category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வில்லிவாக்கத்தில் வி.சி.,க்கள் கோஷ்டி மோதல் : ஒருவர் வெட்டிக்கொலை; இருவர் படுகாயம்
வில்லிவாக்கம்: வில்லிவாக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்குள் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்; இருவர் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த சகோதரர்கள் ஸ்டாலின்(29) மற்றும் ஸ்ரீதர்(26). இதே பகுதியை சேர்ந்தவர் சாம்சன். மூவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள். இதே பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம், குட்டிவளவன், மீன் சரவணன் மற்றும் சிறுத்தை சீனு. இவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள். பணம் வசூலித்தது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசில் இவர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரை ஸ்டாலின், ஸ்ரீதர் மற்றும் சாம்சன் கொடுத்திருக்கலாம் என அவர்கள் கருதினர். இதனால், அவர்கள் மீது விநாயகம் கோஷ்டியை சேர்ந்தவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், பணம் தொடர்பான பிரச்னையில் கட்டபஞ்சாயத்து செய்ய வேண்டும் எனக் கூறி விநாயகம் கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின், ஸ்ரீதர் மற்றும் சாம்சனை மொபைல் போன் மூலம் அழைத்துள்ளனர். அதை நம்பி, நேற்றிரவு அவர்கள் மூவரும் புறப்பட்டு பாடி மேம்பாலம் அருகே வந்தனர். அப்போது அவர்கள் மூவரையும் விநாயகம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் தயாராக வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதையடுத்து, விநாயகம் கோஷ்டியை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பலத்த காயம் அடைந்த ஸ்ரீதர், ஸ்டாலின் மற்றும் சாம்சன் ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் இறந்தார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், வில்லிவாக்கத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு மேலும் கோஷ்டி மோதல் வெடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. நிலைமையை சமாளிப்பதற்காக அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம்
ஜவுளிக்கடை சுவரில் ஓட்டை போட்டு ரூ.1.50 லட்சம் கொள்ளை : திருமண மண்டபத்தில் மணப்பெண் நகை அபேஸ்
சென்னை : ஜவுளிக்கடை சுவரில் ஓட்டை போட்டு மர்மக் கும்பல் துணிகர கொள்ளை நடத்தியுள்ளது. திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் 25 சவரன் நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (54). திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில், "கே பார் மென்ஸ்' என்ற ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் கடையை மூடிச் சென்று விட்டார். நள்ளிரவில் மர்ம நபர்கள், சுவரில் ஆள் நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு கடைக்குள் புகுந்தனர். கல்லாவிலிருந்த 80 ஆயிரம் ரூபாய், "டிவி', கம்ப்யூட்டர், கேமரா, துணிகளையும் கொள்ளையடித்து தப்பினர். மொத்தம் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயின. இதுகுறித்து, ஜாம்பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமண வீட்டில் கைவரிசை:மீஞ்சூரைச் சேர்ந்தவர் தயாளன்; தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் குமரேசனுக்கும், அத்திப்பட்டைச் சேர்ந்த சவுந்தரிக்கும் நேற்று முன்தினம் பெரியபாளையத்தம்மன் கோவிலில் திருமணம் முடிந்தது. பெண்ணிற்கு 25 சவரன் நகைகள் கொடுத்தனர். இரவு திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடந்தது. பியூட்டி பார்லரில் போட்ட, "கில்ட்' நகைகளை சவுந்தரி அணிந்திருந்தார். தங்க நகைகளை மணப்பெண் அறையில் வைத்திருந்தனர். வரவேற்பு முடிந்து, அறையில் பார்த்தபோது நகைப் பெட்டி மட்டும் இருந்தது, அதிலிருந்த 25 சவரன் நகைகளையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. நகைகளின் மதிப்பு மூன்று லட்ச ரூபாய். இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வலை கடையில் திருட்டு: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலைச் சேர்ந்தவர் நாகூர்கனி (50). இவர் வலை உள்ளிட்ட மீன்பிடி பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து, திருவான்மியூர் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
மெரீனாவில் குளித்த மூன்று பேர் பலி
சென்னை: மெரீனா கடலில் குளித்த ஆம்பூரை சேர்ந்த மூன்று பேர், ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு இறந்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த குல்லு மகன்கள் பரமேஷ்(22) மற்றும் தபரேஷ்(21). மஸ்தான் மகன் நசீர்(22). அமீர் மகன் உஸ்மான்(18). திருமண விஷேச நிகழ்ச்சிக்காக இவர்கள் நான்கு பேரும் சென்னை வந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னையின் பல்வேறு இடங்களை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். பின், நேற்று மாலை மெரீனா கடற்கரைக்கு சென்று குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் நசீர், தபரேஷ், உஸ்மான் ஆகியோர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு இறந்தனர். இது குறித்து பரமேஷ், அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்தார். நசீர் மற்றும் சபரேஷ் உடல் மீட்கப்பட்டது. உஸ்மான் உடலை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர்.
தமிழகம்
விண்வெளி ஆய்வு கழக தலைவர் கோவிலில் மனமுருகி பாடினார்
இரிஞ்ஞாலக்குடா : இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன், கேரள கோவிலில் மனமுருக பாடினார். திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலகுடாவில் உள்ள கூடல் மாணிக்கம் கோவிலில் உற்சவம் நடந்து வருகிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் இக்கோவிலுக்கு தனது சிறுவயதில் தினமும் சென்று வருவார். தற்போது தான் அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முள்ளியூர் கணபதி கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில் ஆகிய கோவில்களில் இவர் ஏற்கனவே பாடியுள்ளார் என்றாலும், இந்திய விண்வெளி ஆய்வுக் கழக தலைவராக பதவி ஏற்ற பிறகு, தனது சொந்த மண்ணில் உள்ள கோவிலில், முதல் முறையாக தற்போது தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவனாக இருந்த காலத்தில் நடனத்தையும், வாய்ப்பாட்டையும் தனது முக்கிய பணியாக கருதி, அதிலேயே லயித்து வந்த அவர் பின்னர் விஞ்ஞானியானதும், அப்பணியுடன் தனது ஆர்வமிக்க கலைகளையும் விடாமல் அடிக்கடி நடத்தி வந்தார். கூடல் மாணிக்கம் கோவிலில் கச்சேரிக்குச் செல்வதற்கு முன், பாடல்களை பாடி ஒத்திகை பார்த்துக் கொண்டார். அவரது கன்னிக் கச்சேரியை காண உறவினர்களும், நண்பர்களும் திரண்டிருந்தனர். மனமுருகி பாடி, அனைவரது கைத்தட்டல்களையும் பெற்றார்.
தமிழகம்
கம்ப்யூட்டர் முன்பு உங்கள் குழந்தை? உஷார்... உடல் நலம் பாதிக்கப்படலாம்
புதுடில்லி : உங்கள் வீட்டுக் குழந்தை அதிக நேரம் கம்ப்யூட்டரில் செலவழிக்கிறதா? உடனடியாகக் கண்காணியுங்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறிப் போனால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். பயமுறுத்தவில்லை. உண்மை அதுதான். இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அருகிலிருப்பவர் கூட இணையம் மூலம்தான் தொடர்பு கொள்கிறார். இச்சூழலில் நம் வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்குமானால், நம் குழந்தைகளின் நடவடிக்கைகளை ஆராய்வது அவசியம். டில்லி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். தங்கள் கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளங்கள் இன்றைய நிலையில் பெரும்பாலோரை அடிமையாக்கி வைத்துள்ளன. இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் கேம்ஸ் வலைத்தளங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் வருகின்றது. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூட நன்றாகப் பேசி சிரித்து இருப்பதில்லை. எப்போதும் கனவுலகில் மிதக்கின்றனர். இது அவர்களுக்கு எளிதாகவும் வாய்க்கிறது. "secondlife.com, gojiyo.com, farmville
தமிழகம்
சபரிமலை செலவு ரூ.36 கோடி அதிகரிப்பு
திருவனந்தபுரம் : சபரிமலையில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு செலவு 36 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கேரள மாநிலம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை அய்யப்ப சுவாமி திருக்கோவிலில், 2008-09ம் ஆண்டில் மொத்த செலவு 44 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இது, நடப்பு 2009-2010ம் ஆண்டில் 80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கமிஷனர் பி.வி.நளினாஷன் அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சபரிமலை, பம்பை, நிலக்கல் தவிர, பிற 282 கோவில்களில் இருந்து ஆண்டுதோறும் 53.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சம்பளம் மற்றும் பூஜை செலவுகள் 72 கோடி ரூபாய். வருமானத்தை விட அதிகளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதை ஈடுகட்ட, சபரிமலை வருமானத்தை தான் நம்பி இருக்கிறோம். சபரிமலையில் ஆண்டுதோறும் செலவு இரு மடங்கு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் செலவுகளை குறைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம்
இன்ஜினியரிங் படிப்புக்கு தொடரும் கிராக்கி : மருத்துவ கல்வி மீதான ஆர்வம் குறைகிறது
மும்பை : மகாராஷ்டிராவில் டாக்டரை விட, இன்ஜினியரிங் படிப்புக்குத் தான் அதிக கிராக்கி நிலவுகிறது. வேலை வாய்ப்பும், வருமானமும் இன்ஜினியரிங் துறையில் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என, தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை ஒரு காலத்தில் டாக்டர் படிப்புக்கு தான் அதிக கிராக்கியும், மதிப்பும் இருந்தது. பிளஸ் 2 படித்து முடித்த உடன், எந்த மருத்துவ கல்லூரியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பது என்பது தான், பெற்றோரின் பெரும் கவலையாக இருக்கும். தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி காரணமாக, தற்போது மருத்துவ படிப்பு மீதான மோகம் குறையத் துவங்கி விட்டது. இன்ஜினியரிங் கல்லூரியில் சேருவதில் தான், பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இன்ஜினியரிங் படிப்புக்கு, உலகலாவிய வேலை வாய்ப்புகளும், அதில் கிடைக்கும் அளவுக்கு அதிகமான வருவாயுமே கிடைப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை இந்தாண்டில் உயிரியல் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரமாக உள்ளது. அதே நேரத்தில், இன்ஜினியரிங் கல்லூரிக்கு செல்வதற்கு நுழை வாயிலாக கருதப்படும் கணித பாடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. கடந்தாண்டில் உயிரியல் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரமாக இருந்தது. அதே ஆண்டில் கணித பாடம் படித்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரம். இதன் காரணமாக, இந்தியாவில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் தற்போது 30 சதவீத டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மும்பையில் உள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றின் முதல்வர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்புக்கு, தற்போது உலகளாவிய வேலை வாய்ப்புகள் உள்ளன. இதனால், திறமை இருந்தால் படித்து முடித்த உடன், வேலை கிடைப்பது உறுதி. பணிக்கு சேர்ந்த அடுத்த சில மாதங்களிலேயே, வருவாயும் கணிசமாக கிடைக்கும். படிப்புக்காக செலவழித்த தொகையை, எளிதில் திரும்ப பெற்று விடலாம். அடுத்தபடியாக, இன்ஜினியரிங் துறையில் முதுநிலை பட்டம் அவசியம் இல்லை. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், மருத்துவத் துறையில் முதுநிலை பட்டம் பெறுவது அவசியமாகிறது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை, மருத்துவ கல்லூரிகளில் 4,400 இடங்களே உள்ளன. இன்ஜினியரிங் கல்லூரிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம்
8 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு
மும்பை : பொதுத் துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு 17.5 சதவீத சம்பள உயர்வு அளிக்க, வங்கி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம், எட்டு லட்சம் வங்கி ஊழியர்கள் பலனடைவர். மும்பையில் நேற்று, வங்கி நிர்வாகங்களுக்கும், வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதியிலிருந்து 17.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க முடிவு ஏற்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் 26 பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்களும், 12 தனியார் வங்கிகளின் ஊழியர்களும், எட்டு வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்களும் பலனடைவர். கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொண்டு உயர்த்தப்பட்ட புதிய சம்பளத்தின் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டியுள்ளதால், வங்கிகளுக்கு 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய் செலவாகும். கடந்த 1995ம் ஆண்டு பென்ஷன் திட்டத்தில் சேராதவர்களும், தற்போது பென்ஷன் திட்டத்தில் சேருவதற்கு நேற்றைய ஒப்பந்தப்படி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பென்ஷன் திட்டத்தின்படி 60 ஆயிரம் பென்ஷன்தாரர்களும், இரண்டு லட்சத்து 70 ஆயிரம் வங்கி ஊழியர்களும் பலனடைவர் என, இந்திய வங்கிகள் சங்கத்தின் துணை நிர்வாக தலைவர் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம்
மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் எதிர்சேவை
புதூர் : அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த கள்ளழகருக்கு, புதூரில் பக்தர்களின் எதிர்சேவை நடந்தது. அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 24ம் தேதி முதல் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக, அழகர் மலையில் இருந்து 26ம் தேதி புறப்பட்டார் கள்ளழகர். பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி ஆகிய பகுதிகளில், பக்தர்கள் அமைத்திருந்த மண்டகபடிகளில் எழுந்தருளினார். நேற்று காலை 5.40 மணிக்கு மூன்று மாவடி வந்த கள்ளழகரை, பக்தர்கள் எதிர் கொண்டு அழைத்தனர். அங்குள்ள புளியடி திம்மா திருக்கண் மண்டபத்தில், மேள, தாளம் முழங்க, வரவேற்பு அளித்தனர். பின், பன்னாங்கு (துணி) அவிழ்க்கப்பட்ட பல்லக்கில் அழகர் அருள்பாலித்தார். தல்லாகுளத்தில் எதிர்சேவை: தொடர்ந்து காலை 8 மணிக்கு புதூரில் நடந்த எதிர்சேவையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொரி கடலை, சர்க்கரை நிறைந்த செம்பில், மஞ்சள் துணி, பூ சுற்றி, சூடம் ஏற்றி, "கோவிந்தா...' கோஷமிட்டு வழிபட்டனர். மாலை 5 மணிக்கு தல்லாகுளம் மாரியம்மன் கோவிலில் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது. இன்று அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, தடுப்புகள் முதன்முறையாக மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளன. நேரடி ஒளிபரப்பு: ஆற்றுக்குள் இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு முதன்முறையாக "சேட்டிலைட்' மூலம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி, "டிவி'க்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இன்று ஆற்றில் இறங்குகிறார் அழகர்: இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி ஒருமுறை வலம் வருகிறார். பின், தமுக்கம் கருப்பண சுவாமி கோவில் முன்பு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். இதைத் தொடர்ந்து, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் அழகர், காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் வைகையில் இறங்குகிறார். காலை 11 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு அண்ணாநகர் வழியாக அழகர் புறப்பட்டு, இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.
தமிழகம்
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு... அழகரை தரிசிக்க வந்தோமய்யா
காலங்கள் மாறினாலும், கலாசாரம், பண்பாட்டை நாம் மறக்கவில்லை. இதற்கு உதாரணமாக பல பழக்கவழக்கங்கள் இன்றும் உள்ளன. இந்த நவீனயுகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் பெருகி விட்ட நிலையில், இன்னமும் மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு, மதுரை வைகையாற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களை காண முடிகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக விரதமிருந்து, நான்கு நாட்களுக்கு உணவுகளை தயார்படுத்தி கொண்டு, இறைவனுக்கு படைக்கும் கால்நடைகளுடன், மாட்டு வண்டிகளில் 100 கி.மீ., தூரத்திற்கு அப்பால் இருந்தும் இன்றும் வந்து செல்கின்றனர். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு மதுரை, சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பலர் நேற்றும் மாட்டுவண்டிகளில் கள்ளழகரை பார்க்க திரண்டனர். தெருவோரம் வண்டிகளை நிறுத்தி விட்டு, கொண்டு வந்த தார்பாயை விரித்து, ரோட்டோரம் சமைத்து சாப்பிட்டு விட்டு, ஆற்றில் முடிகாணிக்கை செலுத்தி, கள்ளழகரை பார்த்து பக்தி பரசவத்துடன் அவர்கள் சொந்த ஊருக்குள் திரும்புவதற்கு சில நேரங்களில் ஒரு வாரம் கூட ஆகும். பலதலைமுறையாக இப்படி வரும் சிலரிடம் பேசியதிலிருந்து... விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறை சேர்ந்த அழகுமலை(61): விவரம் தெரிந்த நாளில் இருந்து ஐம்பது ஆண்டுகளாக மாட்டுவண்டிகளில் சித்திரை திருவிழாவிற்கு வருகிறோம். இந்தாண்டு ஏப்ரல் 25ம் தேதி இரவு மூன்று வண்டிகளில் 60 பேர் புறப் பட்டோம். மறுநாள் இரவு அழகர்கோவில் வந்தோம். இரு நாட்களாக இங்கு தங்கி ஆடு பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தினோம். நேற்றுபகல் அங்கிருந்து புறப்பட்டு இரவு மதுரையை அடைந்தோம். இன்று அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி நாங்கள் கொண்டு வந்த அரிசி மற்றும் உணவு பொருட்களை சமைத்து அன்னதானம் செய்வோம். வழக்கமாக செல்லூர் திருஆப்புடையார் கோயில் அருகே மாட்டுவண்டிகளை நிறுத்துவோம். நாகரிகம் வளர்ந்து விட்டாலும், படித்த எங்கள் பிள்ளைகளும் எங்கிருந்தாலும் சித்திரை திருவிழாவிற்கு எங்களுடன் வருவர். மாட்டுவண்டியில் கள்ளழகர் குறித்து பாடிக் கொண்டும், கோஷங்களை எழுப்பி கொண்டும் வருவதால் களைப்பு தெரியாது. மல்லாங்கிணறை சேர்ந்த முத்துச்சாமி(60): எனக்கு பத்து வயதிலிருந்து மாட்டுவண்டியில் குடும்பத்தினருடன் வருகிறேன். மூத்த பிள்ளைகளுக்கு இங்கு வந்து சித்திரை திருவிழாவின் போதுதான் மொட்டை போடுவோம். இதற்காக எங்களுடன், உறவினர்களையும் அழைத்து கொண்டு வருவோம். அவர்களுடன் வருவதால் ஆட்டமும், பாட்டும் ஆக இருக்கும். ஐந்து நாட்கள் பொழுது போறது தெரியாது. மதுரையில் தற்போது குடியிருப்புகள் பெருகி விட்டதால் மாட்டுவண்டிகளை நிறுத்துவது சிரமமாக உள்ளது. காரைக்குடியை சேர்ந்த மாயழகு(83): கடந்த 70 ஆண்டுகளாக காரைக்குடியில் இருந்து சித்திரை திருவிழாவிற்கு வருகிறோம். பல ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் வருவோம். காலம் மாறி விட்டதால் வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. சிலர் ஆட்டோ, வேன் பிடித்து வருகின்றனர். இங்கு வந்து சென்றால் மனதிருப்தி. கஞ்சி குடித்தாலும், இதுவரை கடன் வாங்கியதில்லை. பசியில்லாமல் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறேன். மகன், மகள், பேரன், பேத்திகள், பங்காளிகள் என அனைவரும் இந்த விழாவிற்கு வந்து விடுவர். வண்டிகளில் வந்து செல்ல நாட்கள்ஆவதால் குழந்தைகள் பஸ்களை விரும்புகின்றனர்.இவ்வாறு கூறினர்.  நமது சிறப்பு நிருபர்
தமிழகம்
இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி : தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு
மதுரை: மதுரைக்கு பெருமை சேர்க்கும், சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை ( 28- 04- 2010) காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. இதைக் காண, லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை உலகெங்குமுள்ள தமிழர்கள் கண்டுகளிக்கும் வகையில், தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாக தர இருக்கிறோம். இந்த ஒளிபரப்பு புதன்கிழமை, இந்திய நேரப்படி காலை 06:30 மணிக்கு துவங்கும். தினமலர் வாசகர்களுக்காக செய்யப்படும் இந்த வசதியை, தினமலர் வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம்.
தமிழகம்
அரவாணிகள் நலச் சங்கம் நடத்திய போட்டி : மிஸ் கூவாகமாக சேலம் ஷில்பா முதலிடம்
விழுப்புரம் : தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச் சங்கம், ஜே.சி.ஐ., ஈரோடு ரிவர் வங்கி சார்பில் அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம் போட்டி விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தலைமை தாங்கினார். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட திட்ட மேலாளர் சரவண பாஸ்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சேர்மன் ஜனகராஜ் பேசுகையில்,"திருநங்கைகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் தான் கோவில் உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்தவர்களுக்கு அய்யூர் அகரம் அருகே அரசு இலவச மனைப் பட்டா வழங்கியுள்ளது. மீதமுள்ள 100 அரவாணிகளுக்கும் மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூவாகம் கூத்தாண்டவர் கோவில் விழாவில் கலந்து கொள்ளும் பல மாநிலங்களை சேர்ந்த அரவாணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்' என்றார். பின், அரவாணிகளுக்கான பாட்டு, நடனம், கூந்தலழகி போட்டி மற்றும் மிஸ் கூவாகம் 2010 அழகி போட்டிகள் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரவாணிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலர் லட்சுமி, வக்கீல் பவானி, நுகர்வோர் குறைதீர்ப்பு மன்ற நீதிபதி அமுதமொழி நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். நடன போட்டியில் விசாகப்பட்டினம் ஐஸ்வர்யா முதலிடம் பெற்றார். ராஜி இரண்டாமிடம், சேலம் உஷா மூன்றாமிடம் பெற்றனர். இவர்களுக்கு ஈரோடு ஜே.சி.ஐ., ரிவர் வங்கி சத்தியராமன் பரிசு வழங்கினார். கூந்தலழகி போட்டியில் பெங்களூரு திவ்யா முதலிடம் பெற்றார்.வேலூர் சினேகா இரண்டாமிடம், சேலம் ஷில்பா மூன்றாமிடம் பெற்றனர். மூவருக்கும் மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச்சங்க தலைவி ராதா பரிசு வழங்கினார். மிஸ் கூவாகம் 2010 அழகி போட்டியில், அரவாணிகள் ஒய்யாரமாக நடந்து தங்களின் நடை அழகை வெளிப்படுத்தினர். மிஸ் கூவாகம் 2010 அழகியாக சேலம் ஷில்பா தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி ரங்கீலா இரண்டாமிடம், ஈரோடு சிம்ரன் மூன்றாமிடம் பிடித்தனர். முதலிடம் பெற்ற ஷில்பாவிற்கு 2,500 ரூபாயும், இரண்டாமிடம் பெற்ற ரங்கீலாவிற்கு 1,500 ரூபாயும், மூன்றாமிடம் பெற்ற சிம்ரனுக்கு 1,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி வெற்றி பெற்றதற்கான கிரீடத்தை ராஜ்யசபா எம்.பி.,வசந்தி ஸ்டான்லி, உலக தமிழ் கவிஞர் பேரவை மாவட்ட செயலர் விஜய நந்தினி, சேர்மன் ஜனகராஜ் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச்சங்க தலைவி ராதா, ராமமூர்த்தி செய்தனர். விமலா நன்றி கூறினார். வாழ்க்கை தரம் உயர ஷில்பா அறிவுரை: அரவாணிகள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல், சிறுதொழில் துவங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என, மிஸ் கூவாகம் 2010 அழகியாக தேர்வான ஷில்பா கூறினார். அவர் கூறியதாவது: சேலம் அடுத்த ஆத்தூரில் பிறந்தேன். எட்டு ஆண்டுகளாக சேலத்தில் வசிக்கிறேன். பி.எஸ்சி., படிப்பு முடித்துள்ள நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக, சேலத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறேன். கூவாகம் அழகி போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அழகியாக தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அரவாணிகளுக்கு ரேஷன் கார்டு, மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற வசதிகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது. அரவாணிகள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல், சிறுதொழில் துவங்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு ஷில்பா கூறினார்.
தமிழகம்
ஏர் இந்தியா புதிய விமான சேவை நீட்டிப்பு
சென்னை : சென்னையில் இருந்து குளுகுளு நகரான டார்ஜிலிங்கை இணைக்கும் வகையில், சென்னை - பக்டோக்ரா இடையே இந்த மாதம் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்திய புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நீட்டித்துள்ளது. சென்னையில் இருந்து பக்டோக்ரா நகருக்கு நேரடி விமானப் போக்குவரத்து கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது. ஐசி 2766 என்ற ஏர் இந்தியா விமானம் திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.25 மணிக்கு பக்டோக்ரா சென்று வந்தது. திரும்புகையில், ஐசி 2765 விமானம் பக்டோக்ராவில் இருந்து பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.25 மணிக்கு சென்னை வந்தடைந்தது. இந்த நேரடி விமானப் போக்குவரத்து மூலம் பக்டோக்ராவில் இருந்து 125 கி.மீ., தொலைவில் உள்ள டார்ஜிலிங் நகர் உள்ளிட்ட பல்வேறு கோடை வாசஸ்தலங்களை சென்னை பயணிகள் எளிதாக அடைய முடியும். ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த புதிய விமான சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை - பக்டோக்ரா இடையே இம்மாதம் துவக்கப்பட்ட புதிய விமான சேவை, பயணிகளின் வசதிக்காக அடுத்த மாதம் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐசி 2766 என்ற விமானம் திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பகல் 12.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பக்டோக்ராவுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் ஐசி-2765 என்ற விமானம் மாலை 4.15 மணிக்கு பக்டோக்ராவில் இருந்து புறப்பட்டு 6.55 மணிக்கு சென்னை வந்தடையும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம்
தமிழக டி.ஜி.பி., கோவை வருகை
கோவை : தமிழக டி.ஜி.பி., நாளை கோவையில் போலீசாரிடம் குறைகேட்கிறார். தமிழக டி.ஜி.பி., லத்திகா சரண் இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகிறார். போலீஸ் விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை 6.00 மணிக்கு கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடக்கும் குறைகேட்பு முகாமில் பங்கேற்று, மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிகிறார். அதன் பின், ரெசிடென்சி ஓட்டலில் நடக்கும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
தமிழகம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 10ல் வெளியாகலாம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 20ம் தேதியும் வெளியாக வாய்ப்பு உள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22 வரை நடந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 18ல் துவங்கி ஏப்., 21ல் நிறைவடைந்தன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 23ல் துவங்கி ஏப்., 9 வரை நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 21ல் துவங்கி 27ல் நிறைவடைந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மே மாதம் 10ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், மே மாதம் 20ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிட கல்வித்துறை முடிவு செய்துள்ளது' என்றார். - நமது சிறப்பு நிருபர்-
தமிழகம்
மீன்பிடி தடையால் சேது சமுத்திர மாற்று பாதை ஆய்வுக்கு சாதகம்
ராமநாதபுரம் : மீன்பிடி தடை காரணமாக, சேது சமுத்திர மாற்று பாதை ஆய்வு பணிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதால், அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கேட்பது தேவையற்றது. இந்த காலகட்டத்தில், ஆய்வு பணிகளை மேற்கொண்டு விரைவாக முடிக்க சம்மந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட, சேது சமுத்திர திட்டம் தற்போது சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது. மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்யுமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. அதன்படி, பச்சோரி என்பவர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, சேது சமுத்திர மாற்று பாதை ஆய்வு பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கடந்து ஓராண்டுகளாக கிடப்பிலிருந்த இப்பணி குறித்து, "தினமலர்' செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து, மாற்று பாதை ஆய்வு பணிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் தொடங்கியது. ஏப்.,21ல் மாற்றுப்பாதை அறிக்கை குறித்து, சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டது. கடலின் அலை அதிகமிருப்பதால், ஆய்வு பணி மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாக, சொலிசிட்டர் ஜெனரல் ஹரின்ராவனல் கோர்ட்டில் தெரிவித்தார். ஆய்வு அறிக்கையை 2011 பிப்., முதல் வாரத்தில் சமர்ப்பிக்குமாறும், அதுவரை இவ்வழக்கை ஒத்திவைப்பதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர். உண்மையில், ஆய்வை பாதிக்கும் வகையில் அலையின் சீற்றம் இல்லை. மீன்பிடிக்க ஏப்., 14 முதல் மே 30 வரை தடையிருப்பதால், கடலில் மீனவர்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் ஆய்வுக்காக விடப்பட்டுள்ள மிதவைகளுக்கும் பிரச்னை இல்லை. இதன் மூலம் கடல் அலையின் தன்மையை எளிதில் அறியமுடியும். ஆய்வுக்கான எந்த தொந்தரவும் இருக்காது. இந்த காலகட்டத்தை முறையாக பயன்படுத்தினால், ஆய்வு பணிகளை விரைவில் முடித்துவிடலாம். இதற்காக ஓராண்டு அவகாசம் என்பதும் வீணானதே. அடுத்த பிப்., வரை நேரம் இருப்பதாக நினைத்து, பணிகளை நகர்த்தினால் , மழை காலம் தொடங்கி, ஆய்வு பணி நிறைவடைவதில் சிக்கல் ஏற்படும். இந்த காலகட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு முடிக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
பந்த்: அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் கணக்கெடுப்பு
விருதுநகர் : தமிழகத்தில் நேற்று நடந்த பந்த் குறித்து, அரசு அலுவலகங்களில் பணிக்கு வந்த பணியாளர்கள் குறித்து துறை வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு அனைத்து துறைகளுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கை: இன்று (நேற்று) ஒரு சில கட்சிகள் பந்த் அறிவித்துள்ளன. உங்களது துறையில் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலகத்திலும் பணியாளர்கள் வருகை விபரத்தை அனுப்பி வைக்க வேண்டும். துறையின் பெயர், அலுவலர்கள், பணியாளர்கள் எத்தனை பேர், விடுப்பு எடுத்துள்ளவர்கள் எத்தனை பேர், பணிக்கு வந்துள்ளவர்கள் எத்தனை பேர், விடுப்பு இல்லாமல் பணிக்கு வராதவர்கள் விபரம் ஆகியவற்றை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி, நேற்று காலை 10.30 மணிக்கே, ஊழியர்கள் வருகை பற்றி அரசுக்கு பேக்ஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம்
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் வெளியாட்கள் தங்குவதற்கு எதிர்ப்பு
சென்னை : ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளில் வெளியாட்கள் தங்குவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீது சட்டசபையில் நடந்த விவாதம்: மகேந்திரன் - மார்க்சிஸ்ட்: மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்த்து, இட ஒதுக்கீடு சதவீதத்தை கூடுதலாக வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் உயர்கல்விக்கு 22 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்படுகிறது; இது போதுமானதாக இல்லை. ஆதிதிராவிடர்கள் உயர்கல்வி பெற, இந்த நிதியை உயர்த்த வேண்டும். உலகநாதன் - இந்திய கம்யூனிஸ்ட்: 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில், மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு மடங்குக்கு மேல் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளனர். ஆனால், சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளில் எத்தனை சதவீதம் பேர், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் முன்னேறியுள்ளனர். ஆதிதிராவிடர்களில் இன்னும் 70 சதவீம் பேர் எந்த முன்னேற்றமும் இன்றி சமூகத்தில் தாழ்ந்த நிலையில், வேலைகளை செய்து வருகின்றனர். கல்வியை அடிப்படையாக வைத்து முன்னேற்றம் வேண்டும். திருவாரூருக்கு முதல்வர் வந்த போது, அவருடன் வந்த வாகனம் மோதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் இருவர் இறந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயை, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும். சதன் திருமலைக்குமார் - ம.தி.மு.க: ஆதிதிராவிடர்களை தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். பிளஸ் 2 பொது மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் 2 சதவீதம் கூடுதலாக ஆதிதிராவிடர்கள் உள்ளனர். ஆனால், உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்று வரும் போது, அது பாதியாகக் குறைகிறது. ஆதிதிராவிடர்களுக்கு உயர்கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 354 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர்கள் 1 சதவீதம் கூட சேர்க்கப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் 20 சதவீதம் ஆதிதிராவிட மாணவர்கள் சேருவதை உறுதி செய்ய வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமென, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்ற வேண்டும். ரவிக்குமார் - விடுதலைச் சிறுத்தைகள்: எனது தொகுதியில் தனியார் ஒருவர் தனது 45 ஏக்கர் நிலத்தை, ஆதிதிராவிடர் கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்த தானமாகக் கொடுத்தார். மாவட்ட கலெக்டர் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் அங்கு எந்த கல்வி மையமும் அமைக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஆதிதிராவிடர் பெண்கள் பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ., கட்ட வேண்டும். தானம் கொடுத்தவர்கள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில், பொது பள்ளிகளுக்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெறுகின்றன. இது சரியானதா என்ற சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளது. தேர்வில் பார்த்து எழுத ஆசிரியர்களே உடந்தையாக உள்ளதாக தெரிகிறது. தேர்ச்சி சதவீதம் குறைந்தால், இடமாற்றம் அல்லது மெமோ கொடுக்கும் நிலை உள்ளதால், காப்பி அடிக்க ஆசிரியர்களே உடந்தையாக உள்ளனர். எனவே, ஆசிரியர்களை தண்டிப்பதற்கு பதில் ஊக்கப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் நல விடுதிகள் 1,565 உள்ளன. இங்கு, இரவு நேரங்களில் மாணவர்கள் இருப்பதில்லை. இலவச பஸ் பாஸ் உள்ளதாலும், விடுதி காப்பாளர்கள் வலியுறுத்துவதாலும் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால், உணவு செலவு மிச்சமாகி, வார்டன்கள் எடுத்துக் கொள்கின்றனர். பறக்கும் படை அமைத்து, இவற்றை சோதனை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் விடுதிகளில், குறிப்பாக சென்னையில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் அதிகம் தங்குகின்றனர். இதை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சிக்கலாம் இமயமலையை மறைக்க முயற்சிக்கலாமா? : அ.தி.மு.க.,வுக்கு அமைச்சர் கேள்வி
சென்னை : அ.தி.மு.க., உறுப்பினர் கருப்பசாமி குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., உறுப்பினர் சங்கரி பேசியதால், சபையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. சங்கரி பேசியதாவது: அ.தி.மு.க., உறுப்பினர், பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அ.தி.மு.க., ஆட்சியில் தான், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பழனிச்சாமி சாராயம் காய்ச்சினார் என, அவர் கைது செய்யப்பட்டார். வீரன் சுந்தரலிங்கம் முதல் அம்பேத்கர் வரை பலருக்கு சிலைகளும், மணி மண்டபமும் அமைத்தது முதல்வர் கருணாநிதி தான். சின்னப்பன் - அ.தி.மு.க., : சுந்தரலிங்கத்திற்கு மணி மண்டபம் கட்டியது அ.தி.மு.க., ஆட்சி தான். தி.மு.க., ஆட்சி அல்ல. அமைச்சர் பரிதி இளம்வழுதி: வெள்ளைத்தேவன், சுந்தரலிங்கம் ஆகியோருக்கான மணி மண்டப திறப்பு விழா, எனது தலைமையில் தான் நடந்தது. மணி மண்டபத்தை, சபாநாயகர் தான் திறந்து வைத்தார். சோற்றில் முழு பூசணிக்காயை மறைக்க முயற்சிக்கலாம்; இமயமலையை மறைக்க முயற்சிக்கலாமா? (இதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த மற்றொரு சம்பவத்தை குறிப்பிட்டார். இதற்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அக்கருத்தை சபைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்.) முதல்வர் கருணாநிதி: ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள், அடித்தட்டு மக்களைப் பற்றிய விவாதம் நடக்கும்போது, ஆளுங்கட்சி செய்ததைப் பற்றி குறிப்பிட்டு, "இவை போதாது; இன்னும் செய்ய வேண்டும்' என்ற நிலையிலும், அல்லது "செய்தது தவறு, அவை திருத்தப்பட வேண்டும்' என்ற நிலையிலும், எதிர்க்கட்சியின் செயல்பாடு இருக்க வேண்டும். அதற்கு, நிதானமான முறையில், ஆளுங்கட்சி தரப்பில் விளக்கம் அளிப்பது தான், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாம் செய்யும் சேவை. அதை விட்டுவிட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கையில் அமளி, துமளி என பத்திரிகையில் செய்தி வந்தால், அது அம்மக்கள் மகிழ்ச்சி அடையும் செய்தியாக இருக்காது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு, அம்மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அந்த சமுதாய மக்கள் நம்மைப் பார்த்து நகையாடாமல் இருப்பதற்கு, அமைதியான முறையில் இந்த மானியத்தை விவாதித்து நிறைவேற்றித் தர வேண்டும்.
தமிழகம்
செலவு கணக்கு தாக்கல் செய்யாத 11 பேர் தேர்தலில் போட்டியிட தடை
சென்னை : தேர்தல் செலவு கணக்கை காட்டாத மேலும் 11 பேர், வரும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கு காட்டாத சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிட்ட 21 பேர், வரும் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிடப்பட் டது. இந்நிலையில், நாமக் கல், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு, செலவு கணக்கு காட்டாத மேலும் 11 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட நாவல் மணி, கே.செல்வராஜ், சுப்பிரமணியம் ஆகிய மூவரும் விதிப்படி கணக்கு தாக்கல் செய்யாததால், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட் டுள்ளது. திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட கணேஷ்குமார், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட ஜி.செல்வராஜ், செந்தில் குமார், அன்னலட்சுமி, ராமசாமி, இளங்கோவன், கந்தசாமி, ஞானபிரகாசம் ஆகியோர், செலவு கணக்கை தாக்கல் செய்யாததால், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் பட்டுள்ளது.
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி பேச்சு: விலையேற்றத்திற்கு மத்திய அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையே காரணம். இந்தக் கொள்கையை மாநில அரசும் பின்பற்றுகிறது. இந்தப் பிரச்னை குறித்து பேரவையில் பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்தார்; நாங்கள் வெளியேற்றப்பட்டோம். ஆனாலும், மக்கள் மத்தியில் எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். மத்திய வெளியுறவுத் துறை முன்னாள் இணை அமைச்சர் சசி தரூர் பேச்சு: முழு அடைப்புப் போராட்டங்கள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, "முழு அடைப்புப் போராட்டத்தை ஏற்க மாட்டோம்' என்று, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் மிரட்டலுக்கு பணியக்கூடாது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: ஆட்சி நீடிப்பதற்காக சி.பி.ஐ.,யை மத்திய அரசு, அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ., மூடி மறைக்கிறது. நிர்பந்தத்திற்கு பணியக்கூடிய மாயாவதி, லாலு, முலாயம் சிங் போன்றவர்கள் மீதான வழக்குகளை தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல சி.பி.ஐ., பயன்படுத்துகிறது. அவர்கள் ஆதரிப்பதையோ, எதிர்ப்பதையோ பொறுத்து அந்த கத்தியைப் பயன்படுத்துகிறது. இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் பேச்சு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு எனக் கூறி, அரசு இடத்தில் உள்ள இந்து கோவில்களை இடிக்க முன் வரும் தமிழக அரசு, பிற மதத்தவர்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள வழிபாட்டு தலங் களை இடிக்க முன்வருவதில்லை. திண்டுக்கல் அருகே பெருமாள்கோவில்பட்டியில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை. பா.ஜ., தலைவர்களில் ஒருவரான ஷா நவாஸ் பேட்டி : வெட்டுத் தீர்மானத்தின் தோல்வி, இந்திய கம்யூனிஸ்டுக்கு கிடைத்த வெற்றி. ஆளும் கட்சியை ஆதரித்ததன் மூலம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் முகமூடி கிழிந்துவிட்டது. ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் பேச்சு: கடந்த 2009ம் ஆண்டு முதல், ரிசர்வ் வங்கி ஊக்குவிப்புச் சலுகைகளை வாபஸ் பெறத் தொடங்கியது. வங்கி வட்டி வீதங்களும் இரு தவணைகளில் மொத்தம் அரை சதவீத அளவிற்கு உயர்த்தப்பட் டது. பணவீக்கம் உயர்ந்து வரும் சூழலில், பொருளாதார நலனுக்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் பேச்சு: நாட்டில் உள்ள பல பகுதிகள், நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த லஷ்கர் -இ- தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால், மத்திய அரசு விழிப்புடன் பல பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் திட்டங்களைத் தடுக்கும் விதமாக கண்காணிப்புடன் மத்திய அரசு செயல்படுகிறது.
இந்தியா
ஜார்க்கண்டில் நான்கு மாத சிபு சோரன் ஆட்சிக்கு நெருக்கடி : லோக்சபாவில் மாற்றி ஓட்டு போட்டதால் வினை
புதுடில்லி : ஜார்க்கண்டில் நான்கு மாதமாக ஆட்சியில் உள்ள சிபு சோரன் தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. லோக்சபாவில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதால், அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ., விலக்கிக் கொண்டது. இதனால், சோரன் அரசு எந்த நேரத்திலும் கவிழும் என்பதுடன், அவரது அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 82 உறுப்பினர்களில் சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 18 இடங்களே கிடைத்தன. இதனால், 18 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்தது. சிபு சோரன் முதல்வரானார். சிபு சோரனுடன் பா.ஜ., கூட்டு சேர்ந்தது, பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் எம்.பி.,யான அவர் முதல்வராக இந்த அணுகுமுறையைப் பின்பற்றினார். இந்நிலையில், லோக்சபாவில் நேற்று முன்தினம் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் வெட்டுத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த வெட்டுத் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பின் போது, எம்.பி., என்ற முறையில் சிபு சோரன் ஆஜராகி, எதிர்க் கட்சிகளின் வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் ஓட்டளித்தார். இதனால், பா.ஜ., கடும் கோபம் அடைந்தது. அந்தக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி தலைமையில் உயர் மட்டக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பா.ஜ., மூத்த தலைவர் ஆனந்த் குமார் கூறியதாவது: சிபு சோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவது என, பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்டரி போர்டு முடிவு செய்து உள்ளது. சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் சிபு சோரன் செயல்பட்டுள்ளார். வெட்டுத் தீர்மானத்தின் போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளார். அவரின் இந்தத் துரோகத்தை கவனத்தில் கொண்ட பா.ஜ., கட்சி, அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது என, முடிவு செய்துள்ளது. சிபு சோரன் அமைச்சரவையில், பா.ஜ., சார்பில் இடம் பெற்றுள்ள துணை முதல்வர் ரகுவர் தாசும், இதர அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை ஜார்க்கண்ட் மாநில கவர்னரிடம் முறைப்படி வழங்குவர், என்றார். தவறு: ""வெட்டுத் தீர்மானத்தின் போது அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். என் ஓட்டால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நாங்கள் இன்னும் பா.ஜ., வுடன் தான் உள்ளோம். அந்தக் கட்சியை விட்டு விலகமாட்டோம்,'' என சிபு சோரன் கூறினார். சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் கூறுகையில், ""நிகழ்ந்தது என்னவோ தவறு தான். ஓட்டெடுப்பின் போது ஏற்பட்ட குழப்பத்தால், இப்படி நிகழ்ந்து விட்டது,'' என்றார். சோரன் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., விலக்கிக் கொண்டதால், அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைந்தாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனெனில், காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கேசவ ராவ் கூறுகையில், ""அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க நாங்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. அரசு அமைக்கவே நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். அரசியலில் கடைசி வார்த்தை என்பதே இல்லை,'' என்றார். சோரன் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர, உ.பி., மாயாவதி போல மத்திய அரசுடன் நேசக்கரம் நீட்டுகிறார் என்ற கருத்தும் எழுந்துள்ளது. மீண்டும் முதல்வராகா விட்டாலும், எல்லா வழக்குகளில் இருந்தும் விடுபட அடுத்த முயற்சிகளை அவர் மேற்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.
இந்தியா
நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : கபில் சிபல் தகவல்
புதுடில்லி : நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். போலி பல்கலைக் கழகங் களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று லோக்சபாவில் கூறியதாவது: அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறைகளின்படிதான் நாட்டிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறாமல் 201 கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மகாராஷ்டிராவில் 74, டில்லியில் 24, கர்நாடகாவில் 22, தமிழகத்தில் 19, உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 13 நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒழுங்குமுறை நடைமுறைகளை மீறி செயல்படுகின்றன. இவற்றில், ஐதராபாத்தில் உள்ள ஐ.எஸ்.பி., டில்லி, குர்கான் மற்றும் சண்டிகரில் இயங்கி வரும் ஐ.சி.எப்.ஏ.ஐ., பிசினஸ் ஸ்கூல், டில்லியில் உள்ள ஐ.ஐ.பி.எம்., கே.ஆர்.மங்களம் குளோபல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட், குர்கானிலுள்ள ஜே.கே.பிசினஸ் ஸ்கூல், பெங்களூரிலுள்ள எம்.பி.பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பாரதிய வித்யா பவன், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) நடத்திய ஆய்வில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கிது தெரியவந்திருக்கிறது கண்டறிந்துள்ளது. இவற்றில் எட்டு பல்கலைகள் உ.பி.,யிலும், ஏழு டில்லியிலும் உள்ளன. யு.ஜி.சி.,மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அமைப்புகள் இவை குறித்து எச்சரிக்கை அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றன. இதுபோன்ற போலி கல்வி நிறுவனங்களைத் தடுப்பதற்காக, புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். சட்ட நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் போலி நிறுவனங்களுக்குத் தகுந்த தண்டனை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
இந்தியா
பட்ஜெட் வரிச் சலுகை : பிரணாப் தர சம்மதம்
புதுடில்லி : பட்ஜெட்டில் கூறப்பட்ட சில வரிகளை விலக்கிக் கொள்ளும் முடிவை, இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிப்பார். பட்ஜெட்டில் சில வரிச் சலுகைகளை எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போது, அவர் இக்கருத்தை வெளியிட்டார். நேற்று மதியம் பார்லிமென்ட் இயங்க ஆரம்பித்ததும், நிதி மசோதா மீதான விவாதம் துவங்கியது. இன்று லோக்சபாவில், 2010-2011ம் ஆண்டுக்கான நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்புகள் குறித்த விவாதமும், அம்மசோதா நிறைவேற்றமும் நடைபெறுகிறது. நேற்று எம்.பி.,க்கள் பலரும் வீட்டு வசதி திட்டங்களிலும் வரி விதிப்பு குறைக்கப்பட வலியுறுத்தினர். அதேபோல, சேவை வரி விதிப்பு குறைப்பு பற்றியும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. நேற்று நிதியமைச்சர் பிரணாப் பேசும் போது கூறியதாவது: அடுத்த சில மாதங்களில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் குறையும். உணவுப் பொருட்கள் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன. பணவீக்கத்தைச் சமாளிக்க, அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதேபோல, நேரடி மறைமுக வரி விதிப்புகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர அரசு விரும்புகிறது. இது, வரி கட்டுவோர் சுலபமாகச் செயல்பட உதவிடும். பட்ஜெட் வரி விதிப்புகளில் மாற்றம் தேவை என்று தொழில் துறையில் இருந்தும், மற்ற துறைகளிலும் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. சிலர் தற்போதைய வரி விதிப்பில் மாற்றத்தையும், மற்ற சிலர் புதிதாக வரி விதிப்பு திட்டங்களையும் யோசனையாகக் கூறியுள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைக் குறைக்க, எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை பரிசீலனை என்ற பேச்சு இல்லை. அவை குறைக்கப்பட மாட்டாது. அதே சமயம், இங்கு விவாதத்தில் வைத்த கோரிக்கைகள் அடிப்படையில் என் பதிலுரையில் சில நிவாரணங்களை அறிவிப்பேன். இவ்வாறு முகர்ஜி கூறினார்.
இந்தியா
அவசரம் வேண்டாம்: எம்.பி.,க்களுக்கு பிரணாப் உறுதி : சர்ச்சை விஷயங்கள் விவாதிக்கப்படும்
ஐ.பி.எல்., விவகாரம், ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு ஆகிய விஷயங்கள் குறித்து லோக்சபாவில் விவாதம் கண்டிப்பாக நடக்கும். முதலில் நிதிமசோதா நிறைவேறியதும், இவை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சரும், அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி கூறினார். மத்திய அமைச்சர் ராஜா தொடர்பு குறித்தும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்தும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எழுப்பிய பிரச்னை காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்னை குறித்து ஒரு ஆங்கில நாளேட்டில் நேற்று புதிய தகவல் வெளியாகியிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஒரு சில நிறுவனங்களுக்கு சாதகமாக வெளிநாடு வாழ் இந்திய பெண்மணி ஒருவர் தலையிட்டுள்ளார் என்றும், அது குறித்த போன் பேச்சு உரையாடல் உட்பட தகவல்கள் சி.பி.ஐ.,யிடம் இருப்பதாகவும் தகவல் இருந் தது. இதை மேற்கோள் காட்டி பார்லிமென்டில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பிரச்னை கிளப்பினர். லோக்சபா காலையில் அவை கூடுவதற்கு முன்பாக தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சபாநாயகரை சந்தித்து நோட்டீஸ் அளித்தனர். பின், அவை கூடியதும் இந்த பிரச்னை குறித்து தம்பிதுரை, "லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ள இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்துவந்த சி.பி.ஐ.,யின் உயர் அதிகாரி திடீரென மாற்றப்பட்டுள்ளார். எனவே கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இப்பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். சபாநாயகரோ, இப்பிரச்னையை கேள்விநேரம் முடிந்து பூஜ்ய நேரத்தில் எழுப்பும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி இப்பிரச்னை குறித்து தம்பிதுரை பேச ஆரம்பித்தார். அப்போது டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க., எம்.பி.,க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் மற்றும் ஐ.பி.எல்., சர்ச்சை குறித்து பிரதமரின் பேட்டி ஆகியவற்றை கண்டித்து பா.ஜ., எம்.பி.,க்களும் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். ஒரே கூச்சல் குழப்பமாக இருந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு அவை கூடியதும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மீண்டும் இப்பிரச்னையை கிளப்பினர். அவையின் மையப்பகுதிக்கே வந்து கூச்சலிட்டபடி இருந்தனர். இதில் அவை முன்னவரான பிரணாப் முகர்ஜி கோபம் அடைந்துவிட்டார். அ.தி.மு.க., எம்.பி.,க்களை பார்த்து கோபமாக,"நிதிமசோதா என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அரசாங்கத்தின் முக்கியமான இந்த அலுவல் குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, வேண்டுமென்றே நீங்கள் கூச்சலிடுகிறீர்கள். பத்து எம்.பி.,க்கள் இம்மாதிரி நடப்பது ஏற்க முடியாதது. இது குறித்த விஷயங்களை என் சகாக்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின் முடிவு எடுப்பேன், உறுதிமொழி இப்போது தரமுடியாது' என்றார். பின், அவர் மேலும் கூறியதாவது : ஸ்பெக்டரம் 2ஜி ஒதுக்கீடு, டெலிபோன் ஒட்டுக்கேட்பு, ஐ.பி.எல்., விவகாரம் ஆகிய அனைத்து விஷயங்கள் குறித்து கட்சிகள் கருத்துக் கேட்டு முழுவிவாதம் நடக்கும், அந்த நேரத்தில் நானோ அல்லது பிரதமரோ சபையில் இருப்போம். ஆனால், நிதிமசோதா நிறைவேறியபின் இந்தவிஷயம் எடுத்துக் கொள்ளப்படும். சபை அடுத்த மாதம் 7ம் தேதி வரை இருக்கும். அவசரப்பட வேண்டாம். இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார். ராஜ்யசபாவிலும் கேள்விநேரமே ரத்து ஆகும் அளவுக்கு இந்த பிரச்னை பெரிதாக வெடித்தது. அவை துவங்கியதும் மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எழுந்து பிரச்னை கிளப்பினார். ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தியடைந்த அன்சாரி, தொடர்ந்து இடையூறு செய்யப்படுவதால் கேள்வி நேரத்தை நடத்தும் நேரத்தை மாற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார். ஆனால், அலுவாலியா உட்பட பா.ஜ., எம்.பி.,க்களும் இதே பிரச்னையை கிளப்பி கடும் ரகளையில் ஈடுபடவே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின், ஒரு மணி நேரம் கழித்து சபாநாயகர் இருக்கையில் துணைத்தலைவர் ரகுமான்கான் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் பலனில்லை. தி.மு.க., தரப்பில் சிவா, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபடி இருந்தனர். அவையில் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது இதுகுறித்து விவாதம் நடத்த நோட்டீஸ் தனியாக அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படவே அதுபடியே அ.தி.மு.க., தரப்பில் அளிக்கப்பட்டது. பின், அவை கூடி வழக்கமான அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. மேலவை அனுமதி எப்போது? தமிழகத்தில் மேலவை அமைப்பதற்காக சட்டசபை நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் வந்துவிட்டது. விரைவில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின்போது தமிழக மேலவை தீர்மானம் குறித்த சட்ட மசோதாவை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரவேண்டுமென தி.மு.க., தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை அலுவல் ஆய்வுக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மேலவை அமைய வகை செய்யும் சட்டம் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப் படும் என்று உறுதியாக தெரிகிறது.
தமிழகம்
தமிழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து : 19 பேர் பலி
சென்னை : தமிழகத்தில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால், கும்மிடிப்பூண்டி பகுதியிலும் நேற்று அதிகாலை அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட் டன. டிரைவர்களின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட இந்த விபத்துக்களில், 19 பேர் பலியாயினர். கிருஷ்ணகிரி: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஜெனில்ராஜ் (21) சீனுஜெயராம் (24). டானி ஜான் (29) ரப்பி (19) மற்றும் சனூப் (26). ஐந்து பேரும், சனூப்புக்கு சொந்தமான இன்னோவா காரில், பெங்களூரு சென்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, காரில் மீண்டும் கேரளா திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சனூப் ஓட்டினார். நேற்று அதிகாலை ஒரு மணிக்கு, கிருஷ்ணகிரியை அடுத்த அவதானபட்டி அருகே வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது, கார் மோதியது. இதில், ஜெனில்ராஜ், சீனு ஜெயராம், டானி ஜான், ரப்பி ஆகிய நான்கு பேரும் உடல் நசுங்கி, பலியாயினர். படுகாயமடைந்த சனூப், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சின்னபாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரை (47). இவரது மனைவி வசந்தா (42). மகன்கள் கோவிந்தன் (17) சிவா (8). கிரிவலத்தை முடித்து விட்டு, நான்கு பேரும், மொபெட்டில் வீடு திரும்பினர். திருவண்ணாமலை - பெங்களூரு சாலையில் அய்யம்பாளையம் புதூர் அருகே, நேற்று அதிகாலை 4 மணிக்கு, திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பஸ், மொபெட் மீது மோதியது. இதில், துரை, வசந்தா, கோவிந்தன், சிவா ஆகிய நான்கு பேரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். போலீசார், அரசு பஸ் டிரைவர் குமாரவேலை (32) கைது செய்தனர். மற்றொரு விபத்து: திருவண்ணாமலை அடுத்த துள்ளுக்குட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (25). தேசூர் பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார் (20). இருவரும் நேற்று காலை 7 மணிக்கு பைக்கில் தண்டராம்பட்டு நோக்கி சென்றனர். பெருந்துறைப்பட்டு கிராமம் அருகே வந்த போது, கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதியது. சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சசிகுமார், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மதுரை: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலையிலிருந்து தண்ணீர் பாக்கெட் மூட்டைகள் ஏற்றிய மினிவேன் ஒன்று, நேற்று மதுரைக்கு வந்தது. கண்ணன்(20) என்பவர் வேனை ஓட்டி வந்தார். கிளீனர் முனீஸ்வரன்(17), வேனின் பின்பகுதியில் தண்ணீர் பாக்கெட் மூட்டைகள் மீது அமர்ந்து வந்தார். மதுரையிலிருந்து காய்கறிகள் ஏற்றிய லாரி, சங்கரன்கோவில் அருகே சுரண்டை என்ற ஊருக்கு சென்றது.நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபம் அருகே வந்த போது, இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதின. இதில், வேன் முன்புறம் வலதுபகுதி நொறுங்கி கண்ணன் முகம் சிதைந்தது. பின்புறம் அமர்ந்திருந்த முனீஸ்வரன், இரும்பு கம்பிகள் தாக்கி பலியானர். லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடிவிட்டனர். தர்மபுரி: மதுரை மாவட்டம், சோழன்குரலியை சேர்ந்தவர் மணிராஜ் (30). இவருக்கு சொந்தமான லாரியில், பாத்திரம் ஏற்றி கொண்டு கர்நாடக மாநிலம் கோலாருக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். கிளீனர் புயல்குமார் (25) உடன் சென்றார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி அருகே, நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு லாரி வந்த போது, லாரியை நிறுத்தி, மணிராஜ், புயல்குமார் இருவரும், லாரி கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஈரோட்டில் இருந்து மஞ்சள் பாரம் ஏற்றி கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று, ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை, டிரைவர் ராஜமாணிக்கம் (56) ஓட்டி வந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி அருகே லாரி வந்த போது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, கன்டெய்னர் லாரி மோதியது. இதில், லாரியின் கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த மணிராஜ் மற்றும் புயல்குமார், கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரி ஏறியதில், இருவரும் இறந்தனர். காரைக்கால்: சென்னை, திருவொற்றியூர் காசி விஸ்வநாதர் கோவில் குப்பத்தைச் சேர்ந்தவர் முத்தையன் (42) மனைவி சுந்தரி(35) மகள் சபிதா(12) மகன்கள் சரண்(9) ஜனா(7) முத்தையன் மாமியார் செண்பகவள்ளி(55) அவர் மருமகள் கனகா (19) உடன், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, தரங்கம்பாடியிலிருந்து வாடகை அம்பாசிடர் கார் மூலம் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு நள்ளிரவில் தரங்கம்பாடி திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 3.15 மணியளவில் காரைக்கால் வழியாக கோட்டுச்சேரி ராயன்பாளையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளியின் மதில் சுவர் அருகே உள்ள வேப்ப மரத்தில் பயங்கரமாக மோதியது. விபத்தில் முத்தையன், அவரது மாமியார் செண்பகவள்ளி, மகள் சபிதா, டிரைவர் வேல்முருகன் ஆகியோர் உயிரிழந்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய சுந்தரி, கனகா, சரண், ஜனா ஆகியோரை பொதுமக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், நான்குபேரும் மேல் சிகிச்øகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இதில், சரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையிலிருந்து சென்னை நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று, கும்மிடிப்பூண்டி வழியே சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அதிகாலை 3 மணியளவில் கவரைப்பேட்டை அருகே சென்ற போது சாலையில் நின்ற பார்சல் சர்வீஸ் லாரியின் பின்னால், வேகமாக மோதியது. இதில், இரண்டு லாரிகளும் கவிழ்ந்தன. நெல் மூட்டைகளும், பார்சல்களும், சாலையில் சிதறின. நெல் மூட்டை லாரி கிளினர் ஷேக்யூபி(31), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அனைத்து விபத்துகளையும் போலீசார் விசாரித்து வந்தாலும், இதுபோன்ற அதிகாலை விபத்துக்களைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.
இந்தியா
குடிநீரில் நச்சுக் கலப்பு: மத்திய அரசு கவலை
புதுடில்லி : குடிநீரில், ஆர்சனிக், புளோரைட் மற்றும் இரும்பு மாசு போன்ற நச்சுப் பொருட்கள் கலப்பது குறித்து கவலை தெரிவித்த மத்திய அரசு, மாநில அரசுகள், குடிநீர் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ராஜ்ய சபாவில், பா.ஜ., உறுப்பினர் பிரபாத் ஜா கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சி.பி.ஜோஷி கூறியதாவது: இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்து 80 கிராமப்புற இடங்களில் குடிநீர் மாசுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது, மொத்த கிராமங்களில் 11 சதவீதம். இவற்றில் ஆர்சனிக் மாசு கலப்பு ஒன்பதாயிரத்து 504 இடங்களிலும், புளோரைட் கலப்பு 33 ஆயிரத்து 363 இடங்களிலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆர்சனிக் மாசு கலப்பில் மேற்கு வங்கம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அசாம், பீகார், உத்தரபிரதேசம், சத்திஸ்கர், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. புளோரைட் கலப்பால், ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒரிசா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ், 20 சதவீதத் தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலங்கள் இதில் 65 சதவீதத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2009-10ல் வழங்கப்பட்ட தொகை, எட்டாயிரம் கோடி ரூபாய். இது, 2010-11ல் ஒன்பாயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பாரத் நிர்மாண் திட்டத்தின் முதல் தொகுப்பில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 317 கிராமப்புறங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு, 18 ஆயிரத்து 832 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பாரத் நிர்மாண் இரண்டாம் தொகுப்பில் மீதியுள்ள இடங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும், என்றார்.
General
யாருக்கு ஓட்டு? பிரிட்டன் இந்துக்கள் தயக்கம்
லண்டன் : பிரிட்டனில் மே மாதம் 6ம் தேதி நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில், அங்கு வாழும் 35 சதவீத இந்துக்கள் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். இதனால், பிரிட்டனில் தொங்கு பார்லிமென்ட் அமைய வாய்ப்பிருக்கிறது. பிரிட்டன் வாழ் இந்துக்களுக்கான அமைப்பாக, "இந்து போரம் ஆப் பிரிட்டன்' (எச்.எப்.பி.,) செயல்படுகிறது. பிரிட்டனில் தற்போது ஏழு லட்சத்து 50 ஆயிரம் இந்துகள் லண்டனின் தென்கிழக்கு, லீசெஸ்டர், தி வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷைர் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். கணிசமான தொகையில் இந்துக்கள் இருப்பதால் பொதுத் தேர்தலில் இவர்களின் ஓட்டுக்கள், முக்கிய பங்கு வகிக்கின்றன. யாருக்கு இவர்கள் ஓட்டளிப்பார்கள் என்பது குறித்து, எச்.எப்.பி., கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், "லேபர் கட்சி' வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான கார்டன் பிரவுனுக்கு 27 சதவீதம் பேரும், கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் டேவிட் கேமரூனுக்கு 25 சதவீதம் பேரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் நிக் கெலக்குக்கு 21 சதவீதம் பேரும் ஆதரவாக ஓட்டளித்திருக்கின்றனர். மேலும் 21 சதவீதம் பேர் யாருக்கு ஓட்டளிப்பது என்று முடிவு செய்யவில்லை. இந்நிலையில், இந்த கருத்துக் கணிப்பு குறித்து எச்.எப்.பி.,யின் பொதுச் செயலர் பாரதி டெய்லர் கூறியதாவது: இன்றைய அரசியல் சூழலில் இந்துக்களின் ஓட்டு முக்கிய இடத்தை வகிப்பதால் ஓட்டுப் போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பிரசாரம் செய்ய உள்ளோம். இந்தக் கருத்துக் கணிப்பு பிரதமராக வரவிருப்பவருக்கு எச்சரிக்கை அளித்துள்ளது. பிரிட்டன் அரசியல்வாதிகள் தங்கள் குறைகளைக் களையவில்லை என்ற வருத்தத்தின் வெளிப்பாடுதான் இந்துக்களில் கணிசமான பேர் ஓட்டளிக்க முடிவு எடுக்காததற்கு காரணம். இந்துக்களில் 12 சதவீதம் பேர்தான், லேபர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று நம்புகின்றனர். 39 சதவீதம் பேர் தங்கள் தொகுதி எம்.பி.,யின் முடிவுகளுக்கு ஏற்ப ஓட்டளிக்க இருக்கின்றனர். மேலும் 28 சதவீதம் பேர் தங்கள் சமுதாயத் தலைவர்களான உள்ளூர் தலைவர்கள், கோவில் குருக்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி ஓட்டளிக்க உள்ளனர். 11 சதவீதம் பேர் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆலோசனைப்படி ஓட்டளிக்கப் போகின்றனர். இவ்வாறு பாரதி டெய்லர் தெரிவித்தார்.
தமிழகம்
புதையும் கட்டடங்களுக்கு புத்துயிர் அளிக்க மண் உறுதி தொழில்நுட்பம் நம்பகமானதா?
கோவை : அம்மன்குளம் பகுதியில் புதைந்து வரும் இரண்டாவது கட்டடம் மற்றும் புதைய வாய்ப்புள்ள மேலும் நான்கு கட்டடங்களை உறுதிப்படுத்துவதற்கான விரிவான அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அனைத்து கட்டுமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவை அம்மன் குளம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 936 அடுக்குமாடி குடியிருப்புகள் 16 கட்டடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கட்டடம் ஏப்., 3ம் தேதி மண்ணில் புதைந்ததை அடுத்து, அக்கட்டடத்தை முழுமையாக இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 15 நாட்களில் அதே கட்டடத்தின் முன்புறம் உள்ள மற்றொரு கட்டடமும் 25 செ.மீ., மண்ணில் புதைந்தது. இதன் காரணமாக அக்கட்டடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள விரிவாக்க இணைப்பு, இரண்டாக பிளந்தது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் தவணை முறையில் மண்ணில் புதைந்து வருவது, அரசுக்கு பெருத்த தலைவலியை அளித்துள்ளது. கட்டடங்கள் புதைவதற்கான காரணத்தை கண்டறிய, சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் சாந்தகுமார் மற்றும் சென்னை ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் காந்தி ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு அமைத்தது. இக்குழுவினர் கடந்த வாரம் கட்டடங்களை பார்வையிட்டு, மண் பரிசோதனை செய்தனர். ஆய்வுக்குப் பின், கட்டடங்கள் புதைய அஸ்திவாரத்தின் அடியில் இளகிய மண் இருப்பதே காரணம் என்றும், இதே தன்மையுள்ள மண் மேலும் நான்கு கட்டடங்களின் அடியிலும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை தற்போது அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதைந்து வரும் இரண்டாவது கட்டடம் மற்றும் புதைய வாய்ப்புள்ள நான்கு கட்டடங்களையும் இடிக்காமல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மண்ணை உறுதிப்படுத்த முடியும் என, அறிக்கையில் நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். எனினும், கட்டடங்களை இடிப்பதா, உறுதிப்படுத்துவதா என்பது பற்றி அரசு இதுவரை தெளிவான முடிவுக்கு வரவில்லை. கட்டடங்களை இடித்து புதிதாக கட்டுவதாக இருந்தால் அதற்கான செலவை யார் ஏற்பது, அஸ்திவார மண்ணை உறுதிப்படுத்தினாலும் அதில் குடியேற மக்கள் முன்வருவார்களா? என்ற குழப்பம் காரணமாக இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நிபுணர் குழு அறிக்கையின்படி கட்டடங்களை உறுதிப்படுத்த ஆகும் செலவு, கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பம் பற்றி விரிவான அறிக்கை (டி.பி.ஆர்.,) தயாரிக்கும்படி பொறியாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையின்படிதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறியாளர்கள் சிலர் தெரிவித்தனர். இது பற்றி அவர்கள் மேலும் கூறுகையில், "அம்மன் குளம் பகுதி நிலத்தின் அடியில் உள்ள ஒவ்வொரு மண்ணும் பல்வேறு குணங்களுடன் காணப்படுகிறது. சில இடங்களில் இளகிய நிலையில் காணப்படும் மண், அதன் அருகிலேயே மற்றொரு இடத்தில் உறுதியானதாக உள்ளது. ஆகவே புதையும் கட்டடங்களை இடிப்பதை விட, மண்ணை உறுதிப்படுத்தும் "ஜெட் கிரவுட்டிங் தொழில் நுட்பம்' எளிதானது; நம்பகமானது. "மண்ணின் தன்மைக்கு ஏற்ப, கிரவுட்டிங் தொழில் நுட்பத்துக்கு பயன்படுத்தப்படும் கலவை விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். எந்த இடத்துக்கு எந்த விதமான கலவை பயன்படுத்தலாம் என்பது குறித்து முடிவு செய்ய, தற்போது நிபுணர் குழுவினர், இளகிய மண்ணை சேகரித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். "இப்புதிய தொழில் நுட்பத்தின் நம்பகத்தன்மை, கடைபிடிப்பதால் ஆகும் செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை(டி.பி.ஆர்.,) தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மண் பரிசோதனையின் இறுதி முடிவின் அடிப்படையில்தான் அரசுக்கு டி.பி.ஆர்., சமர்ப்பிக்க முடியும். "மேலும் நான்கு கட்டடங்களின் அடியிலும் இளகிய மண் இருப்பதாக நிபுணர் குழுவினர் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், அக்கட்டடங்களின் அடியில் இருந்தும் மண் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஆனால், இப்போதைக்கு அந்த நான்கு கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அக்கட்டடங்கள் மண்ணில் புதைகிறதா என்பதை தினமும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்' என்றனர். பருவமழை துவங்கி விட்டால், பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படும்; ஏற்கனவே இளகிய தன்மையுள்ளதாக இப்பகுதி மண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை நீர் தேங்கினால் மீதமுள்ள கட்டடங்களும் புதைய வாய்ப்புள்ளது. தற்போது இங்கு அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் கிளம்பிச் சென்று விட்டனர். முதலில் புதைந்த கட்டடம் மட்டும் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அரசு தனது முடிவை அறிவித்தால் மட்டுமே மேற்கொண்டு பணிகளை தொடர முடியும் என்பதால், குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
General
இந்திய படங்களுக்கு வங்க தேசத்தில் தடை நீக்கம்
தாகா : வங்கதேசத்தில், கடந்த 40 ஆண்டுகளாக இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்கதேசம் தனிநாடான பின்,1972ம் ஆண்டு முதல் இந்திய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் சினிமாவை பாதுகாக்கும் வகையில் அப்போது இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் ஆங்கில படங்கள் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வந்தன. அதுமட்டுமல்லாது, கேபிள் "டிவி' மூலம் அந்நாட்டு மக்கள் இந்திய படங்களை பார்த்து ரசித்து வந்தனர். கடந்த 2000ம் ஆண்டு வங்கதேசத்தில் 1,600 தியேட்டர்கள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 600 ஆக குறைந்து விட்டது. திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், இந்திய படங்களை திரையிட, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு உள்ளூர் சினிமா கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "கேபிள் "டிவி'யில் இந்திய படங்களை மக்கள் பார்க்கும் போது, அதை ஏன் தியேட்டர்களில் திரையிடக்கூடாது?' என, திரையரங்க உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகம்
காருக்கு கவர்ச்சி எண் பெற ஐந்தரை லட்சம் செலவழித்த எம்.பி.,
விஜயவாடா : ஆந்திர மாநில எம்.பி., ஒருவர், 34 லட்ச ரூபாய் செலவழித்து வாங்கிய தனது புதிய ஜாகுவார் காருக்கு, பேன்சி நம்பர் வாங்க, ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். விஜயவாடா நகர் காங்கிரஸ் எம்.பி., லகடபதி ராஜகோபால், சில தினங்களுக்கு முன் கார் வாங்கினார். இந்த காருக்கு, பேன்சியாக நம்பர் வாங்க வேண்டுமென விரும்பிய அவர், தனக்கு விருப்பமான ஏபி09 பிஓய் 9999 என்ற எண் தேவையென, மாநில போக்குவரத்து ஆர்.டி.ஓ., அதிகாரிக்கு ஆன்லைன் மூலம், பதிவு செய்து கொண்டார். மொத்த கூட்டுத் தொகையும் "9 9999' ஆக வரும் இந்த பேன்சி நம்பர், அதிக பட்சமாக ஐந்தரை லட்ச ரூபாய் வரை ஏலம் போனது. லகடபதி ராஜகோபால் எம்.பி., இந்த தொகையை செலுத்தி, இந்த கவர்ச்சி எண்ணை ஏலம் எடுத்துள்ளார்.
தமிழகம்
நீதிபதி கோகலேவுக்கு பிரிவு உபசாரம்
சென்னை: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலேவுக்கு, நேற்று பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கோகலே நியமிக்கப்பட்டார். இவரது பெயர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கோகலேவை நியமிக்க, ஜனாதிபதி கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி கோகலேவுக்கு நேற்று பிற்பகல் பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பாராட்டிப் பேசும் போது, "கடந்த 13 மாதங்களில் 5,567 வழக்குகளில் தலைமை நீதிபதி கோகலே உத்தரவு பிறப்பித்துள்ளார்' என்றார். பின், தலைமை நீதிபதி கோகலே பேசும் போது, "ஐகோர்ட் அளவிலான அத்தியாயம் முடிந்து, அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் அத்தியாயம் துவங்க உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது; பணி நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையில் 20 ஆயிரம் குறைந்துள்ளது. கீழ் கோர்ட்டுகளில் 10 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வக்கீல்களின் ஒத்துழைப்பு இல்லாமல், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க முடியாது. கோர்ட் புறக்கணிப்பு, ஒழுங்கீனம் இவற்றுக்கு வக்கீல்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கீழ் கோர்ட்டுகளில் மின் வெட்டு இருக்கக்கூடாது என அரசிடம் கேட்டுக் கொண்டோம். அதன்படி தற்போது கீழ் கோர்ட்டுகளில் மின் வெட்டு கிடையாது' என்றார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கோகலே நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆகக் குறைந்துள்ளது. பிரிவு உபசார நிகழ்ச்சியில் ஐகோர்ட் நீதிபதிகள், ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரசன்னா, லா அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சீனியர் வக்கீல்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
கோவில், கோவிலாக சசிகலா பயணம்
ஸ்ரீரங்கம்:  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சாமி தரிசனம் செய்தார். அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் தோழி சசிகலா.  வரும் குருப் பெயர்ச்சி, அவருக்கு  ஜென்மகுரு என்பதால், அவர் தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ திருத்தலங்களுக்கு சென்று பரிகார பூஜை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன், சிதம்பரம் நடராஜர் கோவில் சென்று பரிகார பூஜை நடத்தினார்.  நேற்று கும்பகோணத்திலிருந்து,  10.15 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவில் வந்தார். தாயார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதியில், சிறப்பு பரிகார பூஜை செய்தார். மதியம் 1.30 மணி வரை கோவிலில் இருந்தார். பின், துவாக்குடி அருகிலுள்ள திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் கோவில் சென்று,  சிறப்பு பரிகார பூஜையில் பங்கேற்றார்.
தமிழகம்
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வாய்ப்பு: பாரதியார் பல்கலை முடிவு
கோவை: பாரதியார் பல்கலையில் ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள், 2012க்குள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை தேர்வாணையர் பாலச்சந்திரன் கூறியதாவது: பாரதியார் பல்கலை மற்றும் பல்கலையுடன் முன்பு இணைக்கப்பட்டிருந்த கல்லூரிகளில் பட்டப் படிப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், நவம்பர் 2012க்கு முன் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம். எந்த ஆண்டில் சேர்ந்திருந்தாலும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுகள் பழைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும். வரும் ஜூலை 2010ல் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் அல்லது பல்கலை தேர்வாணையர் அலுவலகத்தில் இருந்து, மே 5ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். www.bu.ac.in என்ற பல்கலையின் வெப்சைட்டில் இருந்தும் விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே மாதம் 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 60 ரூபாய் அபராதத்துடன் மே 28 வரை சமர்ப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் நாள் குறித்த விரிவான கால அட்டவணை, கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படும். தேர்வில் தோல்வி அடைந்த அனைத்து மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.
தமிழகம்
கத்திரிக்கு முன் வறுத்தெடுக்கிறது வெயில்
சென்னை: தமிழகம் முழுவதும் கத்திரி வெயிலை ஞாபகப்படுத்தும் வகையில், வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கத்திரி வெயில் அடுத்த மாதம், 4ம் தேதி துவங்க உள்ளது. ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசுவதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆயினும், தற்போது கடலோர மாவட்டங்களிலும், வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில வாரங்களாக, கத்திரி வெயிலை ஞாபகப்படுத்தும் அளவுக்கு வெப்பநிலை இருந்து வருகிறது. கடல் காற்று குறைந்ததால், நேற்று சென்னை மற்றும் புறநகரில் கடுமையான வெப்பம் அதிகமாக உணரப்பட்டது. பகல் முழுவதும் சுட்டெரித்த வெப்பநிலையால், பொதுமக்கள் வெளியே தலைக்காட்டுவதை தவிர்த்தனர். சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்பட்டது. அதிகபட்சமாக, வேலூரில் நேற்று 103 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை நகரில் 95, சேலம் 102, பாளையங்கோட்டை 101, திருச்சி 101, கோவை 100, மதுரை 99, புதுச்சேரி 96, கன்னியாகுமரி 94, தூத்துக்குடியில் 93 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பநிலை பதிவாகியது. தொடர்ந்து வெயிலின் அளவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம்
நூல் விலை உயர்வை கண்டித்து இரண்டாவது நாளாக போராட்டம்
ஈரோடு: நூல் விலை உயர்வைக் கண்டித்து, கைத்தறி துணி வணிகர்கள் சார்பில், ஈரோட்டில் நேற்று இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டத்துடன்,  உண்ணாவிரதமும் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் சென்றாண்டு ஜனவரியில், "கண்டை' எனப்படும் 366 கிலோ எடை கொண்ட பருத்தி பஞ்சு, 29 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. தற்போது, கண்டை விலை இரண்டாயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து, 31 ஆயிரத்து 500 ரூபாயாக விற்கிறது. இதன்படி, ஒரு கிலோ பருத்தி பஞ்சு ஆறு ரூபாய் தான் உயர்ந்துள்ளது. ஆனால், நூல் விலை, கடந்த  ஜனவரியிலிருந்து 70 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. கிரே துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 60ம் நம்பர் நூல் 150 ரூபாய்க்கு விற்பனையானது, தற்போது, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 90 ரூபாய்க்கு விற்பனையான 40ம் நம்பர் நூல், இன்று 190க்கு விற்பனையாகிறது. மத்திய அரசு இரண்டு ஆண்டுகளாகவே, கழிவு பஞ்சு மட்டுமல்லாமல், கச்சா பஞ்சையும் ஏற்றுமதி செய்தது. இதனால், நூல் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. மத்திய அரசிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும், மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், கழிவு பஞ்சு மட்டும் இல்லாமல் கச்சா பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்ய மறுத்துவிட்டது. தற்போது, நூல் ஏற்றுமதிக்கு அளிக்கும் ஊக்கத் தொகையை மட்டும் குறைப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், ஊக்கத்தொகை உடனடியாகக் குறைக்கப்படவில்லை. இதனால், ஜவுளி உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆறு மாதங்களுக்கு மேலாகவே தொழில் பெரிதும் பாதித்தது. கைத்தறி, விசைத்தறி கூடங்களில் துணி உற்பத்தி வெகுவாகக் குறைந்து, தொடர்ந்து உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சென்ற வாரம் முதல் விசைத்தறி உற்பத்தியாளர்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில், முதல் கட்டமாக நூல் விலையை எதிர்த்து, ஏப்., 8ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடந்தது. இரண்டாம் கட்டமாக, நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டமும், நேற்று கடையடைப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதமும் நடந்தது. திருப்பூர், சோமனூர், பல்லடம், பள்ளிபாளையம், சென்னிமலை, திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்த துணி வணிகர்கள், துணி வணிகம் சார்ந்த இணை தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், மடி, கைவண்டி தொழிலாளர்கள், வீரப்பன்சத்திரம், லக்காபுரம், சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழகம்
கணிதத்தில் நூறுக்கு 20 மார்க் எடுத்தால் போதும்: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் வேலை கிடைக்கும்
கோல்கட்டா: கணிதப் பாடத்துக்கான தேர்வில் நூறுக்கு 20 மார்க் எடுத்தால் போதும்; மேற்கு வங்கத்தில் ஆசிரியர் வேலை கிடைத்து விடும். படிக்கும் போது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தாலும் அது தான் உண்மை. மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக பள்ளி தேர்வாணையம், மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையம், ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி, அதில் தேர்வு பெறுவோரை ஆசிரியர்களாக பணிக்கு அமர்த்துகிறது. இந்தாண்டும் இது போன்ற தேர்வை நடத்தியது. தேர்வுப் பட்டியலை அறிவிப்பதற்கு முன், தடாலடியாக வேறு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டது. கணிதம் மற்றும் உயிரி அறிவியல் பாடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில், மொத்தம் உள்ள 100 மார்க்குகளுக்கு, 20 மார்க் எடுத்தாலே, ஆசிரியர் வேலை அளிக்கப்படும் என்பது தான், அந்த அறிவிப்பு. ஆனால், தேர்வு எழுதிய அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது. ஒதுக்கீட்டில் உள்ள பிரிவினருக்கு மட்டுமே, இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவித்தது. இதற்கு, மூத்த கல்வியாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர்கள் இதுகுறித்து கூறுகையில், "பள்ளித் தேர்வுகளிலேயே, 100க்கு 35 மார்க் எடுத்தால் தான் பாஸ் என்ற நிலை உள்ளது.  இளைய தலைமுறைக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் வேலைக்கான தேர்வில், 20 மார்க் எடுத்தால் போதும் என்று அறிவித்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது.  இதனால், எதிர்காலத்தில் கல்வியின் தரம் கடுமையாக பாதிக்கப்படும். வருங்கால தலைமுறையின் எதிர்காலமும் இதனால் பாதிக்கப்படும்' என, கவலை தெரிவித்தனர். இதுகுறித்து தேர்வாணைய அதிகாரிகள் கூறியதாவது: பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இடங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காகவே, தேர்வு பெறுவதற்கான மார்க்கை 40 லிருந்து 20 ஆகக் குறைத்துள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம்
தொழிலதிபர் படுகொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசியவர் கைது
கும்மிடிப்பூண்டி: கள்ள தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட, போட்டி காரணமாக தொழிலதிபரை கத்தியால் குத்தி, உடலை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி, காட்டில் வீசிய ஸ்டுடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த, பாதிரிவேடு கிராமத்தில் வசித்து வந்தவர் செங்கல்வராயன்(60). அதே பகுதியில் ஆயத்த ஆடை தயாரித்து, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். அவர் 19ம் தேதி பாதிரிவேடு பஜார் வீதிக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் பாலசுப்பிரமணியன் பாதிரிவேடு போலீசில் புகார் கொடுத்தார். மாவட்ட எஸ்.பி., வனிதா உத்தரவின் பேரில்,  இன்ஸ்பெக்டர் அகமது அப்துல் காதர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாதிரிவேடு பஜார் பகுதியில் முரளிபாபு என்பவரது ஸ்டுடியோவுக்கு அவர் அடிக்கடி செல்வது தெரியவந்தது. முரளிபாபுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முரளிபாபுவுக்கு தொழில் ரீதியாக பலமுறை பணம் கொடுத்து, செங்கல்வராயன் உதவி செய்துள்ளார். ஆந்திர மாநிலம் சத்தியவேடு அடுத்த, பாண்டூர் அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணுக்கும் முரளிபாபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து, தானும் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று செங்கல்வராயன், முரளிபாபுவிடம் தெரிவித்தார்.  நட்பை பலப்படுத்த அவர் கேட்டுகொண்டதன் பேரில், பாரதி மூலம் அவரது தோழியும் பக்கத்து வீட்டு பெண்ணுமான லட்சுமி என்பவருடன் செங்கல்வராயனுக்கு முரளிபாபு தொடர்பு ஏற்படுத்தி கொடுத்தார். செங்கல்வராயனுடன் இருந்த தொடர்பால் லட்சுமி, வெங்கடாபுரத்தில் வீடு கட்டினார். இதனை கண்ட பாரதி பொறாமை கொண்டதுடன் தானும் வசதியுடன் வாழ விரும்பினார். இதனை அடுத்து செங்கல்வராயனுடனும் அவரும் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டார். இதுகுறித்து அறிந்த முரளிபாபு ஆத்திரம் கொண்டார். தன்னுடன் பழகிய பாரதியை, செங்கல்வராயன் தட்டி பறித்ததால் முரளிபாபு கோபம் கொண்டார். கடந்த 19ம் தேதியன்று, தனது ஸ்டுடியோவுக்கு வந்த செங்கல்வராயனை மாடியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் இருவருக்கும் பாரதி விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, செங்கல்வராயனை கத்தியால் குத்தி முரளிபாபு கொலை செய்தார். உடலை அப்புறப்படுத்த முடியாமல் கை, கால், தலை, உடல் என துண்டு துண்டாக வெட்டி அவற்றை அவர் இரண்டு மூட்டைகளாக கட்டினார். லட்சுமி, பாரதி வசித்து வரும் வெங்கடாபுரம் கிராமம் அருகே உள்ள அனந்த்தையா என்ற வனப்பகுதியில் வெட்டிய பாகங்களை முரளிபாபு வீசினார். முரளிபாபு அளித்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த போலீசார் செங்கல்வராயன் உறுப்புகளை தேடிச் சென்றனர். அவர் வீசிய வனப் பகுதியில் கை, கால், உடல் ஆகிய உறுப்புகள் கிடைத்த நிலையில் தலை பகுதி மட்டும் கிடைக்கவில்லை. கைப்பற்றிய உறுப்புகளை, பிரேத பரிசோதனைக்கு சத்தியவேடு அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வனப்பகுதியில் அவரது தலை பகுதியை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்வராயனை கொலை செய்த முரளிபாபுவுக்கு, மோனிகா என்ற மனைவியும் எட்டு மாத கைக் குழந்தையும் உள்ளனர்.
தமிழகம்
மோசடி கேதன் தேசாயிடம் 3 நாட்கள் விசாரிக்க அனுமதி
புதுடில்லி: மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் மற்றும் மூன்று பேரிடம் மேலும் மூன்று நாட்கள் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். "வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டதில், குற்றம் சாட்டப்பட்டவர்களை மேலும் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துவது அவசியம் என தோன்றுகிறது. எனவே, கேதன் தேசாயையும் மற்றும் மூன்று பேரையும் மே மாதம் 1ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்' என, நீதிபதி கூறினார். இந்த வழக்கில் கேதன் தேசாயுடன் இடைத்தரகர் ஜே.பி.சிங், பாட்டியாலாவைச் சேர்ந்த ஜியான் சாகர் மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சுக்விந்தர்சிங் மற்றும் கன்வல்ஜித் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
கொடுமைக்கார மனைவியிடமிருந்து கணவனுக்கு விடுதலை
மும்பை: பத்து ஆண்டுகளாக, சந்தேகப்பட்டே கொடுமைப்படுத்திய மனைவியிடமிருந்து, அப்பாவி கணவனுக்கு விவாகரத்து மூலம் விடுதலை  கொடுத்துள்ளது மும்பை குடும்ப நல கோர்ட். அமித் (47), மீனா (49) இருவரும் 1991, ஜூலையில் மணம் புரிந்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்வு 1992, ஜூன் மாதத்தோடு முடிந்து போனது. தன் கணவரின் டைரியில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கவிதையை பார்த்து, அவருக்கு கள்ளத் தொடர்பு உள்ளது என்று மனைவி சந்தேகப்பட்டார். இது தான் பிரச்னைக்கு காரணம். இதையடுத்து, மீனா தன் சகோதரருடன் போய் விட்டார். இருந்தும் கணவர் மீது கொண்ட சந்தேகப் பேய் மீனாவைத் தொடர்ந்து விரட்டியதால் 1994, ஜூனில் கணவரின் வீட்டுக் கதவை உடைத்து, குடிபுகுந்தார். கணவருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து, அவரை வீட்டுக்குள் நுழையவிடாமல் செய்து விட்டார். கடந்த 2000ல் கோர்ட் இடைக்காலத் தடை உத்தரவு பெற்று, அமித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். சந்தேகம் தீராத மீனா, தன் கணவருக்கு பல வழிகளில், "டார்ச்சர்' கொடுக்க ஆரம்பித்தார். திருமணமானதிலிருந்து இருவருக்குள்ளும் தாம்பத்ய உறவு ஏற்பட அவர் சம்மதிக்கவில்லை. சின்ன, சின்ன விஷயங்களுக்கெல்லாம் அமித்திடம் சண்டை போட்டார். தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அமித்தை அடிக்க ஆரம்பித்தார். ஒழுங்காக சமையல் செய்வதில்லை. அமித்துக்கு உடல்நலம் சரியில்லாத போது கூட, அவரை கவனித்துக் கொள்ளவில்லை. மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல், அமித் மனம் உடைந்து போனார். மன உளைச்சலுக்கு ஆளானார். தேவையில்லாத செலவுகள் செய்ய வேண்டியவரானார். இதனால் குடும்ப நல கோர்ட்டில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அவருடன் வாழ விரும்புவதாக அவரது மனுவை எதிர்த்து வேறொரு மனு தாக்கல் செய்தார் மீனா. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,"கள்ளத் தொடர்பு என்ற சந்தேகத்தால் மீனா, அமித்தை பயங்கரமாகக் கொடுமைப்படுத்தியுள்ளார். 8 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து, பின் 10 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னும் கூட, மீனா தன் கொடுமையை குறைக்கவில்லை. மீனாவின் நடத்தைகள் யாவும் புகுந்த வீட்டில் வாழ விரும்பும் மனைவியின் நடத்தையாகத் தெரியவில்லை' என்று கூறி, அமித்துக்கு மீனாவிடமிருந்து விவாகரத்து கொடுத்து அவரை "விடுதலை' செய்தனர்.
தமிழகம்
விஜிலென்ஸ் விசாரணைக்கு தடை கோரி ஏ.கே.விஸ்வநாதன் மனு தாக்கல்
சென்னை: விஜிலென்ஸ் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு அரசிடம் விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். போலீஸ் உயர் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: எனக்கு எதிராக விஜிலென்ஸ் விசாரணை நடத்த, தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், விஜிலென்ஸ் கமிஷனர் அடங்கிய குழு உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை மூலமாக தான் இதுபற்றி எனக்கு தெரிய வந்தது. ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்துக்கு காரணமான சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை பாதுகாப்பதற்காக என்னையும் மற்ற அதிகாரிகளையும் கீழ்படிய வைக்கும் நோக்கில் இவ்வாறு விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேள்விகள் அடங்கிய பட்டியலை எனக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி., வழங்கினார். அதில் அனுப்பியவரின் பெயர், கையெழுத்து இல்லை. கேள்விகளுக்கு பதிலளித்து அதை டி.எஸ்.பி.,யிடம் அளித்தேன். எனது வீட்டை பொதுப்பணித் துறையின் நிர்வாக பொறியாளர் மதிப்பீடு செய்யப் போவதாக, டி.எஸ்.பி.,யிடம் இருந்து எனக்கு கடிதம் வந்தது. நான் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி. அகில இந்திய சர்வீஸ் பணி சட்டம் மற்றும் விதிகளுக்கு ஐ.பி.எஸ்., பணி உட்பட்டது. ஒரு போலீசால் எப்படி விசாரணை நடத்த முடியும் என தெரியவில்லை. விசாரணையை எதிர்கொள்ளவோ, எனது நேர்மையை நிரூபிக்கவோ எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட்டில் நான் உண்மையை கூறியதால், எனக்குரிய கண்ணியம், அந்தஸ்தை குறைக்கின்றனர். எந்த அடிப்படையில் விசாரணை செய்கின்றனர் என தெரியவில்லை. இது புதிராக உள்ளது. எனக்கு எதிராக போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். புலன் விசாரணையை நடத்தும் முறையை பார்த்தால், தீய நோக்கத்தை நிரூபிக்கும், புண்படுத்தும் நோக்கில் இவ்வாறு செயல்படுகின்றனர். எனவே, எனக்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு இயக்குனர் மற்றும் டி.எஸ்.பி.,க்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு அரசிடம் இருந்து விளக்கம் பெறுமாறு அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 29ம் தேதிக்கு (இன்று) நீதிபதி தள்ளிவைத்தார்.
தமிழகம்
முன்ஜாமீன் கேட்டு நித்யானந்தா மனு
சென்னை: மூன்று வழக்குகளில் முன்ஜாமீன் கோரி, சென்னை ஐகோர்ட்டில் நித்யானந்தா சாமியார் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நடிகை ரஞ்சிதா உடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக உள்ள காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதையடுத்து, நித்யானந்தா தலைமறைவானார். அவர் மீது வக்கீல் அங்கயற்கண்ணி என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். கோவை, புதுச்சேரியிலும் நித்யானந்தாவுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டன. கர்நாடகாவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. சாமியார் நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த மனு: எனக்கு எதிராக அங்கயற்கண்ணி என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சன்னியாசி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி சொத்துகள் சேர்த்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை சரிவர விசாரிக்காமல், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனக்கு எதிரான வழக்குகள், கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். கோவையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் விஸ்வநாத் என்பவரும், புதுச்சேரியில் அல்லாடி மகேந்திரன் மற்றும் சிலரும் புகார் கொடுத்துள்ளனர். விளம்பரத்துக்காக என் மீது பொய் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழகம்
தறிகெட்டு ஓடிய லாரி மோதி ஒருவர் பலி: 20 பேர் படுகாயம்
சென்னை: சென்னையில், நள்ளிரவில் எமனாக மாறி மரண பீதியை ஏற்படுத்திய லாரி மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ஒருவர் பலியானார். சென்னை அருகே புழலிலிருந்து -அம்பத்தூர் வழியாக பூந்தமல்லிக்குச் சென்ற சரக்கு லாரி கண்மூடித்தனமான வேகத்தில், சாலையில் நடந்தது சென்றவர்கள், டூவீலர், ஆட்டோ, கார்கள், மினிவேன் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து புழல் அம்பத்தூர், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் லாரி மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.இதில் சரக்கு ஆட்டோ ஓட்டிச் சென்ற டிரைவர் பலியானார். திருமுல்லைவாயில் பகுதியில் டூவீலர் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. திருமுல்லை வாயல் மணிகண்டபுரம் பகுதியில்,சாலையின் குறுக்கே மற்றொரு லாரி வரவே, மரண லாரியை ஓட்டிய டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். லாரியை ஓட்டிய டிரைவர் குடிபோதையில் இருந்தாரா அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பத்தூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கண்ட சம்பவத்தால் புழல், அம்பத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து மாதவரம் போக்குவரத்து போலீசார் மற்றும் பூந்தமல்லி போக்குவரத்து புலணாய்வு போலீசார் உட்பட அனைவரும் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், லாரியை ஓட்டிய டிரைவர், புழல் பகுதியில் இருவர் மீது மோதியுள்ளார். அந்தப் பகுதியிலிருந்த ஆட்டோ டிரைவர்கள் லாரியை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்து லாரியை அதிவேகமாக ஓட்டியுள்ளார். புழலையடுத்த, சூரப்பட்டு எனும் இடத்தில் தகவலறிந்து, அந்தப் பகுதி மக்கள் லாரியை மடக்க முயன்றுள்ளனர். லாரி வரும் வேகத்தைப் பார்த்த மக்கள் விலகி ஓடியுள்ளனர். இதிலும் சிலருக்கு காயமேற்பட்டது. திருமுல்லைவாயல் பகுதியில் மற்றொரு லாரி குறுக்கிடவே, சம்பந்தப்பட்ட லாரியை ஓட்டிய டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.அங்கிருந்த சிலர் கூறுகையில்,''தப்பியோடிய டிரைவர், சார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிதிருந்தாக,'' தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து, மாதவரம் போக்குவரத்து போலீசார் மற்றும் பூந்தமல்லி போக்குவரத்து புலணாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தாண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயிலை கடத்திச் சென்றதால் அதிகாலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதேப்போன்று, தற்போது கண்டெய்னர் லாரியை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியிருப்பது பரபரப்பை பூந்தமல்லி-திருமுல்லைவாயல் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா
அரசு மருத்துவக் கல்லூரியில் புறநோயாளிகள் பிரிவு துவக்கம்! நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தீவிரம்
புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்யாண்டிலேயே மாணவர் சேர்க்கையை துவக்க அரசு தீவிரமாக உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு நேற்று முதல் செயல்படுகிறது. புதுச்சேரி அரசின் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் 2006ம் ஆண்டில் துவங்கியது. பல்வேறு காரணங்களால் முட்டுக்கட்டை ஏற்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறுத்தப் பட்டன.பின், மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து நடத்தவும், கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்கவும் அரசு முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் வல்சராஜ் தீவிரம் காட்டினார். கடந்த நவம்பர் மாதம் மருத்துவக் கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் வல்சராஜ், நடப்பு 2010-11 கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரி துவக்கப் பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் துவக்கப்பட்டு, முழு வீச்சில் நடந்து வருகிறது. முதலாமாண்டில் 150 மாணவ மாணவிகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாமாண்டு சேர்க்கைக்கு அனுமதி பெறும் வகையில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மருத்துவமனை கட்டடத்தில் 4 மாடிகளும், மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் 3 மாடிகளும் ஏற்கனவே கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 2 மாடிகளை மட்டும் தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மருத்துவக் கல்லூரியை பொருத்தவரை வகுப்பறைகள், கருத்தரங்க கூடம், ஆய்வுக் கூடங்கள் தயார் செய்யப் பட்டுள்ளது. மருத்துவமனையில் 300 படுக்கைகள் போடப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக் கூடமும் தயாராகி விட்டது. மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு நேற்று முதல் செயல்பட துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் கவர்னர் இக்பால் சிங், முதல்வர் வைத்திலிங்கம், சுகாதாரத் துறை அமைச்சர் வல்சராஜ் ஆகியோர் மருத்துவக் கல்லூரியை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். சுகாதாரத் துறை செயலர் விஜயன், இயக்குனர் திலீப்குமார் பாலிகா உடனிருந்தனர். மருத்துவமனை, கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் பணிகள் தொடர்பாக மருத்துவக் கல்லூரி கண்காணிப்பு பொறியாளர் மோகன்ராஜ், டீன் பதிவாளர் உள்ளிட்டோர் விளக்கி கூறினர்.முதல்வர் வைத்திலிங்கம் கூறும்போது, 'அரசு மருத்துவக் கல்லூரி இந்தாண்டில் செயல்பட துவங்கும் என்பது புதுச்சேரி மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட துவங்கி விட்டது' என்றார்.அமைச்சர் வல்சராஜ் கூறும்போது,'மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை செயல்படும். புறநோயாளிகள் பிரிவை தொடர்ந்து விரைவில் உள்நோயாளிகள் பிரிவும் செயல்படும். மருத்துவக் கல்லூரிக்கு அனுபவம்வாய்ந்த, திறமையான பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் 65 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான எண்ணிக்கையிலான மருத்துவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். மருத்துவக் கவுன்சில் குழுவினர் அடுத்த வாரத்தில் புதுச்சேரிக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளனர். திட்டமிட்டபடி இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை துவக்க தீவிரமாக உள்ளோம்' என்றார்.கல்லூரியில் ஆய்வு நடத்துவதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் புதுச்சேரி வர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
இப்படியும் துரோக ( அ) திகாரிகள் காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம்
புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார். அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் என்பார்கள் அது போல சமீப காலமாகவே உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் சட்ட விரோத மற்றும் பெரும் ஊழல் விஷயங்களில் சிக்கி வருகின்றனர். பல கோடிகள் விழுங்கிய மருத்துவ கவுன்சில் தலைவர் தேசாய் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.   இந்நிலையில் பாகிஸ்தானில் உள் இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறை செயலர் என்பது இவரது பொறுப்பு. சார்க் மாநாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை குறித்து பேச வருமாறு கூறி போலீசார் டில்லியில் நாசுக்காக கைது செய்தனர். இவர் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரகசியமாக வைத்து விசாரிக்கப்பட்டு வருவதில் கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த உளவு காரியங்களை செய்து வந்திருக்கிறார்.   நெருக்கமாக இருந்தவர்கள் யார் ? : குறிப்பாக இவர் பாகிஸ்தானில் உள்ள உளவு துறை அதிகாரி ராணா என்பவருடன் காதல் வயப்பட்டாராம். மேலும் இவருக்கு பணம் என்றால் கொள்ளை பிரியமாம் . ( நம்ம தேசாயை விடவா ? ) இதன் காரணமாக தனது பணியை ஒழுங்காக செய்யாமல் உளவுக்கு தகவல் சொல்வதை தொழிலாக செய்து வந்திருக்கிறார். இவருடன் 14 பேர் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்திருக்கின்றனர். இதில் 10 பேர் இந்தியர்கள் 4 பேர் பாகிஸ்தானியர்கள். இந்த 14 பேரும் மாதுரியின் உளவு செயல்களுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் டாக்டர் தம்பதியினருடன் தொடர்பு வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கும் வந்து தங்கி இருந்திருக்கிறார் மாதுரி .   இவருடன் துணையாக இருந்த இந்திய அதிகாரிகளை தற்போது உளவுத்துறை கண்காணித்து வருகிறது. இவரது போன் மற்றும் மெயில் தொடர்பு மூலமாக இந்த தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக ராணுவ ரகசியங்களை விற்று காசாக்கியிருக்கிறார், இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ. கே., அந்தோணி கூறுகையில் இது சீரியஷான விஷயம் முழுக்கவனம் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.நம்பிக்கை , மோசடிக்கு பேர் போன இந்த பெண் அதிகாரி குறித்து இன்னும் புதிய திடுக் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது .
இந்தியா
இந்தியா - பாக்., பிரதமர்கள் சந்திப்பு
திம்பு : பூடான் தலைநகர் திம்புவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும், பாக்., பிரதமர் அப்துல் ரசா கிலானியும் சந்தித்து பேசினர். 16 வது தெற்காசிய மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் , ஆப்கன், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நோளம், உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்று மாநாட்டில் சார்க் நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பரிவர்த்தனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்று ( வியாழக்கிழமை ) , பிரதமர் மன்மோகன்சிங்கும், பாக்., பிரதமர் கிலானியும் சந்தித்து பேசினர். கடந்த ஆண்டில் எகிப்தில் இருவரும் சந்தித்து பேசிய பின்னர் இன்று சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு மணி நேரம் தனி அறையில் பேச்சு நடந்தது. மும்பை தாக்குதலில் தொடர்பான முக்கிய குற்றவாளியை ஒப்படைப்பது மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பேச்சின்போது இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த பேச்சின் முக்கிய சாரம்சம் குறித்து விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தமிழகம்
ரூ.340 கோடி மோசடியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது
புதுடில்லி : ரூ.340 கோடி கலால் வரி மோசடி வழக்கில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலருமான ரவியும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். ரவியை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கலால் வரி செலுத்தாமல் 340 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக, ராயல் மதுபான நிறுவன உரிமையாளர் அசோக் கீமானி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் மூன்று பேரை, நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். இவர்களில் கீமானி டில்லியிலும், மற்ற மூன்று பேர் டாமனிலும் கைது செய்யப்பட்டனர். டாமனில் உள்ள கலால் வரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, பல கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரி மற்றும் "வாட்' வரி மோசடி செய்துள்ளார் கீமானி. இது மட்டுமின்றி, கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் சட்ட விரோதமான வகையில், மதுபானங்களை விற்றுள்ளனர். இதன் மூலம் 340 கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், டாமனின் தற்போதைய நிர்வாக அதிகாரியை மாற்றுவதற்காக, மதுபான நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவின் இணைச் செயலராக இருப்பவருமான ரவியும் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரவியை சஸ்பெண்ட் செய்யும்படி, மத்திய பணியாளர் நலத்துறையையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ரவியின் கைதைத் தொடர்ந்து, அவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். பின்னர் ரவியும், அவரது கூட்டாளியும் டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா
சமையலறை உறுப்பினர்களா இருக்கோம்!
சவுபாக்யா கிரைண்டர் ஷோரூமின் இயக்குனர்களில் ஒருவர் வரதராஜன்: நான் சின்னப் பையனா இருந்தப்ப, எங்க அப்பா ஆரம்பிச்ச பிசினஸ் இது. கிரைண்டர் செய்றது குடிசைத் தொழிலா இருந்த காலகட்டம். எங்க சொந்தக்காரர் ஒருத்தர் அப்படி கிரைண்டர் செய்து, வித்துட்டு இருந்தார். அவர்கிட்ட அப்பா ஒரு கிரைண்டர் வாங்கினார். அந்த கிரைண்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகும். ஒரு முறை இந்த கிரைண்டருக்குள் என்ன தான் இருக்குன்னு கழட்டிப் பார்த்தார். உள்ள இருந்த மெக்கானிசம் சுலபமா இருக்கவும், நாமே கிரைண்டரை செய்து விக்கலாமேன்னு தோணுச்சு. அப்படித் தொடங்கினது தான் இந்த சவுபாக்யா. இன்னிக்கு தமிழகத்துல ஒன்பது வினியோகஸ்தர்கள் இருக்காங்க. பெங்களூரு, கேரளா, டில்லி, சிங்கப்பூர், துபாய்னு, இட்லி இருக்கற இடமெல்லாம் சவுபாக்யா இருக்கு. அந்தக் காலத்துல, வீட்டுல கிரைண்டரான்னு ஆச்சரியப்படுவாங்க. கிச்சன்ல பாதியை அடைச்சுக்கும். பயங்கர சத்தமாவும், தூக்க முடியாத அளவுக்கு வெயிட்டாவும் இருக்கும். இப்ப கொஞ்சம் மாத்தி வெளிநாடு போறவங்களும் தூக்கிட்டுப் போக வசதியா இருக்கணும்னு வெறும் 11 கிலோவுல கிரைண்டர் தயார் பண்ற அளவுக்கு வந்தாச்சு. உருளைக்கிழங்கு தோல் எடுக்கற மிஷின், தேங்காய் துருவற மிஷின், 1,000 சப்பாத்தியை ஒரு மணி நேரத்துல் சுட்டு வெளியே தள்ளுற மிஷின், காய்கறி வெட்டித் தள்ளுற மிஷின், இப்படி, கஸ்டமர்ஸ் கேக்கறதை உருவாக்கித் தர்றோம். இன்னிக்கு பேஷனுக்கு ஏத்த மாதிரி அப்டேட் பண்ணிக்கறதால தான் கிரைண்டர் விற்பனையாளரா மட்டும் இருந்த நாங்க ஒவ்வொரு வீட்டின் சமையலறை உறுப்பினர்களாகவும் மாறியிருக்கோம்.
இந்தியா
டவுட் தனபாலு
அமைச்சர் தமிழரசி: 100 மாணவர்களுக்கு மேல் தங்கியிருக்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு முழு நேர துப்புரவு பணியாளரும், 50 மாணவர்களுக்கு மேல் தங்கியிருக்கும் விடுதிக்கு பகுதி நேர துப்புரவு பணியாளரும் நியமிக்கப்படவுள்ளனர். டவுட் தனபாலு: அப்படின்னா, விடுதிகளில் இவ்வளவு நாளாக மாணவர்கள் தான் துப்புரவுத் தொழிலாளிகளாக இருந்தாங்களா... இருந்தாலும், விடுதியை கூட்டிப் பெருக்க ஆள் நியமிச்சதையெல்லாம், ஆதிதிராவிடர்களுக்கான சலுகையாக, சட்டசபை அறிவிப்பில சொல்றது, "சுத்தமா' நல்லா இல்லை...! மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி: எங்கள் கட்சி எம்.எல்.ஏ., லதா, பஸ்சில் ஏறி அடையாள அட்டையை காட்டியுள்ளார். இருப்பினும், அவரிடம் நடத்துனர் வலுக்கட்டாயமாக கட்டணம் வாங்கியுள்ளார். டவுட் தனபாலு: எல்லாத்திலும் போலி வர்ற மாதிரி, எம்.எல்.ஏ.,க்களிலும் போலி வந்துட்டதா நினைச்சு, டிக்கெட் கொடுத்திருப்பார் போலிருக்கு... "கவுன்சிலர்களே விதவிதமான கார்களில் பறக்கும் போது, எம்.எல்.ஏ., பஸ்ல வர்றதாவது... நம்பற மாதிரி இல்லையே'ன்னு கண்டக்டர் நினைச்சதுல ஒண்ணும் தப்பில்லையே...! அமைச்சர் நேரு: அ.தி.மு.க., ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் தற்போதும் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்பட்டது என்றால், கோர்ட்டுக்கு செல்லுங்கள்; நான் பதில் சொல்கிறேன். டவுட் தனபாலு: சட்டசபையில கேள்வி கேட்டா, கோர்ட்டில் பதில் சொல்றேன்னு சொல்றீங்களே... நீங்க கோர்ட்டில் பதில் சொல்றீங்களோ இல்லையோ, தேர்தலின்போது, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லித்தானே ஆகணும்... அப்பவும், இதே சவாலை விட முடியுமான்னு யோசிச்சிக்கிடுங்க!
இந்தியா
இது உங்கள் இடம்
முதல்வர் தலையிட வேண்டும்! துரை நடராஜன், வாடிப்பட்டி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், ஆற்காடு வீராசாமி பொறுப்பில் உள்ள மின் துறையால், 87 வயதில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, "நினைத்ததை முடிக்கும்' ஆற்றல் படைத்த கருணாநிதி அரசின், சாதனை ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது கடும் மின்வெட்டே. சட்டசபை உறுப்பினர்கள் சிரமப்படாமல் வந்து, தமிழக மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக, "சொகுசு சட்ட சபை' கட்டடத்தை, 425 கோடி ரூபாய் செலவில், ஐந்து மாத கால தீவிரமான கடும் முயற்சியின் பலனாக பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஓரங்கட்டிவிட்டு, முதல்வர் கருணாநிதியே கட்டடப் பணியை, தன் பொறுப்பில் எடுத்து, காலை, மாலை என நேரம் பார்க்காமல், 120 தடவைகள் பார்வையிட்டு, வேலை வாங்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா பாராட்டும் அளவிற்கு, இதில் உயர்ந்து நிற்பவர்! தி.மு.க., கட்சியினர் இதில் பெருமிதம் கொள்வது உண்மையே! ஆனால், அதேபோல் ஏழு கோடி தமிழக மக்கள், அன்றாடம் மின்வெட்டால் அதிகம் சிரமப்படுவதையும், விவசாயிகள், நெசவாளர்கள், சிறுதொழில்கள் பாதிப்பு அடைவதையும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி காதில் வாங்கிக் கொள்ளாமல், நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டார் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். பல ஆண்டு காலமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் திட்டம் தீட்டி, மின்சாரம் கிடைக்க வழியில்லாமல் தமிழகம் தவிக்கிறது. செயல்திறன்மிக்க முதல்வர், மின்துறையை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டிருந்தால், "மின் பற்றாக்குறை' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும். இன்னும் காலம் கடந்து விடவில்லை! சட்டசபை கட்டடப் பணியில் காட்டிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் மின் திட்டப்பணிகளான, வட சென்னை 1,200 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தையும், திருவள்ளூர் 500 மெகாவாட் மின் திட்டத்தையும் தினசரி பார்வையிட்டால், மின்வெட்டை தவிர்க்க முடியும்! மாநிலத்தில் மிகப்பெரிய மின்திட்டப்பணி நடக்கும் இடங்களுக்கும் சென்று, அவர் ஊக்கம் கொடுக்க வேண்டும்! இல்லையென்றால், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம் அணிவகுக்கும் நிலை ஏற்படும். துதி செய்யவா மாநாடு? சங்கர பாண்டியன், அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., அரசு, விரைவில் செம்மொழி மாநாடு நடத்த உள்ளது. இதற்காக இணைய தளமும், விளம்பரமும் பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளது. "யார் வேண்டுமானாலும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம்' என்ற விளம்பரம் வேறு! இதற்காக தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றேன். அங்கு எனக்குக் கிடைத்த பதில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை எனக்குக் காட்டினார். அதன் தலைப்புகள் அனைத்தும், கருணாநிதியும் - அண்ணாதுரையும்; ஈ.வெ.ரா., போற்றிய கருணாநிதி; கருணாநிதியின் பேச்சாற்றல்; கருணாநிதி கவிஞரா, எழுத்தாளரா என்ற ரீதியில் இருந்தன. இதற்கு எதற்கு, செம்மொழி மாநாடு என்று பெயர்? பேசாமல், "கருணாநிதியை போற்றும் மாநாடு' என்று பெயர் சூட்டியிருக்கலாம். ஏனெனில், மேற்கூறிய தலைப்புகளைத் தவிர, மற்ற கட்டுரைகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டனவாம். பின் எதற்கு இத்தனை ஆரவாரம்? பிடிவாதம் வேண்டாம்! கே.சபாபதி, கோவையிலிருந்து எழுதுகிறார்: மாயாவதிக்கு சரியான போட்டி உமாபாரதி தான். அவரை நெடுங்காலமாக கட்சியில் இருந்து நீக்கி வைத்து, பா.ஜ., தண்டித்து வருகிறது. ம.பி.,யில் முதல்வராக ஆக்கினதும் பா.ஜ., தான்; நீக்கினதும் பா.ஜ., தான். அதற்கு அவர் என்ன தவறு செய்திருந்தாலும் அதைப் பகிரங்கமாகச் சொல்லி தண்டிக்க வேண்டும். "கொடியை அவமானப்படுத்தினார்' என்று சொல்வதெல்லாம் மிகையான குற்றச்சாட்டு. கோவிந்தாச்சார்யாவை மணந்து கொண்டார் என்றால், அது அவர் சொந்த விவகாரம்; அது ஒரு இயற்கையான நிகழ்ச்சி. காந்திஜி மகனும், ராஜாஜி மகளும் கூட, இப்படி ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்ததால், திருமணம் செய்து கொள்ளவில்லையா? உமாபாரதியின் அரசியல் ஆற்றலை பா.ஜ., இழந்து வருகிறது; வீணடித்து வருகிறது. "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்பது போல, "பா.ஜ., ஒரு ஆணாதிக்கக் கட்சி' என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறது. மறுபடியும் உமாபாரதி போன்றவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வது தான் கட்சிக்கும் நல்லது; உமாபாரதிக்கும் நல்லது. ஒரே குற்றத்தை ஆண் செய்தால், அதற்கு ஒரு வகை தண்டனை, பெண் செய்தால் அதற்கு வேறு தண்டனையா? பா.ஜ., அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்சி வளராது; ஆட்சியையும் பிடிக்க முடியாது. விழிப்புணர்வு எப்போது? எஸ்.ராதாகிருஷ்ணன், பெரியகுளத்திலிருந்து எழுதுகிறார்: "காலாவதியான மருந்துகளை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; அரசின் தொடர் நடவடிக்கையால் தான் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்' என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி, இதுவரை விழிப்புணர்வு இல்லாமல், எத்தனை ஆண்டுகளாக போலி மருந்துகள், காலாவதி மருந்துகளை மக்கள் சாப்பிட்டனரோ? எத்தனை ஏழைகள் பாதிக்கப்பட்டனரோ? உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் தான், அவர்களுக்கு கஷ்டம் தெரியும். அதிகாரிகள் தங்கள், "பாக்கெட்' நிறைந்தால் போதும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருந்து ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் தற்போது உள்ள அமைப்பு, 1985ம் ஆண்டு இருந்த மருந்து கடைகளின் எண்ணிக்கையில் அமைக்கப்பட்டது. அப்போது, 16 ஆயிரம் மருந்து கடைகள் இருந்தன; இப்போது 43 ஆயிரம் கடைகள் உள்ளன. "கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்பது போல, தற்போது தான் மருந்து கட்டுப்பாடு அலுவலர்களை நியமிக்க உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த பகுதியில் காலாவதி மருந்து விற்கிறதோ, அங்கு ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை அவசியம். பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டனர்... சரி. மக்கள் உயிரோடு விளையாடக் கூடாது என்று அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு பெறுவது எப்போது? பொறுப்புணர்வு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வந்தால் நாடு நலம் பெறும்.
தமிழகம்
பாட்டுப்பாடிய எம்.எல்.ஏ.,
போக்குவரத்து மானியக் கோரிக்கை மீது தி.மு.க., எம்.எல்.ஏ., சுப்பிரமணியம், பேச அழைக்கப்பட்டபோது, ராகத்துடன், முதல்வரைப் பாராட்டி பாட்டுப் பாடினார். அவர் பாடி முடிந்ததும், துணை சபாநாயகர் துரைசாமி, "இது என்ன ராகம்... என்ன தாளம்...' எனக் கேட்டார். உடனே, சுப்பிரமணியம் ராகங்களை பட்டியலிட, "தெரியாமக் கேட்டுட்டேன்' என துணை சபாநாயகர் சொல்ல, சபையில் சிரிப்பொலி எழுந்தது. இறுதியில், "நான் பாடியது நாகூர் அனிபாவின், "வாப்பா' ராகம்' எனச் சொல்லிவிட்டு, சுப்பிரமணியம் பேச்சைத் தொடர்ந்தார்.
தமிழகம்
இளைஞர் காங்., செயற்குழுக் கூட்டம்
சென்னை : தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலுக்குபின், புதிய நிர்வாகிகளின் செயற்குழுக் கூட்டம், முதன் முறையாக ஈரோட்டில் வரும் 2ம் தேதி கூடுகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் மேற்பார்வையில் நடந்து முடிந்தது. மாநில தலைவர் உட்பட 10 நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்றுக் கொண்டனர். பின், மாநில நிர்வாகிகள் அனைவரும் டில்லிக்கு சென்று, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதன்முறையாக புதிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும், மாநில செயற்குழுக் கூட்டம், ஈரோட்டில் வரும் 2ம் தேதி நடக்கிறது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ்சத்தவ் எம்.எல்.ஏ., அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் விஷ்ணுநாத் எம்.எல்.ஏ., மற்றும் மாநில நிர்வாகிகள், லோக்சபா தொகுதி (மாவட்ட) தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கும் வாகன ஊர்வலம், கிராமங்களில் இளைஞர் காங்கிரஸ் கொடி ஏற்றி, பெயர் பலகை திறந்து வைத்தல் உள்ளிட்ட கட்சிகள் பணிகள் குறித்து, அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்தியா
ஆதரவு வாபஸ் கடிதம் கொடுக்க பா.ஜ., தயக்கம் : சிபுசோரன் மகன் மன்னிப்பால் முடிவு மாறுமா?
புதுடில்லி : சிபுசோரன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமாக அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, நேற்றிரவு வரை ஆதரவு வாபஸ் கடிதத்தை கொடுக்கவில்லை. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரை சந்திக்கும் முடிவு இரு முறை தள்ளி வைக்கப்பட்டது. ஜார்க்கண்டில் நான்கு மாதங்களுக்கு முன், பா.ஜ., ஆதரவுடன் கூட்டணி அரசு அமைத்து முதல்வரானார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன். ஆனால், சமீபத்தில் லோக்சபாவில் பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சிகள் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்த போது, அதற்கு எதிராக ஓட்டளித்தார். வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்து, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அதிருப்தி அடைந்த பா.ஜ., "சிபுசோரன் துரோகம் செய்து விட்டார்' எனக் கூறி, அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தது. இது தொடர்பான கடிதத்தை, ஜார்க்கண்ட் கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கை நேற்று சந்தித்து கொடுப்பதாக இருந்தது. ஆனால், இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டது. கவர்னரை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பது தள்ளி வைக்கப்பட்டது. கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுப் பெற்றிருந்ததை, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., பொதுச் செயலர் கணேஷ் மிஸ்ராவே நேரடியாக சென்று, ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பின் அவர் கூறுகையில், "முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. அதனால், நிர்ணயித்த நேரத்தில் கவர்னரை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்கவில்லை. ஆதரவு வாபஸ் முடிவை திரும்பப் பெற வேண்டும் என, சிபுசோரனின் மகன் கேட்டுக் கொண்டுள்ளதால், விரிவான ஆலோசனைகள் நடக்கின்றன. இருந்தாலும், பா.ஜ., தலைவர்களுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இரண்டாவது ஒரு கடிதம் எழுதியதாக எனக்கு எந்தத் தகவலும் இல்லை,'' என்றார். கவர்னரை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க நேரம் கேட்டு பெற்று, இரு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனி நேரம் கேட்டு பெற்றால், அதை ரத்து செய்ய முடியாது என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதற்கிடையில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு முதல்வர் சிபுசோரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஓட்டளித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். சில நாட்களாக நான் உடல் நலம் இல்லாமல் இருந்தேன். உடல் நலக்குறைவு காரணமாகவே நான் வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் தொடர்வேன். எனது அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறும் முடிவை பா.ஜ., கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் சிபுசோரன் கூறியுள்ளார். இதற்கிடையில், சிபுசோரன் விவகாரத்தினால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் மோதல் உருவாகியுள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சிமோன் மராண்டி கூறியதாவது: வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக சிபுசோரன் ஓட்டளித்ததற்காக, அவரது மகனும் எம்.எல்.ஏ.,வுமான ஹேமந்த் சோரன், பா.ஜ.,விடம் மன்னிப்புக் கேட்டது சரியல்ல. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனே அன்றி, ஹேமந்த் அல்ல. பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு வந்த போது, ஒரு முறை அல்ல இரு முறை சிபுசோரன் ஓட்டளித்துள்ளார். அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இதிலிருந்தே அவர் அந்தக் கூட்டணியைத்தான் விரும்புகிறார் என்பது தெளிவாகிறது. நானும், மற்றும் சில ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.,க்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரிக்கிறோம். இவ்வாறு சிமோன் மராண்டி கூறினார். நடந்த சம்பவத்திற்கு பா.ஜ., தலைவர்களிடம் சிபுசோரனின் மகன் மன்னிப்புக் கேட்டுள்ளதால், ஆதரவு வாபஸ் விவகாரத்தில் புதிய திருப்பம் உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிபு சோரனை நீக்கி விட்டு மற்றவர்களுடன் தொடர்ந்து ஆட்சி நடத்த பா.ஜ., திட்டமிட்டிருக்கிறது என்ற கருத்தும் பேசப்படுகிறது.
தமிழகம்
ஸ்டாலினை சந்தித்த பார்வையற்ற சுரேகா
சென்னை : துணை முதல்வர் ஸ்டாலினை, பார்வையற்ற மாணவி சுரேகா சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காய்ச்சலுக்கு உட்கொண்ட மாத்திரையால் பார்வையிழந்த மாணவி சுரேகாவின் நிலைமையை நாளிதழ் செய்திகளின் வாயிலாக அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார். சுரேகாவுக்கு ஐதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் லென்ஸ் பொருத்தப்பட இருப்பதால், அங்கு செல்வதற்கு முன், தனக்கு உதவிக்கரம் நீட்டிய துணை முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினார். இதையறிந்த ஸ்டாலின், நேற்று மாலை 5 மணியளவில் மாணவி சுரேகா, அவரது பெற்றோர் தேவேந்திரன், கலாவதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை சந்தித்தார். மாணவியின் உடல்நலன், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை கேட்டறிந்த துணை முதல்வர், மேற்கொண்டு நடைபெறவுள்ள சிகிச்சைகள் நல்ல முறையில் நடைபெறும் என நம்பிக்கையும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டார். சுரேகாவும், குடும்பத்தினரும் ஐதராபாத் செல்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய துணை முதல்வர், மாணவிக்கு பார்வை கிடைப்பதற்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாகத் தெரிவித்து, வழியனுப்பி வைத்தார். சந்திப்பின் போது துர்கா ஸ்டாலின், தமிழக அரசின் கூடுதல் குற்றத்துறை வக்கீல் அசன் முகமது ஜின்னா உடனிருந்தனர்.
இந்தியா
எத்தனால் கலந்த பெட்ரோல் தாமதம் : பார்லியில் தமிழக எம்.பி., கேள்வி
பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை மாற்றம் செய்து விரைவில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கேள்வி நேரத்தின் போது லோக்சபாவில் கடலூர் எம்.பி.,யான அழகிரி பேசும்போது, "பெட்ரோலில் 5 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டத்தை, 2006ம் ஆண்டு அறிவித்தது. ஆனால், அதன்பிறகு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. "இவ்விஷயத்தில் மாநில அரசுகளின் மீது மத்திய அரசு குறை கூறி வருகிறது. எத்தனால் கலந்து விற் பனை செய்தால் எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கம் போய்விடுமோ என்ற காரணத்தால் அரசு அறிவித்த இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்யப்படுகிறதா' என்று கேள்வி எழுப்பினார். பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் பதிலளித்து கூறியதாவது: நமது நாட்டில் கரும்பு உற்பத்தி என்பது ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது. ஒரு வருடம் நல்ல விளைச்சல் காணப்படுகிறது. மற் றொரு ஆண்டு மிகவும் மோசமான உற்பத்தியாக உள்ளது. எத்தனாலை கரும்பிலிருந்து தான் பெற முடியும். எத்தனால் போதுமான அளவு இருந்தால் தான் பெட்ரோலில் கலக் கும் முடிவை முழுமையாக நிறைவேற்ற இயலும். கடந்த ஆண்டு மட்டும், 60 சதவீதம் வரை எத்தனால் பற்றாக்குறை இருந்தது. மேலும் சிலமாநில அரசுகள் எத்தனால் தயாரிப்பதில் காட்டும் ஆர்வத்தை காட்டிலும் ஆல்கஹால் தயாரிப்பதில் தான் காட்டுகின்றன. இதுபோன்ற காரணங்களால் தான் எத்தனால் கலக்கும் முடிவு நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. இருப்பினும் மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைத்து ஆராய்ந்து எத்தனால் கலந்து பெட்ரோல் விற்பனை செய்யும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை போக்கி விரைவில் மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜிதின் பிரசாத் பதிலளித்தார். நமது டில்லி நிருபர்
தமிழகம்
நள்ளிரவில் போலீஸ் நிலையத்திற்கு பெண்ணை அழைத்துச் செல்ல காரணமான அதிகாரிகள் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
சென்னை:நள்ளிரவில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக பெண்ணை அழைத்துச் சென்றதற்காகவும், அவமானப்படுத்தியதற்காகவும் ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆவடி சி.ஆர்.பி.எப்.,ல் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் கோவிந்தசாமி. இவரது மனைவி அலர்மேலு மங்கை. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். திரிபுராவுக்கு கோவிந்தசாமி இடமாற்றம் செய்யப்பட்டதால், ஆவடியில் உள்ள குடியிருப்பில் குழந்தைகளுடன் அலர்மேலு மங்கை வசித்து வந்தார்.முதுகலை பட்டதாரியான அலர்மேலு மங்கை, அருகில் உள்ள குழந்தைகளுக்கு கணித பாடம் கற்பித்து வந்தார். இவரது கணவரின் உறவினர் பகவான். அவரும் சி.ஆர்.பி.எப்.,ல் பணியாற்றுகிறார். தனது குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்காக அலர்மேலு மங்கையை பகவான் அழைத்தார். அவரும் குழந்தைகளுடன் சென்றார். விழா நடந்து கொண்டிருக்கும் போது, பகவான் வீட்டின் கதவை போலீசார் தட்டினர். ஆவடி டேங்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கதுரை தலைமையில் போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.தேய் (சுபேதார் மேஜர்) தலைமையில் சி.ஆர்.பி.எப்., போலீசார், வீட்டுக்குள் நுழைந்தனர்.அங்கிருந்த அலர்மேலு மங்கையை பார்த்த உடன், இன்ஸ்பெக்டர் தங்கதுரை திட்டியுள்ளார். பகவானுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரை திட்டினார். பின், குழந்தைகளுடன் ஜீப்பில் அலர்மேலுவை ஏற்றினர். மறுத்த போது, வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச் சென்றனர். விசாரணைக்காக நள்ளிரவில் பகவான், அலர்மேலு மங்கை மற்றும் குழந்தைகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் 2004ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. நள்ளிரவு இரண்டு மணி வரை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இதையடுத்து, விசாரணை எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர். வீட்டுக்குள் வந்து சோதனை செய்ததன் பின்னணியில், சி.ஆர்.பி.எப்., கூடுதல் டி.ஐ.ஜி., இருந்தது பின்னர் தெரிந்தது. சம்பவம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. இதனால், மனஉளைச்சல் அடைந்த அலர்மேலு மங்கை, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:என்னை அவதூறு செய்யும் விதத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. எனது தனிப்பட்ட உரிமை, சுதந்திரம் மீறப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்குப் பின், எனக்கு சமூகத்தில் அவமானம் ஏற்பட்டது. எனது உறவினர்களையும், நண்பர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அவமானம், மன உளைச்சலுக்கு நஷ்டஈடு வழங்க முடியாது. ஒரு சமயத்தில் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தேன். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனதை மாற்றிக் கொண்டேன். எனக்கு 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வைத்தியலிங்கம், ஞானலிங்கம் ஆஜராயினர். கோர்ட்டுக்கு உதவ வக்கீல் லட்சுமிநாராயணன் செயல்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு:ஆவடி சி.ஆர்.பி.எப்., கூடுதல் டி.ஐ.ஜி.,யின் உத்தரவுப்படி தான், இச்சம்பவம் நடந்துள்ளது தெரிகிறது. வீட்டுக்குள் போலீசார் நுழைந்து பகவானை அவமரியாதை செய்துள்ளனர். மனுதாரரிடம் மோசமாக நடந்துள்ளனர். நள்ளிரவில் அவர்களை போலீஸ் நிலையத்துக்குஇழுத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்காக அரை மணி நேரம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார். அவரது குழந்தைகளும் போலீஸ் நிலையத்தில் இருந்துள்ளது.போலீசாரின் நடவடிக்கையால், மனுதாரரின் தனிப்பட்ட உரிமை மீறப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட அவமானம், மன உளைச்சலுக்கு பணத்தால் ஈடுகட்ட முடியாது. இருந்தாலும், போலீசாரை அப்படியே விட்டுவிட முடியாது. மனுதாரருக்கு ஆண் துணை இல்லை என்பதற்காக வீட்டுக்குள் போலீசார் நுழைய யாரும் அனுமதி கொடுக்கவில்லை. மேலும், அவரை அவமானப்படுத்தவும் அனுமதிக்க முடியாது.குழந்தைகள் முன் அவரது தாயாரை அவமானப்படுத்திய செயல், கண்டிக்கத்தக்கது. இரவு நேரத்தில் ஒரு வீட்டில் போலீசார் நுழைவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. நள்ளிரவில் ஒரு பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்ல சட்டம் இடம் கொடுக்கவில்லை. தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டுக்குரிய அதிகாரம் தனக்கு இருப்பதாக கூடுதல் டி.ஐ.ஜி., கூறினாலும், அத்தகைய அதிகாரம் இருக்கும் ஒரு அதிகாரி இப்படி நடந்து கொள்வார் என இந்த கோர்ட் கருதவில்லை.இருவருக்கு இடையே தொடர்பு இருப்பதாக யூகித்துக் கொண்டாலும் கூட, அதற்காக தனிப்பட்டவர்களின் தனிப்பட்ட நடவடிக்கையில் போலீசார் தலையிட அதிகாரமில்லை. அருகில் உள்ளவர்கள் புகார் கூறினர் என்பதற்கான ஆவணம் இல்லை.எனவே, எட்டு வாரங்களில் மனுதாரருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை சி.ஆர்.பி.எப்., டி.ஜி.பி., மற்றும் ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப்., கூடுதல் டி.ஐ.ஜி., வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா
பட்ஜெட்டில் ரூ.400 கோடி சலுகை: பீடி விலை குறையும்
புதுடில்லி : காபி விவசாயிகள், மருத்துவமனைகள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. குறிப்பாக, பீடி மீதான எக்சைஸ் வரி குறைக்கப்பட்டது. நேற்று அவர் அளித்த சலுகைகள், 400 கோடி ரூபாய். லோக்சபாவில் நிதி மசோதா மீதான விவாதத்தின் போது பதிலளித்து பிரணாப் முகர்ஜி கூறியதாவது: புகையிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கையால் செய்யப்படும் சுருட்டுகளுக்கும், பீடிகளுக்கும் 10 சதவீதம் எக்சைஸ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. காபி பயிரிடும் விவசாயிகளுக்காக 241 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டுக்கு முன்னதாக காபி விவசாயிகள் வாங்கிய கடன் தொகையில் நான்கில் மூன்று பங்கு தொகைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இச்சலுகைகள் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது உள்ள நிலவரப்படி பெட்ரோல், டீசல் விற்பதன் மூலம் அரசுக்கு நடப்பாண்டில் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சுங்கம் மற்றும் கலால் வரியில் விலக்கு அளிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. குறைந்தபட்சம் 100 படுக்கைகளை கொண்ட, நாட்டில் எந்தவொரு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள சொத்து மதிப்பில் முன்பு விதிக்கப்பட்ட 33 சதவீத சேவை வரி என்பது 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறுவார்கள். புதிய ஜவகர்லால் நேரு நகரத் திட்டம் மற்றும் ராஜிவ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டும் நபர்களுக்கு சேவை வரியில் சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். இருப்பினும், பிரணாப் பதிலில் திருப்தியடையாத பா.ஜ., தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் மற்றும் இடதுசாரி எம்.பி.,க்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தியா
சீக்கியர் இன படுகொலை: பார்லியில் அமளி
புதுடில்லி : சீக்கியர்கள் படுகொலை சம்பவம் குறித்த விவாதத்தின் போது காங்கிரசும், பா.ஜ.,வும் மாறி மாறி குற்றம் சாட்டியதால், பார்லிமென்டில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், கொலைகாரர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவதாக பா.ஜ., குற்றம் சாட்டியது. இதனால் எழுந்த அமளி காரணமாக, ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள் ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன்குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில், ஜகதீஷ் டைட்லர் மீதான வழக்கை கைவிடுவதாக கோர்ட் சமீபத்தில் அறிவித்தது. இப்பிரச்னை, பார்லிமென்டில் நேற்று புயலைக் கிளப்பியது. லோக்சபாவில் ஜீரோ நேரத்தின் போது, அகாலி தள எம்.பி.,யான ஹர்சிம்ரந்த்ஜித் சிங் கவுர் எழுந்து பிரச்னை கிளப்பினார். அப்போது அவர் பேசியதாவது: சீக்கியர்கள் ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். மிகப் பெரிய இனப் படுகொலையான இந்த சம்பவத்தில், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த கொலைகாரர்களை, காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது; இவர்களை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டைட்லர், சஜ்ஜன்குமார் ஆகிய இருவரும் குற்றவாளிகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சி.பி.ஐ., அமைப்பின் டி.ஐ.ஜி., மற்றும் இணை இயக்குனர் ஆகிய இருவரும் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், சி.பி.ஐ.,யின் இயக்குனர் தலையிட்டு, இந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாக கோர்ட்டில் தெரிவித்தவுடன் ஜகதீஷ் டைட்லர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதை சும்மா விடமாட்டோம்; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டுக்கு நிச்சயம் செல்வோம். சீக்கியர் படுகொலையை முன்னின்று நடத்திய சஜ்ஜன்குமார் மீது இன்றும் நங்லோய் போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர்., நிலுவையில் உள்ளது. அதை தூசு தட்டி கோர்ட்டுக்கு எடுத்துச் செல்ல இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குற்றவாளிகளையும், கொலைகாரர்களையும் காங்., பாதுகாக்கிறது. இவ்வாறு ஹர்சிம்ரந்த்ஜித் சிங் கவுர் கூறினார். இதனால், காங்கிரஸ் தரப்பில் இருந்து எம்.பி.,க்கள் பலரும் எழுந்து எதிர்ப்பு குரல் தெரிவித்தனர். அவையில் அரை மணி நேரத்திற்கு கூச்சல் குழப்பம் நிலவியது.ராஜ்ய சபாவிலும் இந்த பிரச்னை ஜீரோ நேரத்தின் போது கிளம்பியது. அகாலிதளம் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கடுமையாக பேசினர். ஆளும் தரப்பில் அமைச்சர் நாராயணசாமி எழுந்து பேசிய பதிலால் திருப்தியடையவில்லை. குறிப்பாக, அலுவாலியா தலைமையில் சீக்கிய எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்று திரண்டு, இப்பிரச்னை குறித்து வாதம் செய்தனர். இவர்களை, அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த ரகுமான் கான் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். முடியாமல் போகவே, வேறு வழியின்றி அவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தியா
கணக்கு காட்டாத கம்பெனிகள் அரசு தகவல்
புதுடில்லி : கடந்த 2008-09ம் நிதியாண்டில், 3 லட்சத்து 70 ஆயிரம் கம்பெனிகள், தங்கள் ஆண்டு வரவு-செலவு கணக்கை காட்டவில்லை, என கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் நேற்று இது குறித்து அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: கடந்த 2008-09ம் நிதியாண்டில், 3 லட்சத்து 70 ஆயிரத்து 196 கம்பெனிகள் தங்கள் ஆண்டு வரவு-செலவு கணக்கை சமர்பிக்கவில்லை. இதே நிதியாண்டில், 3 லட்சத்து 71 ஆயிரத்து 110 கம்பெனிகள் தங்கள் வருமானவரி கணக்கை சமர்பிக்கவில்லை. கடந்த நிதியாண்டுக்கான, இந்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
தமிழகம்
டூ வீலர்' ஓட்டும் சிறுவர்கள் மீதான நடவடிக்கை: உள்துறை செயலருக்கு கோர்ட் நோட்டீஸ்
மதுரை:டிரைவிங் லைசென்ஸ் இன்றி டூ வீலர்களை ஓட்டும் 18 வயதுக்கு உட்பட்டவர்களை கோர்ட்டுகளில் ஆஜர் படுத்தக் கூடாது என கோரிய மனு குறித்து உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது.கன்னியாகுமரி மனித உரிமை பாதுகாப்பு, சட்ட உதவி மைய தலைவர் சீனிவாச பிரசாத் தாக்கல் செய்த மனு: நாகர்கோவிலில் ஏப்., 6, 7ம் தேதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். டிரைவிங் லைசென்ஸ் பெறாமல் டூ விலர்களை ஓட்டியதாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 18 மற்றும் அதற்குட்பட்ட வயது மாணவர்களை பிடித்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மாலை நேர கோர்ட் டில் அபராதமும் செலுத்த வைத்தனர்.அவர்கள், லைசென்ஸ் இல்லாமல் டூ விலர் ஓட்டினால், மோட்டார் வாகன சட்டம் 180, 181ன்படி, டூ விலர் உரிமையாளர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின்படி கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தக் கூடாது; இளம்சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். இதுகுறித்து மனித உரிமை கமிஷனுக்கு மனு கொடுக்கப்பட்டது.என் மனுவை பரிசீலித்து, இதில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கமிஷன் உத்தரவிட்டது;எந்த நடவடிக்கையும் இல்லை.18 வயதுக்கு உட்பட்டவர் களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் லைசென்ஸ் இன்றி டூ விலர் ஓட்டும் சிறுவர்களை, இளம்சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, வாசுகி கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராஜ் குமார் ஆஜரானார். நீதிபதிகள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கை எடுக்கப் பட்டதா என கேள்வி எழுப்பினர்.டிரைவிங் லைசென்ஸ் பெறாத 18 வயதுக்கு உட்பட்டவர்களை வண்டிகளை ஓட்ட விடாமல் பார்த்துக் கொள்ள, பெற்றோர் கூட்டத்தைக் கூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்ட உதவி முகாம்கள் மூலம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.பின், மனு குறித்து உள்துறைச் செயலர், டி.ஜி.பி., நெல்லை டி.ஐ.ஜி.,க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
தமிழகம்
மே தின விடுமுறை கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கு
சென்னை:டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தின விடுமுறை அளிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர் ராமசுந்தரம் தாக்கல் செய்த மனு:தமிழகம் முழுவதும் 6,500 மதுபானக் கடைகள் உள்ளன; 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தினசரி 12 மணி நேரம் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வார விடுமுறை கிடையாது; தேசிய விடுமுறை கிடையாது. தேசிய விடுமுறை தினங்களில் பணியாற்றும் போது, அதற்காக கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதில்லை.டாஸ்மாக் ஊழியர்களுக்கு குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், ஆகிய நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். மே தினத்தன்று விடுமுறை அளிக்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தின விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நேற்று நீதிபதிசந்துரு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பாலு ஆஜரானார். மனுவுக்கு இன்று பதிலளிக்கும் படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 30ம் தேதிக்கு (இன்று) நீதிபதி சந்துரு தள்ளிவைத்தார்.
தமிழகம்
ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் நியமனம்
சென்னை:சென்னை ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கோகலே, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அன்றே டில்லிக்கு நீதிபதி கோகலே சென்று விட்டார். ஐகோர்ட்டில் இரண்டாவதாக நீதிபதி தர்மாராவ் உள்ளார். இவரை தற்காலிக தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, அவருக்குரிய பணிகளை நீதிபதி தர்மாராவ் மேற்கொள்வார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஜார்க்கண்ட் ஐகோர்ட் நீதிபதி இக்பால் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
சமச்சீர் கல்விக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு?
சென்னை:சமச்சீர் கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவு பிறப்பிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்றும், அதன்பின் படிப்படியாக அனைத்து வகுப்புகளிலும் கொண்டு வரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனியார் பள்ளிகள் மனுக்கள் தாக்கல் செய்தன. இதை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.இவ்வழக்கில் இன்று "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு பிறப்பிக்கும் எனத் தெரிகிறது. நாளை முதல் கோடை விடுமுறை துவங்குவதால், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
General
ஜூன் 26ல் பாகிஸ்தானில் மாநாடு
திம்பு : சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு, ஜூன் 26ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை பாக்., பிரதமர் கிலானி சந்தித்துப் பேசிய பின், இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி தெரிவித்தார். பாதுகாப்பு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவது, பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தகவல்களை பரிமாறிக் கொள்வது, போதைக் கடத்தல் உட்பட பல விஷயங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாடு முதன் முறையாக 2006 மே மாதம், வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்தது. 2007 அக்டோபரில் டில்லியில் நடந்தது. அதன்பின், இரு முறை நடப்பதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட மாநாடு, வரும் ஜூனில் நடக்க உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் கலந்து கொள்ளக் கூடும்.
தமிழகம்
வகுப்பு கூரையை சுத்தம் செய்யும் போது இறந்த மாணவன் குடும்பத்திற்கு நஷ்டஈடு
சென்னை:வகுப்பு கூரையை சுத்தம் செய்யும் போது, கீழே விழுந்த மாணவன் இறந்ததால், அவனின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈட்டை வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.கிண்டியில் உள்ள அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் கிளாடிவின்சென்ட் (15) எனும் மாணவன், முதலாண்டு படித்து வந்தான். ஆசிரியர் கூறியபடி, வகுப்பறையின் கூரையை சுத்தம் செய்தான். அப்போது கீழே விழுந்த கிளாடிவின்சென்ட், படுகாயமடைந்தான். உடனடியாக அரசு மருத்துவமனையில் அவன் சேர்க்கப்பட்டான். சில நாட்களில் கிளாடிவின்சென்ட் இறந்தான்.இச்சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. சம்பவம் குறித்து கிண்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் கிளாடிவின்சென்டின் தந்தை ஜான்சன் தாக்கல் செய்த மனுவில், "எனது ஒரே மகனை இழந்துள்ளேன். 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும்' என கூறியுள்ளார்.மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் பி.மணிமாறன் ஆஜரானார். நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:படிப்பதற்காக தான் தங்கள் குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். கல்வி நிறுவனத்தின் கட்டடத்தையோ, கூரையையோ சுத்தப்படுத்துவதற்காக அல்ல. இத்தகைய பணிகளை செய்வதற்கு, துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கும் கடமை அரசுக்கு உள்ளது. பள்ளி கட்டடத்தை, கூரையை சுத்தப்படுத்துவதற்காக மாணவர்களை அனுமதிப்பது, கல்வி நிர்வாகத்தின் தவறான செயல்.எனவே, மனுதாரரின் மகன் இறப்புக்கு அரசு தான் நஷ்டஈடு வழங்க வேண்டும். நஷ்டஈட்டை நிர்ணயிக்கும் போது, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும். எனவே, நஷ்டஈட்டுத் தொகையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பதால், அது என்ன என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். போதிய நஷ்டஈடு வழங்கவில்லை என்றால், கோர்ட்டை மனுதாரர் அணுகலாம்.இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
General
நேபாளத்தில் அமைதி ஏற்பட பிரதமர் மன்மோகன் விருப்பம்
திம்பு : நேபாளத்தில் கட்சிகள் தங்கள் விரோத போக்கை கைவிட்டு அமைதி நடவடிக்கைக்கு திரும்ப வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பூடான் தலைநகர் திம்புவில் நடக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேபாள பிரதமர் மாதவ்குமாரை சந்தித்துப் பேசினார். நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின், புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அங்கு, ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். ஆனால், ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்த விவகாரத்தில் ஜனாதிபதி ராம்பரன் யாதவுக்கும், பிரதமர் பிரசாந்தாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரசாந்தா பதவி விலகினார். தற்போது நேபாள கம்யூனிஸ்ட், நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பதவி விலகிய பிரசாந்தா, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகிறார். நேபாளத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை. எனவே, கட்சி வேறுபாடு காரணமாக அந்நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுகையில், "நேபாள கட்சிகள் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு அமைதி நடைமுறைக்கு வழி காண வேண்டும். மாவோயிஸ்டுகள் தங்கள் பிடிவாதத்தை கைவிட வேண்டும்' என்றார். நேபாள துணை பிரதமர் சுஜாதா கொய்ராலா நேற்று முன்தினம் குறிப்பிடுகையில், "நேபாளத்தில் அதிக இடங்களைப் பெற்றுள்ள மாவோயிஸ்டுகள், ஆட்சியில் பங்கேற்று புதிய அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.
தமிழகம்
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஐகோர்ட் தடை
சென்னை:போலீஸ் உயரதிகாரி ஏ.கே.விஸ்வநாதனுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.போலீஸ் உயரதிகாரி ஏ.கே. விஸ்வநாதன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கு எதிராக விஜிலென்ஸ் விசாரணை நடத்த தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், விஜிலென்ஸ் கமிஷனர் அடங் கிய குழு உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை மூலம் தான் இதுபற்றி எனக்கு தெரிந்தது.ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்துக்கு காரணமான சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை பாதுகாப்பதற்காக, என்னையும் மற்ற அதிகாரிகளையும் கீழ்படிய வைக்கும் நோக்கில் இவ்வாறு விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கேள்விகள் அடங்கிய பட்டியலை எனக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி., வழங்கினார். அதில் அனுப்பியவரின் பெயர், கையெழுத்து இல்லை. கேள்விகளுக்கு பதிலளித்து அதை டி.எஸ்.பி., யிடம் அளித்தேன். எனது வீட்டை பொதுப்பணித் துறையின் நிர்வாக பொறியாளர் மதிப்பீடு செய்யப் போவதாக டி.எஸ்.பி.,யிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது.நான் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி. அகில இந்திய சர்வீஸ் பணி சட்டம் மற்றும் விதிகளுக்கு ஐ.பி.எஸ்., பணி உட்பட்டது.ஒரு போலீசால் எப்படி விசாரணை நடத்த முடியும் என தெரியவில்லை. விசாரணையை எதிர் கொள்ளவோ, எனது நேர் மையை நிரூபிக்கவோ எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை.கோர்ட் அவமதிப்பு வழக்கில், ஐகோர்ட்டில் நான் உண்மையை கூறியதால், எனது கண்ணியம், அந்தஸ்தை குறைக்கின்றனர். எந்த அடிப்படையில் விசாரணை செய்கின்றனர் என தெரியவில்லை. இது புதிராக உள்ளது. எனக்கு எதிராக போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகின்றனர். புலன் விசாரணையை நடத்தும் முறையை பார்த்தால், தீய நோக்கத்தை நிரூபிக்கும். புண்படுத்தும் நோக்கில் செயல் படுகின்றனர். எனக்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு இயக்குனர் மற்றும் டி.எஸ்.பி.,க்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் செல்வராஜ் ஆஜரானார். நீதிபதி பால்வசந்த குமார் பிறப்பித்த இடைக் கால உத்தரவு:இந்த வழக்கில், விசாரணை நடத்த யாருக்கு அதிகார வரம்பு உள்ளது என்பது முடிவு செய்யப்பட வேண்டும். தான் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி என்றும் டி.எஸ்.பி., அளவிலான விசாரணையை அனுமதிக்க முடியாது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு ஊழியர் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது என அட்வகேட் ஜெனரல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த பின் தான், இப்பிரச்னையில் முடிவெடுக்க முடியும். இவ்வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இருப்பதை கருத்தில் கொண்டு, மே 12ம் தேதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி என்.பால் வசந்தகுமார் இடைக்கால உத்தரவிட்டுள்ளார்.
General
கம்பெனி பெயர் இல்லாமல் சிகரெட் ஆஸ்திரேலியாவில் விற்பனை
சிட்னி : ஆஸ்திரேலியாவில் கம்பெனி பெயர் அச்சிடப்படாத சிகரெட் விற்பனை வரும் 2012ல் அறிமுகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பது தொடர்பான நோய்களால், 15 ஆயிரம் பேர் பலியாகின்றனர். புகைப்பதை தவிர்க்கும்படி பல்வேறு பிரசாரங்கள் மூலம், ஆஸ்திரேலிய அரசு வற்புறுத்தி வருகிறது. சிகரெட்டுகளுக்கு, 25 சதவீத வரியை உயர்த்தியுள்ளது. சிகரெட் தொடர்பான விளம்பரங்களுக்கு, இன்டர்நெட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் புகைப்பவர்களின் எண்ணிக்கையை எதிர்பார்த்த அளவுக்கு குறைக்க முடியவில்லை. எனவே, சிகரெட் பெட்டிகளின் கவர்ச்சியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிகரெட் பெட்டிகளில் கம்பெனியின் அடையாளமோ, வண்ண நிறமோ இல்லாமல் வெள்ளை நிற பாக்கெட்டில் விற்பனை செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் உத்தரவிட்டுள்ளார். இதனால், சிகரெட் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. சிகரெட் பெட்டியில் வழக்கமாக காணப்படும் எச்சரிக்கை வாசகங்களும், படங்கள் இடம் பெற்றிருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளாக சிகரெட் மீதான வரி கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் கணிசமான வருவாய், சுகாதார திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
General
இந்திய எல்லையில் பாக்., ராணுவம் குறைப்பு
வாஷிங்டன் : இந்திய எல்லைப் பகுதி அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு லட்சம் பாகிஸ்தான் படைகள், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், அந்நாட்டு பார்லிமென்ட்டுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவுடன் போர் மூளூம் சூழல் ஏற்பட்டால் உடனடியாக தாக்குதவதற்கு வசதியாக, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேர் முகாமிட்டிருந்தனர். இங்கு முகாமிட்டிருந்த படைகள், ஆப்கானிஸ்தானில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் தலிபான்களை ஒடுக்கும் நோக்கில் இடம் பெயர்ந்துள்ளன. பூடான் நாட்டின் திம்பு நகரில் நடக்கும் பேச்சு வார்த்தையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் சந்தித்து பேசுகின்றனர். எனவே, இரு நாட்டுக்கும் இடையே சுமுக சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. அல்-குவைதா, தலிபான், லஷ்கர் -இ- தொய்பா ஆகிய மூன்று பயங்கரவாத அமைப்புகளால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பஷ்தூன் பகுதியில் பதுங்கியுள்ள தலிபான்கள், ஆப்கனில் வெளிநாட்டுப் படையினரை துரத்தியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பென்டகன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தமிழகம்
பாகனின் கட்டுப்பாட்டை மீறியது இந்திரா குழித்துறையில் ஒரு மணி நேரம் பரபரப்பு
மார்த்தாண்டம்:நெல்லை, குழித்துறையில் பாகனின் கட்டுப்பாட்டை மீறி தனியார் யானை ஒன்று, தாமிரபரணி ஆற்றில் சுதந்திரமாக நீச்சலடித்து உற்சாக குளியல் போட்டது. இதனால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.திற்பரப்பை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான யானை இந்திரா. நெய்யாற்றின்கரையை சேர்ந்த குமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்த யானைக்கு பாகனாக உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சூரியகோடு கோவில் திருவிழாவில் இந்த யானை பங்கேற்றுள்ளது.திற்பரப்பு கொண்டு செல்லும் வழியில், குழித்துறையில் இந்த யானை கட்டப்பட்டது. பாகன் குமார் யானையை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத்தின் கீழ் பகுதியில் குளிப்பாட்டுவதற்கு, நேற்று காலை கொண்டு வந்தார். நீண்ட நாட்களுக்கு பின் தற்போது ஆற்றில் தண்ணீர் சிறிது அதிகமாக ஓடியது. ஆற்றுக்குள் இறங்கிய யானை பாகனின் கட்டுபாட்டை மீறியது. பாகன் பலமுறை யானையை நிற்குமாறு கூறியும், யானை கண்டுகொள்ளாமல் சுதந்திரமாக குளியல் போட்ட வண்ணம் ஆற்றுக்குள் அங்கும் இங்குமாக ஓடியது. பின் ஆற்றின் மறுகரைக்கு வந்தது.பாகன் சப்பாத் வழியாக மறுபக்கம் ஓடி வந்தார். உடனே யானை ஆற்றின் உட்பகுதி வழியாக மறுகரைக்கு ஓடியது. சுமார் ஒரு மணி நேரம் யானை ஆற்றினுள் இங்கும், அங்குமாக ஓடியது. அப்போது யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று கருதி பொதுமக்கள் பரபரப்பு அடைந்தனர். ஆனால் யானைக்கு மதம் பிடிக்கவில்லை.ஒரு மணி நேரத்திற்கு பின், யானை ஆற்றின் உட்பகுதியில் தாழ்வான இடத்திற்கு சென்றது.பாகன் உடனடியாக, யானையின் மீது ஏறி யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். யானை தனக்கே உரிய பாணியில் வீறுநடை போட்டு சென்றது. இதனால் பரபரப்பு அடங்கியது.
தமிழகம்
சொகுசு காரில் கள்ளச்சாராயம் கடத்தல் காயங்களுடன் இருவர் தப்பி ஓட்டம்
பழநி:பழநியில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த கார் விபத்துக்குள்ளானது. காரில் இருந்த இருவர் காயங்களுடன் தப்பினர்.பழநி பை-பாஸ் ரோட்டில் நேற்று மதியம் 3.30 மணிக்கு அதிவேகமாக சொகுசு கார் ( பியஸ்டா-டிஎன்-24 டபிள்யூ 7753) வந்தது. ரோட்டில் நின்ற பொதுமக்கள் மீது மோதுவது போல் வந்த கார் நிலைதடுமாறி ரோட்டை விட்டு கீழே பள்ளத் திற்குள் கவிழ்ந்தது. பொது மக்கள் காரில் இருந்தவர் களை காப்பாற்றுவதற்காக சென்றனர். ஆனால் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்கள் ஓடுவதை கண்டு எதுவும் புரியாத அப்பகுதி மக்கள் போலீசிற்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி., பாண்டிய ராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காரில் 22 கேன்களில் (தலா 35 லிட்டர்) இருந்த கள்ளச்சாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.டி.எஸ்.பி., பாண்டியராஜன் கூறுகையில்,"தப்பிய 2 பேரும் காயமடைந்துள்ளனர். ஒருவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கள்ளச்சாராயம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என தெரியவில்லை. மதுவிலக்கு போலீசார் தொடர் விசாரணை நடத்துவர்,'என்றார்.
தமிழகம்
லாரி - கார் மோதி எட்டு பேர் பலி
திருவாரூர்: திருவாரூர் அருகே, நின்று கொண்டிருந்த ஜல்லி லாரி மீது ஸ்கார்பியோ கார் மோதிய விபத்தில், எர்ணா குளத்தைச் சேர்ந்த எட்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் கூரியன் (75). இவர் தனது குடும்பத்தினருடன் ஸ்கார்பியோ காரில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு எர்ணாகுளத்தில் புறப்பட்ட இவர்கள் நேற்று காலை எட்டு மணிக்கு திருவாரூர் மாவட்டம் அம்மை யப்பன் தைக்கால் என்ற இடத்தில் வந்தனர். அப்போது, திருவாரூர் நோக்கி ஜல்லி ஏற்றி வந்த லாரி ரோட்டோரம் நின்றிருந்தது. லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் இயற்கை உபாதைக்காகச் சென்றிருந்தனர். அப்போது,லாரியின் பின்புறம் ஸ்கார்பியோ கார் மின்னல் வேகத்தில் மோதியதில்,பாதி அளவுக்கு கார் லாரிக்கு அடியில் சிக்கியது.கார் மோதிய வேகத் தில் லாரி நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.இவ்விபத்தில் படுகாயம் அடைந்த மேத்யூஸ் (50), சைனி ஜோசப் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கூரியன் மனைவி தங்கம்மாள் (50), ஜான்ஜோசப் (12) ஆகியோர் இறந்தனர்.தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மீனா (45), சோனாஜோசப் (10), டிரைவர் ராஜு (27),லைனி (ஒன்றரை வயது) ஆகிய நான்குபேரும் இறந்தனர். மேலும்,கூரியன் (75), அவரது மகன் தரின் (42), ஆன் மோல் (25),ஜோசி (42) ஆகியோர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இந்த கோர விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகம்
ரூ.5 ஆயிரம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்:காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
செங்கல்பட்டு:டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (51). காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர் ஹரியழகன். இவர் கடந்த வாரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு சென்றார். அவரிடம் மேலாளர் செல்வராஜ், "உன் கடையில் மதுபானங்கள் அதிகம் விற்பனையாகிறது. வரும் வியாழக்கிழமைக்குள் எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடு. இல்லாவிட்டால் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்து விடுவேன்' எனக் கூறினார். பணம் கொடுக்க விரும்பாத ஹரியழகன், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார்.நேற்று காலை ஹரியழகனை தொடர்பு கொண்டசெல்வராஜ் சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு செல்லப்போகிறேன். காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன். அங்கு வந்து பணத்தை கொடு' எனக் கூறினார். இது குறித்து ஹரியழகன், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று காலை 9.30 மணிக்கு செல்வராஜ் ரயில் நிலைய வளாகத்தில் மாருதி காரில் காத்திருந்தார். அங்கு சென்ற ஹரியழகன் அவரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், சரவணன், கங்காதரன், வெங்கடேசன் ஆகியோர் டாஸ்மாக் மேலாளர் செல்வராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின் அவரிடம் சோதனை நடத்தியதில் திருப்போரூரில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளின் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்த கவரில் 15 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. அதைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பின் செல்வராஜை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழகம்
நிலக்கோட்டை அருகே விபத்து தாய்,மகன்கள் உட்பட நால்வர் பலி
நிலக்கோட்டை:நிலக்கோட்டை - செம்பட்டி ரோட்டில் டேங்கர் லாரி,இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பலியாயினர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே செங்கோட்டையில் பங்குனி திருவிழா நடந்தது. விழாவில் பங்கேற்ற செல்வநகரை சேர்ந்த ராமையா(38), சுட்டிகாலடிபட்டியை சேர்ந்த தனது உறவினரான மீனா(29), இவரது மகன்கள் யோகராகுல்(9), கிரண்ராஜூ(4) ஆகியோரை தனது எம்-80 வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சுட்டிக்காலடிபட்டிக்கு செல்ல , நேற்று மதியம் 2.25 மணிக்கு செம்பட்டி ரோட்டை கடந்தார். அப்போது நிலக்கோட்டையில் இருந்து செம்பட்டிக்கு டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராமையா, மீனா, யோகராகுல் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கிரண்ராஜூ திண்டுக்கல் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவத்தால் நிலக்கோட்டை - செம்பட்டி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலக்கோட்டை டி.எஸ்.பி., புஷ்பம், இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே புளியங்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் பூம்பாண்டி செம்பட்டி போலீசில் சரண் அடைந்தார்.
தமிழகம்
சிறுத்தைக்கு பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
வால்பாறை:வால்பாறையில் சிறுத்தைக்கு பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து, எஸ்டேட் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் தோணிமுடி எஸ்டேட் முதல் பிரிவில் பணிபுரியும் காந்தி - சுகந்தி தம்பதியினர் மகன் மணிசங்கர்(9). நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த மணிசங்கரை, சிறுத்தை அடித்து, இழுத்துச் சென்றது. சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று வால்பாறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவ மனையில் வால்பாறை டி.எஸ்.பி., மாடசாமி, வனச்சரக அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியரை முற்றுகையி ட்டதோடு, தோணிமுடி எஸ்டேட் தொழிலாளர்கள் சிறுவனின் உடலை வாங்க மறுத்து, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில் அமைதிக் கூட்டம் நடந்தது.பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படாததால், உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிய மக்கள்,காந்தி சிலை முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,பொள்ளாச்சி -வால்பாறை போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை போலீசார், பொதுமக்களிடம் பேசியதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின், சிறுவனின் உடலை பெற்றுச் சென்றனர். ஐந்தாண்டுகளில் எட்டு பேர் பலி:ஆனைமலை புலிகள் காப்பகமாக மாறிய பின், வால்பாறையில் சிறுத்தையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வால்பாறையில் சிறுத்தையின் பசிக்கு எட்டு பேர் பலியாகியுள்ளனர். வால்பாறை அடுத்துள்ள சக்தி - தலநார் எஸ்டேட்டில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர், வில்லோனி எஸ்டேட்டில் இரண்டு சிறுமியர், அணலி எஸ்டேட்டில் ஒரு சிறுவன், தோணிமுடி எஸ்டேட்டில் இரண்டு சிறுவர்களையும் சிறுத்தை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எஸ்டேட் குடியிருப்பு பகுதி முழுவதும் மின்வேலி அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகம்
கிணற்றில் பைக் விழுந்து இருவர் பலி
வேலூர்: கிணற்றில் பைக் விழுந்ததில் போதை வாலிபர்கள் இருவர் பலியாகினர்.வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தளபாடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(40). இவரது நண்பர் வெள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த வெங்க டேசன் (30).இருவரும், நேற்று அதிகாலை 3 மணி அளவில், குடிபோதையில் வெள்ளநாயக்கனூர் கிராமத்தில் இருந்து நாட்றம்பள்ளிக்கு பைக்கில் சென்றனர். வெள்ளநாயக்கனூர் கிராமம் அருகே சென்ற போது, ரோட்டோரமாக இருந்த தடுப்பு சுவர் இல்லாத கிணற்றில் பைக் விழுந்தது. இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். போலீசார் விசாரிக் கின்றனர்.
தமிழகம்
ரூ. 40 லட்சத்துக்கு மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது
தஞ்சாவூர்:விநாயகர் சிலை, செம்பு உட்பட பழைய சாமான்களை, தெய்வீக சக்தி கொண்ட பொருட்கள் எனக்கூறி, 40 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி மோசடி செய்ய முயன்ற, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் இந்தனூர் ரைச்சூர் ரோட்டை சேர்ந்தவர் பிரபு (33). ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ரைச்சூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் விவசாயி பிரபாகரன் (42). இவர்கள் இருவரும் நண்பர்கள்.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்தான் (45). மிகப்பெரிய அளவிலான பணிகளை செய்யும் ஒப்பந்தகாரர். ஆன்மீகம், தெய்வ நம்பிக்கையில் ஈடுபாடு கொண்ட இவரை, பிரபு மற்றும் பிரபாகரன் ஆகியோர் தொடர்பு கொண்ட னர்.அவர்கள், "தமிழகத்திலுள்ள தஞ்சாவூரில், தெய்வீக சக்தி கொண்ட புராதன பொருட்கள் உள்ளன. இவை ராஜாக்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை. அரிசியின் அருகே இப்பொருட்களை கொண்டு சென்றால், அவை ஈர்க்கும் தன்மை கொண்டது.வீடு, தொழில் நிறுவனங்களில் இப்பொருட்களை வைத்து பூஜித்தால், தெய்வீக தன்மை நமக்கு கிடைக்கும்; செல்வம் அதிகரிக்கும். இப்பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இவற்றை கொண்டுதான் ராக்கெட் பாகங்களை செய்கின்றனர். ராக்கெட் செய்ய தேவையான பல உலோகங்கள் இதில் உள்ளன. கப்பலைக்கூட அப்படியே நிலை நிறுத்திவிடும் சக்தி இவற்றுக்கு உண்டு' என, சுல்தானிடம் தெரிவித்தனர். இதை நம்பிய சுல்தான், இவர்களுடன் சேர்ந்து தஞ்சை சுந்தரம் நகரிலுள்ள ஒரு வீட்டுக்கு வந்தார். அங்கு தஞ்சை மாவட்டம் தொண்டராம்பட்டு மேற்கு சிவா என்ற காயல்மோகன்(37), திருமங்கலக்கோட்டை கீழையூர் கணபதி என்ற நெடுஞ்செழியன்(46), கீழையூர் கீழக்காலனி கணேசன் (50),செல்வராஜ் (35) ஆகிய நான்கு பேரும் வந்தனர். இவர்கள், இரண்டு சொம்பு, இரண்டு விநாயகர் சிலை, ஒரு ஜாடி, ஒரு கோப்பை என, பழங்கால உலோக பொருட்களை வைத்திருந்தனர். இப்பொருட்களை மொத்த மாக 40 லட்சம் ரூபாய்க்கு பிரபு, பிரபாகரன் மற்றும் தஞ்சையை சேர்ந்த நான்கு பேரும் சேர்ந்து விலை பேசினர். தொடர்ந்து நடந்த பேரத்தில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கிக் கொள்வதாக சுல்தான் ஒப்புக்கொண்டு, "தன்னிடம் தற்போது ஆயிரம் ரூபாய் தான் உள்ளது. இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள். மற்ற பணத்தை தர ஏற்பாடு செய்கிறேன்' எனக் கூறி, ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.அதை உடனடியாக,அவர்கள் பெற்றுக் கொண்டனர். மொத்தம் 40 லட்சம் ரூபாய் பொருளுக்கு, ஆயிரம் ரூபாயை ஆவலாக பெறுகின்றனரே என்பதில் சுல்தானுக்கு சந்தேகம் வந்தது. பணத்தை தயார் செய்து விட்டு, வருவதாக கூறிச் சென்றவர், சில இடங்களில், இதுகுறித்து விசாரித் தார். அப்போது, தான் ஏமாற்றப்படுவது தெரிந்தது.இதையடுத்து, சுல்தான் போலீசில் புகார் செய்தார். சுந்தரம் நகர் வீட்டுக்கு சென்று, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தஞ்சை அரண்மனை எதிரேயுள்ள,பழைய மற்றும் கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில்,சாதாரணமாக வாங்கி வந்த பொருட்களை, பல கதைகள் கூறி மோசடி செய்ய முயன்றது தெரிந்தது.இதைத் தொடர்ந்து பிரபு, பிரபாகரன், சிவா, கணபதி, கணேசன், செல்வராஜ் ஆகிய ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். பழைய பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாயையும் மீட்டனர்.
தமிழகம்
ரயில் மோதி மூவர் பலி
வேலூர்:ஜோலார்பேட்டை அருகே, ரயில் மோதி, ஒரிசாவைச் சேர்ந்த மூன்று பேர் இறந்தனர்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூரில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணியில், ஒரிசா மாநிலம் களகாண்டி மாவட்டம் போர்குடா கிராமத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சுனில் (20) நந்திகிஷோர் (19) புருஜா (20) ரகுநாத் (19) ஆகிய நான்கு பேரும், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், காற்று வாங்க ரயில்பாதை அருகே நடந்து சென்றனர்.சேலம் மார்க்கத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் செல்லும் இரு ரயில்கள், அருகருகே உள்ள தண்டவாளங்களில், எதிரும் புதிருமாக வந்தன. இதனால் பயந்து அங்குமிங்கும் ஓடிய சுனில், நந்திகிஷோர், ரகுநாத் ஆகிய மூவரும், ரயில்களில் சிக்கி உடல் சிதறி இறந்தனர். புருஜா மட்டும் எங்கும் ஓடாமல் அங்கேயே உட்கார்ந்து விட்டதால் உயிர் தப்பினார்.
தமிழகம்
வெவ்வேறு பெயர்களில் இரண்டு போலி பாஸ்போர்ட்: பெண் கைது
சென்னை:வெவ்வேறு பெயர்களில், இரண்டு போலி பாஸ்போர்ட்டுடன் சுற்றித் திரிந்த நாகர்கோவில் பெண்ணை, போலீசார் கைது செய்தனர். கள்ளக் காதலனிடமும் விசாரணை நடந்து வருகிறது.சென்னை முகப்பேர் பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும் படியாக ஆண் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்த மேரி ஏஞ்சலின் சங்கா (45) என்பவரையும், அவருடன் நின்ற சதீஷ்குமார் (45) என்பவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, மேரி ஏஞ்சலின் சங்கா என்ற பெயரில் ஒரு பாஸ்போர்ட்டும், சந்திரா என்ற பெயரிலான மற்றொரு பாஸ்போர்ட்டும் இருந்தன.இரண்டு பாஸ்போர்ட்களிலும் மேரி ஏஞ்சலின் சங்கா படம் மட்டுமே ஒட்டப்பட்டிருந்தது. இரண்டிலும் வடபழனி மன்னார் முதலி தெரு என்ற முகவரியே இருந்தது. இரண்டும் போலி பாஸ்போர்ட் என்பது தெரிந்தது. விசாரணையில் மேரி ஏஞ்சலின் சங்கா கூறும்போது,""சொந்த ஊர் நாகர்கோவில். கணவர் சம்பத்தைப் பிரிந்து வாழ்கிறேன். குழந்தைகளை தாய் வீட்டில் விட்டுவிட்டு, சென்னை வந்தேன். பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வந்தேன். துபாய்க்கு வேலைக்கு போக வேண்டுமென்றால், குறைந்த வயது இருக்க வேண்டுமென திருவல்லிக்கேணியில் உள்ள புரோக்கர் கூறினார். அவரே பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தார்,'' என்றார். இதையடுத்து மேரி ஏஞ்சலின் சங்காவை போலீசார் கைது செய்தனர். அவருடன் கூட இருந்த சதீஷ்குமார் (45) கள்ளக் காதலன் என்பதும், வடபழனியில் வீடு எடுத்து தங்கியிருப்பதும் தெரிய வந்தது. கைதான மேரி ஏஞ்சலின் சங்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளக் காதலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திருவல்லிக்கேணி புரோக்கரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகம்
குடிகாரக் கணவனால் மனமுடைந்த மனைவி குழந்தைகளுடன் தற்கொலை
கரூர்: கரூர் அருகே கணவரின் மது பழக்கத்தால், மனமுடைந்த மனைவி, இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார்.கரூர் அருகே சுக்காலியூரை சேர்ந்தவர் நாட்ராயன். சாயப்பட்டறை தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி காந்திமதி(45). மூத்த மகள் சரண்யா(18), ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்தார். இளைய மகள் கார்த்திகா(15), எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதியுள்ளார். நாட்ராயன் மது அருந்தும் பழக்கம் உடையவர். குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல், நேற்று முன்தினம் மாலையும், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.மனமுடைந்த காந்திமதி, இரண்டு மகள்களுக்கும் விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்தார். விஷம் குடித்த சிறிது நேரத்திலேயே கார்த்திகா இறந்தார். மற்ற இருவரும், கரூர் அமராவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.
தமிழகம்
எம்.எல்.ஏ., விடுதியில் விஷம் குடித்த மாணவர்
சென்னை:எம்.எல்.ஏ., விடுதியில் தங்கியிருந்த சட்ட மாணவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அரசினர் தோட்ட எம்.எல்.ஏ., விடுதியில் அவருக்கு அறை உள்ளது. அரியலூரைச் சேர்ந்த பாஸ்கர் (26), இங்கு தங்கி, சென்னை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே பாஸ்கர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். பாஸ்கர் விஷம் குடித்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து அரசினர் தோட்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
பஸ்சின் பின்பக்கத்தில் உரசிய ரயில் இன்ஜின்
பனைக்குளம்:ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே, அரசு பஸ் டிரைவரின் அலட்சியத்தால், பஸ்சின் பின்பக்கத்தில், ரயில் இன்ஜின் உரசியது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வாலாந்தரவை அருகே தெற்கு வாணி வீதியிலிருந்து, நேற்று முன்தினம் காலை 16ம் எண் அரசு பஸ், 80க்கும் அதிகமான பயணிகளுடன் ராமநாதபுரம் நோக்கி சென்றது. பஸ்சை சுப்பிரமணியம் ஓட்டினார். உடைச்சியார் வலசை ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடந்த போது, ராமேஸ்வரத்திலிருந்து, ரயில் இன்ஜின் வந்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். பஸ் வேகமாக தண்டவாளத்தை கடந்தது. இருப்பினும், ரயில் இன்ஜின் பஸ்சின் பின்பக்கத்தில் உரசியப்படி சென்றது. இதில் பஸ் நிலைதடுமாறியதுடன், பின்பக்க கண்ணாடியும் உடைந்தது.ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, உச்சிப்புளி ரயில்வே கேட் அடைக்கப்பட்டால், ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் அரசு பஸ் மற்றும் சுற்றுலா வாகனங்கள், இருமேனி அருகேயுள்ள ஆளில்லாத லெவல் கிராசிங்கில், ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. இதன்மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம்
கள்ளக்காதலியை எரிக்க முயற்சி: எஸ்.ஐ., கைது
வேலூர்: ஆம்பூர் அருகே கள்ளக்காதலியை எரித்து கொல்ல முயன்ற எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் சுபதார்பேட்டையைச் சேர்ந்தவர் சந்திரன் (56); ஆம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி; மூன்று மகன்கள் உள்ளனர்.ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் தரணி (40); கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் சந்திரனுக்கும் 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தரணி வீட்டுக்கு சென்ற சந்திரன், மீன் குழம்பு கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சந்திரன் அருகே இருந்த மண்ணெண்ணெய்யை தரணி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த அவர், வேலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆம்பூர் போலீசார் விசாரித்து, எஸ்.ஐ., சந்திரனை கைது செய்தனர்.
தமிழகம்
மின்னல் தாக்கி பெண் பலி
திருநெல்வேலி:நெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.திருநெல்வேலி மாவட்டத்தில் சில மாதங்களாக மாலைநேர மழையின் போது காடுகளில் வேலை செய்வோர், ஆடு,மாடுமேய்ப்போர் மின்னல் தாக்கி இறக்கின்றனர்.சங்கரன்கோவில் அருகே கீழநீலிதநல்லூரை சேர்ந்த சுந்தரராஜ் மனைவி கிருஷ்ணம்மாள்(45), தோட்டத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். மாலையில் லேசான மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அவர் இறந்தார்.
தமிழகம்
காதல்...கள்ளக்காதல் புகாரால் கலகலக்கும் குமரி போலீசார்
நாகர்கோவில்: காதல் மற்றும் கள்ளக்காதல் புகாரால் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் கலகலத்து போகும் நிலை உருவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக காதலும், கள்ளக்காதலும் அதிகரித்து வருகிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் தினமும் நான்கு காதல் திருமணம், நான்கு கள்ளக்காதல் புகார் இல்லாத நாள் இல்லை என்ற நிலை உருவாகிஉள்ளது. நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், தனது ஊர் குளச்சல் என்றும் எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளதாகவும் கூறியுள்ளார். காதலனை சந்திக்க விடாமல் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், இருவரையும் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். போலீசார் அந்த வீட்டுக்கு சென்று அவரையும் மீட்டு, காதலனையும் கண்டு பிடித்தனர். அடுத்த நாள், வீட்டில் பார்க்கும் மாப்பிளையை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்டி அடித்தார் சங்கீதா. போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்த காதலன் ஏமாற்றத்துடன் திரும்பினார்.இதுபோல நாகர்கோவில் செட்டிக்குளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராகவியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ரஞ்சித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தலையாக காதலித்துள்ளார். ராகவியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டும் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருடன் ராகவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சித், ராகவியின் படங்களை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து திண்டுக்கல் மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி ராகவியின் தாயார் குமாரி மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார்.
தமிழகம்
பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் கிருஷ்ணகிரி ராணுவ அதிகாரி பலி
கிருஷ்ணகிரி:மணிப்பூர் மாநிலத்தில், பர்மா நாட்டு எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ அதிகாரி பலியானார்.கிருஷ்ணகிரி அடுத்த தானம்பட்டியைச் சேர்ந்தவர் தானப்பன் (40). இந்திய ராணுவத்தில், "மெட்ராஸ் ரெஜிமென்ட்' பிரிவில் சிப்பாயாகச் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, தற்போது ஜே.சி.ஓ.,வாக (சீனியர் கமாண்டிங் ஆபீசர்) பணிபுரிந்தார்.இவரது மனைவி மீனாட்சி(34), மகள் ஜோதி(13), மகன் நிஷாந்த்(11). தானப்பன் கடந்த ஒரு மாதத்துக்கு முன், தானம்பட்டிக்கு 40 நாள் விடுமுறையில் வந்து சென்றார். விடு முறை முடிந்த பின், மணிப்பூர் மாநிலத்தில் பர்மா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 26ம் தேதி, எல்லை பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு, ராணுவ அதிகாரி தானப்பன் பலியானார். அவரது உடல், மணிப்பூர் மாநிலம் இம்பாலாவில் இருந்து, விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பெங்களூரில் இருந்து ராணுவ வாகனம் மூலம், நேற்று அதிகாலை 3 மணிக்கு தானம் பட்டிக்கு, தானப்பனின் உடல் கொண்டு வரப்பட்டது.தானப்பன் உடல், அவரது சொந்த நிலத்தில் தகனம் செய்யப் பட்டது. ராணுவ வீரர்களின் இறுதி அஞ்சலி நடந்தது. கலெக்டர் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம்
கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் திடீர் உண்ணாவிரதம்
விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் முதியவர் ஒருவர் திடீரென உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்தவர் சங்கர்(50).இவருக்கு மூன்று மனைவிகள், நான்கு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தைப் பிரிந்து கடந்த 10 ஆண்டிற் கும் மேலாக அதே பகுதியில் உள்ள மாணிக்க சுவாமி மடத்தில் துறவியாக வசித்து வருகிறார்.கோவில் சொத்தை ஆக் கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் காலை 9.30 மணிக்கு கோரிக்கை தட்டியுடன் அமர்ந்து திடீரென உண்ணாவிரதத்தை துவக்கினார். தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் பால முருகன் அவரிடம் விசாரித்தார்.அப்போது அவர் கூறுகையில்,ஏனாதிமங்கலத்தில் உள்ள பொதுஇடமான மாணிக்க சாமி மடத்தில், கடந்த 13 ஆண்டாக துறவியாக இருந்து வருகிறேன். முன்னாள் ஊராட்சித் தலைவர் மோகன், கோபு, சுகுமார் ஆகியோர் மடத்தினை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி பிரச்னை செய்து வருகின்றனர்.பெருமாள் கோவிலுக் குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தையும் இவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.அந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிட ஏழை மக்களுக்கு பொது சொத்தினை வழங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களோடு இணைந்து கேட்டேன். ஆத்திரமடைந்த அவர்கள் என்னை தாக்கினர். திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இது குறித்து விசாரித்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறேன்' என்றார்.அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க கூடாது என போலீசார் தெரிவித்ததால், முறைப்படி அனுமதி பெற்று மற்றொருநாள் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி, அவர் புறப்பட்டு சென்றார்.
தமிழகம்
வேலூர் அருகே மஞ்சு விரட்டு மாடு முட்டி மூன்று பேர் பலி
வேலூர்:வேலூர் அருகே நடந்த மஞ்சு விரட்டு விழாவில், மாடு முட்டியதில் மூன்று பேர் பலியாயினர்; 24 பேர் படுகாயமடைந்தனர்.வேலூர் அருகே காட்பாடி பொன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை யொட்டி, நேற்று மாலை மஞ்சு விரட்டு நடந்தது.ஆயிரக்கணக்கானோர் , மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்தனர். காளை மாடு ஒன்று மிரண்டு பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து மிதித்து, முட்டி தள்ளியது. இதில் வடுகன் குட்டையைச் சேர்ந்த ராஜசேகர்(15) காட்பாடியைச் சேர்ந்த செல்வகுமார்(42) முருகன்(34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.காளைகள் முட்டியதில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையிலும், 20 பேர் படுகாயமடைந்தும் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்
தமிழகம்
இந்த ஆண்டு 9,000 போலீசார் தேர்வு : டி.ஜி.பி., லத்திகா சரண் தகவல்
கோவை:தமிழக போலீசில் ஆள் பற்றாக்குறையை தீர்க்க இந்த ஆண்டு 9,000 போலீசார் மற்றும் 1,100 எஸ்.ஐ.,களும், அடுத்த ஆண்டு 5,588 போலீசாரும்தேர்வு செய்யப்படுகின்றனர். கோவை, வைசியாள் வீதியில் 49 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியகடை வீதி போலீஸ் ஸ்டேஷன் (பி.1) திறப்பு விழா நேற்று நடந்தது. சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு முன்னிலை வகித்தனர்.  டி.ஜி.பி., லத்திகா சரண், போலீஸ் ஸ்டேஷனை திறந்து வைத்தார்.பெயர் பலகை திறப்பு விழாவுக்கு பின், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:போலீஸ் கமிஷன் பரிந்துரைப்படி, தமிழக போலீஸ் ஸ்டேஷன்களை மூன்று வகையாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 50 சதவீதத்தை, "லைட்' வகையாகவும், 30 சதவீதத்தை மீடியமாகவும், 20 சதவீத ஸ்டேஷன்களை, "ஹெவி'யாகவும் வைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹெவி' ஸ்டேஷன்களில் 80 போலீசாரும், "மீடியம்' வகை ஸ்டேஷனில் 50 போலீசாரும், அடுத்த கட்ட ஸ்டேஷன்களில் 30 போலீசாரும் பணியில் இருப்பர்.சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தமட்டில், 120 போலீசார் கொண்ட மெட்ரோ- 1 மற்றும் 100 போலீசார் கொண்ட மெட்ரோ-2 என இரு பிரிவாக ஸ்டேஷன்கள் பிரிக்கப்படும். இப்படி பிரிப்பதால், சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்கவும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும் முடியும். இது குறித்த நடவடிக்கை, சட்டசபை பட்ஜெட் கூட்டத்துக்கு பின் துவக்கப்படலாம். தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4,000 போலீசார் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் உள்ளனர். 1,100 எஸ்.ஐ., பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆண்டு மேலும் 9,000 போலீசார் தேர்ந்தெடுக்கப்படுவர்.இதற்கானஅறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அடுத்த ஆண்டில் 5,588 போலீசார் தேர்வு செய்யப்படுகின்றனர். காவல்துறையில் ஆள் பற்றாக்குறை என்பது இல்லாத அளவுக்கு அடுத்த சிலஆண்டுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். போலீஸ் ஸ்டேஷன் நவீன மயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டடத்தில் செயல்படும் ஸ்டேஷன்கள் சொந்த கட்டடத்துக்கு மாற்றப்படும். பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக போலீசாரில் 45 சதவீதம் பேர், காவலர் குடியிருப்புகளில் வசிக்கின்றனர். போலீசாருக்கு இந்த அளவு குடியிருப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது என்பது தேசிய அளவில் முதலிடத்தை பெறுகிறது.இதேபோல் 600 பொதுமக்களுக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதாச்சாரமும் நாட்டில் முதல் இடத்தை பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த அளவு போலீசாரும் இல்லை; போலீஸ்ஸ்டேஷனும் இல்லை. வரும் காலங்களில் இந்த விகிதாச்சார அளவு மேலும்குறைய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரக் காவல் பணிக்காக 12 கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. காவலர்களுக்காக அதிநவீன வாகனங்கள் வாங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள புறக்காவல் நிலையங்கள் படிப்படியாக காவல் நிலையங்களாக மாற்றப்படுகின்றன. இதன்படி ஆண்டுக்கு 10 புறக்காவல் நிலையங்கள், காவல் நிலையங்களாகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் புறக்காவல் நிலையங்களே இல்லை என்ற நிலை ஏற்படும்.இவ்வாறு லத்திகா சரண் கூறினார்.
தமிழகம்
கட்டபொம்மன் வாரிசுக்கு அரசு வேலை: கலெக்டர் உறுதி
திருநெல்வேலி:வறுமையில் வாடும் கட்டபொம்மனின் வாரிசுக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக நெல்லை கலெக்டர் ஜெயராமன் உறுதியளித்தார்.வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சா லங்குறிச்சியில் வசிக்கின்றனர். இவர்களுக்காக 1974ல் கட்டித்தரப்பட்ட வீடுகள் சிதிலமடைந்துள்ளன. வாரிசுகளில் பலர் கட்டட தொழிலாளர்களாக, டிரைவர்களாக இருகின்றனர். ஐந்தாம் தலைமுறை வாரிசான வீமராஜாவின் நிலை குறித்து, அண்மையில் தினமலர் இதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதை பார்த்த நெல்லை கலெக்டர் ஜெயராமன், வீமராஜாவை நேரில் சந்திக்க அழைத்திருந்தார்.வீமராஜா தன் மனைவி, மகள் முருகதேவியுடன் நேற்று கலெக்டரை சந்தித்தார்.முருகதேவி,திருநெல்வேலியை அடுத்துள்ள பேட்டையில் வசிப்பதாகவும் அவரது கணவர் கட்டட வேலை க்கு செல்வதாகவும் வீமராஜா தெரிவித்தார். முருகதேவிக்கு, சத்துணவு உதவியாளர் பணிக்கு ஏற்பாடு செய்வ தாக கலெக்டர் உறுதியளித்தார். இதற்காக முதல்வருக்கு கடிதம் எழுதுவதாகவும் தெரிவித்தார்.
தமிழகம்
மேட்டுப்பாளையம் - குன்னூர் நாளை முதல் மலை ரயில் ஓடும்
குன்னூர்:மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில், நாளை முதல் இயக்கப்படுகிறது.நவம்பர் 8 முதல் 10ம் தேதி வரை, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையில், பெரும்பாலான சாலைகள், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் பாதை துண்டிக்கப்பட்டன. குன்னூர் - ஊட்டி இடையே மேற்கொள்ளப்பட்ட ரயில் பாதை பணிகளால், ஜன., 5ம் தேதி ரயில் இயக்கப்பட்டது.சிறப்பு அதிகாரிகளின் மேற்பார்வையில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே, முழு வீச்சில் பணிகள் மேற்கொண்டனர். 63, 66ம் எண் கொண்ட பாலம், முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில், தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.பணிகள் முடித்து இரு வாரங்களுக்கு முன் வெள்ளோட்டம் விடப்பட்டது. கோடை சீசனை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நாளை முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான ரயில் போக்குவரத்து துவங்குகிறது.மதியம் 12.30க்கு, குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் இயக்கப்படுகிறது. சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ராம் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.  2ம் தேதி காலை வழக்கம் போல், மேட்டுப் பாளையத் திலிருந்து காலை 7.10க்கு புறப்பட்டு 12.00 மணிக்கு ஊட்டியை சென்றடையும். பகல் 2.55க்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு 6.30க்கு மேட்டுப்பாளையம் அடையும்.
தமிழகம்
யானைகள் கணக்கெடுப்பு மே 15 ல் நடக்கிறது
தேனி:அகில இந்திய அளவில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மே 15, 16 ல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் அந்தந்த மாநில வனத்துறையினர், வனவிலங்குகள் காப்பகம் ஆகியவற்றை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். யானைகள் கணக்கெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். இதன்படி முதல் கட்டமாக 2005, அடுத்ததாக 2007 ஆகிய ஆண்டுகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதை தொடர்ந்து 2009 ல் நடந்திருக்கவேண்டிய கணக்கெடுப்பு பணி சில நிர்வாகக்காரணங்களால் தாமதமானது. இந்த ஆண்டு மே மாதம் இரண்டு நாட்கள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்து இதற்கான பணிகளை தற்போதே அந்தந்த மாநில வனத்துறையினர் துவக்கியுள்ளனர். இந்தியாவில் யானைகள் அதிகம் உள்ள 18 மாநிலங்களில் மட்டும் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது. கேரளாவில் யானைகள் கணக்கெடுப்பு பணிக்காக வனப்பகுதிகள் 618 பிளாக் குகளாக பிரிக்கப் பட்டு உள்ளது. ஒரு பிளாக்கிற்கு நான்கு பேர் பணியில் ஈடுபடஉள்ளனர். இந்த பணியில் வனத் துறை ஊழியர்கள், வன ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு மே துவக்கத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இரண்டு கட்டமாக பயிற்சியளிக்கப்பட்ட பின் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவர். தமிழகத்திலும் யானைகள் கணக்கெடுப்பு பணிக்கான ஆயத்த பணிகளில் தமிழக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம்
மே 4ல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்ன மந்திரம் சொல்லலாம்
மதுரை: அக்னி நட்சத்திர தோஷம் மே 4ல் ஆரம்பமாகி மே 28ம் தேதி வரை தொடர்கிறது.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 மாலை 6.36 மணிக்கு துவங்குகிறது. இந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சித்திரை 21ல் துவங்கி வைகாசி 14 வரை 25 நாட்கள் இது நீடிக்கும்.இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. அக்னி வெயிலில் அலைபவர்களுக்கு தோல் வியாதி ஏற்பட வாய்ப்புண்டு. இந்நோயைத் தவிர்க்க வெயிலில் அலைவதைத் தவிர்ப்பதுடன், "ஓம் பராசக்தியே நமஹ' அல்லது "ஸ்ரீமதே ராமானுஜாய நம' என்ற மந்திரங்களைச் சொல்வது நன்மை தரும். சிவாலயங்களில் துர்க்கையையும், பெருமாள் கோயில்களில் ராமானுஜரையும் அக்னி நட்சத்திர காலத்தில் தரிசிப்பது விசேஷம். இதனால், அக்னி காலத்தில் ஏற்படும் தோல் வியாதிகள் ஏற்படாது என்பது நம்பிக்கை. அக்னி நட்சத்திர தோஷத்தின் போது முன் ஏழு, பின் ஏழு நாட்கள் மிக உக்கிரமாக இருக்கும் என்பது கிராமத்து வழக்கு. சித்திரையில் பின் ஏழு நாட்களையும், வைகாசியில் முன் ஏழு நாட்களையுமே இவ்வாறு குறிப்பிடுவர். இதன்படி மே 8 (சித்திரை 25) முதல் 21ம் தேதி (வைகாசி 7) வரை வெயிலின் கடுமை அதிகமாகும். சில நேரங்களில் மழை பெய்து கழிவதும் உண்டு. அவ்வாறு கோடை மழை பெய்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க உங்கள் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்திக்க வேண்டும்.
தமிழகம்
முதுமலை புலிகள் சரணாலயம் நாளை முதல் பார்வையிடலாம்
ஊட்டி:முதுமலை புலிகள் காப்பகத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜிவ் வஸ்தவா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மூடப்பட்டது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கோடை மழை பெய்த காரணத்தால், புலிகள் காப்பக பகுதிகளில் தற்போது பசுமையான கால நிலை நிலவுகிறது.இதைத் தொடர்ந்து, சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரின காப்பாளர் உத்தரவின்படி, சுற்றுலாப் பயணிகள் மே 1ம் தேதி முதல் சரணாலயத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவர். இவ்வாறு வஸ்தவா கூறியுள்ளார்.
தமிழகம்
மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு விலை திடீர் சரிவு
மரக்காணம்:மரக்காணத்தில் கடும் வெயில் காரணமாக, உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழக அளவில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்ததாக வேதாரண்யம் இரண்டாம் இடத்திலும், மரக்காணம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் நான்கு லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் 6,000 பேர் வேலை செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் மரக்காணம் பகுதியில் உற்பத்தியான உப்பு விற்பனைக்கு அனுப்பப் படுகிறது.கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் காரணமாக உப்பு உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மூட்டை ஒன்று 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டு விலை வீழ்ச்சியடைந்து, மூட்டை ஒன்று, 80 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம்
சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை கூட்டம்
சேலம்:சேலத்தில், இன்று முதல் முறையாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், சேலம் ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும், "டிவிஷனல் ரயில்வே யூசர் கன்சல்டிவ் கமிட்டி'  (டி.ஆர்.யு.சி.சி.,) என்ற பயணிகள் நலச்சங்க ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களின் பரிந்துரைப்படி, இதில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். தவிர, ரயில்வே துறை சார்பாக, சமூகத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் பல்வேறு துறைக்கு கடிதம் அனுப்பப்படும். ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டு. டி.ஆர்.யு.சி.சி., உறுப்பினர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ஆலோசனை கூட்டம் நடத்துவர். இதில், ரயில்வே ஸ்டேஷன்களில் நிலவும் அடிப்படை பிரச்னைகள், பயணிகளின் சிரமம் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த கருத்துக்கள் ரயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.சேலத்தில் 2006ம் ஆண்டு தனி ரயில்வே கோட்ட அலுவலகம் துவங்கப்பட்டது. 2007ம் ஆண்டு 20க்கும் மேற்பட்ட ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து புதிய ரயில்களை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முறையாக கூட்டம் நடத்துவதில்லை. மூன்று ஆண்டாக இதே நிலை நீடித்தது. ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றவுடன், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ரயில்வே கோட்டங்களில், புதிதாக பயணிகள் நலச்சங்க உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 35 பேர், ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப் பட்டனர். புதிய உறுப்பினர்களும் முறையாக ஆலோசனைக்குழு கூட்டங்களை நடத்தவில்லை. எனவே, பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும், சேலம் ரயில்வே கோட்டத்தின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதால், அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், சந்திப்பு கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், சேலம் ஐந்து ரோட்டில் உள்ள சேர்வராய்ஸ் ஓட்டலில், சேலம் ரயில்வே கோட்ட பயணிகள் நல உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.இக்கூட்டத்தில், சேலம் ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் சேலம் ரயில்வே கோட்டத்தின் கோரிக்கைகள், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்
சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெருக்கடி
சென்னை:சென்னை எழும்பூரிலிருந்து மயிலாடுதுறை - தஞ்சை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் பகல் நேர சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், கடந்த 23ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து துவங்கப் பட்டுள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 23ம் தேதியிலிருந்து பாசஞ்சர் ரயில் களும், 24ம் தேதியிலிருந்து சென்னை எழும்பூர் - நாகூர் இடையே கம்பன் எக்ஸ் பிரஸ் ரயிலும், எழும்பூர் - திருச்சி இடையே சோழன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எழும்பூர் - மதுரை இடையே (வாரத் தில் இரண்டு நாட்கள்) எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னை எழும்பூர் - நாகூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத் துள்ளது. இதே போல, சென்னை எழும்பூர் - திருச்சி இடையே விழுப் புரம் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக இயக்கப் படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப் படாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது.இதனால், காலை நேரத்தில் சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் பஸ்களில் கூட்ட நெருக்கடி குறைந் துள்ளது. இது குறித்து, மயிலாடுதுறையைச் சேர்ந்த பயணிகள் கூறியதாவது:விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு உதவியாக உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு காலை 8.20 மணிக்கு இயக்கப் படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய் யப்படாத ஆறு பெட்டிகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பஸ்சில் பயணம் செய்ய சூப்பர் டீலக்ஸ் பஸ்சில் 130 ரூபாயும், சாதாரண பஸ்களில் 120 ரூபாய், 110 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.பஸ்சில் 6 மணி நேரம் பயணம் என்றாலும், சில நேரம் ஏழு அல்லது எட்டு மணி நேரம் கூட பயணம் செய்ய வேண்டியுள்ளது.ரயிலில் மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு ஐந்தரை மணி நேரத்தில் சென்று விடலாம். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்ய 70 ரூபாய் கட்டணம் என்பதாலும், பஸ் பயணத்தை விட ரயில் பயணம் பாதுகாப்பான பயணம் என்பதாலும் இப் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.தஞ்சை செல்லும் பயணிகள் கூட்டமும் அதிகம் உள்ளனர்.இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.
தமிழகம்
தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிளவு நெல்லை பகுதிக்கு தனி நுழைவுத் தேர்வு
சென்னை:கோவையைத் தொடர்ந்து, நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல், மேலாண்மை கல்லூரிகளும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தனியாக நடத்த முடிவு செய்துள்ளன. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவால், மாணவர்கள் அவதிப்படும் நிலை உள்ளது.தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், சிறுபான்மை தனியார் பொறியியல் கல்லூரிகளில் 35 சதவீத இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த சில ஆண்டுகளாக தனியார் தொழில்நுட்ப, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது.கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள், தங்களது கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப, தாங்களே கவுன்சிலிங் நடத்த முடிவு செய்துள்ளன. இதற்காக தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான கமிட்டியில் விண்ணப்பித்திருந்தனர். கமிட்டி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்தில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தாங்களே நடத்துவதாக, கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்ற பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் சுத்தானந்தன் தெரிவித்திருந்தார்.தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் கூட்டமைப்பின் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தனியார் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள், தங்களது பகுதியில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தாங்களே நடத்த இருப்பதாக கூறியதாகத் தெரிகிறது.தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த பிளவால், மாணவர்களே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்பில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்பிற்கும் விண்ணப்பிக்கும் மாணவர்கள், சென்னை, கோவை, நெல்லை அண்ணா பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், முதுநிலை படிப்பிற்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டியுள்ளது.தனியார் கல்லூரிகள் இடையே ஏற்பட்டுள்ள போட்டா போட்டியால், மாணவர்கள் பாதிக்கப்படும் இந்த சூழ்நிலையில், தமிழக அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழகம்
ஆசிரியர்கள் இயக்குனர்களுக்கு பயிற்சி
மதுரை:விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உடற்கல்வி ஆசிரியர்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குனர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது.சென்னை நவீன விளையாட்டு அரங்கில் மே 5 முதல் ஜூன் 30 வரை இப்பயிற்சி நடக்கும்.இதற்கான விண்ணப்பங்கள் www.sportsjinfotn என்ற இணைய தளத்தில் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி மே 5.
தமிழகம்
பொருள் நிறுத்தப்பட்ட ரேஷன் கார்டு அதிகாரிகள் குழப்பம்
சிவகங்கை:பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க கூடாது என, அரசு அறிவித் துள்ளது. ஆனால், இதுகுறித்து முறையான உத்தரவு இல்லாதததால், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, மாவட்ட வாரியாக நூறு சதவீத ஆய்வு நடந்தது. இதில் போலி என, உறுதி செய்யப் பட்ட கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. மூன்று மாதங்களுக்கு மேல் பொருள் வாங்காத கார்டுகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், உண்மையான கார்டுதாரர்களும் பாதிக்கப்பட்டு, அலைக்கழிக்கப்படுகின்றனர். நிறுத்தம் ஏன்?:தொடர்ந்து மூன்று மாதம் பொருட்கள் வாங்காமல் இருந்தால், ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், நூறு சதவீத ஆய்வுக்கு பின், மூன்று மாதம் வரை பொருள் வாங்காத, 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுகளுக்கு, பொருள் வினியோகம் நிறுத்தப்பட்டது.தற்போது இப்பிரச்னை வெடித்திருப்பதால், "ஒவ்வொரு மாதமும் பொருள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பல மாத இடைவெளிக்கு பிறகும், பொருட்களை வாங்கலாம். இதை காரணம் காட்டி கார்டுகளை நிறுத்தி வைக்க கூடாது,' என, அரசு அறிவித் துள்ளது.குழப்பம்:ஆனால், இதுகுறித்து முறையான உத்தரவு, மாவட்ட அதிகாரிகளுக்கு வரவில்லை. பொருள் நிறுத் தப் பட்ட 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுகளுக்கு, மீண்டும் பொருள் வழங்கலாமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், ""முறையான உத்தரவு இல்லாததால், பொருள் நிறுத்தப் பட்ட கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் தகராறு செய்கின்றனர்,'' என்றார்.அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இதுவரை பொருட்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள கார்டுதாரர்களுக்கு மீண்டும் வழங்கலாமா, என்பது குறித்து தெளிவான உத்தரவு வெளியிட வேண்டும்,'' என்றார்.