானாவாரி நிலங்களில் சோளம் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் மூன்று மாதத்தில் பரவலாக பெய்த கோடை மழையை பயன்படுத்தி, மானாவாரி நிலங்களில் குறுகிய காலத்தில் மகசூல் தரும் கம்பு, சோளம் பயிரிட்ட புஞ்சை விவசாயிகளுக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது.வாழப்பாடி பகுதியில், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பாசன வசதி பெறும் கிராமங்களை தவி...
தமிழகம்
எலும்புக்கூடாகும் வாகனங்கள் ஏலத்தில் விடக் கோரிக்கை
தலைவாசல்: வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு, எலும்புக்கூடாக நிற்கும் வாகனங்களை ஏலத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் சப்டிவிசனில் ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, மல்லியக்கரை என ஆறு ஸ்டேஷன்கள் உள்ளன. அதில் சேலம், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்ட ...
தமிழகம்
கலை, இலக்கிய போட்டி
உடுமலை: திருப்பூர் வருவாய் மாவட்ட அளவில் நடந்த கலை, இலக்கிய போட்டிகளில் உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்குரிய பிரிவில், மாணவி விஸ்வதாரணி கட்டுரைப்போட்டியில் முதல் பரிசும், 9,10ம் வகுப்பு பிரிவிற்கான மாறுவேடப் போட்டியில், மாணவன் விஜய் முதல் பரிசும்,...
தமிழகம்
லஞ்ச டி.எஸ்.பி.,க்கு மீண்டும் நெஞ்சுவலி : மத்திய சிறை மருத்துவமனையில் "அட்மிட்'
சேலம்: லஞ்ச வழக்கில் சிக்கிய நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசனுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சேலம் மத்திய சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நாகப்பட்டிணத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்(66) நாமக்கல் காக்கநாயக்கன்பட்டி, என்.புதுப்பட்டி ஆகிய இடங்களில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நாமக்கல்லை சேர்ந்த சேக் நவ...
தமிழகம்
ஊராட்சிகளில் 4 பேர் போட்டியின்றி தேர்வு: 2 வார்டுகளுக்கு தேர்தல்
உடுமலை: உடுமலை ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளில் காலியாக இருந்த ஆறு வார்டுகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில், நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு வார்டுகளில் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த 3ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. உடுமலை ஒன்றியத்தில் ஐந்து ஊர...
தமிழகம்
கல்வி வளர்ச்சி நாள் விழா: மாணவர்களுக்கு பரிசு
உடுமலை: உடுமலை மற்றும் வால்பாறை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்பட்டது. உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலக் கிய மன்ற துவக்க விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. தலைமையாசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தங்கவேலு "வளரும் சமுதாயத்திற்கு வழிக...
தமிழகம்
இளம் பெண்கள் மாயம்: தேவூர் போலீசில் புகார்
சேலம்: தேவூர் அருகே ஆலத்தூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (42) இவருடைய மனைவி சரோஜாதேவி (வயது 35). தனது சகோதரி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற அவர் வீடு திரும்பவில்லை.இதையடுத்து, வைகுந்தம் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சரோஜா தேவியை கடத்திச் சென்று விட்டதாக, தேவூர் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் செய்தார...
தமிழகம்
தங்கம் பட்டு மாளிகையில் ஆடி சிறப்பு விற்பனை
சேலம்: சேலம் கோ- ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் ஆடி மாத சிறப்பு விற்பனையை மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.சேலம் கோ- ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையின் ஆடி மாத சிறப்பு விற்பனையை முன்னிட்டு, புதிதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி காட்டன் புடவைகள், கோரா சில்க் மற்றும் சிலக் காட்டன் புடவைகள் விற்பனைக்கு வந்த...
தமிழகம்
விவசாயிக்கு அரிவாள் வெட்டு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய கூலித் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள குருநல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருமூர்த்தி(42). இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்னை அமைத்துள்ளார். அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னுவை வேலைக்கு சேர்த்திருந்தார். சரியாக வேலை பார...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா
உடுமலை: உடுமலை காமராஜர் நற்பணி மன்றம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில், மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். மன்ற சட்ட ஆலோசகர் மன்மதராஜ் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். உடுமலை நகர 10வது வார்டு, 12வத...
தமிழகம்
மேட்டூர் கலை அறிவியல் கல்லூரி: புதிய கட்டிடங்கள் திறப்பு விழா
சேலம்: மேட்டூர் கலை அறிவியல் கல்லூரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதியதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பெரியார் பல்கலை வளாகத்தில், துணைவேந்தர் தங்கராசு தலைமையில் நடந்தது. பெரியார் பல்கலை பதிவாளர் சேது குணசேகரன் வரவேற்றார். விழாவில், வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதிய கட்ட...
இந்தியா
காரில் போலி மதுபான தயாரிப்பு பொருட்கள் கலால் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்
புதுச்சேரி : போலி மதுபானம் தயாரிக்க தேவையான பொருட்கள் காரில் வைத்திருந்தவரை கலால்துறை அதிகாரிகள் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். கலால்துறை துணை தாசில்தார்கள் பாலாஜி, செந்தில்குமார் மற்றும் போலீசார் கோரிமேடு எல்லை, மேட்டுப்பாளையம், போக்குவரத்து நகர், நாவற் குளம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில்...
தமிழகம்
முன்னாள் ஜனாதிபதி சேலம் வருகை
சேலம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று திடீரென சேலம் வந்தார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று ஈரோடு மாவட்டம் பன்னாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கும் விழாவுக்காக ஈரோடு வருவதாக இருந்தது. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் கல்லூரிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
உடுமலை: குடிமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளியில், வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சோமவாரப்பட்டி ஊராட்சி தலைவர் வசந்தா முகாமினை துவக்கி வைத்தார். முகாமில், 30 பேருக்கு ஸ்கேன் பரிசோதனையும், 21 பேருக்கு இ.சி.ஜி....
இந்தியா
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் கண்ணன் ஆதரவாளர்கள் அதிரடி முடிவு
புதுச்சேரி : காங்., உட்கட்சித் தேர்தலில் பங்கேற்காமல் ஒதுங்கி கொள்வது என்று கண்ணன் ஆதரவாளர்கள் திடீரென முடிவெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி காங்., கட்சிக்கு ஓட்டுச் சாவடி மட்டத்தில் ஆரம்பித்து மாநில அளவிலான நிர்வாகிகள் வரை மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள...
இந்தியா
தேவி புற்றுக்கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் தேவி புற்றுக்கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி புற்றுக்கருமாரியம்மன் கோவில் மற்றும் அங்காளபரமேஸ்வரி கோவில், நூதன பரிவார மூர்த்திகளுக்கு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்த...
தமிழகம்
உடுமலை, பொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு பேரணி
உடுமலை: உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில், காமராஜர் பிறந்தநாளையொட்டி, கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கன்னிமுத்து தலைமை வகித்தார். உடுமலை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி உடுமலை நேதாஜி மைதானத...
தமிழகம்
இளம்பெண் மாயம்
சேலம்: சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டருக்க சென்ற இளம்பெண் மாயமானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி மலர்க்கொடி(24); ப்ளஸ் 2 படித்துள்ளார். இவர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்ட்டரில் படித்து வந்தார். ஜூன் 29ம் தேதி வீட்டில் இருந்து கம்ப்யூட்டர் வகுப்பு ச...
இந்தியா
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க., தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும். புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை உடனே துவக்கி புதுச்சேரி ம...
தமிழகம்
அன்னபூரணி மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
சேலம்: சேலம் அரியானூர் விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணி மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சிநாள் கொண்டாடப்பட்டது.சேலம் அரியானூர் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக செயல்பட்டு வரும் விநாயகா மிஷன்ஸ் அன்னபூரணி மெட்ரிக் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 108ம் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் பள்...
தமிழகம்
துணைவேந்தருக்கு பாசம் அமைப்பு பாராட்டு
சேலம்: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் தங்கராசுவுக்கு பாசம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.சேலம் பெரியார் பல்கலையில் மூன்றாண்டுகளாக தங்கராசு துணை வேந்தராக இருந்து வருகிறார். இவர் இந்த ஆண்டு ஜூலை 18ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுவதால், அவருக்கு பாசம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது.பாசம் அமைப்பி...
இந்தியா
அரசு மருத்துவக் கல்லூரி விவகாரம் : போராட்டம் நடத்த மா.கம்யூ., முடிவு
புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை நடப்பாண்டிலேயே துவக்கிட மத்திய அரசின் அங்கீகாரம் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் மா.கம்யூ., செயற்குழு கூட்டம், ராமசாமி தலைமையில் நடந்தது. செயலர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன், முருகன், ராமச்சந்திரன...
தமிழகம்
ஆட்டையாம்பட்டி ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி ஸ்ரீவித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.பரிசளிப்பு விழாவுக்கு தலைமை ஆசிரியர் முத்துக்குமரேசன் தலைமை வகி...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் 4 பேர் போட்டியின்றி தேர்வு
உடுமலை: உடுமலை ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளில் காலியாக இருந்த ஆறு வார்டுகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது; நான்கு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த 3ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. உடுமலை ஒன்றியத்தில் ஐந்து ஊர...
இந்தியா
பெண்ணிடம் வரதட்சணை கேட்ட கணவன் உட்பட 2 பேர் மீது வழக்கு
புதுச்சேரி : மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் உட்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியாங்குப்பம் அகத்தியர் நகரில் வசிப்பவர் ஸ்டாலின் சேவியர்(30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும், அதே பகுதியிலுள்ள சிவலிங்கபுரத்தை சேர்ந்த ஜான்சிராணிக்கும் (22) கடந்த ஆண்டு டிசம்பர் மாத...
தமிழகம்
வைஸ்யா கல்லூரியில் ரத்த தான முகாம்
சேலம்: சேலம் வைஸ்யா கல்லூரியில் நேற்று நடந்த ரத்ததான முகாமில் ஏராளமான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.சேலம் வைஸ்யா கல்லூரியும், கோகுலம் மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. ரத்த தான செய்ய முன்வந்த மாணவர்களை வைஸ்யா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வைஸ்யா கல்லூரியின் தாளா...
தமிழகம்
மஹேந்திரா கல்லூரியில் தேசப்பற்று விழா
சேலம்: காளிப்பட்டி மஹேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் தேசப்பற்று விழா நடந்தது.மஹேந்திரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாரத்குமார் விழாவை துவக்கி வைத்து, வரவேற்றார். மஹேந்திரா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.விழாவில், தியாகி லட்சுமி காந்தன் பாரதி பேசியதாவது:மாணவர்கள் மாதத...
தமிழகம்
கரூர் அருகே கோர விபத்து பா.ம.க., நகர செயலாளர் பலி
கரூர்: கரூர் அருகே மினிபஸ் மற்றும் ஆம்னி வேன் மோதிய விபத்தில், கரூர் நகர பா.ம.க., செயலாளர், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கரூர் அருகே வாங்கலில் வசித்தவர் சுந்தரம்(35). டெக்ஸ் நிறுவன உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உறவினர் வீட்டு துக்க காரியத்துக்கு குடும்ப...
தமிழகம்
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் வேலை பறிபோகுமோ! எல்.ஆர்.ஜி., முன் வாயில் போராட்டம்
திருப்பூர்: அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் பணியிடத் துக்கு, இட மாறுதல் மூலம் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, இதுநாள்வரை பணியாற்றி வந்த கவுரவ விரிவுரையாளர்கள் வேலையை இழக்கக்கூடிய அபாய சூழல் உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, திருப்பூர் சிக்கண்ணா மற்றும் எல்.ஆர்.ஜ...
தமிழகம்
காதல் தோல்வி: வாலிபர் தற்கொலை
கரூர்: காதல் தோல்வியால், வாலிபர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.வெள்ளியணை கடைத்தெருவில் நேற்று முன்தினம் மாலை, வாலிபர் ஒருவர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தார். அருகிலுள்ளோர், அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.போலீஸ் விசாரணையில், இறந்தவர் திண்டுக்கல் மாவட்...
தமிழகம்
"டெலிஃபோன் கேபிள்' துண்டிக்க முயற்சி
லாலாப்பேட்டை: மாயனூர் அருகே டெலிஃபோன் கேபிள் துண்டிக்க முயன்ற மூன்று பேர், மக்கள் விரட்டியதால் தப்பியோடினர். கேபிள் மற்றும் அவர்கள் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கரூர் - திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடக்கிறது. இதற்காக, சாலையில் பள்ளம் தோண்டப்படுவதால், பல இடங்களில் டெலிஃபோன் கேபிள் வ...
தமிழகம்
உயரழுத்த மின்கோபுரம் மாற்றியமைக்க எதிர்ப்பு
அவிநாசி: அவிநாசி அருகே உயரழுத்த மின் கோபுரத்தை இடம் மாற்றியமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேட்டூரில் இருந்து கருமத்தம்பட்டி வரை புதிய மின் பாதை அமைக்கப் பட்டு வருகிறது. இதற்காக, உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி, அவிநாசி ஒன்றிய பகுதியில் கடந்த சில நாட்களாக நடக்கிறது. தற்போது அவிநாசி அருகே கருமாபாளையம்...
தமிழகம்
போட்டியின்றி தி.மு.க., வேட்பாளர் தேர்வு
வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் 7வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் நூர்முகமது, சுயேச்சையாக குமரேசன் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்."அ.தி.மு.க., இடைத்தேர்தலில் போட்டியிடவில்ல...
தமிழகம்
மனைவி தற்கொலை; கணவன் சரண்
பல்லடம்: பல்லடம் அருகே மனைவி தூக்கு போட்டு தற்கொலை; மகன் பிணம் புதைப்பு காரணமாக, போலீசாரால் தேடப்பட்டு வந்த செல்வம் சரண் அடைந்தார்; அடமானம் வைக்கப்பட்ட நகையை மீட்பது தொடர்பாக நடந்த சண்டை காரணமாக, மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள டெக்ஸ்டைல...
தமிழகம்
நெல்லை கோவில்களில் கோபுர கலசம் கொள்ளை
திருநெல்வேலி : நெல்லையில் இரண்டு கோவில்களில் கோபுர கலசங்கள் கொள்ளை போயின.தென்காசியில் மெயின்ரோட்டில் உள்ளது குலசேகரநாதர் கோவில். பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 23ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் அம்மன் சன்னிதிக்கு மேல் உள்ள ஐம்பொன்னால் ஆன தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசத்தி...
தமிழகம்
யூனியன் கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு
வேதாரண்யம்: வேதாரண்யம் யூனியன் நான்காவது வார்டுக்கான கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் செம்போடை தி.மு.க.,வைச் சேர்ந்த உமாதேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி திட்ட அலுவலர் (சுனாமி) சுப்பிரமணியன், யூனியன் ஆணையர் மூர்த்தி ஆகியோர் அறிவித்தனர்.
தமிழகம்
பொறுப்பேற்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக கஜலட்சுமி நேற்று பொறுப்பேற்றார். திருப்பூர் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றிய முரளிதரன், சென் னை கவர்னர் மாளிகையில், துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் டி.ஆர்.ஓ.,வாக பவானிசாகர் அரசு ஊழியர் பயிற்சி மைய முதல்வராக பணிபுரிந்த கஜலட்சுமி நியமிக்கப்பட்டார். அவர் நேற்ற...
தமிழகம்
மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம்: வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக மீனவர்களை தொட ர்ந்து தாக்கி வரும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்தும், இதுபற்றி நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மனித நேய மக்கள் கட்சி மாநி...
தமிழகம்
இலவச மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் விற்ற பெண் மீது வழக்கு: 3 டேங்கர் லாரிகள் பறிமுதல்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே இலவச மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் விற்பனை செய்த பெண் விவசாயி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் இருந்து மூன்று டேங்கர் லாரி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பள்ளிப்பாளையம் அருகே சமயசங்கிலி மேற்கு தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அவர் விவசாயத்திற்கு வழங...
தமிழகம்
வீட்டில் பதுக்கிய 8 காஸ் சிலிண்டர் பறிமுதல்
நாமக்கல்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எட்டு சமையல் காஸ் சிலிண்டர், 300 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியில் ரேஷன் அரிசி மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் பதுக்கி வைத்திருப்பதாக, கலெக்டர் சகாயத்துக்கு தகவல் வந்தது.மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன் உத்தரவின்...
தமிழகம்
வல்வில் ஓரி விழாவுக்காக சாலை அகலப்படுத்தும் பணி விறுவிறுப்பு
நாமக்கல்: கொல்லிமலையில் ஆகஸ்ட் 2, 3ம் தேதி நடக்க உள்ள வல்வில் ஓரி விழாவுக்கு வருபவர்களின் வசதிக்காக, மலை அடிவாரத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.கொல்லிமலையில் ஆட்சி செய்த வந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரியை நினைவு கூறும் விதமாக, ஆண்டுதோறும் ஆடிமாதம் 18ம் தேதி வல்வில் ஓரி விழா ...
தமிழகம்
டெல்டா வாய்க்கால் புனரமைப்பு பணி: கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்தல்
கடலூர் : காவிரி டெல்டா பாசனப் பகுதியில் நடைபெறவுள்ள புனரமைப்பு பணிகள் முறையாக நடந் திட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் கடலூரில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமை த...
தமிழகம்
ஸ்ரீ கலர் லேப் ஸ்டூடியோஸ் திறப்பு விழா
நாமக்கல்: நாமக்கல்லில் ஸ்ரீ கலர் லேப், ஸ்டூடியோஸ் திறப்பு விழா நடந்தது.நாமக்கல் மெயின்ரோட்டில் அமைந்த ஸ்ரீ கலர் லேப், ஸ்டூடியோஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. தங்கம் மருத்துவனை டாக்டர் குழந்தைவேல் கலர் லேப்பை திறந்து வைத்தார். குறிஞ்சி கல்வி நிறுவனங்கள் தலைவர் சுந்தரராஜன் கலர் லேப் மிஷினை இயக்கி வைத்தார்.நாமக்கல் கே.கே....
தமிழகம்
சுழலில் சிக்கி வாலிபர் பலி
ப.வேலூர்: சோளசிராமணி அருகே காவிரியாற்று சுழலில் சிக்கி, சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ப.வேலூர் அடுத்த சோளசிராமணி காவிரி ஆற்றின் குறுக்கே நீர் மின்நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சிராபுதீன் (30) என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு அவர் ...
தமிழகம்
மோகனூரில் காமராஜர் பிறந்தாள் விழா: பள்ளிகளில் கொண்டாட்டம்
மோகனூர்: மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கம் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து சேர்மன் கவுசல்யா, முன்னாள் துணைத்தலைவர் அர்ஜுனன், சுப்பிரமணியம் கல்லூரி தாளாளர் பழனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர...
தமிழகம்
ஐராவதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக கோலாகலம்
அவிநாசி: ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேற்குப்பதி ஊராட்சி, அபிஷேகபுரத்தில் அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜப் பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு துவங்கிய திருப்பணி நிறைவுற்று கும்பாபி...
தமிழகம்
24 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
சென்னை : தமிழறிஞர்கள் 24 பேரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான, பரிவுத்தொகை ஒரு கோடியே 58 லட்ச ரூபாயை அவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் கருணாநிதி வழங்கினார்.தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட சான்றோர்களின் படைப்புகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், அவர்களின் நூல்க...
தமிழகம்
உள்ளாட்சி இடைத்தேர்தல்: 13 பேர் போட்டியின்றி தேர்வு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 17 உள்ளாட்சி பதவிகளுக்கு 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு இடங்களுக்கு 13 பேர் போட்டியிடுகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 17 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், 13 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டிய...
தமிழகம்
வைகோ கைது கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்: மீனவர் பிரச்னைக்காக போராட்டம் நடத்திய வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நகர ம.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் நடந்தது.புதிய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், ஒன்றியச் செயலாளர் நாகராசன் ஆகியோர்...
தமிழகம்
செயல்பட்ட போலீசுக்கு சன்மானம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட 34 போலீசாருக்கு சன்மானம் வழங்கப்பட்டது. திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., அருண் தலைமையில் குற்றங்கள் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏ.டி., எஸ்.பி.,கள் பாஸ்கரன் (குற்றப்பிரிவு), ...
தமிழகம்
கொள்ளையர்கள் தாக்கிய விவசாயி பரிதாப பலி
ப.வேலூர்: வேலகவுண்டம்பட்டி அருகே நகை, பணத்திற்காக கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விவசாயி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.ப.வேலூர் அருகே வேலகவுண்டம்பட்டி மானத்தியை சேர்ந்தவர் பழனியப்பன் (52). கடந்த மாதம் 26ம் தேதி நள்ளிரவு பழனியப்பன், அவரது மனைவி ராஜாமணி ஆகியோரை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு நகை, பணம் உள்ளிட்டவற்றை கொ...
தமிழகம்
ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா?சுகாதாரத்துறையினர் முடிவுக்கு காத்திருப்பு
திருப்பூர்: பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத் தப்பட்ட நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. பொங்குபாளையம், கணக்கம் பாயைம், காளிபாளையம், நெருப் பெரிச்சல், தொரவலூர், பட்டம் பாளையம், வள்ளிபுரம், சொக்கனூர், ஈட்டிவீரம்பாளையம், மேற் குப்பதி மற்றும் பெருமாநல்லூர் உள்ளிட்ட 13 ஊராட...
தமிழகம்
வீட்டு பூட்டு உடைத்து 15 பவுன் நகை திருட்டு
பள்ளிப்பாளையம்: மரக்கடை உரிமையாளரின் வீட்டு பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.பள்ளிப்பாளையம் தாஜ்நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார் (28). ஈரோட்டில் மரக்கடை நடத்தி வரும் அவர், நேற்று காலை மனைவி பிரதீபாவுடன் வெளியே சென்றுள்ளார். மதியம் 3 மணியளவில் வீட்டுக்கு வந...
தமிழகம்
லாரி பட்டறைகளில் பணிபுரிந்த இரு குழந்தை தொழிலாளர் மீட்பு
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறைகளில் பணிபுரிந்த இரண்டு குழந்தை தொழிலாளர்களை, தொழிலாளர் துறையினர் அதிரடியாக மீட்டனர்.நாமக்கல் கலெக்டர் சகாயம் உத்தரவின்பேரில், நாமக்கல் தொழிலாளர் ஆய்வாளர் நடேசன் தலைமையில் துணை ஆய்வாளர் குழந்தைவேல், உதவி ஆய்வாளர் கந்தசாமி, மருத்துவ அலுவலர் யசோதா, திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் ஆகி...
தமிழகம்
லாரி மோதியதில் மின் கம்பம் சேதம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே லாரி மோதியதில் மின்கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது.குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று, நேற்று மாலை 3 மணியளவில் பள்ளிபாளையம் மாட்டுபண்ணை அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. அந்த விபத்தில், மி...
தமிழகம்
உழவர் சந்தை அமைக்க ஆய்வு
பல்லடம்: பல்லடம் வாரச்சந்தையில் காலியாக உள்ள இடத்தில் உழவர் சந்தை அமைக்க போதுமான இட வசதி உள்ளதா என கலெக்டர் சமயமூர்த்தி பார்வையிட்டார். பல்லடம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நகராட்சிக்குச் சொந்தமான வாரச்சந்தை உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட வாரச்சந்தை முன்புறம் கடைகள் கட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டுள்...
தமிழகம்
சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ராசிபுரம்: சுயம்பு சமயபுரத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் ஸ்வாமியை வழிபட்டனர்.ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் சுயம்பு சமயபுரத்து மாரியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று முன்தினம் காவிரி ஆற்ற...
தமிழகம்
அறிவியல் கண்காட்சி
அவிநாசி: அவிநாசி, முத்துசெட்டிபாளையம் புனித தோமையர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியை மேரி ஸ்டெல்லா தலைமை வகித் தார். அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை புனிதவதி, கண்காட்சியை துவக்கி வைத்தார். புவி வெப்பமயமாதல், இயற்கையை காப்போம், மரம் வளர்ப்பதன் நன்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 150 ப...
தமிழகம்
பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பலத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன்(49). பிரபல சாராய வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இவரை தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறை யில் அடைக்க எஸ்.பி., பகலவன், கலெக்டருக்கு பரிந் துரை செய்தார். இ...
தமிழகம்
வீரதீர சிறார்களுக்கு மத்திய அரசு விருது
திருப்பூர்: வீரதீர செயல் புரிந்த சிறுவர், சிறுமியர் மத்திய அரசு விருதுக்கு விண்ணப் பிக்கலாம்' என, மண்டல கலை பண் பாட்டு மையம் அழைப்பு விடுத்துள்ளது. ஜவஹர் சிறுவர் மன்றங்களின் சேலம் மண்டலங்களின் இயக்குனர் ஹேமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு தின விழாவில், வீரதீர செயல்புரிந்த சிறுவர், சிறுமியருக்கு, பிரதமரால் உயரிய வி...
தமிழகம்
புதுகை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் சிலர் வகுப்பு புறக்கணித்துவிட்டு கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் ஆழ்குழாய் கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரை மாணவர்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த தண்ணீர் உப்புநீரா...
தமிழகம்
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி அணை திறப்பு
உடுமலை: அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நிலவும் வறட்சியை சமாளிக்கும் வகையில், பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு உயிர் தண்ணீர் வழங்கப்படுகிறது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 ஆயிரத்து 637 ...
தமிழகம்
அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லை : ஆதிராஜாராம் குற்றச்சாட்டு
செஞ்சி : காப்பீட்டு திட்டத்திற்கு வரிப்பணத்தை வாரி கொடுத்து விட்டு அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களை நியமிக்காமல் உள்ளனர் என அ.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம் பேசினார். செஞ்சியில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி இளைஞரணி மாநில செயலாளர் ஆதிராஜாராம் ப...
தமிழகம்
ரூ.40 லட்சத்தில் ஓ.பி.ஆர்., மணிமண்டபம் : அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆய்வு
திண்டிவனம் : தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் நினைவு மணி மண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படுமென செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச் சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்ட...
தமிழகம்
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்த கணவன் சரண்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீஸில் சரணடைந்தார்.திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிச்சைக்காரன் (50). இவரது மனைவி சந்திரமதி(45). இவர்களுக்கு முத்துலட்சுமி (22), சங்கீதா (9) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில், முத்துலட்சுமிக்கு திருமணமாகி கணவ...
தமிழகம்
நிலையில்லாத காற்றாலை மின் உற்பத்தி: திணறும் மின் வாரியம்
உடுமலை: காற்று சீசன் இந்தாண்டு கை கொடுக்காததால், காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாமல் ஏற்ற, இறக்கங்களுடன் நிலையில்லாமல் உள்ளது. இதனால், நான்கு மாதங்களாக மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காடு கணவாய் வழியாக வரும் காற்றை மையமாகக் கொண்டு, உடு...
தமிழகம்
மனைவியை கொன்று கணவன் தற்கொலை
திருப்பூர்: திருப்பூரில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்தார். திருப்பூர், தாராபுரம் ரோடு, ராமகிருஷ்ண மிஷன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30); நகைக்கடைஊழியர்.  இவரது மனைவி ஷியாமளா (22). இருவருக்கும் திருமணமாகி எட்டு மாதங்களாகிறது. இருவரும் சீனிவாசனின் தந்தை மற்றும் அண்ணன் குடும...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள் விழா: அரியலூரில் அன்னதானம்
அரியலூர் அரியலூரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, காமராஜர் தொண்டர்கள் சார்பில் மங்காயி பிள்ளையார் கோயிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்  பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மற்றும்  பன்னீர்செல்வம், இ. தனபால், ஏ. ரங்கராஜ், ஜெ. நடராஜன்,  கருப்பை...
தமிழகம்
வி.ஐ.டி., பல்கலை சார்பில் கால்நடை சிகிச்சை முகாம்
வேலூர்: வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழக நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையத்தின் அங்கமான அம்மூர் கிராம வளமையமும், தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் ராணிப்பேட்டை கோட்டமும் சார்பில் அம்மூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெட்டியூர், லாலிகுப்பம், அண்ணாநகர் மற்றும் எருக்கந்தொட்டி ஆகிய கிராமங்களில் இலவச கால்...
தமிழகம்
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் "ரெய்டு'
வேலூர்: அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது.அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பதிவாளர் குலசேகரன் வைத்திருந்த ...
தமிழகம்
தே.மு.தி.க தெருமுனை பிரசாரம்
அரியலூர், அரியலூர் அருகே பொட்டவெளி கிராமத்தில் தே மு. தி. க. சார்பில், தெருமுனை பிரசார பொதுக் கூட்டம்.நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அரியலூர் ஒன்றியச் செயலர் அ. தாமஸ் ஏசுதாஸ் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் இரா. முருகேசன், ஒன்றியத் துணைச் செயலர் த. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியி...
தமிழகம்
பாரதிதாசன் பல்கலை முதல் பெண் துணைவேந்தர் பதவியேற்பு: பேராசிரியர்கள், ஊழியர்கள் வாழ்த்து
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை முதல் பெண் துணைவேந்தராக ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி முன்னாள் முதல்வர் மீனா நேற்று பொறுப்பேற்றார்.திருச்சி பாரதிதாசன் பல்கலை கடந்த 1982ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதுவரை பல்கலைக்கு நியமனம் செய்யப்பட்ட 8 துணைவேந்தர்களும் ஆண்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாரதிதாசன் பல்கலை 9வது துணைவே...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு அமைச்சர் வழங்கல்
திருச்சி: திருச்சி மாநகராட்சி 56வது வார்டு பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்கு காஸ் இணைப்புடன் கூடிய இலவச அடுப்புகள் வழங்கும் விழா தில்லை நகர் 10வது குறுக்குத்தெரு, ஒய்.டபுள்.யு.சி.ஏ., மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.இதேபோல், மாநகராட்சி 54வது வார்டு பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்கு புத்தூர் பிஷப் ஹீபர...
தமிழகம்
தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்கக் கூட்டம்
திருச்சி: தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்தின் செயல் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. சங்கத்தின் கவுரவத்தலைவர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படாத "ஹீமோடயாலிசிஸ்' கருவியை உடனடியாக இயக்க மாவட்ட நி...
தமிழகம்
காமராஜர் பிறந்தநாள் விழா
மணப்பாறை: மணப்பாறை நகர காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.மணப்பாறை, கோவில்பட்டி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர தலைவர் பிச்சை தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., துரை செபஸ்தியான், நகராட்சி சேர்மன் சரோஜா, வட்டார தலைவர்கள் வடிவேல்,...
தமிழகம்
தர்ஹா சந்தனக்கூடு விழா
மணப்பாறை: மணப்பாறை ஹஜரத் பாணிமஸ்தான் ஒலியுல்லா தர்ஹா சந்தனக்கூடு 55ம் ஆண்டு கொடியேற்று விழா நடந்தது.ஜமாத் துணைத்தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். பாணிமஸ்தான் தர்ஹா தலைவர் நாசர்முகமது, ஹனிபா பாய், செயலாளர் நௌஷாத், துணைத்தலைவர் சலீம்பாட்ஷா, ஷேக்பாட்ஷா, பாலன் முன்னிலை வகித்தனர்.திருச்சி தப்ளே ஆலம் பாதுஷா நத்தர் வலி...
தமிழகம்
தண்ணீரின்றி மக்கள் முற்றுகை
அன்னூர்:குப்பனூரில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி தலைவரை முற்றுகையிட்டனர். குப்பனூர் ஊராட்சியில் ஆலாங் குட்டை, சொலவம்பாளையம், ஆகிய பகுதிக்கு பவானி ஆற்று குடிநீர் பொகலூரை அடுத்த மன்னாரங்கம்பெனி மேட்டில் உள்ள மெயின் குழாயில் இருந்து சப்ளை செய்யப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் சரியாக சப்ளையாவதில்லை...
தமிழகம்
திருவாசி பஞ்., மனுநீதி நாள் முகாமில் 316 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா திருவாசி பஞ்.,ல் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து 316 பேருக்கு 13 லட்சத்து 39 ஆயிரத்து 940 ரூபாய் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:நமது நாட்டில் 70 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். நாட்டின் வருமானத்தில் 50 ...
தமிழகம்
விழிப்புணர்வுப் பேரணி
பெரம்பலூர்,: பெரம்பலூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது.  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் பேரணியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். பெரம்பலூர் சங்குப்பேட்டையில் தொடங்கிய பேரணி கடைவீதி, நகர்மன்ற அலுவலகம் வழியாக அரசுத் தலைமை மருத்துவமனை வரை நடைபெற்றது. பேரணியில் தனலட்சுமி சீனிவாசன், ரோவர் ...
தமிழகம்
விவசாய தொழிலாளர் சங்க மாநாடு இன்று துவக்கம்
திருச்சி: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மூன்று நாள் 7வது அகில இந்திய மாநாடு இன்று திருச்சியில் துவங்குகிறது. மாநாட்டின் நிறைவு விழாவில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக்சர்க்கார் பங்கேற்கிறார்.திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மூன்று நாள் 7வது அகில இந்திய மாநாடு இன்று துவங்...