category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | வெடிமருந்து குடோனில் வெடி விபத்து: குழந்தை உட்பட 3 பேர் பரிதாப பலி | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில், வாண வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உடல் கருகி இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் கணேசன் மனைவி அஞ்சலை(52) என்பவருக்கு சொந்தமான வெடி மருந்து குடோன், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வடக்கா... |
தமிழகம் | வட்டம் முதல் மாவட்டம் வரை களமிறங்கிய வார்டு இடைத் தேர்தல் | விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் ஏராளமான நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு கவுன்சிலருக்கான இடைத் தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதில் தி.மு.க., வேட் பாளர் அருணாசலம், சுயேச்சை வேட்பாளர் சதீஷ்பாபு இடையே நேரடி போட்டி உள்ளது. இதில் தி.மு.க., ... |
தமிழகம் | குறைகேட்புக் கூட்டம் தாமதம் பொதுமக்கள் கடும் அவதி | விழுப்புரம் : குறைகேட்புக் கூட்டம் தாமதமாக துவங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் தலைமையில் நேற்று நடந்தது. திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, ஊனமுற்றோர் உதவித் தொகை, வங்கி கடனுதவி, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் ... |
தமிழகம் | லாரி டிரைவரிடம் பணம் பறித்த கும்பலில் இருவர் கைது | சங்ககிரி: தர்மபுரி மாவட்டம் கானாபட்டியைச் சேர்ந்த சண்முகம் (30), லாரி டிரைவர். அவர் கடந்த 2ம் தேதி இரவு கர்நாடகா மாநிலம் கே.பி.,கிரஸிலிருந்து மண்லோடு ஏற்றி, குசிலிபாறை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது சங்ககிரி அருகே திருவாண்டிபட்டி பிரிவில் பெண் வேடம் அணிந்து, லாரியை நிறுத்தி டிரைவர் சண்முகத்திடம் 5,000 ரூ... |
தமிழகம் | உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் | செஞ்சி : செஞ்சி ஒன்றியம் அணையேரி கிராமத்தில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பரசி தலைமை தாங்கினார். அனந்தபுரம் டாக்டர் சதீஷ்குமார், ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பிரச்னைகள் ... |
இந்தியா | ஹாக்கி: இந்தியாவிடம் வீழ்ந்தது பிரான்ஸ் | புதுடில்லி: பிரான்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஹாக்கி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்துள்ள ஆண்கள் இந்திய ஹாக்கி அணி, பிரான்ஸ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. விறுவிறுப்பா... |
தமிழகம் | சோளக்காட்டில் கண்டெடுத்த கலசம் போலீஸில் ஒப்படைப்பு | நாமக்கல்: சோளக்காட்டில் கண்டெடுக்கப்பட்ட கோபுரக்கலசம், சேந்தமங்கலம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டது.நாமக்கல் அடுத்த முத்துகாப்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவர் நேற்று தோட்டத்துக்கு சென்றபோது, சோளப்பயிருக்குள் கிடந்த சாக்குப்பையை எடுத்து பிரித்து பார்த்தார். அதில் இரண்டரை அடி உயரம் கொண்ட கோபுரக்கலசம் இருந்தது. இது குறித... |
தமிழகம் | துப்பாக்கி வேட்டை நடந்த கிராமங்களில் தொடரும் மான் வேட்டையால் அதிர்ச்சி | தமிழக எல்லை கிராமங்களில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி 20 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போதிலும், வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் மூலம் நடத்தும் மான் வேட்டை தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்ட எல்லையில் உள்ள மேட்டூர் மலையடிவாரத்தில் நீதிபுரம், லக்கம்பட்டி, சின்னதண்டா, பெரியதண்டா, காரைக்களம், கோவ... |
தமிழகம் | கல்லூரி ஊழியர் வெட்டிக்கொலை | திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி ஊழியர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.திருச்செங்கோடு அருகே வரப்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (40). தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த அவர், நேற்று இரவு 8 மணியளவில் வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருடிருந்தார்.வரப்பாளையம் அருகே வந... |
தமிழகம் | விபத்தில் ஏஜன்ட் பலி | சேலம்: சேலம் அஸ்தம்பட்டியில் மொபட்டில் சென்றவர் மீது எதிரே வந்த மொபட் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.சேலம் பெரியபுதுரை சேர்ந்தவர் பெருமாள்(55). மரவனேரியில் உள்ள ஆவின் நிலையத்தில் ஏஜன்டாக உள்ள அவர், நேற்று மாலை டிபன் வாங்கிக் கொண்டு மொபட்டில் வீட்டுக்கு சென்றார்.அப்போது எதிரே வந்த மற்றொரு மொபட் அவர் மீது மோதியது. அதில்... |
தமிழகம் | சாலைப்பணி கிடப்பில் உள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே தார்சாலை அமைக்கும் பணி முடிவடையாததால் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர்.உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குலாம்தக்கா, வன்னகபாடி, புதுவன்னகபாடி, பழைய வன்னகபாடி, அரும்பலவாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு செல் லும் சாலை பழுதடைந்தது. 6 கி.மீ., தூரம... |
தமிழகம் | கலால் துறை அதிரடி அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது | ப.வேலூர்: அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இருவரை, ப.வேலூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.ப.வேலூர் பை- பாஸ் சாலை அபிராமி தியேட்டர் எதிரே அரசுக்கு சொந்தமான "டாஸ்மாக்' மதுபானக்கடை உள்ளது. அதனருகே அனுமதியின்றி மதுபானம் விற்பதாக நாமக்கல் கலெக்டர... |
தமிழகம் | செஞ்சி அருகே வயிற்று போக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி | செஞ்சி : செஞ்சி அருகே வயிற்று போக்கினால் ஒருவர் இறந்தார்.செஞ்சி தாலுகா மாவட் டம் பாடியில் கடந்த சில தினங்களாக 15க்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட் டது. இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றனர். நேற்று காலை ராஜ் குமார் (21), அன்புராஜ் (15), நெடியான் (37), ஜெய பால் (... |
தமிழகம் | மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்தவர் கைது | விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி மற்றும் குடும்பத்தினரை போலீசார் பிடித்துச் சென்றனர்.விழுப்புரம் சிலப்பதிகாரத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பார்வதி(70). இவர் தனது மருமகள் காந்திமதி(25) மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக நேற்று காலை கலெக... |
தமிழகம் | தொழிலாளர் பிரச்னை குறித்து விழுப்புரத்தில் பேச்சுவார்த்தை | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் பிரச்னை குறித்து விழுப்புரத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று முன்தினம் மதியம் அனைத்து கட்சி தொழிற் சங்கத்தினரும் திடீர் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து... |
தமிழகம் | பி.ஜி.பி., பி.எட்., கல்லூரியில் 4வது பட்டமளிப்பு விழா | நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பி.எட்., கல்லூரியின் 4வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவுக்கு, கல்வி நிறுவன தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் விசாலாட்சி குத்துவிளக்கேற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் முகமது செரீப் வரவேற்றார்.விழாவில், தமிழ்நாடு கல்வியியல் பல்கலை பதிவாளர் வீரமணி பேசியதாவது:தரமான கல்வியை போதிக்க... |
தமிழகம் | வாகன தணிக்கையில் ஆம்னி பஸ்களுக்கு வரி | விழுப்புரம் : வரி செலுத்தாமல் இயக்கிய 4 ஆம்னி பஸ்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப் பட்டது.விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் சாமிநாதன், ஜெய்சங்கர் மற்றும் ஊழியர்கள் விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.இதில் விக்கிரவாண்டி பகுதியில் தணிக்கை செ... |
தமிழகம் | ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட பஞ்., தலைவருக்கு வெட்டு | ப.வேலூர்: அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட பஞ்சாயத்து தலைவரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ப.வேலூர் கந்தம்பாளையம் அடுத்த திடுமல் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணி (38). திடுமல் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (57). அவர், புறம்போக்கு ந... |
தமிழகம் | தற்கொலை செய்தவர் பிணத்தை எரித்த உறவினர் 4 பேர் கைது | ப.வேலூர்: மகள் திருமணம் நின்றதால், மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர் உடலை போலீஸாருக்கு தெரியாமல் எரித்த, 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.ப.வேலூர் அடுத்த எல்லைமேடு பகுதியை சேர்ந்த பூவேந்திரன் மகள் மீனா (13). பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த இவரும், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (... |
தமிழகம் | சாலையின் குறுக்கே விழுந்த மரம் அறைகுறையாக அகற்றம் | செஞ்சி : செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த புளிய மரத்தை அரை குறையாக அகற்றி உள்ளனர். ரோட் டின் குறுக்கே இருக்கும் மரத்தினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சிக் கோட் டையை அடுத்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறிந்து விழுந்த புளிய மரத்தை தொழிலாளர... |
தமிழகம் | ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில் ஜூலை 23ல் வளைகாப்பு திருவிழா | மோகனூர்: மோகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையன்று வளைகாப்பு திருவிழா மற்றும் சண்டிஹோமம் பெருவிழா நடத்தப்படுகிறது. வரும் 22ம் தேதி காலை 6 மணிக்கு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்தும் வரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சண்டிஹோமம், 11.30 மணிக்கு அபி... |
தமிழகம் | பள்ளிகளில் கட்டிட பணிக்கு முதல்கட்ட நிதி ரூ.44 லட்சம் | நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அறை, பெண்கள் கழிப்பறை மற்றும் சாய்தளம் கட்டுவதற்கு 44.62 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.தமிகத்தில் எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஊராட்சி, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி மட்டுமின்றி பல்வேறு கட்டிடப்பணிக்கும் நிதி உ... |
தமிழகம் | விபத்தில் சிக்கி இளம்பெண் பலி | திருக்கோவிலூர் : நெல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி இளம் பெண் இறந்தார்.திருக்கோவிலூர் அடுத்த பழங்கூர் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகள் சூரியா (21). நேற்று காலை 9 மணிக்கு நெல் அரைக்க அருகில் உள்ள வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான ரைஸ்மில்லுக்கு சென்றார். டிரைவர் கந்தசாமி (61) மிஷினை இயக்கிக் கொண்டிருந்தார்.நெல்லை அரைத்துவி... |
தமிழகம் | எஸ்.பி.ஐ., சேவை மையம் துவக்கம் | விழுப்புரம் : விழுப்புரத்தில் எஸ்.பி. ஐ.,லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளை துவக்க விழா நடந்தது.விழுப்புரம் - திருச்சி சாலையில் ஏ.கே.ஆர்., டவர் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிளை வளர்ச்சி அதிகாரி பிராங்கிளின் வரவேற்றார். ஆலோசகர்கள் தயானந்தன், கற்பகவள்ளி, அசரத் அலி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தவுலத் கான், மகபூப் பாஷா ... |
தமிழகம் | அ.தி.மு.க.,பொதுக் கூட்டம் | திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஆத்திப்பாக்கம் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஜெ., பேரவை கிளை செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் சங்கர், முன்னாள் ஒலக்கூர் சேர் மன் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் சுப்பிர மணியன்,கிளை செயலாளர் பன்னீர், மூர்த்தி உட்பட பலர்... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் சேர்க்கை, நீக்கம் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., ஆய்வு | சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம் பணியை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்ட சபை தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கல் சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்களை ஆர்.டி.ஓ., நாகபூஷனராஜூ ஆய்வு செய்தார். தாசில்தார் ஜெயகுமார், தேர்தல் துணை தாசில் தார் ராஜேந்திரன், மண்டல... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சமூக சேவை நலச்சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.விழாவிற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுதா, ஜீவா, வீரா முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சக்திவேல் வரவேற்றார். இதில் பள்ளி மாணவர் களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்... |
தமிழகம் | சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம் | வெள்ளகோவில்: நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்கள் நேற்று மாலை வெள்ளகோவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். வேலை நிதியில் ஊதியம் பெறும் நிலையை மாற்ற வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியான சாலைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங... |
தமிழகம் | சமத்தகுப்பம் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் | செஞ்சி : விலைவாசி உயர்வை கண்டித்து மேல்மலையனூர் ஒன்றியம் சமத்தகுப்பத்தில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் வேலு, ராமச் சந்திரன், சுப்பன், ஆறுமுகம், கருணாகரன், விஜயா, குமாரசாமி முன்னிலை வகித்தனர். தலைமை கழக ப... |
தமிழகம் | ரேஷன் அரிசி பறிமுதல் | கோபிசெட்டிபாளையம்: நம்பியூர் போலீஸ் எஸ்.ஐ., கந்தசாமி உள்பட போலீஸார் அலிங்கியம் பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக, குருமந்தூர் மேடு பகுதியை சேர்ந்த ரங்கன் என்பவரது மகன் மகாளி (45) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.நம்பியூர் போலீஸார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | சக்கரத்தில் சேலை சிக்கி மூதாட்டி பலி | வெள்ளகோவில்: மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி மூதாட்டி பலியானார்.வெள்ளகோவில் செல்வகுமார கவுண்டன்வலசை சேர்ந்தவர் வீரன் (36). இவரது மகள் கலையரசியும், தாய் முத்தாளும் (60) டி.வி.எஸ்., மொபெட்டில் சென்றனர். அய்யம்பாளையம் நால்ரோடு மங்கலப்பட்டி அருகே செல்லும் போது, முத்தாளின் சேலை வண்டியின் பின் சக்கரத்தில் சிக்கியது.ரோட்டில் வி... |
தமிழகம் | விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வகுப்புகள் துவக்கம் | விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த ஒரத்தூர் சுவாமி விவேகானந்தா கலைக் கல்லூரியில் இளங்கலை வகுப்புகள் துவக்க விழா நடந்தது.ஒரத்தூர் சுவாமி விவேகானந்தா கலைக் கல்லூரியில் 2010 -2011 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளங்கலை வகுப்புகள் துவக்க விழா நடந்தது. ஜெயம் அறக் கட்டளை தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பரந்தாமன் வரவேற்ற... |
தமிழகம் | குருகுலம் பள்ளியில் மரம் நடும் திட்டம் | கோபிசெட்டிபாளையம்: கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளியில் பசுமைப்படை மூலம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.ஈஷா யோகா மையம் மூலம் 1,500 மரக்கன்றுகள் ங்கள் பெறப்பட்டு, 300க்கும் மேற்பட்டவை பள்ளி வளாகம் மற்றும் நெடுஞ்சாலைகளில் நடப்பட்டன. மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவர்களது வீட... |
தமிழகம் | உலக நலனுக்காக சுதர்சன யாகம் | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி புண் டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில் உலக நலனுக்காக சிறப்பு வழிபாடு நடந்தது.காலையில் பெருமாள், தாயார், உபயநாச்சியார் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பின்னர் விஸ்வக் சேனர் வழிபாடு நடந்தது. கலச ஆவாகனம் செய்து, சுதர்சனருக்கு உரிய மந்தி ரங்களை வாச... |
தமிழகம் | தே.மு.தி.க., கூட்டம் | தாராபுரம்: தாராபுரத்தில் ஒன்றிய தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.அவைத்தலைவர் வெங்கட்ராம ராஜதுரை வரவேற்றார். மாநில தலைமை நிலையச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் கீர்த்திசுப்பிரமணியன் ஆகியோர் பேச... |
தமிழகம் | உடல் உழைப்பு தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்டம் | உளுந்தூர்பேட்டை : கடலூர், விழுப்புரம் மாவட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு பேரவை ஆலோசனை கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கோவலன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வெங்கடேசன், துணை செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் பலராமன், பொருளாளர் சோழன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். ஒன்றிய அமைப்... |
தமிழகம் | நவாப் குளத்திற்கு மழை நீரை கொண்டு வர நடவடிக்கை தேவை | செஞ்சி : செஞ்சி மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள நவாப் குளத் திற்கு மழை நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.செஞ்சி பேரூராட்சி அலுவல கம் எதிரில் பழமையான நவாப் குளம் உள்ளது. கிருஷ் ணகிரி கோட்டையின் அடிவாரத் தில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு பழங்காலத்தில் வாய்க்கால் அமைத்திருந்தனர். இதன் வழியாக மழை நீர் குளத் ... |
தமிழகம் | விஷ ஊசி போட்டு நர்ஸ் தற்கொலை | கோபிசெட்டிபாளையம்: காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், மனம் உடைந்த நர்ஸ் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் திருமலை நகர் 12வது வீதியை சேர்ந்த நடராஜன் மகள் ஷீலா (24); 15-வேலம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக வேலை செய்து வந்தார். திருப்பூரை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபரை கடந்த எட்டு ஆண்டுகளா... |
தமிழகம் | முதியோர் உதவித்தொகை கோரி உண்ணாவிரத போராட்டம் | செஞ்சி : அனந்தபுரத்தில் முதியோர் உதவித்தொகை கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.செஞ்சி தாலுகா அனந்தபுரம், சிற்றரசூர், புலிவந்தி, சிறுவள்ளிகுப்பம், மேல்அருங்குணம், நெல் லிமலை, வரிக்கல் உள் ளிட்ட கிராமங்கள் அடங் கியுள்ளது. இப்பகுதியில் உள்ள விதவைகள், முதியோர் என 421 பேர் அரசு உதவித்தொகை கேட்டு எட்டு மாதங்களுக்கு முன்பு... |
தமிழகம் | தாளவாடியில் ஆயிரம் ஏக்கரில் மல்பெரி சாகுபடி | ஈரோடு: பட்டு உற்பத்தி மூலம் மாதம் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைப்பதால், தாளவாடி பகுதியில் ஆயிரம் ஏக்கர் வரை மல்பரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில், பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், திண்டலில் பட்டு முட்டை வித்தகம், தாளவாடியில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம், பட்டுக்கூடு அங்காடி... |
தமிழகம் | சித்தா, ஆயுர்வேத துறையில் 10 பேருக்கு எஸ்.கே.எம்., விருது | ஈரோடு: சித்தா, ஆயுர்வேத மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்த பத்து பேருக்கு எஸ்.கே.எம்., விருது வழங்கப்பட்டது.ஈரோடு அருகே சாமிநாதபுரம் எஸ்.கே.எம்., சித்தா, ஆயுர்வேதா மருந்து கம்பெனி வளாகத்தில், "எஸ்.கே.எம்., வைத்திய அமிர்தம் 2010' கருத்தரங்கு நடந்தது.கன்னியாகுமரி டாக்டர் மகாதேவனுக்கு, "எஸ்.கே.எம்., ஆச்சார்யா-2... |
தமிழகம் | சாரதா ஆசிரமத்தில் படைப்பாற்றல் பயிற்சி | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் துவக்கியது.உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு செயல்வழிக்கற்றல் மற்றும் படைப் பாற்றல் பயிற்சி முகாம் துவக்க... |
தமிழகம் | லாரிகள் பறிமுதல் | ஈரோடு: மொடக்குறிச்சி அருகே கிளாம்பாடியில் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக ஈரோடு தாசில்தார் பன்னீர்செல்வத்துக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அனுமதியின்றி மண் கடத்தி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.ஏற்கனவே, ஈரோடு பகுதியில் மண் கடத்திய ஆறு லாரிகள் பறிமுதல் ... |
தமிழகம் | துவக்க விழா | கொடுமுடி: கொடுமுடி அருகே தாமரைப்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி துவக்க விழா நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, கொடுமுடி யூனியன் சேர்மன் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கனகாச்சலம் வரவேற்றார். 12 குழந்தைகளுக்கு காதொலி கருவிகளை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ர... |
தமிழகம் | தேர்வில் ஆள் மாறாட்டம்: 6 பேர் கைது | கள்ளக்குறிச்சி : பத்தாம் வகுப்பு மறு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக் கான மறு தேர்வு கடந்த 1ம் தேதி நடந்தது. தமிழ் முதல் தாள் தேர்வு எழுதிய மாணவர்களை, தலைமை ஆசிரியர் பழனி... |
தமிழகம் | முதியோர் உதவித்தொகை மனு நிராகரிப்பதாக புகார் | ஈரோடு: முதியோர் உதவித்தொகை கேட்டு, ஈரோடு கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.காசிபாளையம் நகராட்சி ஏழாவது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் புவனேஸ்வரி கூறியதாவது:காசிபாளையம் நகராட்சி நாடார்மேடு ஏழாவது வார்டை சேர்ந்த சிலருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. பல முறை இதற்கான விண்ணப்பம் வழங்கியும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ப... |
தமிழகம் | சங்கராபுரத்தில் ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி குறித்த பயிற்சி | சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி சம்மந்தமான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சங்கராபுரம் வட்டார வள மையத்தில் சங்கராபுரம் ஒன்றியத்தில் பணியாற்றும் உயர்துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வி சம்பந்தமான பயிற்சி வகுப்பு நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வைய... |
தமிழகம் | ஒழுங்கு முறை விற்பனை கூடம் ஆக., 1ல் இடமாற்றம் | ஈரோடு: ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் ஆகஸ்ட் 1 தேதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.ரோடு ராஜாஜிபுரத்தில் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் பரப்பளவில் சிறியது.மஞ்சள் இருப்பு வைக்க போதிய இடவசதி இல்லாததால், கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்ஈரோடு - பவானி ரோட்டில் சுண்ணாம்பு ஓடை அருகே, "ஆஸ்பெடாஸ... |
தமிழகம் | இரு ஜோடி கண்கள் அரிமாவிற்கு தானம் | கள்ளக்குறிச்சி : இறந்த இருவரின் இரு ஜோடி கண்களை கள்ளக்குறிச்சி அரிமா சங்கத்தினர் தானமாக பெற்றனர்.கள்ளக்குறிச்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் தங்கபாண்டியனின் தாய் ராமாயி(75) நேற்று முன்தினம் இயற்கையாக இறந்தார். அதே போல் கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பெரியசாமி தாய் பொன்னம்மாள்(84) இயற்கையாக இறந்தார். இருவரது குடும்பத்தினர் சம... |
தமிழகம் | 80 அடி அகல ரோடு திட்டம் ரத்து செய்ய கலெக்டரிடம் மனு | ஈரோடு: ஈரோட்டில் 80 அடி அகல ரோடு திட்டத்தை ரத்து செய்யக்கோரி, கிறிஸ்தவ திருச்சபையினர், ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஏற்கனவே உள்ளூர் வளர்ச்சி குழுமத்தால் திட்டமிடப்பட்ட 80 அடி அகல ரோடு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, ஈரோட்டில் பந்த், தொடர் உண்ணாவிரதம் உள்ள... |
தமிழகம் | வீட்டுமனை கேட்டு சுள்ளிமேடு மக்கள் மனு | ஈரோடு: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நேற்று மாவட்ட கலெக்டரிடம் ஈரோடு அருகே சுள்ளிமேடு மக்கள் மனு கொடுத்தனர்.அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில் 50 வீடுகள் உள்ளன. 14 வீடுகள் நெடுஞ்சாலை புறம்போக்கு இடத்திலும், 36 பேர் பஞ்சாயத்து புறம்போக்கு இடத்திலும் குடியிருக்கின்றனர். அனைவரும் விவசாய கூலித் தொழிலாளர்களாக உள்ளோம். லக்காபுரம... |
தமிழகம் | பதில் தெரியாத ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர் அதிர்ச்சி | ஈரோடு: செயல்வழி மற்றும் படைப்பாற்றல் பயிற்சியில் ஆங்கில இலக்கணத் தலைப்புகளுக்கு தமிழில் விளக்கம் கேட்டபோது, ஒரு ஆசிரியைக்கு கூட சரியான பதில் தெரியாததால் முதன்மைக் கல்வி அலுவலர் அதிர்ச்சியடைந்தார்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கே.ஜி.பி.வி., பள்ளி ஆசிரியைகளுக்கான மாநில அளவிலான செயல்வழிகற்றல் மற்றும் படைப்பாற்றல் க... |
தமிழகம் | சங்கராபுரத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி | சங்கராபுரம் : சங்கராபுரம் அரிமா சங்கம் சார்பில் கண் தானம், ரத்த தானம், நீரிழிவு நோய், புவி வெப்பமடைதலை தடுத்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணிக்கு அரிமா சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் கதிரவன், பொருளாளர் அஸ்மதுல்லா, என்.எஸ். எஸ்.,மாவட்ட தொடர்பு அ... |
தமிழகம் | தென்னையில் ஊடுபயிராக கடுக்காய், கோகோ சாகுபடி | ஈரோடு: தாளவாடி மலைப்பகுதிகளில் தென்னையில் ஊடுபயிராக கடுக்காய், கோகோ சாகுபடி செய்யப்படுகிறது.தாளவாடி, தலமலை, கெட்டவாடி, பைனாபுரம் பகுதியில் தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய், கடுக்காய், கோகோ பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 200 கோகோ மரக்கன்றுகளை நடவு செய்கின்றனர். மூன்று ஆண்டுகளில் செடிகள் காய்கிறது. ஒரு செடிக்க... |
தமிழகம் | செங்குந்தர்- கலைமகள் பள்ளிகள் இடையே பாலம் | ஈரோடு: ஈரோடு பிரப் ரோட்டில் செங்குந்தர் பள்ளி - கலைமகள் பள்ளி இடையே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் இரும்பு பாலம் அமைக்க, முன்னாள் அமைச்சர் ராஜா ஆய்வு செய்தார்.ஈரோடு பிரப் ரோட்டில் செங்குந்தர் பள்ளி, கலைமகள் பள்ளி ஆகியவை எதிரெதிரே அமைந்துள்ளன. பள்ளியில் 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி நாட்களில் காலை... |
தமிழகம் | கல்விக் கட்டணம் ரூ. 5 லட்சம் வழங்கல் | ஈரோடு: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 44 மாணவ, மாணவியருக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமையில் நடந்தது. கல்விக்கடன், மின் இணைப்பு, ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கை குறித்து 409 மனுக... |
தமிழகம் | ஃபோன் மூலம் மின் மோட்டாரை இயக்கும் கருவி : பெருந்துறை இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு | பெருந்துறை:மொபைல் ஃபோன் உதவியுடன் மின் மோட்டாரை இயக்கும் கருவியை பெருந்துறைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பெருந்துறையைச் சேர்ந்த எம்.எஸ்ஸி., எலக்ட்ரானிக்ஸ் பட்டதாரி நல்லசிவம் (36), பி.இ., பட்டதாரிகள் குமார் (35), ராஜ்குமார் (30) ஆகியோர் இக்கருவியை உருவாக்கியுள்ளனர். பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில்,... |
தமிழகம் | கைத்தறி கண்காட்சி | ஈரோடு:ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை ஈரோடு மல்லிகை அரங்கில் துவங்கியது.கண்காட்சியில் 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெட்ஷீட், படுக்கை விரிப்பு, துண்டு, சால்வை, கோரா சேலை, ஜமுக்காளம், காட்டன் சேலை, வேட்டி, லுங்கி என பல்வேறு ஜவ... |
தமிழகம் | பஞ்., இடைத்தேர்தல் புறக்கணிக்க முடிவு | ஈரோடு:குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால், பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணனிடம் நேற்று, சென்னிமலை யூனியன் செலம்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீர் வேண்டி மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது:செலம்பகவுண்டன்பாளைய... |
தமிழகம் | கைத்தறிக்கு 3 ஆண்டாக தள்ளுபடி மானியம் நிறுத்தம் | சென்னிமலை:கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய, தள்ளுபடி மானிய நிலுவைத் தொகையை உரிய காலத்தில் வழங்காமல் இருப்பதால், வங்கியில் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய நிலையல் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் தள்ளாடுகின்றன.கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசிடமிருந்து வர வ... |
தமிழகம் | ரத்ததானத்தை வலியுறுத்தி தூத்துக்குடியில் பேரணி | தூத்துக்குடி : தூத்துக்குடியில் உலக நன்கொடையாளர் தினத்தை ஒட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் பிரகாஷ் துவக்கி வைத்தார். அதிக ரத்ததானம் வழங்கியவர்களுக்கு கேடயம் பரிசு வழங்கினார். பேரணியø கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்... |
தமிழகம் | காங்கேயம் நொய்யலாறு பாலம் ரூ. 2.57 கோடியில் சீரமைப்பு | ஈரோடு:ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நொய்யல் பாலம் 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு பணி நடக்கிறது.ஈரோட்டிலிருந்து அறச்சலூர் வழியாக காங்கேயம் செல்லும் மெயின்ரோட்டில், நத்தக்காடையூர் அருகே நொய்யல் பாலம் உள்ளது. மிகவும் குறுகலான இப்பாலம் 1931ல் கட்டப்பட்டது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட... |
தமிழகம் | மஞ்சள் சாகுபடி படுஜோர் | சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு பகுதியில் மஞ்சள், மக்கா சோளம் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.கல்வராயன்மலையை ஒட்டியுள்ள புதுபாலப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்தனர். இதனால் இந்த ஆண்டு கரும்பு பயிர் குறைந்து... |
தமிழகம் | அனிமேஷன் விஷ்வல் எபெக்ட்ஸ் கருத்தரங்கம் | விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., பான் ஏசியன் கலை மற் றும் அனிமேஷன் கல்லூரியில் அனிமேஷன் கருத்தரங்கம் நடந்தது.அனிமேஷன் மற்றும் விஷ்வல் எபெக்ட்ஸ் குறித்து நடந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு இ.எஸ்., பொறியியல் கல்லூரி இயக்குனர் முத்துசாமி தலைமை தாங்கினார். நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கணினி மின் பொருள் மாயா, 3 டி எக்ஸ்... |
தமிழகம் | ரயில்வே இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் | திண்டிவனம் : திண்டிவனத்தில் ரயில்வே துறை இடத் தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத் தில் பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வந்தனர். தற்போது இரண்டாவது ரயில் பாதை அமைக்கவுள்ளதால் அங்கு வசித்து வந்த 38 குடும்பத்தின... |
தமிழகம் | 6 கடைகளுக்கு நேற்று சீல் நடவடிக்கை தொடரும் என கமிஷனர் அதிரடி | தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் வாடகை செலுத்தாத மாநகராட்சி 6 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்ட து. தொடர்ந்து இந்த அதிரடி தொடரும் என்று கமிஷனர் குபேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பாக்கிகளை வசூல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவி... |
தமிழகம் | ஏரலில் மினி பஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை ரைவருக்கு போலீஸ் வலை | ஏரல் : ஏரலில் மினிபஸ் உரிமையாளர் வீட்டில் ரூ.71 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற அவரிடம் வேலை பார்த்த டிரைவரை போலீஸ் வலை வீசி தேடிவருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; நாகலாபுரம் வேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கிருஷ்ணகுமார்(31). இவர் தற்போது ஏரல் முதலியார்புரம... |
தமிழகம் | 10ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்தியவர் கைது | திண்டிவனம் : பத்தாம் வகுப்பு மட்டுமே படித் துவிட்டு, திண்டிவனம் அருகே கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப் பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுப்ரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துளசி(30). இவர் தொழுப்பேடு அடுத்த கடமலைபுத்தூர் கிராமத்தில் கிளினிக் நடத்தி வருவதாகவும், திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில... |
தமிழகம் | தமிழகத்தில் 2011ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் தென் சென்னை காங்கிரஸ் துணை தலைவர் நம்பிக்கை | சாயர்புரம் : தமிழகத்தில் வரும் 2011 காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காமராஜர் பிறந்த நாள் விழா ரத ஊர்வலம் நிறைவு விழாவில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பொன்பாண்டியன் பேசினார்.காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு சாயர்புரம் நகர காங்.,சார்பில் சுப்பிரமணியபுரம் டூ சிவத்தையாபுரம் வரை காமராஜர் நிலை தாங்கிய ரத ஊர்வல... |
தமிழகம் | தத்துவங்களுக்கு இடமளிக்கும் பண்பாட்டு கழகம் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குனர் பெருமிதம் | கழகத்தின் விருது வழங்கும் விழாவில் ஓய்வுபெற்ற தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் குமாரசுவாமி சேவைச் செம்மல்கள், எழுத்து செம் மல்களை பாராட்டி விருது வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் கபிலர் விழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை 5 மணிக்கு சென்னை காயத்ரி குழுவினரின் இன்னிசை நடந்தத... |
தமிழகம் | தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்வு : வனத்துறை அமைச்சர் தகவல் | திருச்செந்தூர். ஜூலை 20- தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை தற் பொழுது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று திருச்செந்தூரில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்தார். தமிழக வனத்துறை அø மச்சர் செல்வராஜ் திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிகளை ஆ ய்வு செய்தார். அதன்பிறகு கானம் டவுன்பஞ்க்கு உட்பட்ட சுனை தேரிப்பகுதி, பூச்சிக... |
தமிழகம் | வார்டு இடைத்தேர்தல் அமைதியாக நடக்க சுயேச்சை வேட்பாளர் கலெக்டருக்கு மனு | விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி வார்டு இடைத்தேர்தல் அமைதியாக நடத் திட நடவடிக்கை எடுக்குமாறு சுயேச்சை வேட்பாளர் சதீஷ்பாபு கலெக்டருக்கு மனு அளித்துள்ளார்.விழுப்புரம் நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் சதீஷ் பாபு, கலெக்டர் பழனிசா... |
தமிழகம் | சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை : புதிய எஸ்பி., எச்சரிக்கை | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தூத்துக்குடி மாவட்டத்தின் 22வது எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற கபில்சரத்கர் உறுதிப்பட தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த செந்தில்குமார் மாற்றப்பட்டு, புதிய எஸ்.பி.,யாக நீலகிரி மாவட்ட எஸ்.பி.,யாக ... |
தமிழகம் | வாணியர் சங்க அலுவலகம் திறப்பு விழா | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வாணியர் சங்க அலுவலக திறப்பு விழா தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹாங்காங் பிளாசா வணிக வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைவர் முருகையா தலைமை வகித்தார். கணேசன், ஆவுடையப்பன், பகவதி, சந்தனமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுடலை ஈஸ்வரன் வரவேற்றார் தென்னிந்திய வாணிய சங்க துணை தலைவர் ஆறும... |
தமிழகம் | திமுக., அரசில் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமைச்சர் பெருமிதம் | ஆத்தூர் : மீனவர்களுக்காக திமுக., அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பேசினார்.புன்னக்காயலில் மீனவ மக்களுக்கு குடியிருப்பு கட்ட நிலம் ஒதுக்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்செந்தூர் எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரெங்காலி சில... |
தமிழகம் | கோலப்போட்டி | நாசரேத் : நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு கோலப்போட்டி நடந்தது.டாக்டர் பிளஸ்சி தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். மொத்தம் 14 மாணவிகள் கோலப்போட்டியில் பங்கேற்றனர். இதில் மாணவிகள் பிந்தியா, போத்தீஸ்வரி ஆகியோர் முதல் இடத்தையும், மாணவி ஜெயா ... |
தமிழகம் | ஏரல் ஆசிரியர் இல்லத் திருமணவிழா | ஏரல் : ஏரல் ஆசிரியர் சாமுவேல்துரை இல்லத்திருமண விழா ஏரலில் நடந்தது.சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் இன்ஜினியர் செல்வின் ஜெபராஜ்-ரஞ்சிதாபாய் நிர்மலா ஆகியோரது மகள் ஷீபா ஜெசுபிரியா, சென்னை ராமாபுரம் தாமஸ்ஞானதாஸ்-பட்டுராணி ஆகியோரது மகன் டெல்சன்ஜெயக்குமார் திருமண விழா ஏரல் பரிசுத்த லூக்கா தேவாலயத்தில் நடந்தது. தொடர்ந்து மகாரா... |
தமிழகம் | சாயர்புரம் அருகே கார் கடத்தல் டிரைவரின் செல்போன், பணமும் கொள்ளை | சாயர்புரம், ஜூலை 20-சாயர்புரம் அருகே காரை கடத்தி கார்டிரைவரின் செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 3 மர்ம ஆசாமிகள் தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்டிற்கு வந்தனர். சாயர்புரம் அருகேயுள்ள சம்படி... |
தமிழகம் | கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் சாலைப்பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் | கோவில்பட்டி : கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு... |
தமிழகம் | மாநகர ஊர்காவல் படைக்கு வீரர்கள் பாளை., யில் 25ம் தேதி தேர்வு | திருநெல்வேலி:நெல்லை மாநகர ஊர்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு வரும் 25ம் தேதி பாளை., ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது.நெல்லை மாநகர ஊர்காவல் படைக்கு வரும் 25ம் தேதி காலை 7 மணிக்கு பாளை., மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 56 நபர்களும், பெண்கள் 34 நபர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர் பாளை... |
தமிழகம் | கலெக்டர் ஆபிசில் புதூர் சேர்மன் : திடீர் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு | தூத்துக்குடி : தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் திடீரென புதூர் யூனியன் சேர்மன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் புதூர் யூனியன் முத்துசாமிபுரம் டூ மணியக்காரன்பட்டியில் 33.5 லட்ச ரூபாய் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ... |
தமிழகம் | சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்குநெல்லையில் நினைவுச் சின்னம் இடம் தேர்வு | திருநெல்வேலி:சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனுக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் இடத்தை தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே நெல்லை சீமையின் நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன் வெள்ளையரை எதிர்த்து போரிட்டார்... |
தமிழகம் | ரூ.5 ஆயிரம் பணம் வாங்கியாச்சு:பாதாள சாக்கடை திட்டம் வருமா | திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி 2வது வார்டில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நிறைவேற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாநகராட்சி 2வது வார்டு ஆர்.எஸ்.நகர், சுந்தராபுரம் கீழத்தெரு, சுந்தரவிநாயகர் கோயில் தெரு பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அடிபம்பும் உடைந்துள்ளது. குட... |
தமிழகம் | தண்ணீர் லாரிகள் ஆப்சென்ட் புதியம்புத்தூர் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு | புதியம்புத்தூர் : புதியம்புத்தூரில் தண்ணீர் லாரி மறியல் போராட்டம் தண்ணீர் லாரி ஓடாததால் நடைபெறவில்லை.புதியம்புத்தூர் மலர்குளம் அருகில் தனியார் போர்வெல் அமைத்து தொழிற்சாலைகளுக்கு தினமும் 80 லாரிகளில் கடந்த 2 மாதமாக விநியோகம் செய்து வந்தனர். இதனால் அருகிலுள்ள பஞ்சாயத்திற்கு குடிநீர் சப்ளை செய்யும் போர்வெல்களில் நீர்மட்டம... |
தமிழகம் | படைப்பாற்றல் பயிற்சி | புதியம்புத்தூர் : ஓட்டப்பிடாரத்தில் சமச்சீர் கல்வி முறையில் படைப்பாற்றல் பயிற்சி நடந்தது.ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்தில் உயர்நிலை மற்றும் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு சமச்சீர் கல்வியில் திறம்பட படைப்பாற்றல் கல்வி முறையை செயல்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி நடந்தது. பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுடலைமணி துவக... |
தமிழகம் | காரையார் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு | விக்கிரமசிங்கபுரம்:காரையார் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒரே நாளில் காரையார் அணையின் நீர்மட்டம் 4அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்தது.காரையார், சேர்வலார், பாபநாசம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவளாக மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி... |
தமிழகம் | அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் | புதூர் : அரசு ஊழியர்கள் புத்துணர்வு பெற மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.பணிச்சுமை உள்ளிட்ட காரணத்தால் அரசு ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்கள் வரவாய்ப்பு உண்டு. இதைத் தவிர்த்து ஊழியர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்... |
தமிழகம் | மணமகளை மகிழ்விக்க ஊஞ்சல் விளையாட்டு : கிராமங்களில் பெற்றோர் வினோத ஏற்பாடு | நங்கவள்ளி: மணமாகி கணவர் வீட்டு சென்ற புதுப்பெண்ணை, ஆடி மாதம் தாய் வீட்டிற்கு அழைத்து வந்த பின், மனம் கலங்காமல் உற்சாகமாக இருக்க நங்கவள்ளி சுற்றுப்பகுதி கிராமங்களில் வினோதமாக ஊஞ்சல் விளையாட்டு நடத்தப்படுகிறது.திருமணம் ஆன பின் முதலில் வரும் ஆடி மாதத்தில் புதுப்பெண்ணை பெற்றோர் கணவர் வீட்டில் இருந்து தங்கள் வீட்டிற்கு அழைத... |
தமிழகம் | முன்னாள் துணைவேந்தருக்கு விடையனுப்பு விழா | சேலம்: சேலம் பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கராசுவுக்கு பல்கலை சார்பில் விடையனுப்பு விழா நடத்தப்பட்டது.சேலம் பெரியார் பல்கலையில் 2007 ஜூலை 19 முதல் துணைவேந்தராக இருந்து வந்தவர் தங்கராசு. இவரது பதவிக்காலம் ஜூலை 18 உடன் நிறைவடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் தன் பொறுப்புகளை பேராசிரியர் கிருஷ்ணகுமாரிடம் ஒப்படைத்து... |
தமிழகம் | செய்துங்கநல்லூரில் காமராஜர் பிறந்தநாள் விழா | செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூரில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் சாத்தான்குளம் எம்எல்ஏ., கலந்து கொண்டார்.செய்துங்கநல்லூரில் நகர காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர காங்., தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தெற்கு வட்டார தலைவர் அய்யாக்குட்டி முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு ந... |
தமிழகம் | விளாத்திகுளத்தில் காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா | விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் காங்., பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் காமராஜரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விளாத்திகுளம் பஸ் ஸ்டாண்ட் அருகே ராஜீவ் காந்தி சிலை முன்பு நடந்த விழாவிற்கு நகர காங்., தலைவர் மேடைச் சேர்மன், சிவாஜி மன்ற நகர தலைவர் கணேசன் மற்றும் ஞானராஜ், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.... |
தமிழகம் | முதல்வர் நிவாரண நிதி: செக் இல்லாமல் காலி கவரை வழங்க முன் வந்த அதிகாரி | சேலம்: சேலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கான வங்கி செக்கை பயனாளிக்கு வழங்காமல், காலியான கவரை மாவட்ட கலெக்டர் மூலம் கொடுக்க வந்த அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் வாரம்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட கலெக்டர் மற்றும் அத்துறை சார்ந்த உயர் அதி... |
தமிழகம் | வளர்கல்வி பணியாளர் உண்ணாவிரதம் | சேலம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வளர்கல்வி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சேலத்தில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.கற்கும் பாரதம் திட்டத்தில் வளர்கல்வி பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர் நகராட்சிகளில் பணியாற்றியவர்களை அருகில் உள்ள ஒன்றியங்களிலேயே பணி நியமனம் செ... |
தமிழகம் | மெக்கானிக்குக்கு அடி விவசாயி கைது | செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் அருகே ஒர்க்ஷாப் வைத்திருப்பவரை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : செய்துங்கநல்லூர் அருகே கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் மகன் வீரபாண்டி(28). இவர் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நான்கு சக்கரவாகன ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது வீட... |
தமிழகம் | வெளிமாநில லாட்டரி விற்பனை ஜோர் புகாருக்கு காத்திருக்கும் போலீஸ் கமிஷனர் | சேலம்: சேலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை ஜோராக நடக்கிறது. லாட்டரி விற்பனை குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் உறுதி அளித்துள்ளார்.தமிழக அரசு வெளிமாநில லாட்டரிகள் விற்பனை செய்வதை தடை விதித்துள்ளது. இருப்பினும், சில மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டர... |
தமிழகம் | சாயர்புரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா | சாயர்புரம் : சாயர்புரத்தில் காமராஜரின் 108வது பிறந்தநாள் விழா மாவட்ட காங்., சார்பில் ஞானசிகாமணி துவக்கப்பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சாயர்புரம் டவுன் பஞ்., கவுன்சிலர் நளராஜ் தலைமை வகித்தார். போதகர் மாணிக்கம் ஜெபம் செய்தார். தூத்துக்குடி வட்டார காங்., செயலாளர் நவமணி மற்றும் பூபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கு... |
தமிழகம் | விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான பள்ளத்தை சீரமைக்கவும் | தென்காசி:தென்காசியில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசியில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருவதால் ரயில்வே ரோட்டில் நேரடி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை விலக்கு வழியாக மாற்று பாதையில்... |
தமிழகம் | உடன்குடியில் காமராஜர் பிறந்தநாள் விழா | உடன்குடி: உடன்குடியில் இளைஞர் காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. உடன்குடியில் இளைஞர் காங்., சார்பில் காமராஜரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் நடந்த விழாவிற்கு திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்., பொதுச் செயலாளர் நேசபுரம் முத்துக்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட க... |
தமிழகம் | காமராஜர் பிறந்தநாள் விழா | திருநெல்வேலி:மேலப்பாளையம் ரகுமானியா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.பள்ளி நிர்வாகி அசன் அபூபக்கர் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மஜீத் வரவேற்றார். விழா முன்னிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழ... |
தமிழகம் | திருச்செந்தூர் டிஎஸ்பி.,பொறுப்பேற்பு | திருச்செந்தூரில் புதிய டிஎஸ்பி.,யாக அப்பாச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். உவரியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த அப்பாச்சாமி பதவி உயர்வு பெற்று திருச்செந்தூரில் புதிய டிஎஸ்பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலைபேய்க்குளம் : பேய்க்குளம் அருகே வயிற்றுவலியால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இதுகு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.