category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஸ்டவ் வெடித்து சிதறியதில்தாய், மகள் உடல் கருகி பலி | பேரம்பாக்கம்:சமையல் செய்ய பம்ப் ஸ்டவ் பற்றவைத்தபோது ஸ்டவ் வெடித்துச் சிதறியதில் தாயும், மகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் மணி; இவரது மனைவி ரமணி(35). இவர் நேற்று காலை சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அருகில் இவரது மகள் இமயவள... |
தமிழகம் | போலி பட்டாக்கள் மூலம் விவசாய நிலங்கள் விற்பனை ஏழை, நடுத்தர மக்கள் சொத்துக்களை இழந்து பரிதவிப்பு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் போலி பட்டாக்கள் மூலம் விற்கப்படுவதால் விவசாய நிலங்களை பாதுகாக்கவும், ஏழை மக்களின் நிலங்களை பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக போதிய அளவில் மழை பெய்யாத காரணத்தால் ... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, தன் துறை பற்றியே அறியாததால் பேசிய பேச்சு : அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள 910 பஸ்களில் 500 பஸ்கள் புதிதாக விடப்பட்டும், முன்பு வசூலான அதே 90 லட்ச ரூபாய் தான் தற்போது தினமும் கிடைக்கிறது. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை தொடர்கிறது என்று தெரியவில்ல... |
தமிழகம் | லாரி மீது டூவீலர் மோதியதில் மூவர் பலி:ஆற்காடு சாலையில் லாரிகள் அகற்றப்படுமா? | வளசரவாக்கம்:நின்ற லாரி மீது டூவீலர் மோதிய சம்பவத்தில், டூவீலரில் சென்ற மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர்.மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனி(20) நந்தா(18) கணேசன்(18); இவர்கள் பெயின்டிங் தொழில் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம், மூவரும் திருமணம் நிகழ்ச்சிக்காக இரவு 2 மணியளவில் போரூரில் இருந்து ஆற்... |
தமிழகம் | ஈரடுக்கு மேம்பாலத்தில்இருந்து விழுந்தவர் பலி | திருநெல்வேலி:நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் தூக்கிவீசப்பட்ட வாலிபர் இறந்தார்.திருநெல்வேலி குறிஞ்சாபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை(29). ஈரோட்டில் பணிபுரியும் இவர், நண்பரின் திருமணத்திற்காக நெல்லை வந்திருந்தார்.நேற்று மாலையில் ஜங்ஷனில் இருந்து டவுன்கு ஈரடுக்கு மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.... |
இந்தியா | மத்திய மந்திரியாக சிபு சோரன் அடுத்த ஆசை | பொகாரோ : ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் தன் அடுத்த ஆசையை நேற்று வெளிப்படுத்தினார். மத்திய அமைச்சராக தனக்கு வாய்ப்பு இருக்கிறது என்று பரபரப்பாக பேட்டியளித்தார். ஜார்க்கண்டில் பா.ஜ.,வுடன் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் நீடிக்கிறது. மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமையும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் விதமாக, "ஐந்து ஆண்டுகளு... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டிற்கு பாதுகாப்பு தூத்துக்குடி மாவட்ட போலீசார் பட்டியல் தயார் | தூத்துக்குடி : கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு போதுமான அளவு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான அனைத்து பணிகளும் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இம்மாநாட்டிற்கு கலந்து கொள்ளும் மக்களுக்கு தேவையான ப... |
இந்தியா | நக்சல்களை ஒடுக்க மேலும் 10,000 வீரர்கள் : எல்லைப்பாதுகாப்பு படை தயார் | புதுடில்லி : நக்சலைட்களின் வன்முறை சம்பவங்களால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதை அடுத்து, அவர்களை ஒழிப்பதற்காக மேலும் 10 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படையினரை, சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சத்திஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் கடந்த ஏப்., 6ல் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில்... |
இந்தியா | பட்டமளிப்பு விழா ஆடைக்கு எதிர்ப்பு: ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு ஆதரவு | போபால் : பாரம்பரியமிக்க பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா அங்கி அணிய எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு ஆதரவு பெருகுகிறது. போபால் நகரில் மூன்று மாதங்களுக்கு முன் நடந்த பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சிறப்பு விருந்தினராக கலந்த... |
இந்தியா | அரசியலில் பெண்கள் தீவிரமாக நுழைவதா? கோவா முதல்வர் பேச்சால் பெரும் சர்ச்சை | பனாஜி : அரசியலில் பெண்கள் நுழைவது சரியல்ல என்ற கருத்தில் பேசிய கோவா முதல்வர் பேச்சுக்கு, அதிக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கோவா முதல்வர் திகம்பர் காமத், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தெரிவித்துள்ள கருத்து, பெண்கள் அமைப்புகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கோவாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்க... |
தமிழகம் | புதியம்புத்தூரில் கழிவுநீர் கால்வாயில் சுகாதார சீர்கேடு | புதியம்புத்தூர் : புதியம்புத்தூரில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.புதியம்புத்தூர் ஆர்.சி.தெரு மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்து 6 மாதம் ஆகிறது. கழிவுநீர் நிரம்பி வீடுகளுக்குள் சென்று விடுகிறது. சமீபத்தில் பெய்த தூறல் மழைக்கே கழிவுநீர் வீடுகளில் புகுந்து கஷ்டத்தை... |
இந்தியா | சோனியாவை எதிர்த்து பேசாதீர்கள் : காங்கிரசாருக்கு ரோசய்யா கட்டளை | ஐதராபாத் : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என, ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் விமர்சித்து வருகின்றனர். பிரதமராக இருந்தா... |
தமிழகம் | ராஜீவ்காந்தி நினைவு தினம் | பசுவந்தனை, மே 24- பசுவந்தனையில் நகர காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.பசுவந்தனை நகர காங்,. சார்பில் அனுஷ்டிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் 20வது நினைவு அஞ்சலிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னாள் காங்., நகர தலைவர் மாரியப்பன், இளைஞர் காங்., தலைவர் முருகன் ஆகியோர் ... |
தமிழகம் | விழிப்புணர்வு பொதுக் கூட்டம் | காயல்பட்டணம் : காயல்பட்டணத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் உவைஸ் ஹாஜி தலைமை வகித்தார். முகம்மது அலி, வாவு செய்து அப்துல் ரகுமான், சொளுக்கு, வட்டம் ஹஸன், பிரபு சுல்தான், சாலிஹ், இப்ராஹிம், பாஸி, முஸ்தபா, ஜெம் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் ஐக்கிய முன்னணி முகைத... |
தமிழகம் | நாயன்மார் குருபூஜை | பசுவந்தனை : பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் சோமாசி மாற நாயன்மாருக்கு குருபூஜை நடந்தது.பசுவந்தனை ஆனந்தவல்லி சமேத கைலாச நாதர் கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அம்பரான் சோமாசி மாறர், சோழ நாட்டு திருஅம்பரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். இப்பேறு பெற்ற சேமாசி மாற நாயனாருக்கு பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் உள்பட 12 வ... |
இந்தியா | தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை | புதுடில்லி:ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனத்தின் பெயரில் அவசர கடிதம் ஒன... |
தமிழகம் | ஏரல் பள்ளியில் 94 சதவீதம் தேர்ச்சி | ஏரல் : ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 94 சதவீதம் தேர் ச்சி பெற்றுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஏரல் அரசு மகளிர் பள்ளியில் 85 பேர் தேர்வு எழுதினர். இதில் 80 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94 சதவீத தேர்ச்சியாகும். இப்பள்ளியில் ஆயிரத்து 89 மதிப்பெண்கள் பெற்று காஜிதா ரியாஸா பாத்திமா என்ற மாணவி முதல் இடம... |
தமிழகம் | மேல தட்டப்பாறையில் கோயில் கொடைவிழா | புதியம்புத்தூர்: புதியம்புத்தூர் அருகேயுள்ள மேல தட்டப்பாறையில் கோயில் கொடைவிழா நடந்தது.மேலதட்டப்பாறை அம்மச்சாரமன், சந்தனமாரி, உச்சினிமாகாளியம்மன், அய்யனார் கோயில்களில் கொடை விழா 18ம் தேதி இரவு கொடை பூஜையுடன் துவங்கியது. கொடை விழாக்களில் சொக்கலிங்கபுரம் மாடசாமி நையாண்டி மேளம், திசையன்விளை குழந்தையாழ்வார் நையாண்டி மேள கு... |
தமிழகம் | மதுவிற்ற முதியவர் கைது | தூத்துக்குடி : கடம்பூர் அருகே மது விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி பரிவிள்ளிக் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கடம்பூர் அ... |
இந்தியா | இனி விமானப் பயணம் பயங்கரம் : புதிது புதிதாக கேள்விகள் | புதுடில்லி; மங்களூரில் நடந்த விமான விபத்தால், இந்திய வான்வெளியானது விமானப் பயணிகளுக்கு ஆபத்தான இடமா என்ற கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. விமானப் பயணம் என்றால் பயங்கரமா என்ற முறையில் கருதும் அளவுக்கு அதிக பிரச்னையை எழுப்பியுள்ளது.
மங்களூரில் நேற்று முன்தினம் நடந்த விமான விபத்தில், 158 பேர் பலியாயினர்; எட்டு பேர் அதிர்ஷ்... |
தமிழகம் | ஏரலில் ராஜீவ்காந்தி நினைவு தினம் | ஏரல் : ஏரலில் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.ஏரல் நகர காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏரல் நகர காங்., தலைவர் பாக்கர்அலி தலைமை வகித்தார். ஸ்ரீவை., ஒன்றிய துணை தலைவர் ராயப்பன் முன்னிலை வகித்தார். ஸ்ரீவை., சட்டமன்ற தொகுதி ... |
இந்தியா | அள்ளி கொடுத்தாலும் சாதிக்க தவறும் அரசு பள்ளிகள் : தனியார் பள்ளிகள் அசத்தல் | அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சுளையாக மாதந்தோறும் 20 ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம் ரூபாய் என சம்பளத்தை அள்ளி, அள்ளி கொடுத்தாலும், கற்பித்தலில் முழுமையான ஈடுபாட்டுடன் ஈடுபடுவதில்லை என்பது, சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
மாநில அளவிலான, "ரேங்க்'களில் ஒரு இடத்தைக் கூட அரசுப் பள்ளி... |
தமிழகம் | தொடரும் மோசடிகள்; தொடரும் முதலீடுகள் : பொதுமக்கள் திருந்துவது எப்போது? | மதுரை : மதுரையில் ஏலச்சீட்டு, நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுதெரிந்தும் இன்னும் பொதுமக்கள் மோசடி நிறுவனங்களிடம் முதலீடு செய்கின்றனர். கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சமீபகாலமாக, "ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதந்தோறும் 2000 ரூபாய் வட்டி; வாடிக்கையா... |
இந்தியா | இரவில் பயணம் வேண்டாம் ஒரிசாவில் மந்திரிகளுக்கு எச்சரிக்கை | புவனேஸ்வர் : நக்சலைட்கள் மீதான மத்திய அரசின் எதிர்த்தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வேளையில், நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று, ஒரிசா மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட அம்மாநில இரு அமைச்சர்கள... |
இந்தியா | கன்றுக்குட்டியை கொன்றதற்காக 60 பேர் தலை மொட்டை:ம.பி,.யில் விசித்திரம் | போபால்:மத்தியபிரதேசத்தில் கன்றுக் குட்டியை கொன்ற பாவத்திற்காக, பா.ஜ., தலைவரின் குடும்பத்தினர் 60 பேர், மொட்டையடித்துப் பரிகாரம் செய்தனர்.சத்தர்பூர் மாவட்டம் தாம்சி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண் யாதவ்(26). பா.ஜ., இளைஞர் அணி தலைவர். சில நாட்களுக்கு முன், லட்சுமண் யாதவ் ஓட்டிச் சென்ற டிராக்டரில், கன்றுக் குட்டி ஒன்று, எதி... |
இந்தியா | சோனியாவை வாரம் தோறும் சந்திக்கிறேன்; அமைச்சருக்கு ராகுல் தகுதி; பிரதமர் சிறப்பு பேட்டி | புதுடில்லி : நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் நக்சல்கள் விவகாரம் பெரும் சவால்களாக உள்ளன என்று பிரதமர் மன்மோகன்சிங் டில்லியில் நிருபர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார். இருப்பினும் இவரது பேட்டியில் எவ்வித சங்கதியும் இல்லை என பா.ஜ.,க., விமர்சித்துள்ளது. ஐ.மு., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நி... |
தமிழகம் | கூட்டுறவு வங்கியில் ரூ.1.22 கோடி நகைகள் கொள்ளை | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே கூட்டுறவு வங்கியில் இருந்த, ஒரு கோடியே 22 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,590 சவரன் நகைகள் மற்றும் 3.50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆனால், கொள்ளையில் வங்கியில் பணியாற்றும் சிலருக்கு தொடர்பு இருக்குமோ என்று சந் தேகப்பட்டு விசாரணை நடக் கிறது.... |
தமிழகம் | நகராட்சி மெத்தனப் போக்கால் இருளில் மூழ்கியது கொளத்தூர் | கொளத்தூர் : கொளத்தூர் பகுதியில் மின் விளக்குகள் எரியாததால், அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. நகராட்சியின் மெத்தன போக்கால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொளத்தூர் பகுதியில் இருந்து நாள்தோறும் அம்பத்தூர் தொழிற்சாலைகளுக்கு வேலை நிமித்தமாகவும், சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு அலுவல் பணி சம்பந்தமாகவும... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி வாலிபர் பலி | ஆவடி : ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் குமார்(25) நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்த எரியாத மின்விளக்கை சரி செய்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கி சிறுமி பலி: ஆவடி அசோக் நகர் இந்... |
தமிழகம் | அம்மிக்கல்லை போட்டு வாலிபர் கொலை: தாய்மாமன் கைது | திருவேற்காடு : தாய்மாமன் தாக்கியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர், நேற்று முன்தினம் இறந்தார். இச்சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.திருவேற்காடு அடுத்துள்ள சுந்தரசோழபுரம் கிரீன் பார்க் சாலையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்; இவரது மனைவி லதா(40). இவர்களது மகன் ரமேஷ் கண்ணா(17). இவர்களோடு ரமேஷ்கண... |
தமிழகம் | பெண்ணிடம் நகை பறிப்பு | திருநின்றவூர் :சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர், அந்தோணியர் நகர் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் டேவிட்; ரயில்வே ஊழியர்; இவரது மனைவி கமலா(43).நேற்று முன்தினம் மாலை இவர் மார்க்கெட் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது, அதே பகுதி தாசர்புரம் முதல் பிரதான சாலையில் டூவீலரில் வந்த மர்ம நபர் கள், கமலா அணிந் திர... |
தமிழகம் | ரயில் மோதி மூதாட்டி பலி | விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரயில் மோதி அடையா ளம் தெரியாத மூதாட்டி இறந்தார். விழுப்புரம் மருதூர் ஏரிக் கரை அருகே நேற்று காலை 60 வயது மதிக் கத்தக்க மூதாட்டி ரயில் மோதி இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார் சம் பவ இடத்திற்கு சென்று மூதாட்டின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | மைனர் பெண் கற்பழிப்பு ஆட்டோ டிரைவர் கைது | செம்பியம் : காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, மைனர் பெண்ணை கேரளா அழைத்துச் சென்று கற் பழித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை திரு.வி.க., நகர் ஜார்ஜ் காலனியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சாலமன் ஜேப்பிரியல் என்ற முரளி(28); ஆட்டோ டிரைவர். இதே பகுதியைச் சேர்ந் தவர் கவிதா(16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங் குள்ள தனியார் ப... |
தமிழகம் | தொடரும் தீ விபத்துகளால் திருவான்மியூர் மீனவ குடும்பங்கள் கடும் துன்பம் | சென்னை : திருவான்மியூர் கடற்கரை குப்பம் பகுதியில், கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் குடிசைவீடுகள் சாம்பலாயின. சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.வேம்புலி அம்மன் கோவில் தெருவில், நூற்றுக்கும் ம... |
தமிழகம் | மேல்பாதியில் மின் நுகர்வோர் குறைகேட்பு நாள் | விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. கண்டமங்கலம் செயற் பொறியாளர் ஸ்ரீநிவாசன் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் குரும் பகோட்டை, எரிச்சனம் பாளையம், அணிச்சம்பாளையம், இருளர் காலனி, மேல்பாதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மின் நுகர்... |
தமிழகம் | போலீஸ் ஏட்டுதற்கொலை | சிட்லபாக்கம் : வலிப்பு நோய் கொடுமையால் மனமுடைந்த போலீஸ் ஏட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (42); பழவந்தாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஹரிதாஸ் கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாக... |
தமிழகம் | பாவந்தூரில் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல் | சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ரேஷன் மண்ணெண்ணெய் 50 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலர் முனுசாமி பாவந்தூர் கிராமத் தில் ரோந்து மேற்கொண் டார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் 50 லிட்டர் ரேஷன் மண்ணெண் ணெய் கேட்பாரற்று கிடந் தது. அதனை டி.எஸ்.ஓ., பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார். |
தமிழகம் | ஆன் - லைன் மூலம் வங்கிக் கணக்கில் பண மோசடி : மும்பையைச் சேர்ந்த இருவர் கைது | சென்னை : ஆன்-லைன் மூலம் மற்றவர் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த இருவரை, சி.பி. சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் சரவணன்; இன்ஜினியர். இவர், கடந் தாண்டு ஆகஸ்டில் சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரத்தை சந்தித்த... |
தமிழகம் | இளம் பெண் மாயம் | கொரட்டூர் : சென்னை கொரட்டூர் அடுத்த பாடி, சாஸ்திரி சதுக்கம் பகுதியைச் சேர்ந் தவர் லட்சுமணன்; இவரது மகள் தேவி(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 வரை படித்தவர்.இவர், கடந்த 19ம் தேதி தன்னுடன் படித்த மாணவியை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை.அதிர்ச்சியடைந்த பெற் றோர், மகள... |
தமிழகம் | பட்டப்பகலில் 12 சவரன் நகை கொள்ளை | சென்னை : துரைப்பாக்கம் பகுதியில் பட்டப்பகலில், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில், 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை, துரைப் பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட கந்தன் சாவடி, லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் மணிவண் ணன்(39); இவரது மனைவி சித்ரா; கண்ணகி நகர் பகுதியில் கடை வைத்துள்ளார். இது தவிர, ரியல் எஸ்டேட் அதிபராகவும் உள்ளார்.ம... |
தமிழகம் | பருவமழை மாற்றத்தால் மாம்பழம் வரத்து குறைந்தது: ருசி இல்லாத ஆந்திர மாம்பழம் இறக்குமதி | மதுரை:பருவமழை மாற்றத்தின் எதிரொலியாக கோடையில் வர வேண்டிய மாம்பழ வரத்து மதுரையில் இந்தாண்டு குறைந்தது. ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் ருசி இல்லாத மாம்பழம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. புவி வெப்பமயமாகி வருவதன் எதிரொலியாக, பருவமழை பொய்த்து வருகிறது. இதனால் கோடையில் காய்த்து குலுங்க வேண்டிய மாம்பழ வரத்து மது... |
தமிழகம் | பசுமையாகிறது மதுரை மருத்துவக் கல்லூரி | மதுரை:மதுரை மருத்துவக் கல்லூரி மைதானம் திறந்தவெளியாக இருப்பதால், நள்ளிரவில் சமூகவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து கல்லூரி டீன் கார்த்திகேயன் கூறியதாவது : மைதானத்திற்குள் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாதபடி தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கல்லூரியில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற... |
தமிழகம் | பணகுடி அருகே தனியார் பஸ்-வேன் நேருக்கு நேர் மோதலில் 11 பேர் பலி | திருநெல்வேலி : நெல்லை அருகே தனியார் பஸ்-வேன் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலியானார்கள்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கும் பணகுடிக்கும் இடையே நான்குவழிச்சாலை பணிகள் நடந்துவருகிறது. ரோட்டின் ஒரு பகுதியில் பணிகள் நடப்பதால் எதிர் எதிர் வாகனங்களை ஒரே ரோட்டில் திருப்பிவிட்டனர். நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து பெ... |
தமிழகம் | செஞ்சியில் மணல் கடத்தலை தடுக்க தாசில்தார் தலைமையில் ஆலோசனை | செஞ்சி : கனிம வளம் மற்றும் சுரங்கம் சார்ந்த பொருட் களை கடத்துவதை தடுக்க வருவாய்த் துறையினர்,போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டு கூட்டம் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் சியாமளா தலைமை தாங்கினார். விழுப்புரம் சுரங்கம் மற் றும் கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் பழனி முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில் தார்... |
தமிழகம் | அவனியாபுரம் ஜோதிடர் வீட்டில் திருட்டு | அவனியாபுரம்:கோயிலுக்கு சென்ற ஜோதிடர் வீட்டில் பூட்டை உடைத்து திருடியவர் களை அவனியாபுரம் போலீசார் தேடுகின்றனர். அவனியாபுரம் அருகே மீனாட்சிநகரை சேர்ந்தவர் ஜோதிடர் சிவநேசன் (60). மே 21 இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சென்றார். அடுத்த நாள் காலை அவரது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அருகே இ... |
தமிழகம் | வட்டார வள மைய ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் வருத்தம் | மதுரை:வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு எழுதியவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 1050 வட்டார வளமைய ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு கடந்த பிப். 14ம் தேதி நடந்தது. இத் தேர்வுக்கான முடிவுகள் ஏப்.1ம் தேதி வெளியானது. இத்தேர்வில் பலருடைய முடிவுகள் எதிர் பார்த்தபடி அமையவில்லை. அதிர்ச்ச... |
தமிழகம் | முதியவரை மிரட்டியவர் கைது | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் கரிம்ஷா தக்கா வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சவுகத் அலி(59). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த உசேனுக்கும் வழக்கு தொடர்பாக முன்விரோதம் இருந்தது. வழக்கு தொடர்பாக கடந்த 19ம் தேதி இருவரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டிற்கு வந்தனர். அப்போது கோர்ட் வளாகத்தில் நின்றிருந்த சவுகத் அலியை பார... |
தமிழகம் | ஊராட்சி கூட்டம் குறித்த தலைவரின் அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை தடை | மதுரை:மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்துவது குறித்த தலைவர் அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.சத்திரப்பட்டியை சேர்ந்த காசிராஜன் தாக்கல் செய்த ரிட் மனு:நான் 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றேன்.
பின், என்னை துணை தலைவராக தேர்வு செய்த... |
தமிழகம் | சுகாதாரமற்ற உணவுப் பொருள் : கண்டுகொள்ளாத சுகாதாரதுறை | டி.கல்லுப்பட்டி:டி.கல்லுப்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தெருவோரத்தில் வடை மற்றும் டீக்கடைகள் உள்ளன. இவற்றில் ஒருநாள் பயன்படுத்திய எண்ணெய்யை திரும்பத் திரும்ப பல நாட்கள் பயன் படுத்துகின்றனர். மேலும் திறந்வெளியில் உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன. இவற்றில் ஈக்கள் மொய்க்கின்றன. இதை உண்பவர்களுக்... |
தமிழகம் | மின் வயர் திருட்டு | வாடிப்பட்டி:ஆண்டிபட்டி பங்களா - மேட்டு நீரேத்தான் இடையே மின் கம்பத்தில் இருந்து 450 மீட்டர் நீளம் கொண்ட அலுமினிய வயர் திருடப்பட்டது. அய்யங் கோட்டை மின் பிரிவு அலுவலக உதவி பொறியாளர் கருப்பையா புகார் படி, வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | மழைக்கு மரங்கள் சேதம் தோட்டக்கலை ஆய்வு | பாலமேடு:பாலமேடு பகுதியில் சில நாட்களுக்கு முன் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ராமகவுண்டன்பட்டியில் பப்பாளி மரங்கள் வேறுடன் சாய்ந்தன. தினமலர் இதழில் இச் செய்தி வெளியானதை தொடர்ந்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார், உதவி வேளாண்மை அலுவலர... |
தமிழகம் | மதுரையில் தொடரும் மோசடிகள்; தொடரும் முதலீடுகள் பொதுமக்கள் திருந்துவது எப்போது? | மதுரை:மதுரையில் ஏலச்சீட்டு, நிதிநிறுவனம் நடத்தி மோசடிசெய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுதெரிந்தும் இன்னும் பொதுமக்கள் மோசடி நிறுவனங்களிடம் முதலீடு செய்கின்றனர். கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சமீபகாலமாக, "ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதந்தோறும் 2000 ரூபாய் வட்டி; வாடிக்கையாளர்... |
தமிழகம் | வசதியில்லாத பஸ் நிலையம்மழையில் பயணிகள் அவதி | பேரம்பாக்கம் : பஸ் நிலையத்தில் சிமென்ட் சாலை, பயணிகள் இருக்கை, மின் விளக்கு, நேரக்காப்பாளர் அறை, மழைநீர் கால்வாய் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசுப் பள்ளிகள், மருத்துவமனை, வங்கி... |
தமிழகம் | அரசு நிலத்தில் பயிரிட்டவர் கைது | பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் பயிர் வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.பேரம்பாக்கம் அடுத்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் தேசப்பன் மகன் ஆறுமுகம்(50). இவர், சத்தரை கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து நெல் பயிரிட்டு வந்தார். கிராம வி... |
தமிழகம் | மணல் திருடியதாகடிராக்டர் பறிமுதல் | பேரம்பாக்கம் : கடம்பத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தொடர்ந்து டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடப்பதாக திருவள்ளூர் எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது.அவரது உத்தரவின் பேரில், கடம்பத்தூர் எஸ்.ஐ., ருக்மாங்கதன் மற் றும் போலீசார் ஆற்றுப்படுகையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, ஆற்றில் மணல் திருட... |
தமிழகம் | வரலாறு பாடத் தேர்வு வினாக்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை | மதுரை:பிளஸ் 2 வரலாறு பாடத்தில் பொது தேர்வு வினாக்களின் எண் ணிக்கையை 84லிருந்து குறைக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர் கழகம் கேட்டு கொண்டது. மதுரையில் வரலாற்று ஆசிரியர் கழக பொதுக் குழு கூட்டம், தலைவர் ஜெயபால் ஆசீர்வாதம் தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன் பேசுகையில், வரலாறு பாடத்தின் முக்கியத்துவத்தை மாணவர்... |
தமிழகம் | கொளத்தூர் கிராம மக்களுக்கு வயிற்றுப்போக்கு டாக்டர் குழு முகாமிட்டு தீவிர சிகிச்சை | செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே கிராம மக்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், பத்துக்கும் மேற்பட் டோர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவக் குழுவினர், கொளத்தூர் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.மதுராந்தகம் அடுத்துள்ளது சரவம் பாக்கம் ஊராட்சி. இவ்வூராட்சிக்குட் பட்ட கொளத்தூ... |
தமிழகம் | குன்றத்து கோயிலில் வருடாபிஷேகம் | திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அந்த நாளின் நட்சத்திரத்தை குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் வருடாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை கம்பத்தடி மண்டபத்தில் தங்ககுடம் மற்றும் இரு வெள்ளிக்குடங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடந்தன.
மாலையில் இரண்ட... |
தமிழகம் | குடியிருப்பை காலி செய்வதில் தகராறு: அதிகாரியை தாக்க முயன்ற மூவர் கைது | மாமல்லபுரம் : கல்பாக்கம் அணுசக்தி நகரிய குடியிருப்பில் சட்ட விரோதமாக குடியிருந்தவர்களை காலி செய்ய வலியுறுத்திய அதிகாரியை தாக்க முயன்ற தாய் மற்றும் மகன்களை போலீசார் கைது செய்தனர்.கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக பணிபுரிந்தவர் கணேசன். இவர், கல்பாக்கம் அணுசக்தி நகரிய குடியிருப்பில் 5வது தெருவில் க... |
தமிழகம் | ஓட்டலில் தகராறு ஒருவர் கைது | மாமல்லபுரம் : கல்பாக்கம் அடுத்த வாயலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் காமராஜ்(37). இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் மாரிமுத்துவுடன் புதுப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பார்சல் சாப்பாடு வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்ல... |
தமிழகம் | அலங்காநல்லூர் ஒன்றிய கூட்டம் ரூ. 30 லட்சத்தில் வளர்ச்சி பணி | அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் அன்னகாமு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கென்னடி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பொன்னம்மாள் முன்னிலை வகித்தனர். ஏற்கனவே நடந்து வரும் தேசிய ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள், இந்திரா நினைவு குடியிருப்பு பணிகள் உட்பட ஒன்றியத்தில் நடந்து வரும் பணிகளை முடிக்க இன... |
தமிழகம் | சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்சாராய வியாபாரிக்கு போலீஸ் வலை | காஞ்சிபுரம் : சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த சாராய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த மாங்கால் கூட்ரோட்டை சேர்ந்தவர் தணிகைமலை (38); சாராய வியாபாரி. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயா ளன் மற்றும் போலீசார் மாங்கால் கூட்ரோட்டில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த... |
தமிழகம் | அரசுக்கு சொந்தமான ரூ.1 கோடி மேய்க்கால் புறம்போக்கு நிலம் மீட்பு | மதுராந்தகம் : மதுராந்தகம் சகாய நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, வருவாய்த் துறையினர் மீட்டனர்.மதுராந்தகம் தாலுகா பூதூர் ஊராட்சியிலுள்ள சகாய நகரில், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் ஆடு, மாடுகள் மே... |
தமிழகம் | அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறைக்காவலர் பலி | புழல் : மதுரை மேலூரைச் சேர்ந்தவர் மதி; இவரது மகன் சுரேஸ்(23); 2008ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படையின், சென்னை ஆவடியில் உள்ள இரண்டாம் நிலை பட்டாலியனில் பணிக்கு சேர்ந்தார். மூன்று மாதங் களுக்கு முன் புழல் மத்திய சிறை காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலைய... |
தமிழகம் | கோடை உழவு செய்ய அழைப்பு | கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயக்கொடி கூறியதாவது: தற்போது பெய்யக்கூடிய மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்வதால் மண்ணில் உள்ள விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள் அழிக்கப்படு வதுடன் மண் அரிமானம் தடுக்கப்படும்.
மரங்க... |
தமிழகம் | ஷேர் ஆட்டோ - லாரி மோதி விபத்து: மாணவன் பலி; ஐவர் படுகாயம் | பள்ளிக்கரணை : பள்ளிக்கரணை அருகே ஷேர் ஆட்டோ மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்திருந்த மாணவன் பரிதாபமாக இறந்தான்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாபு; காஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்; இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(16). பள்ளிக்க... |
தமிழகம் | நூற்றாண்டு கண்ட பள்ளி தரம் உயர்வது எப்போது? | அழகர்கோவில்:மதுரை கள்ளந்திரியில் இருபாலர் படிக்கும் நடுநிலைப் பள்ளி உள்ளது. அழகர்கோவில் ரோட்டின் ஓரத்தில் இருக்கும் இப்பள்ளி 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கள்ளந்திரி மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மதுரை புதூர் மற்றும் சூர்யா நகரிலும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ... |
தமிழகம் | திடீர் ஊர்வலத்தால் மேலூரில் போக்குவரத்து பாதிப்பு | மேலூர்:திருச்சியில் நடக்கும் ஜாதி பொதுக்கூட்டத்திற்கு சென்றவர்கள் மேலூரில் திடீர் ஊர்வலம் நடத்தியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் ஒரு ஜாதியினரின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வாகனங்களில் சென்ற சிலர், அழகர்கோவில் ரோட்டின் வழியாக நேற்று காலை 11.30 மணிக்கு மேலூர் நகருக்குள்... |
தமிழகம் | கரும்பு தோட்டம்எரிந்து நாசம் | திருத்தணி : திருத்தணி ஒன்றியம் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும், அருகில் இருந்த கோபி, செல்வம், சிவாச்சாரி, சுப்பிரமணியின் கரும்புத் தோட்டங்களும் தீப்பிடித்து எரிந்தன.திருத்தணி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீ... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி : சீராகுது சிப்காட் சாலை | கும்மிடிப்பூண்டி : தினமலர் செய்தியால் பராமரிப்பின்றி கிடந்த சிப்காட் சாலையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. சுற்றியுள்ள கிராம மக்கள் தவிர சென்னை, ஆந்திர பகுதி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து... |
தமிழகம் | முடிக்கப்படாத நடைமேடை பணிகள்தடுமாறி விழும் ரயில் பயணிகள் | கும்மிடிப்பூண்டி : ரயில் நிலைய நடைமேடை விரிவுப் படுத்தும் பணிகள் முடிக்கப்படாததால், ரயில் பிடிக்க அவசரமாக செல்பவர்களும், இரவில் நடை மேடையை பயன்படுத்துபவர்களும் தட்டு தடுமாறி விழுந்து காயமடையும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடில்லி, மேற்கு வங்கம் நோக்கி செல்லும் ரயில் தடத்தில் தமிழகத்தி... |
தமிழகம் | பொலிவிழந்து காணப்படும் நூபுரகங்கை தீர்த்தம் இயற்கை எழிலுடன் மாற்றி அமைக்கப்படுமா | அழகர்கோவில்:பழமையான சோலைமலை நூபுரகங்கை தீர்த்தம் இயற்கை எழிலுடன் மாற்றி அமைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட திட்டம், நான்கு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.அழகர்கோவில் மலை மீது உள்ளது நூபுரகங்கை தீர்த்தம். பெருமாளின் காலடியில் இருந்த சிலம்பின் முத்து கழன்று விழுந்ததில் அங்கிருந்து தண்ணீர் ஆறாக பெருகி ஓடியது. இதனால் இது சிலம்பாறு எ... |
தமிழகம் | திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபர் கைது | திருவள்ளூர் : திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்டு கர்ப்பமான பிறகு திருமணம் செய்துகொள்ள மறுத்த வாலிபரையும், அவரது தாயையும் போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அடுத்த அம்மம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்; இவரது மகள் ரேவதி(19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும், க... |
தமிழகம் | கும்பாபிஷேகம் | திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பெரிய எடப்பாளையம் வாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி வெள்ளியன்று காலை கோவில் வெளியே யாக சாலை அமைத்து கணபதி பூஜையும், முதல் கால யாக பூஜையும் நடந்தது.நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கோ... |
தமிழகம் | கட்டிலை இறக்க பஸ் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி | திருவள்ளூர் : பஸ் மீதிருந்த கட்டிலை இறக்குவதற்கு உதவி செய்த சிறுவன், மின்சார கம்பியை பிடித்ததால் உடல் கருகி பலியானான்.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சக்திவேல்(14); பாலவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான். கோடை விடுமுறைக... |
தமிழகம் | சிதம்பர சுவாமிகள் மடத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை | திருப்போரூர் : திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் திருப்பணி செய்ய டெண்டர் விடப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.திருப்போரூரில் 370 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிதம்பர சுவாமிகள் மடம் அமைந்துள்ளது.கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திலுள்ள இம்மடம், ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது. சுவாமிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதை,... |
தமிழகம் | விமான விபத்து பண்ருட்டியில் அஞ்சலி | பண்ருட்டி : பண்ருட்டி தொகுதி இளைஞர் காங்., சார்பில் மங்களூர் விமான விபத் தில் பலியானவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி பஸ் நிலையம் காமராஜர் சிலை முன் நடந்தது. துணை சேர்மன் கோதண்டபாணி தலைமை தாங்கினார். முன்னாள் நகர காங்., தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மாநில விவசாய சங்க பொதுச் செயலாளர் வேல் முருகன், வர்த்தக பிரிவு அன்பழகன் ... |
தமிழகம் | ஒரே மாதத்தில் இரண்டு,மூன்று பாலிசிகள் இருந்தால் ஒரே நோட்டீஸ் வழங்கப்படும் எல்.ஐ.சி.,யில் புதிய முறை | மதுரை:எல்.ஐ.சி.,யில் ஒரே மாதத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகள் பெற்றவர்களை ஒருங்கிணைத்து, ஒரே நோட்டீஸ் வழங்கும் வகையில் மதுரை கோட்டத்தின் சார்பில் மதுரையில் புதிய சேவை மையம் அமைக்கப்பட உள்ளது.மதுரை கோட்டத்துக்குட்பட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள 25 கிளைகள், 16 துணைக் கிளைகள் மூலம் கடந் தாண்டு ஆறுலட்சம் பாலிசிகள் பெறப் பட்... |
தமிழகம் | அலுவலகம் இடமாற்றம் | கடலூர் : பண்ருட்டியில் இயங்கி வந்த தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் ஆய்வாளர் கமலக்கண்ணன் விடுத் துள்ள செய்திக்குறிப்பு: பண்ருட்டியில் இயங்கி வந்த தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் நெ.218/5, அண்ணா தெரு, சென்னை சாலை, எல்.என்.புரம், பண் ருட்டி என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் | ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த நாச்சியார்பேட்டை பகுதியில் உள்ள மூன்று ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் தெருமுனைக் கூட்டம் நடந்தது.
கலியங்குப்பம் ஊராட்சி துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் சிற்றரசன் தலைமை தாங்கினார். நாச்சியார்பேட்டை துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் சித... |
தமிழகம் | சேக்கிழார் செந்தமிழ் சங்க ஆண்டு விழா | விருத்தாசலம் : திருமுதுகுன்றம் சேக்கிழார் செந்தமிழ் சங்கம் முதலாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 9ம் ஆண்டு குருபூஜை விழா விருத்தாசலம் பக்தவச்சலு நாயுடு அனுசுயா அம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.
செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். காலை சிவபூஜை மற்றும் சேக்கிழார் வீதியுலா நடந்தது. ஆன்மிக ... |
தமிழகம் | பொக்லைன் பறிமுதல் | திட்டக்குடி : திட்டக்குடி அருகே பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டக்குடி அடுத்த கொடிக்களம் வெள் ளாற்று பகுதிகளில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை சோதனை மேற்கொண்டனர்... |
தமிழகம் | வடமதுரையில் தொடர் திருட்டு | வடமதுரை: வடமதுரையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் திருட்டுக்கள் நடந்துள்ளன.காணப்பாடி, புதுப்பாளையம், சித்தூர், ஆண்டிமாநகர், வடமதுரை அண்ணாநகர், ரெட்டியப்பட்டி பகுதியில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை மற்றும் பணப்பையை பறித்து சென்ற சம்பவங்கள் நடந்தன.
லக்கன்தெரு பகுதியில் ரோட்டில் நின்றிருந்த ... |
தமிழகம் | மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | குஜிலியம்பாறை: வடுகம்வாடி ஊராட்சி புளியம்பட்டியில், மின் துறை சார்பில் மின் நுகர் வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கலைவாணிசேகர் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் தீபன் ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றம், சேதமடைந்த மின் கம்பம் மாற்ற கோருதல், எர்த் கம்பி மாற்ற கோருதல் உள்ளி... |
தமிழகம் | கோடை விழா: கபடி போட்டி | கொடைக்கானல்:கொடைக்கானல் கோ டை விழாவை யொட்டி நடந்த கபடி போட்டியில், முதல் பரிசை தமிழ் நாடு போலீஸ் அணி வென்றது. திண்டுக்கல் மாவட்டத் திலிருந்து 8 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை சுற்றுலா அலுவலர் குணசேகரன் துவக்கி வைத்தார். முதல் பரிசை தமிழக போலீஸ் அணியும், இரண்டாவது பரிசை மட்டப்பாறை அணியும் பெற்றன.
வெற்றிபெற்ற வீரர்களுக்... |
தமிழகம் | கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | கடலூர் : மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு கார் தயாரிக்கும் டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு 1,500 ஜூனியர் ஃபுளோர் ஸ்டாப் தேவைப்படுவதால், வேலை செய்ய விருப்பமுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி.,... |
தமிழகம் | பழநியில் மாம்பழ வரத்து குறைவு கடந்த ஆண்டை விட விலை அதிகம் | பழநி: பழநியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.பழநியில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. மார்ச் முதல் ஜூலை வரை சீசனாகும்.
கடந்த ஆண்டு மாம்பழ விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு தான் இந்தாண்டு உள்ளது. இதனால் விலை அதிகரித்துவிட்டது.விலை விபரம்(ரூ. ஒரு கிலோ) (கடந்தஆண்ட... |
தமிழகம் | அம்மன் சிலை ஒப்படைப்பு | சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த கண்ணங்குடி ஊராட்சியில் பள்ளம் தோண்டும் போது கிடைத்த ஏழரை செ.மீ., உயரமுள்ள அம்மன் சிலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேனர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது கிடைத்த வெள்ளை நிற உலோகத்தால் ஆன அந்த சிலையை கிராமத்தினர் சிதம்பரம் நகர போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிலை தாசில்தார் காமராஜிட... |
தமிழகம் | நான்கு ஆண்டுகளில் 4,020 கோவில்களில் ரூ.405 கோடியில் வளர்ச்சி பணிகள் : அமைச்சர் பெரியகருப்பன் தகவல் | கடலூர் : தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4,020 கோவில்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் 405 கோடி ரூபாய் மதிப்பீட் டில் நிறைவேற்றப்பட் டுள்ளன என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
வடலூர் அருள்பிரகாச வள்ளலார் கோவில் மற் றும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர்கள் பன்னீர்செல் வம... |
தமிழகம் | ஓட்டல்களில் குழந்தை தொழிலாளர் இருந்தால் கடுமையான நடவடிக்கை தொழிலாளர் ஆய்வாளர் எச்சரிக்கை | திண்டுக்கல்: குழந்தை தொழிலாளர் களை பணியில் அமர்த்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. திண்டுக்கல் தொழிலாளர் ஆய்வாளர் லிங்கம் தெரிவித்துள்ளதாவது:
வீட்டு வேலைகள், ஓட்டல்கள், சாலையோர சிற்றுண்டி விடுதிகள், டீக்கடைகள், குப்பை பொறுக் குதல், வாகனங்கள் நிறுத் தும் மோட்டல்கள், இதர பொழுது... |
தமிழகம் | திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்துக்கள் தொடர்கிறது...தடுப்பு நடவடிக்கை அவசியம் தேவை | திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து விபத்துக் கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட் டத்தில் தான் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது.திண்டுக்கல்-மதுரை, கரூர், திருச்சி,கோயம்புத்தூர், தேனி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்வதால் அதிகளவு வாகன போக்குவரத்து... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | வேடசந்தூர்: தே.மு.தி.க.,சார்பில் வேடசந்தூர் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் விலைவாசி ,பஸ் கட்டண உயர்வு, மின் வெட்டை கண்டித்தும்,வேடசந்தூரில் கல்லூரி அமைக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சின்னச்சாமி,மாவட்ட பொருளாளர் வடிவேல்,நகர அவைத்தலைவர் பன்னீர் செ... |
தமிழகம் | உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஏ.ஐ.டி. சி.யூ., உழைக்கும் பெண்கள் மாநில அமைப்பு மாநாடு நடந்தது. இதில் மாநில தலைவர் மீனா, இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில தலைவர் சுசீலா, அகில இந்திய துணை தலைவர் வகிதா நிஜாம், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் சுப்பராயன், பொது செயலாளர் தியாகராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் பாலன் உட்பட பலர்... |
தமிழகம் | வேலை வாய்ப்பு பதிவு முகாம் | பழநி: பழநியில் வேலை வாய்ப்பு பதிவு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. மார்க் பட்டியல் மே 26ல் வழங்கப்படுகிறது. பழநி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியும் நிலை உள்ளது. இதனால் நேர, ப... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு தகராறில் இருவர் காயம் | வடமதுரை: வடமதுரை பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி(30). இவரது மனைவி நாச்சம்மாள்(28). இவர் களது நிலத்தை இதே ஊரைச் சேர்ந்த புலிபெருமாள் ஆக்கிரமிப்பு செய் ததை நாச்சம்மாள் கண்டித் துள்ளார். இதில் ஆத்திரமடைந்த புலிபெருமாள், அவரது மகன் சின்னாண்டி ஆகியோர் கருப்புச்சாமி, நாச்சம் மாளை தாக்கினர். காயமடைந்த இருவரும் திண்ட... |
தமிழகம் | பஸ் மோதி ஒருவர் பலி | சாணார்பட்டி: சாணார்பட்டியிலிருந்து திண்டுக்கல்லுக்கு பைக்கில் சென்றவர் மீது அரசு பஸ் மோதியதில் ஒரு3வர் இறந் தார். சாணார்பட்டி அருகேயுள்ள காம்பார்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் துரைராஜ்(27). இவரும் இவரது மனைவியும் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் வசிக்கின்றனர். துரைராஜ் தனது பைக்கில் சாணார்பட்டி கனரா பாங்க் அருகே ச... |
தமிழகம் | பாராட்டு விழா | நிலக்கோட்டை: திருச்செந்தூரில் நடந்த கால்பந்து போட்டியில் நிலக்கோட்டை சோலார் அணி இரண்டாம் இடம் பிடித்தது. இதில் பங்கேற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடந் தது. கால்பந்து கழக செயலாளர் ஜெயச்சந்திரன், இணை செயலாளர் சேகர், மூத்த உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் பயிற்சியாளர் ராஜ்மோகன், வீரர்க ளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். |
தமிழகம் | தக்காளி விலை கடும் உயர்வு | ஒட்டன்சத்திரம்: முகூர்த்த சீசன் தொடங் கியதால் ஒட்டன்சத்திரத்தில் தக்காளி விலை பெட்டிக்கு 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டில் தக்காளி உள் ளிட்ட காய்களின் விலை ஒரே நாளில் கிடுகிடு வென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ஒன்று 180 ரூபாய் என்ற அளவில் விற்பனையானது.
நேற்று ... |
தமிழகம் | கடன் வாங்க சொன்ன அமைச்சர் | கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை விழா மலர்க் கண்காட்சி துவங்கியது.விழாவில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமி மலைப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி மேற்கொள்ள ஏராளமான நிதி உதவியை மாநில அரசு செய்துள்ளது. பழநி-கொடைக்கானல் "ரோப்கார்' அமைக்கும் திட்டத்திற்கு பழநி கோயில் தேவஸ்தானம் சார்பில் ரூ.65 கோடி,மற்றும் மானியம் ... |
இந்தியா | நெரிசல் நேரமா? பிளாட்பாரம் டிக்கெட் இனி இல்லை | புதுடில்லி : டில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் நெரிசல் நேரத்தில் பிளாட்பார டிக்கெட்டுகளை வினியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.டில்லி ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கடைசி நேரத்தில் பிளாட்பாரத்தை மாற்றியதால் பயணிகள் முண்டியடித்து கொண்டு ரயிலை பிடிக்க முயன்றதில், கூட்டத்தில் மிதிப்பட்டு இரண்டு பேர் இறந்தனர். இ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.