category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
அணை நீர்மட்டம் உயர்வு
அய்யம்பாளையம்: அய்யம்பாளையம் மருதாநதி அணை நீர் மட்டம் அதிகரித்தது.  தாண்டிக்குடியில் பெய்த மழையால் அணைக்கு 20 கன அடி நீர் வரத்துள்ளது. அணையில் தற்போது 36 அடி நீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்ததால் அணை நீர் மட்டம் அதிகரித்தது.
தமிழகம்
கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: கடலூரில் 27ம் தேதி துவங்குகிறது
கடலூர் : மாவட்ட அளவில் கல் லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடலூரில் வரும் 27, 28ம் தேதி நடக்கிறது.மாணவ, மாணவிகளிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையேயான வி...
தமிழகம்
திருடனை கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைப்பு
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் சைக்கிள் திருடியவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பட்டிவீரன்பட்டி பகுதியில் இரண்டு மாதங்களாக சைக்கிள் திருட்டு அதிகமானது. நேற்று மாலையில் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்த சைக்கிளை திறப்பதற்கு ஒருவர் முயன்றார். பொது மக்கள் பிடித்து விசாரித்த போது இவர் சங்காரெட்டிகோட்டைய...
தமிழகம்
மேல வீதியில் பொதுக் கூட்டத்திற்கு தடை: அனைத்து கட்சியினர் கடும் எதிர்ப்பு
சிதம்பரம் : சிதம்பரம் மேலவீதியில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு அனைத்து கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சிதம்பரம் கீழ வீதியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதால் பொதுமக்களுக்கு கடுமையான இடையூறு ஏற்படுகிறது என கூட்டம் நடத்த கோர்ட் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலவீதி பெரியார் சில...
தமிழகம்
புவனகிரியில் மருத்துவ முகாம் உயர் சிகிச்சைக்கு 21 பேர் தேர்வு
புவனகிரி : புவனகிரியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டத்திற்கு 21 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.புவனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச் சைக்கான சிறப்பு மருத் துவ முகாம் நடந்தது. கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.சென்னை சூர்யா மருத்...
தமிழகம்
போலீசார் வாகன சோதனை எதிரொலி ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் குறைவு
கடலூர் : கடலூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் எதிரொலியாக நகரத்தில் ஷேர் ஆட் டோக்கள் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளது.கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயக் கப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில் ஷேர் ஆட்டோ இயக்குவதால் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள் ளது....
தமிழகம்
ராமர் சீதா திருக்கல்யாணம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராமர் சுவாமி ஆனி பிரமோற்சவ விழா முக்கிய நிகழ்ச்சியான ராமர் சீதா திருக்கல்யாணம்   நடந்தது.  பத்து நாள் நடந்த  விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். விழாவின் ஆறாம் நாள்   திருக்கல்யாணம்  நடந்தது. இதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பெருமாள், தாயார், இளையபெருமாள் வீதி புறப்...
தமிழகம்
மண்டல விளையாட்டு போட்டி சி.கே., பள்ளி மாணவர்கள் சாதனை
கடலூர் : கடலூரில் பி.எஸ். என்.எல்., சார்பில் நடந்த மண்டல விளையாட்டு போட்டியில் சி.கே., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.கடலூரில் பி.எஸ். என்.எல்., சார்பில் அண்ணா விளையாட்டரங்கில் மண்டல விளையாட்டு போட்டிகள் நடந் தது. அதில் நீச்சல் போட் டியில் சி.கே., பள்ளி மாணவர்கள் சபா பிராங்களின், நிர்மல்காந்த், சூரியபிரச...
தமிழகம்
தரம் உயர்த்திய பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு
திட்டக்குடி : கொட்டாரம் நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.திட்டக்குடி அடுத்த கொட்டாரம் துவக்கப் பள்ளி கடந்தாண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 9.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப் பறை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந் தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறு...
தமிழகம்
ரோட்டரி சங்கம் சார்பில் நோட்டு வழங்கும் விழா
விருத்தாசலம் : விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் சிவபூஜா மண்டபத்தில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுனர் கேதார் நாதன் தலைமை தாங்கினார். மண்டல துணை ஆளுனர் வெங்கடேசன், முன்னாள் பொறுப் பாளர்கள் ஆசைதம்பி, அன்பழகன் முன்னிலை வகித்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்ட...
தமிழகம்
உயிரை பணயம் வைத்து படிக்கும் மாணவர்கள் பஸ் வசதி இல்லாததால்
அவலம்கமுதி: கமுதி பகுதியில் போதுமான பஸ்களை இயக்க அரசு நிர்வாககங்கள் முன் வராததால் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து படிக்கும் அவலம் தொடர்கிறது. கமுதி ஒன்றிய தெற்குப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராம பகுதிகளில் போதுமான பள்ளிக் கூட வசதி இல் லாததால், பெரும்பாலான கிராம மாணவர்கள் கமுதியை நாடவேண்டி உள்ளது. இ...
தமிழகம்
முத்தியால்பேட்டை கோவிலில் 23ம் தேதி செடல் திருவிழா
கடலூர் : கடலூர் அடுத்த முத்தியால்பேட்டை முத்தாலம் மன் கோவிலில் செடல் திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது.இதனையொட்டி 15ம் தேதி விநாயகர் பூஜை நடந்தது. இரவு கொடியேற்றப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் சாமி வீதியுலா நடக்கிறது. 22ம் தேதி இரவு முத் துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 23ம் தேதி செ...
தமிழகம்
கீழக்கரையில் பள்ளிவாசல் திறப்புவிழா
கீழக்கரை: கீழக்கரை ஜாமியா நகரில் அல்மஸ்ஜிதுல் ஜாமிஆ பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. தொடக்க நிகழ்ச்சியாக முதல் நாள் பெண்களுக்கான சிறப்பு பயான் நடந்தது. களஞ்சியம் செய்யது முகம்மது தம்பி, மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் ரில்வான் பாத்திமா கிராத் ஓதினார். தெற்கு தெரு ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது அமானி பைஜி பாசில் ர...
தமிழகம்
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு படைப்பாற்றல் பயிற்சி முகாம்
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏழு ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சி முகாம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர் பயிற்...
தமிழகம்
நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.உடல் உழைப்பு, கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநர்கள், தையல், சலவை, கைவினைப் பொருட்கள், காலணி செய்பவர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிலாளர்களை நலவாரிய உறுப்பினர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது...
தமிழகம்
நிலமோசடி 3பேர் கைது: வி.ஏ.ஒ., உட்பட 4பேர் தலைமறைவு
ராமநாதபுரம்: போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்த மூன்று பேரை  குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து , வி.ஏ.ஒ., உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர். முதுகுளத்தூரை சேர்ந்த வேல்முருகன்(45). இவர் சென்னையில் சுகாதார ஆய்வாளராக உள்ள நிலையில் தனது சொந்த ஊரில் லட்சுமி என்பவரிடம் 48 சென்ட் நிலத்தை  வாங்கினார்.  இதே நிலத்தை ஏற்கனவே...
தமிழகம்
கூட்டுறவு தணிக்கைத் துறையில் பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தல்
கடலூர் : தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் சங்க கடலூர் மண்டலக் கூட்டம் டவுன்ஹாலில் நடந்தது.மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், அன்பானந்தன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித் தனர். கடலூர் மண்டல செயலாளர் ரவி வரவேற்றார். நிறுவனர் சுப கோவிந்தராஜன், பிரசார...
தமிழகம்
கடலோர பாதுகாப்பு கூட்டம்
வாலிநோக்கம்: வாலிநோக்கத்தில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் ஊராட்சி  தலைவர் வஹிதாசகுபர் தலைமையில் நடந்தது. ஜமாத் தலைவர் சம்சு மரைக்கையார் முன்னிலை வகித்தார்.    கூடுதல் எஸ்.பி.,எபினேசர்   பேசும்போது, "" கடல் வழியாக நமக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும். கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மத்திய அரசு தனிப்படை...
தமிழகம்
தரமற்ற விதைகளை விற்றால் வேளாண் அதிகாரி எச்சரிக்கை
சேத்தியாத்தோப்பு : காலாவதியான பூச்சி மருந்து மற்றும் தரமற்ற விதைகள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என வேளாண் உதவி இயக்குனர் எச்சரித்துள்ளார்.புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் கனகசபை, மாவட்ட விதை ஆய்வாளர் விஜயராகவன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள தனியார் பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் விதை விற்பனை ...
தமிழகம்
என்.எல்.சி., பெண் ஊழியர்களுக்கு புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்
நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனத் தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது.என்.எல்.சி.,யில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் சோதனை மேற்கொள்ள என்.எல்.சி., பொது மருத் துவமனை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை காமாட்சி நினைவு மருத்துவமனை சார்பில் நடந்த முகாம...
தமிழகம்
திறந்த வெளி கால்வாயில் கடத்தப்படும் கட்டண கழிப்பறை செப்டிக் டாங்க் கழிவு தொற்று நோய்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி கட்டண கழிப்பறை செப்டிக் டாங்க் கழிவுகள் திறந்த வெளி கால்வாயில் விடுவதால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள் உள்ளனர். ராமநாதபுரம் அக்ரஹாரம் ரோடு அருகே காதர் பள்ளிவாசல் தெருவில் சின்ன மழை பெய்தாலே ரோட்டில் மழைநீர் தேங்கி சாக்கடையாக மாறிவிடுகிறது. நகராட்சி முக்கிய வீதிகளை போல் இங்கும் ரோடு போட...
தமிழகம்
எம்.எல்.ஏ., நிதியுதவி
நெல்லிக்குப்பம் : தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் கூரை வீடு தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது. தீ விபத்தில் வீட்டை இழந்த கலியபெருமாளுக்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வேட்டி, சேலை, அரிசி, ரொக்கப்பணம் வழங்கினார்.நிகழ்ச்சியில் சேர்மன...
தமிழகம்
ஏர்வாடியில் இருதலை மணியன் பாம்பு
ஏர்வாடி: பாம்பு வகைகளில் தலை இல்லாத நிலையில் காணப்படும் இந்த பாம்பு இருதலை மணியன் என்று அழைக்கின்றனர். நான்கு அடி நீளமுள்ள இந்த பாம்பு நேற்று ஏர்வாடி பஸ் ஸ்டாப் அருகே மண்ணுக்குள் புதைந்து சென்றதை கண்டனர். அங்கு நின்ற இளைஞர்கள் பாம்பை பிடித்து ஏர்வாடிபோலீசில் ஒப்படைத்தனர். பின் கீழக்கரை வனச்சரக அலுவலர் ராஜேந்திரன் வனக்க...
தமிழகம்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனசேகரன் வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நீரஜா முன்னிலை வகித்தார்.முகாமில் ஸ்கேன், இ.சி.ஜி., ரத்த அழுத்தம், ரத்த ப...
தமிழகம்
மாவட்டத்தில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு! ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் குறைந்தது
ராமநாதபுரம்: மாவட்டத்தில் ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலமே அதிகம் இருப்பதாக எதிர் பார்க்கப்பட்டுள் ளது. மாறிவரும் வாழ்க்கை முறையில் மனிதனின் வாழ்நாள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கையானது மாவட்டம் வாரியாக வேறுபடுகிறது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் இயற்கையில் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்குள்ள மக்...
தமிழகம்
கடலூர் நகருக்கு புறவழிச்சாலை திட்டம் : கனரக வாகனங்களுக்கு கவலையில்லை
கடலூர் ; கடலூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புறவழிச்சாலை திட்டம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலவிட அரசு முன் வந்துள்ளது.கடலூர் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழைய மாவட்டமாக இருந்ததால் 40 ஆண்டுக...
தமிழகம்
23ம் தேதி சாகை வார்த்தல்
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு முத்தாலம்மன் கோவிலில் வரும் 23ம் தேதி சாகை வார்த்தல் திருவிழா நடக்கிறது.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு மேல் செட்டித் தெருவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வரும் 23ம் தேதி வெள்ளிக்கிழமை சாகை வார்த்தல் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 9 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து சக்தி கரகம்...
தமிழகம்
படைவீட்டம்மன் கோவிலில் 23ம் தேதி செடல் உற்சவம்
பண்ருட்டி : பண்ருட்டி வைத்திரெட்டிப்பாளையம் படைவீட்டம்மன் கோவில் செடல் உற்சவம் வரும் 23ம் தேதி நடக்கிறது.பண்ருட்டி வைத்திரெட்டிப்பாளையம் படைவீட்டம்மன் கோவில் பிரம்மோற்சவ உற்சவம் கடந்த 14ம் தேதி விநாயகர், வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்துடன் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 23ம்...
தமிழகம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கரையூர்: கரையூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி. மாற் றுத்திறனாளிகள் நலஅலுவலர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் ஜெயபால், தாட்கோ மாவட்ட மேலாளர் ரங்கநாதன், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை அலுவலர் போஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், போக்குவரத்...
தமிழகம்
சிதம்பரம் அருகே திக்...திக்... பாலம் : பாராமுகமாய் நெடுஞ்சாலைத்துறை
சிதம்பரம் : சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் சாலையில் கான்சாகிப் வாய்க்கால் செல்லும் பெரிய மதகு பாலம் உடைந்து எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.சிதம்பரத்தில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய சாலையாக காட்டுமன் னார்கோவில் சாலை உள் ளது. தேசிய நெடுஞ்சாலையான இச்சாலை காட் டுமன்னார்கோவில், பெரம்பலூர், அரியல...
தமிழகம்
செங்கல் தொழிலாளர்கள் கூட்டம்
பரமக்குடி: செங்கல் அறுவை தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்க செயற் குழு கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. தலைவர் நாகராஜன் தலைமையில், முனியசாமி, ராமு, காளிதாஸ், வேதமுத்து, சேகர் முன்னிலை வகித்தனர்.
தமிழகம்
ஒரு கோடி மதிப்புள்ள கடல் அட்டை, சங்கு கடத்தல்,இலங்கை கடற்படையிடம் சிக்கிய 3 மீனவர்கள்
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடல் பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள கடல் அட்டை மற்றும் கடல் சங்கு கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிர...
தமிழகம்
புனித நீராடும் பெண்களின் போட்டோ இணைய தளங்களில் வெளியீடு,கேமராவுடன் சுற்றும் கும்பல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடும் பெண்களை போட்டோ எடுத்து இணைய தளங்களில் வெளியீடும் அபாயநிலை உருவாகியுள்ளது.  ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளிலும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். புண்ண...
தமிழகம்
பலத்த காற்றால் நடுக்கடலில் மூழ்கிய படகுகள்
மண்டபம்: பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் படகுகள் மூழ்கியதால் மீனவர்கள் கடலில் குதித்து தப்பினர்.  நேற்று மண்டபம் தென்கடல் பகுதியில் முருகானந்தம் என்பவரது விசைப்படகில் நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது பலத்த காற்று வீசியதால் விசைப்படகு கடலில் மூழ்கியது. மீனவர்கள் கடலில் குதி...
தமிழகம்
க.பரமத்தி அருகே நிலத்தகராறில் மூதாட்டி கொலை: பெண் மாயம்
க.பரமத்தி: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே நிலத்தகராறில், மூதாட்டி ஒருவர் கழுத்தில் வெட்டப்பட்டு இறந்தார். அவருடன் சென்ற மற்றொரு பெண்ணை போலீஸார் தேடிவருகின்றனர்.க.பரமத்தி யூனியன், நடந்தை பஞ்சாயத்தை சேர்ந்த துலக்கம்பாளையத்தில் வசிப்பவர் மகேஸ்வரி(45). ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்த, இவர் கணவர் துரைசாமி, 1992ல் நடுக்காடன்தோட...
தமிழகம்
ஜூடோ மாநில அணிக்கு மாணவர் தேர்வு போட்டி
குளித்தலை: தேசிய அளவில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கு தமிழகம் சார்பில் பங்கேற்கும் மாணவர் தேர்வு போட்டி தண்ணீர் பள்ளியில் நடந்தது.தேசிய அளவில் ஜூடோ போட்டி ஆகஸ்ட் மாதம் 12 தேதி முதல் சட்டீஸ்கர் மாநிலம், பிலாரியில் நடக்கிறது. தமிழகம் சார்பில் பங்கேற்கும் 10 முதல் 12 வயதுக்குள் மாணவர்களை  தேர்வு செய்யும் போட்டி குளித்தலை அருக...
தமிழகம்
காப்பீடுக்கழக ஊழியர் சங்கம் கோட்ட மாநாடு கரூரில் துவக்கம்
கரூர்: காப்பீடுக்கழக ஊழியர் சங்கம், தஞ்சை கோட்ட இரண்டு நாள் மாநாடு கரூரில் நேற்று துவங்கியது. மாநாட்டில் கோட்ட சங்க தலைவர் யேசுதாஸ் தலைமை வகிக்கிறார்.நேற்றைய கூட்டத்தில் சி.ஐ. டி.யு., அகில இந்திய துணைத்தலைவர், எம்.பி., ரங்கராஜன் துவக்கிவைத்துப் பேசியதாவது:பொதுத்துறைகளில் தனியார் மயம் கண்டிக்கத்தக்கது. பாதுகாப்பு துறையி...
தமிழகம்
சத்துணவு பணியாளர் சங்க கூட்டம்
திருப்புவனம்: சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் போராட்ட விளக்க கூட்டம், ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் திருப்புவனம் ஒன்றியநடந்தது. மாவட்ட தலைவர் அயோத்தி, செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராமசாமி வரவேற்றார். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் கந்தசாமி, அமைப்பு செயலாளர் முத்துக்குமார், துணை தலைவ...
தமிழகம்
இந்தியன் வங்கியில் தீவிபத்து இரண்டு லட்சம் ரூபாய் சேதம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வங்கி பாதுகாப்பு அலாரம் அடித்தது. மேலும், வங்கியிலிருந்து போலீ...
தமிழகம்
நகைகளை அபகரிக்க முயன்ற அடகு கடை உரிமையாளர் போலீசில் ஒப்படைப்பு
திண்டிவனம் : திண்டிவனத்தில் திருட்டு போனதாக நாடகமாடி வாடிக்கையாளர்களின் நகை களை அபகரிக்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 5 பேரை ஆட்டோ டிரைவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). இவர் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள கந்தன் காம்ப்ளக்சில் கடந்த 2008ம் ஆண்டு முதல...
தமிழகம்
குழந்தை திறன் மேம்பாட்டு கூட்டம்
திருப்புவனம்: திருப்புவனத்தில், குழந் தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் திறன் மேம்பாட்டு கூட்டம் நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உமாராணி தலைமை வகித்தார்.பேரூராட்சி தலைவர் பிச்சைமுத்து முன்னிலை வகித்தார்.  கவுன்சிலர்கள் சரவணன், அயோத்தி, கிராமக்குழு உறுப்பினர்கள்அய்யாச்சாமி, அலமேலு பங்கேற்றனர். குழந் ...
தமிழகம்
அருதங்குடியில் வாந்தி, பேதி மருத்துவக் குழுவினர் சிகிச்சை
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அருதங்குடி கிராமத்தில் வாந்தி, பேதியால் பாதித்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த அருதங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி மனைவி அன்னக்கிளி (30) அண்ணாதுரை (45) ராமாயி (45) வீராசாமி (...
தமிழகம்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகங்கை: சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சிவஞானம் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் (விவசாயம்) வெள் ளைச்சாமி, விவசாயத்துறை இணை இயக்குனர் ரவிகுலசேகரபாண்டியன் முன்னிலை வகித்தனர். பட்டா நிலத்தில் மண் எடுக்க அரசு அனுமதி பெறவேண்டும். இதற்கு, கனிம வளத்துறையை நாடாமல் தாசில்தாரிடம் அனுமதி பெற்று ...
தமிழகம்
முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
கரூர்: சின்னதாராபுரம் அருங்கரை அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மாணவர்கள் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. விழாவில், அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, டூவீலர் நிறுத்துமிடத்தை திறந்து வைத்து, புதிய மாணவர்களை வரவேற்று பேசினார். அரவக்குறிச்சி சுகம் மருத்துவமனை டாக்டர் தர்மலிங்கம், மாணவர்களின் எ...
தமிழகம்
கரூர் மாவட்ட ஓய்வூதியர் சங்க கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட அரசு அலுவலர் ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாயனூர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சிவசங்கரன், முக்கியமான சில அரசு ஆணை குறித்து விளக்கி பேசினார். மருத்துவ செலவு ஈடு செய்யும் திட்டம், பாரத ஸ்டேட் வங்கியில் தனிநபர் கடன் பெற ...
தமிழகம்
கண்காட்சி துவக்க விழா
காரைக்குடி: நாட்டுக்கோட்டை நகரத்தாரின் பதிப்புகள் குறித்த கண்காட்சி துவக்க விழா காரைக்குடியில் நடந்தது. தொழில் வணிக தலைவர் முத்துபழனியப் பன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி முன்னாள் மேலாளர் கண்ணப்பன் வரவேற்றார். பேராசிரியர் அய்க்கண் முன்னிலை வகித்தார். ஞானதேசிக சுவாமிகள், லயன்ஸ் சங்க மாவட்ட கவர்னர் சின்னஅருணாச்சலம், பேர...
தமிழகம்
வேன் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி
கோவை: வேன் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானாள். குனியமுத்தூர், குறிஞ்சி நகரில் வசிப்பவர் மாரிமுத்து. இவரது மகள் ஹரிணி(2). நேற்று மாலை, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த வேனுக்கு பின்னால் விளையாடிக் கொண்டிருந்தாள். இச்சிறுமியை கவனிக்காத வேன் டிரைவர், அன்சார்(27), வேனை ...
தமிழகம்
போலியோவால் பாதித்த பீகார் வாலிபர் பிரசாரம்
செஞ்சி : பீகார் மாநில வாலிபர் 3 சக்கர சைக்கிளில் இந் தியா முழுவதும் உள்ள கிராமங்களில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்குமார் மிஸ்ரா (33). சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். எனவே போலியோ சொட்டு மருந்து போடுவதன் அவசியத்தையும், ரத்த தான...
தமிழகம்
கலை நிகழ்ச்சி
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல் லூர் பகுதியில் மாற்றுத்திறனுடையோருக்கு உள்ளடங்கிய கல்வி குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு பயிற்றுனர் பத்மநாபன் தலைமையில் சித்தானங்கூர் ஊராட்சி நடு நிலைப் பள்ளி மாணவிகள் மாற்றுத்திறனுடையோருக்கான கல்வி குறித்து திருவெண்ணெய் நல்லூர், எடையார், தொட்டிக்குடிசை, அரசூர் பகுதியில் மக்கள...
தமிழகம்
கரூர் கொங்கு நண்பர் சங்கத்தில் "பூசல்' நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு
கரூர்: கரூர் கொங்கு நண்பர் சங்கத்தில், நிர்வாகிகள் தேர்வு குறித்து எழுந்த சர்ச்சையில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பிரச்னை தவிர்க்க கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, நிர்வாகி தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது. கரூர் கொங்கு நண்பர் சங்கம் பொதுக்குழு கூட்டம், தலைவர் விசா சண்முகம் தலைமையில் நடந்தது. செயலாளர் சுந்தரலிங்கம், பொருளாளர...
தமிழகம்
தேவபாண்டலத்தில் குத்துவிளக்கு பூஜை
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்ததேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது.வைத்திநாட்டார் தலைமை தாங்கினார். நாட்டார் ராமலிங்கம் முன் னிலை வகித்தார். குத்துவிளக்கு பூஜையில் 300க் கும் மேற்பட்ட பெண் கள் கலந்து கொண் டனர். ரவி குருக்கள் தலைமையில் உலக நலனிற்காக யாகசாலை பூஜைக...
தமிழகம்
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விழுப்புரத்தில் அணி தேர்வு
விழுப்புரம் : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட் டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட் டிக்கு விழுப்புரம் மாவட்ட அணித் தேர்வு நடந்தது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட் டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 3, 18 தேதிகளில் நடக்கிறது.திருச்சி, வேலூரில் நடக்கும் போட்டியில் விளையாட விழுப்ப...
தமிழகம்
கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
கரூர்: வேலாயுதம்பாளையம் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் நடேசன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு கம்பெனிகளின் பதிவாளர் டாக்டர் மனுநீதிசோழன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: ஆசிரியர் பணி கடினமானது....
தமிழகம்
மகாலட்சுமி கோவில் பக்தர்கள் விரதம் துவக்கம்
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை  அடுத்துள்ள மேட்டு மகாதானபுரம்  ஸ்ரீமகாலட்சுமி கோவில், தலையில் தேங்காய் உடைப்பு நேர்ச்சைக்காக பக்தர்கள் ஆடி முதலாம் தேதி விரதம் துவக்கினர்.மேட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18ம் தேதி காலை முதல் துவங்கும் சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து,  ஆடி 19ம் தேதி நேர்ச்சை பக்தர்கள்...
தமிழகம்
லைசென்ஸ் இன்றி கடைகளில் பெட்ரோல், டீசல்!கலப்படத்துடன் விற்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சிவகங்கை: மாவட்டத்தில் கிராமங்களில் லைசென்ஸ் இன்றி பெட்டி, டீக்கடைகளில் மண்ணெண்ணெய் கலந்த பெட்ரோல், டீசல் விற்பதால், சுற்றுச்சூழலில் மாசு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இங்கு முக்கிய நகரங்களில் பல்வேறு ஆயில் நிறுவனத்தில் லைசென்ஸ் பெற்று 40 பெட்ரோல் பங்க்குகள் இயங்குகின்றன. தினமும் பல லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல் விற்கிறத...
தமிழகம்
வெ.மேடு தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
கரூர்: இனாம் கரூர் நகராட்சி பகுதியை சேர்ந்த தி.மு.க.,வினர், கரூர் எம்.பி., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.இனாம் கரூர் நகராட்சி, வெங்கமேடு 14, 15 மற்றும் 16ம் வார்டுகளை சேர்ந்த தி.மு.க., கிளை நிர்வாகிகள் 49 பேர், கரூர் எம்.பி., தம்பிதுரை முன்னிலையில் அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ...
தமிழகம்
சிறப்பு பொருளாதார மண்டலம் ஆலோசனை கூட்டம்
காரைக்குடி: சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட் டம் காரைக்குடியில் நடந்தது. சுதர்சனநாச்சியப்பன் எம்.பி., தலைமை வகித் தார்.  ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரட்ரீச் நாவ்மன், டெல்லி சுபோத்குமார், சென்னை விஜயலட்சுமி பங்கேற்றனர். சிவகங்கை கிராபைட் தொழில், உப பொருட்கள் தயாரித்தல், சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவ...
தமிழகம்
சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சமாளிக்க செஞ்சி போலீஸ் கோட்டத்தை பிரிக்க கோரிக்கை
செஞ்சி : செஞ்சி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சீரமைத்து,போக்கு வரத்து நெரிசலை சமாளிக்க போலீஸ் கோட் டத்தை இரண்டாக பிரித்து கூடுதலாக ஸ்டேஷன்களை உருவாக்க எஸ்.பி.,பகலவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள 7 போலீஸ் துணை கோட்டங்களில் அதிக போலீஸ் ஸ்டேஷன்கள் செஞ்சி துணை கோட்டத்தில் உள்ளது. செஞ்சி டி...
தமிழகம்
கருத்தரங்கு
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார் பில் ஊராட்சி தலைவர் களுக்கான கருத்தரங்கு நடந்தது.சங்கராபுரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராதாபாய் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., கலைச்செல்வி , பேரூராட்சி தலைவர் முனு சாமி முன்னிலை வகித் தனர். எம்.எல்.ஏ., அங்கை யற்கண்ணி கலந்து கொண்டு...
தமிழகம்
வடபாலப்பட்டு பள்ளியில் சீருடை வழங்கும் விழா
சங்கராபுரம் : சங்கராபுரம் வட்ட நகை அடகு பிடிப்போர் சங்கத்தின் சார்பில் வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.சங்க தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம், கிராம கல்வி குழு தலைவர் ராஜேந்திரன் முன் னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்...
தமிழகம்
எஸ்.புதூருக்கு காவிரி குடிநீர் ஒன்றிய கூட்டத்தில் தகவல்
எஸ்.புதூர்: எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சின்னப்பன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் இந்திராகாந்தி, கவுன்சிலர்கள் ரமணி, மாதவன், ராமன், ரேவதி, ராபியாத்பீவி பங்÷ற்றனர். குடிநீர் வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், "" புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி குடிநீர் திட்டம் ...
தமிழகம்
ஐவதுகுடி கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து துவக்கம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையிலிருந்து ஐவதுகுடி கிராமத் திற்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் டவுன் பஸ் துவக்க விழா நடந்தது.உளுந்தூர்பேட்டையில் இருந்து ஐவதுகுடி கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் போக்குவரத்து துவக்க விழா நடந்தது. எம்.எல்.ஏ., திருநாவுக்கரசு பஸ்சை துவக்கி வைத்தார். போக்குவரத்து கழக கிளை மேலா ளர் நாகராஜ...
தமிழகம்
செம்மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே செம் மண் கடத்திய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார். சங்கராபுரம் தாசில்தார் ஜெயக்குமார் எஸ்.வி. பாளையம் கிராமத்தில் மணல் கடத்தல் தடுப்பு சோதனை மேற்கொண் டார். அப்போது எஸ்.வி. பாளையம் ஏரியிலிருந்து செம்மண் கடத்தி வந்த பெரியசாமி என்பவரின் டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்து விசார ணை செ...
தமிழகம்
மக்கள் தொகை ஆய்வு விடுபட்டவர் கவனத்திற்கு
திருப்புத்தூர்: மக்கள் தொகை கணக் கெடுப்பில் விடுபட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில்,  ஆறு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டிருந்தார். கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைப்பது குறித்து மேற்பார்வையாளர்களுக்கு திருப்புத்தூரில் பயிற்சியளிக்கப்பட் டது. மாநில...
தமிழகம்
நகராட்சி கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு
வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சி ஒன்பதாவது கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேதாரண்யம் மூன்றாம் நிலை நகராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக (அ.தி.மு.க) இருந்த வெற்றிசெல்வி இரண்டு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து நடக்க உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க.,வைச் சேர்ந்த வள்ளி என்பவர் போட்டியிட்டார். ...
தமிழகம்
அரசு பணியாளர் பேரியக்க மாவட்ட பொதுக் குழு
விழுப்புரம் : தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பேரியக்க மாவட்ட பொதுக் குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் சிவநேசன் தலைமை தாங்கினார். தணிக்கையாளர்கள் செல்வராஜ், தனபால் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் அறவாழி, மாநில செயலாளர் தென்னரசு, மாநில ஆலோசகர் ராஜமாணிக் கம், துரை, கடலூர் மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ் சிறப்ப...
தமிழகம்
கூட்டுறவு ஊழியர் சங்க கூட்டம்
காளையார்கோவில்: காளையார்கோவிலில் ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர் நல சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலை மை வகித்தார். செயலாளர் பாண்டியன் வரவேற்றார். துணை தலைவர்கள் கோதண்டராமன், ராமநாதன் பங்கேற்றனர். ஓய்வூதியமாக 4 ஆயிரம் ரூபாய் வஙழ்கவேண்டும்; இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும்27 ல் சென்னையில் நடக்கும் ஊர்வல...
தமிழகம்
திருக்கோஷ்டியூர் பெருமாளுக்கு தைலக்காப்பு உத்ஸவம்
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாளுக்கு  தைலம் சார்த்தும் நிகழ்ச்சி நடந்தது.இங்கு, கடந்த 1999ல் தைலக்காப்பு உத்ஸவம் நடந்தது. அதன் பின் 12 ஆண்டுகள் கழித்து, இந்த  உத்ஸவம் நடக்கிறது. கடந்த 11ம் தேதியன்று ஆச்சார்யர் அழைப்பு, பூர்ணாகுதியுடன் யாகசாலை பூஜை துவங்கின. நான்கு நாட்களாக யாகசாலை பூஜை நடந்தது. ...
தமிழகம்
வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை கிராம சமுதாய கூடத்தில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.ஒலக்கூர் சேர்மன் சீத்தாபதி சொக்கலிங்கம் முகாமை துவக்கி வைத்து பேசினார். டாக்டர்கள் சாந்தி, கிரிதரன்,தினேஷ் குமார், ராஜசேகர், பால முருகன், தமயந்தி சிகிச்சையளித்தனர்.நிகழ்ச்சியில் ஒலக்கூர் பி.டி.ஓ.,க்கள் ராம...
தமிழகம்
கிராம சுகாதார நலக் குழு கூட்டம்
திருக்கோவிலூர் : இந்திய கிராமிய மக்களமைப்பு தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஜி.அரியூரில் கிராம சுகாதார நலக்குழு கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஆனந்தாயி தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுப்ரமணி கிராம சுகாதாரக் குழுவின் பெயர் பலகையை திறந்து வைத்தார். மாவட்ட கருத்துவள அலுவலர் குமார் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி....
தமிழகம்
காலபைரவருக்கு சிறப்பு பூஜை
வேதாரண்யம்: வேதாரண்யம் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மணிக்கர்ணிகை தீர்த்தம் அருகே உள்ள ஸ்ரீகாலபைரவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து.அஷ்டமி திதியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை ராஜேந்திரன் குடும்பத்தினர் செய்...
தமிழகம்
ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வட்ட அரசு ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க கட்டடத்தில் நடந்தது. சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மநாபன் வரவேற்றார். ஓய்வூதியர்களின் கமிட்டேஷன் தொகை 15 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் சிலருக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. இதனை நிறுத்தி, பிடித்தம் செய்யப்பட்ட தொகைய...
தமிழகம்
மருத்துவ முகாம்
இளையான்குடி: இளையான்குடியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் சர்க் கரை நோய், ரத்த கொதிப்பு, பெண்கள் சார்ந்த நோய்களுக்கு டாக்டர் தயாளன் சிகிச்சை அளித்தார். தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர் தலைவர் பஷீர் அகம்மது, செயலாளர் சைபுல்லா, மாவட்ட பொருளாளர் உமர் பங் கேற்றனர்.
தமிழகம்
தமிழ் கல்லூரியில் ரத்ததான முகாம்
மயிலம் : மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.கல்லூரி செயலாளர் குமாரசிவ ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் லட்சாராமன் வரவேற்றார். மயிலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிவராஜ், டாக்டர் தமயந்தி, வட்டார கல்வியாளர் மனோகரன், ம...
தமிழகம்
கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் மாணவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு, ஆக.,1ம் தேதி நடக்கிறது.  சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட இணைப்பு கல்லூரிகளில் நடந்த செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள், உடனடியாக பட்டம் பெறவும், உயர் கல்வியை தொடரவும் அவர்களுக்கு  வாய்ப்பு வழங்கும் நோக்கில், இத...
தமிழகம்
பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டு விழா வெண்கல சிலை அமைக்க கோரிக்கை
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த வாய்மேடு சமுதாயக்கூடத்தில் பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டு குறித்த ஆலோசனைக்கூட்டம் கந்தசாமி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் ராமசாமி வரவேற்றார். பஞ்சாயத்து தலைவர்கள் வாய்மேடு பழனியப்பன், தகட்டூர் அமிர்கடேஸ்வரன், யூனியன் கவுன்சிலர் பசுபதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் இலக்குவ...
தமிழகம்
விதை நெல் இருப்பு உள்ளதாக அறிவிப்பு
திண்டிவனம் : விதை நெல்,தீவனப்புல் தேவைப்படும் விவசாயிகள் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளரை அணுகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் டாக்டர் சாத்தையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல் ரகம் ஏ.டி.டி 45 (உண்மை நிலை) இருப்பில் உ...
தமிழகம்
பாரதீய கிசான் சங்க மாவட்ட கூட்டம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் பாரதீய கிசான் சங்க மாவட்ட கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கோட்ட பொறுப்பாளர் முத்துக்குமரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ராமகிருஷ் ணன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ மாணிக்கம், ஜெயராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் கல்யாணகுமார் வரவேற்றார். மாநில அமைப்பாளர் கோபி சிறப்...
தமிழகம்
ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர் சங்க மண்டல கூட்டம்
விழுப்புரம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர் சங்கம் விழுப்புரம் மண்டல கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வெங்கடசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தலைவர் சரவணன் வரவேற்றார். பொருளாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தமிழ்வாணன், பொரு ளாளர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினர்.ஊரக வளர்ச்ச...
தமிழகம்
மானாமதுரையில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைதுரூ.2.75 லட்சம் நகை மீட்பு
மானாமதுரை: வழிப்பறியில் முதல் முதலாக ஈடுபட்ட பட்டதாரிகள் உட்பட ஆறு பேரை கைது செய்த மானாமதுரை போலீசார், அவர்களிடமிருந்து 18 பவுன் நகை, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மானாமதுரை போலீஸ் ஏட்டு செழியன் மனைவி, ஜூன் 23ல் ஆனந்தவல்லியம்மன் கோயில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த மர்ம நபர்கள் 3 பவுன் செயின் வழிப்பறி செய்...
தமிழகம்
செயற்குழு கூட்டம்
செஞ்சி : செஞ்சி திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டம் நடந்தது.டாக்டர் அண்ணாமலை தலைமை தாங்கினார். ஆசிரியர் வேலு முன்னிலை வகித்தார். செயலாளர் தமிழரசன், பொருளாளர் கண்ணன் பேசினர்.செயற் குழு உறுப்பினர் கள் சேட்டு, அண்ணாதுரை, சேகர், கார்த்திகேயன், மோகன், கனிமொழி, துராப் அலி, முருகவேல், பழனி கலந்து கொண்டனர். டாக் டர் ரமேஷ் பாபு...
தமிழகம்
பருவதராஜகுல மீனவர் சங்க ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் : தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம் நிர்வாகக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.சங்க தலைவர் அப்பாராஜ் தலைமை தாங்கினார். சுந்தரம் வரவேற் றார். பொருளாளர் கண்ணன், பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.இலங்கை ராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ள மீனவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும். பருவதராஜகுல உள்நா...
தமிழகம்
ரங்க பூபதி கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
செஞ்சி : ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளி, பி.எட்., எம்.எட்., வகுப்புகள் துவக்க விழா நடந்தது. ஸ்ரீரங்க பூபதி பி.எட்., கல்லூரி முதல்வர் அடைக்கல மரியநாதன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். சேர்மன் வக்கீல் பூபதி மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம், சீருடைகள் வழங்கினார்.ஆச...
தமிழகம்
டூ வீலர் திருடியவர் கைது
மானாமதுரை: மானாமதுரை சுந்தரபுரம் குறுக்கு தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் தங்கச்சாமி(35). நகைக்கடையில் வேலைபார்க்கிறார். கடந்த 16ம் தேதி டூவீலரில் (ஹீரோ ஹோண்டா) மாலை 5 மணிக்கு வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த வண்டியை மானாமதுரை  அக்ரஹாரத்தை சேர்ந்த சிங்கத்த...
தமிழகம்
தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கிளை கூட்டம்
விழுப்புரம் : தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கிளை கூட்டம் விழுப் புரம் ரயில் நிலையத்தில் நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் ஜெயசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித் தார். பொருளாளர் இந்திர குமார், உதவி தலைவர் கள் ராஜேந்திரன், மோகன், உறுப்பினர்கள் தங்கவேல், பாஸ்கரன், பலராமன், மூம்மூர்த்தி உட்பட பலர் கலந...
தமிழகம்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த மேலூர், எடுத்தவாய்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த தாவடிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் ரா...
தமிழகம்
ஊர்க்காவல் படைக்கு 100 பேர் தேர்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு நேற்று நடந்த இன்டர்வியூவில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த நூறு பணியிடத்திற்கான இன்டர்வியூ பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்று...
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் வட்டார வளமையத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான விழிப் புணர்வு முகாம் நடந்தது.காவல்துறை தனிப்பிரிவு ஏட்டு பத்மனாபன் தலைமை தாங்கினார். அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) டெய்சிராணி முன்னிலை வகித் தார். ஆசிரியர் கோவிந் தன் வரவேற்றார்.ஆசிரியர் பயிற்றுனர் கள் பராங்குசம், ஷேக்முகமது த...
தமிழகம்
உதவி வேளாண் அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்
பெரம்பலூர்: தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்க பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சுப்ரமணியன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தணிக்கையாளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இசக்க...
தமிழகம்
ஆரம்ப பள்ளி கூட்டணியினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
செஞ்சி : வல்லம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வட்ட செயலாளர் ரகுபதி வரவேற்றார். துணை தலைவர் அருள்மொழி, நிர்வாகிகள் கருணாநிதி, அசோகன், ராமதாஸ், லியாகத் அலி முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுந்தரம் சிறப்புரையாற்றின...
தமிழகம்
வினாயகா கல்லூரி வகுப்புகள் துவக்கம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் சிவராமன் வரவேற்றார். வினாயகா கல்வியியல் கல்லூரி முதல்வர் தங்கதுரை வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி தலைவர் நமச்சிவாயம், செயலாளர் கணே...
தமிழகம்
காமராஜர் பிறந்த நாள்
விழுப்புரம் : முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட் டது.பள்ளி தலைமை ஆசிரியை மெகராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். அரசு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவ...
தமிழகம்
தனலட்சுமி சீனிவாசன் இன்ஜி., கல்லூரி இயந்திரவியல் துறை கூட்டமைப்பு துவக்கம்
பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆ...
தமிழகம்
உடல் உழைப்பு தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்டம்
உளுந்தூர்பேட்டை : கடலூர், விழுப்புரம் மாவட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு பேரவை ஆலோ சனை கூட்டம் உளுந்தூர் பேட்டையில் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் கோவலன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வெங் கடேசன், துணை செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் பலராமன், பொருளாளர் சோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அமைப்பாள...
தமிழகம்
பெரம்பலூரில் போலீஸ் கள்ளக்காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கள்ளக்காதலை தட்டிக்கேட்டவரை தாக்கிய, போலீஸ் கள்ளக்காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (33). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸாக பணியாற்றுகிறார். தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் தனியாக வசித்து வந...
தமிழகம்
லட்சுமி கணபதி விளக்கு பூஜை
விழுப்புரம் : விழுப்புரம் கோட்டை விநாயகர் கோவிலில் லட்சுமி கணபதி விளக்கு பூஜை நடந்தது.விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவிலுள்ள கோட்டை விநாயகர் கோவில் 101வது ஆண்டு பூர்த்தி விழா, 108 சங்காபிஷேகம் மற்றும் லட்சுமி கணபதி விளக்கு பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு 108 சங்கு பூஜை, கலச பூஜை, மகா அபிஷேகம், மகா பூர்ணாஹீதி, தீபாராதனை ...
தமிழகம்
வாலிபரை கத்தியால் குத்தி இருசக்கர வாகனம் பறிப்பு
கம்பம்:  கம்பம் அருகேயுள்ள அண்ணாபுரத்தைச் சேந்தவர் செந்தில்குமார் (37). எலெக்ட்ரிசியன் வேலை பார்க்கும் இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வழியாக அண் ணாபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள் ளார்.   புது பஸ் ஸ்டாண்டிற்கு பின்பக்கம் உள்ள ரோட் டின் வழியாக சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த இருவர்...
தமிழகம்
பெரம்பலூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
பெரம்பலூர்: பெரம்பலூர் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே உள்ள முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி (35). இவரது மனைவி விஜயகுமாரி (30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. திருமணத்துக்குப் பின் இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். பாலுசாமிக்கு மனைவி விஜயகுமாரியின் நடத்தை...
தமிழகம்
மேலூரில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி : மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முப்பெரும் விழா நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வக்கீல் வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் கீதா, பி.டி.ஓ., ஞானசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார...
தமிழகம்
பயிற்சி முகாம்
திண்டிவனம் : திண்டிவனத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.மக்கள் தொகை கணக் கெடுப்பு படிவங்களை கணக்கெடுப்பாளர்களிடம் இருந்து படிவங் களை பெறுவது குறித்து மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம் திண்டிவனத்தில் நடந்தது.மக்கள் தொகை கணக் கெடுப்பு அலுவலக இயக் குனர் சின்னதுரை விளக்கமளித்தார். தாசில்தார் வேலாயுத...